இன்றைய ஊடகங்களில் இளவரசன் மரணம் குறித்து இரண்டு செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஒன்று அவரது பிரேத பரிசோதனை அறிக்கை. அதன்படி இளவரசன் தலையில் அடிபட்டு இறந்தார், அப்படி தலையில் அடிபடுவதற்கு ரயிலில் மோதியதே என்பதாகவும், இரண்டாவதாக இதை வைத்து போலீசார் இந்த மரணத்தை தற்கொலை என வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அரசு மற்றும் போலீசு தரப்பிலும் இப்படித்தான் முடிவெடுத்திருக்கிறார்கள் என்பதால் இவை வெறுமனே செய்தி மட்டுமல்ல.
ஆனால், நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு தாக்கல் செய்த வழக்கில் இடைக்காலமாக உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், இளவரசன் தரப்பினருக்கு பிரேதப் பரிசோதனை அறிக்கை தரப்படவேண்டும், அந்த அறிக்கை அவர்களுக்கு திருப்தியாக இல்லையெனும் பட்சத்தில் மீண்டும் பரிசோதனை நடத்துவதற்கு ஏதுவாக உடலை பாதுகாக்க வேண்டும், மேற்கொண்டு இந்த வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை நடக்குமெனவும் கூறியிருக்கிறார்கள்.
இதன்படி பிரேதப் பரிசோதனை அறிக்கை இளவரசன் தரப்பினருக்கு அளிக்கப்பட்டு அவர்கள் அதை ஏற்கவில்லை. மறு பரிசோதனை நடத்த வேண்டும், அந்த பரிசோதனையில் தங்களுக்கு தெரிந்த மருத்தவர்கள், தடவியல் நிபுணர்கள் பங்கேற்க வேண்டும் என்று இளவரசனது தந்தை உறுதியாக போராடி வருகிறார். அவருக்கு ஆதரவாக மக்களும், எமது தோழர்கள் மற்றும் வழக்கறிஞர்களும் போராடி வருகிறார்கள்.
ஆனால் அரசுத் தரப்பில் இதுதான் இறுதி அறிக்கை, இதை ஏற்றுக் கொண்டு உடன் உடலை புதைக்க வேண்டும், அதுவும் இன்றே முடித்துவிட வேண்டும் என்று சதி செய்து நிறைவேற்ற முயல்கிறார்கள். இதற்கு சில ‘அரசியல்’ கட்சிகளும் உதவியாகவும் உடந்தையாகவும் இருக்கிறார்கள். விரைவில் அவர்கள் யார் என்பதை மக்கள் முன் அம்பலப்படுத்துவோம்.
அடுத்து இளவரசனது தந்தை இளங்கோ அவர்கள் தனது மகன் மரணத்திற்கு (அது கொலை அல்லது தற்கொலையாகவே இருந்தாலும்) மூல காரணம் என்று பாமக ராமதாஸ் உட்பட பிற தலைவர்கள் மீது புகார் அளித்திருக்கிறார். அந்தக் ‘குற்றவாளிகளை’ கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் இந்த மறு பிரேத பரிசோதனை கோரிக்கையில் அடங்கியிருக்கிறது.
தற்போது இளவரசன் உடலை உடன் புதைத்து விட்டால் இதை வெறுமனே தற்கொலை, யாரும் காரணமில்லை என்று வழக்கை ஊற்றி மூடிவிடுவார்கள். இதுதான் போலீசு, அரசுத் தரப்பின் திட்டம். இதற்கு சில அரசியல் கட்சிகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இளவரசனது பெற்றோரும், உறவினரும், மக்களும், தோழர்களும் இந்த சதிதிட்டத்தை எதிர்த்து இந்தக் கணம் வரை விடாது போராடி வருகிறார்கள்.
இந்த போராட்டம் குறித்த செய்தி ஊடகங்களில் வருவதற்கும், தமிழக மக்களிடையே பரப்ப செய்வதற்கும் நாம் துணை நிற்க வேண்டும்.
இளவரசனது மரணத்திற்கான நீதி கேட்கும் போராட்டத்திற்கு இறுதி வரை துணை நிற்போம். சதி திட்டங்களை முறியடிப்போம்.
__________________________________________________________
சா(தீ) வெறி பிடிச்சு திரியுற நீங்க எல்லாரும் மருந்த குடிச்சு சாகுங்கடா…. ஒரு ஊயிரை கொன்னு சந்தோசபடுர கேவலமான மிருகங்களாடா நீங்க … மனித பிறவியே இல்ல…
//இளவரசனது மரணத்திற்கான நீதி கேட்கும் போராட்டத்திற்கு இறுதி வரை துணை நிற்போம். சதி திட்டங்களை முறியடிப்போம்./
வினவு…
நேற்றே கேட்டிருந்தேன்….
