Sunday, January 16, 2022
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் அடிக்க வந்த பாமக அட்ரஸ் இல்லாமல் ஓடிய கதை!

அடிக்க வந்த பாமக அட்ரஸ் இல்லாமல் ஓடிய கதை!

-

ராமதாஸ்-பா-ம-க-கார்டூன்டந்த ஞாயிற்றுக் கிழமை காலையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஜனவரி மாத புதிய கலாச்சாரம் பத்திரிகை விற்பனையை முடித்து விட்டு பேருந்து ஏற நின்று கொண்டிருந்தார்கள்.

அந்த நேரம் அங்கு வந்த தாம்பரம் காவல் நிலைய காவலர் ஒருவர் பத்திரிகையை கேட்டு வாங்கினார். “இங்க என்ன செய்றீங்க, உடனே கெளம்புங்க” என்று புறப்பட்டுப் போகச் சொன்னார். அதற்குள் அங்கு வந்த அருகில் இருந்த 2-3 ரவுடிகள்,

“இவுனுங்கள சும்மா விட மாட்டோம். நான் பா.ம.க. நகரச் செயலாளர், வக்கீல். நான் ஸ்டேஷனுக்கு வந்து கம்ப்ளெயின்ட் எழுதித் தாரேன், இவனுங்கள புடிச்சி உள்ள போடுங்க” என்று எகிற ஆரம்பித்தனர்.

காவலரோ, “ஏம்பா, நீங்க கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கீங்க, நாங்க விசாரிக்கிறோம். இடையில இப்படி ரவுடித்தனம் பண்ணாதீங்க” என்று எச்சரித்தார்.

இதற்குள் ரவுடிகளில் ஒருவன், தொலைபேசியில் “ஆமாஜீ, சுத்தி வளைச்சிட்டோம். 4 பேரு இருக்காங்கஜி, போலீஸ்ல கொண்டு போயிரலாம்ஜி” என்று ஏதோ ஒரு ஜீக்கு தகவல் சொல்ல ஆரம்பித்திருந்தான்.

இதற்குள் போலீஸ் ரோந்து வாகனம் வந்து விட காவலர் தோழர்களை வண்டியில் ஏறச் சொன்னார். “இவனுங்க 100க்கு கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கானுங்க. நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து வந்து ஒரு அறிக்கை கொடுத்துட்டு போயிருங்க”என்றார்கள்.

வெளியில் ரவுடிகளுடன் இன்னும் இரண்டு பேர் சேர்ந்து கொள்ள சாமியாட ஆரம்பித்தார்கள்.

“தேவிடியாப் பசங்க, இவனுங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அய்யாவைப் பத்தி எழுதுவாங்க, கைய, கால உடைச்சாத்தான் சரியாகும்”

“பத்திரிகைல என்ன வேணுண்ணா எழுதிருவியா நீ! ஒனக்கு வன்னியப் பொண்ணுதான் கேக்குதா, நீ சக்கிலியண்ணா, சக்கிலியப் பொண்ணை போய் கல்யாணம் பண்ணுடா”

என்று சாதிவெறியை போதை போல ஏற்றிக் கொண்டு பேசிக் கொண்டே எகிற ஆரம்பித்தனர். காவல் துறை அதிகாரி அவர்களை கடிந்து கொள்வதைப் போல விலக்கி விட ஆரம்பித்தார். “டேய் விடுறா, டேய் விடுறா” என்று உதார் விட்டுக் கொண்டே அழிச்சாட்டியம் பண்ண ஆரம்பித்தனர் ரவுடிகள்.

தோழர்கள், உறுதியாக நின்று கொண்டு, பாமக சாதிவெறியர்களுக்கு உரிய மறுமொழி கொடுத்தனர்.

ரோந்து வண்டியில் ஏறி தாம்பரம் காவல் நிலையத்துக்கு வந்து சேர்ந்ததும் உதவி ஆய்வாளர்கள் அறைக்குள் தோழர்களை அமரவைத்தார்கள். பாட்டாளி மக்கள் கட்சி குண்டர்கள் இதற்குள் வெளியில் ஒரு கும்பலை சேர்க்க ஆரம்பித்திருந்தார்கள்.

4-5 கார்களில் வந்து இறங்கிய வட்டம், மாவட்டங்களுடன் உதிரிகளாக காலையில் அடித்த டாஸ்மாக் மயக்கம் தெளிந்து எழுந்தது போலத் தெரிந்த 20-30 பேர் சேர்ந்து கொண்டிருந்தனர்.

கும்பலின் துணையோடும் பிற கொடுக்கல் வாங்கல் உறவுகளின் மூலம் ஏற்படுத்திக் கொண்டிருந்த பிணைப்போடு, பாட்டாளி மக்கள் கட்சி வக்கீல் ஒருவர் காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவருடன் உட்கார்ந்து புகார் ஒன்றை எழுதினார். புகாரில், தோழர்கள் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஆபாசமாக திட்டியதாகவும் பொய் புளுகுகளை அவிழ்த்து விட்டிருந்தனர்.

இதற்குள் தோழர்கள் மூலமாக தகவல் தெரிந்த மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்பான பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் காவல் நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஊடகங்களுக்கும் தகவல் சொல்லப்பட்டது.

வெளியில் கூடியிருந்த பாமக ரவுடி கும்பல், “எங்கள் அய்யாவை இழிவு படுத்தியவர்களை கைது செய்” என்று முழக்கம் போட ஆரம்பித்தது. காவல் அதிகாரிகளோ, தோழர்களை வெளியில் விடாமல் என்ன செய்வது என்று திணறிக் கொண்டிருந்தார்கள்.

