Friday, July 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 704

மாருதி தொழிலாளருக்கு ஆதரவாக திருச்சி, சென்னை, தஞ்சாவூர் ஆர்ப்பாட்டங்கள் !

0

திருச்சி

மாருதி நிறுவனத்திற்கு எதிராக தொடர்கிறது தொழிலாளர்கள் போராட்டம்! போராடும் மாருதி தொழிலாளர்களுக்கு தோள் கொடுப்போம்! – திருச்சியில் ஆர்ப்பாட்டம்.

18-07-2013 அன்று மாலை 6 மணியளவில் ஜங்சன் காதிகிராப்டில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய எமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

மாருதி சுசுகி தொழிலாளர்கள் 147 பேரை சிறைப்படுத்தி ஓராண்டாகியும் அவர்களுக்கு பிணை வழங்கவில்லை. இத்தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்ட கொலை வழக்கின் மீது எவ்வித விசாரணையும் இல்லை. இதனை கண்டித்து தொழிலாளி வர்க்கத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில் ‘ஜூலை-18’ மானேசர் செல்வோம் என்ற முழக்கத்தின் கீழ் முற்றுகைப் போராட்டத்தை நடத்தப்போவதாக மாருதி தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர். அவர்களின் போராட்டத்தை ஆதரித்து எமது அமைப்பின் தலைமையில் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்போம்! முதலாளித்துவ பயங்கர வாதத்தை முறியடிப்போம்! என்ற முழக்கத்தின் கீழ் 130க்கும் மேற்பட்ட தொழிலாளிகளும், தோழர்களும் ஒன்றிணைந்து முதலாளித்துவத்துக்கு எதிரான நமது பதாகைகளை உயர்த்தி பிடித்து, செங்கொடிகளை ஏந்தி குவிந்து நின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டதிற்கு பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொருளாளர் தோழர்.ராமசாமி தலைமை தாங்கினார். தொடர்ந்து தொழிலாளர்களின் மீது சுமத்தப்படும் அவதூறுகளுக்கு எதிராகவும், பொய் வழக்குகளுக்கு எதிராகவும் போராடினால்தான் தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்ட முடியும். மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் உடைத்தெறிய முடியும் என அறைகூவினார்.

அடுத்து சிறப்புரையாற்றிய புதுக்கோட்டை மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்ட அமைப்பாளார் வழக்குரைஞர் தோழர்.ராமலிங்கம் பேசும்போது எங்கோ நடைபெற்ற மாருதி தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இங்கு போராட்டம் நடத்த காரணம் சட்டத்துக்கு அப்பாற்பட்டு சிறை வைக்கப்பட்ட தொழிலாளர்களை சட்டத்துக்கு அப்பாற்பட்டு போராடுவதன் மூலம் தான் விடுவிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வார்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.

தொழிற்சாலை சட்டப்படி எந்த முதலாளியும் இயங்குவதில்லை. தொழிற்தாவா சட்டப்படி நிரந்தர தொழிலுக்கு நிரந்தர தொழிலாளியைத்தான் வைத்துக் கொள்ள வேண்டும். அவனை வேலையை விட்டு நீக்கினால் அதற்க்கான காரணத்தை ஒரு மாதத்திற்கு முன்பே அறிவிக்க வேண்டும் இச்சட்டப்படி எந்த முதலாளியாவது நடக்கிறானா? இல்லை தொழிலாளர் நலச்சட்டத்தை அமுல்படுத்த மறுக்கிறான். ஒரு ஆண்டில் 240 நாள் வேலை செய்தால் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எந்த முதலாளி அப்படி செய்கிறான்? பல பெயர்களை வைத்துக் கொண்டு தொழிலாளியை சுரண்டுகின்றான். குறைந்த பட்ச கூலி சட்டத்தை குப்பையில் தூக்கிபோட்டு விட்டு, உத்திரவாத சம்பளம், நிபந்தனைக்கு உட்பட்ட சம்பளம் என விதவிதமான பெயர்களில் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றனர். இப்பிரச்சினைகளை எதிர்த்து கேட்டால் போலீசை வைத்து அடிக்கிறான். மாருதி தொழிலாளிகள் போராடிய போது அவர்களை நீரில் அழுத்தி மூச்சு திணற திணற கொடுமை படுத்தினான், சிறையில் அடைத்தான். உரிமைகளை கேட்பதும் சட்டத்தை அமுல்படுத்த சொல்வதும் குற்றம் என அறிவிக்கும் இந்த நீதிமன்றம் தான் ‘ மாருதி தொழிலாளர்கள் போராட்டம் உலக அரங்கில் இந்தியாவே தலைகுனிய வைத்து விட்டது.’ என அறிவித்தது.

பல ஊழல்களிலும், முறைகேடுகளிலும் ஈடுபட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு உடனே ‘ஜாமின்’ கொடுக்கும் இந்த நீதிமன்றம் அப்பாவிகளான தொழிலாளிக்கு ஜாமின் கொடுக்க மறுக்கின்றது. விசாரணை செய்யவும் மறுக்கின்றது. தொழிலாளியின் குடும்பத்தினர் சிறையில் சென்று சந்திக்கவும் அனுமதிப்பதில்லை. குடும்பத்தில் உள்ள மனைவியோ, பிள்ளையோ, அம்மா, அப்பாவோ இறந்துவிட்டால் கூட ‘பரோலில்’ விட மறுக்கின்றது. இவ்வளவு கொடுமைக்கும் பின்னால் தான் மாருதி நிறுவனத்தின் கொள்ளை லாபம் ஒழிந்து கிடக்கின்றது. ஆண்டுக்கு ரூ 900 கோடி லாபம் என தொடங்கிய உற்பத்தி இன்று ஆண்டுக்கு ரூ 2200 கோடிக்கும் மேல் போகின்றது. இவை அனைத்தும் தொழிலாளியின் மேல் தொடுக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத நடவடிக்கை. இதனை எதில்கொள்ள வேண்டும் எனில் தொழிலாளி வர்க்கம் தன்னை ஒரு வர்க்க அமைப்பாய், சங்கமாய் திரட்டிக் கொள்ள வேண்டும். முதலாளிகள் சங்கம் வைத்துக் கொள்ளலாம் என்றால் நாமும் சங்கம் வைத்துக் கொள்ள உரிமையுள்ளது. இதனை உணரும் போது மாருதி ஆலை முதலாளி சொன்னது போல் ‘ ஒரு வர்க்கத் தாக்குதலை’ எதிரிகள் மீது நடத்தி பாட்டாளி வர்க்கம் விடுதலை பெற வேண்டும் எனில் புரட்சிகர அமைப்பில் இணைய வேண்டும் என தனது உரையை முடித்தார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர். தர்மராஜ் பேசும்போது இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் அனைவரும் கண்காணிப்புக்குள்ளேயே வைத்து ஒடுக்கப்படும் அவலநிலை பற்றியும், நோக்கியா, CVL , ஹூண்டாய், சுசுகி போன்ற எண்ணற்ற தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பு கேமரா, கக்கூசுக்கு முன் செக்யூரிட்டி காவல், ஒன்னுக்கு போக இரண்டு முறை, இரண்டுக்கு போக நேரம் இல்லை. உணவிற்கு 30 நிமிடம், கூடுதல் நேர கட்டாய உழைப்பு, பணி நிரந்தரமின்மை, PF பணம் திருட்டு, இப்படி தொழிலாளிகளின் உரிமையை பறிக்கும் முதலாளி எவனாவது ஒருவன் தண்டிக்கப்பட்டானா? இல்லை.

இவர்களின் சட்டவிரோத நடவடிக்கையை பாதுகாக்க ACL, DCL என அதிகாரிகள் கூட்டம் ஒருபுறம். இதனால்தான் பல வருடம் போராடியும் மனுக் கொடுத்தும் எந்த பயனும் இல்லை என்பதால் திருப்பித்தாக்க தொடங்கினர் மாருதி தொழிலாளர்கள். தாக்குதலை தாங்க முடியாத முதலாளிகள் அலறுகின்றார்கள். இவனது சொத்தையா தொழிலாளர்கள் கேட்டார்கள்? இல்லை. உரிமையை கேட்டார்கள் இதனை எந்த அரசாவது ஆதரித்ததா? இல்லை. பொதுதுறை, சில்லறை வணிகம், ஆலைகள், சாலைகள் என அனைத்தும் தனியாருக்கு விற்க்கப்படுகின்றது. யாரு சொத்தை யாரு விற்பது. அடுத்தவர் சொத்த ஆட்டைய போடுறவன் பொறுக்கி, நீ செய்யுற வேலை அதுதானே. இது மக்களுக்கான அரசா? முதலாளிக்கான அரசா?

மணப்பாறை மாட்டு சந்தையில் மடிய பாத்து விலைபேசுவான் அதுபோல முதலாளிகள் திடகாத்திரமான தொழிலாளிகளை மட்டும் வேலைக்கு எடுத்துக் கொள்கின்றனர். ரத்தத்தை உறிஞ்சி சக்கையாக தொழிலாளிகள் வெளியேற்றப் படுகின்றனர். நிரந்தர தொழிலாளி அப்ரன்டீஸ் தொழிலாளி, காண்ட்ராக்ட் தொழிலாளி அதிலும் மெயின் காண்ட்ராக்ட், சப்காண்ராக்ட் என விதவிதமாக சுரண்டப்படுகின்றனர். திருச்சி BHEL தொழிற்சாலையில் வெல்டிங் ராடுகளின் கதிர்வீச்சின் விளைவால் தொழிலாளிக்கு புற்றுநோய் வருவதற்கான அபாயம் உள்ளது என்பதை அம்பலப்படுத்தினால் உடனே சார்ஜ் சீட் கொடுக்கின்றார்கள். இப்படி தொழிலில் தங்களுடைய உரிமையை கேட்டால் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படுகின்றார்கள். நீதிமன்றத்துக்கு போனால் அங்கேயும் துரோகம் தான் இழைக்கப்படுகிறது. இப்படி தொழிலாளிகள் பிரச்சனை மட்டுமல்ல, விவசாயிகள், சிறுகடை வியாரிகள், நெசவாளர்கள் என அனைவரின் மீதும் மறுகாலனியாக்க தாக்குதல் தினிக்கப்படுகின்றது. இதற்கு எதிராக போராட வேண்டும். எதிரியின் சட்டையை கோத்து பிடித்து கேள்வி கேட்க வேண்டும். அதற்கான தைரியத்தை கொடுப்பது பு.ஜ.தொ.மு மட்டும் தான். அப்படிப்பட்ட நக்சல்பாரி அமைப்பில் அணிதிரள வேண்டும். அதுதான் மாருதி தொழிலாளிக்கு மட்டுமல்ல உழைக்கும் மக்கள் அனைவருக்குமான விடுதலையை பெற்று தரும் என தனது உரையை முடித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் இடை இடையே மாருதி சுசுகி நிறுவனத்திற்கு ஆதரவாக வேலை செய்யும் அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முதலாளித்துவ பயங்கரவாதத்தை விளக்கும் வகையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக்கலைக்குழு தோழர்கள் புரட்சிகர பாடல்கள் பாடினர். இது கூடியிருந்த மக்களுக்கு புரட்சிகர உணர்வையும் போராட வேண்டிய அவசியத்தையும் ஊட்டியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
செய்தி
: பு.ஜ.தொ.மு., திருச்சி.

சென்னை அம்பத்தூர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
: புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

தஞ்சாவூர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
: புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

முதலாளித்துவத்தின் சாதனை – டெட்ராய்ட் நகரம் திவால் !

20

மெரிக்காவின் வாகன உற்பத்தியின் சின்னமாகவும், மிகப் பெரிய பணக்கார நகரமாகவும் திகழ்ந்த டெட்ராய்ட் நகரம் தற்போது திவாலாகி விட்டிருக்கிறது. அகலமான சாலைகள், பிரம்மாண்டமான கட்டிடங்கள், மகத்தான அமெரிக்க கார் உற்பத்தி தொழிற்சாலைகள் என்று கொழித்த டெட்ராய்ட் நகரம் இன்று சோர்ந்து போய் முடங்கி கிடக்கிறது.

டெட்ராய்ட் சுவர்கள்
உதவி கேட்டு கதறும் டெட்ராய்ட் நகர சுவர்கள். படம் : நன்றி கார்டியன்.

டெட்ராய்ட், 20-ம் நூற்றாண்டில் உலகின் சாலைகளில் ஓடுவதற்காக விதவிதமான கார்களை இரவு பகல் பாராமல் உற்பத்தி செய்த நகரம். அமெரிக்காவிலேயே அதிக அளவு தனி நபர் வருமானம் கொண்ட நகரம் இன்று போரில் சீரழிந்த நகரம் போல் காட்சியளிக்கிறது. ஒரு காலத்தில் 20 லட்சமாக இருந்த மக்கள் தொகை இன்று வெறும் 7 லட்சமாக சுருங்கி விட்டது. சுமார் 78,000 கட்டிடங்கள் பாழடைந்து கிடக்கின்றன. வீதிகள் வெறிச்சோடி உள்ளன. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது; வீதிகளில் பாதிக்கும் அதிகமான தெருவிளக்குகள் எரிவதில்லை. 60 சதவீத ஆம்புலன்ஸ் சேவை முடங்கியுள்ளது, குற்றச் செயல்கள் நாட்டின் சராசரியை விட ஐந்து மடங்கு அதிகமாகியுள்ளன. போலீசை தொலைபேசியில் அழைத்தால் அவர்கள் உங்கள் அழைப்பை ஏற்கவே 1 மணி நேரம் ஆகிறது.

டெட்ராய்ட்டில் நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவோ, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வுதியம் கொடுக்கவோ நிதி இல்லை. நகரத்தின் கடன் சுமை 18 பில்லியன் டாலர்கள் (1 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய்) ஆகி விட்டது. மார்ச் மாதம், நெருக்கடிகளை சமாளிக்க இது போன்ற திவால் நிலைமையை சமாளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஸ்னைடர் அண்ட் கெவின் ஆரை நகர மேயர் நியமித்தார்.

அமெரிக்க பொருளாதார கோட்பாட்டின்படி டெட்ராய்ட் சுயேச்சையான நிதி ஆளுமை கொண்ட நகரம். நகரத்தின் நிதி தேவைகளை பெரும்பாலும், வரி, வாடகைகள், மூலம் ஈட்ட வேண்டும். அந்த அடிப்படையில் டெட்ராய்ட் நகரம் தொழில் ரீதியாக துடிப்பாக இருந்த காலத்தில் பணக்கார நகராட்சியாக இருந்தது. டெட்ராயிட்டின் பொருளாதாரம் அங்கு குவிந்திருந்த வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. அமெரிக்காவின் மிகப் பெரும் நிறுவனங்களான ஃபோர்ட், ஜெனரல் மோட்டார்ஸ், க்ரைஸ்லர் போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கின.

1970-களில் உலக முதலாளித்துவத்தை பீடித்த பொருளாதார சுணக்கத்தின் நடுவில் ஜப்பான், கொரியா ஜெர்மனி நாட்டு நிறுவனங்கள் அமெரிக்கா உள்ளிட்ட வாகனங்களுக்கான உலகச் சந்தையில் வெற்றிகரமாக நுழைந்தன. அடுத்த 20-30 ஆண்டுகளில் ஃபோர்ட், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் தமது உற்பத்தி தளங்களை மெக்சிகோ, சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு மாற்றி டெட்ராயிட்டில் இருந்த தொழிற்சாலைகளை இழுத்து மூடின. இதனால் டெட்ராய்ட்டில் வேலை வாய்ப்புகள் பெருமளவு குறைந்தன.

வேலை இல்லை, சம்பளம், இல்லை, அரசுக்கு வரி இல்லை, பொருட்கள் வாங்க காசு இல்லை, வங்கிகளில் போட பணமில்லை, வங்கிகள் காற்றாடின. அரசுக்கு நிதி வருவாய் குறைய தொடங்கியது. டெட்ராய்ட்டை முதலாளித்துவ பொருளாதாரம் படிப்படியாக கைவிட ஆரம்பித்தது.

கைவிடப்பட்ட ரயில் நிலையம்
பாழடைந்த ரயில் நிலையம் முன்பு உள்ள ஒரு வீட்டுச் சுவரில் படம் வரையும் ஓவியர்கள் (படம் : நன்றி கார்டியன்)

டெட்ராய்ட்டின் இந்த நிலைமைக்கு அங்கு தலைவரித்தாடும் ஊழலும் ஒரு காரணமென்று சிலர் கூறுகின்றனர். இதற்கு முன்பிருந்த மேயர் ஊழல் குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்டது அப்படித்தான் பெரிதாக்கப்படுகிறது. ஆனால், நகரத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் முதலாளித்துவத்தின் இயங்கு முறைதான் என்று தெளிவாக தெரியும் போது அதை ஊழல் நிர்வாகம் என்று சுருக்குவது அபத்தமானது; இது போன்று நகரங்களையும், ஊர்களையும் சுரண்டி கொழுத்து விட்டு அடுத்த இடத்துக்கு நகர்ந்து விடும் முதலாளிகளுக்கு முட்டுக் கொடுப்பது.

இப்பொழுது டெட்ராய்ட் அவசர நிலை பிரகடன்ம் செய்யப்பட்டது போல காட்சியளிக்கிறது. கடனை அடைக்கவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நிதி வெட்டப்பட்டுள்ளது. வருமான வரி உயர்த்தப்பட்டுள்ளது. பலர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

இதை பற்றி கருத்து தெரிவித்த நகராட்சி ஊழியர்கள் சங்கத் தலைவர் அல் கேரட்டி,”டெட்ராயிட் நகரத்தை மீண்டும் கட்டமைக்க ஆகும் செலவுகளை அப்பாவி தொழிலாளர்கள் மீது ஏற்றிவிட கூடாது” என்கிறார். ஆனால் முதலாளித்துவ நெருக்கடி நிலை மீட்சிக்கு வேறு வழி இல்லை. வரிகளை உயர்த்தி பணக்காரர்களை பகைத்துக் கொள்ள முடியாது அல்லவா?

வியாழக்கிழமை (ஜூலை 18-ம் தேதி) டெட்ராய்ட் நகராட்சி திவாலாகிவிட்டதாக அறிவிக்க கோரியும், அதற்கு மத்திய அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்று திவாலுக்கான மத்திய நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது டெட்ராயிட் நகராட்சி. ஆனால் நீதிமன்றம் மனுவை நிராகரித்துவிட்டது.

டெட்ராய்ட்டின் இந்த வீழ்ச்சி உலக மக்களுக்கு முதலாளித்துவ நடைமுறையை புரிய வைக்கும் ஒரு பாடம். உலகின் வாகன உற்பத்தியின் தலைமையிடமாக அறியப்பட்ட டெட்ராயிட்டிற்கே இந்த நிலை என்றால், துணித் துறையில் கொழித்த திருப்பூர் வீழ்ந்தது புரிந்து கொள்ளக் கூடியதே. இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று போற்றப்படும் பெங்களூருக்கும், பளபளக்கும் கட்டிடங்களால் நிரம்பி வழியும் சென்னையின் ஐடி காரிடாருக்கும் முதலாளித்துவம் தயாரித்துக் கொண்டிருக்கும் எதிர்காலம் என்ன என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

டெட்ராயிட்டின் இன்றைய நிலையை சற்றே கேலியாக விளக்கும் வீடியோ

– ஆதவன்

மோடியைக் காப்பாற்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மோசடிகள் – சதிகள் !

14

குஜராத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த முசுலீம் படுகொலையின்பொழுது மிகக்கொடூரமாகக் கொல்லப்பட்ட இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அவரது சக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேர் மீது சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்களை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, “நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரமோ, விசாரிக்கத்தக்க சாட்சியமோ இல்லாததால், அவர்கள் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்ய முடியாது” எனக் கடந்த ஆண்டு அகமதாபாத் விசாரணை நீதிமன்றத்திடம் அறிக்கை அளித்தது. இந்த அறிக்கைக்கு எதிரான மனுவொன்றை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஜாகியா ஜாஃப்ரி, “சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்; ஒரு சுதந்திரமான கமிசனை அமைத்து மோடி மீதான தனது குற்றச்சாட்டுகள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்” எனக் கோரியிருக்கிறார்.

ஜாகியா ஜாஃப்ரி, தீஸ்தா சேதல்வாத்
இந்து மதவெறி பயங்கரவாதி நரேந்திர மோடியைத் தண்டிக்கக் கோரிப் போராடி வரும் ஜாகியா ஜாஃப்ரி (நடுவில்) மற்றும் வழக்குரைஞர் தீஸ்தா சேதல்வாத் (இடது).

ஜாகியா ஜாஃப்ரி இந்த மனுவைத் தாக்கல் செய்தது கூட எளிதாக நடந்து விடவில்லை. சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது அறிக்கைகள்-சாட்சியங்கள் குறித்த ஆவணங்கள் உள்ளிட்டு அனைத்தையும் ஜாகியா ஜாஃப்ரிக்கு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டிருந்த போதும், அக்குழு இந்த உத்தரவை மதித்து நடக்கவில்லை. ஜாகியா ஜாஃப்ரி தனது அறிக்கைக்கு எதிராக எதிர் மனு தாக்கல் செய்வதைத் தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், அந்த ஆவணங்களை முழுமையாக அவருக்கு வழங்க மறுத்து வந்தது, சிறப்புப் புலனாய்வுக் குழு. ஜாகியா ஜாஃப்ரி இச்சட்டவிரோத அடாவடித்தனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வென்று, அதன் பிறகுதான் இந்த எதிர் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். சிறப்புப் புலனாய்வுக் குழு மோடியைக் காப்பாற்றுவதற்கு எத்துணை கீழ்த்தரமான வேலையிலும் இறங்கும் என்பதற்கு இது இன்னொரு சான்று.

