Friday, July 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 703

அரியானா : மாருதி நிர்வாகத்தின் சட்டபூர்வ கூலிப்படைகள் !

5

ரியானா மாநிலத்தின் மானேசரிலுள்ள மாருதி கார் ஆலைத் தொழிலாளர்கள், கடந்த ஆண்டு ஜூலையில் அந்நிறுவனத்தின் கார்ப்பரேட் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிய ‘குற்ற’த்துக்காக 147 தொழிலாளர்கள் உள்ளிட்டு ஒட்டுமொத்த தொழிற்சங்கத்தினரும் சிறையிடப்பட்டுள்ளனர். அவர்களில் 66 பேர் மீது பிணையில் வெளிவர முடியாதபடி கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் போடப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டு காலமாக அவர்களுக்குப் பிணை வழங்கப்படவில்லை.

ஜியாலால் குடும்பம்
பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவர் ஜியாலாலின் புகைப்படத்தோடு அவரது மனைவி சோனியா.

கைதான தொழிலாளர்களுள் ஒருவர் விஜேந்திரா. அவர் வேலை செய்தால்தான் வீட்டில் அடுப்பெரியும் நிலைமை. அவரின் தாயோ நிரந்தர நோயாளி. கர்ப்பிணியான அவரது மனைவிக்குக் கடந்த ஜனவரியில் குழந்தை பிறந்து உதவிக்கு யாருமில்லாத நிலையில், மருத்துவமனையிலுள்ள தனது மனைவியைப் பார்த்துவிட்டு வருவதற்கு அனுமதி கோரிய போதிலும் அவருக்குப் பிணை மறுக்கப்பட்டது.

ராம்விலாஸ் எனும் மாருதி தொழிலாளி கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது பாட்டி, படுத்த படுக்கையாகி பிப்ரவரியில் மாண்டு போனார். மரணப் படுக்கையிலிருந்த அவரைச் சந்திக்கக்கூட அத்தொழிலாளிக்குப் பிணை தரப்படவில்லை. இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும் அவருக்கு அனுமதி தரப்படவில்லை. பின்னர், தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு வருவதற்குக் கூட அவருக்குப் பிணை வழங்கப்படவில்லை.

பிரேம்பால் என்ற தொழிலாளியின் துயரம் மிகக் கொடியது. குடும்பத்தில் அவர் மட்டுமே சம்பாதிப்பவர். பிரேம்பால் கைதானபோது அவரின் 2 வயதுக் குழந்தை, தந்தையைக் காணாத ஏக்கத்தில் நோய் வாய்ப்பட்டு மரித்து விட்டது. பிரேம்பால் கைதான அதிர்ச்சியும் குழந்தை இறந்த துயரமும் சேர்ந்ததால் பிரேம்பாலின் தாயும் இறந்து விட்டார். இந்நிலையிலும் கூட பிரேம்பாலுக்கு ஒரு வார காலத்துக்கான பரோல் நிராகரிக்கப்பட்டது. அவரின் மனைவியோ கணவன் கைதாகி, குழந்தையையும் மாமியாரையும் மரணம் தின்று விட, தனிமையில் நோயாளியாகி மருத்துவமனையில் சாகக் கிடக்கிறார். இதனால் பிரேம்பால் மனநிலை பாதிக்கப்பட்டவராகி விட்டார். சிறைக்குள் வாடும் தொழிலாளர்கள் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களில் பலர் காசநோயாலும் மூலநோயாலும் பாதிக்கப்பட்டுத் தகுந்த சிகிச்சையின்றி வாடுகின்றனர்.

சென்ற ஆண்டு ஜூலையில் மாருதி நிர்வாகத்தின் கொத்தடிமைத்தனத்துக்கும் கொடூரச் சுரண்டலுக்கும் எதிராக தொழிற்சங்கத்தைக் கட்டியமைத்துத் தொழிலாளர்கள் போராடியபோது, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஜியாலால் என்ற தொழிலாளியைச் சாதிப்பெயரைச் சொல்லித் திட்டிய கண்காணிப்பாளரைத் தட்டிக் கேட்ட தொழிலாளர்கள், நிர்வாகத்தின் குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதற்கெதிராக தொழிலாளர்களும் திருப்பித் தாக்க, இருதரப்பினருக்குமிடையிலான மோதலில் மேலாளர் அவினேஷ் தேவ் என்பவர் கொல்லப்பட்டார். இவரைத் தொழிலாளிகள்தான் கொன்றனர் என்கிறது மாருதி நிர்வாகமும் போலீசும். ஆனால், தொழிலாளர்களோ இந்த மேலாளர் தொழிற்சங்கம் கட்டுவதற்குத் துணை நின்றவர் என்கின்றனர். ஆலையில் நடந்த மோதலைப் பயன்படுத்திக் கொண்டு இவரைக் குறிவைத்துத் தாக்கி மாருதி நிர்வாகம் கொன்றொழித்துள்ளது என்று வாதிடும் தொழிலாளர்கள், இது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்கின்றனர்.

கைதால் ஆர்ப்பாட்டம்
பொய் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரி, கைதாலிலுள்ள அரியானா மாநிலத் தொழில்துறை அமைச்சர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யத் திரண்டிருந்த மாருதி தொழிலாளர்களைத் தடுக்கும் போலீசு.

மேலாளர் அவினேஷ் தேவ் கொல்லப்பட்டதை முகாந்திரமாகக் கொண்டு அரியானா மாநில அரசும் மாருதி நிர்வாகமும் தொழிலாளர்களைப் பழிவாங்கத் தொடங்கியன. விசாரணை ஏதுமின்றி 548 தொழிலாளர்கள் மாருதி நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர்களில் 2,000 பேர் வேலையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். கொலைவழக்கில் 147 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழிற்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் இக்கொலை வழக்கில் அரசு கைதுசெய்துள்ளது. எனவே தற்காலிகச் செயற்குழுவை நியமித்துக் கொண்டு, ஜூலை மாதத்தில் மாருதி ஆலையில் நடந்த போராட்டம் பற்றி நடுநிலையாக விசாரிக்கவும், நிர்வாகத்தின் தொடர் அடக்குமுறைகளை எதிர்த்தும், சிறையிடப்பட்டுள்ள தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாத மாருதி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த நவம்பரிலிருந்து தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். பயங்கரவாத மாருதி நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதத்தில் நாடு தழுவிய அளவில் பல்வேறு தொழிற்சங்கங்களுடன் இணைந்து பழிவாங்கப்பட்ட மாருதி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

அரசு அசைந்து கொடுக்காத நிலையில், கடந்த மார்ச் இறுதியில் அரியானா மாநிலத் தொழிலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டுப் போராடத் தொடங்கினர். பெருமளவில் போலீசு படையைக் குவித்துப் போராட்டக் குழுவினர் தங்குவதற்குப் பந்தல் போட்டிருந்த இடத்தின் சொந்தக்காரரை மிரட்டியும், தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்த டீக்கடைக்காரர்களை மிரட்டியும் இப்போராட்டத்தை அரசு ஒடுக்க முயற்சித்ததால், அதை எதிர்த்து மழையையும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் தமது குடும்பத்தோடு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். இதனைப் பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களும் மட்டுமின்றி, 150-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களும் ஆதரித்து நின்றதால், வேறுவழியின்றி பேச்சு வார்த்தைக்கு அரசு இறங்கி வந்தது. வழக்குகள் ஏதும் இல்லாத தொழிலாளர்களை மீண்டும் மாருதியில் சேர்த்துக்கொள்ள தொழிலாளர்நல ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், இவ்வழக்கு நடைபெறும்வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் பழிவாங்கப்பட மாட்டார்கள் என்றும் அரசு உறுதியளித்த பின்னரே உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

10-cartoonபின்னர், கடந்த மே 8-ஆம் தேதியன்று 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் சுற்றுப்புற சிறுநகர மற்றும் கிராமப்புற மக்களும் திரண்டு கைத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உழைக்கும் மக்களின் மகாபஞ்சாயத்து கூட்டத்தை நடத்தினர். இதில் ஹீரோ ஹோண்டா, ஐ.எம்.டி., ரிகோ, புளுஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆலைகளின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும், மும்பை மற்றும் பஞ்சாபின் லூதியானா மாவட்டத் தொழிற்சங்கத்தினரும், மாணவர் – மகளிர் அமைப்புகளும் பங்கேற்று ஆதரித்தன.

பல மாதங்களாகச் சிறையில் வாடும் தொழிலாளர்களைப் பிணையில் விடுவிக்கக் கோரி அனைத்துத் தரப்பு தொழிற்சங்கத்தினரும், தொழிலாளர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் உள்ளாட்சி மன்ற தலைவர்களும் இணைந்து கடந்த மே 19 அன்று மாநில தொழிலாளர் துறை அமைச்சர் வீட்டின் எதிரே ஆர்ப்பாட்டத்தை நடத்தியபோது, முன்னறிவிப்பு ஏதுமின்றித் தடியடித் தாக்குதலை நடத்தியது போலீசு. இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மாருதி தொழிலாளர் சங்கத்தின் தற்காலிகச் செயற்குழு உறுப்பினரோடு, உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் கோத், கைத்தால் நகர்மன்ற உறுப்பினர் பிரேம்சந்த் முதலானோர் மீதும் கொலைமுயற்சி உள்ளிட்ட பிணையில் வரமுடியாத வழக்குகளைப் போட்டுக் கைது செய்தது. இக்கொடிய அடக்குமுறையை எதிர்த்து அரியானா மாநிலத்தின் பல்வேறு தொழிற்சங்கங்களும் அங்கன்வாடி ஊழியர் சங்கமும், மாருதி பவர்ட்ரைன், ஹோண்டா, ரிக்கோ, சத்யம் ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு ஆலைகளின் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து தலைமைச் செயலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

அரியானாவின் கைதால் நகரில் 57 நாட்களாக தர்ணா போராட்டமும் 8 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்திய பிறகு, கடந்த மே 18, 19 தேதிகளில் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தாரும் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது போலீசாரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு 111 பேர் கைது செய்யப்பட்டனர். எந்த வழியிலும் போராடவே கூடாது என்று தொழிலாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றனர்.

வர்க்க ஒற்றுமையுடன் தொடரும் மாருதி தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்க கைத்தால் நகரில் 144 தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது, அரியானா அரசு. போராடுவோரைப் பழிவாங்கும் நோக்கத்தோடு பிணைத்தொகையை ஒவ்வொருவருக்கும் ரூ. 40 ஆயிரம் என அரசு உயர்த்தியுள்ளது. மாருதி தொழிலாளர்களுக்குப் பிணை மறுப்பது, பொய் வழக்குகளைத் தொடர்வது போன்ற வழிமுறைகள் மூலம் அவர்களைப் பணியவைத்துவிடலாம் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது. இருப்பினும் இவற்றைத் துச்சமாக மதித்து, அரியானா உழைக்கும் மக்கள் தரும் ஆதரவோடு மாருதி தொழிலாளர்கள் விடாப்பிடியாக தொடர்ந்து போராடி வருகின்றனர். நீதிக்கான இந்தப்போராட்டத்தில் 84 சர்பஞ்ச்கள் (ஊராட்சி மன்றத் தலைவர்கள்) தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். கைதால் நகரின் தேநீர்க் கடைக்காரர்கள் உள்ளிட்டு அரியானாவின் பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களது தொழிற்சங்கங்களின் ஆதரவையும் மாருதி தொழிலாளர்கள் திரட்டியுள்ளனர்.

மும்பய் ஆர்ப்பாட்டம்
மாருதித் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு ஆதரவாகப் பல்வேறு தொழிற்சங்கங்களும் இணைந்து உருவாக்கியிருக்கும் மாருதி தொழிலாளர் போராட்ட ஆதரவு கமிட்டியின் சார்பில், பொய் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாருதி தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரி மும்பய் நகரில் கடந்த ஜூன் மாதம் நடந்த ஆர்ப்பாட்டம்.

சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்கும் எதிரான மாருதி தொழிலாளர் போராட்டம், வரும் ஜூலை 18-ஆம் தேதியுடன் ஓராண்டை எட்டுகிறது. 147 முன்னணித் தொழிலாளர்கள் குர்கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குக் கீழமை நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் பிணை வழங்க மறுக்கின்றன. தொழிலாளருக்கு ஆதரவான அவினேஷ் தேவ் என்ற மேலாளர் கொல்லப்பட்டதைப் பற்றி விசாரணை நடத்த அரசு மறுக்கிறது. தொழிலாளர்களைக் கிரிமினல்களாகவும் தீவிரவாதிகளாகவும் மாருதி நிர்வாகம் மட்டுமின்றி, ஊடகங்களும் தொடர்ந்து அவதூறு செய்து வருகின்றன. மாருதியில் பணியாற்றிவந்த 2,300 தொழிலாளிகள் எவ்விதக் காரணமுமின்றி வேலைநீக்கம் செய்யப்பட்டு, குடும்பத்தோடு வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தொடர் முழக்கப் போராட்டங்களோ, ஊர்வலங்களோ நடத்தக்கூடாது, துண்டுப் பிரசுரங்களைக்கூட விநியோகிக்கக் கூடாது என்று மானேசர் தொழிற்பேட்டை பகுதியில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூன் 23 அன்று மாருதி தொழிற்சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தின் முடிவுப்படி, வரும் ஜூலை 18 அன்று மாருதி தொழிலாளர்கள் தமது குடும்பத்தோடு மானேசர் நோக்கிச் செல்லும் நடைபயணப் போராட்டத்தையும், அந்நாளில் காலவரையற்ற மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தவுள்ளனர். இதற்கான பிரச்சார இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

மாருதி சுசுகியைப் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், தொழிலாளர்கள் சங்கமாகத் திரளும் அடிப்படை உரிமையைக்கூட மதிப்பதில்லை. இதற்கெதிராகப் போராடினால் போராட்டங்களைக் கொடூரமாக நசுக்குவதன் மூலம், அன்னிய மூலதனத்தின் கட்டற்ற கொள்ளையையும் அடக்குமுறையையும் நியாயப்படுத்திப் பாதுகாக்கிறது அரசு. தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி முதலாளித்துவ ஊடகங்கள் இதற்குத் துணை நிற்கின்றன.

தனியார்மய-தாராளமயத்தால் நாடு முழுவதும் உழைக்கும் மக்கள் கொடூரச் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டுள்ள நிலையில், தீவிரமாகிவரும் இம்முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிக்க தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையும் அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின் ஆதரவும்தான் இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் அவசர அவசியத் தேவையாகியுள்ளது. இதனைத் தமது சொந்த அனுபவத்தினூடாக உணர்ந்து, உணர்வோடும் ஒற்றுமையோடும் போராடிவரும் மாருதி தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியது உழைக்கும் வர்க்கத்தின் கடமை. நம் கடமை.

– அன்பு
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________

ஓசூர் தொழிலாளிகள் அணிதிரண்ட புஜதொமு கருத்தரங்கம் !

0

சூரில் உள்ள தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வெளிமாவட்டத்திலிருந்து வந்தவர்கள். மேலும் இங்கிருக்கும் தொழிலாளர்களில் கணிசமானோர் தெலுங்கு, கன்னடம் பேசுபவர்கள். அண்மை காலமாக உலக மயமாக்கத்தின் விளைவாக அஸ்ஸாம், ஒரிய தொழிலாளர்கள் ஒசூரில் குவிந்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக அசோக் லேலாண்டு போன்ற பெரிய தொழிற்சங்கம் இருக்கும் ஆலைகளில் கூட தொழிலாளர்கள் சட்டவிரோதமான முறையில் கசக்கிப் பிழியப்படுகின்றனர். பல அடக்குமுறைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

உரிமை பற்றி பேசுவதே தவறு, பேசவே முடியாது என்ற அளவிற்கு அடக்கு முறைகளும் சுரண்டல்களும் தாண்டவமாடுகின்றன. ரூ. 4,000 கூலி பெறும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்கள் வரை கூலி கொடுக்காமல் டெனிக்கோ போன்ற கம்பெனிகள் கோரத் தாண்டவமாடுகின்றன. எங்கும் தொழிலாளர்கள் படுகின்ற துன்பங்களும், கொடுமைகளும், புலம்பல்களும்தான் எதார்த்தமாக உள்ளன.

மின்வெட்டு காரணமாக கடந்த ஓராண்டில் பல சிறிய பட்டறைகள் பூட்டப்பட்டு விட்டன. இதனால், இங்குள்ள டி.வி.எஸ்., லேலாண்டு போன்ற பெரிய ஆலைகளுக்கு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ராஜ்ஸ்ரியா, டெனிக்கோ, பத்மா பேக்கேஜ் போன்ற ஆலைகள் தங்களிடம் சிறிய அளவில் ஆர்டர் பெற்று வேலை செய்யும் சிறு பட்டறை உரிமையாளர்களை மிகக் கேவலமாக நடத்துகின்றனர். மூன்று மாதங்களாகியும் செய்து கொடுத்த வேலைக்கு உரிய தொகை கொடுக்கவில்லை. மின்வெட்டு காரணமாக ஒருநாள் உற்பத்தி தாமதமானாலும் கொடுத்த பொருட்களை அள்ளிச் செல்கின்றன இவ்வாலைகள். இதனால், பல சிறுமுதலாளிகள் மாதக்கணக்கில் நட்டத்தில் பட்டறைகளை நடத்தி வருகின்றனர். இதனால், இவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமையோ மேலும் சிக்கலானதாகவும் மன வேதனையுடையதாகவும் உள்ளது. மூன்று மாதங்களாகியும் ஊதியம் கொடுக்கவில்லை என்றாலும் வேலை செய்யும் சில தொழிலாளர்கள் உள்ளனர். ஏன் சம்பளம் கொடுக்காத முதலாளியிடம் வேலை செய்கிறீர்கள் என்று கேட்டபோது, வேலையை விட்டு நின்றுவிட்டால், வேலைக்கு வேறு எங்கு செல்வது? முதலாளிக்கே பேமண்டு ஆகாத போது அவர் வச்சுகிட்டா வஞ்சனை செய்கிறார்? என்று புலம்பிக்கொண்டு அந்த சிறுபட்டறைத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மின்வெட்டு, லே-ஆப் போன்ற காரணங்களை வைத்துக் கொண்டு ஒசூர் முதலாளிகள் தொழிலாளர்கள், சிறு பட்டறை உரிமையாளர்கள் என எல்லோருடைய வாழ்வையும் சூறையாடி வருகின்ற அவலம் காணமுடிகிறது.

இதே காரணங்களைக் காட்டி, கமாஸ் ஆலையில் வேலை செய்கின்ற செக்யூரிட்டிகளுக்கு ஊதியம் வழங்கமால் செக்யூரிட்டி முதலாளிகள் ஆட்டம் போட்டனர். இதற்கு எதிராக செக்யூரிட்டி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யும் அளவிற்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.

பல ஆண்டுகளாக வேலை செய்தும் ஊதியம் வழங்காத நிலைமை, பணிநிரந்தரம் செய்யப்படாத கொடுமை என தொழிலாளர்களின் வாழ்வு மேலும் மேலும் நரகமாகிவருகிறது.

முதலாளித்துவப் பயங்கரவாதத்தின் கொடூர தீப்பிழம்புகள் ஒசூர் தொழிலாளர்களின் வாழ்வைப் பறித்து வருகிறது. மேற்கண்டவை இப்பிரச்சாரத்தின் போது, பு.ஜ.தொ.மு. தோழர்கள் பெற்ற சம்பவங்களின் சில விவரங்களே! ஒட்டுமொத்த முதலாளித்துவப் பயங்கரவாதத்தின் உண்மை முகம் மிகக்கொடூரமானது, ஆழமானது, பயங்கரமானது என்பதை இந்தச் சில விவரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

கண்ணெதிரே காணும் காட்சிகள் யாவும் முதலாளித்துவப் பயங்கரவாதமே!

புத்தகக் கடை
புத்தகக் கடை

அவலம், துயரம், பட்டினி, பரிதவிப்பு, ஏக்கம், அலைக்கழிப்பு, ஏமாற்றம், வஞ்சம், கடுமையான உழைப்பு, தூக்கமின்மை, கடுமையான உடல்வலி, தனது துயரத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளமுடியாத அளவிற்கு மன இறுக்கம், வலி, தன் வாழ்நாள் முழுவதும் முதலாளிக்கு உழைத்தே ஓடாய் தேய்ந்து போன வாழ்க்கை, உயிர் வாழ்வதே கேள்விக்குள்ளான போது உழைத்து திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய்விட்ட இளமையின் ஏக்கம், கைகள் துண்டிப்பு, கைவிரல்கள் துண்டிப்பு, முகத்தில் ஈயம் ஊற்றி ஆறிப்போன வடுக்கள், கரி படிந்தே கருப்பாகி தோல் தடித்து போன தொழிலாளர்களின் உடல்கள், ஒரு அறையில் 4 பேர் வெல்டிங் அடிப்பதால் ஏற்படும் மூச்சுத் திணரல், உடல் வெப்பத்தால் தேய்ந்து போயிருத்தல், சுவாசம் எப்போதும் பாதிக்கப்பட்டு நடைப்பிணமாகி வேலை செய்துவரும் தொழிலாளர்கள்…..

ஆம்,

நாங்கள் கண்ட தொழிலாளர்களின்
வார்த்தைகளிலும்,
முகத்திலும்,
பார்வையிலும்
பேச்சிலும்
பழக்க வழக்கத்திலும்
எங்கெங்கு காணினும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தின் காட்சிகளே!

பார்வையிடும் தொழிலாளர்கள்
பார்வையிடும் தொழிலாளர்கள்

தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டி பிரச்சாரம் செய்யப்போன, எங்களது மனக்கண்முன் ஓடும் காட்சிகளின் பதிவு இவைதான்!

இந்தக் காட்சிகளின் வலியிலிருந்துதான் முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டோம்.

ஒசூர் ஏரித் தெருவில் அமைந்துள்ள, ஜே.ஆர்.பிளாசாவில் உள்ள அரங்கில், 14.07.2103 காலை 11 மணியளவில் “தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்போம்! முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!’’ என்ற முழக்கத்தின் கீழ் கருத்தரங்கம் நடைபெற்றது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக நடைபெற்ற இக்கருத்தரங்கம் சிறப்பான வரவேற்பையும், தொழிலாளர்களிடையே புத்துணர்வையும், புதிய நம்பிக்கையையும் விதைத்ததாக இருந்தது. இளந்தொழிலாளர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கத்தின் துவக்கத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த கருத்துப்படங்கள், முதலாளிகளின் லாபவெறியை அம்பலப்படுத்தி ஒட்டப்பட்டிருந்த கேலிச்சித்திரங்கள் சிந்திக்கும் வகையில் அமைந்திருந்ததாக கருத்து தெரிவித்து சென்றனர். எச்.ஆர். அதிகாரிகளைக் கண்டு தொழிலாளர்கள் அச்சப்படுவதை முறியடிக்க வைக்கப்பட்டிருந்த கேலிச்சித்திரங்கள் பலரது பாராட்டுதலைப் பெற்றது. கமாஸ், குளோபல் ஆலைத் தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு. தலைமையில் நடத்திய போர்க்குணமிக்க போராட்டக்காட்சிகள், போராட்டத்தின் அவசியத்தைக் குறிக்கும் தோழர்.துரை சண்முகத்தின் கவிதை வரிகள், தனியார்மயத்தை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் பத்திரிக்கையின் ஜூன், ஜூலை இதழ்களில் வெளிவந்த கருத்துப்படங்கள், ஒசூர் தொழிற்சாலையில் நடந்த, பலரும் அறிந்த – பேசப்படும் வகையிலான முதலாளித்துவப் பயங்கரவாத சம்பவங்கள் குறித்த விளக்க தட்டிகள் போன்றவை தொழிலாளர்கள் கவனத்தையும் சிந்தனையையும் இந்தக் கருத்தரங்கின் உள்நோக்கத்தைக் நோக்கி ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்தன.

பங்கேற்ற தொழிலாளர்கள்.
பங்கேற்ற தொழிலாளர்கள்.

நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்னதாக, ஒசூரில் பு.ஜ.தொ.மு. தலைமையில் குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர்கள் நடத்திய சாலைமறியல் போராட்டம், நிர்வாக அதிகாரியின் வீடு முன்பு சாணியடித்து நடத்திய முற்றுகைப் போராட்டம், மின்கட்டண விலையுயர்வைக் கண்டித்து புதுச்சேரி பு.ஜ.தொ.மு. நடத்திய முற்றுகைப் போராட்டங்கள் ஒளிப்பரப்பட்டன. அதனைப் பார்த்தவர்கள் போராட்டம் என்றால் இப்படித்தான் செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தனர். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னால் இது போன்ற வீடியோ காட்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை நிகழ்ச்சியில் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்தது. தாம் ஒரு புரட்சிகர உணர்வுடன் பாட்டாளி வர்க்க உணர்வுடன் உரைகளை கவனிக்கத் தொடங்கினர். இதுபோன்ற போராட்டங்களின்போது எங்களுக்கு தெரிவியுங்கள் நாங்களும் வந்து கலந்துகொள்கிறோம் என்று தெரிவித்துச் சென்றது இக்கருத்தரங்கத்தின் வெற்றியை பறைசாற்றியதாக இருந்தது.

தலைமை தாங்கிய தோழர் பரசுராமன்.
தலைமை தாங்கிய தோழர் பரசுராமன்.

இதன் பின்னர் பாட்டளி வர்க்கத் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக, டி.வி.எஸ் நிறுவனத்தின் முதலாளித்துவப் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளி ஒருவரின் நேருரை தொழிலாளர்களிடையே நெகிழ்வை ஏற்படுத்தியது.

அவர் பேசுகையில், “நான் டி.வி.எஸ் நிறுவனத்தை சேர்ந்த ஹரிதா ரப்பர் பிரிவில் வேலைப் பார்த்து வந்தேன். 5 வருடங்களாக வேலை பார்த்த பிறகு நிரந்தரம் செய்கிறேன் என்றவர்கள் இப்போது கம்பெனியை வித்தாச்சி. ஆதலால் உங்களுக்கெல்லாம் இனி இங்கே வேலையில்லை என எங்களை கம்பெனியிலிருந்து துரத்தியடித்துவிட்டது டி.வி.எஸ் நிர்வாகம். எவ்வளவோ மன்றாடியும் கல்மனதாக இருக்கிறது டி.வி.எஸ் நிர்வாகம். எங்களது ஆலைநிர்வாகம் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை சட்ட ஆலோசகராக வைத்திருக்கிறது. அவரிடம் சென்ற நான் , சார் இந்த டி.வி.எஸ் பேரை நம்பித்தான் கல்யாணமெல்லாம் பிக்ஸ் பண்ணிட்டோம். இந்த நேரத்தில் இப்படி செஞ்சிட்டீங்கன்னா நாங்கள் எங்க சார் போவது என்று கேட்டோம். அதற்கு அவர் மிகவும் கூலாக இந்த கல்யாணத்தை விட்டுவிட்டு வேற கல்யாணம் செஞ்சிக்கோ, காலத்துக்கேற்ப மாறிக்கோ என திமிராக சொல்கிறார் அந்த அதிகாரி.

டி.வி.எஸ் தொழிலாளியின் நேருரை
டி.வி.எஸ் தொழிலாளியின் நேருரை.

அதோடில்லாமல் ஏதோ வெளியில டி.வி.எஸ்-ன்னா நல்ல பேரு. ஆனால், உள்ளே எந்நேரமும் கண்காணிப்பு. வெளியே பிற ஆலை தொழிற்சங்க நண்பர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அதே நேரத்தில், இப்ப வெளியில இருக்கிற எங்களுக்கும் கம்பெனிக்கும் சம்மந்தமில்லை என அவன் சும்மா விடுவதில்லை. அங்க சங்கம் அது இதுன்னு போயிடாத. இந்த சங்கத்துக்காரங்க வெளியில கேஸ்ஸ போட்டுட்டு உன்ன அலைய விட்டு உன் லைஃபையே கெடுத்துடுவாங்க. அதனால, வேற ஒரு நல்ல வேலைய பார்த்துகிட்டு போய் பொழப்ப பாத்து பொழச்சிக்க என்று அவர்களுடைய நம்பகமான கையாட்களைக் கொண்டு, நல்லது செய்யுற மாதிரி ஆலோசனை சொல்வதுபோல நடிக்கின்றனர். குறிப்பாக, என் வீட்டில் என் பெற்றோர்களிடம் வந்து அட்வைஸ் பண்ணி என் போன்றோரை மீண்டும் மீண்டும் வந்து அவமானப்படுத்துகின்றனர்” என்று தனது அனுபவத்தை பதிவுசெய்தார்.

தோழர் பரசுராமன் தனது தலைமையுரையில் ஓசூரில் உள்ள பல நிறுவனங்களில் குறிப்பாக அசோக்லேலாண்டு, கமாஸ் வெக்ட்ரா, குளோபல் ஃபார்மாடெக், கார்போரண்டம், எக்ஸைடு, ராஜ்ஸ்டிரியா உள்ளிட்ட ஆலைகளில் பணிபுரியும் எண்ணற்ற தொழிலாளர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளை பட்டியலிட்டு இதற்கு காரணமான முதலாளிகளின் மனிதாபிமானமற்ற லாபவெறி கண்ணோட்டத்தை அம்பலப்படுத்திப் பேசினார்.

சிறப்புரையாற்றும் தோழர் சுதேசுக்குமார்.
சிறப்புரையாற்றும் தோழர் சுதேசுக்குமார்.

இந்த கருத்தரங்கத்தின் மைய உரையான ஆலைக்கு வெளியே தொழிலாளர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளை தொகுத்து சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் சுதேஸ்குமார் தனது உரையில் ஆலைமுதலாளிகளுடைய அதிகாரத்தின் வேர், இப்போதைய அரசியலதிகாரம் முதலாளிகளின் கையில் உள்ளது என்பதை அம்பலப்படுத்தி அதை தொழிலாளி வர்க்கம் தனது திட்டமிட்ட நடவடிக்கையின் வாயிலாக பறித்தெடுப்பதன்மூலம் மட்டும்தான் தாங்கள் விடுதலையைப் பெறமுடியும் என்ற வகையில் நிறுவி பேசியது தொழிலாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் அவர்களிடையே புதுரத்தம் பாய்ச்சியதாக இருந்தது .

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

ஆங்கில துண்டறிக்கை

Capitalism Kills The People! Communism Wins The World!!

14-07-2013 morning 11 am
AT JR PLASA, TANK STREET, HOSUR, TAMILNADU – 635 109

Video Telecasting And Illustration Of Portraits Of NDLF Militant Struggles Against Capitalist Terrorism, Privatisation And State Bureaucratic

and

Special Speech Delivered By Com.Sudeshkumar, State Joint Secretary, NDLF, Tamilnadu.

Dear workers,

Capitalists are lying that they start industries to give the jobs to workers. But that is not the fact. They start business to grab billions of money by exploiting our hard work.