காவல் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு அவர்கள் மாமியார் வீடு போல உள்ளே வந்து போய்க் கொண்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சி குண்டர்கள் சிலர், தோழர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அறைக்குள் எட்டிப் பார்த்து, ஏதோ நோட்டம் விடுவதைப் போல ஒவ்வொருவரையும் முறைத்துப் பார்த்துக் கொண்டு போனார்கள்.

ஒருவர்,

“நீங்க என்னிக்காவது நல்லா படிச்சு, வேலைக்குப் போங்கன்னு பத்திரிகைல எழுதியிருக்கீங்களா. அப்படி எழுதியிருந்தா எனக்கு அத்தாட்சி கொடுங்க, காதல் கேக்குதா, காதல், அம்பானி மகளை கல்யாணம் செஞ்சு ஒரே நாள்ள அம்பானி ஆகப் பாக்குறானுங்க”

என்று திட்டி  விட்டுப் போனார்.

இதற்குள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் விடுதலைச் செழியன் சொன்ன தகவலின் படி அக்கட்சியின் நகரச் செயலாளர் வந்து தோழர்களிடம் பேசினார். அவருக்கு நன்றி தெரிவித்த தோழர்கள் ‘இந்தப் பிரச்சினையை தாங்களே தீர்த்துக் கொள்வதாக கூறினர். அப்போதுதான் பா.ம.க ரவுடிகளுக்கு ஒரு பாடமாக இருக்கு’மென்று கூறினர். விடுதலைச் சிறுத்தைகள் தோழர்களுக்கு ஆதரவாக வந்ததைப் பார்த்த பா.ம.க ரவுடிகள் உடனே அவர்களிடம் “நாமெல்லாம் ஒரே ஏரியா, ஒரே முகம் பார்த்து பழகுறோம், நீங்கள் ஏன் கலை இலக்கியத்துக்கு (மகஇக) ஆதரவாக போறிங்க” என்று புலம்பினார்கள்.

சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு காவல் நிலையத்துக்கு வந்த ஆய்வாளர் தோழர்களை அழைத்துப் பேசினார். பேசுவதற்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று சொல்லி தோழர்களின் செல்பேசிகளை வாங்கி வைத்துக் கொண்டார். புதிய கலாச்சாரம் இதழின் பின் அட்டையில் வெளியாகியிருந்த கவிதையைப் படித்துப் பார்த்தார்.

“சைவப் பிள்ளையும், புதிர வண்ணாரும்
இணையேற்றால்
ஒன்றும் கீரிப்பிள்ளை பிறப்பதில்லை!
ஒழுங்கான மனிதமுகம் மலருமங்கே!”

“வன்னியப் பெண்ணும், பறையரும்
வாழ்க்கைத் துணையானால்
காடுவெட்டி குருவுக்கு வேண்டுமானால்
மூலம் தள்ளிப் போகலாம்
ராமதாசு வேண்டுமானால்
நாக்கு வெந்து காயலாம்
நாடு ஒன்று மூழ்கிடாது
சாதி ஒழியும்படி சமத்துவமாய் காதலி!”

என்ற வரிகளைப் படித்துக் காண்பித்து, “இப்படி ஒரு கட்சித் தலைவரைக் குறிப்பிட்டு தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதலாமா” என்று நியாயம் பேசினார்.

“இது தனிப்பட்ட முறை தாக்குதல் இல்லை சார், அவர் பொதுவில்   பேசிய அராஜக பேச்சுகளுக்கும், நடத்தைக்கும் பதில் சொல்லும்படியாக எழுதப்பட்ட கவிதை. நாங்க இந்தப் பத்திரிகையில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றுடனும் உடன்படுகிறோம். மக்களிடையே சாதி வெறியைத் தூண்டி விடக் கூடிய பாட்டாளி மக்கள்  கட்சி போன்ற கும்பல்களைப் பற்றி தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம்” என்று தோழர்கள் பதில் சொன்னார்கள்.

“நீங்க, காவல் துறை அனுமதி இல்லாம எப்படி பத்திரிகை விற்கலாம்” சட்டம் பேச ஆரம்பித்தார்.

“இப்படி புத்தக விற்பனை கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் செய்கிறோம். அப்படி விற்கக் கூடாது என்பதற்கு எந்த சட்ட விதிகளும் இல்லை. விற்பது, பிரச்சாரம் செய்வது அடிப்படை உரிமை என்றும், ஒருவேளை இது போன்ற ரவுடிகள் பிரச்சினை வந்தால் மக்களின் ஆதரவுடன் அதைத் தீர்த்துக் கொள்கிறோம்” என்று தோழர்கள் விளக்கினார்கள்.

“இதுவரை பிரச்சனை வரவில்லை, இப்போ இவங்க பிரச்சனை செய்றாங்க, எதுனா சட்ட ஒழுங்கு குலைவு ஏற்பட்டா, யாரு பதில் சொல்வாங்க” என்று சொல்லும் போதே அவர் உயர் அதிகாரியிடமிருந்து தொலைபேசி வர,

“ஆமா சார், அதுதான் விசாரிச்சிக்கிட்டு இருக்கேன். இவங்க ராமதாஸ், காடுவெட்டி குரு பத்தி கவிதை எழுதியிருக்காங்க” என்றபடி பத்திரிகையை புரட்டிப் பார்த்து விட்டு,  ‘பா.ம.க., ராமதாஸ், காடுவெட்டி குரு எல்லாம் காட்டுமிராண்டிங்க! – கள ஆய்வில் வன்னிய மக்கள் கருத்து’ என்று இவங்க சர்வே நடத்தின மாதிரி போட்டிருக்காங்க.”

