Friday, August 1, 2025
முகப்பு பதிவு பக்கம் 792

சோறு திருடினான் மகன்! தற்கொலை செய்தாள் தாய்!!

14

தினகரன் - 27.11.2010

தன்மகன் போரிலே புறமுதுகில் அம்பு தைத்து மாண்டு போனான் என்று கேள்விப்பட்டதும் அந்த கோழைக்கு இந்த மார்புகளா பாலூட்டியது என்று சினம் கொண்டு தன் மார்புகளை அறுத்தெரிந்தாளாம் ஒரு புறநானூற்றுத் தாய். இலக்கியத்தில் பதிவான அந்த வீரத்தாயின் வரிசையில் உண்மையாகவே ஒரு தாய் இருக்கிறாள். நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டி என்ற கிராமத்தில் கூலி வேலைச் செய்து பிழைப்பை ஓட்டும் ஒரு பாவப்பட்ட கூலி ஏழை சந்திராதான் அந்த தாய். 45 வயதான இந்த தாய்க்கு 16 வயதில் ஒரு மகன்.

தன் மகன் ஒரு திருடன் என்று கேள்விப்பட்டவுடன் தூக்கு மாட்டிக்கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் அந்த உத்தமி. அந்தத் தாய் செய்த தவறு ஒன்றே ஒன்று தான்.  கூலி வேலை செய்து சம்பாதித்த அற்பத் தொகையில் தன் மகனை 11ஆம் வகுப்பு வரை படிக்க வைக்கத்தான் முடிந்தது.  வயிறார அவனுக்கு இரண்டு வேளை சோறு  போட முடியவில்லை.  வாழ வேண்டிய வயதிலேயே தன் கணவனைப் பறிகொடுத்த அந்த அனாதைத் தாயால் உழைக்;க முடிந்தது அவ்வளவுதான். 

அவளது மகன் திருடியது வேறு எந்த அபூர்வமானப் பொருளையும் அல்ல. கேவலம் ஒத்த ரூபாய் புழுத்த அரிசி சோத்தைத்தான்.  சோத்தைத் திருடித் தின்ற இந்தக் கொடுமையை அமெரிக்கா நுழைந்து குதறிய சோமாலியாவில் கூட கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அவளுடைய 16 வயதுடைய மாணவன் இளவரசன், அடுத்த வீட்டில் சோத்தைத் திருடித் தின்னும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். என்னென்ன கற்பனைகளோடு அவனுடைய அப்பாவி பெற்றோர்கள் அவனுக்கு இளவரசன் என்று பெயர் வைத்தார்களோ. பாவம் சோத்துத் ‘தரித்திரம்’ அவனை விடாது விரட்டியது.

அவனுக்கு சொந்த பந்தங்கள் இருந்தும் அந்தப் பாலகனின் பசியால் வாடிய முகத்தைப் பார்த்தும் கூட ஒருவாய் சோறு போட யாரும் முன் வரவில்லை.  அடுத்தவர் சாப்பிடும் போது தெரு நாய் பார்ப்பது போல வாயையும், கையையும் பார்த்து பார்த்து ஏங்கி ஏங்கி, இறுதியாக முடிவெடுத்தான், திருடித்தின்றாவது பசியாற்றுவதென்று.  ஒருநாள். இரண்டு நாள் அடுத்த நாளென்று வெற்றியின் ஊடாக திருட்டுத் தொழில் தொடர்ந்தது.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்என்ற பழமொழி உண்மையாயிற்று. எச்சில் கையோடு கைது செய்தது சேந்தமங்கலம் போலீசு.  சுற்றி வளைத்துப் பிடித்துத் தந்தது சோத்துக்கு சொந்தக்காரர் கூட அல்ல,  அக்கம் பக்கத்து வீட்டு அரிச்சந்திரர்கள் தான். வெறும் சோத்தைத் திருடினான் என்றால் வழக்கு போட முடியாது என்று கருதிக்கூட  நகையைத் திருடி விட்டான் என்று பிடித்துக் கொடுத்திருக்க அதிகம் வாய்ப்புள்ளது. தனது வயதையொத்த பணக்கார குலக் கொழுந்துகள் பள்ளிக்குச் செல்லும் சொகுசுக்காரைத்; திருட அவன் துணியவில்லை.  விதவிதமான துணிமணிகளைக் கண்டு அதைத் திருடி மினுக்கிக்கொள்ளலாம் என்று அவன் எண்ணியதில்லை. 

உணவுக்கு கையேந்த வேண்டுமா, வாளேந்த வேண்டுமா?

பல இளைஞர்கள் தமது காதல் ஜோடிகளுடன் கைகோர்த்துச் செல்வதைக்கண்டு  தானும் அப்படி இருக்கலாமென்று அவன் நினைத்துக்கூட பார்த்ததில்லை. உணவு விடுதிகளில் விதவிதமாக உண்பவர்களைப் பார்த்து வயிற்றொpச்சல் அடைந்ததில்லை. அதை ஈடுசெய்ய உமிழ்நீரைத்தான்  விழுங்கிக் கொண்டான்.  இறுதியில் அவனால் சோத்தைத் தான் திருட முடிந்தது.  எந்தப் பொருளைத் திருடுவது என்பதைத்கூட வர்க்கம் தானே தீர்மானிக்கிறது.

இந்தச் சமூக விரோத பெருங்குற்றத்திற்கு யார் காரணம்?! அவனா இல்லை அவனையும், அம்மாவையும் அனாதையாக விட்டு விட்டுச் செத்துப் போனாரே.அவனுடைய அப்பா, அவரா?! இல்லை, பச்சப்புள்ளையைப் பார்க்க வைத்துத் தின்றார்களே அவனுடைய சொந்த பந்தங்கள்.. அவர்களா?! இல்லை…’எப்படியாவது சாந்துச்சட்டி சுமந்து தன் மகனை காலேஜ் வரைக்கும் படிக்க வச்சா. ஒரு நல்ல வேலை கெடச்சி, மகன் கஞ்சி குடிச்சி பொழச்சிக்குவான் என்று அந்தக் கனவிலேயே உடைந்து போன உடலோடும், வாழ்க்கையோடும் சித்தாள் வேலைக்குப் போய் 11ஆம் வகுப்பு வரைப் படிக்க வைத்தாளே, அந்த மானமுள்ளத் தாயின் தவறா?! இப்படித்தானே நீங்களும் யோசிப்பீர்கள்?

நியாய விலைக் கடைகளில் கலைஞர் சிரிக்கிறார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி! மகிழ்ச்சி.  அந்த ஒத்த ரூபாய் அரிசிகூட கிடைக்காமல் ஏன் அந்த இளவரசன் சோத்தைத் திருடினான்? இதற்கு நியாயமாக பதில் சொல்ல கலைஞரால் முடியுமா?! இல்லை பூச்சியும், எலியும் தின்றால் கூட அந்த அரிசியை ஏழைகளுக்குத் தரமாட்டேனென்று  அடம் பிடிக்கிறாரே பிரதமர் அவர் பதில் சொல்வாரா?! கலைஞர் வேண்டுமானால் தம்பிக்கு கடிதம் எழுதி தப்பித்துக் கொள்ளலாம்.  இந்தக் கொடுமைக்கு அவரது குடும்பமே ஒன்று  சேர்ந்தால் கூட பதில்  சொல்ல முடியாது.  ஒரு வேளை கடந்த நவம்பர் 17ஆம் தேதி தன் பேரன் துரை தயாநிதிக்கு நடந்த திருமணத்தில் ரேசன் அரிசி சோத்தை வேகவத்து விருந்து போட்டிருந்தால், இதற்கு பதில் சொல்லத் தகுதியிருந்திருக்கும் கலைஞருக்கு.  ஆனால் ஊருக்குத்தான் ஒத்த ரூபாய் அரிசி!

சின்ன வயதிலேயே தகப்பனை எடுத்து விழுங்கிவிட்டு, வீட்டுக்காரர்கள் வந்து விடுவார்களோ என்ற பதற்றத்தில் கவளம், கவளமாக திருட்டுச் சோத்தை கண்ணில் நீர்வர விழுங்கி விட்டு, கடைசியில் ஒரே ஆதராவாக இருந்த தாயையும் எடுத்து விழுங்கி விட்டு, இப்போது சேலம் சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறான் இளவரசன். 

சட்டம்   தன் கடமையைச் செய்கிறது.  இருக்கட்டும், நல்லது.

சோறு திருடினான் என்பதைக்கூட அந்த தாயால் தாங்க முடியவில்லை. குற்ற உணர்ச்சி அழுத்த தன் உயிரை துறந்திருக்கிறாள். ஆனால் இந்த மான உணர்ச்சி ஏழைகளுக்கு மட்டும்தான் சொந்தமோ? ஸ்பெக்ட்ரம் ஊழலின் அளவு ஒத்தை ரூபா அரிச போன்றது அல்ல. ஒன்னே முக்கால் இலட்சம் கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம் என்று கூட அந்த ஏழைகள் அறியமாட்டார்கள். ஆனால் அந்த பூஜியங்களை அறிந்தவர்களுக்கும், அபகரித்தவர்களுக்கும் மான உணர்ச்சி கிஞ்சித்தும் இல்லையா? கலைஞர் குடும்பம், டாட குடும்பம், மந்திரிகள், அதிகாரிகள், முதலாளிகள் எங்கும் யாராவது ஒருவர் கூட தற்கொலை செய்ய வில்லையே? சோறு திருடுவதுதான் மானக்குறைவா, இலட்சம் கோடிகளில் திருடினால் அது பெருமையா?

காமன்வெல்த் போட்டிக்கு ஏற்பாடு செய்ததில், கேவலம் மலம் துடைக்கும் பேப்பரில்கூட கமிஷன் வச்சிகாசு திருடினாரே காங்கிராஸ் கல்மாடி அவருடைய வீட்டுப் பெண்கள் யாராவது ரோசத்தோடு தூக்கு மாட்டிக் கொண்டிருக்கலாமே. ஏன் செய்யவில்லை? நம்ம நாட்டுல  தேசபக்திக்கு மட்டும்  குறைச்சலே இல்லை. நடிகர் அர்ஜுனையே விஞ்சிவிடுவார்கள். வீரமரணம் அடைந்த கார்கில் வீரர்களின் விதவை மனைவிமார்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுத்ததில் தன்னுடைய மாமியார், மைத்துனி,  மைத்துனர் ஆகியோருக்கும் வீட்டு வசதி செய்து கொடுத்தாரே மகாராஷ்டிரா முதல்வர் அசோக்சவான் அவருடைய களவாணித்தனம் தெரிந்து அவருடைய வீட்டுப் பெண்களோ, ஆண்களோ இல்லை அவரோ ஏன் ஒருவர் கூட ஏன் தூக்கு மாட்டிக் கொள்ளத் துணிய வில்லை!!

இதற்கெல்லாம் மன்மோகனும், சிதம்பரமும் பதில் சொல்வார்களா? பதில் சொல்ல பிரதமருக்கு ஏது நேரம்! 10 ஆயிரம் கோடி செலவு செய்து அம்பானி கட்டியிருக்கிற அன்டிலியா வீட்டுக்கு பால்காய்ச்சவே நேரம் போதவில்லை.

ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தன் பிள்ளைகளுக்கு நோகாமல் எடுத்துத் தந்தாரே மதவெறியன் கர்நாடகா முதல்வா; எடியூரப்பா அவர் வீட்டில் யாராவது தேசப்பற்றோடு ஏன் தூக்கு மாட்டிக்கொள்ளவில்லை?!

தோல்வி மனப்பான்மையால் தற்கொலை செய்துக்கொள்வதில் எமக்கு உடன்பாடில்லை என்பது வேறு விசயம்.  ஆனால் அந்தத் தாயின் தன்மான உணர்ச்சி சுயமாpயாதையுள்ள அனைவரையும் தலைகுனிய வைக்கிறது.  ஆனால் நாட்டையே திருடும், கூட்டிக் கொடுக்கும் திருடர்கள் தலை நிமிர்ந்து கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார்களே அதைப் பார்த்து பொறுத்துக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் அவமானமில்லையா?!

முதலாளிகள் போடும் எச்சில் காசில் வாழும் இந்த மானங்கெட்ட அரசும், அதிகாரவர்க்கமும், அரசியல்வாதிகளும் இனிமேலும் நாட்டையும், நாட்டின் கௌரவத்தையும் காப்பாற்றுவார்கள் என்று உங்களால் நம்ப முடிகிறதா?!  ஒன்றே ஒன்றுதான் இதற்கெல்லாம் தீர்வாக இருக்க முடியும். ஓன்று அவர்களாகவே தூக்கு மாட்டிக் கொள்ள வேண்டும். அது நடக்கப் போவதில்லை. ஏனென்றால் எல்லாரும் சொரணை கெட்டவர்கள். நாம்தான் அவர்களை  தூக்கிலேற்ற வேண்டும்

மானமுள்ள எம் உழைப்பாளி மக்களே உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்.  வறுமைக்கும், தரித்திரத்திற்கும் காரணமானவர்களின் உயிரை எடுங்கள்.  இந்தத் தினவெடுத்த முதலாளித்துவத்திற்கு ஒரு உணவுக் கலகம் விடை சொல்லட்டும். அந்த உணவுக் கலகம் என்பது புரட்சிதான் என்பதற்கு முன்னோட்டமாக இருக்கட்டும்.

_________________________________________

– சா.செல்வராசு, ம.க.இ.க – மையக்கலைக்குழு
_________________________________________


வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்

113

உங்களின் கவனத்திற்கு: 26.12.2010 அன்று சென்னையில் நடந்த கீழைக்காற்றின் நூல் அறிமுக விழாவில் தோழர் மருதையன் பேசிய உரையை இங்கு வெளியிடுகிறோம். சுமார் 6000 வார்த்தைகள் கொண்ட இந்த நெடிய கட்டுரை வாசிப்பு குறித்த முக்கியமான பிரச்சினைகளை சமூக நோக்கத்துடன் விரிந்தும், ஆழமாகவும், ஆராய்கிறது. வழக்கமான இணைய வாசிப்பு பாணியில் அல்லாமல் சற்று தங்கி நின்று நிதானித்து படியுங்கள். அதென்ன இணைய வாசிப்பு என்ற கேள்வி இருந்தால் அதற்கான விடைதான் இந்த கட்டுரை

தோழமையுடன்
வினவு

__________________________________________________________________________________

காலத்தின் கசப்பை முறியடித்த கீழைக்காற்றின் வரலாறு!

தோழர்களே, இந்த நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரை என்றெல்லாம் போடுவதில்லை. பொதுவாக நூலை வெளியிட்டுப் பேசுவார்கள். இங்கு சிறப்புரை என்று போட்டிருக்கிறார்கள். இது எனக்கு வாய்த்த சிறப்பு ஒரு சுமை. மற்றவர்களைப் போல் இயல்பாக ஒரு கருத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலே பேச இயலாமல் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுக்க வேண்டியச் சூழலில் இந்த மேடையில் நிற்கும் நிலை. அது பற்றிக் கவலைப்படவில்லை. இந்தக் கூட்டம், வழமையான கூட்டங்களைப் போல் இல்லாமல் மாலை நேரத்தில் ஒரு நான்கைந்து பேர் அருகருகே அமர்ந்து கலந்துரையாடுதுவது போன்றச் சூழலையும் மனநிலையையும் ஏற்படுத்துவதால் அந்த வகையிலேயே இங்கே பேசுவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

கீழைக்காற்று வெளியீட்டகம் பற்றி தோழர் துரை.சண்முகம் தன் தலைமை உரையில் சுருக்கமாகச் சொன்னார். கீழைக்காற்று வெளியீட்டகம் தொடங்கிய காலம் என்பது மிக முக்கியமானது. ரஷ்யாவிலே, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலே போலி சோசியலிசத்தின் வீழ்ச்சி – “கம்யூனிசம் இறுதியாகத் தோற்று விட்டது, முதலாளித்துவம் வென்று விட்டது, இது தான் நாகரீகத்தின் முடிவு, சித்தாந்தங்களின் முடிவு” என்றெல்லாம் மேற்கத்திய அறிவுத்துறையினர் பேசிக்கொண்டிருந்த காலம்.

இங்கே தமிழகத்தை பொறுத்த வரையிலே உங்களுக்குத் தெரியும் NCBH  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என்பது ஒரு இடதுசாரி அரசியல், கம்யூனிஸ்ட் அரசியல் முற்போக்கான விஷயங்கள் ஆகியவற்றை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு, 70களில் 80களில் இளைஞர்களுக்கு வாய்த்த ஒரு வரப் பிரசாதமாக இருந்தது. 10காசு 15காசு 25காசு 50காசுக்கெல்லாம் புத்தகங்கள் கிடைக்கும். அதன் பொருள் எல்லாக் கடைகளிலும் அந்த விலைக்குப் புத்தகங்கள் கிடைக்கும் என்பதல்ல. ரஷ்யாவிலே மலிவு விலைக்கு அச்சிடப்பட்டு இங்கே விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

அதை எண்ணிறந்த இளைஞர்கள், ஒரு வகையிலே சொன்னால் “நாலணாவிற்கு ஒரு புக் கிடைக்குது அது என்ன என்றுதான் வாங்கிப் பார்ப்போமே” என்றும், “யாரு நாலணாவிற்கு புக் விற்கிறார்கள்? 15காசு 20காசுக்கு யார் புக் விற்கிறார்கள்?” என்றும் வாங்கினார்கள். அரசியல் நூல்கள், குழந்தைகளுக்கான நூல்கள், கதைகள், அறிவியல் நூல்கள் இப்படிப் பல நேர்மறையான, சிந்தனையைத் தூண்டக்கூடிய நூல்கள் அப்போது தமிழகமெங்கும் பல இடங்களில் விற்பனைக்கிருந்தன. அதை நான் இத்தகைய முற்போக்கு நூல்களைப் படிக்கத் துவங்கிய காலம் என்று சொல்லலாம்.

தனிப்பட்ட முறையிலே அனுபவப் பகிர்தலாக – 70களின் இறுதியில் அல்லது 80பதுகளின் துவக்கத்திலே வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். கடன் ஏற்பாடு செய்து கொண்டு ஒரு 150-200ரூ எடுத்துக் கொண்டு NCBH சென்றால் ஒரு சைக்கிள் கேரியரில் இருபுறமும் நிறையக்  கட்டிக் கொண்டுவரும் அளவிற்கு புத்தகம் வாங்கலாம். அப்படிப் புத்தகங்களைப் வாங்கிக் கொண்டு வந்து லெனின், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் நூல்கள், அறிவியல் நூல்கள் ஆகியவற்றை அது என்ன ஏன் என்று தெரியாமல் எல்லாவற்றையும் படிப்பது.

அப்படி நான் மட்டுமல்ல, பரவலாக இடது சாரி இயக்கம், பெரியார் இயக்கங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் என்னைப் போல NCBHஐ நூல்கள் வாங்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருந்த காலம் அது. ஆனால் இந்த ரஷ்ய, கிழக்கு ஐரோப்பியத் தோல்விகளையும் பின்னடைவுகளையும் ஒட்டி, இங்கேயும் ஏற்பட்ட இடது சாரி இயக்கங்களின் பின்னடைவு, சீரழிவு ஆகியவற்றையும் சேர்த்து அவர்கள் கடையைக் கட்ட ஆரம்பித்து விட்டனர்.

NCBH-ல் இனி இடதுசாரிப் புத்தகங்கள் கிடைக்காது என்றானது. சோவியத் ரஷ்யா இந்த நூல்களை வெளியிடுவதையும் நிறுத்திக் கொண்டது. சீனத்தில் இருந்து நூல்கள் அதிகமாக வராது, மிகக் குறைவாகத்தான் வரும். அதற்கு நிறைய மிரட்டல்கள் உருட்டல்கள் உண்டு.

அந்த காலம் பற்றி உங்களுக்குத் தெரியும் – தர்மபுரி வட ஆற்காட்டிலே கடுமையான போலி மோதல்கள் கொலைகள் நடந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலம். அப்போது புத்தகங்கள் வாங்க வேண்டுமென்றால் கிளம்பி சென்னைக்கு வருவோம். தஞ்சையிலே NCBH கடையிலே வாங்குவோம். சென்னையிலே NCBH, சென்னை புக் ஹவுஸ், க்ரியா போன்ற கடைகளில் தேடித் தேடி புத்தகங்கள் வாங்கிக் கொண்டு போவோம்.

நான் சொன்ன, உலகம் தழுவிய அளவிலே ஏற்பட்ட மாற்றங்களை ஒட்டி, “இடது சாரி கருத்துக்களுக்குப் பின்னடைவு, இதை இனி யாரும் வாசிக்க மாட்டார்கள், இதெல்லாம் எடுபடாது” என்ற பிரச்சாரம் உலகம் தழுவிய அளவிலே நடத்தப்பட்ட போது, அதற்கு எதிரான போராட்டத்தின் ஒரு அங்கமாக தோழர்கள் கீழைக்காற்று என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். மார்க்சிய லெனினியக் கருத்துக்களையோ, அல்லது பெரியார் அம்பேத்காரின் சாதி மறுப்புக் கருத்துக்களையோ, ஜனநாயக பூர்வமாக இந்தச் சமூகத்தில் பார்க்கின்ற கருத்துக்களையோ படிக்கக் கூடிய வாசகர்களுக்கு ஒரே இடத்தில் எல்லா நூல்களும் கிடைக்கப் பெற வேண்டும்.

இந்தக் கருத்துக்கள் எல்லாம் மக்களிடம் போனால் தானே இயக்கத்தைக் கட்டமைக்க முடியும். இந்தக் கருத்துக்களை எல்லாம் கொண்டு செல்வதற்கு யாரும் இல்லை. தோழர் சொன்னதைப் போல வணிகர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் எவ்வளவு முற்போக்கு உள்ளம் கொண்டவர்களாக இருந்தாலும் தொழில் ரீதியாக அவர்களால் நட்டமில்லாமல் நடத்த முடியாது. லாபம் கிடைக்காதென்றால் இதிலெல்லாம் இறங்க முடியாது. நட்டம் வந்தாலும் இழப்பு வந்தாலும் இப்படி ஒரு நிறுவனத்தை நடத்த வேண்டும் என்று யார் சிந்திக்க முடியுமென்றால் யாருக்கு சமூக மாற்றத்தில் அக்கறை இருக்கிறதோ, யார் தங்களுடைய சொந்த வாழ்க்கையை இழப்பதற்கு தயாராக இருக்கிறார்களோ, அந்த மாதிரி தோழர்கள் தான் இந்த மாதிரி நிறுவனத்தை நடத்த வேண்டும். இது தேவை. இப்படி ஒரு கருத்துத் தளத்தை உருவாக்கினால் தான் பல இளைஞர்களை எதிர்காலத்தில் ஈர்க்க முடியும் என்பதையெல்லாம் மனதில் கொண்டு துவக்கப் பட்டது கீழைக்காற்று.

தோழர் தமிழேந்தி சொன்னது போல ஆரம்ப காலத்தில் அது ஒரு வாங்கி விற்கும் கடையாகத்தான் இருந்தது. சொந்தப் பதிப்புகள் மிக மிகக் குறைவு. அது என்.சி.பி.ஹெச்  புத்தகங்களாக இருக்கட்டும் அல்லது வேறு கடைகளின் புத்தகங்களாக இருக்கட்டும்; தோழர் துரை. சண்முகம் தேடித் தேடி தேனீ போலச் சேகரித்து வந்து இங்கே வைப்பார். இங்கே வருபவர்களுக்கு சாத்தியமான அளவுக்கு எல்லா நூல்களுமே இங்கே கிடைக்க வேண்டும் என்று அந்த நூல்களைக் கொண்டு வந்து சேமித்து வைத்து, இன்றைக்கு முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி என்று கீழைக்கற்றைப் பற்றி போட்டிருக்கிறார்களே, அந்த முகவரி கடும் உழைப்பினால் நம்மிடையே உருவாக்கப் பட்டது.

இன்று உண்மையிலேயே முற்போக்கு நூல்களுக்கான ஒரு முகவரியாக இருக்கிறது. கீழைக்காற்று அப்படி நிலை நிறுத்தப்பட்டப் பிறகுதான் அதைச் சார்ந்த அரசியல் இயக்கங்கள் ம.க.இ.க. போன்ற அமைப்புகள் களத்திலே செயல்படத் தொடங்கிய பிறகுதான் இதெல்லாம் முடிந்துவிட்டது என்று கருதிய வலது இடது கம்யூனிஸ்டுகளுக்கும் கூட “பரவாயில்லையே, இன்னும் இதற்கு எதிர்காலம் இருக்கிறதே” என்ற நம்பிக்கை வந்தது. தங்கள் புத்தகங்கள் இந்தக் கடையில் விற்கிறதே, ஏன் தங்கள் கடையில் விற்பதில்லை என்று வியந்தனர். இதெல்லாம் நேரில் தெரிந்த விஷயங்கள்.

ஏனென்றால் அந்தப் புத்தகத்தைப் படித்து யார் பயன்படுத்த முடியுமோ அவர்கள் இந்தக் கடைக்கு வருகிறார்கள்; அவர்களின் கடைக்கு போவதில்லை. இது யதார்த்தம்; தற்புகழ்ச்சியல்ல. இப்படி உருவாக்கப்பட்டது ஒரு ஜனநாயஜ பூர்வமான அரங்கமாக இருக்கிறது. நீங்கள் அங்கே விற்கும் புத்தகங்களைப் பார்த்திருக்கலாம். கீழைக்காற்று துரை.சண்முகம் ம.க.இ.க. தோழர் என்பதால் இந்தச் சார்புடைய வெளியீடுகள் மட்டும் கிடைக்கும் என்பதில்லாமல், மற்ற நூல்களும், ம.க.இ.க.வை விமர்சனம் செய்கின்ற மிகக் கடுமையாகத் தாக்குகின்ற நூல்களும் பத்திரிக்கைகளும் எல்லாக் கருத்துக்களுக்குமான இடமாக இங்கே விற்கப்படுகின்றன. எல்லோரும் அப்படிச் செய்வதில்லை. NCBH உள்ளிட்டு பல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்ந்த கடைகள் அவர்களை விமர்சித்து வரும் நூல்களையோ, பத்திரிக்கைகளையோ வைத்திருப்பதில்லை. “நூறு பூக்கள் மலரட்டும்” என்று மாவோ சொன்னாரே அதன் இலக்கணமாக கீழைக்காற்று வெளியீட்டகம் நடத்தி வருகிறது.

அது இன்றைக்கு இப்படி ஒரு நூல் வெளியீட்டு விழாவை இங்கே சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்துகிறது. தோழர் துரை.சண்முகம் “இதுதான் கீழைக்காற்றின் முதல் புத்தக வெளியீட்டு விழா” என்று சொன்னதும் கொஞ்சம் துணுக்குற்றது போல் இருந்தது. இத்தனை நாள் இதை இப்படி நாம் யோசிக்கவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது. அதைப் பற்றிப் பரவாயில்லை. ஆனால், இத்தனை காலம் உழைத்த உழைப்பிற்கு இதை இன்னும் கொஞ்சம் முன்னாலேயே செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

கீழைக்காற்று நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் உழைப்பு என்பது மிகவும் கடுமையானது. அவர் சொன்னது போல சும்மா கடையில் அமர்ந்திருப்பது அல்ல. தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் கூட்டங்கள் நடக்கின்றனவோ, என்ன அரசியல் கூட்டமாக இருந்தாலும், பெரியார் இயக்கம், அம்பேத்கார் இயக்கம், சி‌பி‌ஐ, சி‌பி‌எம் எந்தக் கூட்டமாக இருந்தாலும் அங்கே போய் கடை போடுவது. அங்கே பல பிரச்சனைகள் வரும். இது ம.க.இ.க சார்பு இயக்கம் என்று அடையாளம் கண்டுகொண்டு “எங்களை விமர்சிக்கும் நீ இங்கே கடை போடக் கூடாது” என்பார்கள். இல்லை, இது பொதுவான கடை என்றால் நம்ப மாட்டார்கள்.

ஒன்றிரண்டு தோழர்கள் இது போன்ற இடங்களில் அமர்ந்து கொண்டு அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லி எதிர்கொண்டு போராடி இதை நிலை நாட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த நிறுவனத்திற்கு கொஞ்சம் முன்னாலேயே இப்படி ஒரு வெளியீட்டு விழாவை நடத்தும் யோசனை சொல்லத் தவறியிருக்கிறோம் என்று நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது. எனினும் தாமதித்தேனும் மிகச் சிறப்பாக நடக்கின்ற இந்த நிகழ்ச்சி மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஓவியர் மருதுவின் ஓவியத்தை இரசிப்பதற்கு வரலாறு படித்திருக்க வேண்டும்!

ஒரு தலைப்பு கொடுத்திருக்கிறார்கள். “படித்து முடித்த பின்” என்று. ஓவியர் மருது அவர்கள் பேசும் போது விடுதலைப் போரின் வீர மரபுக்காக புதிய கலாச்சாரம் இதழிலே வெளி வந்துள்ள ஓவியங்கள், அவரதைப் பற்றிச் சிந்தித்த முறை இதெல்லாம் பற்றி விளக்கிச் சொன்னார். அதிலிருந்து இரண்டு ஓவியங்களை எடுத்துக் கொள்வோம். பெரிய மருது அமர்ந்திருக்கிறார் பக்கத்தில் சின்ன மருது நிற்கிறார். நீங்கள் பார்த்திருக்கக் கூடும். சின்ன மருது நிற்கின்ற ஒரு தோற்றம் அண்ணனுக்குப் பணிந்து கையைக் கட்டிக்கொண்டு சற்று தலை குனிந்து கண்களை மேலே ஏற்றி இது சின்ன மருதுவினுடைய பாத்திரம். சின்ன மருதுவின் ஓவியத்தை குதிரை மேல் வரும் போலப் போடலாம். பொதுவாக வீரனென்றால் எப்படிப் போட வேண்டுமென்ற இலக்கணங்கள், சினிமாத்தனமான இலக்கணங்கள் இருக்கின்றன. அந்த இலக்கணப்படி போடலாம்.

ஆனால் அந்தக் கோடுகளின், ஓவியத்தின் வலிமை என்னவென்றால் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அந்த வீரனின் வரலாற்றை, அந்த தனி மனிதனின் ஆளுமையை, அந்தக் கோடுகள் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றன. அதற்கு சின்ன மருதுவின் எழுத்தைப் படித்திருக்க வேண்டும். அந்தக் கோடுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் சின்ன மருதுவின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும். இவன் இப்படித்தான் இருந்திருக்க முடியும். இதுதான் இந்தப் பாத்திரத்தின் சாரம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக கேலிச்சித்திரக்காரர்கள் அரசியல்வாதிகளை கேலிச் சித்திரம் போடும் போது அவர்கள் வழுக்கைத் தலை என்றால் தலையைப் பெரிதாகப் போடுவார்கள். மன்மோகன் சிங் என்றால் முண்டாசைப் பெரிதாகப் போடுவார்கள். மூக்கு நீளம் என்றால் மூக்கைப் பெரிதாகப் போடுவார்கள். அந்த மனிதருடைய உடற்கூறில் எது துருத்திக் கொண்டு இருக்கிறதோ, முக்கியமானதோ அதற்கு மிகை முக்கியத்துவம் கொடுத்து வரைவதென்று கேலிச் சித்திரக்காரர்கள் ஒரு இலக்கணம் சொல்லுவார்கள். அது வேறு. அது பொருளற்றது. இது அந்த மனிதனுடைய வரலாற்றுப் பாத்திரத்தை, வாழ்க்கையை அவன் வாழ்ந்த காலத்தை அந்தக் களத்தில் வைத்து விளக்குவது.

அதே போல கட்டபொம்மனின் ஓவியம். கட்டபொம்மன் என்றால் சினிமாக் கட்டபொம்மன் தெரியும். நான் கூட அதை ஒரு மிகை நடிப்பென்று நினைத்ததுண்டு. சிவாஜியின் நடிப்பில் மிகை நடிப்பு உண்டுதான். ஆனால் தூக்குமேடைக்கு செல்லும் காட்சியில் – பானர்மேன் எழுதிய அந்தக் குறிப்புகளிலேயே இது உண்டு, அந்தப் படத்திலேயும் தூக்கு மேடை வசனமாகவும் வரும் – “நான் அங்கேயே போரிட்டு மடிந்திருக்க வேண்டும். இவ்வாறு ஒளிந்ததற்கு எனக்கு இந்த நிலை தேவைதான்” என்று கட்டபொம்மன் சொல்வதாக. மருது வரைந்திருக்கும் ஓவியத்தில் அது இருக்கிறது.

அதாவது ஒரு இகழ்ச்சியும் வெறுப்பும் தான் மீதே உள்ள கடுங்கோபமும் கொண்ட நிலையிலே நிற்கின்ற கட்டபொம்மன். ஒரு அவமானம் அது. போரிட்டு மடியாமல் தூக்கிலே சாக வேண்டி இருக்கிறதே என்ற இழிவு. தலைக்குனிவு. அந்தத் தலைக்குனிவிற்கு ஆட்படுகின்ற ஒரு சுயமரியாதை உள்ள மனிதன் அந்த இடத்திலே எப்படி நடந்து கொள்வானோ அப்படி இருக்கிறது அந்த ஓவியம் – அவன் தூக்குக் கயிற்றை முத்தமிடுகிறேன், சிரிக்கிறேன் என்றெல்லாம் இருக்க முடியாது.

இந்த ஓவியத்திற்கு என்ன முக்கியத்துவம் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? நன்றாக வரைந்திருக்கிறார் என்று எதை வைத்து சொல்வது? பெரியாரை நன்றாக வரைந்திருக்கிறார் அல்லது பகத்சிங்கை நன்றாக வரைந்திருக்கிறார் என்று சொல்கிறோம். நன்றாக வரைதல் என்றால் என்ன? ஓவியம் சிறப்பாக இருக்கிறது, பொருத்தமாக இருக்கிறது, அழகியல் நேர்த்தியுடன் இருக்கிறது என்று சொல்ல வேண்டுமென்றால் எதைப்பற்றி நீங்கள் கருத்து சொல்கிறீர்களோ, அந்த மனிதனைப் பற்றி, அந்த வரலாற்றைப் பற்றி, உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் படித்திருக்க வேண்டும். அதைப் பற்றி புரிதல் இருக்க வேண்டும்.

படிப்பது என்றால் சும்மா படிப்பது என்று அல்ல. ஒரு ரசனை வேண்டுமென்றால் அதற்கு பின்புலத்திலே அறிவு வேண்டும். மார்க்ஸ் ஒரு இடத்தில் அழகாக எழுதுவார். “The most profound music is merely a sound to unmusical ears.”-   “மிகச் சிறந்த இசையாகவே இருந்தாலும் இசைக்காதுகள் இல்லையென்றால் அவர்களுக்கு அது வெறும் ஒலி தான்”. இசையை ரசிக்கக்கூடிய காதாக இல்லையென்றால் அது வெறும் சத்தம்தான். இசையை எப்படி ரசிப்பது? அதை ஒரு பயிற்சியின் மூலம் தான், உழைப்பின் மூலம் தான், படிப்பதன் மூலம் தான் பெற முடியும். படித்து முடித்த பின் என்ற தலைப்பை விட இன்றையச் சூழலை வைத்துப் பார்க்கும் போது, “பார்த்து முடித்தப் பின்” என்று தலைப்பு வைத்திருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.

நடுத்தர வர்க்கத்தின் காரியவாத படிப்பும், காலியாகும் ஆளுமையும்!

ஏனென்றால் “படித்து முடித்தப் பின்” என்றால் – சில நாட்களில் புத்தகக் கண்காட்சி நடக்கப் போகிறது அந்தக் கடைகளைப் போய் பாருங்கள். எங்கே கூட்டம் அலை மோதுகிறதென்று. நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் பிள்ளைகளை அழைத்து வருகிறார்கள். அந்தப் பிள்ளையை ஆய கலைகள் அறுபத்து நான்கிலேயும் அதற்குள்ளே தயார் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்போது ஆய கலைகள் புதிதாக வேறு அறுபத்து நான்கு உள்ளன. பழையவை அல்ல. கம்ப்யூட்டர், இங்கிலீஷ், ஃபிரெஞ்சு மொழி என்று பல கற்றுக் கொள்ளவேண்டும் இதுக்கான ஒலித்தகடுகள், வீடியோக்கள் இதையெல்லாம் வாங்கி எதற்கு தயார் செய்கிறார்கள்?

பிள்ளையை விளையாட விடாமல் “படி படி” என்று கொல்கிறார்கள். இதையெல்லாம் பல நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் பார்க்கிறோம். நாமும் இங்கே படிக்க வேண்டுமென்று வலியுறுத்திப் பேசிக் கொண்டிருக்கிறோம். பின் என்ன பிரச்சனை? எதற்குப் படிக்கச் சொல்கிறார்கள் என்றால் படித்து முடித்த பின் வேலை. படித்து முடிக்கவே வேண்டாம். காம்பஸ் இன்டர்வியூவில் வேலை. முன்னாலேயே வேலை கிடைக்க வேண்டும். வேலைக்குப் போவதற்காக, நல்ல வேலைக்குப் போவதற்காக,  அமெரிக்கா போவதற்காக, பொருளீட்டுவதை உத்திரவாதம் செய்து கொள்வதற்காக, ஒரு வாழ்க்கை தகுதியைப் பேணிக் கொள்வதற்காகப் படி படி என்று சொல்கிறார்கள்.

படிப்பு என்பதைப் பற்றிய பார்வை பெற்றோர்களிடம் இப்படி இருக்கிறது. இது படிப்பு அல்ல. இதை நான் நிராகரிப்பதற்காகச் சொல்லவில்லை. இப்போது இந்தக் காய்ச்சல் என்பது பத்தாம் வகுப்பிலிருந்தே தொடங்குகிறது. இது முன்னர் கிடையாது. பிள்ளைக்குப் பத்தாவது பரீட்சை என்றால் பெற்றோர் எங்கும் போவதில்லை. தாயும் சரி தந்தையும் சரி கூடவே இருந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஏனென்றால் போட்டி மிகுந்த உலகம். இதில் மதிப்பெண் வாங்கி வந்தால் தான் உண்டு. அரசுக் கல்லூரிகளில் ஒரு சீட்  கிடைக்க இவ்வளவு மார்க் வாங்க வேண்டும். இல்லையென்றால் சுயநிதிக் கல்லூரிகளுக்குச் சென்று பணம் கட்ட முடியாது. அரசுக் கல்லூரிகளில் வாங்க 98 மதிப்பெண் வேண்டுமென்றால் 97.5 வாங்கினாலும் போயிற்று, சீட் கிடைக்காது. அப்படி விரல் நுனியில் பையனை நெருக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

மரு.ருத்ரன் சொல்லுவார் இதனாலேயே பிள்ளைகள் மனநோய்களுக்கு, மன அழுத்தங்களுக்கு, பதட்டங்களுக்கு சிறிய வயதிலேயே ஆட்படுகிறார்கள் என்று. அப்படித் தள்ளுகிறார்கள் பெற்றோர்கள். ஏன்? பிள்ளைகள் நலத்தின் பொருட்டுத்தான் செய்கிறார்கள். பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டும் என்று தான் செய்கிறார்கள். அப்படி படித்து முடித்து செய்கின்ற பணி என்னவென்றால் ஒரு முதலாளியினுடைய தொழிற்சாலை இயந்திரத்தின் போல்ட் நட்டாகவோ, அல்லது ஒரு வர்த்தக இயந்திரத்தின் உப உறுப்பாகவோ அல்லது ஒரு விளம்பர இயந்திரத்தின் பகுதியாகவோ வேலை செய்யப் படிக்கிறார்கள். அங்கே ஆக்கபூர்வமானது எதுவும் இல்லை. அவன் சொல்வதைச் செய்வதற்கு முன்னாலேயே தயார் செய்து கொண்டு போகிறோம்.

