Saturday, August 2, 2025
முகப்பு பதிவு பக்கம் 814

வெண்மணிச் சரிதம்

31

வெண்மணிச் சரிதம்

vote-012அரவம் திரியவும் அஞ்சிடும் முன்பனி
கறவை மாடும் கண்திறவாத அதிகாலை
சேவல் கூவும் முன்னே
பண்ணையின் கொம்பூதும்.
மடையின் கைநீரள்ளி முகம் கழுவி
வயலுக்கு ஓடவேண்டும் கூலிவிவசாயி.

இரண்டாவது கொம்பொலிக்கு
நெஞ்சுக் கலயம் உடையும் வண்ணம்
கஞ்சிக் கலயத்துடன் ஓடவேண்டும் பெண்கள்

கழனிக்குள் இறங்கியவுடனேயே
“ஓ” வெனும் ஓசையெழுப்பி
உழைக்கத் தொடங்கியதை
நிலவுடமையாளனின் உலை மனதில்
பதிய வேண்டும் உழைக்கும் மக்கள்.

நாற்றங்கால் சேற்றுத் தண்ணீரில்
உச்சிக்கு வந்த கதிரவன் தட்டுப்படும்போதே
சோற்றுக் கலயத்தை தொட அனுமதியுண்டு.
வெறும் வயிற்றில் துடித்து விழும்
வியர்வையின் சூடு பட்டு
வயல் நண்டு துடித்தோடும்.

களைத்த விரல்களுக்கு
பழஞ்சோறு இதமாகும்.
ஓரிரு பருக்கைகளுக்கு
உதடுகள் தடுமாறும்
பட்டமிளகாயும், உப்பும்
பரிதாபப்பட்டு நீராகாரத்தில் விழுந்த சூரியனும்
தொட்டுக்கை.

சூரியனிருக்கும் வரைச் செய்யும்
“கொத்து வேலை” எப்போதாவது,
அரிக்கேன் விளக்கொளியில்
கண்ணெரியும் வேலை எப்பொழுதும்.

நீளும் வேலையின் முடிவில்
நிலவு காய்த்து விடும்…
அல்லி மலர்ந்து
குளம் ஆவியிழந்துவிடும்..

வேலை முடிந்ததும் நேரே
குடிசைக்கு போகவியலாது
பண்ணையார் வீட்டில் பல
’வெட்டிவேலை’ கூப்பிடும்
வரப்பு காயாமல் வைத்தவன் பிள்ளை
தாய்ப்பாலுக்கு ஏங்கி
உதடுகள் காய்ந்து வெடித்திடும்.

படியாள் வீட்டு அடுப்புச் சாம்பலும்
பண்ணை வயலுக்கே சொந்தம்!
கூலி விவசாயி குடிசையிற் படர்ந்த சுரைக்காயும்
பண்ணையார் அடுப்படிக்கே சொந்தம்!
இதைவிடக் கொடுமை,
பண்ணையடிமைகள் முதலிரவும்
பண்ணையார் படுக்கைக்கே சொந்தம்!

இமைகளை நிமிர்த்தி.. எதிர்த்துப் பார்த்தால்
”சவுக்கடியும்”, ”சாணிப்பாலும்” தண்டனை
இதுதான் அன்றைய நிலப்பிரபுத்துவ தஞ்சை.

———-

தஞ்சைத் தரணியெங்கும் தனிப்பெரும் கோயில்கள்…
திருத்தலப் பெருமை பேசும் தடித்தடி சாமிகள்…
எல்லையில்லா சக்தி கொண்டதாய் சொல்லப்படும்,
எந்தவொரு தெய்வமும்
பண்ணையாதிக்க பாதகத்திற்கெதிராய்
புல் ஒன்றையும் புடுங்கக் காணோம்!

விவசாயத் தொழிலாளர்
விளைவித்த உபரியில்
கோயிலும், கூத்தியாளுமாய்
சாமியும் கும்மாளமடித்தது
நிலப்பண்ணைகளோடு.

மண்டையோட்டில் பசியாறும் மகேசனுக்கே
இரவு, பகல் பாராது படியளந்தனர்
அண்டைவெட்டும் விவசாயத் தொழிலாளர்.
இந்த லட்சணத்தில்,
உலகுக்கே படியளக்கிறானாம் ஈசன்!

உண்மையில்.. அவனது உமையம்மையின்
உண்டை கட்டிக்கும்
உழைத்துக் கொட்டுபவன் கூலி விவசாயி.

கட்டிய மனைவிக்கு
சோறுபோட வக்கில்லாதவனுக்கு
கட்டிய கோயில்கள் எத்தனை… எத்தனை…

பொறிதட்டிப் போய் உழைப்பாளர் பிடுங்கிவிட்டால்
எனும் பயத்தில் கட்டிய கதைகள் எத்தனை… எத்தனை…

சிவன் சொத்து குல நாசமாம்- பல
குலங்களை அழித்தே சிவனுக்கு சொத்து!
எனும் உண்மையை விவசாய நிலம் பேசும்!

எல்லோர்க்கும் ஈசனல்ல… இவன்
பொல்லாத பண்ணைகட்கு காவல் நின்று
ஏழை விவசாயிகள் மேல்
ஏவப்பட்ட அல்சேசன்.

கடவுளின் பெயரால்,
இனாம்தார், பிரம்மதேயம் எனும் பெயரில்
ஏக்கர் கணக்கில் நிலங்களை வளைத்து
”கலம் கலமாய்”
கூலி விவசாயி குலங்களை  அறுத்து
பண்ணையடிமைகள் உழைப்பை
வெண்ணையாய் நக்கின
பார்ப்பன நகங்களும், சூத்திர மடங்களும்

வெள்ளம், புயலால்
விளைச்சல் குறைந்தால்,
கூலிவிவசாயி அளக்கும்
வாரம், குத்தகை அளவு குறைந்தால்
கூலியின்றி அவர் வயிற்றிலடித்த மடங்கள்.
கோபுரத்தினின்று அவர் விழுந்து செத்த
சைவக் கொலைகள்!

இசைவான நெல்லளக்காத குற்றத்திற்காக
கசையடிகள் கொடுத்திட்ட காட்சிகளை
காட்டிநிற்கும் சோழமண்டல சிற்பங்கள்!

தஞ்சை வடபகுதி;
தருமபுரம், திருப்பனந்தாள்,
அகோபில சங்கரமடம்,

தஞ்சை தென்பகுதி;
மதுக்கூர், பாப்பன்காடு
சிக்கவலம் ஜமீன்தார்கள்

தஞ்சை நடுப்பகுதி;
வடபாதி மங்கலம், நெடும்பலம்
கோட்டூர், வலிவலம், குன்னியூர்
பூண்டி, உக்கடை, கபிஸ்தலம்

எங்கும் பண்ணையாதிக்கத்தின் கொடும் பலம்.

கபிஸ்தலமும் குன்னியூரும்
காங்கிரசுப் பண்ணைகள்.

வடபாதியும், நெடும்பலமும்
நீதிக்கட்சி பண்ணைகள்.

ஏழை கூலிவிவசாயிகள் சுயமரியாதைக்காக
எந்தத் ’திராவிடமும்’ பேரியக்கம் கண்டாரில்லை,
தாழ்த்தப்பட்ட விவசாய வர்க்கத்திற்காக
’தலித் தம்பிரான்களும்’ ஓரியக்கம் விண்டதில்லை.
எதிர்த்துக் கேட்பாரில்லை…

’பார்ப்பன, சூத்திரப்’ பண்ணையம்
என ஏங்கிக் கிடந்த கழனியெங்கும்
செங்கொடி இயக்கம் துளிர்த்தது!
சேற்றினில் நடுங்கிய கைகளில் ஒரு..
சிவப்புத் திமிர் முளைத்தது,

”அடித்தால் திருப்பி அடி!
ஏண்டி என்றால்.. ஏண்டா எனக் கேள்!
சாதி சொன்னால் மோதி நட!
உழுபவர்க்கே நிலம் சொந்தம்
உழைப்பவர்க்கே அதிகாரம்!”
எனக் கம்யூனிச இயக்கம்
கற்றுக் கொடுத்தது, களத்தில் விளைந்தது.

சுகந்தை என்றும், அமிஞ்சி என்றும்
பள்ளு என்றும், பறை என்றும்
பழிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தை
அதே ஊரில் தோழர் என்று நிமிர வைத்தது.

அகந்தை கொண்ட ஆதிக்க சாதியுணர்வை
அடியறுத்து
விவசாய சங்கமாய் ஒன்றிணைத்தது.

தென்பரை சேர்ந்தது
விதைநெல்லாய் கம்யூனிசம்
தஞ்சைக் கழனியெங்கும்
நடவு செய்தார் சீனிவாசராவ்.

விடுமோ பண்ணைகள்,
அவர் தலைக்கு விலை வைத்தனர்.

அவரோ.. தலைமறைவான போதும்
ஊருக்கு பல தலைகளை உருவாக்கிக் கொண்டே போனார்!

நெற்பயிற் காத்தது
அவர் ரகசிய பயணம்
வரப்பின் நெருஞ்சியும் இளகிடும்
அவர் ராத்திரி கால்தடம்
நீளும் வர்க்கப் போராட்டத்திற்கு
நிலவும் ஒத்துழைத்து
அவரை ஆற்றுப்படுத்திய
அமாவாசைக் கூட்டங்கள்.

களப்பால் குப்பு, தனுஷ்கோடி,
மணலூர் மணியம்மை.. இன்னும்
பெயர்கள் பலவாய் காய்த்தன செந்நெல்.
சங்கையே நெறித்த போதும்
விவசாய சங்கமே உயிரென
காவிரிப்படுகை கனன்று முழங்கின.

வேறுவழியின்றி…
கூலியுயர்வு, கொத்தடிமைத் தடை,
வாடா, போடி, சவுக்கடி, சாணிப்பால் நிறுத்தம்
என பண்ணைகள் கொஞ்சம் பதுங்கின.

சோழநாடு சோறுடைத்து
என்பதென்ன சிறப்பு!
ஆங்கே… கம்யூனிசம்
நிலப்பண்ணைகள் அதிகாரமுடைத்தது
உழைக்கும் வர்க்கத்தின் உயிர்ப்பு!

நேற்று வரை…
தன் நிழல் திரும்பிப் பார்க்கவே
தயங்கி நடந்த சேரிகள்…
பண்ணையை நிமிர்ந்து கேள்வி கேட்பதும்
பணிதல் மறந்து
சுயமரியாதையாய் வாழ்ந்து பார்ப்பதும்…
கூலி உயர்வை விட,
கொதிப்பேறியது ஆண்டைகளுக்கு.

தாழ்த்தப்பட்டவர்
என்பதற்காய் மட்டுமல்ல,
அரைலிட்டர் கூலி
அதிகம் கேட்டாரென்பதற்காய் அல்ல
தம்மை எதிர்க்கும் அரசியல் சக்தியாய் ஆனது கண்டு,
சாதியால் தகர்க்க முடியாத
செங்கொடி அமைப்பாய்..
உழைக்கும் மக்கள் எழுந்தது கண்டு
கலக்கமடைந்தனர் நிலப்பிரபுக்கள்.

வேரோடிய கம்யூனிசத்தின்
போராட்ட அழகோடு
பூத்துக் கிடந்தது வெண்மணி
தீராத  வன்மத்துடன்
அதைத் தீக்கிரையாக்க
தருணம் பார்த்தன பண்ணைகள்.
தோதாக அதன் கால்களுக்கு
செருப்பாய் கிடந்தன
தேசிய, திராவிடக் கட்சிகள்..

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து எட்டு
திசம்பர் இருபத்தைந்தாம் நாள் இரவு
அய்யோ!
ஆம்பல் பூத்த எங்கள் கீழவெண்மணி
சாம்பல் பூத்தது.
இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு
எனும் பண்ணைமிருகம் ஊரில் நுழைந்தது.

முதலில்.. அவன் கண்ணை உறுத்திய
செங்கொடியை வெட்டிச் சாய்த்தான்,
அவன் வர்க்கமடக்கிய
விவசாய சங்கத்தை திட்டித் தீர்த்தான்

”ஊரையே கொளுத்துங்கடா.. வெட்டிச்சாயுங்கடா”…
தீ நாக்கை திசைகளில் சுழட்டினான்.

அவன் வெறிப்பார்வைதனைப் பார்த்து
தெருநாய்கள் குரைப்பற்று ஓடியது.
கூடுகள் அடைந்த பறவைகளோ
குஞ்சுகள் கதற, திசை தேடியது
வேலியோரத்து திசம்பூர் பூ
வெந்து பிணமாய் நாறியது.
அய்யய்யோ… ஏனையில் கிடந்த பிள்ளையின் குரல்
எரிந்து, கருகி அடங்கியது.

தப்பியோட இராமய்யன் குடிசையில்
தஞ்சமடைந்த நாற்பத்தி நான்கு பேரை
வெளியே தாழிட்டு குடிசையோடு கொளுத்தினான்
கோபால கிருஷ்ண நாயுடு.

நெருப்புக்கும் இரக்கம் வந்து
நின்று விடுமோ எனப் பயந்து
மேலும், மேலும் எண்ணையை ஊற்றி
எரிதழல் மூட்டினான்.

எரியும் நெருப்பையும் தாண்டித்
தன் பிள்ளையாவது பிழைக்கட்டும் என
ஒரு தாய் வெளியில் தூக்கி எறிந்தாள் குழந்தையை.
இதயமிழந்த இரிஞ்சூர் கும்பலோ
தப்பியக் குழந்தையை துண்டாய் வெட்டி
எரியும் குடிசையில்  எறிந்து மகிழ்ந்தது.

வர்க்கப் போருக்கு
இனி வாரிசே இல்லையென
திமிரில் சிரித்தான் இரிஞ்சூர் நாயுடு

திரும்பச் சிரித்தது உயர்நீதி!
காரோட்டும் கவுரமான கைகள்
இப்படியொரு காரியத்தை செய்யாதென
விடுதலை செய்து
கொடூரன் கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு
ஆரத்தி எடுத்தது நீதிமன்றம்.

கூலி உயர்வு கேட்டான் அத்தான்
குண்டடி பட்டுச் செத்தான்… என
வசனம் பேசிய தி.மு.க. அரசும்
வழக்கை அத்தோடு புதைத்தான்.
இந்த அநியாயத்தை

எந்தத் தெய்வமும் கேட்கவில்லை….
கடைசியில்..
இருஞ்சூர் நாயுடு விதிவலியை
நக்சல்பாரியே முடித்தான்.

நெருப்பினில் வேகாத
வெண்மணிக் கனவை…
புதைத்திட வியலாத வர்க்கத்தீயை
வளர்ப்பவர்க்கு மட்டுமே
வெண்மணி சொந்தம்

வெண்மணிச் சமர்க்களத்தில்
போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு
ஏன் அமர்க்களம்?

போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு
வெண்மணி பக்கம் வீரவணக்கம்.
போராடும் விவசாயிகளுக்கு
நந்திகிராமில் துப்பாக்கிச் சூடு.

மிட்டா,மிராசை எதிர்த்தவர்களுக்கு
வெண்மணியில் மலர் வளையம்
டாட்டா கம்பெனியை எதிர்ப்பவர்களுக்கு
மேற்கு வங்கத்தில் சமாதி.

போயசு பண்ணைக்கு
புளுக்கை வேலை செய்யும் இடதும்,வலதும்
இருஞ்சூர் பண்ணையை எதிர்த்துப் போராடிய
தியாகிகள் பெருமையைத் தீண்டுவதா?
போலிக் கம்யூனிஸ்டுகளின் பாழும் முகத்தில்
காறித் துப்புது செங்கொடி!

இறந்தவர் சாதியை
சொந்தம் கொண்டாடும் பல இயக்கங்கள்
ஆனால் …இறந்தவர் லட்சியம்
சொந்தம் கொண்டாட நக்சல்பாரிகள்!

வெண்மணித் தீ அடங்கவில்லை இன்னும்
ஊரையே கொளுத்துகிறது உலகமயம்…
ஊரைவிட்டுத் துரத்துகிறது விவசாயம்..
தப்பித்து தஞ்சமடையும் குடிசைகளை
எரிக்கிறது நகரமயம்…
கைத்தொழில் ஒடித்து, சிறுகடை பிடுங்கி
கொத்தடிமையாக்கும் தனியார் மயம்…
நகரங்கள் தேடி.. நாடுகள் ஓடி
இனியும் தப்பிப்பிழைக்க வழியின்றி
விவசாயிகளை எரிக்கிறது தாராளமயம்..

இருஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடு
இன்னும் சாகவில்லை..
இருங்காட்டுக் கோட்டையில்
ஹூண்டாயாய் சிரிக்கிறான்..

ஆயிரம் வேலிகள் வளைத்து
டாட்டாவாய் நெறிக்கிறான்..

இனாம்தார் அம்பானியாய்
எல்லா பக்கமும் அறுக்கிறான்..

கோக், பெப்சியாய்
நம் குளம், ஆறுகள் குடிக்கிறான்..

குடிசையில் படர்ந்த பூசணி அல்ல..
அதன் விதையும் எனக்குச் சொந்தமென
மான்சாண்டோவாக பறிக்குறான்..

இனி தப்பிக்க வழியில்லை..
என்ன செய்யப் போகிறீர்கள்?

கேட்கிறார்கள் வெண்மணித் தியாகிகள்

வர்க்கப் போராட்டத்தின் வாரிசுகளே
பதில் சொல்லுங்கள்!

–  துரை.சண்முகம்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். இன் பித்தலாட்டம்!

Puja_December-09-1 துரோகம்! பதவி சுகத்துக்காக நடந்துள்ள அப்பட்டமான துரோகம்! தமிழகத்தின் ஐந்து தென் மாவட்ட  மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணை நீரில், தமிழகத்தின் நியாயவுரிமையைக் காவு கொடுத்து விட்டார், “தமிழினத் தலைவர்’கருணாநிதி.

முல்லைப் பெரியாறு அணையில் மெல்லிய அதிர்வு ஏற்பட்டதைப் பூதாகரமாக்கிப் பீதியூட்டி, 1979 முதல் கடந்த 30 ஆண்டுகளாக பெரியாறு நீரில், தமிழகத்தின் நியாயவுரிமையை கேரளம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இது தொடர்பாக இரு மாநில அரசுகளும் தொடுத்த வழக்குகள் 1998- இல் எடுத்துக் கொள்ளப்பட்டு, எட்டாண்டு இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதி மன்றம் கடந்த 27.2.2006 அன்று தீர்ப்பளித்தது.

அத்தீர்ப்பை ஏற்க மறுத்து, முடக்கும் வகையில் 15.3.2006 அன்று கேரள அரசு புதிய சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்தது. இதை எதிர்த்து மார்ச் 2006- இல் உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்தது. அதன் பிறகு, உச்சநீதி மன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யவேண்டுமென்று கேரள அரசு மனுதாக்கல் செய்தது. இந்த வழக்குகளின் விசாரணை முடிவுக்கு வரும் நிலையில், இந்த வழக்குகளை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்ற,  உச்சநீதி மன்றம் கடந்த நவம்பர் 10-ஆம் தேதியன்று உத்தரவிட்டுள்ளது.

கேரள அரசின் சட்டத் திருத்தம் செல்லுமா என்ற வழக்கில், ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கையும் சேர்த்து, பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்கும் உரிமைக்கு உச்சநீதி மன்றம் வேட்டு வைத்துவிட்டது. முப்பதாண்டு காலப் போராட்டத்தை, உச்சநீதி மன்ற உத்தரவு இப்போது மறுபடியும் ஆரம்ப நிலைக்கே கொண்டு வந்துவிட்டது. முல்லைப் பெரியாறு அணை வழக்கில் கேரள அரசு, மத்தியிலுள்ள காங்கிரசு அரசு, உச்சநீதி மன்றம் ஆகிய மூன்றும் ஓரணியில் நின்று தமிழகத்தின் நியாயவுரிமைக்கு அநீதியிழைத்து வருகின்றன. இத்தனைக்கும் பிறகும் அமைதி காக்கிறார், கருணாநிதி.

வழக்குகள் விசாரணையில் உள்ளபோதே, முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்காக ஆய்வு செய்ய, கேரள அரசுக்கு அனுமதி அளித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து மதுரையில் நவம்பர் முதல் நாளன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார் கருணாநிதி. உடனே, மைய தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவின் அலுவலகங்களில் “மையப் புலனாய்வுத் துறை சோதனை’என்ற நாடகத்தை காங்கிரசு எஜமானர்கள் ஏவி விட்டனர். அரண்டு போன கருணாநிதி, முல்லைப் பெரியாறு தொடர்பான மதுரை கூட்டத்தையே ரத்து செய்துவிட்டார். இதன் மூலம், தனது சரணாகதி சமிக்ஞையை டெல்லி எஜமானர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

கேரள அரசு புதிதாகச் சட்டம் போட்டதை எதிர்த்தும், மைய அரசின் வஞ்சகத்தை எதிர்த்தும் எதுவும் செய்யாத கருணாநிதி, பிரச்சினையை இப்போது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதைக் கண்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார். இப்போது மீண்டும் இழுத்தடிப்புக்கான உத்தரவு வந்ததும், “உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராகச் செயல்படும் கேரள முதல்வர் அளவுக்கு எனக்குத் தைரியம் இல்லை”என்று அறிக்கை வெளியிடுகிறார்.

