Saturday, July 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 695

Mr. NaMo NaNo

45

Mr. NaMo NaNo

டாடா - மோடி - ராடியா

மோடியின் சந்நிதியில் கலெக்டரே மண்டியிட்டு வணங்கும் மாநிலத்தில், ரொம்ப தெனாவெட்டாக கால் மேல் கால் போட்டு உக்காந்திருக்காகளே ஒரு பொம்பிளை –

அது யாருன்னு தெரியுதா?

ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ் நீரா ராடியாதான்.

இது 25 நவம்பர் 2010-ல் எடுத்த படம்.

  • அலைக்கற்றை ஊழல் பற்றிய சி.ஏ.ஜி அறிக்கை வெளியான தேதி – நவம்பர் 10, 2010.
  • “ராடியா டேப்புகளை” ஓபன் மாகசீன் வெளியிட்ட தேதி – நவம்பர் 20, 2010
  • இந்த செய்தியும் புகைப்படமும் வெளியிடப்பட்டிருக்கும் தேதி நவம்பர் 25, 2010

இந்த படத்தை வெளியிட்டுள்ள “தேஷ் குஜராத்” இணைய தளம், அம்மையாரை குஜராத்தின் மருமகள்” என்று கொட்டேசனில் போட்டுள்ளது. எதுக்காக குசும்பா கொட்டேசன்ல போட்ருக்குன்னு விவரம் சொல்லணுமில்ல? சொல்லலியே!

நல்லாத் தர்றாங்கய்யா டீட்டெய்லு!

NaMo (நமோ) கறை படியாத கரமாச்சே! புரோக்கர், ஊழல், கமிசன்னு யாராவது பேசினா சுட்டுத்தள்ளிடுவாருன்னு அர டவுசர் அம்பிக சொல்றாங்களே! ஒரு வேளை அம்மா ஒரு புரோக்கர்னு அய்யாவுக்கு தெரிஞ்சிருக்காதோ!

“அட போய்யா, அம்மாவோட அய்யாவுக்கு பிசினஸ் கனைக்சன் 2004 இலேயே உண்டு”ன்னு சொல்லியிருக்கிறார் கிங் சுக் நாக் என்ற டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையாளர்.

அவருடைய டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை வெளிவந்திருக்கும் தேதி நவம்பர் 22, 2010.

இனி, கிங் சுக் நாக் எழுதியுள்ளதிலிருந்து சில பகுதிகள்:

“2003 இல் நான் டைம்ஸ் ஆப் இந்தியா அகமதாபாத்தின் ஆசிரியராக இருந்தேன். நீரா ராடியா என்னைப் பார்க்க விரும்புவதாக என்னிடம் ஒரு நண்பர் சொன்னார்…

அடுத்த முறை நான் டெல்லி வந்தபோது, ராடியாவின் அலுவலகத்தில் அவரை சந்தித்தேன். போன, வந்த கதையையெல்லாம் கொஞ்சம் பேசி விட்டு, நைசாக விசயத்துக்கு வந்தார் ராடியா. “நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எல்லாம் மோடியை சித்திரவதை செய்து வருகிறீர்கள். அவரையும் அவருடைய கொள்கையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கங்களேன்” என்றார்.

“டாடாவுக்கு அடுத்தபடி, மோடியும் உங்கள் வாடிக்கையாளர் பட்டியலில் சேர்ந்து விட்டாரோ” என்று நான் ராடியாவிடம் கேட்டேன்.

“சே சே குஜராத்தின் மருமகள் என்ற முறையில் என் கடமையை செய்கிறேன்” என்றார் ராடியா.

“குஜராத் அரசைப் பற்றி (இனப்படுகொலையைப் பற்றி) நாங்கள் எழுதுவது எல்லாம் உண்மை விவரங்களின் அடிப்படையிலானது. அதை எப்படி நாங்கள் திரிக்க முடியும்?” என்று நான் கேட்டேன்…

சில மாதங்களுக்குப் பின் 2004 இல் குஜராத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் “வைப்ரன்ட் குஜராத்” என்ற நிகழ்ச்சியை அகமதாபாத்தில் நடத்தினார் மோடி. அன்றைக்கு மோடியின் இமேஜ் பெரும் அடி வாங்கியிருந்தது…

பொதுவாகவே, தொழிலதிபர்களுக்கு மிகவும் சாதகமான சூழல் குஜராத்தில் நிலவிய போதிலும், குஜராத்துக்கு வருவதையே முதலாளிகள் அன்று விரும்பவில்லை. மோடியுடன் அவர்கள் ஒரே மேடையில் தோன்றுவது என்பதோ கற்பனைக்கு எட்டாததாக இருந்தது. அன்று மோடியின் கொள்கைகளை விமரிசித்தவர்களில் முக்கியமானவராக டாடா இருந்தார். அப்படியிருக்க, வைப்ரன்ட் குஜராத் நிகழ்ச்சியில் ராடியாவுடன் டாடாவை பார்த்தபோது எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை…

அன்றைக்கு பிற்பகலே ராடியா என்னை தொலைபேசியில் அழைத்தார்… மோடி விசயத்தில் கொஞ்சம் மென்மையாக அணுகுமாறு மீண்டும் கேட்டுக்கொண்டார். அவருடைய கோரிக்கைக்கு செவி மடுத்தால், உரிய சன்மானம் உண்டு என்பதை அவர் வெளிப்படையாக சொல்லவில்லை.

டாடாவை அகமதாபாத்துக்கு கொண்டு வருவது, டைம்ஸ் ஆப் இந்தியாவை வழிக்கு கொண்டுவருவது என்று இரண்டு இலக்குகளை ராடியாவுக்கு மோடி தந்திருக்கிறார் போலும்!” ..

அலைக்கற்றை ஊழலை ஒட்டி, ராஜாவின் ராடியா கனெக்சன் பற்றி ரவுண்டு கட்டிய சோ ராமஸ்வாமி அய்யர், டாடாவின் ராடியா கனெக்சன், மோடியின் ராடியா கனெக்சன் பற்றி மூச்சு விடவில்லை.

மோடி டாடாவுக்கு அளித்த பரிசுகள் என்ன?

  • நானோ ஆலைக்கு டாடா போட்ட முதலீடு ரூ. 2900 கோடி

இதற்கு மோடி அரசு வழங்கிய சலுகைகள்:

  • 9570 கோடி ரூபாய் மோடி அரசின் கடன். 20 ஆண்டு தவணையில் திருப்பித் தரவேண்டும். ஆண்டு வட்டி நூறு ரூபாய்க்கு பத்து பைசா.
  • 20 ஆண்டுகளுக்கு வாட் வரி கிடையாது. இவையன்றி சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி, சேவை வரி, மின்சார வரி சலுகைகள்; பத்து ஆண்டுகளுக்கு கார்ப்பரேட் வரி தள்ளுபடி.
  • வழங்கப்பட்ட நிலம் மொத்தம் 1100 ஏக்கர். அகமதாபாத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள சனந்த் எனும் இடத்தில் உள்ள விவசயாப் பல்கலைக் கழகத்துக்கு சொந்தமான நிலம் இது. இதன் சந்தை மதிப்பு சதுர மீட்டர் 10,000 ரூபாய். மோடி நிர்ணயித்த விலை ச.மீட்டர் 900 ரூபாய்.
  • இந்த நிலத்தை பதிவு செய்வதற்கான முத்திரைக் கட்டணம் 20 கோடியும் தள்ளுபடி.
  • ஆலைக்கு செல்வதற்கான நான்கு வழிச்சாலையை மோடி அரசே அமைத்துத் தரும்.
  • குடியிருப்புகளை அமைப்பதற்காக 100 ஏக்கர் நிலத்தையும் மோடி அரசே வழங்கும்.

மோடி அரசே காரை உற்பத்தி செய்து, அதே மோடி அரசே சந்தையில் கூவி விற்று, லாபத்தை மட்டும் டாடாவுக்கு ஒப்படைப்பது என்ற புரட்சித்திட்டத்தை அடுத்த கட்டமாக மோடி அமல் படுத்தக் கூடும்.

மோடி ரசிகர்கள் அவரை NaMo (நமோ) என்று அழைப்பதை விட NaNo (நானோ) என்று செல்லமாக அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

ராமன் ரீமிக்ஸ் மோடி !

14

ராமன் ரீமிக்ஸ் மோடி !

(‘ராமன் எத்தனை ராமனடி!…’ சினிமாப்பாடல் மெட்டில் பாடிப்பலன் பெறவும் !)

மோடி எத்தனை மோடியடி – அவன்
நால்வர்ண வெறியின் ராமனடி !

(மோடி எத்தனை…)

modi-modiகல்மனக் கோலம் கொண்ட கொலைகார மோடி
‘நானோவுக்கு’ தெய்வம் அந்த டாடா மோடி
அரசாள வந்த மன்னன் அமெரிக்க மோடி
அலங்கார ரூபன் அந்த ஆர்.எஸ்.எஸ். கேடி!
(மோடி எத்தனை…)

கொலையே என் தெய்வம் என்ற கோசல மோடி
அம்பானி மீது பாசம் கொண்ட ரிலையன்ஸ் மோடி!
வீரம் என்ற ‘சீன்’ போடும் கோதண்ட மோடி
விலை பேசி நாட்டை விற்கும் ஸ்ரீ!கார்ப்பரேட் பாடி!
(மோடி எத்தனை…)

வாடகைத் தாய்க்கு ரகு ராமன்
சிமெண்ட் கம்பெனிக்கு சிவராமன்
முசுலீம் கொலைக்கு ஒரு மோடி, மூலதனத்துக்கு பல மோடி
ராமஜெயம் ஸ்ரீ ஊழல் மயம்!
மோடி என்பது தனியார் மயம்!
ராமஜெயம் ஸ்ரீ தனியார் மயம்!
மோடியின் கைகளில் உலகமயம்!
ராம் ராம்! பாம் பாம்! பாம் ராம்! ராம் பாம்!
மோடி… எத்தனை மோடியடி!

____________________________________

ரீமிக்ஸ் உபயம் : துரை சண்முகம்

ராமன் எத்தனை ராமனடி பாடல் கேட்காதவர்கள் கீழ்க்கண்ட வீடியோவில் கேட்டு விட்டு மோடி ரீமிக்ஸை ரசிக்கலாம்.

மண்டியிடுவதில் எது முன்னேறிய மாநிலம்?

20

அம்மாவுக்கு முன்னால் அமைச்சர்கள் மண்டியிடுவதைத்தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.

jayalalitha-sengottaiyan

ஐ.ஏ.எஸ் ஆப்பீசரே மண்டியிடும் மாநிலம் குஜராத்.

மோடியின் முன் ஜே.பி.வோரா, பி.ஜே.பட்
மோடியின் முன் மாவட்ட ஆட்சியர் ஜே.பி.வோரா, மாவட்ட வளர்ச்சி அதிகாரி பி.ஜே.பட் ஆகியோர் மண்டியிடும் காட்சி.

நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். எது முன்னேறிய மாநிலம், குஜராத்தா, தமிழ்நாடா?

modi-jayalalitha

 

 

மோடியே தமிழகத்தில் நுழையாதே ! சென்னை- தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !!

13

க்கள் கலை இலக்கியக்கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி,  பெண்கள் விடுதலை முன்னணி  ஆகிய அமைப்புகளின் சென்னை மாவட்டக் கிளைகள் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி.
_____________________________________

ட்சக்கணக்கில் ஈழத் தமிழர்களை கொன்றொழித்து விட்டு ஈழத்தில் வளர்ச்சிப்பாதை என்று ராஜபட்சே கூறுவது போல ஈராயிரம் முசுலீம் மக்களை கொன்றொழித்து விட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக குஜராத் இருப்பது போன்ற மாயையை மோடியும் பிஜேபியும் ஏற்படுத்தி வருகின்றனர். கல்வி, வேலை வாய்ப்பிலும் சுகாதாரத்திலும் மிகவும் பின் தங்கிய நிலையில்தான் குஜராத் இருக்கிறது.

உண்மையில் 69% ரேசன் பொருட்கள் கடத்தி விற்கப்படுவதில் இந்தியாவில் முதல் மாநிலமாகவும், சுகாதாரத்துக்காக பட்ஜெட்டில் வெறும் 0.77 % ஒதுக்குவதிலும், 69.7% குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதிலும், 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரைவார்ப்பதிலும்தான் குஜராத் முன்னிலை வகிக்கிறது.

முதலாளிகளின் நலனுக்காகவே முன்னிறுத்தப்படும் இந்த மோசடியை அம்பலப்படுத்தும் வகையிலும் இந்தியாவின் ராஜபக்சேவான மோடியே தமிழகத்தில் நுழையாதே என்பதை வலியுறுத்தியும் எமது அமைப்புக்களின் சார்பில் 26.09.2013 அன்று  காலை 11 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். நெடுஞ்செழியன் தலைமையேற்க உள்ளார். அதில் மாணவர்கள், பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

வ.கார்த்திகேயன்,
சென்னைக்கிளை இணைச்செயலர்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
9445112675

_________________________________________________

மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கண்ட புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் நாளை ஆர்ப்பாட்டம் செய்கின்றன. ஆர்ப்பாட்டச் செய்திகளை வரும் நாட்களில் வெளியிடுகிறோம்.

நாளை ஜெ ஆட்சி காலி! பொன்னார் எச்சரிக்கை! அதிமுகவினர் கிலி!

5

நாளை ஜெ ஆட்சி காலி!
பொன்னார் எச்சரிக்கை!
அதிமுகவினர் கிலி!

நாளை திருச்சியில் நடைபெறவிருக்கும் இளந்தாமரை மாநாட்டினை ஒட்டி, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் பொன் இராதாகிருஷ்ணன் திருச்சியில் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தின் முக்கியமான பகுதிளை கீழே வெளியிடுகிறோம்.

அடைப்புக்குறிக்குள் இருப்பவை எமது விமரிசனங்கள்.

________________________________________

பொன் இராதாகிருஷ்ணன்
பொன் இராதாகிருஷ்ணன்

நாட்டை அழித்து வரும் ஊழல் (ரெட்டி பிரதர்ஸ், பால்கோ, ஸ்பெக்ட்ரம், நிலக்கரி ஊழல்கள்)

பயங்கரவாதம் (மாலேகான், சம்ஜோதோ, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு, பாபர் மசூதி இடிப்பு) ,

பிரிவினைவாதம் போன்றவற்றை ஒழித்து (பகல்பூர், மீரட், மல்லியானா, கமும்மை, குஜராத் முஸ்லிம் படுகொலைகள்)

மத பாகுபாடின்றி அனைத்து ஏழை இந்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கி (அதை உங்கள் கூட்டணிக் கட்சி முதலாளி எஸ்.ஆர்.எம் பாரி வேந்தர் வழங்குவாரா?)

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி (16,000 விவசாயிகளின் நிலத்தைப் பிடுங்கி நடுத்தெருவில் நிறுத்தி, அதை நிர்மாவுக்கு கொடுத்து, 450 வேலைகளை உருவாக்கி)

பெண்களின் மானம் காத்து (ஜெய் ஆசாராம் பாபு)

விவசாயம் தழைக்கச் செய்து (மோடி ஆட்சியில் அரசு கணக்குப்படி 641 விவசாயிகள் தற்கொலை)

தொழில் வளம் பெருக்கி (2900 கோடி முதல் போட்ட டாடாவுக்கு 1100 ஏக்கரும், கைச்செலவுக்கு 9000 கோடியும் கொடுத்து)

தொழிலாளர் நலம் காத்து (மாருதி தொழிலாளர் போராடியபோது ஜப்பானுக்குப் போய் சுசுகி முதலாளியின் காலை நக்கி)

இலங்கைத் தமிழரைக் காத்து (ராஜபக்சேவிடம் வைர நெக்லஸ் பரிசு வாங்கி)

இந்திய தமிழ் மீனவர் உரிமை காத்து (கூடங்குளம் மீனவர் போராட்டத்தை எதிர்த்து, தாது மணல் கொள்ளையன் வைகுண்டராசனை ஆதரித்து)

நாட்டின் எல்லையில் வாலாட்டி வரும் சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளை அடக்கி வைத்து (கார்கில் போரை பஞ்சாயத்து பண்ணி விடச் சொல்லி அமெரிக்கா காலில் விழுந்து)

எல்லையில் நம் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களின் உயிர் காத்து (கார்கில் ஆயுத பேர ஊழல் மற்றும் சவப்பெட்டி ஊழல் விவகாரங்களில் சந்தி சிரித்து)

வலுவான வளமான இந்தியாவை உருவாக்க நீங்கள் விரும்புகிறீர்கள். (ஆமா. ஆனா உங்கள ஒழிச்ச பிறகு தானே பாஸு, நாங்க உருவாக்க முடியும்)

உங்களின் இந்த விருப்பங்களை நிறைவேற்ற பா.ஜ.க உறுதி பூண்டுள்ளது. எனவே ஒத்த சிந்தனை படைத்த நாம் அனைவரும் ஒன்று கூடி நாட்டின் நலன் குறித்து சிந்தனை செய்து செயல் வடிவம் கொடுக்க பா.ஜ.க வின் இளைஞரணி சார்பில் இளந்தாமரை மாநாட்டினை திருச்சி மாநகரில் நடத்துகிறோம். (சிந்திக்கிறதுக்கே இவ்வளவு அலப்பரையா?)

