Thursday, May 13, 2021
முகப்பு கட்சிகள் பா.ஜ.க மோடியை திரை கிழிக்கும் பிரச்சாரம் - பாஜக அலறல் !

மோடியை திரை கிழிக்கும் பிரச்சாரம் – பாஜக அலறல் !

-

திருச்சியில் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து பாஜகவின் மாநிலத் தலைவர் பொன் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது பின்வருமாறு கூறியிருக்கிறார்:

பாஜக மாநாட்டை விமர்சித்தும், மோடியை விமர்சித்தும் மாநகரில் மோசமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. காவல்துறையினர் இதை எப்படி அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

கலவரத்தைத் தூண்டும் வகையில் நடைபெறும் இந்த முயற்சிகளை காவல்துறையினர் தடுக்க வேண்டும்.கலவரத்துக்கான அறிகுறிகள் தெரியும்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகரக் காவல் ஆணையரை சனிக்கிழமை காலை கட்சி நிர்வாகிகள் சந்தித்து புகார் அளிப்பார்கள் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பாஜகவை விமர்சித்து விநியோகிக்கப்பட்டு வரும் துண்டுப் பிரசுரங்களைக் காட்டுகிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.

மோடியை எதிர்த்து புரட்சிகர அமைப்புகள் செய்து வரும் பிரச்சாரத்தை போலிசு துணை கொண்டு தடுத்து நிறுத்த முனைகிறார் பாஜக தலைவர். ஜனநாயக முறையில் வரும் எதிர்ப்பு பிரச்சாரத்தைக்கூட இவர்கள் தீவிரவாதமாக சித்தரிக்கிறார்கள் என்றால் நாளைக்கே ஆட்சிக்கு வந்தால் எப்படியெல்லாம் அடக்குமுறை செய்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். பாசிஸ்டு மோடியையும், பாசிச பாஜக கட்சியையும் எதிர்த்தால் கலவரம் வருமாம். ஆனால் கலவரம் செய்து ஆட்சியை பிடிக்க எத்தனிப்பது இந்தக் கூட்டம்தான்.

எனவே மதவெறியை எதிர்ப்போர் அனைவரும் மோடிக்கு எதிராக தங்களால் இயன்ற அளவுக்காகவது களம் இறங்க வேண்டும். மோடியை எதிர்க்கும் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் நடக்க வேண்டும். அப்போதுதான் மதவெறி பிடித்த இந்த ஓநாய்க் கூட்டத்திறத்கு தகுந்த பாடம் புகட்ட முடியும். வாருங்கள், மகஇக நடத்தும் மோடி எதிர்ப்பு இயக்கத்தில் பங்கு கொள்ளுங்கள்!

திருச்சியில் BJP அடித்தட்டு மக்களிடையே பரப்பிவரும் மோடியைப் பற்றியான பொய்பிரச்சாரத்தை அம்பலப்படுத்தி மையக்கலைக்குழு தோழர்கள் நடத்திவரும் தெருமுனைக்கூட்டங்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பிரச்சார இயக்க பொதுக்கூட்டம்
_____________________________________
சிறப்புரை : தோழர். மருதையன்,

மாநில பொதுச்செயலர்,
ம.க.இ.க, தமிழ்நாடு.

செப்டம்பர் 22 – ஞாயிறு – மாலை 6.00 மணி
புத்தூர் நால்ரோடு, உறையூர்,  திருச்சி.

தகவல் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி

 1. மதவெறியை எதிர்ப்போர் அனைவரும் மோடிக்கு எதிராக தங்களால் இயன்ற அளவுக்காகவது களம் இறங்க வேண்டும். மோடியை எதிர்க்கும் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் நடக்க வேண்டும். அப்போதுதான் மதவெறி பிடித்த இந்த ஓநாய்க் கூட்டத்திறத்கு தகுந்த பாடம் புகட்ட முடியும். வாருங்கள், மகஇக நடத்தும் மோடி எதிர்ப்பு இயக்கத்தில் பங்கு கொள்ளுங்கள்!–கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்த தவறாதீர்கள்!!!!

 2. அப்ப யாருக்கு வாக்களிக்களாம்…? You Have to suggest i surely vote for them and i have to suggest my family, friends and my colleges……!

   • ஓட்டு போடாம புரட்சி பண்ணினா நம்ம ஓட்ட வேற எவனாவதும் கள்ள ஓட்டா போட்டுட்டு போயிருவான்….. இதான் புரட்சியா???

    • என்னது நீங்க ஓட்டு போடலனா எவனாவது கள்ள ஓட்டு போற்றுவான?
     ஹா ஹா ஹா….
     இந்த கேவலமான நிலைமை தான் ஜனநாயகமா?

     நீங்களும், உங்க ஜனநாயகமும், தேர்தலும் செம காமெடி போங்க.