நரேந்திர மோடி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை முழுமையாக விடுவித்துவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையை நடத்தி வந்தது என ஜாகியா ஜாஃப்ரி மட்டுமல்ல, குஜராத்தின் முன்னாள் போலீசு தலைமை இயக்குநர் ஆர்.பி. சிறீகுமார், மோடி அரசால் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அம்மாநில முன்னாள் உளவுத் துறை துணை ஆணையர் சஞ்சீவ் பட், குஜராத் முசுலீம் படுகொலை பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்திய தெகல்கா வார இதழ் நிருபர் ஆஷிஷ் கேதான் உள்ளிட்டுப் பலரும் அம்பலப்படுத்தியுள்ளனர். சிறப்புப் புலனாய்வுக் குழு இவ்விசாரணையின் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்திடம் அளித்த பொழுது, “விசாரணைக்கும் அதன் இறுதியில் வந்தடைந்த முடிவுகளுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை” என அந்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்ததோடு, இவ்வழக்கு விசாரணையைக் கண்காணிக்க ராஜு ராமச்சந்திரன் என்ற வழக்குரைஞரை நீதிமன்ற நண்பனாக (அமிகஸ் கியுரே) நியமித்தது.

மோடி மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்ய முகாந்திரமில்லை எனச் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை அளித்திருப்பதற்கு மாறாக, “மதக் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டிவிட்ட குற்றத்திற்காக மோடி மீது வழக்குத் தொடர முகாந்திரம் இருப்பதாக” அறிக்கை அளித்திருக்கிறார், ராஜு ராமச்சந்திரன். மேலும், மோடி பிப்.27, 2002 அன்று இரவு நடத்திய உயர் அதிகாரிகள் கூட்டத்தில், “இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக் கூடாது” எனக் கூறியது தொடர்பாக போலீசு அதிகாரி சஞ்சீவ் பட் அளித்திருக்கும் சாட்சியத்தைச் சிறப்புப் புலனாய்வுக் குழு நம்பகத்தன்மையற்றது எனக் கூறி ஒதுக்கிவிட்டது. ஆனால், “சஞ்சீவ் பட் சாட்சியத்தின் உண்மைத்தன்மையை நீதிமன்ற விசாரணையின் மூலம்தான் முடிவு செய்ய வேண்டும்” எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார், ராஜு ராமச்சந்திரன்.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என ஜாகியா ஜாஃப்ரி கோரியிருப்பதை இந்தப் பின்னணியிலிருந்துதான் புரிந்துகொள்ள வேண்டும். அவர், தனது எதிர் மனுவில் இணைத்துள்ள ஆதாரங்கள், குஜராத் முசுலீம் படுகொலைக்கான சதித் திட்டமும் ஆலோசனையும் கோத்ராவில் ரயில் பெட்டிகள் தீக்கிரையான செய்தி மோடிக்குத் தெரிந்த மறுநிமிடமே தொடங்கிவிட்டதை எடுத்துக் காட்டுகிறது; சிறப்புப் புலனாய்வுக் குழு மோடியின் கைத்தடியாகச் செயல்பட்டு வந்திருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.

நரேந்திர மோடி, ஜெய்தீப் படேல்
குஜராத் முசுலீம் படுகொலையின் சதிகாரர்கள் : நரேந்திர மோடி மற்றும் விசுவ இந்து பரிஷத்தின் குஜராத் மாநிலச் செயலர் ஜெய்தீப் படேல்

2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் குஜராத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ.க., தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்த வேளையில்தான் ஆர்.எஸ்.எஸ்.-இன் வளர்ப்புப் பிராணியான நரேந்திர மோடி குஜராத் முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டார். இத்தோல்விகளிலிருந்து மீள்வதற்கு முசுலீம்களுக்கு எதிரான இந்து மதவெறியைத் தூண்டிவிடும் கிரிமினல் நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எஸ். பரிவார் அமைப்புகள் அனைத்தும் அச்சமயத்தில் ஈடுபட்டு வந்தன. இந்த நேரத்தில்தான் சபர்மதி விரைவுவண்டியின் இரு பெட்டிகள் கோத்ரா ரயில் நிலையத்தில் தீக்கிரையாகின.

இந்தச் செய்தி அகமதாபாத்தை எட்டியவுடன், நரேந்திர மோடி உள்துறை அதிகாரிகளுக்கு அப்பால், அம்மாநில விசுவ இந்து பரிசத்தின் பொதுச் செயலர் ஜெய்தீப் படேலோடும் (தொலைபேசி வழியாக) உரையாடியிருக்கிறார். இந்த உரையாடல் ஒரு பெரும் சதித் திட்டத்தின் தொடக்கம் என்பதை பின்னால் நடந்த நிகழ்ச்சிகள் நிரூபிக்கின்றன.

கோத்ரா சம்பவம் குறித்து முறையான விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே, “இது பாகிஸ்தான் உதவியோடு முசுலீம்கள் நடத்திய திட்டமிட்ட சதிச் செயல்” எனச் சட்டசபையில் நாக்கூசாமல் அறிவித்த கையோடு கோத்ராவுக்குக் கிளம்பிச் சென்ற மோடி, தீக்கிரையாகி இறந்துபோன கரசேவகர்கள் மற்றும் பிறரின் உடல்களைச் சட்டத்திற்குப் புறம்பாக வெட்டவெளியில், ஆர்.எஸ்.எஸ். குண்டர்களின் கண்முன்பாக, பிரேதப் பரிசோதனை நடத்திட உத்தரவிட்டார். ஒருபுறம் பிரேதப் பரிசோதனை நடந்துகொண்டிருக்க, இன்னொருபுறம் அமைச்சரவைக் கூட்டம் என்ற பெயரில் சதியாலோசனைக் கூட்டமும் நடந்தது. மோடியோடு பேசி வைத்திருந்தபடி கோத்ராவுக்கு வந்திருந்த ஜெய்தீப் படேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதே, இது கலவரத்தைத் தூண்டிவிடுவதற்காக நடத்தப்பட்ட கூட்டம்தான் என்பதை நிரூபிக்கிறது. இக்கூட்டத்தில் இறந்து போனவர்களின் உடலை ஜெய்தீப் படேலிடம் ஒப்படைக்கவும், அவர் அச்சடலங்களை கோத்ராவிலிருந்து 300 கி.மீட்டருக்கு அப்பாலுள்ள அகமதாபாத்திற்குச் சாலை வழியாக எடுத்துச் செல்லவும் அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

அரசைச் சாராத வெளிநபரும் இந்து மதவெறி பயங்கரவாதியுமான ஜெய்தீப் படேலிடம் சடலங்களை ஒப்படைக்கும் முடிவை கோத்ரா மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயந்தி ரவி எதிர்த்த போதும், மோடி இச்சட்டவிரோத முடிவை நடைமுறைப்படுத்தினார். சடலங்களைச் சாலை வழியாக ஊர்வலமாக எடுத்துவருவதன் மூலம் இந்து மதவெறியைக் கொழுந்துவிட்டு எரியச் செய்ய முடியும் என்பதுதான் மோடியின் கணக்கு. அன்றிரவே அகமதாபாத் திரும்பிய நரேந்திர மோடி உயர் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, “இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிக்காட்டுவதைத் தடுக்கக் கூடாது” என்றும் கட்டளையிட்டார். கூட்டக் குறிப்புகள் பதிவு செய்யப்படாமல், தந்திரமாகவும் சதித்தனமாகவும் நடத்தி முடிக்கப்பட்ட இக்கூட்டத்தின் மூலம் இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும் என்பது வெளிப்படையாக, அதேசமயம் சட்டவிரோதமான முறையில் உறுதி செய்யப்பட்டது.

12-cartoonஇதற்கு மறுநாள் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மாநிலம் தழுவிய அடைப்புப் போராட்டத்தை, மோடி அரசின் முழு ஆசியோடு அறிவித்து நடத்தின. அன்று ஜெய்தீப் படேல் நரோடா காவ் தாக்குதலைத் தலைமையேற்று நடத்தினான்; மோடி அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இருந்த மாயாபென் கோத்நானி நரோடா பாட்டியா தாக்குதலைத் தலைமையேற்று நடத்தினார்.

ஏறத்தாழ ஒரு மாத காலத்திற்கு மேலாக நடந்த குஜராத் முசுலீம் படுகொலையின் தொடக்கம் இப்படித்தான் அமைந்தது. ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவோ கோத்ரா ரயில் பெட்டி தீக்கிரையான பிப்.27 மற்றும் நரோடா காவ், நரோடா பாட்டியா படுகொலைகள் நடந்த பிப்.28 ஆகிய இரு தினங்களிலும் மோடிக்கும் ஜெய்தீப் படேலுக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் குறித்து விசாரிப்பதை வேண்டுமென்றே தவிர்த்து விட்டது. “இறந்து போனவர்களின் சடலங்களை ஜெய்தீப் படேலிடம் ஒப்படைக்கும் முடிவை, மோடி எடுக்கவில்லை; மாஜிஸ்ட்ரேட் ஒருவர்தான் எடுத்தார்” எனச் சட்ட பாயிண்டுகளைக் காட்டி, மதவெறியையும், கலவரத்தையும் தூண்டிவிட்ட குற்றச்சாட்டிலிருந்து மோடியை நயவஞ்சகமாகத் தப்பவைத்தது. பிப்.27 அன்று இரவில் மோடி அதிகாரிகள் கூட்டத்தை நடத்தியதற்கான ஆதாரம் எதுவுமில்லை எனக் கூறி மோடியைச் சதிக் குற்றச்சாட்டிலிருந்தும் தப்ப வைத்துவிட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக, கோத்ராவில் தீக்கிரையாகி இறந்து போனவர்களின் சடலங்கள் அகமதாபாத்திற்கு எடுத்து வரப்பட்டு எரியூட்டப்பட்ட அன்று, அதே நாளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் மாநிலம் தழுவிய பந்த் நடத்தியபொழுது, குஜராத் மாநிலம் முழுவதும் எவ்வித வன்முறையுமின்றி அமைதியாக இருந்ததென்று அறிக்கை அளித்திருக்கிறது. இதன் மூலம் அப்படுகொலைகள் திட்டமிட்ட முறையில் தூண்டிவிடப்பட்டோ, அரசின் ஒத்துழைப்போடோ நடத்தப்படவில்லை; மாறாக, அவை இந்துக்களின் தன்னெழுச்சியான ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் எனக் காட்ட முனைந்திருக்கிறது. ஆனால், அந்த இரு நாட்களிலும் எதார்த்த நிலைமை குறித்து உளவுத் துறை போலீசார் அனுப்பிய செய்திகளே சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மோசடித்தனத்தை அம்பலப்படுத்துகின்றன.

  • சடலங்கள் அகமதாபாத்திற்குக் கொண்டுவரப்படும் செய்தியைக் கேள்விப்படும் ஒரு உளவு அதிகாரி, தனது மேலதிகாரிக்கு பிப்.27 அன்று மதியம் அனுப்பிய தந்திச் செய்தியில், “அகமதாபாத்தில் மதக் கலவரம் நடக்கும்; எனவே, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • ஜெய்தீப் படேல், கௌசிக் மேத்தா, திலீப் திரிவேதி உள்ளிட்ட விசுவ இந்து பரிஷத்  தலைவர்கள், “கோத்ராவில் இந்துப் பெண்கள் மானபங்கபடுத்தப்பட்டதாக” வதந்தியைப் பரப்பி மதவெறியைத் தூண்டிவருவதாகவும்; வாபி, பாவ்நகர், கேத்பிரம்மா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முசுலீம் எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருவதாகவும்; “இரத்தத்துக்குப் பதில் இரத்தம்” என ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொலைவெறியோடு தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்துவருவதாகவும் உளவுத் துறை அனுப்பிய தந்திச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
  • அகமதாபாத்தில் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த சோலா சிவில் மருத்துவமனையிலிருந்து பிப்.28 அதிகாலை முதல் அனுப்பப்பட்ட ஒவ்வொரு தந்திச் செய்தியும், அம்மருத்துவமனை 3,000-க்கும் அதிகமான இந்து மதவெறிக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டு நிலைமை கட்டுக்கு அடங்காமல் போவதைக் குறிப்பிடுவதோடு, மருத்துவமனைக்கு சிறப்பு போலீசு படையை அனுப்புமாறும் கோருகிறது. அம்மருத்துவமனையிலிருந்து இறுதியாக அனுப்பப்பட்ட தந்திச் செய்தி, அப்பகுதியில் கலவரம் வெடித்துவிட்டதாகக் குறிப்பிடுகிறது.
  • சபர்கந்தா மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட தந்திச் செய்தி, கேத்பிரம்மா ஊரில் நடந்த சவ அடக்க ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டு, இரண்டு முசுலீம்கள் கத்தியால் குத்தப்பட்டதைக் குறிப்பிடுகிறது.

அகமதாபாத் நகர போலீசு கட்டுப்பாடு அறையிலிருந்தும், மாநில முழுவதுமுள்ள பல்வேறு போலீசு நிலையங்களிலிருந்தும் அந்த இரண்டு நாட்களில் இவை போன்று நூற்றுக்கணக்கான தந்திச் செய்திகள் போலீசு தலைமை அலுவலகத்திற்கும், உள்துறை அமைச்சரான மோடிக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. மோடி அரசோ முசுலீம்களுக்கு எதிரான படுகொலையைத் தொடர்ந்து நடத்தும் திட்டப்படி செயல்பட்டு வந்ததால், இந்தத் தந்திகளில் பெரும்பாலானவற்றை அழித்து, ஆதாரமில்லாமல் செய்தது. சிறப்புப் புலனாய்வுக் குழுவோ தனது கைக்குக் கிடைத்த மிச்சம் மீதி தந்திச் செய்திகளிலிருந்து உண்மையைக் கண்டறிய மறுத்து, மோடியைக் காப்பாற்றியது.

குஜராத் முசுலீம் படுகொலைக்கும் மோடிக்கும் தொடர்புண்டு என்பதை நிரூபிப்பதற்கு சாட்சியங்களையும் ஆதாரங்களையும் கேட்பது கைப்புண்ணைப் பார்க்க கண்ணாடி கொண்டு வரச் சொல்வதைப் போன்றது. எனினும், போதுமான ஆதாரங்களைத் திரட்டிக் கொடுத்த பிறகும் மோடியின் மீது ஒரு பெட்டி கேஸைப் போடுவதற்குக் கூட இந்திய நீதிமன்றங்கள் தயாராக இல்லை. தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்படும் அப்பாவி முசுலீம்களை எவ்வித ஆதாரமும் இன்றித் தூக்கு மேடைக்கு அனுப்பத் தயங்காத இந்திய நீதிமன்றங்கள், மோடிக்கு அளித்துவரும் இந்தச் சலுகை அநீதியானது. ஊழலோ, அதிகார முறைகேடுகளோ அம்பலமாகும் பொழுது அதில் சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் என சவுண்டு விடும் மேல்தட்டு பார்ப்பனக் கும்பலும் அவர்களின் ஊதுகுழல்களான தேசியப் பத்திரிகைகளும் இத்துணை கொடூரமான, பெருந்திரள் படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய மோடியைப் பிரதமர் நாற்காலியில் அமர்த்தி அழகு பார்க்கத் துடிக்கின்றன.

இத்தகைய அநீதியும் போலித்தனமும் ஓரவஞ்சனையும் நிறைந்த இந்த அரசியல் அமைப்பிற்குள், முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியல் மைய நீரோட்டமாக மாறியுள்ள நிலையில் மோடியைத் தண்டித்துவிட முடியும் என நம்பிக்கை கொள்ள முடியுமா? ஆனாலும், இவற்றை எதிர்கொண்டுதான் ஜாகியா ஜாஃப்ரி போராடி வருகிறார். இத்தகைய போராட்டம் இல்லையென்றால், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல் குஜராத் படுகொலைக்கு என்றோ மங்களம் பாடியிருக்கும்.

– செல்வம்.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________

இங்கிலாந்து கிளாக்ஸோ மருந்து கம்பெனியின் சீன ஊழல் !

5

ங்கிலாந்தைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனமான கிளேக்ஸோ ஸ்மித் கிளைன் (ஜிஎஸ்கே) பயண முகவர்கள் (டிராவல் ஏஜன்சிகள்) உதவியுடன் மருத்துவர்களுக்கு சீனாவில் சுமார் 500 மில்லியன் டாலர்கள் (3,000 கோடி ரூபாய்) லஞ்சம் கொடுத்திருப்பது அம்பலமாகி உள்ளது.

உலகின் மிக முக்கிய மருந்து தயாரிக்கும் நிறுவனமான கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் வருடத்திற்கு சுமார் ஆண்டுக்கு 4.7 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் நிறுவனம். உலகம் முழுவதிலும் பரந்து விரிந்து கிடக்கும் இந்த நிறுவனத்திற்கு சீனாவில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள், மருத்துவ ஆய்வுக் கூடங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனத்திற்கான போக்குவரத்துச் சேவையை பல்வேறு சீன பயணச் சேவை நிறுவனங்கள் வழங்குகிறார்கள்.

ஜிஎஸ்கே - ஷாங்காய்
ஷாங்காயில் உள்ள கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் ஆராய்ச்சி மையம்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் பல்வேறு பயண முகவர்களை கண்காணித்ததில், அளவுக்கு அதிகமாக வரவு வருவதும், அதற்கு நிகரான பயணச் சீட்டுக்கள் விற்கப்படாமல் இருப்பதையும் சீன பொருளாதார குற்றவியல் துறை கண்டுபிடித்தது. குவா ஃபெங் எனும் அதிகாரி தலைமையில் நடந்த விசாரணையில், பல்வேறு பயண முகவர் நிறுவனங்கள் ஜிஎஸ்கேவிற்கு உதவியாக லஞ்ச ஊழலில் ஈடுபடுவதை கண்டுபிடித்தார்.

ஜிஎஸ்கே நிறுவனம் அதிக லாபம் ஈட்டவும், அதிக விலையில் தன் மருந்துகளை விற்கவும், சீனாவில் உள்ள மருத்துவர்கள், மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு லஞ்சம் வழங்கியுள்ளது. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கே உரிய கச்சித ஒழுங்கு முறையில் சீனா முழுவதும் லஞ்சம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரிதும் உதவியது பயண முகவர்கள் தான்.

ஜிஎஸ்கே மருந்துகளை அதிகம் பரிந்துரைக்கும் மருத்துவருக்கு சாதாரண செமினார்களுக்கு அதிக பணம் வழங்குவது, டம்மி மருத்துவ மாநாடுகள், கூட்டங்கள் நடத்தி அதிக பணம் வழங்குவது, 60 பேர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு 100 பேர் கலந்து கொண்டார்கள் என கணக்கு காட்டி ஜிஎஸ்கேவிடமிருந்து பணத்தை பெற்று குறிப்பிட்ட மருத்துவர்களின் கடன் அட்டைகளுக்கு லஞ்ச பணத்தை செலுத்திவிடுவது என நேர்த்தியாக லஞ்சத்தை விநியோகித்துள்ளனர்.

இவற்றை கண்காணித்து கண்டுபிடித்துள்ள குவா ஃபெங் இதை பற்றி விளக்குகையில் “குற்றங்களுக்கான கும்பல்களுக்கு ஒரு பாஸ் இருப்பான், மருத்துவ லஞ்ச ஊழலுக்கு ஜிஎஸ்கே தான் பாஸ்” என குறிப்பிடுகிறார். ஜிஎஸ்கேவின் இந்த ஊழலை மாஃபிய கும்பலுடன் உவமைப் படுத்துவது சரியானதே.

மக்களின் அத்தியவசிய மருந்துகள், மிகவும் கொடிய நோய்களுக்கான மருந்துகளை தயாரிக்கும் ஜிஎஸ்கே சந்தையில் சக போட்டியாளர்களை மிஞ்சவும், அதிக லாபமீட்டவும், மருந்துகளின் விலையை கூட்டி லாபம் பார்க்கவும் செயற்கை தேவையை உருவாக்க லஞ்சப் பணத்தை வாரி இறைத்துள்ளது. 120 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் சீனாவின் மிகப்பெரும் சந்தையை தன் வசம் கைப்பற்றுவதற்கான போட்டியில் ஜிஎஸ்கேவின் இந்த நடவடிக்கைகள் அம்பலப்பட்டிருக்கின்றன.

ஆனால் ஜிஎஸ்கேவின் லாப வேட்டை சீன அரசின் இன்னொரு பயத்தால் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகவே உயர்ந்து வரும் பால் சம்பந்தமான பொருட்களின் விலையைப் பற்றி ஒரு ஊழல் சமீபத்தில் மக்கள் முன் அம்பலமாகியது. பல்வேறு பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ரகசியமாக தமக்குள் கூட்டணி அமைத்து விலையை முடிவு செய்வது (Price Fixing) வெளிவந்தது. இதன்படி விலை கூடலாம் ஆனால் குறைந்த பட்ச விலை இவ்வளவு தான் இருக்கும் என தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் முடிவு செய்து கொள்கின்றன.

இதனால் பால் பொருட்களின் விலை கணிசமாக உயர மக்கள் அதிருப்தி அடைந்தனர். மக்களின் அதிருப்தி போரட்டமாக வெடிக்கும் சூழ்நிலை வரவே சுதாரித்த அரசு பல்வேறு நிறுவனங்களை கண்காணிக்கத் தொடங்கியது. சந்தை விலையேற்றங்களை கண்காணித்து விலைவாசியை கட்டுப்பாட்டில் வைக்க முடிவு செய்தது. அந்த கண்காணிப்பின் விளைவாகத்தான் ஜிஎஸ்கேவின் இந்த ஊழல் அம்பலமாகியுள்ளது. ஜிஎஸ்கே நிறுவனத்தை சேர்ந்த முக்கிய மேளாலர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் முக்கிய முதன்மை அலுவலர் மார்க் ரெய்லி கடந்த மாதம் 27-ம் தேதி சீனாவை விட்டு வெளியேறியுள்ளார்.