நவம்பர் 10- ஆம் நாளன்று உச்சநீதி மன்றத்தில் இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாக, தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் பராசரணிடம் “”இந்த உத்தரவை ஏற்றுக் கொள்கிறீர்களா?” என்று நீதிபதிகள் கேட்டபோது, அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். பின்னர், மதியம் மீண்டும் நீதிமன்றம் கூடியபோது, உத்தரவை ஏற்பதாக அறிவித்திருக்கிறார். இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன? அவர் தன்னிச்சையாக இப்படி முடிவை மாற்றிக் கொள்ள முடியுமா? அல்லது, கருணாநிதியின் ஒப்புதல் இல்லாமல் இப்படி நடந்திருக்கத்தான் முடியுமா? இப்போது ஒப்பாரி வைத்து அறிக்கை வெளியிடும் கருணாநிதி, அன்று இந்த உத்தரவை நாங்கள் ஏற்கவில்லை என்று அறிவிக்க வேண்டியதுதானே! அதைவிட்டு இப்போது கண்ணீர் அறிக்கை வெளியிடுவது யாரை ஏமாற்ற?

இந்தத் துரோகம் கருணாநிதியோடு முடிந்துவிடவில்லை. 1980- இல் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழக போலீசிடம் இருந்த முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புப் பொறுப்பை கேரளப் போலீசுக்குத் தாரை வார்த்தார். 1980 -லிருந்தே முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்த போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்கள் – பொறியாளர்களைத் தாக்கியும், கைது செய்தும், வாகனங்களைப் பறிமுதல் செய்தும் வழக்கு போட்டும் கேரள அரசு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தது. இருப்பினும் எம்.ஜி.ஆரும் அதன் பிறகு ஜெயலலிதா, கருணாநிதியும் இவற்றுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், குறைந்தபட்சம் கேரள அரசுக்குக் கண்டனம்கூடத் தெரிவிக்காமல், தொடர்ந்து தமிழகத்துக்குத் துரோகமிழைத்தே வந்துள்ளனர். பெரியாறு அணையைப் பராமரித்து இயக்குவது, படகு விடுவது, அணைக்கான பாதைகளைப் பயன்படுத்துவது –எனப் பல உரிமைகளை கேரளத்துக்குத் தாரை வார்த்திருக்கின்றனர். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றத்தில் கேரள அரசின் வழக்குரைஞர் 31 முறை வாய்தா கேட்டு இழுத்தடித்த போதிலும், தமிழக ஆட்சியாளர்கள் அதை எதிர்த்து வாயே திறக்கவில்லை.

இப்போது கருணாநிதியின் துரோகம் அம்பலமானதும், ஏதோ அவரால்தான் தமிழகத்தின் உரிமை பறிபோய் விட்டது போலக் கூப்பாடு போடுகிறார் ஜெயலலிதா. கேரள தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்ட தொகுதிகளில் “முல்லைப் பெரியாறில் நீரைத் தேக்கவிட மாட்டோம்!” என்று வாக்குறுதி அளித்து ஓட்டுப் பொறுக்கிவிட்டு, இப்போது தமிழகத்தின் உரிமைக்காகப் போராடுவதாகப் பாசாங்கு செய்கிறார். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்கலாம் என்று உச்சநீதி மன்றம் 27.2.2006 -இல் தீர்ப்பளித்தபோது ஆட்சியிலிருந்தவர் ஜெயலலிதாதான். “அப்போது கோடைகாலமாக இருந்ததால் தீர்ப்பை செயல்படுத்த முடியவில்லை”என்று இப்போது தனது துரோகத்துக்குப் புதுவிளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார்.

“பதவி பேரத்தில் பாழான தமிழக உரிமைகள்” என்று கருணாநிதியை மட்டும் குறிவைத்து தாக்கி, தினமணியில் கட்டுரை எழுதுகிறார், பழ.நெடுமாறன். “தி.மு.க. அரசு தேவையில்லாமல் மைய அரசிடம் பிரச்சினையை எழுப்புகிறது. அண்டை மாநிலங்களுக்கிடையே வெறுப்பையும் முரண்பாட்டையும் தோற்றுவிப்பதை தமிழக ஆட்சியாளர்கள் நிறுத்த வேண்டும்” என்று கருணாநிதியைக் குறிவைத்துத் தாக்குகிறார், வலது கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளரான பரதன். “கருணாநிதியின் துரோகத்தால் தமிழகம் பாலைவனமாக மாறும்” என்று ஜெயலலிதாவின் பின்னே நின்று கொண்டு சீறுகிறார், வைகோ.

கருணாநிதி மட்டுமல்ல; அவருக்கு முன்பிருந்தே, எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஆட்சிகளில் கேரள அரசுக்கும் மைய அரசுக்கும் துணைநின்று தமிழகத்தின் நியாயவுரிமை பறிகொடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை இவர்கள் திட்டமிட்டே மறைக்கின்றனர். பெரியாறு அணை பற்றி செய்திகள் அடிபடும்போது, பரபரப்பாக அறிக்கை வெளியிடுவதும், அடையாள எதிர்ப்புப் போராட்டம் நடத்துவதும், அதன் பிறகு வாய்மூடிக் கிடப்பதுமாக வைகோ வகையறாக்கள் சூரத்தனம் காட்டுகின்றன.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதியின் துரோகம் ஒரு பங்கு என்றால் ஒன்பது பங்கு துரோகத்தை புரட்சி பேசும் சி.பி.எம். கட்சி செய்து கொண்டிருக்கிறது. “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!” என்று சர்வதேசியம் பேசி சவடால் அடிக்கும் இக்கட்சி, ஓட்டுக்காக முதலாளித்துவ இனவெறியைத் தூண்டிவிட்டு குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது. கேரள மக்களுக்காக, தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்து அனுப்பும் உணவு தானியங்கள்-காய்கறிகள் முதலானவற்றுக்குத் தேவையான நீரின் அளவு 511 டி.எம்.சி.யாகும். அந்த அளவுக்கான நீரையாவது தமிழகத்துக்குத் தரவேண்டும் என்ற நியாய உணர்வு கூட அக்கட்சியிடம் இல்லை. நிபுணர்கள் ஆய்வு செய்து அணை வலுவாக உள்ளது என்று அறிவித்துள்ள போதிலும், பெரியாறு அணையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக திரித்துச் சொல்லி பயபீதியூட்டியும், குறுகிய தேசிய இனவெறியைக் கிளப்பிவிட்டும், புதிய அணை கட்டும் திட்டத்தைச் செயல்படுத்தி இடுக்கி அணைக்கு நீரைக் கொண்டு செல்ல கேரள “இடதுசாரி’அரசு விழைகிறது. இதன்மூலம் அணையைத் தனது பொறுப்பில் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் ஐந்து தென்மாவட்டங்களைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது.

இவ்வளவுக்குப் பின்னரும், இரு மாநில அரசுகளும் இணக்கமாகப் பேசித் தீர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் மையத் தலைமை உபதேசம் செய்து, தமிழகத்தின் நியாயவுரிமையை மறுக்கிறது. “”முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் தேட தமிழக அரசியல்வாதிகள் கீழ்த்தரமாக முயற்சிக்கிறார்கள்” என்று  சாமியாடுகிறார் கேரள போலி கம்யூனிஸ்டு முதல்வர் அச்சுதானந்தன். தமிழகத்தின் நியாயவுரிமையைக் கோருவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாம்! கேரள “இடதுசாரி’அரசின் அடாவடித்தனத்தை எதிர்க்க முன்வராத சி.பி.எம்.கட்சி,  தமிழகத்தில் விவசாயிகளின் உரிமைக்காக விவசாய சங்கம் கட்டவும், போராடவும் ஏதாவது அருகதை இருக்கிறதா? தமிழகத்தின் நியாயவுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து சி.பி.எம்.கட்சியின் தமிழ் மாநிலக்குழு எந்தப் போராட்டத்தையும் நடத்தியதில்லை. கேரள “இடதுசாரி’அரசின் அடாவடித்தனத்தை எதிர்த்து கட்சியின் மத்தியக் கமிட்டியில் வாதிட்டதுமில்லை. இத்துரோகக் கூட்டத்தை அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்தாமல், பெரியாறு நீரில் தமிழகத்தின் நியாயவுரிமையைச் சாதிக்க முடியுமா? ஆனால், கருணாநிதி, ஜெயலலிதா மட்டுமல்ல; எல்லா ஓட்டுக் கட்சிகளும் தேர்தல் கூட்டணிக்காக சி.பி.எம். துரோகக் கூட்டத்தை எதிர்த்து வாயே திறப்பதில்லை. கருணாநிதியின் துரோகத்தைச் சாடும் பழ.நெடுமாறன் வகையறாக்கள், ஜெயலலிதாவையோ சி.பி.எம். துரோகத்தையோ சாடுவதுமில்லை.

நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த ஒரு மாநில அரசு மறுக்கும் போது, மைய அரசு அம்மாநில அரசு மீது இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இதை மைய அரசு செய்யாத போது, மைய அரசின் எல்லா அதிகாரங்களையும் ஏற்க மறுப்பதற்கு தமிழகத்துக்கு எல்லாவித நியாயமும் உரிமையும் உண்டு. இந்த நியாயத்தையும் உரிமையையும் உறுதி செய்வதுதான் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையாகும். இதுவொன்றுதான், இரு வேறு தேசிய இனங்களைக் கொண்ட அண்டை மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சரியான வழியுமாகும்.

பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது, நிரந்தர நீண்டகாலத் தீர்வாக அமையும் ஒரு ஆயுதம். அதேசமயம், தற்போதைய உடனடிப் பணியாக கேரள மாநிலத்துக்கு எதிரான பொருளாதார முற்றுகை, பரம்பிகுளம் — ஆழியாறு – மண்ணாறு போன்ற ஆறுகள் வழியே கேரளத்துக்குச் செல்லும் தண்ணீரை மறுப்பது, சபரிமலை மற்றும் கேரளத்துக்குச் செல்லும் சாலை மற்றும் இரயில் போக்குவரத்தை மறிப்பது போன்ற நடவடிக்கைகளை தமிழக மக்கள் மேற்கொள்ள வேண்டும். கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, அதைப்போல தமிழகத்திலிருந்து கேரளம் அடையும் பொருளாதார உதவியும் முக்கியம் என்பதை அம்மாநில மக்களுக்கு உணர்த்தியே தீர வேண்டும். இது இனவெறியூட்டும் செயல் அல்ல. மாறாக, தமிழகத்தின் நியாயவுரிமையை மறுக்கும் இனவெறி அடாவடித்தனத்துக்குப் பாடம் புகட்டும் செயல்தான்.

நாற்காலி சுகத்திற்காக “தேசிய ஒருமைப்பாடு’ நீரோட்டத்தில் சங்கமித்துவிட்ட தமிழக ஓட்டுக்கட்சி துரோகிகளும், அவற்றின் பின்னே வால்பிடித்துச் செல்லும் தமிழினப் பிழைப்புவாத அமைப்புகளும் இத்தகைய போராட்டங்களை முன்னெடுக்காது. இத்துரோகக் கும்பலைப் புறக்கணித்துவிட்டு, தமிழகத்தின் நியாயவுரிமையை மீட்க, புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் தலைமையில் அணிதிரண்டு போராட தமிழக மக்கள் முன்வர வேண்டும்.

______________________________________________

புதிய ஜனநாயகம், டிசம்பர்’ 2009
______________________________________________

தோழர் ஸ்டாலின் 130- வது பிறந்தநாள் சிறப்பு கவிதைகள்.

22

தோழர் ஸ்டாலினைப் பற்றி பேசுகிறேன்!

vote-012ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
ஒரு ரூபா புழுத்த அரிசிக்கு
ஏங்கி இரைஞ்சும் வாழ்வை வியந்தோதும்
பார்ப்பன பனித்திரையை விலக்கி,

ஓங்கி முதலாளித்துவத்தின் முகத்தில் அறைந்து
உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிறுவி,
கம்யூனிச பேரடியால் உண்மையில் உலகளந்த
தோழர் ஸ்டாலினின் ஆளுமை கண்டு
சிலிர்க்கிறது மார்கழி!

கடும் புயலாலும் கடல் சீற்றத்தாலும்
உலுக்கும் பூகம்பத்தாலும், பொசுக்கும் தீக்கிரையாலும்
எந்தச் சக்தியாலும்…
பெயர்க்க முடியாதது முதலாளித்துவம்
என்றிருந்த ஏகாதிபத்திய இறுமாப்பை,

கடும் உழைப்பால், பாட்டாளிவர்க்க அமைப்பால்
மார்க்சியத் துடிப்பால், லெனினிய நடப்பால்
தன்னிரக்கம் பாராத வாழ்வால்… தகர்த்தெறிந்த
ஸ்டாலின் இயக்கம் கண்டு
வியந்துபோய் இமைக்க  மறந்த
அண்டத்தின் விழிகளாய்…
அந்த சூரியனும், சந்திரனும்!

பற்களை இழந்த உள்நாட்டு நரிகள்…
சொற்களை இழந்த சுரண்டல் எழுத்தாளர்கள்…
இறக்கைகள் முறிந்த ஏகாதிபத்திய வல்லூறுகள்…
ஒப்பனை கலைந்த முதலாளித்துவப் பொய்கள்…
ரசிய புது செருப்பால் அடிவாங்கிய ஆரிய இட்லர்…
இத்தனை பகையும் சுற்றித்திரிந்தும்…
ஏகாதிபத்தியம் திராவகம் தெளித்தும்
கற்களை பிளந்தெழும் பசுந்தளிர்போல-எதிரியின்
கண்ணைப் பறிக்க அரும்பியது சோசலிசம்.

ஸ்டாலின் தலைமையில்
பாட்டாளிவர்க்க ரசியாவின் வளர்ச்சியைப் பார்த்து
ஆச்சரியத்தில் இயற்கை உயர்த்திய புருவங்களாய்
அழகிய மலைத்தொடர்கள்!

எதையும் தாங்கும் நெஞ்சழுத்தம்…
அலட்டிக்கொள்ளாத ஆழம்…
அலை, அலையாய் புரட்சிகர பிடிவாதம்…
ஏறி அடிக்கையில் எதிரியை மிச்சம் வைக்காத போர்க்குணம்…
தனக்கென துரும்பளவும் வாழாத தூய்மை…
நான் கடலைப்பற்றி பேசவில்லை…
தோழர் ஸ்டாலினைப் பற்றி பேசுகிறேன்!

பேசிக்கொண்டே போக
“ஸ்டாலின்” என்பது வெறும் பேச்சல்லவே…
முதலாளித்துவ சுரண்டலுக்கெதிரான வீச்சு!
அந்த… வீச்சோடு கொண்டாடுவோம்
ஸ்டாலின் பிறந்தநாளை.

தோழர் ஸ்டாலின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடலாம்?

தோழர் ஸ்டாலின் பிறந்தநாளை
எப்படிக் கொண்டாடலாம்?
யோசனையோடு நடந்து போனேன்,

இனிப்பு வாங்கி
இயன்றவரை கொடுக்கலாமா…

எஸ்.எம்.எஸ். அனுப்பி
நண்பர்களிடம் பகிரலாமா…

புத்தாடை உடுத்தி
சேர்ந்துண்டு மகிழலாமா…

ஒரு இசை…
ஒரு கவிதை…
ஒரு நிகழ்ச்சி…

ஏதாவது ஒன்று என்ற எனது நினைவுகளைக் கலைத்தது
கூவக்கரையோரம் பிய்த்தெறியப்பட்ட
குடிசைப் பகுதியிலிருந்து ஒரு குரல்;

“டேய் உழைக்காத உங்களுக்கு இவ்ளோன்னா,
எங்களுக்கு எவ்ளோ இருக்கும்.
அடிச்சா புடுங்குறீங்க… இப்படியே போயிடாது
உங்களுக்கு இருக்குடா ஒருநாள் வேட்டு!”

அடக்கும் லத்திக்கம்பை விலக்கித் தெறித்தது
அந்தப் பெண்ணின் குரல்

இப்போது கற்பனை குறுகுறுத்தது.
ஸ்டாலின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பது
அந்தப் பெண்ணின் எதிர்ப்பார்ப்பில்
மண்டையில் உரைத்தது.

தோழர் ஸ்டாலினுக்கு யாரைப் பிடிக்கும்?

தோழர் ஸ்டாலினை எனக்குப் பிடிக்கும்
என்பது சரிதான்,
ஆனால் ஸ்டாலினுக்கு யாரைப் பிடிக்கும்?

படிக்கும் மாணவப் பருவத்தில்
மதம்பிடிக்கும் கருத்துக்களை
நீங்கள் வெறுப்பவரா…

துடிக்கும் இளமையின் காதலை
நீங்கள்
போராடும் தொழிலாளி வர்க்கத்திடம் போய் சேர்ப்பவரா…

கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி
தன்னலம், தன்குடும்பம் என நெருக்கும்
தாய், தந்தை கண்ணீரையும் உடைக்கும்
சமூகபாசம் படைக்கும் நபரா நீங்கள்…

சாதியெனும் பரம்பரை அழுக்கை
முதலில்
தன்முதுகில் சுரண்டி எறிய
சம்மதிப்பவரா நீங்கள்…

பாட்டாளிவர்க்க விடுதலை லட்சியத்திற்காக
கூடவே வந்த பலர் பாதிவழி போனாலும்…
“ஊர்வம்பு நமக்கெதுக்கு, நம் வழியைப் பார்ப்போம்” என
சொல்லிப்பார்த்து உறவுகள் தள்ளிப்போனாலும்…
எதிர்ப்பின் ஏளனம், துரோகத்தின் கவர்ச்சி
உரிய வர்க்கமே இன்னும் உணராமல்… தனியாய் ஆனாலும்
உலகத்தின் மரியாதையே
தன் கையிலெடுப்பதாய் நினைத்து…
உழைக்கும் மக்களின் உயரிய வாழ்வுக்காய்
கம்யூனிச இதயமாய் துடித்து…
ஓயாமல் போராடும் மனிதரா நீங்கள்…

உங்களைத்தான்
அட! உங்களைத்தான்
தோழர் ஸ்டாலினுக்குப் பிடிக்கும்!

-துரை.சண்முகம்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் !

தோழர் ஸ்டாலின்
உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம்

டிச 21, தோழர் ஸ்டாலினின் 130 வது பிறந்த நாள்.

தோழர் ஸ்டாலின் – அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம்.

ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் எ
ன்று கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையிலே குறிப்பிட்டாரே மார்க்ஸ்,
உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை,
அந்த கம்யூனிச பூதத்தின் மனித உருவம் – ஸ்டாலின்.

ஏகாதிபத்திய மிருகங்களும், முதலாளித்துவக் கிருமிகளும் ஊடுருவ முடியாத
கம்யூனிசத்தின் இரும்புக் கோட்டை
முதலாளித்துவ அறிவு ஜீவிகளுக்கு அரக்கன்,
உலகப் பாட்டாளி வர்க்கத்துக்குக் ‘காவல்தெய்வம்’
………………..
எதிரிகளிடம் வெறுப்பையும் மக்களிடம் பெருமிதத்தையும்
ஒரே நேரத்தில் தோற்றுவித்த ஒரு பெயர் உண்டென்றால்
அந்தப் பெயர் – ஸ்டாலின்.
………………..
பாட்டாளி வர்க்கத் தலைவர்களிலேயே அதிகம் தூற்றப்படுபவர் அவர்தான்.
அவரை வெல்ல முயற்சி செய்தார்கள்,
முடியாததால் கொல்ல முயற்சி செய்தார்கள்.

பேனைப் பெருமாளாக்கி அவரைத் தூற்றினார்கள்.

பொய்களை ஆதாரமாகக் கொண்டே அவருக்கு எதிராக
ஆயிரக்கணக்கான நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்கள்.

பிறகு அந்த நூல்களின் எண்ணிக்கையை ஆதாரமாகக் கொண்டே
அந்தப் பொய்களையெல்லாம் உண்மை என்று சாதித்தார்கள்.

அவர் மறைந்து ஆண்டுகள் பல கடந்த போதிலும்,
எதிரிகளின் வெறி இன்னும் அடங்கவில்லை.
………………..
வரலாற்றில் கொடிய மக்கள் விரோதிகளுக்கும்
வில்லன்களுக்கும் கூட சலுகை வழங்கி

அவர்களுடைய தவறுகளை அனுதாபத்துடன் பரிசீலிக்கும்
அறிவுஜீவிகளின் மூளைகள்,

ஸ்டாலின் என்ற சொல்லைக் கேட்டவுடன் மட்டும்
முறுக்கிக் கொண்டு வெறுப்பைக் கக்குகின்றன.