மலைக்கோட்டை மாநகராம் திருச்சி மாநகரில் நடைபெறும் இளந்தாமரை மாநாட்டின் வெற்றி டெல்லி செங்கோட்டையிலும், (எதுல? செங்கோட்டை செட்டிங் போட்டிருக்கீங்களே அதுலயா?)

நாளை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் பா.ஜ.க வை ஆட்சியில் அமர்த்துவது உறுதி.

(அம்மாவுக்கே ஆப்பா? அப்போ உங்களுக்கு வேலூர் கோட்டையில உண்டக்கட்டி உறுதி! உறுதி! உறுதி!)

____________________________________

மோடியின் பித்தலாட்டம் – தோழர் ராஜு உரை – ஆடியோ

1

னித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு செப்டம்பர் 22, 2013 அன்று திருச்சியில்

குஜராத் முசுலீம் மதப் படுகொலை குற்றவாளி  !
டாடா – அம்பானிகளின் எடுபிடி !
இந்துமதவெறி பாசிஸ்ட் !
இந்தியாவின் ராஜபட்சே !

மோடியின் முகமூடியை கிழிக்கும்  பொதுக்கூட்டம்

என்ற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.

குஜராத் வளர்ந்து விட்டதாம் என்று சினிமா காமெடி போல திரும்பத் திரும்பக் கூறுபவர்களை தட்டி எழுப்பி, ஈழ இனப்படுகொலைக்கு நிகரான படுகொலையை நடத்திய மோடியின் குற்றங்களை இந்த உரை அம்பலப்படுத்துகிறது. குற்றம் இழைத்த கிரிமினல்களில் ஆரம்பித்து, காவல் துறை அதிகாரிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை மோடியின் மீது குற்றம் சாட்டியிருப்பதையும், குஜராத்தின் 32 காவல் துறை அதிகாரிகள் இப்போது சிறையில் இருப்பதையும் தோழர் ராஜு சுட்டிக் காட்டுகிறார்.

பாஜகவினர், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் நரேந்திர மோடியை பற்றிச் செய்யும் பொய் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தி, மோடியை முன் வைத்து நடத்தப்படும் பார்ப்பன பாசிச அரசியல் ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரானது என்பதை விளக்கினார். தமிழகத்தில் மோடிக்கு எதிராக நடத்தப்படும் இயக்கம் அகில இந்தியாவுக்கும் முன் மாதிரியாக அமைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கட்டணக் கொள்ளையடிக்கும் பள்ளி தாளாளர்கள் – சிதம்பரம் பொதுக்கூட்டம்

2

21-9-13 சனிக்கிழமை மாலை 6-00 மணிக்கு சிதம்பரத்தில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் சார்பில் “கட்டணக் கொள்ளையடிக்கும் பள்ளி தாளாளர்களுக்கு என்ன தண்டனை?” என்ற தலைப்பில் விளக்கப் பொதுக்கூட்டமும் கல்வி உரிமைக்கான போராட்டத்தில் எமது அனுபவங்கள் என்ற நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

தலைமை உரையாற்றிய சிதம்பரம் நகர தலைவர் ராமகிருஷ்ணன்

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தொடங்கி 3 ஆண்டுகளில் சிறப்பாக மூன்று மாநாடுகளை நடத்தியிருக்கிறோம். தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு எதிராக குறிப்பாக காமராஜ், வீனஸ் பள்ளிகளில் பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டிருக்கிறோம். மக்கள் எங்கள் பின்னாள் நின்றால் நாங்கள் எல்லா பள்ளிகளுக்கும் எதிராக போராட தயாராக இருக்கிறோம். காலாண்டு தேர்வில் காமராஜ் பள்ளியில் தேர்வு எழுத ஒரு வினாத்தாள், வீட்டுக்கு போகும் போது கையில் கொடுப்பது ஒரு வினாத்தாள் என அமல்படுத்துகின்றனர். பணம் கட்டாத மாணவர்களுக்கு தேர்வை எழுதிய பிறகு கேள்வித்தாளை திருப்பி வாங்கிக் கொண்டு அனுப்புகின்றனர். மாணவர்களுக்கு வருகை பதிவேட்டில் வரவில்லை, தேர்வு எழுதவில்லை என்று காண்பிக்கிறார்கள் தனியார் பள்ளிகள் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என செயல்படுவதற்கு எதிராக அனைவரும் பெற்றோர் சங்கத்தில் இணைந்து கடமையாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

வரவேற்புரை ஆற்றிய சிதம்பரம் நகர செயலாளர் தஷ்ணா கலையரசன்

காசு இருந்தால்தான் படிக்கலாம் என்ற நிலை உள்ளது. தனியார் பள்ளிகளை வளர்க்கும் விதமாக அரசு பள்ளியை அழிக்கும் போக்கில் அரசின் கொள்கை உள்ளது. அரசு பள்ளி தரமான பள்ளி இல்லை என்ற எண்ணத்துடன் தனியார் பள்ளியில் பெற்றோர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர். நமது சங்கத்தின் தொடர் போராட்டத்தால் காமராஜ் பள்ளியில் அரசு கட்டணம் மட்டும் வாங்கப்படுகிறது. கூடுதலாக ரூ 2,500 முதல் ரூ 3,000 வரை வசூலிக்கின்றனர். வீனஸ் பள்ளியில் அரசு கட்டணம் செலுத்த முயன்றபோது அடியாட்கள் மூலம் பெற்றோர்கள் மிரட்டப்பட்டார்கள். 3,000 பேரில் 300 மாணவர்கள் அரசுக் கட்டணம் செலுத்தியுள்ளனர். இதனால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டது. கூடுதல் கட்டணம் தொடர்பாக கல்வித் துறை, காவல் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து போராடி வருகிறோம். நாங்கள் நடத்தும் தொடர் போராட்டம் மூலம் பெற்றோர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

நடராஜன் சங்கத்தின் முன்னணி உறுப்பினர். கட்டணம் செலுத்த வில்லை என்தால் அவர் மகனை தேர்வு எழுத விடாமல் வெளியே நிற்க வைத்து விட்டனர். நடராசன் தந்தை இறந்ததன் காரணமாக பணம் கட்டவில்லை. மகனை தேர்வு எழுத அனுமதிக்குமாறு கேட்பதற்காக பள்ளிக்கு சென்று முதல்வரிடம் பேசிக் கொண்டிருந்தவரை உள் அறையிலிருந்து வெளியில் வந்த தாளாளர், “இவனிடம் என்ன பேச்சு? வெளியே போகச்சொல்லுங்கள்” என்று கெட்ட வார்த்தையில் திட்டி, அடித்து வெளியே தள்ளினர். உடன் இருந்த ஆசிரியர்களும் அவரை வயிற்றில் எட்டி உதைத்து கடுமையாக தாக்கினர். சங்கமும் வழக்கறிஞர்களும் தலையிட்டு போராடி பள்ளி தாளாளர் மீதும் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.கைது செய்ய கோரி நாம் முற்றுகை போராட்டம் நடத்தி கதானோம். அதை தொடர்ந்து இந்த பொது கூட்டத்தை நடத்துகிறோம்.

சேத்தியாதோப்பு தலைவர் தமிழரசன்

அரசுக் கட்டணத்தை மட்டுமே கட்டுவோம் என்று சேத்தியாதோப்பு எஸ்.டி.எஸ் பள்ளியில் மறியல் செய்தோம். பின்பு முத்தரப்பு கமிட்டி மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின் அரசு கட்டணம் மட்டும் செலுத்துவோம் என்று உறுதி தரப்பட்டு அதன்படியும் செய்துவருகிறாம். முறையாக ரசீதும் பெற்று வருகிறாம்.தற்போது மாணவர்களை பள்ளி கட்டிட வேலைக்கு பள்ளி நிர்வாகம் பயன்படுத்துகிறது. பணம் கட்டுவதற்கு பெற்றோர்தான் வரவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கின்றனர். அப்படி வரும் போது, “தனியே பேசி பிள்ளை படிப்பு என்னவாகும் அதனால் நாங்கள் சொல்லும் கட்டணத்தை கட்டி விடுங்கள்” என்று நிர்பந்திக்கின்றனர். இதையெல்லாம் நாங்கள் டி.எஸ்.பியிடம் புகார் தெரிவித்துள்ளோம். கல்வித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

வி.வி.சுவாமிநாதன், முன்னாள் அமைச்சர் பெற்றோர் சங்கம் மனித உரிமை பாது காப்பு மையத்துடன் இணைந்து நடத்திய பல் வேறு போராட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், வழக்குகள், கல்வி துறை அதிகாரிகளின் உத்தரவுகள், அரசாணைகள், பத்திரிக்கை செய்திகள், கட்டணக்கொள்ளையை எப்படி வீழ்த்துவது என்ற நடை முறை அனுபவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய – “கல்வி உரிமைக்கான போராட்டத்தில் எமது அனுபவங்கள்” என்ற நூலை வெளியிட அண்ணாமலைப் பல்கலை கழக ஊழியர்கள் சங்கத் தலைவர் சி.மதியழகன் பெற்றுக்கொண்டார்.

கல்வி உரிமைக்கான போராட்டத்தில் எமது அனுபவங்கள்
கல்வி உரிமைக்கான போராட்டத்தில் எமது அனுபவங்கள்

வி.வி.சுவாமிநாதன் உரையிலிருந்து,

அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட நான்கு மடங்கு அதிகமாக வசுலிப்பதற்கும், ரசீது கொடுக்காததற்காகவும் அவர்களுக்கு என்ன தண்டனை என ராஜு தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு இந்த நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். புனிதமான காமராஜ் பெயரில் நடத்தும் பள்ளியில், வீனசு பள்ளியில் எப்படி கட்டணக் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளும் விஷயம் இந்த புத்தகத்தில் உள்ளது. ஆள்பலம், ஆட்சிபலம், படைபலம் இல்லாத ஒரு அமைப்பு இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளது.

இலவசமாக பள்ளிக்கல்வி படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், முதலமைச்சர் அவர்கள் இப்புத்தகத்தை இலவசமாக கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைத்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்த நூலை கொடுக்க வேண்டும். சிதம்பரத்தில் நாம் வாழ்கின்ற இடத்தில் நடக்கிற இந்த அக்கிரமத்தை நாம் இந்த புத்தகத்தை படித்துவிட்டு நாம் தனியார் பள்ளிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். முதலமைச்சரை தனியார் பள்ளி தாளாளர்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம். முதலமைச்சர் என்ன வேண்டுமானாலும் செய்வார். அண்ணாமலை பல்கலைக்கழகம் என்ன நிலையில் இருந்தது. தமிழக அரசால் எடுக்கப்பட்டு இன்று பிரமாதமாக நிரவாகம் செய்யப்பட்டு வருகிறது. அதே நிலை முடிவை தனியார் பள்ளிகளிலும் முதலமைச்சர் எடுக்க தயங்க மாட்டார் என்பதைபள்ளி உரிமையாளர்கள் மறக்க வேண்டாம்.

துஷ்டன் அதிகமானால் ஆண்டவன் அவதாரம் எடுத்து அழிப்பான். ஆனால் அரசு அதிகாரிகள் எந்த அவதாரமும் இதுவரை எடுக்கவில்லை. கடவுள் அவதாரம் எடுத்து இரண்டு மனிதர்களை சந்தித்தார். ஆப்பிரிக்கா மனிதன் தங்கள் நாடு முன்னேற எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என கடவுளிடம் கேட்டான். 50 வருடம் ஆகும் என்றாராம் கடவுள். அதுவரை நான் உயிரோடு இருக்க மாட்டேன் என அழுதானாம் அந்த மனிதன். தமிழ்நாட்டு மனிதன் கடவுளிடம் எங்கள் நாடு எப்போது முன்னேறும் எனக் கேட்டான். கடவுள் அழுதாராம். ஏன் அழுகிறீர்கள் என கேட்டதற்கு நான் அதற்குள் இறந்துவிடுவேன் என்றாராம் கடவுள்.

இலவச கல்வி என்பது, தரமான இலவச கல்வியாகும். தபால்நிலையம் ஒவ்வொன்றாக மூடப்படுவது போல் ஒவ்வொரு அரசுப் பள்ளியும் மூடப்படுகிறது. அந்த காலத்தில் சொந்த காரன் போக அஞ்சிய நிலையிலும் தபால் காரர் நமது கடிதத்தை சைக்கிளில் கொண்டு போய் சேர்த்தார். ஒவ்வொரு அரசுப் பள்ளியும், நகராட்சி, மாநகராட்சி பள்ளி ஒவ்வொன்றாக மூடப்படுகிறது.

துப்புரவு தொழிலாளி ஐந்து வட்டிக்கு பணம் வாங்கியாவது தனது குழந்தையை மெட்ரிக் பள்ளியில் படிக்க வேண்டும் என்று நினைக்கிறான். அங்கு தரமான கல்வி இருப்பதாக அவன் நினைக்கிறான். நீதிபதிகள் சொல்லும் கட்டணத்தை தனியார் பள்ளிகள் வாங்க மறுப்பது என்ன நியாயம்? கட்டணம் வாங்க மறுக்கும் தனியார் பள்ளி மீது அவமதிப்பு தொடங்காததற்கு அரசு ஏன் தயங்குகிறது? ஏன் சிங்காரவேலனை டிஸ்மிஸ் செய்யக்கூடாது? ஏன் தனியார் பள்ளிகளை டிஸ்மிஸ் செய்யக்கூடாது?

மாணவர்கள், பெற்றோர்கள் வந்து முறையிடும்போது கண்டிப்பது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அனுமதி கொடுக்காததற்கு என்ன காரணம்? பொதுமக்களிடம் பேசுவதற்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை? இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது சுடப்பட்டவன் ராசேந்திரன். சுடச் சொன்னவர் பக்தவத்சலம் இன்று அவரும் இல்லை, அவர் ஆட்சியும் இல்லை, இராசேந்திரன் இன்று சிலையாக நம்மிடையே வாழ்கிறான்.

எஸ்.ஐக்கு புகாரை பதிவுசெய்யவில்லை என்றால் 6 மாதம் தண்டனை என்பதை அறியவேண்டும். முற்றுகை போராட்டம் செய்ய வேண்டியது அவசியம்தான். கிராமத்தில் வசதிகள் செய்து தரவில்லை என்றால் சாலை மறியல் செய்கிறார்கள். அப்போதுதான் பிரச்சனை தீர்க்கப்படுகிறது. இது சட்டமன்றத்தில் இயற்றப்படும் கவன ஈர்ப்பு தீர்மானம் போன்றது. ஜனநாயக மரபுகளை கட்டிக்காக்க வேண்டும் என்று கூறினார். இந்த புத்தகத்தை வைத்துக்கொண்டு முதல்வருக்கு போலீசு தான் எடுத்து சொல்ல வேண்டும். குற்றம் சொல்ல புகார் கொடுக்க வருபவரை நீங்கள் அவமதிக்க கூடாது.

அதிக கட்டணம் வசூலிக்க சட்டம் இல்லை. இப்போது அதிக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றால் அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும். காமராஜ், வீனஸ் பள்ளியில் சொல்லமுடியாத அநியாயம், அக்கிரமம் நடப்பதால் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் இதை அரசுக்கு எடுத்து சொல்ல வேண்டும். சிதம்பரம் எம்.எல்.ஏ. ஏன் வரவில்லை? சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் ஏன் வரவில்லை? ஏன் இவர்கள் இந்த கட்டண கொள்ளையை கண்டிக்கவில்லை? சர்வகட்சிகள் இந்த பிரச்சனைக்கு ஒன்று கூட வேண்டும். காவல்துறை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.அரசின் நிலமைகள் மாறிக் கொண்டே இருக்கும் நீங்கள் தவறாக செயல் பட்டால் மாட்டிக் கொள்வீர்கள்.அதுவும் மனித உரிமை பாது காப்பு மையத்திடம் எச்சரிக்கையாக இருங்கள்.முற்றுகை போராட்டம் நடத்தினால் என்ன தவறு? அதை ஏன் தடுக்கிறீர்கள்.இந்த புத்தகத்தில் உள்ள விபரங்கள் ஏவுகணையாக செயல்படும். அனைத்து விபரங்களும் ஆதாரப்பூர்வமாக பதியப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து 87 வயதான நான் உடனே புறப்பட்டு இதற்காகவே வந்தேன். இந்த நூலை வெளியிட்டு பேசியதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

மதியழகன், அண்ணாமலை பல்கலை கழக ஊழியர்கள் சங்க தலைவர்

அண்ணாமலை பல்கலையில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்திய வரலாறு திரு. வி.வி.எஸ் அவர்களுக்கு உண்டு. முறையற்ற மாணவர் சேர்க்கையால் பல மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் வருகையால் சிதம்பரத்தில் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. கட்டணக் கொள்ளைக்கு எதிரான இந்த நிலைக்கு தமிழக முதலமைச்சர் சரியான நேரத்தில் செவிசாய்ப்பார். நீங்கள் நடத்தும் போராட்டம் ஒட்டுமொத்த தமிழகத்தை செவிசாய்க்க வைக்கிறது. இது சிதம்பரத்தில் உள்ள ஒரு சில பள்ளியை மட்டும் குறிவைத்த எடுக்கும் முயற்சி அல்ல. பல்லாயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம். ஆனால் இதை சாதியை வைத்து கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? A, B, C, D, என்று வைத்துக் கொண்டு அதன்படி இடஒதுக்கீடு கொடுக்கலாமே, அரசியல்வாதிகள் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள். சாதிக்கு எதிரான கருத்தை மக்களிடமிருந்தே உருவாக்கப்படவேண்டும். இந்தி ஒழிக்கவேண்டும் என்ற கொள்கைக்காக இன்று ஆங்கில கல்வியை நாம் ஏற்றுக்கொண்டு உள்ளாம். இதை மூலதனமாக வைத்து மெட்ரிக் பள்ளி கொள்ளை அடித்துகொண்டிருக்கிறது. புற்றீசல் போல் பரவிவரும் மெட்ரிக் பள்ளியை முடக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்ற காரணத்தால்தான் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியை தற்போது அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த எண்ணம் அரசுக்கு உள்ளது. மெட்ரிக் பள்ளியில் படித்த ஒருவன் ஒரு மணிநேரம் உரையாற்ற முடியுமா?அரசுப்பள்ளியில் படித்த நாங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றும் ஆற்றல் உண்டு. ஆங்கிலம் அறிவு அல்ல அது மொழிதான் என புரிந்து கொள்ள வேண்டும்.