இயந்திரத்தை முதலாளி கைக்காசு போட்டு வாங்குகிறான். ஆனால் இயந்திரத்தின் உப உறுப்புகளாகச் செல்லக் கூடியவர்கள் அது ஐ‌டி துறை ஊழியர்களாக இருக்கட்டும் வேறு யாருமாக இருக்கட்டும் எல்லாருமே தங்கள் சொந்தச் செலவில் தங்களைத் தயாரித்துக் கொண்டு போகிறார்கள். ஒரு மூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கிற்கு செல்வாக்கில்லை. எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் படிக்க வேண்டும். அல்லது இன்ஜினியரிங் படிப்பு வேண்டாம் மல்டிமீடியா படித்தால் அதிக சம்பளம் வாங்கலாம். இன்ஸ்டிட்யூட்டில் ஒரு வருடம் படித்தால் நல்ல சம்பளம்.

இந்தச் சந்தையிலே மலிவு விலையிலே இந்த உப உறுப்புகளை வாங்குவதற்காக இதை மட்டும் படித்தால் போதும் என்ற மனநிலையை முதலாளித்துவம் பயிற்றுவிக்கிறது. அந்த முதலாளித்துவத்தின் சாட்டைக் குச்சிக்கு ஆடும் விலங்குகளைப் போலப் புத்தகக் கண்காட்சியில் கூட்டம் சேர்கிறது. இதை விட்டால் பக்தி நூல்கள், அதற்குப் பின்னர் நிறைய குருமார்கள் இருக்கவே இருக்கிறார்கள். வாழ்க்கையில் பதட்டத்தைத் தணிக்க என்று அவர்களுடைய நூல்கள். முதலில் நுழைந்தவுடன் பதட்டத்தை எவ்வாறு உருவாக்கிக் கொள்வது பின்னர் கொஞ்சம் தள்ளிப் போய் பதட்டத்தை எப்படித் தணிப்பது இப்படி நூல்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்து விடுகிறார்கள். இப்படித்தான் இன்றைய கல்வி என்பது இருக்கிறது. இந்தக் கல்வி மூலம் ஓவியர் மருதுவின் ஓவியத்தை – 5000, 10000, 20000க்குக் கூடப் புத்தகங்கள் வாங்கிப் படித்தாலும் – ரசிக்க முடியுமா? சாத்தியமில்லை. அவர்களுக்கு இது தெரியாது.

நாட்டுப்பற்றும், துரோகமும் வரலாற்றறிவு இன்றி புரியாது!

மருது, கட்டபொம்மன் போன்றவர்கள் இந்த மண்ணிலே வாழ்ந்தார்கள் என்பது நம்முடைய பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கும் கல்லூரியிலே படித்து வந்திருக்கிற இளைஞர்களுக்கும் தெரியாது. யாரும் படித்ததில்லை. சொல்லப் போனால் புதிய கலாச்சாரம் இந்த சிறப்பிதழைக் கொண்டு வருவதற்கு முன்னால் எனக்கும் கூட இவ்வளவு விவரங்கள் தெரியாது. இந்த மண்ணினுடைய பெருமை மிக்க வரலாறு என்பது, இந்த மண்ணினுடைய மிகச் சிறந்த மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை – தயவு செய்து இந்த நூலில் நீங்கள் திப்பு சுல்தானுடைய வரலாற்றையோ, சின்ன மருதுவினுடைய பிரகடனத்தையோ, ஊமைத்துரையின் போராட்டத்தையோ படித்துப் பார்த்தால் கண்ணீர் வரும். 200 ஆண்டுகளுக்கு முன்னாள் இப்படிப் பட்ட மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்களா என்று எண்ணிப் பார்க்க முடியாது.

ஆனால் இது தெரியாமல் நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக்கொண்டு ஒரு தக்கை மனிதர்கள்  கூட்டம் உருவாக்கப்படுகிறது. ‌இந்தத் தக்கை மனிதர்களுக்கு இதை எப்படி ரசிக்க முடியும்? சமீபத்தில் ஒரு தோழர் சொன்னார். அதுவும் இப்போது புதிய தகவல். இந்தப் பத்திரிக்கை கொண்டு வரும் போது எனக்குத் தெரியாது. இந்தியாவில் மன்னர் மானியம் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் ஒழிக்கப் பட்டது. ஆனால் ஆற்காட்டு நவாபிற்கு மட்டும் மானியம் ஒழிக்கப் படவில்லையாம். அவர்கள் வெப் சைட்டில் போட்டிருக்கிறார்கள். ஆற்காடு நவாபிற்கு மட்டும் மன்னர் மானியத்தில் இருந்து விலக்கு தரப்பட்டிருக்கிறது. ராயப்பேட்டையில் ஒரு பெரிய அரண்மனை இருக்கிறது. அமீர் மஹால் என்று பெயர். அதில் 600 பணியாளர்களுக்கு அரசாங்கம் பணம் கொடுக்கிறது. மத்திய பராமரிப்புத் துறை CPWD அதைப் பராமரிக்கிறது. மாநில அரசிலுள்ள அமைச்சர்களுக்குள்ள எல்லா உரிமைகளும் அந்தஸ்தும் ஆற்காடு இளவரசருக்கு உண்டு சுழல் விளக்கு உட்பட. பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொள்ளும் அரசியல் கட்சிகள் அவரை அழைக்க வேண்டும். ப்ரோடோகாலில் அதற்கிடம் உண்டு.

யார் இந்த ஆற்காட்டு நவாப்? திப்பு சுல்தான் முதல் மருது, கட்டபொம்மன் என்று தென்னிந்தியாவின் விடுதலை வீரர்கள் அத்தனை பேரையும் நசுக்குவதற்கு துணை நின்ற துரோகி. துரோகத்தின் வரலாறு தான் ஆற்காட்டு நவாபின் வரலாறு. அந்தத் துரோகத்திற்கு வெள்ளையர் கொடுத்த சிறப்புப் பரிசு அது. 1870-இல் வட இந்தியச் சுதந்திரப் போராட்டம் முடிந்த பிறகு வெள்ளைக்காரன் ஆற்காட்டு “நவாப்” என்றெல்லாம் டெல்லி பாதுஷா கொடுக்கும் பட்டத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்று அதை எடுத்துவிட்டு மேற்கத்திய மரபில் Prince Of Arcot ஆற்காட்டு இளவரசர் என்று பேரை மாற்றச் செய்தான். அதே போல விஜயரகுநாதத் தொண்டைமான் என்று பலர் இருக்கிறார்கள்.

ஆனால் இந்த ஒரு விவரம் நம் கண் முன்னாலேயே இருக்கிறது. இப்போது அந்த ஆற்காடு இளவரசனுடைய வாரிசை ஏதும் செய்வதல்ல நமது நோக்கம். ஆனால் ஒருபக்கம் இப்படி ஒரு இளவரசர் அந்தஸ்து கொடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் மருதுவிற்கு விழா எடுக்கிறோம் என்கிறார்கள். அந்தப் பக்கம் கட்டபொம்மனுக்கு விழா எடுக்கிறோம் என்கிறார்கள். ஒருவேளை அந்த விழாக்களிலும் முதல் வரிசையில் ஆற்காட்டு நவாப் உட்கார்ந்திருப்பார். இது என்ன கேலிக் கூத்து? இந்த கேலிக்கூத்துப் பற்றி நமக்குத் தெரியாது. இப்படி இந்த மண்ணினுடைய வரலாறு கூடத் தெரியாமல், படிக்க விரும்பாமல் சரியாகச் சொன்னால் படிக்க முடியாமல் இருக்கக் கூடிய ஒரு தலைமுறை வளர்ந்து கொண்டு இருக்கிறது.

தொலைக்காட்சி உருவாக்கும் ஊனமுற்ற டிஜிட்டல் மூளை!

அதனால் தான் முன்பொருமுறை “படித்து முடித்தப் பின்” என்றில்லாமல் “பார்த்து முடித்தப் பின்” என்று தலைப்பை வைத்திருக்கலாம் என்று சொன்னேன். ஏனெனில் தொலைக்காட்சியின் ஆதிக்கம் அந்த அளவுக்கு இருக்கிறது. இது கீழைக்காற்றுக்கும் ம.க.இ.க. என்ற அமைப்பிற்கும் மட்டும் பிரச்சனை அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. படிக்க முடியாது என்ற சூழலை நோக்கி இளைய தலைமுறை உருவாக்கப்படுகிறது. இதில் நகர்ப்புறம், நாட்டுப்புறம் என்ற வித்தியாசமெல்லாம் இல்லை. கலைஞர் டிவி கிராமத்திலும்தான் தெரிகிறது.

அமர்ந்து படிக்க முடியாது என்றால் வேறு என்ன செய்ய முடியும்? தொலைக்காட்சி பார்க்கலாம். அதில் ஒரு நொடிக்கொரு முறை மாறுகின்ற ஃபிரேம், காட்சிகள் மாறி மாறிப் போகின்றன. அது மாறுவது போதாது என்று ரிமோட்டில் வேறு மாற்றி மாற்றிப் பார்க்கின்றனர். இன்னும் வேகமாகப் பார்க்க வேண்டுமாம். பல சேனல்கள் மாற்றுகிறார்கள். இப்படித்தான் பாட்டுக் கேட்கிறார்கள், நியூஸ் பார்க்கிறார்கள், வேறு நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள். தொலைக்காட்சியில் என்ன வருகிறது என்பதற்கெல்லாம் நான் இப்போது போகவில்லை. இது பார்க்கும் முறை மட்டுமே.

மனிதர்கள் என்றாலும் இது ஒரு பௌதீக உடல். நடப்பதென்றால் அதில ஒரு தாள லயம் (ரிதம்) இருக்கும். இப்படித்தான் நடக்க முடியும்; ஓடுவதென்றால் இப்படித்தான் இருக்க முடியும். அது போல சிந்திப்பதென்றால் அதற்கென்று ஒரு வழிமுறை (பிராசஸ்) இருக்கிறது. இப்படித் தொலைக்காட்சி பார்த்து என்ன சிந்திக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. யோசித்துப் பாருங்கள், அப்போது மூளைக்குள் என்ன நடக்கிறது என்று.

நீங்கள் சன் டிவியிலிருந்து CNN IBN, NDTV, TIMES NOW  என்று எந்த டிவியானாலும் பாருங்கள். சீரியசாக நியூஸ் பார்ப்பவர்களுக்கே சொல்கிறேன். அவர்கள் ஒரு செய்தியைச் சொல்லும் முறையைப் பாருங்கள். காட்சிகள் எப்படி மாறுகின்றன? TIMES NOWவில் ஒரு செய்தி காண்பிக்கிறார்கள் இதோ ஸ்பெக்ட்ரம் ராஜா என்று ஒரு வட்டம் போடுகிறார்கள், ஜும் செய்து பெரிதாக்கிக் காட்டுகிறார்கள் பின்னால் ஒரு இசை வருகிறது- பயங்கரமான திகில் இசை, பின்னர் அதை விவரிக்கிறார்கள்.. இப்படிப் போகிறது. ஒவ்வொரு சானலிலும் வெவ்வேறு விதமாகப் பார்த்தாலும் இப்படித்தான் காட்டுகிறார்கள்.

இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் சுமார் ஒரு மாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு மாதமாக எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஸ்பெக்ட்ரம் செய்திகளைப் பார்க்கின்றவர் உங்களிலேயே பல பேர் இருக்கலாம். அதிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்? ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி தொலைக்காட்சி பார்த்தவர்களுக்கு என்ன தெரியும்? 176000 கோடி ரூபாய் ஊழல். யார் செய்தது? ராஜா. அது கருணாநிதி குடும்பத்திற்குப் போயிருக்கும். சரி அப்புறம் அதற்கு மேல்? அப்பறம் ஏதோ டாடாவோட ஃபோன்ல பேசியிருக்கார்கள் என்று தெரியும். இது தான் CNN IBN  பார்க்கிறவனுக்கும் தெரியும், TIMES NOW பார்க்கிறவனுக்கும் தெரியும். இது தான் கிராமத்தில் தினத்தந்தி படிப்பவனுக்கும் தெரியும். உனக்கென்ன வேறு பிரத்யேக அறிவு இருக்கிறது இப்போது?

வேகமாக மாறக்கூடிய ஃபிரேமில் சொல்லக் கூடிய ஒரு வரி, அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தேர்ந்தெடுத்து சொல்லக்கூடிய ஒரு வரி ராஜா ராஜா ராஜா. ஸ்பெக்ட்ரம் டாடா என்று சொல்லவேண்டும். ஏன் ராஜா என்கிறார்கள்? ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கியமாக ஆதாயம் அடைந்தது யார்?  ஆதாயம் அடைந்தது டாடா, அனில் அம்பானி, மிட்டல் – அவர்களல்லவா குற்றவாளிகள்? இதைப் பத்திரிக்கை படித்தாலே தெரிந்து கொள்வது கடினம். தொலைக்காட்சியில் இப்படித் திரும்பத் திரும்பக் காட்டி, அந்தக் காலத்தில் நம் பாட்டன்மார்கள் எம்‌ஜி‌ஆர் என்றால் ஹீரோ நம்பியார் என்றால் வில்லன் என்று நினைத்திருந்தார்களே அந்த அறிவு தான் இருக்கிறது.

படிக்காதவனுக்கும் ரேகை உருட்டுபவனுக்கு இருக்கும் அறிவுதான் இருக்கிறது. தொலைக்காட்சியில் மாறுகின்ற ஃபிரேமை ஒட்டிச் சொல்லப்படுகின்ற காட்சிகளில் உள்ள ஒன்றிரண்டு வரிகள், அதற்குப்பின் ஒரு தொலைக்காட்சி நிருபர் அந்தக் களத்திலே நின்று கொண்டு மூச்சு விடாமல் பேசுவார். ஒரு வார்த்தை புரியாது. லொட லொடவென்று தகர டப்பாவில் கோலிக்குண்டு உருட்டுவது போல பேசுகிறார்கள். அது எதற்கு என்று தெரியவில்லை. ஏதோ பரபரப்பா சொல்கிறார்களாம். அதில் ஒரு பரபரப்புச் செய்தியும் இருக்காது. இதைத் தான் எல்லாரும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதில் விஷயமில்லை என்பது ஒரு புறம். ஆனால் இதன் காரணமாக அதன் மூளையின் ஆற்றல் அழிகிறது.

உடலுழைப்பு மட்டுமல்ல மூளை உழைப்பும் குறைவதால் வரும் விளைவுகள்!

நான் மரு.ருத்ரனிடம் இருந்து ஒரு புத்தகம் வாங்கிப் படித்தேன். ID என்ற புத்தகம் சூசன் கிரீன்ஃபீல்ட் என்ற நியூரோ சைக்காலஜிஸ்ட் எழுதியது. அந்த நூல் இதைத்தான் முக்கியமாகக் கையாள்கிறது. 21-ம் நூற்றாண்டு, அதற்குப் பிறகு இளைஞர்கள், படிக்கும் முறை எல்லாம் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பேசுகிறது. அது ஒரு மிகப் பெரிய மூளை ஊனத்திற்கு இந்தச் சமூகம் ஆட்படப் போகிறது என்று சொல்கிறது. இதை எப்படிப் புரியவைப்பது?

நாம் நம் பெற்றோர் தலைமுறையை விடக் குறைவாக நடக்கிறோம். அவர்களை விடக் குறைவாக உழைக்கிறோம். நம்முடைய வாழ்க்கை முறை மாறி விட்டது. சுற்றுச்சூழல் மாறிவிட்டது. இதன் காரணமாக பல பிரச்சனைகள் உடலில் ஏற்படுகின்றன. டாக்டர்கள் வாக்கிங் போக உடற்பயிற்சி செய்யச் சொல்கிறார்கள். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என்று பல பிரச்சனைகள். இதற்கெல்லாம் 40-50 வகைப்பட்ட மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொன்றையும் குறிப்பாக ஆராய்ந்து சொல்கிறார்கள். இப்படி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் கருத்தியல் ரீதியாக ஒரு தாக்குதல் மூளைக்கு வருகிறதே இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாதென்றா நினைக்கிறீர்கள்?

நான் சிந்தனையில் ஏற்படும் மாற்றத்தைச் சொல்லவில்லை. மூளை என்ற பருப்பொருளே காலப் போக்கில் செயலிழந்து போகிறது. உதாரணமாக, இந்தக் கையைப் பயன்படுத்தி நான் கடுமையாக உழைக்கும் பட்சத்தில் இந்தக் கைகள் வலிமையாக இருக்கும். நான் குமாஸ்தாவாக எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன், உழைப்பில் ஈடுபடவில்லை என்றால் இந்தக் கை இப்படித்தான் இருக்கும். உடல் அங்கமான மூளையைப் பயன்படுத்தி இந்தத் தொலைக்காட்சி ஃபிரேம் மாறுவதை பார்க்கும் போது என்ன செய்கிறார்கள்? இளைஞர்கள் சிந்திப்பதில்லை என்பதல்ல அவர்கள் சிந்திக்கும் திறனையே இழந்து வருகிறார்கள். அவர்களால் சிந்திக்க முடியாது.

அவர்கள் முற்போக்காக புரட்சி செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை; தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி சற்று நேரம் அமர்ந்து விலகிச் செல்லாமல் ஒரு பொருள் குறித்து ஆழமாக உரையாட முடியுமா? இன்றைய இளைஞர்களிடம் முயற்சி செய்து பாருங்கள். ஒரு குறிப்பிட்டப் பொருளைக் குறித்து எழுதிக் கொடுக்க முடியுமா? கேட்டுப் பாருங்கள். இல்லை, நம்மாலேயே விருப்பமான ஒரு விஷயம் குறித்து முடிகிறதா என்று யோசித்துப் பாருங்கள். முடியவில்லை என்றால், ஏன் முடியவில்லை? படித்திருக்கிறோம், எழுத்தறிவு இருக்கிறது, ஏன் முடியவில்லை?

அதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. ஒன்று சரக்கில்லை. ஸ்பெக்ட்ரம் பற்றி இரண்டு பக்கம் எழுதிக் கொடுக்கச் சொன்னால் எத்தனை பேர் எழுதித் தர முடியும்? இரண்டாவது அப்படி முனைந்து சிந்திக்கும் ஆற்றலை இழந்து விட்டோம். கிருபானந்த வாரியார் வந்து உட்கார்ந்தால் அப்படியே சிஸ்டத்திலிருந்து வருவது போல வடமொழி சுலோகங்கள், இலக்கியம் எல்லாம் வந்து கொண்டே இருக்கும். அவ்வளவும் மனப்பாடம். அப்படி ஒரு நினைவாற்றல். அது பழைய கல்வி முறையின் அங்கமாக இருந்தது.

அச்சுக் கலை வந்த பிறகு அப்படி மனப்பாடம் செய்து கொள்ள வேண்டிய தேவை போய்விட்டது. இப்போது கணினி வந்து விட்டது. வாய்ப்பாடு தேவை இல்லை கால்குலேட்டர் இருக்கிறது. தேவையான விஷயங்களை கணினி மூலம் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதை நினைவில் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாற்று நிலை என்ன செய்கிறது? அந்த ஆற்றல்களை நம்மிடமிருந்து மெல்ல மெல்ல வெளியே கொண்டு வருகிறது. முன்பு கிராமத்தில் சாமான் வாங்கினால் “நாலு பத்து நாப்பது என்று சொல்ல வேண்டியது தானே அதற்கெதற்கு கால்குலேட்டர்” என்று கிண்டல் செய்வார்கள். “இது கூடத் தெரியவில்லையா” என்று கேலி செய்வார்கள். இந்த ஆற்றல்களை இழப்பது போல நாம் சிந்திக்கும் திறனையும் இழக்கிறோம்.

இதைச்‌ சொல்லும்போது நவீன மாற்றங்களை எதிர்த்து நான் பேசுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நவீன மாற்றங்கள் வாழ்க்கையைக் கெடுத்து விட்டது என்று பழமைவாதியைப் போலப் பேசுகிறேன் என்று இருந்து விடக்கூடாது. அப்படி அல்ல. ஆனால், இந்த நவீன மாற்றங்கள் கேடான முறையில் மட்டும் திட்டமிட்டு நம் மீது ஒரு ஆயுதம் போலப் பிரயோகிக்கப் படுகின்றன.

காட்சி பார்த்து கருத்து வராது, குழந்தைகளான பெரியவர்கள்!

இப்படி வளர்க்கப்படுபவர்களால் கருத்தியல் (concept) ரீதியாகச் சிந்திக்க முடியாது. 2-3 வயதுக் குழந்தைகளால் எப்படி கருத்தியல் ரீதியில் சிந்தித்துப் பேச முடியாதோ அது போல் ஆகிறார்கள். குழந்தைகளால் “எனக்கு கஷ்டமாக இருக்கிறது” என்று சொல்ல முடியாது. அவர்களால் படிமங்களால் தான் சொல்ல முடியும். சுடும் என்றோ, வலிக்கிறது என்றோ சொல்லத் தெரியாத குழந்தை காலப்போக்கில் கருத்தியல் ரீதியாகக் கற்றுக்கொள்கிறது. அதற்கு முன் அந்த அனுபவத்தைத் தான் அந்தக் குழந்தை பேசுகிறது. ஏனென்றால் அதன் அறிவு காட்சிப் படிமங்களில் இருக்கிறது, அனுபவத்தில் இருக்கிறது. கருத்தியல் ரீதியான ஆற்றலே அந்தக் குழந்தையிடம் இல்லை. பின்தான் கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக் கொள்கிறது. அந்தக் குழந்தையைப் போல இந்தத் தொலைக்காட்சிப் படிமங்களைப் பார்த்துப் பார்த்து கருத்தியல் ரீதியாகச் சிந்திக்கும் ஆற்றல் போய்க்கொண்டு இருக்கிறது.

ஜனநாயகம் என்றால் என்ன? கௌரவம் என்றால் என்ன? நீதி என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கு நுனிநாக்கு ஆங்கிலம் பேசுபவர்களால் பதில் சொல்ல முடிவதில்லை. அது எதுவும் தொலைக்காட்சியில் பேசப் படுவதில்லை. எதுவும் நின்று விவாதிக்கப் படுவதில்லை. ஏன் இவ்வாறு என்பது முக்கியமான கேள்வி. இவ்வாறு சிந்திக்கும் திறனற்ற, சிந்திக்கும் தேவை அற்ற உழைக்கும் மிருகங்களை உருவாக்குவதற்குத் தான் உலக முதலாளித்துவம் செயல்படுகிறது.

உழைக்கும் மிருகங்கள் என்று சொல்லும் போது உடல் உழைப்பு மட்டுமல்ல மூளை உழைப்பையும் சேர்த்தே சொல்லுகிறேன். மூளை உழைப்பிலும் அவனுக்குத் தேவையானப் பணியை செய்ய முடிந்த இயந்திரத்தின் உப உறுப்புகள் மட்டும்தான் தேவை. அவன் உட்கார்ந்து கருத்தியல் ரீதியாகச் சிந்திக்கத் துவங்கினால் அது பிரச்சினை.

பல புதிய விஷயங்கள் மொழி வழக்கில் வந்திருக்கின்றன. நடிகைகள், தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் இவர்கள் பேசுவதைப் பார்த்தீர்களேயானால் சில ஆங்கில வார்த்தைகள் புலப்படும். நாம் சந்தோஷமாக இருந்தோம், ஜாலியாக இருந்தோம் என்று சொல்வதை இவர்கள் We had fun என்று சொல்லுவார்கள். இது மேற்கத்திய மொழி.  இந்த மொழியில் என்ன பொருள் வருகிறதென்றால் அந்தக் கண நேர மகிழ்ச்சி என்பதுதான்.

மாடு போல ஒரு வாரம் முழுக்க வேலை செய்துவிட்டு சாயங்காலம் தண்ணி அடித்து விட்டு டான்ஸ் ஆடும் மகிழ்ச்சி அல்லது வேறு ஒரு நிகழ்ச்சி போன்றது. மகிழ்ச்சி என்பதன் முழுமையான பொருள்- அது ஒவ்வொருவருக்கும் வேறாகவே இருக்கட்டும், சுற்றுலா செல்லுவது மகிழ்ச்சியா? கோவிலுக்குப் போவது மகிழ்ச்சியா? அப்படியே இருக்கட்டும். ஆனால் இவர்கள் மகிழ்ச்சி ஒரு முழுமையான பொருளில் இருக்கிறதா?

உண்மையான மகிழ்ச்சியை பாப்கார்ன் தலைமுறை அறியாது!

உண்மையில் மகிழ்ச்சி என்பதைப் பார்க்காத ஒரு பாப்கார்ன் தலைமுறை உருவாக்கப் படுகிறது. மகிழ்ச்சியின் முழுமையைப் பற்றி ஒருவன் சிந்திக்கத் தொடங்கும் போதுதான் ஒரு நிலப்பிரபுத்துவ சிந்தனையிலிருப்பவன் கூட கம்யூனிஸ்ட்டாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிற்போக்குவாதியாக வறட்டு கௌரவம் பார்ப்பவனாக இருக்கட்டும். அவன் அந்த விழுமியங்களைப் பற்றி வாழக் கூடியவனாக இருக்கிறான். அப்படி இருக்கக் கூடியவனோடு மோதி, சாதி, வறட்டு கௌரவம் போன்ற விஷயங்களில் போராடி இதற்கு மாற்ற முடியும்.

ஆனால் இந்த பாப்கார்ன் தலைமுறை, விழுமியங்கள் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும் திறன் இல்லாத நொறுக்குத் தீனித் தலைமுறையாக வளர்க்கப் படுகிறது. அதனால் தான் இவர்களால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியவில்லை. சிலர் “புதிய கலாச்சாரம்” பத்திரிகை ரொம்ப சீரியசாக இருக்கிறது, லைட்டாக இல்லை என்று சொல்லுவார்கள். லைட்டாக என்றால் அதைப் பார்த்த உடனேயே புரிந்துவிட வேண்டும். ஒரு புத்தகத்தில் பக்கம் நிறைய எழுத்து இருந்தாலே பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது.

நான் இணையத்தில் ஒரு வலைப்பூ பார்த்தேன் 11 seconds blog என்று பெயர். 11செகண்டில் அதில் இருப்பதைப் படிக்க முடியுமென்றால் எத்தனை வரி இருக்க முடியும்? ட்விட்டர், SMS என்று பரிமாறிக் கொள்ளலாம். இவையெல்லாம் வடிவம் என்று நினைக்கிறோம். இல்லை. இணையத்தில் படிக்கக் கூடியவர்களுக்கோ புத்தகமாகப் படிக்கக் கூடியவர்களுக்கோ அந்த நாலு வரிக்கு மேல் கண் நிற்க மாட்டேன் என்கிறது. அந்த ஆற்றலை இழந்து வருகிறோம். பாரிய விஷயம் இது!

அதே நேரம் 10வதிலிருந்து தொடங்கி இன்ஜினியரிங் வரை உயிரைக் கொடுத்து படிக்கிறார்கள். தொழிலுக்காக, வாழ்க்கைக்காக, வருவாய்க்காக என்று 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் படிக்கிறார்கள். ஆனால் அதற்கப்பாற்பட்ட சமூகம் குறித்த இலக்கியம், அது என்னவாவது இருக்கட்டும்- வைரமுத்து கவிதைகள் கூடப் படிப்பதில்லை. வைரமுத்து 6000 பாட்டு எழுதியிருக்காராம் அதில் 1000த்தைப்  புத்தகங்களாகப் போட்டிருக்கிறாராம். இன்று ஹிந்து பத்திரிக்கையில் ஒரு பெண் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை இப்படித் துவங்குகிறது: போன தலைமுறையைச் சேர்ந்த Tamil speaking youth காதலிப்பதென்றால் வைரமுத்து இல்லாமல் காதலித்து இருக்க முடியாது. எதற்கு Tamil speaking youth என்று எழுதவேண்டும். Tamil youth என்று எழுதினால் போதாதா? தமிழ் பேசும் இளைஞர்கள் என்று ஏன் எழுத வேண்டும்? தமிழ் இளைஞர்கள் என்று எழுதினால் போதாதா? அதற்கு ஹிந்துவிற்கு பிரச்சினை இருக்கக்கூடும்.

பிறகு யோசித்துப் பார்த்தால் சரி என்றே தோன்றுகிறது. தமிழ் இளைஞர்களில் தமிழ் பேசும் இளைஞர்கள் எத்தனை பேர்? வைரமுத்து கவிதையைப் படிப்பவனோ ரசிப்பவனோ எத்தனை பேர்? தமிழ் இளைஞர்களில் தமிழ் பேசும் இளைஞர்கள் குறைவாகிக் கொண்டே வருகிறார்கள். இப்படி சிந்திக்கும் திறனை இழந்தவர்கள் ஆகி வருகின்றோம்.

இடையே புத்தகக் கண்காட்சி முன்னிட்டு நடக்கும் பல புத்தக வெளியீட்டு விழாக்களில் பலர் பேசக் கூடும். தினமணி வைத்தியநாதன் உள்ளிட்டு “நாம் பழையவற்றைப் படிக்க வேண்டும், பாரதியார் படிக்கவேண்டும், கம்பராமாயணம் படிக்க வேண்டும், நம்முடைய இலக்கியச் செல்வங்களைப் படிக்கவேண்டும், மரபைப் படிக்க வேண்டும்” என்றெல்லாம் நிறைய உபதேசங்கள் கொடுக்கப்படும். அது அல்ல நான் சொல்வது. பொதுவாகப் படிப்பது இதற்கு தீர்வு அல்ல. அல்லது இது வெறும் தொழில் நுட்பத்தின் தாக்குதல் அல்ல. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலாளித்துவம் உருவாக்கும் சிந்தனையற்ற விலங்குகளாய் நாம்!

இது முதலாளித்துவத்தின் தாக்குதல். அதைப் புரிந்து கொள்வதற்கு அதனை முறியடிப்பதற்கு அதிலிருந்து விலகி நின்று தற்காத்துக் கொள்வதற்கு ஆற்றல் தருபவற்றைப் படிக்க வேண்டும். படிக்காதவரையிலே இதிலிருந்து விடுபட முடியாது. புரட்சி செய்வதற்காக நான் படிக்கச் சொல்லவில்லை. புரட்சி என்று தனியாக ஒன்றுமில்லை. நாம் அறியாமையினால் இப்படி மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பிள்ளைகள் ஏன் எப்படி மாறுகின்றனர் என்று பெற்றோருக்குத் தெரியவில்லை.

இளைஞர்கள் மனநல மருத்துவம் நாடி வருவது அதிகரித்துக் கொண்டு வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் மன அழுத்தத்திற்கான மருந்துகளை நம்மூரில் சாரிடான், ஆஸ்பிரின் வாங்குவது போல அங்கே விற்பனைக்கு அனுமதித்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு இருக்கிறது அந்தப் பிரச்சனை. ஏன், எதனால் இது? இங்கும் அது அதிகரித்து வருகிறது. 40000-50000ரூ சம்பளம் கொடுக்கக்கூடிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒரு யோகா டீச்சர். எல்லோரும் பிராணாயாமம் செய்கிறார்கள். வேலை நடக்க ஊழியன் உயிரோடிருக்க கம்பெனி செலவில் இது நடத்தப்படுகிறது. கம்பனி செலவில் அவனைப் பேண வேண்டியிருக்கிறது. காலையில் அடித்து ரிப்பேர் செய்துவிட்டு மாலையில் இது. எதற்காக இது நடக்கிறது? இது முதலாளித்துவத்தின் தாக்குதல் என்று புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே ஏதாவது ஒன்றைப் படியுங்கள் என்று பேசுவதற்கு அல்ல இங்கே வந்தது.

நோக்கமற்ற இன்பவாதப் படிப்பினால் பலனில்லை!

அந்தக் காலத்தில் கண்டதை வாங்கிப் படித்துக் கொண்டிருப்பேன். ஒரு சமயம் ஒரு தோழருடன் ஒரு நூல் பற்றி விவாதிக்க வேண்டி இருந்தது. அதைப் படிக்காமல் ஏதோ Sunday அல்லது India Today  வைத்துப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர் நான் இன்ப நாட்டத்திற்காகவே படிப்பதாகக் கூறினார். அப்போது எனக்குப் புரியவில்லை. நாம் சீரியசாகத் தானே படிக்கிறோம். இதிலென்ன pleasure என்று நினைத்தேன். உங்கள் தனிப்பட்ட இன்பத்திற்காக நீங்கள் படிக்கிறீர்கள் என்று அவர் சொன்னார். அது உண்மை. அது ஒரு இலக்கற்ற படிப்பு. அப்படிப் படிப்பதிலேயே ரசனை கொண்ட ஒரு இலக்கியவாதக் கூட்டம் இருக்கிறது.

அவர்கள் தான் இந்தக் கூட்டங்களை எல்லாம் நடத்துவது. சங்கீத சீசனில் ம்யூசிக் அகாடமிக்கு கச்சேரி கேட்க வருகிறார்கள் இல்லையா அது போல ஜெயமோகன் புத்தகம் போட்டால் ஒரு கோஷ்டி வரும். கூட்டம் கூட்டி, அவர் இலக்கியத்தைப் பற்றி விதந்து பேசுவார், அதை ததாரினானாவிற்கு தலையாட்டுவது போல தலையாட்டி ரசிப்பதில் ஒரு சுவை. அப்பறம் படிக்கும் பழக்கமே குறைந்து போய்விட்டது, நம் கலாச்சாரம் என்னவாகும் என்று தெரியவில்லை, புத்தகங்கள் கேரளாவில் நிறைய விற்கிறது, இங்கே விற்க மாட்டேன் என்கிறது, இலக்கியம் அங்கே வளர்கிறது இங்கே வளரவில்லை இந்த மாதிரி கவலைகளைப் பகிர்ந்து கொண்டு கிளம்பிப் போய் விடுவார்கள். இவர்கள் இளைஞர்களாக இருந்தாலும் சிந்தனதையில் கிழடு தட்டிப் போனவர்கள்.

அந்தப் படிப்பு அல்ல நான் சொல்வது. நான் pleasureக்காக ரசிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. இன்பத்தை நுகர்வது என்பது மனிதனுடைய பண்புகளில் ஒன்று. ஆனால் இன்ப நாட்டத்தின் பின் ஓடுவது. அதற்காகப் படிப்பது. அது சொறிந்து விடுவது போல் உள்ளது, இன்பமாக இருக்கிறது என்பதற்காகப் படிப்பது என்பது பொருளற்றது. முக்கியமாக நோக்கமற்றது. நோக்கமில்லாமல் படிக்கின்ற எதுவும் மூளையில் தங்காது.

மூளை எதை வைத்துக் கொள்கிறது? எது நடைமுறைக்குத் தேவையோ அதை வைத்துக் கொள்கிறது. நடைமுறை என்றால் வேலை என்று மட்டும் சொல்லவில்லை. நாளை நீங்கள் பேச வேண்டுமென்று படித்தால், படிப்பதை வைத்துக் கொண்டு நாளை எழுத வேண்டுமென்றால், படிப்பதை வைத்துக் கொண்டு ஒருவருடைய பிரச்சினைக்குத் தீர்வு சொல்லப் போகிறீர்கள் என்றால், நீங்கள் படிப்பது ஒரு தத்துவஞானமோ, இலக்கியமோ, அழகியல் குறித்த கட்டுரையோ, ஓவியமோ, அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் படிப்பதாக இருந்தால் அது மனதில் நிற்கும்.

கற்றுக் கொள்ள வேண்டுமென்று படிப்பது என்ன? சும்மா படிப்பது என்ன? என்பதற்கு ஒரு இடைவெளி இருக்கிறது. சிலர் புதிய கலாச்சாரம் பத்திரிகையோ சில நூல்கள் கட்டுரைகளோ புரிய மாட்டேன் என்கிறது, ரொம்ப தலைக்கு மேலே போகிறது என்கிறார்கள். அது தடுக்க முடியாது. நாம் ஒரு குறிப்பிட்ட உயரம் தான் இருக்கிறோம். உயரம் என்றால், அறிவு வளர்ச்சி, நம்முடைய ஆற்றல் என்பதில். நாம் முதல் வகுப்பு படிக்கும் போது ஐந்தாம் வகுப்புப் பாடம் நம் தலைக்கு மேல் தான் இருக்கும். ஐந்தாம் வகுப்பில் பத்தாம் வகுப்புப் பாடம் நம் தலைக்கு மேல் தான் இருக்கும். அப்போது என்ன செய்ய வேண்டும்? எழுத்தாளரே என் தலை மட்டத்திற்கு எழுதவும் என்று சொல்வதா? அல்லது நம் தலையை எழுத்தை நோக்கி உயர்த்திக் கொள்வதா? நம்முடைய தலையைத்தான் எழுத்து நோக்கி வளர்த்துக் கொள்ள வேண்டும். அதில் எழுத்தாளனின் திமிர், அகங்காரம் அதைப் பற்றி நான் பேசவில்லை.

மார்க்ஸ் நூலையோ லெனின் நூலையோ, அப்படி ஆய்வு பூர்வமாக அறிவியல் பூர்வமாக எழுதுகின்ற நூல்கள் அல்லது ஆழ்ந்து உணர்ந்து எழுதப்படக் கூடிய இலக்கியங்கள் கவிதைகள் இவையெல்லாம் SUN TV, TIMES NOW மாதிரி பார்க்க முடியாது. படிக்க வேண்டும். இன்னொரு முறை படிக்க வேண்டும். பிறகு அதில் தங்கி நின்று சிந்திக்க வேண்டும். புரியவில்லை என்றால் கேட்க வேண்டும். படித்தவர்களோடு விவாதிக்க வேண்டும். புரியாத இடத்தைக் குறித்து வைத்துக் கொண்டு சிந்திக்க வேண்டும். இதையெல்லாம் யார் செய்வார்கள்?

