Saturday, July 13, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்நரேந்திர மோடி : மண்ணைக் கவ்வும் விளம்பரங்கள் !

நரேந்திர மோடி : மண்ணைக் கவ்வும் விளம்பரங்கள் !

-

ளராத கால் சட்டை கும்பலான ஆர்.எஸ்.எஸ் பற்றியோ நரவேட்டை மோடி பற்றியோ கட்டுரை வெளியிடப்படும் போதெல்லாம் “அது ஏன் எங்களை மட்டும் கரம் வைத்து கும்முகிறீர்கள்? மற்றவர்களெல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரிய மாட்டார்களா?” – என்பதாக சில ‘இந்தியப் பையன்கள்’ சடைத்துக் கொள்வதுண்டு. இந்த ‘சிலர்’ என்பது ஒரு நபரின் பல பெயர்களா அல்லது பல பெயர்கள் கொண்ட ஒரு நபரா என்பதில் எப்போதும் ஐயமுண்டு. போகட்டும். இந்தியாவில் ‘நாய் வாலை ஆட்டும்’ சம்பவங்கள் அதிகம் நடப்பது காவி கும்பலில் தான் எனும் போது எங்களை மட்டும் நொந்து கொண்டு என்ன பயன்?

சோட்டா பீம்
போகோ சேனலின் ‘சோட்டா’ பீமே பீதியில் உறைந்து போயிருப்பதாக கேள்வி.

மோடி பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பணிக் குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சமீப காலங்களில் மேற்படியாரின் விளம்பர வெறியின் விளைவாக காவி முகாமில் நாயின் வால் மட்டுமல்ல, நாயின் எஜமானரையே ஆட்டுவது போன்ற திடுக்கிடும் காட்சிகள் அரங்கேறி வருகின்றது. உத்திர காண்ட் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட குஜராத்திகளை காப்பாற்ற மோடி எடுத்துக் கொண்ட முயற்சிகள் பற்றி ஊடகங்களில் பரப்பப்பட்ட கார்ட்டூன் கதைகளின் யோக்கியதை தெரியும் தானே. மோடி, தனது இடது உள்ளங்கையில் 7,500 பேரையும் வலது உள்ளங்கையில் 7,500 பேரையும் சுமந்து கொண்டு குஜராத் வரை அனுமாரைப் போல் பறந்து சென்ற சாகசத்தைக் கேள்விப் பட்டு போகோ சேனலின் ‘சோட்டா’ பீமே பீதியில் உறைந்து போயிருப்பதாக கேள்வி.

வருங்காலத்தில் இவர் ராகுல் காந்தியோடு போட்டியிட்டு பிரதமராவாரா என்று தெரியாது. ஆனால் நிச்சயமாக போகோ சேனலில் சோட்டா பீமுக்கு போட்டி கேரக்டராக மிளிரும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை உத்தேசித்து ராம்போ வேலைகள், வழுக்கை மண்டையில் மயிரைப் பயிர் வைத்தல் உள்ளிட்ட இமேஜ் பில்டப் வேலைகளின் வரிசையில் கடந்த மாதம் 30-ம் தேதி குஜராத் மாநிலம் காந்திநகரில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘பொறுப்பான அரசாட்சிக்கான குடிமக்கள்’ ( Citizens for accountable governance) என்கிற என்.ஜி.ஓ அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கருத்தரங்கில் கனவு மன்னன் அப்துல் கலாம் சிறப்புரை நிகழ்த்தியிருக்கிறார். இந்தக் கருத்தரங்கிற்கு சுமார் 50 இசுலாமிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