அரசின் கல்விக் கொள்கையில் மாற்றம் வரவேண்டும். ஆங்கிலம், இந்தியை ஒரு மொழிப் பாடமாக படிக்கலாம். ஆனால் இப்போது தமிழுக்கு பதிலாக ஆங்கிலம வளர்கிறது. மொழிப்புலமை என்பது வேறு. ஆங்கிலத்தில் புலமையை கற்றுக் கொடுக்க வேண்டும், இந்தியையும் கற்றுக்கொடுக்கலாம். ஆனால் எல்லா பாடங்களையும் தமிழில்தான் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அநீதிக்கு எதிரான மக்கள் போராட்டங்களில் நாம் எந்த பக்கம் என்பதை பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் உங்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு எங்கள் ஆதரவை பதிவு செய்யவே நான் கலந்து கொண்டு பேசுகிறேன். அதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்

கட்டணக் கொள்ளைக்கு எதிராக கல்வித்துறை நடவடிக்கை எடுத்திருந்தால், போராட்டம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் தேவை இருக்காது. தவறே நடக்காமல் பார்த்துகொள்வதுதான் ஒரு நல்ல அரசு நிர்வாகம். ஆனால் மீண்டும், மீண்டும் ஒரே தவறை இந்த பள்ளிகள் செய்துகொண்டிருக்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கல்விக்கூடம் என்பது அறிவை பெருக்குகிற ஒரு கூடம். தெய்வத்திற்கு ஈடாக ஆசிரியர்களை வைக்கிறார்கள். கல்வி என்பது சேவை.

ஆனால் கடந்த ஆண்டு நாங்கள் காமராஜ் பள்ளிக்கு நடத்திய தொடர் போராட்டத்தால் ஏன் உன் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய கூடாது என்று ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்ப வைத்தோம். கல்வி துறை அதிகாரிகளின் விசாரணையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து உள்ளோம். அரசே இலவச கல்வியை அனைவருக்கும் வழங்கவேண்டும் என்றுதொடர்ந்து கல்வியாளர்களை வைத்து மாநாடுகள் நடத்தினோம்.

500 ருபாய் கொடுத்து அயன்பாக்ஸ் வாங்கினால், வேலை செய்யவில்லை என்றால் கேட்கலாம். ஆனால் 30,000 (அ) 40,000 ரூபாய் கட்டி பிள்ளைகளை படிக்க வைக்கும் நீங்கள் பள்ளி சென்று கேள்வி கேட்க முடியாது. நீங்கள் உங்களை பற்றி சிந்திக்கிறீர்கள். ஆனால் உங்கள் குழந்தைகளை பற்றி சிந்திக்க மறுக்கிறீர்கள். அவர்கள் எந்த துறையில் ஆர்வமாக உள்ளார்களோ அப்படி படிக்க வைக்கவேண்டும். மனப்பாடக் கல்வி தேவையில்லை. மாணவனை சரக்காக, பண்டமாக தனியார் பள்ளிகள் மாற்றுகின்றன. அரசுப் பள்ளியில் கட்டுப்பாடு இல்லாமல் மாணவர்கள் விடப்படுவதால் சீரழிவு, ஒழுங்கின்மை ஏற்படுகிறது. மாணவர்கள் பள்ளிகளில்தான் அதிக நேரம் ஆசிரியர் கண்காணிப்பில் இருக்கின்றனர். அது போல் தனியார் பள்ளியில் அதிக கட்டுப்பாடுகளால்,லாபத்தை முன்னிருத்துவதால் மாணவர்களிடையே திறமை முடமாக்கப்படுக்கிறது. காமராஜ் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவனை தனிமைபடுத்தும், தேர்வை எழுதவிடாமல் தடுக்கும் அந்த பள்ளி முதல்வர் பாடம் நடத்த, பள்ளியை நிர்வாகிக்க தகுதி உள்ளவரா?

தனியார் பள்ளி கொடுமைக்கு எதிராக மாநிலம் முழுவதும் நாங்கள் போராடி வருகிறோம். புதியதாக பள்ளிக்கூடம் திறக்க அனுமதி வாங்க வேண்டாம். லேபர் பிரச்சனை கிடையாது. மார்க்கட்டிங் பிரச்சினை கிடையாது. ரூ 4000 சம்பளத்திற்கு வேலை செய்ய ஆசிரியர் ரெடி. அதனால் புற்றீசல் போல கல்வி வியாபாரம் பறக்கிறது. இந்த ஊரிலிருந்து வேன்கள் பக்கத்து ஊருக்கும் பக்கத்து ஊரிலிருந்து இங்கும் காலை மாலை பறக்கிறது.

தொழில் தொடங்க வணிகர்கள் படும் சிரமங்கள், பிரச்சினைகள் பள்ளிக்கூடம் நடத்துவதில் கிடையாது. கொத்தடிமைகளாக பணியாற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்காகவும் சங்கம் போராடும். அரசுப் பள்ளியில் டி.இ.டி தேர்வு எழுதி தகுதி முடிவு செய்யபடுகிறது. தனியார் பள்ளி ஆசிரியர்களின் தரம், தகுதி யார் பரிசோதித்கிறார்கள்? எவ்வாறு முடிவு செய்யபடுகிறது?

தேர்வு மையங்களை அரசு அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள். தேர்வுத்தாளை அரசு பள்ளி ஆசிரியர்கள்தான் திருத்துகிறார்கள். பாடத்திட்டம் அரசு கொடுக்கும், சமச்சீர் பாடம். பள்ளி நடத்த அங்கீகாரம் கொடுப்பது அரசு. எவ்வளவு கட்டணம் வாங்க வேண்டும் என முடிவு செய்வது அரசு. கல்வி சேவையாற்ற கட்டிடம் கட்டுவது பெற்றோர்கள் கொடுக்கும் பணத்தில். அதனால் வரிவிலக்கு பிற சலுகை.

ஆனால் தனியார் பள்ளி முதலாளிகள் எங்கள் பள்ளி நான் சொன்னதுதான் சட்டம் என எப்படி சொல்ல முடியும். கூடங்குளம் அணு உலையை யார் வேண்டுமாளாலும் பார்க்கலாம் என கூப்பிடுகிறார்கள். தனியார் மெட்ரிக் பள்ளியில் தன் பிள்ளை எந்த வகுப்பறையில் படிக்கிறான். மின் விசிறி, குடிநீர், கழிப்பறை காற்றோட்டம் இருக்கிறதா? என பார்க்க முடியுமா? ஏன் தடுக்கிறார்கள்.பெற்றோர்கள் பார்க்கலாம் என அரசு ஆணை போட்டிருக்கிறது. பெற்றோர்கள் விழிப்புணர்வு அடைந்து கேள்வி கேட்டால்தான் இதற்கு தீர்வு ஏற்படும்.

தனியார் பள்ளியில் ஸ்போக்கன் இங்கீலீஷ்-க்காக பணம் வாங்குகிறார்கள்? இது என்ன அநியாயம். பெற்றோர்களின் இத்தகைய அறியாமையை அகற்ற அச்சத்தை போக்கதான் நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம். நீங்கள் உங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். படிப்பறிவு இல்லாதவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு ஆங்கிலத்தில் பாடம் சொல்லிக்கொடுக்க முடியும். ஆசிரியர் தன்னுடைய அனுபவத்தை மாணவரின் அனுபவத்தோடு இணைத்து போதிக்கிறார். அப்போது மாணவன் மனதில் பதிகிறது. சிந்திக்க தூண்டுகிறது.

அம்பானியும், பிர்லாவும் இந்தியாவின் கல்விகொள்கையை உருவாக்கும் குழுவில் உள்ளனர். இன்போசிஸ் நாராயணமூர்த்தி உயர் கல்வியை கார்ப்பரேட்டிடம் விட வேண்டும் என்கிறார். கல்வியை தனியார் மயமாக்குவதில் அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது, பணம் சம்பாதிப்பது மட்டும் அல்ல.

நாள் ஒன்றுக்கு 29 ரூபாய் வருமானத்தில் 80 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நல்ல தண்ணீர் தரவேண்டும். அப்படி அல்லாமல் 10 ருபாய்க்கு அம்மா தண்ணீர் கொடுப்பது என்ன நியாயம்? சிறுவாணி, புழல்,சோழவரம் ஏரிகளை எல்லாம் கோக், பெப்சி-க்கு தாரை வார்த்து விட்டு மக்களுக்கு தண்ணீர் விற்பது என்ன நியாயம்? காசில்லாதவனுக்கு தண்ணீர் இல்லையா?

மருத்துவம் தனியாருக்கு. அதனால்தான் அரசு மருத்துவ மனைகள் புறக்கணிக்கப் படுகின்றன. தனியார் செல் வளருவதற்கு அரசு பிஎஸ்என்எல் முடமாக்கப்படுகிறது.

இதனால்தான் பெற்றோரை வயிற்றில் எட்டி உதைத்த பள்ளி தாளாளரை கைது செய்யாமல் காவல்துறை மௌனம் காக்கிறது. அரசு உத்தரவை, அதிகாரிகளை தனியார் பள்ளி முதலாளிகள் மதிப்பதில்லை. எங்களுக்கு வருகின்ற அந்த கோபம் ஏன் போலீசுக்கு வரவில்லை? ஏன் வட்டாட்சியருக்கு வரவில்லை? சப்-கலெக்டருக்கு ஏன் அந்த கோபம் வரவில்லை? தனியார்மயக் கொள்கை அவர்களை செயல்பட விடாமல் தடுக்கிறது. பெற்றோர் சங்கம் நடத்திவரும் தொடர்ந்த போராட்டங்களின் வாயிலாகத்தான் பெற்றோர்களை இன்று மனிதனாக மதிக்கிறார்கள்.வாங்கும் பணத்திற்கு ரசீது தருகிறார்கள். அரசு கட்டணம் மட்டுமே வசூல் செய்வோம் என விருதையில் ஒரு மெட்ரிக் பள்ளி போஸ்டர் அடித்து ஒட்டியது. ஒவ்வொரு ஊரிலும் பெற்றோர் சங்கக் கிளையை ஆரம்பிக்க வேண்டும். அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர் சங்கங்கள் தனியார் பள்ளியின் தரத்திற்கு எதிராக பேச வேண்டும் அரசின் ஆங்கில வழிக்கல்வியை பற்றி பேச வேண்டும்.

கவரப்பட்டு உயர்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 96% மாணவர்கள் தேர்ச்சி. சிதம்பரம் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தரமாக கல்வி அளிக்கிறார்கள். அவர்கள் தான் இந்த மாவட்டத்தின் கல்வித் துறை அதிகாரிகளிடம் அனைத்த பள்ளிகளையும் தரமாக மாற்றுங்கள் என ஏன் சொல்ல முடியாது?. சிறு சிறு குறைபாடுகளை நாம் சரி செய்து நம் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பது தான் நிரந்தர தீர்வு.

அரசுப் பள்ளி நம்முடைய சொத்து என்ற நினைப்பு நமக்கு வரவேண்டும். பி.எஸ்.என்.எல் நம்முடைய சொத்து என்ற நினைப்பு இருக்க வேண்டும்.

ஆதார் அட்டை கட்டாயமில்லை. வேண்டும் என்பவர்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என நாங்கள் ஆதாருக்கு எதிராக போடபட்ட வழக்கில் மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் அரசாங்கம் மக்களை ஆதார் எடுக்க சொல்கிறது. மான்யங்கள் அப்போதுதான் கிடைக்கும் என பிரச்சாரம் செய்கிறது. கல்வி, மருத்துவம்,ரேசன் பொருட்கள் கேஸ் சிலிண்டர் மான்ய பணம் இனி பணமாக உங்கள் கணக்கில் தருகிறோம் என கூறுகிறார்கள். தற்போது இரண்டு லட்சம் மக்கள் அரிசி வாங்குகிறார்கள் என்று வெளியில் தெரியும். பணம் கொடுக்கும் போது ஒரு லட்சம் பேரை நீக்கி விடுவார்கள். இது தான் உலக வங்கி உத்தரவு.

தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை கல்வி கட்டணச்சட்டத்தை ஏற்க முடியாது என தனியார் பள்ளி முதலாளிகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று தோற்றுப் போனார்கள். இந்த சட்டத்திற்கு எதிராக அவர்கள் நடந்து கொண்டால் மூன்று ஆண்டுகள் ஜெயில் தண்டனை. இதற்கு வழக்கு போடுவதற்கு கல்வி துறை அதிகாரிகள் அரசிடம் அனுமதி பெற வேண்டும். தனியார் பள்ளி முதலாளிகளை அரசு பாதுகாக்கவே இந்த நடைமுறை.

தனியார்மயக் கொள்கையை அமல்படுத்துவது சட்டப்படியே நடக்கிறது. தண்ணீர் பாதுகாப்பு சட்டம் அதன் மூலம் மக்களுக்குதான் அதிக கட்டுபாடுகள். பன்னாட்டு கம்பனிகளுக்கு இல்லை. அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டம். இதன் படி 25% மாணவர்களுக்குத்தான் இலவசக்கல்வி கிடைக்கும். அதற்குண்டான பணத்தை மக்கள் பணத்திலிருந்து தனியார் பள்ளிகளுக்கு அரசு கொடுக்கும்.

உணவு பாது காப்பு சட்டம் அதன் படி ஏழைகளுக்கு மட்டும்தான் ஆனால் ஏழை யார் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். இதற்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு பெற்று போராடுவதை தவிர வேறு வழியில்லை.

பெற்றோர்களே ஆங்கிலத்தில் படித்த லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள் வேலையில்லாமல் வீதியில் இருக்கிறார்கள்.  வேலைவாய்யப்பு உருவாவது அரசின் கொள்கையால்தான். குறைந்த கூலிக்கு இந்திய ஐ.டி மாணவர்களுக்கு வேலை வாய்ப்புதானே தவிர அமெரிக்க மாணவர்களை விட ஆங்கில அறிவு நமக்கு ஏற்பட்டு விட்டது என்று அர்த்தம் அல்ல. தாய்மொழிக் கல்விதான் சுய சிந்தனையை, தலைவர்களை உருவாக்குகிறது. நகராட்சி சொத்துவரியில் 2% நகராட்சி பள்ளிக்காக ஒதுக்கவேண்டும். இது போல் நாம் கண்காணித்து அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும்.

குழந்தைகளை இயல்பாக வளரவிடுங்கள். ஆற்றல் மிகுந்தவராக, திறமை வாய்ந்தவராக வளரவிடுங்கள். நீங்கள் நினைப்பதை திணிக்காதீர்கள். கொஞ்சம் படியுங்கள். அதைபற்றி சிந்தனை செய்யுங்கள். அதுதான் அறிவு.

நமது போராட்டத்தில் நியாயம் இருப்பதால், உண்மை இருப்பதால், கல்வித்துறையும், காவல்துறையும் நமக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் சம்பளம் அரசு கொடுக்கிறது. பள்ளிக்கட்டிடம் தனியாருக்கு சொந்தமானது. அது போல் தனியார் பள்ளி ஆசரியர்களை அரசு ஊழியர்களாக மாற்றி அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசே ஏற்க வேண்டும். கட்டணக் கொள்ளைக்கு நிரந்தர தீர்வு அப்போதுதான் ஏற்படும். அதுதான் இந்த பொதுக் கூட்டத்தின் நோக்கம்.

நன்றியுரையாற்றிய செல்வகுமார், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் நாம் இணைந்து ஓர் அணியாக போராடுவதை தவிர வேறு ஒன்றும் வழி இல்லை. பயந்தால் நாம் எதையும் சாதிக்க முடியாது என பேசியதுடன் கூட்டம் இரவு 9-30 மணிக்கு நிறைவடைந்தது.

திரளான பொது மக்கள் ஆங்காங்கே நின்று கூட்டத்தை கவனித்தனர். இரண்டு நாட்கள் முன்பு இதே இடத்தில் நடந்த சினிமா பாட்டு டான்ஸ் போட்டு நடத்திய அ.தி.மு.க கூட்டத்தில் ஐம்பது பேர் கூட இல்லை. பெற்றோர் சங்க கூட்டத்திற்கு இவ்வளவு கூட்டமா அதுவும் யாரும் கடைசி வரையில் கலையாமல் என பொது மக்கள் ஆச்சரியபட்டனர். நம்பிக்கையும் அடைந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

மோடிக்கு ஜே போடும் கிருஷ்ணய்யரின் இடதுசாரி பார்ப்பனியம் !