“அதில ‘வன்னியர் சாதியைச் சேர்ந்த வயதானவர் ஒருவர், நானே வன்னியர்தான் சார். நான் சொல்றேன். இந்த நாயிங்களை நடு ரோட்டு ஓட விட்டு சுட்டுக் கொல்லணும் சார் என்று கோபத்துடன் தன்னுடைய சொந்த சாதி வெறியர்களைச் சாடினார்’னும் எழுதியிருக்காங்க சார். விசாரிச்சிட்டு சொல்றேன் சார்”

என்று தொலைபேசியை வைத்தார்.

‘நீங்க அனுமதி வாங்காம இப்படி பொது இடத்தில பத்திரிகை இஷ்யூ பண்ணக் கூடாது’ என்று திரும்பவும் சொல்லி விட்டு, “எத்தனை பத்திரிகை வித்தீங்க” என்று பத்திரிகை விற்ற பணத்தையும் வாங்கிக் கொண்டார். செல்பேசிகளை திருப்பித் தராமல் வெளியில் போய் காத்திருக்கச் சொன்னார்.

காவல் துறை இப்படி ரவுடிக் கும்பலுடன் ஒத்துழைத்து அவர்கள் ஆட்சியை அனுமதித்துக் கொண்டிருந்த நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வந்தார்கள். மேலும் மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பெண்களையும் உள்ளிட்டு தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூடி விட்டார்கள்.

காவல் நிலையத்துக்கு வெளியில் பாட்டாளி மக்கள் கட்சி கும்பல் கோஷம் போட்டுக் கொண்டிருந்தது. தோழர்கள் எண்ணிக்கை வர வர ஷத்திரியர்கள் படை கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கி ஓட ஆரம்பித்திருந்தது. ஆரம்பத்தில் ஐம்பது பேர் என்றால் தோழர்கள் வந்த பிறகு பத்து பேராக சிறுத்துப் போனது. உள்ளே தடுக்கப்பட்டிருந்த தோழர்கள், மதிய உணவுக்கு போக வேண்டும் என்று சொன்னதும், காவலர்களே வெளியிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் உடன் வர அனைவரும் ஆய்வாளர் அறைக்குள் போனார்கள்.  அங்கு வந்திருந்த காவல் துறை உதவி ஆணையர்

“அவங்க புகார் கொடுத்திருக்காங்க, இவங்க கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதனால மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் சொல்லியிருக்காங்க. அதுக்கு சிஎஸ்ஆர் போட்டுக் கொடுத்திருக்கோம். நீங்க ஏன் இப்படி எல்லாம் எழுதி பொது இடத்தில குழப்பம் ஏற்படுத்துறீங்க” என்று தோழர்கள் மீதே குற்றப் பத்திரிகை வாசிக்க ஆரம்பித்தார்.

வழக்கறிஞர்களும் தோழர்களும் உறுதியாக அதை மறுத்தனர்.

‘புதிய கலாச்சாரம் பத்திரிகை சமூக பிரச்சனைகளை உறுதியாக நேர்மையாக யாருக்கும் பயப்படாமல் விமரிசித்து முன் வைக்கும் பத்திரிகை. 30 ஆண்டுகளாக இப்படித்தான் வெளியாகிறது. தமிழ் நாடு எங்கும் பொது இடங்களிலும் பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்கிறார்கள். ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம் நடத்துவதற்குத்தான் போலீஸ் அனுமதி தேவை. இது போன்று பத்திரிகை விற்பதற்கு எந்த முன் அனுமதியும் தேவையில்லை’ என்றார்கள்.

உதவி ஆணையரோ, “அப்படின்னா, நீங்க விற்கும் போது அவங்க வந்து அடிக்கத்தான் செய்வாங்க, அப்போ பொறுப்பு எங்களுக்குத்தானே” என்று மடக்கப் பார்த்தார்.

“நீங்க ஒரு அதிகாரியா இருந்துட்டு இப்படிச் சொல்லக் கூடாது. பொது இடத்துல ரவுடித் தனத்தை கட்டுப்படுத்தத்தான் நீங்க இருக்கீங்க. நீங்க பாட்டாளி மக்கள் கட்சி குண்டர்களின் அவதூறு புகாரை வாங்கிக் கொண்டு தோழர்களை காலையிலிருந்து காவல் நிலையத்தில் காத்திருக்க வச்சிருக்கீங்க. அந்த குண்டர்கள் தோழர்களை அசிங்கமாகத் திட்டியதோடு இல்லாமல் கும்பலைச் சேர்த்துக்கிட்டு மிரட்டியிருக்காங்க. அதற்கான புகாரையும் வாங்கிக் கிட்டு அத்தாட்சி கொடுங்க.” என்று வாதாடினார்கள்.

இதற்கிடையில் ஒரு உதவி ஆய்வாளர் வந்து, “ஏன் சார், இதப் பெருசு படுத்துறீங்க! பேசாம ‘இப்படி பிரச்சனை வந்துட்டுது, எங்கள மன்னிச்சுக்குங்க, இனிமே இப்படி நடந்துக்க மாட்டோம்’னு எழுதிக் கொடுத்திட்டு போங்க. நீங்களும் நீளமா ஒரு புகார் எழுதணுமா” என்று ‘நட்பு’டன் அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.