யாருக்குக் கற்றுக் கொள்ளவேண்டுமென்ற ஆர்வம் இருக்கிறதோ, யாருக்கு ஆய்வு நோக்கம் இருக்கிறதோ அவர்கள் தான் இதைச் செய்ய முடியும். படித்த உடனேயே புரியவேண்டும் என்றால் தினத்தந்தி கூடப் புரியாது. படித்த உடன், பார்த்த உடன் – இந்த உரையின் ஆரம்பத்தில் சொன்ன போது- சின்ன மருது என்றால் வீரர் அது மட்டும் தான் எனக்குத் தெரியும் வேறு எதும் தெரியாதென்றால் – என்ன இப்படி கைகட்டி நிற்கிறார் வீரர்? வீரர் என்றால் இப்படி நெஞ்சை நிமிர்த்தி அல்லவா இருக்க வேண்டும் என்று கேட்கலாம். அவ்வளவுதானே தெரியும். கற்றுக் கொள்வது என்றால் அதில் ஒரு துன்பம் இருக்கிறது. Pleasure ஆக இருக்க முடியாது. பயிற்சியாக இருக்க வேண்டும். அந்தத் துன்பத்தை ஏற்பதற்கும் அனுபவிப்பதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். அது எதைக் கற்பதிலும் இருக்கிறது.

ஒரு எழுத்தாளர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் என்றால் ஒரு ஆறு பக்கம் எழுதுவதற்கு அவர் சில நாட்கள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும், இல்லையா? அந்தக் கட்டுரையைப் பற்றி சிந்திப்பதற்க்கும் அதைப் பற்றி ஆராய்வதற்க்கும் அதற்கு ஒரு வடிவம் கொடுத்து எழுதுவதற்கும் சில நாட்கள் ஆகியிருக்கும். ஒரு பக்கத்திற்கு 5நிமிடம் மேனிக்கு 5பக்கங்களுக்கு 25நிமிடம் அதற்குள் அதை அந்த எழுத்தாளன் என்ன புரிதலுடன் என்ன உணர்வுடன் எழுதியிருக்கிறானோ அதை இந்த 25 நிமிடத்திலே உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் நான் அந்த எழுத்தாளனின் தகுதிக்கோ அல்லது அதைவிட மேம்பட்ட தகுதியிலோ இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அதற்குள்ளே இறங்கி சிந்தித்து படிக்க வேண்டும். அந்த அனுபவம், அந்த ஆய்வு, நீங்கள் அதற்குள்ளே சென்று வர வேண்டும். அப்போதுதான் அதன் முழுப் பரிமாணம் தெரியும்.

மார்க்ஸின் பல நூல்களை பல எழுத்துகளை நான் 80களிருந்து ஒரு முப்பது நாப்பது முறையெல்லாம் படித்த நூல்கள் இருக்கின்றன. நான் 80களில் படிக்குப் போது எனக்குப் புரிந்ததற்கும் இன்று நான் படிக்கும் போது புரிவதற்கும் பாரிய இடைவெளி இருக்கிறது. அதே எழுத்து தான், ஒரு கமா முற்றுப் புள்ளி கூட மாறவில்லை. ஏன் இந்த வேறுபாடுகள் பின்னர்? ஏனென்றால் இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய அரசியல் அறிவு, சமூக அறிவு, அல்லது பொது அறிவு, 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட மேம்பட்டிருக்கிறது. அப்போது ஒரு வாக்கியத்தின் நுட்பத்தை, அழகை, nuance  என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும்  அழ்காகச் சொல்லிச் செல்லும் நெகிழ்வுத் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு ஒரு ஆற்றல் தேவைப்படுகிறது. இதை முதலில் ஒத்துக் கொள்ளவேண்டும்.

படிப்பு உழைப்பாக மாறும்போது சமூகம் அடிமைத்தளையிலிருந்தும் விடுபடும்!

இதைப் புரிந்து கொண்டுதான் படிக்க இறங்க வேண்டும். அப்போது படிப்பு என்பது ஒரு உழைப்பாக, முயற்சியாக இருக்கும். சும்மா அப்படிப் புரட்டிப் போட்டுப் போகும் வகையில் இருக்காது. புரட்டிப் போடுவது என்பது சில பேருக்கு பழக்கமாகக் கூட இருக்கிறது. ஊன்றி நின்று படிக்க முடியாது, ஊன்றி நின்று கவனிக்க முடியாது. எதுவாக இருந்தாலும் இந்த அளவுக்குள் சொல், இந்த நேரத்திற்குள் சொல் என்று கேட்கின்ற ஒரு பண்பாட்டிற்குள் நாம் இருக்கிறோம். அதற்குள் எதையும் செய்ய முடியாது. அப்படி நாம் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல. நமக்கும் பொருந்தும்.

நாம் தொலைக்காட்சி செய்தியைத் திரும்பத் திரும்ப பார்க்கிறோம். ஆனால் அதைப் பற்றி எவ்வளவு விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். பல போராட்டங்கள் நடைபெறும் போது தொலைக்காட்சி நிருபர்கள் வருவார்கள். ஏன் போராட்டம் நடத்துகிறீர்கள்? என்ன பிரச்சினை? என்று கேட்பார்கள். அதை என்ன என்று சொல்லுவோம். அதைக் கேட்டுக் கொள்வார்கள். பிறகு டிவி ஆன் செய்கிறோம் சார் நீங்கள் சொன்னதை ஒரு இரண்டு நிமிடத்தில் சொல்லுங்கள் என்பார்கள். இரண்டு நிமிடத்தில் சொல்ல முடியாது இருபது நிமிடம் ஆகும் என்று சொல்ல முடியாது. ஆனால் அதோடு நிறுத்தினால் பரவாயில்லை.

நான் முதலில் ஒரு 20 நிமிடம், இந்த மாதிரி நடந்தது, இந்த இயக்கம், இதற்காக போராடுகிறோம் என்று அவரிடம் விளக்கியதைக் கேட்டிருக்கிறார் அல்லவா? உடனே இதிலிருந்து எது செய்தி என்று நிருபர்கள் முடிவு செய்கிறார்கள். நான் 2 நிமிடத்தில் சொல்ல வேண்டுமா என்றவுடன் இதுதான் பிரச்சினை, இந்த ஊர்களிலிருந்து வந்திருக்கிறார்கள், இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள், இந்த இயக்கம், இவங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சொல்லிவிடுங்கள் கரெக்டாக இருக்கும் என்பார்கள். உங்களுக்கு எத்தனை நிமிடத்தில் வேண்டும் என்று சொல்லுங்கள் அதற்குள் என்ன சொல்ல வேண்டுமென்பதை நீங்கள் சொல்லிக் கொடுக்காதீர்கள் என்று சொல்லும் நிலையில் இருந்திருக்கிறேன். இது அவர்களுக்கு உரைப்பதே இல்லை. அதற்கு இரண்டு காரணம். முதலில் இது ஒரு சீரியஸான பிரச்சினை என்றே அவர்களுக்குப் புரிவதில்லை.

இரண்டாவது எல்லாரும் தொலைக்காட்சிக்கு அலைபவர்களாக இருக்கும் உலகத்தில் அவர்கள் ஒரு மேலாண்மை செலுத்தும் நிலையில் – ஆங்கிலச் சானல்களில் பேட்டி எடுப்பவர்களைப் பாருங்கள் – எல்லாரையும் அதிகாரம் செய்யும் ஒரு தோரணையும் மிகப் பெரிய இடத்தில் உட்கார்ந்திருப்பது போலும் இருக்கிறார்கள். அப்படி எல்லாரும் அலைபவர்கள் போலக் கருதுவதால் ஒருவனிடம் இதைப் போலச் சொல் என்பது எவ்வளவு அநாகரீகமானது கேவலமானது என்று கூட உறைக்காத மனிதர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு என்ன வேண்டும், எப்படி இருக்க வேண்டும் நியூஸ் என்று அவர்கள் முதலாளிகள் இயக்குநர்கள் சொல்லி விடுகிறார்கள்.

என் முகம் தெரிவது தான் எனக்கு முக்கியம் என்றால் அவர்கள் சொல்லச் சொல்லுவது போலச் சொல்லி விடலாம். இல்லை, செய்திதான் முக்கியம் என்றால் அதற்குத் தகுந்தாற்போலச் சொல்ல வேண்டும். எதற்கு சொல்கிறேனென்றால் இது இளைஞர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல. நமக்குள்ள பிரச்சனை. அதை எவ்வளவு விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்க்க மறக்கிறோம், அப்படிப் பழக்கப்படுத்தப் படுகிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வர வேண்டியிருக்கிறது நம்மையும் நம் எதிர்காலத் தலைமுறையையும் தற்காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கம்யூனிஸ்ட்டுகள் மனித குல நாகரீகத்தின் முழுமையையும் கற்கவேண்டும்!

ஒரு கம்யூனிஸ்ட் என்றால் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் நூலை மட்டும் படித்திருக்கிறேன் லெனின் படித்திருக்கிறேன் என்பது மட்டும் அல்ல. கம்யூனிஸ்ட் என்பது மனித நாகரீகத்தின் பிரதிநிதி. மனித நாகரீகத்தின் ஆகச் சிறந்த சாதனைகளனைத்தையும் தேடிப் பாதுகாப்பதையும் அதை முன்னெடுத்துச் செல்வதையும் நம்முடையக் கடமையாகக் கொள்ள வேண்டும். நம் மனித நாகரீகம் கண்ட கலைகள் இலக்கியங்கள் அரசியல் ஆய்வு பொருளாதாரம் எல்லாமே ஒரு கம்யூனிஸ்ட்டிற்கு தெரிந்திருக்க வேண்டும். எல்லாம் தெரிந்திருக்க முடியுமா? கஷ்டம்தான் முடியாது. ஆனால் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பணிவு நமக்கு வேண்டும்.

இந்தியாவில் நாம் தான் முதல் பொருள்முதல்வாதிகளா? நமக்கு முன்னாள் 2500-3000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க நாட்டிற்கு இணையான அற்புதமான பொருள்முதல்வாதிகள் இந்த மண்ணிலே இருந்திருக்கிறார்கள் – சார்வாகர்கள், லோகாயதர்கள் பின்னால் பௌத்தர்கள். அதையெல்லாம் என்ன செய்வது? 2500-3000 ஆண்டுகளுக்கு முன் அறிவியல் வளராத காலத்தில் கடவுளைப் பற்றி கேள்வி எழுப்பியவனை, ஆன்மா என்று தனியாக இல்லை என்று பேசியவனைப் பற்றி நமக்குத் தெரியவில்லை என்று சொன்னால் நாம் அந்த மரபை எப்படி வரித்துக் கொள்ள முடியும்? அதற்குப் பின்னாலே ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள்.

இவ்வாறு வரலாற்றிலே நேர்மறையான சாதனையாளர்கள் எல்லோரும், யாரெல்லாம் மனித குலத்தின் மீது காதல் கொண்டு சிந்தித்தார்களோ, உழைத்தார்களோ அவர்களெல்லாம் ஆளும் வர்க்கங்களாலே நசுக்கப் பட்டிருக்கிறார்கள். அல்லது இருட்டடிப்பு செய்யப் பட்டு இருக்கிறார்கள். அவர்களைத் தேடி எடுத்துப் படிக்க வேண்டியது, சமூகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டியது நம்முடைய பொறுப்பு. இன்றையத் தேவைக்காக எழுதுவது பேசுவது என்ற அளவிற்கு இணையான அளவிற்கு நம் மரபையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது நம்முடைய கடமை.

அது முதலாளித்துவ எழுத்தாளர்களாகக் கூட இருக்கலாம். முதலாளித்துவம் தான் நம் எதிரி. முதலாளித்துவ சிந்தனை எனபது மனித குல வரலாற்றின் ஒரு கட்டத்தில் தோன்றிய ஒரு விஷயம். அதை இல்லை என்று நாம் நிராகரித்து விட முடியாது. மறுத்துவிட முடியாது. அற்புதமான எழுத்தாளர்கள் அதில் இருந்திருக்கலாம். அதை எல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏன் அவசியம் இருக்கிறது? இது “பொதுவாக எல்லாம் படிக்க வேண்டும், எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்ற நன்னெறி போதனை அல்ல. இது நடைமுறைக்கானது. உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காக முன்னேற்றத்திற்காக நாம் பாடுபடுகிறோம் போராடுகிறோம் என்று சொன்னால் அதற்குரிய தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கோஷம் போடுவது, சண்டை போடத் தயாராக இருப்பது, உயிரைக் கொடுக்கத் தயாராக இருப்பது இவை மட்டுமே புரட்சியை சாதித்து விடுவதில்லை. எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். இந்த சமூகம் முழுவதையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் என்றால் உங்கள் வீட்டு வாசலிலோ அல்லது எங்கள் வீட்டு வாசலிலோ ஒன்றும் போலீஸ் நிற்கவில்லையே?. பெரும்பான்மையான மக்கள் கருத்தியல் ரீதியான ஒரு ஆளுமைக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சமூகம் தான் நியாயமானது இந்தச் சமூகம்தான் சாத்தியமானது என்று மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அநீதிக்கு உட்படுத்தப்படும் மக்கள் கூட இந்த அநீதி தவிர்க்கப்பட முடியாதது என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கருத்து ரீதியாக ஏற்றுக் கொண்டிருப்பதால்தான் அடங்கி இருக்கிறார்கள். அதற்குப் பிறகு அடங்காமல் போனால் தான் துப்பாக்கி முனை.

கருத்தியல் ரீதியான செல்வாக்கிற்கு, அடக்குமுறைக்கு ஆட்பட்டு நாம் அடக்கப்பட்டு இருக்கிறோம். அந்தக் கருத்தியல் ரீதியிலான அடக்கு முறை எல்லாக் கோணங்களிலிருந்து நம் மீது வருகிறது. திரைப்படம், தொலைக்காட்சி, நூல்கள், கட்டுரைகள் அல்லது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் ஆலோசகர்கள், பக்தி, மதம் எல்லாத் திசைகளிலிருந்தும் மக்களைச் சுற்றி அது மொய்க்கிறது. அதற்குள் மக்கள் ஆழ்த்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை வெளியே கொண்டுவர வேண்டுமென்றால் அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அந்த ஆற்றல் வேண்டுமென்றால் கற்க வேண்டும்.

நம்முடைய இலக்கியத்தை நம்முடைய நூல்களை மட்டுமல்ல, எதிரியின் இலக்கியத்தை எதிரியின் நூல்களையும் கூடப் படிக்க வேண்டும். இல்லாத வரையில் போராட முடியாது. புரட்சி முடிந்தவுடன் லெனின் சொல்வார்: “மிக விரைவாக பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகளை (Proletarian Intellectuals) நாம் உருவாக்க வேண்டும்”.  பாட்டாளி வர்க்கத்தில் அறிவுஜீவிகள் கிடையாது. புரட்சி நடக்கும் பொது ரஷ்யாவில் எழுத்தறிவே 10சதவீதத்திற்கும் கீழே. எதற்காக பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகள் வேண்டும்? இல்லையென்றால் முதலாளித்துவ அரசியல்வாதிகளிடம் முதலாளித்துவ தொழில்நுட்ப வல்லுனர்களிடம் அல்லது ஜார் ஆட்சியின் ராணுவ அதிகாரிகளிடம் சரணடைய வேண்டி இருக்கும்.

படிக்காத வரை அடிமைத்தனம், படிக்கும் போது விடுதலை!

ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தைப் பார்த்து சொல்வது என்ன? ஏன் திராவிட இயக்கத்தை, தலித் இயக்கங்களை, தாழ்த்தப்பட்டவர்களைப் பிற்படுத்தப்பட்டவர்களைப் பற்றி உயர்சாதிக்காரர்கள் என்று சொல்லக்கூடிய பார்ப்பன ஆதிக்க சக்திகள் சொல்வது என்ன? நீயெல்லாம் நாடாள்வாயா? உனக்கெல்லாம் விவரம் தெரியுமா? உன்னால் முடியுமா? என்று ஏளனச் சிரிப்பு சிரித்தார்கள். பிறகு படிக்கிறோம், மாற்றங்கள் வருகிறது. அது தானே வரலாறு. ஆளும் வர்க்கம் என்ன கருதுகிறது என்றால் இதை நிறுத்த இவர்களால் முடியாது என்று கருதுகிறது. ஒரு ஏளனப் பார்வை பார்க்கிறது. அது உண்மைதான். அது பொய் அல்ல. நாங்கள் தான் எங்கள் ரத்தம் வியர்வையால் உலகத்தைப் படைத்தோம் உண்மை. எல்லாவற்றையும் நாங்கள் தான் உருவாக்கினோம் உண்மை. அதெல்லாம் உண்மைதான். அதனால் நாங்கள் ஆளும் உரிமை படைத்தவ்ர்கள். உண்மை. ஆளும் ஆற்றல் இருக்கிறதா? நிர்வாகம் செய்யும் ஆற்றல் இருக்கிறதா? அவன் நம்மை அடக்கி வைத்திருப்பது போல அவனை அடக்கி வைக்கும் ஆற்றல் நமக்கு இருக்கிறதா?

அந்த ஆற்றலை எப்படி அடைவது? ஆயுதம் மூலமாகவா? அதற்கு கற்க வேண்டும். வேறு குறுக்கு வழி கிடையாது. அதனாலேயே லெனின் Proletarian Intellectuals உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார். அதனால் தான் போலிப்பகட்டு, போலி அறிவு, மேதாவித்தனம் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளி வர்க்க இயக்கத்திலேயே சாதாரண தொழிலாளிகளாய் இருப்பவர்கள் கூட அதை வெளிப்படுத்தும் போது மார்க்ஸ் அதை கடுமையாகச் சாடுகிறார். அதனால் பலர் வருத்தப்பட்டதுண்டு.

இந்தப் படித்த அறிவு ஜீவிகளுக்கு கொழுப்பு அதிகமாக இருக்கும். சோசலிசம் பேசிக் கொண்டிருந்த சாதாரண ப்ரூதோன் போன்ற மனிதர்கள். அறிவியல் பூர்வமற்ற எதையும் அவர் மென்மையாகப் பார்க்கத் தயாராக இல்லை. ஏங்கெல்ஸ் ஒரு இடத்தில் எழுதுவார் “இந்த சமூக அறிவியல் கல்வி என்பது ஒரு செங்குத்தான வழுக்குப் பாதையில் ஏறுவதற்கு ஒப்பாகும். இதற்குத் தயாராக இல்லாதவர்கள் விலகி விடுங்கள்”. இது விளையாட்டாகச் சொல்லப்பட்டது அல்ல. அத்தகைய உழைப்பு அதற்குத் தேவை. அப்படி உழைப்பு இருந்தால் தான் நாம் எந்த வர்க்கத்திற்கு சேவை செய்ய வேண்டும், எந்த வர்க்கத்தை விடுவிக்க வேண்டும் என்று நாம் கருதுகிறோமோ அந்த வர்க்கத்திற்கு தலைமை தாங்கவோ வழிகாட்டவோ விடுவிக்கவோ முடியும்.

படித்தவர்கள், அறிவுஜீவிகள், ஆற்றல் உள்ளவர்கள் என்பவர்கள் எல்லாம் எதிரிகளின் கையில் இருக்கிறார்கள். நல்ல உடல் பலம் உள்ளவர்கள் எல்லோரையும் அளந்து அளந்து பார்த்து ராணுவத்திலும் போலீசிலும் சேர்த்து வைத்திருக்கிறார்கள். படித்தவர்களை எல்லாம் IAS,  IPS என்று உயர் நிர்வாகப் பதவியில் வைத்திருக்கிறார்கள். ஆற்றல் மிக்க வழக்குரைஞர்கள் கணக்குத் தணிக்கையாளர்கள் எல்லாம் டாடா பிர்லா அம்பானி மிட்டல்களுக்காக வேலை செய்கிறார்கள். இப்போது இந்த ஸ்பெக்ட்ரம் விவாதங்களைப் பாருங்களேன். வாதிடுபவர்களெல்லாம் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் தான். பிரச்சனை பெரிதாக ஆக ஆக பெரிய கைகள் வந்து ஆஜராகின்றானர். டாடாவிற்கு ஹரீஷ் சால்வே வருகிறார். இன்னொருத்தருக்கு அதே போல் இன்னொருவர். இந்த வக்கீல்கள் எப்படிப் பட்டவர்கள்? ஒரு முறை சுப்ரீம் கோர்ட்டில் எழுந்து விட்டு உட்கார்ந்தால் 10லட்சம் ரூபாயை கட்டணமாக பெறுபவர்கள். வழக்கு நடக்கிறதா இல்லையா, பேசுகிறாரா இல்லையா என்பதல்ல விஷயம். Appearance Fees – ரஜினிகாந்த் கால்ஷீட் போல. படப்பிடிப்பு நடக்கிறதா இல்லையா என்பதெல்லாம் கணக்கில்லை. அந்த வழக்கறிஞர் எல்லாரும் என்ன செய்கிறார்கள்? மிக நேர்த்தியான மொழியில் ஊழலை நியாயப்படுத்தி வாதாடுகிறார்கள். மோசடியை நியாயப்படுத்தி வாதாடுகிறார்கள். அல்லது இங்கே இருக்கும் சோ போன்ற ஆட்கள் மிகத் திறமையாக வாதாடுகிறார்கள். அவனைத் பார்ப்பனத் திமிர் பிடித்தவன் பார்ப்பன பாசிசத்தின் கைக்கூலி என்றெல்லாம் மட்டும் சொன்னால் போதாது.  அவனை அறிவுரீதியாக ஏளனம் செய்து தூக்கி எரிகின்ற ஆற்றல் அவனை பற்றிய  பிரமைகளை வைத்திருக்கின்ற நம் மக்களுக்கு அவனொரு அற்பப்பதர் என்று காட்டக்கூடிய ஆற்றல் அது நமக்கு வேண்டும்.

அந்த ஆற்றல் வேண்டுமென்றால் உழைக்க வேண்டும். படிப்பதென்பது நமக்கு ஒரு உழைப்பு. அந்த உழைப்பில் தான் நாம் இன்பம் காண முடியும். உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் என்று கேட்டாற்போல, கற்பதில் கூட துன்பத்தில் தான் இன்பம் இருக்கிறது. அந்தத் துன்பத்தை அனுபவிக்கத் தயாராக இல்லாதவர்களுக்கு எந்த இன்பமும் இல்லை. ஆராய்ந்து ஆராய்ந்து சிந்தித்து சிந்தித்து ஒரு கதவு திறக்கிறதே கேள்விக்கு அங்கு தான் மகிழ்ச்சி இருக்கிறது. அப்படியே மொட்டை அமிழ்த்தி உடனே பதில் வந்து விட்டால் அதில் மகிழ்ச்சி கிடையாது.

பாட்டாளி வர்க்க இயக்கமென்பது உலகளவில் இப்படி சாதாரண உழைக்கும் மக்கள், சீனப் புரட்சியிலே சாதாரண விவசாயப் பெண்கள் எல்லாம் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆகி இருக்கிறார்கள். அதற்குரிய தகுதியோடு அவர்கள் சென்றிருக்கிறார்கள். இன்று எதிரிகள் எல்லா அறிவுத் துறையினரையும் கையில் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனிலும் மேலாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மனிதாபிமானமும் அற உணர்ச்சியும் நேர்மையும் இல்லாமல் இப்போது அறிவுஜீவிகள் தங்களை விற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.

நாமும் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காக நம்மை அறிவுபூர்வமாக ஆயுதபாணியாக ஆக்கிக் கொள்ளத் தேவையாக இருக்கிறது.

ஸ்டாலின் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் கொடுங்கோலன், சர்வாதிகாரி, கொலைகாரர் என்று நிறைய எழுதித் தள்ளி இருக்கிறார்கள். இன்னொரு பாதி அவரை முட்டாள் என்று சித்தரித்து வைத்திருக்கிறார்கள்.  மார்க்ஸ் அறிவுஜீவி. ஏங்கெல்ஸ் அறிவுஜீவி, லெனின் கூட அறிவுஜீவி, ஸ்டாலின் ஒரு முட்டாள். சர்வாதிகாரி என்ற பிம்பம் முதலாளித்துவ அறிவுஜீவிகள் மத்தியில் பரப்பப்பட்டு இருக்கிறது. ஏனெனில் அவர் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தவர், அதிலிருந்து படித்து வந்தவர். அவரை இழிவு படுத்தும் ஆயுதமாக இதனைப் பயன் படுத்துகிறார்கள்.

இதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னால் FRONTLINE  ஆங்கில நாளேட்டில் AG நூரானி என்ற வழக்கறிஞர்/எழுத்தாளர் ஸ்டாலின் பற்றிய ஒரு நூல் பற்றி எழுதியிருந்தார். அதை எழுதும் போது வேற சில முக்கியமான எழுத்தாளர்களை மேற்கோள் காட்டிச் சொல்கிறார். “ஸ்டாலினுடைய தனி நூலகத்தில் 25000 நூல்கள் இருந்தன. அவருடைய சமகாலத்தில் வாழ்ந்த ரூஸ்வெல்ட் சர்ச்சில் போன்ற அனைவரையும் விட அரசியல், பொருளாதாரம் மற்றும் உலக வரலாற்று ஞானம் மிக மேம்பட்டதாக இருந்தது” என்று கம்யூனிச எதிர்ப்பாளர்கள் சொல்வதை இவர் மேற்கோள் காட்டுகிறார்.  அது என்ன விஷயம் என்றால் அவரும் செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன்தான். ஒரு நாட்டினுடைய தலைமைப் பொறுப்பை ஏற்கும் போது, ஒரு கட்சியினுடைய தலைமைப் பொறுப்பை ஏற்கும் போது அந்தப் பொறுப்பிற்குத் தகுதியானவனாக தன்னை வளர்த்துக் கொள்வது அவரது விருப்பு வெறுப்பு சார்ந்தது அல்ல. அது ஒரு தார்மீகக் கடமை.

அவர் 20000 புத்தகங்கள் வைத்திருந்தாரா, 10000 புத்தகங்கள் வைத்திருந்தாரா என்பதல்ல பிரச்சனை. ஆனால், மிகச் சாதாரண வர்க்கத்திலிருந்து ஒரு மனிதர் மேற்கத்திய நாடுகளில் பிரபு குலப் பின்னணியில் வந்த கல்வி பயின்ற ஜனாதிபதிகள், பிரதமர்கள், ராஜ தந்திரிகளோடு இணையாகப் பேச வேண்டுமானால் அதற்குரிய அறிவு வேண்டும்.. எல்லாத் துறைகளிலும் அறிவு வேண்டும். இல்லை என்றால் வெறும் கொள்கைப் பற்று, நேர்மை, தியாகம், அர்ப்பணிப்பு என்ற பேச்சால் பயன் இல்லை. அறிவிற்கு அது மாற்றீடாகாது. அதை வைத்து இதைச் சரிக்கட்ட முடியாது. நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது.

உழைப்பது என்றாலும் ஒரு சமூகம் எந்தத் துறையில் நம்முடைய உழைப்பைக் கோருகிறதோ அந்தத் துறையில் உழைக்கத் தயாராக வேண்டும். கருத்தியல் ரீதியாக இப்படி ஒரு தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் – நான் கம்யூனிஸ்டுகளை மட்டும் சொல்லவில்லை – பெரியார் இயக்கத்தில் இருக்கிறார்கள்; அம்பேத்கார் மீது பற்று கொண்டவர்கள் இருக்கிறார்கள். எல்லாருக்கும் வேலை இருக்கிறது. பார்ப்பன பாசிசம் என்பது ஓய்ந்து போனது அல்ல. அது மீண்டும் மீண்டும் பல வடிவங்களில் தலை எடுக்கக் கூடியது. அவற்றையெல்லாம் எதிர்த்து போராட வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஆற்றல் உள்ளவர்கள் தேவை.

எனக்குத் தெரிந்து இந்தத் திருவண்ணாமலை தீபம் கொஞ்ச நாள் முன்பு இல்லாமல் இருந்தது. இப்ப எந்த டீக்கடையில் நின்றாலும் திருவண்ணாமலை தீபத்திற்குப் போகிறேன் என்று பேசிக்கொள்கிறார்கள். எந்தக் கோயிலில் என்ன திருவிழா என்றாலும் கூட்டம் கூடுகிறது. இது பெரியார் பிறந்த மண்ணா? அவர் அவ்வளவு எழுதி இருக்கிறாரே. அவ்வளவு பேசி இருக்கிறாரே அதில் ஒரு 2 சதவீதம் ஒவ்வொருத்தரும் செய்தால் எவ்வளவு பயனடையலாம்? அதை ஏன் செய்ய முடியவில்லை என்று இந்த இடது சாரி முற்போக்கு எண்ணம் கொண்ட நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

நூல்கள் படிப்பதென்பதை நம்முடைய விருப்பம் அல்லது விருப்பமின்மை என்ற வரையரையைத் தாண்டி அதை நம்முடைய கடமையாகக் கொள்ள வேண்டும். முதலாளித்துவம் தொடுத்த தாக்குதல், மனிதர்களை உழைக்கும் இயந்திரங்களாக உண்ணும் இயந்திரங்களாக, நுகரும் இயந்திரங்களாக மாற்றுவதற்கான தாக்குதல். நம் அறிவை செயலிழக்கச் செய்வதற்கான தாக்குதல். அந்தத் தாக்குதலில் நம்முடைய சிந்தனையும், மூளையும் ஊனமுற்றுப் போவதற்கு தெரிந்தே அனுமதிக்கக் கூடாது.

நம்மையும் நம்முடைய வருங்காலத் தலைமுறையையும் அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு படிக்க வேண்டும் விவாதிக்க வேண்டும் பல்துறை அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் அப்படிப் படிப்பதெல்லாம் ஒரு நோக்கத்திற்காக இருக்க வேண்டும் நடைமுறைக்காக இருக்க வேண்டும் அந்த நடைமுறை சமூக மாற்றத்திற்கு புரட்சிக்காகப் போராடுகின்ற நடைமுறைதான். அந்த நடைமுறைக்காக கற்கவேண்டும் என்று கூறி இந்த வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.

_______________________________

– உரை: தோழர் மருதையன்
– எழுத்தாக்கம்: உமா
_______________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சாதீ – முகிலனின் ஓவியங்கள் !

43

தாழ்த்தப்பட்ட மக்களை சமூகத்திலிருந்து வெறுத்து ஒதுக்குவது மரண தண்டனையை விட கொடியது என்றார் டாக்கடர் அம்பேத்கர். ஆனால் அவருக்கு முன்பும், அவர் வாழ்ந்த காலத்திற்கு பின்பும் இந்திய சமூகச் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்களால் அவிழ்த்து விடப்பட்ட தீண்டாமை கொடுமைகள் ஆயிரம்..ஆயிரம். தஞ்சை மாவட்டம் கீழ் வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவாசாயத் தொழிலாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரம் இப்பொழுதும் நெஞ்சை விட்டு அகலாத வடு. இப்படி எண்ணற்ற வடுக்களை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பது இங்கு நிலவும் தீண்டாமை கொடுமை, அதை தூக்கிச் சுமக்கும் வர்ணாசிரமம், அந்த வர்ணாசிரமத்தை உயிருக்கு நிகராக பாதுகாக்கும் பார்ப்பனியம். இந்த சமூக அமைப்பின் கீழ் படிந்திருக்கும் இந்த வர்ணாசிரமக்க கசடுகளையெல்லாம் அகற்றாத வரை கீழ்வெண்மணிகள் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அப்படி தொடர்ந்த, தொடர்கின்ற வன்கொடுமையின் சித்திரப்பதிவுக்களே இவை!

கீழ் வெண்மனி தியாகிகளுக்கு வீர வணக்கம்

கூலி உயர்வுக்கு போராடிய கீழ் வெண்மனி விவசாயிகளை உயிரோடு எரித்த ஆதிக்க சாதி வெறியர்கள்

மேலவளவு

மேலவளவு – பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற காரணத்திற்காக ”நமக்கு மேல் இவனா” என்ற ஆதிக்க சாதி வெறி மேலோங்க முருகேசன் என்ற தாழ்த்தப்பட்டவர் உட்பட 6 பேரை வெட்டி படுகொலை செய்தனர் ஆதிக்க சாதி வெறியர்கள்

திண்ணியத்தில், கருப்பையா என்ற தலித் இளைஞனின் வாயில் மலத்தை தினித்த ஆதிக்க சாதி வெறியர்கள்

திருச்சி மாவட்டம், திண்ணியத்தில், கருப்பையா என்ற தலித் இளைஞனின் வாயில் மலத்தை திணித்த ஆதிக்க சாதி வெறியர்கள்

1992, வீரப்பன் தேடுதல் வேட்டையில் தரும்புரி வாச்சாத்தி பழங்குடியின மக்கள் மீது போலீசு நடத்திய மிருகத்தனமான தாக்குதல்

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி பழங்குடியின மக்கள் மீது போலீசு நடத்திய மிருகத்தனமான தாக்குதல்

பாப்பாபட்டி – கீரிப்பட்டியில் அரசை மிரட்டி தன்னை நிலைநிறுத்தி வரும் தேவர் சாதி ஆதிக்கம்

குரங்கு பேட்டையில், மரத்திலிருந்து வீழ்ந்த நாவல் கனியை தின்ற தலித் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட வண்கொடுமை
திருச்சி மாவட்டம், குரங்கு பேட்டையில், மரத்திலிருந்து வீழ்ந்த நாவல் கனியை தின்ற தலித் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமை

மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள வில்லூரில் தாழ்த்ப்பட்டவர்கள் தங்கள் தெருப்பக்கம் இரு சக்கர வண்டிகளை ஓட்ட தடைவிதித்தனர் ஆதிக்க சாதியினர்
மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள வில்லூரில் தாழ்த்ப்பட்டவர்கள் தங்கள் தெருப்பக்கம் இரு சக்கர வண்டிகளை ஓட்ட தடைவிதித்தனர் ஆதிக்க சாதியினர்

பொது நீர் நிலைகளில் குடிநீர் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களுக்கு தடை
பொது நீர் நிலைகளில் குடிநீர் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களுக்கு தடை

மனித மலத்தை மனிதன் சுமக்கும் அவலம்

மனிதனின் மலத்தை மனிதன் சுமக்கும் அவலம்

செருப்பு தைப்பது இன்னமும் ஒரு சாதிக்கு மட்டுமேயான தொழிலாக இருக்கிறது
செருப்பு தைப்பது இன்னமும் ஒரு சாதிக்கு மட்டுமேயான தொழிலாக இருக்கிறது

பொதுக்குவளைக்கு மறுப்பு - தனிக்குவளை அல்லது கையேந்த்தல் என்பதே நடைமுறையில் உள்ளது

பொதுக் குவளைக்கு மறுப்பு – தனிக்குவளை அல்லது கையேந்த்தல் என்பதே நடைமுறையில் உள்ளது

மதுரை மாவட்டத்தில் உள்ள 83 கிராமங்களில் 73 ல் இன்னமும் இரட்டை குவளை முறை அமலில் உள்ளது
மதுரை மாவட்டத்தில் உள்ள 83 கிராமங்களில் 73 ல் இன்னமும் இரட்டை குவளை முறை அமலில் உள்ளது

கோவிலில் சம வழிபாட்டு உரிமை கோரியதற்காக செந்தட்டியில் இரண்டு தலித்துகள் ஆதிக்க சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டன்ர்
கோவிலில் சம வழிபாட்டு உரிமை கோரியதற்காக செந்தட்டியில் இரண்டு தலித்துகள் ஆதிக்க சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டன்ர்

கயர்லாஞ்சியில் போட்மாங்கே குடும்பத்து பெண்கள் ஆதிக்க சாதியினரால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை
கயர்லாஞ்சியில் போட்மாங்கே குடும்பத்து பெண்கள் ஆதிக்க சாதியினரால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை

____________________

– ஓவியங்கள் முகிலன்
____________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

போக்குவரத்து தொழிற்சங்கம்: தி.மு.கவின் பிரியாணி, டாஸ்மாக், அதிகாரம் வென்றது!

போக்குவரத்து தொழிற்சங்கம்: தி.மு.கவின் பிரியாணி, டாஸ்மார்க்,அதிகாரம் வென்றது!

அரசு போக்குவரத்துக் கழகங்களில் தொழிற்சங்கங்களுக்கிடையேயான பிரதிநிதித்துவ அங்கீகாரத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது.  அதில் ஆளும் தி.மு.க வின் தொழிற்சங்கமான தொமுச 73,450 வாக்குகள் பெற்று (57% )வெற்றி பெற்றிருக்கிறது.

சட்டமன்ற இடைத்தேர்தலுக்கிணையாக பணம், (டாஸ்மாக்)சரக்கு, பிரியாணி, பிளக்ஸ் பேனர்கள் பல லட்ச ரூபாய் செலவு, ஆளும் அதிகார வர்க்க மிரட்டல் என எல்லா அம்சங்களும் இந்த தேர்தலில் இருந்தது.  ஆனால் இந்த தேர்தலின் மூலம் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட குணாம்சம் ஓரங்கட்டப்பட்டு, பணத்தின் மூலம், அல்லது ஆளும் ஓட்டுக்கட்சி அரசியல் தலைமையின் மூலம் எதையும் சாதித்து விடலாம் என்கிற எண்ணம் தொழிலாளர்கள் மத்தியில் பரவி பார்த்தீனிய செடியாய் வேர்விட்டிருப்பதுதான்  மிகப் பெரிய அபாயம்.மேலும் இது புதிய பொருளாதார கொள்கையின் விளைவுதான் என்பதையும் இந்த கட்டுரை வழியாக அலச விழைகிறேன்.

கடந்த 1998ஆம் ஆண்டிற்கு முன்பு வரை போக்குவரத்துக் கழகங்களில் அனைத்து விதமான பேச்சுவார்த்தைகளுக்கும் திமுகவின் தொமுச, அதிமுக-வின் அண்ணா தொ.ச.பேரவை, காங்கிரசின் ஐஎன்டியுசி, எச்எம்எஸ்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏஐடியுசி ஆகிய 6 தொழிற்சங்கத்தினர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்கிற நிலை இருந்தது.

இதில் அந்தந்த காலத்திலான ஆளும் கட்சியாக இருக்கிற கட்சியின் சங்கமும், ஐஎன்டியுசி மற்றும் எச்எம்எஸ் ஆகிய சங்கங்களும் அனைத்துவிதமான ஒப்பந்தங்களிலும் கையொப்பமிட்டுள்ளன. ஆளும் கட்சியுடன்  கூட்டணியில் இருந்தால் கையொப்பமிடுவது, இல்லாவிட்டால் ஒப்பமிடாமல் குறை சொல்லி ஒரு புத்தகம் போட்டு தொழிலாளியிடம் விற்றுவிட்டு அதோடு ஒதுங்கிக் கொள்வது என்கிற நிலையை இரண்டு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களும் செய்து வந்தன.

இந்நிலையில் 1998இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்துக் கழகங்களில் செயல்பட்டு வந்த ஓட்டுக்கட்சி சார்பில்லாத பணியாளார்கள் சம்மேளனம் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கின் காரணமாக ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நடத்தி சங்க அங்கீகாரம் என்பது முடிவு செய்யப்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.  இதில் பல்வேறு உதிரி சங்கங்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு அவற்றை விசாரித்த உயா்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு (தலைமை நீதிபதி மற்றும் ஒரு மூத்த நீதிபதி ஆகியோர்) நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அனைத்து சங்கங்களையும் கருத்து கேட்டபின் 10 சதவீத வாக்குகள் பெறும் சங்கம் அதன் சார்பாக ஒரு பிரதிநிதியை பேச்சு வார்த்தைக்கு அனுப்பலாம் என உத்திரவிட்டது.