நரமாமிசம் தின்னும் காட்டுமிராண்டியைப் போல அவரைச் சித்தரிக்கின்றன.
………………..
மார்க்சியம் லெனினியம் மா சே துங் சிந்தனை அனைத்தையும் மெச்சுவதாகக் கூறிக்கொண்டே
கட்சிக்குள் வர மறுக்கும் அறிவாளிகள்,
தங்களை நசுக்கிப் பிழியும் எந்திரமாகக் கட்சியைக் கருதுபவர்கள்,
கட்டுப்பாடுக்கு அஞ்சுபவர்கள்,
ஜனநாயகம் என்ற பெயரில்
சாதாரண தொழிலாளிகளின் உத்தரவுக்கெல்லாம் நாம் கட்டுப்படவேண்டியிருக்குமே என்று அஞ்சுபவர்கள் –

இவர்கள் யாருக்கும் ஸ்டாலினைப் பிடிப்பதில்லை.
………………..
கம்யூனிஸ்டு முன்முயற்சி
கம்யூனிஸ்டு வேலைத்திறன்
கம்யூனிஸ்டு கட்டுப்பாடு
கம்யூனிஸ்டு ஒழுக்கம்
கம்யூனிஸ்டு தியாகம்
என்ற சொற்களுக்கான இலக்கணத்தையெல்லாம்
அவருடைய தலைமையின் கீழ்தான்
இலட்சக்கணக்கான ரசிய போல்ஷ்விக்குகள் உருவாக்கிக் காட்டினார்கள்.
………………..
அவருடைய தலைமையின் கீழ் சோசலிசத்தை
கட்டியெழுப்புவதற்காகக் குனிந்த ரசியா,
நிமிர்ந்தபோது இட்லரின் குண்டுகளை நெஞ்சில் வாங்கிக்கொண்டது.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் இரண்டு நூற்றாண்டுகள்
நடந்து எட்டிய முன்னேற்றத்தை,
இருபதே ஆண்டுகளில் பறந்து எட்டியது.

200 இலட்சம் ரசிய மக்களை இட்லரின் போர்வெறிக்குப் பலி கொடுத்து
உலக மக்களையே பாசிசத்திலிருந்து காப்பாற்றியது.
………………..
மனிதகுலத்தின் ஒப்புயர்வற்ற இந்த வரலாற்றுப் பெருமைகள் அனைத்துக்கும்
உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் ஒரு கம்யூனிஸ்டும்
இன்று நெஞ்சு நிமிர்த்தி உரிமை கொண்டாட முடிகிறதென்றால்,
அந்த கவுரவத்தை நமக்கு வழங்கியவர் தோழர் ஸ்டாலின்.
………………..
வரலாற்றில் மனித குலம் கண்டிராத உழைப்பு,
ஞானியர்களின் சிந்தனைக்கும் எட்டியிருக்க முடியாத அறம்,
கவிஞர்கள் கற்பனையாலும் தீண்ட முடியாத தியாகம்
இவையனைத்தையும் நம் கண்முன்னே நிதர்சனமாக்கியது சோசலிச ரசியா.

அந்த சோசலிச ரசியாவின் புதல்வனும் தந்தையும் – தோழர் ஸ்டாலின்.
அதனால்தான் அவர் கம்யூனிசத்தின் குறியீடு.
அதனால்தான் அவர் ஏகாதிபத்தியத்தின் குறியிலக்கு.
………………..
கம்யூனிசத்தை அது பிறந்த மண்ணிலேயே புதைத்து விட்டதாக களி வெறி கொண்டு பிதற்றிய முதலாளித்துவம்,
இதோ மரணப் படுக்கையில் கிடக்கிறது.
அதன் மலமும் மூத்திரமும் பரப்பும் வீச்சத்தால்
மனித சமூகமே மூச்சுத் திணறுகிறது.

இருப்பினும் சாக மறுக்கும் முதலாளித்துவம், நம்மைக் கொல்கிறது.

பட்டினிச்சாவுகள்
தற்கொலைகள்
கொலைகள்
பயங்கரவாதத் தாக்குதல்கள்
ஆக்கிரமிப்புகள்
நரவேட்டைகள்
அனைத்தும் ஒரே காரணம் – முதலாளித்துவம்.

மரணப்படுக்கையில் கிடக்கும் முதலாளித்துவம்,
தன்னுடைய மரணத்தைத் தள்ளிப்போடுவதற்காகவே
மனிதகுலத்தை நசிவுக்கும் அழிவுக்கும் தள்ளும் முதலாளித்துவம்!
………………..
முதலாளித்துவம் வென்று விட்டதாகவும்,
கம்யூனிசத்தைக் கொன்றுவிட்டதாகவும்

செய்யப்பட்ட பிரகடனங்கள் பொய் என்று
நாம் நடைமுறையில் நிரூபிக்கும் வரை,

அதாவது முதலாளித்துவத்தை அதற்குரிய சவக்குழிக்குள் இறக்கி
உப்பை அள்ளிப் போடும் வரை,

கம்யூனிசம் செத்துவிட்டதாக
அதன் வாயிலிருந்து ஒரு முனகலாவது கேட்டுக் கொண்டுதான் இருக்கும்.
………………..
கம்யூனிசம் வெல்லும்வரை முதலாளித்துவம் கொல்லும்.
முதலாளித்துவ லாபவெறியின் கோரதாண்டவத்தை,
பாசிசம் உலகமக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்புப் போரை,
கம்யூனிசத்தின் வெற்றியின் மூலம்தான் முறியடித்தார் தோழர் ஸ்டாலின்.

பாசிசம் தோற்றதனால் கம்யூனிசம் பிழைத்துவிடவில்லை.
மாறாக, கம்யூனிசம் வென்றதனால்தான் பாசிசம் தோற்றது.
அந்தக் கம்யூனிச வெற்றியின் சின்னம் தோழர் ஸ்டாலின்.
………………..
முதலாளித்துவத்தைக் கொன்று புதைத்த மண்ணில்,
தோழர் ஸ்டாலினின் புகழை ஒரு மலர்ச்செடியாய் நாம் நடுவோம்.
அதற்கு முன், அவர் நினைவு தரும் உத்வேகத்தால்
முதலாளித்துவத்தைக் கொன்று புதைப்போம்!

-மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

“தோழர் ஸ்டாலின் – வெல்ல முடியாத சகாப்தம்”

இங்கே கடல், நிலம், மலை….மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படும் !!

20

கடல் மலை விற்பனைக்கு
vote-012விவசாய நிலங்களோ, குடியிருப்பு நிலங்களோ மக்களிடம் இருப்பதை இன்றைய அரசுகள் விரும்புவதில்லை. காரணம் பன்னாட்டு ஏக போக நிறுவனங்களுக்கு அடிமைச் சேவகம் செய்கிற இந்த வியாபாரிகள், கூலிக் காசுக்காக மக்களை நிலங்களில் இருந்து பிரித்து வீசுகிறார்கள். இன்றைய இந்தியாவின் மக்கள் விலைவாசி உயர்வு, உணவுப் பற்றாக்குறை, நோய்க்கு தரமான மருத்துவமின்மை, ஆரம்பக்கல்வி மறுக்கப்படுதல், வேலையிழத்தல் என ஏராளமான அடிப்படைப் பிரச்சனைகளைச் சந்தித்தாலும் இன்றைய தினத்தில் காலம் காலமாக வாழ்ந்த நிலங்களை அவர்கள் பறி கொடுத்து விட்டு எங்கோ அரசு கொடுக்கும் தரிசு நிலங்களில் குடிசை போட்டு வாழும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

சமீபத்தில் மழைக்காலம் தொடரும் என்ற எண்ணத்தில் சென்னை நகரம் முழுக்க ஆயிரக்கணக்கான குடிசைப் பகுதி மக்களை கூவக்கரையோரங்களில் இருந்து இரவோடு இரவாக அப்புறப்படுத்தி செம்மஞ்சேரிக்கு அனுப்பியிருக்கிறது அரசு. அந்த இரவில் சாலையோரத்தில் அமர்ந்திர்ந்த ஒரு குடிசை வாசியிடம் பேசிய போது அவர் சொன்னார் “ சார் நாங்க மொதல்ல கே.கே. நகர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பக்கம் குடியிருந்தோம். அங்கே எங்க குடிசை எல்லாம் திடீரென ஒரு நாள் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அரசாங்க அதிகாரிங்க எங்களை அங்கே மீண்டும் குடியேற அனுமதிக்கவில்லை. நாங்க அங்கிருந்து இங்கே வந்து குடியேறினோம். (பச்சையப்பன் கல்லூரிக்கு பின்பக்கம் உள்ள கூவக் கரையோரம்) “ என்று சொன்னார். கே.கே. நகரில் இருந்து இந்த ஏழைகள் இடம்பெயர்ந்து கிட்டத்தட்ட நான்காண்டுகாலம் ஆகிவிட்ட நிலையில், இவர்கள் குடியிருந்த கே.கே.நகர் பகுதியில் பிரமாண்ட அடுக்குமாடி தனியார் குடியிருப்புகள் புதிதாக முளைத்திருக்கின்றன.

சென்னை ஆயிரம்விளக்கில் இருக்கிறது அப்பல்லோ மருத்துவமனை; கோடீஸ்வர நோயாளிகள் சிகிட்சை பெற்றுக் கொள்ளும் உயர் தர மருத்துவமனை. சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ சமீபகாலத்தில் சந்திக்கும் பெரிய பிரச்சனை டிராபிக் நெருக்கடி அகலமில்லாத சாலை, முண்டியடிக்கும் வாகனங்கள் என அப்பல்லோ திணறிப் போக அவர்களின் கண்ணுக்குத் தெரிந்தது அப்பல்லோவின் அழகை தொல்லைப்படுத்தும் விதமாக ஓடிக் கொண்டிருக்கும் கூவமும் அதை அண்டி வாழும் ஏழைகளும்தான். ஒரே நாளில் மாநகராட்சி அதிகாரிகள் வந்தார்கள் அவர்களை அப்புறப்ப்டுத்தினார்கள். இப்போது அந்தக் கூவத்தின் மேல் பகுதியை மட்டும் நீளமாக மூடி அதை பார்க்கிங் பகுதியாக விஸ்தரித்திருக்கிறார்கள். என்பதோடு இடது பக்க குடிசைப்பகுதியை ஒரு குட்டி பூங்காவாக மாற்றி அதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். இப்போது அந்த இடம் ஏழைகள் நுழைய முடியாத எழில் மிகு சென்னையாக இருக்கிறது.

அரசு புறம்போக்கு நிலங்கள் என்பது ஒரு காலத்தில் ஏழை மக்களின் நிலங்களாக இருந்தன. அவர்கள் தங்களின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப ஒரு குடிசையைப் போட்டு அங்கு வாழ்வார்கள். ஆனால் இப்போது அரசு புறம்போக்கு நிலம் என்பது தனியார் முதலாளிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள். அரசியல்வாதிகள், ரௌடிகள், ஆகியோரின் சொத்துக்களாக மாறிவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் சென்னையை பங்கு போட்டு கபளீகரம் செய்து விட்ட இந்த திருடர்கள் இப்போது சென்னைக்கு வெளியே உள்ள நிலங்களை குறிவைக்கிறார்கள். சமீபத்தில் உத்திரமேரூர் சென்ற போது வயல் வெளிகளை எல்லாம் பிளாட் போட்டு விற்க அறிவிப்பு செய்திருக்கிறார்கள். எல்லாமே முப்போகம் விளைந்த விவசாய நிலங்கள்.

இன்னொரு ஐந்து ஆண்டுகள் கழித்து உத்திரமேரூர் செல்லும் போது அதுவும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக மாறியிருக்கும். ஆனால் தொழிற்சாலை வருவதால் அப்பகுதி மக்களுக்கு பயன் ஏற்படும் என்று நீங்கள் நினைத்தால் உங்களைப் போன்ற முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் தனியார்துறை தொழில் வளர்ச்சி  என்பது உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சி மட்டுமே வளரும் வல்லமை கொண்டது. முதலில் அவனுடைய நிலங்களை அவனிடம் இருந்து பிடுங்குவது பின்னர் அந்த விவசாயியையும் அவரது குடும்பத்தையும் குறைந்த கூலிக்கு தன் கம்பெனியிலேயே வேலைக்கும் வைத்துக் கொள்வது. காலம் காலமாக நீடித்து வரும் இந்த சுரண்ட்ல் வடிவத்திற்கு இன்றைய ஆட்சியாளர்கள் வைத்திருக்கும் பெயர் தொழில் வளர்ச்சி அல்லது வேலைவாய்ப்பு. தஞ்சையில் ரசாயான ஆலை அமைக்கும் டி,ஆர். பாலுவும் இதையேதான் சொல்கிறார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பெயரால் அரசே நிலங்களை சூறையாடும் கொடுமை.

இன்றைய தேதியில் நாற்பதாயிரம் படையினரைக் கொண்ட போர் நடவடிக்கையை மாவோயிஸ்ட் போராளிகள் மீது தண்டகாரன்யா மாநிலங்களில் ஏவியிருக்கிறது இந்திய அரசு. ”ஆபரேஷன் கிரீன்கன்ட்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்போர் பயங்கராவாதிகளுக்கு எதிரானப் போர் என்று பிரகடனப்படுத்துகிற இந்திய அரசு, ஒரு பக்கம் மாவொயிஸ்ட் மக்கள் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்களை அழித்தொழித்து விட்டு தண்டகாரன்யா மக்களிடம் இருந்து நிலங்களை பிடுங்கி தனியார் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு தாரைவார்க்கத் துடிக்கிறது.இப்பகுதியில் ரப்பர், தேயிலை, உள்ளிட்ட ஏராளமான இயற்க்கை வளங்கள் தொடர்பாக 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பன்னாட்டு முதலாளிகளுடன் போட்டிருக்கிறது இந்திய அரசு. இந்த ஒப்பந்தங்களுக்கு விரோதமாக மக்களிடம் நிலம் இருப்பதை இந்திய அரசு விரும்பவில்லை. நந்திகிராமில் சி,பி. எம்மின் அடவாடித்தனமான முதலாளிகளுக்காக விவாசியிகளைக் கொன்றதும் அதற்காகத்தான். அதனுடைய தொடர்ச்சிதான் லால்கரில் தொடங்கி வடகிழக்கு எங்கும் பரவி வருகிறது.

நாட்டில் எல்லையோர மாநிலங்களாக இப்பழங்குடி மக்கள் நீண்டகாலமாக தங்களின் பல்வேறு சிவில் உரிமைகளுக்காகவும், பொருளாதார, உழைப்பு உரிமைக்காகவும் போராடிவருகிறார்கள். துவக்கத்தில் தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, தமிழகம். கேரளம், கர்நாடகம் போன்ற பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய நக்சல்பாரிகள் இப்போது ஒன்றிணைந்த மாவோயிஸ்டுகளாக வடக்கு-மத்திய-கிழக்கில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் பூர்வீக நிலங்களை தங்களிடமே ஒப்படைக்கக் கோரும் அம்மக்களின் நியாங்களை காது கொடுத்துக் கூடக் கேட்க தயாரில்லாத மத்திய அரசு, அவர்களை சோற்றால் அடித்து வீழ்த்த நினைக்கிறது. ஆனால் நிலம் உள்ளிட்ட அவர்களின் ஏனைய கோரிக்கைகள் எதையும் அரசு செவிமடுக்கத் தயாரில்லை. காரணம் நிலம் மக்களிடம் இருப்பதை அரசு விரும்பவில்லை. இது வடகிழக்குக்கிற்கு மட்டுமான பிரச்சனையில்லை.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கபடுவது தொடர்பாக எழுப்பப்படும் கோரிக்கைகளின் போது கச்சத்தீவு மீட்பும் ஒரு கோரிக்கையாக இங்கே வைக்கப்படுகிறது. ஆனால் கச்சத்தீவு மீட்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எஸ். எம்.கிருஷ்ணா பாராளுமன்றத்தில் அறிவித்துவிட்டார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கடல், கடற்கரை, அதை அண்டிய பிரதேசங்கள் தொடர்பாக பன்னாட்டு நிறுவனங்களுடன் எண்ணிலடங்கா ஒப்பந்தங்களை செய்துள்ளது இந்திய அரசு. நிலம் எப்படி தனியார் முதலாளிகளுக்கோ அது போல கடலும் தனியார் முதலாளிக்குத்தான்.

வன்னியுத்தத்தின் முடிவையும், தமிழக மீனவர் பிரச்சனையையும் இன்று சரியாகப் புரிந்து கொள்ளும் சூழல் உருவாகியிருக்கிறது. ஆரமபத்தில் எங்கள் கடலில் வெறும் கட்டுமர மீன்பிடிப்பு மட்டுமே இருந்தது. பின்னர் விசைப்படகு வந்தது. அப்போது கட்டுமர மீன்பிடிப்பை விசைப்படகுகள் அழித்தது சிறிய கண்ணிகளைக் கொண்ட வலைகளைப் போட்டு மீன்பிடித்ததால் கட்டுமர மீன்பிடுத் தொழிலாளர்கள் அடியோடு பாதிக்கப்பட்டார்கள். தமிழகம் முழுக்க கடற்கரை எங்கும் இது மோதலாக வெடித்தது. ஆங்காங்கு கொலைகளும் குண்டு வீச்சுகளும் கூட அப்போது நடந்தது. கட்டுமர மீன்பித் தொழிலில் பாரம்பரீய மீனவர்கள் பெரும்பாலானவர்களாக இருந்தனர். விசைப்படகு வந்த போது பெரும் பண்ணைகள் லட்சக்கணக்கில் செலவு செய்து விசைப்படகு வைத்து பெரும் பொருள் ஈட்டினர்.

ஆனால் இந்த விசைப்படகு உரிமையாளர்கள் தங்கள் சொந்த சகோதரனின் தொழிலை நாம் பாதிப்படையச் செய்து அவன் வீட்டு உலையில் மண்ணள்ளிப் போடுகிறோம் என்ற அக்கரையற்று அவர்களுக்கென்று வகுப்பப்பட்ட விதிமுறைகளையும் மீறி கட்டும்ர எல்லைக்குள்ளேயே மீன் பிடித்து அவன் பிழைப்பைக் கெடுத்தனர். கடைசியில் நாற்பது நாள் மீன்பிடிக்கக் கூடாது என்று மீன் குஞ்சுகள் பெருக்கக் காலத்தில் தடை எல்லாம் கொண்டு வந்து இன்று அது நடைமுறையில் இருந்து வந்தாலும் விசைப்படகுகளில் அசுர வளர்ச்சியும் தொழில் சார் அறம் கடந்த மீன் பிடித்தலும் கட்டுமர மீனவர்களின் வாழ்வைச் சிதைத்தது என்பது உண்மை.

அன்றைக்கு கட்டுமர மீனவர்களுக்காக பேசவோ அவனுடைய வாழ்க்கைப் பாடுகள் குறித்துப் பேசவே எவருமே இல்லாமல் போயினர். பெரும் பண்ணைகள் கடலோர கிராமங்களைக் கட்டுப்படுத்தி தங்களின் கைகளுக்குள் வைத்துக் கொண்டனர். ஆனால் இன்று  கடந்த இருபது ஆண்டுகளாக கட்டுமர மீனவனின் வாழ்வில் வீசிய சூறாவளி விசைப்படகு மீனவனின் வாழ்விலும் வீசுகிறது. எளியவன் என்பதால் இவர்கள் கட்டுமர மீனவர்களை வதைத்து முன்னேறினார்கள். ஆனால் இப்போதோ இந்த விசைப்படகு மீனவர்களின் முன்னால் நிற்பது பன்னாட்டு பகாசுர மீன் பிடிக் கப்பல்கள். தங்களின் வீட்டு முற்றம் வரை வந்து மீன்பிடித்துச் செல்கிறார்கள். என்ன? என்று கேட்கு யாரும் இல்லை. கட்டுமரங்கள் கரையொதுக்கி வைக்கப்பட்டது போல கொஞ்சம் கொஞ்சமாக விசைப்படகுகளும் கரையேற்றப்படுகின்றன? ஏன்?

தொடரும்….

வெண்மணி

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி

சீமான் உள்ளிட்ட முற்போக்கு நரிகளின் தேவர் சாதிவெறி

vote-012தமிழ்த் தேசியம், தமிழீழம், பெரியார் கொள்கை பற்றி எல்லாம் மேடைதோறும் முழங்குபவர்களும் சரி, தமிழகத்தில் “முற்போக்கு சக்திகள்’எனத் தம்மைக் கருதிக் கொள்வோரும் சரி, உள்ளூர சாதிவெறி புழுத்து நாறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் இந்த உண்மைகள், அண்மைக்காலத்தில் ஒவ்வொன்றாக அம்பலமாகத் தொடங்கியுள்ளன.

மேடை தோறும் ஈழம், பிரபாகரன், தமிழ்த் தேசியம் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசியும், தன்னைப் பெரியாரின் பேரன் என்று முழங்கியும் வந்த திரைப்பட இயக்குநர் சீமான்,  பிரபாகரன் படம் பொறித்த சட்டையணிந்து வந்து தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு தன் சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார்.  சீமானின் தேவர் சாதிப் பற்றை பெரியார் தி.க. ஆதரவு இணையதளம் மட்டும் விமர்சித்துள்ளது. இதுவரை “தம்பி’சீமானை சீராட்டிவந்த மற்ற ஈழ ஆதரவு சக்திகளோ, இப்போது அவரைக்  கண்டுகொள்ளாது கைகழுவி விட்டுவிட்டன. இவர், ஏற்கெனவே தனது “தம்பி’ திரைப்படத்தில் தேவர் புகைப்படத்தை இடம்பெறச் செய்தபோதே விமர்சிக்கப்பட்டார். அதனைத் தவறென ஒத்துக் கொண்ட சீமான்,  இப்போது தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டதை, “இம்மானுவேல் சேகரனுக்கும் மாலை போட்டதை”க் குறிப்பிட்டு நியாயப்படுத்தியுள்ளார்.  அதாவது, சாதி ஒடுக்குமுறையாளருக்கும் ஒடுக்கப்பட்டவருக்கும் ஒரே மரியாதை. இதுதான், இந்தப் “பெரியாரின் பேரனது’சாதி ஒழிப்பு சமத்துவம்!