“எந்தத் தப்பும் செய்யாத  நாங்க ஏன் மன்னிப்புக் கேட்கணும். அராஜகம் செய்த ரவுடிங்க மேலதான் புகார் பதிவாகணும். நாங்க சமூகத்துக்காக நியாயமான கருத்துக்கள பிரச்சாரம் செய்றோம். ரவுடிங்க புகாரை நீங்க வாங்கியிருக்கும் போது நாங்களும் புகார் கொடுக்கிறோம், வாங்கிக்கிட்டு அத்தாட்சி கொடுங்க” என்று சொல்லி தோழர்கள் நடந்த சம்பவங்களை எழுதி புகார் கடிதம் கொடுத்தார்கள்.

பின்னர் போலீசு தோழர்களின் செல்பேசி, மற்றும் பத்திரிகை விற்பனைப் பணம் ஆகியவற்றை முறையாக ஒப்படைத்தது.

இறுதியில் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சுமார் 4.30 மணியளவில்  தோழர்கள் வெளியில் வந்தனர்.  தோழர்கள் வெளியே வந்தால் அடித்து நொறுக்குவதாக சபதம் போட்டு இனோவாவிலும், ஸ்கார்ப்பியோவிலும் வந்து குதித்த ஷத்திரிய குல வீரர்களில் ஒருவனைக் கூட காணவில்லை. கடைசியில் பா.ம.க குண்டர் படை, தோழர்களின் அணிதிரட்டலுக்கு பயந்து சொல்லாமல் கொள்ளாமல் அஞ்சி ஓடிக் கொண்டது.

‘வன்னிய மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை இழந்து, சாதி வெறியையும் கலவரங்களையும் தூண்டி விட்டு கட்சியை நிலை நிறுத்திக் கொள்ளப் பார்க்கும் ஓட்டுப் பொறுக்கி ராமதாசையும், அந்தக் கட்சியை அண்டிப் பிழைக்கும் ரவுடிக் கும்பல்களையும் எதிர்த்து உழைக்கும் மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்’ என்ற உறுதியோடு தோழர்கள் கலைந்தார்கள்.

___________________________
ஓவியம்  – நன்மாறன்
___________________________

 1. Trying to grab others money in the name of love marriage is not the solution for development of certain community or way to eradicate the communal feeling. This will increase the problem only.
  Instead of misguiding the young generating to make love with other community girls, ask them to achieve good status through hard work and high education.

  • திரு.வேல் அவர்களுக்கு தற்போது பெண்கள் யாரும் கண்ணைக் கட்டிக்கொண்டு காதலிப்பது இல்லை. காதலிப்பதற்கு முன்பே பையன் பெரிய இடத்துப் பையனா? இல்லையெனில் நன்றாகப் படிக்கக் கூடியவனா? அல்லது யேதாவது தொழில் செய்து பொருள் ஈட்டக்கூடியவனா? என்று ஆராய்ந்து பார்த்துத்தான் பையனைத் தேர்ந்தெடுக்கின்றனர். உயர்சாதிப் பெண்கள் (பிராமணப் பெண்கள் உட்பட) தங்களைவிட பொருளாதாரத்தில் உயர்ந்த, உயர் பதவியில் இருக்கின்ற, நன்றாகப் படிக்கக்கூடிய தலித் இளைகர்களைக் காதலிக்கவும் மணக்கவும் தயங்குவதில்லை. இதனால் அவர்கள் இரண்டு விதங்களில் நன்மை அடைகின்றனர். ஒன்று பொருளாதார வளத்துடன் நல்ல வாழ்க்கை மற்றொன்று தங்கள் சாதியில் திருமண்ம் செய்தால் கொடுக்கப்பட வேண்டிய பெரிய அளவிலான வரதட்சினை. ________________ தன் இனப் பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நல்ல வாழ்க்கையை வெள்ளை தோலுக்கு மயங்கி தம்மை இழிவு படுத்தும் உயர் சாதியைச் சேர்ந்த பெண்களை மணக்க தயங்குவது இல்லை.

 2. “தாம்பரத்தில் வன்னிய சாதிவெறி என்ற பதிவு ரெடியா?” என்று நேற்றே கேட்டேன். இன்று வெளிவந்துவிட்டது. நன்றி.

  நியாயமாகப் பார்த்தால் உங்களை பிடித்து வைத்திருந்த காவல்துறைக்கு எதிராகத்தான் நீங்கள் போராட வேண்டும். ஏதோ, காலத்தின் கட்டாயத்தால் பாமகவை எதிர்த்து எழுதியுள்ளீர்கள்.

  மருத்துவர் அய்யா “வன்னிய மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை இழந்துவிட்ட” பின்னாலும் நீங்கள் அவருக்காக தொடர்ந்து மல்லு கட்டுவதற்கு மிக்க நன்றி. விட்டு விடாதீர்கள்.

  • அருள் அடிப்பொடி அவர்களே,

   செல்வாக்கை இழந்தாலும், கூட்டி வைத்திருக்கும் காக்கா கூட்டங்கள வச்சு கலகத்தை உண்டாக்கும் தெறமைய மருத்துவர் அய்யா நெறைய வச்சிருக்கத்தானே செய்றார். மதுரை, இராமநாதபுரம் இப்போ கடலூர்னு ஒவ்வொரு மாவட்டமா தடை வாங்கி கிட்டு இருக்கார்னா ஏதோ பவர் இருக்கத்தான் செய்யுதுன்னு தோணுது. டெரராத்தான் இருக்கு!