குஜராத் எனும் குண்டுச் சட்டிக்குள் மட்டும் குதிரை ஓட்டுவதென்றால் ஏற்கனவே குஜராத்தி பொதுப் புத்தியில் நிறுவப்பட்டிருக்கும் இசுலாமிய வெறுப்பும், ‘பொருளாதார வளர்ச்சி’ பற்றிய அம்புலிமாமா கதைகளுமே போதுமானது. இந்தியா என்று வரும் போது 14 சதவீதம் இருக்கும் இசுலாமிய வாக்கு வங்கியை சமாதானப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைமை மோடிக்கு ஏற்பட்டுள்ளது. கார்ப்பரேட் இந்தியாவிற்கான ஈவிரக்கமற்ற அடியாளாக இருப்பதற்கான தனது ‘தகுதியை’ 2002-லேயே மோடி நிரூபித்துள்ளார் என்பதால் முதலாளிகளின் ஐந்தாம் படையான என்.ஜி.ஓக்கள் மோடியின் நல்லாட்சியை கடை விரிக்கும் வேலையில் இறங்கியுள்ளன.

சீனாவின் பேருந்து நிலையம் ஒன்றை சுட்டு ‘இதோ பாருங்கள் அகமதாபாத் பேருந்து நிலையத்தை. எப்படி மின்னுகிறது பாருங்கள்’ என்று சமீபத்தில் மின்னஞ்சலில் ஒரு படம் சுற்றுக்கு விடப்பட்டது. இதே போன்று மோடி குஜராத்தின் கடன்களை அடைத்ததோடு மேலும் கொஞ்சம் பணத்தை உலகவங்கியில் இருப்பாக வைத்திருக்கிறார் என்றும், இன்னும் இது போல் எண்ணற்ற கட்டுக்கதைகள் இணைய வெளியெங்கும் சுற்றியலைகின்றன. இதற்காகவே ‘மோடி பிராண்டை’ கடை விரிக்க மாதம் 12 லட்ச ரூபாய் சம்பளத்துக்கு ஆப்கோ வேர்ல்ட்வைட் எனும் அமெரிக்க விளம்பர நிறுவனம் அமர்த்தப்பட்டுள்ளது. சுதேசியின் புகழ் பரப்பும் விதேசி!

மோடியின் மத சுதந்திரம்
மோடியின் மத சுதந்திரம் ஐஸ்கிரீம் கடை – இந்துத்துவாவின் 32 வகைகள்.

அந்த வரிசையில் மோடியின் அம்புலிமாமா கதைகளை இசுலாமியர்களிடம் கொண்டு செல்லவும், மோடி இசுலாமியர்களுக்கு விரோதமானவரில்லை என்று பிரஸ்தாபித்துக் கொள்ளவும் மேற்படி கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த முயற்சியும் உத்திரகாண்ட் மீட்புக் கதையான ‘ராம்போவைப்’ போல பரிதாபகரமாக மண்ணைக் கவ்விக் கொண்டது தான் பரிதாபம்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட சையத் ஜாபர் மெஹ்மூத் எனும் முசுலீம் இளைஞர் தனது உரையில் பாரதிய ஜனதாவின் முசுலீம் விரோதக் கொள்கையைத் துவைத்துத் தொங்க விட்டுள்ளார். கருத்தரங்கங்கில் தனது உரையத் துவக்கிய மெஹ்மூத், தான் எந்தவொரு அரசாங்கத்திடமிருந்தும் தனிப்பட்ட நலன்களை எதிர்பாக்கவில்லை என்றும், தான் பின் தங்கிய இசுலாமிய சமூகத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்ட சட்டப் பூர்வ உரிமையையும் நீதியையும் மதிப்பதாகவும் ஆரம்பித்துள்ளார். இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பாரதிய ஜனதாவின் கொள்கை ஆவணமான ‘ஹிந்துத்வா: மாபெரும் தேசிய சித்தாந்தம்’ என்பதில் இருக்கும் இசுலாமிய வெறுப்பை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய மெஹ்மூத், “சாதாரண மனித தன்மை கொண்ட எந்தவொரு குடிமகனும் இப்படி மட்டையடியாக இசுலாமிய வெறுப்பைக் கக்குவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்” என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சச்சார் கமிசனின் பரிந்துரைகளை அமுல் படுத்த பா.ஜ.க முன்வர வேண்டும் என்று குறிப்பிட்ட மெஹ்மூத், நாட்டிலேயே இசுலாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டுமென்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை அமுல்படுத்தாத வெகுசில மாநிலங்களில் குஜராத் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து பாரதிய ஜனதாவின் இசுலாமிய வெறுப்பையும், சிறுபான்மையினருக்கு எதிரானதாக அக்கட்சி இருப்பதையும் சுட்டிக்காட்டி மெஹ்மூத் பேசி இருக்கிறார். இவ்வளவும் நரேந்திர மோடியின் முன்பாகவே நடந்துள்ளது. இதே பழைய மோடியாக இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சோராபுதீன், இஸ்ராத் ஜகான் உள்ளிட்ட வழக்குகளின் விவரங்களைப் படிப்பதன் மூலம் வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும். 2003 – 2006 காலகட்டத்தில் மட்டுமே சுமார் 16 பேரை பரலோகம் அனுப்பி வைத்த பராக்கிரமசாலிதான் மோடி. தன்னை எதிர்ப்பவர் சொந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சராக இருந்தாலும் போட்டுத் தள்ள தயங்காதவர் மோடி என்பதை ஹரேன் பாண்டியாவிற்கு ஏற்பட்ட கதியிலிருந்து புரிந்து கொள்ளலாம். மோடியின் கடந்த காலத்தை அறிந்தவர்களுக்கு மெஹ்மூதின் துணிச்சலும் வீரமும் அசாதாரணமானது என்பது புரியும்.

