Monday, August 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 801

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: ஊழலுக்குக் கவசமாகும் ‘தேசிய கவுரவம்’!

கனிமொழி-கல்மாடி: ஊழல் எதிர்ப்பா? ஊடக பரபரப்பா?

பல தலைமுறைகளாக ஊழலிலே ஊறித்திளைத்த காங்கிரஸ் கொள்ளைக் கூட்டம், அடுத்த மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளின் சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து கீழ்த்தரமாகப் பொறுக்கித் தின்றிருப்பது இப்போது சந்தி சிரிக்கிறது.

சென்ற ஆண்டு ஒலிம்பிக் போட்டியை சீனா நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் அதைப் போன்றதொரு போட்டியை நடத்தி அந்நிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாக ஆட்சியாளர்கள் கூறிவந்தார்கள். அதன்படி, 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், வரும் அக்டோபர்  3-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதிவரை காமன்வெல்த் நாடுகளின் போட்டிகளை டெல்லியில் நடத்தவிருக்கிறார்கள்.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வதற்கென அமைப்புக் கமிட்டி  ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைவராக சுரேஷ் கல்மாடி என்ற முன்னாள் காங்கிரசு அமைச்சர் நியமிக்கப்பட்டார். இந்தப் போட்டிகளுக்காக நவீன விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு வீரர்கள் தங்கும் குடியிருப்புகள் போன்றவற்றைப் புதிதாகக் கட்டுவது, ஏற்கெனவே உள்ள விளையாட்டு அரங்கங்களைச் சர்வதேச தரத்திற்கு நவீனப்படுத்துவது எனப் பல வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்தத் திட்டங்களின் எல்லா இடங்களிலும் வகைதொகையின்றி, அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் உள்நாட்டு – வெளிநாட்டு முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து ஊழல் செய்துள்ளது அம்பலமாகி வருகிறது. சென்ற மாதத்தில் இவர்களது ஊழல் வெளிப்படாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு தினந்தோறும் ஏதாவதொரு திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியது.

பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகள் அதனிடமிருந்து ‘சுதந்திரம்’ பெற்ற பின்னரும், எஜமான விசுவாசத்துடன் அமைத்துள்ள கூட்டமைப்புதான் காமன்வெல்த் என்பதாகும். காலனிய அடிமைத்தனத்தின் மிச்சசொச்சமாக விளங்கும் காமன்வெல்த்தின் தலைமைப்பீடமான  பிரிட்ஷ் பேரரசியின் முன்னிலையில் நடைபெற்ற ’காமன்வெல்த் சுடர்’ ஊர்வலத்தை அகன்ற திரையில் காட்டவும், அந்த ஊர்வலத்திற்கு கார்களை வாடகைக்கு எடுக்கவும், ஏ.எம்.பிலிம்ஸ், ஏ.எம்.கார்ஸ் ஆகிய பிரிட்டிஷ்  நிறுவனங்களுடன் பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டன. ஆனால், அது போன்ற நிறுவனங்கள் எதுவும் உண்மையில் இல்லை. இந்தியாவில் இவர்கள் கொடுத்திருந்த முகவரியும் போலியானது. ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் அனுப்பியது போன்றதொரு போலியான சிபாரிசுக் கடிதத்தை அதிகாரிகளே உருவாக்கி ஏமாற்றியுள்ளனர். பிரிட்டிஷ் பேரரசியே தனது அதிருப்தியைத் தெரிவிக்குமளவுக்கு இந்த ஊழல் சில்லறைத்தனமாக நடந்துள்ளது.

நாட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடம் இவ்விளையாட்டுப் போட்டிக்கு விளம்பரம் திரட்டித் தரவும், விளம்பரக் கட்டணத்தை வசூலிக்கவும் ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் என்ற ஆஸ்திரேலிய நிறுவனம் அமர்த்தப்பட்டது. இந்நிறுவனம் இதுவரை ஒரு விளம்பரதாரரைக் கூடப் பிடித்து தரவில்லை. அரசு நிறுவனங்கள் அரசு விழாக்களுக்கு விளம்பரம் தருவதென்பது வழக்கமான செயல்தான். இந்திய அரசுத் துறை நிறுவனங்கள் தாமே முன்வந்து வழங்கிய கோடிக்கணக்கான விளம்பரதாரர் தொகையில் 23 சதவீதத்தை, செய்யாத வேலைக்குக் தரகுப் பணமாக இந்த நிறுவனத்திற்குத் தரவேண்டும்.

நாக்பூரில் புதிதாக ஒரு விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு ஆன செலவு 84 கோடி ரூபாய்தான். ஆனால், டெல்லி நேரு விளையாட்டரங்கை ‘மேம்படுத்த’ மட்டும் 669 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். இவ்வாறு ‘மேம்படுத்தப்பட்ட’ அரங்கத்தின் கூரை, அண்மையில் பெத லேசான மழைக்கே ஒழுக ஆரம்பித்துவிட்டது. இதேபோன்று இன்னும் 17 அரங்கங்களை பல ஆயிரம் கோடிகளில் ‘மேம்படுத்தி’யுள்ளனர்.

“டிரெட் மில்” என்னும் உடற்பயிற்சி சாதனத்தின் அதிகபட்ச விலையே ரூபாய் மூன்று லட்சம்தான். ஆனால், அதனை 9.75 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். 10,000 ரூபாய் மதிப்புள்ள ஏர் கூலரை 40,000 ரூபாய்க்கும், ரூ.25,000 மதிப்புள்ள கணினியை 89,052 ரூபாய்க்கும் வாடகைக்கு எடுத்துள்ளனர். கையை சுத்தம் செய்ய சோப்புக் கலவையை உமிழும் சாதனத்தின் விலையே 450 ரூபாய்தான். இதனை 3,397 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துள்ளனர்.  குடைகளை 6,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த அநியாயம் குறித்து கேட்ட பொழுது, அக்குடைகளெல்லாம் ‘தனிச் சிறப்பானவை’ என்று கூச்சநாச்சமின்றிப் புளுகுகின்றனர். 50 முதல் 100 ரூபாய் மதிப்புள்ள கழிவறைக் காகிதச் சுருளை, 3,757 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். அவற்றில்  ‘தனிச் சிறப்பாக’ ஏதேனும் இருக்குமோ என்னவோ?

இதேபோல முக்கிய பிரமுகர்கள் அமரும் சோபாசெட்டுகள், குளிர்சாதன எந்திரங்கள், கார்கள் என பலவற்றை அவற்றின் சந்தை விலையை விட பல மடங்கு கூடுதலான விலைக்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். தொடக்கவிழாவின் போது ஒளிவெள்ளத்தைப் பாச்சும் ஹீலியம் பலூனூக்கு அன்றைய ஒருநாள் வாடகையாக  ரூ.50 கோடி  வாரியிறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது அரங்கத்தின் பாதியளவுக்குத்தான் ஒளியை உமிழும் என்று தொழில்நுட்பவாதிகளே அம்பலப்படுத்துகின்றனர்.

2003-இல் திட்டமிடப்பட்ட போது, இப்போட்டியை நடத்த மொத்தத்தில் ரூ.1,899 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது.  ஆனால், எல்லா அதிகாரிகளும் முதலாளிகளும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தைச் சுருட்டியதால் தற்போது செலவு மதிப்பீடு 35,000 கோடிகளில் வந்து நிற்கிறது. வேலைகள் எதுவும் முடிந்த பாடா இல்லை என்ற நிலையில், திட்டமிட்டதை விட 1575% செலவு அதிகரித்துவிட்டது. இதனை ஈடுகட்ட டெல்லி மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட நிதிகள் இதற்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆதரவற்ற முதியவர்களுக்கான 171 கோடி, தாழ்த்தப்பட்டவர்களுக்கான 744 கோடி நிதி ஒதுக்கீடு ஆகியன காமன்வெல்த் போட்டிகளுக்கு செலவு செய்யப்பட்டன. இதுதவிர, மெட்ரோ ரயில் திட்டத்திற்கென டெல்லி அரசு கொடுக்க வேண்டிய 5,000 கோடி ரூபாய், பல்வேறு கலாச்சார அமைப்புகளுக்கான டெல்லி அரசின் நிதி ஒதுக் கீட்டில் 14 கோடி ரூபாய் – என பிற நலப்பணிக்களுக்கான நிதிகள் காமன்வெல்த்தில் கரைக்கப்பட்டுவிட்டன.

இந்த விளையாட்டுப் போட்டியை நடத்த தனியாக ஒரு நகரத்தை உருவாக்காமல், தெற்கு டெல்லியை  ஆட்சியாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். இதற்காக தெற்கு டெல்லியில் நீண்டகாலமாகக் குடியிருந்து வரும் சேரிவாழ் மக்களை, நகரை அழகுபடுத்துவது என்ற பெயரில் விரட்டியடித்துள்ளனர். இதன் மூலம் டெல்லி பெருநகரத் திட்டத்தை தெற்கு டெல்லிவரை விரிவுபடுத்தி மேட்டுக்குடியினர் ஆதாயமடைந்துள்ளனர். விளையாட்டுப் போட்டிகளை ஒட்டி கட்டப்படும் வீடுகளை, போட்டிகள் முடிந்த பின்னர் கைப்பற்றிக்கொள்ள இப்போதே போட்டாபோட்டியும் ஊழல்களும் பெருகி, வெளியே கசியத் தொடங்கிவிட்டன.

இலஞ்ச ஒழிப்புத்துறை, இதுவரை நடத்திய விசாரணை மூலம் 16 திட்ட ஏற்பாடுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதை உறுதி செய்துள்ளது.  இது மட்டுமின்றி, கணக்கு தணிக்கை அதிகாரியின்  இடைக்கால அறிக்கையும் ஊழல் மோசடிகள் நடந்துள்ளதை நிலைநாட்டியுள்ளது. இருப்பினும், ஊழல் வெளியாகி இத்தனை நாட்களாகியும் சுரேஷ் கல்மாடி இன்னும் பதவியில் நீடிக்கிறார். ஊழல்-செய்தவர்களுக்கு ‘கடும்’ தண்டனை கொடுக்கப்படும் என்று மன்மோகன் சிங் சவடால் மட்டும் அடிக்கிறார். இவை ஒருபுறமிருக்க, போட்டியில் விளையாட்டு வீரர்களைச் சேர்த்துக் கொள்ள இலஞ்சம் வாங்குவது, வீராங்கனைகளுக்கு பாலியல் நிர்ப்பந்தங்கள் கொடுப்பது என பல வழிகளிலும் அதிகார வர்க்க ஊழலும் மோசடியும் அட்டூழியங்களும் நடக்கின்றன.

கும்பி கூழுக்கு அழும்போது கொண்டைக்குப் பூ வைத்த கதையாக, நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு வேளைச் சோறின்றி வாடும் போது ரூ.40 ஆயிரம் கோடி செலவில் இதுபோன்ற ஆடம்பர விழாக்கள் நடத்துவதென்பதே மிகவும் வக்கிரமானது. இந்த விழாவின் பெயரில் அதிகாரிகள் பொறுக்கித் தின்பதற்கு டெல்லிவாழ் ஏழை உழைக்கும் மக்களும், பல மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களும் தமது வாழ்வைப் பறிகொடுத்துள்ளதுதான், இதை விட வக்கிரமானது. காமன்வெல்த் போட்டிக்காக டெல்லியை அழகுபடுத்துகிறேன்  என்று கூறிக் களமிறங்கிய முதலமைச்சர் ஷீலா தீட்சித், டெல்லியிலுள்ள  60,000 பிச்சைக்காரர்களை விரட்டியடித்தார். சேரிகளை இடித்துத் தரை மட்டமாக்கி இலட்சக்கணக்கான ஏழை மக்களை வீடற்ற அனாதைகளாக, கடுங்குளிரில் அல்லாடவிட்டார். இனி, டெல்லியில் திருடர்களும் ஊழல் பேர்வழிகளுமான முதலாளிகளும் ஓட்டுப் பொறுக்கிகளும் இருக்கலாம். ஆனால் பிச்சைக்காரர்களும் ஏழைகளும் இருக்க முடியாது என்றாகிவிட்டது.

காமன்வெல்த் போட்டிக்காக டெல்லியின் உள்கட்டுமானத்தை மேம்படுத்தும் கட்டுமானப் பணிகளை ஒப்பந்தமெடுத்து ஊழல் செய்தவர்கள், இன்னொரு பக்கம் பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அற்ப கூலிக்கு வரவழைத்து, கொத்தடிமைகளாகக் கசக்கி பிழிந்து வேலை வாங்கியுள்ளனர். சந்தை விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை வாடகைக்கு எடுத்தவர்கள், தொழிலாளர்கள் தங்குவதற்கு வீடுகள் கூடக் கொடுக்காமல் பிளாஸ்டிக் தார்பாயிலும் தகரக் கொட்டைகளிலும் மொத்தமாக அடைத்ததால், தொற்று நோ தாக்கி இதுவரை நூறு பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர். கட்டுமானப் பணிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படாத நிலையில் ஏற்பட்ட விபத்துகளிலும்,  தரக்குறைவான பொருட்களால் கட்டப்பட்ட பாலங்கள், கட்டுமானங்கள் இடிந்து விழுந்த சம்பவங்களிலும் நூற்றுக்கணக்கில் தொழிலாளர்கள் கேள்வி கேட்க நாதியின்றி கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்ற விபத்துகளின் காரணமாக மெட்ரோ ரயில் திட்டப் பணியில் மட்டும் 90-க்கும் மேலான தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

காமன்வெல்த் விளையாட்டில் கரைபுரண்டோடும் ஊழலைப் பற்றிப் பேசினாலே, விளையாட்டுப் போட்டியால் இந்தியாவின் பெருமிதம் உயரும்போது, “ஊழலைப் பற்றிப் பேசி தேசத்தின் கவுரவத்தைக் குலைக்காதீர்கள்” என்று  ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவாகத் ‘தேசபக்தி’ கூச்சல் போடுகின்றனர். காங்கிரசு முன்னாள் அமைச்சரான மணிசங்கர் அயர் இந்த ஊழல்களைப் பற்றி வாய்திறந்தவுடனேயே, இதை காங்கிரசும் பா.ஜ.க.வும் ஊடகங்களும் கண்டிக்கின்றன. மேட்டுக்குடி இந்தியாவின் பிரச்சினை என்று வரும்போது இங்கே கட்சி வேறுபாடுகள் கூட மறைந்து போகின்றன. பொதுவில் காமன்வெல்த், ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்றாலே ஊழலும் முறைகேடுகளும் நடப்பது சகஜம்தான் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். நல்லபடியாக போட்டி நடக்கட்டும், ஊழலை பிறகு விசாரித்து முடிவு செய்வோம் என ஊழலுடன் ஒத்துப்போக வைக்கும் கண்ணோட்டம்தான் ஆளும் வர்க்கங்களாலும் ஊடகங்களாலும் பரப்பப்பட்டு வருகிறது.

‘தேசியப் பெருமித’ போதையில் இந்த அயோக்கியத்தனத்தை நாம் அங்கீகரிக்கப் போகிறோமா? கூச்சநாச்சமின்றி சில்லறைத்தனமாக நடந்துள்ள இந்த ஊழல் மோசடிகளையும்,  குடிசைவாழ் மக்களை கட்டாயமாக வெளியேற்றிவிட்டு ஆக்கிரமிக்கும் அட்டூழியத்தையும், கூலித் தொழிலாளர்களின் உதிரத்தை உறிஞ்சும் கொத்தடிமைத்தனத்தையும் நாம் இன்னமும் சகித்துக் கொண்டிருக்கத்தான் போகிறோமா?

_______________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010

_______________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அமெரிக்கப் போர்க் குற்றம்: ஈராக்கில் இன்னொரு ஹிரோஷிமா!!

13

ஈராக் பலூஜாவில் அமெரிக்க பயங்கரவாதம் உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியது. ஆனால், உலகம் இன்னும் விழித்தபாடில்லையே.ஈராக்கின் சதாம் அரசு பேரழிவு இரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், அது மனித இனத்துக்கே ஆபத்து என்றும் அப்பட்டமாகப் புளுகிய அமெரிக்கா தனது புளுகு மூட்டைகளில் இருந்து பேரழிவு ஆயுதங்களை அவிழ்த்துவிட்டு ஈராக்கின் இடிபாடுகள், பிணக் குவியல்கள் மேல் ’ஜனநாயகத்தை’ நிலைநாட்டியது.   நெடுந்தொலைவில் இருந்து குண்டு வீசலாம், ஆனால், ஈராக்கின் எண்ணை வயல்களை எப்படி உறிஞ்ச முடியும்?

ஈராக்கில் கால் பதிக்காமல் எண்ணை வளப் பிராந்தியத்தில் தன் ஆதிக்கத்தையும் தனது உலக மேலாதிக்கத் திட்டத்தையும் எப்படி நிறைவேற்ற முடியும்?  பீதியுடன் கால் பதித்த அமெரிக்கா, துரோகிகளின் பொம்மை அரசாலும், பிரித்தாளும் சூழ்ச்சியாலும் மட்டுமல்லாமல் தான் அடைந்த அதே பீதியை மக்களுக்கு ஏற்படுத்தும் பயங்கரவாத நடவடிக்கைகளாலுமே ஊன்றிய காலை உறுதி செய்துகொள்ள முயற்சித்தது.

அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான வீரஞ்செறிந்த ஈராக் மக்களின் சுதந்திர வேட்கை போராட்டமாக வெடித்துக் கிளம்பிய முதல் நகரம்தான் ஃபலூஜா.  ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு மேற்கே 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த நகரம் அது.  இங்கே தண்டகாரன்யா காட்டு வேட்டையில் ஆதிவாசிப் பள்ளிகளை இராணுவ முகாம்களாக மாற்றுவதுபோல இந்திய அடிவருடிகளின் எஜமானர்களான அமெரிக்கா ஏப்ரல் 28, 2003ல் ஃபலூஜாவின் ஒரு பள்ளிக்கூடத்தை இராணுவ முகாமாக மாற்றத் தலைப்பட்டது. இருநூறுக்கும் மேலான மக்கள் உடனடியாகக் கூடி  இந்த முயற்சியை முறியடிக்கப் போராடினர்.  அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் தாறுமாறான துப்பாக்கி சூடு நட்த்தி 17 பேரைக் கொலை செய்தது.  அடுத்த இரண்டாவது நாளில் இந்த படுகொலையைக் கண்டித்துப் போராடிய மக்கள் மீது மீண்டும் அமெரிக்க சிப்பாய்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் மாண்டனர்.

இச்செயல் பரந்துபட்ட மக்களின் கோபாவேசத்தை மூண்டெழச் செய்தது. ஃபலூஜா அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டத்தின் மையமானது.  கொடூரமான போர்க் குற்றங்கள் பல செய்திருந்த ’ப்ளாக்வாட்டர் யூ.எஸ்.ஏ’ என்ற தனியார் கூலிப்படையின் அணி வரிசையை மார்ச் 31, 2004 அன்று வெகுண்டெழுந்த மக்கள் கூட்டம் ஒன்று தடுத்து நிறுத்தியது. ப்ளாக்வாட்டர் கூலிப்படையினர் நால்வர் வாகனத்தில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு அடித்து, எரித்து யூப்ரடீஸ் நதியின் பாலத்தில் தொங்கவிடப்பட்டனர். இது கண்ட தொன்மைச் சிறப்பு மிக்க யூப்ரடீஸ் நதி தான் ஊட்டி வளர்த்த நாகரீகம் மீண்டும் தழைக்கும் என்ற புது நம்பிக்கையில் மகிழ்ச்சி வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடியிருக்கும்.

அபரிமிதமான அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்துக்கு எதிராக ஃபலூஜா மக்கள் நடத்திய நெஞ்சுரம் மிக்க போராட்டங்களும், அடைந்த வெற்றிகளும் நாடெங்கிலும் மக்களால் கொண்டாடப்பட்டது, உலகத்தார் கவனத்தை எல்லாம் ஃபலூஜா தம் பக்கம் ஈர்த்துக் குவித்தது.  அமெரிக்க ஆக்கிரமிப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.

வெறிகொண்ட அமெரிக்க இராணுவத் தலைமையகம் பெண்டகன் நவம்பர், 2004-ல் அதற்கு எதிர்வினை ஆற்றியது. ஃபலூஜா சுற்றி வளைக்கப்பட்டது.  உள்ளிருப்போர் அனைவரும் எதிரிகள் என்று அறிவிக்கப்பட்டனர். நகரம் படுபயங்கரமான ஆயுதங்கள் தரித்த ஈவிரக்கமற்ற ஏராளமான இராணுவத்தினரின் விளையாட்டுக் களம் ஆக்கப்பட்டது.  தப்பி ஓட முயன்ற மக்கள் குடும்பத்துடன் மீண்டும் அந்த கொலைக் களத்தில் பிடித்துத் தள்ளப்பட்டனர் என்று எழுதியது அசோசியேடட் பிரஸ்.

பேரழிவு இரசாயன ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகப் புளுகிக்கொண்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்காதான் வெள்ளைப் பாஸ்பரஸ் என்ற இரசாயனப் பொருளை மிகப் பெரும் அளவில் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தியது. போர்க்களத்தை ஒளியூட்டவே வழக்கமாய் பயன்படுத்தப்படும் இந்த இரசாயனம் மரணத்தை விளைவிக்கும் பயங்கரமான இரணங்களை ஏற்படுத்தக் கூடியது. கதவுகள், சன்னல்கள் போன்ற கட்டுமானப் பொருட்கள், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மக்களின் உடைகள் என தன் வழிப்பட்ட தடைகள் அனைத்தையும் எரித்துக்கொண்டு முன்னேறி இறுதியில் மனிதத் தோலையும், உள்ளிருக்கும் எலும்பையும் தின்று செறிக்கும் அகோரப்பசி கொண்டது அந்த இரசாயனம்.

மக்கள் பதுங்கி இருக்கும் பாதுகாப்பான குடியிருப்புக் கட்டிடங்களின் உள்ளிருக்கும் பிராண வாயுவையும் உரிஞ்சி எடுத்துவிடும் தன்மை கொண்ட வெள்ளைப் பாஸ்பரஸ் இத் தாக்குதலில் ஏராளமாகப் பயன்படுத்தப்பட்டது.  இத்தோடு நில்லாமல் சொல்லொணாத் துயரைத் தலைமுறை தலைமுறைக்கும் விளைவிக்கும் கதிர்வீச்சுத் தன்மைகொண்ட ஏராளமான குண்டுகள் இந்த நகரத்தின் மீதான குவிந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன என்றும் அஞ்சப்பட்டது.

அமெரிக்க இராணுவத்தால் உயிருடன் பிடித்துச் செல்லப்பட்ட மக்கள் (1300-1500 பேர்) அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர்.  இதையே வேறு சொற்களில், “ஆயுதப் போராளிகள்” 1400 பேர் கொல்லப்பட்டனர் என்ற தனது அறிவிப்பின் மூலம் வெளிப்படுத்தியது அமெரிக்கா.  ஃபலூஜா மக்களைப் பழிவாங்கும் தனது நோக்கத்தை இந்த செயலின் மூலம் வெளிப்படுத்திக்கொண்டது. படுகாயமுற்றுப் பரிதாப நிலையில் இருந்த ஒரு ஈராக்கியரை அமெரிக்க சிப்பாய் ஒருவன் சுட்டுக் கொல்வதைப் NBC செய்தி படம் பிடித்திருந்தது. தனது பாதுகாப்பு கருதி செய்யப்பட்டதே இந்த செயல் என அமெரிக்க இராணுவ விசாரணை பின்னாளில் கண்டறிந்து கூறியது. சுய மரியாதையும், சுதந்திர வேட்கையும் கொண்ட மனிதன் உயிருடன் இருக்கும் வரை தனக்குப் பாதுகாப்பில்லை என்பதைச் சொல்ல ஒரு விசாரணை எதற்கு?

பத்து நாட்கள் நடந்த இந்த தாக்குதலில் 51 அமெரிக்க சிப்பாய்கள் இறந்தனர்.  நகரத்து மக்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது.  இத் தாக்குதலுக்கு முன்னதாக பல பத்தாயிரம் மக்கள், பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் நகரத்தை விட்டு வெளியேறினர். இந்த தாக்குதலுக்கு முந்திய ஃபலூஜாவின் மக்கள் தொகை 4 ¼ –  6 லட்சம்.  தற்போதைய ஜனத்தொகையோ வெறும் 2 ½  –  3 லட்சம் மட்டுமே இருக்கும் என அஞ்சப்படுகிறது.

இத் தாக்குதலில் நகரத்தின் கட்டிடங்கள் பாதிக்கு மேல் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன.  ஈராக்கின் பல பகுதிகளைப் போலவே ஃபலூஜாவும் இடிபாடுகளுக்கு இடையேதான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.  கழிவு நீர் வெளியேற்ற வழிகள் செயல்படவில்லை, குப்பைகள் தெருக்களில் மலையாய்க் குவிகின்றன.  குடிநீர் வினியோகம் மாசுபட்டு இருக்கிறது.  டி.பி., டைஃபாய்ட், கழிச்சல் நோய்களுக்கு ஏராளமான மக்கள் ஆளாகின்றனர். தாக்குதல் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்த பின்னும் இதுதான் நிலை. இதுவும் ஒரு தாக்குதல் தானே.  இந்த நிலைமையை மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அனுவலகத்தின் IRIN –ன் சமீபத்திய ஆய்வு அறிக்கை வெளிப்படுத்துகிறது

ஃபலூஜாவின் புற்றுநோய் விகிதம் ஹிரோஷிமாவைக் காட்டிலும் படுமோசமாக உள்ளது

”ஈராக்கிய நகரம் ஃபலூஜாவின் புற்றுநோய், சிசு மரணம் மற்றும் மகப்பேறில் பாலின விகிதாச்சாரம் 2005-2009” என்ற தலைப்பிலான சமீபத்திய ஆய்வு, ”ஃபலூஜா நகர மக்கள் புற்று நோய், லூக்கிமியா- இரத்தப் புற்று நோய், சிசு மரணம், பாலின மாறாட்டம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இந்த பாதிப்புகளின் அளவு 1945-ம் ஆண்டு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலில் தப்பிப் பிழைத்தோரிடம் காணப்படும் அளவை விடக் கூடுதலாக இருக்கிறது” என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

ஜனவரி, பிப்ரவரி, 2010-ல் பலூஜாவின் 711 குடும்பங்களிலும், 4,843 தனி நபர்களிடமும், அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் உயிரணு அறிவியல் துறைப் [molecular biosciences] பேராசிரியரும், பசுமைத் தணிக்கைக்கான அறிவியல் ஆய்வுக்குழு என்ற சுயேச்சையான சூழலியல் அமைப்பின் இயக்குனருமான க்ரிஸ் பஸ்பி, மலக் ஹம்டன், எண்ட்சர் அரிஅபி மற்றும் பல ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்கத் தாக்குதலுக்கு முன்பு இருந்த அளவைக் காட்டிலும் புற்றுநோய் நான்கு மடங்கு அதிகரித்து இருப்பதையும், தற்போது அங்கு காணப்படும் புற்றுநோயின் தன்மை அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்த ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்ட புற்றுநோயின் தன்மையுடன் ஒத்திருப்பதையும் அந்த ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து தெரிவிக்கின்றனர்.

அண்டை நாடுகளான எகிப்து, ஜோர்டான், குவெய்த் ஆகியவற்றில் காணப்படுவதைப்போல  இரத்தப் புற்றுநோய் [leukemia]  பாதிப்பு 38 மடங்கும், சிசு மரணம் 12 மடங்கும், மார்பகப் புற்றுநோய் 10 மடங்கும் ஃபலூஜாவில் அதிகரித்து இருக்கிறது. பெரியவர்களிடையே பெரும் அளவில் மூளைப் புற்றுநோய்க் கட்டிகளும் [brain tumors] , சீழ்க் கொப்பளங்களும் [Lymphoma] காணப்படுவதாக இந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.

1050 ஆண் குழந்தைகளுக்கு 1000 பெண் குழந்தைகள் என்று இருந்த விகிதம் 2005-க்குப் பின் மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது. அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிந்திய இந்த நான்கு ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் பிறப்பு விகிதம் 860 ஆண்களுக்கு 1000 பெண்கள் என்று தலைகீழாகி இருக்கிறது.  இந்த பாலின விகித மாறுபாடும் 1945-ன் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பிந்திய ஹிரோஷிமாவை ஒத்திருக்கிறது.

RAI 24 என்ற இத்தாலிய தொலைக்காட்சி செய்தி நிலையத்தில் பேசிய பேராசிரியர் பஸ்பி, “ஃபலூஜாவில் காணப்பட்ட கதிர்வீச்சு தொடர்பான இந்த ”அதீதமான” உயிர் மரபணுக்களின் மாறாட்டம் 1945-ம் ஆண்டு அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்குப் பின்னால் ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்டதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இது திறன் குறைந்த யுரேனியப் பிரயோகத்தால் விளைந்தது என்று நான் அனுமானிக்கிறேன்.  இவை தொடர்புபடுத்திப் பார்க்கப்படவேண்டியவை” என்று கூறியிருக்கிறார்.

அணுவுலை எரிபொருட் கழிவு என அறியப்படும் இந்த திறன் குறைந்த யுரேனியத்தை அமெரிக்க இராணுவம் கவசங்கள், பதுங்கு குழிகளைப் பிளக்கும் குண்டுகளிலும், தோட்டாக்களிலும் பயன்படுத்துகிறது.  இதன் வெடிப்பின்போது 40 சதவீதத்துக்கும் மேலான யுரேனியம் மீசிறு அணுத்துகள்களாக வெளிப்படுகிறது.  இது தாக்கப்பட்ட பகுதிவாழ் மக்களின் இரத்த ஓட்டத்தில் எளிதில் புகுந்து நிணநீர் சுரப்பிகளில் தங்கிவிடுகிறது.  அது வயதுவந்தோரின் விந்தணுவிலும், கருமுட்டையிலும் உருவாகும் மரபணுக் குறியீடுகளை (DNA) தாக்கி அடுத்த தலைமுறையினருக்கு பாரிய பிறவிக் கோளாறுகளை உண்டுபண்ணுகிறது.

இத்தகைய பாதிப்பால் விகாரமான பிறப்புகள், சிசு மரணம், பிறவிக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய்களின் எண்ணிக்கை ஃபலூஜாவில் செங்குத்தாய் உயர்ந்து நிற்பதை உறுதிப்படுத்தும் முறைப்படியான விஞ்ஞானபூர்வமான முதல் ஆய்வு இது.

சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பற்றிய சர்வதேச ஆய்வு ஏடு (IJERPH) வெளியிட்ட கொள்ளைநோய் பற்றிய ஆய்வும் அண்டை நாடுகளைக் காட்டிலும் படுமோசமான அளவில் மேற்சொன்ன பாதிப்புகள் ஃபலூஜாவில் நிலவுவதைக் கண்டறிந்து கூறியது.

பல ஈராக்கிய மற்றும் பிரிட்டிஷ் மருத்துவர்கள் இணைந்து கதிர்வீச்சு தொடர்பான நோய்களின் வெகுவான பரவல் பற்றிய ஒரு விசாரணை நடத்தக் கோரி ஐ.நா. சபைக்கு அக்டோபர், 2009ல் கீழ்க்கண்ட விவரங்களுடன் கூடிய ஒரு கடிதம் எழுதினர்: “தலை இன்றி முண்டமாகவும், இரு தலைகளுடனும், நெற்றியில் கண்ணுடனும், கைகால்கள் அற்ற முடமாகவும், இன்னபிறவாகவும் விகாரமாகப் பிறக்கும் ஏராளமான குழந்தைகளைக் காணச் சகியாது ஃபலூஜாவின் பெண்கள் பிள்ளைப் பேற்றை நினைத்து அரண்டு போயிருக்கிறார்கள்.  மேலும், சின்னஞ்சிறு குழந்தைகளும் கொடூரமான புற்று நோய்க்கும், இரத்தப் புற்று நோய்க்கும் ஆளாகி இருக்கிறார்கள்….

“செப்டம்பர், 2009-ல் ஃபலூஜா பொது மருத்துவ மனையில் 170 குழந்தைகள் பிறந்தன.  அவற்றில் 24% குழந்தைகள் பிறந்த ஏழு நாட்களுக்குள் இறந்துவிட்டன.  அவ்வாறு இறந்த குழந்தைகளில் 75% குழந்தைகள் மேற்சொன்ன விகாரத்துடன் பிறந்தவை…

“ஃபலூஜாவில் என்றும் காணாத அளவுக்குப் பிறவிக் கோளாறுகளுடன் பிரசவம் ஆவது மட்டுமல்ல, 2003-ம் ஆண்டுக்குப் பின்னால் குறைப் பிரசவங்கள் தாருமாறாக அதிகரித்து இருக்கின்றன.  அதனினும் கொடுமை என்னவென்றால், உயிர்த்திருக்கும் குழந்தைகளில் கணிசமானவை படிப்படியான பாரதூரமான உடலுறுப்புக் குறைபாடுகளுக்கு ஆளாகிறன”.

பாக்தாத் திருடன் அமெரிக்கா ஃபலூஜாவில் வீசிய அணுகுண்டு இப்படிப் பலவாறாக அம்பலப்பட்டு நிற்கிறது.  ஆனால் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை ஒட்டி மேற்சொன்ன பாதிப்புகள் பெருகி இருப்பதை நிரூபிக்கும்படியான எந்த ஒரு ஆய்வும் இல்லை என பெண்டகன் தடாலடியாக மறுத்துரைக்கிறது.  “குறிப்பான உடல்நலக் குறைபாடுகளை விளைவிக்கும்படியான எந்த ஒரு சூழலியல் பிரச்சினையும் இருப்பதாக ஒரு ஆய்வு கூட இதுநாள் வரை குறிப்பிடவில்லை” என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செய்தியாளர் மார்ச் மாதம் பி.பி.சி-க்குத் தெரிவித்தார்.

ஆராய்ச்சியாளர்களின் கண்ணோட்டத்தின்படி அதன் நுட்பமான விவரங்களை அறியும் அளவுக்கு விரிந்த அளவில் அப்படி ஒரு ஆய்வு மேற்கொள்ளப் படவில்லைதான்.. ஆனால், ஏன் இல்லை?  ஏனென்றால் அமெரிக்க வல்லரசோ, அதன் ஈராக்கியத் தலையாட்டி பொம்மை அரசோ அவ்வாறான முயற்சிகளைத் தடைசெய்கின்றன என்பதே உண்மை.

ஈராக்கிய அதிகாரிகள் தங்களது ஆய்வு நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தனர் என்கின்றனர் இப்புதிய ஆய்வறிக்கையின் ஆசிரியர்கள். “கேள்விப்படிவத்திலான விவரத்திரட்டு அப்போதுதான் முடிந்திருந்த சமயத்தில், இந்த ஆய்வையே ஒரு பயங்கரவாதச் செயல் போல வர்ணித்து, ’பயங்கரவாதிகளால் ஒரு கேள்விப்படிவம் வினியோகிக்கப்பட்டு விவரத் திரட்டு நடைபெறுகிறது; அந்த கேள்விகளுக்கு பதிலளிப்பவர் அல்லது விவரம் திரட்டுபவர் எவரும் கைதுசெய்யப் படுவார்கள்’ என்று ஈராக்கியத் தொலைக்காட்சி மிரட்டியது” என அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

ஃபலூஜாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நமது காலத்திய படுமோசமான போர்க் குற்றங்களில் ஒன்று.  இவ்வித நடவடிக்கை “அதிர்ச்சியூட்டும் எச்சரிகை” அல்லது “கூட்டுத் தண்டனை” என அழைகப்படுகிறது. இது சட்டப்படி ஒரு போர்க் குற்றம்.

அமெரிக்க பயங்கரவாதம் உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியது.  ஆனால், உலகம் இன்னும் விழித்தபாடில்லையே.  ஃபலூஜாவின் படுகொலைக்குத் திட்டமிட்டவர்களுள் முதன்மையானவன் ஜென்ரல் ஜேம்ஸ் “மேட்- டாக்” மேட்டிஸ்.  2005-ல் ஒரு பொது நிகழ்வில் ”கூக்குரலிடும் கோட்டான்களின் நரகம் அது .. அங்கு சில நபர்களைச் சுட்டுத் தள்ளுவது ஜாலியான விசயம்” [it’s fun to shoot some people…. You know, it’s a hell of a hoot] என்று கொலை செய்வதில் தனக்குள்ள உவகையைத் தோளை உலுக்கிக்கொண்டு சர்வ அலட்சியமாக வெளிப்படுத்தியது அந்த வெறி நாய். அது இப்போது ஆஃப்கானில், அமெரிக்க இராணுவத் தலைமை பீடத்தில், பேட்ரஸின் இடத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறதாம். வாழ்க ‘கருப்பு ஆடு’ ஒபாமா.

இரண்டாம் உலக யுத்தம் முடிவுபெறும் தருவாயில், 1945 ஆகஸ்ட், 6-8 தேதிகளில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசி, யுத்தத்தின் ஊற்றுக்கண் வற்றிவிடவில்லை; ஹிட்லர் இடம் பெயர்ந்திருக்கிறான், இறந்துவிடவில்லை என்று உலகுக்கு அறிவித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். அன்று தொட்டு இன்று வரை மனித குலத்தைக் குதறியெடுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் அடிவருடிகளின் அட்டூழியங்கள் இப் புவிப்பரப்பையே அழித்தொழிக்கும்வரை நாம் பார்த்துக்கொண்டு இருக்கப் போகிறோமா?

______________________________________________________________

கட்டுரை ஆதாரம் : டாம் எல்லி – க்ளோபல் ரிசர்ச், ஜூலை 23, 2010

– அனாமதேயன்
________________________________________________________

தேர்தல்: தமிழக அரசியல் கூத்துக்கள் !!

தமிழ்நாடு தேர்தல்

தமிழக சட்டப் பேரவைக்கான 2011 பொதுத் தேர்தல்களுக்கான அரசியல் கூத்துகள் களைகட்டத் தொடங்கி விட்டன. இப்போதே கூத்தாடிகள் மீதான கவர்ச்சியை ரசிகர்களிடையே பரப்பும் முக்கிய ‘ஜனநாயகக் கடமை’யைப் பெருந்திரள் செய்தி ஊடகங்கள் பொறுப்புடன் தொடர்கின்றன. கூத்துக்குத் தேவையான கதை அமைப்புகள் – அரங்கக் காட்சிகள் தயாரிப்பில் ஓட்டுக் கட்சிகள் தீவிரமாகிவிட்டன.

கட்சிகளின் மேடைப் பேச்சாளர்களைத் தயாரிக்கும் முகமாக தொழிற்பட்டறைகளை அந்தந்த கட்சிகள் ஏற்பாடு செய்து தலைவர்களின் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. தலைவர்களின் “மூஞ்சி”களோடு கட்சியின் தேர்தல் சின்னங்களையும் மக்கள் மனதில் பதிய வைப்பதற்கு “ஃபிளக்ஸ்” தட்டிகளும், சுவரோட்டிகளும், கொடிகளும், பதாகைகளும் பெரும் எண்ணிக்
கையிலும் “ராட்சத”  அளவிலும் அச்சிடுவதற்கும், தலைவர்களை வரவேற்பதற்கான சரவெடிகள் வாங்குவதற்கும் சிவகாசியில் “ஆர்டர்கள்” கொடுக்கப்பட்டு விட்டன. சீரியல் விளக்குகளால் மின்னுமாறு தலைவர்கள் மற்றும் சின்னங்கள் அமைப்பதற்கான தயாரிப்புகள் செய்கிறார்கள்.

ஒலி-ஒளிக் குறுந்தகடு, மின்னணுச் செய்தி ஊடகம், கைபேசி போன்ற அதிநவீன சாதனங்களைத் தங்கள் பிரச்சாரங்களுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்று கட்சிகளின் சிறப்புக் குழுக்கள் மண்டையைப் பிய்த்துக் கொள்கின்றன. வேட்பாளர்கள் தேர்வுக்கான கொள்கை முடிவுகள் வகுக்கப்படுகின்றன. அதற்காகத் தொகுதிவாரியாக முக்கியப் பிரமுகர்களின் பட்டியல்கள், அவர்களைப் பற்றிய மதிப்பீடுகள், வெற்றிவாய்ப்புகளை ஆராய்வதற்குக் கணினி முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இவையெல்லாம் ஒருபுறம் நடக்க, தலைவர்களிடையே அனல் பறக்கும் அறிக்கைப் போர்களும் முத்திரை வசனங்களும் (பஞ்ச் டயலாக்) இப்போதே தொடங்கிவிட்டன. பெருநகரங்களில் போட்டி போட்டுக் கொண்டு மாறிமாறிக் கட்சிகளின் பேரணிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தங்களுக்குத்தான் அதிக ஆதரவு என்று காட்டுவதற்காக ஆளுக்கு நூறு ரூபாயும் பிரியாணிப் பொட்டலம் வீசிக் காக்கைக் கூட்டங்களைப் போல மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.

தேர்தல் பிரச்சாரங்களின்போது மக்கள் கூட்டத்தை இழுப்பதற்காக சினிமா நடிகர்களுக்கு வலை வீசப்படுகிறது. ஓட்டுக்கட்சிகளிடையே கூட்டணி பேரங்கள் ஆரம்பிப்பதற்கு முந்தைய பணியாக நோட்டம் விடுவது, ஆழம் பார்ப்பது, தூது அனுப்புவது ஆகியன நடக்கின்றன.

இவையனைத்தும் பற்றிய நடப்பு விவரங்களை இங்கே தொகுத்துத் தரவில்லை. ஏனென்றால், நாளிதழ்கள், வாரம் இருமுறை கிசுகிசு ஏடுகள் முதல் வார இதழ்கள் முதலிய பத்திரிக்கைகளிலும் வானொளிகளிலும் இவை பற்றிய செய்திகள் நிரம்பி வழிகின்றன. ஓட்டுக்கட்சிகளின் இந்த அரசியல் கூத்துக்கள் எல்லாம் இன்றைய நவீன வசதிகள், சாதனங்களைப் பயன்படுத்தி நடக்கின்றனவே தவிர, புதியதல்ல; எண்பது ஆண்டுகளுக்கு முன்பு காலனிய காலத்தில் ஓட்டுக்கட்சி முறை புகுத்தப்பட்ட காலத்திலிருந்தே தலைமுறை தலைமுறையாக நடப்பவைதாம்.

ஆரியம் – திராவிடம், தேசியவாதம் – இனவாதம், சோசலிசம் – முதலாளித்துவம், இந்துத்துவம் – மதச் சார்பின்மை – சிறுபான்மை, தலித்தியம் – ஆதிக்க சாதியம் என்று சித்தாந்த கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றைக் கடந்து அரசியல் – தேர்தல் கூட்டணிகளைச் சந்தர்ப்பவாதமாக அமைத்துக் கொள்வதும், பதவிக் காகக் கட்சி மாறுவதும், ஆட்சிக் கவிழ்ப்பும், மைனாரிட்டி ஆட்சிகள் நடத்துவதும் – இவையெதுவும் புதிதில்லை.

இந்தக் கூத்துக்களையே மரபாகவும், விதியாகவும் மாற்றிவிடும் பல நியாயவாதங்களை ஓட்டுக்கட்சித் தலைவர்கள் வகுத்து நிலைநாட்டியும் விட்டார்கள். “அரசியலில் எதுவும் நடக்கலாம்,” “அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தர எதிரிகளும் கிடையாது”, “அரசியல் என்பதே எண்ணிக்கை விளையாட்டுதான்”, “தொகுதி உடன்பாடு வேறு, அரசியல் கூட்டணி வேறு”என்று தங்கள் வசதிக்கேற்ப அரசியல் சூத்திரங்களை ஓதுகிறார்கள்.

சமுதாய ரீதியில் மிகவும் ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் இசுலாமிய மக்களின் மீட்புக்காக புதிதாக அவதாரம் எடுத்துள்ள தலைவர்களாகவும்  தலித்திய – இசுலாமிய அறிவாளிகளாகவும் காட்டிக் கொள்ளும் திருமாவளவனும் பேராசிரியர் ஜவாகருல்லாவும் ஓட்டுக்கட்சிக் கூட்டணி அரசியல் சாக்கடையில் சங்கமமாகிய பிறகு, மேலும் புதிய நியாயவாதங்களையும் அதற்கான சூத்திரங்களையும் சொல்லத் தொடங்கியுள்ளனர். அரசியலை அரசியலாகத்தான் அணுகவேண்டும், கோட்பாடு, தர்க்கம், பகுத்தறிவு எல்லாம் அதற்குப் பொருந்தாது என்று உபதேசிக்கிறார்கள்.

பிரபாகரன் “கெட்-அப்”பில் தோன்றி முழக்கமிடும் திருமாவளவன், ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதில் ராஜபக்சேவுக்கு உடந்தையாயிருந்த காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளதை நியாயப்படுத்துகிறார். நாடு முழுவதும் இசுலாமியரைக் கொன்று குவித்த பா.ஜ.க.வுடனும், குறிப்பாக குஜராத்தில் அவர்களுக்கெதிராக பாசிச கொலைவெறியாட்டம் போட்ட மோடியுடனும் தோளோடு தோள் உரசும் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைப்பதை ஜவாகருல்லா கும்பல் நியாயப்படுத்துகிறது.

தேர்தலுக்குத் தேர்தல் மாறி மாறி சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைக்கும் பச்சோந்தி ராமதாசு என்று கிண்டலடிக்கப்பட்டவர், இப்போது சீந்துவார் இல்லாமல் சாயம் போன ஓணான் நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் காங்கிரசு தலைமையில் மூன்றாவது அணி அமைக்க வேண்டும்; நடிகர் விஜயகாந்த் கட்சியுடன்கூடக் கூட்டணிக்குத் தயார் என்று நடுத்தெருவில் நின்று கூவுகிறார்.
இப்போது தேர்தல் கூட்டணிகளை அமைப்பது என்பது ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வாக்கு வங்கியின் ஆதரவு சதவீதம், அதன் மீதான கூட்டல் – கழித்தல் என்ற எண்ணிக்கைக் கணக்காகிவிட்டது. அரசியல் என்பது ஆளும் கட்சிகளின் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளை அம்பலப்படுத்துவதும் குற்றஞ்சாட்டுவதும் எதிர்க்கட்சிகள் மீது “நீங்கள் மட்டும் யோக்கியமா?” என்ற கேள்வி எழுப்பி எதிர்க் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதும் என்றாகிவிட்டது.