அதன் அடிப்படையில் டிசம்பர் 1998ல் நடைபெற்ற தேர்தலில் அன்றைய ஆளும் கட்சி தொழிற்சங்கம் (2 பிரதிநிதிகள்)- அண்ணா தொழிற்சங்கம் 2ம் இடம் (2 பிரதிநிதிகள்)- பணியாளர்கள் சம்மேளனம் 17 சதவீதம் (1 பிரதிநிதி), சிஐடியு 14 சதம் (1 பிரதிநிதி) என்ற வகையில் தேர்வு பெற்றது. மற்ற ஐஎன்டியுசி, எச்எம்எஸ், மதிமுக சங்கம் என அனைத்தும் 3 சதவீதத்திற்கு கீழான வாக்குகளையே பெற்றன.

இந்த நடைமுறைக்குப் பிறகு 2001இல் ஆட்சிக்கு வந்த அதிமுக ஆட்சியில்  போக்குவரத்துக் கழகங்களின் போனஸ் பேச்சு வார்த்தையின் போது உடன்பாடு ஏற்படாமல் துவங்கிய வேலைநிறுத்தத்தின் போது எஸ்மா, டெஸ்மா சட்டங்கள் கொண்டுவரப்பட்டு அதன் தொழிலாளர்கள் 17 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு நூற்றுக் கணக்கானோர் பல நாட்கள் தற்காலிக வேலை நீக்கத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.  அரசு ஊழியர்கள் ஒன்றேகால் லட்சம் பேர் ஒரேநாளில் டிஸ்மிஸ், என்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

பொதுவாக வங்கிப் பணியாகட்டும், அரசு ஊழியா் பணியாகட்டும், அரசு போக்குவரத்துக்கழக பணி, மின்வாரிய பணியாளா்கள் பணி, சிவில் சப்ளை தொழிலாளர்கள் பணி எவற்றிலும் அவரவர் சார்ந்த துறை பிரச்சனைக்கு போராடும் போது அவர்கள் மட்டுமே போராடுகிறார்கள். போராடும் மற்ற பிரிவினருக்காக எப்போதும் போராடுவதில்லை. மேலும் தங்களது போராட்டத்தின் நியாயத்தை பொது மக்களிடம் விளக்கி அவர்களது ஆதரவையும் திரட்டுவதில்லை.

இவைகளே போக்குவரத்து மற்றும் அரசு ஊழியர்களின் போராட்ட நடவடிக்கைகள் மக்களின் ஆதரவைப்பெறாமல் தனித்து விடப்பட்டதற்கு காரணமாக அமைந்தன. கடந்த ஆட்சியின் போது நெடுஞ்சாலைத்துறையில் அன்றாடம் தார்ச்சாலை அமைக்கும் பணியில் இருந்த சாலைப்பணியாளர்கள் நூற்றுக் கணக்கானோர் இனி தேவையில்லை என மொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டு தெருவில் விடப்பட்டனர்.  அவர்களின் மீது நீதிமன்றங்களும் பெரிய அளவில் கருணை காண்பிக்கவில்லை.  அதே போல் அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தில் 1.25 லட்சம் பேர் பணிநீக்கத்தின் போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்றைய நீதிபதி (இன்று “மாமா நீதிபதிகள்” என சமீபத்திய முக்கிய வார, மற்றும் ஆங்கில நாளிதழ்களில் நீதித்துறையில் புரையோடியிருக்கும் ஊழலைப்பற்றி எழுதியிருந்த ஊடகங்களில் வருணிக்கப்பட்ட) திரு சுபாஷன் ரெட்டி வேலைநீக்கம் சரிதான் என தீா்ப்பளித்தார்.

பின்னர் வேலை  நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரம் போன்ற பெருச்சாளி வழக்கறிஞா்கள் ஆஜரானதிலோ என்னமோ வேலைநிறுத்தத்தின் நியாயத்தைக் குறித்தோ, தொழிற்தாவாச் சட்டத்தில் வேலை நிறுத்த உரிமை கொடுக்கப் பட்டிருப்பதையோ சுட்டிக்காண்பித்து வாதாடாமல் இந்த முறை மன்னித்து வேலை கொடுக்க உத்திரவிடுங்கள் என்ற வகையில்தான் வாதங்கள் அமைந்தன. உச்சநீதிமன்றம் வேலை கொடுக்க உத்திரவிட்டதுடன் வேலை நிறுத்தம் செய்ய உரிமையில்லை என்ற தீர்ப்பை வழங்கியது.

இந்த நிலையில்தான் அமைப்பு சார்ந்த தொழிலில் இருக்கும் பணியாளர்கள் போராட்டப் பாதையைப் பற்றி பயம் கொள்ளத் துவங்கியதுடன், அனுசரித்துப் போவதன் மூலமும், ஆளும் கட்சி முதல்வருக்கு பாராட்டு விழாக்கள் எடுப்பதன் மூலமும் காரியங்கள் சாதித்துக் கொள்ளலாம் என்கிற பாதையை தேர்வு செய்யத் துவங்கினர். புதிய பொருளாதாரக் கொள்கையினால் தொழிலாளர்கள் அமைப்பாக திரளக் கூடாது என்பதற்காக புதிய பொருளாதார மண்டலங்களில் தொழிற்சங்கங்களே அமைக்கக் கூடாது என மாநில அரசுகளுடன் முதலாளிவர்க்கம் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்வது ஒருபுறம்.

மறுபுறம் அமைப்பு சார்ந்த பணிகளிலும், அரசு, வங்கி, காப்பீடு போன்ற துறைகளிலும் தொழிலாளர்கள் ஒன்று திரளக் கூடாது என்பதற்காக திட்டமிடப்பட்டு போடப்பட்டவைதான் இந்த எஸ்மா, டெஸ்மா சட்டங்களெல்லாம். அந்த நேரத்தில் அவற்றை கடுமையாக எதிர்த்த ஓட்டுக்கட்சிகள் பின்னர் தாம் ஆட்சிக்கு வந்தபின் அந்த உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய தயாராக இல்லை. ஏனேனில் இவர்களுக்கும் தொழிலாளர்கள் அமைப்பாக திரண்டு விடக்கூடாது என்பதுதான் நோக்கம்.

இத்தகைய சூழலில் அதிமுக ஆட்சிகாலத்தின் இறுதியில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை என்ற நிலை வந்த போது, சில சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதை விசாரித்த தனி நீதிபதி ஏற்கனவே தலைமை நீதிபதி மற்றும் ஒரு முதுநிலை நீதிபதி அமர்ந்த முதன்மை அமர்வு அளித்திருந்த தீா்ப்பிற்குள் செல்லாது, மைனாரிட்டி சங்கங்களின் கோரிக்கைகளையும் கேட்பதில் தவறில்லை என்கிற வகையில் ஒரு தீர்ப்பு அளித்தார். அதன் பேரில் 21 சங்கங்கள் தனித்தனியாக அழைக்கப்பட்டு ஒப்பந்தம் என்ற பேரில் ஒரு நாடகம் நடந்து முடிந்தது.

அன்று பெரிய அங்கீகார தொழிற்சங்கம் என தன்னை அழைத்துக் கொள்ளும் திமுகவின் தொமுச பேரவைத்தலைவர் திரு செ.குப்புசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா முன்பு சென்று அமர இடம் கிடைக்காமல் (லெட்டர் பேடு சங்கங்களின் தலைவர்களெல்லாம் ஓடிச்சென்று முன்வரிசையில் அமா்ந்துவிட) கடைசி வரிசையில் அமர நேர்ந்தது.  அதோடு மட்டுமல்லாமல் கோரிக்கை குறித்து செ.கு. எழுந்து பேசுகையில் “குப்புசாமி” கேள்விப்பட்டிருக்கிறேன், தற்போதுதான் நேரில் பார்க்கிறேன் என ஜெயலலிதா கேலிபேசியல்லாம் நடந்தது.

பிறகு உடனடியாக இந்த தனி நீதிபதி தீா்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என அனைத்து சங்க கூட்டத்தில் தொமுச மற்றும் சிஐடியு போன்ற சங்கங்களெல்லாம் முடிவு செய்தன. அந்த வகையில் தொமுச வின் மாதாந்திர ஏடான “உழைப்பாளி” யில் கட்டுரையும் எழுதப்பட்டது.  ஆனால் சில தினங்கள் கழித்து யோசித்துப் பார்க்கையில் பல சங்கங்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டால்தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு தங்கள் ஆட்சி வரும் போது தொழிலாளர்களை ஏமாற்ற வசதியாக இருக்கும் என அந்த வழக்கு தொடுக்கும் நடவடிக்கையை கைவிட்டு விட்டனா்.

பின்னர் “பணியாளர்கள் சம்மேளனம்” என்கிற அமைப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை 5 ஆண்டுகளாக விசாரித்த உயா்நீதிமன்ற அமா்வு இறுதியில் ஏற்கனவே ஒரு முறை தேர்தல் நடத்தி சங்கங்கள் தேர்வு செய்தபின், பின்னர் அங்கீகாரத்திற்கு மாற்று முறை என்பது அனுமதிக்க முடியாது என்று 13/02/10 அன்று இறுதி விசாரணையில் கருத்து தெரிவித்துவிட்டு, தீா்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

வெற்றியைக் கொண்டாடும் தி.மு.க பெருச்சாளிகள்!

அதன்பின் 6 மாதங்களாக அந்த வழக்கு கட்டு தூசி தட்டப்படாமலேயே இருந்தது.  இந்த நிலையில் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை துவக்கப்பட வேண்டிய செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.  அதுவரை வழக்கு மன்றம் செல்லாத திமுகவின் தொமுச அவசர, அவசரமாக ஒரு வழக்கை தொடர்ந்து, பணியாளர்கள் சம்மேளனத்திற்கு ஆஜரான சீனியர் வழக்கறிஞரை தனது வழக்கறிஞராக வளைத்துப் போட்டு, நடைபெறும் தேர்தலில் உயர்ந்தபட்ச வாக்கு பெறும் ஒரு சங்கம் மட்டும் அங்கீகாரம் பெற்ற சங்கமாக கருத வேண்டுமென உத்திரவினை பெற்றது.  அதன்பின் இந்த கட்டுரையின் முதல் பத்தியில் சொன்னது போல் சரக்கு சகிதமாக தேர்தல் நடைபெற்றது.

முன்னதாக கடந்த 3 ஆண்டுகளில் போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 40000 பேர் தலைக்கு 2 முதல் 2.5 லட்சம் வரை கொடுத்து ஓட்டுனர், நடத்துனர் பணிபெற்ற பல்லாயிரக்கணக்கானவர்களின் பணி இன்னும் நிரந்தரப்படுத்தப் படாமல் தினக்கூலியாகவே பணி வாங்கப்பட்டு வருகின்றனர். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இளவரசியிடம் விளக்கம் சொல்லும் ராமதாஸ் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் ஆனால் வாய்தான் காதுவரை நீளம்” என்று வசனம் பேசும் ஒரு காட்சி வரும்.

ஆனால் இன்றைய இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக பல வருடங்கள் காத்திருந்து துன்பப்பட்டு, திரைப்படங்களில் வருவது போல் பெற்றோர்கள், உடன் பிறந்தோர்களிடம் அவமானப்பட்டு ஒரு வழியாக லட்சங்கள் கொடுத்து அரசுத்துறை வேலையைப் பெறுவதால் அங்குவந்து வாய்பேசி காரியம் சாதித்துக் கொள்வதற்கு பதில் ஆளும் அரசியல் கட்சியிடம் சேர்ந்து காரியத்தை சாதித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தோடு வேலையில் சேருவதால் இவர்களுக்கு வாயும் நீளவேண்டிய இடத்தில் நீளுவதில்லை. “வேலைக்கு சேர்ந்தாகிவிட்டது.  நான் தினமும் பணிக்கு வந்தால் எனக்கு ஒரு பேருந்தின் பணி கொடுத்துத்தானே ஆகவேண்டும், இதில் ஆளும் கட்சி ஆதரவு எனக்கெதற்கு” என வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு கேள்வி எழலாம்.

ஆனால் எதார்த்தம் என்னவெனில் அனைத்து போக்குவரத்துக் கழக டிப்போக்களிலும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு அன்றாடம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி என்பது ஆளும் கட்சியை சேர்ந்த டிராபிக் கண்காணிப்பாளர் வசம் உள்ள பணியாகும்.  அவர் தனி மனிதனாக வரும் நபருக்கு காலையில் வந்தால் மாலை வரை பணி ஒதுக்காமல் மதியம் ஒரு வண்டியை ஒதுக்கி பணி செய்யச் சொன்னால் அவர் காலையிலிருந்து டிப்போவில் காத்திருந்த நேரமும், அவர் மதியம் துவங்கி பணி செய்யும் நேரமும் சேரத்து 20 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும்.  அதற்கு பதிலாக ஆளும் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து கப்பம் கட்டிவிட்டால் ரெகுலராக ஒரு தடத்தின் பணி ஒதுக்கப்படும்.  அன்றாடம் அவர் வீட்டிலிருந்து புறப்படுவது முதல் வீடு வந்து சேருவது வரை திட்டமிடமுடியும்.

இப்படிப்பட்ட புதிய பணியாளர்களையெல்லாம்  தனித்தனியாக கூப்பிட்டு “கவனித்த” ஆளும் கட்சி சங்கம் “உனது பணி நிரந்தரம் ஆக வேண்டுமென்றால் தொமுச-விற்கு வாக்களிக்க வேண்டும்.  1998ல் தேர்தல் நடைபெற்ற போது பல பணிமனைகளின் வாக்குகள் ஒரு அண்டாவில் கொட்டி கலக்கப்பட்டு எண்ணப்பட்டது.  ஆனால் தற்போது டிப்போ வாரியாக வாக்கு எண்ணப்படும்.  நீ மாற்றிப் போட்டாயானால் உனது பணி அம்போதான்” என “கனிவாக” அறிவுரை செய்யப்பட்டது.

ஏற்கனவே வீட்டிலிருந்த தாலியையும், வயல்களையும் அடமானம் வைத்து லட்சங்கள் கொடுத்து வேலைக்கு வந்த “உடன்பிறப்புக்கள்” “ரத்தத்தின் ரத்தங்கள்” அவர்களது பார்முலாப்படி வேண்டிய பணி வேண்டுமா அதற்கொரு தொகை, விடுப்பு வேண்டுமா அதற்கொரு தொகை இலகுபணி வேண்டுமா அதற்கொரு தொகை, தற்காலிக வேலை நீக்கத்தை விலக்கிக் கொள்ள ஒரு தொகை என கொடுத்துப் பழகியதால், கடந்த 36 ஆண்டுகளில் தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற பலன்களெல்லாம் புதியவர்கள் அகராதியில் பணத்தால் சாதி்க்க முடியும் என்கிற எண்ணம் வளர்ந்திருந்த சூழலில் இந்த தேர்தல் வந்தது.

எனவே கடந்த 3 வருடங்களுக்குள் இப்படியாக வேலைக்கு சேர்ந்த 40000 புதிய பணியாளர்கள் (அடிமைகள்) மற்றும் குறிப்பிட்ட தடங்களில் பணி புரிய வேண்டும் என்பதற்காகவே ஆளும் கட்சியை சார்ந்து இருக்கும் நிரந்தரப் பணியாளர்கள் என இவர்களை கருத்தில் கொண்டே ஒரு சங்க அங்கீகாரம் என்பதில் முனைந்த தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை வென்றதில் அதிசயப்பட ஒன்றுமில்லை.

தொழிலாளர் வர்க்கமாக ஒன்றிணைந்து போராடாமல் எதையும் பெற முடியாது என்கிற அனுபவ பாடத்தை புதிய தொழிலாளர்கள் கற்றுக் கொள்ள இன்றைக்கு உள்ள முதலாளித்துவ ஆளுமை சமுதாயத்தில் வெகு காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றே எண்ணுகிறேன்.

போக்குவரத்துக் கழகங்களில் புதிய, புதிய பேருந்துகள் நகரை வலம் வந்த போதிலும் அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக,

  • அவரவர் வருங்கால வைப்பு நிதி சேமிப்பிலிருந்தான கடன் தொகை வழங்கப்படாமல் நிலுவையிலுள்ளது.
  • புதிய பென்சன் திட்டம் வந்த போது வருங்கால வைப்பு நிதிச் சட்டத்திலிருந்து வெளிவந்து விட்டதால் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் வ.வை.நிதிப்பணத்தையும் கொள்முதல்களுக்கு கமிசன் தரும் பார்ட்டிகளுக்கு பணம் தரும் வகையில் ரொட்டேசனுக்கு பயன்படுத்தும் அவல நிலை அனைத்து கழகங்களிலும் உள்ளது.
  • சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் ஆயுள் காப்பீடு, வங்கிகளின் வீட்டு வசதி கடன், சொசைட்டி கடன், அஞ்சலக காப்பீடு, மாதாந்திர தொடர் சேமிப்பு போன்றவை அதனதன் கணக்கில் செலுத்தப்படாமல் நிலுவையிலுள்ளது
  • ஓய்வு பெற்றவர்களின் பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்பு போன்றவை நிலுவையிலுள்ளது
  • தவிர தினசரி புறநகர் பேருந்து என்றால் 14 மணி நேரத்திற்கும் மேல், நகரப் பேருந்து என்றால் 10 முதல் 11 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிய கட்டாயப்படுத்தப்படுகின்றனர்
  • பராமரிப்பில், அலுவலகப் பிரிவில் கடந்த 12 ஆண்டுகாக நியமனம் என்பதே இல்லாமல் ஓய்வு பெற்று, இறந்து வெளிச் செல்லும் தொழிலாளர்களின் பணிச்சுமை என்பது இருக்கும் பணியாளர்களின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது
  • விபத்தில் இறந்த பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு என்பது சுமார் 110 கோடி வரை நிலுவையிலுள்ளதால், அடிக்கடி பேருந்துகள் ஜப்தி என்கிற நிலை எழுகிறது.
  • ஜப்தி என்கிற நிலை வரும் போது அரசு கேள்வி கேட்கிறது என்பதற்காக பேருந்தின் ஓட்டுனர் தவறின்றி எதிரே வந்த வாகனத்தின், தனியார் வாகனத்தின் தவறால் விபத்து என்றாலும் கழக ஓட்டுனர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது

இத்தனையும் இருந்து பல ஆண்டுகளாக போராட்ட களத்தில் பழகி வந்த முதுநிலை பணியாளர்கள் கூட வர்க்கமாக ஒன்றிணைந்து உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும் என பழக்கப்படுத்தப்படாமல், பல லெட்டர் பேடு சங்கங்களும் புரோக்கர்களாக  பணி பார்க்க தொடங்கியதால்- காசால் சாதித்து விடலாம் என்கிற மனப்போக்கு வளர்ந்த நிலையில், ஆளும் கட்சி சங்கம் மிக அதிகமான வாக்குகளைப் பெற்று வென்றிருக்கிறது. ஊதிய ஒப்பந்தம் என்பது இரண்டாவது சுற்றுப் பேச்சு வார்த்தை துவங்கிய சில நிமிடங்களில் அமைச்சரால் படாடோபமாக அறிவிக்கப்பட்ட இன்னமும் கணக்கிடும் முறைகள் வெளியிடப்படாமல் வாக்களித்த தொழிலாளர்கள் குழம்பி நிற்கின்றனர்.

அனைத்து மாநிலங்களிலும் தொழிற்சங்கங்கள் என்பது நசுக்கப்பட வேண்டிய ஒன்று என்று முதலாளித்துவ மேலாண்மை பரவி வருகின்ற இன்றைய சூழலில் ஒரு துறை போராடினால் மற்ற துறை தொழிலாளர்கள் வேடிக்கை பார்க்காமல் துறை கடந்த ஒற்றுமையை கட்டி புதிய பொருளாதார தாக்குதலை எதிர்த்து நிற்கும் அரசியலை தொழிலாளர் வர்க்கத்திற்கு கற்றுக் கொடுக்காமல் விட்டது இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாக அமைந்து விட்டது.

போராடாமல் காசு கொடுத்து எதையும் சாதித்துவிடலாம் என்று இன்றைய இளைய தொழிலாளர்களிடம் வேர் விட்டுக் கொண்டிருக்கிற அபாயம் களைந்தெடுக்கப்பட வேண்டும். கட்சி சாராத தொழிற்சங்கங்கள் அந்தந்த தொழில் மையங்களில் தொழிலாளர்களுக்கு மக்களின் துன்பங்களோடு இணைந்த பொது சூழல்களை புரியவைத்து, சம்பளத்திற்காக மட்டும் போராடுவது என்ற நிலைவிடுத்து, சமூகத்திற்காகவும், மறுகாலனியாக்கத்திற்கு எதிராகவும் போராடும் அரசியலை கற்றுக் கொடுப்பதே இது போன்ற நிகழ்விலிருந்து மீண்டு வர வழியாக அமையும்.

___________________________________________________

– சித்திரகுப்தன்
___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கீழைக்காற்று வெளியீட்டு விழா! அறிவுப்பசிக்கு விருந்து !!

39
ஓவியர் மருது நூல் வெளியிட கவிஞர் தமிழேந்தி பெற்றுக்கொள்கிறார்
ஓவியர் மருது நூல் வெளியிட கவிஞர் தமிழேந்தி பெற்றுக்கொள்கிறார்

வெஜிட்டபிள் கட்லெட், மசால் தோசை, மசாலா இல்லாத தோசை, இஞ்சி டீ, சாதா டீ, சமோசா இதெல்லாம் புத்தக வெளியீட்டுக்கு முன்பு, முடிந்த பின் காக்டெயில், அப்சல்யூட் ஓட்கா, ரெமி மார்ட்டின். இந்தக் காட்சிகள் எல்லாம் சமீபத்தில் சென்னையில் நடக்கும் சில நூல் வெளியீட்டு விழாக் காட்சிகள். நுகரும் மூக்கின் வாசனை உணர்வுக்கும், நாக்கின் ருசிக்கும் எச்சிலை ஊற வைத்து கூவிக் கூவி அழைக்கிறார்கள், அந்த நூல் அறிமுக கூட்டங்களுக்கு. அப்படியும் அங்கே அரங்கு நிறைய சிரமப்படுகிறது.

மருத்துவர்-ருத்ரன்-நூல்-வெளியிட-பதிவர்-சந்தனமுல்லை-பெற்றுக்கொள்கிறார்
மருத்துவர் ருத்ரன் நூல் வெளியிட பதிவர் சந்தனமுல்லை பெற்றுக்கொள்கிறார்

கட் அவுட் இல்லை, கட்லெட் இல்லை, சமோசா இல்லை முக்கியமாக சொறிந்து விட அல்லக்கைகள் இல்லை, ஆனால் அந்த திறந்த வெளி அரங்கில் நூற்றுக் கணக்கில் போடப்பட்டிருந்த அத்தனை இருக்கைகளும் நிரம்பி பரந்த அந்த மைதானத்தில் நின்ற படியே கடைசி வரை கலையாமல் நின்றார்கள் மக்கள். 26-12-2010  அன்று ஞாயிற்றுக் கிழமை கீழைக்காற்று பதிப்பகத்தின் எட்டு நூல்கள் வெளியீட்டு விழாவில்தான் இந்த காட்சிகள்.  கூட்டம் துவங்குவதற்கு முன்னரே வந்திருந்த பார்வையாளர்கள் தள்ளுபடி விலையில் நூல்களை வாங்கிக் கொண்டனர்.

புரட்சிகர-மாணவர்-இளைஞர்-முண்ணனி-தோழர்களின்-பாடல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முண்ணனி தோழர்களின் பாடல்

முன்னர் எல்லாம் தோழர்களின் கூட்டம் என்றால் ஒரு சில உளவுத்துறையினரே வருவார்கள். சமீபகாலமாக பல பத்து பேர் வந்து சத்தமில்லாமல் வந்து அமர்ந்து குறிப்பெடுக்கிறார்கள். தோழர்கள் என்ன பேசுகிறார்கள் என்று பதிவு செய்கிறார்கள். நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் கூட புரட்சிகர கருத்துகள் வெளியிடப்படும் ‘அபாயம்’ குறித்து அரசுக்குத்தான் எத்தனை கவலை!

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா- உரையாற்றிய மருத்துவர் ருத்ரன்
மருத்துவர் ருத்ரன்

ஓவியர் மருது, மருத்துவர் ருத்ரன், கவிஞர் தமிழேந்தி, பதிவர் சந்தனமுல்லை,தோழர் மருதையன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவரையும் வரவேற்றுப் பேசிய கீழைக்காற்று பதிப்பக பொறுப்பாளர் தோழர் துரை. சண்முகம் பேசும் போது, தமிழகத்தில் படைப்புலகத்தை  நாசமாக்கி வருமானம் ஈட்டும் தொழிலாகப் பார்க்கும் பதிப்பக அரசியலை அம்பலப்படுத்திப் பேசினார். அரசு படிப்பகங்களுக்கு வாங்கும் நூல்களுக்காக பதிப்பகங்கள் எப்படி ஆளும் வர்க்கங்களுக்கு கால் கழுவி வாழ்கிறார்கள் என்பதைப் பேசிய துரை. சண்முகம் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கிற்கு வாசகர்களிடம் கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பை குறிப்பிட்டார்.

துரை-சண்முகம்
உரையாற்றிய துரை சண்முகம் – கீழைக்காற்று

“எங்கள் கடையில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்குக் கூட நூல்களை விற்பனை செய்கிறோம். அப்படி வாங்குகிறவர்களை மரியாதையாகவும் கௌரவத்தோடும் நடத்துகிறோம். ஏனென்றால் அவர்கள் வாடிக்கையாளர்கள் என்பதால் அல்ல, நாங்கள் ஒரு உயரிய அரசியல் நோக்கத்திற்காக இதை நடத்துகிறோம் என்பதால். நாங்கள் வெளியிடும் புரட்சிகரத் தலைவர்களின் நூல்களைப் பார்த்து விட்டு இப்போது சிலர் லெனின், மாவோ நூல்களை வெளியிடத் துவங்கியுள்ளார்கள். முன்னர் தோழர் ஸ்டாலினை  பாசிஸ்ட் என்று சொன்னவர்கள் இவர்கள். நாளை எங்களைப் பார்த்து இந்தப் பதிப்பகங்கள் ஸ்டாலின் நூலைப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை”” என்று விற்பனை வெறியும், லாப வெறியும் கொண்டு இயங்கும் பதிப்பகங்களை விமர்சனம் செய்து பேசினார்  தோழர் துரை. சண்முகம்.

உரையாற்றிய கவிஞர்-தமிழேந்தி
கவிஞர் தமிழேந்தி

அடுத்துப் பேசிய கவிஞர் தமிழேந்தி கீழைக்காற்று நூலகத்தின் தேவை குறித்தும் அது புரட்சிகர இடதுசாரித் தோழர்களுக்கு மட்டுமல்லாது ஜனநாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் அறிவுத் தேடலுக்கான களமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். வாழ்த்திப் பேசிய மருத்துவர் ருதரன் தனக்கும் தோழர்களுக்குமான நெருக்கம் குறித்து நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். “தன் மீது சொல்லப்படும் விமரிசனங்கள் குறித்து கவலைப்படவில்லை. எங்கும் எப்போதும் என்னை நான் மறைத்துக் கொண்டதுமில்லை” என்று பேசினார்.

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா-உரையாற்றிய-ஓவியர்-மருது
ஓவியர் மருது

தனது ஓவியங்கள் குறித்துப் பேசிய ஓவியர் மருது “எனது ஓவியங்கள் எப்படியான வடிவில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று விரும்பினேனோ அப்படி அதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தவர்கள் தோழர்கள். அந்த வகையில் எனக்கு இது மிகப்பெரிய மகிழ்ச்சியளிக்கிறது”” என்று பேசினார். பதிவரும் தோழருமான சந்தனமுல்லை ஒரு பெண்ணாக பதிவுலகிலும், சமூகத்திலும் எதிர்கொள்ளும் ஆணாதிக்கத்தை நடமுறை வாழ்வியல் அனுபவத்திலிருந்து பேசினார். மிக இயல்பாகவும் எளிமையாகவும் இருந்த சந்தனமுல்லையின் உரையை முழுமையாக வினவும் விரைவில் வெளியிட இருக்கிறது.

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா-உரையாற்றிய-பதிவர்-சந்தனமுல்லை
பதிவர் சந்தனமுல்லை

இறுதியில் ””படித்து முடித்த பின்”” என்னும் தலைப்பில் மிகச் சிறந்த ஒன்றரை மணி நேர உரையை  நிகழ்த்தினார் தோழர் மருதையன். “அறிவுத்தேடல், ஏகாதிபத்திய அறிவுஜீவிகளை எப்படி எதிர்கொள்வது? வாசிப்பனுபவம், மூளையை ஊனமாக்கும் நவீன ஊடகச் செயல்பாடுகளை எப்படி எதிர்கொள்வது? எதை வாசிப்பது, எப்படி வாசிப்பது? எதிரிகளின் பிரச்சாரங்களை எப்படி எதிர்கொள்வது” என்று இன்றைய மறுகாலனியாக்க உலகில் நாம் எதிர்கொள்ளும் எல்லா சம காலப் பிரச்சனைகளையும் மிக அற்புதமாக படம் பிடித்துக் காட்டினார். விரைவில் தோழர் மருதையனின் முழு உரையும் வினவில் வெளிவரும்.

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா-உரையாற்றிய-தோழர்-மருதையன்
தோழர் மருதையன்

மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடந்த கூட்டத்தில். கட்டுக்கோப்பாக இருந்து கடைசி வரை அமர்ந்திருந்து தோழர்களை உற்சாக மூட்டினார்கள் மக்கள்.  பசிதாங்க முடியாத நடுத்ததர வர்க்கத்தின் அறிவுப் பசிக்கும், நாக்கு ருசிக்கும், பந்தி வைத்து பரிமாறும் இலக்கிய மொக்கைகளின் கூட்டங்களுக்கு மத்தியில் மக்கள் விடுதலையை  நெஞ்சிலேந்தி அறிவை விசாலாமாக்கி அனைவருக்கும் உண்மையான விருந்தளித்த கூட்டம் இதுதான்.

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா- மக்கள்-திரள்
மேடையில்

நிகழ்ச்சிக்கு பல பதிவர்களும், வாசகர்களும் வந்திருந்தார்கள். விழாவில் எட்டு நூல்களும் செட்டாக நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விற்பனை ஆனது. அனைவருக்கும் கீழைக்காற்று, வினவு சார்பாக நன்றிகள்.கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா-மக்கள்-திரள்

____________________

– வினவு செய்தியாளர்
____________________

புதிய கலாச்சாரம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

புதிய கலாச்சாரம் டிசம்பர் 2010 மின்னிதழ் டவுண்லோட்!

புதிய கலாச்சாரம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1.       பழைய பேப்பரே வெட்கப்படுது!

2.       டாடாவின் உயிர் வாழும் உரிமைக்கு ஆபத்து!

3.       அயோத்தி: இராமன் போட்ட வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!!

4.       தங்கம்: வெளிச்சத்தின் கீழ் இருள்!

5.       சிலி விபத்து: முதலாளித்துவச் சுரண்டலுக்கு பலியாகும் தொழிலாளர்கள்!

6.       திரை விமரிசனம்: பீப்லி லைவ் -சிரிப்பு வரவில்லை!

7.       வரலாறு: இராஜராஜசோழனது ஆட்சி: பார்ப்பனியத்தின் மீட்சி! அடிமைகளின் அவலம்!!

8.       தொழிலாளர்கள்: பிரிந்திருந்தால் தற்கொலை சேர்ந்திருந்தால் விடுதலை!

புதிய கலாச்சாரம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

உயிர்மைக்காரன் காடுகளை அழிக்கிறது தெரியுமாடே!

135

நமக்கும் இந்த சிறுபத்திரிகைகாரவுகளுக்கும் எப்பவும் ஒத்துக்கிடாது பாத்துக்கிடுங்க! முன்னயாவது அப்பக்கைப்ப கொஞ்சமோ, நஞ்சமோ ஒருபாடு கிசுகிசு வெட்டுக இல்லாம வரும். ஊட்டி தளைய சிங்கம் மேட்டரு, குத்தாலத்துல அண்ணாச்சி விக்ரமாதித்யன் தண்ணியப் போட்டு பண்ணுண அலம்பல், ஜெயமோகன் யாரை அடிச்சாக, சாரு யாருகிட்ட அடிவாங்குனாகன்னு ஒரே ஜாலி ஜம்பர்தான். இவுகதான் சாகவரம் பெத்த இலக்கியம்னு எதை எதையோ சொல்லி பீலா விடுவாக. நம்மளக்க கேட்டா இவுகளோட கிசுகிசுதாதன் சாகாவரம் படைச்ச இலக்கயம்னு அந்த மகர நெடுங்குழைக்காதன் சத்தியமா சொல்லுவேன்.

ம்..ம்.. அதெல்லாம் ஒரு காலம். இப்ப பாத்தீகன்னா எல்லா கிசுகிசு சங்கதிகளையும் நெட்டுல சட்டுப்புட்டுனு எழுதி தள்ளுராகளா, அதுவும் பதிவுலகத்துல கீ போர்ட வச்சே டான்சாடுற நம்ம மொக்கைத் தம்பிமாரு இதுமாதிரியான நியூசெல்லாம் தினமும் ஊர் பூரா போன்ல கூப்ட்டு பத்த வச்சர்ராக. அதுல இருந்தே சிறு பத்திரிகைகள வாங்குறுத நிறுத்தி தொலைச்சாச்சு. பிறவு ஒவ்வொண்ணையும் 30 ரூபா, 50 ரூபா வாங்குறது தெண்டமுல்லா?

நேத்தைக்குத்தான் நம்ம கூட்டுக்காரவுக அவுகளும் என்னாட்டம் இலக்கியவியாதி சகவாசம் வச்சிருந்தவுகதான், இந்த மாசத்து உயிர்மைய கொடுத்தாக. என்னன்னு கொஞ்சம் மேஞ்சு பாத்தா, அடங்கொப்புறானே, என்னத்தைச் சொல்ல……!!!

ஆமா நைனா ஒவ்வொரு தபா நீ உயிர்மை வாங்கிக்கீறீயா, அதுல இன்னா ருக்கும்? அட்டையில மல்டி கலர் மாடுலேஷன். அதான்பா கருத்து கந்தசாமி டிசைன்! குற்றம், தேகம், வதை, இரவுன்னு என்னன்னமோ ராவா அட்ச்சு விடுவான். அப்பாலிகா தலையங்கம் பாத்தா மன்ஸ்ய புத்ரன் அண்ணாத்தே என்னமோ பயங்கரமா பொலிட்டிக்ஸ் பட்சவரு மேறி அவுத்து விடுவாறு, அப்பாலிக்கா நம்ம சாரு நைனா டப்பாகஞ்சிய சீம சாராய பாட்டில் ஊத்தி அட்ச மப்புல ஆறேழு பக்கத்துல சினிமா குனிமான்னு வாந்தி எடுப்பாரு, கொஞ்சம் அந்தாண்ட போனீன்னா இசை, அப்பால ஈரான் சினிமான்னு உடுப்பி அவியலாட்டம் உள்ள தள்ள ரொம்ப இம்சையா ருக்கும். புச்சா இன்னா பாத்தேன்னு கேக்குறீயளா…

மூணாவது பக்கதுல பாத்தீங்கன்னா உயர்மையில இருந்து இந்த வருசம் அறுபது நூலுங்க வருதாம், ஆறுக்கும் மேற்பட்ட வெளியீட்டு விழான்னு கன ஜோரா இருக்குங்க. என்னமோ போங்க, நம்ம கவி அம்பி மனுஷ்ய புத்திரனோட கம்பெனி இம்புட்டு பெருசா வளர்ந்து வருசத்துக்கு அறுபது புக்கு போடுறது சாதாரணமில்லிங்கோ; அப்படீன்னு தப்பா முடிவு செய்ஞ்சிராதீங்க சாமியோவ், கொஞ்சம் முழுசா படிச்சுபுட்டு ஒங்க கருத்த சொல்லுங்க.

முதல்ல பாத்தீகன்னா சுஜாதா நேர்காணல்னு ஒரு புத்தகம். அதுல கட்டிங் லைனா “ அவரது பரந்துபட்ட பன்முகத் தன்மை கொண்ட அக்கறைகளுக்கும் ஆளுமைக்கும் இன்னொரு சாட்சியம்” பளிச்சுனு போட்ருக்காக. ஏம்வே சங்க கால பெண்களை பேசிகிட்டு அப்படியே நைசா பாரிஸ் ஒயினைப் பத்தி பேசுனா அது பன்பட்டர்ஜாம் அக்கறையா? நல்லாருக்கு நைனா உங்க இலக்கணம்.

இந்த ஸ்ரீரங்கத்து பாப்பார ஐயங்காரு ஏதோ கம்யூட்டர பத்தி எழுதினாரு, கூடவே கதங்களயும் எழுதினாருங்கறதெல்லாம் இருக்கட்டும். அவரு ஏன் ஒரு லிபரல் பாயை பிடிச்சு தன்னோட புக் ரைட்ச கொடுத்துட்டு போகணும்? மத்யமர் கதைங்கள்ள இட ஒதுக்கீட்டை கேலி பண்ணி, பிராமண சங்கத்துல விருது வாங்கி, சங்க பரிவாரத்து ஜீக்களுக்கு நமஸ்காரம் போட்ட கையோட சலாம் அலைக்கும் பாய்னு புக் போட விட்டுருக்காருன்னா, அதுதாம்டே பார்ப்பன நரித்தந்திரம். சரி இதுக்காக நம்ம ம.புத்திரனை பாய்னு நினைச்சுக்காதீக. அவுக பாய் இல்ல பிசினஸ்மேன்.

இல்லேன்னா சுஜாதாவோட புக்குங்கள போட்டு, நைசா லைப்பரரிக்கு தள்ளி ஒரு பதிப்பக சாம்ராஜ்ஜியத்தையே உண்டாக்கிட்டாருல்லா, அதுதாம்டே பிசினஸ் தந்திரம். சரி இந்த பாய் எப்படி லைப்ரரி ஆர்டரு பிடிக்குராறு, எவனுக்காவது தெரியுமாடே?

போலே போக்கத்த மூதிகளா, இதுல என்ன இரகசியம் வேண்டிக் கிடக்கு? அப்படியே அந்த அறுபது நூலு நாயன்மாரு பட்டியலப்பாருடே…..

பதிவுலகத்துல இருக்குற சாதா, ஸ்பெசல் சாதான்னு எல்லா பயபுள்ளைகளும் தமிழச்சி தங்கபாண்டியன சாரு புக் பங்ஷன்னுல ஜொள்ளுவிட்டதை எழுதியிருக்கானுகல்லா, அந்த அம்மாதான் இந்த லைப்ரரி ஆர்டர் தேவதை…. எப்புடி?