ஆனால் சமகாலத்தில் மோடி பிரதமர் கனவில் மிதந்து கொண்டிருப்பதால் உள்ளூர் மாபியா கும்பல் தலைவனைப் போல் இனிமேலும் நடந்து கொள்ளமுடியாத இக்கட்டின் விளைவாக நவதுவாரங்களில் இருந்தும் வெளிப்பட்ட ஆத்திரப் புகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்திருக்கிறார். ஏனெனில், இப்போதெல்லாம் அவரது சின்னச் சின்ன முகபாவனைகளும் கூட ஊடகங்களால் கவனிக்கப்பட்டு வருகின்றன. செருப்பாலடித்தாலும் சிரித்துக் கொண்டே அடக்கி வாசிக்க வேண்டிய வரலாற்றுச் சோகம்.

கலவரங்கள் மோடி
மதக் கலவரங்கள் மூலம் வளர்ச்சியை கட்டியிருக்கும் மோடி.

மோடியின் விளம்பர முயற்சிகள் தலைகுப்புற விழுந்து மண்ணைக் கவ்விக் கொள்கின்றன என்கிற சோகம் ஒருபுறமிருக்க, அவரது கட்சியின் யோக்கியதையோ சிரிப்பாய்ச் சிரித்து வருகிறது. ரேப் ஸ்வயம்சேவக் ராகவ்ஜி சமீபத்திய உதாரணமென்றால் எடியூரப்பா, கோவிந்தாச்சார்யா, உமாபாரதி என்று பின்னோக்கிச் செல்லச் செல்ல பரதிய ஜனதாவின் மகுடத்தில் ஒளிவீசும் மாணிக்கங்கள் ஒவ்வொன்றாக கண்ணைப் பறிக்கின்றன.

“சார், நீங்க மற்ற மாநில பாரதிய ஜனதா பற்றி சொல்லாதீங்க. எங்க மோடி தன்னோட மாநிலத்துல கட்சிய எப்படி ஸ்ட்ரிக்டா வச்சிருக்காருன்னு பாருங்க சார். இந்த மாதிரி ஸ்ட்ராங்கான ஆளுங்க பிரதமரா வந்தா அன்னிக்கு நைட்டே டைரக்டா நாம வல்லரசு தான் சார்” என்று சில அப்பாவி காவி ரசிகர்கள் சொல்கிறார்கள். மோடியின் உச்சி முதல் பாதம் வரை நீக்கமற நிறைந்திருக்கும் அந்த உறுதியான நேர்மையான ஆளுமையின் யோக்கியதை என்னவென்று இந்துப் பத்திரிகையில் கடந்த வாரம் வந்த செய்தி ஒன்று போட்டுடைக்கிறது.