மக்களை ஈர்ப்பதற்கு ஆளும் கட்சிகள் இலவசக் கவர்ச்சி அறிவிப்புகளை செய்வதும் (முன்பு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச எரிவாயு அடுப்பு, இனி காங்கிரீட் வீடு, விவசாயிக்கு பம்பு செட் ஆகியவை); அவற்றையும் “போதாது, போலி” என்று எதிர்க்கட்சிகள் குறைகூறுவதும் என்றாகி விட்டது. போலி கம்யூனிஸ்டுகள் தமது காலாவதியான கொள்கைகளையும் கைகழுவிவிட்டு, பல சமயங்களில் அரசியல் அனாதைகளாகிவிட்ட நிலையில், ஏதாவது ஒரு அணியில் ஒட்டிக் கொண்டு காலத்தைத் தள்ளுகின்றனர்.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமாக்கத்தை ஓட்டுக்கட்சிகள் பெரும்பான்மையாக நேரடியாகவும், சில கட்சிகள் (போலி கம்யூனிஸ்டுகள், போலி சோசலிசக் கட்சிகள்) மறைமுகமாகவும் ஏற்றுக் கொண்டுவிட்டன. இதனால்தான் சிறுபான்மையாக உள்ள நிலையிலும் பா.ஜ.க., காங்கிரசு ஆட்சிகள் மாறிமாறி நீடிக்க முடிகிறது. நாட்டுக்கும் மக்களுக்கும் விரோதமான சட்டதிட்டங்கள் வெறியுடன் அமலாக்கப்படுகின்றன.

தொடர்ந்து மேற்கண்டவாறு பல அரசியல் கூத்துக்கள் அரங்கேற்றப்படுவதால், செய்தி ஊடகங்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஓட்டுக்கட்சிகளின் ஊது குழல்களாகவும், வெறுமனே களியாட்ட வியாபாரிகளாகவும் செயல்படுவதன் காரணமாக மக்கள் ஒருவித மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்கள். கணிசமான அளவு இலவசத் திட்டங்கள், ஓட்டுக்குப் பணம் ஆகியவற்றால் ஊழல் படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஓட்டுக்கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சிக்கோ, அணிக்கோ மக்கள் தொடர்ந்து வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

_______________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010

_______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

வரலாறு: உலகில் தோன்றிய முதலாவது கறுப்பினக் குடியரசு!!

11

இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா – 5

  • அடிமைகளின் புரட்சி எந்த நாட்டில் வென்றது?
    அமெரிக்க கண்டங்களில் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த இரண்டாவது நாடு எது?
    உலகில் தோன்றிய முதலாவது கறுப்பினக் குடியரசு எது? ‘

ஹைத்தி’ என்பதே இந்த மூன்று கேள்விகளுக்குமான விடை.

Haiti Map

அமெரிக்கப் புரட்சி குறித்து உலக நாடுகளின் பாடப்புத்தகங்கள் அனைத்தும் போதிக்கின்றன. ஆனால், அதற்குப் பிறகு வரலாற்றில் இடம்பெற்ற முக்கியமான புரட்சியை கண்டுகொள்ளாமல் மறைக்கப்பார்க்கின்றன. பாட நூல்கள் மட்டுமல்ல, எந்தவொரு சரித்திர ஆசிரியரும், ஊடகமும் அதை நினைவுப்படுத்துவதில்லை. ஹைத்தியில் வெற்றி பெற்ற அடிமைகளின் புரட்சி, பிற நாடுகளுக்கும் பரவிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

ஹைத்தியின் சுதந்திரத்தை அடக்குவதற்காக படை அனுப்பிய நெப்போலியன் பின்வருமாறு கூறினான். ‘நான் ஹைத்தியின் செல்வத்தை பாதுகாப்பதற்காக படையனுப்பவில்லை. கறுப்பின அடிமைகளின் வெற்றி, உலக கறுப்பினத்தவர்களின் விடுதலைக்கு தூண்டுகோலாக இருக்கக் கூடாது. அதற்காகத்தான் படையனுப்புகிறேன்…’ ஹைத்தி விடுதலையடைந்த நேரத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை காலனி அடிமையாக்கிக் கொண்டிருந்தார்கள். அன்று உலகம் முழுவதையும் ஆண்ட ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகள், ஹைத்தி புரட்சி பற்றி இருட்டடிப்புச் செய்தன. வேறு சில மத்திய – அமெரிக்க, கரீபியன் நாடுகளில் அடிமைகள் கிளர்ச்சி செய்தபோதும் அவற்றை முளையிலேயே அழித்தார்கள்.

இருநூறு வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பிய வல்லரசுகளுக்கு எதிராக கெரில்லாப் போராட்டம் நடத்தி ஹைத்தி விடுதலை பெற்றது. இதற்காக ஹைத்தி மக்கள் இன்று வரை விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம்’ என்று முழங்கிய பிரெஞ்சு புரட்சியாளர்கள், கறுப்பர்களுக்கு அது பொருந்தாது என்றார்கள். வட அமெரிக்க புரட்சியாளர்கள், 50 வருடங்களுக்கு பின்னர்தான் ஹைத்தியின் சுதந்திரத்தை அங்கீகரித்தார்கள். நஷ்டஈடு வழங்க ஒப்புக் கொண்ட பின்னர்தான், ஹைத்தியின் இறையாண்மையை பிரான்ஸ் ஏற்றுக் கொண்டது. வரலாற்றில் இன்னொரு தடவை அடிமைகளின் புரட்சி நடக்கக் கூடாது, அப்படியே நடந்தாலும் அப்புரட்சி வெல்லக் கூடாது என்பதில் எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள். விதிகளை மீறுவோர் ஹைத்தி போன்று நிரந்தர வறுமைக்குள் வருந்துமாறு சபிக்கப்படுவார்கள் என அச்சுறுத்துகிறார்கள்.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர் கொலம்பஸ் ஹைத்தியை ‘கண்டுபிடித்தபோது’  அதனை ‘ஹிஸ்பானியோலா’ என்று பெயரிட்டார். அங்கே நிறுத்தப்பட்ட நாற்பது ஸ்பானிய வீரர்களும், ஒரு வருடத்துக்கு பின் கொலம்பஸ் திரும்பியபோது உயிருடன் இல்லை. அவர்கள் கட்டிய கோட்டையும் எரிந்து சாம்பலாகிக் கிடந்தது. உள்ளூர் செவ்விந்திய பெண்களை அந்த ஸ்பானிய வீரர்கள் கடத்திச் சென்று பாலியம் பலாத்காரம் செய்ததற்கான பழிவாங்கல் நடவடிக்கை அது. தன்மானம் சீண்டப்பட்டதாக உணர்ந்த ஸ்பானியர்கள், செவ்விந்தியர்களை கொன்று குவித்தார்கள், அல்லது சாகும் வரை வேலை வாங்கினார்கள். அத்துடன் தீவுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அனைவரையும் அழித்தார்கள். ஐரோப்பியரின் இனவழிப்புக்கு பலியான Taino இன மக்கள், இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இதற்குப் பிறகு ஸ்பானியர்கள், தீவின் கிழக்குப் பகுதியில் மட்டும் (இன்று டொமினிக் குடியரசு) குடியேற்றங்களை நிறுவினார்கள். பிரெஞ்சு, ஆங்கிலேய கடற்கொள்ளையரின் புகலிடமாக ஹைத்தி மாறியது. சில வருடங்களுக்கு பின்னர் பிரெஞ்சு முதலாளிகள் குடும்பத்தோடு வந்து குடியேறினார்கள். பெரும் முதலீட்டுடன் பெருந்தோட்ட பயிர்களை விளைவிக்க ஆரம்பித்தார்கள். கரும்பு, கோப்பி, பருத்தி… என அவர்கள் விளைவித்ததெல்லாம் பணமாக கொட்டியது. ‘சென் டொமிங்’ (Saint Domingue) என்றழைக்கப்பட்ட இந்த பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க அடிமைகளை இறக்குமதி செய்ய ஆரம்பித்தார்கள். பிரெஞ்சுக் காலனிகளில் அதிக லாபம் கிடைக்கும் பகுதியாக ஹைத்தி மாறியது. அதாவது பிரான்சின் மூன்றில் ஒரு பங்கு அந்நிய இறக்குமதி இங்கிருந்தே வந்தது. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், அன்று பொருளாதார வளர்ச்சிப்படியில் முன்னேறிக் கொண்டிருந்த பணக்கார காலனியாக ஹைத்தி திகழ்ந்தது. ஆனால், இங்கு குடியேறிய நாற்பதாயிரம் பிரெஞ்சு மக்கள் மட்டுமே செல்வத்தின் பெரும் பங்கை அனுபவித்தார்கள். ஆப்பிரிக்க அடிமைகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதுடன் லாபத்தை அதிகரிப்பதற்காக இன்னும் அதிகமாக சுரண்டப்பட்டார்கள்.

1791 ம் ஆண்டு, அதாவது புரட்சி வெடித்த காலத்தில், ஹைத்தியில் அரை மில்லியன் கறுப்பின அடிமைகள் இருந்தனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆப்பிரிக்காவில் பிறந்தவர்கள். பெரும்பாலானவர்கள் பெருந்தோட்டங்களின் விரிவாக்கலுக்காக பிடித்து வரப்பட்டவர்கள். ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் இருந்தும் இப்படி ‘அழைத்து வரப்பட்ட’ பல மொழிகளைப் பேசும் மக்களை, அடிமை வாழ்வும், ஒன்றிணைந்த போராட்ட குணமும் ஒன்றிணைத்தன. சகோதரத்துவத்தை தோற்றுவித்தன.

ஹைத்தியின் மொத்த சனத்தொகையில் பத்து கறுப்பர்களுக்கு ஒரு வெள்ளையர் இருந்தார். இதனால் பெரும்பான்மையினரான அடிமைகள் விரைவிலேயே தமது பலத்தை அறிந்து கொண்டனர். அனைத்தையும்விட, அடிமைகளின் பூர்வீகமும் புரட்சிக்கு வழிகோலியது. புதிதாக வந்த ஆப்பிரிக்க அடிமைகள் தாயகத்தில் சுதந்திர மனிதர்களாக வாழ்ந்தவர்கள். பலர் அங்கோலா, கொங்கோ ராஜ்ஜியங்களில் மறவர் குலப் படைவீரர்களாக பணியாற்றியவர்கள். தமது மன்னனுக்கு மட்டுமே விசுவாசமானவர்கள். அப்படிப்பட்ட பின்னணியை கொண்டவர்கள் அடிமையாக வேலை செய்ய மறுத்ததில் வியப்பில்லை. பெருந்தோட்ட முதலாளிகளை எதிர்த்து கலகம் செய்தவர்கள் விரைவிலேயே கெரில்லாப் போராளிகளாக நிறுவனமயப்பட்டனர்.

துசா லூவேதியூர்
துசா லூவேதியூர்

அடிமைகளை இறக்குமதி செய்த காலத்திலிருந்தே, ஹைத்தியில் அடிமைகளின் கிளர்ச்சியும் இடம்பெற்று வந்துள்ளது. சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் தங்கள் காலில் கட்டிய சங்கிலிகளை உடைந்தெறிந்து விட்டு அடிமைகள் தப்பியோடினார்கள். யாரும் ஊடுருவ முடியாத மலைகளில் புகலிடம் தேடிக் கொண்டவர்கள் அங்கிருந்தபடியே உணவுக்காக பெருந்தோட்டங்களை கொள்ளையடித்தார்கள். அப்படி கொள்ளையடிக்க வரும் சந்தர்ப்பங்களில் பிற அடிமைகளை தப்பியோடுமாறு தூண்டி விட்டார்கள். ஆனால் இவையெல்லாம் ஒரு புரட்சிக்கு போதுமானதாக இருக்கவில்லை. கறுப்பின அடிமைகள் ஒரு தலைவனுக்காக காத்திருந்தார்கள். அந்தத் தலைவனாக ‘துசா லூவேதியூர்’ (Toussaint L’ouverture) உருவெடுத்தார். ஹைத்தியின் வடக்கேயுள்ள பிறேடா பெருந்தோட்டத்தில் அடிமையாகப் பிறந்த துசா, ஒரு பிரபுவின் வீட்டில் அடிமையாகும் பாக்கியம் பெற்றதால், எழுதப் படிக்க கற்றிருந்தார். அதனால் பிரான்சில் வெடித்த புரட்சி பற்றிய செய்திகளையும் அறிந்து வைத்திருந்தார்.

இதனால் கலகக்காரர்களுடன் துசா இணைந்ததும், விடுதலையடைந்த அடிமைகளைக் கொண்டு கெரில்லாக் குழுக்களை அமைத்தார். அவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கினார். யுத்த தந்திரங்களை கற்றுக் கொடுத்தார். இத்தனைக்கும் அவர் எந்தவொரு இராணுவக் கல்லூரியிலும் பயின்றவரில்லை. இருந்தாலும் சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டிருந்தார். இராணுவத் தளபதியாக செயல்பட்டபடியே புத்தி கூர்மை மிக்க ராஜதந்திரியாகவும் விளங்கி ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

ஹைத்தி முழுவதும் அடிமைகளின் கிளர்ச்சி பரவியதும், அதை அடக்குவதற்காக மூன்று ஐரோப்பிய நாடுகள் படைகளை அனுப்பின. பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய ஏகாதிபத்திய நாடுகள், தமக்கிடையிலான வல்லரசுப் போட்டியை இதற்காக தள்ளி வைத்தன. ஆயினும் வலிமை பொருந்திய ஆயுதங்களை வைத்திருந்த ஐரோப்பியப் படைகளால், துசாவின் தலைமையிலான சிறு கெரில்லாக் குழுவை வெல்ல முடியவில்லை. கெரில்லாப் போருக்கு சாதகமான மலைகளிலும், காடுகளிலும் மறைந்திருந்து கறுப்பினப் போராளிகள் தாக்கினார்கள். ஐரோப்பியருக்கு ஒத்துழைக்க இயற்கையும் மறுத்தது. வெப்ப வலைய நெருப்புக் காய்ச்சல் தாக்கி பல படைவீரர்கள் மடிந்தார்கள்.

ஒருகட்டத்தில் ஹைத்தியின் வடக்கேயுள்ள பகுதிகள் கறுப்பினப் படையணிகளால் விடுவிக்கப்பட்டன. தெற்கேயுள்ள பகுதிகளை கலப்பின முலாட்டோ படையினர் விடுதலை செய்தனர். பிரெஞ்சு பிரபுக்களுக்கும், கறுப்பின அடிமைப் பெண்களுக்கும் பிறந்த பிள்ளைகளே முலாட்டோ என அழைக்கப்படுகின்றனர். அவர்களின் தலைமைத் தளபதியான பெத்தியோன் (Alexander Petion) கூட தலைமைப் பண்புமிக்க புரட்சியாளர்தான். லத்தீன் அமெரிக்க நாடுகளை ஸ்பானிய காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை செய்த பொலிவார், சுதந்திர ஹைத்தியில் தஞ்சம் கோரியிருந்தார். அப்போது அவருக்கு அடைக்கலம் கொடுத்த பெத்தியோன், பணமும், ஆயுதங்களும் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார். அந்த உதவிக்கு கைமாறாக என்ன செய்ய வேண்டுமென்று கேட்டார் பொலிவார். லத்தீன் அமெரிக்கா முழுவதும் அடிமைகளுக்கு சுதந்திரம் வழங்கினாலே போதும், என்று பதிலளித்தார் பெத்தியோன்!

கிளர்ச்சி வெடிக்க பெருந்தோட்ட முதலாளிகள் அடிமைகளை ஈவிரக்கமற்று கொடுமைப்படுத்தி வந்ததும் ஒரு காரணம். புரட்சியின்போது பெருந்தோட்டப் பயிர்கள் எரித்து நாசமாக்கப்பட்டன. சொந்த அடிமைகளே பெருந்தோட்ட முதலாளிகளுக்கு நஞ்சூட்டி, அல்லது வெட்டிக் கொன்றனர். கறுப்பின அடிமைகளின் தார்மீக ஆவேசம் அனைத்து வெள்ளையருக்கும் எதிராக திரும்பியது. கண்ணில் பட்ட வெள்ளையர்கள் அனைவரும் கொன்று குவிக்கப்பட்டனர். படுகொலையிலிருந்து தப்பியவர்கள் அகதிகளாக பிரான்சு நோக்கி கப்பலேறினார்கள். புரட்சி வெற்றிவாகை சூடியபோது ஹைத்தியில் ஒரு பிரெஞ்சுக்காரர் கூட இருக்கவில்லை. இருந்த வெள்ளையர்களும் போலந்து கூலிப்படையை சேர்ந்தவர்கள். பிரெஞ்சு இராணுவத்தால் அனுப்பபட்ட அவர்கள் தக்க தருணம் பார்த்து புரட்சிப்படைகளுடன் சேர்ந்து கொண்டார்கள். அதனால் அவர்கள் மட்டுமே சுதந்திர ஹைத்தியில் தங்க அனுமதிக்கப்பட்டார்கள்.

சுதந்திரமடைந்ததும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை ஹைத்தி எதிர்கொண்டது. பெருந்தோட்டத்தில் வேலை செய்ய எந்த முன்னாள் அடிமையும் முன்வரவில்லை. இதனால் நிலம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. அநேகமாக அனைத்து கறுப்பினத்தவர்களும் விவசாயத்தில் ஈடுபட்டார்கள். விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் முலாட்டோக்கள் இறங்கினார்கள். இதனால் நாட்டுப்புறங்களில் ஏழை விவசாயிகளாக வாழும், கிரயோல் (ஆப்பிரிக்க கலப்பு) மொழி பேசும் கறுப்பினத்தவர்கள், நகர்ப்புறங்களில் பணக்கார மேட்டுக்குடிகளாக வாழும் பிரெஞ்சு மொழி பேசும் முலாட்டோக்கள் என சமூகத்தில் புதிய வர்க்க வேறுபாடுகள் தோன்றின. படித்த கறுப்பின மத்தியதர வர்க்கம் பிற்காலத்தில் உருவான போதிலும், இந்த சமூகப் பிரிவினை இன்று வரை தொடர்கிறது.

ஹைத்தி புரட்சி சர்வதேச மட்டங்களில் பல மாற்றங்களை உருவாக்கியது. ஹைத்தியை கைப்பற்ற முன்னாள் காலனிய எஜமானான பிரான்ஸ், பெரும் பிரயத்தனம் எடுத்தது. தன்னிடம் இருந்த அனைத்து வளங்களையும் பயன்படுத்தி போரைத் தொடர எண்ணியது. இதற்காக அமெரிக்காவில் இருந்த பிரெஞ்சுக் காலனியான லூசியானாவை 15 மில்லியன் டாலர்களுக்கு விற்றது. ஹைத்தியில் புரட்சி வெடிக்காதிருந்தால், இந்நேரம் வட அமெரிக்காவில் ஒரு பிரெஞ்சு – அமெரிக்க தேசம் இருந்திருக்கும்.

ஹைத்தி

சுதந்திர நாடானபோதும் சர்வதேச உறவுகளைப் பேணுவதில் ஹைத்திக்கு தடை ஏற்பட்டது. சர்வதேச வர்த்தகம் முழுவதும் ஐரோப்பிய வல்லரசுகளின் கைகளில் இருந்தன. இதனால் ஏற்றுமதிக்கு அந்நிய சந்தையை தேடுவதில் சிரமமேற்பட்டது. வேறு வழியின்றி பிரான்சின் நிபந்தனைகளை ஏற்கும் நிலைக்கு ஹைத்தி தள்ளப்பட்டது. காலனிய இழப்பீடுகளுக்காக, 150 மில்லியன் பிராங் நஷ்டஈட்டை பிரான்சுக்கு வழங்க ஹைத்தி ஒப்புக்கொண்டது. பதிலுக்கு ஹைத்தியின் சுதந்திரத்தை 1825ல் பிரான்ஸ் அங்கீகரித்தது. ஆனால், 1862ல்தான்  அமெரிக்கா அங்கீகாரம் வழங்கியது. அதற்கும் சுயநலம்தான் காரணம். ஹைத்தியின் பருத்தி, உள்நாட்டுப் போரில் சிக்கியிருந்த அமெரிக்காவுக்கு அத்தியாவசியமாக தேவைப்பட்டது.

முதலாம் உலகப்போரின்போது பனாமாக் கால்வாயை பாதுகாப்பதற்காக, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹைத்தி மீது அமெரிக்க இராணுவம் படையெடுத்தது. அன்று தொடங்கிய அமெரிக்க ஆக்கிரமிப்பு 19 ஆண்டுகள் நீடித்தது. ‘ஹைத்தி மக்களின் நன்மை கருதி’ நடவடிக்கை எடுத்ததாக அறிவித்த அமெரிக்கா, இதன் பிறகு நினைத்தபோதெல்லாம் படையுடன் ஹைத்திக்குள் நுழைந்தது. ஜனநாயகத்தை மீட்பதற்கு, தேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு, என்று பல காரணங்களை முன்னிறுத்தி ‘சும்மா, சுகம் விசாரித்து விட்டு’ செல்வதை வழக்கமாக்கிக் கொண்டது. 2009 ல் நிலநடுக்கம் ஏற்பட்டபோது கூட ‘நிவாரணப் பணிகளை ஒழுங்குப்படுத்த’ அமெரிக்கப் படை வந்தது.

ஹைத்தியில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட போதிலும், உற்பத்தி உறவுகளில் மாற்றம் ஏற்படவில்லை. வெள்ளையின பெருந்தோட்ட முதலாளிகளை விரட்டி விட்டு, அந்த இடத்தில் கறுப்பின/கலப்பின மேட்டுக்குடி வர்க்கம் அமர்ந்து கொண்டது. அவர்கள் உழைக்கும் மக்களை கட்டாய வேலை வாங்கியதன் மூலம் தமது செல்வந்த வாழ்வை நிச்சயப்படுத்திக் கொண்டனர். முன்னாள் அடிமைகள், ஏழை தொழிலாளர்களானார்கள். வெள்ளையின எஜமானர்களின் இடத்தில் கறுப்பின எஜமானர்கள் அமர்ந்து கொண்டார்கள். இன்று வரை இந்த நிலைமை தொடர்கிறது. இந்த அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் மக்கள் எழுச்சிகள் ஏற்பட்டன. ஆனால், மக்கள் தமது இயலாமையை அறிந்து வைத்திருப்பதால் அவை வலுவாகவில்லை. அமெரிக்க ஆக்கிரமிப்பின்போது ஏற்பட்ட விவசாயிகளின் எழுச்சி ஒன்று அடக்கப்பட்டது. 1919ல் அவர்களை ஒழுங்குபடுத்தி போராடிய முன்னாள் இராணுவ அதிகாரி, பின்னர் காட்டிக் கொடுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு நீண்ட காலமாக யாரும் புரட்சியை நினைத்தும் பார்க்கவில்லை. ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்க கடற்படையினர், ஹைத்தி இராணுவத்தை கலைத்து விட்டு, அந்த இடத்தில் உள்நாட்டுக் கலகங்களை அடக்கும் சிறப்புப் போலிஸ் பிரிவினரை உருவாக்கினர். பிற்காலத்தில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்களுக்கு அமெரிக்காவில் பயிற்சி பெற்ற இந்த போலிஸ் பிரிவினரே காரணமாக அமைந்தனர்.

டுவாலியர்
ழீன் கிளாட் டுவாலியர்

அமெரிக்க படையினர் வெளியேறிய பிறகு, டுவாலியர் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் ஹைத்தி அல்லலுற்றது. 1986 வரை பல தசாப்தங்களாக தொடர்ந்த டுவாலியர் குடும்ப ஆட்சியின் கீழ் ஹைத்தி மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாகினர். எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டன. கருத்துச் சுதந்திரம் இறுதி மூச்சை விட்டது. சர்வாதிகாரத்தை எதிர்த்தவர்கள் இரவோடு இரவாக காணாமல் போனார்கள். கொலைபாதகச் செயல்களுக்கு அஞ்சாத குண்டர் படைகள், அப்பாவிகளை கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றனர். சந்தேக நபர்களால் சிறைச்சாலைகள் நிரம்பின. சித்திரவதை, கொட்டடிக் கொலைகள் சாதாரண நிகழ்வுகளாகின.

ஆரம்பத்தில் மக்கள் ஆதரவுடன் பொதுத்தேர்தலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் இந்த டுவாலியர். ஏழைக் குடும்பத்தில் பிறந்து வைத்தியரான இவரை பதவி சுகமும், சி.ஐ.ஏ. ஆதரவும் ஒரு சர்வாதிகாரியாக மாற்றிவிட்டது. தேசநலனை மறந்து தனது செல்வத்தை பெருக்கிக் கொள்வதிலேயே முனைப்புக் காட்டினார். இவரது ஆட்சிக்காலத்தில் ஏழைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. 90 சதவிகித ஹைத்தி மக்கள், படிப்பறிவற்றவர்களாக வறுமையில் வாடும்போது ஜனாதிபதியின் குடும்பம் சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கிக் கொண்டிருந்தது. 1986ல் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, டுவாலியர் குடும்ப கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டியது. இருந்தாலும் அப்போது பதவியில் இருந்த டுவாலியரின் மகன் அரச கருவூலத்தை கொள்ளையடித்துக் கொண்டு பிரான்சுக்கு தப்பியோடினான்.

டுவாலியர் காலத்தில் ஹைத்தியில் வாழ்ந்த மக்களுக்கு இரண்டு தெரிவுகளே இருந்தன. ஒன்று, கூலிப்படையின் கொலைக் கரங்களுக்குள் அகப்பட்டு சித்திரவதை அனுபவித்து இறப்பது. இரண்டு, நாட்டையும் உறவுகளையும் விட்டுவிட்டு அயல் நாடுகளுக்கு தப்பியோடுவது. இரண்டாவதை தெரிவு செய்த மக்கள், தினமும் ஆயிரக்கணக்கில் அகதிகளாக படகுகள் மூலம் நான்கு திசைகளிலும் ஓடினார்கள். ஆனால், சுற்றியிருந்த எந்த நாடும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. புளோரிடா கரையில் பெருமளவு ஹைத்தியர்கள் இறங்கி தஞ்சம் கோரினார்கள். அந்த அகதிகளுக்கு தற்காலிக புகலிடம் அளிப்பதற்கு கூட அமெரிக்க அரசு மறுத்தது. ஆனால், இதேநேரத்தில்தான் அமெரிக்க கம்பெனிகள் ஹைத்தியில் சுரண்டிய உழைப்பை, டாலர் டாலராக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன.

‘நாளொன்றுக்கு ஒரு டாலர் சம்பாதிக்கும் ஹைத்தியர்கள், எதற்காக 500 டாலர் கட்டி ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்டு அமெரிக்கா வரவேண்டும்?’ என்ற கேள்வியை எழுப்பி அடைக்கலம் கேட்டு வந்தவர்களை திருப்பி அனுப்பினார்கள். கொடுங்கோல் ஆட்சி நடத்திய சர்வாதிகாரியின் கைகளில் நேரில் சென்று ஒப்படைத்தார்கள். விமான நிலையத்தில் காத்திருந்த கொலைஞர்கள், திரும்பி வந்த அகதிகளை கதறக் கதற தரையில் இழுத்து சென்றனர். இதையெல்லாம் தனி மனித சுதந்திரத்தை உயிரென மதிக்கும் அமெரிக்கா பொறுத்துக் கொள்கிறதா… என்ற கேள்வியை யாரும் கேட்கவில்லை. கியூபாவின் மனித உரிமைகளைக் கண்காணிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. படகுகளில் வந்த ஹைத்தியர்களை ‘நீங்கள் அகதிகள் இல்லை’ என்று கூறிய திருப்பி அனுப்பிய அதே அமெரிக்கா, ஏக காலத்தில் படகுகளில் வந்த கியூபர்களை, அகதிகள் என்று அடையாளப்படுத்தி தஞ்சம் வழங்கியது. ‘கியூபர்கள் மட்டுமே உண்மையான அரசியல் அகதிகள்’ என்று ஊடகங்கள் தலையில் வைத்து கூத்தாடின. இதிலிருந்து கற்றுக் கொள்ளப்பட வேண்டிய பாடம், ‘அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோர விரும்பும் ஒருவர், கம்யூனிச நாட்டில் இருந்து வந்த கம்யூனிச எதிர்ப்பாளராக இருக்க வேண்டும்’ என்பதுதான்.

டுவாலியரின் ஆட்சி இரண்டு வலிமை பொருந்திய அரசியல் சக்திகளின் ஆதரவால் மட்டுமே நீடிக்க முடிந்தது. ஒன்று, அமெரிக்க அரசு. இரண்டு, பாதுகாப்புப் படைகள். சர்வாதிகாரிக்கு முகஸ்துதி செய்து பதவியில் அமர்ந்திருந்த ஒரு சிறு கும்பலை தவிர, பெரும்பான்மை மக்கள் வெறுப்புடன் இருந்தனர். எதிர்க்கட்சிகள் அனைத்தும் தடைசெய்யப்பட்ட சூழலில், கத்தோலிக்க தேவாலயம் மட்டுமே மிச்சமிருந்தது. அன்று தென் அமெரிக்காவில் பிரபலமடைந்த ‘விடுதலை இறையியல்’ தத்துவத்தின் பால் பல பாதிரிகள் ஈர்க்கப்பட்டனர். தேவாலயங்களை அடக்கப்பட்ட மக்களின் புரட்சிக்கான பயில்நிலங்களாக அவர்கள் மாற்றினார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் அரிஸ்தீத். தலைநகர் போர்ட் ஒ பிரின்சில் உள்ள பிரபல தேவாலயத்தில் அவரது அரசியல் உரையைக் கேட்க பல்லாயிரம் மக்கள் கூடினார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பூஜைக்கு பின்னர் ஆரம்பிக்கும் மதப் பிரசங்கம், அரசியல் பிரச்சாரமாக மாறும். டுவாலியரின் கொடுங்கோலாட்சிக்கு எதிராக, சமூகவிரோத கூலிப்படைகளின் வன்செயல்களுக்கு எதிராக, கடுமையான எதிர்ப்பை தன் பிரசங்கத்தில் அவர் தெரிவிப்பார்.

இதனால் கூலிப்படையினர் அவரை கொலை செய்ய பலமுறை முயற்சித்தனர். ஆனால், பாதுகாப்புச் சுவராக நின்ற மக்களின் ஆதரவால் அரிஸ்தீத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. எண்பது சதவிகித ஹைத்தி மக்கள் பாதிரியார் அரிஸ்தீத்தை ஆதரவளித்தபோதிலும், வத்திகான் அவரை பிஷப் பதவியில் இருந்து நீக்கியது. அதற்கு சொல்லப்பட்ட காரணம், அரிஸ்தீத் ஒரு மார்க்சிஸ்ட்! ‘சோஷலிசம் மட்டுமே ஏழைகளுக்கு விடிவைத் தேடித் தரும் மார்க்கம்’ என்று போதித்தது மட்டுமே அவர் செய்த குற்றம். ‘ஆறு மில்லியன் ஏழை ஹைத்தியர்களுக்கு உணவளிக்க, உறைவிடம் வழங்க, வளமான வாழ்வு வழங்க சோஷலிசம் மட்டுமே தீர்வு’ என்று பேசி கத்தோலிக்க அதிகார பீடத்தை பாட்டாளிகளின் தோழனான அரிஸ்தீத் எரிச்சலடைய வைத்தார். ஆனால், ‘ஏழைகளின் அன்னை’ தெரேசாவோ, ஹைத்தி ஏழைகளிடம் இருந்து சுரண்டிய டுவாலியரின் நிதியை ஏற்றுக் கொண்டார். ஹைத்தி ஏழைகளின் இரத்தக்கறை படிந்த டுவாலியரின் மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அக்கிரமக்காரருடன் கைகோர்த்த அன்னை தெரேசாவின் செயல், வத்திகானில் அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை. பதிலாக, ‘தெரேசா புனிதர், அரிஸ்தீத் துரோகி’ என்றே அறிவித்தது. இதுதான் வத்திகானின் (அ)நீதி.

அடுத்து வந்த பொதுத்தேர்தல்களில், அரிஸ்தீத் மக்கள் ஆதரவுடன் வென்றதால் அமெரிக்கா வேறு வழியின்றி ஆதரவளிக்க வேண்டியிருந்தது. எண்பது சதவிகித மக்கள் அரிஸ்தீத் பக்கம் நின்றனர். ஆயினும் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவரால் சோஷலிசத்தை கொண்டு வர முடியவில்லை. அதனால் மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியை பயன்படுத்தி அடிக்கடி ஆட்சிக் கவிழ்ப்புகள் இடம்பெற்றன. இதன் பின்னணியில் அமெரிக்க் அரசு இருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் கூட ஹைத்தியை ஆக்கிரமித்த அமெரிக்க படைகள், இனிமேல் திரும்பி வராதபடிக்கு அரிஸ்தீத்தை தென் ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்தியது. அரிஸ்தீத் ஆட்சி செய்த காலத்திலும், அமெரிக்கா, ஐ.எம்.எஃப்., உலகவங்கி போன்றவை ஹைத்தியின் கழுத்தை நெருக்கின. தமது நிபந்தனைகளுக்கு உடன்படாவிட்டால் கடன் தர மாட்டோம் என பயமுறுத்தின.

கடன் வழங்கும் நிறுவனங்களின் பொருளாதார சீர்திருத்தங்கள், சில நேரம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். உதாரணமாக தேசிய தொலைத்தொடர்பு சேவையை தனியார்மயப்படுத்துமாறு கூறினார்கள். ஹைத்தியில் சில ஆயிரம் பேர்கள் மட்டுமே தொலைபேசி வசதியை பயன்படுத்துபவர்கள். எனவே லாபம் தராத தொழிற்துறையை தனியாரிடம் ஒப்படைத்ததால் யாருக்கும் பயனில்லாமல் போனது. அதேபோலத்தான் பொதுக்கல்வியும். ஏற்கனவே 90௦ சதவிகித ஹைத்தியர்கள் கல்வியறிவற்றவர்கள் என்ற நிலையில், கல்விக்கு மிக மிகக் குறைந்த நிதியை மட்டுமே அரசு ஒதுக்க வேண்டுமென்று ஐ.எம்.எப். உத்தரவு பிறப்பித்தது. இதனால் பள்ளிகள் எல்லாம் தனியார்மயமாகி பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் மட்டுமே இப்போது பள்ளிக்கு செல்லும் சூழ்நிலை உருவாகிவிட்டது. படிப்புச் செலவை ஏற்க முடியாமல் ஏழைகளின் பிள்ளைகள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

இன்னொரு கொடுமையும் அங்கு அரங்கேறியிருக்கிறது. ஐநூறு வருடங்களுக்கு முன்னர் காலனிய ஐரோப்பியர் கொண்டு வந்த பன்றிகள், ஹைத்தி சூழலுக்கு ஏற்ப தங்களை பழக்கப்படுத்திக் கொண்டன. இதனால் நமது கிராமங்களில் வீட்டுக்கு வீடு ஆடு வளர்க்கப்படுவது போல, ஹைத்தியில் பன்றிகளை வளர்க்க ஆரம்பித்தார்கள். கஷ்டப்படும் ஏழைகளுக்கு இந்தப் பன்றிகளும் உணவளித்து வந்தன. இந்த வழக்கத்தையும் அமெரிக்கா ஒழித்துவிட்டது. சமீபத்தில் பன்றிக் காய்ச்சல் தொற்றுநோய் பரவியபோது, ஐ.எம்.எப். உத்தரவுப்படி ஹைத்தி பன்றிகள் எல்லாம் அழிக்கப்பட்டன. இதற்கு மாற்றாக அமெரிக்கா பன்றிகளை வழங்கியது. ஆனால், இந்த அமெரிக்க பன்றிகளால் ஹைத்தியின் தட்பவெப்ப காலநிலையை தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனவே அடுத்தடுத்து அவைகள் இறந்தன. இதனால் பன்றிகள் இன்றி ஏழை ஹைத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஒவ்வொருமுறை  ஹைத்தியில் புதிய அரசாங்கம் பதவி ஏற்கும்போதும், அவர்களுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளும். ஹைத்தியின் வறுமையை பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டங்கள் மாற்றப்படும். ஹைத்தியில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச்சலுகை கிடைப்பது மட்டுமல்ல, நிகர லாபத்தை அப்படியே அமெரிக்காவுக்கு கொண்டு செல்லவும் வழிவகை செய்யப்படும். Raynolds என்ற நிறுவனம் அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்ஸ்சைட்டை  அகழ்ந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் மூட்டை கட்டி விட்டது. காரணம், எண்பதுகளிலேயே ஹைத்தியின் கனிம வளங்கள் அனைத்தும் ஓட்ட ஓட்ட உறிஞ்சப்பட்டு விட்டன. இப்போது வீடு கட்ட கல்லும், மண்ணும் மட்டுமே மிச்சமிருக்கின்றன.

உலகமயமாக்கல் காலத்தில் ஆடை ஏற்றுமதி தொழில் வந்தது. அமெரிக்காவில் பேஸ்பால் விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் பந்து ஹைத்தியில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஹைத்தியின் ‘ஒரு டாலர் தொழிலாளரின்’ உழைப்பை பயன்படுத்தி தயாரான பொருட்களை அமெரிக்காவில் வால் மார்ட் போன்ற அங்காடிகள் விற்பனை செய்தன. வால்ட் டிஸ்னி, க்மார்ட் போன்றன ஹைத்தியின் உழைப்பை உறிஞ்சும் பிரபல நிறுவனங்கள். தொழிலாளர்களின் நாள் கூலியை இரண்டு டாலராக உயர்த்துவதற்கு அரிஸ்தீத் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. தொழிற்சங்க உரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க இடதுசாரி அமைப்புகள் மட்டுமே அவர்களின் உரிமைக்காக போராடின.

இப்படி ஹைத்தியின் பொருளாதார பின்னடைவுக்கு, வெளிநாட்டு உதவியை எதிர்பார்த்து அந்நாடு இருப்பதும் முக்கிய காரணம். ஹைத்தி எப்போதும் ஒன்று இயற்கை அழிவால் பாதிக்கப்படும் அல்லது சர்வாதிகாரிகளின் செயற்கை அழிவால் அல்லல்படும். இதனால் மில்லியன் கணக்கான மக்கள், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் வழங்கும் உணவுப் பொருட்களை எதிர்பார்த்து வாழ்ந்து வருகின்றனர். தொண்டு நிறுவனங்கள் மலிவான அமெரிக்க கோதுமையை உதவி என்ற பெயரில் கொண்டு வந்து ஹைத்தியில் கொட்டுகின்றன. இதனால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அதுபோலவே ஹைத்திக்கு அமெரிக்கா வழங்கும் கடனால் அமெரிக்கர்களே நன்மையடைகின்றனர். ஆனால் முழு கடன் தொகையையும் வட்டியுடன் ஹைத்தி அரசு கறாராக திருப்பிச் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கின்றன. அமெரிக்க அரசு ஒரு டாலர் கொடுத்தால், அதில் ௦0.85 டாலர்சதம் தொண்டு நிறுவன ஊழியர்களின் ஊதியமாகவோ, அல்லது வேறு செலவினமாகவோ அமெரிக்காவுக்கே திரும்பி வருகின்றது. இந்த தகவலை தெரிவித்தது வேறு யாருமல்ல. அமெரிக்க அரச சார்பு தொண்டு நிறுவனமான USAIDதான் !

–    தொடரும்

_______________________________
கலையரசன்
_______________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை!!

டவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி என்று தன் வாழ்க்கை முழுவதும் மூடநம்பிக்கை, பார்ப்பன ஆதிக்கம், சாதி வெறி, ஆணாதிக்கம் அனைத்தையும் எதிர்த்து வந்த தந்தை பெரியாருக்கு கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை செய்யும் அதிசயம் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அந்த அதிசயத்தை ம.க.இ.கவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் செய்து காட்டியிருக்கிறது.

தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அரச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு மதுரை பார்ப்பன அர்ச்சகர்கள் உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியதும் அதனால் தி.மு.க அரசு ஜகா வாங்கியது குறித்தும் முன்னர் நிறைய எழுதியிருக்கிறோம். தொடர்புடைய கட்டுரைகளை கீழே வாசிக்கலாம்.

அதை எதிர்த்து திருவண்ணாமலை பெரியார் சிலை முன்பு அர்ச்சகர் படிப்பு படித்த அனைத்து சாதி மாணவர்களையும் அணிதிரட்டி ம.உ.பா.மை பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே அவர்களை சங்கமாக்கியதோடு இந்த சமத்துவ போராட்டித்திற்காக விடாதும் போராடி வருகிறது. அந்த ஆர்ப்பாட்டத்தில்தான பெரியார் சிலைக்கு அர்ச்சக மாண்வர்கள் மரியாதை செய்யும் கண்கொள்ளாக் காட்சி இடம்பெற்றிருக்கிறது. பெரியார் கண்ட சமத்துவம் கோவிலில் வருவதற்கு இது முன்னோட்டம் என்பதோடு ஆலயத்தில் தொழில் செய்யும் அர்ச்சகர்கள் சமூகத்தோடு சமமாய் இரண்டறக் கலப்பதற்கும் இது உற்சாகமளிக்கும் செய்தி.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் போராட்டம் வெல்வதற்கு வாழ்த்துக்கள்!!

________________________________________________________________________________________

இது தொடர்பாக ம.உ.பா.மை வெளியிட்டிருக்கும் துண்டுப் பிரசுரம்:

ஆலயத் தீண்டாமையை எதிர்ப்போம்னைத்து சாதியினரையும் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கும் நோக்கத்துடன் 2006ஆம் ஆண்டில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது. இந்தப் பள்ளிகளைத் தொடங்கியவுடனேயே, மதுரைக் கோயிலைச் சேர்ந்த பார்ப்பன அர்ச்சகர்களும் அவர்களுடைய சங்கமும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தனர். பார்ப்பன சாதியில் பிறந்த சிவாச்சாரியார்கள் மற்றும் வைணவ பட்டாச்சாரியார்கள் தவிர வேறு யாருக்கும் சாமி சிலையைத் தொட்டு பூசை செளிணியும் அருகதை கிடையாது; பூசை முறைகளையும் மந்திரங்களையும் கற்றுத் தேறியிருந்தாலும், பார்ப்பனர்களைத் தவிர மற்ற சாதியினர்க்கு அர்ச்சகராகும் அருகதை கிடையாது; அவர்கள் தொட்டால் சாமி சிலை மட்டுமின்றி, கோயிலே தீட்டாகி விடும்; அந்தச் சிலையிலிருந்து கடவுளும் வெளியேறிவிடுவார்; இதன் காரணமாக கோயிலுக்கு வருகின்ற இந்து மதத்தைச் சேர்ந்த இலட்சக் கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடைக்காலத் தடையையும் பெற்றுவிட்டனர்.

இதன் காரணமாக, மேற்கூறிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படித்து, சான்றிதழும் வாங்கிய 206 மாணவர்களை தமிழக அரசு பணி நியமனம் செய்யவில்லை. மதுரை அர்ச்சகர்கள் பெற்றிருக்கின்ற தடையாணைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறது. மாணவர்கள் சார்பில் நாங்களும் வழக்கு தரப்பினர்களாக சேர்ந்து வழக்கை நடத்தி வருகிறோம். நீதிமன்றத் தடை காரணமாக எல்லா அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளும் மூடப்பட்டுவிட்டன.

இந்த நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களில் பிறந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் ஆகலாம், அமைச்சர் ஆகலாம், நீதிபதி ஆகலாம், மருத்துவர் ஆகலாம், பொறியாளர் ஆகலாம், விஞ்ஞானி ஆகலாம், குடியரசுத் தலைவராகக் கூட ஆகலாம் ஆனால் கோயில் அர்ச்சகராக முடியாதாம். அந்த வேலைகளுக்கெல்லாம் தேவைப்படுகின்ற அறிவையும் திறமையையும் காட்டிலும் அதிகமான அறிவும் திறமையும் அர்ச்சகர் வேலைக்கு தேவை போலும்!

அப்படியே பார்த்தாலும் இந்த 206 மாணவர்களும் ஒன்றரை ஆண்டு காலம் முறையாகப் பயிற்சி பெற்றவர்கள். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், அன்றாடம் காலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணிவரையில்
இவர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மந்திரங்கள் ஓதவும், அபிசேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம் முதலானவற்றை செய்யவும் முறையாகப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒழுக்கமானவர்கள்தானா என்று சோதித்து, அதன் பின்னர்தான் சைவ, வைணவப் பெரியோர்கள் இவர்களுக்கு தீட்சையும் வழங்கியிருக்கிறார்கள். எல்லாத் தகுதிகளும் இருந்தாலும் பிறப்பால் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் பிரிவைச் சேர்ந்த பார்ப்பனர்கள் அல்ல என்பதற்காக அர்ச்சகராக முடியாது என்கின்றனர் பார்ப்பனர்கள்.

ஆலயத் தீண்டாமையை எதிர்ப்போம்காஞ்சிபுரம் தேவநாதனையும், சங்கராச்சாரியையும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. சாமி கும்பிட வந்த பெண் பக்தர்களை மயக்கி, மிரட்டி கோயில் கருவறையை படுக்கையறையாக்கி அதைப் படமும் எடுத்தவர் தேவநாத சிவாச்சாரியார், தன்னுடைய காமலீலைகளைத் தட்டிக்கேட்ட குற்றத்துக்காக சங்கரராமன் என்ற பார்ப்பனரை, வரதராஜ பெருமாளின் கண் முன்னாலேயே போட்டுத் தள்ளியவர் சங்கராச்சாரியார். இரண்டு பேரும் இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்கள். தில்லைவாழ் அந்தணர்கள் என்று புகழப்படும் சிதம்பரம் தீட்சிதர்களோ, அம்மன் தாலியையே அறுத்து விற்றவர்கள்; ஆடல்வல்லானுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை பொய் கையெழுத்து போட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு விற்றதற்காக இவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கோயிலுக்கு சொந்தமான 2500 ஏக்கர் நிலத்தில் தீட்சிதர்கள் எவ்வளவு மிச்சம் வைத்திருக்கிறார்கள் என்று வருவாய்த்துறை ஆவணங்களில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். பிறப்பால் உயர்ந்த உத்தமர்களின் யோக்கியதைக்கு இவை சில சான்றுகள் மட்டும்தான். ஒவ்வொரு கோயிலிலும் என்ன நடக்கிறது என்பது அன்றாடம் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களாகிய உங்களுக்குத் தெரியும்.

போலீசிடம் பிடிபடும்வரை எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்து கொண்டுதான் தேவநாதன்களும் தீட்சிதர்களும் கடவுளைத் தொட்டுப் பூசை செய்திருக்கிறார்கள். இவர்கள் தொட்டு ஓடிப்போகாத கடவுள், பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் தொட்டால் ஓடிப்போய் விடுவார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் பக்தர்களாகிய நீங்களெல்லாம் அப்படி நம்புவதாகச் சொல்லித்தான் மதுரைக் கோயில் அர்ச்சகர்கள் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியிருக்கிறார்கள்.