Capitalism is nothing but the profit mania which uses the different system of exploitation to increase its capital. They have divided us as trainy, contract and casual labours who have same working nature, to keep us temporary since many years. Also, Capitalist exploits the workers by paying poor wages. They are sucking our working power by increasing the work time 10-12 hours, forcing to work on holidays and introducing modern machineries. They snatch our valuable rest and sleeping time by imposing the backbreaking work on us.

They throw us on the street as garbage after sucking our entire energy from the age of 17-24. We have been oppressed by refusal of leaves, permanent work,  and safe working environment. We have been facing severe beating and indecent scolding by managers. Especially women workers are subjected to sexual harassment and equal wages has been refused at par with men workers. To release from this cruelty and to win our just rights, if we try to organize a union, Capitalists are trying to bow down the leaders.

They try to threaten us by suspensions, transfers, giving threats by police and threaten our family members to bow down us for the petty reasons. If we do not bow down, they terminate us from the job.

Capitalists create few traitors among us by threatening and corrupting them to break our efforts to organize a union. They create puppet-committee in the name of “Workers committee” by using few capitalist funded traitors who are among us. They recognize this committee for the namesake to destroy the aim of building a union.

As per law, the management staff do not have rights of organizing a union. By exploiting this, they define workers as management staff like supervisors, team leaders, captain, etc for the namesake. They spoil the effort of organizing a union at the embryonic stage.

They are monitoring every activity of ours by CCTV camera. They don’t even allow us to mingle with our colleagues. Due to that our life has become like machines. They converted the factories like concentration camps so that we don’t have the opportunity to maintain relationships with our colleagues.

We are working for our back and belly and are under the exploitation of work, suppression, and hazardous working condition. We are struggling to maintain our family with poor wages. Previously, we used to get welfare schemes like free education, free drinking water and pensions from the government. Even those facilities are not enough for our livelihood. But it helped us to overcome some difficulties. But all the welfare plans have been destroyed by the same government which has initiated all those plans.

Now government is planning to implement ‘Food Security Bill’ to defunct ration shops to destroy the source of low priced food products. If we purchase all ration products at market price, we would have to spend our major part of wages. We may be forced to work overtime. In addition to that, ever rising inflation would crush our neck.

Privatization has converted drinking water into commodity, we are struggling to get water for our dry mouth. Even education sector has been privatized by the government, no of private school and colleges have increased,  government has created a situation that there is no free education.

The current ESI plan which helped us to get medical facilities and accident insurances. Due to the Maximum Wage Limit, many of us lost ESI. When ESI was not there, we used to get free treatment from government hospitals. Even in the health care services, government has imposed privatization which has destroyed free medical services.

Our PF amount helped us for our Children’s higher education and marriages. It has been handed over to the national and international financial dominators. There is no security to get back our PF money from these gamblers who control the PF money. Moreover, pension which we used to get is affected by the new pension plan.

The public sector enterprises are being sold to MNCs and national comprador capitalists in the name of Liberalization-Privatization-Globalization. Because of that, new recruitment has stopped. Owing to that, unemployment is being increased.

Capitalism has snatched our basic rights such as work security, appropriate wages, 8 hour duty, organizing union and respectful-secured life. Government is even snatching previous social security plans which helped us inadequately.

Multinational Capitalists and national comprador capitalists are robbing natural resources of our nation without limits. Social assets such as marine resources, mineral resources, forest resources, water resources are being converted to the assets of the capitalists. And then, air and water have been polluted by the unnatural and extreme exploitation of natural wealth. Due to this reason, people have been affected by various diseases and problems.

Moreover, Liberalization-Privatization-Globalization is the causes of ever increasing scandals, cultural disorders and sexual violence on women. These are all the policies have not only affected the living rights of working class but also the classes of oppressed such as Farmers, Weavers, Fishermen, small business holders, small scale business men. And also, the desires of Multinational Capitalists and national brokerage capitalists have become the laws of our country. We call; this is a ‘Recolanization’.

Moreover, various classes of people who lost their life started struggling due to the impact of recolonization policy. To stop the intensification of people struggle, they are providing Aadhaar Identity card which can also be used for surveillance. Also, the data which stored in the card can be used to monitor a person’s activities and cell phone conversations can be tapped. By this, people who are struggling, the revolutionary and democratic organizations can be monitored and suppressed. It openly shows that State is merely an oppressing tool of capitalists.

In addition to that, we can’t live with endurance, due to the extreme exploitation and oppressions. Till now, working class got all its rights only by the struggle. Working class has not only to fight for its own but also for other oppressed classes. To lead those struggles, the working class alone has the quality and capability.

There is no shortcut other than struggle against recolonization which is robbing living rights of all the oppressed class and also capitalist terrorism which terrorize us to bow down. If we want to win the struggle, we have to destroy the different systems of contract labor, casual labor, permanent labor which was created by the capitalists. Let us unite as working class; let us build a revolutionary union, let us defeat the capitalist terrorism.

State and Central governments,

Strictly practice the labour laws like work conformation act, contract method demolition act, etc.!

Take action on Law of Crimes against HR officers and owners who violate labour laws!

Register new labour unions within 30 days from applying date! Ban the ‘Workers committee ‘which is a plot being handled by the capitalists!

Fix Rs. 15,000/- as minimum wage limit for all the industries!

Provide equality in wages and security for women workers!

Abandon Anti-people and recolonization policies like Liberalization-Privatization-Globalization!

Cancel Aadhaar Identity card which can be used for spying the people!

For contact : L-416, ASTC old hudco, Hosur, Krishnagiri District, Tamilnadu –

Cell :
97880 11784 hosur
94448 34519 chennai.

————————————————————–

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
பு.ஜ –செய்தியாளர், ஓசூர்.

ஏழைகளை அம்பானிகளாக்கும் வறுமைக் கோடு !

10

ந்தியாவிலிருந்து வறுமை விரட்டியடிக்கப்பட்டு வருவதாகவும், தற்போதைய நிலவரப்படி வறுமையானது மன்மோகன் சிங், சிதம்பரம், அலுவாலியா, அதியமான் உள்ளிட்ட பொருளாதார மேதைகளுக்கு அஞ்சி அண்டார்டிக்கா பக்கத்தில் உயிருக்குப் பயந்து ஓடிக் கொண்டிருப்பதாகவும் முதலாளித்துவ ஊடகங்களில் சூடான விவாதங்கள் நடந்து வருகின்றன. 2004-2005 காலகட்டத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தோரின் எண்ணிக்கை 37.2 சதவீதமாக இருந்ததாகவும், தற்போது அது 21.9 சதவீதமாக குறைந்திருப்பதாகவும் ‘புள்ளி’ விவரங்களின் அடிப்படையில் அள்ளி விடுகிறார்கள்.

வறுமைக் கோடுஉலகின் பிற பகுதிகளில், மக்களின் வாழ் நிலைமைகள் முன்னேறியுள்ளதா பின் தங்கியுள்ளதா என்பதை வைத்து வறுமை ஒழிப்பு அளவிடப்படுகிறது. ஆனால், இந்தியா மேலே குறிப்பிட்ட பொருளாதார மேதைகளால் ஆளப்படும் தேசமல்லவா, எனவே இங்கே வேறு வழி முறைகள் பின்பற்றப்படுகின்றன. சுரேஷ் டெண்டுல்கர் என்கிற வடநாட்டு அதியமான் ஒருவரின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் ஒன்றின் அளவீட்டின் படியே இந்த வறுமை ஒழிப்பு சாத்தியமாகி உள்ளது. இந்த அரும் பெரும் கண்டுபிடிப்பை சமீபத்தில் மத்திய திட்ட கமிஷன் வெளியிட்டுள்ளது.

மேற்படியாரின் தலைமையிலான கமிஷனின் பரிந்துரைகளின் படி, நகரப் பகுதிகளில் தலைக்கு தினசரி 33 ரூபாய்களுக்கு மேல் நுகர்பவர்களும் கிராமப் புறங்களில் தலைக்கு 27 ரூபாய் நுகர்பவர்களும் பணக்காரர்கள் என்று அதாவது ஏழைகள் இல்லை என்பதாய் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் காசுகளுக்குள் ஒரு மனிதன் வாழ்வதெப்படி என்பது பற்றிய விசேஷ வகுப்புகள் சென்னையில் கிழக்குப் பதிப்பகம் சார்பிலும், வடக்கே ராஜ் பாப்பர், பரூக் அப்துல்லா போன்றோராலும் நடத்தப்பட்டு வருகிறது. விலையில்லா அரிசி வாங்கி, பத்து ரூபாய்களுக்குள் மளிகை வாங்கி, வேலைக்கு கால் நடையாகச் சென்று, சருமத்துக்கு குளியல் சோப்பாக தேங்காய் நாறைப் பயன்படுத்தி, பல் விளக்க செங்கல் பொடியை உபயோகித்து, உடம்புக்கு வந்தால் தெருவோர பூசாரியிடம் பத்து ரூபாய்க்கு வேப்பிலை மந்திரித்து, காடாத் துணியில் அங்கி தைத்துப் போட்டு… ஏன் இழுக்க வேண்டும்? சுருங்கச் சொன்னால் 27 ரூபாய்க்குள் ‘ங’ப்போல் வளைந்து நெளிந்து வாழப் பழகி, பணக்காரர்களாகும் இந்தப் புத்தம் புதிய வித்தை தான் முதலாளித்துவ ஊடகங்களின் தற்போதைய பேசு பொருள்.

ராஜ் பப்பரும் பரூக் அப்துல்லாவும் பதிப்பகம் நடத்திக் கொண்டு அறிவுஜீவிகளாக இல்லாத காரணத்தால் அவர்களது கருத்துக்கள் வறுத்தெடுக்கப்பட்டு விட்டன. சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ராஜ் பாப்பர், மும்பையில் 12 ரூபாய்களுக்கு சாம்பார், ரசம், கூட்டு எல்லாம் சேர்ந்த ‘புல் மீல்ஸ்’ கிடைக்கிறது என்றும், மத்திய திட்ட கமிஷன் வெளியிட்டுள்ள வறுமைக்கோட்டு அளவீட்டின் படி ஒரு நபர் மும்பையில் சுகமாக வாழ்வது சாத்தியமே என்றும் தெரிவித்துள்ளார். காங்கிரசு கட்சி அல்லவா? கண்ணை மூடிக் கொண்டு பள்ளத்தில் பாய்வதற்கு ஆளிருந்தால் பாதாளத்தில் பாய்வதற்கும் ஆளிருக்க வேண்டுமே. ராஜ் பாப்பருக்கு போட்டியாக பாதாளத்தில் பாய்ந்தவர் தில்லியைச் சேர்ந்த காங்கிரசு தலைவர் ரஷீத் மசூத்.

“மும்பை பணக்கார நகரம் என்பதால் தான் அங்கே சாப்பாட்டின் விலை 12 ரூபாய்; எங்கள் தில்லியில் 5 ரூபாய்க்கே சாப்பிட்டு விடலாமே” என்று அறிவித்துள்ளார் ரஷீத் மசூத். இதற்கெல்லாம் பல படிகள் மேலே சென்ற பரூக் அப்துல்லா, ” 1 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை சாப்பாடு கிடைக்கிறது. எல்லாம் சாப்பிடுபவர்களின் விருப்பம் தான்” என்று சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டு காங்கிரசுகாரர்கள் எவரும் ’எங்கள் ஊரில் இலவசமாகவே உண்ட கட்டி கிடைக்கிறது எனவே 27 ரூபாயையும் அப்படியே மிச்சம் பிடித்து சீக்கிரம் அம்பானியாகும் வாய்ப்பு உள்ளது’ என்று சொல்லியிருக்கிறார்களா என்று ஏடுகளில் தேடிப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளும் மன வலிமை இல்லாத காரணத்தால் தவிர்த்து விட்டு மேலே செல்கிறோம்.

தற்போது இந்த பொருளாதார மேதைகளின் கருத்துக்கள் துவைத்து தொங்கப் போடப்பட்டு விட்டதால் தங்களது அரும் பெரும் கண்டுபிடிப்புகளை வாபஸ் பெற்றுள்ளார்கள். ராஜ் பாப்பர், பரூக் அப்துல்லா, ரஷீத் உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளனர். இவர்கள் பதிப்பகம் நடத்தவில்லை, அரசியல் நடத்துகிறார்கள் – எனவே வேறு வழியில்லை. எதிர்பார்த்த அளவை விட அதிகமாக பெயர் நாறுவதை அவதானித்த காங்கிரசு சென்ற வார மத்தியில் திக் விஜய் சிங்கையும், கபில் சிபலையும் களமிறக்கியது.

கடந்த இருபது வருடங்களாக ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விட்டு அப்போது தான் விழித்தெழுந்த இவர்கள் இருவரும், மத்திய திட்ட கமிஷனின் பரிந்துரைகளின் மேல் சந்தேகம் தெரிவித்திருந்தனர். நிகழ்ச்சியொன்றில் பேசிய கபில் சிபல் “திட்ட கமிஷனின் முடிவுகளில் எங்கேயோ தவறு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். அது எங்கே என்பது தெரியாத அளவுக்கு சிபல் ஒரு அப்பாவி என்பதை நாங்கள் நம்புகிறோம்.

இதற்குப் பின்னும் தங்கள் மேல் வரும் விமரிசனங்கள் குறையாதிருப்பதை உணர்ந்த காங்கிரசு, கடந்த வார இறுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லாவை களமிறக்கி விட்டு ஒட்டு மொத்தமாக ஆட்டையைக் கலைத்து விட்டு முதலில் இருந்து புரோட்டா தின்னலாம் என்கிறது. ”மத்திய திட்ட கமிஷனால் முன்வைக்கப்பட்ட இந்த பரிந்துரைகள், டெண்டுல்கர் கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையிலானதே ஒழிய, அரசு இன்னும் வறுமைக் கோட்டைப் பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை” என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இதைத் தான் “வேலை கள்ளிக்கு பிள்ளை சாக்கு” என்று ஊர்பக்கத்தில் சொல்வார்கள். கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் தனது 72-வது வயதில் மரணமடைந்த சுரேஷ் டெண்டுல்கர், யாரோ சாதாரண வழிப் போக்கர் அல்ல. கடந்த காலங்களில் மத்திய புள்ளியியல் கமிஷனின் தலைவர், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கமிட்டியின் உறுப்பினர், மத்திய ரிசர்வ் வங்கியின் இயக்குனர்களில் ஒருவர் என்று முக்கியமான அரசு பதவிகளை அலங்கரித்தவர். பாரதிய ஜனதா ஆட்சிக்காலத்தில் பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பது எப்படி என்பதற்கான வழிகாட்டுதல்களை அளித்த “முதலீட்டுக் குறைப்பு கமிஷனின்” (Disinvestment commision) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

2009-ம் ஆண்டு வாக்கில் மத்திய காங்கிரசு அரசாங்கத்தால் வறுமைக் கோடு பற்றிய புதிய வரையறைகளை உருவாக்குவதற்கென்று அமைக்கப்பட்ட கமிட்டி இவர் தலைமையில் தான் அமைக்கப்பட்டது. தற்போதைய பரிந்துரைகள் மேற்படி கமிட்டியால் முன் வைக்கப்பட்டதே. விவகாரம் நாற்றமெடுக்கத் துவங்கியதும், தற்போது மத்திய அரசு ரெங்கராஜன் கமிட்டியிடம் வறுமைக் கோடு பற்றிய பரிந்துரைகளைக் கோரியிருப்பதாக அறிவித்துள்ள மத்திய அமைச்சர் சுக்லா, இதே காரணத்துக்காக இதே அரசால் முன்பு அமைக்கப்பட்ட சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியின் செயல்பாடுகளையும், அதற்கு அரசு அளித்த நிதியுதவிகளையும் மூடி மறைத்துக் கைகழுவப் பார்க்கிறார்.

சுரேஷ் டெண்டுல்கரின் பரிந்துரைகளின் மேல் சாமியாடி வரும் பாரதிய ஜனதாவின் யோக்கியதையை நாம் புதிதாக சொல்லத் தேவையில்லை. எனினும், ஒரு ஒப்பீட்டுக்காக சொல்வதென்றால் பாரதிய ஜனதாவின் ஆட்சிக்காலத்தில் வறுமைக் கோடு பற்றிய அளவீடு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் முறையே 18 ரூபாய் மற்றும் 16 ரூபாய்களாகவே இருந்தது. பாரதிய ஜனதாவின் ‘ஏழைகள் பற்றிய அக்கறை’ குறித்து மேற்கொண்டு புதிதாக ஏதும் சொல்லத் தேவையில்லை என்றாலும் இந்த சாமியாட்டத்தின் பின்னும் அந்தக் கட்சி எழுப்பி வரும் அதீத கூச்சலின் பின்னும் வேறு காரணங்கள் உள்ளன.

வறுமைக் கோடு பற்றிய இந்த விவாதங்களும், எதிர்க்கட்சிகளின் கூச்சல்களும் ஊடகங்களை நிரப்பி வரும் இதே காலகட்டத்தில் தான் மத்திய அரசு உணவு பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. காட் ஒப்பந்த ஷரத்துகளின் படி உணவு தானிய சந்தையை தனியார் நிறுவனங்கள் கைப்பற்றுவதற்குத் தடையாக பொது வினியோக முறையை கைவிட்டாக வேண்டும். இதன் பொருள், மத்திய அரசு குடிமக்களுக்கு உணவு தானியங்கள் கிடைக்கச் செய்யும் கடமையிலிருந்து கைகழுவியாக வேண்டும்.

மதிய உணவுத் திட்டம்பொது வினியோக முறையை ஒழித்துக் கட்டும் அரசின் திட்டங்கள் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நவதாராள பொருளாதாரக் கொள்கைகள் அமுலுக்கு வரும் முன், நடப்பிலிருந்த அனைவருக்குமான பொதுவினியோக முறை தொண்ணூறுகளின் இறுதியில் மாற்றியமைக்கப்பட்டு இலக்கு நோக்கிய பொதுவினியோக முறையாக அமுலாக்கப்பட்டது. இதன் படி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்போருக்கும், அதற்கு மேல் இருப்போருக்கும் வேறு வேறு வண்ண ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டன. தற்போது தமிழகம் உள்ளிட்டு ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து நாட்டின் பிற மாநிலங்களில் இலக்கு நோக்கிய பொது வினியோக முறை அமுலில் உள்ளது.

தற்போது பேசப்பட்டு வரும் உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது ஏழைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உணவு தானியங்கள் சரியாக கிடைக்கச் செய்வதற்காகவே கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏழைகளைக் கணக்கிடுவதில் மோசடியான அளவீடுகளைக் கையாள்வதன் மூலம் ஒரு பக்கம் ஏழைகளைக் குறைவாக கணக்குக் காட்டி மக்களை மேலும் பட்டினியில் தள்ளுவது, இன்னொரு பக்கம் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட பெருத்த சந்தையை தனியார் உணவு தானிய முதலைகளின் பிடியில் ஒப்படைப்பது என்பதே அரசின் உள்நோக்கமாக உள்ளது.

விவாதங்கள் இந்த திசையை நோக்கித் திரும்பி விடாமல் இருப்பதை பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆளும் வர்க்க ஊடகங்களும் உறுதிப்படுத்திக் கொள்கின்றன. தங்களது நிருபர் படையை களமிறக்கி எந்த ஊரில் என்ன சாப்பாடு என்ன விலை என்று எல்லோருக்கும் தெரிந்த உண்மையை யாருக்குமே தெரியாத ரகசியத்தைக் கண்டுபிடித்துச் சொல்வது போல சொல்லி காங்கிரசு கட்சி தலைவர்களை வெறும் மூளையற்ற கோமாளிகள் என்று நகைச்சுவையாக நிறுவ முற்பட்டுள்ளனர்.

முதலாளித்துவ ஊடகங்களில் காங்கிரசையும் வறுமைக் கோட்டையும் முன்வைத்து நடந்து வரும் இந்த நகைச்சுவைக் காட்சிகளின் பின்னே பசிக் கொடுமையை எதிர்நோக்கியிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்வதும் அம்பலப்படுத்துவதும் தான் ஆளும் கும்பலின் அயோக்கியத்தனமான திட்டங்களை முறியடிப்பதற்கான முன் தேவை.

– தமிழரசன்

இசுலாத்தின் பெயரால் சவுதி மன்னராட்சி பயங்கரவாதம் !

30

வுதி அரேபியாவில் மன்னராட்சிக்கு எதிராகவும், அரசியல் சீர்திருத்தம் கோரியும் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. அதற்காக போராடும் மனித உரிமையாளர்கள் பலரையும் பயங்கரவாதிகளைப் போல கைது செய்து கொடுமைப்படுத்துகிறது சவுதியின் மன்னராட்சி. பெண்கள் வீதிக்கு வந்து போராடுவதை சகித்துக் கொள்ள முடியாத ஷேக்குகளின் சட்ட ஆட்சி மேலாண்மை செலுத்துகிறது. மனித உரிமைகளுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்டு ஈராக், லிபியா, சிரியா என்று பிற நாடுகளின் மீது வரிசையாக பயங்கரவாதத்தை அவிழ்த்து விடும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய ‘ஜனநாயகங்கள்’ சவுதி அரேபியாவின் நம்பகமான கூட்டாளிகளாக உள்ளன. தங்களுக்கு எண்ணெய் வளத்தை வாரி வழங்கும் மன்னர் ஆட்சியை பாதுகாத்து நிற்கின்றன.

அப்துல் கரீம் யூசுப் அல் காதர்
அப்துல் கரீம் யூசுப் அல் காதர்

அப்துல்கரீம் அல்காதர் என்பவர் சவுதி அரேபியாவிலுள்ள குவாஸிம் பல்கலைக்கழக சட்டத்துறைப் பேராசிரியர் மட்டுமல்ல, அரேபிய குடியுரிமை மற்றும் அரசியலுரிமைக்கான கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினரும் கூட. ஆட்சியாளர்களது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும், சட்டவிரோதமாக மனித உரிமை அமைப்பு தொடங்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. உண்மையில் பேராசிரியரின் அமைப்பு அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்க ஆரம்பித்த பிறகு உள்கட்டுமான அமைச்சகம் இப்போலிக் குற்றச்சாட்டுக்களை அவர்மீது சுமத்தியிருக்கின்றது.

புரைடா நகரில் நடந்த அல்காதர் மீதான விசாரணையை பார்க்க நீதிமன்றத்திற்குள் அவரது வீட்டுப் பெண்கள் வர முயன்ற போது, ஆண்கள் மட்டும்தான் வர வேண்டும் என்று நீதிபதி சொல்லி விட்டார். தனிப்பட்ட முறையில் நீதிபதியுடனான முரண்பாடு காரணமாக வழக்கு பதியப்பட்டிருப்பதால் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரினார் அல்காதர். அல்காதரின் வழக்கறிஞரான அப்துல்சிஸ் அல்-சுபைலியை விரும்பத்தகாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொய்க்குற்றம் சாட்டி காவல்துறையினர் கைது செய்து பின் விடுவித்தனர். பிரதிவாதியும், அவரது வழக்கறிஞரும் இல்லாமலேயே ஏப்ரல் 25 அன்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி இப்ராஹிம் அப்துல்லாஹ் எல்-ஹோசினி. இதன்படி அல்காதருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்டால் 5 ஆண்டுகள் தண்டனை குறைப்புக்கும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

இதே நீதிபதி கடந்த மார்ச் 9 அன்று அம்மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த முகமது அல்-கஹானி, அப்துல்லா அல் ஹமீது ஆகியோர் ஆட்சியாளர்களுக்கு எதிராக பேசியதாகவும், நாட்டு முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாகவும் கூறி 10 மற்றும் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தார். முகமது அல்-கஹானி இசுலாமிய பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்க கோரி 2011-ல் போராடிய போது வெளிநாட்டுக்காரனை பின்னால் உட்கார வைத்து அல்-கஹானியின் மனைவி கார் ஓட்டப் போகிறார் பாருங்கள் என்று கெக்கலித்தனர் நீதிபதிகள். அல்-கைதாவும், இம்மனித உரிமை அமைப்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். பெண்கள் எல்லாம் இணையதளத்தில் குரானை மேற்கொள் காட்டுவதையும், அதற்கு பொருள் சொல்வதையும் தன்னால் பொறுத்துக்கொள்ள இயலாது என்றும் நீதிபதி சொல்லியுள்ளார்.

அல்சயீத் என்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட போது அவருக்காக வாதாட வந்த குவைத்தை சேர்ந்த வழக்கறிஞரான அம்மாஸ் அல்ஹார்பிக்கு அவர் சவுதியின் பிரஜை இல்லை என்று அனுமதி மறுக்கப்பட்டது. மனித உரிமை சங்கம் ஆரம்பித்த முகமது அயீத் அல்-ஒடிபி இணையதளம் துவங்க அனுமதி பெறவில்லை என்றும் கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வழக்கறிஞர் வைத்துக்கொள்ளவே அனுமதி மறுக்கப்பட்டது. இந்த அமைப்பின் முன்னணியாளர்களில் ஒருவரான எய்சா அல் நெகாபிக்கு கடந்த ஏப்ரல் 29 அன்று மூன்றாண்டு சிறைத்தண்டனையும், நான்காண்டு வெளிநாடு செல்லத் தடையும் விதித்தது நீதிமன்றம். அவரது வங்கிக் கணக்குகளையும், இணைய பக்கங்களையும் அரசு நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு மாத்திரம் தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கை என்ற போர்வையில் மனித உரிமை ஆர்வலர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரும் சிறையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் இரண்டு மூன்று ஆண்டுகளாக அரசால் வெளியிடப்படவேயில்லை. பலரையும் அவர்களது குடும்ப உறுப்பினர், வழக்கறிஞரை சந்திக்கக் கூட அரசு தரப்பு மறுத்து வருகிறது.

அரபு வசந்தம்
அரபு வசந்தம்

அல் ஸாடி என்ற மனித உரிமை ஆர்வலர் சிறையில் 30 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இப்போது உயிருடன் இருக்கிறாரா எனத் தெரியவில்லை. அவர் உண்ணாவிரதம் இருக்கும் செய்தியை அரசு இருட்டடிப்பு செய்து விட்டது. மார்ச் 21, 2011 முதல் சிறையில் இருக்கும் அவரை யாருமே இதுவரை சந்திக்க இயலவில்லை. ரகசியமாக சிறையிலிருந்து கடத்தி வரப்பட்ட கடிதங்கள் சில ட்விட்டரில் உலவினாலும் அவரை சந்திக்க அவரது மனைவி, தாய்க்கும் கூட அனுமதி கிடையாது.

அரபு வசந்தத்தை ஆதரித்து அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட சையது அகீல் அக் 2011-ல் கைது செய்யப்பட்டு இதுவரை யாரையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. உண்ணாவிரதமிருந்த காரணத்தால் அவரை மருத்துவமனையில் சங்கிலியால் கட்டிலுடன் பிணைத்து காவல் போடப்பட்டிருந்தது. தொழுகை நடத்த அவர் அனுமதி கேட்டபோது பாதுகாப்புக்கு நின்ற வீரர்கள் அதனைக் காதுகொடுத்துக் கூட கேட்கத் தயாராக இல்லை.

கிழக்குப் பகுதியில் உள்ள குவாதிப் நகரத்தில் கடந்த ஜூன் 22 அன்று நடந்த சிறப்பு காவல்படையின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி இளைஞன் ஒருவனும், 2011 அரபு வசந்த புரட்சியை ஆதரித்து நடந்த பேரணியின் முன்னணி இளைஞர்களில் ஒருவனுமான மோர்சி அல்-ரெஃப்-ம் கொல்லப்பட்டனர். மோர்சியை பிடித்த பிறகுதான் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இறந்து கிடந்த மோர்சியின் உடலை பெற வேண்டுமானால் தாங்கள் சொல்லும் பேப்பரில் கையெழுத்திடுமாறு அவரது குடும்பத்திற்கு மிரட்டல் உள்கட்டுமான அமைச்சகத்திலிருந்து வந்ததாம். அதற்கு அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.

மனித உரிமை ஆர்வலர்களைக் கண்டு அஞ்சும் ஆட்சியாளர்கள் அவர்களிடமிருந்து பேனாவையும், செல்பேசிகளையும் பிடுங்கிக் கொள்கின்றனர். அரசியல் கைதிகளை விடுவிக்க கோரும் போராட்டத்தில் பெண்கள் வீதிகளுக்கு வந்து இரவெல்லாம் கூடாரம் அமைத்து போராடுகின்றனர். போலீசார் அவர்கள் மீது உப்புப்பெறாத காரணங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன், இயற்கை உபாதை மற்றும் உணவுக்கு கூட அவர்களை போக விடாமல் தடுத்துள்ளனர்.

இந்த அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு தளங்களில் நடத்தப்படுகின்றன. வைபர் என்ற தகவல்தொடர்புக்கு உதவும் மென்பொருளை கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி அரசு தடை செய்ததும் ஓபன் சோர்ஸ் ஆதரவாளர்கள் அதற்கு பதிலாக எந்தெந்த மென் பொருட்களை பயன்படுத்தலாம் என ஆலோசனைகளை ட்விட்டரில் கொட்டத் துவங்கினர். தற்போது ட்விட்டரில் நானும் அம்மனித உரிமை அமைப்பின் உறுப்பினர்தான் என்ற பெயரில் ஒரு அக்கவுண்ட் துவங்கப்பட்டு பலரும் அதில் இணைந்து வருகின்றனர். அனைவரும் அல் காதரின் விடுதலைக்காகவும், அரசியலமைப்பை மாற்றக் கோரியும் ட்விட்டரில் பிரச்சாரம் செய்கின்றனர்.

ட்விட்டர் மற்றும் முகநூலில் செயல்படும் பாதிக்கப்பட்ட இளைஞர்களை கைது செய்வதற்கு ‘பயங்கரவாதத்திற்கெதிரான போரை’ சவுதி மன்னராட்சி தொடங்கியுள்ளது.

இளவரசன் முகமது பின் நயீப் பில் அல் அசீஸ்
இளவரசன் முகமது பின் நயீப் பில் அல் அசீஸ்

இந்த ஆண்டு துவக்கத்தில் பிரிட்டன் பிரதமர் காமரூனையும், அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் சந்தித்து பயங்கரவாத எதிர்ப்பில் கரம் கோர்த்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்திய சவுதி இளவரசரும், உள்கட்டுமானத்துறை அமைச்சருமான முகமது பின் நயீப் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை மக்கள் மீதும், அரசியல் உரிமை, சமூக உரிமை கோரும் போராளிகள் மீதும் ஏவி விட்டுள்ளார். இத்தகைய போராட்டங்களையும், போராடும் மக்களையும் ஒடுக்கும் அரசின் பிரதிநிதியாக முகமது பின் நயீபை போராடும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மன்னர் அப்துல்லாவுக்கு அடுத்தபடியாக கருதப்படும் இவர்தான் தற்போது பொருளாதார வளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளவர்.

