privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்போராடிய இடிந்தகரை மீனவரைக் காவு வாங்கியதா கடற்படை விமானம்?

போராடிய இடிந்தகரை மீனவரைக் காவு வாங்கியதா கடற்படை விமானம்?

-

பத்திரிகை செய்தி

கடற்படை-விமானம்நேற்று காலை இடிந்தகரை மக்கள் கடலில் இறங்கி நடத்தி வந்த போராட்டத்தின் போது, கண்காணிப்பு என்ற பெயரில் அச்சுறுத்தும் விதத்தில் மக்களின் தலைக்கு மேலே மிகத்தாழ்வாக குறுக்கும் நெடுக்குமாக சீறிக்கொண்டு சென்றது கடற்படை விமானம். அந்த இரைச்சலால் தாக்கப்பட்ட பல முதியவர்களும் சிறுவர்களும் தண்ணீரில் தடுமாறி, மயங்கி வீழ்ந்தார்கள்.

அலைகளால் மக்கள் அடித்துச் செல்லப்படாமல் பாதுகாப்பதற்காக, கயிறு கட்டி மக்களுக்குப் பாதுகாப்பு வலயம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இடிந்தகரை கீழத்தெருவைச் சேர்ந்த மீனவர் சகாயம்(42) என்பவர், கடற்படை விமானத்தின் ஒலியால் நிலைகுலைந்து வீழ்ந்து நினைவிழந்தார்.

உடனே அவரை இடிந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். ஆபத்தான நிலையில் இருப்பதால், நாகர்கோயில் கொண்டு செல்லுமாறு அவர்கள் கூறவே, மனைவி தமீனாவும் உறவினர்களும் சகாயத்தை நாகர்கோயில் ஜெயசேகர் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உடனே அனுமதிக்கப்பட்டு சோதனை செய்ததில், அவரது மூளை பலமாக பாதிக்கப் பட்டிருப்பதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். பத்தடி உயரத்தில் சீறிய விமானத்தின் ஒலி சகாயத்தின் தலையில் இடியாய் இறங்கியிருக்கிறது.

ஜெயசேகர் மருத்துவமனைக்கு காவல்துறை உயரதிகாரிகள் வந்து சென்றிருக்கின்றனர். நடந்த சம்பவம் பற்றி சகாயத்தின் மனைவி தமீனா நேற்றே புகார் கொடுத்திருக்கிறார். அப்புகாரை கூடங்குளத்திலிருந்து ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளர் நேரில் மருத்துவமனைக்கே வந்து பெற்றுச் சென்றிருக்கிறார். இருப்பினும் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. சகாயத்தின் மருத்துவம் குறித்தும் போலீசு அக்கறைப்படவில்லை.

அந்த தனியார் மருத்துவமனைக்கு சகாயத்தின் மனைவி இதுவரை சுமார் 30,000 ரூபாய் கட்டியிருக்கிறார். அவர்களுக்கு செலவிடும் சக்தி இல்லை. சகாயத்தை தீவிர சிகிச்சை பாதுகாப்பிலிருந்து அகற்றினால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

சகாயத்துக்கு ஏதேனும் நேர்ந்தால் அது கூடங்குளம் அணு உலைக்கு இந்த அரசு கொடுத்திருக்கும் இரண்டாவது இரத்தப் பலியாகவே இருக்கும். மீனவ மக்கள் தங்கள் ஊரில், தங்கள் கடலில் இறங்கி நின்று அமைதி வழியில் போராடுவதும்கூட இன்று மரணதண்டனைக்குரிய குற்றமாகிவிட்டது.

