privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஇது இடியாத கரை - இடிந்தகரையின் போராட்டக் காட்சிகள் !

இது இடியாத கரை – இடிந்தகரையின் போராட்டக் காட்சிகள் !

-

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. இடிந்தகரையில் குவிந்துள்ள போலீசை விட இங்கு இடிச்சபுளியாய் விற்றீருக்கும் மாதவராஜ் அண்ணாச்சியின் மௌனம்தான் வக்கிரத்தின் உச்சமாக உள்ளது.

  2. ஷாய்….நல்லா சர்க்கஸ் காட்ர மேண் நீயீ….

    இன்னும் கொஞச் நாள்தான்.. அப்புறம்… எல்லாரும் மீன் புடிக்க போயிடுவானுங்க…. உதயா மச்சான் சர்ச்சுல மணி அடிக்க போயிடுவாரு…..வினவு??? இருக்கவே இருக்கு சாருநிவேதா… கம்யுனிஸ்டு….ஜெ.. முக….பாசிஸம்னு கிருக்கிட்டு இருக்கப்போர..

    • ஆமா நொந்தியன் உங்களுக்கும் ஏதாச்சும் வேல கொடுக்கணுமில்ல.. நீங்களும் அப்ப தானே இந்தியா, வல்லரசு, 2020 4040 ஏதாவது கமெண்ட் கிருக்க உதவும்

  3. காட்சிகள் போர்க்களத்தைத்தான் நினைவூட்டுகின்றன.

    ஆயுதங்கள் ஏதுமின்றி கூடியிருக்கிற மக்களை எதிர்கொள்ள ஆயுதங்களும் அதிரடிப்படையும் எதற்கு? இதுவே அரசின் முதல் தோல்வியை பறைசாற்றுகிறது.

    இந்தச் செய்தி தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு – ஏன் உலகுக்கே – ஓர் முன் உதாரணம்.இனி அடக்குமுறையை ஏவி மக்களை ஒடுக்கிய பின் கூடங்குளம் இயக்கப்பட்டாலும் வெற்றி பெற்றவர்கள் போராடும் மக்களே. உலக அளவில் தங்களின் வாழ்வுரிமைக்காகப் போராடும் மக்களுக்கு கூடங்குளம் மக்களின் போராட்டம் ஒரு வழிகாட்டி.

    • //கூடங்குளம் இயக்கப்பட்டாலும் வெற்றி பெற்றவர்கள் போராடும் மக்களே//

      நிஜமான வார்த்தைகள். அணு சக்தியின் நன்மை தீமைகளைப் பற்றி பண்டிதர் முதல் பாமரர் வரை மொத்த தமிழகமும் உணரும் படி செய்த இடிந்தகரை மக்களுக்கும், அவர்களை ஒருங்கிணைத்த உதயகுமாருக்கும் நன்றி. இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளும், இனி வரப்போகிற அணு மின் நிலையங்களும் பாதுகாப்பாக இயங்குவதற்காக அதிகாரிகளும் அரசும் மிக விழிப்பாக இருக்க வழிசெய்த போராட்டத்திற்கு நன்றி. புதிய திட்டங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யும் போது உள்ளூர் ஜனங்களின் ஆதரவை பெறுவது எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்திய போராட்டத்திற்கு நன்றி. அவசரப்பட்டு மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடாமல் பொறுமை காத்த போலீசுக்கும் அரசியல் தலைமைக்கும் நன்றி.

      அணு உலை எதிர்ப்பை அறவழியில், அஹிம்சை வழியில் இடிந்தகரை மக்கள் இன்னும் ஒரு நாற்பதாண்டுகளுக்கு காட்டிக் கொண்டிருந்தால், அணு உலையால் பாதிப்பு எதுவும் இல்லை என்பதை புரிந்து கொண்டு விடுவார்கள். சுனாமி, எரிமலை, பூகம்பம் எதுவும் நேரவில்லை என்பதை தெரிந்து கொண்டுவிடுவார்கள். கூடங்குளம் அணு உலைகள் பல கோடி யூனிட்டுகள் மின் உற்பத்தியை செய்து முடித்திருக்கும். சுபம்.