   • அருளண்ணே வலிக்காத மாதிரி சீன் போடுராறு……. போடட்டும்…

 3. ஒரு மதத்தை பின்பற்றிய மனிதனை சில 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வேறொரு மதத்திற்கு மாற்றிய புரட்சியால் இன்றும் இந்த நாட்டில் மதம் ஒழிந்து விட வில்லை.. மாறாக அவர்களின் சந்ததியினர் புதிய மதத்தை பின்பற்றியே வருகிறார்கள்..

  சாதி மறுப்பு திருமணத்தால் ஒரு சாதியை சேர்ந்த ஆணிற்கோ அல்லது பெண்ணிற்கோ பிறந்த குழந்தையை வேறொரு சாதிக்கு மாற்றுவதால் மட்டும் சாதி ஒழிந்து விடும் என்பது வேடிக்கையாக உள்ளது. அந்த சாதி மறுப்பு தம்பதிகளுக்கு பிறந்த குழந்தையின் சந்ததி மீண்டும் ஒரு சாதியை பின்பற்ற போகிறது அவ்வளவுதான்.

  சாதி மறுப்பு திருமணம் செய்த முற்போக்குவாதிகளே “சாதி இல்லை” என்று சான்றிதழ் வாங்க தன சுயசாதியை துறக்க விரும்பவில்லை எனில் இந்நாட்டில் எவ்வாறு சாதி ஒழியும்?

  சாதி மாற்ற திருமணத்தை ஆதரிக்கும் முற்போக்காளர்கள் என்று நிரூபிக்க துடிக்கும் தலைவர்களே, நடுநிலையாளர்களே யோசிக்கவும்..

 4. வன்னிய சாதிவெறியை எதிர்த்து நின்ற தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

 5. குப்புற விழுந்தாலும் மாமனுக்கு மீசையில் மண் ஓட்ட வில்லை என்பதற்கு ம க இ க தான் இப்போது உதாரணம்.வாய் கிழிய புரட்சி பேசறீங்க, ஊர்ல இருக்க எல்லாறையும் எதிக்கிறீங்க, உங்கள தவிர எவனும் யோகியன் இல்லனும் சொல்றீங்க, நீங்க மட்டும் என்ன மயிரையா புடுகிக்கிட்டு இருக்கீங்க?

 6. அடிக்க வந்த ஆட்கள் வன்முறையைக் கைவிட்டு அமைதியாக திரும்பியதால் வினவிற்கு வருத்தம் என்று எண்ணுகிறேன்.. அடித்திருந்தால் வன்னிய சாதிவெறி என்று பேருந்திற்கு பேருந்து கூவி இன்னும் ரெண்டு புத்தகத்தை விற்றிருக்கலாம். என்ன செய்வது திட்டம் பலிக்கவில்லை..

  எவனாவது அடித்தால் வன்முறை என்கிறீர்கள்.. வன்முறை வேண்டாம் என்று அவனே காவல்துறையில் புகார் கொடுத்தால் கோழை பயந்துவிட்டான் என்கிறீர்கள்.

 7. //இறுதியில் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சுமார் 4.30 மணியளவில் தோழர்கள் வெளியில் வந்தனர். தோழர்கள் வெளியே வந்தால் அடித்து நொறுக்குவதாக சபதம் போட்டு இனோவாவிலும், ஸ்கார்ப்பியோவிலும் வந்து குதித்த ஷத்திரிய குல வீரர்களில் ஒருவனைக் கூட காணவில்லை. கடைசியில் பா.ம.க குண்டர் படை, தோழர்களின் அணிதிரட்டலுக்கு பயந்து சொல்லாமல் கொள்ளாமல் அஞ்சி ஓடிக் கொண்டது.//

  நீங்கள் நீயாம கேட்க்க கூட்டாக வந்தால் தோழர்கள்!? பாதிக்கப்பட்ட நாங்கள் கூட்டாக வந்தால் குண்டர்கள் படை என்று எழுதுவதா? இதுதான் உங்களது பேனாவின் நடுநிலை எழுத்தோ அல்லது உஙக்ளது வேகாத அறிவுகளின் நடுநிலையோ?!

  நீங்கள்தான் சமூகத்தை காக்க அவதாரமெடுத்திருக்கும் கிருஷ்ணபரமாத்மா என்று எண்ணிக்கொண்டு திரியாதீர்கள்?!

   • பொம்பள பொறுக்கி மட்டும் இல்ல. தன்னையே கடவுள்னு சொல்லிக்கொண்ட உலக மகா புளுகு மூட்டை. இதுக்கு இயேசு பரவாயில்லை. தன்னை கடவுளோட மகன்னு மட்டும் தான் சொன்னாரு.