“பாம்படம்” கரிசல்பூமியின் நினைவுப் பதிவுகள்னு ஒரு புத்தக விளம்பரம். நம்ம தேவதையம்மா எழுதினது. என்ன எழுதியிருப்பாக? “பாம்படமாம் பாம்படம், விருது நகரு பாம்படம், தங்கம் தென்னரசு பாட்டியோட பாம்படம், லைப்ரரி ஆர்டருக்கான பாம்படம்,” இதுதாம்டே விசயம். அடுத்து பாத்தா லைப்ரரி ஆர்டர் தேவதையப்பத்தி மத்த பயபுள்ளக ஆகோ ஓகோன்னு எழுதுன ஐஸ் பேக்டரியவே ஒரு புக்கா போட்டுரக்கானுக, “தமிழச்சியின் பதிப்புலகம் – சில மதிப்பீடுகள்” என்னாமா யோசிக்கிறானுக,,, டெரரால இருக்கு…. அது சரிடே பதிவுலகத்துல இருக்குற ஒரிஜினல் தமிழச்சி இவுகதான்னு குழிம்பிக்கிடாதீங்கடே, நம்ம அக்கா பாரீசுல இருக்காக அவுக வேற…

சரிதானுங்க, லைப்ரரி ஆர்டரோட அடுத்த குல்சா வி.ஐ.பி யாருன்னு தெரியுமாங்கோ? அவருதான் நம்ம வி.சிறுத்தைகளோட எம்.எல்.ஏ இரவிக்குமார். அடிக்கடி கருணாநிதி ஐயாவோட பக்கத்துல நின்னு “இந்தப்பூனையும் பிசா சாப்பிடுமா”ங்குற கதியில போஸ் கொடுப்பாருங்க. அவிகளுக்கென்ன, இப்பதான் ரியல் எஸ்டேட், பஞ்சாயத்துன்னு லைஃப்புல நல்லா செட்டிலாகிட்டாருங்கண்ணா. தமிழ்நாட்டுல இருக்குற இலக்கியவியாதிங்க எல்லாம் கவர்ன்மெண்டு காரியங்கள சாதிக்கணும்னா நம்ம எம்.எல்.ஏவைத்தான் தொடர்பு கொள்றாங்களாம்… அந்த படிக்கு ஐயாவோட நாலு புக்கு ரிலீசாகுதாங்க…

அண்டை அயல் உலகம்“னு ஒரு புத்தகம். இது ஜூனியர் விகடன்ல வந்ததுன்னு நினைக்கிறேனுங்க. அத பாத்தீங்கன்னா ஃபுல்லா நம்ம இந்திய அரசு வெளிநாட்டுக் கொள்கை என்னவோ அதயே ஏகப்பட்ட விவரங்களோட -அல்லாம் நெட்டுல சுட்டதுதாங்க – அடிச்சு விடுவாறு. இன்னைக்கு தமிழ்நாட்டுல பஞ்சாயத்து பண்றவங்க நாளைக்கு நீரா ராடியா அக்கா மாதிரி உலகத்துக்கே பண்ணனுங்குறதுக்கான டிரெயினிங்னு வச்சுக்கங்க. ஆக நம்ம எம்.எல்.ஏ புக்க போட்டுக்கிட்டா அவரு விட்டையோட மத்த விட்டைங்களையும் லைப்ரரிக்கு தள்ளிரலாங்குறதுதான் ஹமீது பாயோட திட்டம். புரிஞ்சுதுங்களா?

ஒரு காலத்துல இவுங்க எல்லாம் ஒரு கூரூப்பாத்தான் அலைஞ்சாங்க. எம்.எல்.ஏ அண்ணன் சேரிப்புயல் கட்சியில சேர்ரதற்கு முன்னாடி காலச்சுவடு அக்ரகாரத்துல நெய் பொங்கல் சாப்பிட்டுகிட்டு இருந்தாக. இப்போ ஒரு சம்மர்சால்ட் போட்டு கலைஞர் ஐயா வூட்டுக் டிகிரி காஃபி குடிக்கிறாங்கன்னா இந்த வளர்ச்சியை உயிர்மை பயன்படுத்தற மாதிரி காலச்சுவடு பயன்படுத்த முடியலைங்க.. அது தனிக்கதை…

இப்ப இந்த அறுபது நூலு நாயன்மாருங்கள்ள சிலர மட்டும் பாப்போம்..

இதுல முத நாயன்மாரு நம்ம சாரு மாமா.. மாமுவோட ஏழு புக்ஸ் இந்த வருடம் ரீலீசாம். இதுல 95 பர்சண்டேஜ் இந்த ஆண்டுல எழுதிக்கீறாராம். என்னா நைனா இது என்ன கட்டிங் மேட்டரா, பர்சண்டேஜ் கணக்கு கொடுத்துகினு…

இதுல முத நூலு தேகம்னு ஏதோ வதை நூலாம். சில பேரு அத சதை நூலுன்னு வியாக்கியானம் கொடுக்குறான். ஓசியில படிச்ச நம்ம தோஸ்த்துகிட்ட கேட்டா அல்லாம் குல்சா மேட்டராம். என்னபா இது அநியாயமா கீது? குண்டியடிச்சான், குஞ்ச ஆட்டுனான், நாக்க போட்டான்னு எழுதுனா அது உலக இலக்கியமா? நெட்டுல மூணு எக்ச போட்டா குல்சா மேட்டரெல்லாம் ஜல்சாவா கொட்டிகினு இருக்கும். இத ஒரு நாவலுன்னு போட்டு பங்ஷன் நடத்தி அதை நாப்பத்திநாலு வெட்டி பாய்ஸ் விமர்சனும்னு போட்டு… படுத்துராங்கப்பா….

செக்ஸ்னா அது ஐஞ்சு நிமிசத்து மேட்டரு, வந்தமா, முடிச்சமான்னு போறதுக்கே ஜனத்துக்கு டைம் இல்ல, அதப்போயி இந்த நைனா 26மணிநேரமும் பேசிக்கினு, எழுதிக்கினு, போய் ஒரு நல்ல டாக்டரப்பாருயா வெண்ணை!

அடுத்த புக்க பாத்தா அது நித்யானந்தாவோட அல்சா மேட்டரு.. இந்த சாமியத்தான் நம்ம நைனா ஒரு காலத்துல கும்பிட்டுகினு, அதயும் போட்டோ புடிச்சு போட்டு பி.ஆர்.ஓ வேல பாத்துகினு இருந்தாரு. அப்பாலிக்கா ரஞ்சிதா சீன் வந்துச்சா, உடனே நைனா நல்ல புள்ளயாட்டம் கூட்டத்தோட கூட்டமா குன்சா தர்ம அடி போட்டு எஸ்ஸாயிட்டாரு. நாஸ்டாவுல உப்ப போட்டு தின்னா இந்த நைனா இப்பிடி செய்யுமா?

சாமி அருள் வாக்கு சொன்னதையும் பிசினஸ் பன்றான், சாமி சரசமாடிச்சுன்னா அதயும் பிசினஸ் பன்றான், நைனா இது உனக்கே அசிங்கமா இல்ல? எபெட்டிஷ்னா என்னான்னு அல்லாருக்கும் டியூஷன் எடுக்குறிரீயே இதுதான்பா டிரிபிள் எக்ஸ் ஃபெட்டிஷ். இதெல்லாம் நைனாவோட குத்தமில்லப்பா. நைனாவுக்கு கூச்ச நாச்சமில்லாம சில குல்சா மொக்கைஸ் செம்பு தூக்குறான் பாரு, அவன பிடிச்சு கேக்கணும்.

கனவுகளின் நடனம்” இது நைனாவோட சினிமா புக்காம். நைனா சினிமாவப்பத்தி எழுதலேன்னு எந்த குயந்தை அழுதுச்சு? இந்த டிஜிட்டல் குப்பைங்கள புக்கா போடுறான்னா என்னா தைரியம்? இதுபோக நைனா எழுதுன அஜால் குஜால் இலக்கிய கிசுகிசுங்க எல்லாம் மூணு புக்சா வந்துருச்சாம். கனிமொழி வந்து காமராஜ் ஹால்ல பேசியாச்சா, இத வச்சே ஹமீது பாய் அல்லா புக்கையும் லைப்பரரிக்கு தள்ளிருவாரு…இனி இன்டருநெட்டுல பாக்க முடியாதவனெல்லாம் நைனா புக்க லைப்ரரியில படிச்சு பரலோகம் போவப் போறான். சாவுங்கப்பா…

ஸ்பெக்ட்ரல் ஊழல்ல லம்பா அடிச்சா கையோட கனி அக்கா காமராசர் ஹால்ல நைனா சாருவோட நட்ப பத்தி பேசுதுன்னா, என்னாத்தச் சொல்ல? அன்னிக்கு அங்கன சம்சா, காஃபிய முழுங்குன ஒரு பயலுக்கும் அக்காவோட ஊழல் கதக்கு ஒரு ஞாயத்தை கேக்கணும்னு தோணலையே?

அப்பால பாத்தா நம்ம எஸ்.ராவோட “துயில்” நாவல். இதுக்கு கட்டிங் லைனா என்னா கொடுத்துகிறான்னா, ” மனித உடல் என்னும் மகத்தான பிரபஞ்சத்தில் நிகழும் எண்ணற்ற விசித்திரங்களைப் பேசும் எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவல்”……

ஏம் வே எஸ்.ரா? இது உமக்கே ரொம்ப ஓவரா இல்லையா வே? மனித உடல்ல என்ன எழுவு விசித்தரத்த கண்டீரு? கக்கா, ஒன்னுக்கு, சளி, எலும்பு, தோலு, இதுதாம்வே எல்லாத்துக்கும் இருக்கு? இதுல ஆம்பளயாளுகன்னா விந்து, பொம்பள ஆளுகன்னா மென்சஸ்னு இதுல என்ன எழவுயா பிரபஞ்ச ரகசியம் இருக்கு? நீரு ஆ.விகடனுல தொடர் எழுனங்கறதுக்காக வீட்டுக்கு விருந்தினர் வந்தா சிரிக்கணும், தேத்தண்ணி கொடுக்கணும்னு காலனாவுக்கு தேறாததையெல்லாம் எழுதினீரு. அந்த கணக்கே இன்னும் முடியலேன்னா பாத்தா அதுக்குள்ள ஒரு நாவல எழுதிட்டீரு. நீரு எழுதுன வசனத்தையெல்லாம் பாலா குப்பைன்னு தூக்கி எறியிதாருன்னு சொல்லுதாக, உண்மையாவே?

எழுத்துங்குறது ஒரு புள்ளத்தாச்சி வலியோட பிரசவம் பாத்து குழந்தைய தர்ரது மாதிரி. அதை பிளாஸ்டிக் பொம்மை மாதிரி தயாரிச்சா அதுல என்னவே விசித்திர வெங்காயம் இருக்கும்?

சரி அடுத்த மேட்டர பாப்போம்.

இந்த அறுபது நூலு நாயன்மாருல்ல இந்த வாட்டி மாஸ்டர் பீஸ் என்ன தெரியுமா? ரசிகமணி டி.கே.சி கடிதங்கள்னு ஒரு புத்தகம். 944 பக்கமாம். 600 ரூபாய் விலையாம். முன்னாடி பதிஞ்சா 450 ரூபாயாம். இதுல அண்ணாச்சி மத்த தம்பிமார் 24 பேருக்கு எழுதின கடுதாசிங்க தொகுத்திருக்காங்களாம். இதுக்கு கட்டிங் மேட்டரா கரிசல் காட்டு செக்ஸ் தாத்தா கி.ரா எழுதுன முன்னுரையில இருந்து போட்டுருக்காக…..

” அவருடைய ஒரு கடிதத்தின் முடிப்பு இப்படி இருக்கும்….” ” என்னுடன் இருந்த நண்பர்களும் எல்லாருமாக நேற்றுப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். தங்கள் அண்ணியும் குற்றாலமும் ஆழ்வார்குறிச்சிக்குப் போயிருக்கிறார்கள். தங்கம் தென்காசி. ஆகவே நான் இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று சிவமே என்றிருக்கிறேன். பலராமும் துணைக்கு இருக்கிறார். அருவிச் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. மற்றபடி நிசப்தம். மணி காலை 3.3.0″

இதுமாதிரி 944 பக்கத்திலும் இருக்குதுன்னா அட கொலைகாரப் பாவிகளா, இந்த கருமாந்திரத்தை புக்கா போடுறதுக்கு எத்தனை ரீம் மேப்லித்தோ பேப்பர், அந்த பேப்பரை தயாரிக்கிறதுக்கு எத்தனை மரத்தை வெட்டி அழிச்சாங்களோ! உயிர்மை பதிப்பகம் காடுகள அழிக்குதுன்னு இப்பவாச்சும் விளங்குதா ஆக்கங்கெட்ட மூதிகளா?

டி.கே.சிக்கு ஏதோ அரசு குமாஸ்தா வேலைக்கு இன்டர்வியூ வந்துதாம். அன்னிக்கு காலையில அண்ணாச்சி கிளம்பும்போது குறுக்க பூனை ஏதோ வந்துச்சுன்னு கேன்சல் பண்ணிட்டராம். அவரு பெரிய ஜமீன்ங்கிறதுன்னால மாளிகை வீடு, தாமிரபரணி சோறு, அவியல்னு உபச்சாரம் பலமா இருக்கும். தமிழ்நாட்டு இலக்கியவியாதிகளை கூப்புட்டு தங்க வச்சு பேசி அழுகு பாத்தே இந்த மனுசன் காலத்தை ஓட்டியருக்காரு. அந்த பூனை மட்டும் அன்னிக்கு வரலேன்னா இந்த 900 பக்கம், ஏகப்பட்ட மரங்க எல்லாத்தையும் காப்பாத்தியிருக்கலாம்.

எங்கூருக்காரகுன்னு பாத்தா மானத்த கப்பலேத்துராரே? ஏலேய் காலையில மூணு மணிக்கும் நிசப்தமாத்தாம்டே இருக்கும், அருவின்னா சத்தம் இருக்காதாடே…இதையெல்லாம் ஒரு பெருசு கடிதம் எழுதி அதப்போய் புக்கா போடுறான்னா இந்த பாய்க்கு என்னா தைரியம்? இனி இந்த எழவும் லைப்ரரி ஆர்டருங்குற பேருல மக்கள் பணத்தை கொள்ளையடிச்சு தமிழ்நாடு முழுக்க போகப்போவுது..

இதுல உங்களுக்கு ஒரு எக்ஸ்குளூசிவ் மேட்டரு ஒன்னு சொல்லுதேன், யாருகிட்டேயும் சொல்லாதீங்க.. இந்த டி.கே.சி பேரன்ங்கள்ள ஒருத்தன் நம்ம கூட்டுக்காரனோட ஆபிசிலதான் வேல பாக்கனாம். அதுல என்ன விசேசம்னா அந்த பயபுள்ளைக்கு தமிழே படிக்க தெரியாதாம்… ஆக தமிழுக்கு தொண்டு ஆத்துன பெரிசு பரம்பரைக்கே தமிழ் தெரியாத போது அந்த பெருசு அப்பம் சாப்பிட்டு குசு விட்ட கதையெல்லாம் புத்தகமா நாம படிக்கணும்னா, ஒண்ணு மட்டும் சொல்லுதேன், இந்த தமிழ்நாடு நாசமா போகட்டும்லே…

இந்த புக்ஃபேருக்கு வாசல்லேயே காத்துக்கிடந்து எந்த பயபுள்ளையாவது இந்த புக்க வாங்கிட்டு வந்தீகன்னா புடிச்சு கடிச்சு வக்கப்போறேன், அம்புட்டு கொலைவெறியில இருக்கேன்…..

சரி இந்த பெருசு புத்தகத்துக்கு முன்னுரை எழுதுன கரிசல் செக்ஸ் தாத்தா கி.ரா இருக்காருல்ல… அவருக்கு மத்த இலக்கியவியாதிமாரு எழுதுன கடிதங்களையும் புக்கா கொண்டு வாராகளாம்… அடுத்து என்ன சாரு மாமாவுக்கு, மாமா சாரு எழுதிய நேஹா கடிதங்களா இல்ல டோண்டு இராகவன் கேள்வி பதிலா… நல்லா இருங்கடே !!!

அடுத்து பாத்தீகன்னா நம்ம ஃபீரிலேன்சு பத்திரிகையாளர் மணாவோட புக்காம். என்னண்டு பாத்தா… “கமல்ஹாசன்: நம்காலத்து நாயகன்” ண்டு தலைப்பு போட்டுருக்கான். கமலஹாசன் நாயகனில்ல, வில்லன்னு எந்த கபோதி சொன்னான்? இதுல கமலைப் பத்தி பிரபல ஆளுமைங் எழுதுன பதிவுகளும் போட்டாவும் வருதாம்.

திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை பிரஸ்ஸூங்களுக்கு போனா தெருவுக்கு ஒரு ரஜனி ரசிகன், கமல் ரசிகன், விஜய் ரசிகன், அஜித் ரசிகன்னு பிரிண்டாகுறதை பாக்கலாம். அதுல இல்லாத பதிவா, போட்டாவா…ஏம்டே இப்படி ஊரை ஏமாத்துரீக….நம்ம பாய் ஏற்கனவே “உன்னைப் போல ஒருவனில்” ஒரு பாட்டு எழுதுனத வச்சு கமலை ஒரு ஏகாந்த யோகியாக சித்தரிச்சு பரவசமான பார்ட்டி. அதுக்கு நன்றிக்கடன்தாம்டே இந்த புக்கு….

இதுக்கு அடுத்தாப்ல நம்ம தத்துவ அறிஞர் யமுனா ராஜேந்திரனோட மூணு புக்கு போட்டுருக்காக.. இதுல புரட்சி, உலக சினிமா, ஆவணப்படம்னு டைட்டிலெல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா அண்ணாத்தே எது எழுதுனாலும் காசியில ஆரம்பிச்சு கன்யாகுமாரி வரை இழுத்து இழுத்து பேசியே கொல்வாரே… முன்ன ஒரு தடவை உயிர்மையில பிழை திருத்தும் வேலை செய்யுற ஒரு நண்பரைப் பாத்தேன்.. அப்பதான் அவரு சொன்னாரு, “யமுனா ராஜேந்திரன் கட்டுரைகளை திருத்தி எழுதுற துக்கத்துக்குகூட மனுஷ்ய புத்திரன் சம்பளம் போறவே போறாது”ன்னு.. இந்த வாட்டி இந்த மூணுபுக்குக்கும் யாரோட லங்கோடு கிழிஞ்சதோ தெரியல..அவுகளுக்கு நம்ம அனுதாபங்களையாவது தெரிவிச்சுக்கிடுவோம்.

தமிழக மேலவை” ங்குற தலைப்புல கே.எஸ்.இராதாகிருஷ்ணன் புக்கு வருதாம். இது சத்தியாம லைப்புர்ரி ஆர்டருக்கான புத்தகம். அண்ணாத்தேயும் தி.மு.கவுல முக்கிய தலைங்குறதால பாய் இவர வச்சு வருசத்துக்கு ஐஞ்சு புக்காவது போடுவாறு. இனி “புதிய சட்ட மன்றம் கட்டிய கதை, மு.கவின் மாமல்லபுர விஜயம், அழகிரியின் டெல்லி வாசம்னு” புது புது புக்குங்க வரும். இதுகளையெல்லாம் வாசிக்கிறதுக்கு தமிழ்நாடு எத்தனை கொடுத்து வச்சுருக்கணும்!!!

வா.மு.கோமுங்கறவரோட இரண்டு நாவலும், ஒரு சிறுகதையும் வருதாம். இவரு யாருன்னு விசாரிச்சா நம்ம நைனா சாருவே இவர தன்னோட சீடன்னு அறிவிச்சிருக்கராம்ல. அப்படின்னா இவரும் ஜல்சா மேட்டரு ரைட்டரா, காலம் ரொம்ப கெட்டுப் போச்சு, வேற என்னத்தைச் சொல்ல?

அப்பறும் பழமொழி, கிராமம், விளையாட்டு, சாப்பாடு ன்னு வெரைட்டியான நூல்கள். ஒரு காலத்துல இதுங்களயெல்லாம் மணிமேகலைப் பிரசுரத்துலதான் பாப்போம்.. இப்ப உயிர்மையிலும் பாக்கலாம்.

வெள்ளைப் பல்லி விவகாரம்” என்ற தலைப்பில் லஷ்மி மணிவண்ணனின் சிறுகதை தொகுப்பு வருதாம். இந்த அண்ணன் யார்? ஒரு  காலத்துல மனுஷ்ய புத்திரன், கண்ணனோட காலச்சுவடு ஆசிரியர் குழுவுல இருந்தவர். தன்னோட வாழ்க்கையை மனுஷ்ய புத்திரன் பாழாக்கிட்டாருன்னு சொன்னவரு. இப்ப பாழாக்குனவரு புண்ணியத்துல புக்க கொண்டு வராறு.. இவனுங்க ஏன் அடிச்சுக்குறான், எப்படி சேந்துக்குறான்ன்னு ஏதாச்சும் புரியுதாடே?

விமலாதித்த மாமல்லன் கதைகள்” இது ஒரு சிறுகதை புக்காம். இவரும் கூட பிளாகுலயும், பஸ்சுலயும், டவிட்டர்லயும் என்னெல்லாமோ எழுதிப் பாக்குறாரு, ஒன்னும் களை கட்ட மாட்டேங்குது. இவரு மாமா சாருவை  திட்டிகிடந்த்தை பாத்து பீதியான நம்ம மொக்கைத் தம்பிமாறுங்க ஜெயமோகனுக்கு எதிரா பாய இவருக்கு கொம்பையும் சீவி மச்சி சாருன்னு பட்டத்தையும் வச்சி அவர்கையில ஒரு குச்சி ஐச கொடுத்திட்டாகளாம்… சரி இருக்கட்டும். மச்சி சாரு 83ல போட்ட புக்கே இன்னும் விக்காம இருக்காம். அதையே பதிவுலகத்துல ஃபிரியாக கொடுக்குறதுக்கு மச்சி சாரு ததிங்கிணத்தோம் போடுறாரு.. இந்த இலட்சணத்துல இவரு கதைங்க அல்லாம் ஒரே தொகுப்பா வருதுன்னா என்னா அர்த்தம்?

அதுல காமடி என்னன்னா இந்த மச்சி சாருவோட வாழ்க்கை இலட்சியம் ஜனாதிபதி கையால விருது வாங்குறதாம். சனாதிபதி கையில விருது வாங்குறது இருக்கட்டும். உயிர்மையில நூல் வெளியீட்டு விழா லிஸ்ட்ல பாத்தீகன்னா, சாரு, எஸ்.ரா, ரவிக்குமார், தமிழச்சி, மனுஷ்ய புத்திரன் மெயின் சாமிகளுக்கெல்லாம் தனித்தனி விழா. ஆனா நம்ம மச்சி சாரு புக்கெல்லாம் 12 புக் வெளியீட்டு விழாவுல கூட்டத்தோட கூட்டமா கலந்து பொச்சு… லோக்கல்லயே தனிக்கவனிப்பு இல்லேங்குற பட்சுத்துல இவரு தன்னை இன்டர்நேஷ்னல் பிகரா நினைச்சு கனவு காணுராரே, நமக்கே ரொம்ப கஸ்டாமா கீது…. காட் பிளஸ் அமெரிக்கா அண்டு மச்சி சார்!@!

புரியாட்டி இன்னொரு உதராணத்த பாப்போம். சேலம் சிவராஜ் வைத்தியர் கிழமைக்கு ஒரு ஊர்னு விஜயம் செய்வாரு. இதுல பெரிய சிட்டிங்களுக்கெல்லாம் முழு நாள ஒதுக்குவாறு. சில்லறை நகரங்களையெல்லாம் ஒரே நாளில் நாலைந்துன்னு பாப்பாரு, இப்ப நம்ம மச்சி சாரோட கதையும் அதுதான், இதுக்கும் மேல புரியலேன்னா சிட்டுக்குருவி லேகியம் வாங்கி விழுங்குலே…..

அடுத்து பத்து கவிதை தொகுப்பு, எப்பவும் வர்றதுதானேன்னு நெனக்காதீக இதுல நம்ம பதிவுலக அம்பிமாறு எழுதுனதும் இருக்காம். வெள்ளிக்கிழமை மாலை கொசு, கழுதை மட்டமும் கழுவாத புட்டமும், பீக்கடல் அப்படீன்னு பதிவமாருங்க டிஜிட்டல்ல கிறுக்கியதை எடுத்து மூணு புத்தகமா போட்டா ஒரு முப்பது பதிவுல விளம்பரம் இனாமா தேத்தலாம். அப்புறம் என்ன புரவலருக்கு புரவலர், விளம்பரத்துக்கு விளம்பரம், வியாபாரத்துக்கு வியாபாரம்… கூட்டிகழிச்சு பாருலே இந்த மார்கெடிங் கணக்கு சரியா வரும்… இதுதாம்லே மனுஷ்ய புத்திரன் ‘டச்‘சு

ஆமா, இதெல்லாம் வரும்போது ”எட்டு லார்ஜ் குடித்தது தப்பில்லை. அடுத்து குடித்த பியர்தான் பிரச்சனை” ன்னு நம்ம எலக்கிய குருஜி சுந்தரின் பஸ்மொழிகளெல்லாம் ஏன் வரலையின்னு கேட்கப்பிடாது. பதிவுலகம் ரத்த பூமி, பதிவர் மேட்டர்லாம் டச் பண்ணா அப்புறம் ரணகளம் ஆகும், ரத்த ஆறு ஓடும் .. பீ கேர்புல். என்னத்தாம்லே சொல்லிகிட்டேன்…

அடுத்து நம்ம ஹீரோவ பத்தி பாப்போம் அதாம்லே அம்பி பாய் மனுஷ்ய புத்திரன். அவுகளோட 120 கவிதைகள் 300 பக்கங்களுக்கு மெகா புக்கா வருதாம்லே.. சாம்புளுக்கு ஒன்னு

இதற்குத்தானா?

பார்க்காமலே
இருந்திருக்கலாம்

பார்த்தும்
பாராத்து போல போயிருக்கலாம்

பார்க்க வந்தது
உன்னையல்ல என்று சொல்லியிருக்கலாம்

பார்த்த பின்னே
பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம்

பார்த்துப் பார்த்து ஏங்கவா
இவ்வளவு தூரம் வந்தது?

…………………………………………………….

தெரியாமத்தான் கேக்கறேன் பார்த்தான், பாக்கலேன்றத பின்னிப் பின்னி எழுத்திட்டு அது கவிதைன்னா அந்த கடவுளுக்கே அடுக்குமாலே..

“கக்கா போகலாம், போகாமலும் இருக்கலாம், போனாலும் பாதகமில்லை, தண்ணியிருந்தா கழுவலாம், இல்லாட்டி துடைக்கலாம், நாறினா ஓடலாம்,” ம்னு நான் என்டர் தட்டாத ஒரு கவிதை சொன்னா ஒத்துப்பியாலே?.. பொழப்ப பாருலே போக்கத்த மூதின்னு துப்பமாட்ட?

தி.மு.க. ஆதரவு பெருந்தலைகளை கொண்டு தன்னோட நூலக ஆர்டரை நைசா வளைச்சு பிசினஸ் சாம்ராச்சியத்தை சைசா தேத்தும் ‘பாஸ்’ மனுஷ்ய புத்திரன் கொண்டுவரும் 60 புத்தகங்களோட லட்சணம் இப்படித்தாம்லே பல்ல இளிக்குது. இதுக்காக்க எத்தன மரத்தை வெட்டிச் சாச்சாகளோ இதத்தாம்லே காடு அழியுதுன்னு சொல்லுதேன். இது சுற்றுச் சூழலுக்கு கேடு இல்லையா? இயற்கை வளமும், கருத்து வளமும் இப்படி வீணாபோவதை நாம ஆதரிக்கவாலே முடியும்… எதிர்க்கனும்லே…!

டிஸ்கி 1: பணி மாற்றமா, பணி உயர்வா, விசாரணையிலிருந்து விடுதலையா, ரியல் எஸ்டேட்டா, கட்டப் பஞ்சாயத்தா, நூலக ஆணைக்கு தள்ள வேண்டுமா, எதையும் புத்தகமாக போட வேண்டுமா – உடனே உயிர்மை பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். வெறும் பதினைந்து சதவீத கழிவைக் கொடுத்து உலகத் தரமான சேவையை பெறுங்கள்…

டிஸ்கி 2: இப்படி காடுகள் அழிந்தால் வெங்காய விலை எப்படி குறையும்?

டிஸ்கி 3: வினவு தளத்தில் வெளியாகும் படைப்புகள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!

________________________

– காளமேகம் அண்ணாச்சி
________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:


மகளிர் காவல் நிலையத்தில்…. ஒரு நேரடி அனுபவம்!

18

தோழி ஒருவருக்காக ஒரு மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. புகார் மனுவை  வக்கீல் எடுத்துவருவதாக சொன்னதால், காவல்நிலையத்துக்கு வெளியே  காத்திருந்தோம். என்ன மகளிர் காவல்நிலையமாக இருந்தாலும், ஒரு பெண்ணால் நேரடியாக கம்ப்ளெயிண்ட் கொடுத்து எப் ஐ ஆர் பதிய முடிவதில்லை.  ஒரு வக்கீல் வந்து இன்ஸ்பெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே  நடைமுறையில் ஓரளவிற்குச் சாத்தியமாகிறது. நாங்கள் சென்ற சமயத்தில், இன்ஸ்பெக்டர் வெளியில் சென்றிருந்தார். ஒரு ஏட்டு, ரைட்டர் மற்றும் நான்கைந்து  பெண் கான்ஸ்டபிள்கள் இருந்தனர். மாலை ஏழு அல்லது ஏழரை மணி இருக்கும்.

அப்போது கண்ணீரோடு ஒரு பெண்  விரைந்து வந்தார். இல்லை, ஓடி வந்தார் என்றே சொல்ல வேண்டும். உள்ளே சென்ற அவர், அங்கிருந்த போலிஸிடம், “மேடம், என் புருஷன் அம்மிக்கல்லை தூக்கி என்மேலே போடறாருங்க மேடம்,  கழுத்துலே பட்டுடுச்சு, தெனம் குடிச்சுட்டு ஒரே அடி,உதை” என்று அதற்கு மேல் பேச முடியாமல் விம்மினார்.

“வீடு எங்கே இருக்கு” என்று வினவிய இன்னொரு போலிஸ்காரரிடம்,   புறநகர்ப்பகுதி ஒன்றைக் கூறினார்.  “சரி, இப்போ எங்கியாவது போய் தங்கிக்கோ, நாளைக்கு காலையிலே வா, கண்டிப்பா விசாரிக்கறோம்” என்றதும்,  முகத்தில் ஏமாற்றத்துடன் பாவமாக “எத்தனை மணிக்கு மேடம்” என்றார் அவர். காலையிலே எட்டு மணிக்குக் கூட வா, நாங்க இருப்போம் என்று நம்பிக்கையளித்தும்,  தயக்கத்துடனே நின்றுக்கொண்டே இருந்தார்  அவர்.

“பயமா இருக்குங்க, மேடம்” என்றதும், “இவ்ளோ நாளா இருந்துட்டே இல்லேம்மா, ஒரு நாள் பொறுத்துக்கோ, அம்மா அப்பா வீடு எங்கே இருக்கு?” என்றார் ஏட்டு. “யாரும் இல்லைங்க மேடம் ” என்றதும்,  “யாராவது தெரிஞ்சவங்க வீட்டுலே போய் தங்கிட்டு காலையிலே வா, இப்போ உன் வீட்டுக்காரனை கூப்பிட்டு நாங்க இங்கே நைட் தங்க‌ வைக்க முடியாது, குழந்தைங்க இருக்கா” என்றதும் “இருக்குங்க மேடம், ஒரு பையன்” என்று சொல்லிவிட்டு  ஒருவித தயக்கத்துடன் வெளியேறினார்.  ஒருவேளை, இத்தனைநாட்கள அவ்வீட்டில் கழித்ததைவிட  இன்று இரவு  அங்கே கழிப்பது என்பது அவர் வாழ்க்கையில் மிகுந்த பயங்கரமானதாக இருக்கக்கூடுமென்ற பயம் காரணமாக இருக்கலாம் அல்லது எங்கு தங்குவது என்ற கலக்கமாகவும் இருக்கக் கூடும்.

அப்பெண் வெளியெறியவுடன்  ஏட்டு “கோயிலுக்கு போயிட்டு வந்துடறேம்ப்பா” என்று வெளியே சென்றார். அவர் திரும்பி வந்த‌போது கையில் ஒரு பாக்கெட் இருந்தது. உள்ளே இருந்த அனைவருக்கும் “அம்மன் என்னா அழகுப்பா” என்று சிலாகித்தபடி விநியோகித்தார். மற்ற பெண் போலிசுகளும் மிகுந்த பக்தியுடன் எடுத்துக்கொண்டனர். வெளியில் வந்து எங்களுக்கும் அந்த பொட்டலத்தை நீட்டினார். பிரசாதம். தோழி எடுத்துக்கொண்டார். “பக்கதுலேதான் இருக்கு, நல்ல தரிசனம் ” என்றார் எங்களிடம் சிரித்த முகத்துடன்.  எனக்கோ,  காவல், சட்ட‌ மற்றும்  மற்றும் நீதித்துறையில் இருப்பவர்கள் ஒரு மதத்தை சார்ந்து அலுவலக நேரத்தில் இருக்கலாமா என்ற சந்தேகம் வந்தது. சடையை இரு புறமும் மடித்து காதோரம் குத்தி  முடியை தொங்கக்கூட விடாத அந்தக்கால பெண் போலிசுகள் நினைவில் எட்டிப் பார்த்தனர்.  மத அடையாளங்களை குறைந்தபட்சம் அலுவலக நேரத்திலாவது வெளிக்காட்டாமல் இருக்கலாம் என்ற நினைப்புடன் பிரசாதத்தை மறுத்து விட்டேன்.

எங்களுடன் இன்னொருவரும் காத்திருந்தார். அவரது பெண்ணுக்காக வந்திருக்கிறாராம். முன்பே புகார் கொடுத்திருக்கிறார்கள்.  மருமகனின் தந்தை,  பெண்ணை  அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், கழுத்தை பிடித்து நெரிப்பதாகவும், ரூமுக்குள் பூட்டி வைத்துவிடுவதாகவும் , அதனால் மகளிர் காவல் நிலையத்தை நாடியதாகவும் சொன்னார். அடுத்த நாள்,  அவரது பெண்ணையும் மருமகன் மற்றும் அவரது தந்தையை ஏசி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்போவதாக அது விஷயமாக விசாரித்துச் செல்ல வந்திருப்பதாகவும் பகிர்ந்துக் கொண்டார்.

இதன் நடுவின் இன்ஸ்பெக்டர் வந்துவிட எங்களை உள்ளே அழைத்து என்ன விஷயமென்று கேட்டுக்கொண்டார். தோழியும் தனது குறைகளைச் சொன்னார். கணவர் குடித்துவிட்டு கலாட்டா செய்வதாகவும், அவரது வீட்டார் தனது உடைமைகளை  வெளியே தூக்கிப் போடுவதாகவும், வீட்டை விட்டு வெளியேறச் சொல்வதாகவும், அதற்காக புகார் கொடுக்க வந்திருப்பதாகவும்  கூறினார். மேலும், தான் விவாகரத்துக்கு முறையீடு செய்யப்போவதாகவும் சொன்னார்.

தோழி மற்றும் கணவரது வேலை, படிப்பு விவரங்களை கேட்டுக்கொண்ட போலிசார், “சாஃப்ட்வேர்தான் சார், இப்போ எல்லாம் ஐடிக்காரங்கதான்…அதிகமா படிச்சிருக்காங்கன்னு சொல்றாங்க, ஆனா சண்டை போட்டுக்கிட்டு அசிங்கம் பண்றது அவங்கதான்” என்று புலம்ப ஆரம்பித்தார். ஒரு சில கேஸ் விவரங்களையும் பகிர்ந்துக் கொண்டார்.  தோழியின் வக்கீல் வந்து சேர்ந்தார்.  புகாரை வாங்கிக்கொண்டு இரவாகி விட்டதால் காலையில் வருமாறும், கணவரை அழைத்து விசாரிப்பதாகவும் வாக்களித்தார்.   கம்ப்ளெயிண்ட் பதிவு செய்து ஒரு ரசீது போன்ற ஒன்றைப் பெற்றுக்கொண்டு வெளியேறினோம்.

பெண் போலிசினால் பெண்ணுக்கு என்ன பயன்?

அடுத்தநாள் வந்தபோது, ஒருவர் ஆஜானுபாகுவான தோற்றத்தோடு அமர்ந்து தியானம், பக்தி பற்றி பேசிக்கொண்டிருந்தார். போலீசார் அனைவரும் மிகுந்த பயபக்தியுடன் கேட்டுக்கொண்டிருந்தனர். சந்தேகங்களையும் கேட்டுக்கொண்டார் ஒருவர்.  வெளியில் சென்றிருந்த இன்ஸ்பெக்டர் அதுவரை வரவில்லை.  தோழியை கண்டதும் ஏட்டு ஒரு கான்ஸ்டபிளை அழைத்து “இவங்க கூட போய் அவங்க வீட்டுக்காரரை கூப்பிட்டு வந்துடு” என்றார்.  தோழியும், கான்ஸ்டபிளும் சென்றுவிட நான் வெளியில் காத்திருந்தேன்.

நேற்று சந்தித்த அந்த பெண்ணின் அம்மா அங்கே நின்றிருந்தார். பார்த்ததும், “அவந்தாம்மா என் பொண்ணோட மாமனார், அவன் மேல தான் கம்ப்ளெயின் கொடுத்திருக்கேன், இவங்க என்னடான்னா அவனை உட்கார வைச்சு ஆன்மீகம் பேசுறாங்க, அவன் பேச ஆரம்பிச்சா அவனை மாதிரி நல்லவனே இல்லன்ற மாதிரி பேசு ஏமாத்திடுவான்” என்று அங்கலாய்த்தார். எத்தனை ஆனந்தாக்கள் வந்தாலும்……என்று நினைத்துக்கொண்டதை சொல்லவில்லை. அதிருப்தியை அவருடன் பகிர்ந்துக்கொண்டதோடு சரி!

இதன் நடுவில், அந்த புறநகர்ப்  பெண் வந்து நின்றுக்கொண்டிருந்தார். யாரும் அவரை விசாரிக்கவில்லை. ஆன்மீகத்தில் லயித்து இருந்தனர். இன்ஸ்பெக்டர் அதற்குள் வந்துவிட, குறிப்பிட்ட பெண்ணும் அவரது கணவர் மற்றும் பெண்ணின் சகோதரரும் எங்கிருந்தோ வந்தனர். அவர்களை ஜீப்பில் ஏறுமாறு சொன்னதும் அப்பெண் விசும்பத் தொடங்கினார்.  ஒரு போலிஸ், “அழாதே, உனக்கு என்ன வேணுமோ நாங்க பண்ணித்தரோம், ஒரு பொண்ணோட கஷ்டம் இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும்” என்று சொல்லி அழைத்துச் சென்றார். இப்போது அவர்களின் கவனம் புறநகர் பெண்ணின் மீது திரும்பியது.