பார்ப்பனர் அல்லாத சாதியில் பிறந்தவர்கள் தமிழ்நாட்டின் பல கோயில்களில் அய்யனாருக்கும், மாரியம்மனுக்கும், அங்காள பரமேசுவரிக்கும் பூசை செளிணியவில்லையா? அந்தச் சிலைகளிலெல்லாம் கடவுள் இல்லையா? மாரியம்மனைத் தொடலாம், மீனாட்சியம்மனைத் தொட்டால் மட்டும் தீட்டா? பிறப்பால் புனிதமானர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் இந்த பட்டாச்சாரியார்களும் சிவாச்சாரியார்களும், திருப்பாணாழ்வாரையும், நந்தனாரையும் விடக் கடவுளுக்கு நெருக்கமானவர்களா? அல்லது வள்ளலாரையும் ஐயா வைகுந்தரையும் நாராயணகுருவையும் விடப் புனிதமானவர்களா?

ஆலயத் தீண்டாமையை எதிர்ப்போம்படிப்பறிவில்லாத ஒரு பாமரன் கூடக் கேட்கக் கூடிய கேள்விகள் இவை. ஆனால் இப்படிப்பட்ட கேள்விகள் எதையும் கேட்காமலேயே பார்ப்பன அர்ச்சகர்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தடையாணை வழங்கியிருக்கிறதே, அது ஏன்? ஏனென்றால், பார்ப்பனரல்லாதவர்கள் சாமியைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்று பக்தர்களாகிய நீங்கள் நம்புவதாக உச்சநீதிமன்றத்தில் சொல்லி தடை ஆணை வாங்கியிருக்கிறார்கள் மதுரை அச்சர்கர்கள். இந்த 206 மாணவர்கள் அர்ச்சகர்களாகி, சாமி சிலையைத் தொட்டுப் பூசை செய்வதால் கோயிலைவிட்டே கடவுள் ஓடிவிடுவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? பக்தர்களாகிய நீங்களெல்லாம் பிறப்பால் கீழானவர்கள் என்று நீங்களே நம்புகிறீர்களா? இல்லை என்றால் அதை நீங்கள் சொல்ல வேண்டும். உரத்துக் குரல் எழுப்பவேண்டும்.

இது 206 மாணவர்களின் வேலைவாய்ப்பு பற்றிய பிரச்சனை அல்ல. நம் அனைவருடைய மானப்பிரச்சனை. இந்த வேலை இல்லையென்றால் இன்னொரு வேலையை அவர்கள் தேடிக் கொள்ள முடியும். ஆனால் இவர்கள் அர்ச்சகர்களாகவில்லை என்றால், பிறப்பால் கீழானவர்கள், தீட்டானவர்கள் என்ற இழிவை நாம் எப்படி போக்கிக் கொள்ள முடியும்? எனவே இது மாணவர்களின் பிரச்சினை அல்ல, நம்முடைய மானப்பிரச்சனை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இது ஒரு தீண்டாமைக் குற்றம். பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் வேதம் படிக்கக்கூடாது, சூத்திரன் கல்வி கற்கக்கூடாது என அன்றைக்குச் சொன்னது மனுநீதி. இன்றோ, அப்படியே படித்து விட்டாலும் அர்ச்சகராகக் கூடாது என்கிறது நீதிமன்றம். ஆகமம், சாத்திரம், சம்பிரதாயம் என்ற பெயரில் நியாயப்படுத்தப்படும் இந்த அநீதிக்குப் பெயர்தான் தீண்டாமை. தொட்டால் தீட்டு என்ற இந்தத் தீண்டாமையை சமூகத்தில் அமல்படுத்தினால் இன்று அது சட்டப்படி கிரிமினல் குற்றம். ஆனால் கோயிலுக்குள் அமல்படுத்தினால் அதன் பெயர் சாத்திரம், சம்பிரதாயம்.

இதற்கு எதிராகத்தான் அன்று பெரியார் குரல் எழுப்பினார். இன்று நாங்கள் போராடுகிறோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கும் போட்டிருக்கிறோம். நீதிமன்றத்தில் மட்டும் வழக்காடித் தீர்த்துக் கொள்வதற்கு இது சொத்துப் பிரச்சனை அல்ல. நம் அனைவரின் சுயமரியாதைப் பிரச்சனை. எனவே, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக நீங்கள் அனைவரும் குரல் எழுப்பவேண்டும் என்று கோருகிறோம். ஆலயத் தீண்டாமை எனும் இந்த அநீதிக்கு எதிராக நாங்கள் நடத்தும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அரசே!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திற்கு கடந்த 4
ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள
தடையாணையை நீக்க விரைந்து நடவடிக்கை எடு!
ஆலயங்களில் தீண்டாமையை கடைபிடிக்கும் பார்ப்பனர்களை
வன்கொடுமை சட்டத்தில் கைது செய்

_________________________________________________________

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
தொடர்புக்கு: 94432 60164, 94437 24403
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
தொடர்புக்கு: 90474 00485

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

எந்திரன்: படமா? படையெடுப்பா??

170

எந்திரன்

எந்திரன் விருப்பமா, நிபந்தனையா?

எந்திரன் நீங்கள் பார்க்கப் போகும் சினிமா அல்ல, பார்த்தே ஆகவேண்டிய ஒரு நிபந்தனை. உழைத்துக் களைத்த அலுப்பின் வார இறுதியில் ஏதோ ஒரு சினிமா பார்ப்பது உங்கள் வழக்கமாக இருக்கலாம். அந்தப் படம் பிடித்திருந்தால் சிந்தனையில் சில மணிநேரங்கள் நீடித்து விட்டு அகன்றுவிடும். சமூக உரையாடலில் அதற்கு மேல் ஒரு சினிமாவுக்கு இடமில்லை.

தமிழகத்தில் ஆண்டு தோறும் வெளியாகும் சில நூறு சினிமாக்களில் சிலவற்றை தவிர்த்துவிட்டு பொதுவெளியில் தாக்கத்தை ஏற்படுத்தும் தரத்தில் பெரும்பான்மையானவை இல்லை என்றாலும் பொழுது போக்கு நேரத்தின் முழுமையை கட்டிப்போட்டிருப்பது சினிமா அன்றி வேறில்லை. ஒரு குப்பை படம் கூட ஒலியும்– ஒளியும், உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, நகைச்சுவை, விமரிசனம், படம் பற்றி ஊடக செய்திகள், நடிகைகளின் அட்டை படங்கள் என்று ஏதோ ஒரு வகையில் நம் சிந்தனையில் ஊடுறுவாமால் விடுவதில்லை.

பிரபுதேவா – நயன்தாரா ’திருமணப் போராட்டச்’ செய்திகள் , வடிவேலு, சிங்கமுத்து சண்டையின் முழுக்கதையும் தெரியாதவர் உண்டா? மக்களது சொந்த வாழ்க்கைக்குரிய அறிவைத் தாண்டி பொது அறிவின் அளவுகோலாக சினிமாதான் இருக்கிறது. ஓடாத படங்களின் துணுக்குகள் கூட மூளையின் மடல்களில் படியும் போது ஓடும் படங்கள்? சரி, ஓடும் படங்களை விடுங்கள், ஆக்கிரமிப்பு படங்களை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சினிமாவிற்கும் ஆக்கிரமிப்புக்கும் என்ன சம்பந்தமென்று தோன்றலாம். உங்களது தனிப்பட்ட வெறுப்பு விருப்புகளை அலட்சியப்படுத்திவிட்டு உங்களது நேரம், பொருள், சிந்தனையை ஒரு விசயம் அடித்து வீழ்த்துகிறது. ஆம். எந்திரன் உங்கள்மேல் நிகழ்ந்து வரும் ஆக்கிரமிப்பு. கலையின் பெயரால் பணத்தின் வலிமையால் உங்களை எதிர்த்து நடத்தப்படும் போர்!

அமெரிக்க இராணுவம் ஈராக்கை ஆக்கிரமித்திருப்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் தமிழக மக்களை மூலதனத்தின் ஏகபோக அசுரபலத்தால் ஆக்கிரமிப்பு செய்யும் எந்திரனை எப்படி புரிந்து கொள்வது?

எந்திரனுக்காக செலவிடப்பட்ட சமூக நேரம் எவ்வளவு?

முதலில் எந்திரன் பற்றிய செய்திகள், என்னென்ன விதத்தில், எத்தனை மாதங்களாய் உங்களை படர்நது வருகிறது, யோசித்து பாருங்கள்.

“ஹாலிவுட்டிற்கு இணையான தமிழ்ப்படம், தொழில் நுட்ப ரீதியில் தமிழக சினிமாவின் மைல்கல், 150 (190 என்றும் சொல்கிறார்கள்) கோடியில் தயாராகும் பிரம்மாண்ட பட்ஜெட் படம், அவதார் திரைப்படக் குழுவினர் வேலை செய்யும் படம்”, முதலான  வெத்துவேட்டு பிரகடனங்கள், புள்ளிவிவர பிதற்றல்கள்….பத்திரிகைகளில், இதழிகளில், தொலைக்காட்சியில், நட்பு அரட்டையில், இணைய செய்தித்தளங்களில், பதிவுகளில், சேட், பேஸ்புக், யூடியூப், பஸ், டிவிட்டர்….  மொத்தத்தில் உலக தமிழ் மனங்களில் எந்திரன் பற்றிய துணுக்குச் செய்திகள் ஏராளம். இவற்றை நாடிச் செல்லவில்லையென்றாலும், இவற்றில் நீங்கள் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்ற உண்மை உங்களின் தன்மானத்தை சீண்டினாலும் மறுக்க முடியாதே?

மனிதன் கண்டுபிடித்த ரோபோ உலகத்தை அழிக்கப் போகிறது என்று ஹாலிவுட்டின் இராம நாராயணன்கள் மென்று துப்பிய ஒரு அரதப் பழசான எந்திரக் கதைக்கு நீங்கள் செலவழித்த நேரத்தை கணக்கிட்டு பாருங்கள். துணுக்களை படித்தது போக, மலேசிய பாடல் அறிமுகவிழாவை அச்சில் இரசித்து, இருநாட்கள் சன்னிலும் பார்த்தீர்கள், பின்னர் அந்த விழா உருவான விதம் அதையும் முடித்து விட்டீர்கள், இதில் தமிழ் மட்டுமல்ல கூடுதலாக இந்தி, தெலுங்கு அறிமுக விழாவும் உண்டு, அப்புறம் எந்திரன் ட்ரெய்லர் பற்றிய முன்னோட்டம்,  பிறகு  ட்ரெய்லர் ரிலீஸ், பின்னர் அது குறித்த பின்னோட்டம், அப்புறம் எந்திரன் படம் எடுக்கப்பட்ட விதம், நட்சத்திர, தொழில் நுட்ப கலைஞர்களின் அனுபவங்கள், திரையங்கில் முன்பதிவு செய்ய கோரும் விளம்பரங்கள், பயணச் சீட்டுக்கான வரிசைகள், அப்புறம் புகழ் பெற்ற அந்த மூன்று மணிநேர திரையரங்க அனுபவம், வெளியே ஆனந்த விகடன் முதல் அமெரிக்கா வரையிலான மவுத் டாக்…..

எந்திரனது அரட்டை நேரத்தில் என்னென்ன செய்திருக்கலாம்?

எல்லாம் கணக்கிட்டு பார்த்தால் எந்திரனுக்கு செலவழித்த, இல்லை, செலவழிக்க வைக்கப்பட்ட நேரத்தின் கூட்டுத்தொகை சில நாட்களைத் தாண்டும். பூமி சூரியனை சுற்றுவது போல பதிவுலகம் சென்ற மாதம் முதல் எந்திரனை சுற்றியே வருகிறது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் இந்த கூட்டுநேரத்தின் சமூக மொத்தம் எவ்வளவு இருக்கும்? இந்த நேரத்தில் தமிழக மக்களிடையே எழுத்தறிவு அற்ற மக்களுக்கு கல்வியறிவு கற்றுக்கொடுத்திருந்தால் நூறு சத எழுத்தறிவு பெற்ற மாநிலமாக ஆகியிருக்க முடியாதா?  இந்த நேரத்தில் சமகால வரலாற்றை கற்றிருந்தால் காஷ்மீரின் போராட்ட நியாயத்தையும், ஈழம் தோற்கடிக்கப்பட்ட காரணத்தையும் அறிந்திருக்க முடியாதா? குறைந்தபட்சம் கணினிக்கு ஒதுக்கி முறையான தமிழ் தட்டச்சு கற்று மொழியையாவது வளர்திருக்கலாம்….

ஒரு நாட்டின் பணம் மட்டுமல்ல அதன் மக்களது பயன்பாட்டு நேரமும் இப்படி வீணே செலவழிக்கப்பட்டால் அதன் இழப்பு என்ன? எந்திரன் ஆக்கிரமிப்புக் காலத்தில்தான் காஷ்மீரில் பல மக்கள் கொல்லப்படும் அடக்குமுறை நடந்ந் வருகிறது. பாலஸ்தீனில் கணக்கு வழக்கில்லாமல் மக்களது ரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. அணுவிபத்து கடப்பாடு என்ற அடிமை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இன்னும் எத்தனையோ…….. எதுவும் நம் கவனத்திற்கு வரவில்லை என்பதன் அவலசாட்சி எந்திரன்தான்.

ஒருநாட்டின் மக்கள், அரசியல் சமூக வாழ்க்கைக்கு இடையில் சினிமா பார்ப்பதற்கும், சினிமா பார்ப்பதற்கு இடையில் அரசியல் சமூக வாழ்வை கொறிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? கல்விக் கட்டணத்தை எதிர்க்க முடியாததற்கும் வீட்டில் எந்நேரமும் வடிவேலு நகைச்சுவை பார்ப்பதற்கும் எந்த தொடர்புமில்லையா? விசைத்தறிக்கில்லாத மின்சாரம் மாலைநேர சீரியல்களுக்கு மட்டும் தவறாமல் கிடைப்பதற்கும் தொடர்பு உண்டா, இல்லையா?

கலைத்தாகமா, காசு பறிக்கும் கட்டவுட் மோகமா?

ஒரு ரூபாய் ரேசன் அரிசிக்கு அலைவதற்கும், இலவச தொலைக்காட்சியில் இருந்து சங்கமிப்பதற்க்கும் என்ன தொடர்பு இருக்கிறதோ அதுதான் எந்திரனுக்கும் தமிழக வாழ்க்கைக்கும் இருக்கிறது. கருணாநிதியின் அழகிரி தேர்தல் ஃபார்முலாவின்படி விலை கொடுத்து வாங்கப்படும் வாக்கிற்கான செலவு உங்கள் பாக்கெட்டிலிருந்துதான் எடுக்கப்படுகிறது என்பது தெரியுமா?
எந்திரன் எவ்வளவு பிரம்மாண்டமாக செலவழித்து எடுக்கப்பட்டது என்பதை விட அந்த பிரம்மாண்டத்தை வசூலிலும், இலாபத்திலும் பார்க்கப் போகிறார்கள் என்பதே முக்கியம். ஒரு சினிமாவின் தயாரிப்புச் செலவு கலைத் தாகத்திற்காக இருப்பதற்கும், கட்டவுட்டை காட்டி காசு பறிப்பதற்காக செலவு செய்வதற்கும் பாரிய வேறுபாடு உண்டு.

முதலில் எந்திரனை தயாரிக்க ஈடுபட்ட ஐங்கரன் இன்டர் நேஷ்னல் அதிலிருந்து விலகியதும் சங்கர் கோஷ்டி கலாநிதி மாறனை சந்தித்ததாம். மலேசிய பாடல் அறிமுக விழாவில் ரஜினி சொன்னதன்படி அப்போது கலாநிதி மாறன் கையில் சிவாஜி வசூல் விவரங்களை வைத்திருந்தாராம். ஒரு படத்தின் தயாரிப்புச் செலவுக்கான நியாயத்தை கதையில் தேடாமல் சூப்பர் ஸ்டாரின் முந்தைய படத்தின் வசூலை வைத்து அவர் ஆய்வு செய்வதிலிருந்தே இந்த படத்தின் கலை யோக்கியதையை தெரிந்து கொள்ளலாம்.  மூன்று நாட்கள் வசூல் ஆராய்ச்சியின் பின் கலாநிதி மாறன் இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தாராம்.

கோடம்பாக்கத்தில் இப்போதெல்லாம் மதுரையிலிருந்து கனவுகளுடன் வந்திறங்கி தயாரிப்பாளர்களிடம் மதுரை தமிழில் கதை சொல்லும் உதவி இயக்குநர்களை காண இயலாது.  பொறியியல், மருத்துவம், மேலாண்மை முதலான உயர்கல்வி படித்த மேட்டுக்குடி இளைஞர்களே சங்கர் முதலான கார்ப்பரேட் இயக்குநர்களிடம் உதவியாளர்களாய் சேரமுடியும். இந்த போக்கு வெகுவேகமாக பரவி வருகிறது. இனி எதிர்கால இயக்குநர்கள் தயாரிப்பாளர்களிடம் கதையை சொல்லி வாய்ப்பு கேட்க இயலாது. மாறாக படம் அள்ளப்போகும் வசூல் குறித்த மேலாண்மை திட்டத்தைத்தான் கச்சிதமாக தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.வசூல் செய்யும்  ‘கலையில்’ கதைக்கு என்ன கலைச்சேவை வேலை இருக்கமுடியும்?

திருட்டுப் பணத்தில் சம்பாதிக்கும் ரஜினி!

படத்தின் தயாரிப்புச் செலவில் ரஜினிகாந்த், சங்கர், ஐஸ்வர்யாராய், ரஹ்மான் போன்ற நட்சத்திரங்களின் ஊதியம் முக்கியமானது. சில கோடிகளை ஊதியமாக வாங்கும் நட்சத்திரங்களின் பங்கு என்பது ஏதோ அவர்களது சந்தை மதிப்பை வைத்து மட்டும் உருவாவதில்லை. நம்மிடமிருந்து எவ்வவளவு பணம் பிக்பாக்கெட் அடிக்க முடியும் என்ற உண்மைதான் நட்சத்திரங்களின் மதிப்பை தீர்மானிக்கிறது. இதற்கு ரஜினி என்ன செய்ய முடியும் என்று சில அப்பாவிகள் கேட்கக்கூடும்.

முழுவதும் தொழில்நுட்பத்தின் தயவில் தயாராகும் இந்தப்படத்தில் முகத்தை மாத்திரம் அதுவும் ஒரு துணை நடிகரைப் போல காட்டிச்செல்வது மட்டுமே ரஜினியின் வேலை. ரஜினி என்ற ஊதிப் பெருக்கப்பட்ட மாயையை பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் அவருக்கு ஊதியமே அன்றி அவரது நடிப்பிற்காக அல்ல. நடிப்புத் திறன் தேவையின்றி ஊதியத்தை அதுவும் பல கோடிகளில் வாங்குவது என்றால் அதற்கு காரணம் இருக்கிறது.

எந்திரன் ரிலீசாகும் சமயத்தில் அவரது மகள் திருமணம் நடைபெற்ற போது, ரசிகர்கள் மத்தியில் தன் இமேஜ் அடிவாங்கும் சாத்தியத்தைப் பற்றிக் கூட கவலையில்லாத ரஜினியின் அறிக்கையை நாம் அறிவோம். இதனால் நாம் குறைந்த பட்சம் அறிவது என்ன,  இனி ரஜினியின் இரசிகர்கள் பலம் எதுவும் அவரது படம் ஓடுவதற்கும் சம்பாதிப்பதற்கும் தேவையில்லை. அதை தீர்மானிப்பது சன் டி.வியின் வர்த்தக சாம்ராஜ்ஜியம்தான். அந்த சாம்ராஜ்ஜியத்தில் அவர்கள் நினைத்தால் நட்சத்திர இளவரசர்கள் சடுதியில் உருவாக்கி களமிறக்கப்படுவார்கள். அவர்களது கொள்ளைக்கு உடன்படும் எவரும் நட்சத்திர இமேஜை அடைய வாய்ப்புண்டு. கூடவே கொள்ளைப் பணத்தில் பங்கு பெறவும் வழியுண்டு. மறுத்தால் ஒளி மங்கி , மறைந்து போகவேண்டியதுதான்.

இதனால் தமிழ்நாட்டின் நட்சத்திர ஆதிக்கம் குறைந்து விட்டதாக பொருளில்லை. மாறாக நட்சத்திர மதிப்பை தீர்மானிக்கும் ஏகபோக முதலாளிகள்தான் இனி கடவுளர்கள், இரசிகர்கள் அல்லர். இரசிகர்களும் பங்கு பெற்ற நட்சத்திர உருவாக்கத்தில் இனி முழுமையாக தீர்மானிக்கப் போவது சன் போன்ற தரகு முதலாளிகள்தான்.

எந்திரனின் ஏகபோக பகல் கொள்ளை !

ஏற்கனவே புதிய திரைப்படங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் வைத்துக் கொள்ளலாம் என்று சட்டபூர்வ அனுமதி இருப்பதால் சட்டபூர்வமாகவே கொள்ளையடிப்பதில் பிரச்சினையில்லை. எந்திரனின் முதல் வாரத்தில் ஒரு டிக்கெட்டின் விலை ஆயிரமா, இரண்டாயிரமா என்று தெரியவில்லை. படத்தின் மேனியாவுக்கேற்ப இது கூடத்தான் செய்யுமே அன்றி குறையப் போவதில்லை. இப்படி ஓரிரு வாரத்தில் அவர்கள் அள்ளப்போகும் பணம்தான் அவர்களது மூலதனத்தை சில மடங்காக அள்ளிக் கொடுக்க போகிறது.

சமீபத்திய செய்தியின் படி எந்திரனது இந்தி மற்றும் தமிழ் மொழி படப்பிரதிகளுக்காக சுமார் 2000 பிரதிகள் திரையிட இருக்கிறார்களாம். இதில் தமிழில் சுமார் ஐநூறு முதல் ஆயிரம் வரை இருக்கலாம். இதை நாம் 500 திரையரங்குகளில் வெளியிடுவதாக வைத்து ஒரு திரையரங்கிற்கு தலா 500 இருக்கைகள் என்று கொண்டால் மொத்தம் 2,50,000. ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் என்றால் மொத்தம் பத்து இலட்சம் பேர் பார்ப்பார்கள். முதல் ஒரு வாரத்திற்கு ரூ.500 என்று ஒரு டிக்கெட்டின் விலையை வைத்தால் ஒரு நாள் வசூல் 50,00,00,000. அதாவது ஐம்பது கோடி ரூபாய்.  டிக்கெட்டின் விலை சராசரியாக 300 என்று வைத்தாலும் கூட ஒரு நாள் வசூல் முப்பது கோடி ரூபாய். ஒரு நாளில் ஐந்து இலட்சம் பேர்தான் பார்க்கிறார்கள் என்று வைத்தாலும் ஒருநாளின் வசூல் 15 கோடி ரூபாய்.

இதில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் முதல் சில நாட்களில் டிக்கெட்டின் விலை ஆயிரத்திற்கும் மேலேயே கூட இருக்கும். இரசிகர் மன்றங்களுக்கான காட்சிகள் ஒட்டு மொத்தமாக விற்கப்படும் போது அதன் விலை இன்னும் அதிகம். மொத்தத்தில் எந்திரன் படம் சுமார் ஒரு மாதம் ஓடினால் கூட அது குறைந்த பட்சம் முன்னூறு கோடி ரூபாயை வசூலிப்பது உறுதி.

எனில் இந்த சட்டபூர்வ கொள்ளை இல்லாமல் ரஜினியின் பல கோடி சம்பளம் இல்லை. திரையரங்குகளின் உரிய கட்டணத்தில் எந்திரன் நூறு நாள் ஓடினால் ரஜினிக்கு சம்பளத்தை சில இலட்சங்களை தாண்டமுடியாது. கோடிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

இந்த ஒருமாதம் நீங்கள் விரும்பினாலும் வேறு படங்களை பார்க்க முடியாது. தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் எந்திரன் படத்தை வெளியிட இருக்கிறார்கள். சென்னை நகரத்தில் உள்ள முப்பது திரையரங்குகள், புற நகரில் உள்ள நாற்பது திரையரங்குகளில் எந்திரன் படம் வெளியாக இருக்கிறது. ஆக இந்த எழுபது திரையரங்குகளில் முதல் ஒரு மாதத்தில் எந்திரன் மட்டுமே ஓடும். வாரம் ஒரு முறை படம் பார்ப்பவர்கள், மாதம் ஒரு முறை படம் பார்ப்பவர்கள் அனைவரும் எந்திரனைத் தவிர வேறுபடத்தை பார்க்க முடியாது.

எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது!

இதைத்தான் எந்திரனின் ஆக்கிரமிப்பு போர் என்று சொல்கிறோம். தமிழர்களின் வாழ்வில் சினிமா பார்க்க முடியாமல் பொழுது போக்கு இல்லை என்றான பிறகு அந்த சினிமாவில் எந்திரனைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றாக்கிவிட்டால் அது ஆக்கிரமிப்பு இல்லாமல் வேறு என்ன? மேலும் எந்திரனின் முதல் நான்கைந்து வாரங்களில் எந்த படங்களும் வெளிவராமல் சன் குழுமம் பார்த்துக் கொள்கிறது. தமிழக திரைப்படங்களை யார் தயாரித்தாலும் அவர்கள்  தமது படங்களை கருணாநிதி குடும்பத்தினருக்குத்தான் விற்க முடியும் என்றான பிறகு சன் குழுமத்தின் எந்திர ஆதிக்கத்தினை யார் கேட்க முடியும்? அழகிரியின் மகன் தயாநிதி எந்திரனின் தமிழ்நாட்டு உரிமையை சுமார் 100 கோடிக்கு கேட்டு பேரம் படியவில்லை என்பதற்காக சன் குழுமத்தின் சக்சேனாவை ஒரு அடிதடி வழக்கில் சிக்கவைக்க முயன்றார் என்பதுதான் இருந்த ஒரே கேள்வி. அதைக்கூட ஏதோ இரகசிய ஒப்பந்தம் போட்டு சரிக்கட்டிவிட்டார்கள். எனவே இனி எந்திரனின் போரை ஆண்டவனே வந்தாலும் தடுக்க முடியாது.

தமிழ்நாட்டிலேயே முழு செலவையும் தாண்டி இலாபம் பார்க்க முடியும் என்ற பிறகு கேரள உரிமை பத்து கோடி, ஆந்திர உரிமை முப்பது கோடி, கர்நாடக உரிமை பத்து கோடி, இந்திக்கு எத்தனை என்று தெரியவில்லை என்றாலும் தமிழை விட அதிகமாகவே இருக்கும், பிறகு சர்வதேச உரிமை என்று மொத்தமாக கூட்டிக்கழித்தால் எப்படியும் சுமார் ஐநூறு கோடியை சுருட்டி விடுவார்கள். இதற்கு மேல் எந்திரன் தொடர்பான பல்வேறு தொடர் நிகழ்வுகள் – பாடல் அறிமுகம், டிரைலர் அறிமுகம், தயாரித்த விதம், என்று பல புராணங்கள் சன் தொலைக்காட்சியில் ஓடும்போது அதற்குண்டான விளம்பர வருமானம் . ஆடியோ ரைட்ஸ், ஓவர்சீஸ் ரைட்ஸ் எல்லாம் கூடுதல் போனஸ். இறுதியாக உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வரும் வைபவத்தில் வரும் விளம்பர வருமானம் என்ற சூப்பர் போனஸ். சூரியன் வானொலியின் எந்திரன் சிறப்பு ஒலிபரப்பு, சன் டைரெக்ட் வீடியோ ஆன் டிமேன்ட், தனது இருபத்தி சொச்சம் சேனலில் மீண்டும் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்து ஆயுசுக்கும் விளம்பரத்தினால் கட்டும் கல்லா….

இவை அத்தனையும் ஒரு பெரிய அலை போல குறுகிய நேரத்தில் தாக்கினால்தான் விழுங்க முடியும் என்பதால் அந்த அலையின் வீச்சை காண்பிப்பதற்காக சன் குழுமம் விளம்பரங்கள் மற்றும் ஏனைய ஊடக கவரேஜ் மூலம் பிரம்மாண்டமாக காண்பித்து வருகின்றது. இந்த பிரச்சாரத்தில் விழாதவர் யாருமில்லை. ஆக எந்திரனை பார்ப்பது என்பது உங்களது விருப்பமோ, உரிமையோ, தெரிவோ அல்ல. அது நீங்கள் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம். அந்த கட்டாயத்தை தவிர்த்துவிட்டு வேறு ஒரு சினிமாவை பார்க்க விரும்பினால் அதற்கு வாய்ப்புமில்லை, வழியுமில்லை.

அடுத்து குறுகிய நாட்களில் ஒரு பேச்சை செயற்கையாக உருவாக்கிவிட்டு, அதனைப்பற்றிய மக்களின் மவுத் டாக் ஒரு கருத்தாக உருவெடுப்பதற்கு முன்னர் எந்திரன் தனது இலாபத்தை பார்த்துவிட்டு ஒதுங்கிவிடும். மக்களெல்லாம் சாகவாசமாக படத்தை அசை போட்டு நிராகரிக்க விரும்பினாலும் இந்த படம் வசூலில் தோற்கவே முடியாது. ஒரு படம் வெற்றியடைவதோ இல்லை தோல்வியடைவதோ மக்களின் கையில் என்ற ஜனநாயகமெல்லாம் எந்திரனது ஏகபோகத்திடம் எடுபடாது. ஆகவே இந்த வகையிலும் இது மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர் என்பதே உண்மை.

பிராந்திய சினிமாக்களுக்கு வேட்டு வைக்கும் எந்திரன்!

அடுத்து இது உருவாக்கப் போகும் சமூக விளைவுகள் குறைந்த பட்சம் சினிமாத் துறையில் எப்படி இருக்கும்? கேரளாவில் மம்முடடி, மோகன்லால் படங்களுக்கு கிடைக்காத வியாபாரம் எந்திரனுக்கு கிடைத்திருக்கிறது. அங்கே நேரடியாக தமிழில் வெளியாகும் எந்திரன் ஒரு சராசரி மலையாளப்படத்தின் பிரதிகளை விட அதிக அளவில் முழு கேரளாவிற்கும் வெளியாகிறது. அங்கும் அந்த நேரத்தில் புதிய படங்கள் வரப்போவதில்லை.

80களில் சராசரி மலையாளிகள் வாழ்வை கலைநயமிக்க சிறுகதைகள் போல அழகாக சித்தரித்த மலையாளப் படங்களின் போக்கை, மெக்கை மசாலா ஃபார்முலாவிற்கு மாற்றியதை தமிழக படங்கள் 90களில் செய்தன. இப்போது எந்திரன் அந்த மாற்றத்தில் ஒரு பெரும் பாய்ச்சல். பண்பாட்டு விசயத்தில் தமிழ்நாட்டு அண்ணனை தம்பி போல பின்தொடரும் கேரளம் தனது தனித்தன்மையை இழந்து இத்தகைய கட்டவுட் சினிமாவிற்கு அடிபணிகிறது. எந்திரன் வரவால் கேரளத்தின் சிறு முதலீட்டு படங்களுக்கு இனி எதிர்காலமில்லை. வரும் மலையாளப் படங்களின் நாயகர்கள் தேவையே இல்லாமல் வெளிநாட்டில் பாடி, கார்களை நொறுக்கி, கிராபிக்சில் செலவழித்துத்தான் கடைத்தேற முடியும்.

ஆனால் அதையும் சன்குழுமம்தான் தீர்மானிக்கும் என்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. நூறு சிறுமுதலீட்டு படங்கள் வந்த இடத்தில் சில பெரும் முதலீட்டு படங்கள்தான் வரமுடியும் என்றால் இரசிகர்களின் இரசனையும் மாறி பாதாளத்தில் விழுந்து குலையும். ஆந்திரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நிறைய பிரதிகளை எந்திரனுக்காக வெளியிடப் போகிறார்களாம். ஏற்கனவே ஆந்திரம் என்பது ஜிகினா சினிமாவிற்கு புகழ்பெற்றது. அந்த ஜிகினாவில் கொஞ்சம் வைரத்தூளை தூவி கலந்து கட்டி அடிக்கும் எந்திரனால் தெலுங்கு பட உலகம் அர்த்தமற்ற செலவழிப்பில் காவியம் படைக்கும்.

இந்தியில் எந்திரனது வரவு நல்ல கதைப்படங்களை தயாரிப்பவர்களைக்கூட பிரம்மாண்டமான மசாலா பக்கம் இழுக்கும். பாலிவுட் ஏற்கனவே அப்படித்தான் இயங்குகிறது என்றாலும் முழு இந்தியாவையும் தென்னிந்திய மொழிகளோடு சேர்ந்து முழுங்க முடியும் என்றால் இந்தி தயாரிப்பாளர்கள் அடுத்த பிரம்மாண்டத்தை தமிழ், தெலுங்கில் தயாரிப்பது உறுதி. இதன்மூலம் தமிழ் மூலம் இந்திக்கு சென்ற ஆப்பு மீண்டும் தமிழுக்கு வருவது நிச்சயம். சன் குழுமத்தைப் போல ரிலையன்ஸ் முதலான பெரும் தரகு முதலாளிகளும், இதுவரை சினிமாவில் இறங்காத முதலாளிகளும் துணிந்து குதிக்கப்போவது உறுதி. ஐ.பி.எல்  மூலம் கிரிக்கெட் எனும் விளையாட்டை வளைத்திருக்கும் முதலாளிகளுக்கு, பெரும் முதலீடுதான் அதுவும் உத்தரவாதமான இலாபம் உறுதி எனும் போது சினிமாவை ஏன் விட்டு வைக்கப் போகிறார்கள்.

“வெண்ணிலா கபடிக்குழு” என்ற யதார்த்தவகை படத்தை எடுத்த இயக்குநர் “நான் மகான் அல்ல” மூலம்தான் தனது வெற்றியை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்றான பிறகு எந்திரன் தெரிவிக்கும் ஃபார்முலாதான் தமிழ் சினிமாவின் தேசியகீதமாக நிலைபெறும். சராசரி தமிழ் மக்களின் வாழ்க்கை என்பதற்கு ஏதோ கொஞ்சம் கருணை கண்பித்ததாக போற்றப்பட்ட “சுப்ரமணியபுரம், பருத்திவீரன், அங்காடித்தெரு, ” போன்ற படங்களின் மார்கெட் தமிழகம் மட்டும்தான் அதுவும் ஊர்ப்புறங்கள்தான் என்ற நிலையில் அகில இந்தியாவை குறி வைத்து அடிக்கும் எந்திரனது வருகை பிராந்திய வாழ்க்கையின் தேவையை இரக்கமின்றி ரத்து செய்துவிடும்.

குறைந்த பட்சம் தென்னிந்தியாவை இலக்காக வைத்து எடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் நகர்ப்புறத்து மேட்டுக்குடி அடையாளம் மட்டுமே தேவைப்படும். அந்த வகையில் எந்திரனது ஆக்கிரமிப்பு வெற்றியின் மூலம் விதவிதமான தேசிய இனங்களின் அழகு அழிக்கப்படும். சன் டி.வியின் சீரியல்கள் தென்னிந்திய மொழிகளில் மாற்றம் செய்யப்படுவதற்கேற்ற கதை, உணர்ச்சி, களத்தை வைத்திருப்பது போல சினிமாவில் மாநகர இந்தியாவின் மினுமினுப்பு மட்டும் தேவைப்படும். எனில் முன்னர் சொன்னது போல உசிலம்பட்டி இளைஞனின் தேவை இனியும் தமிழ் சினிமாவிற்கு அவசியமில்லை. மலப்புறத்து மலையாளியின் நாட்டுப்புறப்பாடல் கேரள சினிமாவிற்கு தேவைப்படாது. கோதாவரியின் வனங்களில் நிறைந்து வாழும் பழங்குடி மக்களின் அடையாளம் தெலுங்கு சினிமாவை அண்டாது.

பூபன் ஹசாரிகாவின் மனதை வருடும் கிழக்கிந்தியாவின் நாட்டுப்புற பண்களை ரஹ்மானின் சர்வதேச ரகத்தில் வரும் தாளங்கள் நீக்கிவிடும். இளையராஜாவின் நாட்டுப்புற இசை இனி நினைவுகளில் மட்டுமே உயிர்வாழும். தேசிய இனங்களின் தனித்தன்மையை நேற்றைய வரலாற்றில் அழிக்க முயன்ற பார்ப்பனிய சம்ஸ்கிருத ஆதிக்கத்திற்கு இணையாக, இன்றைய வரலாற்றில் மேற்குலக அடையாளங்களை உலகமயமாக்கத்தின் தயவில் தேசிய தனித்தன்மைகளின் மீது திணிக்கும் நோக்த்திற்கு எந்திரன் போன்ற ஆக்கிரமிப்பு படங்கள் உதவும். நடை, உடை, பாவனை, வாழ்விடம், சந்தை அனைத்தும் அதாவது சென்னையின் சத்யம், மாயஜால், எக்ஸ்பிரஸ் அவின்யு, பிஸா டெலிவரி இளைஞர்கள், கிழக்கு கடற்கறை சாலை, டிஸ்கோத்தே, இறக்குமதி பைக், ஸ்போர்டஸ் கார் மட்டுமே இனி தமிழ்ப்படங்களின் அடையாளங்களாக உலாவரும். அதனாலேயே அவற்றை தமிழடையாளங்கள் என்று அழைக்கவே முடியாது.

அடுத்த தேர்தலுக்கு செலவழிக்கப்படும் பணம் உங்களிடமிருந்து………..

உலகமயமாக்கத்தின் இறுக்கத்தில் விவசாயம் அழிந்து இடம் விட்டு இடம் சென்று நாடோடிகளாக வாழ்க்கையை ஓட்டும் பெரும் மக்கள் கூட்டம்தான் இந்த எந்திரனை முரண் நகையாக பார்க்கப் போகிறார்கள். எந்த அடையாளங்களால் தமது தன்னிறைவான கிராமத்து வாழ்க்கை வற்றிப் போனதோ அந்த அடையாளங்களை பல கோடி செலவில் செயற்கையான செட்டில் வெள்ளித்திரையில் இரசிக்க பணிக்கப்படுகிறார்கள். திடீரென்று வரும் வருமானமும், திடீரென்று வரும் வேலையின்மையும் இணைந்து இரு துருவங்களாய் ஓடும் வாழ்க்கையின் மூலம் வரும் மாத வருமானம் முழுவதையும் எந்திரனுக்கு காணிக்கையாக போட்டே ஆகவேண்டிய நிலை. ஆனால் இந்த காணிக்கைக்கு எந்த ஆண்டவனும் வாழ்க்கை குறித்த பாதுகாப்பு வரங்களை தர இயலாது.

அடுத்து வர இருக்கும் தமிழக சட்டமன்றத்தேர்தலில் வாக்குகளுக்கு தேவையான பணத்தை வாரி வழங்குவதாக எல்லோரும் பேசுகிறார்களே அன்றி அந்த பணத்தின் பெரும் பங்கு சன் குழுமத்தின் மூலமே வர இருக்கிறது என்று பார்ப்பதில்லை. 234 தொகுதிகளில் இருக்கும் வாக்குகளில் சுமார் ஒரு கோடி வாக்குகளுக்கு தலா 500 ரூபாய் கொடுப்பதாக வைத்தால் மொத்தம் 500 கோடி ரூபாய் வருகிறது. எந்திரன் வசூலிக்கப் போகும் தொகையும் அதுதானே?

ஏதோ மக்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்கிறார்கள் என்று மேட்டுக்குடி அறிவாளிகள் கேலி செய்வதன் பின்னே எந்திரன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான். அந்த சிரிப்பில் தெறிக்கும் எக்காளத்தின் முன்னே எத்தனையோ வாழ்க்கைப் பிரச்சினைகளோடு வாழும் மக்களின் அவலக்குரல் எடுபடாதுதான். தொடர்ந்த அழுகையின் பாதிப்பில் ஒரு கணம் விரக்தியாய் சிரிப்பு வரும் நேரத்தில் எந்திரன் வருகிறது. அழுகையின் மதிப்பை உணர்ந்தவர்கள் எந்திரனை புறக்கணித்து சிரிக்க வேண்டும். சிரிக்கத் தெரியாதவர்கள் அழுது கொண்டேதான் எந்திரனை பார்க்கிறோம் என்பதை உணரமாட்டார்கள்.

ஏனெனில் எந்திரன் வெறும் சினிமா மட்டுமல்ல. மூலதனத்தின் வலிமையோடு நம்மீது நோக்கி வரும் படையெடுப்பு. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுவதில் நமது தன்மானம் மட்டுமல்ல, ஆர்ப்பாட்டமான கலையின் மினுக்குகளால் அரிக்கப்பட்டிருக்கும் நமது போராட்ட குணத்தையும் மீட்க வேண்டியிருக்கிறது. எந்திரனை புறக்கணியுங்கள்!

அப்படியா திருவாளர் பிரதமர் அவர்களே! – பி.சாய்நாத்

18

மக்கள் உரிமைகளைப் பலாத்காரமாய் நசுக்குகின்ற கொள்கைகளை நாம் கொண்டிருக்கிறோம். மக்களோ தீர்வு வேண்டி நீதிமன்றங்களை அணுகுகிறார்கள்.  பிரதமரே, நீதிமன்றங்கள் அவர்களுக்கு எதை வழங்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?

–             பி. சாய்நாத்

_______________________________________

மல்டிபிளெக்சுகளுக்கும் ஷாப்பிங்மால்களுக்கும் மானியத்துடன் 'இடம்' கொடுக்கும் அரசுக்கு தானியங்களை வைக்க இடமில்லையாம்

பிரதமர் அவர்களே,

உச்ச நீதிமன்றத்தை “மரியாதையுடன்” ஓரங்கட்டும் வகையில், உணவு தானியப் பிரச்சினையோ, அது பூசணம் பூத்துப் பாழாவதோ எல்லாம் கொள்கை விவகாரங்கள் எனத் தாங்கள் திருவாய் மலர்ந்ததை அறிந்து ஆச்சரியப்பட்டேன். தாங்கள் மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். இது யாரோ ஒருவர் அப்படிச் சொல்ல வேண்டிய நேரமும் கூட.  ஐ.மு. கூட்டணியினரின் மக்கள் மத்தியிலான வெற்று வாய்ச்சவடால்களில் இல்லாத நேர்மையை நீங்கள் நிறைவு செய்திருக்கிறீர்கள்.  பல மில்லியன் டன் உணவு தானியங்கள் பாழாகிக் கொண்டிருப்பதை ஒட்டி என்ன செய்யவேண்டும் என்று உங்களுடைய அரசாங்கம் தான் தீர்மானிக்க முடியும், நீதிமன்றமல்ல.

பசிகொண்ட மக்கள் புசிப்பதை விட அது பாழாவதே மேல் என்று உங்களது கொள்கை வழி நடத்துமானால், அதில் கோர்ட்டுக்கு என்ன வேலை. தாங்கள் கூறியதுபோல “கொள்கை வகுக்கும் கோட்டை” உங்களுடையதே.  எப்படியோ, ஒருவழியாக, பெருகும் பசிக்கொடுமையும், ஊட்டச்சத்து பற்றாக்குறையும், தானியங்கள் கெட்டொழிவதும், சேமிப்புக் கிடங்குகளின் பற்றாக்குறையும் எல்லாமே தாங்கள் பின்பற்றும் கொள்கை வழிவந்தவையே என்று ஒரு தேசத்தின் தலைவரே ஒப்புக்கொள்வது உள்ளபடியே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.  (இவையெல்லாம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் விளைவாய் ஏற்பட்டவை அல்ல என்பதை நான் அறிவேன்)

இதற்கெல்லாம் எதிர்க்கட்சிதான் காரணம், பருவ மழை பொய்த்து விட்டதுதான் காரணம், அல்லது புதிரான (ஆனால் இறுதியில் நலம் பயக்கும்) சந்தை நடவடிக்கைகள்தான் காரணம் எனத் தங்களுக்குக் கீழே உள்ளவர்கள் சமாளிக்கலாம்.  ஆனால், நீங்கள் அதைச் செய்யமாட்டீர்கள்.  இதற்கான காரணத்தை கொள்கைகளில் தெளிவாகக் காண்கிறீர்கள்.  கொள்கைகள் பெரிதும் வெளிப்படையானவை, பூடகமான சந்தை நடவடிக்கைகளுக்கு இவை எவ்வளவோ மேல்.

உணவு தானிய சேமிப்புக்கான இடவசதி:

உணவு தானிய சேமிப்புக்குக் கூடுதலாய் ஒரு பொதுக் கிடங்குகூட கட்டியமைக்கப்படவில்லை. ஆண்டுகள் பலவாய் அதற்காகச் சல்லிக்காசுகூட செலவிடப்படவில்லை என்பதும் கூட ஒரு கொள்கை முடிவுதான். தனியார் கட்டுமான நிறுவனங்களை மானியங்கள் வழங்கி “ஊக்குவித்து” நாடெங்கும் புதிய நகரங்களை நிர்மாணிக்கவும், பெருவளாகங்களையும், பிருமாண்டமான செய்தித் தொடர்பு சாதனங்களையும் கட்டியமைக்கவும் நமது அரசிடம் பணமிருக்கிறது.  ஆனால், தேசத்தின் உணவுதானியங்களை சேமிக்கக் கிடங்குகளைக் கட்டுவதற்கு மட்டும் ஏதுமில்லை.