இதைப் பற்றி ஜிஎஸ்கேவின் தலைமையகம் அவசர அவசரமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, “நாங்கள் ஏற்கனவே சீன நிறுவனத்தில் தனிப்பட்ட முறையில் ஒரு விசாரணையை நடத்தினோம் அதில் இந்த லஞ்ச ஊழல் பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. அதனால் சீனாவின் மேலாளர்கள் குற்றமற்றவர்கள். நாங்கள் நேர்மையானவர்கள். இருந்தும் எங்கள் நிறுவனம் சீன அரசின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்” என தெரிவித்துள்ளது.

மறுபுறம் ஏற்கனேவே சீனாவில் போய் தோல்வி முகம் கண்டு வரும் இந்திய மருந்து தயாரிக்கும் நிறுவனக்களுக்கு ஜிஎஸ்கேவின் சந்தை இழப்பு நல்ல எதிர்காலத்தை கொடுக்குமா என இந்திய முதலாளிகள் தம் பகல் கனவை கான ஆரம்பித்துவிட்டனர்.

சுதந்திரச் சந்தையில் பல்வேறு போட்டியாளர்கள் உற்பதியில் ஈடுபடுவார்கள், உற்பத்தி அதிகமானால் விலை குறையும், உற்பத்தி குறைந்தால் விலை ஏறும், இதனால் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதுடன் ’போட்டி’ புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் என்று முதலாளித்துவத்தின் போற்றி பாடுபவர்களுக்கு, இன்றைய நடைமுறையில் விரல் விட்டு எண்ணக் கூடிய பன்னாட்டு பெருநிறுவனங்கள் ஒவ்வொரு துறையிலும் தமது ஏக போகத்தை நிலைநாட்டி மக்களை சுரண்டுகின்றன என்பதை இந்த சம்பவம் மூலம் நாம் குட்டி காட்ட விரும்புகிறோம்.

செயற்கை பற்றாக்குறை ஏற்படுத்துவது, அதற்காக உற்பத்தி செய்ததை அழிப்பது, லஞ்ச ஊழல்கள் உட்பட எதையும் செய்து செயற்கையாக தேவையை பெருக்குவது, இப்படித் தான் லாபத்தை மையமாக வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன, அது போலத் தான் ஜிஎஸ்கே செயல்பட்டிருக்கிறது.

இது ஒன்றும் புதிதல்ல, தனி இயல்பிலானதும் அல்ல. இப்படி மாட்டிக்கொள்வதும் பின்பு இவை மூடி மறைக்கப்படுவதும் இயல்பானது தான். சீன அரசு மக்களுக்கு பயந்து சில நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் முதலாளித்துவத்தின் முதுகெலும்பாக உள்ள மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்வதை தடுக்க முடியாது.

மேலும் படிக்க

மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவு : ஓசூர் தொழிலாளர்கள் கைது !

4

மானேசர் முதல் ஓசூர் வரை போலீசு ஆட்சி! பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆட்சி!

ரண்டாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால், மானேசரில் ஒரு பன்னாட்டுக் கம்பெனியான மாருதி, அரியானா அரசு, போலீசு ஆகியன தொழிலாளர்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறைகளுக்கு எதிராக, தமிழகத்தில் ஒரு ஆதரவு குரல்கூட ஒலிக்கக் கூடாது என்று இந்திய அரசு மட்டுமல்ல, தமிழக அரசும் குறியாய் இருந்தது.

“ஜூலை 18 – மாருதி நிறுவனத்திற்கு எதிராக தொடர்கிறது தொழிலாளர் போராட்டம்!
போராடும் மாருதி தொழிலாளர்களுக்குத் தோள் கொடுப்போம்!”

என்ற தலைப்பின் கீழ் ஜூலை 18ம் தேதியன்று புரட்சிகர அமைப்புகளான ம.க.இ.க., வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., பெ.வி.மு. அமைப்புகள் தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தன. அதன் ஒருபகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புகள் சார்பில் தொழில்நகரமான ஓசூரில் பேரணி, ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஒட்டி நகரம் முழுவதும் மூன்று நாட்களாக பிரச்சாரம் செய்திருந்தனர்.

திங்களன்று பேரணி, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளித்த போலீசு, 17ம்தேதி மாலை அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. இந்நிலையில், ஜூலை 18ம் தேதி மாலை 5 மணிக்கு ஒசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். டி.எஸ்.பி.தலைமையில் ஒரு போலீசு படை! நகர போலீசு நிலைய ஆய்வாளர் தலைமையில் ஒரு போலீசு படை, உளவுப்பிரிவுப் போலீசு படை எனப் பெரும்படைகள் பேருந்து நிலையத்தில் குவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு இங்கு ஏதோ நடக்கக் கூடாத ஒரு சம்பவம் நடக்க இருப்பது போல ஒரு பீதியை போலீசு உருவாக்கியது.

போலீசின் தடையை மீறி அங்கே குவிந்த பு.ஜ.தொ.மு., வி.வி.மு. தோழர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சங்கர் தலைமையில் விண்ணதிரும் முழக்கங்களுடன் செங்கொடிகளை உயர்த்திப் பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்து முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திபுதிபுவென ஓடிவந்த போலீசுக் கும்பல் ஏதோ கலவரத்தில் ஈடுபட முயற்சித்தவர்களை சுற்றி வளைப்பது போல தோழர்களைச் சுற்றி வளைத்து கைது செய்தது போலீசு. பரபரப்பான சூழலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி பார்க்கும் வகையில், மாருதி தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவாக புரட்சிகர அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம் போராடும் தொழிலாளர்களுக்கு புரட்சிகர அமைப்புகள்தான் பாதுகாப்பு என்பதை உணர்த்தும் வகையில் இருந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தொழில்நகரமான ஓசூரிலும் மானேசர் போன்ற அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் லேலாண்டு தொழிலாளர்கள் மீது அவ்வாலை நிர்வாகம் பல கொடிய தாக்குதல்களை தொடுத்து 562 பேர் இடமாற்றம், 128 பேர் ஓராண்டுக்கு முன்னதாகக் ‘கட்டாய ஓய்வு‘ என்ற வகையில் அடக்குமுறை செலுத்தி வருகிறது. கமாஸ் வெக்ட்ரா ஆலையில் சங்க நிர்வாகிகள் இடைநீக்கம், தொழிலாளர்கள் வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் என்பது நடக்கிறது. டெனிக்கோ, ராஜ்சிரியா போன்ற ஆலைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குக் கூட இருமாதங்களாக ஊதியம் கொடுக்காமல் இழுத்தடித்து வருகின்றன. இப்படி பல ஆலைகளில் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுவது அதிகரித்துள்ள நிலையில் தொழிலாளர்கள் மாருதி தொழிலாளர் போல ஒசூர் தொழிலாளர்கள் போராட வேண்டும். இந்திய தொழிலாளர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் நடந்த மாருதி தொழிலாளர் போராட்டம் போல ஓசூரிலும் தொழிலாளர் ஒற்றுமையை வளர்த்தெடுக்க வேண்டும்! உரிமைகளை மீட்க போராட வேண்டும்!

அதே வேளையில், ஓசூரிலும் மானேசர் போல தொழிலாளர்களின் ஜனநாயாக உரிமைகள் பறிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. போலீசு ஆட்சி என்பது மாதம் முழுவதும் அமுல்படுத்தப்படுகிறது. சாதாரண ஊர்வலம், உண்ணாவிரதம் கூட தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகிறது. தொழிற்சங்க புரோக்கர்கள், மாஃபியாக்கள், முதலாளிகளின் எடுபிடிகளான எம்.எல்.ஏ.க்கள் இவர்களுக்கு மட்டும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகத்தான் 2300 மாருதி தொழிலாளர்களுக்கு வேலைகொடுக்கக் கோரியும், 147 மாருதி சங்க நிர்வாகிகளை விடுதலை செய்யக் கோரியும் பு.ஜ.தொ.மு., வி.வி.மு. நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடையைமீறி ஆர்ப்பாட்டம் செய்த தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உரிமைக்கான போராட்டம் என்ற வகையில் கூட போலீசு இதனை பார்க்க மறுக்கிறது. காரணம், மாருதி தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள் பன்னாட்டுக் கம்பெனிகளின் மூலம் செலுத்தப்படுகிறது. தனியார்மயம், தாராளமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையின் விளைவு! இந்த நாட்டின் புதிய மனுதர்மமான மறுகாலனியாக்கத்தைக் கேள்விக்கேட்க யாருக்கும் உரிமையில்லை என்பதை இந்த கைது நிரூபித்துள்ளது.

நெய்வேலி அனல் மின்நிலையத்தின் 5% பங்குகளை விற்கும் விசயத்தில், நெய்வேலி தொழிலாளர் கோரிக்கைக்காக குரல்கொடுப்பது போலவும், தனியார்மயத்திற்கு எதிராகக் குரல்கொடுப்பது போலவும் நாடகமாடும் ஜெயா அரசின் இந்த கைது நடவடிக்கை என்பது, ஜெயா அரசு தொழிலாளர் உரிமைகளை மிதிக்கின்ற பாசிச அரசு, பன்னாட்டுக் கம்பெனிகளின் ஏவல் அரசு என்பதை தோலுரித்துக் காட்டியுள்ளது.

ஆகையால், குறைந்த பட்ச உரிமைகளைத் தொழிலாளர் வர்க்கம் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் பன்னாடுக் கம்பெனிகளின் ஆட்சிக்கு பாதுகாவலாக நிற்கும் அரசை எதிர்க்காமல் வெற்றிபெற முடியாது!

ஓங்குக தொழிலாளர் வர்க்க ஒற்றுமை! வெல்லட்டும் மாருதி தொழிலாளர் போராட்டம்! வீழட்டும் முதலாளித்துவப் பயங்கரவாதம்!

————————————————————————————————-

ஆங்கில பத்திரிகைச் செய்தி

18.07.2013, hosur.

18 Arrested Supporting The “Manesar Chalo”!

Under the slogans of

  • Give Job for 2300 workers who were terminated by Maruthi Suzuki Management!
  • Release 147 office bearers of the Union!
  • Let us Support Maruthi Suzuki Worker`s struggle – July 18 -Manesar Chalo!
  • Let us Smash Capitalist terrorism!

revolutionary organization like People’s Art Literary Association, New Democratic Labour Front, Peasants Liberation Front, Revolutionary Student And Youth Front and Women’s Liberation Front announced a Statewide movement in Tamilnadu. Under this movement we planned to make procession and demo in all district head quarters. On the part of this movement, the organizations NDLF, PLF which are functioning in Krishnagiri District, announces demo and procession in Hosur an industrial town near Bangaloru. The Hosur police withdrew the permission for the procession and demo. But the organizations were already made wide propaganda among the workers for support the procession and demo through thousands of pamphlets and posters in Hosur.

On July 18th, evening 5 pm the comrades of NDLF and PLF started demo in front of the Municipal office near Hosur bus stand with a large amount of red flags and banners which attracted the people. By the name of law and order, a huge police force under the leaders ship of DSP, Hosur, arrested 18 comrades and a child. This demo and arrest made a faith among the suppressed workers in Hosur.

Arrested comrades in police custody!

Com.Parsuraman, District President, NDLF, Hosur, delivered speech among the arrested comrades in police custody!

Content of the pamphlet :

  • Give Job for 2300 workers!
  • Release 147 office bearers of Union!
  • Let us Support Maruthi Workers struggle – July 18 -Manesar chalo!
  • Let us Smash Capitalist terrorism!

State wide Movement – Procession and demo in all district head quarters

Procession and demo at Hosur
July 18 – evening 5 pm Procession form taluk office, Hosur
Demo at Near Municipal office, Hosur.
—–

People’s Art Literary Association
New Democratic Labour Front
Peasants Liberation Front
Revolutionary Student And Youth Front
Women’s Liberation Front
Tamilnadu.

Dear Workers and Working People!

147 Maruthi workers of Manesar plant in Haryana and including all trade unionists were arrested for the struggle against the corporate oppressions of Maruthi company in July last year. 66 of them are still under non bailable arrest warrants. Not even a single bail has been granted to them in the entire period of last year.

18th July will mark a year of this struggle against exploitation, repression and corporate terrorism. 147 frontline-workers have been detained in Gurgaon jail. Lower court and high court had refused to grant bail for them. And, State refuses to investigate about the murder of Avinash Dev who was a supporter of the workers. Not only the Management of Maruthi have painted the workers as criminals and terrorists, but also the media.

2300 workers have been terminated and also their family members been thrown onto the street without reason. The workers who suffer have not been allowed to hold rally, demonstration and even mere pamphlet distribution in the industrial area of Manesar.

Maruti Suzuki Workers Union’s general body meeting on 23rd June 2013, decided to call of “Manesar Chalo” on this 18th July, indefinite sit-in demonstration and hunger strike. The continuous campaign is being conducted by them for this movement.

The MNC`s like Maruthi Suzuki don’t respect the fundamental rights of the workers to join a union. If the workers struggle against this, the State crushes the struggle and protects the foreign capital which exploits and oppresses them. The capitalist media justify the oppression by accusing the workers that they get involved in violence.

To defeat this Capitalist Terrorism, during this Re-colonization called as Privatization-Liberalization situation which is extremely exploiting and oppressing the working people of the whole country, the unity of working class and all other sections of working people are the important and immediate necessity.

To take this struggle forward and to support the Maruti workers who realized all the oppressions on their own and struggled legally, is the duty of the working class. The duty of ours!

———————————–
செய்தி
: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஓசூர்.
தொடர்பு எண்: 97880 11784.

சட்டத்தின் ஆட்சியா ? வர்க்கத்தின் ஆட்சியா ?

4

டந்த மே மாதம் 23-ஆம் தேதி அதிகாலையில் எம்.பி. குழும நிறுவனத்தின் குலக்கொழுந்து ஷாஜி புருஷோத்தமன் குடிபோதையில் காரை அதிவேகமாகவும் தாறுமாறாகவும் சென்னை – எழும்பூர் பாந்தியன் சாலையில் ஓட்டிவந்து, நடைபாதையோரமாகத் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது ஏற்றியதில் சிக்கிக் கொண்ட சிறுவன் முனிராஜ் மறுநாள் காலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனான். அச்சிறுவனின் உடம்பில் கார் ஏறி இறங்கியதில் அவனது இடுப்புப் பகுதி முறிந்து போய், உள்ளுறுப்புகளும் சிதைந்து போயிருந்தன.

முனிராஜ்
ஷாஜியின் கார் ஏறி இறங்கியதில் கொல்லப்பட்ட சிறுவன் முனிராஜ்; மகனை இழந்து வாடும் பெற்றோர் தியாகு மற்றும் மாலினி.

இது எதிர்பாராதவிதமாக நேர்ந்துவிட்ட சாலை விபத்தல்ல; நண்பர்களோடு சேர்ந்து குடித்து கும்மாளமடித்துவிட்டு, தலைக்கேறிய போதையோடு ஒருவித வெறித்தனமான இன்பத்தை அனுபவிப்பதற்காக நெடுஞ்சாலைகளில் தமது சொகுசுக் காரை அதிவேகமாகவும் தாறுமாறாகவும் ஓட்டிக் கொண்டு போகும் மேட்டுக்குடி கும்பலின் பொறுக்கி கலாச்சாரத்தில் ஊறிப்போன தறுதலை செய்திருக்கும் படுகொலை இது.

இதில் சிக்கிய முனிராஜின் அத்தை மகள் சுபரஷிதா என்ற சிறுமிக்குத் தலைக்காயம் ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவளின் வலது தோள்பட்டை மற்றும் வலது கையின் பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதோடு, வலது கை முட்டிப் பகுதி முற்றிலுமாகச் சிதைந்து போவிட்டது. தற்பொழுது மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் இச்சிறுமியின் வலது கை பழைய நிலைக்குத் திரும்பாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். முனிராஜின் தம்பி வாசு நல்வாய்ப்பாக சிறு காயங்களோடு தப்பிவிட்டான். இவர்கள் தவிர, அந்தப் பேருந்து நிறுத்தத்தில் விளம்பரப் பலகைகளைப் பொருத்திக் கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்களையும் ஷாஜியின் கார் அடித்துத் தூக்கி எறிந்தது. இந்த இருவரில் ஒருவருக்குப் பலமான காயம் ஏற்பட்டு, அவர் பல நாட்கள் உள்நோயாளியாக மருத்துவ சிகிச்சை எடுக்க நேரிட்டது.

கொல்லப்பட்ட முனிராஜும், படுகாயமடைந்துள்ள சுபரஷிதாவும் ஏழைகள்; சாதாரண ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பென்ஸ் இரக சொகுசுக் காரை ஓட்டி வந்த தறுதலை ஷாஜி புருஷோத்தமன் வருடத்திற்கு 2,000 கோடி ரூபாய் வருமானம் வரத்தக்க மிகப்பெரும் தரகு முதலாளித்துவ குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு. அதனாலேயே சென்னை போலீசு வழக்கைப் பதிவு செய்தது தொடங்கி ஷாஜியைக் கைது செய்தது முடிய அனைத்து நிலைகளிலும் வர்க்கப் பாசத்தோடு நடந்து கொண்டது.

ஷாஜி ஓட்டி வந்த கார் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது ஏறி இறங்கி ஓரு ஆட்டோவில் மோதி நின்றவுடனேயே, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காரினுள் போதையோடு இருந்த ஷாஜி உள்ளிட்ட நால்வரையும் வெளியே இழுத்துப் போட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்; ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த ஷாஜியை ரமேஷ் என்பவர்தான் வெளியே இழுத்துப் போட்டிருக்கிறார்.

இத்துணை நேரடி சாட்சியங்கள் இருந்தபோதும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசு ஆய்வாளர் ரவிச்சந்திரன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நால்வரில், ஷாஜியையும் அவனது இரண்டு நெருக்கமான நண்பர்களையும் விருந்தினர்களைப் போல வழியனுப்பி வைத்துவிட்டு, ஷாஜியோடு காரில் பயணம் செய் குமாரை ஷாஜி வீட்டு கார் ஓட்டுநராகக் காட்டி, அவர் மீது பிணையில் வெளியே வரத்தக்க ஒரு வழக்கைப் பதிவு செய்து, சிறையில் அடைத்தார்.

ஷாஜி
கொச்சி விமான நிலையத்தில் தமிழகம் போலீசால் கைது செய்யப்பட்டுக் கண்ணியமாக அழைத்து வரப்படும் ஷாஜி.

மே 24 அன்று சிறுவன் முனிராஜ் இறந்து போகிறான். போலீசால் வழியனுப்பி வைக்கப்பட்ட ஷாஜி தலைமறைவாகிறான். இதனிடையே, “கைது செய்யப்பட்ட குமார் ஷாஜி வீட்டு கார் ஓட்டுநர் கிடையாது; அவர் நெல்லூரிலுள்ள ஷாஜியின் குதிரைப் பண்ணையில் வேலை செய்துவருபவர்” என்ற உண்மையை இந்து நாளிதழ் அம்பலப்படுத்தியது. இது மட்டுமின்றி, “ஷாஜி தினந்தோறும் தனது நண்பர்களோடு குடித்துவிட்டு, இரவு நேரங்களில் சொகுசு கார்களை அதிவேகத்தோடு ஓட்டிச் செல்வதைப் பொழுதுபோக்காகக் கொண்டவன்; இதற்கு முன்பு அவனால் இரண்டு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன; அதில் ஒரு விபத்தில் ஷாஜி ஓட்டிச் சென்ற கார் ஒரு ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் பலியாகிவிட்டார். அவனது கார் ஓட்டுநர் உரிமமும் காலாவதியாகிப் போன ஒன்று” என்ற உண்மைகளும் வெளிச்சத்துக்கு வந்தன. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை போலீசின் மோசடியை அம்பலப்படுத்திச் சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொண்டது.

உண்மையை இதற்கு மேலும் மூடிமறைக்க முடியாமல் போனதால், ஷாஜியை முதல் குற்றவாளியாகப் போலீசு அறிவித்தது. போலீசு ஆய்வாளர் ரவிச்சந்திரன் இடைநீக்கம் செய்யப்பட்டார். அந்த ஆய்வாளர் தன்னிச்சையாக இந்த மோசடியைச் செயதாரா அல்லது மேலதிகாரிகளின் அறிவுரைப்படி நடந்து கொண்டாரா என்பது இனி எக்காலத்திலும் வெளிவராது. ரவிச்சந்திரனுக்கு அடுத்து, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சரவணன், ஒரு சில நாட்களிலேயே மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டதற்கான காரணமும் மர்மமாகவே உள்ளது.

ஷாஜி பணபலம் மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் மட்டுமல்ல; அரசியல் செல்வாக்கும் கொண்டவன். மத்திய அமைச்சர் வயலார் ரவி, ஷாஜியின் சகோதரியின் மாமனார். இத்தகைய பின்னணி கொண்ட ஷாஜி எளிதாக வெளிநாட்டுக்குத் தப்பியோடி விடுவான் எனத் தெரிந்திருந்தும் சென்னை போலீசு அதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு கண்துடைப்புக்காக ஷாஜியைப் பற்றிய விவரங்களை சென்னை விமான நிலைய குடியேற்ற அதிகாரிகளிடம் மட்டுமே தெரிவித்திருந்தது, சென்னை போலீசு. ஆனால், ஷாஜியோ பெங்களூர் விமான நிலையத்திலிருந்து இலங்கை வழியாக தாய்லாந்திற்குத் தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு சாதாரண பின்னணி கொண்ட குற்றவாளியைப் பிடிக்க வேண்டும் என்றால், அவனது குடும்பத்தையே போலீசு நிலையத்திற்குக் கடத்தி வந்து மிரட்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் போலீசு, ஷாஜி விசயத்தில், அவனைச் சரணடையச் சொல்லுமாறு அவனது தந்தை புருஷோத்தமனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது. ஷாஜி சரணடைவது உறுதியான சமயத்தில்தான் சென்னை போலீசு இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களுக்கும் அவனைப் பற்றிய விவரங்களை அனுப்பியதோடு, நீதிமன்றத்தின் மூலம் ஷாஜியைத் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்தது. காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாக, ஷாஜியை கொச்சி விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்தது.