அமெரிக்க அடிவருடிகளான அரபு ஷேக்குகள் தங்களது குடிமக்களையும் அரசியல் உரிமைகளையும் நசுக்குவதை மேற்கத்திய நாடுகள் வரவேற்கவே செய்யும். தங்கள் நாட்டு மக்களுக்கு பத்து சதவீதம் வேலைவாய்ப்பை உறுதி செய்ய சட்டம் போட்டு முயற்சிப்பதாக காட்டிக் கொண்டாலும், எதேச்சதிகார அரசு நிர்வாகம் மூலமாக மனித உரிமைகளைப் பறிப்பதும், அரசியல் உரிமைகளை மறுப்பதும் தொடர்வது அரேபியாவில் சாத்தியமில்லைதான்.

போராடும் சவுதி அரேபிய இளைஞர்கள் அரசியல் மாற்றத்தைக் கோருகிறார்கள். அவர்களது கையில் சித்தாந்தத் தெளிவும், அதனடிப்படையிலான அமைப்பும் இல்லையென்றாலும் சர்வாதிகாரத்தை புதை குழிக்கு அனுப்ப வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இசுலாத்தின் காவலர்களாகவும், புரவலர்களாகவும் காட்டிக் கொள்ளும் சவுதி ஷேக்குகளின் வேடம் இனியும் செல்லுபடியாகாது. இசுலாமிய மத மாயைகளிலிருந்து சவுதி மக்கள் வெளியேறத்தான் போகிறார்கள். அமெரிக்க ஆதரவுடன், இசுலாத்தின் பெயரில் ஆட்டம் போடும் சவுதி ஷேக்குகளின் பயங்கரவாதம் விரைவிலேயே சவுதி மக்களால் ஒழிக்கப்படும்.

‘அரபு வசந்தம்’ இரண்டாம் பாகம் துவங்குகிறது.

– வசந்தன்.

தமிழீழம் குறித்து ம.க.இ.க. மீதான அவதூறுகள் !

17

எதிர்கொள்வோம் ! -2

“ஈழத் தமிழர்களால் ஒருமனதாக ஏற்கப்பட்ட தமிழீழத்தை ம.க.இ.க. வினர் மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? தனி ஈழத்தை ஏற்க மறுக்கும் ம.க.இ.க.வினரைத் தமிழீழத்தின் எதிரி என்று ஏன் கருதக்கூடாது?” என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

ஈழத் தலைமை
விடுதலைப் புலிகளின் முன்னோடிகளான ஈழத்தின் பிற்போக்கு வலதுசாரித் தலைமை : (இடமிருந்து) செல்வநாயகம், அமிர்தலிங்கம் மற்றும் ஜி.ஜி.பொன்னம்பலம். (கோப்புப்படம்)

அந்தக் காலத்தில் தமிழக அரசர்கள் பார்ப்பனர்களுக்கு “பிரம்மதேயங்கள்” என்ற பெயரில் சில கிராமங்களை எழுதி வைத்தார்கள். அதைப் போல, தமிழகத்தை ஜெயலலிதாவுக்கு எழுதிவைத்து விட்டுப் போன பாசிச வக்கிரக் கோமாளி அரசியல் தலைவர் எம்.ஜி.ஆர். மீது சில பொய்த் தோற்றங்கள் இங்கே திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி, சௌந்தரராசன் பாடி, எம்.ஜி.ஆர். வாயசைத்த பாடல்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். சிந்தனைகள் என்ற பச்சையான பொய்யைப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் நுழைத்து அதிகாரபூர்வமாக இளைய தலைமுறைக்குப் பதிய வைக்கிறார்கள்.

அதைப் போல, ஈழத்து எம்.ஜி.ஆர். பிரபாகரன் மற்றும் ஈழம் குறித்துப் பல கற்பிதங்களும், பொய்த் தோற்றங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ம.க.இ.க., புதிய ஜனநாயகம், பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு. மற்றும் இவற்றின் தோழமை அமைப்புகள் தமிழீழத்தை ஏற்காதவர்கள், தமிழீழத்திற்கு எதிரானவர்கள் என்று இனவாதிகளால் அவதூறு செய்யப்படுவது.

“தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு 60 ஆண்டு வரலாறு உண்டு; 30 ஆண்டுகள் ஈழத் தந்தை செல்வநாயகம், பெரியவர் ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம் ஆகியோர் தலைமையில் அமைதிவழிப் போராட்டம்; அதன் பிறகு தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம்” என்று வரலாறு சொல்லுகிறார்கள்.

இந்த 60 ஆண்டுகளிலும் தமிழீழம் என்ற கருத்தாக்கத்திற்கு அதன் மேற்படிக் கர்த்தாக்களுக்கே “தனித் தமிழீழம்தான்” என்ற ஒற்றையான பொருள் இருந்ததே கிடையாது. இதை எம்மால் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். பிரபாகரன் கூட, தனித் தமிழீழம் கோரிக்கையைக் கைவிட்டு, “தமிழீழம்” என்பதற்கு வேறுபட்ட பொருள்கள் கூறிய தருணங்கள் உண்டு; இதையும் எம்மால் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும்.

திம்பு
பூடான் தலைநகர் திம்புவில் 1985-ம் ஆண்டு ஈழப்பிரச்சினை குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை (கோப்புப் படம்)

1985 திம்புப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகள் உட்பட ஐந்து போராளி அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகளில் “தமிழீழம்” கிடையாது! “இலங்கையில் வாழும் தமிழர்களை ஒரு தனி தேசிய இனமாக அங்கீகரிப்பது; அவர்களுக்குத் தாய்நாடு ஒன்றை அங்கீகரிப்பது; தமிழ் தேசத் தன்னுரிமையை அங்கீகரிப்பது; இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமையையும் அடிப்படை உரிமையையும் அங்கீகரிப்பது” ஆகிய ஐந்து கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டன. இந்த ஐந்து கோரிக்கைகளையும் எமது அமைப்புகள் எப்போதும் உறுதியாக ஆதரித்து வந்திருக்கின்றன.

ஆனால், 1987 ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் பின்பு வடகிழக்கில் அமையவிருந்த இடைக்கால நிர்வாக சபையில் புலிகளுக்குப் பெரும்பான்மை இடங்களை வழங்கி புலிகளின் பிரதிநிதியை முதல்வராக்கி, புலிகளின் செலவீனங்களுக்காக மாதாமாதம் ஐந்து மில்லியன் ரூபாய்களை வழங்கினால், “தமிழீழ”க் கோரிக்கையைக் கைவிடுவதற்கும் ஒப்புக் கொண்டார்கள். (இதன்படி முதற்கட்டமாக ஐந்து மில்லியன் ரூபாய்களைப் புலிகள் பெற்றுக் கொண்டார்கள்.) சந்திரிகா இலங்கை அதிபராகிய பிறகு நடந்த போர்நிறுத்தம், அமைதிப் பேச்சுவார்த்தையின்போது தமிழீழத் தன்னுரிமைக்குப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்ரன் பாலசிங்கம் “மாநில சுயாட்சி” என்ற புதிய வியாக்கியானம் கொடுத்தார்.

தமிழீழ விடுதலைக்கான முதல் 30 ஆண்டுகால அமைதிவழிப் போராட்ட காலத்தில் அதற்குத் தலைமையேற்றதாகக் கூறப்படும் ஈழத் தந்தை செல்வ நாயகத்தின் தமிழரசுக் கட்சியும், பெரியவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரசுக் கட்சியும் இணைந்து நிறுவிய தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதை எவ்வாறு வழி நடத்தின? உண்மையில் அது தமிழீழ விடுதலைக்கானதுதானா?

ஈழத் தந்தை செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியும், பெரியவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரசுக் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் பலவகையிலும் தமிழ்நாட்டின் திராவிட கட்சிகளைப் போலவே அரசியல் பிழைப்புவாதத்தில் மூழ்கிக் கிடந்தவைதாம். தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகளாவது பெரியார், பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்விடுதலை போன்ற முற்போக்குப் பாரம்பரியங்களைக் கொண்டவை. ஆனால், அத்தகைய பாரம்பரியம் இல்லாத அவ்விரு ஈழத்துப் பிற்போக்கு கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு ஆளும் சிங்கள இனவெறிக் கட்சிகளுடன் மாறிமாறிக் கூட்டணி அமைத்துக் கொண்டு, அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டவைதாம். இவ்விரு கட்சிகளுமே இலண்டன் உயர் கல்வி பயின்ற, வடக்கின் ஒடுக்கப்பட்ட சாதிகளையும், கிழக்கின் மக்களையும் கீழானவர்களாகக் கருதும் யாழ் மையவாத, யாழ்ப்பாண ஆதிக்க வேளாள சாதித் தலைமையைக் கொண்ட கட்சிகள்தாம்.

இக்காரணங்களால் இவற்றுக்கு வவுனியாவிற்குத் தெற்கே தமது வர்க்க நலன்களையும் தமது சொந்தத் தொழிலையும் கொழும்பில் குவித்திருந்த தலைமையினரின் செல்வத்தையும் பாதுகாக்க ஒரு அரசியலும், வவுனியாவிற்கு வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களிடம் ஓட்டுப் பொறுக்குவதற்காக மட்டுமே தமிழ்த் தேசிய அரசியலும் தேவைப்பட்டன. அதற்கேற்பவே இவ்விரண்டு கட்சிகளும் தமிழீழச் சிக்கலைக் கையாண்டன.

இந்தியா - இலங்கை ஒப்பந்தம்.
இந்தியா-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னதாக, அது குறித்து டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் (இடமிருந்து) அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, அ.தி.மு.க.வின் பண்ருட்டி ராமச்சந்திரன், விடுதலைப் புலிகள் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். (கோப்புப் படம்)

1972-இல் நிறைவேற்றப்பட்ட புதிய அரசியல் அமைப்புச் சட்டம் இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்து அவர்களை அடிமைகளாக்குவதாக அமைந்ததால், தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரசுக் கட்சி மற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் காங்கிரசு ஆகிய முக்கிய தமிழர் கட்சிகள் எல்லாம் இணைந்து தமிழர் ஐக்கியக் கூட்டணியை ஏற்படுத்தின. அப்போதும்கூட தமிழீழம் கோரிக்கை முன் வைக்கப்படவில்லை. வடக்கு-கிழக்கு மாநிலங்களை ஐக்கியப்படுத்தி ஈழத்தை ஒரே மாநிலமாக்கி ஒரு கூட்டாட்சி முறையை இலங்கையில் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அக்கூட்டணியின் கோரிக்கையாக இருந்தது. (செல்வநாயகம் தலைமையிலான கட்சியின் பெயரே ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி (Federal party) தான்; தமிழில்தான் “தமிழரசுக் கட்சி” – என்ன ஒரு மோசடி!)

“1958 முதல் 1977 வரையிலும் ஏறத்தாழ இருபது ஆண்டுகள், தமிழர்கள் இலங்கையில் சிங்களருடன் இணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கையில் தமது சம உரிமைக்கான கோரிக்கைகளை அமைதிவழியில் வலியுறுத்தி வந்தனர். அமைதிவழியில் போராட்டங்களையும் நடத்தினர். இணைந்து ஒரே நாட்டில் வாழ்வதற்கான தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர். இடைக்கால சமரச ஒப்பந்தங்களுக்கும் இணைங்கினர்” என்று புலிகள் ஆதரவு குழுக்கள் பலவும் ஒப்புக் கொள்கின்றன.

1976 யாழ்ப்பாணம்-வட்டுக்கோட்டை மாநாட்டில் தான் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என்று பெயர் சூட்டிக்கொண்டு, “தமிழீழத் தனியரசு” நிறுவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் மலையகத் தமிழரின் ஆதரவு பெற்ற இலங்கைத் தொழிலாளர்கள் காங்கிரசு கூட்டணியிலிருந்து விலகியது.) “தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எதிர்வரும் 1977-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய இனத்தின் திட்டமான முடிவை சிங்கள அரசாங்கத்திற்குப் பிரகடனப்படுத்துவதற்குரியது என்றே கணிக்கிறது” என்று மட்டுமே அத்தீர்மானம் கூறியது. அதற்குமேல், “தமிழீழத் தனியரசை” எவ்வாறு அடைவது என்பதை மாநாட்டிலோ, பிறகோ அக்கூட்டணி அறிவிக்கவேயில்லை. அதற்கான முயற்சியில் ஈடுபடவுமில்லை.

“வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிதான் ஈழத் தேசிய இயக்கத்தின் அடிப்படை. அதற்கான ஜனநாயகக் கட்டளைதான் 1977 தேர்தல் முடிவு. தமிழீழத்துக்கு ஈழத் தமிழர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர்” என்று புலி ஆதரவாளர்கள் தொடர்ந்து கதைத்து வருகின்றனர். ஆனால், உண்மையோ வேறுவிதமாக அமைந்தது.

08-captionதமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரசும் கூட்டணி அமைத்து 1977 தேர்தல்களில் போட்டியிட்டபோதும் வடக்கில் 41 விழுக்காடு வாக்குகளும் கிழக்கில் வெறும் 26 விழுக்காடு வாக்குகளுமே கிடைத்தன. மொத்தத்தில் தமிழீழப் பகுதியில் 35 விழுக்காடுக்கும் குறைவான வாக்குகளையே கூட்டணியினர் பெற்றனர். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் யாழ் மையவாத, ஆதிக்கசாதி, முற்போக்கு-கம்யூனிச எதிர்ப்புக் கொள்கைகள் காரணமாக கிழக்கு மாகாண மக்கள், சிறுபான்மை இசுலாமிய மக்கள் மற்றும் ஈழத்தில் 30 விழுக்காடுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதரவை இக்கூட்டணி பெறமுடியவில்லை. (இதன் காரணமாகவே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களான அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் முந்தைய தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர்). ஆக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தமிமீழத்துக்குச் சற்று ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு ஈழத் தமிழர்களே ஒப்புதல் அளித்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலம் தமிழீழத்தை முன்நிறுத்துவதற்கு முன்பேகூட, அவ்விரு கட்சிகளும் இதே அளவு வாக்குகளைத்தான் பெற்றிருந்தன. ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமையிலான தமிழீழத்துக்கு ஈழத் தமிழர்கள் ஒப்புதல் அளிக்கும்

ஜனநாயகக் கட்டளைதான் 1977 தேர்தல் முடிவுதான் என்பது தவறு. அதையே பிரபாகரன்-விடுதலைப் புலிகள் தலைமையிலான தமிழீழத்துக்கான ஈழத் தமிழர்களின் ஒப்புதலாகக் கொள்வதும் தவறு.

1977 தேர்தல்களுக்குப் பிறகு நியமன உறுப்பினர்கள் உட்பட 18 பேர்களோடு இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சியாகியது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி. அது தமிழீழத்திற்காக எதுவும் செய்யவில்லை. செல்வநாயகத்தின் மருமகனும் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த பேராசிரியரும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் அடிவருடியுமான ஏ.ஜே.வில்சனைத் தரகராகக் கொண்டு ஜெயவர்த்தனேவுடன் இரண்டாண்டுகள் பேரங்கள் நடத்தியது. முடிவில் தமிழீழத் தனியரசு அமைப்பதாகப் புறப்பட்ட கூட்டணி மாவட்ட அபிவிருத்தி சபைச் சட்டத்தைப் பெற்றது. அதன்படி 1981-ல் நடந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைக்கான தேர்தலில் சிங்கள இனவெறி அரசு அப்பட்டமான முறைகேடுகளிலும் அராஜகங்களிலும் ஈடுபட்டது. அதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாண நூலகத்தைக் கொளுத்தி அழித்தது. தொடர்ந்துவந்த அவசரநிலைப் பிரகடனம், பயங்கரவாதச் சட்ட ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ள முடியாமல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமை இந்தியாவுக்கு ஓடிப்போனது. இதுதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் 30 ஆண்டு கால வரலாறு.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தலைமையிலான அமைதி வழித் தமிழீழப் போராட்டம் மற்றும் அதன் தெடர்ச்சியாக பிரபாகரன் – விடுதலைப் புலிகளின் தலைமையிலான ஆயுதப் போராட்ட வழித் தமிழீழம் ஆகிய இரண்டு மட்டுமே ஈழத்தில் நிலவியதாக இங்கே புலி விசுவாசிகள் புளுகி வருகிறார்கள். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, அதன் முன்னோடியான தமிழர் ஐக்கியக் கூட்டணி ஆகிய இரண்டுமே முன்னெடுத்த அரசியல் ஈழத் தமிழர் விடுதலைக்கானது அல்ல என்று புரிந்து கொண்ட இளைஞர்களால் வேறொரு வகையான அரசியல் உள்ளடக்கம் கொண்ட தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதம்
கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு, காத்தான்குடி மசூதியில் ஆகஸ்டு 3, 1990 அன்று விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட முசுலீம்கள். (கோப்புப் படம்)

1970-களின் ஆரம்பத்தில் தமிழ் இளைஞர் பேரவையாகத் தொடங்கிய அவர்கள், சோசலிசத் தமிழீழம் என்ற கோரிக்கையை முன்னெடுத்தனர். வர்க்க ஒடுக்குமுறையற்ற, சாதி-மதமற்ற, ஜனநாயகத் தமிழ் ஈழமே அதன் இலக்காக இருந்தது. உள்ளடக்கத்தில் பல போதாமைகளையும் குறைபாடுகளையும் கொண்டிருந்த போதும், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வலதுசாரி பிற்போக்குத் தமிழீழத்தைவிட இது முற்போக்கானது; மாறுபட்டது. அந்த இளைஞர்கள் முன்வைத்த இடதுசாரி-முற்போக்கு முழக்கங்கள்தாம் பெரும்பாலான இளைஞர்கள்களையும் மாணவர்களையும் தேசியக் கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து விலகித் தமிழீழப் போராட்டத்தை நோக்கி வரவைத்தன.

பிரபாகரனும் விடுதலைப் புலிகளும்கூட “சோசலிசத் தமிழீழத்தை நோக்கி” என்றொரு நூலை வெளியிட்டார்கள். ஆனால், அது பிற்காலத்தில் இலண்டனிலிருந்து அன்ரன் பாலசிங்கம் எழுதிக் கொடுக்க, பிரபாகரன் ஒரு உத்திக்காக மட்டும் உச்சரித்ததுதான். தாங்கள் ஒரு உத்தியாகவே சோசலிசக் கருத்தாக்கங்களை உச்சரித்தோம் என்று பின்னாளில் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் தனது ‘த வில் டு ஃபிரீடம்’ (The Will to Freedom) நூலில் ஒப்புக்கொண்டிருக்கிறார். “தமிழீழத்தின் பொருளாதாரக் கொள்கை திறந்த பொருளாதாரக் கொள்கையே” என்று பிரபாகரனே வன்னி பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவித்தார். பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சோழப் பேரரசும் புலிக்கொடியும் கனவாகக் கொண்ட குறுந்தேசிய, வலதுசாரித் தமிழீழம்தான் இலக்காக இருந்தது.

இலங்கையில் 1970-களில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்து, அந்நாட்டின் இரு ஆளும் கட்சிகளும் மாறிமாறி சிங்களப் பேரினவாதத்துக்குத் தீனி போடவும், அவர்களின் ஆதரவை வளைத்துப் போடவும், ஈழ மற்றும் மலையகத் தமிழர் மீதான ஒடுக்கு முறைகளையும் சீண்டல்களையும் தீவிரப்படுத்தின. தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி செய்வதறியாது, மேலும் சமரச பேரங்களில் இறங்கியது. அதன் மீது நம்பிக்கை இழந்த போர்க்குணமிக்க இளைஞர்களும் மாணவர்களும் ஆயுதப் போராட்டங்களில் குதிக்கத் தீர்மானித்தனர். இடதுசாரி சாயலைக் கொண்ட ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளோட் மற்றும் வலதுசாரி அரசியலைக் கொண்ட புலிகள், டெலோ இவை இரண்டிலிருந்தும் மாறுபட்ட பொதுவுடைமை அரசியலைக் கொண்ட என்.எல்.எஃப்.டி. ஆகிய போராளிக் குழுக்கள் தோற்றமெடுத்தன. தமிழீழத்துக்கான இவற்றின் அரசியல் உள்ளடக்கம், ஆயுதப் போராட்ட வழிமுறை வெவ்வேறாக இருந்தன.

என்.எல்.எஃப்.டி. தவிர, பிற போராளிக் குழுக்களை அரவணைத்து இந்திய அரசு ஆயுதங்களும் பணமும் பயிற்சியும் கொடுக்கத் தொடங்கிய பிறகு, தமிழீழக் கருத்தாக்கத்துக்கு இன்னொரு விரும்பத்தகாத பரிமாணம் உருவானது. அதாவது, தமிழீழக் கருத்தாக்கத்தை இப்போது இந்திய உளவு அமைப்பான “ரா” அதிகாரிகள் வரித்துக் கொண்டு, போராளிக் குழுக்களை வழி நடத்தத் தொடங்கினார்கள். ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளோட் ஆகிய போராளிக் குழுக்கள் இதுவரை தாம் சொல்லிக் கொண்ட இடதுசாரிச் சித்தாந்தங்களைப் பகிரங்கமாகவே கைவிட்டன. விடுதலைப் புலிகளுக்கு அப்படி இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் அவர்களுக்கு “தமிழீழ சோழப் பேரரசை” மீண்டும் அமைக்கும் கனவிருந்தது.

இந்திய அரசின் தயவால் போராளிக் குழுக்கள் பணபலம், ஆள்பலம், ஆயுதபலத்தைப் பெருக்கி கொண்டிருந்த அதேவேளையில், அவை தனித்தனி அதிகார மையங்களாகவும் மாறத் தொடங்கின. ஒவ்வொரு தமிழீழப் போராட்டக் குழுவின் தலைவரும் முற்போக்கு அரசியலைத் துறந்து குட்டிக் குட்டி யுத்தப்பிரபுக்களாகக் குறுகிப் போனார்கள். இயக்கங்களுக்குள் ஜனநாயக மறுப்பும் உட்படு கொலைகளும் சகோதரப் படுகொலைகளும் தலைவிரித்தாடின. என்.எல்.எஃப்.டி., பி.எல்.எஃப்.டி., “தீப்பொறி” போன்ற மாறுபட்ட பொதுவுடைமை, ஜனநாயக அரசியலைக் கொண்ட சிறு குழுக்கள் மட்டும் இந்தப் போக்கிற்கு விதிவிலக்காக இருந்தன. அவையும் புலிகளால் தடைசெய்யப்பட்டும், “ரா” வின் தூண்டுதலால் அவற்றின் தலைவர்கள் படுகொலைகள் செய்யப்பட்டும் அழிக்கப்பட்டன.

விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவாகவும் தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவாகவும் திரண்டிருந்த மக்கள் மீதே இயக்கங்கள் அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கின. இந்த அராஜகச் செயல்களை எதிர்த்த போராளிகள் இயக்கங்களிலிருந்து வெளியேறி ஜனநாயக வழிபட்ட புதிய தமிழீழப் போராட்டக் குழுக்களை அமைப்பதற்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள். அதே வேளையில் நூற்றுக்கணக்கான போராளிகள் இந்த அராஜகத் தலைமைகளுக்கு எதிராக உள்ளிருந்து போராடி மடிந்தார்கள்.

1986-ல் புலிகள் மற்றைய இயக்கங்களைத் தடை செய்து தலைவர்களைக் கொன்றொழித்ததுடன் தமிழீழக் கோரிக்கைக்குப் பாசிசப் பரிமாணத்தைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். உரிமை கோரப்படாத கொலைகளும் இரகசியக் கொலைகளும் ஆயிரக்கணக்கில் புலிகளால் நிகழ்த்தப்பட்டன. தமிழீழம் என்ற முழக்கமானது பாசிசப் புலித் தலைமைகளைப் பாதுகாக்கும் கவசமாகக் கொள்ளப்பட்டது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் தொடர்ச்சியாகவோ, புலிகளின் பாசிச அரசியலின் நீட்டிப்பாகவோ, எஞ்சியுள்ள புலிகளின் விருப்பங்களுக்காகவோ, தமிழ்நாட்டுத் தமிழ்தேசிய இனவாதிகளின் விருப்பங்களுக்காகவோ, அவர்களின் பாணியிலான தமிழீழப் போராட்டத்தை முன்னெடுப்பது ஈழத் தமிழர்களுக்கே துரோகம் செய்வதாகும். ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது எப்படியாவது தனியரசை அமைத்துவிடுவது, ஏதாவது ஒரு இயக்கத்தின் அதிகாரத்தை நிலை நாட்டுவதல்ல; மாறாக, ஒடுக்கப்படும் தேசிய இன மக்களின் நலனையும் ஜனநாயகத்தையும் அது இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.

எந்தவொரு தேசிய இனமும் வேறொரு இனத்தால், பேரினவாதத்தால், அந்நிய நாட்டால் அல்லது ஏகாதிபத்திய ஆதிக்கத்தால் ஒடுக்கப்படக்கூடாது. அதேசமயம், அதை முறியடிப்பது, விடுவிப்பது என்ற பெயரால் சொந்த தேசத்து அல்லது உள்நாட்டு பாசிச சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு கொடுங்கோலாட்சி செலுத்துவதையும் அனுமதிக்க முடியாது. பாசிசத்தின் ஆகமோசமான அரசியல் புகலிடம்தான் தேசியம்.

ஆஃப்கானின் தாலிபான்கள், ஈராக்கின் பாசிச சதாம் உசைன் அமெரிக்க ஆக்கரமிப்பையும், பஞ்சாபின் காலிஸ்தானிகள் இந்தியாவின் ஆதிக்கத்தையும் எதிர்த்துத் தமது “தேசிய உரிமை”க்காகப் போராடினாலும், தம் மக்கள் மீதே பாசிச பயங்கரவாதத் தாக்குதலை நடத்தினார்கள்; அவர் தம் ஜனநாயக உரிமைகளைக் காலில்போட்டு மிதித்தார்கள். ஆகவே, எல்லாத் தேசியப் போர்களையும் நிபந்தனையின்றி ஆதரித்துவிட முடியாது. புலிகளின் தமிழீழமும் இவ்வாறான பாசிச உள்ளடக்கத்தையும் வழிமுறையையும் கொண்டது.

தேசிய இன ஒடுக்குமுறைக்குத் தேசிய இனத் தன்னுரிமைதான் சரியான, அவசியமான தீர்வு என்றாலும், தனியரசு அமைவது உள்நாட்டு மற்றும் உலக அரசியல் சூழ்நிலைமைகளைச் சார்ந்துள்ளது. வெறும் இராணுவவாத நோக்கில் தனியரசுதான் ஒரே தீர்வு என்று கொள்ளவும் முடியாது. தமிழீழத்துக்கும் இது பொருந்தும்.

இத்தகைய புரிதலோடு தமிழீழத்தை ம.க.இ.க., புதிய ஜனநாயகம், பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு. முதலிய அமைப்புகள் எப்போதும் சமரசமின்றி, உறுதியாக ஆதரித்து வந்திருக்கின்றன. தமிழீழத்தை ஒருபோதும் ஏற்காத போலிக் கம்யூனிஸ்டு, காங்கிரசு, பா.ஜ.க., போன்றவற்றின் தா.பாண்டியன், இல.கணேசன், குமரி அனந்தன் போன்ற உள்ளூர்த் தலைவர்களையும் கூட ஈழ ஆதரவாளர்களாகக் கொண்டு உறவாடும் தமிழின வாதிகளோ, இதை ஏற்க மறுத்து புரட்சிகர அமைப்புகளுக்கு எதிராக அவதூறு செய்கிறார்கள்.

– ஆசிரியர் குழு
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________

திருவெண்ணைநல்லூர் : மாணவர்களும் தோழர்களும் உறுதியான போராட்டம் !

3

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரி திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை.தேதி : 22-07-2013

ல்வி முதல் தண்ணீர் வரை தனியார் மயம் ஆவதை அம்பலப்படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டாரத்தில் செயல்பட்டு வருகின்ற விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பின் சார்பில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

அரசுப் பள்ளி முற்றுகை
ஜூன் மாதம் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள்.

இதில் சென்றமாதம் பதினைந்துக்கும் மேற்பட்ட கிராம பள்ளிகளை ஆய்வுசெய்து அதில் முன்னோட்டமாக பொய்கை அரசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாததை கண்டித்து பள்ளிகளின் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் அன்றே ஆசிரியர்களை உள்ளே நுழைய விடாமல் தடுப்பது என்ற கண்ணோட்டத்தில் அந்த கிராம மக்களிடம் தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் பகுதி மக்கள் மாணவர்கள் தோழர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் தனியார்மயத்தை அம்பலப்படுத்தியும், பள்ளியின் சீர்கேட்டை அம்பலப்படுத்தியும் முழக்கமிட்டுக்கொண்டு ஊர்வலமாக  சென்று பள்ளியின் முன்பு ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்துக்கொண்டு ஆசிரியர்களை பள்ளியை திறக்க விடாமல் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதன் செய்தியை தெரிந்து கொண்ட காவல்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் என அனைவரும் ஓடிவந்து போராட்டத்தை கைவிடுங்கள் உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்துவோம் என சொன்னதின் பேரில் ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்கு பிறகு ஆசிரியர்களை பள்ளிக்குள் நுழைவதற்கு தோழர்கள் அனுமதித்தனர்.

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் (மக்கள், தோழர்கள், அதிகாரிகள்) கழிப்பிட வசதி, குடிதண்ணீர்  அன்றே செய்து தருவதாகவும் சுற்றுச்சுவர் மட்டும் ஒரு மாதம் கழித்து தொடங்குவதாகவும், இரண்டு மாதத்திற்குள் முடித்து தருவதாக எழுத்து பூர்வமாக ஏற்றுக்கொண்டதின் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

ஆனால் கழிப்பறை, குடிதண்ணீர் பிரச்சனையை சரிசெய்துவிட்டு சுற்றுசுவர் என்பது நாற்பது நாட்களுக்கு மேலாகியும் அந்த வேலை தொடங்குவதற்கான அறிகுறியே இல்லாமல் இருப்பதை கண்டு மக்கள் தோழர்களிடம் கேள்வி எழுப்ப தொடங்கினர். இன்னொரு புறம் கிராம முக்கியஸ்தர் ஒருவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தமிழ்ச்செல்வம் என்ற அதிகாரியிடம் சுற்று மதில் கட்டித்தருவதாக சொன்னீர்கள் அது என்னாச்சு என்று கேட்டுள்ளார். அந்த அதிகாரியோ அது அந்த நேரத்தில் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்துவதற்காக நாங்கள் செய்த யுக்தி என திமிராக பதில் சொல்லியுள்ளார்.

அதிகாரிகள் என்பவர்கள் மக்களுக்கானவர்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொண்டாலும் மக்களுக்கு திரும்பவும் புரிய வைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் பேச்சுவார்த்தையில் சொன்னது போல நடந்துகொள்ளாத அதிகாரிகளை கண்டிக்கின்ற வகையிலும் BDO அலுவலகத்தை முற்றுகையிடுவதென அமைப்பு முடிவெடுக்கப்பட்டது.