34

மோடி இப்படியொரு திடீர் ஆதரவை அவரே எதிர்பார்த்திராத ஒரு நபரிடமிருந்து வருமென்று நினைத்திருக்க மாட்டார். சமீபத்தில் 63-வது பிறந்த நாளை கொண்டாடிய மோடிக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், பல முற்போக்காளர்களால் வியந்தோதப்படும் மனித உரிமைப் போராளியுமான வி.ஆர். கிருஷ்ணய்யரிடமிருந்து வாழ்த்து கடிதம் வந்திருந்தது. அதில் வரும் 2014 மக்களவைத் தேர்தலுக்கு மிகச்சரியான பிரதமர் வேட்பாளர் மோடி தான் என கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். அதற்கு மூன்று காரணங்களை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஒன்று சூரிய மின்சக்தி, இரண்டு மது ஒழிப்பு, மூன்று மோடியும தன்னைப் போலவே ஒரு சோசலிஸ்டு!

வி ஆர் கிருஷ்ணய்யர்
வி ஆர் கிருஷ்ணய்யர்

ஏற்கெனவே கடந்த ஜூன் மாத துவக்கத்தில் மோடி பாஜகவின் தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து கிருஷ்ண அய்யர் அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் மது ஒழிப்பையும், ஊழலற்ற நிர்வாகத்தையும் குஜராத்தில் கொண்டு வரும் பட்சத்தில் நல்ல தலைவராக மோடி உருவெடுக்க முடியும் என்று வழிகாட்டியிருந்தார்.

கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்து பல முக்கிய வழக்குகளில் குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை வழங்கியவர்களில் ஒருவர் வி.ஆர்.கிருஷ்ண அய்யர் என்பதை மறுக்க முடியாது. பல வழக்குகளில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மக்கள் தரப்பில் நின்று விளக்கம் சொல்ல முயற்சித்தவர் தான். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அரசே இலவசமாக சட்ட உதவி வழங்க வகை செய்யும் அரசியல் சாசனம் பிரிவு 21-ஐ நடைமுறைப்படுத்த அரசுக்கு உத்திரவிட்டவர். இசுலாமிய தனிநபர் சட்டங்களை வைத்தும் ஓரளவு நியாயமான தீர்ப்புகளை வழங்கியவர்களில் முக்கியமானவர் கிருஷ்ண அய்யர் என்பதும் ஊரறிந்த உண்மை.

1980-ல் ஓய்வுபெற்ற பிறகும் மனித உரிமை செயல்பாட்டாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்டவர். மதானி நீண்ட காலம் சிறையில் வாடுவது பற்றி குடியரசுத் தலைவருக்கு பல முறை கடிதம் எழுதியவர். பல்வேறு தூக்குத் தண்டனை கைதிகளின் மறுவாழ்வுக்காக கடைசி நிமிடம் வரை குடியரசுத் தலைவருக்கு பகிரங்க கடிதம் எழுதி வருபவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளனுக்காக கூட குரல் கொடுத்து வருபவர் தான். 2008-ல் இரானில் பகாய் சமய வழிபாட்டு தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சர்வதேச மனித உரிமை அமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட போது அதில் கையெழுத்திட்ட நீதிபதிகளில் இவரும் ஒருவர். இந்தியாவில் இசுலாமியர்கள் தாக்கப்படும்போதெல்லாம் பலமுறை அவர்களுக்காக குரல் கொடுத்தவர். 2002-குஜராத் படுகொலையை முதல்வர் மோடியே நன்கு திட்டம் தீட்டி நடத்திய இனப்படுகொலை என்று காட்டமாக அறிக்கை விட்டவர்.

இப்பேற்பட்ட மனித உரிமைப் போராளிதான் இன்று தனது பார்வையில் மோடி சோசலிஸ்டாக படுவதை வெட்கமில்லாமல் பொது சபையில் முன் வைக்கிறார்.

நம்பூதிரி பாடு
ஈ எம் எஸ் நம்பூதிரிபாடு

1957 கேரள சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற கிருஷ்ணய்யரை தனது அமைச்சரவையில் சட்ட அமைச்சராக நம்பூதிரிபாடு சேர்த்துக் கொண்டார். இவரது காலத்தில் தான் கேரளாவில் நிலச்சீர்திருத்தம்  முன்னோடி மாநிலம் என்ற வகையில் ஓரளவு நிறைவேற்றப்பட்டது. அறுபதுகளில் நீதித்துறைக்கு சென்று விட்ட இவர், ஓய்வு பெற்ற பின்னர் 1987-ல் குடியரசுத் தலைவர் தேர்தலில் சி.பி.எம்-ன் வேட்பாளராக காங்கிரசின் வெங்கட்ராமனை எதிர்த்து நின்றார். அப்போதும் அத்வானியிடம் ஆதரவு கேட்க இவர் தவறவில்லை. ஆனால் அத்வானியோ சோவியத் யூனியனை ஆதரிப்பவர்களை நாங்கள் எப்படி ஆதரிக்க முடியும் என்று கேட்டு கிருஷ்ணய்யரின் மூக்கை உடைத்தார். இப்படி ஆதரவு கேட்டது பற்றி சிபிஎம் கட்சியினர் கொஞ்சமும் முணுமுணுக்கவில்லை.

இப்போது மோடியின் முறை. மோடியின் நிலைமையும் மக்கள் அரங்கில் மிகவும் பரிதாபகரமாக இருப்பதால் இதனை வேண்டாமென்றும் தட்ட முடியாது. வேண்டும் என்றும் பிடித்து மடியில் போட முடியாது. சொந்த கட்சியிலேயே சூன்யம் வைக்க பலரும் வலம் வருகையில் இதுபோன்ற யோக்யர்களின் சான்றிதழ் கொஞ்சம் அவருக்கு தேவைப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ஓட்டை பிரிப்பதை தாண்டி அதில் ஒரு இழவும் இல்லை. எனினும் இடதுசாரி முகாம் மற்றும் சிபிஎம்மின் பிரச்சாரத்தை எதிர்கொள்வதற்கு கிருஷ்ணய்யரின் ஆதரவு மோடிக்கு தேவைப்படலாம். ராமனுக்கு விபீஷ்ணன் வேலை பார்க்க ஒருவர் கிடைத்திருப்பதாகவும் இதனைச் சொல்லலாம்.

சோசலிச குஜராத்தின் வாடகைத் தாய்மார்கள் பற்றி கிருஷ்ணய்யருக்கு தெரியாமல் இருக்கலாம். புள்ளிவிவரப் பொய்கள் மூலம் குஜராத்தின் வளர்ச்சி பொய்யாக கட்டியமைக்கப்படுவது இந்த நீதியரசருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் மக்கள் நலனிலான சோசலிசத்தை முதலாளிகளின் நலனுக்கான ராமராஜ்யத்திற்குள் புகுத்த முடியாது என்பது மோடிக்கு தெரியும். ஆனால் கிருஷ்ணய்யரை பொறுத்த வரை ஜெயிக்கும் குதிரைக்கு சோசலிசம் எனப் பெயர் வைத்து சாவதற்குள் (இப்போது அவருக்கு வயது 98) தான் கனவுகண்டது போல அல்லது குறைந்தபட்சம் நம்பூதிரிபாடு வகையறாக்களின்  கனவு போன்ற தோற்றத்தில் சோசலிச இந்தியாவை பார்க்கும் ஆவல் இருந்திருக்கலாம். ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன் அவருக்கு இந்துமத வெறியனாக, இசுலாமியர்களை கருவறுக்கும் வடிவமாக தெரிந்த மோடி இப்போது எப்படி ஒரு சோசலிஷ்டாக, அகிம்சா மூர்த்தியாக மாறினார் என்பதை பார்க்க வேண்டும்.

மோடி
படம் : நன்றி தி இந்து.

இந்தியாவை புண்ணிய பூமியாக பாவித்து, இந்து ஞானமரபின் ஆன்மிக தரிசனத்தை உயர்ந்த ஒன்றாக, கம்யூனிசத்திற்கு நிகராக நிறுவ விரும்பிய நம்பூதிரிபாடு போன்ற போலி கம்யூனிஸ்டுகளின் பாதிப்பு கிருஷ்ணய்யரிடம் உண்டு.

அது இல்பொருள் உவமையணியாக இப்போது கிருஷ்ணய்யரிடம் வெளிப்படுகிறது. பழைய மன்னர்களிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி பரிசில் பெற்றுச் சென்றார்கள் வறிய புலவர்கள். அவர்கள் தம் வயிற்றுப்பாட்டுக்காக புலமையை விற்றார்கள். கிருஷ்ணய்யர் போன்ற போலி முற்போக்காளர்களோ தம் நேர்மையை அகண்ட இந்துராஷ்டிரத்துக்காக விற்கிறார்கள். இதில் விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சமாக மோடிக்கு ஒரு சோசலிச பட்டம் வேறு.

லஞ்ச, ஊழல் இல்லாத நிர்வாகத்தை தர மோடி முயற்சிப்பதாக கிருஷ்ணய்யர் சொல்லியதுடன், காந்தியின் வழியில் அரசியல், சமூக, பொருளாதார விசயங்களை அவர் பின்பற்றுவதாக வேறு கூறியுள்ளார். இதனை மோடி ஏற்றுக் கொள்வாரா எனத் தெரியவில்லை. மேலும் வறுமை ஒழிப்பு, சுவராஜ்யம் போன்றவற்றுக்காக மோடி பாடுபட வேண்டும் என்றும் கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். காந்தியின் ராமராஜ்யம் தான் மோடியின் சுவராஜ்யம் என்பது 2002-ல் நடந்த குஜராத் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்ட வி.ஆர். கிருஷ்ணய்யருக்கு தெரியாததல்ல.

எனினும் சில முற்போக்காளர்கள் கிருஷ்ணய்யரின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கலாம். அவருக்கு அதிக வயது என்பதால் டிமன்ஷியா போன்ற நினைவாற்றல் குன்றும் நோயாக இருக்கலாமோ என்றும் அவர்கள் கருதலாம். ஆனால் உண்மை அதுவல்ல. சிபிஎம் கட்சி மட்டுமல்ல சிபிஎம் சார்ந்த அறிஞர் பெருமக்கள் பலரும் நல்ல இந்து மதம், நல்ல இந்து ஞான மரபு என்ற ஒன்று இருப்பதாக கூறுகிறார்கள். பார்ப்பனிய வருண தருமம், சாதிய சமூகம், ஏற்றத்தாழ்வுதான் இந்துமதத்தின் ஆன்மா என்று அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இத்தகைய பார்ப்பனியத்தை எதிர்த்து வந்த மரபை போற்றுவதற்கு பதிலாக பார்ப்பனியத்திற்குள்ளேயே நல்ல பார்ப்பனியத்தை கண்டுபிடிக்கிறார்கள் இந்த சிகாமணிகள். கிருஷ்ணய்யரின் மோடி ரசிப்புக்கு உள்ளே இப்படி ஒரு இடதுசாரி பார்ப்பனியத்திற்கான அடிப்படை உண்டு.

ஒரிஜினல் பார்ப்பனியம் போன்று இடது சாரி பார்ப்பனியமும் அம்பலப்படுத்த வேண்டியவைதான். கிருஷ்ணய்யரின் இறுதிகால விருப்பமும் கூட.

ஏழ்மையை அளக்கும் சூத்திரங்கள் : மாயையும் உண்மையும்

0

ஏழ்மையை அளப்பதற்கான அடிப்படையாக பயன்படும் நலவாழ்வு-கோட்பாட்டு குறித்த விமர்சனம் – பிரபாத் பட்நாயக்

ஏழ்மையும் உணவு நுகர்வும்முந்தைய காலகட்டத்தின் பொருட்களும் சேவைகளும் தற்போதைய கால கட்டத்திலும் கிடைக்கின்றன என்ற பொய்யான நலவாழ்வு பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையை நாம் கை விட்டு விட்டால், வறுமையின் அளவீடு மற்றும் மட்டம் குறித்து முரண்பட்டதாக தோன்றும் பல தகவல்களை ஒருங்கிணைந்த தொடர்ச்சியான கதையாடலாக புரிந்து கொள்ள முடியும். குறைந்த பட்ச கலோரி உட்கொள்தல் உட்பட தேவையான பொருட்களும் சேவைகளும் கிடைப்பது என்று வறுமையை வரையறுத்தால் புதியதாராளவாத இந்தியாவில் வறுமை உயர்ந்து கொண்டே போகிறது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

பிரபாத் பட்னாயக் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்டமிடலுக்கான மையத்தின் சிறப்பு பேராசிரியராக பணியாற்றுகிறார்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்தியாவில் ஏழ்மையை அளப்பதற்கான அடிப்படையாக பயன்படும் நலவாழ்வு கோட்பாடு (வெறும் சூட்சுமமான கோட்பாடாக இருக்கிறது என்பதால் மட்டுமின்றி) நடைமுறையை பிரதிபலிக்காமல் இருக்கிறது என்ற வகையிலேயே தவறானது என்று நிறுவுவதாகும். பகுதி 1 நலவாழ்வு கோட்பாட்டிற்கும் அதன் மூலம் வறுமையை அளவிடுவதற்கும் பயன்படுத்தப்படும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அனுமானங்கள் தவறானவை என்று வாதிடுகிறது. பகுதி 2 இந்த அனுமானங்களை விமர்சிக்கிறது. பகுதி 3 இந்தியாவின் வறுமை பற்றிய விவாதம் தொடர்பாக சில முடிவுகளை முன் வைக்கிறது.

1 நலவாழ்வு கோட்பாட்டின் அனுமானங்கள்

அணுகுமுறை

புதிய வறுமைக் கோடு
இதுதான் புத்தம் புது வறுமைக் கோடு. சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நீ அதற்கு கீழ் 29.9%தான் இருக்கிறாய்.

இந்தியாவில் பின்பற்றப்படும் ஏழ்மையை அளப்பதற்கான அனைவரும் அறிந்த வழிமுறை பின்வருமாறு. தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (NSS) மூலம் கிடைக்கும் நுகர்வு செலவுகளின் அடிப்படையில், நகர்ப்புறத்தில் ஒரு நபர் ஒரு நாளைக்கு 2,100 கலோரிகளும் கிராமப்புறங்களில் ஒரு நபர் ஒரு நாளைக்கு 2,400 கலோரிகளும் (பின்னர் 2,200 கலோரிகளாக குறைக்கப்பட்டது) உட்கொள்வதற்கு செய்த செலவுகள் இரண்டு பகுதிகளுக்கான வறுமைக் கோடுகளை குறிப்பதாக கருதப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்தந்த பகுதிக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணின் அடிப்படையில் முந்தைய ஆண்டுக்கான “வறுமைக் கோடுகள்” புதுப்பிக்கப்படுகின்றன. இப்படி புதுப்பிக்கப்பட்ட வரையறுப்புக்கு கீழ் வருபவர்கள் ஏழைகளாக கணக்கிடப்படுகிறார்கள். அப்படி கணக்கிடப்பட்ட மக்கள் தொகைக்கும் மொத்த மக்கள் தொகைக்கும் இடையேயான விகிதம் குறிப்பிட்ட ஆண்டுக்கான வறுமை வீதத்தை தருகிறது.

பல்வேறு சரக்குகளுக்கான நிறையூட்டப்பட்ட லேஸ்பியர் விலைக் குறியீட்டு எண் கிராம, நகர்ப்புற பகுதிகளுக்கான விலைக் குறியீட்டு எண்ணாக பயன்படுத்தப்படுகிறது. (2009-10ல் இவ்விரு பகுதிகளுக்கும் பயன்படுத்தப்பட்ட குறியீட்டு எண் மாற்றப்பட்டது. கிராமப் புறத்துக்கு விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் என்பதும், நகர்ப்புறத்துக்கு தொழில் துறை தொழிலாளர்களுக்கான விலைக் குறியீட்டு எண் என்பதும் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் அடிப்படையிலான விலைக் குறியீட்டு எண்ணுக்கு மாற்றப்பட்டது).

வறுமை கழிப்பறை
வறுமைக் கோடு – ஒரு நாளைக்கு ரூ 28 நுகர்வு
அலுவாலியாவின் கழிப்பறை பட்ஜெட் – ரூ 35 லட்சம்.

இதை, எளிதாக புரிந்து கொள்ள Q என்பது ஒரு பொருளை சமூகம் முழுவதும் நுகர்வதன் அளவையும், P என்பது அந்த பொருளின் சராசரி விலையையும் குறிப்பதாகவும், 1 2 என்பவை முதல், இரண்டாம் ஆண்டுகளை குறிப்பதாகவும் வைத்துக் கொள்வோம். முதல் ஆண்டில் ஒவ்வொரு பொருளின் அளவையும் விலையையும் பெருக்கி அனைத்து பொருட்களின் மதிப்பை மொத்தமாக கூட்டுவதை, ∑P1Q1 என்று குறிக்கலாம். இரண்டாவது ஆண்டில் விலைகள் அதிகரித்திருந்தால், ஒவ்வொரு பொருளின் அளவை புது விலையால் பெருக்கி கூட்டினால் அது ∑P2Q1 ஆகும்.