மாறாக, தனியார் கிடங்குகளை வாடகைக்கு எடுப்பது என்ற ’புதிய’ எண்ணம் தலைதூக்கி இருக்கிறது.  ஐயா, இது ஒரு கேள்வியை எழுப்புகிறது.  சில மில்லியன் டன் தானியங்களை சேமிக்கத்தக்க கிடங்குகளைக் காலிசெய்வது என்று 2004-2006 ஆண்டுகளில் உங்கள் அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவு எடுத்தது ஏன்? ஒரு பன்னாட்டு ஆலோசனை நிறுவனத்திடம் பணத்தைக் கொட்டிக் கொடுத்துப் பெற்ற அறிவுரையின்படிதான் அந்த முடிவு எடுக்கப்பட்டது.  கிடங்குகளை மீண்டும் வாடகைக்கு எடுப்பது என்ற இந்த முடிவு பெருத்த அளவில் கூடுதல் வாடகைச் செலவைக் கொண்டு வருவதாகும்.  இது பஞ்சத்தில் அடிபட்டுக் கொண்டிருக்கும் கிட்டங்கி உரிமையாளர்களின் வயிற்றில் பால் வார்ப்பதாகும்.  (இந்த தலைகீழ் மாற்று ஆலோசனைக்காக அந்த பன்னாட்டு ஆலோசனை நிறுவனத்துக்கும் தாராளமான சன்மானம் வழங்கப்பட்டிருக்கும்)

மேலும், உங்களது புத்தம் புது கொள்கைகள் எல்லாம் கிடங்கு உடைமையாளர்களுக்கு ஆதாயமாக, “ஊக்குவிக்கும்”  அம்சங்களை முன்னெடுத்துச் செல்கின்றன. பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட் உரை (எண்.49) வாடகைக்கு எடுக்கும் உத்தரவாதக் காலத்தை ஐந்திலிருந்து ஏழாண்டுகளாக உயர்த்தி இருக்கிறது. அதன் பிறகு வாடகைக் காலம் 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டிருக்கிறது.  (நலம் விரும்பியின் ஒரு எச்சரிக்கை: மேற்படி பன்னாட்டு ஆலோசனை நிறுவனத்தின் முடிவுகளை மடத்தனமாக அமல்படுத்திய அரசுகள் தனக்கே சவக்குழி தோண்டிக் கொண்டன என்பதையே நடப்புகள் உணர்த்துகின்றன.  வேண்டுமானால், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவைக் கேட்டுக் கொள்ளுங்கள்) அரசுக்குச் சொந்தமான நிலத்தில் கிடங்குகளைக் கட்டி அமைப்பது என்ற தெரிவு என்றுமே இருந்து வந்திருக்கிறது.  சட்டீஷ்கர் அதை இப்போது நடைமுறைப்படுத்துகிறது.  நீண்டகால நோக்கில் இந்தத் தெரிவு மிகவும் சிக்கனமானது; பஞ்சத்தைச் சமாளிக்க வேண்டிய நமது தேவையைக் காசாக்கும் லாபவெறியை கட்டுப்படுத்தக் கூடியது. இவையெல்லாம் கொள்கை விவகாரங்களாக இருப்பதால், இது ஒரு ஆலோசனை மட்டுமே, ஆணையல்ல.

உச்ச நீதிமன்றத்துக்குத் தெளிய வைத்த உங்களது கருத்துப்படி உணவுதானியம் பாழாவதை கவனிப்பது எல்லாம் அவர்கள் வேலையல்ல.  தேசத்தின் மிக முக்கியமான பொருளாதார அறிஞராகிய நீங்கள் பாழாகிக்கொண்டும், திறந்த வெளியிலும், மோசமான கிடங்குகளிலும் கிடந்து இனி பாழாகவும் இருக்கும் தானியங்களை என்ன செய்வது என்பது பற்றி நன்கு சிந்தித்துத் தெளிந்த கொள்கைகளைக் கைவசம் வைத்திருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.   உங்களது தீர்க்கதரிசனத்தின் வழிவந்த யாராவது ஒருவர் இந்த கொள்கைகளை மூர்க்கமான எலி, பெருச்சாளிக் கூட்டத்துக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என ஆசைப்படுகிறேன்.  ஏனென்றால், அவை நீதிமன்றங்களின் தீர்ப்புகளை எல்லாம் துச்சமாகத் தள்ளிவிட்டு இந்த தானியங்களைத் தங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தலைகொழுத்துத் திரிகின்றன.(தானியங்களைக் கொரிப்பதை விட்டு விலக ஒருக்கால் இந்த எலி, பெருச்சாளிக் கூட்டத்துக்கும் சில “ஊக்குவிப்புகள்” தேவைப்படுகின்றனவோ, என்னவோ)

இதனிடையே, பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் “பிறவற்றுக்கு இடையே இதே பிரச்சினைக்குத்தான் தே.ஜ.கூட்டணி அரசு பெருத்த விலை கொடுத்தது; 2004 தேர்தலில் துடைத்தெறியப்பட்டது” என்பதை ஒப்புக்கொள்கிறார். அடேயப்பா, இந்தக் கொள்கையில் தான் இவர்களிடையே என்ன ஒற்றுமை.  உச்ச நீதிமன்றமும் கூட ஒப்புக்கொண்டுவிட்டது போல் தெரிகிறது.

டாக்டர் சிங் அவர்களே, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம், உணவு பெறும் உரிமை தொடர்பான, நடப்பிலுள்ள இதே வழக்கில் (20 ஆகஸ்ட், 2001) “ஏழைகள், ஆதரவற்றோர் மற்றும் நலிந்த பிரிவினர் பஞ்சம் பசி பட்டினிக் கொடுமையை அனுபவிக்கக் கூடாதென்பதே இந்த நீதிமன்றத்தின் அக்கறைக்கு உரிய விஷயம்.  அது மத்திய அரசோ மாநில அரசோ எதுவாயினும், இக்கொடுமைகள் நிகழா வண்ணம் தடுப்பது அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்புகளில் ஒன்று.  இதை எவ்வாறு உத்தரவாதப்படுத்துவது என்பது கொள்கை தொடர்புடைய விஷயம். எனவே அந்தப் பொறுப்பு அரசாங்கத்திடமே விடப்படுகிறது.  நீதிமன்றம் உறுதி செய்துகொள்ள வேண்டிய விசயம் .. உணவு தானியங்கள் விரயமாக்கப்படக் கூடாது அல்லது எலிகள் தின்றொழிக்க விடக்கூடாது என்பதே.  உணவு பசித்தவனுக்குப் போய்ச்சேர வேண்டும் என்பதே இங்கு முக்கியமானது” என்று கூறியது.

தற்கொலை செய்துகொள்ளும் பல பதினாயிரம் விவசாயிகளும் கூட, பிரதமரே, உங்களோடு முற்றிலும் ஒத்துப்போகிறார்கள்.  தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள விரட்டியது இந்தக் கொள்கையே, நீதிமன்றங்கள் அல்ல, என்பதை அவர்கள் அறிவார்கள். எனவேதான் தற்கொலை செய்துகொண்ட பலர் விட்டுச் சென்ற தற்கொலைக் கடிதங்களில் உங்கள் முகவிலாசத்தை, நிதியமைச்சருடையதை அல்லது நமது அன்பிற்குறிய, மகாராட்டிர முதல்வர் முகவரியைக் குறித்துச் சென்றனர்.  இந்தக் கடிதங்களில் எதையாவது, எப்போதாவது படித்திருக்கிறீர்களா, டாக்டர் சிங்?  உங்கள் காங். கட்சி ஆளும் மகாராட்டிர அரசு அதில் ஏதாவதொன்றை உங்களுக்குக் கொடுத்திருக்கிறதா?  அவர்களது கடன் சுமை பற்றி, வங்கிக் கடன் வாய்ப்பு பற்றி, இடுபொருட்களின் விலையேற்றம் மற்றும் விளை பொருட்களின் விலைச் சரிவு பற்றி எல்லாம் அவை பேசுகின்றன; அவர்களின் அழுகுரலுக்குக் காதுகொடுக்காத அரசாங்கங்கள் பற்றியும்தான்.  அவை தம் குடும்பத்தாருக்குக் கூட எழுதப்படவில்லை… உங்களுக்கு, உங்களுக்கும் உங்கள் கூட்டாளிகளுக்கும்தான் முகவரியிடப் பட்டிருக்கின்றன, டாக்டர் சிங்.  ஆம், அவர்கள் தங்கள் துயரங்களுக்குக் காரணமான கொள்கைகளை அறிந்திருந்தார்கள். எனவேதான் அக் கொள்கைகளை வகுத்தவர்களுக்குத் தங்கள் மரண சாசனங்களை முகவரியிட்டிருந்தார்கள்.

விவசாயிகளின் துயரம்

தாங்கள் செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க 2006 – விதர்பா விஜயத்திற்குப் பின் வார்தாவைச் சேர்ந்த ராமகிருஷ்ண லோங்கர் தனது மரணக் குறிப்பில், “பிரதமரின் வருகையையும் அதை ஒட்டிய அவரது புதிய பயிர்க் கடன் பற்றிய அறிவிப்புகளையும் கண்டபின் நான் மீண்டும் வாழமுடியும் என்று நினைத்தேன். ஆனால், வங்கியில் ஒரு மாற்றமும் இல்லை. எனக்கு அங்கு எந்த மரியாதையும் இல்லை” என எழுதியிருக்கிறார்.  வாஷிமைச் சேர்ந்த ராமச்சந்திர ராவுத் தனது பிரச்சினையைப் பிரதமர் உணரவேண்டும் என்று தீவிரமாக எண்ணியதால் தனது மரணக் குறிப்பைப் பிரதமரே, தங்களுக்கு மட்டுமல்ல, குடியரசுத் தலைவர் மற்றும் உங்கள் கூட்டாளிகள் அனைவருக்கும் முகவரியிட்டு நூறு ரூபாய் முத்திரைத்தாளில் பதிவு செய்திருக்கிறார்.  அவர் தனது அறிவுக்கு எட்டியவரை தனது எதிர்ப்பை சட்டபூர்வமானதாக்க முயன்றிருக்கிறார். யாவத்மாலைச் சேர்ந்த ராமேஷ்வர் குஞ்சன்கர் தனது தற்கொலை அறிக்கையில் விவசாயிகளின் துயரத்துக்குப் பருத்தியின் கொள்முதல் விலையைக் குற்றம் சாட்டுகிறார். சகிபரோ அதாவோவின் விடைபெறும் கடிதம் அகோலா-அமராவதி பிராந்தியத்தின் பேய்த்தனமான கந்துவட்டிக் கொள்ளையைப் படம்பிடித்துக் காட்டியது போல உங்களுக்கு முகவரி இடப்படாத அவ்வாறான கடிதங்களும் உங்களது கொள்கைகளையே பேசின.

அவர்கள் அனைவருமே கொள்கையைக் காரணம் காட்டுகின்றனர். எந்த அளவுக்கு துல்லியமாக சொல்லி இருக்கிறார்கள் .. இருந்தார்கள்!  மகாராட்டிர மாநிலத்தில் 2008-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட “விவசாயக் கடனில்” பாதிக்கும் மேலான தொகை கிராம வங்கிகளால் வினியோகிக்கப்படவில்லை, நகர, மாநகர வங்கிக் கிளைகளால் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதையே சமீபத்திய வெளிப்பாடுகள் காட்டுகின்றன.  அதில் 42% ’பண’ப் பயிர் விவசாயத்தின் இதய நிலமான மும்பை மாநகரில் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது.  (நிச்சயமாக, இந்த நகரத்தில் பெருவீத விவசாயம் நடக்கிறது. ஆனால் சற்று வித்தியாசமாக- இது ஏராளமான ஒப்பந்தங்களை விளைவிக்கிறது). ஒரு சில பெரும் நிறுவனங்கள் இந்த “விவசாயக் கடன்” தொகையின் பெரும்பகுதியை வளைத்துப் போட்டிருப்பதாகத் தெரிகிறது.  லோங்கார், ராவுத் போன்றவர்கள் வேளாண் கடனுக்கு தத்தளித்ததில் வியப்பொன்றும் இல்லை.  கோடீஸ்வரர்களுக்கும் இவர்களுக்கும் இடையே -உங்களுக்கு மிகவும் பிடித்தமான சொற்றொடர்களின் ஒன்றான – ”சமதள ஆடுகளம்”  [level playing field] எதுவும் சாத்தியமில்லை.

தங்களது அரசின் பிரத்தியேக பேராண்மைக்கு உட்பட்ட கொள்கையின் வெளிப்பாடுகள் இவ்வாறு இருக்கையில், நான் மண்டியிடுகிறேன்,  எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது.  பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த அதிர்ச்சியூட்டும் விலையேற்றம் அரசு பின்பற்றும் கொள்கைகளின் தெளிவாய் முன் அனுமானிக்கப்பட்ட வெளிப்பாடுகள் தானே? இவ்வாண்டு, டொரொண்டோவில் உலகத் தலைவர்களிடையே “அனைவரையும் தழுவிய வளர்ச்சி” பற்றித் தாங்கள் உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் உங்கள் அரசாங்கம் பெட்ரோல், டீசல் விலைக் கட்டுப்பாட்டை அகற்றவும், தளர்த்தவும் செய்தது.  மண்ணெண்ணை விலையைக் கூட உயர்த்தியது.

ஏற்கனவே அரைப்பட்டினியில் இருக்கும் லட்சோபலட்சம் மக்களின் உணவை மேலும் வெட்டிச் சுருக்கினவே இந்தக் கொள்கைகள், அவற்றை விவாதத்துக்கு உட்படுத்த முடியுமா? அந்தக் கொள்கைகள் மக்கள் உரிமைகளைப் பலாத்காரமாய் நசுக்குகின்ற போது மக்களோ தீர்வு வேண்டி நீதிமன்றங்களை அணுகுகிறார்கள்.  பிரதமரே, நீதிமன்றங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?  உச்ச நீதிமன்றம் கொள்கை எதையும் வக்குக்கக் கூடாது என்று நீங்கள் சொல்லுவது சரிதான். ஆனால் உங்களது கொள்கைகளின் விளைவுகளை எதிர்த்து வாதாடும்போது அவர்கள் என்ன செய்வார்கள்? கொள்கைகள் மக்களால் வகுக்கப்படுகின்றன என்பது என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், உங்கள் விசயத்திலோ அது பல பொருளாதார வல்லுனர்களால் எழுதப்படுகிறது.  சிறுவர் உழைப்பைத் தடை செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளை எதிர்த்துப் போராடியவர்கள் உள்ளிட்ட வல்லுனர்கள் அவர்கள்.  அவர்களில் ஒருவர் ”ஏழைகளுக்குக் குழந்தை உழைப்பு தேவை” என்ற தலைப்பில் ‘தி நியூ யார்க் டைம்ஸ்’- ல் ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார் (நவம்பர் 29, 1994).  அதில் 13-வயதுப் பிள்ளையைத் தனது வீட்டில் வேலைக்கு வைத்திருப்பதாகவும் ஒப்புதல் அளித்திருக்கிறார்.  (இவர் பெட்ரோலியப் பொருட்களின் விலைக் கட்டுப்பாட்டை நீக்குவதற்கு ஆதரவாக நிற்பவரும் ஆவார் – விலை ஏற்றத்தை சமாளிக்க, வேறெதற்கும் அல்ல. ஒருக்கால் அது குழந்தை உழைப்புக்கு ஊக்கமளிக்கவும் இருக்குமோ?)

இந்த அரசாங்கத்தின் 2006-ம் ஆண்டு வாக்குறுதியான வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் பற்றிய புதிய கணக்கெடுப்பு,   11-வது அய்ந்தாண்டுத் திட்டகாலத் துவக்கத்துக்கு முன்னால் முடிக்கப்பட வேண்டிய இது, முடிக்கப்படாது போனால் இந்த உச்ச நீதிமன்றம் என்ன செய்யும்? 1991 கணக்கெடுப்பின் அடிப்படையிலான 2000 ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்த அரசு மாநிலங்களுக்கு தானிய ஒதுக்கீடு செய்யுமானால், நீதிமன்றமோ அல்லது மற்றவர்களோ என்ன செய்யலாம்? இன்றைய நிலவரப்படி அல்லாமல், 20 ஆண்டுகள் பழைமையான 7 கோடி பேர்கள் மட்டுமே வ.கோ.கீ/ அந்தியோதயா உணவுத் திட்டம் மூலம் உணவு தானியம் பெறும்படியான கணக்கீடு இது.

இந்தத் தடுமாற்றங்களை எல்லாம் உச்ச நீதிமன்றம் சமாளிக்க முயலும் வேளையில், தங்களது கொள்கைகளை நாம் மறுபரிசீலனை செய்யலாம் என்பதே எனது தாழ்வான விண்ணப்பம். தங்களது உணவு மற்றும் வேளாண் அமைச்சருக்கு, அவர் யார், எங்கு இருக்கிறார் என்பது பற்றி உங்களுக்கு நினைவு இருக்குமானால், எனது இந்தக் கடிதத்தின் நகலை அனுப்பி வைப்பீர்களாயின் அதற்காகவும் உங்களுக்குப் பெரிதும் நன்றிக்கடன் பட்டவனாய் இருப்பேன்.

உங்கள் நேர்மையுள்ள,
பி. சாய்நாத்.

______________________________________________

பி.சாய்நாத், நன்றி – தி ஹிந்து, 14.090.2010
தமிழாக்கம் – அனாமதேயன்
______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!

மன் மோகன் சிங்அணு விபத்துக் கடப்பாடு மசோதாவை, பா.ஜ.க.-வின் ஆதரவோடு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றியிருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு.  அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கையெழுத்தாகி, ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் ஒப்புதலைச் சதித்தனமான முறையில் பெற்றுவிட்ட அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தின் (123 ஒப்பந்தம்) இளைய பங்காளிதான் இந்த அணு விபத்துக் கடப்பாடு சட்டம்.

இச்சட்டத்தை நிறைவேற்றினால்தான், அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அணு உலைகளை இந்தியா இறக்குமதி செய்ய முடியும்.  ஏனென்றால், அமெரிக்காவோடு கூட்டுச் சேர்ந்து நிறுவப்படும் அணு மின் நிலையங்களில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அவ்விபத்திற்கு அணு உலைகளை/தொழில்நுட்பத்தை விற்ற அமெரிக்க நிறுவனங்கள் மீது நட்ட ஈடு கேட்டோ, கிரிமினல் குற்றம் சுமத்தியோ வழக்குத் தொடரக் கூடாது; அந்த அணு உலைகளை இயக்கும் நிறுவனங்கள்தான் விபத்திற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அமெரிக்கா விதிக்கும் நிபந்தனை.  இச்சட்டம் இப்படிபட்ட பாதுகாப்பை அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, அணு உலை இயந்திர பாகங்களை இந்தியாவிற்கு விற்க முன்வரும் பிற நாடுகளின் நிறுவனங்களுக்கும், உள்நாட்டு நிறுவனங்களுக்கும் அளிக்கிறது.

மன்மோகன் சிங் இச்சட்டத்தை நிறைவேற்றிய கையோடு, “அமெரிக்காவின் நலன்களுக்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்படவில்லை” எனச் சத்தியம் செய்யாத குறையாக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.   ஆனால், இப்படிபட்ட சட்டம் எதுவுமில்லாமல் ரசிய உதவியோடு கூடங்குளத்தில் நிறுவப்பட்டு வரும் அணு உலைகள், மன்மோகன் சிங்கின் புளுகுணித்தனத்தையும், இச்சட்டம் அமெரிக்காவின் நிர்பந்தத்தால்தான் கொண்டு வரப்படுகிறது என்பதையும் ஒருசேர நிரூபிக்கின்றன.  இது மட்டுமல்ல, அமெரிக்க முதலாளிகளின் விருப்பத்தை நிறைவேற்ற காங்கிரசு அரசு அடுத்தடுத்து மேற்கொண்ட தகிடுதத்தங்கள் திருவாளர் மன்மோகன்சிங் கோட்டு சூட்டுப் போட்டு திரியும் ஒரு நாலாந்தர கிரிமினல் போர்ஜரி பேர்வழி என்பதை நிரூபித்துள்ளன.

அணு விபத்துக் கடப்பாடு மசோதா நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.  பா.ஜ.க. உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இம்மசோதாவை எதிர்த்ததால், அம்மசோதா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

‘‘அணு உலையை விற்ற நிறுவனம் அல்லது அதன் ஊழியர்களின் திட்டமிட்ட கவனக்குறைவின் காரணமாக விபத்து நடந்திருந்தால், அணு உலையை இயக்கும் நிறுவனம் உலையை விற்ற நிறுவனத்திடமிருந்து நட்ட ஈடு கோரலாம்” என்ற விதி (17ஆ) அம்மசோதாவில் சேர்க்கப்பட்டிருந்ததால், அமெரிக்காவும் இம்மசோதாவை எதிர்த்தது.  இந்த விதியை நிரூபித்து நட்ட ஈடு பெறுவது கடினம் என்ற போதிலும் அமெரிக்கா இந்த விதி சேர்க்கப்பட்டதை விரும்பவில்லை.

அமெரிக்கா முகஞ்சுளிப்பதை மன்மோகன் சிங்கால் பொறுத்துக் கொள்ள முடியுமா? அதனால் இந்த விதியை நீக்கக் கோரும் அறிக்கையொன்றைத் தயாரித்து, அதனை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைத்தார்.  உறுப்பினர்கள் இந்த நீக்கத்தை எதிர்த்தது ஒருபுறமிருக்க, மன்மோகன் சிங்கின் அமெரிக்க அடிவருடித்தனமும் அம்பலப்பட்டுப் போனதால், அவரது அரசு, “இது எங்களின் ஆலோசனைதான்” என்று கூறி இந்நீக்கத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

இம்மசோதா மீது நாடாளுமன்ற நிலைக்குழுவில் நடந்த விவாதத்தின் அடிப்படையில் அணு உலை மற்றும் இயந்திர பாகங்களை விற்கும் நிறுவனங்களிடமிருந்து நட்ட ஈடு பெறுவதற்கான விதி 17(ஆ)-வில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன.  இதன்படி, தொழில்நுட்ப ரீதியாகக் குறைபாடுடைய சாதனங்களை, பழுதான சாதனங்களை விற்றதால் விபத்து நேர்ந்ததாக நிரூபிக்கப்பட்டாலும், அணு உலையை இயக்கும் நிறுவனம் இயந்திரங்களை விற்ற நிறுவனங்களிடமிருந்து நட்ட ஈட்டுத் தொகையைப் பெற முடியும் என்பது உள்ளட்ட 18 திருத்தங்களை முன்வைத்தது, நாடாளுமன்ற நிலைக்குழு.  போலி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் தவிர, பா.ஜ.க. உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இந்தத் திருத்தங்களோடு, மசோதாவைச் சட்டமாக்க ஒப்புக் கொண்டனர்.

இப்படி நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலைப் பெற்று விட்டு, அவ்வாறு ஒப்புதல் பெறப்பட்ட ஆவணத்தில் அந்தக் குழுவின் உறுப்பினர்களுக்கே தெரியாமல், ஒரு போர்ஜரி வேலை செய்தார் மன்மோகன் சிங். அம்மசோதாவில் தனித்தனியாக இருந்த 17(அ) என்ற விதிக்கும், 17(ஆ) என்ற விதிக்கும் இடையில் “மற்றும்” (and) என்ற விகுதியைச் சேர்த்து இரண்டையும் இணைத்தார்.  இதன் மூலம், அணு உலை இயந்திர பாகங்களை விற்கும் நிறுவனங்களிடம், அணு உலையை இயக்கும் நிறுவனம் 17(ஆ) பிரிவில் காணப்படும் அம்சங்கள் குறித்துத் தனியாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தால் மட்டுமே, நட்ட ஈடு பெற முடியும் என்ற நிபந்தனை நைச்சியமாக உருவாக்கப்பட்டது.  நாடாளுமன்ற நிலைக்குழு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் “மற்றும்” (and) என்ற வார்த்தை மட்டும் அச்சிடப்பட்ட தாளை யாருக்கும் தெரியாமல் செருகியதன் மூலம் இந்த ஃபோர்ஜரி வேலையை நடத்தி முடித்தது, மன்மோகன் சிங் கும்பல்.

இந்த விசயத்தை இந்து நாளிதழ் அம்பலப்படுத்தியதன் விளைவாக மன்மோகன் சிங் அரசின் போர்ஜரி வேலை சந்தி சிரித்தது. இதனையடுத்து மசோதாவிற்கு ஆதரவளிக்கச் சம்மதித்திருந்த பா.ஜ.க. அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என அறிவித்தது.  ஃபோர்ஜரி அம்பலமாகி மாட்டிக் கொண்ட மன்மோகன் சிங் கும்பலோ, அதற்காக வெட்கப்படாமல், ஏதோ நாணயஸ்தர்கள் போல,”உறுப்பினர்களுக்கு விருப்பமில்லையென்றால், அந்த வார்த்தையை விலக்கிக் கொள்கிறோம்” எனக் கூறி அந்த வார்த்தையை நீக்கியது.

ஆனாலும் அக்கும்பல் அசராமல் அடுத்த சதியில் இறங்கியது.  நாடாளுமன்ற நிலைக்குழு முன்மொழிந்த திருத்தங்களைப் பரிசீலனை செய்வது என்ற பெயரில், “அணு விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அணு உலை உபகரணங்கள் வழங்கும் நிறுவனங்கள் அல்லது அதன் ஊழியர்கள் செயல்பட்டுள்ளனர் என அணு உலையை இயக்கும் நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும்” என்ற விதியை 17(ஆ) பிரிவில் சேர்த்தது மைய அமைச்சரவை.  மன்மோகன் சிங் கும்பலால் முன்னர் புகுத்தப்பட்ட இடைச்செருகல்களைவிட அயோக்கியத்தனமானது இது.  ஏனென்றால், ‘விபத்து’ நேரிடும் எனத் தெரிந்திருந்தும், தனது இலாபத்திற்காக பாதுகாப்பு விதிகள் அனைத்தையும் யூனியன் கார்பைடு நிறுவனம் திட்டமிட்டே புறக்கணித்தது என்பதை நிரூபிக்க ஏராளமான சாட்சியங்கள் இருந்தபோதும், அதனை வாரன் ஆண்டர்சன் மட்டுமல்ல, இந்திய உச்சநீதி மன்றம்கூட ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டது என்பதுதானே துரோக வரலாறு.

மன்மோகன் சிங் கும்பல் புகுத்திய இந்தப் புதிய விதியையும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்ததால், அந்த விதியையும் கைவிட்டு, பின் பா.ஜ.க.-வின் ஆதரவோடு இச்சட்டத்தை நிறைவேற்றிவிட்டது, காங்கிரசு.  இந்தச் சட்டத்தை நிறைவேற்ற அடுத்தடுத்துப் பல மோசடிகளையும், சதிகளையும், பொகளையும் அவிழ்த்துவிட்டு அம்பலமாகி நிற்கும் மன்மோகன் சிங், அதற்காக யாரிடமும் மன்னிப்புக் கோரவில்லை.  எதிர்க்கட்சிகளும் அவருடைய நாணயத்தைக் கேள்விக்குள்ளாக்கவில்லை.  ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நிலவி வரும் இந்த ஒற்றுமைதான், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கி அமெரிக்காவிற்காக மாமா வேலை செய்யலாம் என்ற துணிவையும், திமிரையும் மன்மோகனுக்கு வழங்கயிருக்கிறது.

சி.பி.எம். கோரியதைப் போல் நட்ட ஈட்டு வரம்பை 10,000 கோடி ரூபாய்க்கு உயர்த்தியும் விபத்துக்கான முழு பொறுப்பை அணு உலைகளை விற்கும் நிறுவனங்கள் மீது சுமத்தியும் திருத்தங்கள் செய்யப்பட்டு இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் கூட, இச்சட்டத்தை நாட்டு நலனை விரும்புவோர் ஆதரித்துவிட முடியாது.  ஏனென்றால், அமெரிக்க முதலாளிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவது மட்டுமல்ல இச்சட்டத்தின் நோக்கம்.  இந்திய அணுசக்தித் துறையின் சுயசார்பான வளர்ச்சியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான் அமெரிக்கா மற்றும் மன்மோகன் சிங் கும்பலின் நோக்கம்.

அணுஉலை விபத்துத் தொடர்பாக அமெரிக்கா உருவாக்கியுள்ள சர்வதேச உடன்படிக்கையொன்றில் கையெத்துப் போட சம்மதம் தெரிவித்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு.  இந்த உடன்படிக்கை அணு விபத்திற்கு அணு உலை உபகரணங்களை விற்கும் நிறுவனங்களைப் பொறுப்பாக்குவதைத் தடை செய்கிறது; 2,100 கோடி ரூபாய்க்கு மேல் நட்ட ஈடு கோருவதைத் தடை செய்கிறது.  அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டால்,  இந்தியச் சட்டம் வழங்கியிருக்கும் அற்ப பாதுகாப்புகளும் கொல்லைப்புற வழியில் ஒழித்துக்கட்டப்படும்.  அமெரிக்கக் கைக்கூலி மன்மோகன் சிங் ஆசையும் பிசகில்லாமல் நிறைவேறிவிடும்.

______________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!

காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!

‘‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர்.  பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.

காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்துவரும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக இந்திய அரசு பழிபோட்டு வருகிறது.  இந்தப் போராட்டத்தை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பதை அலசி ஆராயும் முன், காஷ்மீர் மாநிலம் கடந்த இருபது ஆண்டுகளில் எப்படி ஒரு திறந்தவெளி இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, காஷ்மீரில் 3,00,000 இந்திய இராணுவச் சிப்பாய்களும், தேசியத் துப்பாக்கி படைப் பிரிவைச் சேர்ந்த 70,000 சிப்பாய்களும், மத்திய போலீசு படையைச் சேர்ந்த 1,30,000 சிப்பாய்களும் – ஆக மொத்தம் 5,00,000 சிப்பாய்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.  அம்மாநிலப் போலீசுப் படை இந்த எண்ணிக்கையில் சேராது.

காஷ்மீரில் ‘அமைதி’யை ஏற்படுத்த இத்தனை இலட்சம் துருப்புகள் தேவை என்றால், எத்தனை ஆயிரம் தீவிரவாதிகள் அம்மாநிலத்தில் இருக்கக்கூடும் என உங்கள் மனம் கணக்குப் போடலாம்.  அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள், அங்கே வெறும் 660 தீவிரவாதிகள்தான் இருப்பதாக சமீபத்தில் இந்திய இராணுவம் அறிக்கை அளித்துள்ளது.

‘‘தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்தை முசுலீம் தீவிரவாத அமைப்புகள் எதுவும் தலைமை தாங்கி நடத்துவதாகத் தெரியவில்லை; இளைஞர்களும் தாய்மார்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடுகிறார்கள்; போராடுபவர்கள் கைகளில் துப்பாக்கிகள் கிடையாது; மாறாக, தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்; இப்போராட்டத்தை போலீசைக் கொண்டே கட்டுப்படுத்திவிட முடியும்; இராணுவம் தேவையில்லை” எனச் சில நடுநிலையான பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  உண்மை இப்படியிருக்க, அம்மாநிலத் தலைநகர் சீறிநகரை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமென்ன?

ஈராக்கில் 166 பேருக்கு ஒரு சிப்பாய் என்ற எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவம் இறக்கிவிடப்பட்டிருக்கும்பொழுது, காஷ்மீரிலோ 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இந்திய இராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது.  அதனை அமெரிக்க ஆக்கிரமிப்பு எனும்பொழுது, காஷ்மீர் நிலையை இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிடாமல் வேறெப்படிக் கூற முடியும்?

****

தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரிலும், பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரிலும் திணிக்கப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பு, எப்படிபட்ட அநீதியை காஷ்மீர் மக்களுக்கு இழைத்து வருகிறது தெரியுமா?
1990-ஆம் ஆண்டு தொடங்கி 2007-ஆம் ஆண்டு முடியவுள்ள 17 ஆண்டுகளில் இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் அம்மாநில போலீசும் நடத்திய துப்பாக்கி சூடுகள், போலி மோதல்கள், இரகசியக் கொலைகள், கொட்டடிச் சித்திரவதைகளில் ஏறத்தாழ 70,000-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.  அரசுப் படைகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8,000 காஷ்மீரிகள் சுவடே தெரியாமல் ‘காணாமல்’ போய்விட்டனர்.  அப்படைகள் நடத்தியிருக்கும் பாலியல் வல்லுறவுகள் இந்தக் கணக்கில் அடங்காது.

அம்மாநிலத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக அமலில் இருந்துவரும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவச் சிப்பாய்கள் மீது, இந்திய அரசின் அனுமதியின்றி அம்மாநில அரசு புகார்கூடச் செய்ய முடியாது என்ற பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. தேசிய நலன் என்ற பெயரில் இராணுவச் சிப்பாய்கள் நடத்தும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு பற்றி காஷ்மீரத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் புகார் கொடுக்க வேண்டும் என்றால், அவர் முதலில் “தான் இந்திய தேசிய நலனுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை” என்று நிரூபித்தாக வேண்டும்.

காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைச் சந்தித்து வரும்பொழுது, மைய அரசோ கடந்த பதினேழு ஆண்டுகளில் இராணுவச் சிப்பாய்களுக்கு எதிரான வெறும் 458 வழக்குகளைத்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.  இதே காலத்தில் இந்திய இராணுவத்தின் மனித உரிமைப் பிரிவு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 1,321 வழக்குகளில் 54 வழக்குகளைத் தவிர பிற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

காஷ்மீர் மக்கள் பல போராட்டங்களை நடத்திய பிறகுதான்,  இவ்வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதையும், இப்போராட்டங்களின்பொழுது நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.  இப்படி காஷ்மீர் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் இந்திய அரசையும் அதனின் இராணுவத்தையும் வெளியேறக் கோரி அம்மக்கள் போராடுவது தேச விரோதச் செயல் என்றால், கொலையும், கொள்ளையும், பாலியல் வன்புணர்ச்சியும்தான் தேச நலனின் பொருளாகிவிடுகிறது.

காஷ்மீர்
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ‘காணாமல் போனவர்களின்’ புகைப்படங்களைப் பார்ர்த்து விம்மியழும் காஷ்மீரத்துத் தாய்

இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் கடந்த இருபது ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டத்தில் பாகிஸ்தானின்  ஆதரவு பெற்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகளின் பங்கு இருப்பதை மறுக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இந்திய அரசின் இந்து தேசிய வெறிதான் இப்பிரச்சினையின் மூல காரணமாக இருக்கிறது என்பதும்.

இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் ஒப்புக்கொண்டபடி ஜம்மு-காஷ்மீரில் பொதுஜன வாக்கெடுப்பை நடத்தாமல் மறுத்தது; இந்திய அரசியல் சாசனத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சில தனியுரிமைகளை நீர்த்துப் போகச் செய்தது; காங்கிரசு கும்பல் தனது சுயநலனுக்காக அம்மாநிலத்தில் நடத்திய ஆட்சி கவிழ்ப்புகள், தேர்தல் மோசடிகள் – இவைதான் 1980-களின் இறுதியில் காஷ்மீரில் ஆயுதந்தாங்கிய போராட்டம் வெடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தன.

வரலாற்றை அவ்வளவு பின்னோக்கிப் பார்க்கத் தேவையில்லை.  இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துபோய்விட்டதாகச் சொல்லப்பட்ட பின்னும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காஷ்மீரில் அடுத்தடுத்து இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் நடந்து வருகின்றன.  அதற்குக் காரணம் பாகிஸ்தானா, இல்லை இந்திய தேசியவாதிகளா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசு-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அம்மாநிலத்தை ஆண்டு வந்தபொழுது, அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கிப் போவதற்காக 39.88 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கப் போவதாக அக்கூட்டணி ஆட்சி அறிவித்தது.  அமர்நாத் யாத்திரை முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வருடாந்திர நிகழ்ச்சி நிரலாக மாறிப் போனதால், காஷ்மீர் மக்கள் பக்தியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த நில ஒதுக்கீடு நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர்.  உடனே, ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெளிமாநிலங்களில் இருந்து ஜம்முவிற்கு ஆட்களைத் திரட்டிவந்து எதிர் போரட்டத்தை நடத்தியதோடு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மீது ஒரு சட்டவிரோத பொருளாதார முற்றுகையைத் திணித்தது.  காஷ்மீர் மக்கள் இம்முற்றுகையை முறியடிக்கும் வண்ணம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடப்பது என்ற போராட்டத்தைத் தொடங்கினர்.  இப்போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியான பின்னர், நில ஒதுக்கீடு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

இப்போராட்டத்திற்குப் பின் நடந்த தேர்தலில் எதிரெதிராகப் போட்டியிட்ட காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் தேர்தலுக்குப் பின் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின.  இந்தச் சந்தர்ப்பவாத ஆட்சிக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்ளும் முகமாக, “காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படும்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்; அத்துமீறல்கள் குறித்த உண்மை கண்டறியும் குழு நிறுவப்படும்” என்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினார், முதல்வர் ஒமர் அப்துல்லா.  கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறவில்லை என்பது ஒருபுறமிருக்க, காஷ்மீர் மக்களின் மீதான இராணுவத்தின் பிடியும், அடக்குமுறையும் கொஞ்சம்கூடக் குறையவில்லை என்பதையும் மக்கள் கண்டனர்.

ஷோபியான் என்ற சிறுநகரைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது; கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஜஹித் ஃபாரூக் என்ற 16 வயது சிறுவன் நடுத்தெருவில் நாயைச் சுடுவது போல எல்லைப் பாதுகாப்புப் படையினரால்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; கடந்த ஏப்ரல் மாதம் தேசியத் துப்பாக்கிப் படைப் பிரிவினர், மூன்று தொழிலாளர்களை எல்லைப் பகுதிக்குக் கடத்திக்கொண்டு போய்ச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை எல்லை தாண்டி வரமுயன்ற தீவிரவாதிகளாக ஜோடனை செய்த சம்பவம் – இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரும், துணை இராணுவப் படைகளும், காஷ்மீர் போலீசாரும் நடத்திய பல பச்சைப் படுகொலைகள்தான் இப்போராட்டத்தின் தூண்டுகோலாக அமைந்தன.

‘‘துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்ட பிறகு, மக்களின் விடுதலை உணர்வும் செத்துவிடும்; அடுத்த தலைமுறை இளைஞர்கள் பாலிவுட் திரைப்படங்களிலும், பப் கலாச்சாரத்திலும் மூழ்கிப்போய் விடுவார்கள் என அவர்கள் நினைத்தார்கள்.  ஆனால், எங்களின் விடுதலை வேட்கை கொஞ்சம்கூடக் குறையாமல் இருப்பதைத்தான் இப்போராட்டம் காட்டுகிறது” என காஷ்மீர் மக்களின் மனோநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார், பள்ளத்தாக்கைச் சேர்ந்த புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் ஷாத் சலீம்.
காஷ்மீர் மக்களின் தேசிய இன விடுதலை உணர்வுதான் இப்போராட்டத்தின் அடிப்படையாக உள்ளது என்ற உண்மையை மூடிமறைக்க, இப்போராட்டம் பற்றிப் பலவித கட்டுக்கதைகளையும் அவதூறுகளையும் மைய அரசும் அதனை நத்திப் பிழைக்கும் தேசியப் பத்திரிகைகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு பரப்பி வருகின்றன. “விரக்தியடைந்த இளைஞர்களின் போராட்டம்” என ஒருபுறம் நையாண்டி செய்துவரும் அக்கும்பல், இன்னொருபுறமோ, “லஷ்கர்-இ-தொய்பாவிடம் 200 ரூபாய்யை வாங்கிக்கொண்டு நடத்தப்படும் கூலிப் போராட்டம்” என அவதூறு செய்து வருகிறது.

சோபுர் நகரில் கடந்த ஜுன் 29 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது மத்திய ரிசர்வ் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டான். “அவன் அப்பாவி கிடையாது; கூலிக்காக வேலை செய்யும் போக்கிரி” என அச்சிறுவனைப் பற்றிக் கூறியிருக்கிறார், உள்துறை அமைச்சகச் செயலர்.  இப்படி வக்கிரமும், காலனியாதிக்க ஆணவமும் நிறைந்த இந்திய அரசை வெளியேறக் கோருவது எந்த விதத்தில் தவறாகிவிடும்?

பதாமாலூ என்ற ஊரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது வீட்டை விட்டு வெளியே வருவதைப் பார்த்த இராணுவச் சிப்பாய்கள், துப்பாக்கியை நீட்டியபடியே அவனை நோக்கிப் பாய்ந்து வந்து, “உன்னைக் கொன்று விடுவோம்” என மிரட்டியுள்ளனர்.  அரண்டு போய் வீட்டுக்குள் ஓடிப்போன அந்தச் சிறுவன் பயத்தில் அடுத்த பத்து நிமிடங்களுக்கு ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத ஊமையாகிப் போனான்.  ஐந்து வயதுச் சிறுவனைக் கொன்றுவிடுவோம் என மிரட்டும் இந்திய இராணுவம் காஷ்மீரில் யாரைக் காப்பாற்ற நிற்கிறது?

இந்தக் கேள்வியை காஷ்மீருக்கு வெளியேயுள்ள பெரும்பாலான “இந்தியர்கள்” எழுப்ப மறுக்கிறார்கள். “அவர்கள் காஷ்மீர் பற்றி பொய் சொல்கிறார்கள்; தங்களின் சொந்தப் பொய்யைத்தான் அவர்கள் நம்புகிறார்கள்” என இத்தகைய இந்தியர்களைப் பற்றிக் கூறுகிறார், டெல்லியில் வாழும் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்.

காஷ்மீர்
காஷ்மீர் பற்றிய உண்மை நிலவரம் வெளியே தெரியக்கூடாது என்ற நோக்கில், இந்திய இராணுவம் உள்ளூர் செய்தி ஊடகங்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாட்டுகளைக் கண்டித்து பத்திரிக்கையாளகர் நடத்தும் ஆர்பாட்டம்

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் 800-க்கும் மேற்பட்ட அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீன மக்கள் இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தி வரும் இண்டிஃபதா போராட்டத்தைத்தான் இது நமக்கு நினைவூட்டுகிறது. சமூகம் தழுவிய ஆதரவோடு நடைபெற்று வரும் இப்போராட்டங்களை, இராணுவ அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலம் ஒடுக்கிவிட முடியும் என ஆளுங்கட்சி காங்கிரசும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.-வும் ஒரேவிதமாக எண்ணுகின்றன.

ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டில், இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.  தங்களைத் தற்காத்துக் கொள்ள இராணுவம்-துணை இராணுவப் படைகள் மீது கற்களை வீசியெறியும் இளைஞர்கள், மரண தண்டனைகூட விதிக்கப்படும் சாத்தியமுள்ள, “அரசின் மீது போர் தொடுத்த” குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள்.  இந்த அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் நெஞ்சுரத்தையும் தியாக உணர்வையும் 200 ரூபாய் கூலிப் பணத்தால் ஊட்டிவிட முடியுமா?  விடுதலை உணர்வால் உந்தித் தள்ளப்படும் அந்த இளைஞர்கள் தமது மனங்களிலிருந்து பயம் என்பதையே அகற்றி விட்டார்கள் என்கிறார், ஹுரியத் மாநாட்டு கூட்டணியைச் சேர்ந்த தலைவரான சையத் ஷா கீலானி.

காஷ்மீரில் ஒரு தற்காலிக அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றால்கூட, “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது; இராணுவத்தையும், துணை இராணுவப் படைகளையும் திரும்ப அழைத்துக் கொள்வதோடு, காஷ்மீர் போலீசு துறையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை குழுவைக் கலைப்பது; மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பது” ஆகிய குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்ற மைய அரசு முன்வர வேண்டும்.

ஆனால், மைய அரசோ, இந்த குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற மறுக்கிறது.  இதற்குப் பதிலாக, பொருளாதார சலுகை என்ற பெயரில் அஞ்சையும் பத்தையும் தூக்கியெறிந்து, இப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என இந்திய ஆட்சியாளர்கள் மனப்பால் குடிக்கின்றனர்.  விடுதலை உணர்வை பணத்தால் விலை பேசும் இந்திய அரசின் முட்டாள்தனமான ஆணவம் காஷ்மீரில் பலமுறை தோல்வி கண்டிருக்கிறது.

‘‘காஷ்மீரில் ஒரு அடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனத் தேசிய வெறியூட்டும் ஓட்டுக்கட்சிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்திய மண்ணைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கத் தயங்குவதில்லை.  இதனை ஒப்பிட்டுப் பார்த்தாலே ஆளும் கும்பலின் தேசியம் என்பது மாபெரும் மோசடி என்பதைப் புரிந்து கொண்டுவிட முடியும்.

இந்து தேசியவெறி கொண்ட ஓட்டுக்கட்சிகள், அவர்களை நத்திப் பிழைக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற துரோகிகள், போலி மோதல் கொலைகள் மூலம் பணத்தையும் பதவியையும் அள்ளிக் கொள்ளத் துடிக்கும் காக்கிச் சட்டை கிரிமினல்கள் – ஆகியோர்தான் காஷ்மீர் இந்திய அரசின் காலனியாக நீடிப்பதால் இலாபமடையப்போகும் பிரிவினர். போலி தேசியப் பெருமையில் மூழ்கிப் போயுள்ள பிற இந்தியர்களுக்கு ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை எந்தப் பலனையும் அளிக்காது. மாறாக, முசுலீம் தீவிரவாதம் வளர்வதற்கும், பாகிஸ்தான் அதனைத் தூண்டிவிடுவதற்கும், இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து முறுகல் நிலை நீடிப்பதற்கும் ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.

____________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010

____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!

சோராபுதின் போலி மோதல் கொலை: முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!

சோராபுதின் ஷேக்

ஐந்தாண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் புறநகர்ப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சோராபுதின் ஷேக் என்ற முசுலீம் ‘தீவிரவாதியின் ஆவி’, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை மீண்டும் துரத்தத் தொடங்கியிருக்கிறது. மிரட்டிப் பணம்பறிப்பது, ஆயுதங்களைக் கடத்துவது போன்ற சட்டவிரோதச் செயல்களைச் செய்துவந்து உள்ளூர் தாதாவான சோராபுதின் ஷேக் நவம்பர் 26, 2005 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.  குஜராத் போலீசாரால் சோராபுதினோடு சேர்த்துக் கடத்தப்பட்ட அவரது மனைவி கவுசர் பீ ‘காணாமல்’ போனார்.

சோராபுதினின் சகோதரர் ருபாபுதின் இம்மோதல் கொலை பற்றி  உச்ச நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதியதையடுத்து, அக்கடிதத்தையே மனுவாக ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இது பற்றி விசாரிக்குமாறு குஜராத் அரசுக்கு ஜனவரி 21, 2007 அன்று உத்தரவிட்டது. மோடி அரசு ஒரு கேடி அரசு எனத் தெரிந்திருந்த நிலையிலும், விசாரணை பொறுப்பை குஜராத் அரசிடமே உச்ச நீதிமன்றம் ஒப்படைத்த பெருந்தன்மை நம்மை வியக்கத்தான் வைக்கிறது.

மோடி அரசு தனக்கு அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பை மிக நன்றாகவே பயன்படுத்திக் கொண்டது.  ஒருபுறம் தனது சி.ஐ.டி. பிரிவு போலீசாரைக் கொண்டு விசாரணை என்ற நாடகத்தை நடத்திக்கொண்டே, மறுபுறம் சாட்சியங்களைக் குழிதோண்டிப் புதைக்கும் வேலையையும் திறம்படச்    செய்தது.