இதோடு இணைந்து

  • காரப்பட்டு, இருவேல்பட்டு, நடுநிலைப் பள்ளியில் சுற்றுமதில் இல்லாமல் ஆடு, மாடுகள் நடமாடுவதை தடுக்கும் வகையில்  சுற்றுசுவர் அமைத்துக் கொடு எனவும்,
  • ஆனத்தூர் ஆரம்ப பள்ளியில்  மழைக்காலங்களில் பள்ளியின் எதிரில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதை தடுக்கும் வகையில் சிமெண்ட் தளம் அமைத்துக்கொடு எனவும்,
  • குமாரமங்கலம் ஆரம்ப பள்ளியில் பள்ளிக்கு, அருகாமையில் பானை சுடும் தொழில் நடப்பதால் அதன் புகை வெளியேற்றும் மாணவர்களுக்கு சுகாதார கேட்டை விளைவிக்கும் ஆகையால்  அதை உடனே தடுத்து நிறுத்தி பள்ளிக்குட்பட்ட இடங்களை சர்வே செய்து உடனடியாக சுற்றுச்சுவர் அமைத்துக் கொடு

என்ற கோரிக்கைகளையும் இணைத்து முற்றுகை போராட்டத்தின் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. போராட்டத்திற்கு ஒரு வார காலம் முன்னதாகவே கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டி 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள், ஒரு நகரம் முழுக்க ஒட்டப்பட்டது. மேலும் மேற்கண்ட விசயங்கள், கோரிக்கைகள் அடிப்படையில் துண்டு பிரசுரம் தயார் செய்து போராட்டம் நடக்கும் பேரூராட்சி முழுக்கவும் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசுரம் விநியோகம் செய்து போராட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. குறிப்பாக பொய்கை அரசூர் பகதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் செய்து போராட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் திருவெண்ணைநல்லூர் உதவி ஆய்வாளர் போராட்டத்தின் தலைமை தோழர் அம்பேத்கரை தொடர்புகொண்டு, “பேச்சு வார்த்தையில் எழுதிக் கொடுத்த தேதி முடிவுக்கு வருவதற்குள்ளாகவே இப்படி போராட்டம் அறிவித்திருப்பது என்பது உங்க அமைப்பு ஆளுமைக்கு உகந்தது அல்ல” என சொன்னதை சொன்னபடியே செய்து முடிப்பதில் அதிகாரிகள் நேர்மையானவர்கள் என்ற தோரணையில் தோழரை மடக்க முயற்சி செய்து உள்ளார்.

ஆனால் தோழரோ, “ஒரு கட்டுமான வேலை என்பது சொன்ன தேதியில் அப்படியே  ரெடிமேடாக கொண்டுவந்து வைப்பது அல்ல. அதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே அதற்கான அறிகுறிகள் தெரியவேண்டும். அதோடு மட்டுமல்ல எங்களுக்கு அந்த ஊர் பிரச்சனை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வது என்பது நோக்கமல்ல இன்னும் பல கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் நாறிக்கிடப்பதை அதிகாரிகளுக்கு உணர்த்தும் வகையிலும் இந்த போராட்டம் தேவையாக உள்ளது” என பேசியதும், அடுத்தபடியாக அந்த விசயத்தை விட்டு விட்டு மிரட்டும் பாணியில் பேச ஆரம்பித்தார்.

குறிப்பாக, “மாவட்டத்தில் 144 தடை உத்தரவு இருப்பது உங்களுக்கு தெரியாதா?” என  கேட்டதும் “144 தடை உத்தரவு இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டுதான் நாங்கள் போராட்டத்தை அறிவித்தோம்” என்றதும், “நீங்கள் அப்படி போராட்டம் செய்தீர்களானால் உங்களை கைது செய்வது மட்டுமல்ல, கடுமையான வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ள வேண்டி வரும்” என மிரட்டிப்பார்த்தார்.

பிறகு, “இது என்னோட முடிவு அல்ல SP-யோட உத்தரவு” என  நழுவ முயற்சி செய்தார். தோழரோ, “அது யாரோட முடிவாயிருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை, மக்களுக்கான உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம். இதுதான் எங்களுக்கு வேலை, கைது செய்வதுதான் உங்கள் வேலை என்றால் நீங்கள் செய்து கொள்ளுங்கள். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை” என்று சொன்னதும், “என்னங்க சார் இப்படி பேசறீங்க, எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து முன் கூட்டியே தெரிவித்திருந்தால் நாங்கள் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருப்போம்” என ஆலோசனை கூற முயற்சி செய்தார். “இப்ப என்ன ஆச்சு, அதே வேலையை இப்போதும் செய்யுங்கள்” என சொன்னதற்கு, “எங்களை மதிக்கவே இல்லை நீங்கள், நாங்கள் எப்படி திடீரென்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய முடியும்” என சிலிர்த்துக் கொண்டு, “போராட்டத்திற்கு வரும்போது பேசிக் கொள்வோம்” என போனை துண்டித்துக் கொண்டார்.

திட்டமிட்ட தேதியில் மூன்று வாகனங்கள் ஏற்பாடு செய்துகொண்டு (டாடா ஏஸ்) ஏறக்குறைய 75 மாணவர்கள், 80-க்கும் மேற்பட்ட தோழர்கள், மக்கள் என அலுவலகத்தை நோக்கி சென்றனர். இந்தப் போராட்டத்திற்கு முன்பே போராட்டக் காட்சிகளை படமெடுப்பதற்காக இரு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தோம் (அவர்கள் தொழில் நடத்துபவர்கள்). நாம் போராட்டத்திற்கு போகும் முன்பே இவர்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு சென்று விட்டதால் போலீஸ் ஓடிவந்து கேமராக்களை பிடுங்கிக் கொண்டு முதலில் இருவரையும் கைது செய்தது.

பிறகு நாம் அழைப்பு கொடுத்ததின் பேரில் வருகை தந்த புதிய தலைமுறை, சன் நியுஸ் நிருபர்களை விரட்ட ஆரம்பித்தார்கள். அவர்கள் நாங்கள் பத்திரிக்கை நிருபர்கள் என வாதாடியும் அவர்கள் கேமராவை பிடுங்க முயற்சி செய்தார்கள். பிடுங்கும் போது அவர்கள் வைத்திருந்த மைக்குகளில் பத்திரிக்கையினுடைய பெயர் இருந்தால் பிறகு தவிர்க்க முடியாமல் அவர்களை அனுமதித்தனர் இதற்குள் 10-க்கும் மேற்பட்ட போலீசு நம்மை கைது செய்வதற்கு தயாராகினர். அதை  தெரிந்து கொண்ட அமைப்பு தோழர்கள் மாணவர்கள் அனைவர்களையும் முன்வரிசைகளிலும், அதற்கடுத்து பெண்களையும், அடுத்த வரிசையில் தோழர்கள் என வரிசைப்படுத்தி அனைவரையும் தயார் நிலைக்கு கொண்டுவரப்பட்டது.

போராட்டத்திற்கு செல்வதற்கு முன் தோழர்களை உறுதிபடுத்தும் வகையில் சிறிதுநேரம் உரையாற்றினார். குறிப்பாக “மாவட்டத்தில் 144 தடை உத்தரவு இருப்பதால் நம் தோழர்கள் அலுவலகம் முன் செய்வதற்கு முன் போலீசு நம்மை தடுத்து கைது செய்ய முயற்சிக்கிறது. நாம் அனைவரும் அப்படி கைது செய்ய வரும் போது நம்முடைய இலக்கை நோக்கி போலீசுனுடைய தடையை மீறி நாம் முன்னேற வேண்டும். அப்படி முன்னேறும் போது சரிபாதி மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதால் அனைவரையும் கைது செய்வதில் போலீசு யோசிக்கும்.  அதையும் மீறி கைது செய்யும் பட்சத்தில் ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு கொண்டே அலுவலகத்தை முற்றுகையிட வேண்டும்” என பேசி முடித்ததும் தயார் நிலையில் இருந்த மாணவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற சொல்லி விண்ணதிர முழக்கமிட்டனர்.

இந்த மாணவர்கள் அனைவரும் 8-ம் வகுப்புக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் போர்க்குணமாக முழக்கமிட்டதை பார்த்த போலீசு திகைத்துப்போய் உடனடியாக மாணவர்களை பிரிக்க சூழ்ச்சி செய்தனர். அதற்கு மாவட்ட உதவி கல்வி அதிகாரியை உடனடியாக வரவழைத்தனர். போராட்ட இடத்திற்கு வந்த அதிகாரி தோழர் அம்பேத்கரிடம், “உங்கள் கோரிக்கைகளை யெல்லாம் உடனடியாக நிறைவேற்ற நாங்கள் கவனம் செலுத்துகின்றோம். ஆகையால் எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள். அவர்களை பாதுகாப்பாக பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றோம்” என கெஞ்சிப்பார்த்தார்.

அவர்களை தனியாக பிரிக்க அனுமதிக்கமாட்டோம் என தொடர்ந்து முழக்கமிட்டுக்கொண்டேயிருந்ததனால் முகம் சோர்ந்துபோன அதிகாரி “நம்மிடம் நீங்கள்போடுகின்ற கோரிக்கை முழக்கத்தையாவது கொடுங்கள்” என வாங்கிக் கொண்டு பரிதாபமாக ஒதுங்கிவிட்டார்.

எடுத்த முயற்சி பலிக்காத வெறியில் காவல்துறை கைது என்ற பெயரில் மாணவர்களை மட்டும் போலீசு வாகனத்தில் ஏற்றியது. இதை புரிந்து கொண்ட தோழர்கள் எங்களையும் கைது செய்யுங்கள என முரண்பட்டனர். ஆனாலும் மாணவர்களை தனியாக போலீசு வாகனத்தில் ஏற்றுவதை நிறுத்தியபாடில்லை. அமைப்பு வழிகாட்டுதலின் அடிப்படையில் உடனே தோழர்கள் சுதாகரித்து கொண்டு மற்ற மாணவர்களை கைது செய்வதை தடுத்ததோடு அல்லாமல் மாணவர்களோடு தோழர்களும் சேர்ந்து கைதாக வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் வாகன வாயிற்படியில் நின்று கொண்டிருந்த போலீசை தள்ளி விட்டு வாகனத்தில் ஏறினர்.

இங்கேயும் தோற்றுபோன போலீசு மூன்று வாகனத்தில் அனைவரையும் கைதுசெய்து திருமண மண்டபத்தில் அடைத்தது. இந்த சூழ்நிலையில் தோழர்களை ஏற்றிவந்த மூன்று வாகனத்தையும் கைப்பற்றி  காவல்நிலையத்திற்கு எடுத்துச்சென்றது.

இது ஒருபுறம் இருக்க முன்கூட்டியே கைது செய்த கேமராமேன்கள் இருவரையும் அழைத்து, “நீங்கள் இவர்களோடு சேர்ந்து கைதாக போகிறீர்களா” என மிரட்டி, “தனியாக வந்தால் சிம்பிளான கேஸ் போடுவோம்” என பிரிக்க முயற்சித்தார்கள். கேமராமேன்களே, “நாங்கள் தோழர்களோடு இணைந்தே கைதாகிறோம்” என்று சொன்னவுடன் முகம் இருண்டுபோய், அடுத்தகட்டமாக எப்படியாவது தோழர்களை பிரித்து வழக்கு பதிவு செய்து விட வேண்டுமெனறே நோக்கத்தில் போராட்டத் தலைவரை அழைத்து, “தயவுசெய்து மாணவர்களை தனியாக பிரித்து எங்களிடம் ஒப்படையுங்கள்.  அவர்களை எங்கள் வாகனத்திலேயே அழைத்துச் சென்று பள்ளியில் கொண்டு சேர்த்து விடுகிறோம். பிறகு பிரவன்டெட் அரஸ்டு என்ற பெயரில் உங்களை மாலை 6 மணிக்கு விடுதலை செய்கிறோம்” என மூன்றாவது முறையாக காவல்துறை உதவி ஆய்வாளர் மாணவர்களை பிரிக்க முயற்சி செய்தார்.

போராட்டத்தின் தலைவரோ, “அவர்களுடைய பிரச்சனைகளுக்காகத்தான் நாங்களும் போராட வந்திருக்கிறோம். ஆகையால் போராட்டத்தை அவர்களும் பார்க்கவேண்டும் என்ற அடிப்படையில் அவர்களை பிரிக்க அனுமதிக்கமாட்டோம். அப்படி நீங்கள் பிரிக்க முயற்சி செய்தால் உங்களுடைய அதிகார துஷ்பிரயோகத்தை (அடித்து பிரிப்பது) வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்”  என்றதும், “நீங்கள் மாணவர்களுக்கு தவறான பயிற்சி கொடுக்கிறீர்கள். பிஞ்சு மனதிலேயே அவர்களுக்கு இதுபோன்ற விசயங்கள் பதிவாகிவிட்டதால் அவர்களும் இதையே கடை பிடிப்பார்கள் என பொறுப்பாக பேசவந்தார். நமது தோழரோ கடைபிடிக்கட்டும், நல்லதுதானே. இப்பொழுது நடந்து முடிந்தது என்பது சமூக விரோத குற்றங்களில் ஈடுபடும் செயலா?”  என விளக்கியதும், அதன்பிறகு “நான் சொல்வதை சொல்லிவிட்டேன். நான் பிள்ளைகள் பேரிலும் வழக்கு பதிவு செய்து தனிச் சிறையில் (ஹோம் செல்) அடைப்பேன்” என்று பயமுறுத்தி பார்த்தார்.

நமது தோழர்களோ, “எந்த போராட்டத்திற்கு என்னென்ன வழக்குபதிவு செய்ய வேண்டும் என்பது எங்களுக்கும் தெரியும். அப்படி நீங்கள் மீறி சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டால் நீங்களும் நீதி மன்றத்திற்கு வர நேரிடும்” என்று சொன்னவடன், “நீங்கள் எதையாவது பேசுங்கள். நான் என்னுடைய வேலையை செய்கிறேன்” என்று போனை எடுத்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

இதற்கிடையில் மண்டபத்திற்குள் அடைக்கப்பட்டிருந்த நமது தோழர்கள், மாணவர்கள் தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தனர். வெளியேறிய உதவி ஆய்வாளர் நமது தோழரை அழைத்து, “உங்களை விடுதலை செய்யச் சொல்லி மேலிருந்து எங்களுக்கு உத்தரவு வந்துவிட்டது” என சொல்லி, “நீங்கள் வைத்திருக்கின்ற கோரிக்கைகளுக்கெல்லாம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கான வேலையை தொடங்குவார்கள்” என சொல்லி, “உங்கள் வாகனம், உங்கள் கேமரா அனைத்தையும் நாங்கள் ஒப்படைத்துவிடுகிறோம். ஆகையால் நீங்கள் அனைவரும் வீட்டுக்கு போகலாம்” என சுண்டெலி போல சுருங்கிப் போன  முகத்தோடு நம்மை வழியனுப்பி வைத்தார்.

சாதாரண ஒரு அடிப்படை பிரச்சனைகளுக்கு போராடினால் கூட போலீசு ஓடிவருவது என்பது மக்களுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை திரும்ப திரும்ப மக்களுக்கு நாம் புரிய வைப்பதற்கு நல்ல ஒரு வாய்ப்பாக சமீபத்தில் பகுதியில் நடந்த இரண்டு போராட்டங்களும் நமக்கு உதவின என்பதை உணரமுடிந்தது. மேலும் போலீசுக்கும் நமக்கும் முரண்பாடு நடந்துகொண்டு இருக்கும்போது அருகாமையில் நின்றுகொண்டிருந்த ஒருவர், “144 போன்ற எந்த தடை உத்தரவுக்கும் அஞ்சமாட்டார்கள் போலிருக்கிறது”  என இன்னொருவரிடம் சொல்லிகொண்டிருந்தார். இன்னொருவர், “போலீசும் எப்படியாவது பிரிக்கலாம்னு பார்க்கிறது, கட்சிகாரர்களும் அதை சட்டை செய்யாமலே அவர்கள் போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார்கள்” என சொல்லிக் கொண்டிருந்தார்.

பொதுவாக திரளான மாணவர்கள் கலந்து கொண்டதினால் எடுத்த உடனேயே நம்முடைய கருத்தை முடக்கி கைது செய்ய முடியவில்லை. மக்களோடு நாம் அரசியலை கொண்டு சென்று அதை மக்கள் புரிந்துகொண்டு நம்மோடு இணைந்து போராட தயாராகிவிட்டதால் எப்படிப்பட்ட போலீசையும் வெல்லமுடியும்.

முழக்கங்கள்

விவசாயிகள் விடுதலை முன்னணி – வாழ்க!
புதிய ஜனநாயக புரட்சி – ஓங்குக!

1. போராட்டம் இது போராட்டம்!
அதிகாரிகளை கண்டித்து!
நடந்தும் இந்த போராட்டம்
மாணவர்களுக்கான  போராட்டம்!
மக்களுக்கான போராட்டம்!

2. ஆனத்தூர் காரப்பட்டு! குமாரமங்கலம்  இருவேல்பட்டு!
பொய்கையரசூர் கிராமத்தில்!
இன்னும் பல கிராமத்தில்!
ஆரம்ப பள்ளியின் லட்சணத்தை!
அடுக்காய் சொல்லுரோம் கேளுங்க!

3. ஒவ்வொரு பள்ளியின் உயரத்திலும்!
ஒய்யாரமாய் டேங் இருக்கும்!
பீளியை திறக்க முடியாது!
திறந்தாலும் தண்ணீர் வராது!
காரணம் கேட்டால் வாத்தியாரு!
கையை  விரிப்பார் தெரியாது!

4. சுற்றித்திரியும் நாய்கள் கூட!
சுவரைத் தேடுது சிறுநீர்கழிக்க!
ஆனால் மாணவ மாணவிகள்!
திறந்த வெளியில் ஒன்றாய் இணைந்து!
சிறுநீர் கழிக்கும் கொடுமை என்பது!
சிறுவயதிலேயே பண்பை கெடுக்குது!

5. பள்ளிக்கூடங்கள் என்பதெல்லாம்!
பாதுகாப்பாய் இருந்த்தால்தான்!
மாணவர் சிந்தனை சிதறாது!
ஆடுமாடுகள் நுழையாது!
ஆனால் ஒவ்வொரு பள்ளியிலும்!
சுற்றுச்சுவர் இல்லாமல்!
குறுக்கும் நெடுக்கும் ஆடுமாடுகள்!
பாரியடிக்குது பகல் நேரத்தில்!
இரவு நேரத்தில் படித்துறங்கி!
இனிமையாய் கழிக்குது சாணத்தை!

6. பிணத்தை எரிக்கும் சுடுகாட்டில்கூட
சுற்றுமதில்கள் இருக்கும் போது!
பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில்
திறந்த வெளியாய் காட்சியளிக்குது!
ஆட்சிகள் என்பது மாறிவந்தாலும்!
காட்சிகள் என்பது மாறாத்துயரம்!

7. தாய்திட்டம் சேய்திட்டம்!
வாய்கிழிய சொன்னாலும்!
ஆய்கழிக்க இடமில்லாமல்
நாய் கொடுமைகள் தொடருமென்றால்
ஆட்சிமாறி என்ன பயன்!
ஆணையிடுமா அம்மா உடனே!

8. எச்சரிக்கை, எச்சரிக்கை!
எச்சரிக்கை செய்கின்றோம்
ஏறெடுத்து பார்க்காமல்
இருமாப்பாய் பேசுகின்ற
அதிகாரிகளே, உங்களுக்கு
எச்சரிக்கை செய்கின்றோம்!
எங்கள் வரியில், உங்கள் வாழ்க்கை!
எங்கே போகுது, உங்கள் கவனம்!

9. ஒழித்துக்கட்டுவோம், ஒழித்துக்கட்டுவோம்!
அரசு பள்ளிகளை நலிவடையச் செய்து!
தனியார் பள்ளிகளை வாழ வைக்கும்!
தனியார்மயம், தாராளமயத்தை
ஒழித்துக்கட்டுவோம், ஒழித்துக்கட்டுவோம்!

10. சாதி மதத்தை தூக்கியெறிந்து
வர்க்கமாக ஒன்றிணைவோம்
ஆதிபாதையை தூக்கெறிந்து
புதிய பாதைக்கு அணிவகுப்போம்
புரட்சிப்பாதைக்கு தோள்கொடுப்போம்!

11.  பெரியோர்களே! தாய்மார்களே!
மாணவர்களே, இளைஞர்களே!
மாற்றுக்கட்சி நண்பர்களே!
விதியை எண்ணி பயனில்லை!
வீதியில் இறங்கிபோராடு!
போராட்டங்கள் இல்லாமல்
யாராட்டமும் வெல்லாது

அடிப்படை வசதி செய்யகோரி
போராடிய தோழர்களை
கைது செய்யும் பொலீசு
ஜெயலலிதாவின் அடியாள் என்பதை
புரிந்துகொள்வோம், புரிந்து கொள்வோம்
பொதுமக்களே, நாம் புரிந்துகொள்வோம்

சாதிகலவரம் நடக்கும்போது
போலீசு செல்ல தாமதம்
மதக்கலவரம் நடக்கும்போது
போலீசு செல்ல தாமதம்
கொள்ளையர்களை தடுத்து நிறுத்த
போலீசு செல்ல தாமதம்
பொதுமக்களின் நலன் கருதி
போராட வந்த தோழர்களை
அடக்கி ஒடுக்க விரைந்துவரும்
இதுதான் போலீசின் மாவீரம்.

_______________________________________________________

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி
திருவெண்ணைநல்லூர் வட்டாரம்
9655587276

_______________________________________________________

மாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் !

5

முன்னுரை:

14 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 23ம் தேதி, மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து ஊர்வலமாகச் சென்ற தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மீது போலீஸார் கண்மூடித்தனமாகத் தடியடி தாக்குதல்நடத்தினர். இந்தத் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக ஏராளமான மக்கள் அருகில் இருந்த தாமிரபரணி ஆற்றில்குதித்தனர்.  ஆற்றிலும் போலிசின் கொலைவெறித் தாக்குதல் நடந்தது. பலர் தலையடி பட்டு மூழ்கினர். மொத்தம் 17 பேர்கள் கொல்லப்பட்டன்ர். அரசின் கொடிய அடக்குமுறையின் விளைவான இந்தச் சம்பவத்தின் 14-ம் ஆண்டு நினைவு தினம் கடந்த 23-ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. அதை ஒட்டி சம்பவம் நடந்த 1999-ம் ஆண்டில் புதிய கலாச்சாரத்தில் வெளியான கட்டுரையை இங்கே வெளியிடுகிறோம்.
-வினவு
_________________________

பிணங்கள், அதுவும் தேர்தல் நேரத்தில் விழும் பிணங்கள் சர்வ வல்லமை வாய்ந்தவை. ராஜீவின் பிணம் ஜெயலலிதாவுக்கு தமிழகத்தைத் தந்தது; இந்திராவின் பிணம் ராஜீவுக்கு பிரதமர் பதவியைத் தந்தது; கோவை குண்டு வெடிப்பின் பிணங்கள் பாரதிய ஜனதாவுக்கு வாழ்வையும் செயலலிதாவுக்கு மறுவாழ்வையும் தந்தன.

manjolai-8பிணத்தை வைத்து அரசியல் நடத்துவதில் வல்லமை பெற்ற தி.மு.க., காங்கிரசு ஆட்சியில் குண்டடி பட்டுச் செத்த வால்பாறைத் தோட்டத் தொழிலாளி ஒருவரை காட்டி ”கூலி உயர்வு கேட்டான் அதான், குண்டடி பட்டுச் செத்தான்” என்று முழக்கம் வடித்து ஆட்சியையும் பிடித்தது.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் போராட்டத்தில் கொல்லப்பட்ட 17 பேரின் உடல்களைத்தான் யாரும் அரசியலாக்க மறுக்கிறார்கள். தீண்டவே மறுக்கிறார்கள். இது ஏன் அரசியலாக்கப் படவில்லை?

”17 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இத்தனை பேர் போலீசால் கொலை செய்யப்படுவது சமீபகாலத்தில் நடந்ததே இல்லை. எனினும் திருநெல்வேலிப் படுகொலையைப் பற்றி அனைத்திந்தியப் பத்திரிகைகள் எதுவுமே எழுதவில்லை. ஒருவரது ஆடு செத்துப் போனால் கூட அதில் மனித உரிமை பாதிக்கப்பட்டு விட்டதாக விசாரணை நடக்கும் காலம் இது. 17 பேர் கொலை செய்யயப்படிடிருக்கும் போது மனித உரிமைக் கமிசன் தானே வந்து தலையிட்டிருக்க வேண்டும். தலையிடவில்லை” என்றெல்லாம் புலம்பினார் ப.சிதம்பரம்.

manjolai-6கொலை செய்யப்பட்டவர்களில் தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்களும் அடக்கம். தன் சொந்தக் கட்சித் தொண்டரின் கொலையைக் கூட த.மா.கா. அரசியலாக்காதது ஏன்?

மைதியாக ஊர்வலம் சென்ற நிராயுத பாணியான மக்கள் மீதும் பெண்கள் மீதும், காவல்துறை எப்படி வெறி கொண்டு தாக்குதல் நடத்தியது என்பதை விவரமாக எழுதியிருக்கிறது மார்க்கிஸ்டு கட்சியின் நாளேடான தீக்கதிர். எங்குமில்லாத வகையில் போலீசார் கல்வீச்சில் ஈடுபட்டதையும், தங்களது மாவட்டச் செயலாளர் பழனியை போலீசார் குறிவைத்து தாக்கியதையும் கோபம் கொப்பளிக்க எழுதியிருக்கிறது.

தேயிலைத் தோட்ட முதலாளிகளான பன்னாட்டு நிறுவனங்களையும், அவர்களது அடியாட் படையாக செயல்படும் போலீசையும். தொழிலாளி வர்க்க விரோத தி.மு.க. அரசையும் அம்பலப்படுத்த இதுவோர் பொன்னான வாய்ப்பல்லவா?

மதவாத பா.ஜ.க.-வுடன் கூட்டு வைத்தது மட்டுமல்ல, பா.ஜ.க-வை ஆதரிக்கும் பணமூட்டைகளான பெருமுதலாளிகளுடனும் திமு.க. கள்ளக் கூட்டு வைத்திருக்கிறது என்பதை திரை கிழித்திருக்கலாமல்லவா?

manjolai-2சாக்கடைக்குத் தூர் வாரவில்லை, தெரு விளக்கு எளியவில்லை என்பதையெல்லாம் சொல்லி ஓட்டுக் கேட்பதைக் காட்டிலும் இது வலிமையான ஆயுதமல்லவா? இந்த அரசியல் ஆயுதத்தை மார்க்சிஸ்டு கட்சி ஏன் பயன்படுத்த வில்லை?

ங்கள் பெண் போலீசிடம் தகாத முறையில் நடக்க முயன்றதால்தான் தாக்குதல் நடத்த நேர்ந்தது என்ற போலீசின் புளுகு மூட்டையை தீக்கதிர் அம்பலப்படுத்தியிருக்கிறது. மேலும் பெண்களிடம் போலீசு எப்படி நடந்து கொள்கிறது என்பதைப் பற்றி வாச்சாத்தி, அண்ணாமலை நகர் வழக்குகளை நடத்தி வரும் மார்க்சிஸ்டுகளுக்கு ஆதாரபூர்வமாகத் தெரியும்.

அவற்றையெல்லாம் எடுத்துப் போட்டு ”ஒரு பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்றதற்கு 17 பேரைக் கொல்லலாம் என்றால், பெண்களை பலாத்காரம் செய்வதை தம் உரிமையாகக் கருதும் போலீசாரையெல்லாம் சுட்டுத் தள்ளத் தயாரா” என்று சுவரொட்டி போட்டு தாய்க்குலத்தின் வாக்குகளை அள்ளியிருக்கலாமே! ஏன் செய்ய வில்லை?

manjolai-4மாஞ்சோலைத் தொழிலாளர்களை ஆதரித்து தர்ணா நடப்பதற்கு முன்னால் அவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள் மருத்துவர்கள். அடித்து எலும்பை முறித்து ஆற்றில் விரட்டிக் கொல்லப்பட்டவர்களைத் ”தண்ணீரில் மூழ்கி இறந்ததாக” பிரேதப் பரிசோதனை அறிக்கை பொய்யாகத் தரப்பட்டுள்ளது. பொய் அறிக்கையும் கொடுத்துவிட்டு அதைக் கேள்வி கேட்டால் நாங்கள் வேலை நிறுத்தம் செய்வோம் என்று தொழிலாளி வர்க்கத்தையே மிரட்டுகிறார்கள் மருத்துவர்கள். கேட்க நாதியில்லை.

பி.எச். பாண்டியன் மாவட்ட ஆட்சியரைத் திட்டிவிட்டாரென்று பாண்டியனை கண்டித்து வேலை நிறுத்தம் செய்கிறார்கள் தூத்துக்குடி அரசு ஊழியர்கள்; தாமரைக்கனியை ஜெயலலிதா திட்டி விட்டார் என்று குமுறி எழுகிறது நாடார் சமூகம்; சசிகலா மீது ஊழல் வழக்கு போட்டதை எதிர்த்து சுவரொட்டி ஒட்டுகின்றன தேவர் அமைப்புகள்.

அரசுக்குக் காவடி எடுக்கும் அரசு மருத்துவர்களை, ஊழல் மருத்துவர்களை எதிர்த்து ஒரு சுவரொட்டி கூட ஒட்டப்படாதது ஏன்?

கொலை செய்யப்பட்டவர்கள் பல சாதி மதங்களைச் சார்ந்தவர்கள். இருந்தும் முதலாளி வர்க்கத்துக்கெதிரான இந்தத் தொழிலாளிகளின் போராட்டத்தை, திசை திருப்பி, சாதிப் பிரச்சினை என்று அரசியலாக்கினார் கருணாநிதி.

”மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கிருஷ்ணசாமி கோரியவுடன், பிற்படுத்தப்பட்டவர்கள் கொதித்தெழுவார்கள் என்று அதையும் சாதி அரசியலாக்கினார் கருணாநிதி.

manjolai-3ஆனால் இறந்தவர்களின் உடல்களை அடாவடியாகக் கொண்டு சென்ற காவல்துறை, அந்தந்த உடலை அவரவர்க்கு உரிய சாதிச் சுடுகாட்டில்தான் அடக்கம் செய்தது. சமத்துவபுரம் கண்ட செம்மலின் அரசே முன் நின்று செய்த இந்த தீண்டாமைக் கொடுமை அரசியலாக்கப் படாதது ஏன்?

றந்தவர்களின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசு நிராகரித்தது. இறந்தவர்களை ஓரிடத்தில் புதைத்து எரித்து நினைவுச் சின்னம் வைப்பதைக் கூடத் தடுப்பதற்கு அரசுக்கு ஏது அதிகாரம்? ராஜாஜிக்கும், பக்தவச்சலத்துக்கும் நகரின் மத்தியில் ஏக்கர் கணக்கில் நிலம் வளைத்து மணிமண்டபம் கட்டும் அரசு, தொழிலாளிகளுக்காக உயர்நீத்தவர்களை அநாதைப் பிணங்களாக்குகிறதே, இந்தக் கொடுமை கூட அரசியலாக்கப்படாதது ஏன்?