 3. மோடி எதிர்ப்பு என்று சொல்லி மறைமுகமாக காங்கிரஸ் ஜால்ரா செய்யும் இது போன்ற தேசதுரோகிகளை தூக்கிலிட வேண்டும் மோடி மதவாதியாக இருக்கட்டும் 110 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் 87% இந்துக்கள் இருக்கும் போது அந்த மதத்தவர் பிரதமராக வேண்டும் என்று சொல்வது தவறென்றால் நீ போய் சவுதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் ஒரு இந்துவை ஒரு சாதாரண தேர்தலில் கூட நிற்க உரிமை இல்லாமல் நடத்தபடுவதை கேள்வி கேள் குஜராத் கலவரம் பற்றி பேசும் மனித ஆர்வலர் மண்ணாங்கட்டிகள் கோத்ரா ரயில் எறிகபட்டபோது என்ன சொரிய போனார்களா இல்லை அந்த இரயிலி இறந்தவர்கள் எல்லாம் ஆடு மாடுகளா?

  • ராஜ், உங்களுடைய அறியாமையை நினைத்து வருத்தப்படுகிறேன். நாம் வாழ்வது இந்தியாவில், இங்கே இருக்கக் கூடிய இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்கள், பழங்குடியினர், சீக்கியர், எல்லோரும் இந்த மண்ணின் மைந்தர்கள். அவர் அவர் தேவைக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப, வேறு வேறு மதங்களைப் பின்பற்றுகிறார்கள். சவுதி அரேபியாவில் எப்படி ஒரு இந்து தேர்தலில் நிற்க முடியும். அங்கு இந்துக்கள் இல்லையே. கோத்ரா ரயில் எரிப்பில் ஈடுப்பட்டது முஸ்லிம்கள் அல்ல என்பது விசாரணை கமிஷன் அறிக்கை. தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற முஸ்லிம்களை கருவறுக்க RSS கும்பலால் ஏற்படுத்தப்பட்ட சம்பவம் தான் கோத்ரா ரயில் எரிப்பு.
   முடிவெடுத்து விட்டு விவாதிக்க வேண்டாம், உண்மையை விழங்க விவாதித்தால் பலன் உண்டு.

   • அது லல்லு ப்ரசாட் யாதவ் மந்திரி ஆக இருந்தபோது வந்த தகவல். அவர் இன்னும் ஒருபடி சென்ட்ரு அப்படி ஓரு சம்பவம்நடக்க வில்லை என்ட்ரும் சொன்னார்.

  • Dear Raj.
   Neenga Nalla Brainwash Seiyyappattirukkeenga,Saudi Islamic Country.India Hindu Contry Kidaiyaathu.BJP oru Brahmins Katchi. Angu Brahmins thavira Yaarum Munnilaippadutthappadavo,Thalamaiyerkavo Kandippaaha Mudiyaathu.Modiyoda nilai Umabharathi,Kalyansingh,Bangaru lakshmanan Ivanga Nilaimaithaan Modikkum Kandippa Nadakkum.Oru Thalith Muslimaaga Maarinaal Avarai Thalaivaraaga Yerppthil Islam Engalai Thadukkvillai.Muslimgal Avarai Thalaivaraaga yerkka thayaar.Saudi’la Oru Hindu Prime minister aagurathu Irukkattum.BJP,RSS,VHPyoda Thalaivara Orukkalum Hindu mathatthai serntha Oru Thalith Thalaivara Aagavey Mudiyaathu.Dear Raj Ungalaala Mudinja appadi Try panni paarunga.Enna nadakkuthunnu paarppom.

  • /87% இந்துக்கள் இருக்கும் போது /
   யோவ் காமெடி பீசு! நாங்களும் அதை தான் சொல்றோம், பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் மக்களுக்கு தான் அதிகாரம் வேண்டும் என்று, அதை விட்டு புட்டு சிலர் கைகலளில் அதிகாரத்தை இப்ப வச்சுருக்கனுங்க, ஜனநாகம் பேசுகிற நீங்கள் இந்த அநீதியை எதிர்த்து பேச போறீங்கள என்ன ? . ( போங்கையா நீங்களும் உங்கள் ஜனநாயக கருத்தும் )

 4. There is no proof or evidence that Modiji did or helped those massacres. But there is evidence that Even Muslim people is liking and even voted for Modiji. If somebody opposes a person who will surely bring change to this nation, they will be religious oriented or against India.

 5. எதற்கெடுத்தாலும் இஸ்லாமிய ஆட்சிதான் உலகை காக்கும் என்றும், சவுதி போன்ற இஸ்லாமிய நாடுகளின் சட்டங்கள்தான் சிறப்பாது என்றும் மூலை முடுக்குகளில் சந்திப்பவர்களிடமெல்லாம் இசுலாமியர்கள் புராணம்பாடுவதும் மத நம்பிக்கையிலுள்ள இந்துக்களை மோடியின் பக்கம்தான் தள்ளும். இன்றைய இந்து இளைஞர்களிடம் மோடி ஒரு ஹீரோதான். அதனை மாற்ற முடியாது. மாற்றுவதற்கு மாற்றி யோசிக்க வேண்டும். சிறுபான்மையினர் என்ற முகமூடிக்குள் ஒளந்துகொள்ள அனுமதிக்காத பிரச்சாரங்கள் வேண்டும். மோடி பிரதமராக வராவிட்டாலும் இந்துக்களின் நாயகனாக கணிசமான வெற்றி பெறுவது நிச்சயம் என்றே கருதுகிறேன்.