முதல் ஆண்டில் மிகச் சரியாக வறுமைக் கோட்டின் மீது இருக்கும் ஒருவரை எடுத்துக் கொள்வோம் (ஆண்டு 1). அந்த ஆண்டில் அவரது செலவை ∑P1q1 என்று குறிப்பிடலாம். சிறிய ஆங்கில எழுத்து q, தனிநபரின் நுகர்வை குறிக்கிறது. வறுமையை அளக்கப் பயன்படுத்தப்படும் முறையின்படி, 2-வது ஆண்டில் வறுமைக் கோடு ∑P1q1 X ∑P2Q1/∑P1Q1 ஆக இருக்கும். அந்த நபர் (அல்லது வேறு யாராவது) 2-ம் ஆண்டில் செலவழிப்பது, இந்தத் தொகைக்கு மேலே இருந்தால், அவர் ஏழை இல்லை என்று கருதப்படுவார். (வறுமைக் கோட்டுக்கு மேல் அல்லது APL). ஆண்டு 1-ல் சரியாக வறுமைக் கோட்டின் மீது இருந்தவரை எடுத்துக் கொண்டால்,  ∑P2q2 > ∑P1q1 X ∑P2Q1/∑P1Q1 என்று இருந்தால் அந்த நபர் ஏழை இல்லை என்று கருதப்படுவார்.

இந்த வாதத்தில் ஒரு வெளிப்படையான பிரச்சனை உள்ளது. லாஸ்பேர் விலைக் குறியீட்டு எண்ணை கணக்கிடுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் பல்வேறு சரக்குகளின் நிறைமதிப்பீடு, வறுமைக் கோட்டில் வாழும் ஒருவரது நுகர்வில் உள்ள சரக்குகளின் நிறை மதிப்பீட்டிலிருந்து வேறுபடலாம். நடைமுறையில், வறுமைக் கோட்டில் உள்ள நபரது செலவு திட்டத்தில் உள்ள சரக்குகளின் நிறை மதிப்புக்கு நெருக்கமான நிறை மதிப்புகளை உடைய விலைக் குறியீட்டு எண்ணை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனை சமாளிக்கப்படுகிறது.  இதனால்தான் கிராமப் புற வறுமைக் கோட்டை புதுப்பிப்பதற்கு விவசாய தொழிலாளர்களுக்கான விலைக் குறியீட்டு எண் எடுத்துக் கொள்ளப்படுகிறது (ஏழைகளின் செலவுத் திட்டத்தில் இருக்கும் சரக்குகளின் நிறை மதிப்பும், விவசாயத் தொழிலாளர்களின் சரக்குகளின் நிறை மதிப்பும் ஒன்றாக இருக்கும் என்பது அனுமானம்). அது போல, நகர்ப்புற வறுமைக் கோட்டை புதுப்பிக்க தொழில் துறை தொழிலாளர்களுக்கான விலைக் குறியீட்டு எண் (அதே மாதிரியான அடிப்படையில்) எடுத்துக் கொள்ளப்படுகிறது.

வறுமையும் கல்வியும்இருப்பினும், இந்த வாதத்தில் இன்னும் சிக்கலான இரண்டாவது பிரச்சனை உள்ளது. இரண்டாவது பிரச்சனையை புரிந்து கொள்வதற்காக முதல் பிரச்சனை இல்லை என்றே அனுமானித்துக் கொள்வோம் : அதாவது வறுமைக் கோட்டை புதுப்பிப்பதற்கான லாஸ்பேர் விலைக் குறியீட்டு எண்ணுக்கான சரக்குகளின் நிறை மதிப்பும், ஆண்டு 1-ல் சரியாக வறுமைக் கோட்டில் உள்ளவருடைய நுகர்வுக்கான சரக்குகளின் நிறை மதிப்பும் ஒன்றுக்கொன்று இணையானவை என்று வைத்துக் கொள்வோம். அதாவது இரண்டாவது ஆண்டில் ∑P2q1/∑P1q1 என்று எழுதப்படக் கூடிய விலைக் குறியீட்டு எண்ணினால் வறுமைக் கோடு சரியாக புதுப்பிக்கப்படுகிறது. இந்த சூழலில் ஆண்டு 1-ல் வறுமைக் கோட்டில் வாழ்ந்த ஒரு நபரின் செலவு இரண்டாம் ஆண்டில் ∑P2q2 > ∑P2q1 ஆக இருந்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு மேல் உயர்த்தப்பட்டு விட்டதாக கருதப்படும். அதாவது, ஆண்டு 1-ல் சரியாக வறுமைக் கோட்டின் மீது வாழ்ந்த ஒருவர் இந்த ஆண்டு விலைகளில் ஆண்டு 1-ல் வாங்கிய அதே பொருட்களை வாங்குவதை விட அதிகமாக செலவழித்திருப்பதால், அவர் இனிமேலும் ஏழை இல்லை.

இந்த முடிவுக்கு பின்புலமான கோட்பாட்டை பின்வருமாறு விளக்கலாம். ∑P2q2 > ∑P2q1 என்று இருக்கும் போது, அந்த நபர் விருப்பப்பட்டால் ஆண்டு 1-ல் வாங்கிய பொருட்களை இந்த ஆண்டும் வாங்கியிருக்க முடியும். அந்த பொருட்களின் தொகுப்பு ஆண்டு 2-ல் அவரது நிதி நிலையின் வரம்புக்குள் உள்ளது. இருந்தும் அந்த நபர் q1 என்ற தொகுப்புக்கு பதிலாக q2 என்ற தொகுப்பை வாங்கியிருக்கிறார். ஏன் என்றால் அவர் q1 ஐ விட q2 ஐ விரும்புகிறார், அதாவது ஆண்டு 1-ல் இருந்ததை விட ஆண்டு 2-ல் அவர் சிறப்பாக வாழ்கிறார் : அவரது வாழ்க்கைச் சூழலில் மேம்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆண்டு 1-ல் அவர் சரியாக வறுமைக் கோட்டின் மீது இருந்தபடியால், ஆண்டு 2-ல் அவர் வறுமைக் கோட்டுக்கு மேல் நகர்ந்து விட்டதாக கருதப்பட வேண்டும்.

பள்ளிக் கட்டணம்
பள்ளிக் கட்டணத்தை சமாளிக்க வீட்டுச் செலவை குறைத்திருக்கிறோம்.

அனைத்து வறுமை மதிப்பீடுகளுக்கும் அடிப்படையாக இருக்கும் இந்த வாதம் பல அனுமானங்களின் அடிப்படையில் செய்யப்படுகிறது. தனது நலவாழ்வைப் பற்றிய முடிவுகளுக்கான மிகச் சிறந்த முடிவை ஒரு தனி நபரே எடுக்க முடியுமா என்பது போன்ற தத்துவார்த்த விவாதங்களுக்குள் நாம் போகப் போவதில்லை. இந்த வாதத்தின் செல்லுபடித் தன்மைக்கு இன்றியமையாத மிக முக்கியமான அனுமானம், ஆண்டு 1-ல் கிடைத்த பொருட்களின் தொகுப்பு, இந்த ஆண்டும் கிடைக்கிறது என்பதுதான். இந்த அனுமானம் பச்சையான பொய் என்ற ஏழ்மையை மதிப்பிடும் முறை குறித்த நமது ஆட்சேபணை நலவாழ்வு பொருளாதாரத்தின் அடிப்படை முன்வைப்பையே ஆட்சேபிப்பதாகும். ஆண்டு 1-ல் கிடைக்கக் கூடிய சரக்குகள் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் கிடைக்கின்றன என்பதுதான் அந்த முன்வைப்பு. இந்த முன்வைப்பு தேசிய வருமானத்தை தீர்மானிப்பதற்கும் அடிப்படையாக இருக்கிறது. இந்த முன்வைப்பை ஆய்வு செய்வோம்.

2. அனுமானங்கள் மீதான விமர்சனம்

சிறிதளவு சிந்தித்தாலே இந்த முன்வைப்பின் பொய்மை தெளிவாகிறது. நாட்பட நாட்பட பழைய சரக்குகள் இல்லாமல் போய் அவற்றின் இடத்தை புதிய சரக்குகள் பிடித்துக் கொள்கின்றன. உதாரணமாக, அரை நூற்றாண்டுக்கு முன்பு குழந்தைகள் விளையாடிய மரப் பொம்மைகளின் இடத்தில் பார்பி பொம்மைகள் வந்திருக்கின்றன. இசைத் தட்டுகள், குறுந்தகடுகளுக்கு இடம் விட்டு மறைந்திருக்கின்றன. லாகரிதம் அட்டவணைகள், கால்குலேட்டர்களுக்கு இடம் விட்டிருக்கின்றன, இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், பழைய பொருட்கள் புதிய பொருட்களுக்கு வழி விட்டு ஒதுங்குவதை மட்டும் நாம் கருத்தில் கொள்ளவில்லை. இதை விட வெகு முக்கியமான இன்னொன்றும் நடக்கிறது. நடுத்தர வர்க்கத்தினால் விரும்பப்படும் புதிய சரக்குகள் நடுத்தர வர்க்கத்தின் நுகர்வுக்கான சரக்குகளை மட்டுமின்றி சமூகம் முழுவதுக்குமான பழைய சரக்குகளை இல்லாமல் செய்கின்றன.

வளர்ச்சியின் வறுமைஇதற்கு இரண்டு நடைமுறைகள் பங்களிக்கின்றன. முதலாவதாக, நடுத்தர வர்க்கத்தின் விருப்பங்கள் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் வாழ்க்கை முறையால் மாற்றப்படுகின்றன (சமீபத்திய உதாரணமாக பாரம்பரிய மளிகைக் கடைகளுக்கு மாறாக கார்ப்பரேட் சில்லறை விற்பனைக் கடைகளை நாடுவது). இதனால் அவர்கள் வாங்கும் சிறு உற்பத்தியாளர்களின் பொருட்களின் இடத்தை கார்ப்பரேட் பெரு உற்பத்தி பொருட்கள் பிடித்து விடுகின்றன.

ஒரு சிறு உற்பத்தியாளரின் பொருட்களுக்கு சந்தை 100 எண்ணிக்கை இருப்பதாக வைத்துக் கொள்வோம். கார்ப்பரேட் உற்பத்தி பொருளால் இழுத்துச் செல்லப்படும் நடுத்தர வர்க்கத்தினரின் விலகல் மூலம் அவரது சந்தையில் 20 எண்ணிக்கை குறைகிறது என்று வைத்துக் கொள்வோம். சிறு உற்பத்தியாளர்கள் சிறிய அளவு லாபத்துடனேயே வர்த்தகம் செய்வதால், 20% சந்தை இழப்பு கூட செலவுகளை சமாளிக்க முடியாத நிலையை ஏற்படுத்தும், அதாவது அவர் எளிய மறு உற்பத்தியைக் கூட தொடர முடியாமல் போகும். அவர் உற்பத்தி செய்வதையே நிறுத்தி விட்டு வேலை தேடும் தொழிலாளர்கள் கூட்டத்தில் சேர்ந்து விடுவார்.

இந்த நிகழ்முறையின் விளைவாக கார்ப்பரேட் உற்பத்தியிலான மாற்றுப் பொருட்களால் கவரப்படாத சிறு உற்பத்தியாளரது எஞ்சிய 80% முன்னாள் வாடிக்கையாளர்களும் கார்ப்பரேட் பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். நடுத்தர வர்க்கம் கார்ப்பரேட் உற்பத்தி பொருட்களை விரும்புவது அவற்றின் விலை மலிவின் காரணமாக மட்டும் இருக்க வேண்டியதில்லை. பொதுவாக, கார்ப்பரேட் மாற்றுப் பொருள், தான் இடம் பெயர்க்கும் சிறு உற்பத்தியாளரின் பொருளை விட விலை அதிகமானதாக இருக்கிறது. எனவே, மொத்த மக்கள் தொகையும் புதிய கார்ப்பரேட் உற்பத்தி பொருளை, அதிக விலை கொடுத்தாவது வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் மரப் பொம்மைகள், விலை அதிகமான பார்பி பொம்மைகளால் இடம் பெயர்க்கப்பட்டு விட்டன என்ற உண்மை, அனைவரும் முன்னதை விட பின்னதை விரும்புகிறார்கள் என்பதனால் அல்ல. சிலரது விருப்பம் மற்ற அனைவரையும் மாறுவதற்கு கட்டாயப்படுத்துகிறது.

பொது வினியோகத் திட்டம்இரண்டாவது நிகழ்முறை அரசு பொருட்களையும் சேவைகளையும் வழங்குவது தொடர்பானது. நடுத்தர வர்க்கம் அரசு வழங்கும் சேவையை பயன்படுத்துவதிலிருந்து விலகி விட்டால் அந்த சேவையின் தரம் வெகுவாக குறைந்து, மற்றவர்களையும் மாறுவதற்கு கட்டாயப்படுத்துகிறது என்பது பரவலாக தெரிந்த உண்மை. நடுத்தர வர்க்க ரயில் பயணிகள் பாட்டில் தண்ணீர் வாங்க ஆரம்பித்தால், ரயில்வே நிலையங்களில் இலவசமாக குடிதண்ணீர் கிடைக்கும் சேவை முடங்கிப் போய் விடுகிறது. உரக்க புகார் செய்யும், அரசு வழங்கும் சேவையின் தரத்தில் ஏற்படும் வீழ்ச்சிக்கு எதிராக விழிப்பாக செயல்படும் நடுத்தர வர்க்கம் இல்லாமல் இருப்பது, நடைமுறையில் உண்மையான தர வீழ்ச்சிக்கு வழி வகுத்து, அனைவரையும் கார்ப்பரேட் வழங்கும் சேவைக்கு மாற கட்டாயப்படுத்துகிறது. அத்தகைய சேவைகள் அதிக செலவு பிடிப்பவை.

நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்கள் இந்த மாற்றத்தை செய்ய முடிவு எடுத்ததால், அனைவருமே இந்த விலை உயர்ந்த சேவைகளையும் பொருட்களையும் பயன்படுத்தும் படி மாற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். தனியார் சேவை வழங்கலை பயன்படுத்துவதோடு இணைந்துள்ள பெருமைக்காக அவர்கள் மாறியிருக்கலாம், அல்லது தனியார் வழங்கும் சேவை உண்மையிலேயே ஓரளவு சிறந்ததாக இருக்கலாம். பொதுச் சேவைக்கும் தனியார் சேவைக்கும் இடையே உள்ள தர வேறுபாடு, நடுத்தர வர்க்கம் மாறுவதன் மூலம் பெருமளவு ஊதிப் பெருக்கப்படுகிறது. அதற்கு பெருமளவு அதிக செலவு ஆனாலும், ஒவ்வொருவரும் அப்படி மாறுவதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இதனோடு தொடர்புடைய மிகத் தெளிவான உதாரணம் உடல் நலத்தோடு தொடர்புடையது. நடுத்தர வர்க்க நுகர்வோர் பொது மருத்துவ வசதியிலிருந்து தனியார் மருத்துவ வசதிக்கு மாறுவது பொது மருத்துவ சேவையின் தரத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கிறது. இதனால் பொது மருத்துவ சேவை ஏழைகளுக்கும் சாத்தியமற்றதாகவோ, பலன்றறதாகவோ மாறுகிறது. அதிக செலவு பிடிப்பதாக இருந்த போதிலும், அவர்களும் தனியார் மருத்துவ சேவைக்கு மாற வேண்டி வருகிறது. எனவே, தன்னிச்சையான தேர்வாக தோன்றுவது உண்மையில் தன்னிச்சையான தேர்வு அல்ல, கிட்டத்தட்ட அவர்கள் மீது திணிக்கப்படுவது.

விவசாயியின் சுமைஎனவே, முந்தைய கால கட்டத்தில் கிடைத்து வந்த பொருட்கள் இந்த கால கட்டத்திலும் அதே போல கிடைக்கின்றன என்று அனுமானிப்பது நியாயப்படுத்த முடியாததது. மாறாக, இடைக் காலத்தில் அவை மறைந்து போய் விடுகின்றன. இதன் காரணமாக முந்தைய கால கட்டத்தில் கிடைத்த பொருட்கள் தொடர்ந்து கிடைத்திருந்தால் செலவழிப்பதை விட மிக அதிக விலையில் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மாற்று பொருட்களை அதிக விலையில் வாங்க வேண்டி வருவதால், உண்மையில் அவர்களது நிலைமையில் வீழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால், எல்லா பொருட்களும் எப்போதுமே கிடைக்கின்றன, எனவே அனைத்து தேர்வுகளும் தன்னிச்சையானவை என்று அனுமானிக்கும் நலவாழ்வு பொருளாதாரவியல் அவர்களது நிலைமை மேம்பட்டு விட்டதாக தவறாக கணிக்கிறது.