விமானத்தை தாழ்வாகப் பறக்க விட்டு மக்களை மிரட்டுவது என்பது, எல்லாப் போர்களிலும் ஆக்கிரமிப்பு இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கை. ஈழத் தமிழ்மக்களுக்குப் பழகிப் போன சிங்கள இராணுவத்தின் நடவடிக்கை. இரண்டு நாட்களுக்கு முன் இடிந்தகரை மாதா கோயிலின் கோபுரத்தை தட்டி விடும் அளவுக்குத் தாழப்பறந்தன விமானங்கள். இவ்வாறு பறப்பதன் நோக்கம் பாதுகாப்போ கண்காணிப்போ அல்ல. இந்த நடவடிக்கையின் ஒரே நோக்கம் மக்களை அச்சுறுத்துவதுதான்!

அணு உலைப் பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு, தென் தமிழகத்தின் கடலோரக் கிராமங்கள் இன்று முப்படைகளின் முற்றுகைக்கு ஆளாக்கப் பட்டிருக்கின்றன. ஈழத்தமிழ் அகதி முகாம்களைப் போல, தென் தமிழகத்தின் கடலோர கிராமங்கள் அனைத்தும் மாற்றப்படுவதை நாம் அனுமதிக்க கூடாது.

மீனவர் சகாயத்தின் உயிருக்கு பாதிப்பு நேர்ந்தால் அதற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு. அவருடைய மருத்துவத்துக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். அவரது மனைவி கொடுத்த புகாரின் மீது உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும். விமானங்கள், கடற்படைப் படகுகளின் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும். போலீசு படைகளை அப்பகுதியிலிருந்து வாபஸ் பெறவேண்டும். 144 தடை உத்தரவை நீக்கவேண்டும். எல்லா போலீசு அத்துமீறல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் –

என்று அரசைக் கோருகிறோம். இக்கோரிக்கைகளுக்காக போராட அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்.

இவண்

அ.முகுந்தன், ஒருங்கிணைப்பாளர், போராட்டக்குழு,

ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

    • Many will ask how can airforce be responsible for death of a person standing below when there was no physical injury / gun shot

      Blast injuries can cause hidden brain damage and potential neurological consequences

      High-order explosives produce a supersonic overpressure shock wave, while low order explosives deflagrate (subsonic combustion) and do not produce an overpressure wave. A blast wave generated by an explosion starts with a single pulse of increased air pressure, lasting a few milliseconds. The negative pressure (suction) of the blast wave follows immediately after the positive wave.

      Displacement of air by the explosion creates a blast wind that can throw victims against solid objects.

      http://en.wikipedia.org/wiki/Blast_injury
      http://en.wikipedia.org/wiki/Sonic_weapon

      • தாழப்பறந்த விமான மிரட்டல் காரணமாக மீனவர் சகாயம் மட்டும் ஏன் மரணமடைய வேண்டும்?, மற்றவர்கள் ஏன் மரிக்கவில்லை என்று சில அதிமேதாவிகள் யோசிக்கலாம். இந்த விமானம் தாழப்பறந்த போது பல முதியவர்களும், சிறுவர்களும் நிலை தடுமாறி மயங்கி விழுந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறோம். அதில் சகாயம் ஒருவர். அவர் அதிகமாய் பாதிக்கப்பட்டிருக்கலாம். மேலும் அவர் கடல்போராட்டத் தடுப்பிற்காக பாறைகளில் ஏறி கயிறு கட்டிக் கொண்டிருந்தார். விமானம் பறந்து போன விநாடியில்தான் அவர் மயங்கி விழுந்தார். அதற்கு முன் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தவர் விமானம் கடந்த பிறகு மயங்க வேண்டிய அவசியம் என்ன? இடி இடித்து பூமியில் பாயும் போது கூட ஒரு வட்டாரத்தில் ஓரிருவர் இறக்கும் போது மற்றவர் ஏன் இறக்கவில்லை என்று கேட்க முடியாது. அது போலத்தான் இதுவும். மேலும் சகாயத்தின் உடலுக்கு முறையான பிரதேசப் பரிசோதனை செய்யும் போது இந்த உண்மைகள் வெளிவரும் என்பதால் இந்தநிமிடம் வரை போலீசு அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. நாகர்கோவில் ம.உ.பா.மை வழக்கறிஞர்கள் அதற்காக போராடி வருகிறார்கள்.