 6. பாஸிச,மதவெறி கும்பலை மீண்டும் நம் மண்ணில் கால்பதிக்க அனுமதிக்க மாட்டோம்.
  அணிதிரள்வேம்! அடித்து விரட்டுவோம் காவிவெறியை!!

 7. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மாற்றி ” வேற்றுமையில்லா ஒற்றுமை” என்ற ஒற்றை கலாச்சாரம் ஒரே மாதிரியான பண்பாடு நோக்கி இந்தியாவை நகர்த்தவே இத்தனை தகிடுதத்தங்கள். சர்வ அதிகாரம் கொண்ட பிரதமர் என்ற ஹிட்லரிஸமே மோடித்துவம். தேச அமைதிக்கு மோடியே எதிரி.

 8. வாழ்த்துக்கள், தமிழ் சமூகத்தை இந்த ஆரிய வந்தேறிகளிடம் இருந்து காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. பல தமிழர்களே இந்த போலி தேசியவாதிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்தது மிகப் பெரிய துரதிஷ்டம். ம.க.இ.க. போன்ற விடுதலை இயக்கங்களுக்கு இவர்களைப் பற்றிய உண்மைகளை உழைக்கும் வர்க்கத்திடம் அதி விரைவாக கொண்டு சேர்க்கக் கூடிய கடமை இருக்கிறது. உங்கள் பணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 9. யோவ் மோடி கோடினு வாய் கிழிய பேசுரியே அவன் இஸ்லாமியனுக்கு மட்டும் எதிரி இல்ல.. உணக்கும் தான் யா! பிராமணனை தவிற மற்ற அனைவரையும் அவன் கொலைக்கான ஆயுதமாகத்தான் பயன்படுத்துகிறான்… நீ எமாந்த உன்னையும் ஒரு நாள் கருவருத்துவிடுவான்.. வரலாற ஒழுங்கா படிச்சி கருத்து எழுதுங்கையா!

 10. இளையவனே மோடி வந்தால் மக இக வேண்டுமாக்கும். இல்லைன்னா மக இக -வை ஒழிக்கவேண்டுமாக்கும்.

  • மகஇக சும்மா ஜனநாயகம்னு பேசாதே.. என் பின்னூட்டத்தை வெளியிட மறுத்தது ஏன்.. நான் என்ன எந்த வித ஆபாச வார்த்தைகள் எதையும் கூறவில்லை.. நான் சொன்னதில் அப்படி என்ன தவறு கண்டாய்… பேச்சுரிமையை ஒரு வளரும் இயக்கமாகவே இருக்கும் போது பறித்தால், ஆண்டு கொண்டிருப்பவர்கள் என்ன செய்தாலும் தவறில்லையே….

   • வெறுப்பு, துவேசம், கொலைவெறி, ரத்தவெறி இன்னபிற உங்கள் கருத்துக்களை வெளியிடுவதுதான் பேச்சுரிமை என்றால் அந்த பேச்சுரிமையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

    • வெறுப்பு, துவேசம், கொலைவெறி, ரத்தவெறி இன்னபிற உங்கள் கருத்துக்களை வெளியிடுவதுதான் பேச்சுரிமை என்றால் அந்த பேச்சுரிமையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.==> Good Joke, then what the ____ your are doing vinavu

     Vinavu site is moderated by sadist groups who fear when others opposes their views. In past few days they are only pointing to modi nothing else… This shows that this site is monetized by people who hate a secular & democratic India.

     When any one praises about modi, then they would point to Gujarat Riot 2002. As if there is no communal riots happened in India after 2002.

    • ///வெறுப்பு, துவேசம், கொலைவெறி, ரத்தவெறி இன்னபிற உங்கள் கருத்துக்களை வெளியிடுவதுதான் பேச்சுரிமை என்றால் அந்த பேச்சுரிமையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை//// அப்ப நி மட்டும் என்னத்தட பதிவு பன்னுர?

 11. பார்ப்பன பாசிஸ்ட் மத வெறி மோடியின் எதிர்ப்பாளார்கள் லட்சக் கணக்கில் கூடி தங்களுடைய கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யும்போது எடுக்கப் பட்ட புகைப் படங்கள் மனதுக்கு மிகவும் ஆறுதலை அளித்தன. அதிலும் முதல் வரிசையில் நின்றிருந்த, அமர்ந்திருந்த வருங்கால வாக்காளர்களின் கவனம் முழுவதும் பேச்சாளர்களின் மீது படர்ந்திருந்தது, நாம் சரியான திசையில்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டியது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க