Sunday, June 13, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க கூடங்குளம்: இடிந்தகரையில் HRPC வழக்கறிஞர்கள் - நள்ளிரவுக் கூட்டம்!

கூடங்குளம்: இடிந்தகரையில் HRPC வழக்கறிஞர்கள் – நள்ளிரவுக் கூட்டம்!

-

கூடங்குளம்-இடிந்தகரை-போராட்டக்-காட்சிகள்-13

நேற்று மாலை திட்டமிட்டபடி மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் இடிந்தகரைக்கு சென்று சேர்ந்தனர். ஆனால் இதுவே ஒரு சாகச பயணம் போல இருந்தது. ஏனெனில் இடிந்தகரைக்கு செல்லும் இரு சாலைகளையும் ஆயிரக்கணக்கான போலீஸ் தடுத்து பெரும் நந்தி போல காவல் காத்து வருகிறது. கிராமத்திலிருந்து 3, 4 கீ.மீட்டர்களில் இருக்கும் போலீசின் கண்காணிப்பைத் தாண்டி யாரும் ஊருக்குள் நுழையவோ, வெளியேறவோ முடியாது.

இந்நிலையில் இடிந்தகரை இளைஞர்களின் உதவியோடு கடற்கரையோரப்பாதை, காட்டுப்பாதை என 3 கி.மீட்டர்கள் சுற்றி நடந்து, போலிசின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ம.உ.பா.மை வழக்கறிஞர்கள் போராட்டப் பந்தலை அடைந்தனர். இடிந்தகரைக்கு சென்றே ஆகவேண்டுமென்ற ம.உ.பா.மையத்தின் போராட்டம் நேற்றுதான் வெற்றிபெற்றது.

வெளியிலிருந்து யாரும் வந்து பார்க்க முடியாத நிலையில் வழக்கறிஞர்களை பார்த்த உடன் தெருவெங்கும் கூடியிருந்த மக்கள் மகிழ்வுடன் வரவேற்று போராட்ட மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

இடிந்தகரை போராட்ட பந்தலில் சுமார் பத்தாயிரம் மக்கள் குழுமியிருந்தனர். மேலும் ஒரு பத்தாயிரம் பேர் பந்தலுக்கு வெளியே கடற்கரையோரம் மற்றும் ஊர் முழுவதும் தங்கியிருக்கின்றனர். இங்கு இருப்பவர்களில் சுற்றுவட்டார மீனவ கிராமங்கள் மற்றும் சில விவசாயக் கிரமங்களைச் சேர்ந்தவர்களும் உண்டு. கூடங்குளத்தில் திங்கட்கிழமை முதல் கடையெடுப்பு போராட்டம் நடந்து வருகிறது. அதே போல இடிந்தகரை வட்டார மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆண்களும் திங்கட் கிழமை முதல் கடலுக்கு செல்லவில்லை. அந்த வகையில் மீனவர்கள், விவசாயிகள் ஒற்றுமையாக இங்கு குழுமியிருக்கின்றனர். அவர்களின் போராட்ட உணர்வு இப்போதும் குன்றாமல் துடிப்புடன் இருந்து வருகிறது.

ம.உ.பா.மைய வழக்கறிஞர்கள் போராட்ட மேடைக்குச் சென்று உதயக்குமாரிடம் வழக்கு விவரங்களை தெரிவித்தனர். அதையும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை மக்களிடம் தெரிவிக்குமாறும் போராட்டக்குழுவினர் கேட்டுக் கொண்டனர். அதன்படி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ சுமார் ஒரு மணிநேரம் பேசினார்.

“கடலூரிலும், திருச்சியிலும் சிறை வைக்கப்பட்டவர்களை பிணையில் கொண்டு வர வள்ளியூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராடி வருகின்றனர். அணு உலை வேண்டும் என்று கூறுபவர்களுக்கு உள்ள உரிமை, வேண்டாம் என்று சொல்வதற்கும், போராடுவதற்கும் அரசியல் சட்டப்படியே உரிமை இருக்கிறது. அந்த உரிமையைத்தான் தமிழக அரசும், காவல்துறையும் காலில் போட்டு மிதித்திருக்கிறது. இன்று இடிந்தகரை வந்து போராட்டக்குழவினரை கைது செய்வதற்கு போலீஸ் அஞ்சுவதற்கு காரணம் இங்கே ஆயிரக்கணக்கில் திரண்டிருக்கம் மக்கள்தான். அந்த மக்கள் சக்தியைப் பார்த்துத்தான் போலீசு அஞ்சுகிறது. அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தப்படி 17 இலட்சம் கோடி ரூபாய்க்கு இங்கே அணு உலைகள் வரவிருக்கின்றன. உங்கள் போராட்டம் வெற்றி பெற்றால் அந்த வணிகம் முதலாளிகளுக்கு நட்டமாகிவிடும் என்பதால் அரசும், காவல்துறையும் இங்கே போர் தொடுத்துள்ளது. தொடர்ந்து போராடுவோம், வெற்றி பெறுவோம்”