அந்த பெண்ணிடம், “நீ நேத்து வந்தே இல்ல, ஒரு பேப்பர்லே கம்ப்ளெயின் எழுதிக் கொடு ” என்று ஒரு பேப்பரை தந்தார் ஒருவர். அந்த பெண் மருண்ட படி, அதை வாங்கிக்கொண்டு என்னிடம் திரும்பினார். “அக்கா கொஞ்சம் எழுதி தர்றீங்களா” என்று விவரங்களை கூறத் துவங்கினார்.  எழுதப்படிக்க தெரியாதவர்களால் அல்லது வக்கீலை வைத்து புகார் மனு  கொடுக்க முடியாதவர்கள் நிலை இதுதானா? ரைட்டர் என்பவர் புகாரை எழுதிக் கொள்ள  மாட்டாரா?

இதன் நடுவில், இன்னொரு பெண்,  தனது கணவரை அவரது தாய்‍‍ தந்தை அழைத்துச் சென்றுவிட்டதாகவும், மாமியார் காலால் உதைத்ததாகவும்,  சாமான்களை எல்லாம் அவரது கணவர் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் புகார் செய்தார். ஏறகெனவே எழுத்துவடிவில் புகார் கொடுத்திருப்பார் போல. “நீ என்னமா ஆசைப்படறே, வாழணும்னு விரும்பறியா” என்று போலிஸ் கேட்க அந்த பெண் ” ஆமா மேடம், நான் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அவர் கூட தான் வாழணும்னு ஆசைப்படறேன்” என்றதும் “உனக்கு என்ன வேணுமோ நாங்க பண்ணித்தரோம்” என்று உறுதியளித்தார் ஏட்டு.  அந்தப் பெண்ணுடன் இன்னொரு கான்ஸ்டபிளை அனுப்பி அந்த பெண்ணின் கணவரையும், அவர்கள் குடும்பத்தினரையும் அழைத்து வரும்படி சொன்னார் சப்‍இன்ஸ்பெக்டர். கொஞ்ச நேரத்தில் எல்லாரும் வந்துவிட விசாரணை ஆரம்பமாகியது.

சிறுபிள்ளைகள் போல இருதரப்பும் மாற்றி மாற்றி புகார் சொல்லிக்கொண்டிருந்தபோது,  ‘என்ன இருந்தாலும் மருமகளை எதுக்குங்க அடிக்கறீங்க, அதான் கல்யாணம் பண்ணி வைச்சுட்டீங்க இல்ல, அப்புறம் அவங்க ரெண்டு பேரு வாழ்க்கை” என்றதும்  “அவ என் பையனை கை நீட்டி அடிச்சா, அதை பாத்துக்கிட்டு என்னை சும்மா இருக்க சொல்றீங்களா” என்றார் பெண்ணின் அம்மா.

திடுக்குற்ற  போலீஸ் அந்தப் பெண்ணிடம், “என்னம்மா,  அவங்க சொல்றது உண்மையா” என்றதும், “ஆமா மேடம், சண்டையிலே அவர் என்னை கீழே தள்ளுனாருங்க மேடம், நானும் கை ஓங்கி அடிச்சேன்” என்றார். பெருமைக்குரிய விஷயம்தான் இல்லையா…மேலும் வெகு இயல்பான கோபம்தான் அது. ஆனால், விசாரித்துக்கொண்ட போலீஸ்காரருக்கு அப்படி படவில்லை போலும். நூற்றாண்டுகளாக நமது மூளையில் பதிய வைக்கப்பட்டிருந்த அந்த உன்னத கேள்வி அப்போது போலீசு வாயில் இருந்து வெளி வந்தது ” என்ன இருந்தாலும் ஒரு ஆம்பிளைய நீ கை நீட்டி அடிக்கலாமா” என்பதுதான் அது!!  இப்போது அந்தப் பெண்ணிடம் பதிலில்லை.  பஞ்சாயத்து தொடர்ந்து நடந்து ஒரு வழியாக அப்பெண்ணும் அவரது கணவரும்  அதே ஏரியாவில்  இரு தெருக்கள் தள்ளி தனிக்குடித்தனம் வைக்கவேண்டும் என்ற தீர்ப்போடு சப்‍இன்ஸ்பெக்டர் அவர்களை அனுப்பி வைத்தார்.

இதற்குள் தோழியும், அவரது கணவரும் வந்துவிட  போலீஸ்காரர் இருவரையும் விசாரித்தார். தோழி சொன்னது, தோழியின் கணவர் தனது வக்கீலுடன் மாலையில் வருவதாக சொன்னதும் மாலை ஆறு மணிக்கு வருமாறு இருவரிடமும் கூறி திருப்பி அனுப்பிவிட்டன‌ர்.  மாலையில், நானும் தோழியும் திரும்பச் சென்றோம். காவல்நிலையத்தின் நுழைவாயிலின் அருகில் சென்றபோது  ஒரு ஆண் வெளியே வந்தார்.  பார்த்தால்  நடுத்தர வயது என்று சொல்லலாம்.   சற்று குட்டையான உருவம். சற்று பதட்டமாக இருந்தது போலிருந்தது.  வெளியே வந்த போலிசு, “எதுன்னாலும் பயப்படாதே, ராத்திரியிலே ஏதாவது பிரச்சினைன்னா உடனே 100 ஐ கூப்பிடு” என்றதும் அவர் தலையை ஆட்டியபடி சென்றார்.

இன்ஸ்பெக்டரும் இன்னும் சில போலிசுகளும் வெளியே வந்தனர். எங்களைப் பார்த்தும், “அதோ போற ஆளு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி “ஐயய்யோ வாங்க மேடம், என் வீட்டுக்குள்ளே வேற ஒரு ஆள் பூந்திருக்கான்”னு பதறியடிச்சுக்கிட்டு வந்தான். ஆளை அனுப்பினா, அவன் பொண்டாட்டி பிறந்தமேனியா வேற ஆள்கூட இருந்திருக்கா. சனியனுங்க….அப்புறம் துணியை போடவைச்சு இங்கே கூப்பிட்டு வந்திருக்கோம்..உள்ளேதான் இருக்குதுங்க ரெண்டும்..டைவர்ஸ் வாங்கிட்டு எவன்கூடயாவது போக வேண்டியதுதானே…ஒண்ணும் சொல்லிக்க முடியலை…அவ தெளிவா பேசறா…இவன் என்ன பண்ணமுடியும் சொல்லுங்க..பொம்பளைங்க சரியில்லைங்க இந்த காலத்துலே” என்று சொன்னபடி ஏதோ பந்தோபஸ்துக்காக செல்வதாக சொல்லிவிட்டுச் சென்றார்.

நாங்களும் தோழியின் கணவர் தரப்புக்காக காத்திருந்தோம். உள்ளே அந்த குறிப்பிட்ட ஜோடி நின்றிருந்தனர். அப்பெண்ணைப் பார்த்தால் ஒரு முப்பந்தைந்து மதிக்கலாம். மெலிந்த உருவம் கொண்டவராகவும், மொட்டையடித்து இரு இன்ச் வளர்ந்த முடியுடனும் முகத்தில் எந்த உணர்ச்சிகளும் அற்று நின்றிருந்தார். கண்டிப்பாக அவர‌து கணவருக்கும் இவருக்கும் குறைந்தது பத்து வருடங்களாவது இடைவெளி இருக்கலாம். சற்று தள்ளி,  28 வயது மதிக்கத்தக்க, சட்டையில் பட்டன்களை ஏறுக்குமாறாக போட்டபடி அவன் நின்றிருந்தான். முகம் இறுகிப் போயிருந்தது.

அப்போதுதான், ஒரு தம்பதி உள்ளே நுழைந்தனர். காலை தாங்கி தாங்கி நடந்தபடி அந்த அம்மா வர அவருக்கு கைலாகு கொடுத்து அழைத்து வந்தார் அவரது கணவர். ஒரு போலீசுக்கார பெண், அவர்களை பெஞ்சில் அமரச்சொன்னார். அந்த அம்மா, திரும்பி அந்த பையனைப் பார்த்து சட்டை பித்தான்களை ஒழுங்காக போடுமாறு சைகை காட்டினார். அவனோ அதை சற்றும் லட்சியம் செய்யவில்லை. அந்த பையனின் பெற்றோர் இவர்கள். அந்த வயதானவரிடம் விபரங்கள் கேட்டு, பெண் போலிசு ஒரு தாளில் எழுதத் தொடங்கினார். முடிக்கப் போகும் தறுவாயில் அந்த அம்மாள் எங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு சில்லறை இருக்குமா என்று கேட்டார்.  எங்களிடம் சில நூறு ரூபாய்களே இருந்தன. அந்த அம்மாளின் கணவர் வெளியே சென்றுவாங்கி வந்தார். அந்த தம்பதியினரும், அந்த பெண் போலீசும் உள்ளறைக்குச் சென்றனர். சற்று நேரத்தில், அந்த தம்பதியினருடன் அந்த ஆளும் வெளியே வந்தனர்.

அந்த ஆளின் முகத்தில் எந்த பாதிப்பு தெரியவில்லை. மிக சாதாரணமாக ஒன்றும் நடக்காதது போலவே வெளியே வந்தார். கேட்டின் அருகில் மூவரும் சென்றதும், அந்த அம்மாள் மட்டும் திரும்ப உள்ளே வந்தார். அமர்ந்திருந்த அப்பெண்ணின் அருகில் சென்று குனிந்து கையை நீட்டி, “இனிமே ஏதாவது தப்பு நடந்தது கொன்னுடுவேன்” என்றும் “வெக்கமாயில்லே, உனக்கு ரெண்டு பசங்க இருக்கு இல்லே, ஒழுக்கமா இருக்கிற வழிய பாரு”  என்று கடுகடுப்பாக சொல்லிவிட்டு எங்களை நோக்கி “அவளுக்கு கொஞ்சமும் மானம் ரோஷம் இல்லே, எப்படி உட்கார்ந்திருக்கா பாருங்க‌” என்று  சொன்னபடி தாங்கி தாங்கி நடந்துசென்றார்.

நிச்சயம் இது ஆச்சரியமாக இல்லை. ஒழுக்கம் என்பது பெண்ணுக்கும் மட்டுமே, ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், மானம் ரோஷத்துடன் வாழ வேண்டியது பெண் மட்டுமே என்று சட்டங்கள் எழுதும் நாட்டில் இது ஒன்றும் ஆச்சரியமே இல்லை. போலீஸ் ஸ்டேஷன் என்ன? நீதிமன்றங்களில் கூட எழுதப்படாத சட்டங்கள் உயிருடன் தானே இருக்கின்றனர். முழு தவறுக்கும் பெண்ணே பொறுப்பு என்பது போல அந்த ஆணின் தாயே அப்பெண்ணை பழித்து தவறில் பங்கு பெற்றவனை பெருமை குறையாமல் அழைத்துச் செல்ல முடிகிறதே! அப்பெண்ணை திட்டிய மறுகையோடு அந்த ஆணையும் நாலு அடி செருப்பால் அடித்திருந்தால் அவர் சொல்லும் ஒழுக்கத்திற்கு அர்த்தம் உண்டு.

அந்த அம்மாள் சென்றபின்,  போலீசுக்காரர் “நல்லாவா இருக்கு இதெல்லாம், ஒழுங்கா இருக்க வேண்டியதுதானே, ரெண்டு பசங்க இருக்கு இல்லே” என்று தன் பங்குக்கு ஆரம்பித்தார். தனித்து விடப்பட்ட அவர் தனது செல்போனில் யாரையோ அழைத்தார். அவரை அழைத்துச் செல்ல யாராவது வரவேண்டுமே! “யாருக்கு போன் பண்றே, யாரும் இல்லேன்னே இல்லே, போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணு ” என்று தனது அதிகாரத்தை காட்ட ஆரம்பித்தார் போலிசுக்காரர். “இல்லே, எங்க சித்தி பொண்ணுக்கு…” என்று இழுத்ததும் போனை வாங்கி வைத்துக் கொண்டார். கதியற்று அமர்ந்திருந்த அப்பெண் அடுத்து என்ன நடக்கும் என்று அந்த போலிசிடமே வினவினார். “கோர்ட்டுல போகணூம்” என்று சொல்லிவிட்டு “அந்த ஜன்னலை எல்லா சாத்து, பின்னாடி கதவை மூடிட்டு வா” என்று வேலைகளை ஏவத் தொடங்கினார்.

எவ்வளவு மனித உரிமை மீறல்! அப்பெண் தவறு செய்தவளாகவே இருக்கட்டும், அவரைப் பற்றிய தீர்மானங்களை, முடிவுகளை,  தண்டனைகளை எடுக்க இவர்கள் யார்? போலிசாகத்தான் இருக்கட்டுமே! என் தோழியின் விஷயத்தில் பெண் காவல் அதிகாரிகளின் போக்கு  சுவாரசியமான, நிச்சயம் விவாதத்திற்கான சம்பவமே! பிறிதொரு முறை பகிர்ந்துக்கொள்கிறேன்.

ஆனால், மகளிர் காவல் நிலையங்கள் என்பவை ஆண் காவல் நிலையங்களில் அல்லது பொதுக் காவல் நிலையங்களின் மற்றுமொரு கையாகவே விளங்குகிறது.  அதாவது, பொதுக்காவல் நிலையத்தின் பணிச்சுமையை வேண்டுமானால் இந்த அமைப்பு குறைக்கலாமே தவிர இதனால் பெண்களில்/குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்களில் அல்லல் சற்றும் குறையவில்லை.   இது, பெண்ணின் கைக் கொண்டு பெண்களை ஒடுக்குவதற்கே இவ்வமைப்பு உறுதுணையாக இருக்கிறது. சட்டமும், ராணுவமும், போலிசும் எப்படி ஒரு வர்க்கத்தை ஒடுக்க மற்றொரு வர்க்கமாக இருக்கிறதோ அது போல.  மகளிருக்கான  பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை  ஓரளவுக்கு தருவதாகக் கொண்டாலும், உரிமைகளை பாதுகாக்க ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍, ‍ குறைந்த பட்ச மனித உரிமைகளைக் கூட கொடுக்க முடியவில்லை. இதற்கு பெண் அதிகாரிகளின் போக்கும் முக்கியக் காரணம்.

ஏற்கெனவே சமூகத்தால் உண்டாக்கி வைக்கப்பட்ட கருத்துகளை தலையிலேற்றிக் கொண்டு அதை கட்டிக்காப்பதிலேதான் முனைப்பாக இருக்கிறார்களே தவிர வேறு எந்த சுதந்திரமான சிந்தனைகளோ முற்போக்கான எண்ணங்களோ நான் கண்ட காவல்நிலையத்தில் இல்லை.  சென்னையில் புறநகர் பகுதியிலே இப்படி  என்றால் தமிழகத்தின் கிராமப்புற/ஊராட்சிகளில் எப்படி இருக்குமென்று நீங்களே கற்பனை செய்துக் கொள்ளலாம்.  மேலும், குடும்பப் பிரச்சினைகளை வெளியே கொண்டு  வரும் பெண்களை‍ , படிக்காத அப்பாவி பெண்களை, குரல் உயர்த்தத் தெரியாத பெண்களை நடத்தும் முறை நிச்சயம் வேறுதான்.

பெரும்பாலும் இவை குடும்ப அமைப்புகளை கட்டிக்காக்கவே, குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளை கட்டப்பஞ்சாயத்து முறையில் தீர்க்கவே முற்படுகின்றன.  புகாரை வாங்கிக் கொண்டு இருதரப்பிலும் எழுதி வாங்கிக்கொண்டு விட்டுவிடுவதுதான் பெரும்பாலும் நடக்கிறது. அடிவாங்கி ரத்தம் சொட்ட வந்தாலொழிய இவர்கள் வன்முறை என்று நம்புவதில்லை. மனதளவில் நடந்தாலும் வன்முறை வன்முறையே! ஒரு கட்டத்தைத் தாண்டி இவர்களுக்கு அதிகாரம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால்,  குடும்ப அமைப்பினால் அழுத்தப்பட்டு, ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு திசை தேடி வரும் பெண்களை மீண்டும் அவ்வமைப்பிற்குள்தான் தள்ளுவதுதான் இக்காவல் நிலையங்களின் கடமைபோலவே நடந்துக் கொள்கிறது.  “மகளிர் காவல் நிலையங்களினாலே விவாகரத்தின் எண்ணிக்கை கூடுகிறது” என்று ஹை கோர்ட்டின் நீதிபதி ஒருவர் தீர்ப்பெழுதி இருக்கிறார். அதனால், குடும்பப் பிரச்சினைகளை எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எதுவும் செய்து விட முடியாது என்று சால்ஜாப்பு வேறு இவர்களுக்கு இருக்கிறது.

பன்னெடுங்காலமாக, ஒடுக்கப்பட்ட பெண், சமூகத்தாலும் குடும்பத்தாலும் வஞ்சிக்கப்பட்ட பெண் சட்டத்தின் துணைக் கொண்டு  வெளிவே வரும்போது அவளுக்கு உதவாமல் குடும்பத்தை கட்டிக்காக்கும் கோர்ட்டுகளும் காவல் நிலையங்களும் எதற்காக?

ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்தில் தனக்கு இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதியையும், வன்முறையையும் பேசமுற்படுவாராயின்….நிச்சயம் சிவில் போர்தான். முற்றிலும் ஆணாதிக்கத்தை தலையில் சுமந்துக் கொண்டிருக்கும், ஆணின் எண்ணங்களை உள்வாங்கிய பெண்கள் வேலை செய்யும் இடமே மகளிர் காவல் நிலையங்கள். இவற்றினால் என்ன பயன்?

_________________________________________________________

– கலா, வினவு வாசகர்
_______________________
_______________________________________

கூட்டணி ப்ளாக்மெயிலுக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல்!!

26

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஊடகங்களால் அதிகம் வில்லனாக்கப்பட்டவர் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாதான். இந்தியாவில் அறியப்பட்ட எல்லா ஊழல்களிலும் அரசியல்வாதிகள், ஓரளவுக்கு அதிகாரிகள் மட்டுமே தொடர்புடையவர்களாக காட்டப்பட்டிருக்கின்றனர். இதில் மறைக்கப்படும் விசயம் என்னவென்றால் இந்த ஊழல்களுக்கு அச்சாரமான முதலாளிகளின் தொடர்புகள் மட்டும் எப்போதும் தெரிவதில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழல், ராடியா டேப் போன்றவற்றின் மூலம் சில முதலாளிகளது பெயர்கள் கசிந்திருக்கின்றன. ஆனால் என்ன பயன்? நேற்று புதிய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபில் தொலைத்தொடர்பு சேவை முதலாளிகளான ரத்தன் டாடா, அனில் அம்பானி, சுனில் மிட்டல் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார். என்ன பேசியிருப்பார்? கவலைப்படாமல் தொழிலைத் தொடருமாறும், செய்திகளில் அவர்களது பெயர்கள் அடிபட்டாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாமென்றும்தான் பேசியிருப்பார். இதை நாம் ஊகமாகச் சொல்லவில்லை, ஊடகங்களும் அப்படித்தான் செய்தி வெளியிடுகின்றன.

ரத்தன் டாடாவின் தொழில் விருப்பங்களுக்கேற்ப ராசாவை அமைச்சாராக்க நீரா ராடியா லாபி வேலை செய்தது ஆதாரப்பூர்வமாகவே நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில் புதிய அமைச்சர் அதே டாடாவை சந்தித்து ” மாப்புள, நீ ஒன்னியும் கவலப்படாத, எதையும் கண்டுக்காம தொழிலப் பாரு”ன்னு பேசினால் அதன் மறைபொருள் என்ன? ஊழல் செய்த முதலாளிகளின் தகிடுதத்தங்கள் மறைக்கப்பட்டு எல்லாவற்றையும் ராசா தலையில் கட்டுவதுதான் நோக்கம்.

ஊடகங்கள், அரசியல் கட்சிகள், புரோக்கர்கள் எல்லாரும் இந்த வேலையைத்தான் செய்து வருகின்றனர். அமெரிக்க மாமா சுப்ரமணிய சாமி நேற்று நெல்லையில் அ.தி.மு.க பினாமி கூட்டம் ஒன்றில் பேசும்போதும் இதையே கூறியிருக்கிறார். அதாவது பிரதமர் மன்மோகன் சிங் நல்லவராம், அவருக்கு ஊழலில் தொடர்பே இல்லையாம், எல்லாம் ராசாதான் செய்திருக்கிறாராம். இப்படி கல்லூளி மங்கனைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன?

சு.சாமி கூட ஒரு அரசியல் புரோக்கர்தான். அமெரிக்காவிற்கும், காங் எதிர்ப்பு, பா.ஜ.க ஆதரவு முதலாளிகளுக்கும் தரகு வேலை பார்க்கும் இந்த மாமா ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெரிய புடுங்கி போல பேசுவதற்கு காரணம் என்ன? வரும் சட்டமன்றத் தேர்தலலில் தி.மு.க – காங் கூட்டணியை கலைப்பதன் மூலம் அ.தி.மு.கவிற்கும், மறைமுகமாக பா.ஜ.கவிற்கும் உதவுவதுதான் நோக்கம். அதனால்தான் இவர் ராசாவை மட்டும் குறிவைத்து தாக்குவதோடு ஒவ்வொரு முறையும் கல்லுளி மங்கன் மன்மோகன் சிங்கிற்கும் வக்காலத்து வாங்குகிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பா.ஜ.க ஆட்சிக்காலத்திலேயே தொடங்கிவிட்டது குறித்தெல்லாம் மாமா சு.சாமிக்கு கவலை இல்லை. அவரது ஒரே அஜண்டா தி.மு.க எதிர்ப்புதான். அதுவும் கூட அவரது பார்ப்பனிய சிந்தனையில் ஆழப்பதிந்துவிட்ட விசயம்தான். ஆக ஒரு அரசு, அரசியல் அமைப்பு சம்பந்தப்பட்டிருக்கும் ஊழலை ஒரு தனி மனித, கட்சி விவகாரமாக மாற்றுவதையே சு.சாமி குறிக்கோளாக கொண்டிருக்கிறார்.

ஸ்பெக்ட்ரல் ஊழல் வெடித்துக் கிளம்பியதற்கு தான்தான் காரணமென்று பிதற்றித் திரியும் ஜெயலலிதாவின் கணக்கும் அதேதான். வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவின் பணபலத்தையும், அழகிரி ஃபார்முலா தேர்தல் முறையையும் (உண்மையில் இந்த தேர்தல் ஃபார்முலாவைக் கண்டுபிடித்தவர் ஜெயலலிதாதான்) எதிர் கொள்ள முடியாபடி, சொந்தக் கட்சி கரைந்து கழுதையாகிவிட்ட நிலையில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல்.

முழுத் தமிழகத்தையும் கொள்ளையடித்து மொட்டை போட்ட இந்த ஊழல் நாயகி இப்போது ஊழல் எதிர்ப்பு வீராங்கனையாக பேசுவதை என்னவென்று சொல்ல? ராசாவை நீக்கினால் காங்.கிற்கு அ.தி.மு.க ஆதரவளிக்கும் என்று தொடங்கியவர் இன்னும் நிறுத்தவில்லை. போதாக்குறைக்கு ஊடகங்களும் இந்த கூட்டணி மாற்றத்தை ஏற்றிவிடுகின்றன. அந்த வகையில் தமிழக ஊடகங்களில் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது கூட்டணி மாற்றம் குறித்த பரபரப்பு செய்தியாக மாற்றப்பட்டுவிட்டன.

நேற்று கோபியில் பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் “அ.தி.முகவுடன் கூட்டணி ஏற்படலாம், தி.மு.க வுடன் கூட்டணி முறியலாம்” என்றே கருத்து தெரிவித்திருக்கிறார். ஆரம்பத்தில் ராசா குற்றமற்றவர் என்று நல்லபிள்ளை போல பேசிய இளங்கோவின் பிறகு சூழ்நிலை மாறியதும் தனது பழைய அஜெண்டாவை கையிலெடுத்துக் கொண்டார். சோனியா பெயரைக் கேட்டாலே சிறுநீர் கழிக்கும் இந்த ஈரோட்டு அடிமை ஏதோ தன்மானமுள்ள வீரன் போல சித்தரித்துக் கொள்ளும் கொடுமையை என்னவென்று சொல்ல?

தமிழகத்திற்கு இருநாள் சுற்றுப்பிராயாணமாக வரும் ராகுல் காந்தி, காசுக்கு அழைத்து வரப்படும் 63,000 செட்டப் இளைஞர் காங். நிர்வாகிகளை சந்திக்கிறாராம். ஆனால் கருணாநிதியை சந்திக்கவில்லையாம். இதனால் கூட்டணி முறிந்து விடும் என்று ஊடகங்கள் வதந்திகளைக் கிளப்புகின்றன. ராகுல் காந்தி வரும் நேரம் பார்த்து அவரது அடிமை இளங்கோவனும் அதே போல பேச போயஸ் தோட்டத்தில் உற்சாகம் பொங்கி வழிகிறது.

பா.ஜ.க காலத்திலிருந்து நிறுவன ஊழலாக நிலைபெற்றிருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரசு கட்சிக்கு மிகப்பெரிய பங்குண்டு. 2008 இல் ராசா ஒதுக்கியது குறித்து 2010இல் அதுவும் எதிர்க்கட்சிகள் பேச ஆரம்பித்த பிறகே காங்கிரசும் ஏதோ நடவடிக்கை எடுப்பது போல பாவ்லா காட்டுகிறது. அந்தப் படிக்கு இந்த ஊழலை காங்கிரசு சந்தர்ப்பவாதமாக கையாள்கிறது. விசாரணை, சி.பி.ஜ ரெய்டு, என்றெல்லாம் சீன் போடுபவர்கள் ஏன் அதை இரு வருடங்களுக்கு முன்னரே செய்யவில்லை?

காங்கிரசின் நோக்கம் முதலாளிகளுக்கு உதவுதுதான். அதை செய்துவிட்டார்கள். தற்போது ஊழல் என்று பேசப்படும் நிலையில் அதை வைத்து தமிழக கூட்டணியில் தமது பங்கை அதிகப்படுத்தும் வேலையைச் செய்கிறார்கள். அதனால்தான் ராசாவை மட்டும் இந்த ஊழலில் தனிமைப்படுத்திவிட்டு பழம்பெரும் காங்கிரசு பெருச்சாளிகள் ரொம்ப நல்லவர்கள் போல நடிக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து தி.மு.கவிடம் அதிக தொகுதிகளை வரும் தேர்தலில் கேட்கலாம். அதை தி.மு.கவும் தவிர்க்க முடியாது. இரண்டாவது சந்தர்ப்ப சூழலைப் பொறுத்து தி.மு.க கூட்டணியை வெட்டியும் விடலாம். அதனால் ஜெயா நிச்சயம் அதிக தொகுதிகளை தருவது உறுதி. மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழலை தி.மு.க ஊழலாக அல்லது ராசா ஊழலாக மாற்றி தேர்தலில் ஆதாயமும் அடையலாம்.

ஆக ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொறுத்தவரை காங்கிரசு ஒரே கல்லில் இரு மாங்காய்களை அடித்திருக்கிறது. முதலாளிகளுக்கு மலிவான விலையில் அலைக்கற்றையை ஒதுக்கியது, அப்படி ஒதுக்கியதில் ஊழல் என்ற பெயரில் தமிழக கூட்டணி பலத்தில் தனது பங்கை அதிகப்படுத்தியது; அதன்படி தமிழகத்தில் சுவரொட்டி ஒட்டுவதற்கு கூட தொண்டர்கள் இல்லாத மிட்டா மிராசுதாரர்களைக் கொண்ட கட்சி, தலைவர்களும், கோஷ்டிகளும், வேட்டிக் கிழிப்புகளுமே கொண்ட கட்சி இப்போது ஜாமென்று பல்லக்கில் பவனி வருகிறது. இதற்காகத்தான் இவர்கள் காத்திருந்தார்கள் போலும்.

ஸ்பெக்டரம் ஊழலுக்காக நாடு முழுவதும் எதிர்ப்பு இயக்கம் எடுக்கப் போவதாக சி.பி.எம் அறிவித்திருக்கிறது. இணையத்திலும் நமது மாற்று தோழர்கள் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து தினம் இரண்டு பதிவுகள் போட்டுத் தாக்குகிறார்கள். தோழர்களது கணக்கு இதை வைத்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு, தி.மு.க இல்லாத அ.தி.மு.க அணியை பலப்படுத்துவது. ஆனால் அம்மா அங்கே தோட்டத்தில் காங்கிரசு பெருச்சாளிகளுக்குக்காக பொக்கேயை வைத்துக் கொண்டு காத்துக்கிடக்கிறாரே? பார்ப்பனிய ஊடகங்களும் அதையே இலக்கு வைத்து பிரச்சாரம் செய்கின்றன. இந்நிலையில் தோழர்கள் என்ன செய்வார்கள்? காங், அ.தி.மு.க கூட்டணி அமையக்கூடாது என்று ஆண்டவனிடம் வேண்டுவதைத் தவிர அவர்களுக்கு கதிமோட்சம் ஏதுமில்லை.

மேலும் ஊழல் நாயகி ஜெயலலிதா தலைமையில் ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்க்க முடியுமா என்ற கூச்சம் கூட சி.பி.எம்மிடம் இல்லை. அந்த அளவுக்கு அம்மா விசுவாசம் கொடிகட்டிப்பறக்கிறது. சுயமரியாதையும், தனது கொள்கையை வைத்து மக்களைத் திரட்ட முடியுமென்ற நம்பிக்கையும் இல்லாத இந்த செங்கொடிக் கோமாளிகளின் அரசியல் எதிர்காலம் அதாவது தமிழகத்தில் கிடைக்கும் நாலைந்து சீட்டுக்கள் போயஸ் தோட்டத்து புரட்சித் தலைவியிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ஒருவேளை காங், அ.தி.மு.க கூட்டணி ஏற்பட்டால் சி.பி.எம் தோழர்கள் வேறுவழியின்றி தி.மு.க கூட்டணிக்கும் செல்வதற்கு தயங்க மாட்டார்கள். என்ன, “ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசா மட்டும் செய்தது, அதற்கும் தி.மு.கவிற்கும் தொடர்பில்லை” என்று ஒரு விளக்கம் கொடுத்தால் போயிற்று. அந்த வகையில் சாயம் போன இந்த செங்கொடியின் எதிர்காலம் கோபாலபுரத்திலும் சிக்குண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

எனினும் நிறுவன மயமான ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க மட்டும்தான் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று காங்கிரசு அத்தனை சுலபத்தில் கழட்டி விட முடியாது. அதனால்தான் தற்போது விசாரணைகள், ரெய்டுகள் எல்லாம் ராசா, சில அதிகாரிகள் என்று தனிநபர்களை மையமாக வைத்து செய்யப்படுகின்றன. அதன்படி இதில் ராசாவை மட்டும் பலிகொடுத்து தி.மு.க, காங்கிரசு கூட்டணி நீடிக்கவும் வாய்ப்பிருக்கின்றன. இதில் காங்கிரசு மேல் நிலையிலிருக்கும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் புதிதல்ல.

இந்த உள்குத்து நிர்ப்பந்தத்தை தி.மு.க பெருச்சாளிகள் அறியாமலில்லை. அதனால்தான் மாறன் சகோதரர்கள், ஸ்டாலின், அழகிரி கோஷ்டிகள் எல்லாம் ஒன்றிணைந்து சி.ஜ.டி காலனி கோஷ்டியை தனிமைப்படுத்தும் வேலையைச் செய்கின்றன. இதற்காக மாறன்கள் தற்காலிகமாக அழகிரி கும்பலுடன் சமாதானமாக இணைந்திருக்கிறார்கள். தற்போது ராஜாத்தி அம்மாள் கோஷ்டியின் எதிர்காலம் கருணாநிதியின் தர்மசங்கடம் என்ற வகையில்தான் ஊசாலாடுகின்றதே அன்றி வேறுவகையில் அல்ல.

தமிழக ஊடகங்கள் அனைத்தும் இதையே பரபரப்புச் செய்தியாக்கி விற்று வருகின்றன. கருணாநிதியைப் பொறுத்தவரை அவரைப் பாராட்டி ஏதாவது ஒரு விழா எடுத்து நேரு உள்விளையாட்டு அரங்கில் ஒரு குத்தாட்ட நிகழ்ச்சி நடத்திவிட்டால் போதுமானது. அத்தகைய காக்காய் முதுகு சொறிதலைத் தவிர அவருக்கு வேறு நோக்கங்கள் இல்லை. எனவே ராசாவை மட்டும் பலிகொடுத்து விட்டு தி.மு.க பழையபடியே ஒன்றுமில்லாதது போல இயங்குவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஆக கூட்டி கழித்துப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம் ஊழல் இத்தகைய கூட்டணி பேரங்களுக்கான கச்சாப்பொருளாக மாற்றப்பட்டுவிட்டது. ஒன்னே முக்கால் இலட்சம் கோடி ரூபாய் ஊழல் என்பது ஏதோ வானத்திலிருந்தோ இல்லை நாசிக்கில் அச்சடிக்கப்பட்டு வரும் பணம் என்பதாகத்தான் மக்கள் புரிந்திருக்கின்றனர். இல்லை அது அவர்களிடமிருந்துதான் பறிக்கப்பட்டிருக்கிறது என்பது இங்கே சுத்தமாக மறைக்கப்பட்டிருக்கிறது.

இனி இந்த விவகாரங்கள் ஓய்ந்து கூட்டணி பேரங்கள் பேசி முடிக்கப்பட்டு அமல்படுத்தும் வேளையில் டெல்லியில் ஏதாவது ஒரு பண்ணை வீட்டில் விருந்து நடக்கும். எல்லா முதலாளிகளும், அரசியல் பெருந்தலைகளும் அங்கே வருவார்கள். “சியர்ஸ்” சொல்லிக் கொண்டு சீமைச்சாராயத்தை உள்ளே தள்ளும் வேளையில் நாட்டுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் அங்கே கேலிக்குரிய இறந்த காலமாகிவிடும். தேசத்தின் அடுத்த வளத்தை எப்படி சுருட்டலாம் என்று அங்கே விவாதம் சூடுபிடிக்கும். நமட்டுச் சிரிப்புடன் முதலாளிகள் தத்தமது மாளிகைக்குத் திரும்புவார்கள்.

இதை ஏற்கப் போகிறோமா, இல்லை இந்த ஊழலின் உறைவிடமாய் நாறும் இந்த சமூக அமைப்பை தகர்க்கப் போகிறோமா?

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

கீழைக்காற்று பதிப்பகம் சார்பாக எட்டு நூல்கள் வரும் ஞாயிறு 26.12.2010 அன்று வெளியிடப்பட இருக்கின்றன.

  1. கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கை செயல்களைக் காட்டும் முக்கிய நாட்குறிப்புகள்

    விலை ரூ. 40.00

  2. ஈராக்: வரலாறும் அரசியலும்

    பதிவர் கலையரசன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு,
    விலை ரூ. 15.00

  3. அருந்ததி ராய் – கரண்தபார் விவாதம்

    – வினவில் வெளியான தொலைக்காட்சி விவாதம்
    விலை ரூ. 10.00

  4. விடுதலைப் போரின் வீர மரபு

    – புதிய கலாச்சாரம் இதழில் வெளியான காலனியாதிக்க எதிர்ப்பு மரபு சிறப்பிதழின் நூல் வடிவம்,
    விலை ரூ. 65

  5. பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்

    – உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி வினவு தளத்தில் வெளியான சிறப்புக் கட்டுரைகளின் நூல் வடிவம்,
    விலை ரூ. 55.00

  6. நினைவின் குட்டை கனவு நதி

    சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்

    – சுந்தர ராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உண்மை முகங்களை எடுத்துக் காட்டும் நூல், புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு,
    விலை ரூ. 70.00

  7. மீண்டும் தொழிலாளி வர்க்கம்

    வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான தொழிலாளி வர்க்க போராட்டக் கட்டுரைகளின் தொகுப்பு,
    விலை ரூ. 80.00

  8. நிஜத்தின் உரைகல்லில் நிழல் சினிமா

    வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான திரை விமரிசனங்கள், திரையுலகம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு,
    விலை ரூ. 110.00

_____________________________________________________

நூல் வெளியீட்டு விழா

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
(பனகல் பூங்காவிலிருந்து சைதை செல்லும் சாலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எதிரில், டாக்டர் நடேசன் பூங்காவிற்கு அருகில் இந்தப் பள்ளி இருக்கிறது)

விழா தலைமை:
தோழர் துரை. சண்முகம், கீழைக்காற்று

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

நூல் பெறுவோர்:
கவிஞர் தமிழேந்தி

பதிவர் சந்தனமுல்லை

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன்
, பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் அனைவரும் வருக!

(விழா அன்று இந்த எட்டு நூல்களும் தனித்தனியாக 30% தள்ளுபடி விலையில் கிடைக்கும். சனவரி 4 முதல் 17 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண்: 39,40)

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அரசியலில் விஜய் ! எ.கொ.இது சரவணா?!

31
வணக்ம்னா, அடுத்த முதல்வர் நாந்தானுங்கோ!

தமிழ் நாட்டு மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? சினிமாவில் ஜிங்குசா பாட்டைப் பாடியவாறு மரத்தை சுற்றி வரும் டூயட் நட்சத்திரங்கள், சேர்ந்தாற் போல நாலைந்து வார்த்தைகள் பேசத்தெரியாத முட்டாள்கள் அவ்வப்போது அரசியலுக்கு வாரேன் என்று செய்யும் டார்ச்சர் இருக்கிறதே, முருகா, முருகா…

கேட்டால் அரசியலுக்கு வருவது அடிப்படை மனித உரிமை என்று சில அறிவாளிகள் நியாயம் பேசுவார்கள். மனித உரிமையில் பாலைவனமாய் காய்ந்து கிடக்கும் நாட்டில் இதுதான் மனித உரிமையாம், வெங்காயம்.

தினத்தந்தியின் சினிமா இணைப்பைத் தவிர வேறு எதையும் செய்தியாகக் கூட வாசித்திராத, கேள்விப்பட்டிராத இந்த குத்தாட்ட நாயகர்களுக்கு சமூக உணர்வு பொங்கும் அந்த தருணம் இருக்கிறதே, அதைக் கேட்டால் எல்லாரையும் வெட்டிவிட்டு சிறைக்கு போவதற்கு கூட நாம் தயங்க மாட்டாம். அந்த அளவுக்கு இவர்களது சமூக அக்கறை பில்டப் நம்மிடம் கொலைவெறியையே தோற்றுவிக்கும்.