      • ராம் காமேஸ்வரன்,

        வினவில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருந்த அணு உலைகள் பற்றிய சுவ்ரத் ராஜூவின் கட்டுரையை படிச்சீங்களா..? படிச்சிருந்தும் உங்களுக்குப் புரியலையா ?

        https://www.vinavu.com/2011/10/04/indian-atomic-plan/

        இந்திய அணு சக்தி கழகத்தால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும் அவற்றின் நிலவரமும் பின்வருமாறு
        1962 – இந்திய அணு சக்தி செயலர் ஹோமிபாபா — “1987ல் இந்திய அணு உலைகளின் மொத்த மின் உற்பத்தி 18-20 ஜிகாவாட்டாக இருக்கும். ”
        நடைமுறையில் 1987ல் இந்திய அணு உலைகளின் மொத்த மின் உறபத்தி 1.06 ஜிகா வாட்.. அதாவது அவர் சொன்ன இலக்கில் வெறும் 5 சதவீதம் மட்டுமே…
        1970 – அணு சக்தி செயலர் விக்ரம் சாராபாய் “செயல்பாடு இலக்கை மோசமாக நழுவ விட்டுவிட்டது” என்று 70லேயே ஒப்புக் கொண்டார். அவருடைய அடுத்த பத்தாண்டு இலக்கிலாவது அணு மின் உற்பத்தி இலக்கை சரியாக கணக்கிட்டாரா என்றால்.. அவர் சொன்னாது “1980ல் இந்திய அணு உலைகளின் மொத்த மின் உற்பத்தி 2.7 ஜிகாவாட் இருக்கும்”.. ஆனால் 1980ல் இந்திய அணு உலைகளின் மொத்த மின் உற்பத்தி வெறும் 510 மெகாவாட்டுகளே இருந்தது.

        2000 ஆண்டு அளவில், 10000 மெகாவாட் அணுமின் உற்பத்தித் திறன் கொண்ட உலைகளை அமைத்துவிடுவோம் என 1984-ம் ஆண்டில் தனது அணு சக்தி ”செயல் திட்டஅறிக்கை” (profile)யின் வாயிலாக அணுசக்தித் துறை அறிவித்தது.

        இச் செயல் திட்டம் களமிறங்கி ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடந்த பின்னால் இந்திய கணக்குத் தணிக்கை முதன்மை அலுவலர் (Comptroller and Auditor General of India) அதன் செயல்பாடுகளைப் பரிசீலனை செய்தார். அவர் தனது பரிசீலனையின் முடிவாக, “மார்ச் 1998 முடிய ரூ.5291.48 கோடிகளை செலவழித்து இந்தச் செயல் திட்டம் அளித்த கூடுதல் மின் உற்பத்தி பெரிய பூச்சியமே” என எழுதினார். மேலும், 2009ம் ஆண்டு வரையிலும் கூட இந்த அணுமின்சக்தி இந்திய மொத்த மின் உற்பத்தியில் அதே 3% அளவுக்கே நீடிக்கிறது.

        2003ல் அணு சக்தி செயலர் ககோத்கர் – “இன்றிலிருந்து 4 ஆண்டுகளில் 6800 மெகாவாட் உற்பத்தி திறனை எட்டிவிடுவோம்” என்றார். 2009 வரை அது 4120 மெகாவாட்டுகள் தான். இது 1962ல் ஹோமிபாபா சொன்ன 18000 மெகாவாட்டில் 4ல் ஒரு பங்கு தான்.

        ஆனால் இதற்கு ஆகும் செலவுகள், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புகள், இதனால் வெளிவரும் கழிவுகளை என்ன செய்கிறார்கள் என்பது பற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் இருப்பது என்று எல்லாம் ரகசியமாகவே இருக்கிறது.

        ஏன் இதை இன்னும் அரசும், பெரும் முதலாளிகள் எல்லோரும் ஆதரிக்கிறார்கள்? ஏனென்றால் இது பெரிய அளவில் லாபம் தரும் தொழில்..அவர்களுக்கு. மக்களுக்கு என்ன கிடைக்கிறது..? என்ன பாதிப்பு வரும்..? இது அவர்கள் கவலையாக ஒரு போதும் இருந்ததில்லை.. இருக்கப்போவதுமில்லை..