திருநெல்வேலிப் படுகொலையை விசாரிக்கும் ஒரு நபர் கமிசனின் ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி மோகன், தான் யாரென்பதை வாக்குமூலமாகவே தந்திருக்கிறார்:

”தமிழகத்தில் தன்னிகரற்ற தானைத் தலைவரே… இங்கிருக்கும் மூன்று நீதியரசர்களின் சார்பிலும் சொல்கிறேன்; நாங்கள் உயர்நீதி மன்றங்களை அலங்கரித்தோமென்றால் அது கலைஞரால்தான். அவர் இல்லையேல் நாங்கள் நீதிபதிகளாகவே ஆகியிருக்க மாட்டோம். இதை நான் எனது ஒப்புதல் வாக்குமூலமாகவே கூறுகிறேன்” (கலைஞரின் பிறந்தநாள் விழாவில் – துக்ளக் 16.6.99)

கமிசன் தீர்ப்பு எப்படி இருக்குமென்பதற்கு இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் ஒரு வார்த்தை அதிகம் பேசினால் ”இவரிடம் எனக்கு நீதி கிடைக்காது”என்று கூறி ‘அரசியலாக்குகிறார்’ ஜெயலலிதா.

இந்த நீதிபதியின் நியமனத்தை, இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேள்விக் குள்ளாக்காதது ஏன்?

னைத்திந்திய அளவில் தோட்டத் தொழிலாளர்களின் கொத்தடிமை நிலை பற்றியும், தொழிலாளர் நலச் சட்டங்கள் அமல்படுத்தப்படாதது பற்றியும் ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட சங்கங்கள் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளன. தமிழகத்தின் தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைத்தனம் இல்லையென்று சாதிக்கிறார் கருணாநிதி.

manjolai-7எடுத்துச் சொல்லலாமே, எத்தனை தலைமுறைகளாக தோட்டத் தொழிலாளிகள் மலைகளில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை; இருபதாண்டு பணி செய்தும் தற்காலிகக் கூலியாக இருக்கும் கொடுமையை; உறைய வைக்கும் குளிரில், அவர்கள் போர்த்தக் கம்பளியின்றித் தேயிலை பறிக்கும் துயரை; தகரக் கொட்டகையும் மண் தரையும் தான் அவர்களின் குடியிருப்பு என்பதை; வேலை நேரத்தில் மாதவிடாய்த் தொல்லைக்காக ஒதுங்க நேர்ந்தால் ஒதுங்கியது அதற்காகத்தான் என்று மேஸ்திரிக்கு ஆதாரம் காட்ட வேண்டும் என்ற அக்கிரமத்தை!

தொழிலாளிகளை நாயினும் கீழாக நடத்தும் இந்தச் செய்திகள் தமிழகத் தொழிலாளிகளை எழுச்சி கொள்ள வைக்காதா? இவையெதுவும் அரசியலாக்கப் படாதது ஏன்?

மாஞ்சோலையின் 8500 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை அரசாங்கம் ஏக்கருக்கு ஆண்டுக்கு 10 ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டிருப்பதையும் ஆண்டுக்கு 350 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் மாஞ்சோலைத் தோட்டம் தொழிலாளிகளுக்குக் கொடுக்கும் கூலியும், போனசும் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்தான் என்பதையும், அரசியலாக்க முடியாதா?

குத்தகைக்கு விடப்பட்ட தோட்டங்களை அரசு எடுத்துக் கொண்டால் தமிழக அரசுக்கு ஆண்டுக்குப் பல நூறுகோடி வருவாய் கிடைக்கும் என்பதையும், அதைக் கோரியதற்குத்தான் துப்பாக்கிச் சூடு என்பதையும் அரசியலாக்க முடியாதா?

ராஜீவின் சிதைந்த உடலைச் சுவரொட்டியாக்கிப் பிரச்சாரம் செய்து வென்றார்களே, ரத்தம் சொட்டும் இந்த 17 உடல்களை சுவரொட்டியாக்கியிருக்க முடியாதா?

manjolai-1சிறையில் இருக்கும் தன் கணவனை விடுவிக்கக் கோரி மனுக் கொடுக்க ஊர்வலத்தில் வந்த மனைவியையும், குழந்தையையும் ஒரு சேரக் கொன்றிருக்கிறார்களே, அந்த ஒரு சம்பவத்தை மட்டுமே அரசியலாக்கியிருக்கக் கூடாதா?

மது தேர்தல் அரசியலின் உடனடி நலனுக்காகக் கூட இந்த உடல்களைத் தீண்டுவதற்கு ஓட்டுக் கட்சிகள் தயாரில்லை. கூட்டணி மோதல்கள், கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீட்டுத் தகராறுகள் என இவர்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் இந்த விசயத்தில் மட்டும் ஒற்றுமை காட்டுகிறார்கள். மற்ற அற்ப விசயங்களில் ஒருவரையொருவர் அநாகரிகமாகத் தாக்கிக் கொண்டாலும் இதில் நாகரிகமாக மவுனம் சாதிக்கிறார்கள்.

ஏனென்றால் இவற்றை அரசியலாக்கினால் அவர்களே அரசியலில் நீடிக்க முடியாது. எழுப்புகின்ற பிரச்சினை ஒவ்வொன்றும் இந்த அமைப்புமுறையை கேள்விக்குள்ளாக்குவதை நோக்கித் தள்ளும்.

போலீசையும் நீதித்துறையையும் தங்கள் போராட்டத்தின் தாக்குதல் இலக்காக வைத்தால் ஆட்சியில் அமர்வது என்ற தம் இலக்கையே அவர்கள் மறக்க நேரும். தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கையை ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ள இவர்கள், – விசேடமாக மார்க்சிஸ்டுகள் – பன்னாட்டு நிறுவனங்களின் குத்தகையை ரத்து செய்வதைப் பற்றியோ அரசுடைமை ஆக்குவதைப் பற்றியோ கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாது.

கொல்லப்பட்ட தொழிலாளிகளின் நினைவைக் கிளறும் வகையிலான பிரச்சாரங்களோ, ஒரே இடத்தில் அடக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையோ தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் பெரும் உணர்ச்சி அலையை எழுப்பும். குறிப்பாக பல இலட்சம் தொழிலாளர்களைக் கொண்ட தேயிலைத் தோட்டத் தொழிலை கையில் வைத்திருக்கும் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இது எதிர்க் கட்சிகளின் நோக்கத்துக்கே எதிரானது.

ஏன், ஏன் என்ற இத்தகைய கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு தம் சொந்த அனுபவத்திலுருந்து விடை காண்பதன் வாயிலாகத்தான் தொழிலாளிவர்க்கம் அரசியல் உணர்வைப் பெறும். அரசியல் உணர்வு பெற்ற தொழிலாளி வர்க்கத்துக் கெதிராக மருத்துவர் சங்கச் செயலாளரைப் போன்ற பங்களா நாய்கள் குரைத்திருக்க முடியாது.

மூன்று புறமும் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டதால் திருநெல்வேலி படுகொலை ஜாலியன் வாலாபாகிற்கு ஒப்பிடப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை நசுக்கியொழிக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டே குரூரமாக நடத்தப் பட்டதுதான் ஜாலியன் வாலாபாக் படுகொலை; திருநெல்வேலிப் படுகொலையின் நோக்கமோ தொழிலாளி வர்க்க எதிர்ப்பை நசுக்குவது.

ஜாலியன் வாலாபாக் படுகொலை விவகாரத்தை அரசியலற்றதாக்கினார் காந்தி. அதற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு, புரட்சிப் போராட்ட உள்ளடக்கத்தை அளித்தான் பகத்சிங். தொழிலாளி வர்க்கத்தால் அரசியலாக்கப்படுவதற்காகத் திருநெல்வேலியில் கொன்று புதைக்கப்பட்ட உடல்கள் பூமிக்கடியில் காத்திருக்கின்றன.

– மருதையன்
_____________________________________________
புதிய கலாச்சாரம் – செப்டம்பர், 1999
_____________________________________________

காற்றாலை, சூரிய மின்சாரம் தடுப்பது யார் ?

16

630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனுடைய உலகின் மிகப்பெரிய கடல் பரப்பில் இயங்கும் காற்றாலை (offshore Wind farm) தொகுப்பை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் திறந்து வைத்துள்ளார். லண்டன் வரிசை (London Array) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொகுப்பு கடல் மட்டத்திலிருந்து சுமார் 87 மீட்டர் உயரமுள்ள 175 தூண்களில் ஒவ்வொரு தூணிலும் 3.5மெகாவாட் மின்னாற்றல் உற்பத்தி திறனுடைய விசையாழிகளுடன் தேம்ஸ் நதியின் முகத்துவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கென்ட் கடற்கரையிலிருந்து 12-மைல் தொலைவில் கடலுக்குள் நிறுவப்பட்டுள்ள இத்தொகுப்பு சுமார் 40 சதுர மைல் பரப்பளவைக் கொண்டதாகும்.

கடல் பரப்பில் காற்றாலை
லண்டனுக்கு அருகில் கடற்பரப்பில் காற்றாலை (படம் : நன்றி கார்டியன்)

இன்றைக்கு உலகின் மொத்த மின்சார தேவை 12.5 டெரா வாட் (1.25 கோடி மெகா வாட்) என்றும் 2030-ல் அது 16.9 டெரா வாட்டாக (1.69 கோடி மெகா வாட்) இருக்குமென்றும் கணக்கிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றல் வளங்கள் (Renewable Energy) இன்றைய மின் தேவையை விட பலமடங்கு இருக்கின்றன என்றும் அவற்றை சரிவர திட்டமிட்டு பயன்படுத்தினால் தேவையை விட உபரியாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமென்றும் சைன்டிஃபிக் அமெரிக்கன் (Scientific American) இதழில் வெளியான கணிணி மாதிரிகளையும், செயற்கைக்கோள் தகவல்களையும் வைத்து தயாரிக்கப்பட்ட திட்ட வரைவு தெரிவிக்கிறது. குறிப்பாக, 40-லிருந்து 85 டெரா வாட் (4 கோடி முதல் 8.5 கோடி மெகாவாட்) காற்று ஆற்றலும், 580 டெரா வாட் (58 கோடி மெகாவாட்) சூரிய ஆற்றலும் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் கிடைக்கின்றன. அதாவது தேவையை விட 30-40 மடங்கு மின்சாரத்தை காற்றாலைகள் மூலமாகவும், சூரிய ஆற்றலை பயன்படுத்தியும் உற்பத்தி செய்ய முடியும்.

காற்று ஆற்றல் வருடம் முழுவதும் கிடைக்காது என்று வாதிடப்படுகிறது. ஆனால், வருடத்தில் ஒரு பகுதியில் காற்று இல்லாத போது மற்றொரு பகுதியில் வீசும். உதாரணமாக தென்மேற்கு பருவக்காற்று வீசும் போது வடகிழக்கு பருவ காற்று வீசுவதில்லை, வடகிழக்கு பருவக்காற்று வீசும் போது தென்மேற்கு பருவ காற்று வீசுவதில்லை. தொலைநோக்குடன் திட்டமிட்டு பயன்படுத்தினால், இருக்கும் காற்று மற்றும் சூரிய ஆற்றலைக்கொண்டே நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்யலாம்.

ஆனால் இன்று உலகில் காற்றாலை மூலம் சுமார் 20,000 மெகாவாட் (சாத்தியமாகக் கூடியதில் வெறும் 0.8 சதவீதம்) மின்சாரமும் சூரிய ஆற்றல் மூலம் சுமார் 8,000 மெகாவாட் மின்சாரமும் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

காற்றாலைகள்
படம் : நன்றி சைன்டிஃபிக் அமெரிக்கன்

ஒட்டு மொத்த உலகின் மின் தேவையை பூர்த்தி செய்ய தோராயமாக 38 லட்சம் காற்றாடிகளும், 89,000 சூரிய தகடுகள் தொகுப்பும் தேவைப்படலாம் என்று அதே திட்ட மாதிரி வரைவு தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை மிகப் பெரிதாக தோன்றலாம். ஆனால், போர்த்தளவாடங்களின் உற்பத்தியையும், கார்களின் உற்பத்தியையும் கணக்கிலெடுத்து பார்த்தால் இது ஒன்றுமே இல்லாத எண்ணிக்கைதான். உதாரணமாக, உலகில் ஒரு வருடத்திற்கு சுமார் 7.3கோடி கார்களுக்கு மேல் உற்பத்தியாகின்றன. அவற்றை ஓட்டுவதற்கு எரிபொருள், ஓட்டுவதற்கான சாலைகள் என்று பெருமளவு இயற்கை வளங்களும், மனித முயற்சியும் ஆண்டுதோறும் செலவழிக்கப்படுகின்றன.

ஆனால், அருகிப் போய்க் கொண்டிருக்கும் நிலக்கரிக்கும், பெட்ரோலுக்கும் மாற்றாக புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் வளங்களை பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகளும் முன்னேற்றமும் இதுவரை ஏன் நடக்கவில்லை?

சந்தைப் பொருளாதார கட்டமைப்பில் சந்தையில் பொருளை விற்று லாபம் சம்பாதிப்பதுதான் தனியார் நிறுவனங்களின் அடிப்படை குறிக்கோளாக இருக்கிறது. காரை விற்று லாபம் உருவாக்க முடிந்தால், கார் விற்பனைக்கான விளம்பரங்கள், கவர்ச்சிகரமான அம்சங்கள் என்று தேவையில்லாதவர்களுக்குக் கூட காரை விற்று விடும் திறன்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த கார்களை ஓட்டுவதற்கு எரிபொருள் எங்கிருந்து வரும், அவை வெளியிடும் நச்சு வாயுக்களால் புவி மண்டலம் மாசு படுவதற்கு யார் பொறுப்பு என்பதெல்லாம் தனியார் நிறுவனங்களுக்கும் சந்தைக்கும் கவலையில்லாத விஷயங்கள்.

அந்த நோக்கில்தான் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக நிலக்கரி, கச்சா எண்ணெயை எரிபொருளாக பயன்படுத்தும் தனிநபர் நுகர்வுப் பொருட்கள் எந்த கட்டுப்பாடும் இன்றி பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இப்போது, அவற்றின் விளைவாக ஏற்பட்ட மாசுபடுதல், பருவநிலை மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு மேற்கத்திய நாடுகளின் மக்களிடையே அதிகரித்திருக்கிறது. அதனால், சூழலை மாசுபடுத்தும் அனல் மின்நிலையங்களுக்கும், கதிர்வீச்சு அபாயம் நிறைந்த அணு உலைகளுக்கு எதிராகவும் மக்கள் போராட்டங்கள் வலுத்துள்ளன. இதனால் அங்கு புதிதாக அனல் மற்றும் அணு மின்நிலையங்களை திறக்க முடியவில்லை. இப்படி கழுத்தில் கத்தியை வைத்து சொன்ன பிறகுதான் முதலாளித்துவ உலகை சீரழிக்கும் முயற்சிகளை கைவிட்டு புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி வளங்களை பயன்படுத்தும் திசையில் செலுத்த முடிகிறது.

இந்தப் பின்னணியில் புவி வெப்பமாதல், சுற்றுச்சூழல் மாசடைவு இவற்றைத் தவிர்க்க மேற்கத்திய நாடுகள் காற்று ஆற்றல், சூரிய ஆற்றல், கடல் அலைஆற்றல் போன்ற புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளங்களைக் கொண்டு மின்னுற்பத்தி செய்வதில் கவனத்தை திருப்பியுள்ளன.

இந்தத் தீர்வை முதலாளித்துவ சந்தைப் போட்டி தானாக கண்டுபிடித்து செயல்படுத்தி விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசு இத்திட்டங்களில் நேரடியாக ஈடுபடக் கூடாது என்ற கோட்பாட்டை வகுத்துக் கொண்டிருந்தாலும், இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதற்கு தனியார் முதலாளிகளுக்கு பெருமளவு மானியங்களை மக்கள் வரிப்பணத்திலிருந்து அரசுகள் வாரி வழங்குகின்றன. லண்டன் காற்றாலை வரிசை நிறுவனம் டென்மார்கின் டாங் எரிசக்தி (50%), ஜெர்மனியின் E.On (30%) மற்றும் அபுதாபியின் மஸ்டர் (20%) ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக்க பட்டுள்ளது. இத்திட்டத்தில் தனது பங்கை முதலீடு செய்ய டாங் எரிசக்தி மட்டும் ஐரோப்பிய முதலீட்டு வங்கியமிருந்தும், டென்மார்க்கின் ஏற்றுமதி கடன் நிதியத்திடமிருந்தும் 2.2 பில்லியன் டாலர்களுக்கும் மேல் கடனாக பெற்றுள்ளது.

கூடுதலாக, லண்டன் வரிசை காற்றாலை நிறுவனத்திடமிருந்து 1,000 யூனிட்டுகள் மின்சாரத்துக்கு 155 பவுண்டுகள் விலை கொடுத்து வாங்கிகொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரிட்டனில் மின்சாரத்தின் தற்போதைய சராசரி விலை 1,000 யூனிட்டுகளுக்கு 50 பவுண்டுகளாகும். இதன்படி, கடல் காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை தற்போதைய சந்தை விலையை விட மூன்று மடங்கு அதிகம். இந்த அதிகப்படியான விலையை அரசு அந்நிறுவனத்திற்கு மானியமாக கொடுக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அடுத்த இருபதாண்டுகளுக்கு லண்டன் வரிசை காற்றாலை நிறுவனம் அரசிடமிருந்து மானியங்களை பெறும். அதாவது மக்கள் வரிப்பணம் மானியமாக காற்றாலை தனியார் நிறுவனங்களின் பாக்கெட்டுக்கு போகும்.

மாற்று எரிசக்தி
மார்க் ஜேகப்சன் என்ற விஞ்ஞானியின் கணிப்புப்படி நியூயார்க் மாகாணம் முழுக்க முழுக்க காற்று, நீர், சூரிய மின்சக்திக்கு மாற முடியும். (படம் : நன்றி சைன்டிஃபிக் அமெரிக்கன்)

இதே போல 1990-களில் மஹாராஷ்ர மாநில மின்வாரியம் என்ரான் நிறுவனத்திடமிருந்து சந்தை விலையை விட அதிக விலையில் மின்சாரத்தை வாங்கி அதனால் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. 2000-ம் ஆண்டுகளில் லாபத்தில் இயங்கிவந்த தமிழ்நாடு மின்வாரியம், தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களிடமிருந்து சந்தை விலையை விட பலமடங்கு அதிக விலையில் மின்சாரத்தை வாங்கி அதை சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சலுகை விலையில் கொடுத்ததில் இன்று நஷ்டத்தில் இயங்கிவருகிறது.

புதிய தொழில்நுட்பத்தை, திட்டங்களை செயல்படுத்தும் போது அவற்றிலிருக்கும் நிச்சயமின்மை காரணமாக இம்மாதிரியான சலுகைகளை கொடுக்க வேண்டியுள்ளது என தனியார் மய, தாராள மய ஆதரவாளர்கள் சொல்கின்றனர். இதன்படி சந்தையில் கிடைக்கும் லாபம் தனியார் நிறுவனங்களுக்கு, அதிலுள்ள நிச்சயமின்மையும், பாதகமான பின்விளைவுகளும் சமூகத்துக்கு என்பதுதான் முதலாளித்துவ கோட்பாடு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து உணவு, கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் வெட்டி மானியங்களை குறைத்து வரும் உலக நாடுகளின் அரசுகள், தனியார் நிறுவனங்களுக்குக் கொடுத்துவரும் சலுகைகளில் துரும்பளவு கூட குறைப்பதில்லை என்பது மட்டுமல்ல முதலாளிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்க வித விதமான கலர் கலரான திட்டங்களை கொண்டு வருகின்றன. உலகத்தில் இந்தியா மட்டுமின்றி எல்லா நாடுகளின் அரசுகளும் எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும், எந்த தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தினாலும் அவை தனியால் லாப வேட்டைக்கு படியளக்குமாறு பார்த்துக் கொள்கின்றன.

பிரிட்டன் மட்டுமின்றி ஜெர்மனி, டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் 2020-க்குள் தமது பசுமை இலக்கை அடைய மறுசுழற்சி ஆற்றல் மூலங்களான காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களை திறந்து வருகின்றன. ஜப்பான்-புக்குசிமா விபத்தை தொடர்ந்து ஜெர்மனி அடுத்த பத்தாண்டுகளுக்குள் தனது அணு உலைகளை மூடிவிடுவதாக அறிவித்துள்ளது.

பிரிட்டன் இப்போது 3,300 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் கடல் காற்றாலைகளை இயக்குகிறது. அதை 2020-ம் ஆண்டிற்குள் 18,000 மெகாவாட்டாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

சீனாவில் 44,733 மெகாவாட், அமெரிக்காவில் 40,180 மெகாவாட், ஜெர்மனியில் 27,215 மெகாவாட், ஸ்பெயினில் 20,676 மெகாவாட் மின்சாரம் காற்றாலையின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் 19,051 மெகாவாட் (தமிழகத்தில் 7,134 மெகாவாட்) காற்றாலை மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இது நாட்டின் மொத்த மின் தேவையில் 1.6% மட்டுமே.

இத்தகைய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, மேற்கத்திய நாடுகளில் ஒதுக்கித் தள்ளப்பட்ட அனல் மின் நிலைய, அணு மின் நிலைய தொழில் நுட்பங்களை மக்கள் எதிர்ப்புகள் வலுக்காத இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு விற்று லாபம் சம்பாதிப்பதிலும் முதலாளிகள் இறங்கியிருக்கின்றனர். நம் நாட்டிலோ ’ட்ரீம் பாய்’ அப்துல் கலாம் 2020க்குள் நாடு வல்லரசாகி விடுமென்று கனவு காணச்சொல்லியும் அதற்கு நாடு மூழுவதும் அணு உலைகளை நட்டுவைக்க வேண்டுமென்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அரசு புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் மூலங்களை பயன்படுத்த எந்த முயற்சியும் எடுப்பதில்லை. மாறாக மற்ற அனல் மற்றும் புனல் நிலையங்களை விடவும் அபாயகரமான, காலாவதியான தொழில்நுட்பத்தில் உருவான அணு உலைகளை நாடுமுழுவதும் நட்டு வைக்க உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. தங்களது நாடுகளில் பயன்படுத்த முடியாத தொழில்நுட்பத்தை, நமது நாட்டில் குப்பையைப்போல கொட்டிவரும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும், அணு உலை தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அடியாளாக, பாதுகாப்பற்ற உலைகளை எதிர்த்து போராடும் மக்கள் மீது தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட வழக்குகளை போட்டுள்ளதுடன் மக்களின் எதிர்ப்பையும் மீறி அணு உலைகளை இந்த அரசு இயக்கிவருகிறது.

இந்தியாவிலும் புதுப்பிக்க கூடிய – மாற்று ஆற்றல் மின்னுற்பத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அவையும் கூட பன்னாட்டு கம்பெனிகளும், இந்திய முதலாளிகளும் மானியம் என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் இயங்கும் காற்றாலைகளில் பெரும்பகுதி தனியார் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சந்தை விலைக்கு மின்சார வாரியத்துக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். அந்த கூடுதல் சுமை மக்களின் தலையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணமாக விடிகிறது.

மக்கள் நலனுக்காக நாட்டின் வளங்களை பயன்படுத்தவும், அணு உலைகளை இழுத்து மூடுவதற்கும், மாற்று எரிசக்தி மின்னுற்பத்தி திட்டங்களை கொண்டு வருவதற்கும் அவற்றில் தனியார் முதலாளிகளின் பகற்கொள்ளையை தடுப்பதற்கும் தனியார்மய தாராளமய கொள்கைகள் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவத்தை எதிர்த்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

– மார்ட்டின்

மேலும் படிக்க

கோவையில் போலீஸ் தடை மீறி புஜதொமு கருத்தரங்கம் !

3

கோவை மாநகர காவல் துறையின் பல்வேறு தடைகளை முறியடித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கருத்தரங்கம் 21.07.2013 அன்று வெற்றிகரமாக நடந்தது.

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்போம் !
முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் !

எனும் தலைப்பில் தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தின் அடிப்படையில் கோவையில் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்தோம். 07.07.2013 அன்று கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்த சரவணம்பட்டி பி-9 காவல் துறையிடம் 20.06.2013 அன்றே விண்ணப்பம் செய்தோம்.

உள்ளரங்க கூட்டங்களுக்கு காவல் துறையிடம் அனுமதி பெறவேண்டியதில்லை எனும்போதிலும், கோவையில் அதுபோல செய்ய வேண்டி உள்ளது. ஏன் என்றால், கோவை மாநகரில் உள்ள அனைத்து திருமண மண்டப உரிமையாளர்களை காவல்துறை அழைத்து மண்டபங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமானால் எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

மண்டப உரிமையாளர்களும் காவல்துறையின் அனுமதியை எழுத்து பூர்வமாக வாங்கி வாருங்கள். அப்போதுதான் முன்பணம் பெற்றுக் கொள்வோம் எனக் கூறிவிட்டனர். சரவணம்பட்டி பி-9 காவல் துறை ஆய்வாளரும், ”உள்ளரங்க கூட்டம்தானே தாரளமாக நடத்திக்கொள்ளுங்கள். உங்கள் மனுவை மாநகர காவல்துறைக்கு அனுப்பிவிட்டோம்” என்றனர்.

மண்டபம் உறுதியானால்தான் பேச்சாளருக்கு தகவல் சொல்லவேண்டும். துண்டு பிரசுரம் அச்சிடவேண்டும், சுவரொட்டி அடிக்கவேண்டும். மக்கள் மத்தியில்பிரச்சாரம் செய்யவேண்டும் . இதுபோன்ற வேலைகளுக்கு அமைப்புக்கு குறிப்பிட்ட காலம் வேண்டும் , இதுவும் காவல்துறைக்கு தெரியும். அதனை சீர் குலைக்கவே காலம் கடத்தினர். மீண்டும் , மீண்டும் போய் சரவணம்பட்டி காவல் துறையினரிடம் கேட்டால். மிகவும் அன்பாக உள்ளரங்க கூட்டம்தானே ஒன்றும் பிரச்னை இருக்காது என்று சிரித்தபடியே நயவஞ்சக நாடகம் ஆடினர். ஆனால் எழுத்து பூர்வமான அனுமதி வந்தபாடி இல்லை. கடைசியில் கொடுக்கிறீர்களா? இல்லையா? என கறாராகக் கேட்டால் மாநகர காவல்துறையிடம் நீங்களே போய் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மிகக் கனிவாகக் கூறினார்கள்.

இதற்கிடையில் , ”உளவுத்துறையினர் மண்டப உரிமையாளரிடம் சென்று அவர்கள் கேட்ட தேதிக்கு வேறொருவருக்கு கொடுத்து விட்டதாக சொல்லி விடுங்கள்” என்று மிரட்டி விட்டனர். மண்டப உரிமையாளரும் , உளவுத்துறையினரும் நைச்சியமாக உள்ளரங்க கூட்டம்தானே நடத்திக்கொள்ளுங்கள். என நாடகமாடி கொண்டிருந்தனர். கொடுக்கிறேன் என்று சொல்லியே இழுத்தடித்தனர் இதனால் பேச்சாளரை உறுதிபடுத்த இயலவில்லை! அணிதிரட்டலை உறுதியாக கூற இயலவில்லை.

07.07.2013 தேதி நடக்கவிருக்கும் கருத்தரங்க நிகழ்ச்சிக்கு 7- ம் தேதி காலை 10.00 மணிக்கு எழுத்து பூர்வ அனுமதி கொடுத்தனர். அதை வைத்து என்ன செய்வது ? பின்னர் 14.07.2013 அன்று குஜராத் சமாஜ் பவனில் , கருத்தரங்கம் நடத்த பி-2, RS புரம் காவல் நிலையத்திலும் அனுமதி கோரினோம். அவர்களும் அனுமதியை இழுத்தடித்து தான், அனுமதி இல்லை என கடிதம் கொடுத்தனர்.

இறுதியாக புறநகர் பகுதி துடியலூரில் உள்ள மண்டபத்தில் ஏற்பாடு செய்தோம். மண்டபத்துக்காரரும் வாடகை ஏதும் வராத காரணத்தால் நம்மிடம் முன்பணம் வாங்கிக்கொண்டார். எனவே , உடனே காவல் துறையிடம் அனுமதி கேக்காமல் துண்டு பிரசுரம் , சுவரொட்டி போன்ற அனைத்தையும் செய்து முடித்து கருத்தரங்கம் நடைபெறும் 21.07.2013 தேதிக்கு முந்தின இரவு காவல் நிலையத்தில் அனுமதி கேட்காமல், தகவல் மட்டும் தெரிவித்தோம். அவர்களால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.

கருத்தரங்கம் 21.07.2013 தேதி காலை 10.30 மணிக்கு துவங்கியது தோழர்கள் 400 பேருக்குமேல் வந்திருந்தனர். பெண்தோழர்கள் 30 பேர் பங்கேற்றனர்.

தலைமையுரையாற்றிய தோழர் விளவை ராமசாமி காவல் துறையின் நயவஞ்சகத்தை பகிர்ந்து கொண்டார். கோவையில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு தொழிற்சங்கமும் , எந்த ஒரு முதலாளியையும் எதிர்த்து சாதாரண ஆர்ப்பாட்டம் கூட செய்வதில்லை. முதலாளிகளை எதிர்த்து அவர்கள் நிறுவனங்களில் சங்கமே துவக்காமல், சாந்தமாக இருந்து தேர்தல் நிதி மட்டும் பெற்றுக்கொள்ளும் அவலமான நிலையுள்ளது.

முதலாளிகளை எதிர்த்தால்தானே முதலாளித்துவ பயங்கரவாதம் பற்றி தெரியமுடியும். முதலாளிகளை எதற்காக நாம் எதிர்க்க வேண்டும் என்று சாதுர்யமாக ஒதுங்கிக்கொண்ட துரோகத்தை அம்பலப்படுத்தி பேசினார்.

பின்னர் உரையாற்றிய மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி. சுதேசுகுமார் அவர்கள் ஆலைக்குள்ளே நடைபெறும் முதலாளித்துவ பயங்கரவாதம் குறித்து விரிவாக பேசினார். கோவை , சென்னை, ஓசூர் மற்றும் மாருதி தொழிற்சாலையிலும் நடைபெற்ற முதலாளித்துவ பயங்கரவாதம் குறித்து விரிவாக ஒருமணி நேரம் பேசினார். தொழிலாளர்கள் கைதட்டி உற்சாகத்துடன் கேட்டனர்.

இறுதியாக மாநில பொதுச்செயலாளர் தோழர் சு.ப. தங்கராசு அவர்கள் ஆலைக்கு வெளியே மற்றும் நாட்டில் நடைபெறும் முதலாளிகளின் பயங்கரவாதம் குறித்து புதிய தொழிலாளர்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் பேசினார். உங்கள் பணம் உங்கள் கையில் எனும் மோசடித்திட்டம் குறித்து எள்ளல் நடையில் பேசினார். ஆதார் அடையாள அட்டை மோசடி, PF பணம் பங்கு மார்க்கட்டில் சூதாட அனுமதிப்பது, ESI மோசடி என மறுகாலனியாதிக்கத்தின் அனைத்து தாக்குதல்களையும் விளக்கிப் பேசினார்.