  1. Dont worry vinavu,

    Nuclear power plant will be shut down. 144 will be withdrawn in those areas. All private companies will be nationalized. Indian military will be dismantled. police will be dismantled. For educated people we will give unemployment.

    • Nuclear power plant will be shut down. 144 will be withdrawn in those areas. All private companies will be nationalized. Indian military will be dismantled. police will be dismantled.//
      Thanks for your support Mr.Vinoth.
      //For educated people we will give unemployment//
      You do not need to do anything on it. Its already there.

  2. இன்னும் கொஞ்ச நாள் தான் மாமு… எல்லா சனியனுங்களயும் அடிச்சி விரட்டிட்டு… அங்கே மின்சாரம் எடுப்பது உறூதி…. 6 கோடி பேர் பயனடையும் போது, ஒரு 6 ஆயிரம் பேர் செத்தா ஒன்னும் தப்பில்லை….

    • த்து…
      6000 பேர் மட்டும் சாகமட்டன். அணு உலை விபத்து என்பது ரயில் விபத்து போன்றது கிடையாது..கதிர்வீச்சு என்பது மொத்த தமிழகத்தையும் தான் பாதிக்கும் _________இந்தியன்..

  3. அன்புள்ள வினவு:

    இந்திய ராணுவத்தில் பல விதமான நவீன ஆயதங்களை சோதிக்கும் பல பிரிவுகள் இருக்கின்றன. இதில் ஒன்று கண்ணில் புலப்பட ஆயுதங்கள் மூலம் தாக்குதல். இஸ்ரேலிகள் இத்தகைய பல ஆயுதங்களை பாலஸ்தீனம் லெபனான் உள்ளிட்ட நாடுகளில் பிரயோகித்திருக்கின்றனர்.

    இங்கிலாந்து போன்ற நாடுகளில் பதினெட்டு வயதுக்கு குறைந்த விடலைகளின் காலித்தனங்களை கட்டுப்படுத்த என்று கூறி இத்தகைய ஆயதங்கள் சட்டப்படியாக விற்கப் படுகின்றன. அந்த கருவிகள் எழுப்பும் ஒலி இளையோருக்கு மட்டுமே கேட்கும். ஐந்து நிமிடங்களுக்கு மேல் கேட்கும் பட்சத்தில் அந்த இளையோர் நிலை குலைந்து விழுந்து விடுவார்கள்.

    இதனை ஐரோப்பிய நாடுகளில் சட்டப்படி தனியார் தமது இல்லங்களில் பொருத்திக் கொள்ள முடியும். கம்பெனிகள் விற்கவும் முடியும். இதே அடிப்படையில் ஒலி மற்றும் ஒளியால் நிலை குலையச் செய்யும் ஒலி ஆயதங்களை தாழப் பறக்கும் விமானங்கள் மூலம் எழுப்பிப் போராட்டங்களை ஒடுக்க முடியும். இது இந்திய ராணுவத்தின் யுக்திகலில் இதுவும் ஒன்று. இஸ்ரேளிகளுடன் செய்து கொண்ட ஆயுத வான்களில் இதுவும் ஒன்று. ஒரு சாதாரண டோர்னியர் விமானத்தின் சத்தம் காதுகளை கழிக்காது. மூளைச செயல் இழப்பை உண்டு பண்ணாது.

    ஆனால் இத்தகைய சிறிய விமானங்களைப பயன்படுத்தி ஒலித் தாக்குதல் நடத்த முடியும். உங்கள் செய்தி உண்மை என்ற பட்சத்தில் இது ராணுவத் தாக்குதல் என யூகிக்கலாம்.

    குமரன்

Leave a Reply to Indian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க