privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – நவம்பர் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

-

puthiya-jananayagam-october-2014

புதிய ஜனநாயகம் நவம்பர் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. பு.ஜ.தொ.மு காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் தோழர் சிவா குண்டர் சட்டத்தில் கைது : பன்னாட்டு முதலாளிகளுக்கு வாலாட்டும் தமிழக போலீசு!

2. செயல்படும் அரசும் செயல்படாத எதிர்க்கட்சிகளும் – தலையங்கம்

3.  பார்ப்பன ஜெயா : தமிழ்ச் சமுதாயத்தை சீரழிக்கும் சதிகாரி!
தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக, தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன சதியின் நாயகிதான் பொறுக்கி அரசியலின் அம்மாவான பாப்பாத்தி ஜெயலலிதா.

4. குற்றவாளி ஜெயாவிற்கு “விரைவு” பிணை : பணமும் பார்ப்பனியமும் பத்தும் செய்யும்!
சட்டம், நீதிமன்ற நெறிமுறைகளைக் குப்பையைப் போல ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஜெயா – சசி கும்பலுக்குச் சிறப்புச் சலுகைகளோடு பிணை வழங்கியுள்ளது, உச்சநீதி மன்றம்.

5. உச்சநீதி மன்றம் : ஜெயாவின் தலையாட்டி பொம்மை!

6. ஜெயா நிரபராதி ! – ஊடகஙகள் எழுதிய விநோத தீர்ப்பு!
பார்ப்பன ஜெயாவிற்கு நெருக்கமான ஊடகங்கள் குன்ஹாவின் தீர்ப்பைக் குதர்க்கமாக மறுதலித்து ஜெயாவை விடுவிக்கின்றன.

7. அரியானா, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் : மோடி அலை என்ற வெங்காயம் !

8. தூய்மை இந்தியா : துடைப்பத்தோடு போபாலுக்குப் போங்களேன் மோடி!

9. மேக் இன் இந்தியா : புதிய மொந்தை பழைய கள்ளு!
அந்நிய நேரடி முதலீடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியையும் வேலை வாய்ப்பையும் உருவாக்கும் என்ற சாயம் வெளுத்துப் போன பழைய பாட்டை “ரீ மிக்ஸ்” செய்து விற்கிறார் மோடி.

10. கேட்ஸ் பவுண்டேஷன் : மனிதநேய வடிவில் வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!
இந்தியா உள்ளிட்ட ஏழை நாட்டு மக்களை, பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளின் சோதனைச்சாலை எலிகளாக மாற்றும் ஏஜெண்ட்தான் கேட்ஸ் பவுண்டேஷன்.

11. தீவிரமடையும் வன்கொடுமைகள் : ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈறும் பேனும்
தனியார்மயம் – தாராளமயத்தால் ஏற்பட்டுள்ள ‘வளர்ச்சி’யும் வாழ்வியல் மாற்றங்களும் இந்திய சமுதாயத்தை ஜனநாயகமாக்கவில்லை. மாறாக, சாதிய ஆதிக்கத்தைப் புதுப்புது வழிகளில் புதுப்பிக்கிறது.

12. சையது முகமது கொலை : துப்பாக்கியின் ஆட்சி!

13 மோ(ச)டி!

புதிய ஜனநாயகம் நவம்பர் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு சுமார் 1.5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

  1. தலித் மக்களுக்கு அங்கீராம் அங்கிகராம் என்று உழைக்கும் மக்களுக்கு அங்கிகராம் வேண்டும் என எழுதும் வினவு -கோபி என்ற கலைனர் முருகதாஸ் என்ற திடனுக்கு எதிராக போராடுவதை ஏன் எழதவில்லை? கோபி ஒரு சிறந்த படிப்பாளி, சமூக ஆர்வலர், மக்களின் நலன் பேணும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். பொதுவுடமை பேசும் தோழர், நல்ல படைப்புகளை உருவாக்கும் பேரவா கொண்டவர், மாற்று சினிமா மீதான ஆர்வம் கொண்டவர். குறிப்பாக கடைநிலை மனிதர்களின் வாழ்வும், நிலையும் படைப்புகளாக மாற்றப்பட வேண்டுமென்ற விருப்பம் கொண்டவர், சமநிலை சமூகமொன்று உருவாகவும் அதற்கு கலை உதவ வேண்டுமென்ற எண்ணமும் கொண்டவர். சினிமா துறைல் உள்ள நல்ல மனிதர்கள் போராடும் பொழுது நீங்க மட்டும் அதை பற்றி எழுத மட்டன்கேரிங்க – அப்பறோம் சினிமா விமர்சனம் குந்தாணி விமர்சனம் என்று எழுத வேண்டியது !!