முந்தைய ஆண்டில் ஒரு குறிப்பிட்ட அறுவை சிகிச்சையை அரசு மருத்துவமனையில் செய்து கொள்வதற்கு ரூ 2,000 செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம். அரசு மருத்துவமனை வசதிகள் முடங்கிப் போனதாலும், அத்தகைய மருத்துவமனைகளில் காத்திருப்போர் வரிசை மிக நீளமாகி விட்டதாலும் இந்த ஆண்டில் அரசு மருத்துவமனையில் அந்த சிகிச்சையை செய்து கொள்வது சாத்தியம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். அதே அறுவை சிகிச்சையை இப்போது தனியார் மருத்துவமனையில் ரூ 50,000 செலவில் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த பெரிய தொகையை செலவழிக்க வேண்டியிருக்கும் ஏழைகள் பல அத்தியாவசிய பொருட்களின் நுகர்வை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இதன் காரணமாக, அவர்கள் தமது வாழ்க்கைத் தரத்தில் பெருமளவு மோசமடைதலை சந்திக்க வேண்டியிருக்கும். பொது மருத்துவ சேவை கிடைக்காததன் காரணமாக இது நடக்கிறது. ஆனால் வழக்கமான நலவாழ்வு பொருளாதாரம் அவர்களது பொருளாதார நிலைமை மேம்பட்டு விட்டதாக முடிவு செய்யும்.

ஏழை குழந்தைகள்

இதை புரிந்து கொள்வதற்கு முந்தைய ஆண்டிற்கும் இந்த ஆண்டிற்கும் இடையே அறுவை சிகிச்சையின் அரசு மருத்துவமனை கட்டணம் (இரண்டாவது கால கட்டத்தில் இது அரிதாவே கிடைக்கிறது), தனியார் மருத்துவமனை கட்டணம் உள்ளிட்ட அனைத்து விலைகளும் மாறாமல் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். இந்த இரண்டு கால கட்டங்களுக்கிடையே அந்த நபரின் செலவு ரூ 20,000 அதிகரிப்பதாக வைத்துக் கொள்வோம். கூடவே, இந்த இரு கால கட்டங்களிலும் அவருக்கு அத்தகைய அறுவை சிகிச்சை ஒவ்வொன்று தேவைப்பட்டது என்றும் வைத்துக் கொள்வோம். இந்த இரண்டு கால கட்டங்களுக்கிடையே அந்த நபரின் மருத்துவச் செலவு ரூ 48,000 அதிகரித்திருக்கும். ஆனால், மொத்த செலவு ரூ 20,000 மட்டுமே அதிகரித்திருக்கிறது. மீதி ரூ 28,000 மற்ற பொருட்கள் மீதான அவரது செலவை குறைப்பதன் மூலமே வந்திருக்க முடியும்.

இந்தச் சூழலில் பொதுவான நலவாழ்வு பொருளாதாரம் அந்த நபர் இரண்டாவது கால கட்டத்தில் முதல் கால கட்டத்தை விட நன்றாக வாழ்கிறார் என்று முடிவு செய்யும். ஏனெனில் அனைத்து விலைகளும் மாறாமல் இருக்கும் போது அவரது மொத்த செலவு உயர்ந்திருக்கிறது. உண்மையில், அந்த நபர், முன்பை விட மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். முதல் கால கட்டத்தை விட இரண்டாவது கால கட்டத்தில் அவர் பெறும் பொருட்கள்/சேவைகளின் தொகுப்பு சிறிதாகியிருக்கிறது. பொதுவான நல வாழ்வு கோட்பாடு இரண்டு கால கட்டத்துக்கும் இடையே அரசு மருத்துவமனை சேவைகள் மாறாமல் இருப்பதாக அனுமானித்துக் கொள்வதால் தவறான முடிவை தருகிறது. முதல் கால கட்டத்தின் பொருட்கள்-சேவைகளின் தொகுப்பு, இரண்டாம் கால கட்டத்திலும் கிடைக்கின்றது என்ற அனுமானத்தின் ஒருபகுதிதான் இது. இந்த அனுமானம் செல்லுபடியாகாதது.

3 முடிவுகள்

சமீப காலமாக இந்தியாவில் ஏழ்மை குறித்த ஒரு மகத்தான விவாதம் நடந்து வருகிறது. (2005-ல் இதே தலைப்பில் டேட்டன், கோசல் தொகுத்து வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளில் அடங்கிய விவாதத்திலிருந்து இது பெருமளவு வேறுபட்ட வகையிலானது). இந்தியாவில் அதிகாரபூர்வ வறுமைக் கோடு கலோரி அளவீடுகள் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது; புதிய தாராள வாத பொருளாதாரக் கொள்கைகள் கால கட்டத்தில் கிராமப் புறத்திலும் நகர்ப்புறத்திலும் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் அந்தந்த பகுதிகளுக்கு வரையறுக்கப்பட்ட கலோரி அளவீடுகளுக்கு குறைவாகவே நுகர்கின்றனர்; இந்த அடிப்படையில் பார்த்தால் அதிகாரபூர்வ பிரச்சாரங்களுக்கு மாறாக வறுமையின் அளவு அதிகரித்து வருகிறது; அதிகரித்து வரும் ஊட்டச் சத்துக் குறைவு தொடர்பான இந்த தகவலை, ஒரு நபருக்கு ஒரு ஆண்டில் கிடைக்கும் உணவு தானியங்களின் அளவு சுதந்திரத்துக்குப் பிறகு 1980-களின் இறுதியில் உச்சத்தை அடைந்து அதன் பிறகு குறைந்து கொண்டே வருவதுடன் சேர்த்துப் பார்க்கலாம்; என்று தனது 2007, 2010 ஆய்வு கட்டுரையில் பட்னாயக் முடிவு செய்திருந்தார்.

இந்த முடிவு பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அந்த காரணங்களில் எதுவும் ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பபடாதவை.

  1. மக்களின் வாழ்க்கை நிலைமை உயரும் போது உணவு தானியங்கள் உட்கொள்வது குறையும் என்ற வாதம் உணவு தானியங்களின் நேரடி நுகர்வை பற்றி மட்டுமே பேசுவதால் தவறானது. நேரடி, மற்றும் மறைமுக (பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் தானியங்களின் வடிவில்) மொத்த நுகர்வு வருமானம் உயரும் போது தவிர்க்க முடியாமல் அதிகரிக்கிறது என்பது பல நாடுகளுக்கான தரவுகளின் மூலமாகவும், நாடுகளின் குறுக்கு வெட்டு மற்றும் கால வரிசையிலான தரவுகளின் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. (கிருஷ்ணா ராம் 2013)
  2. கடின உடல் உழைப்பு தேவையில்லாமல் இருப்பதால் குறைந்த கலோரிகள்தான் தேவைப்படுகின்றன என்ற வாதமும் இதே காரணத்துக்காக செல்லுபடியாகாது. உலகம் முழுவதும் ஒருவரது வருமானம் அதிகரிக்கும் போது, உடல் உழைப்பின் தீவிரம் அதிகமாகா விட்டாலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உட்கொள்ளும் உணவு தானியங்களின் அளவும், நுகரும் கலோரி அளவும் அதிகரித்து வருகிறது.  (உதாரணமாக, ஒரு சராசரி அமெரிக்கர் ஒரு சராசரி இந்தியரை விட தீவிரமான உடலுழைப்பு செய்யா விட்டாலும் கூட 5 மடங்கு அதிக அளவு உணவு தானியங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் உட்கொள்கிறார்.).
  3. மக்கள் புரதங்களுக்கு மாறிக் கொண்டிருப்பதால் நாம் கலோரி நுகர்வை குறித்து கவலைப்பட வேண்டாம் என்ற வாதமும் தவறானது. ஏனென்றால் கலோரி நுகர்வு வீழ்ச்சியடைந்த அதே கால கட்டத்தில் இந்தியாவில் ஒரு நபருக்கான புரத நுகர்வும் குறைந்து கொண்டு வந்திருக்கிறது.
  4. மக்களின் விருப்பங்கள் மாறுகின்றன. உணவு உட்கொள்வதை விட மருத்துவம் போன்ற சேவைகளை அவர்கள் அதிகம் விரும்பி மாறுகிறார்கள், அதுதான் உணவு தானிய நுகர்வின் வீழ்ச்சிக்கு காரணம் என்ற வாதம் எழுப்பும் கேள்வி : ஒரு குறுகிய காலத்துக்குள், உதாரணமாக 2004-05க்கும் 2009-10க்குன் இடையே கணிசமான மக்கள் தொகை பகுதியினர் கலோரி அளவீட்டுக்கு கீழ் போவதற்கான காரணம் என்ன? விருப்பங்களில் ஏற்படும் மாற்றங்கள் நீண்ட கால நோக்கில்தான் நிகழ்கின்றன. இது போன்று குறுகிய காலத்தில் கலோரி பற்றாக்குறையில் ஏற்பட்ட அதிகரிப்பை அவை விளக்க முடியாது.

ஏழைப் பெண்கள்

அதிகரித்து வரும் ஏழ்மைக்கு எதிரான இந்த வாதங்கள் ஒவ்வொன்றும் நிலை நிறுத்தப்பட முடியாதவை என்றாலும் இந்தக் கேள்வி பலரை குழப்பத்துக்குள்ளாக்குகிறது : தனி நபருக்கான உண்மையான செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஏன் கலோரி குறைபாடு அதிகரித்து வருகிறது? இதற்கான எளிமையான விடை, “பாரம்பரிய பொருட்களுக்கு” பதிலாக விலை அதிகமான “நவீன பொருட்களுக்கு” மக்கள் மாற வேண்டியிருக்கிறது என்பதுதான். ஒப்பீட்டளவில் வளமாகியிருக்கும் நடுத்தர வர்க்கத்தின் தேர்வுகளாலும், அரசு தான் வழங்கும் சேவைகளின் தரத்தை சீரழிக்கும் திசையில் செல்வதாலும் இது நடக்கிறது. இதனால், மக்கள் அத்தியாவசிய பொருட்களான உணவு தானியங்கள் போன்றவற்றை குறைவாக நுகர்வதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

முந்தைய காலகட்டத்தின் பொருட்களும் சேவைகளும் இந்த கால கட்டத்திலும் கிடைக்கின்றன என்ற நலவாழ்வு பொருளாதார கோட்பாட்டின் பொய்யான அடிப்படையை விட்டு விட்டால், வறுமையின் அளவீடு மற்றும் மட்டம் குறித்த தோற்றத்தில் முரண்பட்டதாக தோன்றும் பல தகவல்களை சரியாக ஒருங்கிணைந்த கதையாடலாக புரிந்து கொள்ள முடியும். ஆரம்பத்தில் முரண்பாடு போல தோற்றமளிக்கும் ஒன்று, அதிகரித்து வரும் தனிநபர் செலவினங்கள் ஒரு பக்கமும் குறைந்து வரும் தனிநபர் கலோரி உட்கொள்ளல் இன்னொரு புறமும் – உண்மையில் அவ்வாறு இல்லை; மாறாக, ஒரு நபருக்கான செலவு அதிகரித்து வருவது போல தோன்றுவதும், குறைந்து கொண்டே வரும் கலோரி உட்கொள்ளலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்று புரிந்து கொள்ளலாம்.

குறைந்த பட்ச கலோரி அளவு உள்ளிட்ட தேவையான பொருட்களும் சேவைகளும் கிடைப்பது என்று வறுமைக் கோட்டை வரையறுத்தால், புதிய-தாராளவாத இந்தியாவில் வறுமை உயர்ந்து கொண்டே போகிறது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

– பிரபாத் பட்நாயக், நன்றி: EPW
தமிழாக்கம்: செழியன்.

மோடியின் முகமூடியை கிழிக்கும் தோழர் மருதையனின் முக்கியமான உரை

27

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் செப்டம்பர் 22, 2013 அன்று திருச்சியில்

குஜராத் முசுலீம் மதப் படுகொலை குற்றவாளி  !
டாடா – அம்பானிகளின் எடுபிடி !
இந்துமதவெறி பாசிஸ்ட் !
இந்தியாவின் ராஜபட்சே !

மோடியின் முகமூடியை கிழிக்கும்  பொதுக்கூட்டம்

என்ற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.

இந்துத்துவத்தின் கொலைகாரத் தளபதி என்ற முறையில் மோடியை பலருக்கும் தெரியும். ஆனால் அத்தகைய பாசிஸ்ட்டை தரகு முதலாளிகளும் ஆளும் வர்க்கமும் ஏன் முன்னிறுத்துகிறார்கள், அன்று காங்கிரசையும் மன்மோகனையும் தூக்கிப்பிடித்தவர்கள் இன்று மோடியை ஏகமனதாக ஆதரிக்க என்ன காரணம், மோடியின் வளர்ச்சி என்பது முதலாளிகளுக்கு சொந்தமானது, மற்றொரு புறம் அது உழைக்கும் மக்களை எப்படி ஒடுக்குகிறது என்பதையும் விரிவான சான்றுகள், ஆதாரங்கள், வாதங்களுடன் தோழர் மருதையன் முன்வைக்கிறார்.

மதவெறியும், மறுகாலனியாக்கமும் ஒன்றிணைந்து மக்கள் தாக்கவருவதற்கான முன்னோட்டம்தான் மோடி குறித்த மாயைகளை கார்ப்பரேட் ஊடகங்கள் பொய்களோடும், பித்தலாட்டங்களோடும் பிரச்சாரம் செய்து வருவது என்பதையும் அவர் விளக்குகிறார். திராவிட மற்றும் தமிழினவாதக் கட்சிகள் மோடியை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கும் அயோக்கியத்தனத்தையும் அவர் அம்பலப்படுத்துகிறார். மோடி இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல இந்திய உழைக்கும் மக்கள் அனைவரின் எதிரி என்பையும் அவரையும் சங்க வானரங்களையும் வீழ்த்துவதற்கு இசுலாமிய மக்கள் சிறுபான்மை அமைப்புகளில் அணிதிரள்வது தீர்வல்ல, மதச்சார்பற்ற புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள வேண்டியது அவசியம் என்பதையும் ஏற்கச் செய்கிறார்.

மோடி குறித்த மாயைகளையும், ஜோடனைகளையும் அம்பலப்படுத்தி வீழ்த்துகிறது இந்த உரை. இதை நண்பர்கள அனைவரும் பொறுமையுடன் கேட்குமாறும் விரிவாக கொண்டு செல்லுமாறும் கோருகிறோம்.

2023-ம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்தில் ரியாலிட்டி ஷோ !

9

ரு வழிப் பயணமாக செவ்வாய் கிரகத்திற்கு சென்று அங்கு நிரந்தரமாக தங்க இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

1961-ல் சோவியத் யூனியன் முதன்முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பியது. 1969-ம் ஆண்டு அமெரிக்கா முதன்முதலில் நிலவுக்கு மனிதனை அனுப்பியது. இவை தொடங்கி பல விண்வெளி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆயினும் செவ்வாய் போன்ற வேறு கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் தொழில்நுட்பம் இன்றுவரை நடைமுறையில் இல்லாததால் நாசா நிறுவனமே 2030-க்கு முன் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டம் இல்லையென அறிவித்துள்ளது.

சூரியக் குடும்பம்
சூரியன், பூமி, செவ்வாய் (மாதிரி படம்)

மனிதர்களை 2023-ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றும் திட்டத்தை ”முதல் செவ்வாய் (Mars One)” என்ற டச்சு நிறுவனம் அறிவித்தது. விருப்பமுள்ளவர்கள் செவ்வாய்க்கு போகலாம், கட்டணம் 5 டாலர் வரை குறைவு என்று விளம்பரப்படுத்தியதில் கடந்த 5 மாதத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் இருந்து செவ்வாய் கிரகம் செல்வதற்காக 2 லட்சத்து 2,586 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. செவ்வாய் தோஷத்தின் அடிப்படையில் திருமணப் பொருத்தம் பார்க்கும் பாரத தேசம் இரண்டாவது இடத்தில் இருப்பதுதான் நகைமுரண். அறிவியலில் ஆர்வமும், சாதனை செய்யும் மனத்துடிப்பும், மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்ல தமது பங்களிப்பை செலுத்த விரும்புவதாலும் செவ்வாய்க்கு செல்ல விரும்புவதாக விண்ணப்பித்திருபவர்கள் சொல்கிறார்கள். அல்லது இந்த புண்ணிய தேசத்தில் வாழப்பிடிக்காமல் கிட்டத்தட்ட தற்கொலை செய்வது போன்ற முடிவாகக்கூட இந்த செவ்வாய் பயணத்தை அவர்கள் விரும்பியிருக்கலாம்.

செவ்வாய் சூரியக் குடும்பத்தில் நான்காவது கோளாகும். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இதை செந்நிறமாகக் காட்டுவதால் செவ்வாய் எனப்படுகிறது. சூரியக் குடும்பத்தில் இரண்டாவது சிறிய கோளான செவ்வாய்க் கிரகத்திற்கு பூமியின் துணைக்கோளான நிலவைப் போல் இரண்டு துணைக்கோள்கள் உள்ளன.

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகள் மற்ற விண்வெளி ஆய்வுகளோடு, அதாவது பிரபஞ்சம் உருவானது எப்படி, அதன் இயங்கு விதிகள் என்ன? வேற்றுக் கிரகங்களில் உயிரினங்கள் வாழ சூழ்நிலைகள் இருக்கின்றனவா? உயிரினங்கள் வாழ்கின்றனவா போன்ற கேள்விகளுக்கு விடையை அறிந்துகொள்ளும் மனித குலத்தின் அறிவுத் தேடலோடு இணைந்ததும் நீண்டகால பின்னணியை கொண்டதுமாகும்.