மாவட்ட தலைவர் தோழர் பி.ராஜன் நன்றி உரையாற்றினார் கருத்தரங்கில், இடையில் ம.க.இ.க கோவை கிளையின் சார்பில் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது .

பிரியாணி , பிராந்தி ,வாகனவசதி இல்லாமல் கோவையில் 400-க்கு மேற்பட்ட தொழிலாளர்களை திரட்டும் வல்லமை பு.ஜ.தொ.மு. வுக்கு மட்டுமே உள்ளது என்பதை இக்கருத்தரங்கம் மெய்ப்பித்துள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
செய்தி
:- புஜதொமு, கோவை பகுதி

சொத்துக்களைக் கைப்பற்ற சாய்பாபா உறவினர்கள் அடிதடி !

131

ன்மீக ‘மணம்’ பரப்பும் புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் உறவினர்களுக்கு இடையேயான சண்டை சமீபத்தில் வன்முறையாக வெடித்திருக்கிறது. சாய்பாபாவின் உறவினரும் சத்ய சாய் அறக்கட்டளையின் உறுப்பினருமான ரத்னாகர் ராஜுவுக்கும் இன்னொரு உறவினரும் அந்த அறக்கட்டளையில் தனது தனது செல்வாக்கு இருக்க வேண்டும் என்று முயற்சித்து வரும் கணபதி ராஜூ என்பவருக்கும் இடையே மோதல் நடந்திருக்கிறது.

சாய்பாபாகணபதி ராஜு, ரத்னாகரின் சட்ட விரோத செயல்களைப் பற்றி பிரதமர், ஜனாதிபதி முதல் பல்வேறு உயர் பதவி வகிப்பவர்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார். அதனால் ரத்னாகர் அவர் மீது கடுப்பாக இருந்திருக்கிறார். பிறகு rajuug1958@yahoo.com என்ற மின்னஞ்சலிலிருந்து அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு 25 லட்சம் பணம் கேட்டு மிரட்டும் மின்னஞ்சல் வந்திருக்கிறது. அது கணபதி ராஜுவின் மின்னஞ்சல் முகவரி rajug1958@yahoo.com யை உட்டாலக்கடி அடித்து உருவாக்கப்பட்ட போலி முகவரி இதைச் செய்தது ரத்னாகாராகத்தான் இருக்கும் என்று கணபதி ராஜு புகார் செய்திருக்கிறார்.

ஜூலை 7-ம் தேதி கணபதி ராஜு வீட்டை சிலர் தாக்கியிருக்கிறார்கள். அது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கச் சென்ற கணபதி ராஜு சில நாட்களுக்கு வீட்டுக்குத் திரும்பவில்லை. இதற்கிடையில் ரத்னாகர் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரை (ஸ்ரீபிரசாத்) கணபதி ராஜு தாக்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கணபதி ராஜு ஜூலை 14-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டார்.

இதுதான் வெளியாகியுள்ள தகவல்களின் சுருக்கம். அகில உலகையும் ரட்சிக்கும் சிவ-சக்தியின் அம்சம் என்று அவரது பக்தர்களால் போற்றப்படும் சாய் பாபா என்ற சத்யநாராயண ராஜு உலக விதிகளின் படி ஒரு பெற்றோருக்கு பிறந்து, உடன் பிறந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் சொத்து ஒதுக்கி வைத்து விட்டுத்தான் இறந்திருக்கிறார். தனது சொத்துக்களை ஆள்பவதற்கு நெருங்கிய உறவினர்களை விடுத்து வேறு சீடர்களெல்லாம் அவருக்குத் தோன்றவில்லை. இதுதான் முற்றும் துறந்த முனிவன் ஒரு முதலாளி போல நடந்திருக்கும் இலட்சணம்.

சிவ-சக்தி அவதாரமாக தன்னை அறிவித்துக் கொண்ட பிறகு தன்னை நம்பி வந்த பக்தர்களை படு மோசமான முறையில் நடத்தியிருக்கிறார் சாய்பாபா. தரிசன கூட்டங்களில் தனது விபூதி வரவழைப்பது, லிங்கம் தோன்றச் செய்வது, வாட்ச் எடுத்து கொடுப்பது என்று பல மாய வித்தைகள் செய்து தனது பிராண்டை உருவாக்கினார்.

கானி லார்சன் என்பவர் 1976-ம் ஆண்டிலிருந்து 21 ஆண்டுகள் தான் பிரசாந்தி நிலையத்தில் கழித்த அனுபவங்களை வெளியிட்டிருக்கிறார். சாயிபாபா பக்தர்களில் ஒரு குடும்பத்தை அல்லது சில நபர்களை தனியாக அழைத்து அவர்களுக்கு ஆன்மீக அறிவுரை வழங்குவதாக பாலியல் ரீதியாக அவர்களை பயன்படுத்தியதாக பல குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் வெளியாகின. குழந்தைகள் வக்கிரமான முறையில் பாலியல் உறவுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டி குழந்தைகளுக்கான ஐக்கிய நாடுகளுக்கான நிறுவனம் யுனஸ்கோ புட்டபர்த்தியுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டது.

1993-ம் ஆண்டு ஆசிரமத்தில் 6 பேர் மர்மமாக கொலை செய்யப்பட்டனர். அவர்கள் பாபாவை கொலை செய்ய வந்தவர்கள் என்று சொல்லப்பட்டு உண்மைக் காரணம் மறைக்கப்பட்டு வழக்கு மூழகடிக்கப்பட்டது. இவ்வ்வளவு கொலை நடந்தாலும் அரசு, அதிகார வர்க்கம், அரசியல்கட்சிகள் ஆதரவு காரணமாக அயோக்கியனான சாய்பாபா ஒரு யோக்கியனாக உலா வரமுடிந்தது.

பிருந்தாவன் ஆசிரமம்
பெங்களூர் பிருந்தாவன் ஆசிரமத்தில் சொத்துக் குவியல்.

தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை பிரஷாந்தி நிலையத்தில் கழித்தார் சாய்பாபா. வெயில் காலங்களில் சூட்டை தாங்க முடியாவிட்டால் வொயிட்பீல்டிலுள்ள பிருந்தாவனம் ஆசிரமத்திற்கு போய் விடுவாராம். இன்னும் கொஞ்சம் சொகுசு தேவைப்பட்டால் கொடைக்கானலில் இருக்கும் சாய் சுருதி ஆசிரமத்திற்கு விஜயம் செய்வாராம். பகவானாகப் பிறந்தவருக்கும் வெயில் அடித்தால் சுடும், மலைக்கு மேல் போனால் சுகமாக இருக்கும் என்ற சொகுசு வாழ்க்கையிலிருந்து தப்ப முடியவில்லை.

சத்ய சாயி அறக்கட்டளைக்கு ஆண்டு தோறும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான காணிக்கைகள் வந்தன. அதன் மூலம் பணப் பரிமாற்றங்களுக்கான மையமாக புட்டபர்த்தி மாறியது. சாய் பாபாவின் இறப்புக்குப் பிறகு புட்டபர்த்தி ஆசிரமத்தில் அவரது அறையிலிருந்து இருந்து ரூ 21 கோடி மதிப்பிலான 98 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. மேலும் ரூ 1.6 கோடி மதிப்பிலான 307 கிலோ வெள்ளி நகைகள், ரூ 11.6 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. அடுத்த மாதம் மற்ற அறைகளிலிருந்து 77 லட்ச ரூபாய் பணம், 1000 பட்டுச் சேலைகள், வேட்டிகள், சட்டைகள், 500 ஜதை செருப்புகள், பெர்ப்யூம்கள், ஹேர்ஸ்ப்ரே, வாட்சுகள், தங்க, வெள்ளி தாலிகள், வைரங்கள். 750 காவி, வெள்ளை உடைகள் எடுக்கப்பட்டன. கண் இமைக்கும் நேரத்தில் தன் கையில் பொருட்களை தோன்றச் செய்யும் கடவுளின் அவதாரம் இத்தனை பொருட்களையும் சேர்த்து வைத்தற்கு என்ன காரணம் என்று பக்தர்கள் யோசிக்க வேண்டும்.

வளர்ப்பு மகனது திருமணத்தின் போது ‘புரட்சித் தலைவியும்’ இத்தகைய டாம்பீகத்தை காட்டினார். எனினும் ஜெயலலிதாவை இந்த விசயத்தில் விஞ்சுகிறார் பாபா. அதே போன்று பெங்களூர் வொயிட் ஃபீல்டில் உள்ள ஆசிரமத்தில் இருந்து 6 கிலோ தங்கம், 245 கிலோ வெள்ளி., 80 லட்சம் ரூபாய் ரொக்கம் எடுக்கப்பட்டது.

குவிந்து கொண்டிருந்த பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தில் சிறு பகுதியை மருத்துவமனை, கல்லூரி, குடிநீர்த் திட்டம் என்று செலவழித்து ஆசிரமத்தின் செயல்பாட்டுக்குத் தேவையான முகமூடியையும் தயாரித்துக் கொண்டனர் சத்ய சாய் பாபாவும் அவரது அறக்கட்டளையும்.

2003-ம் ஆண்டு ஸ்டூலில் ஏறி நின்ற ஒரு பையன் அவர் மீது விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு சாய்பாபா இயல்பாக நடமாட முடியாமல் போய் விட்டது. 2004 முதல் பொதுவில் வந்து அருள் பாலிப்பது குறைந்து விட்டது. அதன் பிறகு சில ஆண்டுகள் உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்த 2011-ம் ஆண்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

வாழ்நாளில் சமூகத்தை அட்டை போல் உறிந்து வாழ்ந்த இந்த மனிதரின் இறப்புக்கு 5 லட்சம் பேர் கூடினார்களாம். அவருக்கு இரங்கல் தெரிவித்தவர்கள், பக்தர்கள் பட்டியலில் மன்மோகன் சிங், சோனியா காந்தி, நரேந்திர மோடி, எஸ் எம் கிருஷ்ணா, அம்பிகா சோனி, மகிந்த ராஜபக்ச, தலாய் லாமா, சச்சின் டெண்டூல்கர் என்று பல்வேறு பிரபலங்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள்.

தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து “என்னுடைய புகழ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும். பொய் குற்றச்சாட்டுக்களை உலகம் முழுவதும் கொட்டை எழுத்தக்களில் விளம்பரப்படுத்தினாலும் அது ஒரு நாள் கூட ஒரு துளி கூட குறையாது. சில பக்தர்கள் இந்த பொய் குற்றச்சாட்டுக்களால் மனம் சஞ்சலித்திருப்பது போல தெரிகிறது” என்று உயிரோடு இருக்கும் போது சாய்பாபா சொல்லியிருக்கிறார். தனது முட்டாள் பக்தர்கள் குறித்து அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் சாய்பாபா.

அவரது இறப்புக்குப் பிறகு அப்படி விளம்பரப்படுத்தலுக்கு தேவை இல்லாமலேயே அவரது உறவினர்களின் சொத்துச் சண்டை அந்த மோசடி விவகாரங்களை தெருவில் இழுத்து விட ஆரம்பித்திருக்கின்றன. காவிச் சட்டையும் கொஞ்சம் கண்கட்டு வித்தைகளையும் காண்பித்தால் ஒரு தரகு முதலாளிக்கு இணையாக சுருட்ட முடியும் என்று சாய்பாபா நிரூபித்திருக்கிறார்.

வாரிசுரிமைச் சண்டைகளுக்காக உடன்பிறந்தோரையும் கொல்வதற்கு தயங்கமாட்டார்கள் என்று முகலாய மன்னர்களை கேலி செய்யும் சங்கபரிவாரத்தினருக்கு ஆதரங்களோடு வருகிறார்கள் இந்து கார்ப்பரேட் சாமியார்கள்.

– பண்பரசு

மேலும் படிக்க

ஸ்னோடன் : சந்தி சிரித்தது அமெரிக்காவின் யோக்கியதை !

3

மெரிக்க அரசின் ஒட்டுக்கேட்பு மற்றும் இணையதளக் கண்காணிப்பு சதித் திட்டத்தை எட்வர்டு ஜோசப் ஸ்னோடென் என்னும் இளைஞர் தனது உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் துணிவுடன் அம்பலப்படுத்தியுள்ளார். இது ஏதோ அமெரிக்க மக்களின் மீதான கண்காணிப்பு மட்டுமல்ல, உலகெங்குமுள்ள மக்களையும் கண்காணிக்கும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் பாசிச சதித் திட்டம்.

ஸ்னோடன்
தற்கொலைப்படைத் தாக்குதலைப் போல, தனது வசதியான வாழ்க்கையைத் துறந்து விட்டு பயங்கரவாத அமெரிக்காவுக்கு எதிராகத் துணிவுடன் போராடும் ஸ்னோடன்.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.எஸ்.ஏ.) இத்திட்டத்தின் மூலம் கடந்த மார்ச் 2013-ல் மட்டும் உலகெங்கிலும் ஏறத்தாழ 97 பில்லியன் (9700 கோடி) உளவுத் தகவல்களை அமெரிக்கா திரட்டியுள்ளது. அமெரிக்காவினுள் 3 பில்லியன் (300 கோடி) தகவல்கள் திரட்டப்பட்டிருப்பது மட்டுமின்றி, இரான், பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எனப் பல நாடுகளிலிருந்தும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 6.3 பில்லியன் (630 கோடி) உளவுத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. அமெரிக்கக் கண்காணிப்பு வலையத்தில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

ஏறத்தாழ 12 கோடி ரூபாய் அளவுக்கு சம்பளத்துடன், ஹவாய் தீவில் சொந்தமாகப் பண்ணை வீட்டுடன் வாழ்க்கையை நடத்தி வந்தவர்தான் கணினித் துறையில் வித்தகரான ஸ்னோடென் என்ற 29 வயதான இளைஞர். சிறிது காலம் அமெரிக்க கொலைகார உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வில் இயங்கிவந்த அவர், பின்னர் சி.ஐ.ஏ.வுக்கான தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றினார். அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் உளவு நடவடிக்கைகள் விரிவானதாகவும், அனைத்துலகையும் தழுவியதாகவும் இருப்பதைப் புரிந்து கொண்ட அவர், அமெரிக்க உளவுத்துறை உலகெங்கிலும் உள்ள மக்களை வேவுபார்ப்பது தொடர்பான ஆதாரங்களை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.

“எனக்குப் பணத்தாசை இருந்தால், இந்த ஆவணங்களைப் பல நாடுகளுக்கு விற்றுக் கோடிகோடியாக நான் சம்பாதித்திருக்க முடியும். ஆனால், இவற்றை மக்கள் முன் அம்பலப்படுத்துவதே எனது நோக்கம்” என்கிறார் ஸ்னோடென். கடந்த ஐந்தாண்டுகளில் அரசமைப்பின் ஊழல்களையும் மோசடிகளையும் அம்பலப்படுத்தியவர்களை ஒபாமா அரசு அடக்கியொடுக்கியதை ஏற்கெனவே பார்த்துள்ள ஸ்னோடன், தான் தெரிந்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இதனால் தனக்கும் தனது குடும்பத்துக்கும் ஏற்படப்போகும் தொல்லைகளை அறிந்துள்ளதாகவும் கூறுகிறார்.

அசாஞ்சே, பிராட்லி மேனிங்
விக்கிலீக்ஸ் மூலம் அமெரிக்காவின் கோர முகத்தை அம்பலப்படுத்திய ஜூலியன் அசாஞ்சே. விக்கிலீக்சுக்கு தகவல்களைக் கொடுத்த்தாகக் குற்றம் சாட்டி சிறையில் வதைக்கப்படும் இராணுவ வீரர் பிராட்லி மேனிங்.

உலக மக்களுக்கு எதிரான அமெரிக்க அரசின் கிரிமினல் உளவு நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய குற்றத்துக்காக ஸ்னோடெனைத் தீவிரவாதியாகச் சித்தரிக்கிறது அமெரிக்கா. அரசு சொத்துக்களைத் திருடியது, தேசியப் பாதுகாப்புத் தகவல்களையும் இரகசிய உளவுத் தகவல்களையும் வெளியிட்டது முதலான குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் இந்தக் கண்காணிப்பையும் ஒட்டுக்கேட்டல்-உளவு பார்ப்பதையும் அமெரிக்க வல்லரசு நியாயப்படுத்துகிறது. அமெரிக்கா மட்டுமின்றி, அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் மேலும் பாசிசமயமாகி வருவதன் வெளிப்பாடு இத்தகைய கண்காணிப்புகள். “கார்டியன்” நாளேட்டின் செய்தியின்படி, அமெரிக்க என்.எஸ்.ஏ.வுக்குப் போட்டியாக பிரிட்டிஷ் உளவுத்துறையானது, உலக மக்களையும் சொந்த நாட்டு மக்களையும் உளவு பார்த்துள்ள விவகாரம் அம்பலமாகியிருக்கிறது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியமான இணைய இணைப்புத் தடங்களை நிர்வகித்து வரும் ஹாங்காங்கிலுள்ள பேக்நெட் நிறுவனத்தின் கண்ணாடி இழை இணைய வலைப்பின்னலை அமெரிக்க அரசு சட்டவிரோதமாக ஊடுருவிப் பார்த்திருக்கிறது; சீனாவின் பிரபல சிங்ஹூவா பல்கலைக்கழகத்தின் முக்கியமான கணினிகளை ஊடுருவி, அவற்றிலுள்ள தகவல்களை அமெரிக்க உளவுத்துறை வேவு பார்த்துள்ளது; கைபேசிகள் வழியாக சீன மக்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் குறுஞ்செய்திகளைக் கூட அமெரிக்க உளவுத்துறை திரட்டியிருக்கிறது – என்று ஸ்னோடென் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். ஏற்கெனவே தனது நாட்டின் இணையங்களில் ஊடுருவதாகப் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான மோதல் இதனால் மூர்க்கமடைந்துள்ளது.

ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான கழுத்தறுப்புப் போட்டியும், மேலாதிக்கத்தை நிலைநாட்ட எதிர்ப்பு சக்திகளை முடமாக்குவதற்கும், மக்களின் அதிருப்திக்கு வடிகால் வெட்டுவதற்கும் உழைக்கும் மக்கள் மீதான இத்தகைய கண்காணிப்புகளும் உளவுபார்த்தலும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு அவசியமாகின்றன. அறிவியல்-தொழில்நுட்பப் புரட்சி இதனை எளிதாக்குவதால், இணையத்தின் வழியிலான கண்காணிப்பு தீவிரமடைந்து வருகிறது.

ஹாங்காங் ஆர்ப்பாட்டம்
ஸ்னோடனை ஆதரித்து ஹாங்காங்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டம்.

இந்தியாவிலோ, பயங்கரவாதத் தடுப்பு – கிரிமினல் குற்றத் தடுப்பு என்ற பொய் முகாந்திரங்களை வைத்து மக்கள் மீதான கண்காணிப்பை மத்திய-மாநில அரசுகள் அதிகரித்துவருகின்றன. மத்திய உளவுத் தரவுகளை ஒருங்கிணைக்கும் “நாட்-கிரிட்” என்ற தேசிய உளவு வலைப்பின்னல், “ஆதார்” அடையாள அட்டை, வீதிகளில் நிறுவப்படும் சி.சி.டி.வி. காமெராக்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநிலத் தொழிலாளர்களின் தரவுகள் திரட்டப்படுதல் முதலானவை பாசிசம் வெகுவேகமாக நிறுவன மயமாகி வருவதை உணர்த்துகின்றன. இணையக் குற்றத் தடுப்புக்கான 66-ஏ பிரிவின் சட்டப்படி, சுதந்திரமாக இணையத்தில் கருத்து தெரிவித்தவர்கள் கைது செய்யப்படுகின்றனர். பாசிச ஜெயா அரசொ, இணையக் குற்றங்களில் ஈடுபட்டதாக ஒருவரைக் கைது செய்து சிறையிலடைக்கும் வகையில் குண்டர் சட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. இவையனைத்தும் இணையத்தின் மூலம் சுதந்திரமாகக் கருத்துக்களை வெளியிட முடியும், அதன் மூலம் புரட்சியையே சாதிக்க முடியும் என்று கருதிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க அறிவுத்துறையினரது மாயைகளைக் கீழறுத்துப் போடுகிறது.

இதற்கு முன் விக்கிலீக்ஸ் மூலம் அமெரிக்காவின் கோர முகத்தை அம்பலப்படுத்திய குற்றத்துக்காக ஜூலியன் அசாஞ்சேவைப் பயங்கரவாதியாகச் சித்தரித்து அவரைப் பிடிக்க பேயாய் அலைந்தது அமெரிக்கா. விக்கி லீக்சுக்கு தகவல்களைக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டி பிராட்லி மேனிங் என்ற இளம் இராணுவ வீரரைச் சிறையிலடைத்து வதைத்து வருகிறது. இப்போது ஸ்னோடெனைப் பிடிக்க வெறியோடு அலைகிறது. கடந்த மே முதல்நாளில் ஹவாயிலிருந்து ஹாங்காங்கிற்குத் தப்பிச் சென்ற ஸ்னோடென், ஜூன் 25 அன்று ஹாங்காங்கிலிருந்து ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார். அங்கிருந்து கியூபாவுக்குச் சென்று, பின்னர் ஈகுவடார் நாட்டில் அவர் தஞ்சமடைய முயற்சிப்பதாகச் செய்திகள் வருகின்றன. மிகக் கொடிய கிரிமினல் குற்றவாளியான அவரை நாடு கடத்தித் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூச்சலிடுகிறது அமெரிக்கா. ஆனால், கிரிமினல்களை நாடு கடத்தும் ஒப்பந்தம் ஏதும் அமெரிக்காவுடன் எமது நாடு முறைப்படி போட்டுக்கொள்ளவில்லை என்று கூறி, அமெரிக்காவின் முகத்தில் கரிபூசியுள்ளது, ரஷ்யா.

ஜெனிவா ஒப்பந்தப்படி, தன்னிடம் அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்கு அடைக்கலமளிக்க எல்லா நாடுகளுக்கும் உரிமை உண்டு. அமெரிக்காகூடத் தனது உலக மேலாதிக்க நோக்கங்களுக்கு ஏற்ப பல நாடுகளின் சர்வாதிகாரிகளுக்குத் தஞ்சம் அளித்து, அவர்களை ஜனநாயகக் காவலர்களாகச் சித்தரித்துள்ளது. இத்தகைய மனிதகுல விரோதிகளுக்குத் தஞ்சம் அளிக்க அமெரிக்காவுக்கு உரிமை உண்டென்றால், அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் பயங்கரவாதச் சதிகளை அம்பலப்படுத்திப் போராடி வரும் ஸ்னோடெனுக்குத் தஞ்சமளிக்க எல்லா நாடுகளுக்கும் உரிமை உண்டு.

ஏகாதிபத்திய உலகின் கோரமுகத்தை உலகிற்கு அம்பலப்படுத்திக் காட்டியுள்ள ஸ்னோடென் ஒரு முன்னுதாரணமிக்க நாயகனாக உயர்ந்து நிற்கிறார். தற்கொலைப் படைத் தாக்குதலைப் போல, தனது வசதியான வாழ்க்கையைத் துறந்துவிட்டுப் பயங்கரவாத அமெரிக்காவுக்கு எதிராக அவர் துணிவுடன் போராடுகிறார். ஜனநாயகம், மனித உரிமை, தனிநபர் சுதந்திரம் என்றெல்லாம் பசப்பிவரும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மகிமையையும், அமெரிக்க பயங்கரவாத அரசின் கோரமுகத்தையும் புரிந்து கொண்டு உலகெங்கிலுமுள்ள உழைக்கும் மக்கள் போராட இன்னுமொரு வாய்ப்பை வழங்கியிருக்கின்றன, ஸ்னோடெனின் துணிச்சலான நடவடிக்கைகள்.

– குமார்.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________

கலால் துறை லஞ்சம் – ஒரு உண்மைக் கதை !

28

ந்த நிகழ்வு நடந்து சில நாள்களாகிவிட்டன.  யாரிடமாவது சொன்னால் தான் மனசு ஆறும் என தோன்றுகிறது. கற்பனை கதைகளை விட உண்மை சம்பவங்களுக்கு நிறைய மதிப்பு இருக்கிறது. நான் சொல்லப்போவது கூட அப்படி ஒரு உண்மைச் சம்பவம்தான்.

****

பணம்அன்று காலையில் 9 மணிக்கு அந்த நிறுவனத்தில் இருக்க வேண்டும் என அவசர அவசரமாய் கிளம்பிக்கொண்டிருந்தேன். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தணிக்கைக்கு தேவையான எல்லா பதிவேட்டுகளையும் தயார் செய்துவிட்டேன். இருந்தாலும், அதிகாரிகள் 10 மணிக்கு வருவதற்கு முன்பாக ஒருமுறை சரிபார்த்துவிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா!

முன்பெல்லாம் தணிக்கை என்றாலே உடலிலும், மனதிலும் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும். வருகிற அதிகாரிகளெல்லாம் காசு வாங்குகிற அதிகாரிகளாகவே இருப்பினும் இதில் ஒரு சிக்கலும் இருந்தது. திருவிளையாடல் தருமி போல, எவ்வளவு தவறு இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போல கூடுதலாகவோ, குறைச்சலாகவோ லஞ்சம் முடிவாகும். இதனால் முதலாளியின் மனம் வருந்தும். அதனால்,எந்த தவறும் கண்ணில் பட்டுவிடக்கூடாதே என இல்லாத கடவுளை வேண்டிக்கொண்டு கிளம்பினேன்.

பத்து மணிக்கு இரு கலால் (Excise) அதிகாரிகளும் சரியாக வந்துவிட்டனர். இப்படி தணிக்கைக்கு வருவதற்கு கண்டிப்பாக அலுவலகத்தில் போக்குவரத்து படி தந்துவிடுவார்கள். இருப்பினும் நம் செலவில் கார் ஏற்பாடு செய்துதர சொல்வார்கள். அதிகார பிச்சை என்பது இதுதான்.

மேலதிகாரிக்கு வயது 50 இருக்கும். கீழ் அதிகாரிக்கு வயது 45 இருக்கும். எப்பொழுதும் இப்படி தணிக்கைக்கு வரும் அதிகாரிகள் ஒருவித இறுக்கத்துடன் வருவார்கள். தோரணையுடன் பேசுவார்கள். அதாவது ரெம்ப கறாராக இருக்கிறார்கள் என புரிந்துகொள்ள வேண்டுமாம். இவர்கள் அந்த அளவுக்கு இறுக்கமாய் இல்லை.

தணிக்கை ஆரம்பித்தது. கீழ் அதிகாரி பதிவேடுகளையும் பில்களையும் ஒவ்வொன்றாக சோதனை செய்ய ஆரம்பித்தார். மேலதிகாரி மூன்றாண்டு நிதி நிலை அறிக்கையை நோட்டம் விட ஆரம்பித்தார். கீழதிகாரி எல்லா விற்பனை பில்களையும் சரிபார்த்துவிட்டார். கொள்முதல் பில்களையும் ஒரு ஆண்டுக்கு சரிபார்த்துவிட்டார். இரண்டு மணி நேரம் கடந்துவிட்டது. இருவராலும் தவறுகளை கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்கவில்லை என்றால், பணத்தை கறக்கமுடியாதே என்ற கவலை இருவர் கண்ணிலும் அப்பட்டமாக தெரிந்தது. இதற்கிடையில், மேலதிகாரியின் மூத்தப் பெண் அவ்வப்பொழுது போனில் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அவ்வப்பொழுது தன் கீழ் அதிகாரியுடன் தன் மகள் பற்றி பேசியதில் நாம் புரிந்துகொள்ள முடிந்தது.

மேலதிகாரி பல ஆண்டு காலம் சேவை வரித்துறையில் வேலை செய்து, சமீபத்தில் தான் கலால் துறைக்கு மாறி இருக்கிறார். அதனால், நிதி நிலை அறிக்கையில் சேவை வரியில் தவறு கண்டுபிடிப்பதிலேயே குறியாய் இருந்தார். ஒரு தவறை கண்டுபிடித்ததும் முகத்தில் பல்பு எரிந்தது. ஒரு குறிப்பிட்ட கணக்கிற்கு கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கு மேலான தொகைக்கு சேவை வரி கட்டவில்லை. அதற்கு வரி கட்டினால், 3 லட்சத்திற்கு மேல் கட்டவேண்டும் என பேச ஆரம்பித்தார். அதற்கு கட்ட தேவையில்லை என பதில் சொன்னாலும் என்னை கண்டு கொள்ளவேயில்லை. முதலாளியின் அறைக்கு போய் பேரம் பேச ஆரம்பித்தார். முதலாளியுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, அவ்வப்பொழுது வெளியே வந்து, அவருடைய பெண் தன்னுடைய கணவன் மோசமாக நடத்துவதை, கொடுமைப்படுத்துவதை சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தார். ‘

சாப்பிடுவதற்கான நேரம் நெருங்கியது. முதலாளி அதிகாரிகளை உணவகத்துக்கு தள்ளிக்கொண்டு போய், ஒன்றரை மணி நேரம் செலவழிக்க வைக்கலாம் என்ற திட்டத்தோடு பேசினார். அவர்களோ வாங்கிக்கொண்டு வரச்சொல்லுங்கள். இங்கேயே சாப்பிட்டுவிடலாம் என சொல்லிவிட்டனர். என்ன வேண்டும் என கேட்டதற்கு, ஆடு, மீன், கோழி என எதையும் விட்டுவைக்காமல், கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கேட்டனர். எல்லாம் இலவசம் தானே!

ஒரு புகழ்பெற்ற உணவகத்திலிருந்து அவர்கள் கேட்டது எல்லாம் சுடச்சுட வந்தது. அந்த நன்கு குளிரூட்டப்பட்ட சாப்பாட்டு அறையிலும் வேர்க்க விறுவிறுக்க பரம திருப்தியுடன் தின்று முடித்தனர். சிறிது நேரம் மொக்கை கதைகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

லஞ்சம்
லஞ்ச பரிமாற்றம்.

மீண்டும் காரியத்தில் கவனமானார்கள். மேலதிகாரி லஞ்ச பேரத்தை விட்ட இடத்திலிருந்து முதலாளியுடன் பேச துவங்கினார். இரண்டு லட்சம் கேட்டார். அதை ஒரு லட்சமாக குறைப்பதற்கு முதலாளி ஏதோதோ சொல்லிக்கொண்டிருந்தார். பேச்சிற்கு இடையிடையே வெளியே வந்து தன் பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, லேசாக கண்ணீர் சிந்தினார். கைக்குட்டையை எடுத்து யாரும் அறியாமல் துடைத்துக்கொண்டார். தன் பெண்ணிடம் நான்கு மணிக்கே வீட்டுக்கு வந்துவிடுகிறேன். மற்றவற்றை நேரில் பேசிக்கொள்ளலாம் என்றார். மீண்டும் உள்ளே போய் உனக்கும் பாதகம் வேண்டாம். எனக்கும் பாதகம் வேண்டாம் என 1.5 லட்சம் என ஒரு ஒப்பந்ததிற்கு வந்தார்கள்.