முறையான நீதி விசரணை மற்றும் சம்பந்தபட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க மாநில அரசை வலியுறுத்த…
முதலைமைச்சரின் இமெயிலுக்கு எழுதுவது போல் எழுதி மெயில் முகவரியுடன் ஒரு பதிவு போடுங்க…
பதிவை பார்க்கிறவங்க.. தங்களின் மெயில் முகவரியில் இருந்து முதலைமச்சருக்கு அந்த கடிததை அனுப்பினால் மக்களின் மனநிலையை கண்டு அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு…
உங்கள் பக்கத்தில் இருந்து இந்த கமேண்ட் போலவே நேராக முதலமைச்சருக்கும் அனுப்புபவருக்கும்.. உங்களூக்கும் ஒரு பிரதி வருவது போல் அமைத்தல் எதிர் காலத்தில் எத்தனை பேர் கேட்டனர் என அறிய வசதி இருக்கும்.
அப்படி அமைத்தால், அதுவும் தமிழ் , ஆங்கிலம் இரண்டிலும் அமைத்தல் நிறைபேர் பங்கேற்பர்.
அரசு இதேபோல் சதி செய்தால் .. அரசியல் சட்டத்தி 17 பிரிவை சமத்துவத்தை, சமூக நீதீயை நிலை நிறுத்தவில்லை என கோரி மாநில அரசை கலைக்க கோரி மத்திய அரசிடமும், உயர், உச்ச நீதி மன்றஙக்ளிலும் முறையிட இது தகுந்த வசதி கொடுக்கும்.
இணைத்தில் உலகேங்கும் இருப்பவர் குரல் மாநில அரசை எட்ட இது உதவும்.
நேற்றே எழுதி இருந்த்னேன்… செய்வீர்கள் என நினைத்தேன்..
டெல்லி மருத்துவ மாணவி போராட்டம் போல் மக்கள் திரள் இருந்தால், வழக்கு விசாரணை உண்மையாக நடக்கும்
அருளின் பதிவில் பல கேள்விகள் கேட்டென் இன்று வரை பதில் இல்லை;
“நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால்,
நாட்டினர்தாம் வியப்பெய்தி, நன்றாம் என்பர்!
ஊடகத்தே,கிணற்றோரத்தே,ஊரினிலே
காதல் என்றால்;தடுக்கின்றார்-அதை
பாடை கட்டி கொல்ல வழிகள் செய்வார்!
பாரினிலே மூடரெல்லாம் பொறாமையால்
விதிகள் செய்து,முறை தவறி,
இடர் எய்தி கெடுக்கின்றாரே! ”
நெஞ்சு பொறுக்கவில்லையே,பாரதி!
நீங்கள் பாடிய கவிதையை நிஜமாகி, கண்ணீரும்… செந்நீரும்.. சிந்துகின்றனர்! காரணம் மனுதர்மம வாதிகள்! மனிதநேயம் மறந்த மகா பாவிகள் !!
My Caste – Human being
I am against death penalty but in this case we should hang all the political leaders who encouraging the caste politics including the parties wearing the mask of Revolutionary leader ” Father Periyar ” for their personal earning and they should not use the name peryiar
Only way revolution and all of us encourage and all of us do inter caste marriage and any govt documents we should enter our caste
Note: I am also doing inter caste marriage why i am notifying here no one should say that question to me. what you are
Small error on above we should not enter our caste on any govt documents
அய்யர் வெட்டுல பண்ணியது எங்க வீட்டுல இரண்டு ஜாதி மறுப்பு திருமணம் ஆனால் தலித்தில் எதனை பேரு பண்ணினிங்க அத சொல்லு அதுவும் ஏழை கிராமத்து தலித்து வீட்டில்
PMK are robberies and bullys and they are the most wanted theft gang smashing all tamil women ” Nupital Strings”( Thali)- Thali arupu Pattali makal katchi-
இளவரசனது மரணத்திற்கான நீதி கேட்கும் போராட்டத்திற்கு இறுதி வரை துணை நிற்போம். சதி திட்டங்களை முறியடிப்போம்…….. சூப்பரப்பூ…. இதத்தான் சொல்லுவாங்க…. சங்கங்கள் சாகும் வரை கூட்டம் போடும்… அதன் பின்னர் இரங்கல் கூட்டம் போடும்னு….. எழுதி வெச்சுக்க அப்பு… இந்த விசயத்துல ஒண்ணும் கிழிக்க முடியாது.. சும்மா சீன் காட்டாதே……
https://www.vinavu.com/2013/07/06/ilavarasan-death-pmk-condemned/
நண்பரே ஏற்கனவே கிழிய ஆரம்பிச்சு போய்கிற்றுக்கு… தூக்கத்துல இருந்து எழுந்திரிங்க
ஏப்பா வினவு தம்பி……. அந்த எழவு செய்திய விட்டா நாட்ல வேற செய்தியே இல்லையா… அசோகர் மரம் நட்டார்… கொளம் வெட்டுனார் ணு எதையாவது எழுதுங்கப்பா…
Mr Raja
Then what news you want you want pornography then you can read daily thanthi, Dianmalar, India today , Vikatan, Kumutham, dinakran
VINAVU NANGAL UNGALIN VASAGATHAI ELUTHI SUVAROTINOM ATHANAI 10KUM MERPATA EDANGALIL KAVAL THURAYINAR KIZHITHUVITARGAL-RSYF JAYANKONDAM
தோழர் பிரபாகரன்,
அப்போது நாம் சரியான படிதான் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம்…
புரட்சிகர வாழ்த்துக்கள்…
ELAVARSAN
WILL BE BURIED WITH IN TWO OR THREE DAYS
YOUR DEATH MADE A HISTORY FOR TOMORROWS YOUNG GENERATIONS
YOUR NOT BURIED WE THING YOU SOW THE SEEDS FOR TOMORROW
WE WILL HARVEST A NEW GENERATION
WHICH WOULD BE THE
THE DREAM OF WHITE BEARD MAN PERIYAR
இது கொலை தான், இதை ப ம க வின் எதிரிகளும் செய்து இறுக்க வாய்ப்பு உள்ளது , இதன் மூலம் மக்களிடம் இருந்து ப ம க வை அந்நிய படுத்த எண்ணி செய்த செயலாகவும் கருதி , அந்த கோணத்திலும் CBI விசாரணை செய்ய வேண்டும்
Dear All,
All Conspiracy in the world history had never won. What all the conspiracy regarding this matter will never win. Vinavu and their people are their to defeat all conspiracy.