ஒரு எதிர்பாராத விபத்து நடந்தாலே, அது பற்றி அறிக்கை விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் ஓட்டுக்கட்சிகளுள் ஒன்றுகூட, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாய் திறக்கவில்லை. குறிப்பாக, ஜெயா அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு பைசா கூட நிவாரண உதவி அளிக்க முன்வரவில்லை. இந்த விசயத்தில் நீதிமன்றங்களுக்கும் தார்க்குச்சி போட வேண்டியிருந்தது.

“உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சுபரஷிதாவின் மருத்துவச் செலவுக்குத் தமிழக அரசு ஐந்து இலட்சம் ரூபாய் அளிக்க வேண்டும்; அத்தொகையைக் குற்றவாளி ஷாஜியிடமிருந்து வசூலிக்க வேண்டும்” எனக் கோரி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்த பிறகுதான், எம்.பி. குழும முதலாளி புருஷோத்தமன் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வதாக உயர்நீதி மன்றத்தில் தெரிவித்தார். தனக்கு முன் பிணை வழங்கக் கோரி ஷாஜி வழக்குத் தொடர்ந்த பொழுது, “குற்றத்தின் தன்மை மற்றும் குற்றவாளியின் செல்வாக்கைக் கருத்தில்கொண்டு, முன் பிணை வழங்கக் கூடாது” எனக் கோரும் குறுக்கீட்டு மனுவையும் தாக்கல் செய்து, மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

ஷாஜி சகலவிதமான வசதிகளோடு முதல் வகுப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். அவனது இரண்டு நண்பர்கள் பிணையில் வெளியே வந்துவிட்டனர். பணம் விளையாடிவிட்டதோ எனச் சந்தேகப்பட இதில் இடமில்லை. தனது களிவெறியாட்டத்திற்காக ஒரு சிறுவனைக் கொன்று போட்ட இவ்வழக்கை வெறும் விபத்தாகவே நீதிமன்றமும் சட்டமும் கருதுகின்றன. போலீசு ஷாஜியைச் சட்டவிரோதமாகத் தப்பவைக்க முயன்றது என்றால், சட்டமும் நீதிமன்றமும் ஷாஜியைச் சட்டப்படியே கொலைக் குற்றத்திலிருந்து தள்ளி நிறுத்தியுள்ளன.

– ரஹீம்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________

ஜெயலலிதாவிடம் ஏமாறும் நெய்வேலி தொழிலாளிகள் !

7

என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்பது தொடர்பான விவகாரம் இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்), தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகம் (டுபிட்கோ), தமிழ்நாட்டு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் (பவன்பின்) ஆகியன மத்திய அரசு விற்கவிருக்கும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் 5% (சுமார் 8.38 கோடி பங்குகள்) பங்குகளை வாங்கலாம் என்று இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒப்புதல் அளித்திருக்கிறது.

“எனது தலைமையிலான அரசின் நடவடிக்கை மூலம் என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது எனது தலைமையிலான அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாகவும், எனது தனிப்பட்ட முயற்சிக்கும், தொழிலாளர்களின் போராட்டத்துக்கும், ஒற்றுமைக்கும், தமிழக மக்களின் ஒருமித்த குரலுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்”

என்று மூன்று வாக்கியங்களில் மூன்று ‘எனது’ போட்டு தன்னைத் தானே பாராட்டிக் கொள்ளும் அறிக்கையையும் ஜெயலலிதா வெளியிட்டிருக்கிறார். ஆமாமா, இது ஜெயலலிதாவின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று தனது தலையங்கத்தில் புகழாரம் பாடுகின்றது தினமணி.

உண்மையில் நடந்திருப்பது என்ன?

பங்குச் சந்தை
மிருகங்கள் மோதும் சந்தை பங்குச் சந்தை.

தொழில் நிறுவனங்களை அரசு நடத்தக் கூடாது என்பது புதிய பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படை கோட்பாடு. பாதுகாப்பு, நாணயம், நிதிக் கொள்கை போன்ற மேற்பார்வை பணிகளைத் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளும் சந்தைகளின் கட்டுப்பாட்டில் விடப்பட வேண்டும் என்பது அதன் சுருக்கமான வரையறை. அதாவது பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கைப்பற்றி வைத்திருக்கும் முதலாளிகளும், அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் சாதாரண மக்களும் சந்தையில் சுதந்திரமாக போட்டி போடுவதில் அரசு தலையிடக் கூடாது.

இந்த அடிப்படையில் பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் கொள்கைகள் நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியில் தொடங்கி அடுத்து வந்த தேவ கவுடா, குஜ்ரால் கிச்சடி ஆட்சிகளில் தொடர்ந்து, வாஜ்பாயி தலைமையிலான ஆட்சியில் தனியார்மயத்துக்கு என தனி அமைச்சகத்தின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நாட்டின் சொத்துக்கள் தனியார் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு மலிவு விலையில் விற்கப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக என்எல்சி நிறுவனத்தின் 6.44% (10.8 கோடி) பங்குகள் விற்கப்பட்டு என்எல்சி பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனம் ஆக்கப்பட்டது. இப்போது என்எல்சியின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் சுமார் ரூ 59 விலையில் பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகின்றன. என்எல்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலக்கரி வளத்தையும், அதன் மின் உற்பத்தியையும் கைப்பற்றுவதற்கு தனியார் முதலாளிகள் ஆர்வமாக இருக்கின்றனர்.

தாராள மய கொள்கைகளின் இன்னொரு கோட்பாடு, தனியார் நிறுவனங்களையும் அவற்றின் சந்தை நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் பொறுப்பு நாடாளுமன்றத்திடமோ, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடமோ இருக்கக் கூடாது, மாறாக அந்தத் துறை வல்லுனர்களால் நிர்வகிக்கப்படும் ஒழுங்குமுறை ஆணையங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் பங்குச் சந்தையை கண்காணிக்க இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஏற்படுத்தப்பட்டது. மின்சார ஒழுங்கு முறை ஆணையம், தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், தண்ணீர் ஒழுங்கு முறை ஆணையம் என்று வரிசையாக அணி வகுத்து நிற்கும் இது போன்ற அமைப்புகள் அனைத்தும் பெயரளவு இருந்த ஜனநாயக கண்காணிப்பையும் ஒழித்துக் கட்டி முழுக்க முழுக்க தனியார் முதலாளிகளுக்கான ஆட்ட விதிகளின்படி இந்தத் துறைகளை இயங்க வைக்கின்றன.

இந்த வாரியங்கள் அல்லது ஒழுங்குமுறை ஆணையங்கள் ஏற்படுத்தும் விதிமுறைகளை அரசும் பின்பற்ற வேண்டும் என்பது உலகளாவிய நிதிச் சந்தையின் எழுதப்படாத சட்டம். பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் குறைந்தது 10% பங்குகளை பொது மக்களிடம் (அதாவது, தனியார் முதலாளிகளிடம்) விற்றிருக்க வேண்டும் என்ற விதியை பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் 2010-ம் ஆண்டில் உருவாக்கியது.

அந்த விதிக்கு கட்டுப்பட்டு, வேறு வழியில்லாமல் என்எல்சியின் 5% பங்குகளை விற்கப் போவதாக அரசு சொன்னது. அதாவது, என்எல்சியின் பங்கு விற்பனையை தொடங்கி வைத்து பங்குச் சந்தையில் பட்டியலிட்ட அதே அரசு, தானே ஏற்படுத்திய வாரியத்தின் விதிக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்று என்எல்சி தனியார் மயத்தை செயல்படுத்துகிறது. 2006-ம் ஆண்டு இத்தகைய விதிகள் ஏதும் இல்லாத நிலையிலும் கூட 10% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டது என்பதிலிருந்து இதை புரிந்து கொள்ளலாம். அப்போது அந்த விற்பனை முயற்சி விடாப்பிடியான தொழிலாளர் போராட்டங்களுக்கு பிறகு தோற்கடிக்கப்பட்டது.

பிறகு வரி தள்ளுபடிகளாலும், ஊழல்களாலும் சூறையாடப்பட்டு வரும் மத்திய அரசின் நிதி நிலையை சீர் செய்ய ரூ 500 கோடி அளவில் நிதி திரட்ட வேண்டும்; பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுவதற்கு பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்; என்ற இரட்டை நோக்கத்துடன் இப்போதைய 5% பங்குகள் விற்பனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தொடக்கத்தில் பங்குகளை பங்குச் சந்தையில் ஏல முறையில் தனிநபர்கள், மியூச்சுவல் நிதி நிறுவனங்கள், அன்னிய நிதி முதலீட்டாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், மற்றும் பிற தகுதியுள்ள நிறுவன முதலீட்டாளர்களுக்கு இந்தப் பங்குகளை விற்கத் திட்டமிட்டிருந்தது அரசு.

ஜெயா, மன்மோகன்
மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி – கார்ப்பரேட் தரகர்களின் ஆட்சி

இதற்கு நெய்வேலி தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து மீண்டும் முட்டுச் சந்தில் நின்றது மத்திய அரசு. அதற்கு ஒரு வழி காண ஜெயலலிதாவால் தந்திரமாக முன் வைக்கப்பட்ட திட்டம்தான் பங்குகளை தமிழ்நாடு அரசு நிறுவனங்கள் வாங்குவது. ஆரம்பத்தில் அதை அவ்வளவாக கண்டு கொள்ளாத மத்திய அரசு, தீவிரமாகும் தொழிலாளர் போராட்டங்களைத் தொடர்ந்து வேண்டா வெறுப்பாக அதை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. உண்மையில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையில் எதிர்ப்புகளை சமாளிக்க இப்படி ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி தந்ததற்காக மன்மோகன் சிங்கே ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

முதலாவதாக, பங்குகளை வாங்கும் தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் அவற்றை சந்தையில் விற்கவோ, ஒரு ஆண்டுக்குப் பிறகு சந்தையிலோ வேறு ஒரு நிறுவனத்துக்கோ விற்பதற்கு எந்தத் தடையும் இல்லை. அதை என்எல்சி நிர்வாகம் கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது.

இரண்டாவதாக, தமிழ்நாட்டு மக்களின் நிலத்தை கைப்பற்றி, தமிழ்நாட்டு மக்களின் உழைப்பில் 20 ஆண்டுகளாக இயங்கி வரும் என்எல்சி உற்பத்தி செய்த மின்சாரம், ஆண்டு தோறும் ஈட்டிய லாபம் இவற்றின் மூலம் மத்திய அரசு ஆரம்ப முதலீட்டை விட பல மடங்கு சம்பாதித்து விட்டிருக்கிறது. இந்த நிலையில் அதன் பங்குகளை வாங்குவதற்கு தமிழ் நாட்டின் நிதியிலிருந்து மத்திய நிதிக்கு ரூ 500 கோடி மாற்றுவது என்பது மோசடியானதாகும். அதாவது மக்கள் சொத்துக்களை மக்களின் பணத்தால் மீண்டும் வாங்குவது என்பதை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாளையே ஜெயா அரசு நிதிப்பற்றாக்குறை என்று மறைமுகமாக இந்தப் பங்குகளை விற்பனை செய்தால் யாரும் தடுக்க முடியாது.

மூன்றாவதாக, பங்குகள், பரிவர்த்தனை வாரியத்தின் விதிக்கு கட்டுப்படுவதாக பங்கு விற்பனை என்று அரசு சொன்னாலும், 3.33 சதவீதம் விற்காமல் 5 சதவீதம் விற்பது அரசின் உண்மையான நோக்கத்தை காண்பிக்கிறது. அப்படி எந்த விதியும் இல்லாத 2006-ம் ஆண்டு 10% பங்குகளை விற்க முண்டியதும் இதே மத்திய அரசுதான்.

நான்காவதாக, 10% தானே விற்கிறார்கள், கட்டுப்பாடு இன்னமும் பொதுத்துறை கையில்தானே இருக்கும் என்று வாதாடப்படுகிறது. ஆண்டுக்கு ரூ 1400 கோடி லாபம் சம்பாதிக்கும் என்எல்சியிடமிருந்து ஆண்டுக்கு ரூ 140 கோடியை ஈவுத் தொகையாக தனியார் சம்பாதிக்க வழி செய்து கொடுப்பது என்ற அளவில் கூட இது பகல் கொள்ளை நடவடிக்கை ஆகும்.

மேலும், படிப்படியாக பங்குகளை விற்று என்எல்சியின் கட்டுப்பாட்டை தனியார் கையில் ஒப்படைப்பதற்கு வழி வகுத்துத் தந்திருக்கிறது மத்திய அரசு. ஆகவே, இந்தப் பிரச்சினை இத்தோடு முடியப் போவதில்லை. என்எல்சியை முழுமையாக தனியார் கையில் ஒப்படைப்பது வரை தனியார் முதலாளிகளின் பிரதிநிதியான மத்திய அரசு ஓயப் போவதில்லை. ஜெயலலிதாவின் மாயையில் சிக்காமல் தொழிலாளிகள் இந்த சதியைப் புரிந்து கொண்டு போராட வேண்டும்.

– அப்துல்

தலித் வன்னியர் ஜோடியை பிரிக்க முயற்சித்த பா.ம.க. சதித்திட்டம் முறியடிப்பு !

24

ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் 16-7-13 அன்று நீதிபதி கீழ்க்கண்டவாறு உத்திரவு வழங்கினார்.

செந்தமிழ்ச் செல்வி, “என்னை யாரும் கடத்தவில்லை, நானாகத்தான் விரும்பி விமல் ராஜை காதலித்து திருப்பனந்தாள் எனும் ஊரில் பதிவு திருமணம் செய்து கொண்டேன். அவர் என் கணவர், அவருடன்தான் செல்ல விரும்புகிறேன். நான் கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ள பிறந்த தேதி படி நான் மைனர் அல்ல” என்ற வாக்கு மூலத்தின் அடிப்படையிலும், திருமணத்தை சட்டப்படி சார்பதிவாளரிடம் பதிவு செய்துள்ள சான்றிதழ்படியும், விமல் ராஜ் செந்தமிழ்ச்செல்வியின் சட்டப்படியான கணவர். எனவே அவருடன் அனுப்ப இந்நீதிமன்றம் உத்திரவிடுகிறது. மைனர் என்பதற்காக பெற்றோர்கள் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் குறித்த நம்பகத் தன்மையை விசாரிக்கும் அதிகாரம் இந்நீதிமன்றத்திற்கு இல்லை. எனவே உரிய சிவில் நீதிமன்றத்திற்கு சென்று அவர்கள் நிவாரணம் பெறலாம்.

என்று கூறி மைனர் பெண்ணை காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் பா.ம.க வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.

விமல் ராஜ், செந்தமிழ்ச் செல்வி
விமல் ராஜ், செந்தமிழ்ச் செல்வி

இந்த வழக்கில் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மற்றும் விமல் ராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் நேரடியாக ஆஜராகி காதலர்களை பிரிக்காமல் ,பெண்ணை கடத்தியதாக பதியப்பட்ட பொய் வழக்கிலிருந்து மீட்டு திருப்பனந்தாள் ஊருக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ், தலித் சமூகத்தை சார்ந்தவர் . இவர் ஜெயங்கொண்டத்தில் தனியார் கேஸ் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.ஜெயங்கொண்டம் அருகே உள்ள மணக்கரை கிராமத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை கடந்த மூன்று வருடமாக காதலித்து வந்துள்ளார். செந்தமிழ்ச் செல்வி பெண்கள் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்.

இவர்களது காதல் விவகாரம் செந்தமிழ்ச்செல்வியின் பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இரண்டு குழந்தைகள் உள்ள வேறு ஒருவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய ஏற்பாடு செய்து, ஒரு லட்சம் முன் பணம் வாங்கி விட்டனர். செந்தமிழ்ச் செல்வி இந்தத் திருமணத்திற்கு மறுக்கவே, அவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு நெசவுத் தொழில் செய்வதற்கு வாங்கிய முன்பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என பெற்றோர் செல்வராஜ், உமாராணி பெண்ணை நிர்பந்தித்தனர். இவரது தங்கை நன்றாக படிக்கக் கூடியவர் அவரையும் 10-ம் வகுப்போடு நிறுத்தி பஞ்சு மில்லிற்கு வேலைக்கு அனுப்பி விட்டனர்.

இச்சூழலில்தான் செந்தமிழ்ச் செல்வி வீட்டை விட்டு வெளியேறி விமல்ராஜிடம் சென்று விட்டார். பெற்றோர்கள் கஷ்டப்பட்டாலும் வன்னியர் சங்கம் இந்த காதலை பிரிக்க ரூ 1 ½ லட்சம் பணம் ஒதுக்கி விமல்ராஜ் பெற்றோர்களை மிரட்டியது. காதலர்களை தேடியது. விமல்ராஜின் வன்னியர் நண்பர்களதான் இச்செய்தியை அவருக்குச் சொல்லி பத்திரமாக இரு என எச்சரித்தனர்.

இந்நிலையில் காதல் தம்பதிகள் இருவரும் கடந்த ஜூன் 25 அன்று திருப்பனந்தாள் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். அதே ஊரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர். பா.ம.க வின் தூண்டுதலின் பேரில், “விமல் ராஜ் எனது பெண்ணை கடத்தி சென்று விட்டதாக” கூறி செந்தமிழ்ச்செல்வியின் தந்தை செல்வராஜ் புதிதாக வாங்கிய பிறப்பு சான்றிதழ் அடிப்படையில் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடத்தல் வழக்கும் பதிவு செய்யபட்டது.

001திருமணம் செய்து கொண்ட ஜோடிகளை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரங்களை ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தம்பதிகள் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் பெண்ணை கடத்தி விட்டார் என விமல் ராஜ், தாய்மாமன் பரமேஸ்வரன் ஆகியோரை போலீசார் தேடினர். தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்திலும் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்து அவ்வாறே உத்திரவும் பெற்றனர்.

இதற்கிடையில் உயிருக்கு பயந்த தம்பதிகள் தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்து தஞ்சம் அடைந்தனர். இவர்களை ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார் எஸ்.பி. ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினார்.

செந்தமிழ்ச்செல்வியின் பெற்றோர் சார்பில் குருவுக்கு ஆஜராகும் பா.ம.க வை சேர்ந்த அதே 10- க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், செந்தமிழ்ச்செல்வி மைனர் என்பதற்கான பிறப்புச் சான்றிதழை தாக்கல் செய்தனர். அது 2-7-13 தேதியில் வாங்கப்பட்ட சான்றிதழ். “பிறப்பு சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதி படி அந்த பெண் மைனர். எனவே பெண்ணை அரசு காப்பகத்திற்குதான் அனுப்ப வேண்டும். பையனோடு அனுப்பக் கூடாது” என வாதம் புரிந்தனர்.

மணமக்கள் தரப்பு வழக்கறிஞர்கள், “பிறப்பு சான்றிதழை ஏற்க முடியாது. பள்ளிச் சான்றிதழில் கொடுத்த பிறந்த தேதியும் அவர்கள் பெற்றோர்கள் கொடுத்ததுதான். சட்டப்படி இருவரும் மேஜர். திருமணமும் பதிவு செய்யப்பட்டு விட்டது. எனவே யாரும் தடுக்க முடியாது” என வாதிட்டனர்.

இச்சூழலில்தான் குற்றவியல் நீதிபதி முத்து மனோகரன் பா.ம.க வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து காதல் தம்பதிகளை அவர்கள் விருப்படி போலீஸ் பாதுகாப்புடன் திருப்பனந்தாள் ஊருக்கு அனுப்பி வைத்தார்.

பா.ம.க வை சேர்ந்த பிரமுகர்கள் நீதிமன்றத்திற்கு வரவில்லையே தவிர இவர்களை பிரிப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தனர் ஆனால் பொது மக்களில் பலரும் ஆதரவு அளிக்கும் முகமாக கருத்து கூறினார். ஜெயங்கொண்டம் பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் இறுதி வரை உடன் இருந்தனர்.

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம்.

“அம்மா மினரல் வாட்டர்” தண்ணீர் தனியார்மய சூழ்ச்சி !

19

காற்றும் ஒளியும் போன்ற உயிரின் ஆதாரமும், உயிரினங்களின் உரிமையுமான தண்ணீரை, அரசாங்கமே விற்பனைப் பண்டமாக்கி புட்டியில் அடைத்து விற்று இலாபம் பார்க்கும் கேடுகெட்ட நடவடிக்கையை, மாபெரும் சாதனையைப் போல அறிவித்திருக்கிறார், ஜெயலலிதா.

“ஏழை, எளிய மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிடவேண்டும் என்ற நோக்கத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் ‘அம்மா மினரல் வாட்டர்’ உற்பத்தி நிலையங்களை அமைத்திட நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று பிரகடனம் செய்துள்ளார்.

தண்ணீர் லாரி
‘அம்மா’ ஆட்சியில் குடிநீர்த் தட்டுப்பாட்டில் தவிக்கும் தலைநகரம்.

“மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயர்ந்து கொண்டே செல்வதாகவும், இதன் விளைவாக ஏழை, நடுத்தர மக்கள் செய்வதறியாது விழி பிதுங்கி தவிப்பதாகவும், தமிழக மக்களை வாழ வைக்கும் வகையிலும் விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும்” இட்லிக் கடை, கத்தரிக்கா கடைக்கு அடுத்தபடி ‘அம்மா வாட்டரை’ அம்மாவின் அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறதாம்.

இந்தப் “பாதுகாப்பான” குடிநீரின் விலை லிட்டர் பத்து ரூபாயாம். அரசு போக்குவரத்துக் கழகங்களின் பொறுப்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்படுமாம். மொத்தம் பத்து இடங்களில் தண்ணீர் கம்பெனிகள் திறக்கப்படும் என்றும், எல்லா பேருந்து நிலையங்களிலும் ‘அம்மா வாட்டர்’ விற்பனைக்கு வைக்கப்படும் என்றும் இந்த அறிவிப்பு கூறுகிறது.

தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, கொள்ளை இலாபம் பார்க்க அனுமதிப்பதும், நீர்வளத்தை தனியார் முதலாளிகளின் தனியுடைமை ஆக்குவதும் மறுகாலனியாக்க கொள்கையின் விளைவுகள். தண்ணீர் தனியார்மயத்தைத் தீவிரப்படுத்துவதற்காகத்தான் “தேசிய நீர்க்கொள்கை – 2012” மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தக் கொள்கை அறிவிக்கப்படுவதற்கு முன்னமே தமிழகத்தில் தண்ணீர் தனியார்மயக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா. 2001-2006 -ல் ஜெ. அரசுதான் அன்றாடம் பல இலட்சம் லிட்டர் தாமிரவருணித் தண்ணீரை லிட்டர் ஒண்ணேகால் பைசா விலையில் கோகோ கோலா நிறுவனத்துக்கு கொடுக்க உத்தரவிட்டது. இன்று வரை இந்தத் தண்ணீர்க் கொள்ளை தொடர்ந்து வருகிறது.

05-private-waterசென்ற ஆட்சிக் காலத்தின் போது, திருப்பூரில் பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துத் திருப்பூருக்கு விநியோகம் செய்யும் உரிமையை பெக்டெல் என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு ஜெ. அரசு வழங்கியது. தற்போது திருப்பூரின் சாயப்பட்டறைகள் பல மூடப்பட்டு, திருப்பூர் தொழிலகங்களின் தண்ணீர் தேவை குறைந்து விட்டதால், நாள்தோறும் பத்து கோடி லிட்டர் பவானி தண்ணீரை அந்த பன்னாட்டுக் கம்பெனியிடமிருந்து அரசே வாங்கிக் கொள்ளும் என்றும், ஆயிரம் லிட்டர் ரூ. 4.50 என்று நிர்ணயிக்கப்பட்ட விலையை உயர்த்தி 21 ரூபாயாக கொடுக்கும் என்றும் தற்போது ஜெ. அரசு அறிவித்திருக்கிறது. வீராணத்திலிருந்து சென்னைக்குத் தண்ணீரைக் கொண்டுவரும் அரசுக்கு பவானியிலிருந்து திருப்பூருக்குத் தண்ணீர் கொண்டு வரத் தெரியாதாம். பவானித் தண்ணீரை பன்னாட்டுக் கம்பெனியிடமிருந்து அரசு விலை கொடுத்து வாங்குமாம். இந்த அயோக்கியத்தனத்துக்குப் பெயர்தான் தண்ணீர் தனியார்மயம்.

பாதுகாக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு வழங்குவதென்பது முடியாத காரியமோ பெரும் செலவு பிடிக்கும் விசயமோ அல்ல. தனியார் தண்ணீர் கம்பெனிகளின் கணக்குப்படியே ஒரு லிட்டர் தண்ணீரைச் சுத்திகரிப்பதற்கு அவர்களுக்கு ஆகும் செலவு பத்து காசுதான். இந்த செலவும் இல்லாமல், இயற்கை முறையில் மிகவும் குறைந்த செலவில் தண்ணீரைச் சுத்திகரிக்கும் வழிகள் தமிழகத்திலேயே பல அறிவியலாளர்களால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

பாதுகாக்கப்பட்ட குடிநீரை இலவசமாக மக்களுக்கு வழங்க முடியும் என்ற போதிலும், தண்ணீரைத் தனியார் மயமாக்க வேண்டும் என்ற மறுகாலனியாக்க கொள்கையின் காரணமாகத்தான் அரசு இதனைச் செய்ய மறுக்கிறது. பாட்டில் தண்ணீர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இந்தியாவில் மொத்தம் 1200 இருப்பதாகவும், அவற்றில் 600 தமிழகத்தில்தான் உள்ளன என்றும் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. காசிருப்பவனுக்குத்தான் தண்ணீர் என்ற கருத்தை மக்களே ஏற்கச் செய்யும் அளவுக்கு தண்ணீர் வியாபாரம் தமிழகத்தில் சகஜமாகிவிட்டது.

அதனால்தான் தண்ணீர் பஞ்சத்தால் தமிழகமே தவித்துக் கொண்டிருக்கும் சூழலிலும், தண்ணீரை உறிஞ்சி விற்பதற்கு முதலாளிகளைச் சுதந்திரமாக அனுமதித்து விட்டு, லிட்டர் பத்து ரூபாய்க்கு பாட்டில் தண்ணீர் விற்பதை விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை எனப் பீற்றிக் கொள்கிறார் ஜெயலலிதா. அரசாங்கமே தண்ணீர் விற்பது என்பது தண்ணீர் மாஃபியாக்களின் தொழிலுக்கு அம்மா வழங்கும் ஆசி; அரசு வழங்கும் அங்கீகாரம். பல கோடி மக்கள் தாகத்தில், சில நூறு தண்ணீர்க் கொள்ளையர்கள் லாபம் பார்க்கும் பயங்கரவாதத்துக்கு மக்களைப் பணிந்து போக வைக்கும் சதிச்செயல்.

ஊருக்கு ஒரு இட்லிக் கடை திறப்பதும், காய்கறிக்கடை திறப்பதும், பாட்டில் தண்ணீர் தருவதும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அல்ல. மாறாக, “கட்டுப்படுத்த முடியாது” என்று ஒப்புக்கொள்ளும் நடவடிக்கைகள். “ஏன் கட்டுப்படுத்தவில்லை?” என்று அரசைக் கேட்க விடாமல் மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கும் நடவடிக்கைகள். பாதுகாக்கப்பட்ட குடிநீர் பத்து ரூபாய் என்பது, தண்ணீர் தனியார் மயத்தை ஊக்குவிக்கும் சூழ்ச்சி!

– தொரட்டி
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________

மானேசருக்கு செல்வோம் ! ஜூலை 18 ஆர்ப்பாட்டம் !!

4

“ஜூலை 18”

மாருதி நிறுவனத்துக்கு எதிராக தொடர்கிறது தொழிலாளர் போராட்டம்! போராடும் மாருதி தொழிலாளர்களுக்குத் தோள் கொடுப்போம்!

புரட்சிகர அமைப்புகள் மாவட்டத் தலைநகரங்களில் பேரணி – ஆர்ப்பாட்டம்

—————

  • ஜூலை 18 மாருதி தொழிலாளர்களின் போர்க்குணமிக்க எழுச்சி நாள்!
  • சங்கம் வைக்கும் உரிமைக்குப் போராடிய மாருதி தொழிலாளர்கள் மீது தொடர்கிறது அடக்குமுறை!
  • 2300 தொழிலாளர்கள் பணிநீக்கம்!
  • நிர்வாகமே சதி செய்து எச்.ஆர் அதிகாரியைக் கொன்றுவிட்டு, 143 தொழிலாளிகள் மீது கொலை வழக்கு!
  • ஓராண்டாக தொழிலாளிகளுக்குச் சிறை – பிணை மறுப்பு!
  • பட்டினியில் பரிதவிக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள்!
  • ஜப்பானிய பன்னாட்டு நிறுவனத்தின் அடியாளாக அரசு, போலீசு, நீதிமன்றம்!
  • தொழிலாளி வர்க்கத்தை கொத்தடிமையாக்கும் மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!
  • முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
  • தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட உரிமையை நிலைநாட்டுவோம்!

——————-
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

மாருதி

ஜூலை 18 – மாருதி தொழிலாளர்களின் போர்க்குணமிக்க கிளர்ச்சி நடைபெற்ற நாள். மாருதி தொழிலாளர் போராட்டம் வேலைவாய்ப்பு, முன்னேற்றம், தொழில்மயமாக்கம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்க கொள்கைகளின் கீழ் தொழிலாளி வர்க்கத்தின் மீது திணிக்கப்படும் அடக்குமுறையையும் சுரண்டலையும் உலகறியச் செய்தது. எத்தகைய பிரம்மாண்டமான பன்னாட்டு நிறுவனத்தையும் எதிர்த்து மோத முடியும் என்ற நம்பிக்கையை தொழிலாளி வர்க்கத்துக்கு ஊட்டியது. ஆளும் வர்க்கத்தையும் அரசையும் நடுங்கச் செய்தது.

மாருதி தொழிலாளர்கள் போராட்டத்துக்கு காரணமாக அமைந்த இரக்கமற்ற சுரண்டல், தொழிற்சங்க உரிமை மறுப்பு உள்ளிட்ட ஒடுக்கு முறைகள் பற்றி நாடறியும். இருப்பினும், அவற்றையெல்லாம் இருட்டடிப்பு செய்து விட்டு, அவனிஷ் குமார் தேவ் என்ற எச்.ஆர் அதிகாரி கொல்லப்பட்டதை மட்டும் காட்டி தீவிரவாத பீதியைக் அரசு கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து சுமார் 2,300 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், 147 தொழிலாளர்கள் கொலை வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஒரு ஆண்டு காலமாக அவர்களுக்கு பிணை மறுக்கப்படுகிறது. நெருங்கிய உறவினர்களின் சாவுக்கு பரோலில் சென்று வருவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் அநாதைகளாய் சோற்றுக்கு வழியின்றித் தவிக்கின்றனர்.

கடந்த ஒரு ஆண்டாக மானேசரில் மாருதி உள்ளிட்ட எந்த ஆலையின் தொழிலாளர்களும் உண்ணாவிரதம் இருப்பதற்குக் கூட போலீசு அனுமதிப்பதில்லை. குற்றவாளிகளைத் தேடுவது என்ற பெயரில் தொழிலாளர் குடும்பங்கள் போலீசால் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றன. வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிகள் வேறு எங்கும் வேலைக்கு செல்ல இயலவில்லை. எல்லா முதலாளிகளும் ஒரு அணியாய் சேர்ந்து கொண்டு வேலைவாய்ப்பை மறுக்கின்றனர்.

சண்டிகர் உயர்நீதிமன்றம் தொழிலாளர்களுக்கு பிணை தர மறுத்து அளித்துள்ள தீர்ப்பில், மாருதி போராட்டம் உலக அரங்கில் இந்தியாவை தலை குனியச்செய்து விட்டதாகவும், தொழிலாளர் கலகம் குறித்த அச்சத்தை அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தி விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. அந்த அளவுக்கு அரசும் போலீசும் நீதிமன்றமும் வெளிப்படையாகவே மாருதிக்கு அடியாள் வேலை செய்கின்றனர்.

“கொல்லப்பட்ட அதிகாரி அவனிஷ் தேவ், தொழிற்சங்கம் அமைப்பதற்கு தொழிலாளர்களுக்கு உதவியாக இருந்தவர்; போராட்டம் நடந்த நாளன்று ஆலையின் உள்ளே இருந்த கண்காணிப்பு காமெராக்கள் திட்டமிட்டே அணைக்கப்பட்டிருந்தன; உள்ளே நூறு அடியாட்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்” – என்பன போன்ற பல விவரங்களைக் கூறி, சுயேச்சையான கிரிமினல் குற்ற விசாரணை வேண்டுமென்று மாருதி தொழிலாளர் சங்கம் கோருகிறது. இக்கோரிக்கை அரசாலும், நீதிமன்றத்தாலும் புறக்கணிக்கப்படுகின்றது. ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

நடப்பது தொழிலாளி வர்க்கத்தின் மீதான பலமுனைத்தாக்குதல். மறுகாலனியாக்கத்தின் கீழ் தொழிற்சங்க உரிமைகள் ஏதுமற்ற கொத்தடிமைகளாய் வாழ்வதற்கு ஒப்புக்கொள் என்று தொழிலாளி வர்க்கத்தை மிரட்டுவதற்கான தாக்குதல். பன்னாட்டு நிறுவனங்களின் அடியாள்தான் இந்த அரசமைப்பு என்ற உண்மையை நிரூபிக்கும் தாக்குதல்.

இந்த தாக்குதலுக்கு எதிராக விடாப்பிடியாகவும் உறுதியாகவும் போராடி வருகின்ற மாருதி தொழிலாளர்கள், ஜூலை 18 அன்று “மானேசர் செல்வோம்” என்ற போராட்டத்தை அறிவித்திருக்கின்றனர். சிறை வைக்கப்பட்டாலும், குடும்பத்தோடு அலை அலையாக சிறை செல்வதென அறிவித்திருக்கின்றனர்.தமது போராட்டத்திற்கு தொழிலாளி வர்க்கம் மற்றும் பரந்து பட்ட உழைக்கும் மக்களின் ஆதரவைக் கோரியிருக்கின்றனர்.

தமிழகத்தின் தொழிற்பேட்டைகளில் தொழிலாளர்கள் சந்திக்கும் சுரண்டலும், அடக்குமுறையும் மாருதி தொழிலாளர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறையிலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதல்ல. அவர்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதும் நம்மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பதும் ஒன்றுதான். தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டம்தான் முதலாளி வர்க்கத்தை பணியச் செய்வதற்கான ஆயுதம்.

ஜூலை 18 அன்று நாள் முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும், எமது அமைப்புகளின் சார்பில் மாருதி தொழிலாளர் போராட்டத்துக்கு ஆதரவாகப் பிரச்சார இயக்கம் மேற்கொள்கிறோம். மாலையில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவற்றில் தொழிலாளர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பு உழைக்கும் மக்களும் கலந்து கொள்ளவேண்டுமென்று கோருகிறோம்.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

நரேந்திர மோடி : மண்ணைக் கவ்வும் விளம்பரங்கள் !

44

ளராத கால் சட்டை கும்பலான ஆர்.எஸ்.எஸ் பற்றியோ நரவேட்டை மோடி பற்றியோ கட்டுரை வெளியிடப்படும் போதெல்லாம் “அது ஏன் எங்களை மட்டும் கரம் வைத்து கும்முகிறீர்கள்? மற்றவர்களெல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரிய மாட்டார்களா?” – என்பதாக சில ‘இந்தியப் பையன்கள்’ சடைத்துக் கொள்வதுண்டு. இந்த ‘சிலர்’ என்பது ஒரு நபரின் பல பெயர்களா அல்லது பல பெயர்கள் கொண்ட ஒரு நபரா என்பதில் எப்போதும் ஐயமுண்டு. போகட்டும். இந்தியாவில் ‘நாய் வாலை ஆட்டும்’ சம்பவங்கள் அதிகம் நடப்பது காவி கும்பலில் தான் எனும் போது எங்களை மட்டும் நொந்து கொண்டு என்ன பயன்?

சோட்டா பீம்
போகோ சேனலின் ‘சோட்டா’ பீமே பீதியில் உறைந்து போயிருப்பதாக கேள்வி.

மோடி பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பணிக் குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சமீப காலங்களில் மேற்படியாரின் விளம்பர வெறியின் விளைவாக காவி முகாமில் நாயின் வால் மட்டுமல்ல, நாயின் எஜமானரையே ஆட்டுவது போன்ற திடுக்கிடும் காட்சிகள் அரங்கேறி வருகின்றது. உத்திர காண்ட் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட குஜராத்திகளை காப்பாற்ற மோடி எடுத்துக் கொண்ட முயற்சிகள் பற்றி ஊடகங்களில் பரப்பப்பட்ட கார்ட்டூன் கதைகளின் யோக்கியதை தெரியும் தானே. மோடி, தனது இடது உள்ளங்கையில் 7,500 பேரையும் வலது உள்ளங்கையில் 7,500 பேரையும் சுமந்து கொண்டு குஜராத் வரை அனுமாரைப் போல் பறந்து சென்ற சாகசத்தைக் கேள்விப் பட்டு போகோ சேனலின் ‘சோட்டா’ பீமே பீதியில் உறைந்து போயிருப்பதாக கேள்வி.

வருங்காலத்தில் இவர் ராகுல் காந்தியோடு போட்டியிட்டு பிரதமராவாரா என்று தெரியாது. ஆனால் நிச்சயமாக போகோ சேனலில் சோட்டா பீமுக்கு போட்டி கேரக்டராக மிளிரும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை உத்தேசித்து ராம்போ வேலைகள், வழுக்கை மண்டையில் மயிரைப் பயிர் வைத்தல் உள்ளிட்ட இமேஜ் பில்டப் வேலைகளின் வரிசையில் கடந்த மாதம் 30-ம் தேதி குஜராத் மாநிலம் காந்திநகரில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘பொறுப்பான அரசாட்சிக்கான குடிமக்கள்’ ( Citizens for accountable governance) என்கிற என்.ஜி.ஓ அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கருத்தரங்கில் கனவு மன்னன் அப்துல் கலாம் சிறப்புரை நிகழ்த்தியிருக்கிறார். இந்தக் கருத்தரங்கிற்கு சுமார் 50 இசுலாமிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

குஜராத் எனும் குண்டுச் சட்டிக்குள் மட்டும் குதிரை ஓட்டுவதென்றால் ஏற்கனவே குஜராத்தி பொதுப் புத்தியில் நிறுவப்பட்டிருக்கும் இசுலாமிய வெறுப்பும், ‘பொருளாதார வளர்ச்சி’ பற்றிய அம்புலிமாமா கதைகளுமே போதுமானது. இந்தியா என்று வரும் போது 14 சதவீதம் இருக்கும் இசுலாமிய வாக்கு வங்கியை சமாதானப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைமை மோடிக்கு ஏற்பட்டுள்ளது. கார்ப்பரேட் இந்தியாவிற்கான ஈவிரக்கமற்ற அடியாளாக இருப்பதற்கான தனது ‘தகுதியை’ 2002-லேயே மோடி நிரூபித்துள்ளார் என்பதால் முதலாளிகளின் ஐந்தாம் படையான என்.ஜி.ஓக்கள் மோடியின் நல்லாட்சியை கடை விரிக்கும் வேலையில் இறங்கியுள்ளன.

சீனாவின் பேருந்து நிலையம் ஒன்றை சுட்டு ‘இதோ பாருங்கள் அகமதாபாத் பேருந்து நிலையத்தை. எப்படி மின்னுகிறது பாருங்கள்’ என்று சமீபத்தில் மின்னஞ்சலில் ஒரு படம் சுற்றுக்கு விடப்பட்டது. இதே போன்று மோடி குஜராத்தின் கடன்களை அடைத்ததோடு மேலும் கொஞ்சம் பணத்தை உலகவங்கியில் இருப்பாக வைத்திருக்கிறார் என்றும், இன்னும் இது போல் எண்ணற்ற கட்டுக்கதைகள் இணைய வெளியெங்கும் சுற்றியலைகின்றன. இதற்காகவே ‘மோடி பிராண்டை’ கடை விரிக்க மாதம் 12 லட்ச ரூபாய் சம்பளத்துக்கு ஆப்கோ வேர்ல்ட்வைட் எனும் அமெரிக்க விளம்பர நிறுவனம் அமர்த்தப்பட்டுள்ளது. சுதேசியின் புகழ் பரப்பும் விதேசி!

மோடியின் மத சுதந்திரம்
மோடியின் மத சுதந்திரம் ஐஸ்கிரீம் கடை – இந்துத்துவாவின் 32 வகைகள்.

அந்த வரிசையில் மோடியின் அம்புலிமாமா கதைகளை இசுலாமியர்களிடம் கொண்டு செல்லவும், மோடி இசுலாமியர்களுக்கு விரோதமானவரில்லை என்று பிரஸ்தாபித்துக் கொள்ளவும் மேற்படி கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த முயற்சியும் உத்திரகாண்ட் மீட்புக் கதையான ‘ராம்போவைப்’ போல பரிதாபகரமாக மண்ணைக் கவ்விக் கொண்டது தான் பரிதாபம்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட சையத் ஜாபர் மெஹ்மூத் எனும் முசுலீம் இளைஞர் தனது உரையில் பாரதிய ஜனதாவின் முசுலீம் விரோதக் கொள்கையைத் துவைத்துத் தொங்க விட்டுள்ளார். கருத்தரங்கங்கில் தனது உரையத் துவக்கிய மெஹ்மூத், தான் எந்தவொரு அரசாங்கத்திடமிருந்தும் தனிப்பட்ட நலன்களை எதிர்பாக்கவில்லை என்றும், தான் பின் தங்கிய இசுலாமிய சமூகத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்ட சட்டப் பூர்வ உரிமையையும் நீதியையும் மதிப்பதாகவும் ஆரம்பித்துள்ளார். இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பாரதிய ஜனதாவின் கொள்கை ஆவணமான ‘ஹிந்துத்வா: மாபெரும் தேசிய சித்தாந்தம்’ என்பதில் இருக்கும் இசுலாமிய வெறுப்பை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய மெஹ்மூத், “சாதாரண மனித தன்மை கொண்ட எந்தவொரு குடிமகனும் இப்படி மட்டையடியாக இசுலாமிய வெறுப்பைக் கக்குவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்” என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சச்சார் கமிசனின் பரிந்துரைகளை அமுல் படுத்த பா.ஜ.க முன்வர வேண்டும் என்று குறிப்பிட்ட மெஹ்மூத், நாட்டிலேயே இசுலாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டுமென்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை அமுல்படுத்தாத வெகுசில மாநிலங்களில் குஜராத் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து பாரதிய ஜனதாவின் இசுலாமிய வெறுப்பையும், சிறுபான்மையினருக்கு எதிரானதாக அக்கட்சி இருப்பதையும் சுட்டிக்காட்டி மெஹ்மூத் பேசி இருக்கிறார். இவ்வளவும் நரேந்திர மோடியின் முன்பாகவே நடந்துள்ளது. இதே பழைய மோடியாக இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சோராபுதீன், இஸ்ராத் ஜகான் உள்ளிட்ட வழக்குகளின் விவரங்களைப் படிப்பதன் மூலம் வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும். 2003 – 2006 காலகட்டத்தில் மட்டுமே சுமார் 16 பேரை பரலோகம் அனுப்பி வைத்த பராக்கிரமசாலிதான் மோடி. தன்னை எதிர்ப்பவர் சொந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சராக இருந்தாலும் போட்டுத் தள்ள தயங்காதவர் மோடி என்பதை ஹரேன் பாண்டியாவிற்கு ஏற்பட்ட கதியிலிருந்து புரிந்து கொள்ளலாம். மோடியின் கடந்த காலத்தை அறிந்தவர்களுக்கு மெஹ்மூதின் துணிச்சலும் வீரமும் அசாதாரணமானது என்பது புரியும்.