    • தலித் இலக்கியம் பற்றி பேசுவது ,தலித்தியம் பேசுவது ,தலித் இலகியத்தை விமர்சனம் செய்வது எல்லாம் மார்சியத்தைக்கு எதிரான நிலை என்று வினவில் முன்பே கூறப்பட்டு விட்டது ப்ருஸ் !

  2. 4. குற்றவாளி ஜெயாவிற்கு “விரைவு” பிணை : பணமும் பார்ப்பனியமும் பத்தும் செய்யும்!

    Thumbi on November 21, 2014 at 11:01 am
    எல்லாம் சரி. இதில் பார்ப்பனீயம் எங்கு வந்தது?

    சொத்துக் குவிப்பு வழக்கின் பல்வேறு கட்டங்களில் ஜெயலலிதாவுக்குச் சாதகமாகத் தீர்ப்புகளை அளித்த முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி பி.எஸ்.சௌஹான் பார்ப்பனர் அல்லர். அம்மாவுக்கு வாதாடிய நாரிமன் பார்ஸி. நாரிமன் ஆஜர் ஆவதைக் கண்டித்து கடிதம் எழுதிய ட்ராபிக் ராமசாமி பார்ப்பனர். ஜெயா செய்த அட்டூழியங்களைக் கண்டியுங்கள். பார்ப்பனீயத்தை ஏன் தேவை இல்லாமல் கோர்க்கப் பார்க்கிறீர்கள்.

    என்ன நண்பர் தும்பி ,இப்படி கேட்டுவிட்டீர்கள் ?
    பாரதம் என்பதில் “பா”மற்றும்”ம்” இருப்பதையும் பார்ப்பனியம் என்பதிலும் “பா” மற்றும்”ம்” இருப்பதையும் நீங்கள் கவனிக்கவில்லையா.இதுபோன்ற தொடர்புகள் போதாதா வினவுக்கு?

    தனிப்பட்ட நபர்களின் குற்றங்கள் குறித்து விவரிக்கையில் அதை அவர்கள் சார்ந்த சாதிகளுடன் இணைத்து விவரிப்பது குற்றம் செய்தோர்மீது சமுகத்தின் அனைத்துதரப்பு மக்களின் கவனமும் எதிர்ப்பும் பதிவாவதை நீர்த்துப்போக செய்துவிடுகிறது என்பதை வினவு ஏன் உணருவதில்லை என தெரியவில்லை.
    கடவுள் சம்பந்தப்பட்ட ஒரு மதத்தினுல்லேயே வழிபாட்டு முறைகள் பலவாறு இருக்கின்றன.
    அதனால் ஒரே மதத்தினர் என்றாலும் ஒரு பிரிவினர் துயரம்,அவலம் பற்றி மற்ற பிரிவினர் பெரிதாக அக்கறை எடுத்துகொள்வது கிடையாது .
    கடவுள் விசயத்திலேயே மனிதர்களுக்குள் இப்படி பாகுபாடுகள் என்றால் ஒரு மனிதனை சாதியின் பிரதிநிதியாக உருவகப்படுத்தி விமர்சனம் செய்வதால் ஒட்டுமொத்த மக்களின் உள்ளங்களில் அவன் இழைத்த குற்றங்கள் பற்றி ஒரு விழிப்புணர்வை எப்படி ஏற்ப்படுதமுடியுமென வினவு நம்புகிறது என தெரியவில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க