இதே பித்தலாட்டத்தைத்தான் புரட்சி பேசும் சி.பி.எம். கட்சியும் செய்திருக்கிறது. சி.பி.எம்-மின் “தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக உத்தப்புரத்தில் போராடுகிறது. அதே கட்சியின் பொதுச் செயலர் என்.வரதராசன், அறுவை சிகிச்சை முடித்து கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறே, சாதி ஒடுக்குமுறையின் சின்னமான தேவர் சிலைக்கு ஓடோடிப் போய் மாலை போட்டு மரியாதை செய்தார்.

சென்ற ஆண்டு தேவர் ஜெயந்தியை ஒட்டி, சாதிவெறியாட்டம் ஆடிய சட்டக் கல்லூரியின் ஆதிக்க சாதி மாணவர்கள், தாழ்த்தப்பட்டோரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதை, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், “ஒரு மாணவனைப் போய் இந்த அடி அடித்தார்களே’ என்று சுயசாதிவெறியோடு  ஒரு வருடமாக பேசியும் எழுதியும் வந்த வலது கம்யூனிஸ்டு கட்சியின் தா.பாண்டியன், தன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிங்கத்தை பசும்பொன்னுக்கே அனுப்பிவைத்து தேவருக்கு மரியாதை செய்தார். முதலாளிகளின் சீட்டாட்டக் கிளப்பான “லயன்ஸ் கிளப்”பில் முத்துராமலிங்கம் என்ற சொந்த சாதிக்காரர் இருப்பதால், அந்த கிளப்பின் விழாவை தா.பாண்டியன் வாழ்த்தும் விளம்பரம் “ஜனசக்தி”யில் வெளிவந்துள்ளது. தேவர் சாதிவெறித் தலைவர்களான முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத் தேவர் போன்றோருக்கு அவ்வப்போது சிறப்புக் கட்டுரைகளை வெளியிடும் ஜனசக்தியில் பணிபுரியும் ஜீவபாரதியோ, டஜன் கணக்கில் தேவர் பெருமை பேசும் நூல்களையும் வெளியிடுபவர். ஜனசக்தி ஆசிரியர் தா.பாண்டியனோ, முக்குலத்தோர் சாதிகளில் ஒன்றான அகமுடையார் சங்க கல்வி அறக்கட்டளை விழாவில் கலந்துகொண்டு “அதில் என்ன தவறு?”என நியாயப்படுத்துபவர்.

“முதுகுளத்தூர் சாதிக் கலவரத்தை நிறுத்தவேண்டுமானால், முத்துராமலிங்கத்தைப் பிடித்துச் சிறைக்குள் தள்ள வேண்டும்”எனக் கோரியவர் பெரியார். அவர் ஆரம்பித்த தி.க.வின் “விடுதலை’”பத்திரிக்கையோ, வழக்கம்போல இந்த ஆண்டும் “தேவர் ஜெயந்தி’விழாவிற்கு விளம்பரம் வாங்கிப் பிரசுரித்துக் கொண்டது. சமூகநீதி, சாதி ஒழிப்பு, சமத்துவம் என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடும் வீரமணி கும்பலின் பித்தலாட்டம், தேவர் ஜெயந்தியோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. திராவிடர் கழகத்தின் தென்மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவராக இருக்கும் தே.எடிசன் ராஜா, நாடார் சங்கத்திலும் செயல்படுகிறார். மும்பையில் நாடார் சங்கம் நடத்தும் காமராசர் நினைவுப் பள்ளி விழாவில் எடிசன் ராஜாவுக்கு “நாடார்”வால் முளைத்து, “எடிசன் ராஜா நாடார்’ஆக மாறினார். பாரம்பரியமான திராவிட இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தி.க.வின் தகவல் தொடர்பு செயலாளருமான வழக்கறிஞர் அருள்மொழியின் தாயார் சரசுவதி சென்ற ஆண்டு மறைந்தபோது, “இந்து” நாளேட்டில் தந்திருந்த அஞ்சலி விளம்பரத்திலும் தனது “உடையார்”சாதி அடையாளத்தைத் தெளிவாகவே காட்டியிருந்தார்.

தேவர் சாதியைச் சேர்ந்த திரைப்பட பிரபலங்கள், தங்கள் சாதி விழாக்களில் அண்மைக்காலமாகக் கலந்துகொண்டு சாதி வளர்க்கின்றனர். இவர்களில் செந்தில், மனோரமா, விவேக் வரிசையில் இப்போது தி.மு.க.வைச் சேர்ந்த திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்துவும் இணைந்துவிட்டார். நகைச்சுவை நடிகர் கருணாஸ், தேவரைப் புகழ்ந்து “முக்குலத்தின் முகவரி”எனும் பாடல்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இதில் முகவரியை எழுதுவதற்கு வைரமுத்து “திருப்பாச்சி அறுவாளை’’த் தூக்கிக் கொண்டு குதித்திருக்கிறார்.

“ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்”என்ற கொள்கை முழக்கத்தைக் கொண்டிருக்கும் வே.ஆனைமுத்துவின் மார்க்சிய-பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியோ, “வன்னியர்களே ஒன்றுசேருங்கள்”என்று சொல்லவில்லையே தவிர, வன்னியகுல சத்திரிய “சமூகநீதி’யைத் தாண்டி வரவே இல்லை.

“அம்பேத்கரின் சாதி ஒழிப்பு செயல்திட்டங்களை ஆழமாகப் புரிந்து கொள்ள’ச் சொல்லி சி.பி.எம். கட்சிக்கு “பாடம் நடத்தும்”தலித் முரசில், “இந்து ஆதிதிராவிட மணமகனுக்கு அதே உள்பிரிவில் மணமகள் தேவை”என விளம்பரம் வருகிறது. சாதி காக்கும் இச்செயல் ஒவ்வோர் இதழிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

“சாதியை மறந்து தமிழர்களாக நாம் ஒன்றுபட வேண்டும்”என கருணாநிதி பேசுகிறார். ஆனால், அவரின் மகள் கனிமொழியோ, திருப்பூர்-மல்லம்பாளையம் நாடார் சங்கக் கல்வி நிறுவன விழாவிற்கு நாடார் சாதி தி.மு.க. அரசியல்வாதிகளான சற்குணபாண்டியன், கீதாஜீவன், பூங்கோதை போன்றவர்களுடன் கலந்து கொண்டு “நாடார்களாக ஒன்றுபடுகிறார்’.

பெரியாரின் கொள்கைகளைத் தங்கள் கொள்கையாகக் கருதுவோரும், தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கக் களம் கண்டிருப்பவர்களும், சாதி ஒழிப்பிற்குப் பிறகுதான் சோசலிசம் எனத் தலித்தியம் பேசுபவர்களும், தாங்கள் கொண்டிருக்கும் இலட்சியத்திற்குக் கூட விசுவாசமாக இல்லாமல் சாதி உணர்வாளர்களாகவோ, வெறியர்களாகவோதான் இருக்கிறார்கள். தங்களின் தோலைக் கீறி சாதி இரத்தம் ஓடுவதை அவர்களாகவே ஒவ்வோர் நிகழ்விலும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியும் விடுகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தை சாதி எனும் நுகத்தடி அழுத்திக் கொண்டிருக்கிறது. மனிதநீதிக்கு எதிரான சாதி ஆதிக்கவெறியை அழிப்பதற்கு, மாபெரும் சமூகப் புரட்சியே தேவைப்படுகிறது. அப்புரட்சி, சாதி வெறியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, முற்போக்கு வேடம் போடும் இத்தகைய களைகளுக்கும் எதிரானதுதான். இத்தகைய சுயசாதி மோகம் கொண்டோர்களையும், சாதியத்தைப் பாதுகாத்துவரும்  ஓட்டுப் பொறுக்கிகளையும் களைந்தெறியாமல் சாதிவெறிக்கெதிரான போராட்டத்தில் முன்னேறிச் செல்லவே முடியாது.

-புதிய ஜனநாயகம், டிசம்பர்’ 2009

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.க.வின் கருணையா? நரித்தனமா?

தமிழக-அரசின்-மருத்துவக்-காப்பீடு-திட்டம்-மு.க.வின்-கருணையா-நரித்தனமா

vote-012ஐந்தாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ள கருணாநிதியின் ‘பொற்கால’ ஆட்சியின் சாதனையாக “உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” எனும் புதியதொரு திட்டத்தை தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. “நுரையீரல் புற்றுநோயாளிக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை” என்றும் “சென்னை தனியார் மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு மூளைக்கட்டி இலவசமாக அகற்றப்பட்டது” என்றும் தினசரிகளில் செய்திகள் வந்து குவிகின்றன.

தமிழக அரசின் 26 நல வாரியங்களின் உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்றும், இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள மக்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்றும் இத்திட்டம் கூறுகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் ஸ்மார்ட் கார்டு (கிரெடிட் கார்டைப் போன்ற) ஒன்று வழங்கப்படுமாம். மாநிலமெங்கும் அரசு ஊழியர்கள் முகாம்களை நடத்தியும், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தியும், நல வாரியங்கள் எவற்றிலும் உறுப்பினராக இல்லாத பயனாளிகளை அடையாளம் கண்டு இத்திட்டத்தில் சேர்ப்பார்களாம்.

“ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்சூரன்சு” என்ற பன்னாட்டு காப்பீடு நிறுவனத்திடம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பட்டியலிட்டிருக்கும் தனியார் மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு இரண்டு லட்சம் ரூபா வரைக்கும் சிகிச்சை தரப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியரிடமும் மாதாமாதம் ரூ.50-ஐ வசூலித்து காப்பீட்டு நிறுவனத்துக்கு இத்தொகையை அரசு வழங்கும். இதன் மூலம் காப்பீட்டு நிறுவனத்துக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் நிரந்தர வருவாயை அரசு உறுதிப்படுத்தியுள்ளது. சிகிச்சை பெற வரும் மக்களிடம் ஒட்டக் கறந்துவிடும் தனியார் மருத்துவமனைகள் திடீரெனக் கருணை பொங்க ‘இலவசமாக’ சிகிச்சை சேவதன் பின்னணி இதுதான்.

இத்திட்டத்தின்படி ஏழைக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும்  அரசே ஆண்டொன்றுக்கு ரூ.500 வீதம் காப்பீடு தொகையாக ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தி வரும். சென்ற ஜூலை மாதம் சென்னையில் நடந்த இதற்கான தொடக்கவிழாவில் இவ்வாண்டின் முதல் காலாண்டு பிரீமியமாக ரூ.130 கோடியை ஸ்டார் ஹெல்த்  நிறுவன அதிகாரிகளிடம் கருணாநிதி வழங்கினார்.

உலகின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கப்படுகிறார்கள். தலைசிறந்த மருத்துவர்களாக இருக்கும் அரசு மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைகளிடம் அதனை ஒப்படைத்தது ஏன் என்ற கேள்விக்கு, “முதலமைச்சரின் மருத்துவ நிதி உதவி பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏழைகளுக்கும் தரமான சிகிச்சை கிடைக்கவேண்டும். எனவேதான் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது” என்று அரசு காரணம் ல்கிறது.

ஆண்டுதோறும் இத்திட்டத்திற்கு அரசு வழங்கப்போகும் தவணைத் தொகை மட்டும் ரூ.517 கோடிகளாகும். அதே நேரத்தில், மதுரை அரசு மருத்துவமனையை அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான கழகம் (எம்ஸ்) தரத்திற்கு உயர்த்தப் போவதாக அறிவித்து அரசு ஒதுக்கியுள்ள தொகையோ ரூ. 150 கோடிகள்தான். இதன்படி பார்த்தால், காப்பீடுக்குத் தனியாரிடம் ஒவ்வோராண்டும் போய்ச்சேரும் பணத்தைக் கொண்டு மூன்றுக்கும் மேற்பட்ட நவீன உயர்தர மருத்துவமனைகளைக் கட்டி விடமுடியும்.

அரசு மருத்துவர்களோ, “சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் இருக்கும் 30 அறுவைசிகிச்சை மையங்களில் 25 மையங்கள் தினமும் காலை 8 முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்குகின்றன. 24 மணி நேரமும் இயங்குபவையோ அவற்றில் வெறும் ஐந்துதான். இவற்றை முறைப்படுத்தி 24 மணிநேரமும் இயங்குபவையாக மாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை” என்று புலம்புகின்றனர். ஏற்கெனவே இருக்கும் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் சீரமைத்தாலே தரமான சிகிச்சையினை அரசே தரமுடியும் என்றும் மருத்துவர்கள் ல்கின்றனர்.

ஆனால் இதனைச் சேயாத அரசோ, கருணாநிதியின் திட்டத்தில் இடம்பெற்றுள்ள இதயநோக்கான பலூன் வால்வு சீரமைப்பிலும் இதய வால்வு சீரமைப்பிலும் நிபுணத்துவம் மிக்க சென்னை ரயில்வே மருத்துவமனையை தனியாருக்குத் தாரைவார்த்துத் தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதில் முதல்கட்டமாக, ரயில்வே மருத்துவமனையையும் தனியாரையும் சேர்த்து மருத்துவக்கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளது.

மருத்துவ சேவையை தனியார்மயப்படுத்தினால் ஏற்படும் பேரவலத்துக்கு அமெரிக்கா சரியான முன்னுதாரணமாகும். அங்கு மருத்துவம் முழுக்க தனியார் காப்பீடு நிறுவனங்களின் பிடிக்குள் இருப்பதால், காப்பீடுத் தவணை செலுத்த முடியாத ஏழைகளுக்கு மருத்துவ சேவையே முற்றிலும் மறுக்கப்படுகின்றது. காப்பீடு நிறுவனங்களின் கொள்ளையால் அங்கு 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

இந்தியாவும் அதே பாதையில் உலகவங்கியின் வழிகாட்டுதலின் கீழ் “அனைவருக்கும் ஆரோக்கியம்” எனும் சுகாதாரக் கொள்கையை 2002-ஆம் ஆண்டு அறிவித்து, அதன்படி மருத்துவ நலத்திட்டங்களில் அரசின் பங்களிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. தனியாரின் காப்பீடுத் திட்டத்திற்குள் பொது மருத்துவத்தைத் தள்ளிவிட உத்தரவு போட்டிருப்பது, உலகவங்கி. அதற்கு தனது பெயரைச் சூட்டியிருப்பதுதான், கருணாநிதியின் மூளை.

தொடக்கவிழாவில் பேசிய கருணாநிதி, கோபாலபுரத்தில் இருக்கும் அவரின் வீடு, அவரின் மரணத்திற்குப் பின்னர் இலவச மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டங்கள் எதிர்ப்பே இன்றி நடைமுறைப்படுத்தப்படுமானால், அவருக்குப் பின், சென்னையில் கருணாநிதி வீடு ஒன்றில் மட்டும்தான் இலவச மருத்துவம் கிடைக்கும்.

இப்போதைக்கு கருணாநிதியின் காப்பீடுத் திட்டம், ஏழைகளிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. ஆனால் அரசின் நேரடி மருத்துவ சேவைகள் படிப்படியாக ஒழிக்கப்பட்ட பின்னர், அனைத்துத் தரப்பினரையும் தனது வியாபார வலைக்குள் காப்பீடு நிறுவனம் வீழ்த்தத் தொடங்கும். அதன் பிறகு மருத்துவக் காப்பீடு வைத்துள்ளவர்கள் மட்டுமே நோக்குச் சிகிச்சை பெற முடியும் ஆபத்தான நிலை உருவாகும்.

சேமநல அரசினை இலாபகரமாக இயங்கும் அரசாக மாற்றுதல் எனும் போக்கைத் தாராளமயமும் தனியார்மயமும் துரிதமாகச் செயல்படுத்தி வருகின்றன. இந்த அயோக்கியத்தனம் மக்களிடம் அப்பட்டமாகத் தெரிந்துவிடாதிருக்க அதற்குச் சில பூச்சுவேலைகளும் கவர்ச்சியான பெயர்களும் தேவைப்படுகின்றன. ஓட்டுப்பொறுக்கும் அரசியலுக்கு இந்தக் கவர்ச்சியும் தேவையாக இருக்கின்றது. இப்போதைய எதிர்க்கட்சி அடுத்தமுறை ஆளும்கட்சியாகும்போது, இதே திட்டத்தை மாற்றமின்றி செயல்படுத்தும் என்பதால் எந்த எதிர்க்கட்சியுமே இத்திட்டத்தை தீவிரமாக எதிர்ப்பதில்லை.

இத்திட்டத்திற்கு தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ள “ஸ்டார் ஹெல்த்” நிறுவனம்தான் “ஆரோக்கியஸ்ரீ ” எனும் பெயரில் ஆந்திர அரசோடு கைகோர்த்துக் கொண்டு, வாரங்கல் மாவட்டத்தில் சில பினாமி மருத்துவமனைகளை உருவாக்கி, அறுவை சிகிச்சையே தேவைப்படாத பெண்களுக்கும்கூடக் கருப்பைகளை அகற்றிப் பல கோடிகளைச் சுருட்டியிருக்கின்றது.

கருணாநிதியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை மட்டுமே செலவிடப்படும். ஆனால், இன்றைக்கு இதய அறுவை சிகிச்சை மட்டும் ஒன்றரை இலட்சத்தில் இருந்து இரண்டு இலட்சம் வரை செலவு பிடிக்கக் கூடியதாக உள்ளது. இத்திட்டம் பட்டியலிட்டிருக்கும் 150 தனியார் மருத்துவமனைகளில் சென்னையில் மட்டும் 63 உள்ளன. காச்சல், இருமல் என்று போனாலே எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வைத்து குறைந்தது ரூ 5 ஆயிரத்தைக் கறந்து விடக்கூடிய லைஃப் லைன் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், அப்பல்லோவை விட அதிகமாகப் பணம் பறிக்கும் பில்ரோத் மருத்துவமனையும் கொலைகார – கொள்ளைக்கார மருத்துவமனைகளாகப் புகழ் பெற்றுள்ள ஓசூரின் அகர்வால், அசோகா, விஜய் முதலானவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஓவுபெற்ற அரசு ஊழியர் ஒருவரின் புற்றுநோ சிகிச்சைக்கென அடையாறு புற்றுநோ மருத்துவமனை அண்மையில் ரூ.2 லட்சத்து இருபதாயிரத்தைக் கோரியிருந்தது. ஆனால் காப்பீடுத் திட்டம் அவருக்கு அனுமதித்ததோ ஒரு லட்சத்து இருபதாயிரம்தான். அவர் முழுப் பணத்தையும் மருத்துவமனையில் முதலிலேயே கட்டிவிடுமாறும், இத்தொகையை அவருக்கு ஆறு தவணைகளில் பிரித்துத் தருவதாகவும் காப்பீடு நிறுவனம் கூறியது. இதற்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக அவர் எச்சரித்த பிறகுதான், அந்நிறுவனம் இறங்கி வந்து காப்பீடு தொகையை ஒரே தவணையில் தரச் சம்மதித்திருக்கிறது. விவரம் தெரிந்தவர்களையே மொட்டையடிக்கப் பார்க்கும் காப்பீடு திட்டம், சாமானியர்களை என்ன பாடுபடுத்துமோ! ஆரம்பமே இப்படி அமர்க்களமாக இருப்பதிலிருந்தே, இத்திட்டம் மக்களைக் காக்குமா, அல்லது காப்பீடு நிறுவனங்களைக் காக்குமா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

-புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2009

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

நூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்!

தெலுங்கானா

பெண் என்றால் ? வம்பு பேசுவாள், வாயாடுவாள், ஜாடை பேசுவாள், இல்லையென்றால் மாமியார், மருமகள், நாத்தனார், கணவன் என அணி பிரித்துக் கொண்டு தங்களுக்குள்ளாகவே ஒரு தர்மயுத்தத்தை நடத்திப் போராடுவாள்’. இன்னும் புத்திசாலிப் பெண்ணோ மத்தியான மகளிர் மட்டும் தொடரில் வந்து எம்பிராய்டு பின்னிக் காட்டுவாள். எப்படி வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று விபரம் சொல்வாள்.அனைத்துக்கும் மேலே கள்ள உறவுக்கு பொறி பறக்க வசனம் பேசி புரட்சியே?’ செய்வாள்.. இப்படித்தான் தொலைக்காட்சிகளும், சினிமாக்களும் பெண்களை தமது வர்த்தக வட்டத்துக்குள் சுழல விட்டுக் காட்டுகின்றன.