ஆனால் சமகாலத்தில் மோடி பிரதமர் கனவில் மிதந்து கொண்டிருப்பதால் உள்ளூர் மாபியா கும்பல் தலைவனைப் போல் இனிமேலும் நடந்து கொள்ளமுடியாத இக்கட்டின் விளைவாக நவதுவாரங்களில் இருந்தும் வெளிப்பட்ட ஆத்திரப் புகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்திருக்கிறார். ஏனெனில், இப்போதெல்லாம் அவரது சின்னச் சின்ன முகபாவனைகளும் கூட ஊடகங்களால் கவனிக்கப்பட்டு வருகின்றன. செருப்பாலடித்தாலும் சிரித்துக் கொண்டே அடக்கி வாசிக்க வேண்டிய வரலாற்றுச் சோகம்.

கலவரங்கள் மோடி
மதக் கலவரங்கள் மூலம் வளர்ச்சியை கட்டியிருக்கும் மோடி.

மோடியின் விளம்பர முயற்சிகள் தலைகுப்புற விழுந்து மண்ணைக் கவ்விக் கொள்கின்றன என்கிற சோகம் ஒருபுறமிருக்க, அவரது கட்சியின் யோக்கியதையோ சிரிப்பாய்ச் சிரித்து வருகிறது. ரேப் ஸ்வயம்சேவக் ராகவ்ஜி சமீபத்திய உதாரணமென்றால் எடியூரப்பா, கோவிந்தாச்சார்யா, உமாபாரதி என்று பின்னோக்கிச் செல்லச் செல்ல பரதிய ஜனதாவின் மகுடத்தில் ஒளிவீசும் மாணிக்கங்கள் ஒவ்வொன்றாக கண்ணைப் பறிக்கின்றன.

“சார், நீங்க மற்ற மாநில பாரதிய ஜனதா பற்றி சொல்லாதீங்க. எங்க மோடி தன்னோட மாநிலத்துல கட்சிய எப்படி ஸ்ட்ரிக்டா வச்சிருக்காருன்னு பாருங்க சார். இந்த மாதிரி ஸ்ட்ராங்கான ஆளுங்க பிரதமரா வந்தா அன்னிக்கு நைட்டே டைரக்டா நாம வல்லரசு தான் சார்” என்று சில அப்பாவி காவி ரசிகர்கள் சொல்கிறார்கள். மோடியின் உச்சி முதல் பாதம் வரை நீக்கமற நிறைந்திருக்கும் அந்த உறுதியான நேர்மையான ஆளுமையின் யோக்கியதை என்னவென்று இந்துப் பத்திரிகையில் கடந்த வாரம் வந்த செய்தி ஒன்று போட்டுடைக்கிறது.

குஜராத் சட்டமன்ற உறுப்பினர்களில் 57 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக இந்துப் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இந்தப் பட்டியலில் கேபினட் அமைச்சர் பாபுபாய் போக்கிரியாவும் (பெயரே அது தான்) அடக்கம். முறைகேடான சுண்ணாம்புக்கல் சுரங்க ஊழலின் 54 கோடி ரூபாய்கள் தேட்டை போட்ட வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மூன்றாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டவர்.

மேலும் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகளும் குஜராத் மாநில எம்.எல்.ஏக்களின் மேல் நிலுவையில் உள்ளது. குஜராத் பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களில் 31 சதவீதம் பேர் கிரிமினல்கள் என்கிறது அந்தச் செய்தி. “நான் ஊழல் செய்யவும் மாட்டேன், ஊழல் செய்பவர்களைச் சகித்துக் கொள்ளவும் மாட்டேன்” என்று வாய்ச்சவடால் பேசும் மோடியின் கோட்டையிலேயே நிலைமை இது தான்.

சமீபத்தில் ராய்ட்டர் செய்தி நிறுவன பேட்டியில் குஜராத்தில் கொல்லப்பட்ட முசுலீம்கள் குறித்துக் கேட்டபோது காரில் அடிபடும் நாய்க்குக் கூட தான் வருந்துவதாக கூறி தனது திமிர் அது எவ்வளவு எச்சரிக்கை உணர்வோடு இருந்தாலும் வெளிப்படும் என்பதை நிரூபித்திருக்கிறார் நரவேட்டை நரேந்திர மோடி!

தினசரி மோடி தொடர்பாக குறைந்தது ஒரு காமெடி செய்தியாவது வந்து கொண்டிருக்கிறது. நரியைப் பரியென்று நம்பச் சொல்லி விட்டு பதிலுக்கு விமர்சனங்கள் வருகிறதே என்று அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி? காய்த்த மரங்கள் மட்டுமா, சொரி நாய்களும் தானே கல்லடி படும்? ‘பையன்கள்’ வளர்ந்து அறிவுடைய ஆளாக வேண்டும் என்று எல்லாம் வல்ல பாரத மாதாவை வேண்டிக் கொள்கிறோம்.

– தமிழரசன்

பாகிஸ்தானில் கௌரவக் கொலைகள் !

33

பாகிஸ்தானின் கில்கிட் பகுதியில் உள்ள சிலாஸ் சிறுநகரத்தை சேர்ந்த 15 மற்றும் 16 வயது நிரம்பிய சகோதரிகள் நூன் பஸ்ரா மற்றும் நூர் ஷெஸா இருவரும் அவர்களது தாயும் ஐந்து நபர்களைக்கொண்ட கூலிப்படையினால் ஜீன் 23 அன்று கொலை செய்யப்பட்டுள்ளனர். சகோதரிகளின் மாற்றந்தாய் மகனான குதோரே என்பவன்தான் இக்கொலைகளை செய்ய ஏற்பாடு செய்துள்ளாதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்கள் செய்த தவறு என்ன?

பஸ்ரா, சேசா
தமது வீட்டுக்கு வெளியில் மழையில் விளையாடியதை வீடியோ பிடித்த சகோதரிகள் கொலை செய்யப்பட்டனர்.

தாங்கள் சிரித்த முகமாய் மழையில் ஆடி மகிழ்ந்ததை அந்த சகோதரிகள் செல்போன் கேமிராவில் படம் பிடித்து நண்பர் வட்டத்தில் சுற்றுக்கு விட்டுள்ளனர். வீடியோவில் இருந்ததோ பாராம்பரிய உடை அணிந்த இரண்டு குழந்தைகள் சேரந்து விளையாடும், பார்ப்போர் உதட்டில் புன்னகை பூக்க வைக்கும் காட்சிகள்தான். ஆனால் பாகிஸ்தான மத வெறியர்களைப் பொறுத்த வரை, பெண்கள் ஆடுவது என்பது குடும்ப கௌரவத்திற்கும், இஸ்லாமிய மதத்திற்கும் இழுக்கானதாகும். அந்த இளம்பெண்கள் விளையாட்டாக செய்த இச்செயல் அவர்களுக்கு மரணத்தைத் தந்துள்ளது. சுற்றுக்கு விடப்பட்ட வீடியோவின் அடிப்படையில், அந்நகரத்தின் மூத்தவர்களில் பலர் அந்த பெண்களின் நடத்தையின் மீது சந்தேகத்தை எழுப்பியதுதான் இக்கொலைக்கான துவக்கம் என்கிறார் மனித உரிமை ஆர்வலர் அதியா ஜெஹன்.

இறந்த பெண்களின் மற்றொரு சகோதரன், கொலையை தூண்டிய குதோரேயின் மீதும், கொலையை செய்த கூலிப்படையினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளான். ஆனால் கொலைகாரர்களுக்கு எந்தவிதமான தண்டனையும் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் உண்மை.

பெண்களுக்கு எதிரான வன்முறை பாகிஸ்தான் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றது. பாகிஸ்தானில், பெண்களின் மீது ஏவப்படும் குற்றங்கள் அனேகம் வெளிவராமல் இருப்பதோடு, மதம் மற்றும் கலாச்சார காரணங்களுக்காக அக்கொடுஞ்செயல்கள் கண்டும் காணாமல் விடப்படுகின்றன. பல தற்கொலைகளாகவும், விபத்துக்களாகவும் சித்தரிக்கப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றன.

பாகிஸ்தானின் குற்றவியல் நீதி அமைப்பு, பெண்களுக்கு எதிரான இத்தகைய அத்துமீறல்களை சரியாக விசாரணை செய்வதும் இல்லை, குற்றங்களுக்கான தண்டனையும் வழங்குவதில்லை என்பதுதான் அங்கிருக்கும் நிலைமை. போலீசும் பெரும்பாலும் இத்தகைய அநீதிகளுக்கு ஆதரவாகவே நின்று குற்றவாளிகளை தப்பிக்க உறுதுணையாக இருக்கின்றனர். தப்பித்தவறி நீதிமன்ற வாசலுக்கு வரும் வழக்குகள் பொதுவாக ‘ஆணுக்கு கொலை செய்யும் உரிமையுண்டு’ என்ற மத அனுமதி சீட்டுடன் வெளியேற்றப்படுகின்றன.

“பாகிஸ்தானில் இஸ்லாமிய பிற்போக்குவாதிகளால் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் சில சம்பவங்கள் மட்டும்தான் எதிர்க்கப்பட்டு ஊடகங்களில் பதிவு செய்யப்படுகின்றன, அவைதான் நம் கண்ணில் படும் சில நூறு செய்திகள்” என்கிறார் அம்னெஸ்டி ஆஸ்திரேலியாவின் செய்தித் தொடர்பாளர் கேரன் ட்ரென்டினி.

1998 முதல் 2004 வருடங்களில் பாகிஸ்தானில் 4,000-க்கும் அதிகமான இத்தகைய சம்பவங்கள் பதிவாகியுள்ளன, 2,700 பெண்கள் 1,300 ஆண்கள் பலியாகியுள்ளனர். 2003 ஆம் ஆண்டு பஞ்சாபில் மட்டும் 1,261 பெண்கள் கௌரவக் கொலை செய்யப்பட்டனர். மனித உரிமை குழுக்களின் வருடாந்திர அறிக்கைப்படி, 2012 ஆம் ஆண்டு மட்டும் 943 பெண்கள் கௌரவக் கொலையினால் உயிர் இழந்துள்ளனர். அதில் 585 பெண்கள் கள்ள உறவு காரணமாகவும், 219 பெண்கள் அனுமதியின்றி திருமணம் செய்து கொண்டதற்காகவும் கொல்லப்பட்டுள்ளனர். 943 பேரில் 20 பேருக்கு மட்டும்தான் சாவதற்கு முன் மருத்துவ உதவி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  1. லாகூர் வாசியான சாமியா சர்வார் என்ற பாகிஸ்தானி பெண் அவளது கொடுமைக்கார கணவரை விவாகரத்து செய்துவிட்டு அவளது அத்தை மகனை மணக்க குடும்பத்தினரிடம் அனுமதி கோரினாள். மறுப்பு கிளம்பவே, குழந்தைகளை விட்டுவிட்டு அத்தை மகனுடன் அங்கிருந்து வெளியேறினாள். கொந்தளித்த சாமியா சர்வாரின் பெற்றோரும் அவரது அத்தையும் ஒன்றாக சேர்ந்து அப்பெண்ணை ஆள்வைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து புனிதத்தை காத்துக்கொண்டனர். இச்சம்பவம் 1999 ஏப்ரலில் நடந்தது, இதுவரை அப்பெண்ணைக் கொன்ற ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
  2. 2007-ல் தென் பாகிஸ்தான் பகுதியில் உள்ள டாது என்ற கிராமத்தில், கய்நத் சூம்ரோ என்ற 13 வயது சிறுமி நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். அவளால் ஏற்பட்ட அவமானத்திற்கு அவள் உயிரையே போக்க வேண்டும் என்று அக்கிராமத்து பெரியவர்கள் முடிவு செய்து அவளைக் கொல்ல உத்தரவு பிறப்பித்தனர். கய்ந்ததின் சகோதரன் குடும்ப கௌரவத்தை காப்பாற்றாமல் சகோதரியை பாதுகாத்து நின்றதற்காக கொல்லப்பட்டார். அவரது தந்தையும் படுதாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். கடந்த ஆறு வருடமாக காராச்சியில் வசிக்கும் கய்ந்ததும் அவளது குடும்பம் விடாமுயற்சியுடன் இன்றுவரை உயிரை கையில் பிடித்துக்கொண்டு நீதி கிடைக்க போராடி வருகிறார்கள்.
  3. 2008-ல் பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பதின்ம வயது சிறுமிகள், குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர். விளைவு உறவினர்கள் அவர்களை தீக்கு இரையாக்கினர். உயிருடன் அவர்கள் ஏற்படுத்திய இழுக்கு அவர்களை உயிருடன் கொளுத்தி, சீர் செய்யப்பட்டது.
  4. மார்ச் 2008-ல், பாகிஸ்தான் கயிர்பூர் மாவட்டத்தில் உள்ள ஹஜ்னா ஷாஎன்ற கிராமத்தில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்த தாஸ்லிம் காட்டூன் சோலங்கி என்ற 17 வயது பெண்ணின் ஒழுக்கத்தின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால், 8 மாத கர்ப்பவதியென்றும் பாராமல், மாமனாரின் ஏற்பாட்டின் பெயரில் சித்திரவதைக்கு ஆளாகி கொல்லப்பட்டார்.
  5. ஜனவரி 2009-ல், பாகிஸ்தானின் பாரம்பரிய நடனக்கலைஞரான ஷாபானா என்ற பெண்மணி, தாலிபான் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாகிஸ்தான், ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள மின்கோரா நகரின் முக்கியமான இடமான கிரீன் ஸ்குவேர் என்ற இடத்தில், தோட்டாக்களால் செல்லரித்த அவரின் உடல் மீது பணமாலை, அவரது நடன வீடியோ பதிவுகளைக்கொண்ட குறுஞ்தகடுகள் மற்றும் புகைப்படங்கள் போடப்பட்டு, ஊர் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
    இக்கொலையை தாலிபான் படைதான் செய்தது என்று ஒப்புக்கொண்டு வானொலியில் பேசிய தாலிபான் தலைவர் ஒருவர், எங்களுடைய அமைப்பு இத்தகைய ‘இஸ்லாமியமற்ற தீமைகளை’ பொறுத்துக்கொள்ள முடியாது என்று எச்சரித்திருக்கிறார். மேலும் மற்ற பெண்கள் நகரின் இத்தகைய நடன நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டால் ‘ஒவ்வொருவராக’ கொலை செய்யப்படுவார்கள் என்றும் மிரட்டியிருக்கிறார்.
  6. 27 ஏப்ரல் 2010 அன்று பெஷாவரை சேர்ந்த அய்மான் உதாஸ் என்ற பஷ்துன் பாடகி தன் உடன்பிறந்த சகோதரர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். அவரது விவாகரத்து, மறுமணத்திற்கான திட்டம், மேடைப்பாடகியான அவரது வாழ்க்கை முறை எல்லாம் சேர்த்து குடும்பத்துக்கும் மதத்துக்கும் தீங்கிழைக்கின்றன என்பதற்கான தண்டனை இது.
  7. 2012 மே மாதத்தில்,  கொஹிஸ்தான் மாவட்டத்தில், திருமணம் ஒன்றில் இரண்டு ஆண்கள் மத்தியில் கைத்தட்டி பாடிக்கொண்டு இருந்த 4 பெண்களை அப்பகுதியின் உள்ளூர் பழங்குடி பெரியவர்கள கொல்ல உத்தரவு பிறப்பித்து கொன்றும் விட்டனர். நீதிமன்றத்தில் அவ்வாறு ஒரு சம்பவம் நடை பெறவே இல்லை என்று வழக்கு விசாரணையை முடித்தும் விட்டனர். இருப்பினும் சர்வதேசிய மனித உரிமை பாதுகாப்பு நிறுவனமான அம்னேஸ்ட்டி அந்த விசாரணை பொய்யானது என்றும் அப்பெண்கள் கொல்லப்பட்டது உண்மை என்றும் கூறியுள்ளது.
  8. 2012 ஜூலை மாதம் பெண்கள் உரிமை ஆர்வலர் பரிதா அஃப்ரிதி பெண்கள் மனித உரிமை மேம்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காரணத்தால் பெஷாவாரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
  9. 2012 அக்டோபர் மாதம் தாலிபான் படை 15 வயது நிரம்பிய மலாலா யூசாப் என்ற சிறுமியை தலையிலும் கழுத்திலும் சுட்டனர். மருத்துவச் சிகிச்சையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார் மலாலா. தாலிபான் இரக்கமற்று பெண்கள் மீது ஏவும் அடக்குமுறைகளை எதிர்த்தும், முக்கியமாக சிறுமிகள் மற்றும் பெண்களுக்கான கல்வி வழங்கும் உரிமைகளை கோரி வந்ததுதான் அவரது குற்றம்.
  10. 2012 நவம்பர் மாதம் 15 வயதான அனுஷா, பெற்றோருடன் விதியில் நடந்து செல்கிறாள், எதிரே மோட்டார் சைக்கிளில் வந்துக்கொண்டிருக்கும் வாலிபனை எதேச்சையாக இரண்டு முறை திரும்பி பார்த்துவிடுகிறாள். இதை அவளது பெற்றோரும் கவனிக்கிறார்கள். வீட்டிற்கு சென்று ‘விசாரிக்கிறார்கள்’, நான் அதை வேண்டுமென்று செய்யவில்லை, இனிமேல் பார்க்கமாட்டேன் என்று அவள் கூறிமுடிப்பதற்குள் பெற்ற மகள் என்றும் பாராமல் ஈவுவிரக்கமின்றி அச்சிறுமியின் மீது அமிலத்தை ஊற்றி கொன்றுவிடுகின்றனர் தாய் ஜாஹினும் தந்தை முஹம்மது ஜாபாரும். சாகவேண்டியது அவளது விதி என்று கூறுகிறார் அனுஷாவின் தாய்.
கய்நாத் சூம்ரோ
பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட கய்நத் சூம்ரோவுக்கு கொலைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இப்படி எண்ணிலடங்கா கௌரவக் கொலைகளின் பட்டியலில், புதியதாய் சேர்ந்திருக்கிறது நடனம் ஆடியதற்காக சகோதரிகள் இருவர் கொலையுண்டு இருக்கும் இச்சம்பவம்.

1990 களில் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட கிசாஸ் மற்றும் தியாத் சட்டங்கள், குற்றத்தை பதிவு செய்யும் உரிமை முதல், கொலையாளியின் மீது குற்றம் சாட்டுவது அல்லது தியாத்படி நஷ்ட ஈடு கோருவது வரை, பெயரளவிலான உரிமைகளை மட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறது. இது நம்மூர் காப் பஞ்சாயத்தை ஒத்ததொரு கட்டபஞ்சாயத்துதான். கொடுரமான குற்றங்களை செய்தவர்களைக் கூட இந்த முறையினால், சட்டரீதியான மீளாய்விலிருந்து தப்புவிப்பதோடு மட்டுமல்லாமல், குற்றவாளியை தண்டிக்கும் உரிமையைக்கூட கட்ட பஞ்சாயத்தார் கைவசம் ஒப்படைக்கிறது.

குற்றவாளிக்கு கிசாஸ் முறையில் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கிய அதே வகையான தண்டனையை வழங்குவது அல்லது தியாத் முறையில் நட்ட ஈடு தொகையை நிர்ணயித்து பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது சட்ட பூர்வமான வரிசுக்கு அதை வழங்குவதாக உள்ளது.

பெரும்பாலும் சொந்த குடும்ப நபர்களால்தான் இத்தகைய கௌரவக் கொலைகளும், சித்திரவதையும் பெண்கள் மீது ஏவப்படுவதால், அதே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொலையாளியை மன்னித்து விடுவதும், அல்லது நட்ட ஈடு பணத்தை பெயருக்கு வாங்கிக்கொண்டு அவர்களுக்குள் பங்கிட்டு கொள்வதும்தான் நடக்கிறது. இறுதியில் கொலையாளிக்கு விடுதலை கிடைத்து விட, குடும்பத்தின் கௌரவமும் மதத்தின் புனிதமும் பேணிக் காக்கப்படுகிறது. இம்முடிவை கேள்வி கேட்கும் உரிமை கூட அரசுக்கு கிடையாது. இதுதான் இஸ்லாமிய மார்க்கம் தரும் சமூகநீதியின் யோக்கியதை.