உதாரணத்திற்குச் சொன்னால், இப்போலி மோதல் கொலையின் முக்கிய சாட்சியான சோராபுதினின் கூட்டாளி பிரஜாபதி கொல்லப்பட்டதைக் கூறலாம்.  தனது மனைவியோடு ஆந்திராவில் இருந்து மகாராஷ்டிராவிற்குச் சென்று கொண்டிருந்த சோராபுதினை குஜராத், இராசஸ்தான், ஆந்திர மாநிலப் போலீசார் கூட்டணி அமைத்துக் கொண்டு கடத்தியபொழுது, பிரஜாபதியும் அவர்களோடு பயணம் செய்து வந்தான். சோராபுதினையும் அவரது மனைவி கவுசர்பீயையும் குஜராத்திற்குக் கடத்திய குஜராத் போலீசார், பிரஜாபதியை இராசஸ்தான் போலீசாரிடம் ஒப்படைத்துச் சிறையில் அடைத்தனர்.

இப்போலி மோதல் கொலை விசாரணையைத் தலைமையேற்று நடத்திவந்த கீதா ஜோரி என்ற போலீசு அதிகாரி பிரஜாபதியை விசாரிப்பதற்கு அனுமதி கோரியவுடன், தீவிரவாதத் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்த டி.ஜி. வன்சாரா – சோராபுதினைச் சுட்டுக் கொன்ற போலீசு கும்பலின் மூளையாகச் செயல்பட்டவர் – குஜராத் மாநில எல்லைப் பிரிவுக்குத் திடீரென மாற்றப்பட்டார்.  வன்சாரா இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டாவது வாரத்திலேயே பிரஜாபதி, டிசம்பர் 28, 2006 அன்று குஜராத் – இராசஸ்தான் எல்லையையொட்டிய நகர் ஒன்றில் நடந்த போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுவொருபுறமிருக்க, “விசாரணையை முடக்கும் நோக்கத்தோடு தனக்கு குஜராத் அரசு நெருக்கடி தருவதாக” விசாரணை அதிகாரி கீதா ஜோரி உச்ச நீதிமன்றத்திடம் புகார் செய்தார்.  மோடி அரசோ இப்புகார் பற்றி அலட்டிக் கொள்ளாததோடு, தன் மீது புகார் கொடுத்த கீதா ஜோஹ்ரியை சி.ஐ.டி. பிரிவில் இருந்து தூக்கியடித்தது.

இதன்பின், தங்களுக்குத் தலையாட்டுவார் என்ற எண்ணத்தில் ரஜ்னீஷ் ராய் என்ற அதிகாரியை சி.ஐ.டி. பிரிவின் துணைத் தலைவராக நியமித்தது, மோடி அரசு.  ஆனால் ரஜ்னீஷ் ராய், கீதா ஜோரி ஏற்கெனவே தயாரித்து அளித்திருந்த அறிக்கையின் அடிப்படையில் குஜராத்தைச் சேர்ந்த டி.ஜி. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் மற்றும் இராசஸ்தானைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகிய மூன்று போலீசு அதிகாரிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.  இதனையடுத்து ரஜ்னீஷ் ராயும் சி.ஐ.டி. பிரிவில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார்.  இப்படி பிரஜாபதி என்ற சாட்சி கொல்லப்பட்டதையும், விசாரணை அதிகாரிகள் பந்தாடப்பட்டதையும் உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்த்ததேயொழிய, இப்போலி மோதல் கொலை பற்றிய விசாரணையை உடனடியாக குஜராத் அரசிடமிருந்து பறிக்கும் எந்த நடவடிக்கையினையும் அப்பொழுதே எடுக்கவில்லை.

இதனிடையே கீதா ஜோஹ்ரிக்கும் குஜராத் அரசிற்கும் இடையே ஒரு சமரசம் ஏற்பட்டு, அவர் மீண்டும் சி.ஐ.டி. பிரிவிற்கு மாற்றப்பட்டு, சோராபுதின் வழக்கின் விசாரணை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.  குஜராத் அரசின் வனத் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவரது கணவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கிடப்பில் போடுவது என்ற உடன்பாட்டின் அடிப்படையில்  கீதா ஜோஹ்ரி, “சோராபுதின் கொலையில் அரசியல் தலைவர்களுக்குத் தொடர்பில்லை; போலீசார் பதவி உயர்வு மற்றும் பண வெகுமதிக்கு ஆசைப்பட்டு இக்கொலையைச் செய்ததாக” அறிக்கை தயாரித்து உச்ச நீதிமன்றத்திடம் அளித்தார்.

அப்பொழுதே, சோராபுதினின் சகோதரர் ருபாபுதின் விசாரணை என்ற பெயரில் நடந்திருக்கும் இந்த மோசடிகளைக் குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவிலேயே சோராபுதின் மற்றும் கவுசர் பீ கொலைகளுக்கும், குஜராத் அரசின் துணை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் இருக்கும் தொடர்புகளையும் குறிப்பிட்டிருந்தார்.  குஜராத் அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஓட்டைகள் இருப்பதை ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றம், விசாரணையைத் தொடராமல் நிறுத்தி வைக்குமாறு அக்.1, 2008-இல் உத்தரவிட்டது.  அதன் பின் 15 மாதங்கள் கழித்து, ஜனவரி 2010-இல்தான்  இவ்வழக்கு விசாரணையை மையப் புலனாய்வுத் துறையிடம் மாற்றும் உத்தரவை அளித்தது.

இப்போலி மோதல் கொலை தொடர்பாக மையப் புலனாய்வுத் துறை நடத்தி வரும் மறுவிசாரணையில் மேலும் பல உண்மைகள் அம்பலமாகி வருகின்றன.  குறிப்பாக, ராஜஸ்தானைச் சேர்ந்த மார்பிள் கல்லை வெட்டியெடுக்கும் சுரங்க அதிபர்களின் தூண்டுதலினாலேயே, குஜராத் மற்றும் இராசஸ்தானைச் சேர்ந்த போலீசு அதிகாரிகளும் பா.ஜ.க. அமைச்சர்களான அமித்ஷா (குஜராத்) மற்றும் குலாப் சாந்த் கடாரியா (ராஜஸ்தான்) ஆகியோரும் கூட்டணி அமைத்துக்கொண்டு, மார்பிள் கல் முதலாளிகளிடமிருந்து 10 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, சோராபுதினையும் அவரது மனைவி கவுசர் பீயையும் குஜராத்திற்குக் கடத்திவந்து, சோராபுதினைப் போலி மோதல் மூலமும், அவரது மனைவியை விஷ ஊசி போட்டும் தீர்த்துக் கட்டினர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

***

குஜராத் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையிலேயே சோராபுதின் போலி மோதலில் கொல்லப்பட்டார் என்பது அம்பலமான பிறகும், குஜராத் அரசே உச்ச நீதிமன்றத்தில் சோராபுதினின் மனைவி கவுசர் பீ குஜராத் போலீசாரால் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்ட பிறகும் நரேந்திர மோடி, “தனது அரசையும் குஜராத்தியர்களையும் களங்கப்படுத்துவதற்காக காங்கிரசு செய்யும் சதி இது” எனப் பிரச்சாரம் நடத்தி வருகிறார். “போலி மோதல் கொலைகள் நடக்காத மாநிலங்களே இல்லாதபொழுது, குஜராத் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறது?” என்ற கேள்வியை எழுப்பித் தனது பிரச்சாரத்தை நியாயப்படுத்தி வருகிறார், மோடி.

மோடியின் இந்த வாதம், அரைகுறையான உண்மைகளைக் கூறித் தங்களை நியாயப்படுத்திக் கொள்ளும் பாசிஸ்டுகளின் உத்தியாகும். முதலாவதாக, மோடியின் குஜராத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் பல மோதல் கொலைகள் நடந்திருந்தாலும், வெறும் இரண்டு வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  இரண்டாவதாக, மற்ற மாநிலங்களில் நடைபெறும் போலி மோதல் கொலைகள் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுவதற்கு மேல், அக்கொலைகளுக்கு அரசியல் நியாயம் கற்பிக்கப்படுவதில்லை.  ஆனால், குஜராத்திலோ ஒவ்வொரு போலி மோதல் கொலையும், நாட்டைப் பாதுகாக்கும் முசுலீம் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையாகச் சித்தரிக்கப்பட்டு, அதன் மூலம் மோடியை நாட்டையே காக்க வந்த இரட்சகனாகக் காட்டும்  இந்து மதவெறிப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.   இந்த உண்மையை மூடிமறைத்துவிட்டு, மற்ற மாநிலங்களில் நடைபெறுவதைப் போலத்தான் குஜராத்திலும் போலி மோதல் கொலைகள் நடத்தப்படுவதாக மோடி கதையளப்பது கடைந்தெடுத்த பித்தலாட்டமாகும்.

மோடியை ஆதரிக்கும் சாக்கில், போலி மோதல் கொலைகள் மூலம்தான் இசுலாமிய பயங்கரவாதிகளையும் கிரிமினல் மாஃபியா கும்பல்களையும் ஒழித்துக்கட்ட முடியும் என்று இந்து மதவெறி பாசிஸ்டுகளில் ஊதுகுழலான துக்ளக் “சோ” வாதிடுகிறார்.  “சோ”வும் அவரை ஆதரிக்கும் கும்பலும் போலி மோதல் கொலைகள் தேசநலன்/பாதுகாப்பிற்காகவே நடத்தப்படுவதாக நியாயப்படுத்த முயன்றாலும்,  அவற்றின் பின்னணியில் வெவ்வேறு காரணங்கள் உள்ளன என்பது ஏற்கெனவே பல வழக்குகளில் அம்பலமாகியிருக்கிறது.

உதாரணத்திற்கு, குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ‘தீவிரவாதி’ சோராபுதின் வழக்கையே எடுத்துக் கொள்வோம். சோராபுதின் மார்பிள் சுரங்க முதலாளிகளின் நலனுக்காகத்தான் சுட்டுக் கொல்லப்பட்டாரேயொழிய, தேச நலனுக்காக அல்ல என்பது இப்பொழுது நிரூபணமாகியிருக்கிறது.  இந்த உண்மையான நோக்கம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, உள்ளூர் தாதாவான சோராபுதினை முசுலீம் தீவிரவாதியாகவும், நரேந்திர மோடியைக் கொல்லும் நோக்கத்தோடு சோராபுதின் குஜராத்திற்குள் நுழைந்ததாகவும் கதை பின்னப்பட்டது.

அது மட்டுமல்ல, ஆயுதக் கடத்தல் பேர்வழி, தாவூத் இப்ராகிமின் கூட்டாளி என்றெல்லாம் இந்து மதவெறிக் கும்பலால் அன்று குற்றம் சுமத்தப்பட்ட சோராபுதினுக்கும் மோடிக்கு நெருக்கமான குஜராத் உள்துறை இணை அமைச்சர் அமித் ஷா மற்றும் போலீசு துணை கமிசனர் அபய் சுடாசாமா ஆகியோருக்கும் இடையே தொழில் உறவு (சுரங்க அதிபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பது) இருந்து வந்திருப்பது இன்று அம்பலமாகியிருக்கிறது. சோராபுதினைப் போலி மோதலில் சுட்டுக் கொன்றதன் மூலம் இக்கும்பல் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களைத் தட்டியிருக்கிறது.  ஒன்று, சுரங்க அதிபர்கள் அள்ளிக் கொடுத்த‘‘சுபாரி” பணம்; மற்றொன்று, தங்களது இரகசியத்தைத் தெரிந்த கூட்டாளி ஒழிந்தான் என்ற நிம்மதி.

அமித் ஷா கும்பலின் நிம்மதியை சோராபுதினின் தம்பி ருபாபுதின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கெடுத்துவிட்டது.  அது மட்டுமல்ல, இக்கும்பலின் இரகசியங்களையெல்லாம் அறிந்த என். கே. அமின் என்ற போலீசு அதிகாரி “அப்ரூவர்” ஆக மாற சி.பி.ஐ.-யிடம் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.  இதனால், மோடி கும்பல் இந்த அதிகாரி நடத்திய பழைய போலி மோதல் கொலை வழக்கை விசாரணைக்காகத் தூசு தட்டி எடுத்திருக்கிறது. போலீசு அதிகாரிகளின் பதவி உயர்வுக்குப் பயன்படும் போலி மோதல் கொலைகள், அவர்களைப் பழி வாங்கவும் பயன்படுத்தப்படும் எனக் காட்டியிருக்கிறார், மோடி.

குஜராத்தில் நடந்த மற்றொரு போலி மோதலில் கொல்லப்பட்ட மகாராஷ்டிராவைச் சேர்ந்த  இர்ஷத் ஜஹன், லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த தீவிரவாதியா, இல்லை அப்பாவி கல்லூரி மாணவியா என்பது குறித்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை.  எனினும், இந்து மதவெறிக் கும்பல், “அவர் முசுலீம் தீவிரவாதிதான், அவர் சுட்டுக் கொல்லப்பட்டது நியாயம்தான்’’ என்று மூர்க்கமாகப் பிரச்சாரம் நடத்தி வருகிறது.  இது மட்டுமின்றி, சோராபுதின், இர்ஷத் ஜஹன் கொலைகளைக் காட்டி, பாகிஸ்தானில் இருந்து ஏவிவிடப்படும் இசுலாமிய பயங்கரவாதத்தால் மோடியின் உயிருக்கு எப்போதுமே ஆபத்து இருப்பதாகவும் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

மோடியும், பா.ஜ.க.வும் சோராபுதின் மற்றும் இர்ஷத் ஜஹன் போலி மோதல் கொலை வழக்குகளை மத்தியப் புலனாய்வுத் துறையும், உச்ச நீதிமன்றமும் விசாரித்து வருவதைக் காட்டி, “முசுலீம் தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடி வரும் மோடியைக் கொலைகாரனாகக் காட்டும் நோக்கத்தோடு, காங்கிரசும் அதன் உளவு நிறுவனங்களும் கதைகட்டி விடுவதாகவும், நாட்டின் மிகப் பெரிய அபாயமான இசுலாமிய பயங்கரவாதத்தோடு காங்கிரசு ஓட்டுக்காகச் சமரசம் செய்து கொள்வதாகவும்” குற்றஞ்சுமத்துகின்றனர்.

ஆனால், உண்மையில் சோராபுதின் போலி மோதல் கொலைக்கு எதிராக காங்கிரசு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போட்டதில்லை. மேலும், அணுஉலை விபத்து கடப்பாடு மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.க., காங்கிரசிற்கு ஒத்துழைப்பு கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதற்கு ஈடாக, சோராபுதின் கொலை வழக்கில் மோடியை மாட்டி விடுவதில்லை என காங்கிரசு உறுதியளித்திருப்பதாக முலயம் சிங்கும் லல்லுவும் அம்பலப்படுத்தியுள்ளனர்.

இர்ஷத் ஜஹன் போலி மோதல் கொலை வழக்கிலோ காங்கிரசு இளைய பங்காளியாகவே செயல்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்லூரி மாணவியான இர்ஷத் ஜஹன் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி; அவர் மோடியைக் கொல்லும் நோக்கத்துடம் குஜராத்துக்கு வருவதாக குஜராத் அரசின் புலனாய்வுப் பிரிவிடம் போட்டுக் கொடுத்ததே காங்கிரசு அரசுதான்.  இப்போலி மோதல் கொலை வழக்கு அம்பலமாகி விசாரணைக்கு வந்த பின்னால், காங்கிரசு அரசு  தான் அப்படிச் சொல்லவில்லை என்று பல்டி அடித்துவிட்டது என்பதுதான் உண்மை.

இந்தப் போலி மோதல் கொலைகள் குறித்து இவ்வளவு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகும், பா.ஜ.க.வும் மோடியும் கொஞ்சம்கூட அசராமல், சோராபுதின் மற்றும் இர்ஷத் ஜஹன் குறித்து பொய் மூட்டைகளையே உண்மையைப் போல கட்டமைத்து இந்து மதவெறிப் பிரச்சாரத்தை நடத்தி வர முடிகிறதென்றால், அதற்குக் காரணம் போலி மோதல் கொலைகள் குறித்தும், இசுலாமிய     பயங்கரவாதம் குறித்தும் பெரும்பாலானவர்கள் இந்து மதவெறி பாசிச கும்பலின் கருத்துக்களையே கொண்டுள்ளனர் என்பதுதான்.

குறிப்பாக, மேல்தட்டு வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் போலி மோதல்கள் மூலம்தான் முசுலீம் தீவிரவாதத்தையும், கிரிமினல்களையும் ஒழித்துக்கட்ட முடியும் என்ற கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளன.  இந்தக் கருத்துதான் ஒவ்வொரு போலி மோதல் கொலைக்கும் சமூக அங்கீகாரத்தை வழங்கி விடுகிறது.

போலி மோதல் கொலை வழக்குகளில் நியாயமும் நீதியும் கிடைக்க வேண்டும் என்றால், அதனை நடத்திய போலீசாரையும், அப்போலீசாரைப் பாதுகாக்கும் ஓட்டுக் கட்சிகளையும் நீதிமன்றங்களையும் எதிர்த்துப் போராடினால் மட்டும் போதாது;  பொதுமக்கள் மத்தியில் ‘மோதல்’ கொலைகள் பற்றி உருவாகியிருக்கும் இந்த பாசிச கருத்தையும் எதிர்த்துப் போராடியாக வேண்டும்.

_______________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010

_______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்!

நிலத்தடியில் நீர் இல்லாத பூமி. நினைத்த நேரத்தில் கண்ணாமூச்சி காட்டும் மின்சாரம். இவற்றுக்கிடையில் சிக்கித்தவிக்கும் விவசாயிகளுக்கு கருணாநிதி அறிவித்திருக்கும் சுதந்திர தினப் பரிசு – இலவச மின்சார மோட்டர் பம்புசெட்டுகள்!

குறிஞ்சி, மருதம், முல்லை, நெதல் என்ற திணைகள் மருவி அனைத்தும் பாலையையா மாறிக்கொண்டிருக்கும் தமிழகத்தில், தமிழ் மரபின் பெருமையை நினைவூட்டுவதற்காக எம்.எஸ்.சாமிநாதனின் பொறுப்பில் கருணாநிதி அமைக்கவிருக்கும் அருங்காட்சியகங்களுக்குப் பெயர் – ஐந்திணைப் பூங்காக்கள்!

இருபது ஆண்டுகளில் தமிழகத்தின் பயிரிடும் பரப்பு 90 இலட்சம் ஹெக்டேரிலிருந்து 70 இலட்சம் ஹெக்டேராகக் குறைந்து கொண்டே வந்தபோதிலும், அதனினும் வேகமாகக் கிராமப்புற உழைப்பாளர்களின் எண்ணிக்கை வீழ்ந்து வருவதனால், விதைப்புக்கும் அறுப்புக்கும் புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கும் எந்திரங்கள்!

விவசாயத்தின் அழிவும், சூறைக்காற்றா சுழன்றடிக்கும் நகரமயமாக்கமும், தமிழகத்தின் கிராமத்து இளைஞர்களை வாரிக்கொண்டு வந்து நகர்ப்புறத்தில் குவித்துக் கொண்டிருக்க, உறுதியற்ற ஓலைக் குடிசைகளை அகற்றி விட்டு ஊரகப் பகுதிகளில் கருணாநிதி கட்டித்தரவிருக்கும் ‘உறுதியான’ கான்கிரீட் வீடுகள்.

மன்மோகன் சிங் அரசால் தொடுக்கப்படும் புதிய தாராளவாதக் கொள்கைகளின் தாக்குதலும், அதன் கூட்டணிக் கட்சியாகவும் கூட்டுப் பங்குக் கம்பெனியாகவும் விரிவடைந்து வரும் திருக்குவளை முன்னேற்றக் கம்பெனியின் சாம்ராச்சிய நலன்களும், “ஒரு ரூபாய் அரிசி-கலர் டிவி” யில் தொடங்கி, பிற ஆளும் வர்க்கக் கட்சிகளே அசந்து வாய்பிளக்கும் வண்ணம் மக்கள் மீது அடுக்கடுக்காக கருணாநிதி எது வரும் இலவச ஏவுகணைகளும், தமிழகம் முன்னேறுகிறதா, பின்னேறுகிறதா என்று புரிந்து கொள்ள முடியாத புதிரானதொரு சித்திரத்தைத் தோற்றுவிக்கின்றன.

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்சுக்குப் பாலிசிதாரர்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் என்ற இரண்டு மாங்காகளை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் ‘கல்’லின் பெயர் கலைஞர் காப்பீடு. உலக வங்கியின் ஆணைக்கு இணங்க நாளை இலவச மின்சாரத்தை ஒழித்துக் கட்டுவதற்காக இன்று ஏவப்படும் ஆயுதத்தின் பெயர் இலவச மின் மோட்டார். விவசாயிகள் நகர்ப்புறத்திலேயே குடியேறிவிடுவதைத் தடுக்க, அவர்களுடைய ஒரு காலை இழுத்து கிராமப்புறத்தில் உறுதியாகக் கட்டிப்போடுவதற்கு கான்கிரீட் வீடுகள்.

கான்கிரீட் வீடுகளை உருவாக்கப்போகும் கட்டுமானக் கம்பெனிகள், சிமென்டுக் கம்பெனிகள் யார்? மின்சார மோட்டார்களை வழங்கப்போகும் கம்பெனி எது? எடைக்கு எடை அரசு மானியத்தை வாங்கிக்கொண்டு, நோக்கியா, ஹூண்டா, செயின்ட் கோபென் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தளபதிகளுக்கும் கனிமொழிகளுக்கும் அழகிரிகளுக்கும் வழங்கியிருக்கும் பங்குப் பத்திரங்களின் எடை எவ்வளவு? இந்த உண்மைகளை யாரும் எக்காலத்திலும் அறிய இயலாது.

கொள்ளையில் கூட்டுக் குடும்பமாகவும், பங்கு பிரிப்பதில் தனிக் கம்பெனிகளாகவும் பிரிந்தும் இயங்கும் திருக்குவளைக் கொள்ளைக் கூட்டத்தின் ஆதாயத்தையும், தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் தரகு முதலாளிகளுக்கு வாரி வழங்கும் இலாபத்தையும், ‘இலவசத் திட்டங்கள்’ என்ற இனிப்பு மிட்டாகளுக்கு உள்ளே ஒளித்து வழங்குகின்ற கலையில், கலைஞர் டாக்டர் பட்டம் பெற்றுவிட்டார். டாக்டர் புரட்சித்தலைவி உள்ளிட்ட பிற எதிர்க்கட்சி ‘டாக்டர்கள்’ செய்வதறியாமல் திகைக்கிறார்கள்.

தங்களுடைய முன்னேற்றம் மற்றும் தரகு முதலாளிகளின் முன்னேற்றத்தின் விளைபொருளாக தமிழகமும் முன்னேறித்தான் ஆகவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கருதுவதால், “தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக ஆக்காமல் ஓயமாட்டேன்” என்று சூசகமாகச் சபதம் செய்கிறார்.

மொத்த மாநில உற்பத்தியில் (GSDP) தொழில்துறையின் பங்கு மிக அதிகமாக இருக்கும் மாநிலமான மகாராட்டிரத்துக்கு அடுத்தபடி இரண்டாவது இடத்தை தமிழகம் பிடித்திருப்பதாகவும், தொழில்துறை வேலைவாய்ப்பின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தை எட்டியிருப்பதாகவும், சிறப்புச் சலுகைகள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகம் ஈர்த்திருக்கும் அந்நிய முதலீடு ரூ.60,000 கோடி என்றும், ஆக்ஸ்போர்டு அனலடிக்காவின் ஆவின்படி அந்நிய முதலீட்டாளர்களைப் பெரிதும் கவர்ந்திழுக்கும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம்தான் என்றும், பெருமை பொங்கப் பேசியிருக்கிறார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் (எகனாமிக் டைம்ஸ், மார்ச், 10, 2010). இந்தியத் தரகுமுதலாளிகள் சங்கமான எஃப்.ஐ.சி.சி.ஐ. வெளியிட்டிருக்கும் ‘சாதகமான தமிழகம்’

(Advantage Tamilnadu) என்ற நூலை வெளியிட்டு தளபதி ஆற்றிய உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.
மருமகனின் பெருமைக்கு அடித்தளம் அமைத்தவர் மாமன் மாறன்தான் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. வாஜ்பாயி அரசில் அவர் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்தபோதே இதற்கான வழியை வகுத்து விட்டார். 2005-இல் மைய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னரே, 2003-ஆம் ஆண்டிலேயே சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கான கொள்கையை வகுத்த மாநிலம் தமிழகம். சென்னைக்கு அருகில் உள்ள மகிந்திரா உலக நகரம்தான் இந்தியாவில் இயங்கத் தொடங்கிய முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம்.

தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுடன், அமைய இருப்பனவற்றையும் சேர்த்து, மொத்தம் 139 சி.பொ.மண்டலங்களுக்கான பணிகளைத் தீவிரமாக முடுக்கி விட்டிருக்கிறது தி.மு.க அரசு. இவற்றுக்காக விவசாயிகளிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தி ஒப்படைக்கும் பணி தமிழக அரசுக்குச் சொந்தமான சிப்காட், டிட்கோ ஆகிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இந்நிறுவனங்கள் இதுவரை சுமார் 25,000 ஹெக்டேர் நிலத்தை

விவசாயிகளிடமிருந்து வாங்கியிருக்கின்றன. விவசாய விளைபொருளை அரசாங்கம் கொள்முதல் செய்வதைத்தான் உலக வர்த்தகக் கழகத்தின் விதிகள் தடை செய்திருக்கின்றன என்பதால், விளைநிலத்தையே கொள்முதல் செய்யும் நடவடிக்கையில் அரசு முழுமூச்சாக இறங்கியிருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமின்றி, நீர்வளமிக்க பகுதிளை பண்டைக்காலத்தில் அக்கிரகாரங்களும் சர்வமானியங்களும் பிரம்மதேயங்களும் ஆக்கிரமித்ததைப் போல, இன்று ஆற்றங்கரைகள், ஏரிக்கரைகளை அடுக்கு மாடி அபார்ட்மென்டுகளும், பெரும்பணக்காரர்களுக்கு மட்டுமே உரிய மதில்சூழ் குடியிருப்புகளும் (Gated Communities) ஆக்கிரமித்து வருகின்றன.

விளைநிலங்களை ஆக்கிரமித்து முடிவின்றி விரிந்து கொண்டே செல்லும் நகரங்கள், நட்சத்திர கேளிக்கை விடுதிகள், கட்டுமானத் தொழிலின் பேப்பசிக்குத் தீனி போடுவதற்காகப் பெருகிவரும் செங்கல் சூளைகள், நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் சீரான இடைவெளியில் விளைநிலங்களை வளைத்துப் போட்டிருக்கும் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதிக் கல்லூரிகள் – என தமிழகத்தின் விளைநிலங்கள் வெகுவேகமாக விழுங்கப்படுகின்றன.

2001-ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி நகரமயமாக்கத்தில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருந்தது. அன்றைய கணக்கின்படியே தமிழ்நாட்டின் மக்கட்தொகையில் 44.04% நகரமயாகியிருந்தது. இன்று அது 50 விழுக்காட்டையும் விஞ்சியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

போராட்டமோ இரைச்சலோ இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமான சில எதிர்ப்புகளுடன், விவசாயத்திலிருந்து நெட்டித் தள்ளப்பட்டு, விதி விட்ட வழி என்று நகர்ப்புறங்களை நோக்கி மவுனமாக நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் தமிழக விவசாயிகள். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும் பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும் விவசாய நிலத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, பிற மாநிலங்களில் தோன்றியதைப் போன்ற தன்னெழுச்சியான எதிர்ப்பை தமிழக விவசாயிகளிடம் நாம் காணமுடியவில்லை.

இந்த எதிர்ப்பின்மைக்குக் காரணம், தொழில்மயம் எனும் முன்னேற்றப் பாதையில் செலுத்தப்படுகிறோம் என்று விவசாயிகள் கொண்டிருக்கும் நம்பிக்கையல்ல; விவசாயம் இனி நமக்கு சோறு போடாது என்ற அவநம்பிக்கை.  எகனாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லி வார இதழில் (பிப்ரவரி, 6, 2010) எம்.விஜயபாஸ்கர் எழுதியுள்ள ஒரு ஆய்க்கட்டுரை, தமிழகத்தில் நாம் காணும் இந்நிகழ்ச்சிப்போக்கின் பின்புலத்தை ஆராவதுடன், அவசியமான பல தரவுகளையும் வழங்குகிறது.
***
நீர்வளமும் இரு போகம் அல்லது முப்போக விளைச்சலும், வேலைவாய்ப்புக்கு விவசாயம் தவிர வேறு தொழிலற்ற சார்பு நிலையும் கொண்ட சிங்கூர், நந்திகிராமம் போன்ற பகுதிகளின் சிறு- நடுத்தர விவசாயிகளும், முதலாளித்துவச் சந்தையின் சூறையாடலுக்கு நேரடியாக ஆட்படாமல், காடுகளையும் தற்சார்பு விவசாயத்தையும் இன்னமும் சார்ந்திருக்கும் சட்டீஸ்கர், ஜார்கண்ட் பழங்குடி மக்களும் தமது நிலத்தை விட்டு வெளியேற மறுக்கிறார்கள். புதிய தாராளவாதக் கொள்கையினால் ஊனும் உதிரமும் உறிஞ்சி எடுக்கப்பட்ட விதர்பாவின் பருத்தி விவசாயிகளோ வெளியேறும் வழி தெரியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பாசன வசதி இன்றி, நிலத்தடி நீரின்றி, பம்பு சேட்டுக்கு மின்சாரமின்றி, அரசுக் கொள்முதல் இன்றி, விளைவித்த பொருளுக்கு விலையும் இன்றி விவசாயத்தில் நிற்கவும் முடியாமல் காலை எடுக்கவும் முடியாமல் கடந்த 20 ஆண்டுகளாகவே தவித்துக் கொண்டிருந்த தமிழக விவசாயிகள், மெல்ல மெல்ல விவசாயத்திலிருந்து வெளியேறி வருகிறார்கள்.
தமிழக விவசாயிகளை கிராமங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு, சல்வாஜூடும் போன்ற ஆயுதம் தரித்த கூலிப்படைகள் தேவைப்படவில்லை. 1990-களின் துவக்கம் முதல் அமல்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமைதி வழியில் அதனை சாதித்திருக்கின்றன.

நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் விவசாயத்தின் அழிவு என்ற நிகழ்ச்சிப்போக்கில் தமிழகம் பிடித்திருக்கும் முதலிடம், தற்போது நிகழ்ந்துவரும் நகரமயமாக்கத்திற்கு முக்கியமான அடித்தளமாக அமைகிறது. 1993-94-இல் தமிழகத்தின் மொத்த மாநில உற்பத்தியில் (எகுஈக) விவசாய வருவாயின் பங்கு 24.82%. 2005-ஆம் ஆண்டில் இது 13.3% என வீழ்ந்தது. இந்திய மாநிலங்களிலேயே மொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு ஆகக் குறைவாக இருக்கும் மாநிலம் கேரளம். தமிழகம் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. புவியியல் அமைப்பிலும் பயிரிடும் பரப்பிலும் தமிழகத்தோடு எவ்விதத்திலும் ஒப்பிட முடியாத கேரளத்துடன் கடைசி இடத்திற்குத் தமிழகம் போட்டி போடுகிறது.

2002-03 கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் சராசரியாக ஒரு உழவனின் குடும்பம் விவசாயத்தில் முதலீடு செய்த தொகை ஆண்டொன்றுக்கு ரூ. 8597. விளைபொருளை விற்று எடுத்த தொகை ரூ. 7908. அந்த விவசாயியின் குடும்பம் ஒரு ஆண்டு முழுவதும் தன் நிலத்தில் சிந்திய வியர்வைக்கும் உழைப்புக்குமான ஊதியம் இதில் கணக்கிடப்படவில்லை. அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர். இந்தப் புள்ளி விவரத்தின்படி ஒரு விவசாயக் குடும்பம், ஊதியமே இல்லாமல் ஒரு ஆண்டு காலம் உழைத்திருப்பதுடன், கையிலிருந்து சுமார் 700 ரூபாயையும் விவசாயத்தில் தொலைத்திருக்கிறது.

நட்டமடைந்த இந்தத் தொகையை அவர்கள் ஈட்டியது எப்படி? ஒரு ஆண்டுகாலம் அந்தக் குடும்பம் உண்டு, உயிர்வாழ்ந்தது எப்படி? சராசரியாக ஒரு இந்திய உழவனின் குடும்பம் ஈட்டுகின்ற ஆண்டு வருவாயில் 45% விவசாயத்திலிருந்து பெறப்படுகிறது என்கிறது அனைத்திந்தியக் கணக்கீடு. ஆனால் தமிழகத்திலோ ஒரு உழவன் தனது ஆண்டு வருமானத்தில் 30 விழுக்காட்டை மட்டுமே விவசாயத்திலிருந்து பெறுகிறான். விவசாயம் சாராத பிற தொழில்களில் ஈடுபட்டுத்தான் ஒரு தமிழக விவசாயி தனது ஆண்டு வருமானத்தின் 70 விழுக்காட்டை ஈட்டி வருகிறான்.

கடன்பட்ட விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கையில் நாட்டிலேயே முதல் இடத்தில் ஆந்திரம் இருக்கிறது. தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தின் 75% கிராமப்புறக் குடும்பங்கள் கடன் வலையில் சிக்கியிருக்கின்றன. புதிய தாராளவாதக் கொள்கை விவசாயத்தின் மீது தொடுக்கும் தாக்குதல் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்குப் பொதுவானதாக இருந்தாலும், தமிழக விவசாயியைக் கடனில் அமிழ்த்துவதில் தண்ணீர் முக்கியப் பாத்திரமாற்றுகிறது.

தமிழகத்தின் தற்போதைய மொத்தப் பாசனப்பரப்பில் 44% கிணற்றுப் பாசனத்தை நம்பியே இருக்கிறது. பசுமைப் புரட்சியைத் தொடர்ந்து 1970 முதல் நாடெங்கும் பரவிய ‘பம்புசெட் புரட்சி’யிலும், அனைத்திந்திய அளவில் ஆந்திரத்துக்கு அடுத்தபடி இரண்டாவது இடத்தில் தமிழகமே இருக்கிறது. பாசனப் பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பணிகளிலிருந்து அரசு விலகிக் கொண்டதன் விளைவாக, விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைப் பெறுவது விவசாயியின் சொந்தப் பொறுப்பாக மாற்றப்பட்டுவிட்டதனால் தமிழகத்தில் தற்போது இயங்கும் விவசாய பம்புசெட்டுகள் 19 இலட்சம். இவற்றில் 15 இலட்சம் பம்புசெட்டுகள் சிறு விவசாயிகளுக்குச் சொந்தமானவை (தினமணி, 17.8.2010). ஏற்கெனவே வற்றிவரும் நிலத்தடி நீரை, நகரமயமாக்கம் மற்றும் தொழில்மயமாக்கம் தோற்றுவித்துள்ள வகைதொகையற்ற நிலத்தடி நீர்க் கொள்ளை மேலும் தீவிரப்படுத்தியிருப்பதால், பல இடங்களில் 1000 அடிக்கும் கீழே சென்று கொண்டிருக்கும் கிணறுகள் விவசாயிகளைக் கடன் குழியில் தள்ளுவதில் பெரும் பாத்திரம் ஆற்றியிருக்கின்றன.

அனைத்திந்தியப் புள்ளிவிவரப்படி 1991-இல் விவசாயக் கடன்களில் 75% வங்கிகளின் மூலம் பெறப்பட்டவையாக இருந்தன. கடந்த 20 ஆண்டுகளில் வங்கிகள் விவசாயிகளைப் புறக்கணித்து வருவதால், கந்துவட்டிக்காரர்களின் பிடி அதிகரித்திருக்கிறது. விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாய உள்ளீடு பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்த போதிலும், விவசாய விளைபொருட்களின் விலையை அதற்கேற்ப உயர்த்த அரசு மறுப்பதும், தானியக் கொள்முதலிலிருந்து அரசு படிப்படியாக விலகிக் கொண்டு வருவதும் விவசாயிகள் மீதான கடன் சுமையை அதிகரிப்பதில் பெரும் பாத்திரமாற்றியிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, மொத்த தானிய விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியை மட்டுமே அரசு கொள்முதல் செய்வதால், விவசாயிகளின் மீது கந்துவட்டி, கமிசன் மண்டிக்காரர்களின் பிடி மேலும் இறுகியிருக்கிறது.

நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் முதலாளித்துவச் சந்தையின் சூதாட்டத்தில், “இந்த முறை விலை கிடைக்கும், அடுத்த முறை விலை கிடைக்கும்” என்று நம்பிச் சூதாடி மென்மேலும் கடன் வலையில் சிக்கிய தமிழக விவசாயிகள், இந்தச் சூதாட்டத்திலிருந்து விலகுவதற்கே திரௌபதையைப் பணயம் வைக்கிறார்கள். கடனிலிருந்து தப்ப நிலத்தை விற்கிறார்கள்.

நிலமற்ற விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கையிலும் ஆந்திரமும் தமிழகமுமே முன்னணியில் இருக்கின்றன. 2003-04 கணக்கீட்டின்படி இந்திய அளவில் நிலமற்ற விவசாயக் குடும்பங்கள் கிராமப்புற மக்கள் தொகையில் 31%. தமிழகத்திலோ நிலமற்ற விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கை 55.43%. விவசாயத்தின் அழிவு, நிலமற்ற கூலி விவசாயிகளை மட்டுமின்றி, சிறு விவசாயிகளையும் கூட நகர்ப்புறங்களை நோக்கி விரட்டுகிறது.

1990-களின் பிற்பகுதியில் தொடங்கி இன்றுவரை விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக வீழ்ந்து வரும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான். ஐந்தாண்டுகளுக்கு முந்தைய கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் கிராமப்புற ஆண் உழைப்பாளர்களில் 40% பேர் விவசாயம் அல்லாத தொழில்களிலேயே ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தின் மொத்த வேலைவாய்ப்பில் விவசாயத்தின் பங்கு மிகவும் குறைவாக இருக்கும் மாநிலம் கேரளம். தேசிய அளவில் தமிழ்நாடு அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

பிற மாநிலங்களைக் காட்டிலும் பரவலான அளவில் நகரங்களையும் சிறு நகரங்களையும் பெற்றிருக்கிறது தமிழகம். ஒரு சதுர கி.மீ க்கு 0.68 கி.மீ நீள சாலை என்பது இந்திய சராசரியாக இருக்கும் நிலையில், தமிழகத்திலோ இது 1.6 கி.மீ ஆக இருக்கிறது. கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் இந்தச் சாலைகள், விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. தனது மறைமுகச் சுரண்டலால் நிலவளத்தைப் பறித்துக் கொண்ட முதலாளி வர்க்கம், விற்பதற்கு உழைப்பைத் தவிர வேறு ஏதுமற்றவர்களாகப் பரிதவிக்கும் இந்த மனிதவளத்தை, சாலைகள் எனும் கால்வாய்கள் வழியே நகர்ப்புறத்தை நோக்கிப் பாச்சுகிறது.

‘சாதகமான தமிழகம்’ என்ற இந்தியத் தரகு முதலாளிகளின் கணிப்பில் தவறில்லை. தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் பாதகமாக இருந்தால் மட்டுமே ஒரு கொள்கை முதலாளி வர்க்கத்துக்குச் சாதகமாக அமையமுடியும் என்ற உண்மையை மறைத்து, எல்லா வர்க்கங்களுக்கும் தன்னுடைய அரசு தந்தை வழிப் பரோபகாரியாக விளங்குவதைப் போன்றதொரு பிரமையை கருணாநிதி தோற்றுவிக்கிறாரே, அதனைப் புரிந்து கொள்ளாமல் மயங்குவதில்தான் தமிழகத்தின் தவறு இருக்கிறது.

(தொடரும்)

_______________________________________________

-மருதையன், புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவரசியல்: நட்புக்காக கொள்கையா, கொள்கைக்காக நட்பா?

75

சாந்தி மீதான தாக்குதலுக்கு பதிலளிக்காமல் திசைதிருப்பவது ஏன்?

எதிர்பார்த்தபடியே பதிவர் சாந்தி எழுதிய கட்டுரையின் நியாயத்தை ஏற்றுக் கொண்டு பதிவுலகத்தினர் கண்டித்திருக்கின்றனர். அவர்களுக்கு நன்றி. எதிர்பார்த்தபடியே சிலர் இதுவெல்லாம் ஒரு பிரச்சினையா என்று நீர்த்து போக வைப்பதற்கு முயல்கிறார்கள். சாந்தியின் முழு ஜாதகத்தையும் தோண்டி வெளியே இழுத்துப் போடுவதன் மூலம் இந்த பிரச்சினையை திசை திருப்புவதற்கும் சிலர் முனைகிறார்க்ள்.

நண்பர்களே, பதிவர் சாந்தி பதிவுலகில் அரசியல் சார்பாகவோ, மொக்கையாளராகவோ, முற்போக்கனாவராகாவோ இருந்தாரா என்பதல்ல பிரச்சினை. அவரே குறிப்பிட்டுள்ளது போல சீரியசான விவாதங்களையும், எளிமையாக அணுக வேண்டி மொக்கை போட்டதையும் சென்ற இடுகையில் குறிப்பிட்டுள்ளார். இங்கே பிரச்சினை என்னவென்றால் அவருடன் சில பொதுவிவாதங்களில் ஈடுபட்ட இருவர் அதற்கு பழிவாங்கும் வண்ணம் புனைவு எழுதி தமது வக்கிரத்தை காட்டியிருக்கிறார்கள் என்பதே. அந்த பொதுவிவாதங்களில் பதிவர் சாந்தி தனக்கு நியாயம் என்று கருதிய விசயத்தை கேட்டிருக்கிறார். புலவன் புலிகேசி கவிதைக்காக பதிவர் முகிலன் எழுதிய கவிதையில் ஏழைகளையும், ஏழை எழுத்தாளரளையும் இழிவு செய்திருக்கிறார் என்று அவர் கேட்கக்கூடாதா என்ன? இதில் சாந்தியின் தனிப்பட்ட நலன் எதுவமில்லையே? ஆனால் முகிலன் இதை தனிப்பட்ட நலனுக்காக பழிவாங்கும் வண்ணம் மிரட்டலைக் கையிலெடுக்கிறார். இரும்புத்திரை அரவிந்த அதை தொடர்கிறார்.

ஒரு பெண் பதிவர் தனிப்பட்ட நட்பு காரணமாகவும், நம்பிக்கை காரணமாகவும் பலருடன் பேசுகிறார், சாட் செய்கிறார், தன்னைப் பற்றிய விவரங்களை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் பகிர்ந்து கொள்கிறார். அதே உரிமை காரணமாக மாற்று கருத்து இருக்கும் போது விவாதிக்கிறார். இதில் மற்ற விசயங்களில் அவரோடு நட்புடன் பழகும் சில ஆண்கள், அந்த பெண் பதிவர் விவாதிக்க ஆரம்பித்த பிறகு தமது ஆணாதிக்க வக்கிரத்தை ஆயுதமாக ஏந்துவது என்ன நீதி?

ஒரு பெண்பதிவரை குறிப்பிட்ட ஆண்பதிவர் தகாத முறையில் பேசுகிறார். இதை இன்னொரு ஆண் பதிவர் தட்டிக் கேட்காமல் அந்த வக்கிரம் பிடித்த ஆண்பதிவரின் எழுத்து ரொம்ப பிடிக்கும் என்று குறிப்பிட்டால் இந்த பிரச்சினையை பேச நினைக்கும் நம்மைப் போன்றவர்கள் என்ன நினைப்போம்? அந்த வக்கிரம் பிடித்த ஆண்பதிவருக்கு வக்காலத்து வாங்கும் அவரது நண்பரை கண்டிப்போம். இதைத்தான் சாந்தி செய்தார். ஆனால் மதார் என்ற பெண்பதிவரோ அப்படி தட்டிக் கேட்க கூடாது என்கிறார். எனில் ஒரு கேள்வி வருகிறது. நட்புக்காக கொள்கையா, கொள்கைக்காக நட்பா?

சந்தர்ப்பவாதத்தில் வளரும் நட்புதான் பூமிக்கு பாரம்!

பதிவுலகில் சிலர் நட்புதான் முக்கியம், கொள்கையோ, நேர்மையோ, முக்கியமல்ல என்கிறார்கள். வலைப்பதிவுகள் மூலம் நம்மிடம் நட்பு அரும்புவதும், அது விரிந்த உரையாடலாக விரிவதும் வரவேற்கத்தக்க விசயம்தான். ஆனால் அதன் அளவு கோல் என்ன? சமூகத்தில் நிலவும் குறைந்த பட்ச மதிப்பீடுகளோ, நாகரீகமோ, மக்கள் நலனோ இருக்க வேண்டுமா, கூடாதா? அய்யா, ஒரு பதிவர் பலரை நண்பராக பெற்றவர்,” தலித் இளைஞர்களுக்கு என்னதான் வாய்ப்பு கொடுத்தாலும் அவர்களை மாற்ற முடியாது, அவன் பிறவி புத்தி அப்படி” என்று சொல்கிறார் என வைப்போம். அந்த பதிவரோடு நாம் இதற்கு மேலும் நட்பு பாராட்டி ஒன்றாக தண்ணி அடிப்பதற்கு முனைவோமா? இல்லை அவரை வன்மையாக கண்டித்து மன்னிப்பு கேட்க சொல்வோமா? இங்கே எது தீர்மானிக்கிறது? நட்பா, கொள்கையா?

ஒரு பதிவர் தனது திருமணத்தில் மிகுந்த வரதட்சணை வாங்கி பின்னர் தனது மனைவியை மேலும் வரதட்சணைக்காக துன்புறுத்துகிறார் என்ற செய்தி அவரது பதிவுல நண்பர்களுக்கு தெரிய வருகிறது என்று வைப்போம். ” இது தமது நண்பனின் தனிப்பட்ட பிரச்சினை, இதில் நாம் தலையிடுவது சரியல்ல” என்று முடிவு செய்து கொண்டு அந்த நட்பு தொடர்கிறது என்றால் இதை காறி உமிழ்வோமா, இல்லை முன்னுதாரணமாக கொண்டாடுவோமா?