     • @HisFeet அண்ணா, புராணக் குப்பை கதை எல்லாம் படிச்சிருக்கேள். உமக்கு கிருஷ்ணபரமாத்மா பொம்மனாட்டி பின்னாடி சுத்தின கதை எல்லாம் தெரியறது. ரொம்ப சந்தோஷம். வேறொரு புராண புருடா கதை சொல்றேன். கேட்கறேளா? சும்மா, ஒரு சுவாரஸ்யத்துக்குத்தான். ஜஸ்ட் டைம் பாஸ். அதே மகாபாரத காலத்துல ஒரு ராணி புள்ளை உண்டானா. அவ பிரசவிக்கும்போது பாத்தா குழந்தைக்கு பதிலா ஒரு கரிக்கட்டை பொறந்துடுத்து. As usual, அங்க ஒரு முனிவர் வந்தார். “மனத்தால் ஒரு பெண்ணையும் தீண்டாத ஒரு சுத்த பிரம்மச்சாரி இந்த கரிக்கட்டையை தொட்டால் அது குழந்தையாக மாறும்” அப்பிடின்னு சொன்னார். எல்லாரும், இது சிம்பிள் மேட்டராச்சேன்னு நேர உலக மகா பிரம்மச்சாரி நாரதர் கிட்ட போயி நின்னா. அவர் “எங்க நாம தொட்டு இது குழந்தையா மாறலேன்னா நம்ம பேரு ரிப்பேர் ஆயிடுமேன்னு” பயந்து ஏதோ சாக்கு போக்கு சொல்லி ஜகா வாங்கிட்டார். வேறே என்ன பண்றதுன்னு எல்லாரும் முழிச்சிண்டு நின்னப்போ அங்கே ஒருத்தர் கூலா வந்து கரிக்கட்டைய தொட்டார். அது குழந்தையா மாறிடுத்து. அவர் யார்னு நினைக்கறேள்? சாக்ஷாத் நம்ம பொம்பள பொருக்கி கிருஷ்ணபரமாத்மாவேதான்!

      இந்தக் கதையோட நீதி என்ன? முற்போக்குவாதிகள்கிட்ட கேட்டா அவா, “அந்த முனிவர் பொய் சொன்னார்” அப்பிடின்னு காமடி பண்ணுவா. வேற ஒரு பதிலும் சொல்லலாம்: “மனத்தூய்மை”.

      பி.கு: கதையின் கரு மட்டுமே மனதில் பதிந்து விட்டது. மற்ற விவரங்கள் நினைவில் இல்லை. அந்தக் குழந்தை தான் பாண்டவர் வழி வந்த பரிக்ஷித் என நினைக்கிறேன்.

 8. அது சரி…பா.ம.க வை குற்றம் சொல்ல மகஇக விற்கு தகுதி இருக்கிறதா…ஒரு கவிஞன் கவிதை எழுதினான் என்று அவன் வீட்டுக்கு கும்பலாக (அது தோழர்கள் என்று கதை விடாதீர்கள்…அதையும் குண்டர்கள் என்றே சொல்லலாமே) போய் மிரட்டி எழுதி வாங்கிய கூட்டம் தானே…அது என்ன ஐயா…நீங்க பண்ணினா புரட்சி மத்ததெல்லாம் ரவுடித்தனம்.தைரியம் இருந்தால் இந்த கமெண்ட்டை டெலீட் பண்ணாமே பிரசுரிக்கவும்.அப்படியே இந்த புரட்சி எப்ப வருமுன்னு கரெக்டா தேதி சொல்லவும்.ஒரு தோராயமாவது சொல்லவும்…

  • சரியாக சொன்னிங்க நண்பரே. கூட்டம் சேத்து வினவு பண்ணினா புரட்சி. மத்தவங்க பண்ணினா அடிதடி.

   • நீங்கெல்லாம் இன்னும் வயித்தெறிச்சலோடதான் திரியிறீங்க….அதுசரி நேராவே ” அந்த ஒரு கவிங்கர் எழுதிய கவிதைப்பற்றி” பிரச்சாரம் செய்யலாமே……இல்லை அந்த மிஸ்டரிடம் சொல்லி கைநாட்டு வைக்கமாட்டேனு ரைட்டா சொல்லலாமே…..

 9. மதுரை மாவட்டத்திலும் கடலூர் மாவட்டத்திலும் நுழைவதற்கு மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை வினவு வரவேற்காதது ஏன்?

 10. ___________ God please dont insult females like ask them marry a dalit guy. High caste Females are more orthodox then you think. May be that girl divya has chosen a wrong path, we wont follow her. We will marry a groom equivalent to our castes. May be those guys can try some other girls in their own caste.

 11. even a pig and donkey has red colour blood that does not mean that man and pig is same right?.
  Each caste has the own unique identity.Dont try to destroy it. you guys are meant to clean the toilet. Please do that job.while doing the job please keep in mind that , work is god. 🙂

  • பாவம் வினோத்து நீ உங்க சமூக பெண்கள் வெறும் ஜீன்ஸ், கூலர்ஸ் மற்றும் டிஷர்ட்டை பார்த்து மயங்குவதை உங்கள் தலைவரே ஒத்துக்குறார் ,நீ என்னடான்னா பொம்பள புள்ள பேர்ல வந்து நாங்கல்லாம் ஈக்வல் சாதியில்தான் கல்யாணம் பண்ணுவோம் என்கிறாய்.இத கொஞ்சம் பாருப்பா http://www.youtube.com/watch?v=D8ikuA3To5k

  • @ வீனோத் – அப்படி என்றால் தலித்தை மணந்த உயர்சாதிப் பெண்களை எவ்வாறு அழைப்பீர்கள்? விலைமாதர்களும், பிச்சைககாரர்களும் இல்லாத சாதி தமிழ்நாட்டில் உண்டு என்று உங்கள் சாதியைச் சொல்ல முடியுமா? ஆதலால் உங்களுக்கு பின்னால் ஒட்டியுள்ள அசிங்கத்தை முதலில் துடையுங்கள். ஒருவேலை அந்த அசிங்கத்தைத் துடைத்தால் உங்கள் சாதி அடையாளம் மறைந்துவிடும் என்று அச்சமா?

