Thursday, August 11, 2022
முகப்பு சமூகம் சாதி – மதம் ராமதாசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ! பா.ம.க ரவுடித்தனம் !! வீடியோ !!!

ராமதாசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ! பா.ம.க ரவுடித்தனம் !! வீடியோ !!!

-

பா.ம.க இராமதாஸ் + பச்சோந்தித்தனம்!! னைத்து சமுதாய பேரியக்கம் என்ற பெயரில் ஆதிக்க சாதி சங்கங்களை கூட்டி சாதி வெறியைத் தூண்டி வரும் பாமக தலைவர் ராமதாசை கண்டித்து போராடுபவர்கள் மீது பாட்டாளி மக்கள் கட்சியினர் போலீஸ் துணையுடன் ரவுடித் தனத்தை அவிழ்த்து விடுகின்றனர்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை (ஜனவரி 27, 2013) சென்னை  தியாகராய நகர் சிவாஜி கணேசன் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அனைத்து சமுதாயத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பு திராவிடர் விடுதலைக் கழக அமைப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் காரர்களும் 50க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி ராமதாசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

கூட்டத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருந்தும்,  மண்டபத்திலிருந்து பா.ம.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் வெளியில் வந்து எதிர் கோஷம் போட்டனர்; கற்களை வீசித் தாக்கினர். வன்முறையில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர், அவர்களது தலைவர் ராமதாஸ் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக ஆர்ப்பாட்டம் செய்த விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்ற வாரம் சனிக் கிழமை (ஜனவரி 19ம் தேதி)  நாமக்கல் நகரில் திருச்சங்கோடு-நாமக்கல் சாலைக்கு அருகில் நடைபெற்ற அனைத்து சமுதாய கூட்டத்துக்கு வெளியே தமிழ் புலிகள் என்ற தலித் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

அப்போது அங்கு வந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை ஆபாசமாக திட்டியபடியே தடிக் கம்புகளுடன் அடிக்க பாய்ந்தனர். கல்வீசி தாக்கினர். பா.ம.க இளைஞரணியின் மாநில செயலாளர் இரா.அருள் தலைமையில் இந்த ரவுடிக் கூட்டம் நடத்திய வன்முறையை தடுக்க முடியாத போலீஸ் அவர்கள் கையில் காலில் விழுந்து சமாதானப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். ராமதாசை எதிர்ப்பவர்கள் ஜனநாயக முறையில்தான் தமது எதிர்ப்பை காண்பிக்கின்றனர். ஆனால் பா.ம.க சாதி வெறியர்களோ எல்லா இடத்திலும் ரவுடிகள் போன்று நடந்து கொள்கின்றனர். எனில் உண்மையில் இவர்கள் தலித் மக்களை எப்படி நடத்துவார்கள் என்பதை விளக்கத் தேவையில்லை.

ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட தலித் அமைப்பினர் 7 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த வீடியோவில் பா.ம.க ரவுடிகள் எப்படி நடக்கின்றனர் என்பதை கண்டு சினமடையுங்கள்!

மேலும் படிக்க

 1. சாதியத்திற்கு எதிராக பேசும் (கருத்து) ராமதாஸ்-ஐ மேற்படி மாவட்டத்திற்குள் நுழைய “தடை”விதிக்க அம்மாவட்ட ஆட்சியர்களிடம் சமூக போராளிகள்!!? கோரிக்கை (இது ஜனநாயகம்)

  இஸ்லாமியர்களின் புனித குரானை கேவளபடுத்தும் (கருத்து) கமல்ஹாசனின் விஸ்வரூபத்தை தமிழகத்தில் “தடை”விதிக்க வேண்டும் என முஸ்லீம்கள் தமிழக அரசிடம் கோரிக்கை (பாசிசம்)

  இது போன்ற உங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைவதற்கு பாசிஸ்ட் ஆக இருப்பது மேல் என தோனுகிறது!!!!!!!!

  • முதல்ல நீங்க அந்தப் படத்த பாக்கனும், அதுக்கப்புறம் எதிர்ப்பு தெரிவிக்கனும், படத்தில் உங்களை மோசமா சித்தரிசுருந்தா படத்த ஒரு முஸ்லீமும் பார்க்கவிடாமதடுக்கனும்…அதவிட்டுப்புட்டு, சென்சார் செய்யப்பட்ட படத்தை உங்க விருப்பத்துக்காக தடை செய்தைருப்பதே சட்ட விரோதம் தான்…

 2. Every political party is free to express their views including PMK but instead of debating the issue both VCK and DK indulging in violence against Dr.Ramadass is barbaric and nerves to give fitting reply.