என்று அவர் பேசி முடித்ததும் மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்போது மணி இரவு 11 இருக்கும். மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க வழக்கறிஞர்கள் இரவு அங்கேயே தங்கினர். இடிந்தகரையின் இரு சாலைகளும் போலீசால் தடுக்கப்பட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் வரவில்லை. மின்சாரமும் நேற்றுதான் கிடைத்திருக்கிறது. மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமல் தவிக்கின்றனர். கடலில் படகுகள் மூலமாக அத்தியவாசிய பொருட்கள் இடிந்தகரைக்கு வருகின்றன. அங்கேயே கூட்டாக மக்களுக்கு கஞ்சி, சாதம் சமைக்கப்பட்டு கொடுக்கப்படுகின்றது.

உதயகுமாருடன் சுமார் 15 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் இருக்கின்றனர். ஆரம்பத்தில் ஊடகங்களுக்கும் அங்கே செல்வதற்கு தடை இருந்தது. பின்னர் நேற்று மாலை முதல் அது விலக்கப்பட்டிருக்கிறது. ஆங்கில ஊடகங்கள் அங்கிருந்தே நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர்.

இன்னமும் போலீசு ஊருக்குள் வரவில்லை. அப்படி வாகனங்கள் வருவது போல இருந்தால் மக்கள் உடன் கேள்விப்பட்டு ஊர் எல்லையில் குழுமிவிடுகின்றனர். சுற்று வட்டார மீனவ கிராமங்களிலிருந்து மக்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றனர். போலீசின் பிரம்மாண்டமான அணிவகுப்பு அந்த மக்களின் உறுதியை கிஞ்சித்தும் குறைத்துவிடவில்லை.

போராடும் மக்களுக்கு தோள் கொடுப்போம். போராட்டத் தீயை அணைய விடாமல் பாதுகாப்போம்.

____________________________________________________________

– மனித உரிமைப்பாதுகாப்பு மையம்

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. போராடும் மக்களுக்கு தோள் கொடுப்போம். போராட்டத் தீயை அணைய விடாமல் பாதுகாப்போம்.

  • அண்புள்ள G.V.
   வினவு மின்னஞ்சல்/அலைபேசிக்கு தொடர்பு கொள்ள இயலுமா?
   தோழமையுடன்
   வினவு

 2. போராடும் மக்களை மட்டுமல்ல போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்துள்ள அனைவருக்குமே உத்வேக மூட்டும் வகையில் அமைந்துள்ளது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் செயல்பாடுகள். வழக்கறிஞர்களுக்கும் போராட்டக் களத்தில் நிற்கும் மக்களுக்கும் வாழ்த்துகள்!

 3. உழைப்பால் வரும் சம்பளத்தில் வருமானவரி, தண்ணீர்வரி, தொழில்வரி,மின்சாரவரி, நிலவரி, வீட்டுவரி, சாலைவரி என வரிச் சுமையை அரசு எங்களின் மேல் சுமத்தியும் நாங்கள் இன்று பட்டினிச் சாவிற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.பேசுவதற்கோ, அடிப்படை உரிமைகளப் பெறுவதற்கோ சுதந்திரமில்லா நிலையில் வாழ்ந்து வருகிறோம். அண்ணாவழி ஆட்சி செய்யும் அரசுக்கு மக்களின் மனவலி தெரியவில்லை போலும். போராடுவோம் தொடர்ந்து நாம். உரிமையை நிலை நாட்டுவோம். மானத்துடன் மடிவோம்.

 4. தோழர் சேகுவேரா: When forces of oppression come to maintain themselves in power against established law, peace is considered already broken.

 5. போராடும் மக்களுக்கு துணை நிற்கும் தோழர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்

 6. இடிந்தகரை மக்களோடு இணைந்து போராடுவோம். நயவஞசக ஜெ மக்கள் விரோத அரசு எந்திரத்தை வைத்துக் கொண்டு அணு உலையைத் திறக்க பலாத்காரமாக முயற்சி செய்கிறார்.மக்கள் அமைதி வழியில் போராடுகிறார்கள்.இந்தப் போராட்டம் தொடரத் தொடர அணு உலை ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்பைக் கைவிடுவார்கள்.அதுவரை போரட்டம் நீடிக்க நாமும் ஒத்துழைப்போம்.வெல்க மக்கள் போரட்டம்.

