Monday, March 17, 2025
முகப்புசெய்திஇடிந்தகரை மக்களுடன் கரம் கோர்ப்போம்!

இடிந்தகரை மக்களுடன் கரம் கோர்ப்போம்!

-

“கூடங்குளம் அணுஉலையில் யுரேனியத்தை நிரப்பக்கூடாது, பொய்வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை முன்வைத்து, இன்று காலை பத்து மணி முதல் மாலை 4 மணி வரையில், நாளை முதல் கடலுக்குள் கை கோர்த்து நின்று மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக போராட்டக்குழு அறிவித்திருக்கிறது. “யுரேனியத்தை நிரப்பமாட்டோம்” என்று அரசு அறிவிக்கும் வரையில் இந்தப் போராட்டம் தினந்தோறும் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அம்மக்களுக்கு காலம் காலமாக வாழ்வளிக்கும் அந்தக் கடலில்,

எந்தக் கடலின் நீரையும் மீனையும் கதிரியக்கத்தின் வெம்மையிலிருந்து பாதுகாப்பதற்காக போராடுகிறார்களோ அந்தக் கடலில்,

தாய்மடியாய் இருந்து போலீசின் வெறித்தாக்குதலிலிருந்து அம்மக்களைப் பாதுகாத்த அந்தக் கடலில் – – – – –

குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உள்ளிட்ட கரையோர மக்கள் ஆயிரக்கணக்கில் இறங்கி நிற்கப்போகிறார்கள் – நீதி கேட்டு.

இந்தக் கடல், அதன் காற்று, அதன் மணல், அந்த மீன்வளம் ஆகியவற்றை நுகரும் தமிழக மக்களாகிய நமக்கு ஒரு கடமை உண்டு. கதிரியக்கம் தாக்கினால் பாதிக்கப்படப்போவது கூடங்குளம் இடிந்தகரை மக்கள் மட்டுமல்ல.

அது ராமேசுவரத்தில் புனித நீராட வரும் பக்தர்கள் முதல், மெரினாவில் காற்று வாங்க வரும் சென்னை மக்கள் வரை அனைவரையும் தாக்கும். மாநில எல்லை கடந்த கேரள மக்களைத் தாக்கும். தேச எல்லை கடந்து இலங்கையையும் தாக்கும்.

இது நமது கடல். நமது போராட்டம்.

இடிந்த கரை மக்கள் அறிவித்திருக்கும் இந்தப் போராட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தன் கரையோர மக்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை ஓரம் கை கோர்த்து நிற்க  வேண்டும் என்று அறை கூவுகிறோம்.

______________________________________________________

அ.முகுந்தன், ஒருங்கிணைப்பாளர், போராட்டக்குழு,

ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு. பெ.வி.மு

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. எப்படி ஆதர்வு கொடுப்பது? என்ன வடிவம்?
    I do know to type tamil format, when i am typing it is wrong format, ennaku konjam english theriyum. we are in centre of rural area? how can show our support for the great Koodankulam makkal they are very bold to face the police arajagam, athumeeral, etc. and government to afraid of makkal porattam is never failed and also never take rest till their goal is achieved. ” Arise, Awake, and stop not till our goal is reached” by one of the mahan. enaku poradanum endru irukku, but eppadi? yarudan? 3 days naan cont. watching tv, they all are supported the “anu ulai” and they corrupt the makkal poratttam, and threaten all of the leaders who are leading the porattam.
    Gnathesigan who is the congress member and ponraj, Gnani, press they are taking “Nerpada Pesu” programme, the affence the makkal, they are acting as sleeping, Tamilnadu government will take very force action against makkal and process the “Anu Ulai”. The great Ponraj shifted his residence and setteld near by middle of the street koodangulam makkal till his life end without Banglow type house, Car, sleeping without A/C and etc. They are only actors.
    Naan ready yaga irukkiren emmakkaluku support panna.
    poratam vellattum. kandippaga vellum.

  2. ஈழப் பிரச்சினைக்கு ஆதரவு வழங்கியவர்கள் கூட கூடங்குளம் பிரச்சினையில் அரசின் பக்கம் நிற்கிறார்கள். ஏன் கூடங்குளம் மக்கள் நமது மக்களாக தெரியவில்லை இவர்களுக்கு? சுப்ரமணிய சாமியின் பேச்சு மிகவும் கேவலமாக இருக்கிறது. இந்த நபர் தமிழ் நாட்டில் நடமாட தகுதியற்றவர். வைகோ சாஞ்சி பயணத்தை நிறுத்தி கூடங்குளம் செல்லட்டும். சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு அங்கு முகாமிட்டு பணியாற்றியது போல, மக்கள் துன்பப்படும் இந்த நேரத்தில் துணை நின்று பணியற்றட்டும். பெரும்பாலோர் வேடிக்கை மனோபாவத்தோடே கூடங்குளத்தை பார்க்கிறார்கள். உண்மையை உள்ளபடி, தேவையான முக்கியத்துவம் கொடுத்து உரைக்க ஒரு மக்கள் ஊடகம் கூட நம்மிடம் இல்லாமல் போனது பெரிய குறை. இதற்கு குஜராத் நிலைமை மேல் என்று நிச்சயமாக சொல்ல முடியும்? எல்லாமே நிறைவோடு இருப்பது போன்ற பாவனையில் மிகவும் இயல்பாக சென்று கொண்டிருக்கிறது, பெரும்பான்மை சமூகம். நாம் ஏதாவது பேசினால் சலனமின்றி கேட்டுவிட்டு ஒரு வார்த்தை கூட அது குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்க மறுக்கிறார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் இந்த பாராமுகம் போலிசின் லத்திசார்ஜுக்கு இணையானது.