இவை எல்லாவற்றுக்கும் மேலாக பொதுவெளியில் ஒருவர் தவறிழைக்கிறார் என்றால் அந்த தவறின் தன்மையைப் பொறுத்து அதன் சமூக விளவைப் பொறுத்து அதை கண்டிக்கவேண்டாமா, இல்லையா? பூக்காரி புனைவு எழுதியவர் வினவு மேல் நல்ல நம்பிக்கை கொண்டிருக்கலாம். பதிவர் சங்கம் பிரச்சினையின் போது சங்கம் ஆரம்பிப்பது தொடர்பாக வினவு தோழர்களையும் உள்ளிட்டு கலந்தாலோசிக்க வேண்டுமென்று கூட அவர் எழுதியிருக்கிறார். இப்படி எங்களை மதிப்பவரை அவர் செய்த தப்பு காரணமாக கண்டிக்காமல், கண்டுகொள்ளாமல் போயிருந்தால் அவர் இன்னும் எங்களை நெருங்கியிருக்கலாம். நாளையே எங்கள் அரசியல் நிகழ்வுக்காக அவரிடம் நன்கொடை கேட்டிருந்தால் ஒரு பெரிய தொகை கூட அவர் கொடுத்திருக்கலாம்.

ஆனால் பூக்காரி புனைவை படித்த பிறகு அதிலுள்ள வன்மும், வக்கிரமும், சாதி துவேஷமும் கண்ட பிறகு எங்களது கண்ணுக்கு அவை மட்டுமே தெரிந்தன. அதை வன்மையாக கண்டிப்பதோடு, பதிவுலகில் அது ஒரு மோசமான முன்மாதிரியாக அம்பலப்படுத்தப்படவேண்டும் என்பதற்குத்தான் முயற்சி செய்தோம். இதையெல்லாம் செய்யாமல் அவருடன் நட்பு பாராட்டியிருந்தால், அல்லது அந்த பிரச்சினையை ஒதுக்கியிருந்தால் எங்கள் பெயர் கம்யூனிஸ்டுகள் அல்ல. அதற்கு சந்ததர்ப்பவாதிகள், பிழைப்புவாதிகள் என்று பெயர். தோழர் பைத்தியக்காரன் கூட கொள்கைக்காக தனது நட்பை தூக்கி ஏறிந்ததை பலர் இன்னும் சீரணிக்க முடியாமல் அதை துரோகம் என்று ‘பொங்கி’ வருகின்றனர். பொதுவெளியில் ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படும் போது அதற்கு ஒத்தூதும் இத்தகைய நட்புகளை நாங்கள் வெறுக்கத்தக்க அறுவறுப்புகள் என்றே கருதுகிறோம்.

நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து ஒரு இனிய மாலை நேரத்தில் மதுவருந்தும் இன்பம்தான் முக்கியமே அன்றி அந்த இன்பத்தை ரத்து செய்யக்கோரும் கொள்கைப் பிரச்சினைகள் எங்களுக்கு தேவையில்லை என்பவர்களை நாங்கள் மதிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி நாங்கள் மதிக்கவில்லை என்பதற்காக கள்ளக்காதல் கிசுகிசுக்களை உற்பத்தி செய்து பரப்பியவர்களையும் நாங்கள் அறிவோம். நட்புக்காக ஒரு பெண்ணை எழுத்தில் இழிவுபடுத்துவதோடு, பின்ன்ர் அதைக் கண்டிப்பவர்களை அவதூறு செய்து தங்கள் மேலான நட்பை பாதுகாக்க விரும்பும் அக்மார்க் சுயநல பிழைப்புவாதிகளால் இந்த சமூகத்திற்கு எந்த பயனுமில்லை. அவர்களெல்லாம் பூமிக்கு பாரமாகத்தான் வாழமுடியுமே அன்றி பூமித்தாய் பெருமை கொள்ளத்தக்க வாழ்வை அவர்களால் கனவிலும் தரவியலாது.

உழைக்கும் மக்களின் பண்பாடும், உலக இலக்கியவாதிகளின் தரமும்!

இங்கே ஒரு உண்மையை உரக்க கூறுகிறோம். சந்தனமுல்லை,  சாந்தி என்ற அநீதி இழைக்கப்பட்ட இரு பெண்களுக்காக நாங்கள் களத்தில் இறங்கியதால் எங்கள் நட்பு வட்டம் அழிந்து விடவில்லை. முன்பை விட வினவுக்கு வாசகர்களும் நண்பர்களும் அதிகமாயிருக்கிறார்கள். குறிப்ப்பிட்ட பிரச்சினையில் இனி யாரும் நடுநிலைமை என்ற பாதுகாப்பான சந்தர்ப்பவாதத்தை பின்பற்ற முடியாது என்ற வகையில் இங்கே அனைவரும் ஒரு நிலைப்பாடு எடுத்தாக வேண்டும் என்ற தார்மீக அற உணர்வு குறித்த பார்வை உருவாக்கப்பட்டிருக்கிறது. அரசியல் பிரச்சினைகளுக்காக எங்களை ஆதரிக்கும் சிலர் இதில் எதிர் அணியில் இருக்கலாம். அல்லது நேற்று எதிர் அணியில் இருந்தவர்கள் இன்று தவறை உணர்ந்து அணி மாறியிருக்கலாம். நீண்ட கால நோக்கில் நீதிக்கான அணிதான் வளரும். நட்பு என்பதை வெறும் தண்ணி அடிக்கும் நிகழ்வாக மட்டும் கவலைப்படும் அல்லது பயப்படும் கோழைகள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

பதிவரசியல் பிரச்சினைகளில் நாங்கள் இறங்குவதால் எங்களது அரசியலுக்கு ஆள் பிடிக்க முனைகிறோம் என்று வினவை அடையாளம் காட்டுகிறார் ஜ்யோவராம் சுந்தர். முதலில் ஒன்றை அவர் புரிந்து கொள்ளட்டும். புரட்சிக்காக ஆள் பிடிப்பதுதான் எங்கள் வேலை. அதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. அதுதான் எங்கள் அடையாளம். ஆனால் இந்த ஆள்பிடிப்புக் கலையில் சந்தர்ப்பவாதத்தை கடைபிடித்திருந்தால், அனைவருடனும் விமரிசனமற்ற முறையில் முதுகு சொறிந்து கொண்டிருந்தால் எங்களுக்கு நிறைய ஆட்கள் கிடைத்திருப்பார்கள். அந்த வட்டத்தில் சுந்தரும் கூட இருந்திருக்கலாம்.

ஆனால் அரசியல் உள்ளிட்டு அனைத்திலும் மக்கள் நலனுக்கான நோக்கில்  கறாரான விமரிசனத்தை வைத்து வரும் எங்களுக்கு அவ்வளவு சுலபமாக நட்பு கிடைத்துவிடுவதில்லை. ஆனால் இந்த நீண்ட கால போராட்டத்தில் எங்களுக்கு கிடைக்கும் நட்பு என்பது வைரத்தை போன்று உறுதியானது. அதனால் அந்த நட்புகளும் மக்களுக்கான சேவையில் வெளிச்சத்தை வழங்கும் அழகான வைரமாக ஜோலிக்கிறார்கள். இன்று சந்ததர்ப்பவாதிகளின் அணி பெரிதாக இருக்கலாம். ஆனாலும் அது காக்காய் கூட்டமென்பது ஒரு பிரச்சினை வரும் போது புரியும்.

பதிவர் சாந்தி வினவின் அரசியல் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டால்தான் அவரது பிரச்சனையை பேசுவோம் என்பதையெல்லாம் நிபந்தனையாக நாங்கள் வைக்கவில்லை. இதை சாந்தியும் ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.  சாந்தி எங்களது அரசியல் நிலைப்பாடுகள் பலவற்றை ஏற்காமல் இருக்கலாம். கவலையில்லை. அன்னை தெரசாவை கடும் விமரிசனம் செய்து வந்திருக்கும் எங்களது கட்டுரையைப் படித்தால் அவர் வினவின் மீது கோபம் கூட கொள்ளலாம். பாதகமில்லை. இங்கே அவரை புனைவு என்ற வசதியான வடிவத்தை வைத்துக் கொண்டு இரண்டுபேர்கள் வன்முறை செய்கிறார்கள்.

தெருவில் இந்த வன்முறையைப் பார்த்துக் கொண்டு அதில் அடிபடுபவர் எங்கள் அரசியலை ஏற்றுக் கொண்டவரா என்று நேர்காணல் செய்து உறுதிப்படுத்திக் கொண்டு தலையிட்டால் அது கட்டப்பஞ்சாயத்து. கண்ணெதிரே நடக்கும் வன்முறையை தன்னலத்தின் சாதக பாதகத்தை அளவிடாமல் தட்டிக் கேட்பதுதான் உழைக்கும் மக்களின் பண்பாடு. இந்த விசயத்தில் நாங்கள் மக்களின் வழியை பின்பற்றுகிறோம். உலக இலக்கியம் கற்றுத்தேர்ந்தவர்கள்தான் மக்கள் பிரச்சினைக்களுக்காக பொங்காமல் தங்களது அற்ப விசயங்களுக்காக குடித்துவிட்டு நண்பனின் மூக்கை உடைப்பார்கள். அப்படி மூக்குடைபட்டவர்கள் முதலில் தங்களது யோக்கியதை என்னவென்று பார்க்கட்டும். பிறகு எங்களை தராசில் நிற்கவைத்து தராதரம் பார்க்கலாம்.

ஆணாதிக்கத்திடம் சரணடையும் பதிவர் மதார்!

பதிவர் மதார் நாட்டில் பல பிரச்சினைகள் இருப்பதாகவும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு பெண் ஏதோ கூறுகிறாள் என்பதற்காக பலரும் வந்து ஆதரவு தருகிறார்கள் என்று கவலைப்படுகிறார். இவ்வளவு நாட்களும் அவரோ இல்லை முகிலனோ இல்லை இரும்புத்திரை அரவிந்தோ நாட்டுப்பிரச்சினைகளுக்காகத்தான் கதறி அழுது போராடியிருக்கிறார்கள் போலும். வினவில் வரும் எல்லா இடுகைகளும் என்ன பிரச்சினையை பேசுகின்றன என்பதை எல்லோரும் அறிவார்கள். ஏன் வினவின் அரசியல் எதிரிகள் கூட இங்கே சமூக பிரச்சினைகள்தான், பொது நலனுக்கான கட்டுரைகள்தான் வருகின்றன என்பதை மறுக்கமாட்டார்கள்.

இப்படிபொது நலனுக்கான பிரச்சினையைப் பேசத்தெரிந்தவர்களுக்கு இரண்டு மொக்களைகள் எழுதியிருக்கும் புனைவு பற்றி ஒன்றுமே தெரியாதாம். சாந்தி ஏதோ தவறாக எங்களை உசுப்பிவிட்டு பயன்படுத்திக் கொள்கிறாம். இதற்கெல்லாம் ட்யூஷன் எடுக்குமளவுக்கு மதாருக்கு பொறுப்புணர்வு இருந்தால் உண்மையில் வரவேற்கிறோம். ஆனால் சாந்தியைப் பற்றி இருவர் எழுதியிருக்கும் புனைவு எல்லாம் ஒரு விசயமே இல்லை என்று மதாரால் எப்படி கடந்து போக முடிகிறது?

இல்லை அந்த இருவர் எழுதியிருக்கும் புனைவின் பொருள் என்ன என்று மதாரே பொழிப்புரை எழுதட்டும். அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்வதற்கு அவருக்கு என்ன் உரிமை இருக்கிறது? இந்த புனைவு சாந்தியைப் பற்றி எதுவும் எழுதவில்லை என்று மதார் கூறவில்லை. அது பெரிய விசயமில்லை என்பதே அவரது நிலை. நல்லது, அது பெரிய விசயமா, இல்லை சிறிய விசயமா என்று சொல்லுவதற்கு சாந்திக்கு மட்டுமே உரிமை உண்டு. அந்த புனைவாலும் அதன் பின் சாந்தியின் அந்தரங்கத்தை வெளியிடுவதாக வந்த மிரட்டலாலும் சாந்தி எந்த அளவு புண்பட்டிருப்பார் என்பதை உணர்வதற்கு கூட அருகதை இல்லாத மொக்கையாக முடங்கி போனதற்கு மதார்தான் வெட்கப்படவேண்டும்.

இதில் சாந்திக்கு பக்குவம் இல்லை என்று மதார் வருத்தப்படுகிறார். மேலும் ஒரு பெண் என்ற முறையில் விட்டுக் கொடுத்து போகவேண்டுமென்றும் கூறுகிறார். அப்படி விட்டுக்கொடுத்துப் போயிருந்தால் அதன்பெயர் அடிமைத்தனம் அல்லது சராணாகதி. அதன் விளைவு ஆண்டாண்டு காலத்திற்கும் ஆணாதிக்க வக்கிரத்தை எதிர்க்க முடியாது என்ற பாடம்தான்.  ராமன் சந்தேக்ப்பட்டான் என்பதற்கு சீதையை தீக்குளிக்க வைத்து கொன்றதை கதையாக பெருமைப்படும் நாடுதானே இது? சாந்தியும் அப்படி தீக்குளிப்பதுதான் பக்குவம் என்று மதார் மன்றாடுகிறார்.

குழந்தைகளை வயிற்றில் சுமந்து பின் வளர்த்தெடுத்து தன் வாழ்க்கையை கரைத்துக் கொள்ளும் அநேக பெண்களுக்கு தாய்மையின் அருமை பற்றி விளக்கத் தேவையில்லை. ஆனால் இந்த தாய்மை என்ற அந்த தன்னலமற்ற பண்பை உடலாலும் சமூக நிலைமையாலும் பெறாத ஆண்களுக்கு வேண்டுமானால் அது புரியாமல் இருக்கலாம். இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்க்கும் சாந்தி எத்தனை தடவை யோசித்திருப்பார், தயங்கியிருப்பார், மென்று புழுங்கியிருப்பார்.

இங்கே ஒரு உண்மையினை பகிர்ந்து கொள்கிறோம். முதலில் இந்த பிரச்சினையை சாந்தி எங்களுக்கு தெரிவித்த போது,  இதை இப்போதைக்கு விட்டுவிட்டு பொருத்தமான தருணத்தில் அந்த பதிவர்களை அம்பலப்டுத்துவோம் என்றுதான் கூறினோம். அப்போது கூட அவர் அதை மறு வார்த்தை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார். பின்னர் நடந்த பிரச்சினை என்னவென்று சில பதிவர்கள் மூலம் அறிந்த பிறகுதான் இதை வெளியிடலாம் என்று முடிவு செய்தோம். இந்த நிகழ்ச்சிப் போக்கில் சாந்தியிடம் வெளிப்பட்டது அவருக்கு ஏற்பட்ட அவமானத்தை தீர்ப்பதை விட இனி எந்த பெண்ணுக்கும் இது நேரக்கூடாது என்ற ஆதங்கம்தான். இதையெல்லாம் வலிந்தோ, செயற்கையாகவோ சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

சாந்தியின் கட்டுரையில் ஒரு விசயம் வருகிறது. வேறு ஒரு குழுமத்தில் ஒருவர் சாந்தியை தாய்லாந்தில் விபச்சாரம் செய்வதாக கூறியிருக்கிறார். பின்னர் அது தவறு என்பதை மனதார மன்னிப்பு கேட்டிருக்கிறார். அந்த மன்னிப்பை ஏற்கும் பெருந்தன்மையும், பக்குவமும் சாந்தியிடம் இருக்கிறது. ஆனால் அத்தகைய கயவர்களை கண்டிப்பதற்க்கான பக்குவம் அல்லது சுயமரியாதை மதாரிடம்தான் இல்லை. புனைவு எழுதிய அரவிந்தும், முகிலனும் அதன்பின்னர் அதை நியாயப்படுத்தியதோடு, மேற்கொண்டு இரகசியங்களை வெளியிடுவதாக மிரட்டியிருக்கின்றனர். இதை எப்படி எதிர் கொள்வது என்ற அவநம்பிக்கையில்தான் சாந்தி பலருக்கும் மடல் அனுப்பி நியாயம் கேட்கிறார். அப்போதுதான் பதிவுலகம் இந்த பிரச்சினையைக்கூட தட்டிக்கேட்பதற்கான ஆரோக்கியமான சூழலில் இல்லை என்ற உண்மை அவருக்கு புரிகிறது. இதற்குத்தான் நாம் வெட்கப்படவேண்டுமே அன்றி சாந்தி அல்ல.

தோழர் மாதவராஜ் ஏன் அவமானப்படுகிறார்?

மாதவராஜ் அப்படி பதிவுலகம் சார்பாக தான் அவமானப்படுவதாக எழுதியிருக்கிறார். இதை நன்கு கவனியுங்கள், இதில் சம்பந்தப்பட்ட புனைவு எழுதிய பதிவர்கள் வெட்கித் தலை குனியவேண்டுமென்று அவர் எழுதவில்லை. அவர்களிடமெல்லாம் அப்படி ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்த முடியாது என்பதற்காக அத்தகைய குற்றமெதனையும் செய்யாத மாதவராஜ் தன்னை முன்வைத்து தலைகுனிகிறார். ஒரு ஆண் என்ற முறையில் அவர் அவமானப்படுகிறார். வேதனைப்படுகிறார். ஆணாதிக்கம் குறித்த சமூகப் பார்வை கொண்ட எந்த மனிதனும் செய்யக்கூடிய நேர்மையான சுயவிமரிசனம் அது. அப்படியெல்லாம் மாதவராஜ் நடந்து கொள்ள எது தூண்டியது? இப்படி எழுதிய ‘ குற்றத்துக்காக’ அவரை கடித்துக் குதறக் காத்திருக்கும் ஆணாதிக்க மொக்கைகள் ஒரு நிமிடமாவது யோசித்துப் பார்க்கட்டும். மாதவராஜுக்கும் வினவுக்கும் பாரதூரமான அரசியல் வேறுபாடு இருக்கிறது. அவர் சார்ந்திருக்கும் கட்சி மீது எங்களுக்கு கடும் விமரிசனமிருக்கிறது. அதைப் போல எங்கள்மீது அவரது கட்சிக்கும் கடும் பகை இருக்கிறது.

இருப்பினும் இந்த பிரச்சனையை வைத்து  வினவை  தனிப்பட்ட முறையில் வஞ்சம் தீர்க்க அவர் முயலவில்லை. சொல்லப்போனால் சந்தனமுல்லை, சாந்தி இருவரது பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்ததால் அவர் தனது நட்பு வட்டத்தைத்தான் நிறைய இழந்திருக்கிறார். அவரது நேர்மைக்கும், கொள்கைக்காக நட்பு வட்டாரத்தை தக்கவைப்பதற்கு தலைவணங்காத அவரது உறுதிக்கும் தோழமை உணர்வுடன் தோள் கொடுப்போம். ஆனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வினவை எதிர்த்தவர்கள் இப்போது வினவை வஞ்சம் தீர்க்க முயல்வதை நாங்கள் அலட்சியப்படுத்துகிறோம்.

வினவுத் தோழர்களை ஆண்கள் என்ற முறையில் ஒரு பெண் சந்தேகப்படலமா?

பதிவுலகில் புதிதாக ஒரு பெண்பதிவர் எழுத வருகிறார். பின்னர் வினவு செயல்பாட்டை வைத்து எங்களுடன் நட்பு கொள்ள விரும்புகிறார். அப்போது மூத்த பெண்பதிவர் ஒருவர்,”வினவு தோழர்கள் முற்போக்காக இயங்கினாலும் அவர்களிடமும் ஜாக்ரதையாக இருங்கள். அவர்களிடம் உங்களைப் பற்றிய விவரங்களை பகிர்வதை தவிருங்கள், பதிவுலகில் வினவு தோழர்களே ஆனாலும் அவர்களும் சராசரியான ஆண்களாக இருக்கலாம், கவனம்” என்று சொல்வதாக வைப்போம். இது எங்களது கவனத்திற்கு வருகிறது. உடனே இதை எதிர்த்து நாங்கள் பொங்க வேண்டுமா? அவசியமில்லை. எல்லா ஆண்களையும் ஒரு பெண் சந்தேகப்படுவது சரியா,தவறா என்பது பிரச்சினை அல்ல. அப்படி சந்தேகப்படும் பட்சத்தில் அப்படி நாம் இல்லை என்றால் அதை நிரூபிப்பது நம் கடமைதானே அன்றி அந்த பெண் சந்தேகப்படுவதே தவறு என்று கூற வேண்டிய தேவையில்லை.

சந்தேகப்படுவதற்கு எந்த ஒரு பெண்ணுக்கும் உரிமை இருக்கிறது என்பது சமூகத்தின் தரம்தாழ்ந்த நிலைமையை காட்டுகிறதே அன்றி அந்த பெண்ணின் தவறல்ல. எனில் அப்படி சந்தேகப்படக்கூடியதற்க்கு வாய்ப்புள்ள அந்த எல்லா ஆண்கள் பட்டியலில் நாங்களும் இடம் பெறுவோம் என்பது ஒரு சமூக உண்மைதானே? அதில் நாங்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் ஈடுபடுகிறோம் என்பதில் எங்களுடைய வாழ்க்கையில் இடம்பெறும் ஆணாதிக்கமும் அடக்கம்தான். இவ்வளவிற்கும் அதை பரிசோதிப்பதற்கான அமைப்பு முறையில்தான் நாங்கள் செயல்படுகிறோம் என்றாலும் பொது வெளியில் அதை வைத்து நாங்கள் ஆணாதிக்கத்தை கடந்தவர்கள் என்று சுயதிருப்தி அடையவேண்டிய அவசியமில்லை. வாழ்க்கை எனும் சமூக இயக்கத்தில் ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்வது என்பது சாகும் வரை தொடர வேண்டிய போராட்டம். அதில் இத்தனை வருடம் கடந்திருந்தால் கம்யூனிஸ்ட் என்ற சான்றிதழ் வழங்கப்படும் என்ற அபத்தமான கருத்து எங்களிடம் இல்லை. இதை நண்பர் அப்துல்லா புரிந்து கொள்வார் என்று நம்புகிறோம்.

முன்னாள் பெண்ணுரிமை ‘போராளி’ முகிலனின் மனசாட்சிக்கு சில கேள்விகள்!

சாந்தியை அக்கா என்று அழைத்து பழகி பின்பு புனைவு எழுதிய முகிலன் கூட ஒரு காலத்தில் கம்யூனிச இயக்கத்தின் தொடர்பில் இருந்ததாக அறிகிறோம். இன்றைக்கு மாவோயிஸ்ட்டுகள் என்று அழைக்கப்படும் நக்சல்பரி இயக்கம் சில வருடங்களுக்கு முன்பு மக்கள் யுத்தக் கட்சி என்ற பெயரில் இயங்கியது. அந்த கட்சியின் அரசியலை ஆதரிக்க கூடிய பெண்கள் அமைப்பொன்று ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இயங்கி வந்தது. அப்போது அந்த இயக்கத்தின் பெண் தோழர்கள் பெண்களை இழிவு படுத்தும் ஆபாச இலக்கிய, திரைப்படங்களை எதிர்த்து ஒரு போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்படி ஆபாச படம் ஓடிய மதுரை திரையரங்கு ஒன்றில் நுழைந்து படச்சுருளை கைப்பற்றி முழக்கமிட்டவாறு தீவைத்துக் கொளுத்தினர். அந்த போராட்டத்தில் இந்த முகிலன் கலந்து கொண்டு போலீசிடம் அடிபட்டாராம். இதில் போலீசிடம் அடிபடுமளவு அந்த பெண்கள் தீவிரமாக போராடுவது குறித்து தனக்கு தெரியாது என்று முகிலன் வருத்தப்படுகிறார். இந்த பெண்கள் அமைப்பு ம.க.இ.க சார்பு அமைப்பு என்று அவர் கருதிக் கொண்டிருக்கிறார். இல்லை ம.க.இ.கவிற்கும் அந்த பெண்கள் அமைப்பிற்கும் தொடர்பில்லை. சொல்லப்போன்னால் அந்த பெண்கள் அமைப்பு ஆதரிக்கும் மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் குறித்து ம.க.இ.கவிற்கு பெரும் விமரிசனங்கள், வேறுபாடுகள் உண்டு. இருப்பினும் மாவோயிஸ்ட்டு கட்சியை மாக்சிய லெனினிய இயக்கம் என்ற முறையில் தோழமையுடன்தான் அணுகுகிறோம்.

இப்போது அது பிரச்சினை அல்ல. முகிலனுடன் போராடிய அந்த பெண் தோழர்கள் பின்ன்ர் தரும்புரியில் ஆயுதப் பயிற்சி எடுத்தார்கள் என்ற வழக்கு காரணமாக பல வருடங்கள் சிறையில் இருந்தனர். சிறையில் அவர்களது இளமை குன்றிய காலத்தில் முகிலன் படித்து ஆளாகி பின்னர் அமெரிக்காவிற்கு சென்று செட்டிலாகிவிட்டார். இன்று வசதியான அமெரிக்க வாழ்க்கை தந்த ஆணவத்தின் காரணமாக புலவன்புலிகேசி என்ற பதிவர் சமூக அக்கறை காரணமாக எழுதுவதைக் கூட கேலி செய்து அகமகிழும் உயர்ந்த இரசனைக்கு மாறிவிட்டார்.

முகிலன் நீங்களும் ஒரு காலத்தில் தோழர் முகிலனாக இருந்திருக்கிறீர்கள் என்ற உண்மையினை வைத்து கேட்கிறோம். உங்களுடன் சிறை சென்ற தோழர்கள் நினைத்திருந்தால் உங்களைப்போன்ற வசதியான வாழ்க்கையை எட்டியிருக்கலாம். அவர்களோ பல ஆண்டுகள் சிறை சென்றதோடு பல உடல் உபாதைகளோடு எந்நேரமும் தொடரும் போலீஸ் தொல்லையோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். தொலைவில் தண்டகாரன்யாவில் உங்கள் முன்னாள் தோழர்கள் பழங்குடி மக்களுக்காக தனதுயிரை பணயமாக வைத்து எந்நேரமும் சாவை எதிர்பார்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய அமைப்பின் தொடர்பில் இருந்த நீங்கள் இன்று புனைவு எழுதியும், புலவன் புலிகேசியை கேலி செய்தும் உங்கள் ஓய்வு நேரத்தை இன்பமாக கழித்து வருகிறீர்கள். புரட்சியும், ஏழைகளும், தோழர்களும் இன்று உங்கள் பார்வையில் மட்டமான பொருட்களாகிப்போனார்கள். தோலர் என்றும் புர்ச்சி என்றும் அழைப்பது உங்களுக்கு அளவிலா மகிழ்வை தருகிறது. இரும்புத்திரை என்ற பெயரில் இயங்கும் மண்குதிரையான அரவிந்தைப் பற்றிக்  நாங்கள் கவலைப்படவில்லை.

ஆனால் ஒரு காலத்தில் இத்தகைய வாசனையுடன் உங்களது இளமையின் ஒரு பகுதியை செலவிட்ட நீங்கள் இன்று ஒரு பெண்ணையும், சமூக அக்கறை கொண்ட ஒரு இளைஞனையும் இழிவுபடுத்துகிறீர்கள் என்பது எத்தகை பரிணாம வளர்ச்சி முகிலன்? நாளை உங்களது வரலாற்றை நினைவு கூறும் போது இவற்றில் எதனை பெருமையாக கருதுவீர்கள்? ஆபாச திரைப்பட்த்தை எரிப்பதற்கு உடன் வந்த நீங்கள் இன்று இப்படி ஒரு புனைவை எழுதியிருக்கிறீர்கள் என்பதை அந்த பெண்கள் கேள்விப்பட்டால் என்ன நினைப்பார்கள்? அது குறித்தெல்லாம் உங்களுக்கு கவலை இல்லை என்றால் நீங்கள் யார் என்று தெரிவியுங்கள் முகிலன்.

கிடைத்திருப்பது நமக்கு ஒரு வாழ்க்கைதான் முகிலன். அதில் பணமும், ஆடம்பரமும், வசதியும், அதற்கு உகந்த நட்பும் கிடைத்திருக்கலாம். ஆனால் சமூக விடுதலைக்காக அந்த வாழ்க்கையை தூக்கி எறிந்து விட்டு மக்களுடன் தம்து வாழ்க்கையை இணைத்துக் கொள்பவர்களே மனித வாழ்க்கையின் முழுமையை கம்பீரத்துடன் அடைகிறார்கள். மனித குலத்தின் வரலாறு அதற்காக தியாகம் செய்த முன்னோடிகளால்தான் முன்னேறுகிறது. அந்த முன்னேற்றத்திற்கு தோள் கொடுக்காமல் அப்ப்டி பயணிப்ப்வர்களின் கால்களை தட்டிவிடுவதில் இன்பம் காணாதீர்கள். உங்களிடம் இன்னமும் நேர்மை என்று ஏதாவது குடியிருந்தால், கடுகளவாவது மனசாட்சியிருந்தால் நடந்தவற்றிக்கு மனதார வருந்துங்கள். சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள். அதனால் நீங்கள் ஒன்றும் குறைந்து போக மாட்டீர்கள்.

தனது தவறுகளை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் மனிதன்தான் வாழ்க்கை எனும் உலைக்களத்தில் புடம்போடப்ப்ட்டு மனநிறைவான வாழ்வை வாழமுடியும். அத்தகைய நிம்மதி வேண்டுமா இல்லை வாழ்க்கை முழுவதும் பின்தொடரக்கூடிய குற்ற உணர்வு வேண்டுமா முடிவு செய்யுங்கள். இந்த விவகாரத்திற்கு செலவிடப்பட்டுள்ள நேரத்தினை அர்த்தமுள்ளதாக்குங்கள். இந்த கோரிக்கையை உங்களிடம்தான் வைக்க முடியும் என்ற வகையில் இன்னமும் நாங்கள் உங்களிடம் சிறு நம்பிக்கையை கொண்டிருக்கிறோம். சாந்திக்கும் அந்த நம்பிக்கையை உருவாக்குவது உங்கள் கையில். மற்றபடி இரும்புத்ததிரை அரவிந்த் போன்ற உலக ‘அறிவாளிகளிடம்’ இதை புரியவைக்கமுடியாது.

பெண்களால் ஆண்கள் பாதிப்படைவதில்லையா? உண்மை என்ன?

அடிமைத்தனத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு நடக்கும் பெண்களாலேயே பல ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பாதிப்பின் மூலத்தை அந்த ஆண்கள் உணருவதில்லை. மாறாக பெண்களால் ஆண்கள் பாதிக்கவில்லையா என்று சரிக்கு சமமாக பார்க்கிறார்கள். அடிமைத்தனத்திலேயே ஊறித்திளைத்திருக்கும் பெண்களிடமும் ஜனநாயகத்தின் வாசனை கூட அறிமுகமாயிருக்காது. அதனால் அவர்களது எதிர்ப்பு நடவடிக்கைகளும் நேர்மையாக இருக்காது. பெண்கள் பொது வாழ்வில் ஒன்று கலப்பதும், சமூக,பொருளாதார தளங்களில் சுயேச்சை நிலையை அடைவதும்தான் அதற்கான மாற்றத்தை கொண்டுவரும். தனது வீட்டு குடும்ப் பெண்களை சமையலறைக்கும், வேலைக்குச் சென்றால் ஏ.டி.எம் எந்திரமாகவும் கருதும் ஆண்கள்தான் பெரும்பாலும் பெண்களால் பாதிப்பில்லையா என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

இத்தகை நிலைமையினை பல விடயங்களில் காணலாம். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தை வைத்து தாங்கள் தவறாக குற்றம் சாட்டப்படுவதாக ஆதிக்க சாதியினர் இந்தியாவெங்கும் கூவுகின்றனர். ஆனால் இதுவரை இந்தியாவில் இந்த சட்டப்படி தண்டிக்கப்பட்டோரை எங்கும் கண இயலாது. கூடவே கயர்லாஞ்சி, மேலவளவு போன்ற கொடுமைகள் அன்றாடம் நடக்கின்றன. கோவைக் கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்த குற்றத்திற்காக தூக்குத்தண்டனையை உறுதி செய்யும் நீதிமன்றங்கள் அதை விட கொடுமையான கயர்லாஞ்சி படுகொலைகளுக்கு தூக்குத்தண்டனை வழங்குவதில்லை.

இத்தகைய முரண்பாடு சுட்டும் உண்மை என்னவென்றால் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் ஆதிக்க சாதியினரை தண்டிக்க முடியாது என்ற சமூக யதார்த்தத்தைத்தான். அது போல சிறுபான்மையினருக்கு மத்திய மாநில அரசுகள் பல சலுகை கொடுப்பதாக இந்து மதவெறியர்கள்கூறுகின்றனர். ஆனால் முன்பு பொடா சட்டத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம் மக்கள்தான் கைது செய்யப்பட்டார்கள். ஒரு வீடு வாடகைக்கு பிடிப்பதிலும், அல்லது ஒரு வேலைக்கு செல்வதிலும் முசுலீம் என்ற காரணத்தினால் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். மேலாக குஜராத் போன்ற சமீபத்திய இனப்படுகொலைகளுக்கு காரணமான ஒரு இந்து மதவெறியர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை.

இத்தகைய நிலைமைதான் பாலினம் என்ற வகையில் பெண்களுக்கும் இருக்கிறது. ஆகவே தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்பாலினம் என்ற வகையில் இருக்கும் பிரச்சினைகளை அதன் எதிர் தரப்புக்கும் இல்லையா என்று கேட்கும் குரல் அநேகமாக ஆதிக்கவாதிகளின் குரலாகத்தான் இருக்கிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட குடும்ப வன்முறை சட்டத்தின் மூலம் எத்தனை பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது?

ஆண் பாதிப்படைவதும் பெண் பாதிப்படைவதும் சமமானவைகளா?

அடுத்து ஒரு பெண் பாதிக்கப்படும் போது அவளது பெண்மையை இழிவுபடுத்தும் கதைகள், கிசுகிசுக்கள், புனைவுகள் சுலபமாய் பிறக்கின்றன. சில பெண் பதிவர்களிடம் ஒரு வக்கிர ஆண் பதிவர் தகாத முறையில் நடந்து கொண்டார் என்றால் உடனே சம்பந்தப்பட்ட பெண்பதிவர்களைப் பற்றிய கதைகள் வெகுவேகமாய் புனையப்ப்ட்டு  பிரச்சாரம் செய்யப்படுகின்றன. அதாவது அந்த பெண்பதிவர் அப்பாவியல்ல, அந்த ஆண் பதிவர் பொறுக்கியுமல்ல என்று பேசுகிறார்கள். சாந்தி தனது பதிவில் ஒரு விசயத்தை நறுக்கென்று குறிப்பிடுகிறார். ஒரு பெண் விபச்சாரியே ஆனாலும் அவளை கற்பழிப்பதற்கு எந்த பொறுக்கிக்கும் உரிமையில்லை. அவளது சம்மதமின்றி யாரும் அவளை தொட நினைப்பது கூட பாலியல் வன்முறைதான். ஆனால் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் தவறாக பேசினான் என்றால் அந்த பெண்ணின் நடவடிக்கை சரியல்ல என்று பேசுவது காலம் காலமாய் தொடரும் ஆணாதிக்க தந்திரம். முல்லைக்கு ஏற்ப்பட்ட பிரச்சினையில் சூட்டோடு சூடாக எத்தனை உள்ளங்கள் கிசுகிசுக்களை பரப்பினார்கள் என்பதை அறிவோம். இன்றும் கூட அவை வெட்கம் கெட்ட முறையில் பேசப்படுவதையும் பார்க்கிறோம்.

அடுத்து பாதிக்கப்ப்ட்ட பெண்கள் அதை தைரியமாக வெளியே சொல்லமாட்டார்கள் என்பதை வைத்து தன்னை யோக்கியன் என்று அசால்ட்டாக சொல்லிக் கொள்ள முடியும்தான். அந்த பெண்ணே அதற்குரிய ஆதாரத்தை வெளியடாத வரை சம்பந்தப்பட்டவரை நாம் குற்றம் சாட்டுவது தவறா, இல்லையா என்பதைத்தான் இங்கே பலரும் பார்க்கிறார்களே அன்றி பாதிக்கப்பட்ட பெண்கள் அதை வெளியே சொல்ல முடியாத நிலை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. சொல்லப்போனால் சம்பந்தப்பட்ட பெண்கள் அதை கூறாமல் இருந்தால்தான் அவர்களுக்கு பிரச்சினை இல்லாமல் இருக்குமென்று பலர் நினைக்கிறார்கள். எனில் நாம் எந்தக் காலத்திலும் ஆணாதிக்கத்தை வீழ்த்த்முடியாது என்று ஆகிறது. எனவே இதை ஒரு சட்ட சிக்கல் என்று பார்க்காமல் சமூக சிக்கல் என்றுபார்ப்பதும், அதில் பெண்களின் தரப்பை புரிந்து கொண்டுஆதரிப்பதும்தான்  நாம் செய்ய வேண்டிய சரியான அணுகுமுறையாக இருக்கும். இதை சாமர்த்தியாமன வக்கீல்களைப் போன்று ஆதாரத்தை வைத்து மடக்கி பேசுவதால் நாம் பெறப் போவது தண்டிக்க இயலாதா ஆணாதிக்கத்தின் வெற்றியைத்தான். இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

எல்லாவற்றும் மேலாக பெண்களின் பாதுகாப்பற்ற சமூக சூழ்நிலை காரணமாக அவர்கள் பாதிக்கப்படும் சமூக பரிமாணத்தை உள்ளது உள்ளபடி ஏற்கவேண்டும். ஆனால் இந்த பாதிப்பு ஆண்களுக்கு என்று வரும்போது அதன் சமூக பரிமாணம் அத்தனை கவலைப்படத்தக்கதாக இல்லை. ஊர் மேயும் ஆண்களை அவர்களது இயல்பு என்றுபார்க்கும் சமூகம்தான் அது பெண் என்றால் உடனே ஒழுக்க சாட்டையை கையில் ஏந்தி வீசுகிறது. அதில் மட்டும் இருபாலாருக்கும் ஒரே மாதிரி சவுக்கடி கிடைப்பதில்லை. ஆணுக்கும்,பெண்ணுக்கும் ஒழுக்கம் குறித்த அளவு கோல்கள் இங்கு வேறானவை என்பதைக் கூட உலக இலக்கியம் படித்தவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் இலக்கியம் குறித்த நமது பார்வையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.

இனி நாங்கள் எழுத்தில் மட்டும் போராடப்போவதில்லை!

இறுதியாக பதிவர் சாந்தி எழுப்பியிருக்கும் பிரச்சினையை ஒரு சமூகப்பிரச்சினையாக பார்ப்பதும், அதை தனிப்பட்ட விவரங்களை வைத்து திசைதிருப்பாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நீண்ட கட்டுரையை ஒரு முழு இரவு முழுவதும் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். எங்கள் அரசியல் பணிகளுக்கிடையே இதையும் ஒரு பணியாக கருதியே ஈடுபட்டிருப்பதால் ஏதோ நேரத்தை வீணாக்கினோம் என்ற குறை எங்களிடத்தில் இல்லை. ஆனால் இந்த நேரம் இன்னும் முக்கியமான பிரச்சினைகளுக்கு பயன்படவேண்டும் என்பதை சிலர் வலியுறுத்தலாம். இதெல்லாம் நாம் விரும்பியபடி அமைவதில்லை.

பதிவர் சாந்தி எழுப்பியிருக்கும் பிரச்சினையினை மட்டும் பரிசீலித்துப் பார்த்தால் அவருக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியினை புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதை புரிந்து கொள்வதற்கு கூட உலகம் தோன்றிய காலத்திலிருந்து வருவோம் என்று ஆரம்பித்தால் நாம் அதை இலக்கில்லாமல் பேசிக் கொண்டே இருக்கலாம். எனவே பதிவர் முகிலனிடம் வினவு சார்பில் முன்னர் வைத்த கோரிக்கையை மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு இப்போதைக்கு முடிக்கிறோம். இது தொடருமா, எழுதித்தீருமா என்ற கேள்விக்கு நாங்களோ சாந்தியோ பதில் சொல்வது இயலாது.

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பதிவரசியல்: புனைவில் துகிலுறியும் வக்கிரக்காரர்கள்!

161

வினவு குறிப்பு: பதிவுலகில் பெண்களை புனைவால் குதறும் வக்கிரம் தொடர்கிறது…!

இருவாரங்களுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டிலிருக்கும் பதிவர் ‘புன்னகைதேசம்’ சாந்தி எங்களைத் தொடர்பு கொண்டார். அவரை இருபதிவர்கள் புனைவு என்ற வடிவில் தாக்கி எழுதியிருக்கும் விசயத்தை சொன்னார். இது தொடர்பாக வேறு சில பதிவுலக நண்பர்களும் தொடர்பு கொண்டு அதன் முழு பின்னணியை தெரிவித்தார்கள். இதில் அநீதி இழைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு புரியவந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்தோம். முதலில் சம்பந்தப்ப்ட்ட பதிவரே இந்த விவகாரம் குறித்து எழுதி வினவில் வெளியிட்டு பதிவுலக நண்பர்களிடம் நியாயத்தை கேட்கலாம் என்று முடிவு செய்தோம். இரண்டு, சட்டபூர்வமாக இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை வழக்கறிஞர்களிடம் பேசி வருகிறோம்.

பதிவர் சாந்தி இந்த பிரச்சினையில் பாதிக்கப்ப்ட்டு மன உளைச்சலோடு இருந்தாலும் இதை உறுதியாக எதிர்த்து போராடவேண்டும் என்பதில் தளரவில்லை. பதிவுலகில் ஒரு பெண்பதிவர்  சமையல் குறிப்பையும், மொக்கைகளையும் எழுதினால் பிரச்சினை இல்லை. மாறாக சமூக அக்கறை கொண்டு சில கருத்துக்களை தெரிவித்தால் ” ஒரு பெண்ணா, இப்படி பேசுகிறாள்” என்று சில ஆண் பதிவர்கள் சீறுகின்றனர். அதையும் விவாதமாகவோ, கருத்துப் போராட்டமாகவோ வைக்க வக்கின்றி வக்கிரமாக புனைவு எழுதி தமது ஆணாதிக்கத்தை காப்பாற்றிக் கொள்கின்றனர். அதை எதிர்த்தால் மேலும் பல அந்தரங்களை விடப்போவதாக மிரட்டுகின்றனர்.

ஒரு பெண் ஏதாவது ஒரு புகார் தெரிவித்தால் ஏது என்ன்வென்று விசாரிக்கமாலேயே பல ஆண் பதிவர்கள் ஆதரவு அளிக்க வருகின்றனர் என்று ஒரு மூடநம்பிக்கை இங்கே நிலவுகிறது. இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறோம். எனினும் இந்த உலகில் எந்த பிரச்சினையும் இருபாலினத்தாருக்கும் சமமாக அமைவதில்லை.   பெண்ணைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினை என்றாலும் அவளது பாலினம் என்ற முறையில் கூடுதலாக அலட்சியமாக இழிவுபடுத்தப்படுகிறாள் என்பதைக்கூட உலக இலக்கியம் படித்த சிகாமணிகளே  புரிந்து கொள்ளவில்லை. எனில் மொக்கைகளைப் பற்றி விரித்துரைக்க தேவையில்லை.

எமது அரசியல் பணிகளில் ஒன்றாகவே பதிவுலகில் ஆணாதிக்க அடாவடித்தனத்தை ஒழிப்பதையும் வைத்திருக்கிறோம். இது எழுதுவதோடு மட்டுமல்ல சட்டபூர்வ நடைமுறைகளுக்குட்பட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். எனினும் இந்தப் போராட்டத்தை எங்களது அமைப்பு தோழர்களின் செல்வாக்கை வைத்து செய்யப்போவதில்லை. மாறாக பதிவர்களையும், வாசகர்களையும் திரட்டி அவர்கள் மூலமாகத்தான் போராடுவோம். ஏற்கனவே சந்தனமுல்லைக்கு அநீதி நடந்த போது பதிவுலகின் பெரும்பான்மை அதை தட்டிக் கேட்டார்கள் என்பது நமக்கு உவப்பளிக்கும் செய்தி. எனவே பதிவர் சாந்தி இந்த வக்கிரக்காரர்களின் புனைவுக்கு அஞ்சாமல் தொடர்ந்து இயங்குவார், இயங்க வேண்டும். இனி சாந்தியின் கதையை அவரது எழுத்திலேயே கேளுங்கள்!
————————————————————————————————————————————————–

பதிவரசியல்: புனைவில் துகிலுறியும் வக்கிரக்காரர்கள்!

—————————————————————-
தமிழ்நாட்டை விட்டு வெளியேறி 15 வருடங்கள் ஆகிவிட்டன. வாழ்க்கை நிமித்தம், குடும்பம் நிமித்தம் வெளிநாட்டிலேயே வாழ வேண்டிய சூழல். தாய்மொழி பேசிடவோ, சொந்தங்கள், நட்புகளுடன் உறவாடவோ வாய்ப்பற்ற நிலையில் இணையத்திற்கு வந்தேன். இழந்த தமிழக வாழ்க்கையை அளிக்கும் வாய்ப்பிணை இணயம் தந்தது. எத்தனை நல்ல உள்ளங்கள், ஆறுதல் தந்த இதயங்கள், வழி நடத்திய பெரியவர்கள், தமிழ் ஆர்வத்தை தூண்டிய நட்புகள்…… அதுவரை குடும்பம், குழந்தைகள்  வேலை என்றிருந்த என் உலகம் பரந்து விரிந்தது.

பல குழுமங்கள், பல விஷயங்கள், பல பெரியவர்கள் என அந்த உலகம் தொடர்ந்து விரிந்தவாறே இருந்தது. வயசு வித்தியாசமின்றியும், இளவயது துடிப்புடன் பழகிய தருணங்கள், மனதார சிரித்து மகிழ்ந்த தருணங்கள், சிந்தனையை தூண்டி ஆக்கப்பூர்வமான கருத்துக்களைபரிமாறிக் கொண்டவை என்று அந்த மகிழ்ச்சியான உலகத்தை என்னால் அளவிட முடியவில்லை.

இணையம் என்பது எனக்குபாடசாலை, பயனுள்ள இடம். நம் சுற்று வட்டாரத்தில் சந்திக்க முடியாத அறிஞர் பெருமக்களையும், அனுபவசாலிகளையும் குழுமங்கள், பதிவுகள் மூலம் எளிதாக  உரையாட வைத்த இடம். நூற்றுக்கணக்ககான மடல்களுடன் குழும கருத்தாடல்கள் செய்த இடம். விரைவாக வாசிப்பதில், கருத்துக்களை பகிர்வதில், வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதில் ஆரோக்கியமான போட்டியை வளர்த்த இடம்…

இத்தகைய இணைய சூழலில் இப்போது பெண்களை சில வக்கிரக்காரர்கள் புனைவு மூலம் குதற ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாகவும், இனி இந்த பாதிப்பு எவருக்கும் வரக்கூடாது என்ற உறுதியோடுதான் வினவு தளம் மூலம் உங்களை சந்திக்கிறேன். அந்த வக்கிரக்காரக்ளை நரகல் என்று சகித்து கொண்டோ, ஒதுங்கிக் கொண்டோ போக முடியாது என்ற நிலையிலேயே இதை எழுதுகிறேன். “பூக்காரி” என்ற வார்த்தையை கேட்ட் மாத்திரத்திலேயே வலியும், வேதனையும் வருவதை நானும் ஒரு பெண் என்ற முறையில் உணர்ந்திருக்கிறேன். ஆனால் “பூக்காரிகளை” வன்மத்துடன் இழிவுபடுத்தும் வக்கிரக்காரர்கள் புதிது புதிதாக  முளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி என்கதையை எழுதுகிறேன்.