முதன் முதலில் 1960-ல் சோவியத் யூனியனின், மார்ஸ்நிக்-1, 2 என்ற இரு விண்கலங்களை ஏவி செவ்வாய்க்கு அருகாமையில் பறந்து ஆய்வு செய்யும் திட்டம் விண்ணுக்கு ஏவும்போது தோல்வியில் முடிந்தது. பின்னர் 1962-ல் ஸ்புட்நிக்-22, மார்ஸ்-1, இரு விண்கலங்களை செவ்வாயின் அருகாமையில் பறக்கவும் ஸ்புட்நிக்-24 என்ற விண்கலத்தை செவ்வாயில் தரையிறக்கவும் முயற்சித்து அவையும் தோல்வியில் முடிந்தன. பின்னர் அமெரிக்காவின் நாசா மாரினர் 3, 4 என்ற இரு திட்டங்களை செயல்படுத்தியது. அதில் மாரினர்-4 முதல்முறையாக செவ்வாயின் அருகாமையில் பறந்து படங்களையும், தகவல்களையும் அனுப்பியது.

சோவியத் யூனியனின் மார்ஸ்-3 கலம் முதல் முறையாக வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. தொடர்ந்து 1973-ல் மார்ஸ்-4, 5, 6, 7 நான்கு கலங்களை செவ்வாய்க்கு அனுப்பியதில் தரையிறக்கியதில் இருகலங்கள் வெற்றிகரமாக தரையிறங்கின. 1975ல் நாசா வைக்கிங்-1, வைக்கிங்-2 என்ற இருகலங்களை வெற்றிகரமாக அனுப்பி வைத்தது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்காவும் விண்வெளி திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதை படிப்படியாகக் குறைத்துக் கொண்டது. இதிலிருந்தே அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு வெட்டி பந்தாவுக்காக நடத்தப்படுகிறது என்று தெரிகிறது. 1996-ல் பாத்ஃபைண்டர், 2003-ல் ஸ்பிரிட், ஆப்பர்சூனிடி, போன்ற தானியங்கி சுற்றித் திரியும் கலங்களை நாசா செவ்வாய்க்கு அனுப்பியது. சமீபத்தில் 2011-ல் குரியாசிடி என்ற தானியங்கி குட்டி சுற்றித்திரியும் ஆய்வகத்தை நாசா அனுப்பியுள்ளது. இவையனைத்தும் செவ்வாயை பற்றிய அரிய தகவல்களை பூமிக்கு அனுப்பிவருகின்றன.

தற்போது பல நாடுகளும், தனியார் நிறுவனங்களும் தங்களது செவ்வாய் ஆய்வுத் திட்டங்களை அறிவித்துள்ளன. இந்தியாவின் இஸ்ரோவும் தனது திட்டத்தை அறிவித்துள்ளது. செவ்வாய்க்கு மனிதர்கள் பயணம் செய்யும் திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இஸ்ரோவில் கஸ்தூரி ரங்கன் இந்த செவ்வாய்க்கான திட்டத்தால் நாட்டு மக்களின் பணம் விரயமாவதைத் தவிர வேறு எந்தப் பயனும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

பூமி, செவ்வாய், நிலா - ஒப்பீடு
பூமி, செவ்வாய், நிலா – ஒப்பீடு

செவ்வாய் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. பூமியிலிருந்தான அதன் தொலைவு சராசரியாக 20 கோடி கிலோமீட்டர் ஆக உள்ளது. ஈராண்டுகளுக்கு ஒருமுறை 5.7 கோடி கிலோமீட்டர்கள் தூரத்தில் நெருங்கிவரும். இதுவே பூமியிலிருந்து நிலவின் தூரமான 3.84 லட்சம் கிலோமீட்டரை விட 150 மடங்கு அதிகமாகும்.

புவியின் விட்டம், கொள்ளளவுடன் ஒப்பிட்டால், நமது பூமியில் செவ்வாயை போலுள்ள ஆறு கிரகங்களை உள்ளடக்கிவிட முடியும். புவியின் நிறையில் பத்தில் ஒரு பங்கையே தனது நிறையாக கொண்டுள்ள செவ்வாயின் ஈர்ப்புவிசை புவியைவிட 62% குறைவு. அதாவது, பூமியில் 100 கிலோ எடையுள்ள மனிதர் செவ்வாயில் 38 கிலோ எடை மட்டுமே கொண்டிருப்பார். சந்திரனின் ஈர்ப்புவிசையை விட இரண்டுமடங்கிற்கும் சற்று அதிகமான ஈர்ப்புவிசையை கொண்டுள்ளது. பூமியின் வளிமண்டல அழுத்தத்துடன் ஒப்பிடும் போது செவ்வாயின் வளி அழுத்தம் 1%-த்திற்கும் குறைவு தான்.

செவ்வாயின் நிலப்பரப்பு சிலிக்கான், ஆக்சிஜன், உலோகங்களை உள்ளடக்கிய தாதுக்கள் மற்றும் பாறைகளை உருவாக்கும் தனிமங்களையும் கொண்டதாகவும் மேற்பரப்பு அதிகமான புழுதி படலத்தை கொண்டதாகவும் உள்ளது. துருவப்பகுதி பூமியைப் போலவே பனி சூழ்ந்திருந்தாலும், அப்பனி பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்சைடை கொண்டதாக உள்ளது. செவ்வாயில் சராசரி வெப்பநிலை −55°C, அதன் நிலநடுக்கோட்டு பகுதியில் கோடைக்கால மதியத்தில் அதிகபட்சமாக 20°C வெப்பநிலை ஏற்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

செவ்வாய் கோள் பரப்பு
செவ்வாய் கோள் பரப்பு

செவ்வாயின் உள்மையப்பகுதி புவியின் மையப்பகுதியை போல் பாறைக் குழம்பாக இல்லை. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே குளிர்ந்து விட்டதால் செவ்வாயில் காந்தப்புலம் இல்லை. அதனால் சூரியக்கதிர்வீச்சு, விண்கதிர்வீச்சின் அளவு அதிகம். அதிக கதிர்வீச்சும், குறை ஈர்ப்பு விசையும், செவ்வாயின் குறை ஈர்ப்புவிசை மனித உடற்கூறில் மாற்றங்களை ஏற்படுத்தும் அபாயமுள்ளது.

மனிதர்கள் செவ்வாய்க்கு செல்ல வேண்டுமானால், இவ்வளவு தூரம் செல்வதற்கும் திரும்பி வருவதற்கான எரிபொருள், அவர்களுக்கான ஆக்சிஜன், உணவு, உடை இவற்றுடன் பாதுகாப்பு சாதனங்கள் என அதிக எடையை கொண்டு செல்லும் பெரிய விண்கலம் தேவை. மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப 30 டன் எடையை சுமந்து செல்ல வேண்டியிருக்கும் என்கிறது நாசாவின் மதிப்பீடு. குறைந்த காற்றழுத்தம், மற்றும் ஈர்ப்பு விசை காரணமாக செவ்வாயில் அதிக எடை கொண்ட விண்கலத்தை தரையிறக்குவது கடினம்.

விண்கலங்கள் சாதாரண விமானம் போல் மேலெழும்பி விண்ணுக்கு சென்று விடாது. பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட அவை வேகமாக ஒரு நொடிக்கு 11.2 கிலோமீட்டர் வேகத்தை எட்ட வேண்டும். இதற்கு ராக்கெட்டுகள் தேவைப்ப்டுகின்றன. இதற்கான ராக்கெட்டை தயாரிக்க நம் புவியிலேயே குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கும் மேலாகும். செவ்வாயிலிருந்து திரும்புவதற்கு அதன் விடுபடும் வேகம் ஒரு வினாடிக்கு 5 கிலோமீட்டர் அளவில் உள்ளது. இதனால் செவ்வாயிலிருந்து விண்கலம் கிளம்ப அங்கும் ஒரு ராக்கெட் தேவைப்படும்.

ஒரு வழிப் பயணமாக திட்டமிடுவதன் மூலம் கொண்டு செல்லும் எரிபொருளை குறைக்கலாம் என்றும் மனிதர்கள் செவ்வாய்க்குச் செல்வதற்கு முன்னரே தங்குவதற்கான குடில்கள் “ஆளில்லா விண்கலங்கள்’ மூலம் அனுப்பப்பட்டு தானியங்கி முறையில் நிர்மாணிக்கப்படுமென்றும் அதன் மூலம் செவ்வாய் பயண வின்கலத்தின் எடை 9 டன்களுக்குள் வைக்கப்படுமென்றும் மார்ஸ் ஒன் தனது திட்ட வரைவில் முன் வைத்துள்ளது. இத்திட்ட வரைவு நடைமுறை சாத்தியங்களை கொண்டு மட்டுமே திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.

செவ்வாய் குடியேற்றம்
செவ்வாயில் குடியேற்றம் (ஒரு கற்பனை படம்)

செவ்வாயில் மனிதர்கள் தங்க நிர்மாணிக்கப்ப்டும் குடில்களில் தங்குமிடம், பயிரிடும் பகுதி, உடற்பயிற்சிக்கான பகுதியுடன் பிரத்யோக ஆய்வகமும் இருக்கும் என்றும் இக்குடில்கள் மனிதர்களுக்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொடுப்பதோடு, சூரிய கதிர்கள், விண்கதிர்கள், புழுதிப்படலம், நுண்கிருமி தொற்று, தட்பவெப்பம் ஆகிய அனைத்திலிருந்தும் பாதுகாக்கும் என்றும் மார்ஸ் ஒன் தெரிவித்துள்ளது. மேலும் செவ்வாயின் குறைவான ஈர்ப்பு விசையை சமாளிக்க விண் வெளியாளர்களுக்கு பிரத்யோக உடையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

எல்லா பிரச்சனைகளையும் தொழில்நுட்ப ரீதியாக தீர்க்கமுடியுமென குறிப்பிட்டுள்ள மார்ஸ் ஒன் மனித குலத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்ல சில சவால்களை, அபாயங்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டுமென்றும் கூறியுள்ளது.

கோள்களுக்குடையிலான பயணத்திற்கு தேவையான, பிற கோள்களின் சூழலிருந்து மனிதர்களை காக்கும் சாதனங்கள் என பல்வேறு பிரிவுகளில் பல தனியார் விண்வெளி நிறுவனங்கள் சாதனங்களை வடிவமைத்து வருகின்றன. அந்நிறுவனங்கள் மார்ஸ் ஒன்னுடன் கூட்டு ஒப்பந்தத்தை போட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்ட பின் அவர்களுக்கு உலகெங்கிலும் பிராந்திய வாரியாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் 20-லிருந்து 40 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியில் 24 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் மார்ஸ் ஒன்னின் நிரந்தர விண்வெளியாளர்களாக பணியமர்த்தப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு 2015 முதல் சுமார் 7 ஆண்டு காலம் பயிற்சிக்கு பின்னர் 2022-ம் ஆண்டு முதல் குழு செவ்வாய்க்கு அனுப்பப்படும். முதல் குழு சென்ற இரண்டு ஆண்டுகளில் அடுத்த குழு அனுப்பப்படும். இவ்விதம் ஆறு குழுக்கள் அடுத்தடுத்து அனுப்பப்படும். ஒரு குழு செவ்வாய்க்கு சென்று இறங்க பயண காலம் சுமார் 7 மாதங்களிலிருந்து 9 மாதங்கள் வரை ஆகும்.

விண்வெளி பயணம்
விண்வெளி பயணம் – ரியாலிட்டி ஷோவாக

வடிவமைக்கப்படும் தொழில்நுட்பங்கள் இன்னும் சோதித்தறிந்து நடைமுறைக்கு வருவதற்குமுன்னரே மார்ஸ் ஒன் போன்ற நிறுவனங்கள் செவ்வாய் கிரக ஆய்வை விளம்பரப்படுத்தும் நோக்கம் என்ன? இந்த திட்டத்திற்கு மொத்தம் 6 பில்லியன் டாலர்கள் வரை (36 ஆயிரம் கோடி ரூபாய் வரை) செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. லாபநோக்கற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ள மார்ஸ் ஒன் இத்திட்டத்திற்கான செலவை தரப்போவதில்லை, விண்ணப்பித்தோரும் தரப்போவதில்லை. எனில் இத்திட்டத்திற்கு பணம் எப்படி கிடைக்கும்?

கோள்களுக்கிடையிலான ஊடக குழுமம் (Interplanetary Media Group) என்ற லாபநோக்கம் கொண்ட ஊடக நிறுவனத்தை மார்ஸ் ஒன் ஆரம்பித்துள்ளது. இந்த ஊடக நிறுவனத்தின் மூலம் நேரடி ஒளிபரப்பு ஒப்பந்தங்களின் மூலமும், டி.வி. விளம்பர ஒப்பந்தங்கள் மூலமும், தனியார் நிறுவனங்களிடமிருந்தும் திரட்டப்படும் என்று மார்ஸ் ஒன்-னின் நிறுவனர் பஸ் லான்ஸ்ட்ராப் தெரிவித்துள்ளார்.

அதாவது நம்மூர் சூப்பர் சிங்கர், மானாட மயிலாட ரியாலிடி ஷோக்களை போன்று போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதுடன், அது நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்படும். போட்டி மட்டுமின்றி, 7 ஆண்டு பயிற்சியை நேரடியாக ஒளிபரப்புவது, செவ்வாய்க்குச் செல்பவர்களின் பேட்டி, அவர்களது குடும்பத்தினரின் பேட்டி, செவ்வாய் பயணத்தை டி.வி.யில் காட்டுவது, செவ்வாயில் இறங்குவதைக் காட்டுவது, தவிர இறுதி 24 பேர் விளபரங்களில் நடிக்கும் வருமானம் எனப் பல வகைகளில் பணம் ஈட்டப்படுமாம். சில்பா செட்டி புகழ் “பிக் பிரதர்” ரியாலிட்டி ஷோவின் நிகழ்ச்சியை உருவாக்கியவர்களுள் ஒருவரான பால் ரோமர் இந்த திட்டத்திற்கு தூதராகவும், ஆலோசகராகவும் உள்ளார். இது வரை இருபதுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இவ்வூடக நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு முதலீடு செய்திருக்கின்றன.

முதலாளித்துவ அரசுகள் அறிவியல், தொழில் நுட்ப பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாக வெட்டிக் குறைத்து, அவற்றை தனியார் ‘முனைவுக்கு’ விட்டிருக்கும் சூழலில் அறிவியல் ஆய்வுகளுக்கும், வளர்ச்சிக்கும் ரியாலிடி ஷோ, விளம்பரங்கள் என்று சந்தைப்படுத்திதான் காசு பார்க்க வேண்டியிருக்கிறது. அமெரிக்க படங்களில் தனித் தீவுகளில் கிரிமினல்களை இறக்கி மோதவிட்டு கொலை செய்ய வைத்து அவற்றை நேரடியாக ஒளிபரப்பும் கதைகள் உண்டு. செவ்வாய் பயணமும் அப்படித்தான்.

மார்ஸ் ஒன் 2023ல் செவ்வாய்க்கு மனிதர்களை அனுபினாலும், அனுப்பாவிட்டாலும் கூட, அது நடத்தும் ரியாலிட்டி ஷோ 2015ல் ஆரம்பித்து 2022 வரை நடக்கும். ஒரு ரியாலிடி ஷோவில் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் எப்படி சாதாரண மக்களின் வாழ்க்கையை பணயம் வைக்கிறார்கள் என்பதற்கு இந்த செவ்வாய் கூத்து ஒரு சான்று.

– மார்ட்டின்.

மேலும் படிக்க

வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் !

15
வாடகைத் தாய்மார்கள்

ருபத்து நான்கு மணி நேரமும், தடையில்லா மின்சாரம், மாநிலம் முழுவதும் தண்ணீர் விநியோகம், அபரிமிதமான விவசாய வளர்ச்சி, வந்து குவியும் அந்நிய முதலீடுகள், அவை உருவாக்கும் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் என மோடியின் குஜராத் குறித்து பொய்யானதொரு பிம்பம் உருவாக்கப்படுகின்றது. இவற்றுக்கு மத்தியில் குஜராத் குறித்த உண்மைச் செய்திகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அம்மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படியே கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் குஜராத்தில் வறுமைக் கோட்டுக்குக்  கீழ்  உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 39.06% அதிகரித்துள்ளது.  கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியில் தமிழ்நாடு, ஆந்திராவிற்குப் பின்னால் இந்தியாவிலேயே 11வது இடத்தில் குஜராத் இருக்கிறது.வாடகைத் தாய்மார்கள்

ஆனால் வேறொரு விசயத்தில் உலகிலேயே முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கிறது குஜராத். பணத்திற்காகத் தாய்மையை விற்கும் பரிதாபத்துக்குரிய வாடகைத் தாய்களின் எண்ணிக்கையில் உலகளவில் குஜராத்துக்குத்தான் முதலிடம்.

கடந்த காலங்களில் ‘வெண் மைப் புரட்சி’யின் அடையாளமாக, அமுல் நிறுவனத்தின் பிறப்பிடமாக, அறியப்பட்ட ஆனந்த் நகரம் இன்று, வாடகைத்தாய் முறையின் மையமாகி விட்டது. ஆண்டுக்கு 30,000 குழந்தைகளையும் உற்பத்தி செய்து, ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் இந்தத்துறையின், தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கு கருத்தரிப்பு மையங்கள்  இந்நகரம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. ஆனந்த் நகரம் மட்டுமன்றி, குஜராத்தின் அகமதாபாத், ஜாம்நகர், சூரத் என மற்ற நகரங்களிலும் இத்தொழில் கொடிகட்டிப் பறக்கிறது.