குஜராத் சட்டமன்ற உறுப்பினர்களில் 57 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக இந்துப் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இந்தப் பட்டியலில் கேபினட் அமைச்சர் பாபுபாய் போக்கிரியாவும் (பெயரே அது தான்) அடக்கம். முறைகேடான சுண்ணாம்புக்கல் சுரங்க ஊழலின் 54 கோடி ரூபாய்கள் தேட்டை போட்ட வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மூன்றாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டவர்.

மேலும் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகளும் குஜராத் மாநில எம்.எல்.ஏக்களின் மேல் நிலுவையில் உள்ளது. குஜராத் பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களில் 31 சதவீதம் பேர் கிரிமினல்கள் என்கிறது அந்தச் செய்தி. “நான் ஊழல் செய்யவும் மாட்டேன், ஊழல் செய்பவர்களைச் சகித்துக் கொள்ளவும் மாட்டேன்” என்று வாய்ச்சவடால் பேசும் மோடியின் கோட்டையிலேயே நிலைமை இது தான்.

சமீபத்தில் ராய்ட்டர் செய்தி நிறுவன பேட்டியில் குஜராத்தில் கொல்லப்பட்ட முசுலீம்கள் குறித்துக் கேட்டபோது காரில் அடிபடும் நாய்க்குக் கூட தான் வருந்துவதாக கூறி தனது திமிர் அது எவ்வளவு எச்சரிக்கை உணர்வோடு இருந்தாலும் வெளிப்படும் என்பதை நிரூபித்திருக்கிறார் நரவேட்டை நரேந்திர மோடி!

தினசரி மோடி தொடர்பாக குறைந்தது ஒரு காமெடி செய்தியாவது வந்து கொண்டிருக்கிறது. நரியைப் பரியென்று நம்பச் சொல்லி விட்டு பதிலுக்கு விமர்சனங்கள் வருகிறதே என்று அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி? காய்த்த மரங்கள் மட்டுமா, சொரி நாய்களும் தானே கல்லடி படும்? ‘பையன்கள்’ வளர்ந்து அறிவுடைய ஆளாக வேண்டும் என்று எல்லாம் வல்ல பாரத மாதாவை வேண்டிக் கொள்கிறோம்.

– தமிழரசன்

 1. மண்ணைக் கவ்வும் விளம்பரங்கள் தானே……..அதற்கெதுக்கு இவ்வள்வு பெரிய வெறுப்புக்கட்டுரை….வேற ஒன்னும் இல்லை…பயம் …மோடி ஜெயிக்கப்போகிறார் என்ற பயம்..

 2. //‘சோட்டா’ பீமே பீதியில் உறைந்து போயிருப்பதாக கேள்வி//
  //காய்த்த மரங்கள் மட்டுமா, சொரி நாய்களும் தானே கல்லடி படும்? ‘பையன்கள்’ வளர்ந்து அறிவுடைய ஆளாக வேண்டும்//
  இது இன்னொரு பெரிய கட்டைஅடி. சிறப்பு

 3. மண்ணைக் கவ்வும் விளம்பரங்கள் தானே……..அதற்கெதுக்கு இவ்வளவு பெரிய வெறுப்புக்கட்டுரை….வேற ஒன்னும் இல்லை…பயம் …மோடி ஜெயிக்கப்போகிறார் என்ற பயம்..

  இதுல இருந்து என்ன தெரியுது மோடி பிரதமர் ஆவது உண்மை

  • //மோடி ஜெயிக்கப்போகிறார் என்ற பயம்..//
   ஹிட்லரின் படுகொலைகளை 21-ம் நூற்றாண்டில் நிகழ்த்திக்காட்டிய கொடுங்கோலனைக் கண்டு பயப்படாமல் என்ன செய்ய?