தமிழ் வலைப்பதிவர் குழுமம் எனும் இணைய தளத்தில் நல்ல கருத்துக்கள் பரிமாறப்படும் என்ற ஆர்வத்தில் இணைந்தேன். ஆரம்பத்தில் நாம் எளிமையாக அணுகவேண்டுமென்று மொக்கை போட்டதுண்டு, மிக சீரியஸான விவாதங்களும் நடந்ததுண்டு.. சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லையென்றால் அவற்றை நாகரீகமாக வைத்தே பேசியிருக்கிறேன்.

http://groups.google.com/group/tamizhbloggersforum/browse_thread/thread/9d11ba9ecbd9314c/dc9f2943012625a7?hl=en&q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&lnk=ol&

ஆனால் நான் ஒரு ஆணில்லை என்ற உண்மை காரணமாக சிலரால் வெறுப்புடன் நோக்கப்பட்டிருக்கிறேன் என்பதை இப்போது புரிந்து கொள்கிறேன். இதை எனக்கு உணர்த்தியவர்கள் பதிவுகள் எழுதும் ‘பதிற்றல்கள்’ முகிலன் மற்றும் ‘இரும்புத்திரை’ அரவிந்த். குழுமத்தில் என்னை அக்கா என்று அழைத்தவர்கள் பிறகு என்னை புனைவில் துகிலுரிந்தார்கள்.

குழுமத்தில் மதார் என்ற பெண்பதிவர், அவருடன் சாட்டில் வந்த ஆண்பதிவர் முறைகேடாக பேசியதை குறிப்பிட்டிருந்தார். இது குறித்து இரும்புத்திரை அரவிந்திடம் பேசும்படி என்னைக் கேட்டுக்கொண்டார். அரவிந்திடம் பேசும்போது அவர் இதை ஒரு அநீதி என்று எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கும் ஆர்வத்திற்குப்பதில் அந்த சர்ச்சை குறித்த விவரங்களை, யார் என்ற ஆவலை ஒருகிசு கிசு ஆர்வலன் போலத்தான் அணுகினார். இது எனக்கு பிடிக்கவில்லை. மதாரிடமும் அதை சொல்லிவிட்டேன். அடுத்து இந்த இரும்புத்திரை அரவிந்த் எழுதும் பதிவுகளில் மற்றவர்களை அருவருப்பாக தாக்கி எழுதுவார் என்பதால் இது குப்பை என்று ஒதுக்கிவிட்டேன்..இதில் என்ன தவறு கண்டார்கள்?.நான் தியாகு என்பவருக்கு பதில் போட்டால் இவருக்கு பிடிக்காதம். நர்சிம் பிரச்சினையின் போது இந்த அரவிந்த் நர்சிம்முக்குத்தான் முழு ஆதரவு என்று எழுதியமையால் பதிவுலகமே பயந்து போயிருப்பதாக இப்போதும் பெருமையாக சொல்லிக் கொள்வார். அதனால்தானோ என்ன்மோ இவரது கருத்துக்களுக்கு எதிர்வாதம் செய்ததால் எனக்கு மிரட்டல் விடுக்கிறார்.இப்பத்தான் புரிகிறது, இவர் நர்சிம்மின் அடியாள் என்று. ஏன்னா பதிவர் தீபா எது எழுதினாலும் உடனே எனக்கு லிங்க் அனுப்பி பார்க்கச் சொல்வார். இது எதுக்குன்னு ரொம்ப நாள் புரியாம இருந்தது. என்னை பதிவுலகில் அறிந்தவர்கள் மிக கம்மி. என் பங்களிப்பு குழுமத்தில்தான் அதிகம். எனக்கு யாரிடமும் தனிப்பட்ட பகையோ, எந்த அரசியலுமோ கிடையாது. அரவிந்த் அவருடைய அடியாள் வேலைக்கு நான் உடன்படவில்லை என்பதும் அதை தட்டிக் கேட்டதும்தான் அவருக்கு பிரச்சினை.

பதிவர் ‘ பிதற்றல்கள்’ முகிலன் என்பவர் பதிவர் புலவன் புலிகேசியைப் பற்றி கேவலமாக ஒரு கவிதை எழுதினார். அதில் ஏழைகளைப் பற்றியும், அந்த ஏழைகளுக்காக போராடுபவர்களையும் இழிவு படுத்தியிருந்தார். இதை நான் யதார்த்தமாக பின்னூட்டத்தில் கண்டித்தேன். புலவன் புலிகேசியின் சமூக அக்கறையை இவர்கள் கொச்சைப்படுத்துவது எனக்கு கோபத்தை வரவழைத்தது. இன்னும் சொல்லப்போனால் என் தனிப்பட்ட இகழ்ச்சியை விட இது அதிக வேதனை தந்தது..இதிலும் நான் ஒரு பெண்தானே என்ற உண்மை முகிலனை ஆத்திரப்பட வைத்திருக்கிறது. முகிலனின் அந்த வக்கிரமான கவிதையை கீழே படியுங்கள்,

——————————————————————————————–
புலவன் – புரட்சி எழுத்தாளன்
பிதற்றியது முகிலன் on Tuesday, August 17, 2010
வகைப்படுத்துதல் எதிர் வினை

அருமையான ப்ளாக் டெம்ப்ளேட்தான்
அதனால் நாட்டுக்கு என்ன பயன்?

அடடா போட வைக்கும் எழுத்து நடைதான்
அதனால் ஏழைகளுக்கு என்ன பயன்?

இடுகை படித்து பின்னூட்டமிட்டு
தமிழ்மணத்தில் ஓட்டையும் போட்டு
இண்டர்நெட் லிமிட்டை எக்சீட் செய்து

அடுத்த வேளை ரீசார்ஜ் செய்ய நண்பனின்
பாக்கெட்டைத் தடவ வேண்டிய நிலை

ஒவ்வொரு இடுகை வெளியீட்டின் போதும்
இது இயல்புதான்

அதற்காக புலவர் வந்து உனக்கு
ரீசார்ஜ் செய்தாரா?

நாட்டின் வறுமையை இடுகையில்
விளக்கும் புலவன்

உண்மையில் அதை ஒழிக்க
கெண்டைக்கால் மயிரேனும் பிடுங்கியிருப்பாரா?

ஓசி ப்ளாக்கரில் அவர்கள்
ஓதுவது புரட்சியை
நிஜத்தில் வேண்டுவது புகழை.

________________________________________

இதுதான் முகிலன் எழுதிய கவிதை. முகிலனுக்கு ஏழை என்றால் இளக்காரமா ?.  வெளிநாட்டில் போய் நாலு காசு பார்த்துவிட்டால் யாரை வேணா இழிவுபடுத்தலாமா?.
நமக்கு/நம் பிள்ளைகளுக்கு நாளை அந்த நிலைமை வராது என்று என்ன நிச்சயமுங்க?..இந்த வக்கிரமான கவிதையை எழுதிய முகிலனை நான் கண்டித்தது அவருக்கு கொஞ்சம் கூடப்பிடிக்கவில்லை.
இது நடக்கும்போதும் குழும நடத்துனர் கேபிள் இடையில் வந்து தன் புத்தக விழா பற்றி சொனனாரேயொழிய ஒரு குழும மட்டுறுத்தனராய் பிரச்னையை பற்றி கண்டுகொள்ளவேயில்லை..அதே போல் மணிஜீயும்..இடையில் வந்து மழையில் நனைய சொல்லி போய்விட்டார்..குழுமத்தில் நியாயம் பேச தெரியாவிட்டால் , தட்டி கேட்காவிட்டால்  உங்களுக்கெதுக்கு குழுமம்.?.உங்க சொந்த விளம்பரத்துக்காக மட்டுமா?..  பதிலேயில்லை..

ஆனால் ஜானகிராமன் , அருள் ஸ்டீபன், புலிகேசி வந்து பேச ஆரம்பித்ததும்தான் தவறை உணர்ந்து தோற்றுப்போனர் அர்விந்தும் , முகிலனும்….

ஆக ஒரு பெண்ணிடம் தோற்று போக ஈகோ இடம் தருவதில்லை.. நியாயமென தெரிந்தாலும் அவளை மட்டம் தட்டி ஓட விரட்டணும்.. இப்படி இழிவுசெய்துதான் அவளுக்கு துணிவே தருகின்றீர்கள் என்பதையும் நியாபகம் வையுங்கள்..

இப்படிகருத்தை கருத்தால் சந்திக்க முடியாத பதிவர்கள் முகிலன், அரவிந்த் இருவரும் என்னைப்பற்றி புனைவு எழுதி தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார்கள். அதில் என்னைப் பற்றிய விவரங்கள் அவை நானே சொன்னதுதான், அவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்கள். நான் நீச்சல் அடிப்பது, வேகமாக கார் ஓட்டுவது, என்.சி.சியில் துப்பாக்கி சுடுவதில் முதலிடம் வந்தது இதெல்லாம் நான் என்னைப்பற்றி சொல்லிய விவரங்கள்தான். இன்றும் நான் டென்னிஸ், ஸ்குவாஷ் விளையாடுகிறேன். என் தந்தையும் என்னை சிறுவயது முதல் அப்படித்தான் வளர்த்திருக்கிறார். 42 வயதில் இருக்கும் நான் இவற்றையெல்லாம் ஒரு பெண் இப்படி சம்பிரதாதயமுறைகளில் இருந்து மாறுபட்டு இருந்திருக்கிறேன் என்ற அடிப்படையில்தான் சொன்னேன். பெண் என்றால் சமையலறை சடங்குக்காக விதிக்கப்பட்டவள் என்ற அடையாளத்தை உடைத்திருக்கிறேன் என்பதைத்தான் அப்படி சொன்னேனே தவிர இது என்னை ஹீரோயிசமாக காட்டுவதற்கு அல்ல. பதிவுலகில் ஒரு பெண் அப்படி ஹீரோயினாகிட முடியுமா என்ன?

என்னைப் பற்றி நான் சொன்னது முகிலனுக்கு சுயசொறிதல் என்று தெரிந்ததாம். பரவாயில்லை, நான் என்னுடைய சுயத்தைத்தானே வெளியிட்டிருக்கிறேன், என்று அதை பெரிதுபடுத்தவில்லை. அடுத்து முகிலன் தனது மனைவியின் வீடியோவை இணைத்திருந்தார். பதிவுலகில் இத்தகைய காட்சிகள் தேவையில்லை, அது பெண்களுக்கு பாதுகாப்பனது அல்ல என்ற முறையில் அதை கண்டித்திருந்தேன். இதை அவர் தப்பாக புரிந்து கொண்டதோடு அது குறித்து விசமப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்..முதலில் என்னைப் பற்றி புனைவே எழுதவில்லை என பொதுவில் சொன்னவர் பிறகு அதை திசைதிருப்ப அவர் மனைவியைப்பற்றி தப்பாகப் பேசினேன் என்று பச்சைப் பொய்யை பரப்ப ஆரம்பித்தார். ஒரு பெண்ணை இழித்துரைக்க இன்னொரு பெண்தான் அவருக்கு தேவைப்பட்டிருக்கிறாள் போல. என்ன புனைவு எழுதினார்கள்? அதை நீங்களே படியுங்கள்….

[[  மெனுவை எழுதி சர்வ் செய்த தாய்லாந்து பெண்ணிடம் வேறு வழியில்லாமல் தர.இப்படியே சாப்பிடும் போதெல்லாம் அவன் மராத்தி கவிதை ஒன்று ஒன்றாக அவளிடம் போக. அவள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஜான்சி அக்காவையும் கூப்பிட்டுக் கொண்டு வந்து விட்டாள். அவள் முப்பது நாளில் மராத்தி புத்தகம் வாங்கி படித்து அவனை காதலிக்க ஆரம்பித்து விட்டாளாம். அவளுக்கு முதலிலேயே அவன் தமிழ்ப்பிளாக்கன் என்று தெரிந்திருந்தால் தமிழ் கற்றிருப்பேன்.இன்னும் முப்பது நாள் அவகாசம் தர சொல்ல சிபாரிசுக்கு ஜான்சி அக்காவை அழைத்து வர,மிரட்டத்தான் வந்தார்கள் என்று நினைத்து விட்ட முகிலனிடம் கூட சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விட்டான்.மிரட்டல்களால் தான் அவன் ஓடி விட்டான் என்று முகிலன் எல்லோரிடமும் சொல்வி வைத்து விட்டார். தூரத்தில் இருந்து பார்த்தாலே இதுதான் பிரச்சனை.எப்படி பேசியது காதில் விழும். இதுதான் இந்த தமிழ் சமுதாயத்தின் நிலை.
—————————————————————————-
அரவிந்துக்கும் பொண்ணுகளுக்கும் ராசியே இல்லை. இப்பிடித்தான் பாருங்க ஒரு தாய்லாந்து பொண்ணை ரொம்ப நாள் ரூட்டு விட்டுக்கிட்டு இருந்தாப்ல. அந்தப் பொண்ணு போறப்ப வர்றப்ப எல்லாம் எதாவது கவிதை எழுதி அவ மேல் தூக்கி எறிவாப்ல. அதுவும் பொறுக்கிக்கிட்டு போயிரும். ஆனா ஒரு பதிலும் சொல்லாது. ஒரு நா அந்தப்பொண்ணு ஜான்சி அக்காவைக் கூட்டிக்கிட்டு வந்திருச்சி. எனக்கும் ஷங்கருக்கும் அல்லு விட்டிருச்சி. ஏன்னா ஜான்சி அக்கா பயங்கரமான ஆளு. ஜான்சி அக்கா கையில அரவிந்து இது வரைக்கும் எழுதுன கவிதைத் துண்டு எல்லாம் இருக்கு. வந்தவுக அரவிந்த விட்டு லெஃப்டு ரைட்டு வாங்கிட்டாங்க. நான் என்.சி.சியில இருந்தவ. துப்பாக்கி சுடுறதுல ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கியிருக்கேன். ]]

ந்ததப் புனைவில் தாய்லாந்து பெண்ணாகவும், ஜான்சி அக்காவாகவும் என்னையே எழுதியிருக்கிறார்கள் என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியுமென்று நினைக்கிறேன். தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் என்னை அக்கா என்று அழைத்தவர்கள் இந்த புனைவில் என்னை ரூட் விடும் பெண்ணாகவும்,  காதலுக்கு அலைபவளாகவும், கவிதைகளை பொறுக்கி எடுக்கும் அற்பமாகவும், சித்தரித்திருக்கிறார்கள். இன்னொரு புறம் என்னையே ஜான்சி அக்காவாக உருவகம் செய்து, நான் என்னைப்பற்றிக் குறிப்பிட்ட என்.சி.சி, துப்பாக்கி சுடுதல் விவரங்களை வைத்து அல்லு விடச் செய்யும் பயங்கரமான வில்லியாகவும் எழுதியிருக்கிறார்கள்.

இதைப்படித்ததும் இது சந்தனமுல்லை விவகாரம் போல இருக்கிறதே என்று நினைத்தேன். குழுமத்தில் சிலரிடம் கேட்டேன்.. வடகரை வேலன் போன்றோரிடம். பதிலே இல்லை.

சிலர் கண்டுக்காதீங்க அக்கா என சொன்னதால்  சின்ன பசங்கள் என்று மன்னித்து விட்டுவிட்டேன். அதுதான் நான் செய்த தவறு. இப்போது இந்த புனைவு எழுதிய அந்த பதிவர்கள் இருவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த புனைவை நியாயப்படுத்துவதோடு, என் அந்தரங்க விசயங்களை வெளியிடுவதாகவும் மிரட்டுகிறார்கள். அவர்களது நோக்கம்தான் என்ன? என்னைப்பற்றிய அந்தரங்க விசயங்கள் போலத்தான் அவர்களது மனைவி, தாயின் அந்தரங்கமும் இருக்கும். அதை யாராவது வெளியிடுவது என்று ஒரு பேச்சு வந்தால் இந்த வக்கிரக்காரர்கள் என்ன சொல்வார்கள்?

நான் பெண் என்ற நிலையினை தாண்டி ஒரு சுயேச்சையான மனுஷியாக என்றோ மாறிவிட்டேன். எனது பணி நிமித்தம் காரணமாக பல ஆண்களுடன் வேலை செய்திருக்கிறேன். இரவு பணி செய்திருக்கிறேன். என் அலுவலக பணி காரணமாக உடன் பணிபுரியும் ஆண்களோடு விடுதிகளில் தங்கியும் இருந்திருக்கிறேன். ஒரே வாகனத்தில் பல ஆண்களோடு ஒட்டிக்கொண்டே பயணித்திருக்கேன்..தாய்லாந்து நாடு பெண்களை மிகவும் மதிக்கும் நாடு. விபச்சாரத்திற்காக நினைவுக்கு வரும் தாய்லாந்தில்தான் பெண்களையும் நாகரீகத்தோடு நடத்தும் பழக்கமும் இருக்கிறது. இங்கு பெரிய லாரிகளைக்கூட பெண்கள் ஓட்டுவது சர்வசாதாரணம். பொதுவெளியில் தாய்ப்பால் கொடுப்பார்கள் திறந்த மார்போடு.. அதை புனிதமாக கண்டு அந்த தாய்க்கு இடைஞ்சல் வராமல் விலகிச்செல்லும் ஆண்கள் நிறைந்த நாடிது..இங்கு பதிவுலகில் மஞ்சள் பத்திரிக்கைக்கு ஈடாக எழுதும் காம வெறியர்கள் போன்றவர்கள் இங்கில்லை. யாரும் யாரையும் கிண்டல் செய்வதில்லை..இந்த சூழ்நிலையில்தான் நான் என்னுடைய அலுவலக பணிகளை செய்து முன்னேறியிருக்கிறேன்.

பணி காரணமாக ஒரு நாளைக்கு 700 கி.மீட்டர்கள் வரை அப்போது மாதவிடாய் என்றாலும் கூட கார்களை ஓட்டுவேன். அந்த நாட்களின் வலியையும், எரிச்சலையும் உணர்ந்த ஆண் நண்பர்களுக்காகவே இதை கூறுகிறேன். பெண்ணாக குனிந்து வாழ்ந்த காலம் என்றோ முடிந்து போனது என்ற கொள்கையின்படியே நான் வாழ்கிறேன். ஆனாலும் இதற்குமுன் என்வாழ்வில் இத்தகைய வக்கிரபுத்திக்காரர்களை நான் சந்தித்ததில்லை. மொழி தெரியா, வேற்றுதேசத்தவர்களிடமிருந்து வராத ஆபத்து என்னுடைய தமிழ்மொழி பேசும் நபர்களிடமிருந்து வருகிறது.ஆயிரம் ஆண்டானாலும் இந்த ஆணாதிக்க வக்கிர புத்தி தமிழ்நாட்டில் நீங்காது என்பது சாபக்கேடுதானே?…

இனி என் அலுவலக பணிகளை வைத்து நான் பல ஆண்களுடன், எனது அலுவலக நிர்வாகிகளுடன்  சோரம் போனதாக கூட அவர்கள் எழுதுவார்களோ, தெரியவில்லை. :))  . சிலவேளை சிரிப்புத்தான் வருகிறது இந்த கீழ்தரமான மனிதர்களோடு நான் இறங்கி பழக வேண்டியதாயிற்றே என..இந்த மிரட்டலுக்கு நான் பயப்படப்போவதில்லை. இவர்களால் என்ன் செய்துவிட முடியும்? இவர்கள் நோக்கம்தான் என்ன? ஒரு பெண் பாலியல் தொழிலாளியே ஆனாலும் அவளது அனுமதியின்றி அவளை தொடுவதற்கு எவனுக்கும் உரிமை இல்லை. ஆனால் இவர்களைப் பொறுத்தவரை ஒரு பாலியல் தொழிலாளிப் பெண்ணை யார் வேண்டுமானாலும் கற்பழிக்கலாம், அதில் தவறு இல்லை என்பதுதான் விசயம். இரண்டு பிள்ளைகளுக்கு தாயான என்னை, கடித்துக்கதறுவதற்கு இவர்கள் விரும்புகிறார்கள். அதை புனைவு எழுதி தீர்த்துக் கொள்கிறார்கள். அக்கா என்று அழைத்தவர்கள் இப்போது தவறானமுறைகளில் அழைக்கிறார்கள். இதை நான் தட்டிக் கேட்டால் அது தப்பா? இது போன்று நடப்பது எனக்குமுதல்முறையல்ல.சரி இந்த முறை தட்டிக்கேட்டதால் என் அந்தரங்கம்.. அடுத்தடுத்த முறைக்கு என்ன செய்வீர்கள் தம்பிமாரே.? .. 99 வயது கிழவி நடந்து போனாலும் கூடி நின்று கிசுகிசு பேசி தன் மனதின் வக்கிரத்தை தீர்த்துக்கொள்ளும் மன நோயாளிகள்தானே இங்கே அதிகம்.?..

தமிழமுதம் குழுமத்தில் ஒருவர் என்னை விபச்சாரி என்றும் தாய்லாந்தில் தொழில் நடத்துபவள் என்றும் எழுதியிருந்தார். பின்னர் தான் செய்த தவறை மனசார உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். இப்போதும் என்னுடன் நட்பாகவே உள்ளார். ஆனால் முகிலனும், இரும்புத்திரை அரவிந்தும் என்னை புனைவு எழுதியதோடு அது சரிதான் என்பது போல எல்லா இடங்களிலும் பேசுகிறார்கள். தவறையும் செய்துவிட்டு பின்னர் அதை நியாயப்படுத்துபவர்களை என்ன செய்யலாம்.. நிரந்தரமாக இவர்கள் பெயர்கள்  வலையுலகில் பதியப்படவேண்டும்.. இனி எழுத வரும் பெண்களுக்கு இந்த சாக்கடைகளை அறிமுகப்படுத்தணும்..

கடந்த சில நாட்களில் மிகுந்த மனவேதனையோடும், உளைச்சலோடும்தான் இருந்து வந்தேன். சில பதிவுலக நண்பர்களிடம் நியாயம் கேட்டேன். இதற்கு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியுமா என்றும் முயன்றேன். சென்னை சைபர் கிரைம் போலிசிடம் பேசிய போது இது குறித்து தாய்லாந்தில் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினார்கள். சில வழக்கறிஞர் நண்ப்ரகளை கேட்ட போது இதை சட்டப்படி மன உளைச்சலுக்காக புகார் அளிக்க சொன்னார்கள். அது குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறோம்..

இறுதியில்தான் வினவு நண்பர்களைக் கேட்டேன். அவர்கள் இந்த விசயத்திற்க்காக தளராமல் போரடாலாம், அஞ்சவேண்டாம் என்று நம்பிக்கை கொடுத்தார்கள். இவ்வளவிற்கும் சந்தனமுல்லை பிரச்சினையின் போது நான் வினவை ஆதரிக்கவில்லை. அப்போது குழுமத்தில் வினவைப் பற்றி தவறான தகவல்களை தந்தார்கள். இன்று அவையும் புனைவு என்று அறிந்து கொண்டேன்.பல பதிவர்கள் தனிமடலில் எனக்கு ஆதரவை அளித்தார்கள். அவர்களுக்கு என் நன்றி.

இணைய உலகில் பெண்களை இப்படி புனைவின் மூலம் வன்முறை செய்பவர்களை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்க்காகவே இதை எழுதுகிறேன். சந்தனமுல்லை அவரது கட்டுரையில் இந்த பிரச்சினை அவரோடு முடிந்து போகவேண்டும் என்றுஎழுதியிருந்தார். ஆனால் அது அவரோடு முடியவில்லை. அடுத்த பலிகடாவாக நான்.இன்று நானும் இது என்னோடு போகவேண்டும் என்று விரும்புகிறேன். என்னை போல எல்லா வசதிகளும் உள்ள ஒரு பெண்ணுக்கே இந்த கதி என்றால் நாளைக்கு தமிழ்நாட்டிலிருந்து இணையத்திற்கு வரும் ஏதுமற்ற பெண்ணுக்கு  என்னென்னவெல்லாம் நடக்கும் என்று அஞ்சுகிறேன். பதிவுலகில் நான் புரிந்துகொண்டது…

ஒரு பெண்,

  1. திற்மையாகவும், தனித்தன்மையோடும், சமூக அக்கறையோடும் இருக்கக் கூடாது..
  2. அப்படியே இருந்தாலும் தப்புகளை பொதுவில் தட்டி கேட்கக்கூடாது.. அதுவும் முக்கியமாக ஆண்களை..
  3. பிரச்சனையில்லாமல் ( மொக்கையாகவே ) நீடிக்க வக்கிரம் பிடித்தவர்கள், கயவர்கள் , அடாவடித்தனம் செய்பவர்களோடான நட்பும் ஆதரவும் மிக மிக அவசியம்..
  4. ஒரு ஆணிடம் மன்னிப்பு கேட்டு சமரசம் செய்து கொள்ளும் ஆண்கள் , பெண் என்று வந்துவிட்டால் வார்த்தையில் மன்னிப்பும், எண்ணத்தில் வக்கிரமுமாக பழிவாங்க துடிக்கின்றனர்
  5. அதுவே அவளின் அந்தரங்கம் வெளியிடப்படுவதாக மிரட்டல்… இல்லை இருக்கவே இருக்கு கள்ள காதல்… காமம்.. , விவாகரத்து , நோய், கிசு கிசு… புனைவு.. இத்யாதிகள்…..

தமிழ் பதிவுலக நண்பர்களிடம் இனி இதுபோன்று நடக்காமல் இருப்பதற்கான நடைமுறைகளை உருவாக்குமாறும், பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற பெண்கள் இதை உரிய வழிகளில் எதிர் கொள்வதற்கான முறைகளையும் உருவாக்குமாறும் பணிவுடன் கோருகிறேன். கடந்த நாட்களில் நான் பட்ட மனவேதனை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது என்ற வைராக்கியத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

என் குடும்பத்திலோ எனக்கோ ஏதாகிலும் பிரச்னை வந்தால் அதற்கு இரும்புத்திரை அரவிந்த், முகிலன் இவர்களே காரணம் என்றும் சொல்லிக்கொள்கிறேன்..

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கருணாநிதியின் வம்சம் 24×7

59
கருணாநிதி 24x7
வம்சம், கனிமொழி, அஞ்சுகம், இதெல்லாம் கோடம்பாக்கத்தில் எடுக்கப்பட்ட எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களின் பெயர்கள்.  இனி வரும் காலங்களில் தயாநிதி, கலாநிதி, தயாளு, ராஜாத்தி, காந்தி அழகிரி, துர்கா ஸ்டாலின், இதெல்லாம் தமிழ் சினிமாவில் வரப்போகிற படங்கள். இதற்கு கூட்டம் கூட்டி ஆள் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை.

ருணாநிதியின் வாரிசுகள், வாரிசின் வாரிசுகள் என்று நிறுத்தமில்லாமல் வளர்ந்து விட்ட நிலையில் எல்லா தொழில்களையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பம் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. பிரமாண்ட மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், நவீனக் குடியிருப்புகள், சாராய ஆலைகள், ரியல் எஸ்டேட், எந்த வழியிலேனும் சம்பாதித்து தமிழகத்தையே பழைய ராஜராஜசோழன் காலத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறார் கருணாநிதி. ஆக அரசியலிலும், தொழில்களிலும் முத்துவேலர் வம்சம் கொடி கட்டிப் பறக்கிறது.

எண்பதுகளில் இந்தியாவையே கபளீகரம் செய்த நேரு குடும்பத்தினரின் ஆதிக்கத்தை எதிர்த்தவர் கருணாநிதி. இந்தியா என்ன நேரு குடும்பத்தின் சொத்தா? என்றெல்லாம் கேட்டவரின் குடும்பம் நேரு குடும்பத்தையே விஞ்சி விட்டது. மகள், மகன், பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன் என்று கிளம்பி வந்து தமிழகத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மெகா குடும்பத்தை அண்டிப் பிழைக்கும் குறுநில மன்னர்களோ அவர்கள் சக்திக்கு வட்டம், மாவட்டம், வட்டாரம் என்று பங்கு போட்டு வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். ‘வட போச்சே’ என்பது போல சசிகலா குடும்பமோ  அடுத்து எப்படி ஆட்சிக்கு வருவது இந்தத் தொழில்களை எப்படிக் கைப்பற்றுவது என்று கைபிசைந்து நிற்கிறது.

தமிழின் சினிமாவில் ஒரு காலத்தில் சிறு சிறு தயாரிப்பாளர்கள் கூட சினிமாத் தொழிலில் முதலிட முடியும் என்ற நிலை மாறி சன் தொலைக்காட்சி கேட்கிற விலைக்குள் படத்தை எடுத்து முடித்து அதற்குள் லாபம் பார்க்கிற ஒருவரால் மட்டுமே சினிமாவில் இருக்க முடியும் என்ற நிலை. இதை மீறுகிறவர்களோ, சன், கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு அப்பாற்பட்டு ரசிகர்களை நம்பி படம் எடுக்கலாம் என்று நினைக்கிறவர்களோ அதிகாரமற்றவர்களாக இருந்தால் கோடம்பாக்கத்தில் எதுவுமே செய்ய முடியாத நிலை. அல்லது எல்லோரும் மணிரத்னமாகப் பிறந்திருக்க வேண்டும்.  ஒரு மாறன் இல்லை என்றால் சோனி நிறுவனத்திடம் பேரம் பேசி விற்கும் தந்திரம் தெரிந்திருக்க வேண்டும். ஆக விருத்தியான பார்ப்பன, திராவிட வம்சங்களில் பிறக்க வாய்ப்பில்லாதவர்கள் கருணாநிதியின் வம்சத்தின் முன் அடங்கி நடக்க வேண்டும். இதுதான் மாமன்னர் கருணாநிதியின் அரசியல் வளர்ச்சி.

இவர்கள் முதன் முதலாக கைப்பற்றியது கேபிள் தொலைக்காட்சியை. திமுகவின் கட்சிப் பணத்தை எடுத்து பேரன்களுக்குக் கொடுத்து பூமாலை என்னும் வீடியோ பத்திரிகையைத் துவங்கினார் மாமன்னர். பின்னர்தான் அதிகாரமும் வந்து சேர, பூமாலை தன் வலையை விரித்து கேபிள் தொடங்கி இப்போது தென்னிந்தியாவையே 17 சேனல்களால் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் தூர்தர்ஷன் தமிழர்களுக்கு எதிரானது என்று சொல்லி தூர்தர்ஷனை உடைத்த கருணாநிதியின் குடும்ப ஊடகங்கள் தூர்தர்ஷனை விட படுமோசமான நஞ்சு போதையை மக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

இவர்களை மீறி எந்த ஒரு தொலைக்காட்சியும் கேபிள் வழி மக்களைச் சென்றடைய முடியாத நிலை. இவர்களை விமர்சித்து ஏதாவது நிகழ்ச்சி தயாரித்தால் அந்த நிகழ்ச்சி மக்களைச் சென்றடையாது. காரணம் 70% கேபிள் இணைப்புகளை கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் வைத்திருக்கிறது. மீதியை அழகிரிக்குச் சொந்தமான நிறுவனம் வைத்திருக்கிறது.  இது கேபிள் தொலைக்காட்சியின் நிலை. வம்சங்களுக்கிடையில் பிளவு வந்த போது அரசுத் தொலைக்காட்சி துவங்கி உமசாங்கரை பொறுப்பாகப் போட்டு பின்னர் வம்சம் இணைந்ததும் அவரை பலிகடாவாக்கியதுதான் வம்சத்தின் இயல்பான குணம். வம்சம் பிரிந்த போது ஒரு தொலைக்காட்சிதான் இருந்தது. வம்சம் இணைந்த பின் செத்தும் கெடுத்தான் சீதக்காதி என்பது போல  சன், கலைஞர் என்று இரண்டு சனியன்கள்.

சினிமாவை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்று நினைத்த மாறன் சகோதரர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தைத் துவங்க, ஸ்டாலினின் மகனோ ரெட் ஜெய்ண்ட் நிறுவனத்தைத் துவங்கினார். அழகிரி மகனோ கிளவுட் நைன் நிறுனத்தை துவங்கினார். இன்று கோடம்பாக்கத்தில் இந்த மூன்று சினிமா நிறுவனங்களும் வைப்பதுதான் சட்டம். மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர்களுக்கு பத்து கோடி சம்பளம் ஏற்றி விட்டதோடு, எந்தப் படத்திற்கு தியேட்டர் கொடுப்பது, எந்தப் படத்தை எப்போது வெளியிடுவது, தொலைக்காட்சி ரைட்ஸ் எவ்வளவு என தீர்மானிப்பது எல்லாம் இவர்கள்தான்.

இந்த வம்சத்தின் அரஜாகத்திற்கு துணை போகும் சூப்பர் ஸ்டார்கள், சுப்ரீம் ஸ்டார்கள், புரட்சி நாயகர்கள். படங்களில் இந்த புர்ரச்சி வீரர்கள் காண்பிக்கும் வீரம் நிஜத்தில் கோபாலபுரத்தில் கொத்தடிமைகளாக நடமாடுகின்றன. கருணாநிதி வம்சம்  எடுக்கிற சினிமாவைத்தான் விநியோகஸ்தகர்கள் வாங்க வேண்டும், தியேட்டர்காரர்கள் திரையிட வேண்டும், ரசிகர்கள் பார்க்க வேண்டும். இது போக எடுக்கப்படுகிற எல்லா சினிமாக்களையும் தங்கள் தொலைக்காட்சிகளுக்கே கேட்கிற விலைக்கே விற்க வேண்டும் என்ற மறைமுக நெருக்கடி வேறு. ஆக கருணாநிதி வம்சத்தின் அந்தப்புரமாக கோடம்பாக்கம் மாறி விட்டது.

அடுத்து பத்திரிகை. தமிழ் பத்திரிகை உலகில் கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளையுமே கட்டுப்படுத்துவது, அல்லது பத்திரிகை துவங்குவது என்று துவங்கி இப்போது இருக்கும் எல்லா ஊடகங்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது கருணாநிதி வம்சம்.  குமுதம் செட்டியாருக்கும் வரதராஜனுக்கும் வந்த பிரச்சனையில் உள்ளே நுழைந்த கருணாநிதி இரு தரப்பையுமே தன் வழிக்குக் கொண்டு வந்து விட்டார். செட்டியார் இனி எப்போதும் கருணாநிதிக்கு எதிராக எழுத முடியாது. வரதராஜனின் குமுதம் ரிப்போர்ட்டரோ எழுதிய அடுத்த நிமிடமே பழைய எப்.ஐ.ஆர் தூசு தட்டி எடுக்கப்படும் நிலையில் நிரந்தரமான கத்தியை செட்டியாருக்கும், பார்ப்பனருக்கும் சேர்த்தே தொங்க விட்டு விட்டார் கருணாநிதி.

மிச்சமிருப்பது ரியல் எஸ்டேட். கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து குடிகாரராக இருந்த இவர் நீண்டகாலமாக கருணாவைத் திட்டிக் கொண்டிருந்தார். அதிமுக கூட கருணாநிக்கு எதிராக இவரைப் பயன்படுத்திக் கொண்டது. இப்போது ஐந்தாவது முறையாக முதல்வரான கருணாநிதி பதவியேற்ற உடனேயே முத்துவை சேர்த்துக் கொண்டார். இப்போது ரியல் எஸ்டேட் தொழிலில் முத்துவின் மகன் டாக்டர் அறிவுநிதி கொடி கட்டிப் பறக்கிறார்.  இன்றைய தேதியில் தமிழக விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு நிலத்தை மிரட்டி வாங்கி பிரமாண்ட குடியிருப்புகளை அமைப்பதும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விவசாய நிலங்களை மக்களை மிரட்டி வாங்கிக் கொடுப்பதும்தான் அறிவுநிதியின் தொழில். ஒரே நாளில் பல கோடி ரூபாய், இப்படிக் கட்டப்பஞ்சாயத்து செய்து சம்பாதிக்கும் அறிவு நிதி சினிமாவிலும் அவ்வப்போது போலீஸ் மாமா கேரக்டரில் நடித்து சமூக நீதியை நிலைநாட்டுகிறார்.

முத்துவேலர் வம்சம் தழைத்தோங்கி செழித்தோங்கி ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஆக்டோபஸ் போலப் படர்ந்திருக்கிறது. ஆனால் கருணாநிதி முன்னர் எப்போதையும் விட தனது வாரிசுகளை நினைத்து பெருமை கொள்கிற ஒரு தகப்பனாக வம்சத்தின் அரசனாக இருக்கிறார். இது தொடர்பான அதிருப்தி எல்லா தரப்பிலும் எழுவதை உணர்ந்திருக்கும் கருணாநிதி அதை அலட்சியத்துடன் ஒதுக்குகிறார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த நடிகர், நடிகைகள், தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கி வீடு கட்டும் திட்டத்தை துவங்கும் விழாவில் கலந்து கொண்டு தன் பெயரை தானே அந்த சினிமா ஏழை நடிகர்களின் நகருக்கு வைத்து, அதை தானே திறந்து வைத்துப் பேசிய கருணாநிதி இந்தியாவில் உள்ள எல்லா வாரிசுகளையும் சுட்டிக்காட்டி இப்படி எல்லோரும் வாரிசாக இருக்கும் போது ‘‘என் மனைவி மட்டும் மலடியாக இருக்க வேண்டுமா? ’’ என்று கேட்டிருக்கிறார். மேலும் தான் திராவிட மக்களுக்காக உழைப்பதாலேயே இப்படித் திட்டப்படுவதாக வேறு தன் வழக்கமான திராவிட, பார்ப்பனப் பல்லவியைப் பாடியிருக்கிறார். நிகழ்ச்சி முடிந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கலாசார தூதுவரும் பார்ப்பன நாட்டிய மாமேதை பத்மா சுப்ரமணியத்தின் ராஜராஜசோழன் ஆயிரமாண்டு ஸ்பெஷல் மானாட மயிலாட டான்ஸ் ரிகல்சலுக்குச் சென்றதாகக் கேள்வி.

புழுத்து நாறிக் கொண்டிருக்கும் இந்த சமூக அமைப்பில் சினிமா தொடங்கி சட்டமன்றம், நாடாளுமன்றம் வரை வாரிசுகளின் ராஜ்ஜியமே கொடிகட்டிப் பறக்கிறது. இந்த வாரிசுகள் தங்களின் திறமைகளால் வந்தவர்களில்லை. அரசு, சினிமாத்துறைகளின் பிரமாண்டமான இரும்புக் கதவுகள் இவர்களின் தனிப்பட்ட திறமைகளுக்காகவும் திறக்கவும் இல்லை. ரவுடி அழகிரி மத்திய மந்திரியானதும், அழகிரி மகன் தயாரிப்பாளராகவும், ஸ்டாலின் மகன் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளராகவும், தயாநிதி எம்.பி, அமைச்சரானதும், இலக்கியவாதி கனிமொழி ஓவர்நைட்டில் பாராளுமன்ற உறுப்பினராக ஆனதும் வம்சத்தின் அதிகார செல்வாக்கில்தான். இந்த வம்சத்தின் ஆட்சியை ஏற்றுக் கொண்டதால்தால் ரஜினி வம்சம், கமல் வம்சம், போன்ற சினிமா வம்சங்கள் வாழ்கின்றன.

இப்போது வம்சம் தனது சாம்ராஜ்ஜியத்தை அதிகாரப்பூர்வமாகவும், வியாபார நிமித்தமாகவும் நிலைநாட்டி விட்டது. அரசியலோ, சினிமாவோ, பத்திரிகையோ எல்லாம் வம்சத்தின் தயவில் வாழ்கின்றன. வம்சத்தை எதிர்த்துக் கொண்டு ஒரு தமிழன் கூட தமிழகத்த்தில் மூச்சு கூட விடமுடியாது. தமிழ், திராவிடம், முற்போக்கு, முதலாளித்துவம் எல்லாம் வம்சத்தின் இருப்பிற்கேற்ப புதிய விளக்கம் பெறுகின்றன.

சட்டபூர்வமாகவோ, சட்டமன்ற தேர்தல் மூலமாகவோ இந்த வம்சத்தை வீழ்த்திட முடியாது. சுரணையும், சுயமரியாதையும், வார்த்தையைத் தாண்டி வாழ்க்கையில் வரும்போது தமிழக மக்க்ளால் வம்சத்தின் ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும். அந்த நாள் தானாக வருமென்று காத்திருப்பவர்கள் முடக்கப்படுவார்கள். அந்த நாளை தனது போராட்ட இலக்காக கொண்டு போராடுபவர்கள் அதிகரிக்கும்போது வம்சம் அதன் அடிப்படையற்ற டாம்பீகத்திலிருந்து வேரும் விழுதுமாய் நீக்கப்படும்.

தொடர்புடைய பதிவுகள்

 

காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ?

வெனிசுவேலாவின் அதிபர். ஹியூகோ சாவேசை நோக்கி நடைபெற்ற சதிபுரட்சியில் எப்படி ஊடகங்கள் எல்லாம் மக்களை நோக்கி கலவரக்காரர்கள் சுடுவதைப் போல திரும்ப திரும்பக் கூறி மனித உரிமை படுகொலைகள் நிகழ்ந்து விட்டதாக உண்மைக்கு புறம்பாக சித்தரித்தன‌வோ. அதே போல காசுமீரிகள் கல்லெறிவதை மட்டும் திரும்ப, திரும்ப காட்டி கல்லெறிவதை ஏதோ பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் போல சித்தரிக்க முயல்கின்றன‌‌ செய்தி ஊடகங்கள். இதன் ஒரு பகுதியாக தான் “நல்ல வேளை என் மீது செருப்பைத் தான் எறிந்தார், கல்லை அல்ல என்ற காசுமீரின் முதல்வர் பரூக் அப்துல்லாவின்” பேச்சைக் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் உண்மை அவ்வாறு இல்லை.  இந்த பொய்யை மட்டுமே கூறும் ஊடகங்களுக்கு நடுவே க‌ட‌ந்த‌ வார‌ம் தெக‌ல்கா வார‌இத‌ழில் வெளிவ‌ந்ததுள்ளது இந்த‌ க‌ட்டுரை. காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ? என்ற கேள்விக்கு விடை தான் இந்த கட்டுரை.  கட்டுரையாளர் சாகித் இரஃபிக் ஒரு காசுமீரி, இவர் தில்லியில் வாழ்ந்துவரும் ஒரு ஊடகவியலாளர்.

…………………………………………………………….

நான் எப்பொழுதும் ச‌ண்டையை விரும்பிய‌து கிடையாது. க‌ல்லூரி கால‌ங்க‌ளில் என் ந‌ண்ப‌ர்க‌ள் குழு என்னை எப்போதும் கோழை என்றே விம‌ர்ச‌ன‌ம் செய்வார்க‌ள். என்னால் ஒரு உட‌ல் வ‌லு இல்லாத‌வ‌னை கூட‌ அடிக்க‌ இயலாது என்றும் கூட சொல்வார்க‌ள். ஆனால் நான் கோழை அல்ல‌. என்னை பொருத்த‌வ‌ரை பெரும்பான்மையான‌ ச‌ண்டைக‌ள் ப‌ய‌னில்லாத‌வை. அகிம்சாவாதி என்ற வார்த்தை என‌க்கு பிடிக்காது என்றாலும் நான் ஒரு அகிம்சாவாதி தான். வ‌ன்முறையை விட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு  பேச்சுவார்த்தை, க‌ருத்து விவாத‌ங்கள் போன்ற ப‌‌ல‌ ந‌ல்ல‌ வ‌ழிக‌ள் உள்ள‌ன‌ என்ப‌தே என் க‌ருத்து.

ஆனால் இன்று நான் ஒரு ஊட‌க‌விய‌லாள‌னாக‌ எழுத்தை எதிர்ப்பின் ஒரு அடையாளமாக நான்‌ கொண்டிருக்காவிட்டால், என‌து ந‌ண்ப‌ர்க‌ளை போலே நானும் காசுமீர‌த்து ந‌க‌ர‌வீதிக‌ளில் க‌ல்லெறிந்து கொண்டிருப்பேன்.

ஆரம்ப காலங்களில் காசுமீரில் நான் கண்ட அடக்குமுறைகளும், ப‌டுகொலைகளும் என்னுள் எப்பொழுதும் ஒரு தெளிவின்மையை ம‌ட்டுமே ஏற்ப‌டுத்தி வ‌ந்த‌ன‌. ஆனால் க‌ட‌ந்த‌ இரு மாத‌ங்க‌ளாக‌ காசுமீரில் ந‌ட‌ப்ப‌வை எல்லாம் தெளிவான நீரோடையை போல‌‌ உள்ளது‌. உல‌க‌ம் காசுமீரில் ந‌ட‌ப்ப‌தை க‌ண்டும் காணாம‌ல் வாய் மூடி மௌனித்துள்ள‌து. இந்த‌ மௌன‌ம் அகிம்சாவாத‌த்தை தின‌மும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தின்றுகொண்டே வ‌ருகின்ற‌து. இந்த கள்ள மௌனமே எல்லா வ‌ன்முறைக‌ளும் ஆர‌ம்பிக்க‌ கார‌ண‌மாகும்.

வீட்டிலிருந்து வ‌ருகின்ற‌ எல்லா அலைபேசி அழைப்புக‌ளுமே இத‌ய‌த்தை பிள‌க்க‌க் கூடிய‌ செய்திகளாக‌ உள்ள‌ன‌. என்னுள் வ‌ன்முறை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் வ‌ள‌ர்வ‌தை உண‌ர்கின்றேன் நான். எங்க‌ள் வீட்டின் அருகிலுள்ள‌ காய்க‌றி க‌டைக்கார‌ர் அர‌ச ப‌டைக‌ளால் சுட்டுக் கொல்ல‌ப்ப‌ட்டார் என்று என் அம்மா என‌க்கு கூறிய‌ போது நான் தில்லியில் இருந்தேன். நான் காசுமீரிலிருந்து தில்லிக்கு வ‌ரும் முன்பு என் ப‌க்க‌த்து வீட்டிலிருந்து க‌டைசி ந‌ப‌ர் அவர் ஒருவர் ம‌ட்டும் தான். விடைபெறும் முன் இருவ‌ரும் புன்ன‌கையை ப‌ரிமாறிக் கொண்டோம். ஆனால் இப்பொழுது என் மனதை க‌டுங்கோப‌ம் சூழ்ந்துகொண்டுள்ள‌து. ம‌த்திய‌ ஆயுத‌ப் படையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் மிக‌க்க‌டுமையான‌ கோப‌த்துடன் வீடுகளின் சாளரக் கண்ணாடிகளை உடைத்து, வீட்டினுள்ளே உள்ள‌ அனைவ‌ரையும் க‌டுமையாக‌ தாக்குகின்ற‌ன‌ர் என‌ என்னிட‌ம் கூறினான் என் த‌ம்பி.