இன்விட்ரோ கருத்தரிப்புமுறை (IVF) என்ற அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கியது. அதே முறையில் கணவனின் விந்தணுவையும், மனைவியின் கருமுட்டையையும் இணைத்து சோதனைக் குழாயில் உருவாக்கப்படும் கருவை தனது கருப்பையில் சுமந்து, குழந்தையாகப் பெற்றுத்தரும் பெண்ணைத் தான் வாடகைத்தாய் என்கிறார்கள். பிறக்கும் குழந்தை தனது தாய் தந்தையின் மரபணுக்களைத்தான் கொண்டிருக்கும் என்பதும், அது பத்து மாதம் சுமந்த வாடகைத்தாயின் சாயலைக் கூடக் கொண்டிருக்காது என்பதும்தான் இந்த வாடகைத்தாய் முறை பிரபலமடைவதற்கு காரணம். இதனால்தான் வசதி படைத்த இந்தியர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு தம்பதியரும், பிள்ளைப்பேறுக்காகத் தேடி வரும்  புனிதத் தலமாகியிருக்கிறது மோடியின் குஜராத்.

நாய்னா படேல்
வாடகைத் தாய் வியாபாரத்தை எவ்வித உறுத்தலுமின்றி நடத்தி வரும் குஜராத்தை சேர்ந்த மருத்துவ வியாபாரி நாய்னா படேல்

குழந்தைப் பேறு இல்லாத அமெரிக்க, ஐரோப்பியத் தம்பதிகள் தங்களது நாட்டில் இதுபோன்று குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் மிக அதிகமாகச் செலவாகும். பல நாடுகளில் வாடகைத்தாய் முறையும் வாடகைத் தாய்க்குப்  பணம் கொடுப்பதும் தடைசெயப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் ஆகும் செலவில் ஒரு சிறுபகுதியைக் கொண்டே குஜராத்தில் வாடகைத் தாய்களை அமர்த்திக் கொள்ள முடியும். இதனால் வாடகைத் தாய்களைத் தேடி வரும் வெளிநாட்டுத் தம்பதிகளின்எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

குறிப்பிட்ட பாலினத்தில் குழந்தை வேண்டும் எனக் கேட்கும் தம்பதிகளுக்காக வாடகைத் தாய்மார்கள் அத்தகைய குழந்தை உருவாகும் வரை மீண்டும் மீண்டும் கருத்தரிப்புச்  சிகிச்சைக்கு உட்பட வேண்டும்.  குழந்தைப்பேறு காலம் முழுவதும் இந்த வாடகைத் தாய்மார்கள், குடும்பத்தைப் பிரிந்து மருத்துவமனை ஏற்பாடு செய்து தரும் கொட்டடியில் அடைந்து கிடக்க வேண்டும். குழந்தை பிறந்த பின், தாய்மையின் ஹார்மோன் மாற்றங்கள், ஏற்படுத்தும் உணர்ச்சிகளை எதிர்கொண்டு, குழந்தையுடனான பிணைப்பை அறுத்தெறிந்து, குழந்தையை ஒப்படைத்து விலகிவிட வேண்டும்.

இவ்வளவு துன்பங்களை எதிர்கொண்ட பிறகும் அவர்களுக்குப் பேசிய பணம் கிடைப்பதில்லை. வாடகைத்தாய் முறையில் குழந்தைபெறச் செலவாகும் மொத்த தொகையில் வெறும் 2% மட்டுமே வாடகைத்தாயாக வரும் பெண்ணிற்குக் கொடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் 2 முதல் 3 லட்சம் வரை தருவதாகக் கூறினாலும்,  குழந்தைப்பேறுக் காலத்தில் அந்தப் பெண்ணைப் பராமரிக்கும் செலவுகள் அனைத்தையும் அவளது பங்கிலிருந்தே கழித்துக்கொண்டு இறுதியில் 12,000 முதல் 15,000 வரை கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். அதையும் கூட பல தவணைகளில் தருவதால் படிப்பறிவற்ற பல பெண்களுக்குத் தாங்கள் ஏமாற்றப்பட்டது கூடத் தெரிவதில்லை.

வெளிநாட்டுப் பெண் அட்ரீனி ஆரிஃப்
குஜராத்தை சேர்ந்த வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் ‘பெற்றுள்ள’ வெளிநாட்டுப் பெண் அட்ரீனி ஆரிஃப்

குஜராத்தின் இளம் பெண்கள், வாடகைத் தாயாக 2 முதல் 5 முறை வரை குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இதில்  அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும், அபாயங்களும் ஏராளம். அறுவை சிகிச்சைதான் சுலபமானது, குழந்தைக்கு பாதுகாப்பானது என்பதால் எந்த வாடகைத்தாயும் இயற்கையாக பிரசவிக்க அனுமதிக்கப் படுவதில்லை. இதன் காரணமாக ஆரோக்கியமான பெண்களே இரண்டு குழந்தை பெற்றபின் நோயாளியாகி விடுகின்றனர். ஊட்டச்சத்துக் குறைவு, இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலைமையோ ஆபத்தானது.

குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காக, கடன்களை அடைப்பதற்காக, கணவனின் மருத்துவச் செலவிற்காக எனத் தங்களது குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கே குஜராத் பெண்கள் தங்களது கருப்பையை வாடகைக்கு விட வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.

பத்தாண்டுகளில் குஜராத்தை பன்னாட்டு மூலதனத்தின் கருப்பையாக மாற்றியிருக்கும் மோடி, தனது மாநிலத்துப் பெண்களின் கருப்பையை அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் வாடகைக்கு விட்டு அந்நியச் செலாவணி ஈட்டுவதில் அதிசயமில்லைதான்.

– கதிர்
___________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2013
___________________________________

மோடியை திரை கிழிக்கும் பிரச்சாரம் – பாஜக அலறல் !

25

திருச்சியில் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து பாஜகவின் மாநிலத் தலைவர் பொன் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது பின்வருமாறு கூறியிருக்கிறார்:

பாஜக மாநாட்டை விமர்சித்தும், மோடியை விமர்சித்தும் மாநகரில் மோசமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. காவல்துறையினர் இதை எப்படி அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

கலவரத்தைத் தூண்டும் வகையில் நடைபெறும் இந்த முயற்சிகளை காவல்துறையினர் தடுக்க வேண்டும்.கலவரத்துக்கான அறிகுறிகள் தெரியும்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகரக் காவல் ஆணையரை சனிக்கிழமை காலை கட்சி நிர்வாகிகள் சந்தித்து புகார் அளிப்பார்கள் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பாஜகவை விமர்சித்து விநியோகிக்கப்பட்டு வரும் துண்டுப் பிரசுரங்களைக் காட்டுகிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.

மோடியை எதிர்த்து புரட்சிகர அமைப்புகள் செய்து வரும் பிரச்சாரத்தை போலிசு துணை கொண்டு தடுத்து நிறுத்த முனைகிறார் பாஜக தலைவர். ஜனநாயக முறையில் வரும் எதிர்ப்பு பிரச்சாரத்தைக்கூட இவர்கள் தீவிரவாதமாக சித்தரிக்கிறார்கள் என்றால் நாளைக்கே ஆட்சிக்கு வந்தால் எப்படியெல்லாம் அடக்குமுறை செய்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். பாசிஸ்டு மோடியையும், பாசிச பாஜக கட்சியையும் எதிர்த்தால் கலவரம் வருமாம். ஆனால் கலவரம் செய்து ஆட்சியை பிடிக்க எத்தனிப்பது இந்தக் கூட்டம்தான்.

எனவே மதவெறியை எதிர்ப்போர் அனைவரும் மோடிக்கு எதிராக தங்களால் இயன்ற அளவுக்காகவது களம் இறங்க வேண்டும். மோடியை எதிர்க்கும் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் நடக்க வேண்டும். அப்போதுதான் மதவெறி பிடித்த இந்த ஓநாய்க் கூட்டத்திறத்கு தகுந்த பாடம் புகட்ட முடியும். வாருங்கள், மகஇக நடத்தும் மோடி எதிர்ப்பு இயக்கத்தில் பங்கு கொள்ளுங்கள்!

திருச்சியில் BJP அடித்தட்டு மக்களிடையே பரப்பிவரும் மோடியைப் பற்றியான பொய்பிரச்சாரத்தை அம்பலப்படுத்தி மையக்கலைக்குழு தோழர்கள் நடத்திவரும் தெருமுனைக்கூட்டங்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பிரச்சார இயக்க பொதுக்கூட்டம்
_____________________________________
சிறப்புரை : தோழர். மருதையன்,

மாநில பொதுச்செயலர்,
ம.க.இ.க, தமிழ்நாடு.

செப்டம்பர் 22 – ஞாயிறு – மாலை 6.00 மணி
புத்தூர் நால்ரோடு, உறையூர்,  திருச்சி.

தகவல் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி

மோடி வித்தை செல்லாது, இது பெரியாரின் பூமி ! பாடல் டவுன்லோட்

10

மோடி எதிர்ப்பு இயக்கத்துக்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு தயாரித்து, மக்களிடையே பாடி வரும் பாடலின் ஒலிப்பதிவை இங்கே இணைத்திருக்கிறோம். நண்பர்கள் இந்த பாடலை பரவலாக பகிரவும்.

நாடு முன்னேத்தமுண்ணு மோடி முழங்குறாரு- பாடல் MP3

திருச்சி பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு சத்திரம் பகுதியில் அனுமதி மறுத்த போலீஸ் உறையூர், புத்தூர் நால்ரோட்டில் அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த இட மாற்றத்தை குறித்துக் கொண்டு நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

அனைவரும் பொதுக்கூட்டத்துக்கு வருமாறு அழைக்கிறோம்.

சென்னையில் புதிய கலாச்சாரம் அலுவலகத் தோழர்கள் மூலமாக வாகன ஏற்பாடு செய்து திருச்சி பொதுக்கூட்டத்திற்கு செல்வதாக இருக்கிறோம். ஞாயிறு காலையில் கிளம்பி திருச்சி சென்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இரவு திரும்பி திங்கள் அதிகாலையில் சென்னைக்கு வந்து விடலாம். வாகனச் செலவை பகிர்ந்து கொள்ளலாம்.

பிரச்சார இயக்க பொதுக்கூட்டம்
_____________________________________
சிறப்புரை : தோழர். மருதையன்,

மாநில பொதுச்செயலர்,
ம.க.இ.க, தமிழ்நாடு.

செப்டம்பர் 22 – ஞாயிறு – மாலை 6.00 மணி
புத்தூர் நால்ரோடு, உறையூர்,  திருச்சி.
______________________________________

namo-poster

மோடியை விரட்டுவோம்: திருச்சிக்கு எங்களோடு வாருங்கள் !

23

ன்பார்ந்த நண்பர்களே,

காங்கிரசு மீதான அதிருப்தியை முன்னிறுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவுடன் மோடியை பிரதமர் பதவிக்கு கொண்டு வர ஆளும் வர்க்கங்கள் துடிக்கின்றன. உலகமயத்தை இன்னும் வீச்சாக கடும் பொருளாதார சுரண்டல்களோடு நிறைவேற்றிக் கொள்வதற்கு மோடியை பயன்படுத்துவது அவர்களது இலக்கு. காரணம் இந்தியாவின் வேறெந்த மாநிலங்களை விடவும் சொந்த மக்களை விரட்டி நிலம் பறித்து, பல்வேறு சலுகைகளை பன்னாட்டு மற்றும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு மோடி அள்ளி வழங்கியிருக்கிறார். இதை இந்தியா முழுவதும் விரைந்து நிறைவேற்றுவது அவர்களது நோக்கம்.

நரேந்திர மோடிஇதற்கு மதம் சார்ந்த உணர்ச்சியை கிளப்புவது பயனளிக்குமென்பதால் காங்கிரசுக்கு மாற்றாக மோடியை ஆதரித்து கார்ப்பரேட் ஊடகங்களும் தினுசு தினுசாக பிரச்சாரம் செய்கின்றன. இதை ஆர்.எஸ்.எஸ்-ன் இந்து ராஷ்டிரக் கனவுகளை நனவாற்றுவதற்காக பார்ப்பனிய இந்துமதவெறி இயக்கங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. இப்படி இந்துமதவெறியும், ஏகாதிபத்திய சுரண்டலும் கரம் கோர்த்துக் கொண்டு நம்மை அடக்கி ஆள மோடி வருகிறார்.

தமிழகத்தில் சீந்துவாரின்றி இருந்த இந்துமதவெறி அமைப்புகளும், பாஜகவும் மோடியின் வருகையை வைத்து தம்மை பலப்படுத்திக் கொள்ள துடிக்கின்றன. இந்நிலையில் பார்ப்பனிய எதிர்ப்பில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக இருந்த தமிழகத்தில், தந்தை பெரியாரின் சுயமரியாதை மண்ணில் மோடி வருகிறார் என்பது நமது சமூக அக்கறைக்கு விடப்பட்டிருக்கும் சவால்.

மோடியின் பொதுக்கூட்டம் முதலாளிகளின் பணத்தில், தமிழக அரசின் பாதுகாப்பில் நடக்கலாம். ஆனால் நாம் சும்மா இருந்தால் வரலாறு மன்னிக்குமா?

குஜராத்தில் முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த ஒரு கொடூரமான கொலைகாரன் இத்தனை ஆர்ப்பாட்டங்களோடும், சப்தங்களோடும் தமிழகம் வருகிறான் என்றால் அது பார்ப்பனிய எதிர்ப்பில் வீறு கொண்டு போராடிய தமிழகத்திற்கு விடப்பட்ட சவால் இல்லையா?

பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்தும் திராவிட இயக்கங்கள் இன்று வாயை மூடிக் கொண்டு இருக்கின்றன. வைகோ போன்றவர்கள் பாஜகவை வாய் வலிக்க புகழ்ந்து கொண்டு அடுத்த கூட்டணிக்கு அடி போடுகிறார்கள். பெரியார் பெயரை விரும்பியோ விரும்பாமலோ உச்சரிக்கும் தமிழின அமைப்புகள் பலவும் ஒரு அடையாள கண்டனமோ இல்லை அதுவும் இல்லாமலோ வாய் மூடி இருக்கின்றன.

இந்நிலையில் பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் வாரிசாக புரட்சிகர அமைப்புகள் களமிரங்கியிருக்கின்றன. இது இன்றைக்கு மட்டும் செய்யப்படும் போராட்டம் அல்ல. பாபர் மசூதி இடிப்பிலிருந்து எமது அமைப்புகள் இந்துமதவெறி அமைப்புகளை குறிவைத்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. பல இடங்களில் இந்தமதவெறி பாசிஸ்ட்டுகளோடு நேரடியாகவே மோதியிருக்கிறோம். பல நூறு வழக்குகள் எம்மீது உண்டு.namo-poster

இதன் தொடர்ச்சியாக இப்போது திருச்சி மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான எமது தோழர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு மோடியை எதிர்த்து மக்களிடையே பிரச்சாரம் செய்கிறார்கள். மோடியும், பாஜகவும் இசுலாமிய மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை ‘இந்துக்களுக்கும்’ எதிரி என்பதை புரியவைத்து வருகிறார்கள். செல்லுமிடங்களிலெல்லாம் மக்களுடைய கேள்விகளுக்கு விடையளித்து பொறுமையாக பிரச்சாரம் செய்கிறார்கள் தோழர்கள். கருத்தை புரிந்து கொண்ட மக்கள் இதற்காக நிதியுதவி செய்து இந்த பிரச்சார இயக்கத்தை ஆதரிக்கின்றனர்.

ஆக மோடி தமிழகம் வருகிறார் என்றால் அதை எதிர்க்க வேண்டும் என்பது நம் அனைவருக்குமுள்ள கடமை. அந்த கடமையில் நீங்களும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக திருச்சியில் வரும் ஞாயிறு 22.9.2013 அன்று நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அழைக்கிறோம். தமிழகம் முழுவதிலிருந்தும் நண்பர்கள் வரவேண்டும்.

சென்னையில் புதிய கலாச்சாரம் அலுவலகத் தோழர்கள் மூலமாக வாகன ஏற்பாடு செய்து திருச்சி பொதுக்கூட்டத்திற்கு செல்வதாக இருக்கிறோம். ஞாயிறு காலையில் கிளம்பி திருச்சி சென்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இரவு திரும்பி திங்கள் அதிகாலையில் சென்னைக்கு வந்து விடலாம். வாகனச் செலவை பகிர்ந்து கொள்ளலாம்.

நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

மோடிக்கு எதிர்ப்பு காட்டும் கடமையில் உங்களையும் பங்கேற்க் கோருகிறோம்.

வர விரும்பும் நணபர்கள் தோழர் பாண்டியன் (புதிய கலாச்சாரம் அலுவலக நிர்வாகி) (91) 99411 75876 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யவும். அல்லது உங்களைப் பற்றிய விபரங்களோடு vinavu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

வாருங்கள், தமிழகத்தை பார்ப்பனியத்தின் கல்லறையாக்குவோம்.

– வினவு