ஆனால் தெலுங்கானாவின் உழைக்கும் வர்க்கத்துப் பெண்களோ எமது பேரழகும் ஆளுமையும் சமூக உணர்வில் வெளிப்படுகின்றதுஎன்று இரத்தசாட்சியாக நம்முன் வந்து உரக்கப் பேசுகிறார்கள். அவ்வாறு நடைமுறையில் வாழ்ந்த தெலுங்கானா பகுதி பெண்களின் வகை மாதிரியாக ஏழு பெண்களின் வாழ்க்கைக் கதையை நம்முன் நடத்திக் காட்டி, நமது வாழ்வின் அற்பக்கண்ணோட்டங்களைத் தகர்த்து எறிகின்றது ஒரு புத்தகம். அந்தப் புத்தகத்தின் பெயர் தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்”.

அளப்பரிய வீரமும், தியாகமும் ததும்பி நிற்கும் தெலுங்கானாவில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் மக்கள் அணிதிரண்டனர். நிலப்பிரபுக்களின் கேட்பாரற்ற கொடிய சுரண்டல், போலீசு இராணுவத்தின் அடக்குமுறைகள் படுகொலைகள் இவைகளைக் கண்டு பயப்படாமல், பணியாமல் நிலத்துக்காகவும், தங்கள் விடுதலைக்காகவும், அதிகாரத்திற்காகவும் ஆர்த்தெழுந்தது தெலுங்கானா. திருப்பித் தாக்கி திமிறி எழுந்த தெலுங்கானாவின் பெண்களில் ஒருவர்தான் இந்த நூலில் முதலில் நமக்கு அறிமுகமாகும் பண்டி ராஜக்கா. போராளிகளுக்கு சோளக்கதிரை சுமந்து சென்றபோது வழியிலேயே போலீசும், இராணுவமும் நிலப்பிரபுவின் ஆட்களோடு சேர்ந்துகொண்டு அவளைப் பிடித்து சித்திரவதை செய்கின்றார்கள். உதைத்தால் போராட்ட விபரங்களையும் கட்சி இரகசியங்களையும் காட்டிக்கொடுத்து விடுவாள் என்பது அவர்களது கணக்கு.

மேலும் பெண்தானே ! இரகசியம் காக்க மாட்டாள். கற்பழிப்பு வரை சென்றால் பயந்து விசயத்தை வெளியிடுவாள் என்று அந்தக் கயவர்கள் கடைசி எல்லை வரைக்கும் போனாலும் அவள் உடம்பிலிருந்து இரத்தத்தைத்தான் கறக்க முடிந்ததே ஒழிய, மக்கள் விடுதலைக்காகப் போராடும் கட்சியின் திட்டங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பெற முடியவில்லை.

ஆணாதிக்கத் திமிரோடு அந்த அயோக்கியர்கள் அந்தப் பெண்ணின் மேல் உடல்வதையில் மட்டுமல்ல, சொல்வதையிலும் இறங்கினார்கள். நிலப்பிரபுத்துவத்தின் எந்த அடக்குமுறைக்கும் பணியவில்லை பண்டி ராஜக்கா. பொதுவாழ்க்கைக்கு வந்து கட்சி, அரசியல் என்று செயல்படப் போனால் ஒரு பெண்ணின் ஒழுக்கத்துக்கே கேடு வந்து சேரும் என்று எக்கச்சக்கமாக யோசிக்கின்ற நடுத்தரவர்க்க மனநிலையாளர்கள் மத்தியில் பெண்டல பாடு என்ற சாதாரண கிராமத்துப் பெண்ணான ராஜக்கா எதிரிகளின் வதைமுகாமில் நேருக்குநேர் வாதம் செய்யும் துணிச்சலை நீங்களே பாருங்கள்.

என்னடி தேவடியா ? இனியாவது சொல்றியா ?” என்று போலீசு இன்ஸ்பெக்டர் அதட்டினான்.

என்ன சொல்லச் சொல்றீங்க ?” என்று கேட்டாள் அவள்.

உன்னோட ஆம்படயான்கள் சங்கதிதான்என்று தாஸ் என்கிற ஜமீன்தார் எகத்தாளமாகக் கூறினான்.

“.. .. அவ சும்மாவே சொல்லுவாளா சார் ? போட்டு நொறுக்குங்க ! பாருங்களேன் எவ்வளவு சதை போட்டிருக்கா ? இவளுக்குப் போராட்டக் குழுவில் பத்துப்பேர் ஆம்படையான்களாம் !என்று கூறி, ஜமீன்தார் தூண்டி விட்டான். (நூல்: பக்.7)

நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கினால் ஓவென்று அழுது தங்கள் வழிக்கு வந்து விடுவாள் என்ற அவர்களின் சம்பிரதாயமான கலாச்சாரத்தின் முகத்தில் காறித்துப்பும்படி முன்னை விடத் தீவிரமாகப் பேசினாள்.

ஒழுக்கமே இல்லாத நீ என்னை அவதூறு பேசறியா ? நீ பிழைக்கிற பிழைப்பு ஒழுக்கங்கெட்ட பிழைப்பு ! திங்கறதெல்லாம் இரத்தச்சோறு ! உன்னையும் உன் குடும்பத்தையும் யாருக்குத்தான் தெரியாது ? அப்படிப்பட்ட நீ, என்னைப்பத்தி அவதூறு பேசறியா ?” (நூல்: பக்.8).

ஒரு பெண் தனது குடும்ப நலனுக்காக வாழ்வதையும், கணவனது விருப்பப்படி இருப்பதே குடும்ப லட்சணம் என்று அவன் விருப்பப்படி தாசி வீட்டுக்குத் தூக்கிச் சென்றதை இலக்கியமாகப் புராணமாகப் பேசும் இந்த நாட்டில் தான் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும்போதும் தனது சமூகத்தின் மக்களுக்காக அனைத்து இன்னல்களையும் எதிர்கொண்டு சமூக உணர்வுடன் ஒரு பெண்ணால் போராட முடியும் என்பதை நடைமுறை சாத்தியமாக்கிக் காட்டுகிறாள் ராஜக்கா.அது மட்டுமல்ல.

பாவிகளா ! உங்களிடம் உள்ள மிருகத்தனத்தை எல்லாம் காட்டிடுங்க ! ஆனா நான் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் துரோகம் மட்டும் செய்வேன்னு நினைக்காதீங்க ! போராட்டக் குழுக்களுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். நான் கட்சியிலே கத்துக் கொண்டது துரோகத்தை அல்ல. கொடுமைகளையும் அநியாயங்களையும் உயிரையும் பொருட்படுத்தாம எதிர்க்கிறதைத்தான் நான் கட்சியிலே கற்றுக் கொண்டேன்..

படிப்பும், தோழமையும், சமத்துவமும் கத்துக்கிட்டேன். உங்களையும் உங்களது கொடுமைகளையும் ஒருநாள் போராளிகள் கோதாவரி நதியிலே மூழ்கடிக்கத்தான் போறாங்க.. நான் உங்களுக்கு அடிபணிய மாட்டேன். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் துரோகம் செய்ய மாட்டேன்.என்று ஆவேசமாகக் கூறினாள் அவள். (நூல்: பக்.9)

இப்போதென்ன புரட்சியா வந்துவிட்டது ? வரும்போது நானும் மாறிக் கொள்கிறேன். அதுவரைக்கும் ஊரோடு ஒத்துப்போவதுதான் புத்திசாலித்தனம் என்று அநீதிக்கெதிராக சமரசமாக வாழ்வதையே சாமர்த்தியமாக வெளிப்படுத்துபவர்களின் மனப்போக்கை பண்டி ராஜக்காவின் இலட்சிய உறுதி இடித்துறைக்கிறது. கணவனுக்கு மனைவி துரோகம், மனைவிக்கு கணவன் துரோகம், குடும்பத்திற்கு மகன் துரோகம் என்பதே வாழும் கலையாக வளர்ந்து வரும் இந்த சமூகத்தில் கட்சிக்குத் துரோகம் செய்வதையே ஆகக் கேவலமாகக் கருதும் ராஜக்காவின் சமூக உணர்வு புதிய கலாச்சார விழுமியங்களையும் நம்முன் படைத்துக் காட்டுகிறது.

மகிழ்ச்சியான குடும்பம், அன்பான கணவன், ஆசையோடு பார்க்கின்ற அம்மா, அப்பா, தங்கையை விட்டுவிட்டு கட்சிக்காக போலீசிடம் சிக்கி.. அவமானப்பட்டு.. இது உனக்குத் தேவையா ?” என்று எவ்வளவோ நைச்சியமாகப் பேசியும், ராஜக்காளிடம் சராசரிப் பெண் உணர்வை விடக் கட்சியின் இலட்சிய உணர்வே மேலோங்கி இருப்பதை நேருக்கு நேர் பார்த்து வெறுத்துப் போன போலீசும், இராணுவமும் அவளைப் பன்னிரெண்டு நாட்கள் வதைமுகாமிலே வைத்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியும், இரவு முழுக்க ஏரித்தண்ணீரில் நிர்வாணமாக நிற்க வைத்தும் துன்புறுத்தினார்கள். ராஜக்காவின் போர்க்குணமோ எதிரிகளின் அதிகாரத்தை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியதே ஒழிய மக்களுக்காகப் போராடும் அவளது நெஞ்சுறுதி இறுதி வரை தோற்கவே இல்லை.

எல்லா சித்திரவதைகளையும் கடந்து அவள் ஊருக்கு வரும்போது போலி கம்யூனிஸ்டுகளோ போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து ஆளும்வர்க்கத்தோடு சமரசமாகி தேர்தலில் பங்கெடுக்கப் போகின்றனர். கொள்கைக்குத் துரோகமிழைத்தவர்களைப் பார்த்து மனம் கசந்து போய் விடுகிறாள் ராஜக்கா. எதிரிகளிடம் அவள் பட்ட சித்திரவதையை விலாவாரியாக விவரித்த நூலாசிரியர் போராட்டத்தின் துரோகிகளால் அவள்பட்ட மனத்துயரை விவரிப்பதற்கு மனமின்றி ராஜக்காவின் வருத்தத்தை ஒரு சுமாரான தொனியில் பதிவு செய்துவிட்டு, போலிக் கம்யூனிஸ்டுகளுக்கே உரிய சரிக்கட்டும்நுணுக்கத்தோடு எந்த பரிசீலனையும் இன்றி கதையை முடிக்கிறார்.

ராஜக்காவின் வாழ்க்கைக் கதையில் இந்த இடத்தின் மூலம் போலிக் கம்யூனிஸ்டுகளையும் அவள் அம்பலப்படுத்தி விடுகின்றாள். இப்படி ராஜக்கா என்ற ஒரு பெண் மட்டுமல்ல, ரங்காபுரம் என்ற கிராமத்தில் வாழ்ந்த வெர்ரம்மா என்ற பெண்ணின் வழியாக அந்த வீட்டில் உள்ள வயதான மூதாட்டி உட்பட எப்படி மெல்ல மெல்ல போராட்டக் குழுவுக்கு ஆதரவாக தங்களது வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையெல்லாம் எதார்த்தமாக அறிய முடிகின்றது. வீட்டுக்கு போலீசு வந்தாலே, குடும்ப கவுரவம் போச்சு ! நமக்கு இந்த புரட்சி அரசியல்லாம் வீண் வம்பு என்ற மதிப்பீட்டின் படி வாழச் சொல்லும் ராகவம்மா பாட்டியிடம், சீதாராமையா பேசும் வார்த்தைகள் பாட்டியை ஒத்த கருத்துடைய அனைவருக்கும் பதிலாக அமைகிறது. மக்கள், விவசாய சங்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் அமைத்து கொடுமைகளை எதிர்த்துகிட்டு இருக்காங்க ! நாமும் அவங்களுக்கு துணையா நிற்போம். அவங்களோடேயே இன்ப துன்பங்களை அனுபவிப்போம். இதுதான் நம்ம குடும்பத்துக்கும் வம்சத்துக்கும் மதிப்பு தரும் ! ஊரோட ஒட்டித்தான் நாம் போகணும்என்று கூறினான் சீதாராமய்யா. (நூல்: பக்.34)

போராட்டக் குழுக்களுக்கு உதவி செய்வதிலும், கம்யூனிச லட்சியங்களை குடும்பப் பண்பாகக் கருதி செயல்படுவதிலும் தன்னிகரற்று விளங்கிய பெண்களில் நடிகட்டா கிராமத்தின் சலவைத் தொழிலாளியான லச்சம்மாவும் ஒருவர். லச்சம்மா போராட்டக்குழு தோழர்களுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து போலீசு பட்டாளம் அவளை ஊருக்கு மத்தியில் நிர்வாணப்படுத்தி, தலைகீழே மரத்தில் தொங்கவிட்டு அடிக்கிறது. போராட்டக்குழுத் தோழர்கள் எங்கிருக்கிறார்கள்.. காட்டிக்கொடுஎன்று எவ்வளவோ கேவலமாக வைதும், அடித்தும் லச்சம்மாவோ மானத்தினும் பெரிதாக மக்களுக்காகப் போராடும் கட்சித் தோழர்களைப் பற்றி ஒரு வார்த்தையும் கூற மறுக்கிறாள். படிக்காத அந்த சலவைத் தொழிலாளி பட்ட சித்திரவதைகளை அறிந்து பார்க்க வரும் போராட்டக் குழுவைச் சேர்ந்த ராமுலம்மாவின் ஆறுதலுக்கு லச்சம்மாவின் பதிலைப் பாருங்கள். அதென்னம்மா ! அப்படிச் சொல்றே ! எனக்கு அவமானம் நேர்ந்தா, உங்களை ஏசுவானேன் ? என் ஒருத்திக்கு மட்டுமா, அவமானங்களும் கஷ்டங்களும் ? இந்த பாழாய்ப் போன அரசாங்கத்தாலே எல்லோருக்கும்தான் கஷ்டங்களும், அவமானங்களும் ? ..” (நூல்: பக்.75)

தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்,.. புரட்சியும் போராட்டமும்என்று புத்திசாலித்தனமாகப் பேசும் படித்த வர்க்கத்தின் சுயநலத்தை இந்த இடத்தில் வெளுத்து வாங்கும் சலவைக்காரியாக உயர்ந்து நிற்கிறாள் லச்சம்மா. இதேபோல நரசம்பேட்டையை சேர்ந்த மல்லிகாம்பா, வாரங்கல் மத்திய சிறையில் அடக்குமுறைக்கு எதிராக உயிர்நீத்த ராம் பாயம்மா, சூர்யாபேட்டையைச் சேர்ந்த சிவம்மா, ஜனகாம் வட்டாரத்தைச் சேர்ந்த அகிலம்மா, .. இப்படி ஒவ்வொரு பெண்களும் வெவ்வேறு வகையில் தெலுங்கானா மக்கள் போராட்டத்தோடு தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொண்டதை நமக்கு அறிமுகப்படுத்துகிறது என்ற வகையில் இந்நூலாசிரியரின் உழைப்பு வரவேற்கத் தகுந்ததாக உள்ளது. அதேவேளையில் தெலுங்கானாப் போராட்டத்தில் பங்கேற்ற தீரமிகு பெண்களின் போராட்ட மரபை, சீரழிந்து போன போலிக் கம்யூனிஸ்டுகள் தங்களுடையது எனப் பீற்றிக் கொள்வதற்கு எந்த நியாமும் இல்லை. ஏன் இப்படி எங்கள் கம்யூனிச லட்சியத்தை சீரழித்தீர்கள் ?” என்று தெலுங்கானாப் போரின் பெண்களின் வாரிசுகளாய் நாம் கேள்வி கேட்பதற்கான நியாயத்தை இந்நூல் வழங்குகிறது.

அறிந்தோ, அறியாமலோ இதற்கு உதவி செய்வதற்காக இந்நூலாசிரியரை நாம் பாராட்டலாம். தேர்தல் பாதைக்கு இழுத்துப் போய் தெலுங்கானாவின் இறுதி லட்சியத்தை மூழ்கடித்து விட்டோம் என்ற கனவில் மிதக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் கண்களை உறுத்தும்படி மேற்கு வங்கத்தின் நந்திகிராமிலும், லால்கரிலும் தெலுங்கானாப் போரின் தீரமிகு பெண்கள் மீண்டும் எழுந்து நிற்கிறார்கள்.இப்படி எல்லா இன்னல்களையும் எதிர்த்துப் போராடும் மனவலிமை ஒரு பெண்ணுக்கு எங்கிருந்து வந்தது என்று நீங்கள் கேட்டால், பண்டி ரமாக்காவும், லச்சம்மாவும், ராம் பாயம்மாவும் எங்களது வலிமை சமூக உணர்வில், கம்யூனிச சித்தாந்தத்தில் இருக்கிறது என்கிறார்கள் அழுத்தமாக. இது சாத்தியமா ? என்பவர்கள் அவர்களுடனேயே விவாதிக்க இந்தப் புத்தகத்திற்குள் செல்லுங்கள்.

  • நூலின் பெயர்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்
  • ஆசிரியரின் பெயர்: எம்.ஏ. பழனியப்பன்
  • விலை: ரூ. 50.00
  • வெளியீடு: அறிவுப் பதிப்பகம், சென்னை-14.
  • கிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

______________________________________________________

-புதிய கலாச்சாரம், ஆகஸ்ட்டு’2009
______________________________________________________

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 டவுன்லோட்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. “முதலாளித்துவம் மக்களைக் கொல்லும், மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும்!” – புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் சூளூரை
  2. விவசாயிகள் – மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கருப்புச் சட்டங்கள்
  3. முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். – இன் பித்தலாட்டம்!
  4. முனைவர் பாலகோபால்: மனித உரிமைகளுக்காகப் போராடிய மாவீரன்!
  5. கர்நாடக அரசை ஆட்டுவிக்கும் திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள், ரெட்டி சகோதரர்களின் கிரிமினல் ஜாதகம்
  6. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: நாட்டை வளைத்திருக்கும் ஒட்டுண்ணிகள்!
  7. தேவர் ஜெயந்தியும் ‘முற்போக்கு’ நரிகளும்
  8. மாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’!
  9. இந்தியாவின் சீன எதிர்ப்புக் கூச்சல்கள்: தேச பக்தியா? பிராந்திய மேலாதிக்கமா?, சீனாவின் திபெத்தில் நடந்த இந்திய-அமெரிக்கக் கூட்டுச் சதிகள்
  10. தில்லை கோயிலை மீண்டும் கைப்பற்றாமல் தடுக்க… அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கான தடையை உடைக்க…உச்சநீதிமன்றத்தில் வழக்கு! நிதி தாரீர்!!
  11. “லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ். – இன் அவதூறுக்கு நீதின்றமே பக்கமேளம்!
  12. ஏழைக்கு ஒரு நீதி; பணக்காரனுக்கு ஒரு நீதி. – இதுதான் சட்டத்தின் ஆட்சி!
  13. பொறுக்கி அரசியல்
  14. “வதை முகாம்களை நீக்கி ஈழத்தமிழ் மக்களை மீள் குடியமர்த்து! சிங்களக் குடியேற்றங்களை அகற்று! ராஜபக்சே அரசைப் போர்க்குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கை எடு!” – தமிழகமெங்கும் 16.12.09 அன்று புரட்சிகர அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம், நவம்பர்’ 2009 இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

ஈழம்: இந்திய அமைதிப்படையின் அட்டூழியம்… ஆரம்பம்!!

103

ஈழம்: இந்திய அமைதிப்படையின் அட்டூழியம்... ஆரம்பம்!!

ஈழத்தின் நினைவுகள் – பாகம் -8

vote-012காந்தி தேசத்தின் காவலர்கள்  ஈழத்தமிழர்களை சிங்கள பேரினவாதத்தின் வன்கொடுமைகளிலிருந்து காப்பாற்ற கருணைக்கொலை செய்திருந்தால் கூட நன்மைக்கே என்று நாங்கள் சந்தோசமாய் செத்திருப்போம். காலங்காலமாய் எங்களை  நம்பவைத்து  முதுகில் குத்தியே பழக்கப்பட்ட இந்தியா, ஈழத்தமிழனுக்கென்றே ஓர் கொம்பு சீவியது. அதுதான் இந்திய அமைதிப்படை. இந்தியாவில் காந்தியை பின்பற்றுபவர்களும் சரி, இலங்கையில் புத்தரின் பெயரால் ஆட்சி செய்பவர்களும் சரி இருசாராருமே எங்களின் இரத்தத்திலும், கண்ணீரிலும்தான் அதிக சந்தோசம் காண்பார்கள் போலும்.

ஏற்கனவே இலங்கை ராணுவத்தின் வன்கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த எங்களை, இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்து ஈழத்தில் அப்பாவித் தமிழர்களான எங்கள் மீது போர்தொடுத்த கொடுமையை நாங்கள் சொல்லியழுதாலும் தீராது. இந்திய அமைதிப்படையை ஆங்கிலத்தில் Indian Peace Keeping Force-IPKF என்று கொண்டாலும், ஈழத்தமிழர்கள் சொல்வழக்கில் அது Indian People Killing Force என்றே சொல்லப்படுகிறது. அதாவது, ஈழத்தமிழர்களை கொல்வதற்கென்றே உருவாக்கப்பட்ட படை என்றுதான் சொல்வார்கள்.

எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த சிங்களராணுவமும், புதிதாக அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்திய ராணுவமும் சரி ஒரே மாதிரித்தான் தெரிந்தார்கள். இந்திய அமைதிப்படை என்னும் போது, அது ஏனோ எங்களுக்கு அதிகமாகவே வலிக்கத்தான் செய்கிறது. ஒருவேளை அது தமிழ்நாடும், ஆறரை கோடி தமிழர்களும் இருந்தும் எங்களுக்கு இந்த அவலங்கள் நிகழ்ந்ததே என்ற ஈழத்தமிழர்களின் ஆதங்கமாக இருக்கலாம்.

ஏற்கனவே ஆண்டாண்டு காலமாய் ராணுவ அடக்குமுறையினாலும், ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற ராணுவ நடவடிக்கையாலும் சோர்ந்து போயிருந்த எங்களுக்கு இந்திய ராணுவத்தின் வருகை ஓர் தற்காலிக விடுதலையை தரும் என்றுதான் நம்பியிருந்தோம். வடமராட்சியிலிருந்து தென்மராட்சிக்கு போகும் போது இருந்த வலி திரும்பி வரும்போது ஏனோ அதிகமாகத் தெரியவில்லை. ஆனாலும், இதுவும் ராணுவம் என்கிற பயத்தை மட்டும் எங்களின் மனங்களிலிருந்து முற்றுமுழுதாக அகற்ற முடியவில்லை.

வழி நெடுக இந்திய ராணுவமும் எங்களை கொடுமைப்படுத்துமா என்றெல்லாம் கேள்விகேட்டே என் சித்தப்பாவின் உயிரை நான் எடுத்துவிட்டேன். அதற்கு அவர் அப்போது சொன்ன பதில்தான் அந்த வயதில் என்னை வாய்பிளந்து கேட்கவைத்தது. இந்தியா ராணுவத்தை அனுப்பியது ஈழத்தமிழர்கள் பாலுள்ள அக்கறையால் அல்ல. அது அவர்களின் தேசிய நலன் சார்ந்தது என்றார். எனக்கு அது அப்போது புரிந்த மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது. மாணவப்பருவத்தில் படிப்பு, நட்பின் அரட்டைகள், இனிமையான எதிர்காலக் கனவுகள் இப்படித்தானே அநேகமானவர்களுக்கு வாழப்பிடிக்கும். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? போர் பூமியில் மாணவப்பருவத்தின் அத்தனை சந்தோசங்களையும் இழந்த எனக்கு அது ஏனோ ஓர் வடுவாக என்மனதில் இன்றுவரை பதிந்துதான் விட்டது.

சரி, இனிமேலாவது நாங்கள் பயமில்லாமல் பள்ளிக்கூடம் போகலாம், எங்கள் சொந்தமண்ணில் எங்களுக்கு பிடித்த இடங்களில் அடையாள அட்டை இல்லாமலே சுதந்திரமாய் நடமாடலாம், குண்டுச்சத்தங்கள் இல்லாமல் தூங்கலாம், குறிப்பாக பதுங்குகுழி வாழ்க்கையிலிருந்து விடுதலை, அடிக்கடி தலையை நிமிர்த்தி வானத்தைப் பார்த்து எப்போது தலை மீது குண்டுவிழும் என்று பயப்படத்தேவையில்லை, உலகில் பெரும்பான்மையான மக்களைப்போல் நாங்களும் ஓர் இயல்பு வாழ்க்கை வாழலாம் என்று, காந்திதேசத்தின் மகாத்மா எப்படி எதிர்கால இந்தியாவை கனவு கண்டாரோ அப்படியொரு வாழ்க்கையை நாங்கள் சொற்ப காலமெனும் ஈழத்தில் வாழப்போகிறோம் என்ற சந்தோசக் கற்பனையுடன்தான் வடமராட்சிக்கு திரும்பினேன். என் அத்தனை சந்தோசமும் அமைதிப்படை என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடங்கியிருந்தது.

அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் ஊர் திரும்ப ஆரம்பித்திருந்தார்கள். வழிநெடுக பார்த்தவர்களிடமெல்லாம் இந்தியராணுவம் நல்லவிதமாக நடந்துகொள்கிறார்களா என்றெல்லாம் விசாரித்தபடியே ஊர்வந்து சேர்ந்தோம். எல்லோரும் சொன்னது, “ஓம், ஓம் (ஆம்) ஒரு பிரச்சனையும் இல்லை. அவங்கள் நல்லவிதமாகத்தான் ஆக்களை நடத்துறாங்கள். நீங்கள் பயப்படாமல் போங்கோ” என்பதுதான். சிங்கள பேரினவாதத்தின் ராணுவ கைக்கூலிகளிடம்  மிதிபட்ட எங்களை யாராவது மனிதர்களாக மதித்தால் நிச்சயமாக கண்கலங்கி விடுவோம். ஆரம்பத்தில் இந்தியராணுவம் அப்படித்தான் எங்களை கண்கலங்க வைத்தார்கள். எங்களையும் மனிதர்களாக மதியுங்கள் என்பதுதானே எங்கள் அறுபது வருட கோரிக்கை.

எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு ஈழத்தில் அகாலமரணமான எங்களின் உறவுகளுக்காய் எந்த ராணுவ இடையூறுமின்றி, தலையில் குண்டு விழும் என்ற பயமின்றி  வாய்விட்டு அழமுடிந்தது இந்த நாட்களில்தான். இதற்காக இந்திய ராணுவத்திற்கு நாங்கள் நன்றி சொல்லியே தீரவேண்டும். ஆனால், பிற்காலத்தில் எங்களின் கண்ணீரின் காரணகர்த்தாக்களாகவும் இவர்களே இருந்தார்கள்  என்பது சோகத்திலும் சோகமான விடயம். ஊருக்கு வந்து எங்கள் வீட்டைப் பார்த்தபோது எங்களின் உரிமைகளைப் போலவே உடமைகளும் சிதைக்கப்பட்டும், சிதறடிக்கப்பட்டும் கிடந்தன.  ஊருக்கு வந்து சேர்ந்ததும் சிலகாலம் செத்தவீடு, துக்கவிசாரிப்புகள், உடைமைகளின் இழப்புகள், உடைந்த எங்களின் வீடுகளை சரிப்பண்ணி ஏதோ வீடு என்ற ஓர் கட்டிடத்தை உருவாக்குவது இப்படித்தான் நகர்ந்தது.

அது தவிர முகாமிலிருந்து முன்னேறிய சிங்கள ராணுவத்தால் ஆங்காங்கே புதைக்கப்பட்ட Land Mine என்று சொல்லப்படும் கண்ணிவெடிகளால் காலை இழந்த ஆடு, மாடு, மனிதர்கள் பற்றிய சோகம் ஒருபுறமும், தெருவில் இறங்கி நடந்தால் காலை இழந்துவிடுவோமோ என்ற பயமும் இருக்கத்தான் செய்தது. பேச்சுவழக்கில் கண்ணிவெடி, “மிதிவெடி” என்றே அழைக்கப்படுகிறது.  அப்படி கண்ணிவெடியில் மிதித்தால் என்ன செய்யவேண்டும் என்றும் பொதுவாகவே ஈழத்தமிழர்கள் அறிந்துதான் இருந்தார்கள். இந்த மிதிவெடிகளைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

போர் நடக்கும் இடங்களில் இவை பெரும்பாலும் விதைக்கப்படுகின்றன. இதனால் பலர் கால்களை இழந்து அங்கவீனர்கள் ஆகிறார்கள். ஒரு காலத்தில் இதைப் பற்றி விளம்பரப் படுத்த ஓர் உலகப்பிரபலம் வேண்டுமென்று யார் நினைத்தார்களோ, மறைந்த இங்கிலாந்தின் இளவரசி டயானாவை வைத்து பெருமளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அவரால் கண்ணிவெடியின் அவலத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்ட ஜெனீவாவில் ஐ. நா. சபையின் முன் மூன்றரை கால் நாற்காலி ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. ஈழத்திலும் இந்த கண்ணிவெடியால் பலர் கால்களை இழந்திருக்கிறார்கள்.

சரி, எதற்கு இப்போது இதைப்பற்றி பேசுகிறேன் என்றால் இன்று வன்னியில் மக்களை மீள்குடியேற்றம் செய்ய முடியாது என்று சிங்கள அரசு சொல்லும் நொண்டிக் காரணங்களில் ஒன்று இந்த மிதிவெடிகள்தான். ஐ. நாவும் தங்களிடம் அதை அகற்றும் பணிக்கு தர பணம் இல்லை என்கிறது. சிங்கள அரசும் யாரும் பணம் தரமாட்டார்களாம் என்று மூக்கால் அழுகிறது. அட, இவர்கள் சொல்லுமளவிற்கு அப்படியேதும் மிதிவெடிகள் இருந்தால்தானே யாராவது அதை அகற்ற முடியும். இப்படித்தான், வன்னியில் இல்லாத கண்ணிவெடியை இந்தியாவின் ஏறக்குறைய இரண்டாயிரம் ராணுவம் இன்றுவரை அகற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லப்படுகிறது.

எப்படியோ, இந்திய ராணுவம் புலிகளை அழிக்கவேண்டும் என்று வந்த நோக்கத்தின் முதல் கட்டவேலையை சுபமே தொடங்கினார்கள்.  இந்தியராணுவம் தெருவில் போவோர், வருவோரையெல்லாம் மறித்து ஜூஸ் கொடுத்தார்கள் எங்கள் ஊரில். “நீங்கள் ஒப்பரேஷன் லிபரேஷனால் நிறையக் கஷ்டங்களை அனுபவித்திருப்பீர்கள். உங்களுக்கு உதவத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். ஒன்றுக்கும் பயப்படாதீர்கள். என்ன உதவி வேண்டுமானாலும் எங்களின் முகாமில் வந்து தெரிவியுங்கள்” என்றெல்லாம் ஆரம்பத்தில் தேனொழுகப் பேசினார்கள். சிங்கள ராணுவம் இதையெல்லாம் சொல்லியிருந்தால் நாங்கள் நம்பியிருக்க மாட்டோம். இந்திய ராணுவம் சொன்ன போது அதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை.

அப்படி முகாமில் சென்று இவர்களோடு பேசியவர்களிடம் அவர்களின் அவலவாழ்வைப் பற்றி கேட்டதை விட புலிகளைப் பற்றித்தான் அதிகமாக இந்திய ராணுவம் கேட்டதாகச் சொன்னார்கள். வல்வெட்டித்துறையை சுற்றியிருந்த ஊர்களான பொலிகண்டி, உடுப்பிட்டி என்ற ஊர்களிலும் இந்திய ராணுவ முகாம்கள் இருந்தன. இவையிரண்டும் முற்றுமுழுதாக இந்தியராணுவம் மட்டுமே இருந்த முகாம்கள். அமைதிப்படைக்கு இந்த சிறிய ஊர்களில் இத்தனை  ராணுவமுகாம்கள் தேவையா என்ற கேள்விக்கெல்லாம் பதில் இந்திய மேலாதிக்க அரசியலைப் புரிந்தவர்களுக்கு கண்டிப்பாக புரியும்.

பொலிகண்டி முகாம் பொதுமக்களின் வீடுகளை மட்டுமே முகாமாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டு உரிமையாளர்கள் சிலர் போய் நியாயம் கேட்டபோது இந்தியராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்டார்கள். உடுப்பிட்டி இராணுவமுகாம் பெண்கள் பாடசாலை ஒன்றை இராணுவமுகாமாக மாற்றி விட்டு, ஒருபக்கம் தாங்கள் இருக்கிறோம் என்றும் மற்றபக்கம் பாடசாலையை நடத்தும் படியும் சொன்னார்கள். அப்படித்தான் சிலகாலம் நடந்தது. ஆனால், அங்கு கல்வி கற்க வந்த மாணவிகளிடம் இவர்கள் தகாத முறையில் நடக்க முற்பட்டதாகவும், மாணவிகளை கிண்டல் செய்வதாகவும் நிறையவே கேள்விப்பட்டேன். பெற்றோர் பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவே பயந்தார்கள். பின்னாட்களில் அது முழுவதுமாக இந்திய ராணுவமுகாமாகவே மாற்றப்பட்டுவிட்டது.

வல்வெட்டித்துறை இராணுவ முகாமில் சிங்கள ராணுவமும், இந்திய ராணுவமும் சேர்ந்தே இருந்தார்கள். அதனால்தான் இருவருமே எங்களின் அன்பைப் பெறுவதில் போட்டி போட்டார்கள்.  ஒரு கட்டத்தில் எங்கள் மீது யார் அதிகம் அன்பாய் இருக்கிறார்கள் என்பதில் சிங்கள ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே போட்டியே வந்து காமெடி கலாட்டாக்களும் இடம்பெற்றது. இந்திய ராணுவம் ஜூஸ் கொடுத்தால், சிங்கள ராணுவம் ஜூசோடு ஏதாவது சாப்பாடும் கொடுத்தார்கள். முதன்முதலாக நாங்களும், சிங்கள சமூகமும் சகோதர உறவுகள் என்றார்கள். இந்திய ராணுவம் மூன்றாம் மனிதர்கள் என்றார்கள். இந்திய ராணுவத்தோடு பேசாதீர்கள், உங்களை எப்போதுமே நாங்கள்தான் காப்பாற்றுவோம் (அதன் பொருள் உங்களை நாங்கள் மட்டும்தான் அழிக்கலாம் என்பதுதான்)  என்றெல்லாம் அன்புக்கட்டளை போட்டார்கள்.

நாங்கள் தான் பலியாடுகள் ஆயிற்றே. எந்தப்பக்கம் தலையை ஆட்டினாலும் தலையை வெட்டுவார்கள். அதனால் தமிழ் சினிமா வடிவேல் கதாபாத்திரங்கள்  மாதிரி “ஆஹா” என்று முழித்து, பொதுவாக சிரித்து, பொதுவாக தலையை ஆட்டி பரிதாபத்திற்குரிய பிறவிகளாய் ஆனோம்.  ஆனால், இன்று சிங்கள சமூகமும் இந்தியாவும் சகோதர உறவுகள் போலவும், ஈழத்தமிழர்கள் மூன்றாம் தர பிரஜைகளாகவும் புறக்கணிக்கப்பட்டு விட்டோம். அதனை அப்படியே இவர்கள் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எங்களை எங்கள் வழியில் விட்டுவிடுங்கள் என்பதுதான் என் கோரிக்கை.

அமைதிப்படை என்றால் போர் புரியும் இருதரப்பையும் போர் செய்யாமல் கண்காணிப்பதுதானே வேலை. இப்படித்தான் நாங்கள் ஆரம்பத்தில் நம்பினோம். இவர்கள் அமைதிப்படைக்குரிய ஐ. நா மற்றும் சர்வதேச விதிமுறைகளை மதித்து ஈழத்தில் அமைதியை நிலைநாட்டுவார்கள் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால், இந்திய அமைதிப்படை என்ன செய்தது? போரை தடுக்க வந்தவர்களே எங்கள் மீது போர் தொடுத்தார்கள். தற்பாதுகாப்புக்கு மட்டுமே ஆயுதம் தரிக்கவேண்டியவர்கள் அத்தனை போராயுதங்களையும் எங்கள் மீது ஏவிவிடத் தவறவில்லை. யாழ்ப்பாணத்தில் விமானம் மூலம் குண்டு கூடப் போட்டார்கள். அடிக்கடி ரோந்து போகிறோம் பேர்வழி என்று வீதி வீதியாய் ஊவலம் போய் எங்கள் வயிற்றில் பீதியை கிளப்பினார்கள்.

தங்கள் பாதுகாப்புக்காக எங்களை கைதிகள் போல் பிடித்து வைத்தார்கள். ஒரு தடவையல்ல பலதடவை இப்படி நான் கைதியாக்கப்பட்டேன். கேட்பார் கேள்வியின்றி வீடு புகுந்து நேரம் காலமில்லாமல் வீட்டிலிருந்த என்னையும் என் தாயாரையும் அதேபோல் வீதியில் போனவர்களையும் இழுத்து வந்து ஓர் இடத்தில் கூட்டமாக இருத்தி வைப்பார்கள். பெரும்பாலும் ஆண்களைத்தான் கைது செய்தார்கள். எங்கள் வீட்டில் ஆண்கள் இல்லாததால் என் தாயார், தங்கை, நான் கைதிகளானோம்.

பெரும்பாலும் அன்றாடம் வேலைக்குப் போகிறவர்கள், பால் மற்றும் மரக்கறி விற்பவர்கள், வயதானவர்கள் இப்படித்தான் இவர்களிடம் மாட்டுவார்கள். இந்த வழியால் புலி போனதா என்று கேட்பார்கள். வீட்டிற்குள் இருக்கும் எனக்கு வீதியில் போனது புலியா  அல்லது பிசாசா என்று எப்படித்தெரியும்? இப்படித்தான் பதில் சொல்ல நினைப்பேன். ஆனால், என்னை பிறகு அடித்து விடுவார்கள் என்ற பயத்தினால் அடக்க ஒடுக்கமாக பதில் சொன்னேன். இளைஞர்கள் என்றால் அடித்துத்தான் கேள்வி கேட்டார்கள்.

இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கானால் இரத்தம் கொதிக்கும். யாருடைய மண்ணில் வந்து யார் யாரை அதிகாரம் செய்வது? இப்படி அன்று  மணிக்கணக்கில் வீதியில் ஓரத்தில் உட்கார்த்தி வைக்கப்பட்டிருக்கிறேன். என்னை சோதனை போடுகிறோம் என்று வரம்பு மீறிவிடுவார்களா என்று பயந்துகொண்டே ஒவ்வொரு நிமிடத்தையும் கழித்தேன். இந்திய ராணுவம் என்னிடம் வரம்பு மீறி நடந்த சம்பவங்களும் அடிக்கடி என் நினைவுகளில் வந்து வலியை கொடுக்காமல் இல்லை. ஆனாலும், என்னுடன் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே என்ற தைரியம் வரும். இவர்கள் அங்கெ இங்கே பராக்கு பார்க்கும் நேரம், ஏன் எங்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று சன்னக்குரலில் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வோம். சத்தமாய் ஏதாவது பேசினால் என்ன பேசினீர்கள் என்று ஒரே போடாய் போட்டுவிடுவார்கள்.

பசி, தாகம், இயற்கை உபாதை என்று எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இந்தியராணுவ படை எங்களை போ என்று சொல்லும் வரை காத்திருக்க வேண்டும். சொந்த மண்ணிலேயே இன்னோர் நாட்டு ராணுவத்திடம் அடிமையாய் போன  அவலம் மனதில் எரிச்சலையும் கோபத்தையும்தான் கிளப்பியது. ஆனால் என்ன செய்ய முடியும். கைதிகளாய், கையாலாகாதவராய் அமைதியாய் இருந்தோம். மனம் வலித்தது. ஆனாலும், கண்ணீர் விடக்கூடாது என்ற உறுதியுடன் இருந்தேன்.

இந்தியராணுவம் சம்பந்தமான என் அனுபவத்தில் ஓர் சிறிய ஆறுதலான சம்பவமும் இருக்கத்தான் செய்தது. இந்திய அமைதிப்படையில் (?) தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஒருவர் இருந்தார். என்ன இது தமிழ் பெண்களையும் வீதியில் கைதிகள் போல் உட்கார்த்தி வைத்திருக்கிறார்களே என்ற ஓர் ஆதங்கம் அல்லது இந்தியராணுவத்தின் பெயர் கெடப்போகிறதே என்ற கவலை எதுவோ ஒன்று அவரை எங்களுக்கு தன்னாலான உதவியை செய்யவேண்டும் என்று தூண்டியிருக்கலாம். ஒருநாள் வழக்கம் போல் வீதியில் மற்றவர்களுடன் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தேன். நாங்கள் மட்டுமே பெண்கள். இவர் தமிழர் என்று தெரிந்ததும் நான் இவரிடம் கெஞ்சுவது போல் கேட்டேன். எங்களை தயவு செய்து விட்டுவிடுங்கள் என்று.

இந்த தமிழ்நாட்டை சேர்ந்த சகோதரர் தலை மீது சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் போல் (சீக்கியரோ?) தலைப்பாகை கட்டிய, சீருடையில் ஏதோ பட்டைகள் உள்ள ஓர் அதிகாரியிடம் சென்று அவருக்கு தெரிந்த ஹிந்தி அல்லது பஞ்சாபி மொழியில் ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார். இவர் பதுங்கிப் பதுங்கிப் பேசுவதும், அவர் கண்கள் சிவக்க, உரத்த குரலில் கடித்துக் குதறுவது போல் பதில் சொல்வதும் எனக்கு ஏனோ ஓர் தர்மசங்கடத்தை இவருக்கு உண்டாகி விட்டோமோ என்று தோன்றியது. அந்த அதிகாரியின் பேச்சும், அவர் நின்ற தோரணையும் அவ்வளவு பயத்தைக் கொடுத்தது எனக்கு. ஒருவாறாக திரும்பி வந்தவர் சொன்னார் “சரிம்மா, என்னோட வாங்க  உங்களை உங்க வீட்ல விடுறேன்” என்றார். நான் ஏதோ பெரிய மேதாவி போல் முந்திக்கொண்டு “உங்களுக்கு எதுக்கு சிரமம். நாங்களே போய்க்கறோம்” என்றேன்.