தகப்பன், சகோதரன், கணவன், மகன், மாமன் என்று சகல வடிவிலான ஆண் உறவுகளும் நொடிப்பொழுதில் கொலை வெறித்தாக்குதலை தன் குடும்பத்து பெண்கள் மீது ஏவுவதற்கான உரிமையை அளித்திருக்கின்றன இந்த இஸ்லாமிய தேசத்தின் சட்டங்கள். ஜனநாயக சக்திகளுடன் பெண்கள் இணைந்து அரசியலிலிருந்து மதத்தை தூக்கியெறிய போராடாவிடில் இந்த புள்ளிவிவர எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதை தவிர்க்கவே முடியாது.

– ஜென்னி

மேலும் படிக்க

உணவுப் பாதுகாப்புச் சட்டம் : உணவைப் பிடுங்கும் பயங்கரவாதத் திட்டம் !

2

உணவுப் பாதுகாப்புச் சட்டம் : உழைக்கும் மக்களின் உணவைப் பிடுங்கி பன்னாட்டுக் கம்பெனிகளின் கையில் ஒப்படைக்கும் மறுகாலனியாக்க பயங்கரவாத சதித்திட்டம்!

04.07.2013 – பாகலூர்

தோழர் இரவிச்சந்திரன்
தோழர் இரவிச்சந்திரன் தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றவிருக்கும் உணவுப் பாதுகாப்புச்  சட்டம் என்பது மக்கள் விரோத சட்டம் என புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணியினர் மக்களிடையே பிரச்சாரம் செய்துவருகின்றனர். பல கிராமங்களில் நடத்தப்ப்பட்ட தெருமுனைப் பிரச்சாரத்தின் இறுதியாக 04.07.2013 மாலை 6.00 மணியளவில் பாகலூர் சர்க்கிளில் தெருமுனைக்கூட்டம் ஒன்றை நடத்தினர்.

இவ்வமைப்பின் பாகலூர் பகுதி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் அவ்வமைப்பைச் சேர்ந்த தோழர் சின்னசாமி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் பேசினார்.

“உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பதே உழைக்கும் மக்களின் உணவைப் பிடுங்கி பன்னாட்டுக் கம்பெனிகளின் கையில் ஒப்படைக்கும் மறுகாலனியாக்க பயங்கரவாத சதித்திட்டம்! பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டுவரும் இந்த சட்டத்தை ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்புச் சட்டமாக ஓட்டுக் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், இது உண்மையல்ல. இது பல கொடிய விசப் பாம்புகளைப் போன்ற ஆபத்துகளை தனது மடியில் மறைத்துவைத்துள்ளது. அவற்றில் மிக முக்கியமான ஆபத்து இந்த சட்டத்தின் படி இனி உழைக்கும் மக்கள் அனைவரும் ரேசன் கடைகள்மூலம் உணவு தானியங்களை மானிய விலையில் வாங்க முடியாது. அதாவது சந்தை விலைக்குதான் வாங்க வேண்டும். ரேசனில் ரூ.1 அல்லது இலவசமாக வழங்கி வந்த அரிசி இனி சந்தையில் ரூ.50 கொடுத்துதான் நீங்கள் வாங்க வேண்டும். இதுவும் தனியார் முதலாளிகளின் லாபவெறிக்கு ஏற்ப பின்னர் விலையேற்றப்படும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் விழிப்படைந்துப் போராடி முறியடிக்க முன் வர வேண்டும்” என பேசினர்.

bagalur-3ஏராளமான மக்கள் கடை வியாபாரிகள், பேருந்துப் பயணிகள் கூடி நின்று கவனித்துச் சென்றனர்.

இந்தப் பிரச்சார இயக்கத்தின் போது உணவுப் பாதுக்காப்புச் சட்டத்தின் கொடூரம் உழைக்கும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் விரிவாக உணர்த்தப்பட்டது. விவசாயிகள் மத்தியில் இது இந்தப் பிரச்சாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தெலுங்கு, கன்னட தாய்மொழிப் பின்னணி கொண்ட இக்கிராமங்களில் மக்கள் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் கூட குறைவு. காங்கிரசை விட்டால் பாஜக என்ற இரு கட்சிகளை மட்டும் அதிகம் அறிந்துவைத்துள்ளவர்கள் தான். குறிப்பிட்ட இந்த இரு நாட்கள் பாராளுமன்றத்தில் இது குறித்த செய்திகள் ஊடங்களில் இடம் பெற்று வந்ததால் மக்கள் நமது பிரச்சாரத்தைக் முழுமையாக கேட்டனர். உணவுப் பாதுகாப்புச் சட்டம் குறித்து மக்களிடம் விவாதத்தை இந்தப் பிரச்சாரம் ஏற்படுத்தியுள்ளது. பிரசுரத்தில் உள்ள பல அம்சங்களை விவசாயிகள் எடுத்து வைத்து பேசினர். தொழிலாளர்கள் மத்தியில் இந்தப் பிரச்சனைகள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பாராளுமன்றத்தில் விவாதத்தை நடத்துவது என்ற சடங்கைக் கூட கடைப்பிடிக்காமல் மன்மோகன் அரசு அவசர அவசரமாக இந்தச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவரும் நிலையில் வி.வி.மு., பு.ஜ.தொ.மு. மேற்கொண்ட இந்த பிரச்சர இயக்கம் மக்கள் மத்தியில் இவர்களது நாடகத்தைத் தோலுரித்துக் காட்டுவதாக இந்த பிரச்சார இயக்கம் அமைந்தது.

அஞ்செட்டி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சார இயக்கம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள அஞ்செட்டி ஒன்றியத்தில் செயல்படும் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக “உணவுப் பாதுகாப்புச் சட்டம், தேசிய நதிநீர்க் கொள்கை, புதிய விதைச் சட்டம்: விவசாயிகளை ஒழித்துக் கட்டவரும் மறுகாலனியாக்கச் சதித் திட்டங்களை முறியடிப்போம்!” என்ற தலைப்பில் மக்களிடம் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டனர்.

இப்பிரச்சார இயக்கத்தின் முடிவாக மே 17ம் தேதி அஞ்செட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசு அனுமதி கோரினர். ஆனால், பகுதியில் 32 (போலீசு) சட்டம் நடைமுறையில் இருப்பதாகக் கூறி போலீசு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்துவிட்டது. மீண்டும் ஜூன் மாதம் 22ம் தெதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய போது மீண்டும் இதே காரணத்தைக் கூறி மறுத்துவிட்டது. இந்த மாதம் முழுவதும் கொடுக்க இயலாது என்றது. அடுத்து ஜூலை 5-ம் தேதி நடத்த அனுமதி கோரிய போது, மீண்டும் இதே காரணத்தைக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்துவிட்டது. மேலும், ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நீங்கள் வேண்டுமெனில் ஓசூர், கிருஷ்ணகிரியில் நடத்திக்கொள்ளுங்கள் என்று திமிரடியாக பதிலளித்துவிட்டது.

துண்டறிக்கை
17.06.2013 அன்று நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கான துண்டறிக்கை.

நாட்டின் மக்களைச் சூறையாட வருகின்ற உணவுப்பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான இப்பிரச்சார இயக்கத்தில் பல கிராமங்களில் தெருமுனைக் கூட்டங்கள் போடப்பட்டன. சில கிராமங்களில் உள்ளூர் அளவிலான விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த விளக்கக் கூட்டங்களின் போதும், தெருமுனைக் கூட்டங்களின் போதும் மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

“உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது மக்களுக்கு நன்மைப் பயக்கும் சட்டம் என்பதாக நினைத்திருந்தோம். ஆனால், ரேசன் கடைகளை இழுத்துமூடுவதற்கான சதித்திட்டம் என்பதை இப்பொழுதுதான் உணர்கிறோம். இனி, மளிகைக் கடைமுதல் பெட்டிக்கடை, சாதாரண டீக்கடை, தள்ளுவண்டி வியாபாரம் வரை எதையும் செய்ய அனுமதிக்கமாட்டார்கள் என்பதை நினைக்கும் போது இந்த அரசியல்வாதிகளுக்கு இதுதான் வேலையா” என்று கோபத்துடன் விவரமறிந்தவர்கள் பேசினர்.

விவரமறியாத சாதாரண மக்கள் வி.வி.மு.வின் இந்த பிரச்சாரம் மூலம் விழிப்படைந்தனர். “இப்படி ஒரு அபாயத்தை உங்களது அமைப்புதான் மக்களிடம் கொண்டு வந்து சொல்கிறது” என்று தெரிவித்தனர். விவசாயிகள் என்ற வகையில் நாம் ஒன்றாக சேரவேண்டும் என்ற வி.வி.மு.வின் அறைகூவலில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்டு பல்வேறு சாதியினர் பேசினர். பிற அரசியல் கட்சிகளில் உள்ள எல்லா உள்ளூர் தலைவர்களும் “எங்க தலைமை இதில் கலந்து கொள்ள வேண்டாம் என்கிறது. இருப்பினும் நீங்கள் செய்வதுதான் சரி” என்று நம்முடைய இந்தப் பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் துண்டறிக்கை
05.07.2013 அன்று நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கான துண்டறிக்கை.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற கொடிய சட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, போலீசு ஆட்சியை மக்கள் மீது திணிக்கிறார்கள் என்றால், இது போன்ற மறுகாலனியாக்க சட்டங்கள் நடைமுறையில் வந்தால் ஒட்டுமொத்த கொஞ்சநஞ்ச பேச்சுரிமைகளையும் பறித்துவிடுவார்கள் என்பதை மக்களுக்கு உணர்த்தி வி.வி.மு. தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

துண்டுப் பிரசுரம் :

அன்பார்ந்த விவசாயிகளே! உழைக்கும் மக்களே!

பாராளுமன்றத்தில் தற்போது அவசரமாக விவாதிக்கப்பட்டு வரும் உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பதாக ஓட்டுக் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், இது உண்மையல்ல. இது பல கொடிய விசப் பாம்புகளைப் போன்ற ஆபத்துகளை தனது மடியில் மறைத்துவைத்துள்ளது. அவற்றில் மிக முக்கியமான ஆபத்துக்களை கீழே கொடுத்துள்ளோம்.

இந்த சட்டத்தின் படி இனி ரேசன் கடைகள்மூலம் உணவு தானியங்களை மானிய விலையில் வாங்க முடியாது. அதாவது சந்தை விலைக்குதான் வாங்க வேண்டும். ரேசனில் ரூ.1 வழங்கி வந்த அரிசி இனி சந்தையில் ரூ.50 கொடுத்துதான் நீங்கள் வாங்க வேண்டும்.

அடுத்து, இந்தத் தொகையை உங்களுக்கு என ஒரு வங்கிக் கணக்கை உருவாக்கி அந்த வங்கிக் கணக்கில் அரசு செலுத்திவிடுமாம். இதனை எடுத்துக் கொண்டு போய் நீங்கள் அரிசி வாங்கிக் கொள்ளவேண்டுமாம்!

துண்டுப் பிரசுரம்
துண்டுப் பிரசுரம்

மேலும், பொருட்களை வீட்டிற்கு கொண்டுவந்து கொடுக்கும்முறை இதில் கொண்டுவரப்படுகிறது. ஆகையால், நீங்கள் இனி ரேசன் கடைக்குப் போகவேண்டி இருக்காது. இதற்குரிய வகையில் ரேசன் கடைகள் மாற்றியமைக்கப்படும்.

பாம்பு படமெடுத்து காட்டுவது அழகாக இருப்பதால் அதனை பிடித்துக் கொஞ்ச முடியுமா? முடியாது. உணவுப்பாதுகாப்புச் சட்டம் குறித்து ஓட்டுக்கட்சிகள் எல்லோருமே மேற்கண்டவாறு பிரச்சாரம் செய்வதும் அதுபோன்றதுதான்!

நடைமுறையில் சாத்தியமா? சற்றே சிந்தித்துப் பாருங்கள்! ஏற்கனவே, புழுத்த அரிசியை ஒழுங்காகக் கொடுப்பதில்லை. முதலில் வருபவர்கள் மட்டும் வாங்கமுடியும். அதுவும் முழுமையாகக் கிடைக்காது. ரேசனில் காசிருக்கும்போது கோதுமை, அரிசி கொடுக்கமாட்டார்கள். இந்த நிலையில் இனி ரேசன் கடையே இருக்காது என்பதுதான் உண்மை.

செல்ஃபோனில் போட்டக் காசு உடனே கரைந்துவிடுகிறது. ஏன் என்று அந்த நிறுவனத்தை நம்மால் கேட்கமுடிவதில்லை. நம்மில் பலரும் ஏதாவது ஒரு பட்டனை அழுத்தி ஏமாந்துவிடுகிறோம். இந்த நிலையில் ஒவ்வொருவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு தொடங்கி அதில் பணம் போட்டால் யார் கணக்குப் பார்ப்பது; விவசாயிகளையும் ஏழைகளையும் கொள்ளையடிப்பதற்கு இது மிகவும் சிறந்த வழி என்பதால் கொண்டுவந்துள்ளார்கள் என்பதே உண்மை!

இது மட்டுமல்ல, எல்லாருக்கும் வங்கிக் கணக்கு வந்த பின்னர், சாதாரண கூலி வாங்குவது, சம்பளம் வாங்குவது, வியாபாரங்கள் என அவசரத்திற்கு கொஞ்சம் கூட கையில் காசு இருக்காது. மேஸ்திரிக்கு வாரத்திற்கு ஒருமுறை செய்யப்படும் சம்பளத்தை கையோடு வாங்கினால்தான் முடியும் என்ற நிலைமை இப்போது இருக்கிறது. நாளை வாங்கிக் கொள்ளலாம் என்று தள்ளிப்போனால், அடுத்த வாரம் வரை முதலாளி இழுத்தடித்து விடுகிறான். இந்நிலையில் இவை வங்கிக்கணக்கின் மூலம் பட்டுவாடா செய்யப்படும் நிலைமை வந்தால் என்ன ஆகும்?!

ரேசன் கடை மூலம் இனி விநியோகம் செய்யமாட்டார்கள். இதன் பொருள் என்னவெனில் ரேசன் கடைகளை இழுத்து மூடுவதுதான். இதற்கு பதிலாக ஊருக்கு ஊர் வால்மார்ட் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் மூலம் கடை நடத்துவார்கள். அதில் அவன் விற்கும் விலைக்கு நாம் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இதுதான் நடக்கப் போகிறது! மேலும், சாதாரண மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள் வரை அனைத்து சிறுவர்த்தகங்களும் ஒழிக்கப்பட்டு விடும்.

இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு மக்கள் வரிப்பணத்திலிருந்து ரூ.1,25,000 கோடி ஒதுக்கியுள்ளது. இதனை பன்னாட்டுக் கம்பெனிகளும் உள்நாட்டு தரகு முதலாளித்துவ கம்பெனிகளும் கொள்ளையடித்து போக இருக்கின்றனர்!

இது மட்டுமல்ல, இந்திய உணவுக் கழகத்திலிருந்து (அரசாங்க உணவு தானியக் கிடங்கு) பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு 1.05 கோடி டன் தானியங்களை கொடுக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டது. இந்த தானியங்களை தனியார் முதலாளிகள் மூலம் கடைகளுக்கு மினுக்கும் பாக்கெட்களில் கொண்டுவந்து விற்பார்கள். இதன் மூலம் தங்கள் விருப்பம் போல விலையேற்றி இந்த தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு வங்கித்துறை சீர்த்திருத்தச் சட்டம், ஆதார் அட்டைத் திட்டம், உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம்; சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு (வால்மார்ட்டை அனுமதிப்பது) போன்ற பல கொடிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இவை ஒவ்வொன்றும் பல கோடி மக்களை கொன்று குவிக்கும் கொடிய சட்டங்கள்!

ஆகையால், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது உழைக்கும் மக்களின் உணவைப் பிடுங்கி பன்னாட்டுக் கம்பெனிகள் கையில் ஒப்படைக்கும் மறுகாலனியாக்க பயங்கரவாத சதித்திட்டம்! இதனை எதிர்த்து முறியடிக்காவிட்டால் அடுத்து வரும் காலங்களில் நாம் உணவுக்கே தத்தளித்து சாகும் நிலைமை ஏற்படும்! அதுமட்டுமல்ல, உரிமைகள் எல்லாம் இழந்து நவீன கொத்தடிமைகளாக அலைய நேரிடும்!

இவ்வளவு கொடிய சட்டத்தை நிறைவேற்ற பி.ஜே.பி,. சி.பி.ஜ., சி.பி.எம். உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகளும் காங்கிரசுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துவிட்டன. துரோகிகள் எல்லோரும் நம்மீது கொடிய தாக்குதலை தொடுக்க இருக்கிறார்கள். எதிர்த்து முறியடிக்க உழைக்கும் மக்கள் என்ற வகையில் நாம் ஒன்றிணைய வேண்டும்! விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் அதிகாரத்தை வழங்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரளவேண்டும்!

உழைக்கும் மக்களே!

நாட்டின் உணவுத் தற்சார்பை ஒழிக்கவருவதுதான் உணவுப் பாதுகாப்புச் சட்டம்!
உழைக்கும் மக்களின் உணவைப் பிடுங்கி பன்னாட்டுக் கம்பெனிகள் கையில் ஒப்படைக்கும் மறுகாலனியாக்க பயங்கரவாத சதித்திட்டம்!

மறுகாலனியாக்க பயங்கரவாதத்தை முறியடுப்போம்!

விவசாயிகளுக்கு அதிகாரத்தை வழங்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
——————————————————————————————————————————–
தகவல்
: விவசாயிகள் விடுதலை முன்னணி, பாகலூர்

உத்தரகாண்ட் : ஆன்மீக சுற்றுலாக்களால் கொல்லப்பட்ட பக்தர்கள் !

52

சென்ற மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு இவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான மீட்புப் பணிகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மோசமாகும் வானிலையும், தொடரும் மழையும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றன.

உத்தரகாண்ட் வெள்ளம்எத்தனை ஆயிரம் பேர் இறந்திருப்பார்கள் என்று இன்னமும் மதிப்பிடப்படாத நிலையே நீடித்து வருகிறது. இந்திய விமானப்படையும் இராணுவமும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மீட்புப்பணியின் போது ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

மேக வெடிப்பு காரணமாக கடல் மட்டத்திலிருந்து 14,200 அடி உயரத்தில் உள்ள வசுகிடால் பனிப்பாறை ஏரியில் நிரம்பிய நீர் 11,755 அடி உயரத்தில் உள்ள கேதார்நாத்தை அடைந்து மொத்த ஊரையும், கோவிலையும் துவம்சம் செய்தது. கோயில் சுடுகாடு போல காட்சியளித்தது. ருத்ர ப்ராயக், உத்திரகாசி, சமேலி, பிதோராகர் மாவட்டங்கள் என 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பேரழிவு ஏற்பட்டிருந்தது. கேதார்நாத் கோவிலின் பிரதான மேற்குச் சுவரே காணாமல் போய் விட்டது. வெள்ளத்தின் கோர தாண்டவத்தை பார்த்த பக்தர்கள், அதனை ருத்ர தாண்டவம் போல இருந்ததாகத்தான் சொல்கிறார்கள். உத்தரகாண்ட் மாநிலம் முழுவதிலும் கிட்டத்தட்ட 233 கிராமங்கள் அழிந்துள்ளன. 1307 சாலைகளும் 147 பாலங்களும் காணாமல் போயிருக்கின்றன.

பெருமளவு உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பது பத்ரிநாத்திலும், கேதார்நாத்திலும்தான். ரிஷிகேஷிலிருந்து 223 கிலோமீட்டர் தூரத்தில் மந்தாகினி ஆற்றின் முகத்துவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 11,700 அடி உயரத்தில் கேதார்நாத் அமைந்துள்ளது. 2001 கணக்கெடுப்பின்படி இங்கு 479 பேர் வசிக்கின்றனர். சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத்தில் 841 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். ஆனால், இந்த இடத்துக்கு வரும் புனித யாத்திரிகர்களின் எண்ணிக்கை 2006 சீசனில் மட்டுமே 6 லட்சமாக இருந்தது.

பக்தி சுற்றுலா என்ற பெயரில் சென்னை போன்ற பெருநகரங்கள் முதல் பட்டி தொட்டிகள் எல்லாம் பரவியுள்ள ஏஜெண்டுகள் தலா ஒருவருக்கு 6 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். ரயில் போக்குவரத்து, வீட்டு உணவு, தங்குமிடம் போன்றவற்றை கூட்டாக ஏற்பாடு செய்து தருவதாக அழைத்துச் செல்கின்றனர். கூடுதல் விருப்பமும், வசதியும் உடையவர்கள் இன்னும் அதிகம் செலவழித்து சொகுசான ஹோட்டல்களில் தங்கிக் கொண்டு சிறப்பு உணவுகளை வாங்கிக் கொள்ளலாம்.

புனித யாத்திரை போவதற்கான பொருளாதார வலு இருக்கும் லட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரை இந்த ஆன்மீக சுற்றுலாத் துறை குறி வைக்கிறது. கி.பி. 9-ம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் போன இடம், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் போய் வரும் இடம் என்று அதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணியையும் கட்டமைக்கிறார்கள். உண்மையில், நவீன போக்குவரத்து வசதிகள் வந்த 19-ம் நூற்றாண்டுக்கு முன்பாக, பெரும்பான்மை மக்கள் இத்தகைய யாத்திரைகள் போயிருக்க வாய்ப்பே இல்லை. ஆதி சங்கரர் போன்ற ஒரு சில பார்ப்பன சாமியார்கள், கனவில் கூட இங்கெல்லாம் சென்றிருக்க வாய்ப்பில்லை.

uttarakhand_floods_rains20-ம் நூற்றாண்டின் அறிவியலும், தொழில் வளர்ச்சியும் உருவாக்கிய கட்டமைப்பு வசதிகளும், நடுத்தர வர்க்கத்திடம் சேர்ந்திருக்கும் செல்வச் செழிப்பும் புனித சுற்றுலா போகும் கணிசமான எண்ணிக்கையினரை சாத்தியப்படுத்தியுள்ளன. அவர்களை முன் வைத்து சந்தைப்படுத்தப்படும் ஆன்மீக சுற்றுலாக்கள் இந்த பேரழிவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்ததோடு, சுற்றுலா சென்ற ஆயிரக்கணக்கான மக்களை உயிர்ப்பலி வாங்குவதில் முடிந்திருக்கின்றன.