 4. வினவு மோடியையே குறை சொல்லும் போது. வினவு யாரைக்குறை சொன்னாலும் நம்பாதே என என் மூளை சொல்கிறது.
  வினவுவின் எழுத்தில் தலித்,சிருபான்மையினர் (இசுலாம்,கிருத்துவ) ஆதரவு மட்டுமே. பெரும்பான்மையினர் (இந்துக்கள்,தலித் தவிர பிற சாதியினர்) நல்லது செய்தாலும் அவர்கள் வன்முறையாலர்களே..

 5. “வளராத கால் சட்டை கும்பலான ஆர்.எஸ்.எஸ் பற்றியோ நரவேட்டை மோடி பற்றியோ கட்டுரை வெளியிடப்படும் போதெல்லாம் “அது ஏன் எங்களை மட்டும் கரம் வைத்து கும்முகிறீர்கள்? மற்றவர்களெல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரிய மாட்டார்களா?” – என்பதாக சில ‘இந்தியப் பையன்கள்’ சடைத்துக் கொள்வதுண்டு. இந்த ‘சிலர்’ என்பது ஒரு நபரின் பல பெயர்களா அல்லது பல பெயர்கள் கொண்ட ஒரு நபரா என்பதில் எப்போதும் ஐயமுண்டு. போகட்டும்.”

  மேலே கண்ட 1, 1.1, 1.1.1, 2, 3, 4 பின்னூட்டங்களைப் பார்க்கும் போது நீங்கள் கூறிய ஐயம் அதிகமாகிறது.

 6. புரட்சி கூட்டம் ஒரு தனி நபரை எதிர்க்கிறார்கள் என்றால் அவர் வளர்ந்திருக்கிறார் அல்லது வளர்கிறார் என்று பொருள்…
  மோடியா ராகுலா என்பதே நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சாய்ஸ்…. அறிவு திறமை அனுபவம் அரசியல் முதிர்ச்சி ,செயல்பாடு திறன் ,ஆளுமை என்றளவில் மோடி வலுவாக இருக்கிறார் (Already he is a CM)…
  நல்லவரா கெட்டவரா என இருவரையும் ஒப்பினால்… யார் குறைந்த அளவு கெட்டவரோ அவரையே தேர்ந்தெடுக்க துணியலாம்…

  • //மோடியா ராகுலா என்பதே நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சாய்ஸ்….//

   ” சார், ரெண்டே அயிட்டம் தான் சார் இருக்கு… ஆட்டுபுழுக்கை, மாட்டுச்சாணி… ரெண்டுல எதை சாப்டுறீங்க?”

  • அவர்வளரவுமில்லை ,அவர் வள்ந்தால் தான் அறைடவுசறை மாற்றியிருப்பாரே

 7. //. இதே பழைய மோடியாக இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சோராபுதீன், இஸ்ராத் ஜகான் உள்ளிட்ட வழக்குகளின் விவரங்களைப் படிப்பதன் மூலம் வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும். //

  Same side goal.

  //
  நாட்டிலேயே இசுலாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டுமென்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை அமுல்படுத்தாத வெகுசில மாநிலங்களில் குஜராத் உள்ளதையும்
  சுட்டிக்காட்டியுள்ளார்.//

  The reservation support for Daliths is being hijacked.

  • அரசு சட்ட கல்லூரியில் பயிலும் பிற்படுதப்பட்ட மானவர்கலுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை ரூ 700/-ஐ (வருடதிற்க்கு) தம்ழ்நாட்டிலேயே வழ்ங்கப்படவில்லை,குஜராதிற்க்கு போய்விட்டீர்கள்.