அவர் திரும்பி என்னை பார்த்து சிரித்துவிட்டு சொன்னார், “நீங்கள் தனியே போவதை இவர்கள் பார்த்தால் மறுபடியும் பிடித்து உட்கார்த்தி வைப்பார்கள் அதனால் தான் சொல்கிறேன் என்னோடு வாருங்கள் என்று”. அவர் சொல்வது சரியென்று தோன்றவே அவரோடு நடந்தோம். ஒரு இரண்டு நிமிட நடை என் வீட்டிற்கு. அப்படி தான் ஓர் நாள் என் மனதில் தோன்றியதை இவரிடம் கேட்டேன். “நீங்கள் எப்படி இந்த ராணுவத்தில்….” என்று. ஏனென்றால் என் கண்களுக்கு அவர் மிக நல்லவராகவே தோன்றினார். அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால், திரும்பி என்னை ஒருகணம் பார்த்துவிட்டு மறுபடியும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார். ஐயோ அந்த முகத்தில் தெரிந்த வலியை விவரிக்க எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை.

அந்த முகத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வலியைப் பார்த்தேன், உணர்ந்தேன். உண்மையில் ஈழத்தில் அமைதிதான் காக்கப்போகிறோம், ஈழத்தமிழர்களுக்கு உதவப்போகிறோம் என்று நம்பி வந்திருப்பார் போலும். ஆனால் நடந்தது தலைகீழாய் இருக்க, அந்த வலி அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. பேச்சை திசை திருப்ப “உங்க பேர் என்ன”? என்றேன். நான் இப்படித்தான் சிலசமயம் மனதில் படுவதை படக்கென்று யாரிடமாவது கேட்டுவிடும் பழக்கம் உள்ளவள். அவர் பெயர் சொல்லவில்லை. சரி எந்த ஊர் என்றாவது சொல்லுங்கள் என்றேன். தான் மானாமதுரையை சேர்ந்தவர் என்றார். ஒரு சில சமயங்களில் என் தங்கையையும் கைதியாக்கிய சந்தர்ப்பங்களில் இவர் தான் அவள் சிறுமி என்பதால் என் வீட்டிற்கு முன்னாலுள்ள சிறிய தாயார் வீட்டிற்கு போகச்சொல்லுவார். நானும் போகலாமா என்றால், உங்களை போக விடமாட்டார்கள் என்றார். சரி, எவ்வளவு தான் அவர் எனக்கு உதவ முடியும் என்று நினைத்துக்கொண்டேன்.

அந்த சகோதரர்தான் சில விடயங்களை கற்றுத்தந்தார். ராணுவம் வருவது தெரிந்தால் வீட்டிற்குள் இருக்காதீர்கள். தெருவில் வந்து நில்லுங்கள். வீட்டின் கதவுகளை மூடி வைத்தால் சந்தேகப்படுவார்கள் அதனால் திறந்தே வைத்திருங்கள், ராணுவம் ரோந்து வரும் போது முடியுமான வரைக்கும் அதிகாரியின் அருகிலேயே நில்லுங்கள் அப்படி என்றால் அவர்கள் உங்களுடன் தகாத முறையில் நடக்க பயப்படுவார்கள் என்று. ஆனால், அவருக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. அவரை சிறிது காலத்திற்கு பின் நான் ரோந்து வந்த ராணுவத்துடன் பார்க்கவில்லை. இந்தியராணுவம் பற்றிய நினைவு வரும்போதெல்லாம் இவரின் நினைவும் மறக்காமல் வரும் எனக்கு. நன்றிகள் சகோதரரே.

அன்று முதல் இன்றுவரை எல்லா அரசியல் மற்றும் ராணுவ விமர்சகர்களின் விமர்சனம் அல்லது ஒப்பீடு “ஈழம் இந்தியாவின் வியட்நாம்” என்பதுதான். அவர்கள் இந்தியா அல்லது இந்திய அமைதிப்படை (என்னைப்பொறுத்தவரை அது இந்திய ராணுவம்) ஈழத்தில் ஏன் தோற்றது என்று அதற்குரிய காரணத்தை அடுக்குகிறார்கள். இந்தியா தன் முழுப்பலத்தையும் அதாவது படை மற்றும் ஆயுத பலத்தை பிரயோகிக்கவில்லை என்று இவர்கள் சொல்லும் போது எனக்கு உண்மையிலேயே எரிச்சல்தான் வருகிறது. ஐயா, அறிவாளிகளே இந்திய ராணுவம் வந்தது “அமைதிப்படை” என்ற பெயரில். பிறகேன் நீங்கள் உங்கள் பலத்தை எங்கள் மீது மொத்தமாக பிரயோகிக்க முடியவில்லை என்று மூக்கால் அழுகிறீர்கள்? நீங்கள் கொஞ்சமாக பிரயோகித்த பலத்துக்கே நாங்கள் ஏறக்குறைய மூவாயிரம் அப்பாவிகளை இழந்து விட்டோம். இதில் முழுவதுமாக நீங்கள் படைப்பலத்தை காட்டினால் நாங்கள் என்னாகியிருப்போம்?

இந்தியாவின் வியட்நாம் ஈழம் என்றால் அதன் “மை லாய்” (Mai Lai)  கிராமங்களை பற்றியும் பேசுங்களேன். இந்தியாவின் வியட்நாமில் எங்கள் ஊர்கள் மை லாய் கிராமங்களாய் பலிகொள்ளப்பட்டதை, அப்பாவிகளின் உயிர்கள் காவு வாங்கப்பட்டதை இவர்கள் பேசமாட்டார்கள். வினவு எனக்கு கொடுத்த இந்த அருமையான சந்தர்ப்பத்தில் நானாவது அதன் வலிகளை நினைவு கூரலாம் என்று நினைக்கிறேன்.

தொடரும்

ரதி

தொடர்புடைய பதிவுகள்

ஈழம் – டி. அருள் எழிலனின் “பேரினவாதத்தின் ராஜா” நூல் வெளியீட்டு விழா!

7

perinavathathin-raja-arul-ezhilan

கலந்து கொள்பவர்கள் : தமிழருவி மணியன், பி.சி. வினோஜ்குமார், மீனா கந்தசாமி, பீர் முகம்மது, நடராஜா குருபரன், ரஞ்சிதா குணசேகரன், பாரதி தம்பி, ராஜுமூருகன், டி. அருள் எழிலன்.

நிகழ்வு: 06- 12 2009 ஞாயிறு, நேரம் மாலை 6.00 மணி,

இடம்: புக்பாயிண்ட் (ஸ்பென்சர் எதிரில்)  அண்ணாசாலை, சென்னை.

நிகழ்வும், ஏற்பாடும்: புலம் பதிப்பகம்.

எரிந்து கொண்டிருக்கும் இம்மக்களை விட்டு எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் நீதி பேசுகிறார்கள். பாசிசத்தின் காலடியில் அறம் செத்துக் கிடக்கிறது. பெரும்பான்மைவாதத்தின் சர்வாதிகார முகங்கள் ஜனநாயக முகமூடிகளை அணிகிறார்கள் இப்போது. நாடுகள் எரிந்து கொண்டிருக்கிறது. தேசிய வெறியால் ஈழ மக்களைச் சுட்டதும் இந்த நெருப்புதான். விஸ்தரிப்பு நோக்குடன் எவனெல்லாம் மக்களை நிலங்களிலிருந்து பிடுங்கி வீசுகிறானோ அவனெல்லாம் பேரினவாதிதான். ஆமாம் அதுதான் இப்போது ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!

121

பிடி கத்திரிக்காய்இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூரில் பி.டி கத்திரிக்காய்க்கு எதிரான உழவர் உழைப்பாளர் கட்சியின் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது. அபாயகரமான சாயக்கழிவுகளுடன் அசால்ட்டாக வாழ்க்கை நடத்தும் எங்கள் கவனத்தை கத்திரிக்காயா திருப்பும் ?? கொடி புதுசாயிருக்கே என ஒருசிலர் கவனித்ததுதான் மிச்சம். ஆனால் சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரையை வாழ்த்துரை வழங்கச்செய்து பி.டி கத்திரிக்காய்க்கு மாபெரும் விளம்பரம் ஒன்றை செய்திருக்கிறது விவசாயப் பல்கலைக்கழகமும் அவர்களின் சமீபத்தைய குலசாமியான மான்சாண்டோவும். இதுவரை அப்துல் கலாமை உதாரணபுருஷனாக கொண்டிருந்து கொஞ்சம் சலித்துப்போயிருந்த மக்களின் புதிய கண்டுபிடிப்புதான் மயில்சாமி அண்ணாதுரை.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நான்கு பி.டி கத்திரிக்காய்களை கோவை வேளான் பல்கலைக்கழகம் அறிமுகம்  செய்திருப்பதாக சொல்லியிருக்கிறார் ம.சா.அ.து. இதுவரை உள்ளூரில் விளைந்த கத்திரிக்காயால் சுற்றுப்புறத்திற்கு என்ன கேடு வந்துவிட்டது என்பது சத்தியமாக எனக்குப் புரியவில்லை. அதையும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரை வைத்து சொல்லச் சொல்வதன் காரணம் என்ன ?? ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தத்திற்கு மார்கெட்டிங் செய்ய அப்துல் கலாமை அனுப்பினார்கள், இப்போது அண்ணாதுரையின் முறை.பி.டி கத்திரிக்காயின் நல்லதா கெட்டதா என விவாதிக்கும் முன் அதன் தேவையைப்பற்றி தெரிந்துகொள்வது முக்கியம். பெரிய அளவில் தட்டுப்பாடு வராத, பயிரிடப்படுவதிலும் ஒரு பெரிய முக்கியத்துவம் இல்லாத கத்திரிக்கு ( தங்கள் நிலத்தின் ஒரு பாகத்தில் மட்டுமே பெரும்பாலான விவசாயிகள் கத்திரியை பயிரிடுகிறார்கள் ) மரபணு மாற்றம் செய்வது என்பது ஒரு முன்னோட்டமே. அடுத்து வரப்போகும் மற்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கான தடைகளை இப்போதே கத்திரியை அனுப்பி ஆழம் பார்க்கிறார்கள். நமது கேனத்தனத்தினைப் பொறுத்து பி.டி நெல் உள்ளிட்ட மற்ற பயிர்கள் இன்னும் சுலபமாக உள்ளே நுழையும்.

இந்தியாவில்  மரபணு மாற்றம் செய்யப்பட்டு முதலில் பயன்பாட்டுக்கு வர இருப்பது கத்திரிக்காய்தான். பி.டி கத்திரிக்காய் உடலுக்கு ஏற்படுத்தும் கேடுகளைப்பற்றி ஆராயாமல் ஏதோ வீடு கட்டும் ஒப்புதலை வழங்குவதுபோல அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது மத்திய மரபணுப் பொறியியல் ஒப்புதல் குழு ( genetic engineering approval committe ). கத்திரி மீதான ஆய்வு முடிவுகள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் அதன் பிறகு மக்களின் கருத்து கேட்கப்பட்ட பிறகே மத்திய அரசு முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் பல்வேறு விளைவுகள் பற்றி ஆய்வு செய்ய  இந்தியாவில் வசதி இல்லை என்றும் உடனடியாக ஒரு ஆய்வகம் அமைக்கப்படவேண்டும் என மத்திய அரசை கோரியிருக்கிறார் புஷ்பா பார்கவா ( இவர் உச்ச நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட GEAC யின் பார்வையாளர் ). மத்திய அரசும் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறது. அப்படியானால் ஜெயராம் ரமேஷ் மக்களுக்குத் தரப்போவது எந்த ஆய்வறிக்கை என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

உண்மையில் GEAC ஆய்வு என சொல்வது பி.டி கத்திரிக்காயை உருவாக்கிய மான்சாண்டோ செய்த ஆய்வைத்தான். அந்த ஆய்வு பத்து எலிகளைக் கொண்டு மூன்று மாதங்கள் மட்டும் நடைபெற்றது. இதில் நீண்டகால பாதிப்புகள் குறித்து எந்த தகவலை பெறமுடியும் ? முதலில் எலிகள் மீதும் பிறகு குரங்குகள் மீதும் ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம். இப்போது இந்தியர்கள் கிடைத்துவிட்டதால் குரங்குகள் மீதான ஆய்வு தவிர்க்கப்பட்டு விட்டதுபோலும். விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாமை, மகரந்த சேர்க்கை மூலம் மற்ற பயிர்களும் மலடாகும் போன்ற பிரச்சனைகள் பற்றி ஆய்வு செய்யும் சாத்தியம் இந்தியாவில் கண்ணுக்கெட்டியவரை கிடையாது. ரசாயன பூச்சிக்கொல்லிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அவற்றின் ஆபத்துக்கள் பற்றி பெரிய தெளிவு மக்களிடம் கிடையாது அல்லது அவர்களுக்கு விளக்கம் தரப்படவில்லை. தாய்ப்பால் முதல் அண்டார்டிகா வரை பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு அறியப்பட்டபிறகும் அந்த விவரம் பெரும்பாலான பாமர மக்களுக்கு தெரியவில்லை. இதேகதைதான் பல ஆலைக்கழிவுகளின் விசயத்தில் இப்போதும் நடக்கிறது. இந்த லட்சணத்தில் மக்களிடம் கருத்து கேட்டு பி.டி கத்திரிக்காயை அனுமதிக்கப்போவதாக சொல்வது வேறு பயமுறுத்துகிறது.

இதன் இன்னொரு முகம் பொருளாதாரம் சார்ந்தது. விவசாயிகளை சகல வழிகளிலும் நிறுவனங்களை சார்ந்திருக்கச் செய்வது. ஏற்கனவே உரம் பூச்சி மருந்து என பல இடுபொருட்களுக்கு விவசாயிகள் அடிமையாக்கப்பட்டுவிட்டார்கள். விதைகளும் அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. எல்லா விவசாயியும் ஒப்பந்தப் பணியாளரைப்போல மாண்சான்டோவுக்கு வேலைசெய்ய வேண்டியதுதான். பி.டி பருத்தி விதைகள் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை 1750, அப்போது சாதாரண பருத்தி விதை முன்னூறு ரூபாய்கூட கிடையாது. அப்படி வாங்கியவர்களும் பெரிய மகசூல் எடுத்ததாக மான்சாண்டோவாலும்கூட நிரூபிக்க முடியவில்லை அவர்களின் உள்ளூர் எடுபிடிகளான வேளான் பல்கலை(ளை)க்கழகங்களாலும் நிரூபிக்க முடியவில்லை. பி.டி பருத்தியால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள். இப்போது கத்திரிக்காய் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ தெரியாது. இது போதாதென்று இன்னும் ஐம்பத்தாறு பி.டி பயிர்கள் அறிமுகத்திற்காக காத்திருக்கின்றன.

விதை யார் கொடுத்தால் என்ன, கத்திரிக்காய் வழக்கம்போல கிடைக்கும்தானே என கேட்கவும் ஆட்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்க என்னிடமும் ஒரு கேள்வி உண்டு, உங்கள் பிள்ளை எங்கிருந்து வந்தால் என்ன ? அது உங்களுடையதாக இருக்க வேண்டுமென்று என்ன அவசியம் இருக்கிறது ?

விதைக்கான உரிமை பறிபோகும் வேளையில் விளைபொருளின் மீதான உரிமையையும் பறிக்க ஒரு சட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கரும்புக்கான நியாய ஆதரவு விலை அவசரச்சட்டம் என்பதுதான் அது. அதாவது இப்போது அமுலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சுமார் முன்னூறு ரூபாய் குறைவான விலையை ஒரு டன்னுக்கு “அவசரமாக” நிர்ணயம் செய்யும் சட்டம்தான் இப்போது பிரச்சினையாகியிருக்கிறது. ஒரு விளைபொருளின் விலையை குறைப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர முயலும் ஒரே சாதனை அரசு இந்தியாவில்தான் இருக்கமுடியும். இத்தனைக்கும் கடந்த ஓராண்டில் மட்டும் சர்க்கரையின் சந்தை விலை கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது.ஒப்புக்குக்கூட எந்தவிதமான காரணமும் சொல்லாமல் விவசாயிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பான ஒரு திட்டத்தை சட்டமாக கொண்டு வர முயற்சி செய்திருக்கிறது  காங்கிரஸ்.

ஏற்கனவே எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி திட்டமிட்டு குறைக்கப்பட்டு இறக்குமதி நிரந்தரமாகிவிட்டது. அடுத்து கரும்பு இறக்குமதி துவங்கியாயிற்று ( கரும்பு உற்பத்திப் பரப்பு 48% குறைந்துவிட்டதாக ( அல்லது குறைக்கப்பட்டுவிட்டதாக) மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அடுத்து அரிசி இறக்குமதிக்கு சாக்குப்பையை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. மேற்கூறிய எல்லா பொருட்களும் சமீப காலமாக கடுமையான விலையேற்றத்தை சந்தித்திருக்கின்றன. விவசாயிக்கும் விவசாயத்திற்கும் எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் மறுநாள் பாதிக்கப்போவது சாதாரண நுகர்வோரான இந்தியக் குடிமகனைத்தான். மன்மோகனும், மாண்டெக் சிங்கும் இந்தியாவை பணம் படைத்தோருக்கு மட்டுமான ஒரு தேசமாக மாற்றும் வரை ஓயப்போவதில்லை. அதுவரை நம்மை திசைதிருப்ப இருக்கவே இருக்கிறது பாகிஸ்தான் தீவிரவாதம். அதுசரி செத்தாலும் உள்ளூர்காரனால் சாவதுதானே தேசபக்தி.

கரும்பு விலை சட்டத்தின் மூலம் நமக்கு இன்னொரு முக்கியமான பாடம் கிடைத்திருக்கிறது. டில்லியை ஒருநாள் முற்றுகையிட்டாலே ஒரு அராஜகமான சட்டத்தை நிறுத்த முடியும் என்பதுதான் அது.

-நன்றி வில்லவன்

படிக்க

வந்தே மாதரமும் – தேசபக்தி வெங்காயமும் !!

முன்னுரை: மீண்டும் வந்தே மாதரம் பாடல் தேசபக்தியின் அடையாளமாய் பாடப்படவேண்டும் என சர்ச்சைக்குறியதாகியிருக்கிறது. இந்து மத தெய்வங்களின் பெயர்கள் அணிவகுக்கும் இந்தப்பாடல் உண்மையிலேயே தேசபக்திக்கு உரியதா? இதன் வரலாறு, காங்கிரசு கட்சி இந்தப் பாடலை பிரபலமாக்கிய பின்னணி, இதன் முசுலீம் எதிர்ப்பு உள்ளடக்கம் ஆகியவற்றை விளக்கும் இந்தக்கட்டுரை புதிய ஜனநாயகம் இதழில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. காலப் பொருத்தம் கருதி இங்கே பதிவு செய்கிறோம். இதற்கு ஆலோசனையும் உதவியும் செய்த தோழர் இரணியனுக்கு நன்றி – வினவு

vote-012சக மனிதர்களைக் கூட நம்ப மறுக்கும் அளவிற்கு நாட்டு மக்களை நிரந்தர பயத்தில் ஆழ்த்துவதற்காக “”முஸ்லீம் பயங்கரவாதம், குண்டு வெடிப்பு, முக்கிய தலைவர்களைக் கொல்ல தீவிரவாதிகள் சதி” என்ற வழக்கமான பீதியை மீண்டும் ஒருமுறை அனைத்து ஊடகங்களும்  உரக்கச் சொல்லி ஓய்வதற்குள், அடுத்து கல்லா கட்ட ஆரம்பித்து விட்டது “”தேசபக்தி” பஜனையும் அதையொட்டிய லாவணிக் கச்சேரிகளும்.

முன்னாள் மைய அமைச்சர் அர்ஜுன் சிங், “வந்தே மாதரம்’ பாடலின் நூற்றாண்டு விழாவினை முன்வைத்து, 2006′ செப்டம்பர் ஏழாம் தேதியன்று நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கட்டாயமாக “வந்தே மாதரம்’ பாடவேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதைத் தொடர்ந்து, தேசபக்தியை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.க. கும்பல், பாட மறுப்பதை தேசத் துரோகமாகச் சித்தரித்து, சிறுபான்மையினருக்கு எதிரான தனது வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. தான் ஆளும் மாநிலங்களில் இப்பாடலைப் பாடவேண்டியது கட்டாயம் என உத்தரவிட்டது. குறிப்பாக அம்மாநிலங்களில், அனைத்து மதரஸாக்களும் இந்தப் பாடலைத் தங்களது மாணவர்களைக் கட்டாயமாகப் பாடச் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் அடிமை வேலை செய்யும் “”அம்பி”கள் அனுப்பும் அமெரிக்க டாலரை நன்கொடையாக வாங்கிக் குவிக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பன்னாட்டுத் தலைவரான அசோக் சிங்கால், “”வந்தே மாதரத்தைப் பாட மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று பேட்டி கொடுத்துள்ளார். மறுபுறம், “”சுதந்திரப் போராட்டக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்த இந்தப் பாடலைப் பாட மறுப்பது தேசத்துரோகச் செயல்” என ஆட்சியாளர்களால் விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

“திராவிட நாடு’ கேட்டுக் கொண்டிருந்தபோது, இதே பாடலை “வந்தே ஏமாத்துறோம்’ என நக்கலடித்த கருணாநிதியோ, இன்று பெருமுதலாளியாகி, தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டதால், “பாட வேண்டியது கட்டாயமில்லை’ என்று இந்தப் பஜனைக்குச் சுருதி தப்பாமல் பின்பாட்டுப் பாடுகிறார். சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில், சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி ஒரு மைல் நீளத்துக்கு தேசியக் கொடியைத் தெருவெங்கும் பரத்திப் பரவசப்பட்டவர்கள்தானே இவர்கள்! சமயம் கிட்டும்போதெல்லாம் “கழக அரசுதான் கார்கில் நிதியை அதிகமாகக் கொடுத்தது” என்று தம்பட்டம் அடித்து இந்திய தேசியத்தில் மூழ்கவும் தயங்காத இவர்கள், இம்முறை பா.ஜ.க.வின் பஜனையில் கரைந்து போனது ஆச்சரியமில்லைதான்.