    • //நாம் ஏதாவது பேசினால் சலனமின்றி கேட்டுவிட்டு ஒரு வார்த்தை கூட அது குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்க மறுக்கிறார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் இந்த பாராமுகம் போலிசின் லத்திசார்ஜுக்கு இணையானது.//இவர்களை பார்த்து வெறுப்புதான் வருகிறது.நாம் எல்லோருக்கும் சேர்த்துதான் அவர்கள் போராடுகிறார்கள் என்பது கூட உணராமல் இருக்கிறார்கள்.

      • இந்த பார முகம் லத்திக் சார்கைவிடவும் கொடியது, இகக் கொடியது. the opposit of concern is not enimity, but the indifference.

  3. கூடஙகுளம் மக்களுடன் கை கோர்த்து போராடுவோம். மக்கள் போராட்டம் வெல்லட்டும்.

  4. என்றுமே எதிரும் புதிருமாக சண்டைக் கோழிகளாய் இருக்கும் பல சனநாயக சக்திகள் கூடங்குளம் மேட்டரில் ஒரே மாதிரி சிந்திக்கும் உலக அதிசயம் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நடக்கிறது.. அதாங்க அதிகமாக ஹிட்டுகளை வாரிவழங்கும் சூப்பர் ஸ்டார் பதிவர்களான வினவு, சவுக்கு, ஜெயமோகன், ஞாநி உங்களால் கேவலப்படுத்தப்பட்ட அன்னா அசாரே கேஜ்ரிவால் ஆகியோர் அனைவரும் ஒரே குரலில் பேசுகின்றனர் (உலக அதிசயம்தான்…..) சரி இப்போதவது தமிழக மக்கள் நலன்களை முன்னிறுத்தி உங்கள் தனிப்பட்ட கருத்து மாச்சர்யங்களை ஓரங்கட்டி ஒரு “முற்போக்குக் கூட்டணி” அமைத்தால் எப்படி இருக்கும்.. இல்லாவிட்டால் என்னைப் போன்ற கேன பதிவர் ரசிகர்கூட்டம் மார்ட்டின் லுதர் மாதிரி I HAVE A DREAM என்று பினாத்திக்கொண்டிருப்போம்… எச்சரிக்கை

  5. அண்ணாத்தே, காங்கிரசு, ப்பீஜேபீ, ரென்டு “கம்யூனிஸ்டு”, தி.முக்க்க, அ(திகமா).முக்க, இவிங்க அல்லாரும் ஒரே கூட்டணியில இருக்கறது உங்க “யான” கண்ணுக்கு தெரியிலியானே….! நொந்திர சாரி சந்திர ச்சேக்கரண்ணே…..

    • கருப்பு தம்பி… நீரு எனன சொல்ல வர்றீரு… அதாவது காங் பிஜேபி கம்யூனிஸ்டு திமுக அதிமுக அதிக ஆட்கள திரட்டி வச்சுருக்காங்க.. எதிர்பாளர்கள் ஒண்ணுக்கும் பிரயோஜனமில்லன்னு தான…. ஒத்துக்கறேன்

      • அது எப்பிடினே புரியாத மாதிரியே பேசுரீங்க….. உங்க ட்ரீரீரீமுலேயே இதுதான் டாப்பூஊஊஊ….

  6. We can not consider this is Kudankulam or Idinthakarai problem. This is unjust against whole Tamil people. Center and State political leaders always doing evil to Tamil people. Karnataka not willing to give water to Tamil Nadu. Kerala wants to demolish the Periyar dam. Andhrapradesh wants to construct the dam on Palaaru. Loosing every right is called saving integration of India. It is right is it justice ? Riot against indians in Australia our foregne affair minister went immediately because affected indians are north indians. But 1,60,000 Tamils are killed by Rajbakse in srilanka, 800 Tamil fishermen killed by Sri lanken army but still India Governemnt not taking any serious action against Srilanka. We cannot expect justice from our corrupted politicians. We need only oneness among Tamil people and everyone support the Kudamkulam people.

  7. Hi
    I feel This protest ideally should not be on the seashore (kudankulam), Its should be in a place where it will draw attention of masses , now the reality of the protest is not felt every where because it is happening in a remote place ,Which is isolated from rest of the world by police forces & the GA , The protest will not succeed untill these corrupted medias spreading/ reporting false news to the masses is not checked .This protest should be done in front of those corrupted media offices located in main cities,its when people will come to know about it.
    These corrupt medias may be forced to change approach for Survival.
    All the best for your efforts to save nature

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க