 3. ஹலோ வினவு ஆசிரியர் அவர்களே ! நீங்கள் மட்டுமே பத்திரிக்கை நடத்தவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். செய்தி கொடுக்க பல ஆயிரம் ஊடகங்கள் இருக்கிறது. நாங்களும் ஒரு ஊடகத்தில் செய்தி பார்த்து அப்படியே நம்ப தயாராக இல்லை. ராமதாஸ் கூட்டம் தொடங்கும் முன்னரே அங்கே கூடியது யாரென்று பாருங்கள். முதலில் நடுநிலையாக செய்தி சேகரிக்க இனம், மதம் கடந்த செய்தியாளர்களை நியமனம் செய்யுங்கள். கல்வீச்சு செய்து போலீஸ் தலைய பதம் பார்த்தது யாரு என்று மற்ற செய்தி ஊடகங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வெறுமனே ராமதாஸ் ராமதாஸ் என்று கூச்சல் போட்டு ஒன்றும் நடக்க போவது இல்லை. நீங்கள் நடுநிலையாளர்கள் என நினைத்துகொண்டு வெட்டியாக ஒரு இனத்தையோ அல்லது தராமதாஸ்யோ மட்டும் தாக்கி எழுதி வினவின் தரத்தை குறைக்க வேண்டாம். வுங்களின் பெரும்பாலான கட்டுரைகள் சிறப்பாக இருந்தாலும் இதுபோல சில காழ்புணர்ச்சி செய்திகள் வரும்போது ஏற்க முடிவதில்லை. இல்லையென்றால் வினவு தலித் பத்திரிக்கை என அனைவரும் முத்திரை இட வேண்டிவரும். நீங்கள் என்னுடைய பின்னூட்டத்தை பிரசுரிக்க போவது இல்லை. நீங்கள் வுணர்ந்து கொண்டால் சரி.

 4. தன்வினை தன்னைச்சுடும்

  அதே தருமபுரி மாவட்டம்
  .ராஜசேகர் .வன்னிய இளைஞன்.
  ஜீவிதா.கொங்கு வெள்ளாளர். ராமதாஸ் மொழியில் வன்னிய இளைஞன் பணம் பறிக்க கண்ணாடி போட்டுவெள்ளாளப் பெண்ணை மயக்கி நாடகக் காதல் புரிந்தான். பெண்வீட்டார்.கடத்தி ஏமாற்றியதாக வழக்கு தொடுத்தனர்.பெண் நீதிமன்றத்தில் “கடத்தவில்லை.நாங்கள்திருமணம் விரும்பிசெய்துகொள்கிறோம் ” என்று சொல்லி அவ்வாறே நடந்தது. மூன்று மாத கர்ப்பம். அம்மா சமாதானமாக பிரசவம் வரை வீட்டில் வைத்து பார்த்துக்கொள்கிறேன் வா என்று அழைத்துச்சென்றார். கொஞ்ச நாள் கழித்து ,பெண்ணை கடத்திச்சென்று வேறு இடத்தில் வைத்துகர்ப்பத்தை கலைத்து விட்டார்.கணவன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளான். விஷத்தை பரப்பினால் விஷம்தான் விளையும்.ராம்தாஸ் அவர்களே கைவிடுக.கலவரம் தூண்டி வன்னிய இளைஞர்களை சிறைக்கும் ,நீதிமன்றத்துக்கும் அனுப்பாதீர்கள்.உங்கள் அன்பு மகனை மந்திரியாக்க வேறு வழி யோசியுங்கள்

 5. என்னது வினவு? இப்படியெல்லாம் ஒரு பத்திரிக்கை உண்டா? ஒரு பத்த்ரிக்கை பிரபலம் ஆகவேண்டுமெனில் செய்திகளை நடுநிலையாக எழுதவேண்டும். இல்லையெனில் இருக்கும் இடம் தெரியாமல்தான் இருக்கும். தினமணியை பார்த்து அதன் நடுநிலையை தெரிந்துகொள். நீங்கள் எழுதும் வாசகமே வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. இந்த பத்த்ரிகை மேலேயே புகார் கொடுக்கும் நிலைக்கு தள்ளாதீர்.

  • எந்த ஒரு பத்திரிகய படிசலும் ஒலுங்க படிகனும் உன்னமாதுரி விபரம் இல்லாதவன் இப்படி தான் பெசுவன் …..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க