        பல கோடி யூனிட் கதைகளை இடிந்தகரை மக்களிடம் சொல்லிவிடாதீர்கள்.. இங்கே மெட்ராஸில் ஏ.சி. ரூமில் உட்கார்நது கொண்டு.. நுனி நாக்கில் நம்பர்களைப் பற்றிப் பேசும் இந்த சுயநலமிக்க மிடில் கிளாஸ், அப்பர் கிளாஸ் மன்னாருகளிடம் போய் சொல்லுங்கள். நன்றாக ஆமாம் சாமி போடுவார்கள்.

      • சரி, இத்தனையும் மீறி – இதுதெல்லாம் சகஜம் தான். “வளர்ச்சி” தான் முக்கியம்ன்னு சொல்றவங்கிட்ட ரெண்டே ரெண்டு கேள்வி மட்டும் கேட்க ஆசை.
        1.வாரன் ஆண்டர்சன் யாரு தெரியுமா ?
        2.போபால் மக்களுக்கு எவ்வளவு ஈழப்பீடு குடுத்தாங்க தெரியுமா ?
        நண்பர்களே, அணுவுலை ஆதரித்து பேசுபவர்களிடம், உடனே இந்த ரெண்டு கேள்வியையும் கேளுங்க.

        வல்ல்ல்லரசு
        http://saravanaganesh18.blogspot.in/2012/03/blog-post.html

      • \\கூடங்குளம் அணு உலைகள் பல கோடி யூனிட்டுகள் மின் உற்பத்தியை செய்து முடித்திருக்கும். சுபம்.//

        ராம்,
        பாதி சொல்லிவிட்டீர்கள்.மீதி இதோ.

        கூடங்குளம் அணு உலைகள் கதிரியக்க அபாயமிக்க பல டன் அணு கழிவுகளையும் உற்பத்தி செய்து குவித்திருக்கும்.கலாம் சொல்லியபடி அவற்றை அங்கேயே குழி தோண்டி புதைத்து வைத்திருப்பர்.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அவை தமிழினத்தின் தலைக்கு மேல் கத்தியாக தொங்கி கொண்டிருக்கும்.அத்தனை ஆயிரம் ஆண்டுகளும் இப்படியே இயற்கை பேரிடர் ஆபத்தின்றி கழிந்து விடும் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா.

        அந்த அணு உலையை மூட பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணம் தேவைப்படும்..

        அந்த அணு உலையை பயன்படுத்தி சில பல அணு குண்டுகளையும் உருவாக்கி வைத்திருப்பர்.அவற்றுக்கான ஏவுகணைகள் உற்பத்தி,பராமரிப்பு,அவற்றை பத்திரமாக பாதுகாப்பது என்ற பெயரில் மேலும் மேலும் மக்கள் வரிப்பணம் பாழாக்கப்படும்.

        தொடர்ச்சியாக சூடான நீரை கடலில் விட்டு அப்பகுதியின் மீன் வளம் நாசமாக்கப்பட்டிருக்கும்.

        கர்னாடக மாநிலம் கைகாவில் அணு உலை ஊழியர்கள் கதிரியக்கத்தால் நஞ்சாக்கப்பட்ட நீரை குடித்து பாதிக்கப்பட்டது போன்ற பல விபத்துக்கள் நடந்து நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் மூடி மறைக்கப் பட்டிருக்கும்.

        வெறும் முப்பது ஆண்டுகளுக்கு நாளொன்றுக்கு 2000 மெகாவாட் மின்சாரம் தர எத்தனை கோடிகள் கொள்ளையிட்டோம் என்ற உறுத்தல் ஏதுமின்றி அடுத்த அணு உலை நோக்கி கொள்ளை கும்பல் நகர்ந்திருக்கும்.

        • //அந்த அணு உலையை மூட பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணம் தேவைப்படும்..//

          திப்பு,

          கூடங்குளம் அணு உலை அடுத்த 40 ஆண்டுகளில் உற்பத்தி செய்யப் போகும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு 2 பைசா வீதம் டீகமிஷனிங் சார்ஜ் என்ற பெயரில் ஒரு நிதியை ஏற்படுத்தி சேமித்து வந்தால் சுமார் 700 கோடி ரூபாய் கையிலிருக்கும். இந்தப் பணம் அணு உலையை மூடுவதற்கு போதுமானது (தற்பொழுதுள்ள விவரப்படி) என்றும் வருங்காலத்தில் தேவைப்பட்டால் இது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அணுசக்திக் கழக வலைத்தளத்தில் விவரம் உள்ளது.