அதற்குப் பிறகு, எல்லாம் சுமூகமாய் முடிந்தது. அரசு சரியில்லை என அதிகாரியும், முதலாளியும் சிரித்து சிரித்து பேசினார்கள். இறுதியில் பணத்தை கவரில் போட்டு வாங்கி கொண்டு, கிளம்பும் பொழுது, முதலாளியிடம் கைகொடுத்து “உங்களுக்கு ஏதாவது சந்தேகம், உதவி என்றால் தயங்காமல் கேளுங்கள். உதவுகிறேன்!” என வாயெல்லாம் பல்லாக பேசினார்கள். என்னிடம் கைகொடுத்து, “எந்த தப்பும் இல்லாம, எல்லா பதிவேடுகளையும் (Registers) நீட்டா பராமரிக்கிறீங்க! வாழ்த்துக்கள்! ” என்றனர். நானும் சம்பிரதாயமாக புன்னகை செய்தேன்.

அவர்கள் போனதும், முதலாளியிடம் போய் “இல்லாத தவறை அவர் பில்டப் செய்து பணம் கேட்டால் நீங்களும் ஏன் இவ்வளவு பணம் கொடுக்கிறீர்கள்?” என்றேன். அவர் “முதல் தணிக்கையின் பொழுது, வந்த அதிகாரி ஒரு வருட தணிக்கைக்கு ஒரு லட்சம் வரை கேட்டான். மேலும் தாறுமாறா பேசி, திட்டவும் செய்தான். என்னை அவன் அலுவலகத்துக்கு நாலைந்து தடவை வரச்சொல்லி இழுத்தடிச்சான். ஒரு லட்சத்திலிருந்து கடைசி வரைக்கும் குறையவே இல்லையே! அந்த விதியை மீறிட்டீங்க! இந்த விதியை மீறிட்டீங்கன்னு என்னை மிரட்டினான். வேறு வழியில்லாமல் அவன் கேட்டதை கொடுத்தேன். இந்த ஆள் அப்படி இல்லையே! தொடக்கத்திலிருந்து கூலா தான் பேசினான். அவன் சொன்ன சேவை வரி விசயம் ஒன்னும் இல்லைன்னு நீங்க சொல்றீங்க! அது தப்புன்னு அவனிடம் நிரூபிச்ச உடனே அவன் கிளம்பிருவானா! மாட்டான். அடுத்து என்ன தப்பு இருக்குன்னு நோண்ட ஆரம்பிச்சிருவான். இந்த கம்பெனியை நானும் என் மனைவியும் நடத்துகிறோம். இன்னொரு கம்பெனியை என் பெயரில் நடத்துறேன். இன்னொரு கம்பெனியை என் மனைவி பெயரில் நடத்துறேன். அதையெல்லாம் நோண்டி , ஏதாவது பெரிய தப்பை கண்டுபிடிச்சான்னு அதற்கு அப்புறம் 3 லட்சம் கொடுன்னு அடம்பிடிப்பான். எதுக்கு வம்பு, ஒரு வருடத்திற்கு ரூ. 50,000 மூணு வருடத்திற்கு 1.50 லட்சம். ஒரு கணக்கு வைச்சுத் தான் கொடுத்தேன்.” என்றார். இவரும் ஒரு மனக்கணக்கு போட்டுத்தான் தணிக்கையை எதிர்கொண்டிருக்கிறார் என புரிந்தது.

எல்லாவற்றையும் எடுத்து வைத்து, கிளம்பும் பொழுது ஐந்தரைமணி. இருட்ட ஆரம்பித்தது. தென்மேற்கு பருவமழை காலம் இது. மழை பெய்ய துவங்கியது. இன்று நடந்த நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

நாம் தான் இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பார்க்கிறோம். எந்த தவறும் இல்லாத பொழுது, ஏன் இவ்வளவு லஞ்சம் தர தயாராய் இருக்கிறார்? அதில் அவருக்கு வருத்தமே ஏன் இல்லை என மனதில் கேள்வி எழுந்தது. வரி ஏய்ப்பு செய்வதற்காக மற்ற நிறுவனங்கள் துவங்கியது ஒரு காரணம்.. மறுபுறம், நமக்கு தெரியாமல், சரக்கு வாங்காமலே கொள்முதல் பில்கள் வாங்கி கலால் வரி ஏய்ப்பு செய்வார் போலிருக்கிறது. அதனால் தான் லட்சகணக்கில் லஞ்சம் தர தயாராய் இருக்கிறார் என புரிந்தது.

பொதுவாய் வி.ஏ.ஒ. வாங்கும் லஞ்சம், இ.பி. கனெக்சனுக்கு அதிகாரி வாங்கும் லஞ்சம் தான் அடிக்கடி பத்திரிக்கைகளில் கண்ணில்படும். இதனால் சாதாரண மக்கள்தான் லஞ்சம் கொடுத்து இந்தியாவை குட்டிச் சுவர் ஆக்குவதாக அண்ணா ஹசாரே கனவான்கள் துள்ளிக் குதிப்பார்கள். ஆனால் தொழிற்துறையில் சிறு முதலாளிகளில் துவங்கி பெரு முதலாளிகள் வரை அதிகார வர்க்கத்தினருக்கு பல லட்சங்கள்-கோடிகளில் தரும் லஞ்சம் பலரும் அறியாத செய்தி. இந்த லஞ்சம் எப்பொழுதுமே வெளியில் வராது.

வினவில் வந்த பாடி ஆஃப் லைஸ் எனும் ஹாலிவுட் திரைப்படத்தில் சிஐஏ மேலதிகரியாக நடிக்கும் ரசல் குரோவ் அமெரிக்காவில் தனது வீட்டில் மனைவி குழந்தைகளுடன் அன்னியோன்யமாய் வாழ்ந்து கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கும் போதே இடையில் தனது கீழதிகாரிகளுக்கு கொலை செய்யும் உத்திரவை இயல்பாக சொல்லுவார். இந்த சம்பவத்தில் மேலதிகாரி ஒருபக்கம் முதலாளியுடன் திறமையாக லஞ்ச பேரம் நடத்திக் கொண்டே மறுபுறம் மகளின் நிலை கண்டு கண்களில் கண்ணீர் விடுகிறார். இடையில் அவர் செட்டிநாட்டு சிக்கனையும், மட்டனையும் முழுங்குவதையும் இயல்பாக செய்கிறார். இந்தியாவில் இருப்பது போலி ஜனநாயகம் , முதலாளிகள் மற்றும் அதிகார வர்க்கம்தான் இங்கே கொள்ளையடிக்கிறது என்பதற்கும் வேறு சான்றுகள் வேண்டுமா என்ன?

– குருத்து

ஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள் !

199
ஆடிட்டர் ரமேஷ்
ஆடிட்டர் ரமேஷ்

மிழகத்தில் கடந்த ஓராண்டாக இந்து இயக்கங்களின் தலைவர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதல்கள், படுகொலைகளைக் கண்டித்து பாஜக திங்கள் கிழமை பந்த் நடத்தியது. கோவை, குமரி மாவட்டங்களைத் தவிர பிற இடங்களில் பந்த் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் தமிழகத்தில் ஆங்காங்கே கடை அடைப்பு நடந்திருக்கிறது. திண்டுக்கல், நாகப்பட்டினம், ராமநாதபுரம், பூந்தமல்லி, சென்னை, நாகர்கோவில், கோவை போன்ற இடங்களில் மறியல் செய்ய முயன்ற அக்கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த பந்த்தை ஆதரிப்பதாக பாமக நிறுவனத் தலைவர் ராமதாசு கூறியிருந்தார். வைகோ, கருணாநிதி, ஜெயலலிதா, சிபிஎம்மின் ஜி. ராமகிருஷ்ணன் என அனைவரும் இப்படுகொலைகளை கண்டித்துள்ளனர். இக்கொலையை விசாரிக்க தமிழக அரசு சிறப்பு புலனாய்வுப் படையை நியமித்திருக்கிறது.

ஆடிட்டர் ரமேஷ்
ஆடிட்டர் ரமேஷ்

கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாஜகவின் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷை மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். ஜூலை 1-ம் தேதி வேலூரில் இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் டாடா சுமோவில் வந்த 6 பேரால் பகல் நேரத்தில் கொலை செய்யப்பட்டார். ஏப்ரல் 21-ல் நாகர்கோவிலில் பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி மீது நடைப்பயிற்சி மேற்கொள்கையில் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இப்படி கடந்த ஓராண்டு காலத்தில் இந்துமதவெறி இயக்கத்தை சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி இந்துத்துவ அமைப்புகள் ‘இந்துக்களிடம்’ இந்துமதவெறி அரசியலைத் தூண்டி வருகின்றன. தேர்தல் அரசியலில் தமிழக கூட்டணிகளில் இடம்பெற வழியில்லாமல் இருக்கும் பாஜகவிற்கு இத்தகைய தாக்குதல்கள் மூலம் மக்களிடையே மதவெறியை தூண்டிவிட்டு செல்வாக்கு அடையலாம் என்ற சதிக்கனவை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த நேரத்தில், அத்வானி தமிழ்நாடு வந்த போது அவரை கொல்லத் திட்டமிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிலரது படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஆடிட்டர் ரமேஷ் கொலையில் இவர்களுக்கும் பங்கிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிப்பதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இத்தகைய கொலைகளில் விசாரணை துவங்குவதற்கு முன்னரே இசுலாமிய தீவிரவாதம் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது ஊடகங்களுக்கும் காவல் துறைக்கும் வாடிக்கையாக ஆகியிருக்கிறது.

கடையடைப்பு நடத்துமாறு மிரட்ட மாட்டோம் என்றெல்லாம் சில பாஜக தலைவர்கள் சடங்கு அறிக்கை வெளியிட்டாலும் பல இடங்களில் கடையடைப்பு நடத்தும்படி கட்டாயப்படுத்தி வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுக்க சுமார் 6,000 பேர் கைதாகியிருக்கின்றனர். ராமதாஸ் கைதைத் தொடர்ந்து பாமக குண்டர்கள் நடத்திய அழிவு செயல்களுக்கு போட்டியாக 100 பேருந்துகள் உடைப்பு, கோவையில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு என பாஜக தங்களது ‘ஜனநாயக’ கடமையை செய்து முடித்திருந்தது. இதன் மூலம் தங்களுக்கு நேசக் கரம் நீட்டியிருக்கும் ராமதாசுக்கு இணையாக பேரம் பேச தகுதி பெற்று விட்டார்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

இல.கணேசன், கோபமடைந்துள்ள இந்து இளைஞர்களை கட்டுப்பாடாக வைத்திருப்பதால்தான் இப்படி பந்த் போன்ற அகிம்சை போராட்டங்களை நடத்துகிறோம் எனக் கூறி அரசை மறைமுகமாக மிரட்டுகிறார். இத்தகைய கருத்து சுதந்திரம் வேண்டும் என்பதற்காகத்தான் மாமல்லபுரத்தில் வீராவேசம் பேசிய மருத்துவர் ஐயா திருச்சி சிறைக்கு சென்றார். ஆனால், இல.கணேசனின் இந்த அறிக்கைக்கு ஜெயா பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்க கூடாது. பார்ப்பனியத்தின் பங்காளிகள் கூட்டணியில் இல்லை என்றாலும் கொள்கையில் ஒன்றுபடுபவர்கள். எனினும் தாங்கள் எதிர்பார்த்த மாதிரி ஜெயலலிதா செயல்படவில்லை என்று தீவிர இந்துமதவெறி தொண்டர்கள் கருதினாலும், தலைவர்கள் புரட்சித் தலைவிக்கு நன்றி மேல் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தேசத்துக்காக உழைத்தவர்கள் என்றும், தேச விரோத சக்திகள் இவர்களை கொன்று விட்டார்கள் என்றும் பிரச்சாரம் செய்கின்றன இந்துமத வெறி அமைப்புகள். இது பாகிஸ்தான் சதி, ஜிகாதி பயங்கரவாதம் என்று இசுலாமியர்களை குறிவைத்து பாஜக தலைவர்கள் அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் மூலமாக சுதேசி பொருட்களை பயன்படுத்தக் கோரி பிரச்சாரம் செய்வாராம். ஆர்.எஸ்.எஸ் பேசும் சுதேசி ஒரு ஏமாற்று என்பதை உலகறிந்த விசயம். மேலும் ஆடிட்டர் ரமேஷ் தணிக்கையாளர் வேலை பார்த்தவர் என்பதால் அதில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு கணக்குக் காட்டுவதில், வரி கட்டுவதில் திருட்டுத்தனம் பண்ண உதவினாரா என்றெல்லாம் கேட்க கூடாது. ஏனெனில் கோகோ கோலாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் அருண் ஜேட்லி என்பதை நினைவில் கொள்க.

ஆடிட்டர் இறந்தவுடன் சேலம் பாஜகவைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற பெண் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் முருகமணி என்பவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்றும் சேர்த்து பிரச்சாரம் செய்கிறது பாஜக. இன்னும் அத்வானி வரப்போகிறார், மோடி அறிக்கை விட்டு அப்டேட்டுகிறார் என்றெல்லாம் உணர்ச்சியை சூடாக வைத்திருக்க பாஜக முயல்கிறது.

வேலூர் இந்து முன்னணியின் முழுநேர ஊழியர் வெள்ளையப்பன் தென் மாவட்டத்தை சேர்ந்த சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வேலூர் மண்டலத்துக்கான பொறுப்பாளராக இருந்திருக்கிறார். வேலூர் ஜலகண்டேசுவரர் ஆலையத்தை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தியதை எதிர்த்து இயக்கம் நடத்திக் கொண்டிருந்தாராம். மக்களோடு எளிதில் பழகும் தன்மை உடையவர் என்றும் அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை இசுலாமிய தீவிரவாதிகள் கொலை செய்வதன் மூலம் மற்ற இந்துத் தலைவர்கள் முடக்கிப் போடலாம் என்று நினைக்கிறார்கள் என்றும் இந்துமத அமைப்புகள் பிரச்சாரம் செய்கின்றன. அவரது கனவை நனவாக்குவோம் என்கிறார் ராம.கோபாலன். அதாவது ஜலகண்டேசுவரரது உண்டியலை அரசிடமிருந்து பார்ப்பனர்கள் கைகளுக்கு மாற்றிட போராடுவோம் என்கிறார். வெள்ளையப்பனின் அந்த முயற்சியில் கோபமடைந்த யாரோ இந்த கொலையை செய்து விட்டார்கள் என்பதால் முசுலீம்கள் மீது பழியைப் போடுவதில் என்ன முகாந்திரம் இருக்கிறது? இதற்கிடையில் இந்தக் கொலையை செய்தது தென்மாவட்டங்களைச் சேர்ந்த கூலிப்படையினராக இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். கூலிப்படை என்றாலே அது சாட்சாத் ‘இந்து’ தளபதிகளின் தலைமையில்தான் நடக்கும் என்பது தினசரிகளின் குற்றச் செய்திகளை படிப்போருக்கு புரியும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலூரில் பாஜகவின் மாநில மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் அரவிந்த ரெட்டி கொலைசெய்யப்பட்ட போது இதே போன்று ஆரவாரம் செய்து கடையடைப்பு நடத்தியது வேலூர் பாஜக. ஆனால் அந்தக் கொலை தொடர்பாக திட்டம் தீட்டியது வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி வசூர் ராஜா என்பதோடு கைது செய்யப்பட்ட அனைவருமே இந்துக்கள்தான். கொலைக்கான காரணம் பெண் விவகாரம் எனவும் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. இப்போது அந்தக் கொலையையும் சேர்த்து பந்த் நடத்தி பஸ் உடைக்கும் இந்து மத வெறியர்கள் மக்களை அவ்வளவு தூரம் முட்டாள்களாக நினைத்திருக்கிறார்கள். வேலூர் ரெட்டி கொலை விசாரணையை காவல்துறை திசைமாறி விசாரிக்கிறது என்றும் அபாண்டம் பேசுகிறார்கள் இந்துமதவெறியர்கள். எனில் உண்மையான குற்றாவாளிகள் யார் என்று இவர்கள் அடையாளம் காட்டலாமே?

நாகப்பட்டினத்தை சேர்ந்த புகழேந்தி, பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர். கடந்த ஆண்டு ஜூலை 5 அன்று காலை நடைப்பயிற்சியின் போது ஆட்டோவில் வந்த 4 பேரால் வெட்டிக் கொல்லப்பட்டார். அப்போது இதைக் கண்டித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் இவர் அங்குள்ள பிரபல தேவாலயமொன்று அரசு புறம்போக்கை ஆக்கிரமிக்க முயன்ற போது எதிர்த்துப் போராடியதால் தான் இக்கொலை நடந்ததாக கூறினார். ஆனால் அதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் ஆசிரியர் ஒருவரது வீட்டை அபகரித்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருந்தார் புகழேந்தி. கட்டப்பஞ்சாயத்து மற்று அடாவடி வேலைகளில் ஈடுபட்டு வந்த அவரை கொன்றதாக கைதானவர் முனீசுவரன் என்பவர், ஒரு இந்து.

அடுத்து கடந்த மார்ச் மாதம் பரமக்குடியில் கொல்லப்பட்ட முன்னாள் பாஜக கவுன்சிலர் முருகன் என்பவரை கொன்ற ராஜபாண்டி மற்றும் முருகன் ஆகியோர் காரணமாக சொன்னது 6 ஏக்கர் நிலம் தொடர்பான தகராறுதான்.

கணக்கு எழுதுவது, ரியல் எஸ்டேட் என்று மட்டுமின்றி கந்து வட்டி தொழிலிலும் இந்துத்துவ அரசியல் தலைவர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள். கடந்த ஆண்டு ஏப்ரலில் சென்னை கோயம்பேட்டில் கொலை செய்யப்பட்ட விட்டல் என்ற பாஜகவின் 127-வது வட்டச் செயலாளர் கந்துவட்டிக்கு கடன் கொடுப்பவர். சுந்தரபாண்டியன் என்பவரிடம் கொடுத்த ரூ 2 லட்சம் கடன் திரும்பி வராத காரணத்தால் அவரது வீட்டுக்கு போய் அந்த வீட்டுப் பெண்களை ஆபாசமாக பேசியுள்ளார். அதனால் கோபமடைந்த சுந்தரபாண்டியன், அவரது அண்ணன் முருகன் மற்றும் நண்பர் கங்காதரன் ஆகியோர் சேர்ந்து விட்டலை வெட்டி கொலை செய்திருக்கின்றனர். பெண்களை தாயாகவும், நதியாகவும், பாரதமே தாயாகவும் பேசும் பாஜக ஆதரவாளர்கள் விட்டல் திட்டியது இந்து குடும்ப பெண்களை என்பதை கவனிக்க தவறக் கூடாது.

ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து என்று உருமாறியிருக்கும் ஓட்டுக் கட்சி பிரமுகர்களுக்கிடையேயான தொழில் போட்டியில் எந்த ஒரு கட்சியிலும் ஒரு ஆண்டில் ஒரு சில நபர்கள் கொல்லப்படுவது சாதாரணமாகிப் போயிருக்கிறது. திமுகவில் தா.கிருஷ்ணன் நடைப்பயிற்சியின் போது மதுரையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார், பொட்டு சுரேஷை கொன்றார்கள். திருச்சி ராமஜெயத்தை கொன்றவர்களை ஓராண்டு முடிந்த பின்னும் இன்னும் பிடிக்க முடியவில்லை. இதற்காக திமுக திராவிட இனத்தை தட்டி எழுப்பி பந்த் நடத்தியதாக தெரியவில்லை.

இது போன்று தங்களது கட்சியில் சிலர் கொல்லப்பட்டதை ஏதோ தேசத்திற்காக தியாகம் செய்தது போல பிரச்சாரம் செய்து மதவெறியை தூண்டுகின்றனர் இந்துமத வெறியர்கள். இறந்தவர்கள் சொந்தப் பகை காரணமாக கொல்லப்பட்டனரா அல்லது தொழில் காரணமாக கொலை நடந்ததா, உண்மையிலேயே கட்சி வேலை காரணமாக கொல்லப்பட்டனரா அல்லது ஏதாவது பாலியல் விவகாரமா என்ற விசாரணைகளை துவங்குவதற்கு முன்னர் இசுலாமியர்களை நோக்கி அவர்களது கைகள் திட்டமிட்டு நீளுகின்றன.

1998-ல் அவர்கள் திட்டமிட்டு நடத்திய கோவை கலவரம்தான் அவர்களுக்கு தமிழ்நாட்டிலும் சில நாடாளுமன்ற சீட்டுகளை வாங்கித் தந்தது. கோவை, நாகர்கோவில் , நீலகிரி பகுதிகளைத் தொடர்ந்து இப்போது வட மாவட்டங்களில் குறிப்பாக தோல் தொழிலில் பணக்கார முசுலீம்கள் கொடிகட்டிப் பறக்கும் வேலூர் பகுதியில் மதவெறிப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் ஓராண்டாக நடந்த தாக்குதல்கள், படுகொலைகள் என அனைத்துமே வேலூர், குன்னூர், திருப்பூர், ராமநாதபுரம், நாகர்கோவில், நாகப்பட்டினம் என குறிப்பிட்ட இடங்களாகவே இருப்பதால் இந்துமத வெறியர்கள் இங்கெல்லாம் அனல் பறக்கும் மதவெறியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். இசுலாமியர்களோடு சகோதரத்துவ உணர்வில் பழகும் ‘இந்துக்கள்’ எல்லாம் பாஜகவின் வருகைக்குப்பின்னர் மதவெறி பிரச்சாரத்திற்கு எளிதில் இரையாகின்றனர்.

பேருந்து
சென்னையில் கல்வீச்சில் சேதமடைந்த மாநகரப் பேருந்து (படம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்)

சிபிஎம், கருணாநிதி உள்ளிட்ட யாருமே இந்தக் கொலையில் ஒட்டுமொத்த முசுலீம்களை நோக்கி வைக்கப்படும் இந்துமதவெறியர்களின் சதியை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக மற்றும் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் இசுலாமிய தீவிரவாதிகளை மட்டுமல்ல மனிதநேய மக்கள் கட்சி போன்ற தேர்தல் அரசியலை ஏற்றுக் கொண்டவர்களையே தீவிரவாதிகளாக சித்தரித்துதான் அறிக்கை வெளியிட்ட வண்ணம் உள்ளன. இசுலாமியர்களுக்கெதிரான பொதுப்புத்தியை கிளறிவிட்டு அதில் குளிர்காய இந்த அமைப்புகள் தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தில் மத அடிப்படைவாத சக்திகளுக்கோ, இடதுசாரி தீவிரவாதத்திற்கோ இடமில்லை எனக் கூறியுள்ள ஜெயலலிதா ஆடிட்டர் ரமேஷ் கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரிக்கும் என அறிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துள்ள வெங்கையா நாயுடு இந்து அமைப்புகளை அச்சுறுத்தவே இந்தப் படுகொலைகள் நடப்பதாக கூறியுள்ளார். இப்படித்தான் கோத்ரா விபத்தை காரணமாக்கி குஜராத்தில் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது. தமிழகத்திலும் அத்தகைய முயற்சிக்கு இவர்கள் தயாராகிவருகிறார்கள்.

வேலூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் ‘’துலுக்க நாய்களே! நீங்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்பதை மறந்து விடாதீர்கள். 2002 குஜராத் மறந்து விட்டதா’ என்றெல்லாம் இந்து முன்னணி போஸ்டர் ஒட்டியுள்ளது. இளவரசனது இறுதி ஊர்வலத்துக்கு தடை, போஸ்டர் ஒட்டினால் போலீசே வந்து கிழிப்பது எல்லாம் நடக்கும். ஆனால் மேற்படி ஜனநாயகபூர்வமான போஸ்டர்களுக்கு போலீசு மரியாதை. பாசிச இந்துமத வெறியர்கள் ஜெயாவின் உதவியுடன் அடுத்த கலவரத்திற்கு தயாராகி வருகின்றனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தல் பேரங்களுக்காகவும் அரங்கேற்றப்படும் இந்துமதவெறியர்களின் சதித் திட்டங்களில் பாதிக்கப்படுவது அனைத்து மதங்களையும் சேர்ந்த சாதாரண உழைக்கும் மக்கள்தான். இசுலாமிய மக்களை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு தோதாக விசுவரூபம் பிரச்சினை, ரிசானா நபீக் விவகாரம், அமெரிக்க துணைத் தூதரக முற்றுகை போன்றவற்றில் அடிப்படைவாத இசுலாமிய அமைப்புகளை ஆட விட்டு, மக்கள் மனநிலையில் முசுலீம்கள் மீதான வெறுப்பை தோற்றுவிக்க முயற்சித்தவரும் இதே ஜெயலலிதாதான். இப்போது அவர் முசுலீம்களுக்கு எதிராக இந்துத்துவ வெறியர்கள் நடத்தவிருக்கும் கலவரங்களை எதிர்பார்த்து இருக்கிறார்.

அனைத்து மதங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்கள் இத்தகைய மதவெறி பிரச்சாரங்களை அடையாளம் கண்டு நிராகரித்து ஒருங்கிணைய வேண்டும். தமிழகத்தில் இந்துமதவெறியருக்கு இடமில்லை என்பதை நிலைநாட்ட வேண்டும்.

– வசந்தன்.

சட்டீஸ்கர் தாக்குதல் : ‘நடுநிலையாளர்’ களின் பசப்பல் !

5
கர்மா, சுக்லா
பஸ்தர் தாக்குதலில் கொன்றொழிக்கப்பட்ட சல்வாஜூடும் குண்டர் படைத் தலைவன் மகேந்திர கர்மா (இடது) மற்றும் அவசர நிலைக் காலக் கொடுங்கோன்மையின் தளபதி வி.சி.சுக்லா.

ல்வாஜுடும் கொலைப்படைத் தலைவன் மகேந்திர கர்மா முதல் அவசரநிலைக் காலக் கொடுங்கோன்மையின் தளபதி வி.சி.சுக்லா வரையிலான மக்கள் விரோதிகளுக்குப் பதிலடி கொடுத்த மாவோயிஸ்டுகளின் பஸ்தார் தாக்குதலைத் தொடர்ந்து, சர்வகட்சிஓட்டுப் பொறுக்கிகளும் குமுறி எழுந்துள்ளனர்.

“மாவோயிஸ்டுகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும் “அதற்கு எல்லா ஜனநாயக சக்திகளும் ஒன்று திரள வேண்டும்” என்றும் அறைகூவியிருக்கிறது ‘மார்க்சிஸ்டு’ கட்சி. அது மட்டுமல்ல, “மாவோயிச சவாலை நாங்கள் அரசியல் ரீதியில் எதிர்கொள்வோம்” என்று ஒரு பேச்சுக்கு சொல்லி வந்த மார்க்சிஸ்டுகள், இப்போது சோ மற்றும் பாரதிய ஜனதாவைப் போல வெறித்தனமாகப் பேசத் தொடங்கி விட்டார்கள்.

“பழங்குடி மக்கள் யார், மாவோயிஸ்டுகள் யார் என்று பிரித்தறிய முடியாத காரணத்தினால்தான் மக்கள் போலீசு ஒடுக்குமுறைக்கு உள்ளாக நேரிடுகிறது” என்றும், மாவோயிஸ்டுகளின் வன்முறைக்கும், சல்வாஜுடுமின் எதிர்வன்முறைக்கும் (counter violence unleashed by Salwa Judum) இடையே பழங்குடி மக்கள் சிக்கித் தவிப்பதாகவும் கூறி, பிஜாபூரில் சாதாரண பழங்குடி மக்கள் துணை இராணுவப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தியிருக்கிறார்கள் (பீப்பிள்ஸ் டெமாக்ரசி, மே 27 – ஜூன் 2). அது மட்டுமல்ல, “மாவோயிஸ்டுகளின் வன்முறைக்கு எதிர் வன்முறையாகத்தான் சல்வாஜுடும் தோன்றியது” எனக் கேடுகெட்ட முதலாளித்துவப் பத்திரிகை கூட கூறத்துணியாத பொயை பீப்பிள்ஸ் டெமாக்ரசி கூறுகிறது.

அக்கட்சியின் தமிழக எம்.எல்.ஏ. வான பாலபாரதிமஞ்சள் பத்திரிகையான குமுதம் ரிப்போர்ட்டரில் (6.6.2013) மகேந்திர கர்மாவின் புகழ் பாடுகிறார். சல்வா ஜுடும் என்பது மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டவர்களை வைத்து மகேந்திர கர்மா உருவாக்கிய ஆயுதம் ஏந்திய அமைதிப்படையாம். முள்ளை முள்ளால் எடுப்பது போல அந்தப் படையில் பழங்குடியினருக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தாராம். அதுதான் மாவோயிஸ்டுகளின் கோபத்தை கிளறிவிட்டதாம்! சல்வா ஜுடும் என்பது பழங்குடி மக்களை விரட்டியடித்து, அவர்களுடைய கிராமங்களைப் பிடுங்கிக் கொள்வதற்காக, டாடா நிறுவனம் சட்டீஸ்கரில் மட்டும் உருவாக்கிய கூலிப்படை என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோம். தமிழகத்திலிருந்து சீறுகிறார், பால பாரதி.

“மார்க்சிஸ்டுகளின் இந்த அறச் சீற்றம்” ஒருபுறமிருக்க, பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காக குரல் கொடுக்கும் மேதா பட்கர் முதலானோரும், பி.யு.சி.எல். போன்ற சிவில் உரிமை அமைப்புகளும் மாவோயிஸ்டுகளின் நடவடிக்கையை வன்முறை என்றே சாடுகின்றனர். “மாவோயிஸ்டு அபாயத்தை எதிர்கொள்வது எப்படி? மாவோயிஸ்டுகளிடமிருந்து பழங்குடிகளை மீட்பதெப்படி?” போன்ற கேள்விகளை எழுப்பி அறிவுத்துறையினர், சமூகவியலாளர்கள், இராணுவ வல்லுநர்கள், முன்னாள் போலீசு, இராணுவ அதிகாரிகள், ஓட்டுக்கட்சிப் பிரதிநிதிகள் போன்றோர் ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் மாறிமாறி விவாதங்கள் நடத்துகின்றனர்; விதவிதமாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகின்றனர்.

ப சிதம்பரம், பிரகாஷ் காரத்எல்லோருமே இந்த சமூக அமைப்பின் ஒவ்வொரு மயிர்க்காலிலும் ஊடுருவியிருக்கும் உழைக்கும் மக்களுக்கு எதிரான வன்முறையின் பல்வேறு வடிவங்களையும் வசதியாகப் புறக்கணித்துவிட்டு, மறுகாலனியாக்க கொள்கைகளின் அமலாக்கத்தைத் தொடர்ந்து இவ்வன்முறைகளும் சுரண்டலும் தீவிரமான பரிமாணத்தைப் பெற்றுவருவதையும் புறக்கணித்து விட்டு, மாவோயிஸ்டுகளின் வன்முறையை தனித்தவொரு பிரச்சினையாகக் காட்டி, அதனைக் கையாள்வது குறித்துப் பேசுகின்றனர்.