 7. கூடங்குளத்து மின்சாரத்தை இலங்கைக்கும் ஆந்திரா, கர்நாடகாவுக்கும் கொடுக்க ஏற்கனவே மின்வழிப்பாதைகள் அமைக்கப்பட்டுவிட்டன.

  தமிழக மக்களை சாகடித்து பிற பகுதிகளுக்கு மின்சாரம் என்றால் நாளை சாகப்போகும் கிழவி கூட அரிவாளைத் தூக்குவாள். அதற்காக நெய்வேலி, தூத்துக்குடி, எண்ணூர் ஆகிய அனல்மின் நிலையங்களில் கருவி பழுது என்று பொய் சொல்லியும், மேட்டூரில் 600 மெகாவாட்டுக்கான திட்டத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தியும் கூடங்குளம் இருந்தால் மட்டுமே தமிழகம் ஒளிரும் என்று பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு மக்களை சித்திரவதை செய்வதாகத்தான் நான் நினைக்கிறேன்.

  தினமலம் போன்ற ஊடகங்கள் இந்த கேவலமான பொய்யை பரப்ப காரணம், அவர்களுக்கு கிடைத்து வரும் தடையற்ற மின்சாரத்தை அரசு நிறுத்தி விடுவதாக பயமுறுத்தியிருக்கும்.

  இப்போது தடையற்ற மின்சாரத்துடன் கோடிக்கணக்கில் பணம் கிடைத்தால் அந்த ஊடகங்களுக்கு கசக்கவா போகிறது?

  கொள்ளை அடித்த பணத்துடன் 5 நட்சத்திர ஹோட்டலில் மது, மங்கை என்று உல்லாசமாக இருக்கும் இடத்திற்கும், மல்டிபிளெக்ஸ் தியேட்டர், அயல் நாட்டு கம்பெனிக்கு தடையற்ற மின்சாரம் கொடுத்தால் தேர்தல் நிதியுடன் தே………………ளையும் ஏற்பாடு செய்து தருவார்கள். சிறுதொழில், குறுந்தொழில் செய்பவர்கள், பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் கொடுத்தால் என்ன கிடைக்கும்?

  இதுதான் இந்த ஆட்சியாளர்களின் ரத்த வெறிக்கு காரணம் போல் தெரிகிறது.

  ஆனாலும் நம் மக்களிடம் மிகப்பெரிய தவறு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பெய்யாத மழையில் பாதிக்கப்பட்ட (?) வீடுகளுக்கு நிவாரணம் கேட்டு ஒவ்வொரு ஊரிலும் சாலை மறியல் செய்தார்கள். அதேபோல் இலவச எச்சிலை(டிவி உள்ளிட்ட பொருட்கள்) கிடைக்க வில்லை என்றும் வீதிக்கு வந்தார்கள்.

  இப்போது ஒரு ………..ரும் வேணாம். ஒழுங்கா கரண்ட் கொடு என்று எல்லா ஊரிலும் இப்படி அரசு அலுவலங்களை முற்றுகையிட்டு கூடினால் அரசு பணிந்து தானே ஆக வேண்டும். 4 கோடிப்பேர் இப்படி திரண்டால் எவ்வளவு ராணுவத்தை வைத்து அடக்குவார்கள்?

  ஒரு ………..ரானும் வேணாம் என்று 2006ஆம் ஆண்டு தேர்தலில் 49(O) என்று சொன்னேன். அப்போதே போலீசை வைத்து மிரட்டி வெளியே அனுப்பி விட்டார்கள். இப்போது 2011ல் உள்ளாட்சி தேர்தலில் தெருவில் இருந்து ஒருவர், போன தடவை நீங்க 49(O) என்று சொன்னதை நான் வெளியில் காட்டிக்கொடுக்கவில்லை என்று தெனாவட்டாக சொல்கிறார். கொள்ளை அடிக்கிற ……….யாப் பசங்க இது தப்புன்னு வேதனைப்படுற என்னை என்னவோ மன்னிச்ச மகான் கணக்கா பேசுறது தான் இந்த நாட்டு ஜன நாயகம்.

  புலம்புனா தொடர்ந்து புலம்பிகிட்டே இருக்க வேண்டியதுதான்.

Leave a Reply to Marx P Selvaraj பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க