இப்போது உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை சோட்டா சார் தாம் (நான்கு புனிதத் தலங்கள் – சிறியவை) என்று அழைக்கப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் உள்ள பத்ரிநாத்தின் முக்கியத்துவத்துக்கு தேவ பிரயாகை, ருத்ர பிரயாகை, கர்ண பிரயாகை, நந்த பிரயாகை, விஷ்ணு பிரயாகை என்று பெயர் சூட்டப்பட்ட நதித் துறைகளும், மகாபாரதத்தில் பாண்டுவும் மாத்ரியும் தவம் புரிந்த பாண்டு கேஷ்வர், பாண்டவர்கள் சொர்க்கத்துக்குப் போகும் வழியில் தங்கிய இடம், பீமனும் ஹனுமானும் சந்தித்த இடம் என்று பல புராண, இதிகாச புரட்டு கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் விஷ்ணு தவம் புரிந்த போது மகாலட்சுமி பாதாரி மரமாக மாறி அவருக்கு காவல் புரிந்ததாகவும் அதனால் விஷ்ணு பதாரி நாத் என்று அழைக்கப்படுகிறார் என்று நாக்கூசாமல் அளந்து விடுகிறார்கள். விஷ்ணு நர, நாராயண வடிவங்களை நாரதருக்கு காட்டியதும் இங்குதானாம். சாலிகிராமத்தால் செய்யப்பட்ட பத்ரி நாராயணன் பதாரி மரத்தின் கீழ் குபேரனும், கருடனும் சூழ வீற்றிருக்க, மகாலட்சுமி சந்நிதி வெளியில் உள்ளது. இத்தனை கடவுள்கள் இருந்தும் வெள்ளத்தில் மூழ்கிச் செத்த பக்தர்களை காப்பாற்ற வக்கில்லை.

வனப் பிரஸ்தம் என்று பணி ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையில் செய்யும் சில அர்த்தமுள்ள நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த புனிதத் தலங்களுக்கு போய் வருவதை நடுத்தர வர்க்க மக்கள் கருதுகிறார்கள். அதன் மூலம் தமது பாவங்களை சுத்தப்படுத்தி, பரலோக வாழ்க்கைக்கு தயார் செய்வதாக நம்புகிறார்கள்.

ஆனால், யாத்திரை போகும் போது நிஜ உலகம் அவர்களை எதிர் கொள்கிறது. தாம் நினைத்தது போல ஆன்மீக பரவசமோ, இறை அனுபவமோ வேறு எந்த புண்ணாக்குமோ கிடைக்கவில்லை என்பதை உணர்கிறார்கள். ஆனால், உண்மையை வெளியில் சொல்வதை அவர்களுக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் நம்பிக்கைகளும் சரி, அவர்களது சமூகச் சூழலும் சரி அனுமதிப்பதில்லை. இறுதியில் தாங்கள் பார்த்து பரவசப்பட்டதாக கருதிய தருணங்களை, புனிதத் தலங்களைப் பற்றி நண்பர்களிடமும் உறவினர்களிடமும் இட்டுக் கட்டி பேசுவதற்கு உதவும் ஒரு நிகழ்வாக இத்தகைய பயணங்கள் சுருங்கி விடுகின்றன. அப்படி பேசுவதை கேட்கும் உறவினர்களும் நண்பர்களும் அடுத்த சுற்றுப் பயணத்துக்கு புறப்படத் தயாரிக்கப்படுகிறார்கள்.

Uttarakhandமிகவும் பலவீனமான மலைப்பகுதியான இப்பகுதியில் உள்ள பாறைகள் நடந்து செல்லும் போதே பல இடங்களில் உடைந்து உதிரும் தன்மையை உடையவை. மேற்குத் தொடர்ச்சி மலையை போல இவை கடின வகைப் பாறைகள் அல்ல. இங்கு சுமார் 18 பெரிய மற்றும் சிறிய நதிகள் உற்பத்தியாகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் 9 முறை வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இத்தகைய மலைப்பகுதியில் வாகனங்களை செல்வதற்கு அனுமதிப்பது என்பதே தற்கொலைக்கு சமமானதுதான். இங்குதான் சிவன் இருந்தான் என்று சொல்லி கோவிலை நிர்மாணித்ததற்கும் சாலைகளை அமைத்து பெரும் வாகன எண்ணிக்கைகளை அனுமதித்தற்கும் பக்தி என்ற பெயரில் நடக்கும் வியாபாரம்தான் முழுமுதல் காரணம்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் மக்கள் தொகையே ஒரு கோடியாக இருக்கும் போது, வரும் யாத்ரிகர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3 கோடி. ஆண்டுதோறும் சுற்றுலாத்துறையில் ஏறக்குறைய 140% வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் இம்மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட பத்து மடங்கு உயர்ந்துள்ளது.

வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து தங்கும் விடுதிகள், சிறு கடைகள், உணவகங்கள் சக்கை போடு போட ஆரம்பித்தன. 32 புண்ணிய தலங்கள் உள்ள உத்தர்காண்டின் சுற்றுலாத் துறை வருமானம் மட்டுமே ஆண்டுக்கு ரூ.12,000 கோடியாகும்.

இப்போது நடந்துள்ள இயற்கை பேரழிவில் பெரிய உணவகங்கள் மட்டும் 100 வரை காணாமல் போயிருப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் கூறுகிறது. கங்கை, பகீரதி, அலக் நந்தா, மந்தாகினி போன்ற நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குதான் இதற்கு காரணம். ஏற்கெனவே கடந்த பிப்ரவரி 26-ம் தேதி உச்சநீதி மன்றம் கங்கை நதியின் கரையிலிருந்து 200 மீ தூரத்துக்குள் இருக்கும் கட்டிடங்களை இடிக்க உத்திரவிட்டுள்ளது.

நொறுங்கும் பாறைகளைக் கொண்ட இமயமலையில் சாலை அமைத்து, ஆற்றங்கரையில் விடுதிகள் கட்ட அனுமதி தந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யாமல் அலட்சியம் செய்தது அரசு. இவை அனைத்தையும் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி அனுமதித்த அரசு இப்போது மீட்புப் பணிகளில் விமானப் படையை ஈடுபடுத்துவதன் மூலம் மீட்பு பணியின் பெயரால் தேச ஒற்றுமையை கட்டுவதாக பிரச்சாரம் செய்கிறது.

ஒரு மேக வெடிப்புக்கே தன் மேல வாசலை இழந்து விட்ட சிவனோ கேதார்நாத்தில் மலைப்பிரதேசத்தில் குளிருக்கு நடுங்கியபடி அம்மணமாக நிற்கிறான். கம்பளி கொடுக்கத்தான் ஆளில்லை. பார்ப்பன இந்து மதத்தின் மூடநம்பிக்கைதான் உத்தரகாண்டில் மக்கள் சாவதற்கு காரணம் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். ஆன்மீக சுற்றுலாக்கள் இப்பகுதியில் தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் வருடா வருடம் வெள்ளத்தில் கொல்லப்படும் மக்களை சிவனால் மட்டுமல்ல இந்திய அரசாலும் காப்பற்ற முடியாது.

மேலும் படிக்க

மே 17 இயக்கம் : சாதி வெறியை கண்டிப்போம் ! ஆனா கண்டிக்க மாட்டோம் !!

73

பாமகவின் வன்னிய சாதிவெறிக்கு பலியான இளவரசன் மரணம் குறித்து மே 17 இயக்கம் வெளியிட்டிருக்கும் சுவரொட்டியை பார்த்தோம். இது இணையத்திற்காகவோ இல்லை வெளியே ஒட்டுவதற்காகவோ தயாரிக்கப்பட்டிருக்கலாம். அதில் இடம்பெற்றிருக்கும் முழக்கங்களை கீழே படிக்கலாம்.
_________________________

posterசாதீய பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட இளவரசன் சொல்லிச் சென்றது என்ன?
இளவரசன் – சாதி பெயர் சொல்லி கட்சி வளர்ப்பவன் தமிழின துரோகி என புரிய வைத்து சென்றவன்.
இளவரசன் – சாதி வெறியர்களை தனிமைப்படுத்துங்கள் என்று சொல்லிச் சென்றவன்.
இளவரசன் – சாதிய பயங்கரவாதத்தை உணர்த்தியவன், தமிழ் சமூக மௌனத்தால் மரணித்தவன்.
இளவரசன் – நம் சமூகத்தின் பாராமுகத்தை வெளிப்படுத்தியவன்.
இளவரசன் – அரசியல் அமைப்புச் சட்டம் தோல்வி அடைந்தது என்று உணர்த்தியவன்.
இளவரசன் – தன் காதல் நாடக காதல் அல்ல, தூய்மையானது என்று நிரூபித்தவன்.
இளவரசன் – சாதி, ஒடுக்கும் அரசின் பங்காளி என புரிய வைத்தவன்
இளவரசன் – சாதி ஒழிக்கப்பட வேண்டியது, உரிமை மீட்கப்பட வேண்டியது என்று சொல்லிச் சென்றவன்.

“சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்”. உயர்வு தாழ்வு போதிக்கும் சாதி அடையாளத்தை மறுப்போம், தமிழராய் ஒன்றிணைவோம்.

மே பதினேழு இயக்கம்.
________________________________
இனி நமது விமரிசனம்.

சீமானுக்கு சொன்ன விளக்கம் பெரும்பாலும் இங்கேயும் பொருந்தும் என்றாலும் சிலவற்றை சுருக்கமாக பார்க்கலாம்.

சாதீய பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட இளவரசன் எனும் தலைப்பே பாமக சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட அல்லது தற்கொலை செய்து கொண்ட இளவரசன் என்ற உண்மையை மறைப்பதோடு திசை திருப்புகிறது. இளவரசன் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தில் கூட அடுத்த ஜென்மத்திலாவது ஒரே சாதியில் பிறந்து திருமணம் செய்வோம் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்த அளவு நிகழ்கால பாமகவின் ஆதிக்க சாதிவெறி அவரை அச்சுறுத்தியிருக்கிறது. இளவரசன் எதற்கு அஞ்சினாரோ, எந்த சாதி வெறியர்களை வெல்ல முடியாது என்று விரக்தியடைந்தாரோ அதே சாதிவெறியை பெயரிட்டு கண்டிப்பதற்கு மே 17-ம் அஞ்சுகிறது.

ஈழத்தமிழ் மக்களின் இனப்படுகொலை, பேரினவாதம்தான் கொன்றது என்ற உண்மையை சொல்லிச் சென்றது, பேரினவாதிகளை தனிமைப்படுத்துங்கள் என்றது, பேரினவாதத்தின் பயங்கரவாதத்தை உணர்த்தியது, பேரினவாதத்தை ஒழிக்கப்பட வேண்டியது என்பதை உலகிற்கு உணர்த்தியது என்று எழுதுவதற்கும் இங்கே மே 17 சாதீய பயங்கரவாதம் குறித்து எழுதியதற்கும் வேறுபாடு உண்டா?

இதையே குஜராத் முசுலீம் மக்களின் இனப்படுகொலை, மதவெறிதான் கொன்றது என்ற உண்மையை சொல்லிச் சென்றது, மதவெறியை தனிமைப்படுத்துங்கள் என்றது, மதவெறி ஒழிக்கப்படவேண்டியது என்பதை உணர்த்தியது என்றும் சொல்லலாம்.

ஆக இந்துமதவெறி, சிங்கள இனவெறி என்று குறிப்பிட்டு சொல்லாமல் பொதுவாக சொல்வது மட்டும் எப்படி ஒரு ஏமாற்றோ அது போலத்தான் வன்னிய சாதிவெறி என்று சொல்லாமல் சாதியம் என்று மட்டும் பேசுவது. இதனால் சாதியம் குறித்து பொதுவாகவே சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒரு பிரச்சினையின் குறிப்பான காரணத்தை சொல்லிவிட்டே பொதுவான அடிப்படைகளை பேசவேண்டும்.

சாதிப்பெயர் சொல்லி கட்சி வளர்ப்பவன் தமிழின துரோகி என்று சொல்லும் மே 17 இயக்கம் சாதிவெறி கொண்ட கட்சியை சொல்ல மறுப்பதுதான் தமிழின உணர்வு என்கிறதா ? இங்கே இளவரசன், திவ்யாவை பிரிப்பதற்காக பல மாதங்களாக பல்வேறு சதி வேலைகளை செய்து வந்த பாமகவின் வன்னிய சாதி வெறியர்கள்தான் இளவரசனது மரணத்திற்கு முதற் காரணம். அப்பேற்பட்ட பாமவை கண்டிக்க மே 17 பயப்படுகிறது என்பதுதான் பாமகவின் பலம். இங்கே மே 17 அவர்களை பெயரிட்டு சொல்ல அஞ்சுகிறது. இளவரசன் இவர்களை நேரிட்டு எதிர் கொண்டு வாழ முடியாது என்று சோர்ந்து ‘தற்கொலை’ செய்து கொண்டார்.

அந்த வகையில் இளவரசன் இந்த சமூகத்தைப் பார்த்து நம்பிக்கை கொள்ளாமல் இருந்ததற்கும் மே 17 போன்றவர்களும் ஒரு காரணமில்லையா? வன்னிய சாதிவெறியை வெளிப்படையாக கண்டிக்க முன் வராத இவர்கள் சமூகத்தின் பாராமுகத்தால் இளவரசன் இறந்து போனதாக சொல்லுவது எந்த விதத்திலும் நியாயமில்லை. தமிழ் மக்களின் மவுனத்தால்தான் இளவரசன் மரணமடைந்தார் என்றால் அந்த மவுனத்தில் மே 17-ம் இருக்கிறது என்கிறோம். மக்களுக்கு உபதேசிக்கும் முன் இவர்கள் தங்களுடைய நடவடிக்கை அதற்கு முரண்பாடாக இருப்பதை ஏன் பார்க்கவில்லை?

இளவரசன் மரணம் என்றில்லை, தேவர் சாதிவெறி என்று கண்டிக்காமல் பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டிக்க முடியுமா, இல்லை கொடியங்குளம் ‘கலவரத்தைதான்’ கண்டிப்பதாக சொல்ல முடியுமா? முருகேசன் கொலையை தேவர் சாதிவெறி செய்தது என்று சொல்வதற்கும் சாதீய பயங்கரவாதம்தான் என்று சொல்வதற்கும் வேறுபாடு இல்லையா? எது சரி என்பது இவர்களுக்கு பிரச்சினை இல்லை. எது பாதுகாப்பானது, எது பிரச்சினையற்றது என்பதே இவர்களுக்கு முக்கியம்.

சீமானோ, மே 17 இயக்கமோ இப்படி தேவர் சாதிவெறி, வன்னிய சாதிவெறி என்று குறிப்பிட்டு கண்டிக்க முடியாததற்கு என்ன காரணம்? அப்படிக் கண்டித்தால் இவர்கள் திரட்டும் தமிழின உணர்வு கலைந்து விடும் என்று பயப்படுகிறார்கள். வன்னிய சாதி வெறி என்று கண்டித்தால் இவர்கள் நடத்தும் ஈழத்தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வன்னியர்கள் வராமல் புறக்கணித்துவிட்டால் என்ன செய்வது என்று மே 17 யோசிக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சினைக்காக குரல் கொடுத்த ராமதாஸின் பங்களிப்பு முக்கியமானது என்று இவர்கள் கருதுவதால் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான இவர்களது சாதிய வெறிக்கு மறைமுகமாக சலுகை காண்பிக்கிறார்கள்.

சரி, தலித் மக்களை ஒடுக்கும் வன்னிய சாதிவெறியை யாரும் கேட்க கூடாது என்ற நிபந்தனையின் பேரில்தான் ஈழத்திற்கோ, தமிழினத்திற்கோ பாமகவினர் குரல் கொடுப்பார்கள். அந்த பெரிய பங்களிப்பை ஏற்றுக் கொள்ளும் தமிழினவாதிகள் இந்த சிறிய பாதகத்தை மன்னித்து அருளுகிறார்கள். தமிழகத்தில் நாடகக்காதல் என்று சொல்லி, அறிமுகப்படுத்தி, ஊர் ஊராக எல்லா ஆதிக்க சாதிகளையும் அழைத்துக் கொண்டு கூட்டம் போட்ட்து யார்? அந்த ராமதாஸை பெயர் போட்டு கண்டித்து ஒரு சுவரொட்டி கூட ஒட்டுவதற்கு முன்வராத நீங்கள் ஈழத்திற்கு என்ன சாதிப்பீர்கள் என்று கேட்கலாமா, கூடாதா?

ஒரு மனிதனின் அடிப்படை அற விழுமியங்கள் வேறு வேறு பிரச்சினைகளுக்கு வேறு மாதிரி இருக்காது என்ற உண்மை கூட இவர்களுக்குத் தெரியவில்லை. நாடு முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் ஆதிக்க சாதி வெறியையே தனது சாதி உணர்வாக கொண்டிருக்கும் ஒரு நபர் முள்ளிவாய்க்கால் போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக அழுகிறார் என்றால் அது ஏமாற்று இல்லையா?

இளவரசன் மரணம் என்பது ஏதோ ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனது அவலமான மரணம் அல்ல. அது இலட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமையை மறுப்பதின் ஒரு வெளிப்பாடு. அந்த உரிமைகளை மறுத்து அவர்களை ஒடுக்குவது ஆதிக்க சாதிவெறி. அத்தகைய ஆதிக்க சாதிவெறிகளை குறிப்பான சம்பவத்திற்கேற்ப குறிப்பான பெயரோடு அடையாளம் காட்டி கண்டிக்க வேண்டும்.

சாதிய பயங்கரவாதத்தை கண்டிப்பதாக மட்டும் பொதுவாகப் போட்டால் எந்த சாதிக்காரனுக்கும் பிரச்சினை இல்லை. அதை படித்து விட்டு அவர்கள் மே 17-ன் ஏனைய கொள்கைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதிலும் பிரச்சினை இல்லை. ஆனால் வன்னிய சாதிவெறி, தேவர் சாதிவெறி, முதலியார் சாதிவெறி என்று குறிப்பாக பேசினால் அவர்கள் மே 17-க்கு குட்பை சொல்லிவிட்டு போய்விடுவார்கள். இதுதான் மே 17-ன் பயம்.

எனில் மே 17 தனக்கு திரட்டி வைத்திருக்கும் சமூக அடிப்படையே இத்தகையதுதான் என்றால் அந்த செல்வாக்கை வைத்து எதையும் செய்ய முடியாது. ஏனெனில் சாதிவெறி கண்டிஸன்ஸ் அப்ளைக்கு உட்பட்டதல்ல விடுதலை உணர்வு.

இந்தப் பிரச்சினை எங்களுக்கில்லையா? நாங்கள் தலித் மக்களிடத்தில் மட்டும் அரசியல் வேலை செய்யவில்லை. நாங்கள் பேசும் வர்க்க அரசியலின் அடிப்படையில் எல்லா பிரிவு உழைக்கும் மக்களிடத்திலும் வேலை செய்கிறோம். அந்த வகையில் வன்னிய மக்களிடத்திலும் வேலை செய்கிறோம். வர்க்க விடுதலைக்கான அணி சேர்க்கையும் சாதிய வெறியை ஒழிப்பதும் வேறு வேறு அல்ல என்ற வகையில் நாங்கள் வேலை செய்கிறோம்.

இந்துக்களிடம் இந்து மதவெறியையும், இஸ்லாமியர்களிடத்தில் இசுலாமிய மதவெறியையும், வன்னியர்களிடத்தில் வன்னிய சாதிய வெறியையும், தலித் மக்களிடம் பிழைப்புவாத தலித் அரசியல் கட்சிகளையும் கண்டித்து பேசுகிறோம். இதில் எங்களுக்கு அச்சமில்லை என்பதோடு அந்த பிரிவு மக்களை மெல்ல மெல்ல உணர வைத்து இறுதியில் வர்க்க உணர்வுக்கு கொண்டு வருகிறோம். மேலும் மத உணர்வு, சாதி உணர்வு அனைத்தும் அந்தந்த பிரிவு மக்களுக்கும் சேர்ந்தே பாதிப்பை தருகிறது என்பதை தொடர் போராட்டத்தில் புரிய வைக்கிறோம். இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறோம்.

தமிழக மக்களை சாதிய ஒடுக்குமுறை இல்லாத சமூகமாக மாற்ற வேண்டுமென்று விருப்பப் படுவோர் இத்தகைய சாதிய ஒடுக்கு முறைகளை குறிப்பாகவும் எதிர்க்க வேண்டும். நத்தம் காலனியில் உடமைகளை இழந்த தலித் மக்களுக்கும், இளவரசனது மரணத்திற்கும் போராட விரும்புவோர் பாமக மற்றும் வன்னிய சாதிவெறியை கண்டிப்பதற்கு முன் வரவேண்டும். அதுவும் வன்னிய மக்களிடத்தில், வன்னிய மக்கள் வாழும் ஊர்களில் செய்ய வேண்டும். இதன்றி ஆதிக்க சாதிவெறியை அகற்றுவதற்கு வேறு வழிகளில்லை.