அதே நேரத்தில், இவ்வாறு பேசுபவர்கள் அனைவரும், “மாவோயிஸ்டு பிரச்சினையை வெறும் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்க்கக்கூடாது; இது ஒரு சமூகப் பொருளாதாரப் பிரச்சினை” என்று வலியுறுத்துவதன் மூலம் தங்களை முற்போக்காளர்களாகவும், மனிதாபிமானிகளாகவும் காட்டிக் கொள்கின்றனர்.

சமூகப் பொருளாதாரப் பிரச்சினை என்று இவர்கள் கூறுவதன் பொருள் என்ன? நாட்டின் ஆகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் மீது இந்த அரசமைப்பு திணித்திருக்கும் சமூகப் பொருளாதார ஒடுக்குமுறையை அவர்கள் குறிக்கவில்லை. மாறாக, நாட்டின் பிற பகுதிகளைப் போலன்றி, பழங்குடி மக்கள் வாழும் வனப்பகுதிகளுக்குச் சாலை, மின்சார வசதி, தொலைத்தொடர்பு இல்லாமையையும், அம்மக்களின் மிக மோசமான ஏழ்மை நிலையையும், போலீசு உள்ளிட்ட அரசு எந்திரத்தின் நிர்வாகத்தின் கீழ் பழங்குடி மக்களின் கிராமங்கள் கொண்டு வரப்படாததையுமே அவர்கள் குறிப்பிடுகின்றனர். அரசின் எதிர்த்தரப்பு போல நின்று கொண்டு இவர்கள் எதைக் கூறுகிறார்களோ, அதையேதான் அரசும் கூறுகிறது.

“மாவோயிஸ்டு பிரச்சினை என்பதே சாராம்சத்தில் பழங்குடியினர் பிரச்சினைதான். இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போல அவை முன்னேறாத காரணத்தினால்தான் பழங்குடி மக்கள் மத்தியில் மாவோயிஸ்டுகள் எளிதில் ஊடுருவ முடிந்திருக்கிறது. நூறு நாள் வேலை போன்ற அரசின் வளர்ச்சித் திட்டங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவை பழங்குடி மக்களைச் சென்றடைந்து விட்டால், தானாகவே அம்மக்கள் மாவோயிஸ்டுகளைப் புறக்கணித்து விடுவார்கள். இந்த அச்சத்தின் காரணமாகத்தான் தங்கள் செல்வாக்குப் பகுதிக்குள் அரசின் வளர்ச்சித் திட்டங்களை நுழைய விடாமல் மாவோயிஸ்டுகள் தடுக்கிறார்கள்” என்பதுதான் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோரின் வாதம்.

ராமச்சந்திர குஹா, மேதா பாட்கர்மாவோயிஸ்டுகளின் வன்முறைக்கு எதிர் வன்முறைதான் சல்வாஜுடும் என்ற மார்க்சிஸ்டு கட்சியின் கருத்துக்கும், “மாவோயிஸ்டுகளை அகற்றினால்தான் வளர்ச்சி சாத்தியம்; அதனால்தான் வேறு வழியில்லாமல் படைகளை அனுப்ப வேண்டியிருக்கிறது” என்ற ப.சிதம்பரத்தின் கருத்துக்கும் வேறுபாடு இல்லை. சொல்லப்போனால், மார்க்சிஸ்டுகளின் கருத்து சிதம்பரத்தின் கருத்தைக் காட்டிலும் வெறித்தனமானது.

சல்வாஜுடும் என்ற சட்டவிரோதப் படையைக் கலைக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தவர் ராமச்சந்திர குஹா. பஸ்தார் தாக்குதலுக்குப் பின், “தொடர்கிறது பழங்குடி மக்களின் துயரம்” என்ற தலைப்பில் இந்து நாளேட்டில் (மே – 28, 2013) அவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

“நக்சலைட்டுகள் வன்முறையை வழிபடுபவர்கள். ஜனநாயகத்துக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் எதிரானவர்கள். ஆனால், ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இவர்களை எப்படிக் கையாண்டிருக்க வேண்டும்? புத்திசாலித்தனமான போலீசு நடவடிக்கைகள் மூலம் நக்சலைட்டு தலைவர்களைத் தனிமைப்படுத்தியிருக்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு அவர்களது நிலம் மற்றும் காடுகளின் மீது அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை நேர்மையான முறையில் அமல்படுத்தி, கல்வி – சுகாதாரம் போன்ற சேவைகளையும் மேம்படுத்தியிருக்க வேண்டும்.

சட்டீஸ்கர் அரசு இரண்டையும் செயவில்லை. அங்கே ஆயிரக்கணக்கான மக்களின் வெளியேற்றமும், அவர்கள் மீது ஏவப்பட்ட சித்திரவதைகளும் எனக்கு இராக்கையும் ஆப்கானையும் நினைவூட்டின. தந்தேவாடாவில் நான் பார்த்தவை குறித்து புவனேஸ்வரில் ஒரு கூட்டத்தில் விளக்கினேன். ஒரிசா முதல்வரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தார். சல்வாஜுடுமுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அதை சட்டீஸ்கர் அரசு லட்சியமே செயவில்லை. சல்வாஜுடுமை வேறு பெயரில் இயக்கியது. இது தொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எல்லோரையும் பார்த்து விட்டோம். அவர்களுடைய அலட்சியம் சகிக்கவொண்ணாததாக இருந்தது.”

– என்று தனது அனுபவத்தைக் கூறிவிட்டு, பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தனது ஆலோசனையையும் கூறுகிறார்.

“பிரதமரும் சோனியாவும் சேர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும். பழங்குடி பகுதிகளில் சுரங்கங்களுக்குத் தரப்பட்டுள்ள உரிமங்களை நிறுத்தி வைக்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு அரசியல் சட்டத்தின் 5-வது ஷெட்யூல் வழங்கியுள்ள நில உரிமைகள் உத்திரவாதப்படுத்தப்படவேண்டும். நக்சலைட்டுகளை ஒடுக்க விமானப்படையை அனுப்புவதைக் காட்டிலும், இதுதான் பயனுள்ள நடவடிக்கையாக இருக்கும்.”

பழங்குடி மக்களோடு மக்களாக இருக்கும் மாவோயிஸ்டு தலைவர்களைத் தனிமைப்படுத்தி ஒழிக்க வேண்டுமாம். சோனியாவும் மன்மோகன்சிங்கும் பஸ்தாருக்கு விஜயம் செய வேண்டுமாம். ஏனென்றால், மாவோயிஸ்டுகளுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கிடையாதாம். பழங்குடி மக்களின் நிலங்களைப் பிடுங்கி கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பவரும், சல்வாஜுடும் கொலைப்படைக்கு ஆசி வழங்கியவருமான மன்மோகன் சிங் ஜனநாயகவாதியாம். கார்ப்பரேட்டுகளின் உள்ளூர் அடியாள் மகேந்திர கர்மாவுக்கு மாற்று, கார்ப்பரேட்டுகளின் தேசிய அடியாள் மன்மோகன்சிங்காம்!

பிரதமர் பஸ்தாருக்கு விஜயம் செய்தால் பழங்குடி மக்களுக்கு என்ன பயன் விளையும்? விதர்பா விவசாயிகளுக்கு மன்மோகன் சிங்கின் விஜயம் விளைத்த பயன் என்ன என்பதை பத்திரிகையாளர் சாய்நாத் எழுதவில்லையா? “எஸ்.பி.ஓ. என்ற பெயரில் 1500 ரூபாய் மாதச் சம்பளம் வாங்கி வந்த சல்வா ஜுடும் படையினரின் பெயர் மாறியதும், மாதச்சம்பளம் 7000 ரூபாயாக உயர்ந்ததும்தான் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தொடுத்த பொதுநல மனுவின் பயன்” என்று குஹாவுடன் சேர்ந்து மனுச்செய் பேராசிரியை நந்தினி சுந்தர் மனம் நொந்து கூறவில்லையா?

சட்டீஸ்கர்-பிஜாபூர்
சட்டீஸ்கர்-பிஜாபூர் மாவட்டத்திலுள்ள எடேஸ்மேடா கிராமத்தில் கடந்த மே 17-ம் அன்று சி.ஆர்.பி.எஃப், படை நடத்திய போலி மோதலில் கொல்லப்பட்ட எட்ட பழங்குடியினரை நினைவு கூர்ந்து கதறியழும் அவர்களது உறவினர்கள்.

எந்த ஜனநாயக அமைப்பு முறையின் தோல்வி குறித்து தனது கட்டுரையின் முதற்பகுதியில் அங்கலாக்கிறாரோ, அதனிடமே கடைசிப் பத்தியில் சரணடைகிறார் குஹா. ராமச்சந்திர குஹா மட்டுமல்ல, முன்னாள் எல்லை பாதுகாப்புப் படை டி.ஜி.பி .ராம் மோகனும் அதைத்தான் கூறுகிறார். “அரசியல் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையின்படி, தங்களுடைய நிலங்களைச் சுரங்கத்துக்கு தருவதா, இல்லையா என்று முடிவு செயும் அதிகாரம் முதல்வருக்கோ வனத்துறை அமைச்சருக்கோ கிடையாது, பழங்குடி மக்கள்தான் அதை முடிவு செயவேண்டும்” என்கிறார்.

மெத்தப்படித்த மேதாவிகளும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுமான இவர்கள் அசட்டு முட்டாள்களா? அல்லது முட்டாள்களைப் போல நடிக்கிறார்களா? அங்கே பழங்குடி மக்களுக்கு எதிராகக் களத்தில் நிற்பவர்கள் டாடா, ஜிண்டால், வேதாந்தா, போஸ்கோ, ரியோ டின்டோ, எஸ்ஸார் போன்ற தரகு முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் என்பது இவர்கள் அறியாத இரகசியமா?

“கொலம்பஸுக்குப் பின்னர் நடைபெறும் பழங்குடி மக்களுக்கு எதிரான மிகப்பெரிய நில அபகரிப்பு” என்றும், “டாடா ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனங்கள் உயர்தர இரும்புக் கனிமங்கள் நிறைந்த 14 கிராமங்களையும் சுற்றுவட்டாரங்களையும் விழுங்குவதற்கு திட்டமிட்டு வேலை செகிறார்கள்” என்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் நியமித்த நிலச்சீர்திருத்தங்களை ஆராவதற்கான துணைக்குழு தனது நகல் அறிக்கையில் (2009) வெளிப்படையாகவே குற்றம் சாட்டவில்லையா?

தங்களுடைய இலாபவெறிக்காக எந்தச் சட்டத்தையும், எந்த மரபையும், எந்த அரசையும் வளைக்கவும் தகர்க்கவும் விலைபேசவும் தயங்காதவர்கள் இந்த முதலாளிகள் என்பதும், சல்வாஜுடும் என்ற கூலிப்படையைப் பூசை போட்டுத் துவக்கி வைத்ததே டாடா தான் என்பதும் இவர்கள் அறியாத உண்மைகளா?

“மத்திய, மாநில அரசுகள் அரசியல் சட்டத்தின்படி நடந்து கொண்டிருந்தால், முதலாளிகள் பேராசை கொள்ளாமல் இருந்திருந்தால், அதிகாரிகள் மனச்சாட்சியுடன் நடந்து கொண்டிருந்தால், நக்சல்களின் வலையில் பழங்குடி மக்கள் சிக்க நேர்ந்திருக்காது என்ற மாபெரும் உண்மை”யைத்தானே இவர்கள் திரும்பத் திரும்பக் கண்டுபிடிக்கிறார்கள்.

2006-இல் குஹாவின் உரையைக் கேட்ட பிறகுதான் ஒரிசா முதல்வர், போலி ஆவணங்கள் தயார் செய்து போஸ்கோவுக்காக விவசாயிகளின் நிலங்களைப் பறித்துக் கொடுக்கிறார். பிரதமர் அலுவலகமே போஸ்கோவுக்காக நிலப்பறிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுகிறது. நாராயணபட்னாவில் அமைதிவழியில் போராடிய மக்களின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

போஸ்கோ போராட்டம்
ஒரிசாவின் பாரதீப் பகுதியில் அமையவுள்ள போஸ்கோ ஆலைக்காக வெற்றிலைக் கொடிக்கால் தோட்டங்களை அழிக்க வரும் போலீசாரை எதிர்த்துப் போராடும் விவசாயப் பெண்கள்.

1984 சீக்கியப் படுகொலை, 1985 போபால் படுகொலை, 1992 பாபர் மசூதி இடிப்பு, 1993 மும்பை படுகொலை, 2002 குஜராத் படுகொலை, 2005 சல்வா ஜுடும் படுகொலைகள் – என எல்லாப் படுகொலைகளுக்கும் துணைநின்ற இந்த அரசுக்கு வன்முறையைப் பற்றிப் பேசவும் அருகதை உண்டா என்ற கேள்வியை இவர்கள் எழுப்புவதில்லை.

மாவோயிஸ்டுகளின் தாக்குதலை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும், வன்முறை என்றும் சித்தரிப்பவர்கள், மக்களின் உரிமைகள் மீதும் உடைமைகள் மீதும் வாழ்க்கையின் மீதும் இந்த அரசும் ஆளும் வர்க்கங்களும் நடத்துகின்ற தாக்குதல்களை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களாகவோ வன்முறையாகவோ கருதுவதில்லை. இந்த அரசமைப்பில் உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகம் இல்லை என்ற உண்மையையும் கண் திறந்து பார்ப்பதில்லை.

பஸ்தாரைப் போலன்றி, “பன்னாட்டு நிறுவனங்களும் அதிநவீன மால்களும் நிறைந்திருக்கும் வளர்ச்சியடைந்த பகுதியான” குர்கானின் மாருதி உள்ளிட்ட ஆலைகளில் நிற்கும் தனியார் பாதுகாப்புப் படையினர் நகர்ப்புற சல்வாஜுடும்தான் என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை. சட்டபூர்வமான வழிகளிலேயே மக்கள் கொள்ளையிடப்படுகையில், அவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிதான் என்ன என்ற கேள்விக்குள்ளேயே இந்த அறிவாளிகள் செல்வதில்லை.

தோற்றுவிட்ட இந்த அரசமைப்பின் மீது, தமக்கு எதிரானதென்று மக்கள் தம் சொந்த அனுபவத்திலேயே அன்றாடம் புரிந்து கொண்டு வரும் இந்த அரசமைப்பின் மீது, இவர்கள் மீண்டும் மீண்டும் பிரமையை உருவாக்குகிறார்கள். அதோடு மட்டும் நிற்பதில்லை; பிரமையைக் கலைக்க முயற்சிப்பவர்களை நக்சலைட்டுகள் என்று எச்சரித்து ஒடுக்கச் சொல்கிறார்கள்.

“இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பன்றித்தொழுவம் என்று கூறுகிறார்கள் மாவோயிஸ்டுகள். இன்று பலரும் இதனை ஏற்றுக் கொள்ளக்கூடும்… இந்திய அரசு மற்றும் சமூகத்தின் மீதான மாவோயிஸ்டுகளின் விமர்சனங்களும் பொய்யானவை அல்ல. ஆனால், அவர்கள் கூறும் தீர்வுதான் கற்பனையானது, அடைய முடியாதது” என்று கூறிவிட்டு, மாவோயிஸ்டுகளை நசுக்குவதற்கான வழிகளை விவரிக்கிறார் மோதல் மேலாண்மைக் கழகத்தின் (Institute of conflict managemtnt) இயக்குநர் அஜ சாஹ்னி.

“மாவோயிஸ்டுகளைப் போல கேஜ்ரிவாலும்தான் இந்த அரசமைப்பின் மீது ஏமாற்றம் கொண்டிருக்கிறார். அவரும் இது ஊழலானது, மோசடியானது என்றுதான் கருதுகிறார். மாவோயிஸ்டுகளும் கேஜ்ரிவாலைப் போல ஏன் தேர்தலில் நிற்கக் கூடாது?” என்று என்.டி.டி.வி தொலைக்காட்சி பேட்டியில் கேள்வி எழுப்பினார் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

இந்தக் கேள்விதான், மாவோயிஸ்டுகள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறைக்கான விடை.

– சூரியன்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________

ஏழ்மையா, கால்பந்தா ? பிரேசில் மக்களின் மாபெரும் எழுச்சி !

0
ஜூன் 20-ம் தேதி கால்பந்து மைதானத்தை முற்றுகையிட்ட மக்கள் - சல்வாடோர்.

லகளாவிய நிதி நிறுவனங்களால் பிரிக் (BRIC) என்ற பெயரில் இந்தியா, சீனா, ரஷ்யாவுடன் இணைத்து பேசப்படும் பிரேசில் நாட்டு மக்கள் சென்ற ஜூன் மாதம் பெரும் எண்ணிக்கையில் தெருக்களில் இறங்கி போராடினார்கள். உயர்ந்து கொண்டே போகும் விலைவாசி, நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல், அழிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரங்கள் இவற்றை எதிர்த்த போராட்டங்களாக அவை மாறின. ஜூன் 20-ம் தேதி மாணவர்கள், நடுத்தர வர்க்க ஊழியர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், குடும்பங்கள் அடங்கிய சுமார் 10 லட்சம் பேர் நாடு முழுவதும் நகரங்களின் தெருக்களில் மாபெரும் போராட்டத்தை நடத்தினர்.

சாவ் பாவ்லோ பேரணி
சாவ் பாவ்லோ பேரணி

தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் சுமார் 21 கோடி மக்கள் வசிக்கின்றனர். பிரேசில் என்றால் உலக மக்கள் பலருக்கு கால்பந்து நினைவுக்கு வரும், ஆனால் உலக முதலாளிகளுக்கோ அதன் வளங்கள் நினைவுக்கு வரும். பரந்து விரிந்த நிலமும், இயற்கை வளங்களையும், மக்கள் தொகையையும் கொண்ட நாடு பிரேசில். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் தனியார்மய, தாராள மய பொருளாதாரக் கொள்கைகள் சுமார் 20% (4 கோடி) நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒளியில்லாத மங்கிய தேசமாகவும், பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு (சுமார் 15 கோடி) நரகமாகவும் பிரேசிலை மாற்றியிருக்கின்றன.

பல பத்தாண்டுகள் ராணுவ சர்வாதிகார ஆட்சிக்குப் பிறகு 1980-களில் முதல் முதலாளித்துவ ஜனநாயக தேர்தல் பிரேசிலில் நடைபெற்றது. மாறி மாறி வந்த வலதுசாரி, இடது சாரி கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடகு வைத்தன.

சாவ் பாவ்லோ போராட்டம்
சாவ் பாவ்லோ போராட்டம்

2002-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூலா டா சில்வா, முந்தைய வலது சாரி கார்டோசாவின் 8 ஆண்டு கால ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் மலிவான விலையில் தனியாருக்கு விற்கப்பட்டதை நியாயப்படுத்தினார். உதாரணமாக, உலகின் மிகச் செறிவான இரும்புத் தாது சுரங்கங்களில் ஒன்றை $1 பில்லியன் டாலருக்கும் குறைவான விலையில் தனியாருக்கு விற்றார் கார்டோசா. அந்த சுரங்கத்தின் இப்போதைய மதிப்பு $20 பில்லியன் டாலர், ஆண்டு லாபம் $3 பில்லியன் டாலர். வலது சாரி எதிர்க் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியின் கொள்கைகள் இதிலிருந்து பெருமளவு வேறுபாடவில்லை என்றாலும், கூடுதலாக அமெரிக்காவின் காலடியில் பிரேசில் அரசியலை அடகு வைக்க வேண்டும் என்ற கொள்கையை உடையது.

2004-2008 கால கட்டத்தில் உலகப் பொருளாதாரம் பண வீக்கத்தில் ஊதிப் பெருக்கப்பட்ட போது பிரேசிலின் பொருளாதாரம் ஆண்டுக்கு 4.5% வீதம் வளர்ச்சியடைந்தது. காபி எஸ்டேட்டுகள், தகவல் தொழில்நுட்பத் துறை, அமேசான் காடுகள் என பிரேசில் நாட்டு மக்களைச் சுரண்ட பல நாடுகளில் இருந்து முதலீடுகள் குவிந்தன. திடீரென நடுத்தர வர்க்கமும், உயர்நடுத்தர வர்க்கமும் சமூகத்தில் தலையெடுக்க ஆரம்பித்தன. ஆனால் கனவு நெடும் நாட்களுக்கு நீடிக்கவில்லை. தனியார் மயத்தின் லாப வேட்டையில் பிரேசிலில் உள்ள அமேசான் காடுகள் ஆண்டுக்கு 20 லட்சம் ஹெக்டேர் என்ற வீதத்தில் அழிக்கப்பட்டு வருகின்றன. ஊழல் மிகுந்த அரசும், சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்களும் உலகப் பொருளாதார நெருக்கடியால் மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கத் தொடங்கின.

சாவ் பாவ்லோ நகரில் கொடியேந்தி போராட்டக்காரர்கள்
சாவ் பாவ்லோ நகரில் கொடியேந்திய போராட்டக்காரர்கள்

4 பேர் கொண்ட குடும்பத்துக்கு மாத வருமானம் சுமார் ரூ 12,000-க்கும் குறைவாக சுமார் 10 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கின்றார்கள். நிலமற்ற கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் 4 கோடி பேரில் சுமார் 20 லட்சம் பேர் நகர்ப்புறங்களுக்கு குடியேறி அடிப்படை வசதிகள் இல்லாத சேரிகளில் வசிக்கின்றனர். தென் அமெரிக்க சூழலில் நிலவி வந்த போதை வர்த்தகத்திற்கு இந்த மக்களில் பலர் பலியாகின்றனர்.

மக்களுக்கு குடிநீர் வினியோகமும், பொது வினியோகத் திட்டமும் நிதி இல்லை என்று முடக்கப்படும் போது தனியார் வணிக வசதிக்காக பெரும் செலவில் சாலைகளும், அடுக்கு மாடி கட்டிடங்களும் கட்டப்படுகின்றன. உங்கள் பணம் உங்கள் கையில் என்ற திட்டத்தைப் போல வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 1 கோடி ஏழை மக்களுக்கு நேரடி மானியமாக மாதா மாதம் $40 டாலர் (ரூ 2,400) அரசால் அனுப்பி வைக்கப்படுகின்றது. அதைத் தவிர்த்த மக்கள் நலத் திட்டங்கள் அனைத்துக்கும் மூடு விழா நடத்தப்பட்டுள்ளது.

பெரு நகரங்களில் கோடிக்கணக்கான மக்கள் சேரிகளிலும், குடிசைகளிலும் வாழும் போது, அரசு உலகக் கோப்பை கால்பந்து போட்டி, ஒலிம்பிக் போட்டி தயாரிப்புகளுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவழிக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால் பந்து போட்டிகளுக்கு $14 பில்லியன் (சுமார் ரூ 84,000 கோடி) அரசு ஒதுக்கியிருக்கிறது. 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் போது கலவரங்கள் நடக்காமல் பாதுகாக்க 50,000 இராணுவ வீரர்களை பாதுகாப்புக்கு அமர்த்தத் திட்டமிட்டிருக்கிறது பிரேசில் அரசு. ஏழைகளின் பசியை மயக்க செய்வதற்கு இத்தகைய நவீன கிளாடியேட்டர் சண்டைகளை கால்பந்து, ஒலிம்பிக் பெயரில் நடத்துகிறது பிரேசில்.

போலீசுடன் மோதும் போராட்டக்காரர்கள்
போலீசுடன் மோதும் போராட்டக்காரர்கள்

இந்நிலையில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் 20 சென்ட் (சுமார் ரூ 12) வரை உயர்த்தப்பட்டப் பேருந்து கட்டணங்கள், பிரேசில் நாட்டு மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராட தொடங்கினார்கள். போராட்டங்கள் பெரிதும் அமைதியாகவே நடந்தன, ஆங்காங்கே சில கடையுடைப்புகள், திருட்டு சம்பவங்கள் நடந்தாலும், பெரும்பான்மை இடங்களில் அமைதியான போராட்டம் தொடர்ந்தது. அரசு இந்த போராட்டங்களை பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை, மெல்ல மக்கள் தாமாகவே கலைந்து போய் விடுவார்கள் என எதிர்பார்த்தது.

கடுமையான விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை, மோசமான அரசு நிர்வாகம், கல்வி-சுகாதாரம்-பாதுகாப்புத் துறைகளில் நிர்வாக சீர்கேடு, வேலை வாய்ப்பின்மை, பெருகி வரும் இளம் குற்றவாளிகள் என மோசமாகி வரும் சமூகச் சூழல் மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஊரில் எத்தனை சேரிகள் இருந்தாலும், கனவான்கள் தன் நாட்டிற்கு வரும்போது அது சொர்க்கமாக தெரிய வேண்டுமென கட்டப்பட்டு வரும் கால்பந்து மைதானங்கள் மக்களை கோபம் கொள்ள செய்தன.

அமேசான் நதிக் கரையில் உள்ள பேலம் நகரில் மக்களைத் தாக்கும் போலீஸ்
அமேசான் நதிக் கரையில் உள்ள பேலம் நகரில் மக்களைத் தாக்கும் போலீஸ்

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்துத் தொடங்கிய போராட்டம், மெல்ல பிரேசிலில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிரான போராட்டமாக வெடித்தது. விலைவாசி உயர்வு, லஞ்ச-ஊழல் மலிந்த அரசு, கல்வி-சுகாதாரம்-பாதுகாப்பு போன்றவற்றில் நிலவும் மோசமான சூழல், அதிக பொருட்செலவில் வீண் ஆடம்பரத்துடன் கட்டப்பட்டு வரும் கால்பந்து மைதானங்கள், உலகக் கோப்பை, ஒலிம்பிக் போட்டிகள் போன்ற விழாக்களுக்கு பெரும் பணச் செலவில் தயாரிப்புகள் போன்றவற்றின் மீது மக்களின் கோபம் சரியான வீச்சுடன் அரசை நோக்கி திரும்பியது.

பிரேசில் வீதிகளில் கலகம் வெடித்தது. ஜூன் மாதம், பிரேசிலில் கன்ஃபெடரேஷ்ன் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வந்தன. ஊடகங்கள் மக்கள் பிரச்சினைகளை புறக்கணித்து கால்பந்து போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. இந்தப் போராட்டங்களை ஏதோ திருடர்களின் போராட்டம் என்பது போல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. மீடியா அலுவகங்களை கைப்பற்றும் போராட்டம், ஊடக வாகனங்களை தாக்குவது என போராட்டம் திரும்பியது.

தாக்குதல்கள் பெரிதாகிக் கொண்டிருக்க உலக ஊடகங்களில் பிரேசிலின் போராட்டச் சூழலுடன் ஒப்பிட்டு கால்பந்து போட்டிகளுக்கு ஆபத்து வருமா என கவலை தெரிவித்து கட்டுரைகள், செய்திகள் வெளிவரத் தொடங்கின. அரசு பதட்டமடைந்து போராட்டக்காரர்களை கவனிக்கத் தொடங்கியது. மூன்று வாரங்களுக்கு மேல் பல்வேறு நகரங்களில் போராட்டம் விரிவடைய அரசு ராணுவத்தையும் போலீசையும், கண்ணீர் புகைக் குண்டுகளையும் பெரிதும் நம்பியது, போராட்டக்காரர்களை ஒடுக்க தம்மால் முடிந்தவரை அடக்கு முறையை ஏவி விட்டது.

ஜூன் 20-ம் தேதி கால்பந்து மைதானத்தை முற்றுகையிட்ட மக்கள் - சல்வாடோர்.
ஜூன் 20-ம் தேதி கால்பந்து மைதானத்தை முற்றுகையிட்ட மக்கள் – சல்வாடோர்.

“போராட்டக்காரர்கள் செய்யும் வன்முறை சம்பவங்களை அரசு ஒரு நாளும் பொறுத்துக் கொண்டிருக்காது” என்றார் அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் டெலிமா ருஸோஃப். ஆனால் ஒரு சில இடங்களை தவிர மக்கள் போரட்டங்கள் அரசுக்கெதிரான முழக்கங்களுடன் தொடர்ந்தன. ஆனால், போராட்டக்காரர்களை இவை எதுவும் தடுக்கவில்லை.

ஜூன் 30-ம் தேதி கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடந்த மைதானத்தை முற்றுகையிட்டனர். பிரேசில் இறுதிப் போட்டியில் வென்ற கொண்டாட்டங்கள் ஒரு பக்கமும், 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மைதானத்தை முற்றுகையிட்ட கூச்சல் மறுபுறம் என அரங்கம் அதிர்ந்தது. அதைவிட இரண்டு மடங்கு கலவர தடுப்பு போலிஸ் பிரிவினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

வேறுவழி இல்லாமல் அரசு போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது, பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டன, சில அரசியல் அதிகார மாற்றங்கள் செய்யப்பட்டன, ஆனால் பணத்தை கொட்டிய கால்பந்து அரங்குகள்! அவற்றை என்ன செய்வது?

இந்தப் போராட்டங்களில் உழைக்கும் வர்க்கத்தினர் பங்கெற்றாலும் பெரும்பான்மையினராக உதிரிகளும், மத்திய வர்க்கத்தினரும் பங்கு பெற்றனர். அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளும், ராணுவத்தினரின் அடக்குமுறையும் போராடிய கணிசமானோரை வீட்டில் உட்கார வைத்து விட்டது.

பிரேசில் போரட்டங்களை அரபு நாடுகளின் எழுச்சியை போன்றது என குறிப்பிட்டு எழுதிய ஐரோப்பிய ஊடகங்கள், மற்றொன்றை குறிப்பிடவில்லை. சென்ற ஆண்டு ஆயிரக் கணக்கான எகிப்து மக்கள் அந்நாட்டின் அதிபர் பதவி இறங்க போராடினர். பெரும் எழுச்சிக்கு பின் அதிபர் மாறினார், ஆனால் இன்று மீண்டும் அரசியல் குழப்பம் நிலவுகிறது.

பிரேசில் மக்கள் திட்டமிட்ட கோரிக்கைகளுடன், நீண்ட கால அரசியல் திட்டத்துடனான கட்சியின் தலைமையில் போராடவில்லை. அதனால் அவர்களின் எழுச்சி முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தாமல் முடங்கியிருக்கிறது. மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்ட அரசை எதிர்த்து பணிய வைப்பது இல்லாமல், அரசை கைப்பற்றுவது தான் ஒரே வழி. ஆனால் அத்தகைய புரட்சிகர கட்சி பிரேசிலில் இல்லை.

கடந்த 20 வருடத்தில் பிரேசிலில் இது போல் போரட்டம் நடைபெறவில்லை என்கிறது வரலாறு, ஆனால் வரலாறு மிக்க இந்த எழுச்சியின் பலன் என்ன?

– ஆதவன்.

படங்கள் (நன்றி : RT.com) [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மேலும் படிக்க

வீடியோ தொகுப்பு