நாளை ஜெ ஆட்சி காலி!
பொன்னார் எச்சரிக்கை!
அதிமுகவினர் கிலி!
நாளை திருச்சியில் நடைபெறவிருக்கும் இளந்தாமரை மாநாட்டினை ஒட்டி, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் பொன் இராதாகிருஷ்ணன் திருச்சியில் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தின் முக்கியமான பகுதிளை கீழே வெளியிடுகிறோம்.
அடைப்புக்குறிக்குள் இருப்பவை எமது விமரிசனங்கள்.
________________________________________
நாட்டை அழித்து வரும் ஊழல் (ரெட்டி பிரதர்ஸ், பால்கோ, ஸ்பெக்ட்ரம், நிலக்கரி ஊழல்கள்)
பயங்கரவாதம் (மாலேகான், சம்ஜோதோ, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு, பாபர் மசூதி இடிப்பு) ,
பிரிவினைவாதம் போன்றவற்றை ஒழித்து (பகல்பூர், மீரட், மல்லியானா, கமும்மை, குஜராத் முஸ்லிம் படுகொலைகள்)
மத பாகுபாடின்றி அனைத்து ஏழை இந்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கி (அதை உங்கள் கூட்டணிக் கட்சி முதலாளி எஸ்.ஆர்.எம் பாரி வேந்தர் வழங்குவாரா?)
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி (16,000 விவசாயிகளின் நிலத்தைப் பிடுங்கி நடுத்தெருவில் நிறுத்தி, அதை நிர்மாவுக்கு கொடுத்து, 450 வேலைகளை உருவாக்கி)
பெண்களின் மானம் காத்து (ஜெய் ஆசாராம் பாபு)
விவசாயம் தழைக்கச் செய்து (மோடி ஆட்சியில் அரசு கணக்குப்படி 641 விவசாயிகள் தற்கொலை)
தொழில் வளம் பெருக்கி (2900 கோடி முதல் போட்ட டாடாவுக்கு 1100 ஏக்கரும், கைச்செலவுக்கு 9000 கோடியும் கொடுத்து)
தொழிலாளர் நலம் காத்து (மாருதி தொழிலாளர் போராடியபோது ஜப்பானுக்குப் போய் சுசுகி முதலாளியின் காலை நக்கி)
இலங்கைத் தமிழரைக் காத்து (ராஜபக்சேவிடம் வைர நெக்லஸ் பரிசு வாங்கி)
இந்திய தமிழ் மீனவர் உரிமை காத்து (கூடங்குளம் மீனவர் போராட்டத்தை எதிர்த்து, தாது மணல் கொள்ளையன் வைகுண்டராசனை ஆதரித்து)
நாட்டின் எல்லையில் வாலாட்டி வரும் சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளை அடக்கி வைத்து (கார்கில் போரை பஞ்சாயத்து பண்ணி விடச் சொல்லி அமெரிக்கா காலில் விழுந்து)
எல்லையில் நம் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களின் உயிர் காத்து (கார்கில் ஆயுத பேர ஊழல் மற்றும் சவப்பெட்டி ஊழல் விவகாரங்களில் சந்தி சிரித்து)
வலுவான வளமான இந்தியாவை உருவாக்க நீங்கள் விரும்புகிறீர்கள். (ஆமா. ஆனா உங்கள ஒழிச்ச பிறகு தானே பாஸு, நாங்க உருவாக்க முடியும்)
உங்களின் இந்த விருப்பங்களை நிறைவேற்ற பா.ஜ.க உறுதி பூண்டுள்ளது. எனவே ஒத்த சிந்தனை படைத்த நாம் அனைவரும் ஒன்று கூடி நாட்டின் நலன் குறித்து சிந்தனை செய்து செயல் வடிவம் கொடுக்க பா.ஜ.க வின் இளைஞரணி சார்பில் இளந்தாமரை மாநாட்டினை திருச்சி மாநகரில் நடத்துகிறோம். (சிந்திக்கிறதுக்கே இவ்வளவு அலப்பரையா?)
மலைக்கோட்டை மாநகராம் திருச்சி மாநகரில் நடைபெறும் இளந்தாமரை மாநாட்டின் வெற்றி டெல்லி செங்கோட்டையிலும், (எதுல? செங்கோட்டை செட்டிங் போட்டிருக்கீங்களே அதுலயா?)
நாளை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் பா.ஜ.க வை ஆட்சியில் அமர்த்துவது உறுதி.
(அம்மாவுக்கே ஆப்பா? அப்போ உங்களுக்கு வேலூர் கோட்டையில உண்டக்கட்டி உறுதி! உறுதி! உறுதி!)
____________________________________
தப்பா எடுத்துக்காதீங்க….
கொஞ்சம் சரக்கு ஓவர்…
உளறிட்டார்…
இனிமேல் இந்திய ராணுவத்துக்கு ஆயுதம் வேண்டாம்…
வில், அம்பு:
காஞ்சிபுரத்தில் பெரிய யாகம் செய்து
எல்லா நாட்டையும் மண் கவ்வ வைப்போம்…
தசரதனின் கோ….ன்… மீது ஆனை
ஓரே காமெடி போங்க. என்னிக்குத்தான் இந்த மோடி பைத்தியம் வினவிக்குப் போகுமோ?
நீங்க என்ன சொன்னாலும் மோடி பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. மோடி தான் பிரதமர் என்று இந்திய மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். நீங்களும் பாராட்டுற மாதிரி அவர் நல்ல ஆட்சி தருவார். நாங்கள் அதை நம்புகிறோம். நீங்களும் நம்பிக்கை வையுங்க பாஸ். மோடி அதெல்லாம் டாப்பா வருவார்.
மொடியின் சுயருபம் தெரியும்..
மோடி டாப்பாலாம் வர மாட்டாரு.. டவுசர கழட்டீட்டு தான் ஓட போறாரு.. பொன்னார் எப்பவும் இப்படித்தான் கருத்தா தான் பேசுவாரு..