இவர்கள்தான் இப்படி என்றால், மே.வங்கத்தை ஆளும் போலி கம்யூனிஸ்டும், தரகு முதலாளிகளின் கையாளுமான புத்ததேவ் பட்டாச்சார்யாவும், “”அனைவரும் பாடலாம்; ஆனால் பாடவேண்டியது கட்டாயம் இல்லை” என்று கூறி ஒதுங்கிவிட்டார். மதச்சார்பின்மைக்காக காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், பா.ஜ.வின் இந்து தேசியவெறியை எதிர்க்கத் துப்பில்லாமல், காங்கிரசும் பா.ஜ.க.வோடு ஓரணியில் நிற்பதைப் பார்த்து அடங்கிப் போய் மவுனம் காக்கின்றனர்.

முதலில் இந்த ஆண்டு (2006), வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டே அல்ல. 1870களில் எழுதப்பட்டு 1882இல் ஒரு நாவலில் சேர்க்கப்பட்ட ஒரு பாட்டுக்கு இந்த ஆண்டுதான் நூற்றாண்டு எனத் திடீரென விழா எடுப்பதற்கு அவசியமென்ன வந்தது? அமெரிக்காவின் அடியாளாக மாறிக் கொண்டிருக்கும் இந்த அரசு சமீபத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு, அணுசக்தி விஞ்ஞானிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்து சேர்ந்து, தனது முகமூடி கிழிந்து தொங்கியதாலும், மறுகாலனியத் தாக்குதலால் உழைக்கும் மக்களிடம் வெறுப்பும் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆத்திரமும் பெருகி வருவதாலும், பிரச்சினையைத் திசைதிருப்பி தேசபக்தித் தீயை மூட்டிக் குளிர்காய அரசு நினைத்தது. ஆளும் கட்சியினருக்கு இது ஒன்றும் புதியதல்ல; முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது தேசிய வெறியைக் கிளப்ப போக்ரானில் அணுகுண்டு வெடித்தும், பிரச்சினைகள் முற்றியபோது எல்லைப்புறத்தில் சிப்பாய்களைக் கொண்டு போய் நிறுத்தி தோட்டா ஒன்றைக் கூடச் சுடாமல் “போர் பீதி’யை கிளப்பியதும் யாவரும் அறிந்ததுதான்.

கட்சிக்குள் நிலவும் கோஷ்டி தகராறால் உமாபாரதி வெளியேற்றம், போதைப் பொருள் உபயோகித்துக் கையும் களவுமாய் மாட்டிய ராகுல் மகாஜன் விவகாரம், ஜார்கண்ட் மாநிலத்தில் பறிபோன ஆட்சி, முக்கிய தலைவர்களின் ஒழுக்கக்கேடுகள் “”வீடியோ சிடி”களாக வெளிவந்த விவகாரம் என அழுகி நாறிக் கொண்டிருக்கும் பா.ஜ.க.விற்கு, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வரப்போகும் உ.பி., போன்ற மாநிலங்களின் தேர்தலுக்கு உதவிட அருமருந்தாய் இந்த வந்தே மாதரம் விவகாரம் கிடைத்தவுடன் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது. “முஸ்லீம்கள் பாட மறுக்கிறார்கள், அதனால் அவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள்’ என மக்களிடையே இந்துமுஸ்லீம் பிளவைக் கூர்மைப்படுத்தி, தனது இந்துவெறி ஓட்டு வங்கியைத் தூசு தட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே “கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் வெடி போடுகிறார்கள்’ என்று முஸ்லீம்களுக்கு எதிராகச் சொல்லி வந்த அவதூறின் தொடர்ச்சியாக “வந்தே மாதர’ விவகாரத்தை அக்கட்சி கையில் எடுத்துக் கொண்டது. செப்டம்பர் 7ஆம் தேதியன்று காங்கிரசு தலைவி சோனியா “வந்தே மாதம்’ பஜனையில் கலந்து கொள்ளாததை ஊதிப் பெருக்கி “”சிறுபான்மையினரை தாஜா செய்கிறார்” என்று தனது மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது?

1882ஆம் ஆண்டு வெளிவந்த “”ஆனந்த மடம்” எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் “வந்தே மாதரம்’. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.

1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்திரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது “வந்தே மாதரம்’ பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது.

“இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்திவிட வேண்டும்” என்றும், “இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்” என்றும் “நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!” என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது.

“இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை” என்றும் “இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்” என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, “”பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!” என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி.

முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பன பாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன?

வந்தே மாதரம் என்றால் “தாய்க்கு வணக்கம்’ என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.

இந்தத் தாயைப் “”அகண்ட பாரத மாதா”வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை “தேசிய கீதமாக்க’ காங்கிரசுக் கட்சி முயன்றது.

இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் “”வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது” என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் “”குடியரசு” பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் “பாரதமாதா’ என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?

முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக “ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்” என்றும் “இந்த சநாதன சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்” என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல்.

நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் “வந்தே மாதரம்’ பிறந்துள்ளது. இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன.

வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் “”வண்டே… மாட்றம்” என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான “சோனி”தான் “இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக’ இருக்க முடியும்.

போலியான தேசபக்தி அரட்டைக் கச்சேரி செய்யும் காங்கிரசு கும்பலோ தாம் ஆண்ட ஐம்பது ஆண்டுகளில் அடுத்தடுத்து நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து, இந்திய ராணுவத்திற்கு போர் விமானம், போபர்சு பீரங்கி, நீர் மூழ்கிக் கப்பல் வாங்குவதிலும் ஊழல் செய்து திளைத்தது. அதீத கூச்சல் போடும் பா.ஜ.க.வோ, சீமைச் சாராயம், விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை விற்க முன்வந்ததையும், கார்கில் போரில் மாண்ட வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் சவப்பெட்டிகளில்கூட கமிஷன் அடித்ததையும் மறைத்துவிட்டு, “வந்தே மாதரம் பாடுவதுதான் தேச பக்தி” எனக் கூச்சல் போடுகிறது. காசுக்காகவும், சாராயத்துக்காகவும், விபச்சாரிகளுக்காகவும் நாட்டின் பாதுகாப்பையே விற்ற இவர்களுக்குத் தேசபக்தி பற்றிப் பேசிட அருகதை உண்டா?

ஒரு நாடு என்பது நாட்டு மக்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் இயற்கை வளங்களையும் பண்பாட்டையும் குறிப்பதாகும். நாட்டு மக்களின் மீதும், நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுடன், அந்நிய ஆக்கிரமிப்புக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராகவும், நாட்டு மக்கள் நலன் மீது மாளாக் காதலுடனும் போராடுவதே உண்மையான நாட்டுப் பற்றாகும். இதைச் செய்யாமல் தேசத்துரோக ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்து விட்டு, “வந்தே மாதரம்’ பஜனை பாடுவது நாட்டுப் பற்றாகாது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வந்தே மாதரத்தைவிட வேறு இரண்டு முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. அவை: சுபாஷ் சந்திரபோஸின் “”ஜெய்ஹிந்த்” மற்றும் பகத்சிங்கின் “”இன்குலாப் ஜிந்தாபாத்” 1929இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருந்த தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத்தைக் கண்டித்துப் போராடும் விதமாக வெடிகுண்டு வீசியபோதும், பின்பு ராஜகுரு, சுகதேவுடன் தூக்கிலிடப்பட்டபோதும் பகத்சிங் முழங்கியது இதே “இன்குலாப் ஜிந்தாபாத்’தான். அத்தகைய தேசப்பற்றாளனின், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் பிறந்தநாள் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்.

“புரட்சி ஓங்குக!” (இன்குலாப் ஜிந்தாபாத்!) என பகத்சிங் முழங்கிய முழக்கம்தான் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இனிவரும் நூற்றாண்டும் புரட்சியின் நூற்றாண்டாக இருக்கப் போகிறதே அன்றி, இந்துவெறி தேசியவெறிக்கானதாக இருக்கப் போவதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் நாட்டுப்பற்றும் மதச்சார்பின்மையும் கொண்ட புரட்சியின் முழக்கம்தான் இனி நாடெங்கும் எதிரொலிக்கப் போகிறதே தவிர, ஏகாதிபத்திய கைக்கூலிகளின் வந்தேமாதரம் பஜனை அல்ல.

–          புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2006

vote-012

தொடர்புடைய பதிவுகள்

குறிஞ்சிப்பண்: நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்!

17

குறிஞ்சிப்பண்: நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்!

vote-012மலைகளின் அரசி அழைக்கின்றாள்…
மேட்டுப்பாளையத்திலிருந்து மேலேறும் உங்களை
மலைவாழை மடல்கொண்டு விசிறி
காட்டுப்பூக்களின் நறுமணமும், பனிசுகமும்
நாடி நரம்புகள் எங்கும் தழுவி
மலைகளின் அரசி அழைக்கிறாள் உங்களை!

பள்ளத்தாக்கில் புகையும் கதைகள்…
யாரும் கேட்காமலே அதோ பாதாளத்தில்
எத்தனை இசைகள்…
பார்க்க பார்க்க புத்துணர்ச்சியூட்டும்
பச்சிலை கவிதைகள்..
பூவென நினைத்து கை வைத்தால்
பறக்கும் புதுவிதத் தும்பி
வண்ணப் பூச்சி என மெதுவாய் போய்
பிடித்தால் சிரிக்கும் பூ!

உயிரினச் சூழலின் ஒட்டுமொத்த அழகிலும்
மனதை இழப்போரே!
ஊட்டியை ஊட்டி வளர்த்தும்- நீங்கள்
துய்க்கும் அழகை தூக்கி நிறுத்திய
தொழிலாளர்களை அறிவீரா?

மலையும் மலைசார்ந்த இடமும்
குறிஞ்சி எனக் குறிப்பிடும் இலக்கியங்கள்-அது தொழிலாளர்
கொலையும் கொலைசார்ந்த இடமும் எனக் காட்டும் வரலாற்றின் இரத்தக் காயங்கள்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் மலைக்கு ஏற
சாலை அமைக்கையில் சறுக்கி விழுந்து
நொறுங்கிச் சிதைந்த முகங்கள் எத்தனை?
காட்டு விலங்குகள் குதறி மலைப்பாம்புகள் கடித்து
அவர் வாயில் தள்ளிய நுரைகளின் விஷமேறி
நீலம் பாரித்தது வானம்.

வளைந்து செல்லும் பாதையின் வனப்பிற்காக
தம் இரத்தம் பிசைந்து கொடுத்த தொழிலாளர்
எலும்புகள் முறியும் சத்தம் கேட்டு
எங்கோ மலைமுகட்டுக்கு ஓடி
பீதியில் உறைந்தது மேகம்.

விழுந்து துடித்து வனாந்திரத்தில் அனாதையாய்
கதறியவர் குரல்கள் பாறையில் மோதி
கல்லாய் சமைந்தன கானகமெங்கும்.

சுரண்டலின் ருசி கண்ட வெள்ளைப் பன்றிகள்
மலைகளைக் குடைந்தன…
காடுகள் அழித்து பாறைகள் சிதைத்து
கடும் உழைப்பினால்
தொழிலாளர் நுரையீரலைக் கிழித்து,
காற்றும் ஒதுங்க அஞ்சும் மலைச்சரிவில்
தேயிலைப் பயிரிட அவர் கால்களை விரட்டின…
கூடையைத் தலையில் மாட்டி, தாய்பால் மாரில் கட்டி
தேயிலைப் பறிக்குமாறு கைகளை ஒடித்தன..

கோத்தகிரி, குன்னூர், கொடநாடு
தேயிலைத் தோட்டத்தை ரசிப்பவர்கள்…
உழைப்பின் சூழலை உணர்ந்ததுண்டா?

மலைப்பனியில் உறையும் நிலா
குளிருக்கு இறுக்கிய சிறகுகளை
எடுக்க முடியாத பறவைகள்…
ஓசை ஏதுமற்று வாய் கட்டிப்போன காற்று..
இந்தக் கொடும்பனியின் கொட்டமடக்கி
தேயிலைக் கொழுந்துகளை சூடேற்றும்
தொழிலாளர் கரம்பட்டே
உயிரினச்சூழல் உயிர்பெற்று விழித்தெழும்…
உழைப்பாளர் விடும் மூச்சின் வெம்மை பட்டே
சில்லிட்டுப் போன சூரியன் தைரியமாய் வெளியில் வரும்.

இதழருகே நீங்கள் எடுத்துச் செல்லும்
தேநீர் குவளையில் எழும்பும் ஆவி
எத்தனை தொழிலாளர்களுடையது தெரியுமா!

விரிந்த உலகத்தின் இயற்கையெல்லாம்
வியக்கும் அற்புதம் தொழிலாளி—- அவர் மேல்
தான் சரிந்து விழுந்ததாய்ச் சொல்லும்
கொலைப்பழி கேட்டு
மலைகளின் அரசி கதறுகிறாள்…

’’மலைவெளியோ.. சமவெளியோ
சாவது பெரிதும் தொழிலாளி
காரணம் யார்? முதலாளி!
மலைச்சரிவில் மட்டுமா? தேயிலை விலைச்சரிவிலும்
வீழ்ந்தாரே தொழிலாளி! காரணம் அந்த முதலாளி!
வரைமுறையற்ற நிலச் சுரண்டல் காடுகள் கொள்ளை
இயற்கையின் மடியில் வெடிவைக்கும் குவாரி, ரியல் எஸ்டேட்
நீலமலைத் திருடர்களின் சுரண்டலுக்கெதிராய் போராடாமல்
மண்ணை இழந்ததால் தன்னை இழந்தீர்!
எதை, எதையோ பார்த்தீர்கள் மலையேறி
எல்லோர்க்கும் எதிரி முதலாளித்துவம்
எனும் உண்மையைப் பார்க்க மறந்தீரே!

இனியேனும்.. எதிரியை ஒழிக்கப் பாருங்கள்
என் அழகின் சிரிப்பைத் தாருங்கள்!’’
அதோ.. மலைகளின் அரசி கதறுகிறாள்.

—– துரை.சண்முகம்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ஸ்பெக்ட்ரம் ஊழல்- தி.மு.க.-காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்

vote-012கிணற்றில் போடப்பட்டக் கல்லைப் போல் கிடந்த அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் விவகாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. இந்தியாவெங்கிலுமான தொலைபேசி சேவை 122 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட உரிமக் கட்டணத்தின்படி, 2008-இல் இந்த 122 மண்டலங்களும் முதலில் வருபவருக்கு முதலில் உரிமம் என்ற அடிப்படையில் 9 தனியார் நிறுவனங்களுக்கு (அந்நிய முதலீடும் இதில் உண்டு) விற்கப்பட்டுள்ளன.

ஒரு பொருள் 2001-இல் என்ன விலைக்கு விற்கப்பட்டதோ, அதே விலைக்கு 2008-இலும் விற்பதற்கு சந்தைப் பொருளாதாரம் இடம் தராது என்பது பாமரனுக்கும் தெரியும். ஆனால், சந்தையில் கிராக்கி அதிகமுள்ள இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வரிசையின் உரிமக் கட்டணமோ, 2008-இல் நிலவிய சந்தை மதிப்புக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படாமல், 2001-இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின்படி விற்கப்பட்டுள்ளது. சந்தைப் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மன்மோகன் சிங் அரசு, இந்தத் தவறை அறியாமலா செய்திருக்கும்?

அலைக்கற்றை வரிசைகளைப் பெற்ற ஒன்பது தனியார் நிறுவனங்களுமே இந்தப் பொன்னான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டன. 13 மண்டலங்களை 1,537 கோடி ரூபாய்க்குப் பெற்ற “ஸ்வான்” என்ற நிறுவனம், அதில் 45 சதவீதத்தை மட்டும் 4,200 கோடி ரூபாய்க்கு “எடில்சலாட்” என்ற நிறுவனத்துக்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடைந்திருக்கிறது. 22 மண்டலங்களை 1,658 கோடி ரூபாய்க்குப் பெற்ற “யூனிடெக்” நிறுவனம், தனது 60 சதவீதப் பங்குகளை 6,100 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது. எனவே, அலைக்கற்றை விற்பனையில் ஊழலும், மோசடியும் நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க மூளையைக் கசக்கிப் புலனாய்வு நடத்த வேண்டிய அவசியமேயில்லை. தனியார்மயம் என்பதே சட்டப்படி நடக்கும் கொள்ளைதான் என்பதற்கு இந்த ஊழல் விவகாரம் இன்னுமொரு சான்றாய் அமைந்திருக்கிறது.

இந்த விற்பனையில் கிடைத்த இலஞ்சப் பணத்தை வாரியிறைத்துத்தான் தி.மு.க.-காங்கிரசு கூட்டணி, அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எதிர்பாராத வெற்றியை அடைந்தது என்பது ஊரறிந்த உண்மை. எனவே, காங்கிரசும் இந்தக் கொள்ளையில் பலன் அடைந்திருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. ஆனால், கூட்டணியில் நிலவும் முட்டல் – மோதலின் காரணமாக, இந்த ஊழலின் முழுப் பொறுப்பையும் தி.மு.க.வைச் சேர்ந்த ராசாவின் தலையில் சுமத்திவிட முயலுகிறது, களவாணி காங்கிரசு. காங்கிரசுன் இந்த நரித்தனத்திற்கு எதிர்க்கட்சிகளும் தேசியப் பத்திரிகைகளும் முட்டுக் கொடுக்கின்றன.

ராசா தொடர்புடைய இந்த ஊழல் பத்திரிகைகளில் அலசப்பட்ட அளவிற்கு, கடந்த அக்டோபர் மாதம் அம்பலமான வேறு இரண்டு ஊழல்கள் குறித்து விரிவாக அலசப்படவில்லை. ஜார்கண்ட் மாநில சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்த மதுகோடா, பா.ஜ.க.வின் தயவில் அமைச்சராகி, பின்னர் காங்கிரசின் தயவில் அம்மாநில முதல்வராகி, ஆகஸ்டு 2006 முதல் ஜூன் 2008 முடிய ஆட்சி நடத்தினார். அவர் எம்.எல்.ஏ. ஆனபொழுது 40 இலட்சமாக இருந்த அவரது சொத்து மதிப்பு, அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்ட சமயத்தில் 400 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தாதுப்பொருள் சுரங்கங்களைத் தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பட்டா போட்டுக் கொடுத்ததில் நடந்த முறைகேடுகள் காரணமாகத்தான் அவரது சொத்து மதிப்பு 1000 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த இலஞ்சப் பணத்தைக் கொண்டு, அவர் வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகள் குறித்து இப்பொழுது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திய அரசுக்குச் சொந்தமான ஹைட்ரோகார்பன் இயக்குநரகத்தின் தலைவரான வீ.கே.சிபலின் மகளுக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி மும்பய் நகரில் மிக நவீனமான வீடொன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். கோதாவரி படுகையில் கிடைக்கும் எரிவாயுவைப் பகிர்ந்து கொள்வதில் அம்பானி சகோதரர்களுக்கு இடையே நடந்து வரும் தகராறில், முகேஷ் அம்பானிக்கு சாதகமாக வீ.கே.சிபல் நடந்து வருவதற்காகக் கொடுக்கப்பட்ட சிறு அன்பளிப்புதான் இந்த வீடு. இந்த அன்பளிப்பு பற்றி இப்பொழுது மையப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

தனித்தனியாகத் தெரியும் இந்த மூன்று ஊழல்களுக்கும் இடையே இருக்கும் பொதுவான அம்சம் தனியார்மயம். தனியார்மயத்தின் பின், பொதுச் சொத்துக்களை விற்பதற்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஊழலும் மோசடிகளும் நடந்திருப்பதற்குப் பல ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த மோசடிகள் மூலம் கிடைத்த எலும்புத் துண்டுகளைப் பொறுக்கிக் கொண்ட அதிகாரிகளும், ஓட்டுக்கட்சிகளும் அம்பலமான அளவிற்கு, கறித்துண்டு முழுவதையும் விழுங்கி ஏப்பம் விட்ட தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி அடக்கியே வாசிக்கப்படுகின்றன. எனவே, ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், அதிகாரிகளையும் அமைச்சர்களையும் தண்டிக்கக் கோரினால் மட்டும் போதாது; ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் தனியார்மயத்தையும் ஒழிப்பதற்குப் போராட வேண்டும்.

–          புதிய ஜனநாயகம், நவம்பர்’ 2009

புதிய ஜனநாயகம் நவம்பர் 2009  மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

தொடர்புடைய பதிவுகள்