இளவரசன் மரணம் தற்கொலையே: காவல்துறை தகவல்
தற்கொலை முடிவுக்கு யாரும் காரணம் இல்ல காவல்துறை அறிக்கை பையன் எழுதிய ல்கடிதம் இப்ப நீங்கலம் செதுடவ போறீங்க பொய் பேசினதற்கு
//தற்கொலை முடிவுக்கு யாரும் காரணம் இல்ல //
ஆமாம். செத்தா எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கிறதுக்காக செத்துருக்காரு. இத்த படிச்சி சொல்றதுக்காலே ஒருவாரம் ஆச்சு!
கண்னன்…
இதையெல்லாம் வைத்து முடிவுக்கு வர முடியாது… தீவிரமான விசாரனை தேவை…
சம்பவம் நடந்து 4 நாளைக்கு அப்புரம் கடிதத்தை காவல் துறை காட்டவேண்டிய அவசியம் என்ன? தற்கொலைன்னு நிறுபிச்சு யாரை காப்பற்றா காவல் துறை வேலை செய்யுது ? தற்கொலை செய்யுறவங்க கடிதம் எழுதினா அதை 4 நாள் கழிச்சு தான் கொன்டு வந்து கொடுத்துட்டு மீண்டும் செத்து போய்டுவாங்களா?
அப்படியே தற்கொலைன்னு சொன்னாலும் கண்டிப்பாக அந்த கடிதததில் பாமக கும்பல் தான் என் தற்கொலைக்கு காரணம் இருந்தா அப்ப உண்மையான கடிதம் தான். ஏனா இவங்க எற்படுத்தின பாதிப்பு அப்படிபட்டது.. ஆனா போலி கடிதமா இருந்தா யாரும் காரணம் இல்லைன்னு இருக்கும்..
அப்படி யாரும் பாதிப்பு இல்லைன்னு இருந்தாலும்… தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்கு இவங்கள் மேல் வழக்கு போட்டு உள்ள போட்டு தான் ஆகணும் .. இதில் பொய் எங்க வந்தது ?
யார் பொய் பேசினா?
///பிரேதப் பரிசோதனை அறிக்கை இளவரசன் தரப்பினருக்கு அளிக்கப்பட்டு அவர்கள் அதை ஏற்கவில்லை. மறு பரிசோதனை நடத்த வேண்டும், அந்த பரிசோதனையில் தங்களுக்கு தெரிந்த மருத்தவர்கள், தடவியல் நிபுணர்கள் பங்கேற்க வேண்டும் என்று இளவரசனது தந்தை உறுதியாக போராடி வருகிறார்.///
ஜாதி சார்பற்ற பொதுவான மருத்துவர்,தடவியல் நிபுணர்கள் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் சரியான கருத்து.
அதென்ன இளவரசன் தரப்பு மருத்துவர்,தடவியல் நிபுணர்கள் பங்கேற்க வேண்டும்?
இளவரசன் தரப்பு ஆட்கள் உங்களுக்கு சாதகமாகத்தான் செயல்படுவர். இளவரசன் தரப்பு ஆட்கள் பொதுவான மருத்தவர்களை PCR சட்டத்தை பயன்படுத்துவேன் என்று மிரட்டி,இளவரசன் தரப்புக்கு சாதகமான அறிக்கையை தயார் செய்ய வாய்ப்புள்ளது அல்லவா?
இதில் அந்நிய நாட்டு சதியும் இருக்கிறது..கூப்பிடுங்கள் கேப்டனை…