privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஇணையக் கணிப்புவெங்கய்யா நாயுடு ஏன் ? கருத்துக் கணிப்பு

வெங்கய்யா நாயுடு ஏன் ? கருத்துக் கணிப்பு

-

துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் காந்தியின் பேரனும் முன்னாள் மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும் ஆவார்.

ஆந்திராவின் நெல்லூரைச் சேர்ந்த 68 வயது வெங்கய்யா நாயுடு வட இந்திய சாயல் கொண்ட பா.ஜ.க-வன் தென்னிந்திய முகமாக நிறுத்தப்படுபவர். ஆந்திராவில் சட்டமன்ற  உறுப்பினராக 80-களில் இருந்தவர். தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் மூலம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2002-ம் ஆண்டில் பா.ஜ.க-வின் தேசியத் தலைவராக பொறுப்பேற்றவர், 2004 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். வாஜ்பாய் காலத்தில் அமைச்சராக இருந்தவர் தற்போது மோடி அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக பதவியேற்று பிறகு தகவல் ஒளிபரப்பு, நகர்ப்புற வீட்டு வசதி, வறுமை ஒழிப்புத் துறை அமைச்சராக இருக்கிறார்.

ஊடகங்களிடமும், நாடாளுமன்ற உரைகளிலும் இவர் ஒரு பாஜக டி.ராஜேந்தர் எனலாம். எதுகை மோனை எஃபெக்டில் எளிமையான உடைந்த ஆங்கிலத்தில் ஏட்டிக்கு போட்டியாக பேசும் ‘வல்லமை’ படைத்தவர். ஜெயா மரணத்தின் போது பாஜக சார்பில் ஃபிளையிங் ஸ்குவாடாக வந்து பணியாற்றினார். மன்னார்குடி மற்றும் ஓபிஎஸ் முதலான அ.தி.மு.க அக்கப் போர்களை திறம்பட வேலை வாங்கி தமிழகத்தில் முக்கியமான பவர் சென்டராக ஆனவர்.

தமிழக தலைமைச் செயலகத்தில் இவர் நடத்திய ஆய்வு ஒன்றே இவரது பா.ஜ.க ஆண்டைத்தனத்திற்கு ஒரு சான்று. மேலும் இந்தியாவின் தேசிய மொழியான இந்தியைக் கற்காமல் இந்தியா முன்னேற முடியாது என்றவர். விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியை ஒரு ஃபேஷன் என்று கிண்டலடித்தவர். இவற்றையெல்லாம் எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

துணை குடியரசுத் தலைவரின் முக்கிய பணியான நாடாளுமன்ற மாநிலங்களவையை வழிநடத்தும் தலைவர் வேலைக்கு வெங்கைய்யா பொருத்தமானவர் என்று பா.ஜ.க கருதுகிறது. மேலவையில் பா.ஜ.கவிற்கு போதுமான ஆட்கள் இல்லை என்பதால் கத்தல் கூச்சல்கள் மறியல்களை திறம்பட சமாளிக்கும் ஒரு பெரிய ஸ்பீக்கர் தேவையாக இருக்கிறது. ஆகவே இவரை மோடி தெரிவு செய்திருக்கிறார்.

இனி உங்கள் கருத்து…………

வெங்கய்யா நாயுடு தெரிவானதற்கு காரணம் என்ன?

  • மோடியின் நம்பகமான அடிமை முகம்
  • இந்துத்துவத்தை பேசும் தென்னிந்திய முகம்
  • ஆதிக்கசாதிகளை அணிதிரட்டும் முகம்
  • மேலவைக்குத் தேவைப்படும் நாட்டாமை முகம்
  • இவை அனைத்தும் ஒருசேர உள்ள முகம்

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க