 8. இந்தியாவை பிடித்த வைரஸ்கலுக்கு மொடி பார்மாதான் சிறந்த மருந்து. மோடிதான் பிரதம வேட்பாளர் என்றவுடன் என்டமீபா ஊழல்வாதிக்களுக்கு கிலி,

  • உங்களைபோன்ற போலி டாக்டர்கள் சொன்னதை கேட்டு வைத்தியம் பார்த்தால் இந்தியா மரணப் படுக்கையில்தான்

 9. குஜராத்தி முஸ்லீம்களே நரேந்திரமோடிக்குப் பின்னால் அணி திரளுகிறார்கள். குஜராத்தி முஸ்லீம்களின் தலைவர்களில் சிலர் வெளிப்படையாக மோடியைப் புகழ்கிறார்கள். நடைபெற்று முடிந்த மாநில தேர்தலில் முழுவதும் முஸ்லீம்கள் வாழும் தொகுதிகளில் கூட மோடி வென்றிருக்கிறார்.மோடி தமிழர்களுக்கு எதிராக எதுவும் அநியாயம் செய்ததாக தெரியவில்லை, ஆனால் ஒரு சில தமிழர்களும் வினவும் மட்டும் குய்யோ முறையோ என்று குளறுவது ஏனென்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. 🙂

  • ////குஜராத்தி முஸ்லீம்களே நரேந்திரமோடிக்குப் பின்னால் அணி திரளுகிறார்கள். குஜராத்தி முஸ்லீம்களின் தலைவர்களில் சிலர் வெளிப்படையாக மோடியைப் புகழ்கிறார்கள். நடைபெற்று முடிந்த மாநில தேர்தலில் முழுவதும் முஸ்லீம்கள் வாழும் தொகுதிகளில் கூட மோடி வென்றிருக்கிறார்////
   1967 இல் பல கிராமங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் தலித்களை யாரும் ஓட்டு போட வரக் கூடாது என்று மிரட்டிவிட்டு அவர்கள் ஓட்டுக்கள் அனைத்தையும் அந்த சாதியினரே திமுகவுக்கு போட்டுவிடுவர் .
   இதனாலேதான் 1977 முதல் 1989 வரை தலித்கள் திமுகவை ஆட்சிக்குள் நுழையவிடாமல் ஆக்கிவிட்டனர்.
   அதுபோன்றுதான் குஜராத்தில் கொஞ்ச நவீனமாக செய்தார்கள் .ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என்று பணம் கொடுத்து விட்டு யாரும் ஓட்டு போட வரக் கூடாது என்று மிரட்டி அண்ட் வாக்குகளை அவர்களே பதிவு செய்து கொண்டனர்

 10. மோடி ஞாபகத்துல புரட்சிய மறந்துடாதிங்க. ஸ்டாலின் சாமி கண்ணை நோண்டிடுவார்.

 11. பின்நூட்டங்களை எல்லாம் வச்சு பார்க்கும்போது….
  தமிழ்நாட்டில் மோடிக்கு ஆதரவு நூறை பிடிச்சுடும் போலத் தெரியுதே(?)! 🙂

  • \\தமிழ்நாட்டில் மோடிக்கு ஆதரவு நூறை பிடிச்சுடும் போலத் தெரியுதே\\
   மோடிக்கு 100
   வாசுபாய் 100
   அத்வானி 100
   சுஷ்மா 100
   யஷ்வந்த் 100
   பொன்.ரா 100
   இல.கணேஷ் 100
   தமிழிசை 100
   வேட்பாளருக்கு 1000
   etc etc என தாமரை மட்டுமே தனித்து சில பல ஆயிரம் பெற்றிடுமோ .பிறகு கூட்டணியை வைத்து கோயிலை தமிழ் நாட்டிலே கட்டிவிடுவார்களோ…?

 12. “சமீபத்தில் ராய்ட்டர் செய்தி நிறுவன பேட்டியில் குஜராத்தில் கொல்லப்பட்ட முசுலீம்கள் குறித்துக் கேட்டபோது காரில் அடிபடும் நாய்க்குக் கூட தான் வருந்துவதாக கூறி தனது திமிர் அது எவ்வளவு எச்சரிக்கை உணர்வோடு இருந்தாலும் வெளிப்படும் என்பதை நிரூபித்திருக்கிறார் நரவேட்டை நரேந்திர மோடி!”