          உங்கள் பல்லாயிரம் கோடிக்கு கொஞ்சம் கணக்கு கொடுக்கவும்.

          Realizing the quantum of financial resources that will be required in future for decommissioning of reactors, a de-commissioning levy at the rate of US Cents 0.044 (2 paise) per unit is being collected as part of tariff. The present de-commissioning fund appears to be adequate to take care of de-commissioning expenses. The provisions in this regard will be reviewed in future based on experience and technological development.

          http://www.dae.gov.in/press/cnsrpt.pdf

          • \\உங்கள் பல்லாயிரம் கோடிக்கு கொஞ்சம் கணக்கு கொடுக்கவும்.//

            கொடுத்திடலாம் ராம்,இந்த சுட்டியில் பார்க்கலாம்.

            http://www.reuters.com/article/2011/06/13/idUS178883596820110613

            EnergySolutions, a nuclear waste managment company based in Salt Lake City, offered to take over the decommissioning plan. The company acquired the Zion plant in September 2010. According to EnergySolutions CEO Val Christensen, full decommissioning will cost about $1 billion dollars over the next 10 years.

            EnergySolutions can expedite the cleanup because of its technical capacity, said Christensen. His company is currently decommissioning 18 reactors in England. They also own a low-level nuclear waste storage facility in Clive, Utah, which will speed up the waste disposal process.

  4. வெட்டவெளியில் புழுதி மணலில் படுத்துறங்கும் இந்த எளிய மக்களை அந்நியனிடம் பணம் வாங்கி கொண்டு போராடுவதாக இழிவு படுத்தும் மன்மோகன் தலைமையிலான துரோக கும்பல் எத்தகைய மனசாட்சியற்ற கல்நெஞ்சக்காரர்கள்.

    • கல்நெஞ்சக்காரர்களை கேவலப்படுத்த வேண்டாம் அவர்கள் கூட இந்த எழிய மக்களை பார்த்து இப்படி சொல்லமாட்டார்கள்

      இவர்கள் அதைவிட கேவலமானவர்கள்

  5. இப்படி உசுப்பேத்தி..உசுப்பேத்யே..வினவ.. ரணகளம் ஆக்கிட்டாங்யா…..
    அறீவாளிகளே…. நான் சொல்வதுதான் நடக்கும்… அது கூ.குளமா இல்ல மு.பேரியாறோ….நாம நினச்சது நடந்தாலெ…. ஒரே குஷீ….

    அடுத்த மேட்டர்ல தோத்த பயலுவல எல்லாம் சந்திக்கும் வரை…. விடை பெறுவது.. இந்தியன்….

    • மக்களின் வதைகள் பாசிஸ்டுகளுக்கு குஷியாகிவிடுகிறது. போராட்டங்கள் போராளிகளை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. பாசிஸ்டுகளையும் வெளிப்படுத்திவிடுகிறது.

  6. கூடங்குளம் விடயத்தில் இரண்டு கவனிக்கத்தக்க அம்சங்கள்…

    அணைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் கூடங்குளம் திட்டத்தை ஆதரித்த போதிலும், இறுதி வரை அதிமுக அரசு போராட்டத்தை ஆதரிப்பது போல மக்களை நம்ப அல்லது சந்தேகிக்க வைத்தது முழுக்க முழுக்க ஓட்டுக்காக என்ற உண்மை…

    பல்வேறு அரசியல் சார்பற்ற குழுக்கள், இயக்கங்கள், அமைப்புகள் கூடங்குளம் திட்டத்தை ஆதரித்தாலும் இறுதி வரை எதிர்ப்பாளராக இதில் எந்த அமைப்பையும் சாராத உதயகுமாரே போகஸ் ஆகியிருப்பது. மற்ற இயக்கங்கள், அமைப்புகள்,குழுக்களுக்கு இல்லாத மக்களை ஒன்று திரட்டும் ஒரு நிபுணத்துவ வசீகரம் தனி மனிதன் ஒருவரிடம் இருப்பது இந்தியாவை பொறுத்தவரை அதிசயம் தான்..

Leave a Reply to திப்பு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க