  • தன் சாதிப் பெருமை காக்க தன் ஆண்மை அறிவு மானம் என அனைத்தையும் இழந்து நிற்கும் வினோத் மற்றும் இது போன்றே எழுதத் துடித்தும் எழுத முடியாமல் வாழும் பல வினோத்களே! நீ இப்போது (நீதான் என்பது அம்பலமான பின் எழுதியதுதான் உண்மை, உன்னைப் போன்ற பலரின் மனசாட்சி, சாதி பதை. உங்கள் சாதிப் பெண்களை மற்ற சாதியினர் திருமணம் செய்து மதிப்புடனும் மரியாதையுடனும் பார்த்துக்கொள்கிறார்கள். உங்கள் குச்சி கொளுத்தியும் உன்னைப் போன்ற போரம்போக்குகளும்தான் உண்மையில் அவர்களை பேன்ட்டுக்கும் கண்ணாடிக்கும் மயங்கும், யார் வந்து சைட் அடித்தாலும் ஓடிப்போகும் இழி இரவிகளாக கேவலப் படுத்தி வருகிறீர்கள்.
   தமிழகத்தில் கடந்த இரு மாதங்களாக நிலவி வரும் சாதியச் சூழலில் பாலியல், பெண் உடல் மற்றும் பெண்ணின் காதல், வாழ்க்கைத்துணை சார்ந்த சொல்லாடல்கள் தொடர்ந்து பலராலும் தத்தம் நிலைகளில் இருந்து வைக்கப்பட்டு வரும் நிலையி, பெண்ணியவாதிகள் என்று தங்களைச் சொல்லிக்கொண்டு எழுதிவருபவர்கள் மிகச் சாதுரியமாக மௌனம் சாதிப்பதோவர்கள் எந்த அளவுக்கு ‘பெறும் முற்போக்கு’ வாதிகள் என்பதைக் காட்டுகிறது.

  • அண்ணன் வினோத் அறிவது எங்களுக்கு வயலில் இறங்கி நாற்று நடுவது களைஎடுப்பது அறுவடை செய்வது மற்றும் நீங்கள் சொன்ன கழிவறை சுத்தம் செய்தல் என்று உழைத்து மட்டுமே சம்பாதிக்க முடியும்.ஆனால் எல்லா ஊர்களிலும் வழிப்பறி, ஆள்கடத்தல், கூலிக்கு கொலைசெய்தல்,கள்ளசாராயம் காய்ச்சுதல் திருட்டு மற்றும் பெண்களை வைத்து விபசாரம் செய்தல் போன்ற தொழில்களை எந்த சமூகத்தினர் செய்கின்றனர் என்று போலிஸ் ரெக்கார்டே தெளிவாய் கூறும்.இனி இங்கு வந்து சாதி பெருமை பேசாதே.எங்களுக்கு எங்கே எதை விதைப்பது என்றும், எந்த களைகளை கொத்தவேண்டும் எப்போது அறுக்க வேண்டும் என்றும் தெரியும்.

  • இந்த வினோத்து ஒரு ஸாடிஸ்ட் வகையறான்னு நான் ஏற்கனவே சொல்லிப்புட்டேன். நீங்க கோவமா பதில் சொல்லச் சொல்ல அந்த ஆளுக்கு குஷியா இருக்கும்.

  • என்ன சொல்ல வருகிறீர்கள் மிஸ்டர் அல்லது மிஸ் Hema Vinoth . பன்றி, கழுதை எல்லாம் உங்களை விட மன்னிக்கவும் மனிதர்களை விட ஏதோ ஒரு வகையில் உபயோகப்படும் ஜீவன்கள். அவற்றைப் போய் ஏன் உங்களோடு மன்னிக்கவும் மனிதர்களோடு ஒப்பிடுகிறீர்கள். நீங்கள் சொல்லும் சாதியெல்லாம் பன்றி உண்ணும் மலத்தை விட கேவலமானது. ஆகையால் உபயோகப்படும் ஜீவன்களை வம்புக்கிழுக்காதீர்கள்.

  • ஐயோ ஆண்டவா….. என்னால சிரிப்பா அடக்கவே முடியல இந்த க்ஷத்ரியகுல டவுசர் பண்டிகளோட வீரத்த நெனச்சா…. He is hiding behind other’s identity. That was a very cheap stunt Mr. vinoth.

 12. சாதி மறுப்பு திருமணத்தால் ஒரு சாதியை சேர்ந்த ஆணிற்கோ அல்லது பெண்ணிற்கோ பிறந்த குழந்தையை வேறொரு சாதிக்கு மாற்றுவதால் மட்டும் சாதி ஒழிந்து விடும் என்பது வேடிக்கையாக உள்ளது. அந்த சாதி மறுப்பு தம்பதிகளுக்கு பிறந்த குழந்தையின் சந்ததி மீண்டும் ஒரு சாதியை பின்பற்ற போகிறது அவ்வளவுதான்.

  சாதி மறுப்பு திருமணம் செய்த முற்போக்குவாதிகளே “சாதி இல்லை” என்று சான்றிதழ் வாங்கி தன்னுடைய சுயசாதியை துறக்க விரும்பவில்லை எனில் இந்நாட்டில் எவ்வாறு சாதி ஒழியும்?