  இது உங்களது அரைவேக்காடுத்தனத்தை காட்டுகிறது.

  அவருடைய உரையை முழுமையாக படித்து விட்டு விமர்சனம் செய்யுகள்…
  அரைகுறை அறிவோடு படித்து அதை அரைகுறை அறிவோடு சிந்திப்பது ஆபத்தானது…

  உத்திர காண்ட் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க வக்கு இல்லாமல்
  ஏதோ செய்தவரை பற்றி அவதுறு பேச துளிகுட தகுதி இல்லை…

  • //இது உங்களது அரைவேக்காடுத்தனத்தை காட்டுகிறது.//
   உண்மை. பலர் மோடி சொல்ல வந்ததைப் புரியாமல் அல்லது வேண்டுமென்றே அதைத் திரித்து பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள்.

 13. ///குஜராத் சட்டமன்ற உறுப்பினர்களில் 57 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக இந்துப் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இந்தப் பட்டியலில் கேபினட் அமைச்சர் பாபுபாய் போக்கிரியாவும் (பெயரே அது தான்) அடக்கம். முறைகேடான சுண்ணாம்புக்கல் சுரங்க ஊழலின் 54 கோடி ரூபாய்கள் தேட்டை போட்ட வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மூன்றாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டவர்.

  மேலும் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகளும் குஜராத் மாநில எம்.எல்.ஏக்களின் மேல் நிலுவையில் உள்ளது. குஜராத் பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களில் 31 சதவீதம் பேர் கிரிமினல்கள் என்கிறது அந்தச் செய்தி. “நான் ஊழல் செய்யவும் மாட்டேன், ////
  இந்தியாவை காப்பாற்ற புரந்த பாரத மாதாவின் தவப்புதல்வன் புண்ணிய குஜராத் ஆட்சியில் இந்த கன்றாவிகளை பார்த்து ,எந்த பையன்மார்களும் கண் திறக்கவில்லையே

 14. யம்ப்பா இப்பிடி எங்க அடுத்த பிரதமர் வேட்பாளர துவச்சி தொங்க போடறிங்க …

 15. முன்பெல்லாம் மோடியை சாடி வடிக்கப்படும் கட்டுரைகளில் மோடி ஆதரவு மறுமொழிகள் ஒன்றிரண்டு தான் பார்க்க முடியும்…
  ஆனால் இப்போது பாதிக்கப்பட்டதாக உணருகிற மத சமூகம் சார்ந்த நண்பர்கள் தவிர ஏனையோர் ஆதரவாக மறுமொழி இடுதல் போல தோன்றுகிறதே… ஆளும் கட்சி மீதுள்ள வெறுப்பா, இல்லை இக்கரைக்கு அக்கரை நிலைப்பாடா? அல்லது கால்சட்டை வளர்கிறதா ?

  • ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்று பொருள்

 16. // ‘சோட்டா’ பீமே பீதியில் உறைந்து போயிருப்பதாக கேள்வி

  சோட்டா பீமின் ஆற்றலுக்கு முக்கிய காரணம் லட்டு என்பது அனைவரும் அறிந்ததே. மோடி லட்டு தின்பதாக செய்தி ஏதும் வரவில்லை. எனில் அவருக்கு ஆற்றல் எப்படி கிடைக்கிறது என்ற கேள்வி எழுகிறது. சோட்டா பீமை விட அதிக ஆற்றல் பெற்றவர் என்றால் அவர் அப்படி என்ன தின்கிறார்? லட்டை விட ஆற்றல் சக்தி வாய்ந்த அந்த பொருள் என்ன என்று விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்!

 17. Do you know the meaning of criticism ? Try and learn to appreciate good things wherever it has happened. India is not the property of Nehru family and Modi is not an Italian. Study and then compare the development of other states with Gujarat in all aspects. Dont use filthy and unparliamentary words. Its your own desire to support Mafia congress or pakistan terrorist . But one thing no one cant stop Modi and his development. So kindly remove your cap and show your head in the sun light after that only you can understand who is best.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க