வசனம் எழுதிய கருணாநிதிக்கு வரும் கூட்டத்தை விட தனது மேக்கப் போட்ட சிவப்புத் தோலுக்கு வரும் கூட்டம் அதிகம் என்பதை கருணாநிதி அங்கீகரிக்கவில்லை என்ற ஈகோ போட்டிதான் எம்.ஜி.ஆர் எனும் பாசிசக் கோமாளி கட்சி ஆரம்பித்தற்கு காரணம். சினிமாவில் கையைக் காலை ஆட்டி அசைத்தற்கே முதலமைச்சாராக முடியுமென்றால் வேறு எதைச் சொல்ல?அதனால்தான் எம்.ஜி.ஆர் கட்சியில் தொண்டர்களாக மட்டுமல்ல அமைச்சர்களாகவும் கூட அடிமைகளே நீடித்தார்கள். நீடிப்பார்கள்.

எம்.ஜி.ஆர் மண்டையைப் போட்ட பிறகு குரலை வைத்தே வித்தை காட்டிய சிம்மக் குரலோனுக்கு ஆசை வந்து தனிக்கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் கனவில் மிதந்தார். எனினும் “பிள்ளைகளே இப்படிக் கைக்காசை செலவழிக்க வைத்து மொட்டை அடித்து விட்டீர்களே” என்று “எங்கே நிம்மதி” புதிய பறவை ரேஞ்சில் துக்கத்துடன் போய்ச் சேர்ந்தார் சிவாஜி கணேசன்.

எம்.ஜி.ஆரால் கலையுல வாரிசு என்று அறிவிக்கப்பட்டதும் கே.பாக்யராஜ் எனும் முருங்கைக்காய் நாயகனுக்கும் அப்படித்தான் தலைகால் புரியவில்லை. “தாவணிக் கனவுகள்” ரிலீசான போது அவர் அதிகம் கனவு கண்டது கோட்டையில் கொடியேற்றுவதுதான். பிறகு கட்சி ஆரம்பித்து கடன் வாங்கி இப்போது இத்துப்போன கட்டிடத்தில் “பாக்ய” இதழில் கேள்வி பதில் பகுதிகளுக்கு அம்புலிமாமா கதையைச் சொல்லி காலத்தை ஓட்டுகிறார் நம்ம பாக்யராஜ்.

அப்பாலிகா டி.ராஜேந்தர் கட்சி ஆரம்பித்ததும், தி.மு.கவில் ஆஞ்சநேய பக்தாராக இருந்து கொண்டே கொள்கை பரப்பு செயலாளராக இருந்ததும், பின்னர் மீண்டும் தனிக்கட்சி ஆவர்த்தனத்தை தொடருவதும் நம்மைப் பொறுத்தவரை நல்ல வேடிக்கையான விசயங்கள். இப்போதும் ஏதாவது இடைத்தேர்தல் என்றால் இவர் போட்டியிடுவதும், அதற்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் பிரச்சாரம் செய்வதும்…. ஆசை யாரை விட்டது? ஆனாலும் ஒன்றை ஒத்துக் கொள்ளவேண்டும். டி.ராஜேந்தர் பேசும் அடுக்கு மொழி காமடிக்காகவாவது இவர் அரசியலில் தொடர வேண்டும்.!

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அவரது கார்பவனிக்காக டிராபிக்கில் சிறிது நேரம் நின்றதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் உணர்வு பொங்கி எழ காரணம். கூடவே மணிரத்தினம் வீட்டுக் காம்பவுண்டில் யாரோ சிலர் நமுத்துப் போன வெங்காய வெடியை போட்டதும், “தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை” என்று வெடித்தார் ரஜினி. சோ, பார்ப்பன ஊடகங்கள் பெரு முயற்சி செய்து ரஜினியின் பலூன் இமேஜை ஊதிப்பெருக்க எது எப்படியோ கடைசியில் அண்ணாத்தேயின் அரசியல் விஜயம் காமடியாக முடிந்து விட்டது.

பிறகு சரத்குமார். தானிருக்கும் போது நடிகர் விஜயை வைத்து மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தபால் தலை வெளியிடுவதா, என்று கோபித்துக் கொண்டு விஜய் மல்லையாவின் தனி விமானத்தில் மதுரை பறந்து ஆண்டிப்பட்டியில் ஜேவை சந்தித்து அ.தி.மு.கவில் அங்கமாகி பிறகு அங்கும் பருப்பு வேகாமல் சமத்துவ கட்சி கண்ட சரத்குமார் அடுத்த தேர்தலில் கூட்டணி தருமத்தில் ஒரு இரண்டு சீட்டாவது கிடைக்குமா என்று ஏங்குகிறார். ஆனாலும் இவர் விடும் சவுடால்களுக்கு குறைவில்லை.

போலீசு கெட்டப்பில் தீவிரவாதிகளை பந்தாடும் விஜய்காந்த் நிஜத்திலும் அப்படி ஒரு ஃபவர் தன்னிடம் இருப்பதாக தவறாக கருதி அரசியல் கட்சியை ஆரம்பித்துவிட்டார். கட்சியை குடும்பத்தின் பிடியிலும், கட்சி பிரமுகர்களாக ஊழலில் கொட்டை போட்ட பெருச்சாளிகளை வைத்தும் காலத்தை ஓட்டுகிறார். அம்மா தயவுக்காக காத்திருக்கிறார்.

கடைசியாக இளைய தளபதி விஜய். ஒரு படத்துக்கு ஊதியமாகவும், சென்னை நகரின் விநியோக உரிமையாகவும் சேர்த்து பதினைந்து கோடி வாங்கும் விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த நான்கு படங்கள் ஓடவில்லை. இன்னும் எத்தனை நாள்தான் மக்கள் குத்தாட்டங்களை இரசிக்க முடியும்? ஒன்னுக்கு நாலு படமாய் முதலுக்கு மோசமாப் போச்சே என்று வயிறெரிந்த திரையரங்க அதிபர்கள் நட்டத்தில் கொஞ்சமாவது திருப்பி கொடுங்கள் என விஜய் தரப்பைக் கேட்டனர். அதில்தான் நம்ம இளைய தளபதி முறுக்கிக் கொண்டு அரசியல், இரசிகர் மன்றம் என்று உதார் விடுகிறார்.

வணக்ம்னா, அடுத்த முதல்வர் நாந்தானுங்கோ!

80களில் ‘புரட்சி’ப் படங்களை எடுத்து பிரபலமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது வாரிசை திட்டமிட்டே களத்தில் இறக்கினார். ஆரம்பத்தில் அது சங்கவியா? போன்ற நடிகைகளை அரை அம்மணமாக்கி அவர்களோடு ஸ்டெப் கட்டிங் விஜயை ஆடவைத்து கிட்டத்தட்ட கொஞ்சம் பலான ஸ்டைலில் படங்களை வெளியிட்டார், சந்திரசேகர். அப்போதெல்லாம் இரசிகர்கள் விஜயைப் பார்ப்பதற்க்காக செல்வதில்லை. சங்கவி போன்ற கவர்ச்சி நடிகைகளை பார்ப்பதற்கே சென்றார்கள். இப்படி ஆரம்பித்த விஜயின் திரையுலக வாழ்க்கை பின்னர் ஒரு நட்சத்திரமாக செட்டிலானது. இதில் கடுமுழைப்புதான் அவரை நட்சத்திரமாக்கியது என்பதெல்லாம் ‘கடவுளே’ தாங்க முடியாத வார்த்தைகள். நன்றாக குத்தாட்டம் ஆடுவார் என்பதைத் தவிர மாலை முரசு சினிமா நிருபர் கேட்கும் மழலைத்தனமான கேள்விகளுக்கு கூட அவரால் பதில் சொல்ல முடியாது என்பதே உண்மை.

இப்போது என்ன பிரச்சினை? மு.க.ஸ்டாலின் மகனது மன்மத அம்பு படத்திற்காகவும், சன் டி.வியின் ஆடுகளம் படத்திற்காகவும் தமிழக திரையரங்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் காவலன் படத்திற்கு திரையங்கு இல்லையாம். அதிலும் திரையரங்க அதிபர்கள் பழைய தோல்வியடைந்த படங்களுக்கான நட்டத்தையும் கேட்கின்றனராம். குருட்டு அதிர்ஷடமாக கிடைத்த நட்சத்திர வாழ்க்கை அதோகதியாகிவிடுமோ என்ற பயம் விஜய் தரப்பினருக்கு வந்துவிட்டது.

தமிழ் சினிமா என்பது ஒரு சூதாட்ட விடுதி போலத்தான். இங்கே ஆண்டாண்டு காலமாக ஏதோ ஒரு பிரிவினர்தான் வருமானத்தை அள்ளுகின்றனர். அது தயாரிப்பாளர்கள், நட்சத்திரங்கள், திரையரங்க அதிபர்கள், விநியோகஸ்தர்கள், ஃபைனான்ஸ் செய்பவர்கள் என்று மாறிக் கொண்டே இருந்தது இப்போது எல்லாம் தி.மு.க குடும்பத்தின் பிடியில் என்று ஆகிவிட்டது. அதன்படி இனி நட்சத்திரங்களின் இமேஜூம், வருமானமும் கூட சன்.டி.வியின் பிடியில்தான். இந்த காலமாற்றத்தை இளைய தளபதியால் ஜீரணிக்க முடியவில்லை. கடவுளர்களைப் பொறுத்தவரை அவர்களது ஆட்சி முடிந்து விட்டது என்பதை எப்போதும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதுதான் பிரச்சினை.

இந்நிலையில் இரசிகர் மன்றக் கொடி, இரசிகர்களை விஜய் சந்திக்கிறார், என்ற ஆர்ப்பாட்டங்களெல்லாம் நல்லபடியாகவே நடந்து முடிந்துவிட்டன. எல்லாம் தமிழகமே தனது பின்னே அணி திரண்டிருக்கிறது என்று காட்டத்தான். இதன் பின்னிணைப்பாக அப்பா சந்திரசேகர் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் சந்தித்திருக்கிறார். கருணாநிதியிடம் தனது மகன் உயிருக்கு ஆபத்து என்று பாதுகாப்பை கேட்டாராம் தந்தை. ஒரு கொசு கூட கடிக்க விரும்பாத இந்த அய்யோ பாவம் மூஞ்சிக்கு என்ன ஆபத்து இருக்க முடியும், ஒன்றும் தெரியவில்லை.

காவலனை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்தை தவிர இவர்களது அரசியல் ஆவேசத்துக்கு எந்த எழவும் அடிப்படையல்ல. காவலன் படத்தை நாற்பது  கோடிக்கு வாங்கியிருக்கும் ஷக்தி சிதம்பரம் ஒரு சிறு முதலீட்டு தயாரிப்பாளர். இவருக்கு ஏது இவ்வளவு பணம் என்றால் எல்லாம் அ.தி.மு.க பெருந்தலைகள் கொடுத்தது என்று அவரே கூறுகிறார். சன்.டிவியின் ஏகபோகத்தை தடுப்பதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் வழி புரட்சித் தலைவியின் ஏகபோகமாகும். இதில் நமது சி.பி.எம் நண்பர்கள் காவலன் ரிலீசு ஆகவில்லை என்று ஏக கோபத்தில் இருக்கிறார்கள். தமிழ் சினிமா தி.மு.க குடும்பத்தின் ஏகபோகமாகிவிட்டது என்று சவுண்டு விடுகிறார்கள். இதைத் தடுப்பதற்கு இவர்களும் போயஸ்தோட்டத்திற்குத்தான் செல்கிறார்கள். அய்யா குடும்பத்தின் ஏகபோகத்தை தடுப்பதற்கு அம்மா குடும்பம். தோழர்களும் என்ன செய்வார்கள், பாவம்.

ஆக அடுத்த தேர்தலில் விஜய் அ.தி.மு.க அணிக்கு பிரச்சாரம் செய்வாரா, இல்லை கட்சியில் சேருவாரா, இல்லை தனிக்கட்சி ஆரம்பிப்பாரா என்ற கேள்விகளெல்லாம் காவலன் படம் ரிலீசாவதைப் பொறுத்தது. ஒரு படம் பதினைந்து கோடி ரூபாயை தருகிறது என்றால் அதைத் தவிர இவர்கள் கவலைப்படத்தக்க பிரச்சினைகள் ஏதுமில்லை. ஆஃப்டரால் ஒரு படம் ரிலீசாக முடியவில்லை என்பதற்காக நாட்டு மக்களை காப்பாற்ற அரசியிலில் குதிக்கிறேன் என்று ஃபிலிம் காட்டுவதைத்தான் சகிக்க முடியவில்லை.

இனி அடுத்த அஜித் படமும் இதே போல ரிலீசாகவில்லை என்றால் என்ன நடக்குமோ தெரியவில்லை. சினிமாவில் சூரத்தனம் காட்டும் இந்த வீரர்கள் உண்மையில் ஏன் இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? சன் டி.வியின் ஏகபோகம் பிரச்சினை என்றால் அதை வெளிப்படையாக கூறி திரையுலகை அணிதிரட்டி போராடலாமே, ஏன் செய்ய வில்லை?

தமது நட்சத்திர இமேஜ் சன் டி.வியால் உயர்ந்த போது மகிழ்ந்தார்கள். இப்போது தாழ்த்தும் போது எதிர்க்க முடியாமல் அரசியல் பலம் என்ற பெயரில் ரசிகர் பட்டாளத்தை வைத்து பேரம் பேசுகிறார்கள். இதுதான் இவர்களது அவர்களது அரசியல் பிரவேசத்துக்கு காரணம் என்றால் தமிழகத்தை யாரால் காப்பாற்ற முடியும்?

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு: தாமதமான நீதி…

போலீசால் படுகொலை செய்யப்பட்ட தோழர் வர்கீஸ்

கேரளத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு நக்சல்பாரி புரட்சியாளரான தோழர் வர்கீசை ‘மோதல்’ என்ற பெயரில் கொலை செய்த உயர் போலீசு அதிகாரி ஒருவருக்கு அண்மையில் நீதிமன்றம் ஆயுள்தண்டனை அளித்திருக்கிறது. அரிதினும் அரிதாக, இப்படுகொலை நடந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கொலைகார போலீசு அதிகாரிக்கு நீதிமன்றம் தண்டனை அளித்திருப்பது, இந்தியாவிலேயே முதன்முறையாகும்.

அன்று இளைஞராக இருந்த தோழர் வர்கீஸ், நக்சல்பாரி பேரெழுச்சியைத் தொடர்ந்து சி.பி.எம். கட்சியிலிருந்து விலகி நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். கேரளத்தின் வயநாடு பகுதியில் தேயிலைத் தோட்ட முதலாளிகளின் – நிலப்பிரபுக்களின் கொடூரச் சுரண்டலையும் கொத்தடிமைத்தனத்தையும் விளக்கி மக்களை எழுச்சியுறச் செய்தார். ஆண்டுதோறும் வயநாட்டின் வள்ளியூர் கோயில் திருவிழாவில் பழங்குடியின மக்களைப் பிடித்து ஆடு-மாடுகளைப் போல விற்கும் நிலப்பிரபுக்களின் கொடூரத்தை எதிர்த்து நின்று போராடினார்.

இதைத் தொடர்ந்து, நக்சல்பாரிகளை ஒழிக்க கொலைகார போலீசு வெறியன் லட்சுமணா மற்றும் விஜயன் தலைமையில் ஒரு சிறப்பு அதிரடிப்படை நிறுவப்பட்டு வயநாட்டில் தேடுதல் வேட்டை தீவிரமானது. தலைமறைவாகி போராட்டங்களை நடத்தி வந்த தோழர் வர்கீஸ், திருநெல்லியில் ஒரு மூதாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது, 1970 பிப்ரவரி 18-ஆம் தேதியன்று போலீசு அதிரடிப்படையால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். திருநெல்லி அருகே காட்டுப் பகுதியில் மிருகத்தனமாகச் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர், அவரது கண்கள் பிடுங்கி எறியப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். போலீசாருடன் வர்கீஸ் நடத்திய ஆயுத மோதலில் அவர் குண்டடிபட்டு மாண்டதாக அன்றைய காங்கிரசு அரசும் போலீசும் கதை கட்டின. வயநாட்டில் தோழர் வர்கீசுடன் இணைந்து செயல்பட்ட இதர நக்சல்பாரி தோழர்களும் வயநாட்டுப் பழங்குடியின மக்களும் கொடூரமாக வதைக்கப்பட்டனர்.

பயங்கரவாதப் போலீசின் கொட்டங்கள் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியவில்லை. புதைக்கப்பட்ட உண்மைகள் பூதமாகக் கிளம்பத் தொடங்கின. 1970-களில் நக்சல்பாரி ஒழிப்பு அதிரடிப் படையிலும் பின்னர் ரிசர்வ் போலீசுப் படையிலும் கீழ்நிலை போலீசுக்காரராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி. ராமச்சந்திரன் நாயர், “எனது மேலதிகாரி லட்சுமணாவின் உத்தரவின் பேரில்தான் நான் வர்கீசைச் சுட்டுக் கொன்றேன். அப்போது வயநாடு எஸ்.பி.யாக இருந்த விஜயனும் திருநெல்லி டி.எஸ்.பி.யாக இருந்த லட்சுமணாவும்தான் வர்கீசைக் கொல்லும்படி எனக்கு ஆணையிட்டனர்” என்று கடந்த 1998-ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாகப் பேட்டியளித்தார். நீதிமன்றத்திலும் இதைத் தெரிவித்து உரிய தண்டனை பெற்றுக் கொள்ள தான் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார். நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் மனித உரிமை இயக்கத்தினர் மூலம் பத்திரிகைகளில் வெளிவந்த இந்த உண்மை, கொலைகார போலீசின் கோரமுகத்தையும் அப்போதைய காங்கிரசு – வலது கம்யூனிஸ்டு கூட்டணி அரசாங்கத்தின் பயங்கரவாத வெறியாட்டத்தையும் நாடெங்கும் திரைகிழித்துக் காட்டியது.

கொலைகார போலீசுப்படைத் தலைவனாகிய லட்சுமணா, ஜெயராம் படிக்கல் என்ற போலீசு வெறியனோடு சேர்ந்து அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் கள்ளிக்கோட்டை பொறியியல் கல்லூரி மாணவரும் நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்தின் செயல்வீரருமான தோழர் ராஜனை 1976 -இல் காகயம் முகாமில் அடைத்து சித்திரவதை செய்து கொன்று, பின்னர் அவரது உடலை பீச்சி அணையில் வீசி எறிந்தவன். இதே லட்சுமணாவின் அதிரடிப்படை 1976-இல் நக்சல்பாரி புரட்சியாளரான விஜயனைச் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்று யாருக்கும் தெரியாமல் வர்க்கலா எனும் ஊரில் எரித்ததாக ஓய்வு பெற்ற போலீசு வாகன ஓட்டுநர் ஒருவர் கடந்த 1999-இல் வாக்குமூலம் அளித்தார்.

அடுத்தடுத்து வெளிவந்த இந்த வாக்குமூலங்களால் அதிர்ச்சியடைந்த கேரள மக்கள், போலீசு படுகொலைகளுக்கு எதிரான மனித உரிமை இயக்கங்களுக்குப் பெருத்த ஆதரவு அளித்தனர். நாடெங்கும் மனித உரிமை இயக்கங்களின் கண்டனமும் நிர்ப்பந்தமும் வலுக்கத் தொடங்கியதால், வேறு வழியின்றி அப்போதைய சி.பி.எம். கூட்டணி அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தோழர் வர்கீசின் சகோதரர்களான தாமஸ், ஜோசப் ஆகியோர் 1999-இல் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ராமச்சந்திரன் நாயரும், இரண்டாவது குற்றவாளியாக லட்சுமணாவும், மூன்றாவது குற்றவாளியாக விஜயனும் சேர்க்கப்பட்டனர். ராமச்சந்திரன் நாயருடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் போலீசுக்காரரான முகம்மது ஹனீப், வர்கீசின் பள்ளித் தோழரான பிரபாகர வாரியார், ஜோகி என்ற விவசாயத் தொழிலாளி உள்ளிட்டு மொத்தம் 31 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். போலி மோதல் படுகொலைக்கு எதிரான பொதுக்கருத்து வலுவாக இருந்ததால், “நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்த ஒரு சாமானிய இளைஞனை வயநாட்டின் திருநெல்லி காட்டில் சுட்டுக் கொன்ற கொடுஞ்செயலுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்க வேண்டும்” என்று அரசு தரப்பு வழக்குரைஞர் இந்த வழக்கில் வாதிட்டார். குற்றம் சாட்டப்பட்ட இரு போலீசு அதிகாரிகளும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் இந்த விசாரணைக்குத் தடை கோரியதால் இந்த வழக்கு விசாரணை நீட்டித்துக் கொண்டே போனது.

இதற்கிடையில் கடந்த 2006-ஆம் ஆண்டில் முன்னாள் போலீசுக்காரரான ராமச்சந்திரன் நாயர் மரணமடைந்தார். மற்ற இருவர் மீதான வழக்கில் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதியன்று கொச்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. டி.ஜி.பி.யாகி ஓய்வு பெற்ற 83 வயதான முன்னாள் போலீசு அதிகாரி விஜயனும், ஐ.ஜி.யாகி ஓய்வு பெற்ற 75 வயதான லட்சுமணாவும் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டனர். விஜயன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று அவர் விடுவிக்கப்பட்டார். கொலைகார லட்சுமணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. வழக்கு மன்றத்திலிருந்து லட்சுமணா வெளியே வரும்போது “கொலைகார லட்சுமணா ஒழிக!” என்ற முழக்கங்கள் எங்கும் எதிரொலித்தன.

“திருநெல்லியில் இன்று இரவு இரண்டு நட்சத்திரங்கள் உயர்ந்தோங்கி மின்னும். அவை தோழர் வர்கீசின் ஒளிரும் கண்களாகும்!” என்று ஆண்டுதோறும் தோழர் வர்கீசின் நினைவு நாளான பிப்ரவரி 18-ஆம் தேதியன்று கேரளத்தில் சுவரெழுத்துக்களும் சுவரொட்டிகளும் பளிச்சிடும். தோழர் வர்கீசின் நினைவு நாற்பதாண்டுகளாகியும் இன்னமும் மக்களின் மனங்களிலிருந்து நீங்கிவிடவில்லை. தோழர் வர்கீஸ் மட்டுமின்றி, தோழர் ராஜன் படுகொலைக்கு எதிராகவும் கேரளத்தில் மக்கள் கொதித்தெழுந்ததால்தான் அங்கே இந்த அளவுக்கு விசாரணை நடந்துள்ளது.

நக்சல்பாரி புரட்சியாளர்களான தோழர்கள் வர்கீஸ், ராஜன் முதலானோர் கொல்லப்பட்டதைப் போலவே, 1980-களின் தொடக்கத்தில் தமிழகத்தின் தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் போலீசு ‘சூரப்புலி’ தேவாரம் நடத்திய நரவேட்டையில் தோழர் பச்சையப்பன் உள்ளிட்டு பத்துக்கும் மேற்பட்ட நக்சல்பாரி புரட்சியாளர்கள் ‘மோதல்’ என்ற பெயரில் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மனித உரிமை – ஜனநாயக உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து, இரகசிய கொலைக் குழுக்களைக் கட்டியமைத்து மோதல் என்ற பெயரில் நக்சல்பாரி புரட்சியாளர்களைக் கொன்றொழிப்பதை வழமையாகக் கொண்டுள்ள இத்தகைய அரசு பயங்கரவாதப் படுகொலைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். கேரளத்தின் லட்சுமணா, தமிழகத்தின் தேவாரம் போன்ற கொலைகார போலீசு அதிகாரிகள், போலீசு கொலைக் குழுக்கள், இந்நரவேட்டைக் கொள்கையை வகுத்து செயல்படுத்திய அரசு அதிகாரிகள், இதற்குப் பக்கமேளம் வாசித்த ஊடகங்கள், ஓட்டுப் பொறுக்கிகள் உள்ளிட்டு அனைத்துப் பயங்கரவாதிகளும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் பயங்கரவாதப் போலீசு, இப்போது ரவுடிகளைக் கேள்விமுறையின்றிக் கொன்றொழிப்பதோடு, தனிப்பட்ட விரோதங்களுக்காக சாதாரண நபர்களையும் சுட்டுக் கொல்லும் பயங்கரவாத மிருகமாக மாறிவிட்டது. மனித உரிமைக்கான போராட்டத்தில் கேரள மக்களைப் போலவே போலி மோதல் கொலைகளுக்கு எதிராகத் தமிழக மக்களும் விழித்தெழும்போது, இங்கேயும் கொலைகார போலீசு கும்பல் தண்டிக்கப்படும்.
_____________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
_____________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கோவைத் தொழிலாளி வர்க்கத்திடையே ஒரு புத்தெழுச்சி!

37

கோவை என்.டி.சி தொழிற்சங்கத் தேர்தல்: பு.ஜ.தொ.மு மாபெரும் வெற்றி!

கோவை என்.டி.சி தொழிற்சங்கத் தேர்தல்: பு..தொ.மு மாபெரும் வெற்றி!

தமிழகத்திலுள்ள என்.டி.சி. எனப்படும் தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான 7 ஆலைகளிலும் டிசம்பர் 18ம் தேதியன்று தொழிற்சங்க அங்கீகாரத்துக்காக நடைபெற்ற தேர்தலில், கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி) பெருவெற்றி பெற்றிருக்கிறது.

மொத்த வாக்குகளில் முதலிடத்தை தொ.மு.ச வும் (2 பிரதிநிதிகள்) இரண்டாமிடத்தை பு.ஜ.தொ.மு வும், (ஒரு பிரதிநிதி)  மூன்றாமிடத்தை சி.ஐ.டி.யு வும் (ஒரு பிரதிநிதி), நான்காம் இடத்தை ஐ.என்.டி.யு.சி யும் (ஒரு பிரதிநிதி) பெற்றிருக்கின்றன.

1974 இல் தேசிய பஞ்சாலைக் கழகத்தின் ஆலைகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து கடந்த 36 ஆண்டுகளில் தேர்தல் என்ற ஒன்றை என்.டி.சி மில் தொழிலாளிகள் கண்டதில்லை. தேர்தலை நடத்தவேண்டும் என்பதற்காக கோவையில் இருந்த எந்த கட்சியின் தொழிற்சங்கமும் போராடியதில்லை. தேர்தலே நடக்காமல் இருப்பது நிர்வாகத்துக்கு மட்டுமல்ல, தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் வசதியானதாகவே இருந்தது. தொழிலாளர்களின் அங்கீகாரத்தைப் பெறாமலேயே,. அவர்களுக்கு பதில் சொல்லும் தேவை இல்லாமலேயே, அவர்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கும் அதிகாரத்தை இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் பெற்றிருந்தனர். நிர்வாகமும் தேர்தலே இல்லாமல் இவர்களையெல்லாம் பிரதிநிதிகளாக அங்கீகரித்திருந்தது.

தொழிலாளி வர்க்கத்தின் மீது சதித்தனமாகத் திணிக்கப்பட்டிருந்த இந்தக் கட்டைப் பஞ்சாயத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், தேர்தலை நடத்த வைப்பதற்கும் பு.ஜ.தொ.மு தொடர்ந்து போராடியது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தேர்தல் நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தியது.

தேர்தல் நடத்தப்பட்டால் பு.ஜ.தொ.மு வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சத்தினாலும், 36 ஆண்டுகளாக வழக்கத்தில் இல்லாத ஜனநாயக உரிமையை தொழிலாளி வர்க்கத்துக்கு வழங்கினால் நேரக்கூடிய அபாயம் குறித்த கவலையினாலும் உறக்கம் இழந்த தொழிற்சங்கத் தலைமைகள், ஒரு கூட்டுக் கமிட்டி அமைத்து தேர்தலுக்கு இடைக்காலத் தடையாணை வாங்க அரும்பாடு பட்டனர். இன்று தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றிருக்கும் சங்கங்கள்தான் தேர்தலை முடக்குவதற்கு மும்முரமாக வேலை செய்தன. சட்டத்தில் சந்து கண்டுபிடித்து தேர்தலை தடுப்பதற்கு இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் முறியடித்த பின்னர்தான் இந்த தேர்தல் நடைபெற்றிருக்கிறது.

எனவே, நடந்து முடிந்த தேர்தலில் பு.ஜ.தொ.மு பெற்ற வெற்றியினைக் காட்டிலும், இந்தத் தேர்தலை நடத்த வைத்ததுதான் பு.ஜ.தொ.மு வின் முதன்மையான வெற்றி.

தேர்தலை நடத்தியாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு நிர்வாகம் பணிய நேர்ந்த போதிலும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்று சண்டித்தனம் செய்தது. ஆண்டுக்கணக்கில் தற்காலிகத் தொழிலாளர்களாக வைக்கப்பட்டிருக்கும் சுமார் 1600 தொழிலாளர்களின் வாக்குரிமையை மறுக்க முடியாது என்றும் 240 நாட்கள் வேலை செய்த எல்லாத் தொழிலாளிகளுக்கும் நிரந்தரத் தொழிலாளிகளுக்குரிய உரிமைகள் உண்டு என்றும் போராடி, சுமார் 600 தற்காலிகத் தொழிலாளிகளுக்கு வாக்குரிமை பெற்றுத் தந்தது பு.ஜ.தொ.மு.

மீதமுள்ள சுமார் 1000 தற்காலிகத் தொழிலாளிகளுக்கு வாக்குரிமையை மறுப்பதன் மூலம் தேர்தலைத் தள்ளிப்போட சதி செய்தது நிர்வாகம். இந்தச் சதியைப் புரிந்து கொண்டதனால், தேர்தலை நடத்த வைத்து, 1000 தொழிலாளிகளின் வாக்குரிமை குறித்த பிரச்சினைக்கு அதன் பின் போராடுவது என்று முடிவு செய்தது பு.ஜ.தொ.மு. தற்காலிகத் தொழிலாளிகள் என்று வரையறுக்கப்பட்ட சுமார் 600 தொழிலாளிகளுக்கு வாக்குரிமையைப் பெற்றதன் மூலம், அவர்களுடைய பணி நிரந்தரத்துக்கான உரிமைக்கு கால் கோள் இடப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் பு.ஜ.தொ.மு ஈட்டிய இரண்டாவது வெற்றி இது.

மூன்றாவது வெற்றிதான் பு.ஜ.தொ.முவின் தேர்தல் வெற்றி. இந்த வெற்றியும் எளிதில் அடையப்பட்டதல்ல. தேர்தல் நடைபெற்ற 7 மில்களில் ஒரு மில்லில் மட்டுமே கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் இயங்கி வருகிறது. அதனுடைய செயல்பாடு ஏற்படுத்திய தாக்கம்தான் எல்லா மில்களிலும் உள்ள தொழிலாளர்களை பு.ஜ.தொ.மு வை நோக்கி ஈர்த்திருக்கிறது.

பல என்.டி.சி ஆலைகள் நட்டம் என்று பொய்க்கணக்கு காட்டி மூடப்பட்டும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டும், இருக்கின்ற மில்களில் 20 ஆண்டுகளாக ஊதிய உயர்வு ஒப்பந்தமே இல்லாமல் கிடப்பில் போடப்பட்டும், எதுவும் செய்ய இயலாமல், 36 ஆண்டுகளாக தொழிற்சங்கத் தேர்தல் கூட இல்லாமல், கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர்களைத் தனது பிரச்சாரத்தின் மூலம் தட்டி எழுப்பியது பு.ஜ.தொ.மு. வெறுமனே எங்களுக்கு வாக்களியுங்கள் என்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரங்கள் அல்ல இவை.

தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் எவை, அவை மறுக்கப்படுவதற்கான காரணங்கள் என்ன, இன்றைய ஜவுளித்துறை நெருக்கடியின் ஊற்றுமூலம் எது என்று தொழிலாளர்களுக்கு விளங்க வைத்தன இப்பிரச்சாரங்கள். எண்ணற்ற ஆலை வாயிற்கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள், துண்டறிக்கைகள்… அனைத்துப் பிரச்சார செலவுகளுக்கும் நிதி கொடுத்து ஆதரித்தவர்கள் தொழிலாளர்கள். தொழிலாளர்களிடம் பு.ஜ.தொ.மு பெற்றது கொள்கை ரீதியான ஆதரவு.

இத்தேர்தலில் தற்போது 2 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தி.மு.கவின் தொ.மு.ச, தனது கொள்கையான “பிரியாணியையும் பாட்டிலையும்” வைத்து சுமார் 10 இலட்ச ரூபாய் செலவு செய்து பிரச்சாரம் செய்தது. ஒரு ஓட்டுக்கு அவர்கள் செய்த செலவு சுமார் 1600 ரூபாய்.

பிரியாணியையும், பாட்டிலையும், சாதியையும் காட்டி, அந்த ஒரு நாளில் மயக்கத்திலாழ்த்தி தொழிலாளிகளின் ஓட்டை அவர்கள் அபகரித்திருக்கலாம். ஆன்ல் தொழிலாளி வர்க்கத்தின் நம்பிக்கையை அவ்வாறு அபகரிக்க முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் யாரோ, போராடக் கற்றுக் கொடுப்பவர்கள் யாரோ அவர்கள் மட்டும்தான் தொழிலாளியின் நம்பிக்கையைப் பெற முடியும்.

பிரியாணிப் பொட்டலக்காரர்களுக்கு இந்த உண்மை தெரியாததல்ல. அது தெரிந்ததனால்தான் முடிந்த வரையில் தேர்தலே நடக்காமல் அவர்கள் தடுக்கப் பார்த்தார்கள்; முடியவில்லை. “அவர்கள் தீவிரவாதிகள்” என்று முத்திரை குத்தி அச்சுறுத்திப் பார்த்தார்கள்; தொழிலாளிகளுக்கு தங்களது எதிர்காலத்தைக் குறித்த அச்சத்தைக் காட்டிலும் பெரிய அச்சத்தை இந்த தீவிரவாதப் பூச்சாண்டி ஏற்படுத்திவிடவில்லை. “அவர்களுக்கு எம்.எல்.ஏ, எம்.பி இல்லாததால் அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தி கோரிக்கைகளைப் பெற இயலாது” என்று சொல்லிப்பார்த்தார்கள்; “எம்.எல்.ஏ இல்லை” என்ற உண்மை, தொழிலாளிகள் மத்தியில் பு.ஜ.தொ.மு வின் செல்வாக்கை அதிகரிப்பதற்கே பயன்பட்டது.

கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (பு.ஜ.தொ.மு) வெற்றியும் பெற்று விட்டது. “இந்த வெற்றி கோவையில் உள்ள தனியார் பஞ்சாலைத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தோற்றுவித்திருக்கிறது என்றும் தங்கள் மில்லில் சங்கம் தொடங்க வருமாறு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன” என்றும் கூறுகிறார், கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் செயலர், தோழர் விளவை இராமசாமி.

கோவை நகரின் பஞ்சாலை முதலாளிகளிடம் இந்த வெற்றி என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்? ரங்கவிலாஸ், ஸ்டேன்ஸ் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்தையும், சின்னியம்பாளையம் தியாகிகளின் போர்க்குணத்தையும் அவர்களுக்கு நினைவு படுத்தியிருக்குமோ? அல்லது, பிரட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியில் நடைபெற்ற போராட்டங்கள் என்பதால் அவை பழங்கதைகள் என்று முதலாளிகள் இறுமாந்திருப்பார்களா?

காலனியாதிக்கம், இன்று புதிய வடிவில் மறுகாலனியாக்கமாகத் திரும்பியிருக்கும்போது, தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாறு மட்டும் திரும்பாதா என்ன? திரும்ப வைப்போம்!

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஓசூர் கமாஸ் தொழிலாளர்களின் மாபெரும் வெற்றி ! பொதுக்கூட்டம்!!

ஓசூர் கமாஸ் வெக்ட்ரா ஆலையில் தொடர்ச்சியான போராட்டத்திற்கு பிறகு நிர்வாகத்தை பணிய வைத்து ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஒன்றை போட வைத்திருக்கிறார்கள், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள். ஓசூர் தொழிலாளர் வரலாற்றில் இது ஒரு மைல் கல் என்றால் மிகையல்ல. அதை ஒட்டி பு.ஜ.தொ.மு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதற்காக தொழிலாளர்களிடம் விநியோகிக்கப்பட்ட பிரசுரத்தை இங்கே வெளியிடுகிறோம்

– வினவு


ஓசூர் கமாஸ் தொழிலாளர்களின் மாபெரும் வெற்றி! பொதுக்கூட்டம்!!

அன்பார்ந்த தொழிலாளர்களே,

ஓசூரில் செயல்படும் கமாஸ் வெக்ட்ரா ஆலையில் சென்ற மார்ச் மாதம் 33 தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் பெறுவதற்கும், சங்கம் வைக்க அங்கீகாரம் பெறுவதற்கும் நாங்கள் மேற்கொண்ட போராட்டங்களைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இன்று பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும் ரூ. 11000 நேரடி ஊதிய உயர்வு பெற்றுத் தந்துள்ளோம். மேலும், மூன்று வகைக் காப்பீடுகள் மற்றும் கிப்ட் என்ற வகையில் ஆண்டு தோறும் ரூபாய் 5000, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூபாய் 2400 மதிப்புள்ள ஜெர்கின், நல்லெண்ணத் தொகை என்ற வகையில் ரூபாய் 5500 மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றுத் தந்துள்ளோம். இது ஒரு மாபெறும் வெற்றி! ஓசூரில் உள்ள ஒட்டுமொத்த தொழிலாளர்களும், “ஒசூர் வரலாற்றிலேயே இந்த ஒப்பந்தம் மாபெறும் சாதனை, இப்படி ஒரு ஒப்பந்தத்தை இதுவரை நிறைவேற்றிப் பார்த்ததில்லை. தொழிலாளி என்ற வகையில் பெருமையாக இருக்கிறது.” எனப் பாராட்டுகிறார்கள், வியக்கிறார்கள்!

முதலாளித்துவப் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட போராடி வரும் எங்களுக்கு ஒரு பன்னாட்டுக் கம்பெனி நிர்வாகத்தைப் பணிய வைத்தது என்ற வகையில் இது மாபெரும் வெற்றியே!  அதாவது பணி நிரந்தரத்திற்காக கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர்க்ளின் வெற்றி ஓசூரில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு விழுந்த முதல் அடி என்றால், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின் வெற்றி என்பது அதன் அடுத்த படி!

கமாஸ் வெக்ட்ராவில் இதற்கு முன்பு இரு முறை சங்கம் கட்ட முயன்று தொழிலாளர் தலைமையில் இருந்தவர்களின் துரோகத்தால் கலைந்து விட்டது. இதனால், தொழிலாளர்கள் தொழிற்சங்கம் கட்டுவதிலேயே நம்பிக்கையின்றி இருந்தனர். எமது தோழர்களின் கடுமையான முயற்சியால் மட்டுமே தொழிற்சங்கம் கட்டப்பட்டது. தொழிற்சங்கம் கட்டியது முதல் இன்று வரை நிர்வாகத்தின் சூழ்ச்சிகளுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றுள்ளோம். பணி நிரந்தரம் செய்வதற்காக நாங்கள் சட்டத்தை மட்டும் நம்பி இருக்கவில்லை. அரசையும், ஆலை நிர்வாகத்தையும் நிர்பந்திக்கும் வண்ணம் பல போராட்டங்களை நடத்தினோம். எங்களது முதல் கட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றோம்.