  ஜாதி சான்றிதழ் எப்போது ஒரு செல்லா காகிதமகிறதோ அப்போதுதான் ஜாதி ஒழியும் . ஜாதி மூலம் கிடைக்கும் அனைத்து சலுகையும் வேணும் ஆனால் சாதி பேறு வெளிய சொன்ன கசக்குது. சாதி மாற்ற திருமணத்தை ஆதரிக்கும் முற்போக்காளர்கள் என்று நிரூபிக்க துடிக்கும் தலைவர்களே, நடுநிலையாளர்களே யோசிக்கவும். பொழுதினிக்கும் காவலில் வைத்த பொலிஷ்கிட்ட வீராத காட்டாத நீங்கதான் மீசைல மண் ஒட்டாத வீரர்கள்.

 13. தோழர்கள் ஒரு பக்கம், குண்டர்கள், ரவுடிகள் ஒரு பக்கம். பொதுவாக ரவுடிகலை பாத்து தானே மக்கள் பயந்து ஓடுவார்கள். ஆனா நீங்க தொழர்கள பாத்து ரவுடிகள் பயந்து ஓடிட்டாங்க-நு சொல்லறீங்க.

  யாரு தோழர், யாரு குண்டர் ?. நீங்க எதாவது போட்டோ எடுத்து போட்டு இருந்தால் ஆவது குண்டா இருப்பவங்கள குண்டர்-நு அடையாளம் தெரிஞ்சு இருக்கலாம். ஒரே குழப்பமா இருக்கே.

 14. பா.ம.க.காரன்னா ரவுடி ம.க.இ.க.காரன்னா புரட்சிக்காரனா என்று நிரைய பேர் கேக்குறீங்க.ப.ம.க.ன்னா புரட்சி ம.க.இ.க.ன்னா ரவுடின்னு மக்கள்ட்ட சொல்லிப் பாருங்களேன். நேர்மையின் சின்னம் ஐயா ராமதாசு ,பண்பின் உறைவிடம் காடுவெட்டி குரு,கொள்கைக் குன்று கோ.க.மணி,சாதி ஒழிய சமர் புரியும் பி.டி.அரசகுமார்,சிந்தனை சிற்பி முருகன் ஜீ இன்னும் கொங்கு மண்டலக் கோமான்கள். தலித் மக்களை ஒரு லோடு செங்கல்லைக் கொண்டு எறிந்து விரட்டிய சூராதி சூரர்கள் இவர்களெல்லாம் முற்போக்கு சமூகம் படைக்க வந்த முன்னோடிகளாக்கும்?சாதி என்ற கேவலத்தை உணராதவர்கள் புத்தியில் அதன் பெயரால் செய்யப்படும் கயமைகள் அனைத்தும் உணரப்படாமல் போய்விடும்.இது படித்தவர்களிடமும் காணப்படும் அவலம்.

 15. முதலாளித்துவம் ஒரு பேய்க்கதை – அருந்ததி ராய் நூல் விற்பனையில் உள்ளது.
  திரு அருள்,தம்பிமா,தமிழன்,பாண்டியராசு,செல்வன்,வினோத்,மணி,முரளிதீர தொண்டைமான் ஆகியோர் வாங்கிப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 16. @தமிழன்-என்னடா சத்தத்தையே காணும் . அதுதான் கமெண்ட் ஐ டெலிட் பண்ணாம பப்ளிஷ் பண்ணிடாங்கள்ள ?

  @ Mani – டேய் உனக்கு அந்த குண்டர்கள் பரவாயில்லடா . அவங்களாவது கொஞ்ச நேரம் விட்டுட்டு போனாங்க !

 17. @Vinoth- Yes we guys meant to clean the Toilets. What are you guys meant for? Cowardice act like hiding behind some other identity. People who clean don’t pose any danger to the society. but you cowards do

 18. வினவு தன் விருமாண்டிதனத்தை நிறுத்திக் கொள்வது நல்லது .மக்களுக்கு வினவின் வீரதிரங்களையும் தெரியும் பா ம க செயல்களையும் தெரியும் .

 19. “வினவு தன் விருமாண்டிதனத்தை நிறுத்திக் கொள்வது நல்லது .மக்களுக்கு வினவின் வீரதிரங்களையும் தெரியும் பா ம க செயல்களையும் தெரியும் .”

  நன்றாக சொன்னிர்கள்!!!

 20. அடிக்க வந்த ஆட்கள் வன்முறையைக் கைவிட்டு அமைதியாக திரும்பியதால் வினவிற்கு வருத்தம் என்று எண்ணுகிறேன்.. அடித்திருந்தால் வன்னிய சாதிவெறி என்று பேருந்திற்கு பேருந்து கூவி இன்னும் ரெண்டு புத்தகத்தை விற்றிருக்கலாம். என்ன செய்வது திட்டம் பலிக்கவில்லை..

  • ம.க.இ.க தோழர்கள் அன்று பா.ம.க பொறுக்கிகளின் தோலை உரிக்க கூடி நின்ற தகவலை அறிந்ததும் வன்னியர் குல சத்திரியர்கள் ஒவ்வொருவராக தாம்பரம் காவல் நிலையத்திலிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த வீரதீரமான ஒட்டப்பந்தையத்தை பார்த்த சாட்சிகள் பலர் இருப்பினும் அரசு தரப்பு சாட்சியாக தாம்பரம் இன்ஸ்பெக்டரை கேட்டறிந்து கொள்ளலாம்.

 21. அது என்ன ஐயா…நீங்க பண்ணினா புரட்சி மத்ததெல்லாம் ரவுடித்தனம். நல்ல அருமையான வாக்கியம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க