தில்லியில் காசுமீரை மேற்பார்வையிடும் நிறுவ‌ன‌ம் ஒன்றில் வேலை செய்யும் என் ந‌ண்ப‌ன் க‌ட‌ந்த‌ வார‌ம் ஒரு நாள் மாலையில் என்னை அழைத்தான். அவ‌ன‌து ப‌ணிக‌ளுக்கு இடையிலும் அவ‌ன் காசுமீரில் அர‌ச‌ ப‌டையினால் அடித்தே கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஒன்ப‌து வ‌ய‌து சிறுவ‌ன் ச‌மீர் அக‌ம‌தின் உட‌லை அவனும் பார்த்திருப்பான் என‌ நினைக்கின்றேன்.அவ‌ன‌து உட‌லெங்கும் ல‌த்தி குச்சியின் வ‌ரிக‌ள் சாரை, சாரையாக‌ உள்ள‌ன‌. அவ‌ன் தின்று கொண்டிருந்த‌ மிட்டாயின் மீத‌ம் இன்னும் அவ‌ன‌து வாயில் அப்ப‌டியே உள்ள‌து. நான் அவ‌னை ச‌மாத‌ன‌ப்ப‌டுத்த முயல‌ இறுதியில், இருவரும் ஒருவரை ஒருவர் ச‌மாத‌ன‌ப்ப‌டுத்திக் கொண்டோம். அடுத்த‌ நாள் காலை அவ‌ன் தில்லியிலிருந்து காசுமீருக்கு செல்ல‌ப் போவ‌தாக‌ கூறினான். “இங்கு எல்லோரும் பொய்யை ம‌ட்டுமே கூறுகின்ற‌ன‌ர். மேலும் அவ‌ர்களின் பொய்யை அவ‌ர்க‌ள் உண்மையென்று ந‌ம்புகின்றார்க‌ள்” என்றான் அவ‌ன்.

இந்தியாவில் ஒரு “பொய்” எல்லோராலும் ப‌ர‌வ‌லாக‌ ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌து, அதாவ‌து அர‌ச‌ ப‌டைக‌ள் காசுமீர‌த்து ம‌க்க‌ளை பாதுகாக்கின்ற‌ன‌ர் என்ப‌தே அந்த‌ “பொய்”. ஆனால் காசுமீரிக‌ள் தாங்க‌ள் அர‌ச‌ப‌டைக‌ளால் பாதுகாக்க‌ப்ப‌டுவ‌தாக‌ ந‌ம்புவ‌தே இல்லை. இந்தியாவில் உள்ள‌வ‌ர்க‌ள் அர‌ச‌ப‌டையை “பாதுகாவ‌ல‌ர்கள்” என்றும், அவ‌ர்க‌ள் தான் தீவிர‌வாதிக‌ளிட‌ம் இருந்து காசுமீரிக‌ளை பாதுகாக்கின்ற‌ன‌ர் என்றும் எண்ணுகின்ற‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து தான் காசுமீரிக‌ளை பாதுகாக்க‌ வேண்டியுள்ள‌து என்ப‌தே உண்மை. காசுமீரிக‌ள் த‌ங்க‌ளை ஆக்கிமிர‌த்துள்ள‌ இந்த‌ ப‌டைக‌ள் த‌ங்க‌ள் நில‌த்தை விட்டு வெளியேற‌ வேண்டும் என்று கோருகின்ற‌ன‌ர். அர‌ச‌ப‌டைக‌ள் மீது அவ‌ர்க‌ள் கொண்டுள்ள‌  உண‌ர்வு ப‌யம், வெறுப்பு, பழிஉணர்ச்சி போன்ற‌வை ம‌ட்டுமே.

க‌ட‌ந்த‌ இர‌ண்டு மாத‌த்தில் ம‌ட்டும் காவ‌ல் துறை ம‌ற்றும் ம‌த்திய‌ பாதுகாப்பு ப‌டை சுட்ட‌தில் 55 ஆயுத‌ம் ஏந்தாத‌ பொதும‌க்க‌ள் காசுமீரில் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் சிறுவ‌ர்க‌ள். ஒன்று இவ‌ர்க‌ள் க‌ல்லெறிந்து கொண்டிருந்திருக்க‌லாம் அல்ல‌து அண்டை வீடுக‌ளில் விளையாடிக் கொண்டிருந்திருக்கும் போது சுடப்பட்டிருக்கலாம்.  காசுமீரில் ப‌த‌ட்ட‌நிலை ஆர‌ம்பிக்கும் கால‌க‌ட்ட‌ங்க‌ளில் நான் அங்கு இருந்தேன். ஒவ்வொரு இறுதி ஊர்வ‌ல‌த்திற்கும் சென்ற‌ நான் ம‌க்க‌ள் மிகக்கடுமையான‌ கோப‌த்துட‌ன் இருப்ப‌தை க‌ண்டேன். க‌ங்ப‌க் என்ற‌ ப‌குதியில் 17 வ‌ய‌து சிறுவ‌னின் இறுதி ஊர்வ‌ல‌த்தில் ஊர‌ட‌ங்கு உத்த‌ர‌வை மீறி ஆயிர‌க்க‌ண‌க்கானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். அவ‌ன‌து இரு ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌னை காவ‌ல்துறை அழைத்துச் சென்ற‌தாக‌வும், பின்னால் அவ‌ன் நீரில் மூழ்கி இற‌ந்துவிட்டான் என‌ காவ‌ல் துறையை கூறிய‌தாக‌வும் ஊட‌க‌ங்க‌ளுக்கு சொன்னார்க‌ள். ஆனால் இற‌ந்த‌ சிறுவ‌ன் ந‌ன்கு நீச்ச‌ல் தெரிந்த‌வ‌ன், ர‌ண‌ அறுவை சிகிச்சையில் த‌லையில் இரண்டு ப‌ல‌த்த‌ காய‌ங்க‌ள் இருப்ப‌து தெரிந்த‌து.

இத‌ற்கு ம‌று நாள் “NDTV” என்ற‌ செய்தி ஊட‌க‌த்தில் பேசிய‌ மாநில‌ முத‌ல்வ‌ர் ப‌ரூக் அப்துல்லா “அவ‌ன‌து ந‌ண்ப‌ன‌து உயிர் முக்கிய‌ம் என‌த் தெரிந்திருந்தால், இந்த‌ இருவ‌ரும் அவ‌னை நீரிலிருந்து காப்பாற்றியிருக்க‌ வேண்டிய‌து தானே” என‌ கேட்டார். இவ்வாறு கேட்ப‌த‌ற்கு ப‌ரூக் அப்துல்லாவால் ம‌ட்டும் தான் முடியும், அதிகார‌வ‌ர்க்க‌த்தின் பார்வை இவ்வாறு தான் இருக்கும். இவ‌ர்க‌ளை பொருத்த‌ வ‌ரையில் காசுமீரிக‌ள் “PDP” யின் ப‌ண‌த்திற்காக‌வும், பாகிசுதானின் உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ளுக்காக‌வும் உயிரை விடும் த‌ர‌க‌ர்க‌ள் தானே. இந்தியாவில் 40 ஆண்டு கால‌ம் வாழ்ந்த‌தால் ப‌ரூக் அப்துல்லாவிற்கு இந்த உலகப்பார்வை வ‌ந்துள்ள‌து. முஃப்திக‌ளோ இவ‌ர்க‌ளை விட‌ மோச‌ம், அவ‌ர்க‌ள் எப்பொழுது பிரிவினை கோருவார்க‌ள், எப்பொழுது இந்திய‌ தேசிய‌வாதிக‌ளாக‌ மாறுவார்க‌ள் என்ப‌து யாருக்குமே தெரியாத‌ ஒன்று. அவ‌ர்க‌ளின் தேவை எல்லாம் ஆட்சி அதிகார‌ம் ம‌ட்டும் தான். ம‌த்திய‌ அர‌சு ப‌ரூக் அப்துல்லாவை தூக்கியெறிந்து விட்டு மெக‌பூபாவை முத‌ல் ம‌ந்திரி ஆக்க‌வேண்டும் என்ப‌தே அவ‌ர்க‌ள் எண்ண‌ம்.

காசுமீரிக‌ளுக்கும், அப்துல்லாக்க‌ளுக்கும் இடையில் மிக‌ப்பெரிய‌ இடைவெளி உள்ள‌து. காசுமிரீக‌ளை நோக்கி எப்பொழுதும் துப்பாக்கிக‌ள் த‌யாராக‌ இருக்கும், அப்துல்லாக்க‌ளை நோக்கி அல்ல. தங்கள் உயிரை பற்றிய கவலையில்லாமல் ஏன் தடையையும் மீறி இறுதி ஊர்வலத்திலும், அரச படைகளை எதிர்த்தும் கல்லெறிந்து கொண்டிருக்கின்றனர் என அப்துல்லாக்க‌ளும், முப்திக்க‌ளும் புரிந்து கொள்ள‌ ம‌றுக்கின்ற‌ன‌ர். இருப‌து வ‌ருட‌ கால‌ங்க‌ளில் இங்கு கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ 70,000 ம‌க்க‌ளின் புதைகுழிக‌ளில் த‌ங்க‌ள் பொய்யையும் சேர்த்தே அவ‌ர்க‌ள் புதைத்து வ‌ந்துள்ள‌ன‌ர். ஒரு கால‌த்தில் தேசிய‌ காங்கிர‌சின் தீவிர‌மான‌ ஊழிய‌ராக‌ இருந்த‌ எங்க‌ள் உற‌வின‌ர் ஒருவ‌ர் பிற்கால‌த்தில் அதே க‌ட்சி காசுமீரிக‌ளுக்கு துரோக‌ம் செய்து விட்ட‌து என‌க் கூறினார் என்பத‌ன் பொருள் என‌க்கு இப்பொழுது தான் புரிகின்ற‌து. சேக் அப்துல்லா டோர்கா ம‌ன்ன‌ர்க‌ளின் இரும்புப் பிடியிலிருந்து காசுமீரை மீட்டு அதை விட‌ மோச‌மான‌ அட‌க்குமுறை அர‌சிட‌ம் ஒப்படைத்து விட்டார் என‌ அவ‌ர் தின‌மும் கூறுவார்.

சிறீந‌க‌ரின் க‌சூரி பாக் ப‌குதியில் வ‌ய‌தான த‌ந்தை ஒருவ‌ர் கொல்ல‌ப்ப‌ட்ட‌ த‌ன‌து ம‌க‌னின் உடலை பிடித்து கொண்டிருந்த படத்தை பார்த்தேன். ஆனால் ஆறுக்கும் மேற்ப‌ட்ட‌ காவ‌ல்துறையின‌ர் அவ‌ரை அவ‌ர‌து ம‌க‌னின் உட‌லை விட்டு பிரித்துச் செல்ல‌ முய‌ன்று கொண்டிருந்த‌ன‌ர். ஆனால் அவ‌ர் ம‌க‌னின் உட‌லை விட்டு பிரியாம‌ல் அருகிலேயே இருந்தார். அவ‌ர‌து ச‌ட்டை ம‌க‌னின் இர‌த்த‌தில் ந‌னைந்து போன‌து, அவ‌ர‌து வெள்ளை தாடி இர‌த்தத்தால் சிக‌ப்பு நிற‌மான‌து. அந்த‌ ப‌ட‌த்தை நான் பார்க்க‌ பார்க்க‌ என்னுள் ஏற்ப‌டும் வ‌லியின் ர‌ண‌ம் அதிக‌ரித்துக் கொண்டே சென்ற‌து. இற‌ந்த‌ த‌ன‌து ம‌க‌னின் உட‌லை க‌ட்டிய‌ணைத்து த‌ன‌து சோக‌த்தை ஒரு தந்தை வெளிப‌டுத்துவ‌தை த‌விர‌ அவ‌ரால் என்ன‌ செய்ய‌ முடியும் என்று என‌க்கு தெரிய‌வில்லை. ப‌ரூக் அப்துல்லாவால் அந்த‌ த‌ந்தையை அட‌க்குமுறையை மீறி அர‌ச‌ ப‌டைக்கு எதிராக‌ க‌ல்லெறிவ‌தை த‌டுக்க‌ குடியுமா? அந்த‌ வ‌ய‌தான‌ ம‌னித‌ரின் இட‌த்தில் ப‌ரூக் அப்துல்லா இருந்திருந்தால் எப்ப‌டி ந‌ட‌ந்திருப்பார், ஒரு த‌ந்தையைப் போல‌வா? ஒரு முத‌ல்வ‌ரை போல‌வா?. இந்நேர‌ம் இந்ந‌க‌ரமே துண்டாட‌ப்ப‌ட்டிருக்காதா? சிறீந‌க‌ர‌ம் ப‌ற்றி எரிந்திருக்காதா?

த‌ங்க‌ளின் நேச‌த்திற்குரிய‌ இற‌ந்த‌ உற‌வுக‌ளை க‌ல்லெறிவதன் மூலமாகவும், அரசு வாகனங்களை எரிப்பதன் மூலமாகவும் மிகச்சிறிய அளவில் மட்டுமே நினைவு கொள்கின்றார்க‌ள் அவ‌ர்க‌ளின் த‌ந்தைக‌ள், ச‌கோத‌ர‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர்க‌ள். இது மட்டும் எப்ப‌டி த‌வறாகும்?

காசுமீரை ச‌ட்ட‌ ஒழுங்கு பிர‌ச்ச‌னை என்று சுருக்கி பார்த்திட‌ முடியாது, அது ஒரு மீக‌ நீண்ட குருதி தோய்ந்த‌ வ‌ர‌லாற்றை கொண்டது. ம‌த்திய‌ ஆயுத‌ ப‌டையால் அனாதையாக‌ ஆக்க‌ப்ப‌ட்ட‌ சிறுவ‌ர்க‌ள் ம‌ட்டும் க‌ல்லெறிய‌ ஆர‌ம்பித்தால் உங்க‌ளால் 60,000 க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளை காண‌ முடியும், இவ‌ர்க‌ளுட‌ன் அர‌ச‌ ப‌டையால் வித‌வையாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளும் சேர்ந்தாலே 30,000 பெண்க‌ள் ஒவ்வொரு ப‌துங்கு குழி மற்றும் ஒவ்வொரு ப‌டை வீர‌ரை நோக்கியும் க‌ல்லெறிவ‌தை நீங்க‌ள் காண‌லாம்.

கையில் க‌ல்லுட‌ன் ஒரு சிறுவ‌ன் ப‌டை வீர‌ருக்கு எதிராக‌ வ‌ந்து நிற்கும் போது அவ‌னுக்கு படை வீரனுக்கும், தனக்கும் இடையே உள்ள‌ ப‌டை வ‌லுவின் வித்தியா‌ச‌ம் ந‌ன்கு தெரியும். அவ‌ன் என்ன தான் ச‌ரியாக‌ குறி பார்த்து எறிந்தாலும் ஒரு சிறிய‌ காய‌மோ அல்ல‌து ஒன்றிர‌ண்டு தைய‌ல்க‌ளுட‌னான‌ காய‌த்தை ம‌ட்டும் தான் ப‌டை வீர‌னுக்கு கொடுக்க‌ முடியும் இத‌ற்கே அவ‌ன் ப‌டைவீர‌னின் காலில் உள்ள‌ பாதுகாப்பு உறை, குண்டு துளைக்காத‌ மேல் ச‌ட்டை, த‌லைக் க‌வ‌ச‌ம் இதை எல்லாம் மீறி அவ‌ன் எறியும் க‌ல் செல்ல‌ வேண்டும். ஆனால் படை வீர‌னின் துப்பாக்கியில் இருந்து வ‌ரும் துவ‌க்கு(Bullet) ம‌ற்றும் படை வீரன் எறியும் க‌ண்ணீர் புகைக்குண்டுக‌ளினால் அந்த‌ சிறுவ‌ன் மிக‌க் க‌டுமையாக‌ பாதிக்க‌ப்ப‌ட‌லாம் அல்ல‌து உயிரையும் கூட‌ இழ‌க்க‌க்கூடும் என்ப‌து அந்த‌ சிறுவ‌ன் ம‌ற்றும் ப‌டைவீர‌ன் என இருவ‌ருக்குமே தெரியும்.

த‌ன‌து ஆயுத‌மாக‌ எப்பொழுது அந்த‌ சிறுவ‌ன் க‌ல்லை கையிலெடுக்க‌த் தொட‌ங்கினானோ அப்பொழுதே அவ‌ன‌து போராட்ட‌ம் ச‌மூக‌ நெறிகளின் படி(Social Moral) உய‌ர் நிலையை அடைந்துவிடுகின்ற‌து. அந்த‌ சிறுவ‌ன‌து நோக்க‌ம் ப‌டைவீர‌னை கொல்வ‌து தான் என்ப‌து மிக‌வும் முட்டாள்த‌ன‌மான‌ ஒரு க‌ருத்து. இந்த‌ ஒரு கார‌ண‌த்தினால் தான் க‌ட‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌டைபெற்றுவ‌ரும் க‌ல்லெறியும் போராட்ட‌ங்களில் ஒரு ப‌டை வீர‌னோ, காவ‌ல் துறையைச் சேர்ந்தோரோ கூட‌ இதுவ‌ரை இற‌க்க‌வில்லை. ஐந்து க‌ல்லெறியும் போராளிக‌ளுக்கு ந‌டுவே சிக்கிக்கொண்ட‌ காவ‌ல்துறை அல்ல‌து ப‌டை வீர‌ர்க‌ள் ப‌ல‌ர‌து புகைப்ப‌ட‌ங்க‌ளை நாம் பார்த்திருக்கின்றோம் ஆனால் இவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் கூட‌ இது வ‌ரை இற‌ந்த‌தில்லை என்ப‌து ம‌றுக்க‌முடியாத‌ உண்மை.

உலகமும், இந்தியாவும் தங்கள் துயரமான வரலாற்றை கேட்பார்கள் என பல காலம் காசுமீரிக‌ள் காத்திருந்த‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ளின் மொழியை யாரும் புரிந்துகொள்ள‌வில்லை. இத‌னால் எல்லா ம‌னித‌ர்க‌ளும் புரிந்த‌ ஒரு மொழியில் பேச‌ வேண்டும் என‌ காசுமீரிக‌ள் எண்ணினார்க‌ள். க‌ட‌ந்த‌ இர‌ண்டு மாத‌ங்க‌ளாக‌ க‌ல்லெறியும் மொழியின் மூல‌மாக‌ த‌ங்க‌ள் துய‌ர‌த்தை காசுமீரிக‌ள் உல‌க‌த்தாரிட‌ம் எடுத்துக் கூறுகின்றார்க‌ள்.

எந்த‌ தாயிட‌ம் உங்க‌ள் குழ‌ந்தைக‌ளை வெளியே அனுப்ப‌ வேண்டாம் என‌ ப‌ரூக் அப்துல்லா கேட்டுக் கொண்டாரோ அந்த‌ தாயே வீதிக‌ளுக்கு வ‌ந்து க‌ல்லெறிய‌ துவ‌ங்கியுள்ளார். க‌ட‌ந்த‌ மாத‌ம் தொலைக்காட்சியில் “இல‌சுக‌ர் இ தொய்பாவின்” பணத்திற்காக‌ இந்த‌ க‌ல்லெறித‌ல் நிக‌ழ்வ‌தாக‌ காட்டிய‌ போது அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” நான் என‌க்கு அடையாள‌ம் தெரிந்த‌ சில‌ரை பார்த்தேன். அவ‌ர்க‌ள் இருவ‌ரும் எனது வீட்டிற்கு ப‌க்க‌த்தில் வ‌சிக்கும் இரு பெண்க‌ள். 2005ஆம் ஆண்டு அந்த‌ பெண்க‌ளின் த‌ம்பியை ம‌த்திய‌ ஆயுத‌ப் ப‌டை கைது செய்து அழைத்துச் சென்ற‌ பொழுது இவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் வெறும் கால்க‌ளில் ம‌த்திய‌ ஆயுத‌ப் ப‌டை வ‌ண்டியை துரத்திக் கொண்டு நெடுதூர‌ம் சென்றார். ப‌த்து நாட்க‌ளுக்கு பிற‌கு அந்த‌ பெண்ணின் த‌ம்பியின் உட‌ல் ப‌க்க‌த்து தெருவில் கிட‌ந்த‌து. அவ‌ன‌து தோல்க‌ள் எரிந்த‌ நிலையில் இருந்த‌ன‌. அவ‌ன‌து உட‌லில் க‌ன‌ர‌க‌ ச‌க்க‌ரங்கள் ஏறிய‌து போலிருந்த‌து. அவ‌ன‌து பிற‌ப்புறுப்பில் மின்சார‌ க‌ம்பிக‌ள் இருந்த‌ன‌. இந்த‌ நிகழ்வுக்கு பின்னால் அந்த‌ பெண்க‌ள் முன்பு போல் இல்லை. 1995ல் த‌ன‌து க‌ண‌வ‌னை தொலைத்து விட்ட‌ (காணாம‌ல் போன‌) ஒரு பெண்ணையும் நான் அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” பார்த்தேன். அர‌ச‌ ப‌டையால் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌க‌னை ப‌றிகொடுத்த‌ தாயை நான் அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” பார்த்தேன். அந்த‌ கூட்ட‌த்தில் இருந்த‌ ஒவ்வொருவ‌ரின் பின்னும் கடந்த‌ 20 வருடங்களாக சொல்லாத துய‌ர‌மான‌ க‌தை உண‌டு அதை அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் கைக‌ளில் உள்ள‌ க‌ல்லின் மூல‌மாக‌ சொல்லுகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள் எறியும் க‌ல் ப‌டைவீர‌ரை நோக்கி செல்கின்றதா என்ப‌து அவ‌ர்க‌ள் நோக்க‌ம‌ல்ல‌. அவ‌ர்க‌ள் நோக்க‌ம் க‌ல்லை எறிவ‌து ம‌ட்டும் தான். குறிபார்த்து அடிப்ப‌து அல்ல‌. இத‌ற்காக‌ தான் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வீடுக‌ளை விட்டு வெளியில் வ‌ந்துள்ள‌ன‌ர்.

பெண்க‌ள் தான் இந்த‌ பிர‌ச்ச‌னையில் மிக‌வும் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். க‌ற்ப‌ழிப்புக‌ளும், பாலிய‌ல் வ‌ன்முறைக‌ளும் அர‌ச‌ ப‌டைக‌ள் ந‌ட‌த்தும் உள‌விய‌ல் தாக்குத‌ல்க‌ளாகும். ஆனால் இவை எல்லாம் மிக‌வும் குறைத்தே இது வ‌ரை ம‌திப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. ஆனால் அந்த‌ வ‌லி பெண்க‌ளுக்கும், ம‌ன‌விய‌ல் ம‌ருத்துவ‌ர்க‌ளுக்கும் ம‌ட்டுமே தெரிந்த‌ ஒன்றாகும். க‌ல்லெறிவ‌தை அவ‌ர்க‌ள் இராணுவ‌த்திற்கு த‌ரும் பேதி ம‌ருந்தாக‌ பார்க்கின்ற‌ன‌ர். ஒவ்வொரு முறை க‌ல்லை எறியும் போதும் த‌ங்க‌ள் இத‌ய‌க்கூட்டினுள் எரிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு பாட‌த்தையும் அவ‌ர்க‌ள் இராணுவ‌த்திற்கு க‌ற்பிக்கின்ற‌ன‌ர்.

சில‌ வார‌ங்க‌ளுக்கு முன்பு பாட்டிமலூவில் உள்ள த‌ன‌து வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த‌ என‌து அத்தையின் மகன் அதாரை உன்னை நாங்க‌ள் கொன்று விடுவோம் என‌ மிர‌ட்டி உள்ள‌ன‌ர் ம‌த்திய‌ ஆயுத‌ ப‌டையைச் சார்ந்த‌வ‌ர்க‌ள். அவ‌ன் உள்ளே சென்று ஒழிந்து கொண்டான். என‌து  அத்தையின் ப‌த்து நிமிட‌ கெஞ்ச‌லுக்கு பின்ன‌ரே அவ‌ன் ப‌டைவீர‌ர்க‌ள் அவ‌னை பார்த்து மிர‌ட்டிய வார்த்தைக‌ளை சொன்னான். என‌து அத்தை வ‌ணிக‌வியலில் இளங்கலை ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர். கோப‌த்தில் த‌ன் க‌ண்க‌ளில் வ‌ந்த‌ க‌ண்ணீரை துடைத்துக் கொண்டு த‌ன‌து வீட்டின் அருகே ந‌ட‌ந்து கொண்டிருந்த‌ விடுத‌லை போராட்ட‌ ஊர்வ‌ல‌த்தில் த‌ன்னையும் த‌ன் ம‌க‌னையும் இணைத்து கொண்டு, தங்களின் பயன் போகும் வரையில் விடுத‌லை முழக்கங்க‌ளை எழுப்பினார். இது அவர்களுக்கு பயனும் தந்தது. அவ‌ர்க‌ள் இருவ‌ருமே வீட்டை விட்டு வ‌ந்து இது போன்ற‌ ஊர்வ‌ல‌த்தில் க‌ல‌ந்து கொள்வ‌து இது தான் முத‌ல் முறை. என‌து அத்தை த‌ன‌து கைக‌ளில் உள்ள‌ ரூபாய் நோட்டுக‌ளில் எல்லாம் “இந்தியாவே வெளியேறு, இந்தியாவே திரும்பி போ (Go India, Go Back)” என்ற‌ வாச‌க‌ங்க‌ளையும், அந்த‌ ஐந்து வ‌ய‌து சிறுவ‌னோ அதே வாச‌க‌ங்க‌ளை த‌ன‌து வீட்டு சுவ‌ர்க‌ளில் எழுதிவைத்தான். இந்த‌ ஒரு வாக்கிய‌ம் ம‌ட்டும் தான் அவ‌னுக்கு ஆங்கில‌த்தில்  அவ‌னுக்குத் தெரியும்.இது போன்ற‌ சிறுவ‌ர்க‌ள் தான் சிறீந‌க‌ரின் அடைக்க‌ப்ப‌ட்ட‌ க‌டைக் க‌த‌வுக‌ளிலும், யாருமில்லாத‌ சாலைக‌ளிலும், சுவ‌ர்க‌ளிலும் இது போன்ற‌ விடுத‌லை முழ‌க்க‌ங்க‌ளை எழுதுகின்ற‌ன‌ர்.

பாகிசுதான், ஆப்கானிசுதான் போன்ற‌ பிர‌ச்ச‌னைக‌ளை எல்லாம் தாண்டி காசுமீர் விடுத‌லை நிக‌ழ்வு சென்று விட்ட‌து. காசுமீர் துப்பாக்கிக‌ளிலிருந்து விடுதலை முழ‌க்க‌ங்க‌ளுக்கு மாறிவிட்ட‌து. இதில் க‌ல்லெறிவ‌து கூட‌ த‌ங்க‌ள் அமைதி வழி போராட்ட‌ம் அர‌சால் மிக‌க்க‌டுமையாக‌ அட‌க்க‌ப்ப‌டும் போது ம‌ட்டுமே நிக‌ழ்கின்ற‌து. 2008ல் 3 இல‌ட்ச‌ம் ம‌க்க‌ள் வீதிக‌ளுக்கு வ‌ந்து ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளுக்கு எதிராக‌ ம‌னித‌ ச‌ங்க‌லி போராட்ட‌ம் ந‌ட‌த்தின‌ர். அப்பொழுது ஒருவ‌ர் கூட‌ எந்த‌ ஒரு ப‌துங்கு குழியையும், ப‌டை வீர‌ரையும் தொட‌க்கூட‌ இல்லை. ஆனால் இந்த‌ வ‌ருட‌ம் காசுமீர் ம‌க்க‌ளின் அமைதி ஊர்வ‌ல‌ங்க‌ள் அரசால் க‌ட்டாய‌மாக‌ த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌. கூட்ட‌த்தை க‌லைப்ப‌தற்காக‌ ம‌க்களை சுடுவதற்கு இராணுவ‌த்திற்கு அனும‌தி கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த வருடத்தில் எந்த‌ ஒரு சூழ்நிலையிலும் ம‌க்க‌ள் கூடுவ‌த‌ற்கு இராணுவ‌ம் அனும‌தியே கொடுக்க‌வில்லை. இறுதி ஊர்வ‌ல‌த்தில் சென்ற‌வ‌ர்க‌ளை நோக்கி அவ‌ர்க‌ள் ப‌ல‌முறை சுட்ட‌ன‌ர். இத‌னால் ப‌ல‌ர் க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளாக‌ ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ள்.

காசுமீரில் இன்று இராணுவ‌த்தினால் ஒரு ம‌ருத்துவ‌மனையையோ, த‌ங்க‌ளுக்கு உத‌வக் கூடிய‌ வீட்டையோ காண்ப‌து அரிதான‌ ஒன்று. காசுமீரிக‌ள் இந்தியாவுட‌னான‌ த‌ங்க‌ள் பிர‌ச்சனையை துப்பாக்கிக‌ள் இல்லாம‌ல் தீர்வு காணுகின்ற‌ன‌ர். ஊட‌க‌ங்க‌ள் காசுமீரிக‌ளை பாகிசுதானின் உள‌வு நிறுவ‌ன‌த்தின் காசுக்காக‌வும், PDP யின் காசுக்காக‌வும் போராடுப‌வ‌ர்க‌ளை போல‌ காட்டும் போது நான் கடுமையான கோபத்திற்கு உள்ளாகின்றேன். சிறீந‌க‌ரின் எல்லா தொகுதிக‌ளையும் வென்ற‌து தேசிய‌ காங்கிர‌சு, PDP அல்ல‌. இந்த‌ இட‌ம் தான் க‌ல்லெறித‌லில் மிக‌ முக்கிய‌மான‌ ந‌க‌ர‌மாகும். இந்த‌ வ‌ருட‌த்தின் ஆர‌ம்ப‌த்தில் ஒரு நேர்காண‌லில் ப‌ரூக் அப்துல்லாவிட‌ம் இந்த‌ கேள்வியை கேட்டேன், நீங்க‌ள் உங்க‌ளை காசுமீரிக‌ளின் த‌லைவ‌ராக‌ பார்க்கின்றீர்களா?, அல்ல‌து காசுமீரில் உள்ள‌ ஒரு அர‌சிய‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ பார்க்கின்றீர்க‌ளா?. அவ‌ர் மிக‌வும் கோப‌மாக‌ சொன்னார் நான் 60 விழுக்காடு வாக்குக‌ள் வாங்கி வெற்றி பெற்றுள்ளேன். இப்பொழுது அந்த‌ வாக்குக‌ள் எல்லாம் எங்கு சென்று விட்ட‌ன‌ என‌ எண்ணுகிறார் அவ‌ர்?

க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளும், அமைதி வ‌ழியில் போராடுப‌வ‌ர்க‌ளும் தீவிர‌வாதிக‌ள் என்று முத்திரை குத்த‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌டுவ‌து தொட‌ர்ந்தால் காசுமீரிக‌ள் தாங்க‌ள் முன்பு வைத்திருந்த‌ துப்பாகிக‌ளை க‌ண்டிப்பாக‌ மீண்டும் கையிலெடுப்பார்க‌ள். உல‌கிலேயே அதிக‌ ஆயுத‌ கொள்வ‌ன‌வு செய்யும் நாடான‌ இந்தியாவிற்க்கும், காசுமீரில் உள்ள‌ 7,00,000 துருப்புக‌ளுக்கும் எதிரான‌ இன்னொரு ஆயுத‌ புர‌ட்சியும் தீவிர‌வாத‌ம் என்ற பெயரில் மறைத்து அழிக்கப்படும். AK 47 துப்பாக்கிக்கு எதிராக‌ கையில் க‌ல்லுட‌ன் மோதும் இன்றைய‌ த‌லைமுறை இளைஞ‌ர்க‌ள் கையில் உள்ள‌ க‌ல்லை கீழே வைத்து விட்டு தாங்க‌ளும் AK 47 துப்பாக்கியை கையிலெடுத்தால் நிலைமை 1990க‌ளில் இருந்த‌தைவிட‌ மிக‌ மோச‌மாக‌ மாறிவிடும். காசுமீர்க‌ளுக்கு தெரியும் எவ்வாறு ஆயுத‌ப் போராட்ட‌ம் த‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளையே அரித்து தின்னும் என்று, ஆனாலும் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் விடுத‌லைக்காக‌ அதைச் செய்வார்க‌ள். ஆனால் த‌ற்போது காசுமீர் போராட்ட‌ம் வெறும் க‌ற்க‌ளுட‌ன் ம‌ட்டுமே ந‌டைபெறுகின்ற‌ன‌து. ஆனால் த‌ங்க‌ளைச் சுற்றி உள்ள‌ இந்த‌ க‌ண்ணாடி மாளிகைக‌ள் அப்ப‌டியே இருக்காது. போர் மிக‌த் தீவிர‌மான‌ ஒன்றாக‌ மாறும், இருந்த‌போதிலும் என்னுள் உள்ள‌ அமைதி விரும்பி அந்த‌ நிலைக்கு காசுமீர் த‌ள்ள‌ப்ப‌டாது என்று கூறுகிறான்.

காசுமீரில் இசுலாம் என்ற‌ வார்த்தை தொன்று தொட்டு இருந்து வ‌ருகின்ற‌து, இதை காசுமீரிக‌ள் த‌ங்க‌ளுக்கே உரிய‌ த‌னித்துவ‌ முறையில் புரிந்துகொண்டுள்ள‌ன‌ர். என‌து தாயார் புனித‌ த‌ள‌ங்க‌ளுக்கு செல்வார். என‌து பெண் தோழியும் கூட‌. என‌க்கு தெரிந்த‌ எல்லா பெண்க‌ளும் அங்கே செல்வார்கள். ம‌சூதிக‌ளை விட‌ அதிக‌மான‌ கூட்ட‌ம் இந்த‌ புனித‌ த‌ள‌ங்க‌ளில் எப்போதும் இருக்கும். சூபி இசுலாம் இங்கு ப‌ல‌ நூறு வ‌ருட‌ங்க‌ளாக‌ இருந்து வ‌ருகின்ற‌து. இந்த‌ புர‌ட்சிக‌ளும் கூட‌ ஒழுக்கு நெறிக‌ளை பின்ப‌ற்றியே ந‌ட‌க்கின்ற‌து. காசுமீரிக‌ள் ப‌ணிவான‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் விட்டுக் கொடுப்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தை எப்பொழுது எங்களின் ப‌ல‌வீன‌மாக‌ அர‌சு க‌ருத‌ ஆர‌ம்பிக்கின்ற‌தோ அப்பொழுது அர‌சு அட‌க்குமுறை த‌க‌ர்க்க‌ப்ப‌டும்.

1990க‌ளில் காசுமீர் ப‌ண்டிட்டுக‌ளுக்கு என்ன‌ ந‌டைபெற்ற‌து என்ப‌து என‌க்கு தெரியாது. நான் அப்பொழுது சிறிய‌வ‌ன். ஆனால் இன்று அந்த‌ நிக‌ழ்வு ப‌ல‌ திரிபுக‌ளுக்கு உள்ளாகிவிட்ட‌து. காசுமீரில் ப‌ண்டிட்டுக‌ளையே காணாத‌ இசுலாமிய‌ இளைய‌ த‌லைமுறைக‌ளில் நானும் ஒருவ‌ன். ஆனால் அந்த‌ வ‌ருட‌ம் என்ன‌ ந‌டைபெற்ற‌து என்ப‌து ப‌ற்றிய‌ ப‌ல‌ க‌தைக‌ளை நான் கேள்விப்ப‌ட்டுள்ளேன். எப்பொழுதெல்லாம் அன்று என்ன‌ ந‌டைபெற்ற‌து என‌ தெளிவாக‌ தெரிந்துகொள்ள‌ ஆர‌ம்பிக்கின்றோனோ அப்பொழுதே அது தெளிவில்லாம‌ல் செல்ல ஆரம்பிக்கின்றது. எங்க‌ள‌து பழைய குடும்ப‌ புகைப்ப‌ட‌ங்க‌ளில், ப‌ல‌ காசுமீர் ப‌ண்டிட்டுக‌ளை நான் பார்த்த‌துண்டு. எங்க‌ள‌து குடும்ப‌த்தை பொருத்த‌வ‌ரையில் ப‌ண்டிட்டுக‌ளுக்கு எதிராக‌ பேசுவ‌து த‌வ‌று, அவ‌ர்க‌ள் விடுத‌லையை எதிர்க்கும் வ‌ல‌து சாரி இய‌க்க‌த்தை சார்ந்த‌வ‌ர்க‌ளாக(இதை ஒரு மத போராட்டமாக பார்ப்பவர்கள்) இருந்தாலும் ச‌ரி. ப‌ண்டிட்டுக‌ள் மீண்டும் அவ‌ர்க‌ளின் பூர்விக‌ நில‌ங்க‌ளில் வ‌ந்து குடியேற‌ வேண்டும். என்னை போன்ற‌ இளைஞ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை வேறு யாரோ ஒருவ‌ர் என‌ எண்ணாம‌ல் ந‌ண்ப‌ர்க‌ள் போல‌ ப‌ழ‌க‌வேண்டும் என்ற‌ எண்ண‌ம் என்னுள் எப்போதும் உண்டு.

என்னை பொருத்த‌வ‌ரை காசுமீர் என்ப‌து கென்றி காரிட்ட‌ர் பிர‌ச‌னின் புகைப்ப‌ட‌த்தை போல‌. அந்த‌ புகைப்ப‌ட‌த்தில் ஒரு பெண்க‌ள் கோ.இ.மார‌ன் ம‌லை உச்சியில் நின்று கொண்டு த‌ங்க‌ள‌து தெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்கிக் கொண்டிருப்பார்க‌ள். ஒருவ‌ர் ப‌ழைய‌ காசுமீரி ப‌ர்காவிலும், இன்னொருவ‌ர் காசுமீரின் பாரம்பரிய‌ உடையுட‌னும் ம‌லைக‌ளையும், அக‌ண்ட‌ வான‌வெளியை பார்த்த‌ மாதிரி இருப்பார்க‌ள். அவ‌ர்க‌ளின் இறைவ‌ழிபாட்டு முறைகளில் வேறுபாடிருப்பினும், அவ‌ர்க‌ளின் கோரிக்கை ஒன்றாக‌ இருந்த‌து. இந்த‌ பிர‌ச்ச‌னை ஏற்க‌ன‌வே அவ‌ர்க‌ள் பாதுகாப்பின்மையை ஏற்ப‌டுத்தியுள்ள‌து. அமைதி வ‌ழி போராளிக‌ள் கொல்ல‌ப்ப‌டுவ‌து தொட‌ர்ந்தால் இந்த‌ பெண்க‌ளும் ஒரு நாள் காணாம‌ல் போய் விடுவார்க‌ள். நாம் க‌ன‌வு க‌ண்ட‌ காசுமீர் க‌ன‌விலேயே போய்விடும் போல் உள்ளது.

ஐந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் நானும் “விடுத‌லை” போராட்ட‌ம் முடிவ‌டைந்து விட்ட‌தாக‌ நினைத்தேன். ஆனால் துப்பாக்கிக‌ளிலிருந்து க‌ல் என்ற ஆயுதமாக‌ மாற எடுத்துக் கொண்ட‌‌ கால‌ம் தான் அது என்ப‌து என‌க்கு இன்று புரிகின்ற‌து. 1953க‌ளில் ச‌ர்வ‌ச‌ன‌ வாக்கெடுப்பு என்று இருந்த‌து. 1970க‌ளின் ஆர‌ம்ப‌த்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமான “Al Fatah” (அல் பாத்தா என்பதற்கு வெற்றி எனப் பொருள். இந்த இயக்கம் முன்னெடுத்த போராட்டமே சுய நிர்ணய உரிமை போராட்டம் ஆகும்)  என்றானது , 1989க‌ளில் ச‌ம்மு காசுமீர் விடுத‌லை அமைப்பு என்றான‌து, இன்று ஒன்ப‌து வ‌ய‌து க‌ல்லெறியும் சிறுவ‌ன் என்றிருக்கும் போராட்ட‌ நிலையில் என்றும் விடுத‌லை முழ‌க்கம் ம‌ட்டும் மாற‌வே இல்லை. போராட்ட‌ வ‌ழிமுறைக‌ள் ம‌ட்டுமே மாறியுள்ள‌ன‌.

“பெரிய‌ பொருளாதார மற்றும் அதிகார‌ போட்டியில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் நாடான‌ இந்தியா” காசுமீரி ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளை க‌வ‌ர  ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ கோடிக‌ளை செல‌வு செய்து முய‌ற்சி செய்த‌து. பெரும்பான்மையானோர் அந்த‌ ப‌ண‌த்தை பெற்றிருப்பினும் த‌ங்க‌ள் உண‌ர்வுக‌ளை ஒரு பொழுதும் அவர்கள் மாற்றிகொள்வ‌தாயில்லை. இது வ‌ழிமுறை 1. இது ச‌ரியாக‌ ந‌டைபெறாத‌தால் வ‌ழிமுறை 2ல் த‌வ‌றான‌ ந‌ப‌ர்க‌ளுக்கு ந‌ட்ச‌த்திர‌ விடுதிக‌ளில் க‌வ‌னிப்பு ந‌ட‌ந்த‌து. ஆனால் அதுவும் வேலை செய்ய‌வில்லை. இந்தியா த‌ன‌து ப‌ண‌த்தையும், ஆயுத‌த்தையும் கீழே வைத்து விட்டு காசுமீர் பிர‌ச்ச‌னையை காசுமீரிக‌ளுட‌ன் பேச்சுவார்த்தை ந‌ட‌த்தி தீர்க்க‌ வேண்டும். இர‌ண்டு வ‌ழிக‌ளில் இப்பிர‌ச்ச‌னைக்கு தீர்வு காண‌லாம். முதலில் இதை பிரச்சனை என்றுணர்து, பிர‌ச்ச‌னையில் ச‌ம‌ ப‌ங்குள்ள‌வ‌ர்க‌ள் என‌ க‌ருதி தில்லி காசுமீரி ம‌க்க‌ளுட‌ன் ச‌ரியான‌ முறையில் பேச்சுவார்த்தை ந‌ட‌த்தி  தீர்வு காண்ப‌து. அல்ல‌து இது ச‌ட்ட‌ம் ஒழுங்கு பிர‌ச்ச‌னை என‌க் கூறி நோயை அல்லாம‌ல் நோயின் அறிகுறிக‌ளை ம‌ட்டும் குண‌ப்ப‌டுத்தும் வேலையில் ஈடுப‌டுத‌ல். தேசிய‌ காங்கிர‌சு PDP போன்ற‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் கூறும் இந்திய‌ அர‌சமைப்பின் எல்லைக்குள் “சுயாட்சி” போன்ற‌வ‌ற்றை எல்லாம் மைய‌ அர‌சு தூக்கியெறிந்து ப‌ல‌ நாளாகி விட்ட‌து.

ம‌க்க‌ள் கூட்ட‌மைப்பின் த‌லைவ‌ர் “சாச்ச‌த் லோனோ கூறும் “அடையக்கூடிய‌ தேசிய‌ம்” என்ப‌தை ப‌ற்றி இர‌ண்டு வ‌ருட‌மாக‌ ஒருவ‌ர் கூட இதுவரை வாயே திற‌க்க‌வில்லை. குரியத் கூட்டமைப்பின் தலைவரான மிர்வாசு உமர் கூறுகையில் “தில்லியுட‌ன் பேச்சுவார்த்தை ந‌ட‌த்துவ‌த‌ன் மூல‌ம் நா‌ங்கள் எங்கள் நேர்மை ம‌ற்றும் ந‌ம்ப‌க‌த்த‌ன்மையை ஊசலாட்ட‌தில் வைத்துள்ளோம்” என்கிறார். இந்தியா வெறும் புகைப்ப‌ட‌த்திற்கு ம‌ட்டும் அல்லாம‌ல் குறைந்த‌ப‌ட்ச‌ம் நேர்மையுட‌ன் பேச்சு வார்த்தை ந‌ட‌த்தும் என‌ நாங்க‌ள் ந‌ம்புகின்றோம் என்றார் அவ‌ர்.

இந்திய‌ ப‌டை வீர‌ர்க‌ளோ மிக‌வும் ஏழ்மையான‌ கிராம‌த்திலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கையை யாரும‌ற்ற‌ ப‌துங்கு குழிக‌ளில் க‌ழிக்கின்ற‌ன‌ர். கல்லுக்கு பதிலாக காசுமீர‌த்து சிறுவ‌ர்க‌ளின் வாழ்க்கையை முடித்து விடுகின்றார்க‌ள். சுற்றி போட‌ப்ப‌ட்டுள்ள‌ முள்வேலிகள், உளவிய‌ல் ரீதியான‌ கோளாறுக‌ளால் அதிக‌ ப‌ட்ச‌மான‌ த‌ற்கொலைக‌ளும், தங்க‌ள் குடும்ப‌த்தின‌ரையே கொலை செய்த‌ல் போன்றவையும் காசுமீரில் மிக‌ அதிக‌ அள‌வில் உள்ள‌ன‌. இந்தியா இவ‌ர்க‌ளை தேச‌ ப‌க‌திக்காக‌ எரியும் மெழுகாய் ம‌ட்டும் பார்க்காம‌ல் த‌குதி வாய்ந்த‌ குடிம‌கன்க‌ளாய் என்று பார்க்க‌த் தொட‌ங்குகின்ற‌தோ அன்று தான் காசுமீரிக‌ளுக்கும், ப‌டையின‌ருக்கும் உண்மையான‌ விடுத‌லை ஆகும்.

இந்தியா ஒன்று காசுமீரை விட்டு வெளியேற‌லாம் அல்ல‌து அங்குள்ள ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இட‌ம்பிடிக்க‌லாம். ஆனால் 63 வ‌ருட‌ங்க‌ளாகியும் இந்தியாவால் காசுமீர் ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இட‌ம்பிடிக்க‌ முடிய‌வே இல்லை.

________________________________________________________________________________

மூலப்பதிவு : http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne280810Iamapracifist.asp

த‌மிழாக்க‌ம். ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்.

________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்