அடுத்து, ஊதிய உயர்வு ஒப்பந்தம், நாங்கள் கோரிக்கை மனு கொடுத்தவுடனேயே நிர்வாகம் ஒப்பந்தத்தை எளிதாக முடித்துவிடவில்லை. “2500 ரூயாய்தான் ஊதிய உயர்வு தரமுடியும், வேணும்ணா நீங்க ஸ்ட்ரைக் பண்ணிக்கங்க.” என்று அடாவடித்தன் செய்தது நிர்வாகம். தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியது. தினமும் ஒரு காரணத்தைக் கூறி ஒப்பந்தத்தை தள்ளிப் போட்டது. இவற்றை எதிர்கொண்டு பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைமையின் வழி காட்டுதலின்படி செயல்பட்டோம். ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஐந்து மாதத்திலேயே பேசி முடித்தோம். நிர்வாகத்தின் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து வெற்றி பெற்றோம்!

நிரந்தத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் பேசி முடிப்பதோடு நாங்கள் நின்று கொள்ளவில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் போனசு வழங்கக் கோரி நிர்வாகத்திடம் போராடி வருகிறோம். தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ரூ.4500 லிருந்து ரூ.6000 ஆக ஊதியத்தை பேசு முடித்துள்ளோம். ஆலையில் புதிதாக ஆள் எடுப்பு செய்வதாக இருந்தால் இவர்களுக்கு மட்டும்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை பேசி முடித்துள்ளோம்.

__________________________________________________

“நக்சல்பாரிகள் என்றால் தீவிரவாதிகள்; குண்டு வைப்பவர்கள்; அவர்களுடன் சேர்ந்தால் நாளைக்கு உங்களுக்கு நல்லதல்ல; இப்பப் பிரச்சினை இல்லைன்னாலும் என்னைக்கும் பிரச்சினைதான்” என்று கமாஸ் தொழிலாளர்களுக்கு உபதேசிக்காதவர்கள் இல்லை. உண்மையில் யாரை தீவிரவாதிகள், யாருடன் சேர்ந்தால் வாழ்க்கை பறிபோகும் என்றெல்லாம் பேசினார்களோ, அந்த நக்சல்பாரிகளாகிய எங்கள் சங்கத்தில் சேர்ந்துள்ளதால்தான் கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர்களின் வாழ்க்கை உத்தரவாதம் செய்யப்பட்டது. நிரந்தர வேலை, எல்லோரும் மெச்சும்படியான ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. இதுதான் உண்மை!

நக்சல்பாரிகளாகிய நாங்கள்தான் உண்மையான கம்யூனிஸ்டுகள். நாங்கள் முதலாளிகளுக்கு அழிவு சக்தி! உழைக்கும் மக்களுக்கு ஆக்க சக்தி!  அதனால்தான் முதலாளிகள் எங்கள் பெயரை கேட்டவுடனேயே ஓங்கிக் கூச்சலிடுகிறார்கள்.

உற்பத்தியை சீர்குலைப்பவர்கள் நக்சலைட்டுகள் என்று முதலாளிகள் சொல்கிறார்கள். உற்பத்தியை சீர்குலைப்பதல்ல, எங்களது நோக்கம்.முதலாளித்துவ உற்பத்தி தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் பஞ்சத்திலும் பட்டினியிலும் தள்ளுகிறது என்பதைதான் எதிர்க்கிறோம்! அன்னிய பன்னாட்டுக் கம்பெனிகளால், உள்நாட்டு தரகு முதலாளித்துவ கம்பெனிகளால் ஒட்டு மொத்த உள்நாட்டுத் தொழில்கள் அழிக்கப்படுவதையும் விவசாயம் அழிக்கப்படுவதையும் எதிர்க்கிறோம். மக்கள் அனைவருக்கும் இயற்கையில் உள்ள எல்லாப் பொருள்களும் பொது என்பதே எங்கள் கொள்கை. இதனால் எல்லோரும் எல்லா நன்மைகளும் பெறவேண்டித்தான் போராடுகிறோம்.

நாங்கள் எப்போதும் முதலாளிகளுடன் சமரசம் செய்து கொள்வதில்லை. நாங்கள் கொண்ட கொள்கைக்கு நேர்மையாக செயல்படுபவர்கள்.“அட்ஜெஸ்மெண்ட் இல்லாம தொழிற்சங்கத்தை நடத்த முடியாது” என்று எங்களுக்கு பிழைப்புவாதத் தலைவர்கள் உபதேசிக்கிறார்கள்.ஆனால்முதலாளிகளுடன்சமரசம்செய்துகொள்வது தொழிலாளர்களுக்கு துரோகத்தில்தான் முடியும் என்பது கண்முன்னே நாம் காணும் அனுபவம்!

“எப்பப்பார்த்தாலும் போராட்டம்  பொதுக்கூட்டம்னு கூப்பிட்டுகிட்டே இருப்பாங்க!” என்று எங்களுக்கு எதிராக எங்கள் சங்கத்தில் இணைந்தவர்களிடம் பேசி தீர்த்தார்கள். சங்கத்தைவிட்டு வெளியே வரச்சொல்லி அழைத்தும் பார்த்தார்கள். இவ்வாறு பேசுபவர்கள் வேறுயாரும் அல்ல.முதலாளிகள் பரப்பும் கலாச்சார சீரழிவுகளையே வாழ்க்கையாகக்கொண்ட சுயநலவாதிகள், அவர்களுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ள முதலாளித்துவ ஊடகங்கள்.

ஆம்,நாங்கள் அடிக்கடி போராட்டம், பொதுக்கூட்டம் நடத்துபவர்கள்தான். யாருக்காக? இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்காக! அன்னிய பன்னாட்டுக் கம்பெனிகளால் நமது நாடு மீண்டும் அடிமையாக்கப்படுகிறதே அதற்கு எதிராக! தினம்தோரும் என்னற்ற தொழிலாளர்கள் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு பலியாகிறார்களே அதற்கு எதிராக! விவசாயிகளின் வாழ்வு பறிக்கப்படுகிறதே அதற்கு எதிராக! நீதிமன்றம்,சட்டமன்றம், போலீசு என்ற பெயரில் உழைக்கும் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறதே அதற்கு  எதிராக!  இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் படைக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வு விடியவேண்டும் என்பதற்காகத்தான் போராடுகிறோம்.

எங்களது அமைப்பின் தலைவர்கள் புகழையும் பணத்தாசையையும் விரும்பாதவர்கள்! சுகபோகத்தை விரும்பாதவர்கள்; எளிமையானவர்கள்; கட்டுப்பாடானர்வர்கள் எங்களை பாராட்டி விளம்பரங்களை நாங்களே செய்துகொள்வதுமில்லை! பிறர் எங்களுக்கு தனி நபர் விளம்பரங்கள் செய்தால் அதனை நாங்கள் அனுமதிப்பதுமில்லை! தலைமை முதல் கீழே உள்ள அணிகள் வரை துதி பாடும் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள். ஏனென்றால், நாங்கள் நக்சல்பாரிகள். உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடுபவர்கள். கம்யூனிசம் எங்களது கொள்கை!

நாங்கள் மக்களை நேசிப்பவர்கள்; மக்கள் மட்டும்தான் வரலாற்றைப் படைக்கும் மாபெரும் உந்து சக்தி என்பதை நம்புகிறவர்கள்; உழைக்கும் மக்களின் ஒற்றுமையின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்; எங்களுடைய எல்லாப்  போராட்டங்களையும் நாங்கள் மக்களிடம் கொண்டு செல்பவர்கள். அதனால்தான் எங்களின் போராட்டம் வெற்றியடைகிறது.

நாங்கள் எங்கள் அமைப்புக்கும், தலைமைக்கும் கட்டுப்பட்டவர்கள். உண்மையான ஜனநாயகத்தை நீங்கள் எங்கள் அமைப்பில் மட்டும்தான் பார்க்க முடியும். அதனால்தான், ஒரு முன்னுதாரணமிக்க ஒப்பந்தத்தை எங்களது அமைப்பின் தலைமையின் கீழ் கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர்களால் சாதிக்க முடிந்தது.

_________________________________________________

நாடு இன்று மறுகாலனியாக்கப்பட்டு வருகிறது. அன்னியப் பன்னாட்டுக் கம்பெனிகளும், உள்நாட்டுத் தரகு முதலாளித்துவக் கம்பெனிகளும் நமது நாட்டை ஒட்டச் சுரண்டுகின்றனர். தனியார்மயம்- தாராளமயம்- உலகமயம் என்ற பெயரில் நமது நாட்டின் பொதுச் சொத்து சூறையாடப்படுகிறது. கனிம வளங்கள், காடுகள், கடல் என எல்லாமே முதலாளிகளுக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளது. விவசாயம், நெசவு, சிறு தொழில்கள், வியாபாரம் மற்றும் வர்த்தகம் என எல்லாமே ஒழிக்கப்பட்டு முதலாளிகளின் நலனிற்கேற்ப மறுவார்பு செய்யப்படுகிறது. பல ஆண்டுகள் போராடிப் பெற்ற  உரிமைகள் எல்லாம் பறிக்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம், மருத்துவம், குடிநீர் என அரசியல் சாசனத்தில் சொலப்பட்ட எல்லா அடிப்படை உரிமைகளும் காசு உள்ளவர்களுக்கு மட்டும் சொந்தமாக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் சங்கம் வைக்க அனுமதிக்கப்படுவதில்லை. மீறி வைத்தால் சங்கம் வைக்க முயற்சிப்பவர்கள் வேலையை விட்டு விரட்டியடிக்கப்படுகிறார்கள். ஆலை மூடல் செய்து ஆட்டம் போடுகிறது முதலாளித்துவம். இதற்கு சட்டமும், நீதியும் சேவை செய்கிறது. அரசோ வாழ்த்தி வரவேற்கிறது.

இன்றுள்ள பிழைப்புவாத தொழிற்சங்க தலைமையோ முதலாளிகளின் வாதத்தையே தொழிலாளர்களுக்கு உப்தேசிக்கிறார்கள். போராட்டம் செய்யக் கூடாது என்று வழி நடத்துகிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள், தற்காலிகத் தொழிலாளர்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்கள் என்று தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துகிறார்கள். இந்த உலகத்தையே படைத்த தொழிலாளி வர்க்கத்தை புழுக்களைவிட கேவலமாக நடத்துகிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் எதிர் திசையில் போராட வேண்டிய கடமை தொழிலாளர் வர்க்கத்திற்கு உள்ளது. தொழிலாளர்கள் ஓரணியில் திரளவேண்டியுள்ளது. அந்த வகையில் போராடும் பு.ஜ.தொ.மு.வில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்!

  • முதலாளித்துவ பயங்கரவாதத்தை புதைக்குழிக்கு அனுப்புவோம்!
  • ஓசூரை தொழிலாளர் வர்க்கக் கோட்டையாக்குவோம்!
  • நாட்டின் விடுதலைக்காகவும் தொழிலாளர் உரிமைகளை மீட்பதற்காகவும் போராடுவோம்!
  • புதிய ஜனநாயகக் குடியரசமைப்போம்!
  • 19-12-2010

    மாலை 3 மணிக்கு

    இரயில் நிலையத்திலிருந்து ஊர்வலம்

    தலைமை: தோழர் சங்கர் மாவட்டச் செயலர், கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்

    மாலை 4.30 மணிக்கு

    ராம்நகர் அருகில் பொதுக்கூட்டம்

    தலைமையுரை;

    தோழர்.பரசுராமன்.மாவட்டத்தலைவர்,கிருஷ்னகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்

    மாலை 4.45 மணிக்கு வாழ்த்துரை;

    தோழர்.மாதையன்.செயலர்,ஏடிசி தொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    தோழர்.ஜி.விஜயகுமார்,செயலர்,எக்சைடுதொழிலாளர்சங்கம்,ஓசூர்,

    தோழர்.முரளி,துணைத்தலைவர்,பேட்டாதொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    தோழர்.மாதையன், துணைத்தலைவர்,டிடிகே தொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    தோழர்.அகஸ்டின்,வெக்ட்ராஅசாத்  கம்பெனி,அத்திப்பள்ளி,கர்நாடகா,

    தோழர்.சம்பங்கி ராமப்பா,தலைவர்,குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    தோழர்.ஜெயராமன்,ஒப்பந்தத் தொழிலாளி,ஓசூர்,

    தோழர்.கண்ணன்,செயலர்,பு.ஜ.தொ.மு கிளை,ஜிடிபி கிரானைட் தொழிலாளர் சங்கம்,சேலம்,

    தோழர்.செல்வராசு,ஓட்டுனர்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,

    தோழர்.ம.சி..சுரேஷ்குமார்,மாவட்டச் செயலர்,பு.ஜ.தொ.மு.திருவள்ளூர்,

    தோழர்.ராஜன்,எஸ்.ஆர்.ஐ,பு.ஜ,தொ.மு,கோவை,

    தோழர்.கலை.பு.ஜ.தொ.மு. புதுவை,

    மாலை 6.15 மணிக்கு

    ஏற்புரை:தோழர்.முருகன்.தலைவர்,கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    மாலை 6.30 மணிக்கு சிறப்புரை;

    தோழர்.சுப.தங்கராசு, மாநிலச் செயலர்,பு.ஜ.தொ.மு,தமிழ்நாடு,

    மாலை 7.45 மணிக்குபுரட்சிகர கலைநிகழ்ச்சி

    மையக்கலைக்குழு,மகஇக தமிழ்நாடு,

    மாலை 8.40 மணிக்கு நன்றியுரை;

    தோழர்.முரளி,செயலர்,கமாஸ்வெக்ட்ரா தொழிலாளர் சங்கம்,புஜதொமு,ஓசூர்.

    ______________________________________

    புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

    தொடர்புக்கு;செல்-9788011784,ஓசூர்.
    ______________________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்

    தங்கம்: அழகா, ஆபாசமா, மகிழ்ச்சியா, வதையா?

    கோவை டவுண்ஹால் வழியாக நடந்து கொண்டிருந்தேன். பள்ளி நாட்களின் போது இங்கே ஜோலித்துக் கொண்டிருந்த தங்க நகைப் பட்டறைகளையோ, அதனால் சற்றே வளமாக வாழ்ந்து வந்த தங்கநகை ஆசாரி இளைஞர்களையோ இப்போது காணவில்லை. முழு இடமும் தன் உருவத்தை தலைகீழாக மாற்றியிருந்தது. தங்கத்தை நம்பி வாழ்ந்த அந்த மக்கள் எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்?

    பாரம்பரிய தங்கநகைத் தொழிலின் அழிவு!

    கோவையிலும் சரி, பொதுவாக நமது நாட்டிலும் சரி, தங்க நகை உருவாக்கம் என்பது முழுவதுமாக ஒரு நிலபிரபுத்துவ பாணியிலான உற்பத்தியாகவே இருந்துள்ளது. தங்க ஆசாரிகள், தமது வீடுகளிலேயே பட்டறைகளை அமைத்திருப்பர்; அவர்களது மொத்த குடும்பமும் சேர்ந்து நகை உருவாக்கத்தில் ஈடுபடும். நகை தேவைப்படுவோர் தங்கத்தை (நகையாகவோ, நாணயமாகவோ) ஆசாரியிடம் கொடுத்தால் அவர் நகையாக வார்த்துத் தருவார்.

    ஒரு நகையின் டிசைன்/ மாடல் போன்றவற்றைத் தீர்மானிப்பதிலிருந்து அதில் கல்பதிப்பது, அந்த நகையில் இருக்கும் பால்ஸ், கம்பி போன்றவைகளை டிசைனுக்குத் தகுந்தவாறு நுணுக்கமாக பொருத்துவது, மெருகூட்டுவது என்று அதன் உருவாக்கத்தின் சகல அம்சத்திலும் அந்த ஆசாரியே பங்குபெற்றிருப்பார்.

    இவ்வகையான உற்பத்தி முறையில் ஒரு நகையை உருவாக்க அதன் வேலைப்பாடுகளின் நுணுக்கத்தைப் பொருத்து ஒருவாரமோ பத்துநாளோ ஆகலாம்.

    இந்தப் பழையகால உற்பத்திமுறையில் தங்க நகை வடிவமைப்புத் தொழில் பல நூற்றாண்டுகளாக அப்படியே தேங்கி நின்றது. ஏனென்றால் நுகர்வு குறைவு. தேவைக்கதிகமாக வாங்கிப் பூட்டி வைப்பது என்பது போன்ற வழக்கங்கள் மிக மிக சில மேட்டுக்குடி குடும்பங்களிலேயே இருந்தது. மேலும் உற்பத்தி அதிகமாகி அதை சந்தையில் தள்ளியாக வேண்டும் எனும் கட்டாயமும் எழவில்லை.

    புதிய தாராளவாதக் கொள்கையின் அறிமுகம் இந்த நிலையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. நடுத்தர வர்க்கத்தினருக்கும் புதிதாக உருவாகி வந்த சேவைத்துறை ஊழியர்களுக்கும் ஐந்திலக்க சம்பளம் என்பது சாதாரணமாகிவிட்டபடியால்ல், அத்துறைகளின் மாப்பிள்ளைமார்களுக்கும் பெற்றோர்களுக்கும் மணப்பெண் வீட்டை ரத்தம் வர கறப்பதற்கான வாய்ப்பும் கூடியது. தங்கம் ஒரு சேமிப்பு என்ற நடுத்தர வர்க்க மனோபாவத்தைக் கடந்து, அது இப்போது அந்தஸ்தின் அடையாளமாகி விட்டது.

    நகை நுகர்வின் அதிகரிப்பு, அதன் உருவாக்க முறையில் மாற்றத்தை தோற்றுவித்தது. இதன் விளைவாக அத்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடையேயும் தொண்ணூறுகளின் இறுதியிலிருந்து பெரும் மாற்றங்கள் உருவாகத் துவங்கின.

    நகைத் தொழில் அதிகமாக நடந்து வந்த கோவையில் தொண்ணூறுகளின் இறுதியில் நகைப் பட்டரைத் தொழிலாளிகள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். முன்னொரு காலத்தில் ‘ஜே ஜே’ என்று நகைப் பட்டறைகள் நடந்து வந்த சலீவன் வீதி, குரும்பர் வீதி போன்ற பகுதிகள் எழவு விழுந்த வீடுகள் போன்று ஆனது. 98ல் இருந்து இரண்டாயிரத்திரண்டாம் ஆண்டுக்குள், நான்கே ஆண்டுகளில் சுமார் 300 நகைத் தொழிலாளிகளுக்கும் மேற்பட்டோர், நகையைக் கழுவப் பயன்படும் சயனைடைத் தின்று தற்கொலை செய்துகொண்டார்கள்.

    முப்பதாயிரம் பேர்களுக்கு மேல் ஈடுபட்டிருந்த நகைத் தொழிலில் இருந்து இருபதாயிரம் பேர் காணாமல் போயினர். 2002 வாக்கில் வெறும் பத்தாயிரம் பேர் தான் ஈடுபட்டிருந்தனர். இந்த வீழ்ச்சி 98க்குப் பின்னர்தான் உணரப்பட்டது என்ற போதிலும், வீழ்ச்சிக்கான விதை அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தூவப்பட்டுவிட்டது.

    தாராளமயமும், நுகர்வுக் கலாச்சாரமும் ஊட்டிய தங்க போதை!

    1991இல் என்.ஆர்.ஐ இந்தியர்கள் இந்தியாவுக்குள் தங்கம் கொண்டு வருவதில் இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. மேலும் தங்கம் இறக்குமதி செய்வதில் இருந்த மற்ற கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ன. 1990ல் இருந்து 1998 காலகட்டம் வரை தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 15 சதவீதமாக வளர்ச்சியுற்றது. இது அதே காலகட்டத்தில் வளர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட, எண்ணை, சர்க்கரை உள்ளிட்ட மற்ற பொருட்களுக்கான தேவை அதிகரித்த விகிதத்தை விட, உலகளவில் தங்கத்தின் தேவை அதிகரித்த விகிதம் மிகவும் அதிகமாகும்.

    இப்படி வெள்ளமென உள்நுழைந்த தங்கம், நகை உருவாக்கத் தொழிலில் மாற்றத்தைக் கோருகிறது. அதே காலகட்டத்தில் சிறிய அளவிலான நகைக் கடைகளுக்குப் போட்டியாக வட்டார அளவிலான வீச்சு கொண்ட நகை மாளிகைகள் உருவாகத் தொடங்கின. வாடிக்கையாளர்களில் ஒரு பெரும் பகுதியினர் இனிமேலும் ஆசாரிகளிடம் சென்று நாட்கணக்கில் காத்திருந்து அவர்கள் செய்து தரும் டிசைனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற நிலை மாறத் துவங்கியது.

    கடைக்குச் சென்றோமா பத்துக்கு இருபது டிசைன்களைப் பார்த்தோமா அதில் ஒன்றைப் பொறுக்கியெடுத்தோமா என்று வேலை சுளுவாகியது. இத்தகைய மாளிகைகள், தமது ஷோரூம்களில் வைத்து விற்கும் நகைகளை ஏதாவது ஒரு பட்டறையில் தங்கப் பாளங்களைக் கொடுத்து முழு நகையாக செய்து வாங்கி வந்தன.

    இது நகைப் பட்டறைகளுக்கு விழுந்த முதல் அடி. தமது வாடிக்கையாளர்களில் பெரும் பகுதியினரை கவர்ச்சிகரமான ஷோரூம்கள் கொண்ட நகை மாளிகளிடம் அவர்கள் இழந்தனர்.

    நகை மாளிகைகளுக்கு இவர்கள் செய்து கொடுத்தாலும், லாபம் முன்பை விடக் குறைவு தான். ஆனாலும் ஓரளவுக்கு வேலையிழப்பை சமாளித்து வந்தவர்களுக்கு இன்னுமொரு இடி சங்கிலித்தொடர் நகை மாளிகைகளின் வரவால் ஏற்பட்டது. தனியார்மய, தாராளமயக் கொள்கைகளால் கொழுத்து விட்ட மேட்டுக்குடி வர்க்கம், வாழ்க்கைத்தரமும் சேமிப்பும் மேம்பட்ட நடுத்தர வர்க்கம், இவர்கள் அனைவரிடமும் நிலவிய பிற்போக்குத்தனமான நகை மோகமும், நகை முதலாளிகளுக்கு பொன்னானதொரு வாய்ப்பை, மெய்யாகவே தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்கியது.

    நகைக்கடையை சுமக்கும் மணமகள்கள்: செல்வத்தின் செருக்கு!

    நுகர்வு மோகத்துக்கான வடிகாலாகவும், அந்தஸ்தைக் காட்டிப் பீற்றிக் கொள்ளத் தோதான பகட்டாகவும், அதே நேரத்தில் எச்சரிக்கை உணர்வு மிக்க இந்திய நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புப் பெட்டகமாகவும், லஞ்ச ஊழல் கருப்புப் பணத்தைப் பதுக்குவதற்கும் வரி ஏய்ப்பு செய்வதற்குமான கையடக்கமான முதலீடாகவும் இருந்த தங்கம், தனிச்சிறப்பானதொரு இடத்தை சந்தையில் பிடித்தது.

    ஜாய் ஆலூக்காஸ், கல்யாண் ஜுவல்லரி, ஸ்ரீ குமரன் நகை மாளிகை, ஜோ ஆலுக்காஸ்  சன்ஸ், மலபார் கோல்ட், ஆலாபட் ஜுவல்லரி, தனிஷ்க் என்று புற்றீசல் போலக் கிளம்பின சங்கிலித் தொடர் நகைக்கடைகள். இவர்களில் பலர் பாரம்பரிய நகை வியாபாரிகள் அல்ல என்பதுடன்,கார்ப்பரேட் நிறுவனங்களும், கறுப்புப் பண மாஃபியாக்களும்தான் இன்று இத்தொழிலில் கோலோச்சுகின்றனர்.

    இவர்களுடைய விற்பனைக்கு ஏற்கெனவே வாடிக்கையாளர்களிடம் நிலவி வந்த தங்க மோகம் போதுமானதாக இல்லை. வாழ்த்து அட்டை வியாபாரிகளும் பரிசுப்பொருள் வியாபாரிகளும், “தந்தையர் தினம், தனயர் தினம், தமக்கையர் தினம், காதலர் தினம், காதல் கைகூடாதவர்கள் தினம்” எனப் பலவகையான தினங்களை உற்பத்தி செய்வதைப் போல நகை வியாபாரிகள் புதிய சம்பிரதாயங்களை உருவாக்கத் தொடங்கினர். ‘உயர்’சாதிகளிலிருந்து மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்தும் நடுத்தர வர்க்கம் பரவலாகத் தோன்றி விட்டதால், இன்ன ஜாதிக்கு இன்ன தாலி என்றும், இன்ன ராசிக்கு இன்ன ராசிக்கல் என்றும் பரிந்துரைக்க ஜோதிட ‘வல்லுநர்களை’ பெரும் நகைக் கடைகள் அமர்த்திக் கொண்டனர்.

    ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் கேள்வியே பட்டிராத அக்ஷய த்ரிதியை என்ற ஒரு பண்டிகையை பரணிலிருந்து தூசு தட்டி எடுத்தனர். அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என்று மாறி மாறி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். அட்சய திரிதியை நாளில் நகை வாங்கினால் ‘நல்லது’ என்றும் ‘ஐசுவரியம்’ பொங்கும் என்றும் மக்கள் நம்பவைக்கப்பட்டனர்.

    மேல் வர்க்கத்தாரின் மீது பிரமிப்பு கொள்ளும் அடித்தட்டு வர்க்கத்து மக்களும் கூட அந்த நாளில் “ஒரு குந்துமணி அளவுக்காவது வாங்கித்தான் வைப்போமே” என்று சிந்திக்கும் அளவுக்கு அக்ஷய த்ரிதியை ஒரு சடங்காகவே மாறிப்போனது. நல்லதோ கெட்டதோ ஒரு தேவைக்குப் பயன்படும் என்ற நியாயத்தைக் கூறிக்கொண்டு, கடன் வாங்கியாவது அந்த நாளில் தங்கத்தை வாங்குவது ஒரு பழக்கமானது. போதும் போதாதற்கு மக்களிடையே நிலவும் சினிமாக் கவர்ச்சியும் துணைக்கழைத்துக் கொள்ளப்பட்டது. துணிக்கடைகளைப் போலவே நகைக்கடைகளுக்கும் பிரபல நடிகைகள் நடிகர்கள் பிராண்டு அம்பாசிடர்களாகினர்.

    கூலிகளாய் ஆக்கப்பட்ட தங்கநகை பட்டறை முதலாளிகள்!

    இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் பரவலாக சிறிய யூனிட்டுகளில் நவீன இயந்திரங்கள் இடம்பெறத் துவங்கின. இதற்கிடையில் பாரம்பரிய நகைத் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து வேலைச் சந்தையின் போட்டியில் தங்களை தக்கவைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சிகளை சங்கிலித் தொடர் நகை மாளிகைகள் தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் ஒழித்துக் கட்டின.

    ஓரளவுக்கு நவீன நகை மாளிகைகளின் தாக்குதலை சமாளித்து குற்றுயிரும் குலை உயிருமாக மிஞ்சிய நகைப்பட்டறைகள் பெரும் நகைக்கடைகளுக்கு குறைந்த கூலிக்கு வேலை செய்து தரும் யூனிட்டுகளாக மாறிப்போயின. மொத்தமாக அவர்களின் வாடிக்கையாளர் அடித்தளமே ஆட்டம் கண்டு நொறுங்கிப் போனது. சிறுபட்டரைகளிடம் மிச்சம் மீதியிருந்த சுயேச்சைத் தன்மையையும் முற்றாக ஒழிந்து முழுக்க முழுக்க பெரிய நகைமாளிகைகளை அண்டியிருக்கும் அத்துக் கூலிகளாக முழுமையாக மாறிப்போயினர். சிறு பட்டறை முதலாளிகள் எல்லாம் வேலை எடுத்துச் செய்யும் ஏஜென்டுகளாக மாற்றம் பெற்றனர்.

    இந்தக் கால கட்டத்திற்குப் பின் ஒரே நகையை ஒரே பட்டரையில் தயாரிக்கும் பாணிக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஒரு நகையில் பல்வேறு அம்சங்களை வெவ்வேறு பட்டறைகளில் தயாரித்து பின்னர் இன்னொரு பட்டறையில் இணைத்துக் கொள்வது என்ற பாணி உருவெடுத்தது. நாடெங்கும் பரவிக்கிடந்த தங்கநகைத் தொழிலாளர்கள் தமது சொந்த ஊர்களில் இருந்து ஒருசில நகரங்களில் வந்து குவிந்தனர். புகழ் பெற்ற ஜெய்பூர் மாடல், பெங்காலி மாடல், கேரள காசு மாலை, மாங்கா மாலை நகைகள் கோவையில் இருந்து தயாராகிறது என்ற செய்தியின் பின்னே உள்ள நிதர்சனம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான கேரள நகைத் தொழிலாளர்களும், பெங்காலித் தொழிலாளர்களும் கோவையில் வந்து குவிந்துள்ளனர் என்பதாகும்.

    சுரண்டப்படும் பல்தேசிய  தொழிலாளிகள்!

    இப்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ப்பட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் என்பது நிரந்தரமானதல்ல  மூன்றிலிருந்து நாலாயிரத்துக்குள் சம்பளம் இருக்கும்  மற்றபடி இன்செண்டிவ் அடிப்படையில் தான் வேலை செய்கிறார்கள். அதாவது இத்தனை கிராம் ஆபரண உற்பத்திக்கு இத்தனை இன்செண்டிவ் எனும் அடிப்படையில். கோவை நகரம் என்பது சென்னையை ஒப்பிடும் போது அதிகம் செலவு பிடிக்கும் நகரம். எத்தனை சிக்கனமாக வாழ்க்கை நடத்தினாலும் கூட நாலாயிரம் என்பது மாதத்தின் இருபதாவது நாளிலேயே தீர்ந்து போகும். எனவே இன்செண்டிவ் தான் தாக்குப்பிடிப்பதற்கும் ஊருக்கு ஏதோ கொஞ்சம் பணம் அனுப்புவதற்கும் இருக்கும் ஒரே வழி.

    இந்தப் பட்டறைகளில் நவீன முதலாளித்துவ பாணியிலான உற்பத்தி முறை பழைய நிலபிரபுத்துவ பாணி உறவுகளோடு கைகோர்த்துக் கொண்டு, தொழிலாளிகளை கசக்கிப் பிழிகிறது. அதாவது, 8 மணி நேரம் அல்லது குறிப்பிட்ட நேர அளவிலான வேலை என்று கிடையாது; நிலையான சம்பளமும் கிடையாது. மாறாக அட்சய திரிதியை, தீபாவளி, முகூர்த்த தினங்கள் போன்று எப்போது பரபரப்பான விற்பனை நடைபெறும் நாள் வருகிறதோ அப்போது பெரு நகைக்கடைகள் தங்கக் கட்டிகளை இது போன்ற பட்டறைகளுக்குக் கொடுத்து நகையாக வாங்குவார்கள்.

    அந்த சமயத்தில் மட்டும் ஊழியர்களை கசக்கிப் பிழிவது; அதுவும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தூங்காமலும், இடையில் பட்டறையை விட்டு வெளியேற தடை விதிப்பதும் (தங்கத் துணுக்குகளை நக இடுக்குகளில் மறைத்து எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற சந்தேகத்தில்) கழிவறை வரையில் கண்காணிப்பதும் என்று குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட காட்டுவதில்லை. தொழிலாளிகளும் அந்த நாட்களில் சம்பாதித்தால் தான் உண்டு. சீசன் அல்லாத நாட்களில் சம்பளம் கிடையாது.

    இப்படிப்பட்ட பட்டறைகள் பொதுவில் காற்றோட்டம் இல்லாமலும் அடைசலாகவும் தான் இருக்கும். தப்பித்தவறிக்கூட தங்கத் துகள்கள் பட்டறை முதலாளிகளுக்குத் தெரியாமல் வெளியேறுவதைத் தடுப்பதற்கே இந்த ஏற்பாடு. தொடர்ந்து உட்கார்ந்தே வேலை செய்வதால் மூலவியாதி, முதுகுவலி, தங்கம் உருவாக்குவதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்களின் விளைவாய் ஆஸ்துமா போன்ற உபாதைகளோடு தான் பெரும்பாலான நகைத் தொழிலாளிகள் தமது வாழ்வை கழிக்க வேண்டியுள்ளது. சிறிய பட்டறைகளில் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியிருந்தாலும் அவர்களோடு சேர்ந்து சிறு முதலாளிகளும் வேலை செய்கிறார்கள்.

    முதலாளித்துவ பாணி இயந்திர உற்பத்தியாய் இருப்பதால் பால்ஸ் ஒரு பட்டறை, மோதிரம் ஒரு பட்டறை, கம்மலுக்கு ஒரு பட்டறை, கல் பதிக்க, கம்பி நீட்ட என்று உதிரி உதிரியாகத் தயாராகி, கடைசியில் ஒரு பட்டறையில் இணைக்கப்படுகிறது. இதன் உடன் விளைவாக ஒரு நகைத் தொழிலாளிக்கு முழுமையான ஒரு ஆபரணத்தை உருவாக்கும் நுட்பம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாது போகிறது.

    டிசைன்களை உருவாக்க பட்டைய படிப்பு, கம்ப்யூட்டர் வடிவமைப்புக்கான படிப்பு என்று ஏற்பட்டதால் பாரம்பரிய தொழில் நுட்ப அறிவு முழுமையாக நிராகரிக்கப்பட்டு கிட்டத்தட்ட அழியும் தருவாயில் உள்ளது. முழுமையான ஆபரண உருவாக்கத் திறனும் நுட்பமும் கொண்ட தொழிலாளி வெறும் கம்பி இழுக்கும் வேலையோ கல்பதிக்கும் வேலையோ செய்யும்படிக்கு நிர்பந்திக்கப்படுகிறார். வேறு எந்த வழியும் இல்லாத நிலையில் குறைகூலிக்கு இது போன்ற பட்டறையில் தொழிலாளியாய்வேலைக்குச் செல்கிறார்.

    சீசன் நாட்களில் சம்பாதித்தால் தான் உண்டு எனும் நெருக்கடி காரணமாக, நாட்கணக்கில் தூக்கமில்லாமலும் ஓய்வின்றியும் இவர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது. தூக்கம் வராமல் இருக்க கனமான உணவைத் தவிர்த்தும், பிஸ்கட்டுகள் சாக்லேட்டுகள் போன்ற நொறுக்குத் தீனிகளைத் தின்று இரண்டு மூன்று நாட்கள் தாக்குப் பிடித்தும் வேலை செய்கிறார்கள் தொழிலாளர்கள். தொடர்ந்து தூங்காவிட்டால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும், ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஆனால் தண்ணீர் குடித்தாலோ அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்து போக வேண்டியிருக்கும் என்பதால் அவ்வப்போது உதடுகளை மட்டும் நனைத்துக் கொள்ள மட்டுமே தண்ணீர்.

    தங்கத்தின் சூதாட்டமும், இரத்தக்கறை படிந்த வரலாறும்!

    தென்னாப்பிரிக்க தங்கச் சுரங்கத்தில் ஒரு தொழிலாளி

    சென்ற ஆண்டு மட்டும் இந்தியாவில் 800 டன் தங்க நகைகள் விற்பனையாகியுள்ளது. இதில் கேரளம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் பங்கு மட்டுமே அறுபது சதவீதத்திற்கும் அதிகம். உலகளவில் ஆண்டுதோறும் விற்பனையாகும் தங்கத்தில் 15% இந்தியாவில்தான் விற்பனையாகிறது. எனவே இந்தியாவை ‘தங்கத்தின் இதயம்’ என்கிறார்கள் தங்க வியாபாரிகள்.

    தங்கம் இப்போது முன்பேர ஊக வணிகத்தில் பட்டியலிடப்பட்டிருப்பதாலும், டாலரின் வீழ்ச்சி காரணமாக பாதுகாப்பான முதலீட்டின் அடுத்த புகலிடமாகத் தங்கம் இருப்பதாலும், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அதன் விலை மூன்று நான்கு மடங்கு எகிறியுள்ளது. தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அபரிமிதமான  செயற்கையான விலையேற்றம் என்பது உழைக்கும் மக்களை அதன் அருகில் கூட வர முடியாமல் விரட்டியடித்துள்ளது.

    பளபளக்கும் இந்த உலோகத்தின் வெளிச்சத்தில் தமது பகட்டினைக் காட்டும் சீமான்கள் இந்த வெளிச்சத்தின் கீழே இருண்டு கிடக்கும் கோடிக்கணக்கானோரின் வாழ்வை அறிந்திருக்கவே மாட்டார்கள்.

    அழிந்து போன கோவை தங்க நகை தொழிலாளிகளை எண்ணியபடி காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தேன். கல்யாண் ஜுவல்லர்ஸ் கடையின் முன் கூட்டம் அடைத்துக் கொண்டிருந்தது. சிலர் முகமெல்லாம் சிரிப்பாக கடையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். பஞ்சடைந்த நகைத் தொழிலாளின் கண்கள் நினைவிலாடியது. இந்தப் பழைய உலகத்தின் அற்பத்தனங்கள் வைக்கும் செலவு என்பது ஊகபேர சூதாடிகள் நிர்ணயிக்கும் விலையான பவுனுக்கு பதினாறாயிரம் ரூபாய்கள் மட்டும் தானா…?

    எங்கோ தென்னாப்ரிக்காவின் தங்க வயலின் பொந்துகளுக்குள் எவ்வித பாதுகாப்பு வசதிகளும் அற்று, நச்சுவாயுக்களை சுவாசித்து டன் டன்னாக பாறையை வெட்டி குந்துமணி குந்துமணியாக தங்கத்தைச் சேர்க்கும் அந்தக் கறுப்பினத் தொழிலாளியின் வியர்வைக்கும் இங்கே ஏதோவொரு சந்தினுள் ஒரு இருட்டு அறையினுள் குண்டு பல்பின் வெளிச்சத்தில் வெளியாகும் ஆஸ்துமா இருமலுக்கும் என்ன விலை வைக்க முடியும்? ஸ்பெயின் நாட்டுக் காலனியவாதிகள் கொன்றொழித்த இருபது கோடி செவ்விந்தியர்களின் ரத்தத்திலும் எண்ணி மாளாத கறுப்பின அடிமைகளின் ஏக்கப் பெருமூச்சின் வெப்பத்திலும் தோய்ந்த தங்கம் உங்கள் கழுத்தில் ஊறுகிறது.

    இது அழகா, புனிதமா, ஆபாசமா?

    _______________________________________________________________

    கார்க்கி, புதிய கலாச்சாரம், டிசம்பர் – 2010

    _______________________________________________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்: