Tuesday, September 27, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க தமிழ்மக்கள் சொத்தான தில்லைக்கோயில் இனி தீட்சிதன் சொத்தாம் ! - உச்சநீதிமன்றத் தீர்ப்பு...

தமிழ்மக்கள் சொத்தான தில்லைக்கோயில் இனி தீட்சிதன் சொத்தாம் ! – உச்சநீதிமன்றத் தீர்ப்பு !

-

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
702/5 ஜங்சன் ரோடு,விருத்தாசலம்,கடலூர் மாவட்டம்.
94432 60164, hrpctn@gmail.com
103, ஆர்மேனியன் தெரு,  பாரிமுனை, சென்னை. 98428 12062

பத்திரிகை செய்தி

 சதி வென்றது! நீதி தோற்றது!

உச்சுக் குடுமி மன்றம்
உச்சுக் குடுமி மன்றம்

சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் இறுதி தீர்ப்பின் படி 2009 –ம் ஆண்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட சிதம்பரம் நடராசர் கோவிலை மீண்டும் தீட்சிதர்களின் வசமே ஒப்படைக்கும் வண்ணம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 40 ஏக்கர் பரப்பளவுள்ள கோயிலும், சுமார் 2,700 ஏக்கர் நிலமும், பல கோடி மதிப்புள்ள நகைகளும் கோயிலின் அர்ச்சகர்களான தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்குப் போய்விட்டது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கோயிலை, தீட்சிதப் பார்ப்பனர்களின் தனிச்சொத்தாக்கியிருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

இப்படி ஒரு அநீதி இழைக்கப்படவிருக்கிறது என்பதை நவம்பர் மாத இறுதியில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கிய கணத்திலிருந்து நாங்கள் கூறிவந்திருக்கிறோம். மக்கள் தரப்பில் நின்று மக்கள் சொத்தைக் காப்பாற்ற வேண்டிய தமிழக அரசு தீட்சிதர்களின் அரசாகவே செயல்பட்டது. 2009-ல் திமுக ஆட்சியில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி  சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத் துறை எடுத்துக் கொண்ட போது, போயஸ் தோட்டத்துக்கே சென்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவை சந்தித்த தீட்சிதர்கள் அதன் பலனைப் பெற்று விட்டார்கள்.

ஜெயலலிதா, தீட்சிதர்கள்
தீட்சிதர்களுடனும் சுப்பிரமணியசாமியுடனும் கள்ளக்கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுகிறது ஜெயலலிதா அரசு.

இவ்வழக்கில் வாதியான தீட்சிதர்களுடனும் சுப்பிரமணியசாமியுடனும் கள்ளக்கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுகிறது ஜெயலலிதா அரசு என்பதையும், மூத்த வழக்குரைஞர்களை யாரையும் நியமிக்காமல் அறநிலையத்துறை அதிகாரிகள் ஒருவரைக் கூட டில்லிக்கு அனுப்பாமல் இந்த வழக்கில் தீட்சிதர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் வேலையை ஜெயலலிதா அரசே செய்கிறது என்று அம்பலப்படுத்தி, தில்லைக் கோயிலிலும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தினோம். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகளும் துவக்கம் முதலே ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதையும், அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட சுப்பிரமணியசாமியை கண்டிக்காததையும் கூட ஊடகங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறோம்.

தீட்சிதர்கள்
பார்ப்பனியத்தின் தமிழின வெறுப்புக்கும், தீண்டாமைக்கும் வரலாற்றுச் சான்றாக இருப்பவர்கள் தீட்சிதர்கள் (உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் தரிசனம்).

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் சிவனடியார் ஆறுமுகசாமி, வி.எம்.சவுந்தரபாண்டியன் ஆகியோர் மூலம் இவ்வழக்கில் தலையிட்டிருந்த எங்களுடைய வழக்குரைஞர்களை சுமார் பதினைந்து நாட்கள் டில்லியிலேயே தங்கியிருந்து உழைத்தார்கள். மக்கள் மத்தியில் நிதி திரட்டி மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தி வாதிட்டோம். இருந்த போதிலும், அரசுத் தரப்பே எதிர்தரப்புடன் கை கோர்த்துக் கொள்ளும் போது, நீதிமன்றமும் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளும் போது வழக்கில் வெல்வது இயலாத காரியம்.

சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடக்கூடாது என்று தடை விதித்த தீட்சிதர்கள் கோயிலைக் கவர்ந்து கொண்டால், அதைவிட அவமானம் தமிழர்க்கு இல்லை” என்று நாங்கள் இயன்றவழியில் எல்லாம் எச்சரித்தோம். ஆனால், உலகத்தமிழர்களுக்காகவும், ஈழ விடுதலைக்காகவுமே உயிர் தரித்திருப்பதாக கூறிக்கொள்ளும் யாரும் இதற்காகப் போராடவில்லை. முக்கியமாக ஜெயலலிதா அரசை கண்டிக்கவில்லை. மவுனம் சாதித்தன் வாயிலாக “தீட்சிதர்கள், பாரதிய ஜனதா, சு.சாமி, சோ, ஜெயலலிதா கூட்டணி”க்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தவர்கள் இவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு தமிழ்மக்களைக் கோருகிறோம்.

சுப்பிரமணியசாமி
அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட சுப்பிரமணியசாமியை நீதிமன்றம் கண்டிக்கவில்லை.

பார்ப்பனியத்தின் தமிழின வெறுப்புக்கும், தீண்டாமைக்கும் வரலாற்றுச் சான்றாக இருப்பவர்கள் தீட்சிதர்கள். அன்று நால்வர் பாடிய தேவாரத்தை சிதம்பரம் கோயிலுக்குள் முடக்கி வைத்து அழிக்க முனைந்த தீட்சிதர்கள்தான் பத்தாண்டுகளுக்கு முன் திருவாசகம் பாடிய சிவனடியார் ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடையிலிருந்து அடித்து வீசினார்கள். அன்று நந்தனாரை எரித்துக் கொன்றது மட்டுமல்ல, 1935 -ம் ஆண்டுவரை நடராசர் கருவறைக்கு எதிரே இருந்த நந்தனார் சிலையை அகற்றியவர்களும் அவர்கள்தான். நந்தனார் நுழைந்த தெற்குவாயிலை மறித்து தீண்டாமைச் சுவர் எழுப்பிவைத்துக் கொண்டு, அதை நியாயப்படுத்துபவர்களும் தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்கள்தான்.

தீட்சிதர்கள் பக்தர்களை எப்படி நடத்தினார்கள் என்பது பக்தர்களுக்குத் தெரியும். தீட்சிதர்கள் எந்த சட்டத்தையும், எந்த பக்தரையும் மதித்ததில்லை. பக்தர்களிடம் பணம் பறிப்பது, சாமி நகைகளை களவாடியது, கள்ளக் கையெழுத்துப் போட்டு கோவில் சொத்தை விற்றது என்று தீட்சிதர்கள் செய்த அயோக்கியத்தனங்களைப் பற்றி சக தீட்சிதர்களே அரசுக்குப் புகார் கொடுத்ததன் விளைவாகத்தான் 1982-ல் எம்.ஜி.ஆர் அரசு நிர்வாக அதிகாரியை நியமித்தது. எம்.ஜி.ஆர் அரசு போட்ட ஆணையைத்தான் தற்போது ஜெயலலிதா அரசு குப்பையில் வீசியிருக்கிறது.

ஜெயா-மோடி
பாரதிய ஜனதா- ஜெயலலிதா இடையேயான கள்ள உறவு தமிழகத்தின் கோயில்களை ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கூடாரங்களாக மாற்றும்.

இது சிதம்பரம் கோயில் பிரச்சினை மட்டுமல்ல, எல்லாக் கோயில் சொத்துக்களையும் பார்ப்பனக் கும்பல் விழுங்குவதற்கான சதியின் தொடக்கம் என்பதை நாங்கள் பலமுறை எச்சரித்து விட்டோம். தற்போது இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்தின் அறநிலையத் துறையையே இல்லாமல் செய்வதற்கு வழக்கு தொடரப் போவதாக சுப்பிரமணியசாமி அறிவித்திருக்கிறார். அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களை தெருவில் நிறுத்தி வைத்திருக்கும் ஜெ அரசு இதையும் சாதித்துக் கொடுக்கும். பாரதிய ஜனதா- ஜெயலலிதா இடையேயான கள்ள உறவு தமிழகத்தின் கோயில்களை ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கூடாரங்களாக மாற்றும்.

இப்படி ஒரு அநீதியான தீர்ப்பு வருமென்பதை நாங்கள் எதிர்பார்த்திருப்பதால் இது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. “காடு திருத்தி கழனியாக்கிய உழவனுக்கு நிலத்தை சொந்தமாக்க முடியாது” என்று சொல்லும் அரசியல் சட்டமும் நீதிமன்றமும்தான், “மணியாட்டும் அர்ச்சகனுக்கு கோயில் சொந்தம்” என்று தீர்ப்பளித்திருக்கிறது.  “குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதியைத் தெரிவு செய்யலாம்” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்த  நீதிபதிகள்தான், கோயில் நகைகளைத் திருடிய தீட்சிதர்களுக்கு கோயிலையை சொந்தமாக்கித் தீர்ப்பளித்திருக்கிறார்கள். ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று வெளிப்படையாகவே சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டியது மட்டும்தான் பாக்கியிருக்கிறது.

சுயநிதிக் கல்விக் கொள்ளையர்களுக்கும், அணு உலைக்கும், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கும் ஆதரவாக அடுக்கடுக்காகத் தீர்ப்பளித்து வரும் உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியதில் வியப்பில்லை. உச்ச நீதிமன்றம் என்பது நீதிக்காக நாம் போராடும் பல்வேறு களங்களில் ஒன்று; அவ்வளவுதான். அது ஒன்றும் நீதி தேவதையின் உறைவிடம் அல்ல. உச்சுக்குடுமி மன்றம் என்று ஏற்கெனவே அறியப்பட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் தீட்சிதனைப் போலவே முன்குடுமி போட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், தமிழக அரசு தனிச்சட்டமொன்று இயற்றி சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர முடியும். எல்லா பிரச்சினைகளுக்கும் சட்டமன்றத்தில் “வரலாற்று சிறப்பு மிக்க ஒருமனதான தீர்மானம்” இயற்றும் ஜெயலலிதா அரசு, இதற்கு ஒரு மசோதா கொண்டு வந்து ஒருமனதாக அதை ந்நிறைவேற்றி சட்டமாக்க முடியும். அவ்வாறு சட்டமியற்ற வேண்டும் என்பதற்காகப் போராடுவோம். அது மட்டுமல்ல, பார்ப்பன சாதிவெறி பிடித்த தீட்சிதர்கள், தமிழ் மக்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் வண்ணம் கோயிலின் தெற்கு வாயிலில் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும். கோயிலில் இருந்து திருட்டுத்தனமாக அகற்றிய நந்தனார் சிலையை மீண்டும் நிறுவவேண்டும் என்பதற்காகவும் போராடுவோம்.

வென்று விட்டோம் என்று தீட்சிதப் பார்ப்பனக் கும்பல் இறுமாப்பு கொள்ள வேண்டாம். பார்ப்பனக் கும்பலுக்கு பாரதிய ஜனதா என்றால், தமிழ் மக்களுக்கு நாங்கள்! இது வரலாற்றுப் பகை என்பதை தமிழ் மக்களுக்கு உணர்த்துவோம். பகை முடிப்போம்!

இவண்

 சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்.

 1. பொறம்பொக்கு, மொள்ளமாறி, மானங்கெட்டவனுங்க பதவியில் உள்ள நாட்டில இப்டிதான் நியாயம் இருக்கும் போல, சொரனை கெட்ட பக்தர்களுக்கு ரோசம் வந்தா நாமே தீர்ப்பை எழுதிடலாம், எது எப்டி ஆனாலும், எக்கேடு கெட்டாலும் அந்த மணியாட்டல கேட்டுட்டு, பூஜையை போட்டுட்டு வரலாம்னு நெனைக்கிற சனத்த என்ன பன்றது, அதுவரைக்கும் எவனாவது எழுதுரத கேட்டுகினுதான் போவனுமா?? தோழர்களே, வேற வழி என்ன இருக்குன்னு சொல்லுங்க.

 2. 1. Are deekshithars not thamizars? Why is the title separating deekshitars from Tamils?
  2. By calling Supreme court as “Uchikkudumi mandram” are you insulting the institution that also ruled in favour of reservations? If it is against you, is it uchi kudumi mandram?

  Be neutral folks.

 3. சிதம்பரம் கோயிலில் தீட்சிதரர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை கோயிலுக்குள் செல்வதில்லை. காணிக்கை செலுத்த மாட்டோம்,நந்தனை போன்ற வெளியில் இருந்துதான் சாமி கும்பிடுவோம் அல்லது தீட்சிதரர்கள் பூஜை செய்தால் புறக்கணிப்பு செய்வோம் என அரசியல் தளத்தில் போராட தயராவோம்.

  • கோயிலுக்குள் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக செல்ல வேண்டும் ஆனால் எந்தக் காணிக்கையும் செலுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், அவர்கள் கட்டாயப்படுத்தி, ஒரு நீண்ட புத்தகத்தில் இவ்வளவு பணம் தருவதாக கையெழுத்திட்டால் தான் தான், உள்ளே போய் தரிசனம் பண்ணலாம் என்று அடாவடித்தனம் பண்ணுவார்கள். அப்படியும் கொடுக்காது விட்டால், முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு, நிச்சயமாக அடிக்க வருவார்கள். அதிலும் வெளிநாடு என்று தெரிந்தால் விடவேமாட்டார்கள். அது தான் சிதம்பரத்தில் என்னுடைய அனுபவம். 🙁

 4. ஏற்கனவே நடராசன் காலில் உள்ள ஒரு கொலுசைக் காணோம்…
  இனிமேல்,நடராசரையே ஆட்டயைப் போட எம்புட்டு நேரமாகும்?

 5. Kudimis have won and Tamils are dead. Now Kudumis can make secret valve added bonds and take them to invest in western Institution and orchestrate another genocide on Tamils like Eelam.

 6. This judgement makes sense taking into account the current trend and scenario in India where not all Worshiping place is under government.
  My personal opinion – All places of worship should be under govt. When I say “All places of worships” it includes churches, mosques and gurudwaras.
  Without even pushing for uniform civil code and structure in India, its sad that people talk things like paapans, kudumis etc…
  Sadly, these kind of people still help in splitting in the society with the veil of atheism…Anyway, thats how unmatured people get frustrated when they bite the dust….

  • uniform civil code is not a simple matter of just pushing the govt.it requires a change in people’s mind (myhts). it cant be done just like that. also why are you blaming atheist ?? your argument is illogical.uniformity can be brought only when people feel that uniformity…
   if you go in the way of our constitution, logically speaking you can never ever implement the UCC,WHY?? check all the articles for freedom of religion, it would be antithetical to UCC.while promoting diversity, how could you also promote uniformity??

 7. மணியடித்து பூசை செய்யும் தீட்சிதர்களுக்கு( தனி வகையறா????) சொந்தம்-உச்ச நீதிமன்றம்
  —————————————————————————————-
  தீதீர்ர்ப்ப்பூ!!!!!!!!!!!!!!!!
  ———————————
  எனவே,இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நிலங்களை உழுது, விதைத்து, களை பறித்து, அறுவடை

  செய்து வாழ்ந்துவரும் (தனி வகையறாவான) தலித்துக்களுக்கு அனைத்து விளை நிலங்களையும்

  உரிமையாக்குவோம்.

 8. பக்தர்களிடம் பிச்சை எடுத்து
  பிழைப்பை ஓட்டும் பார்ப்பனர்களே !
  பொதுச் சொத்தை புடுங்கி தின்னும்
  சூடு சொரணை இல்லாத சுப்ரமணியே !
  உழைப்பாளிகளின்
  மலத்தை ஒன்றாய் சேர்த்து
  அள்ளி அள்ளி தின்றாலும்
  அறிவு வராது
  அவர்களின் துணிவு வராது ,,

 9. ஹ்ம்ம்… எல்லாரும் ஜெலுசல் குடிச்சிட்டு தூங்குங்க… இல்லன்னா பயர் சர்வீஸ் தான் கூப்புடனும் 😀

  அப்புறம் முக்கியமான விசயம்…

  கோயிலோட சொத்து 2000 ஏக்கர் இருபது வருசமா அறநிலை துறை கையில தானா இருக்கு.. அப்புறம் எப்படி தீட்சிதர்கள் மேலே குத்தம் சொல்றீங்க

  இதே போல நாட்டு கோட்ட செட்டி கோயில், சௌராஸ்டிரா சாதி கோயில், வெள்ளாலர் கோயில கூட அரசாங்கம் எடுத்துக்கனும்ன்னு போராடுவீங்கள..

  எங்க பிள்ளையார்பட்டி கோயில் முன்னாடி போராட்டம் பன்னுங்க பாக்கலாம் 😀

  • நாட்டுகோட்டை சாதி கோயிலிலும் வெள்ளாளர் கோயிலிலும் தமிழில் தேவாரம் பாட அனுமதி மறுத்தால் அவர்களும் எதிர்க்கப்ப்ட வேண்டியவர்கள் தான். அதை விட நாட்டுக்கோட்டைசெட்டிமார்களினதும், வெள்ளாளர்களினதும் முன்னோர்கள் அவர்களின் கோயில்களைக் கட்டியிருக்கலாம. சிதம்பரம் கோயிலைக் கட்டியது தீட்சிதர்களா? அவர்கள் தான் தாம் எங்கிருந்தோ வந்ததாக ஒப்புக் கொள்கிறார்களே. அப்படியானால் அந்தக் கோயில் அவர்களுக்கு சொந்தமாக முடியுமா? கோயிலை, தேவாலயங்களை அல்லது ஏதாவது சொத்தைப் பராமரிக்க நியமிக்கப்பட்டவர்களின் வாரிசுகள் அந்தச் சொத்துக்களை சொந்தம் கொண்டாடுவது எந்த நாட்டிலும் நடப்பதில்லை. தமிழ்நாட்டில் தான் பார்ப்பனர்கள் இந்த ஆட்டம் ஆடுகிறார்கள். ஏனென்றால் தமிழ்நாட்டு சோற்றுத் தமிழர்கள் மானாட, மயிலாட பார்க்கவும், விஜய் டிவியில் தமது குழந்தைகள் பாடவோ அல்லது ஆடவோ வாய்ப்பும் கிடைத்தால், போதும் என்ற எண்ணத்தில் இருக்கும் வரை, இப்படி தமிழர்களின் பாரம்பரிய சொத்துக்கள் எல்லாம் பறிபோகத்தான் செய்யும்.
   🙁

   • வியாசன் அவர்களே…..

    சிதம்பரம் கோயிலை அரசு எடுப்பதற்கு முன்பாக பலமுறை சென்றுள்ளேன்…… ஒவ்வொரு முறையும் நடராஜர் சன்னிதி முன்பாகவே நின்று சத்தமாகவே[ மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம் ] திருமுறை பாடுவேன்…. என்னை எந்த தீட்சிதரும் தடுத்ததில்லை… குறைந்த பட்சம் மெதுவாக பாடுங்கள் என்று கூட யாரும் என்னிடம் கூறியதில்லை…..

    அறநிலைய [அற்ற] துறையின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் பழனி கோயிலில் சாயரட்சை பூஜையின் போது , திரைவிலக்கப்பட்ட போது சத்தமாக அரோகரா சொன்னபோது அங்கிருந்த ஒரு அதிகாரி சத்த‌ம் போடாதீர்கள் என்று சத்தம் போட்டான்….. அவனுக்கு ஹிந்து மதத்தைப்பற்றி என்ன தெரியும்? இறைவனை பாடி துதிப்பதுதானே நம் மரபு?

    பிராமணர்கள் மீதான காழ்ப்பு உங்கள் கண்ணை மறைக்கிறது…….. மற்றபடி கோயில்களைப்பற்றி கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பார்த்துக்கொள்கிறோம்….. சற்றே விலகியிரும் பிள்ளாய்…..

    • //சிதம்பரம் கோயிலை அரசு எடுப்பதற்கு முன்பாக பலமுறை சென்றுள்ளேன்…… ஒவ்வொரு முறையும் நடராஜர் சன்னிதி முன்பாகவே நின்று சத்தமாகவே[ மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம் ] திருமுறை பாடுவேன்…..///

     அப்படியானால் எதற்காக ஆறுமுகசுவாமி சிற்றம்பல மேடையில் பாடுவதை மட்டுமே எதிர்த்தார்கள். அதை விட அப்படி தேவாரம் பாடுவது ஆகம விதிகளுக்கு எதிரானது எனக்கூறி அவர்கள் வாதாடியதை நான் காணொளியொன்றில் பாத்திருக்கிறேன். அதை விட, அதையே சுப்பிரமணியம் சுவாமியும் கூறியிருக்கிறார். அதனால் உங்களை மட்டும் பாட விட்டார்கள் என்பது உங்களின் கற்பனையாகக் கூட இருக்கலாம் அடுத்த முறை வீடியோ எடுத்து வந்து, youtube இல் போட்டு நிரூபியுங்கள். 🙂

     //அறநிலைய [அற்ற] துறையின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் பழனி கோயிலில் சாயரட்சை பூஜையின் போது , திரைவிலக்கப்பட்ட போது சத்தமாக அரோகரா சொன்னபோது அங்கிருந்த ஒரு அதிகாரி சத்த‌ம் போடாதீர்கள் என்று சத்தம் போட்டான்…..///

     அறநிலையத் துரையின் கீழுள்ள கோயில்களிலும் பார்ப்பன ஆதிக்கம் தான் தலை விரித்துப் போட்டு ஆடுகிறது. உதாரணமாக திருச்செந்தூரிலும் மதுரையிலும் பார்ப்பனர்கள் கண்முன்னாலேயே காசு பிடுங்குகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்களுக்கு அதிலும் டொலர் இருந்தால் கொடுத்தால் நல்லதாம். 🙂

     //பிராமணர்கள் மீதான காழ்ப்பு உங்கள் கண்ணை மறைக்கிறது…….. ///

     எனது வலைப்பதிவை வாசிக்கும் சிலர் என்னை இந்துத்துவா, பார்ப்பன ஆதரவு என்கிறார்கள் நீங்கள் என்னடாவென்றால் பிராமணர்கள் மீதான காழ்ப்புணர்வு என்கிறீர்கள்.

     //மற்றபடி கோயில்களைப்பற்றி கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பார்த்துக்கொள்கிறோம்…..

     எனக்கு கடவுள் நம்பிக்கயில்லை என்று சிவபெருமான் கனவில் வந்து சொன்னாரா?

     //சற்றே விலகியிரும் பிள்ளாய்….///

     “கோழைப்பார்ப்பான் செய்திடும் பிழையை ஏற்றுக்கொள்ளாதே- அவன்
     இனமறியாதவன் பின்புத்திக்காரன்…”

    • சான்றோன் பகர்வது உண்மையாயின், ஆறுமுகசாமி ஏன் கோர்ட்டுக்கு சென்றார்? அர்த்தமண்டபம் எனப்பபடும் சிற்றம்பல மேடையில், தேவாரம் உட்பட, தமிழ்ப்பாடல்கள், ஓதப்படல் கூடாது என்பது சில சமஸ்கிருத வெறியர்களின் நிலைப்பாடு! அதை எதிர்த்துதான் போராட்டம்! சான்றோன் பாடியது சன்னதிக்கு எதிரே, கீழே, பிரகாரத்தில் நின்று கொண்டு பாடியது என ஊகிக்கிறேன்!

     பலவருடங்களுக்கு முன்னர், பங்களுரில் கன்னட மொழியிலேயே கிருத்துவ தேவாலயங்களில், முதல் வழிபாடு இருக்கவேண்டும் என அன்றைய கர்னாடக அரசு உத்தரவிட்டது! அதுவரை தமிழர்கள் அனுபவித்துவந்த உரிமை மறுக்கபட்டது! கடைசியில் பெரும்பாண்மை உறுப்பினர்களின் முடிவுக்கு விடப்பட்டது!

     இந்து கோவில்களிலும் அந்த முறை பின்பற்றபடல் வேண்டும்! இந்து கோவில்கள் ஆதிக்க சக்தியினரிடமிருந்து விடுபட்டு, மக்கள் மன்றமாக வேண்டும்!

    • //…….. மற்றபடி கோயில்களைப்பற்றி கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பார்த்துக்கொள்கிறோம்….. சற்றே விலகியிரும் பிள்ளாய்…..//

     சுமார்த்த பிராமணர்களுக்கு எந்த கடவுளின் மீது நம்பிக்கை அய்யனே! நாமம் போட்ட யானையை வைத்து பிச்சையெடுக்கும் பாகனுக்கும், கோவிலில் கொள்ளையடிக்கும் பார்ப்பானுக்கும் என்ன வித்தியாசம்? சங்கராச்சாரி எந்த கடவுளுக்கு பயந்தான்? ஒரிஜினல் சங்கராச்சாரி, ஆதி சங்கராச்சாரி இறந்தவன் பெண்டாட்டியை புணர்ந்தான்! அடுத்து வந்தவர்கள் மட்டும் யோக்கியர்களா என்னெ? எத்தனை தேவனாதன்கள்?

  • //எங்க பிள்ளையார்பட்டி கோயில் முன்னாடி போராட்டம் பன்னுங்க பாக்கலாம் //
   பிள்ளையார்பட்டி கோயிலில் தேவாரங்களுக்கும், தமிழர்களுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லாமல் முன்னுரிமை கொடுப்பதை நான் நேரில் பார்த்தேன். பிறகு இவா, எதுக்கு பிள்ளையார் படி கோயில் முன்னால் போராட்டம் பண்ணனும் என்கிறார். 🙂

  • நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தங்களின் சொந்தப்பணத்தில் கோவில் கட்டினார்கள் அதையே அறநிலையத்துறையே நிர்வகிக்கிரது,தில்லைக்கோவில் சோழமன்னன் கட்டியது அதை தீட்சதன் திருடிக்கொண்டான்

   • ராஜராஜன் சொந்தப் பணத்திலிருந்து கட்டவில்லை, அரசாங்க சார்பாக மக்கள் வரிப்பணத்திலிருந்து கட்டினான். ஆகவே, இது அரசாங்கத்துக்குத் தான் சொந்தம். அரசு சொத்தை தாரை வார்த்துக் கொடுத்தது செல்லாது,

 10. போராட்டம் செய்யட்டும் ஆனால் மசூதி முன்பும் இந்த வகை போராட்டம் நடத்த தீல் இருக்குதா?

  • மசூதியைக் கட்டியது தமிழர்களாக இருந்து அங்கே தமிழ் பேசுவது தடுக்கப்படுமானால் நிச்சயமாக தமிழ்பேசும் அனைவரும் எதிர்ப்பார்கள். தமிழ்பேசும் முஸ்லீம்களின் மசூதிகளில் எல்லாம் தமிழில் தான் பிரசங்கம் நடக்கிறது. எந்தப் பள்ளிவாசலிலும் இந்த இடத்தில் தான் தமிழில் பேசலாம், இந்த இடத்தில் பேசக் கூடாது என்று எந்தக் கட்டுப்படும் கிடையாது. ஆனால் சிற்றம்பல மேடையில் தமிழில் பாடக்கூடாது என தீட்சிதர்கள் அடம்பிடிக்கிறார்கள்.

    • இந்துக் கோயில்களில் மட்டும் எல்லாம் தமிழிலா நடைபெறுகிறது. ஒரு சில வரிகள் தேவாரம் பாடுவதற்கே இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது. ஆனால் கிறித்தவர்கள் முற்று முழுதாக தமிழில் வழிபாட்டை நடத்துகின்றனர். தமிழ் பேசும் முஸ்லீம்களின் தொழுகையின் பின்னர், பள்ளிவாசலுக்குள்ளேயே நடக்கும் நீண்ட பிரசங்கம் அல்லது சொற்பொழிவு எல்லாமே தமிழில் தான் நடக்கிறது.அங்கு யாருமே, வெளியில் போய் தமிழில் பேசு என்று கூறுவதில்லை. தில்லையில் மட்டும் தான் சிற்றம்பல மேடையை விட்டு இறங்கி நின்று தமிழில் பாடச் சொல்கிறார்கள். அதனால் தான் இந்தப் பிரச்சனையே.

      • தாங்கள் தமிழ் மொழியிலேயே கேள்விகளை பதிவேற்றலாமே,

       இங்கு ஆங்கிலப் புலமை தேவையில்லையே.

     • /தமிழ் பேசும் முஸ்லீம்களின் தொழுகையின் பின்னர், பள்ளிவாசலுக்குள்ளேயே நடக்கும் நீண்ட பிரசங்கம் அல்லது சொற்பொழிவு எல்லாமே தமிழில் தான் நடக்கிறது.அங்கு யாருமே, வெளியில் போய் தமிழில் பேசு என்று கூறுவதில்லை.//

      இங்கு இருக்கிர முஸ்லீம் எத்தனை பெருக்கு அரபி தெரியும். அரபி தெரிந்து இருந்தால் தமிழில் பேசுவார்கலா ?

      • இந்துக்களாகவுள்ள தமிழர்களில் எத்தனை பேருக்கு சம்கிருதம் தெரியும்? பெரும்பாலான, பூசை செய்யும் பார்ப்பனர்களுக்கே சமக்கிருதமும் தெரியாது, அவர்கள் என்ன முணுமுணுக்கிறார்கள் என்பதன் அர்த்தமும் தெரியாது. சமக்கிருத்த்தையும் தமிழில் எழுதித் தான் படிக்கிறார்கள். இந்த லட்சணத்தில், பிழை, பிழையாக மந்திரங்களை உச்சரிப்பதை விட அவற்றைத் தமிழிலிலேயே சரியாக கூறலாம், கும்பிட்டுக் கொண்டிருக்கிற தமிழர்களுக்கும் புரியும், பிழை, பிழையாக, தெரியாத மொழியில் சாமியைத் திட்டும் பாவமும் பார்பனர்களுக்கு வந்து சேராது. 🙂

      • //இங்கு இருக்கிர முஸ்லீம் எத்தனை பெருக்கு அரபி தெரியும். அரபி தெரிந்து இருந்தால் தமிழில் பேசுவார்கலா ?///

       அறிவுக் கொள்ளுந்தே…இங்கு இருக்கிர தமிழர்களுக்கு எத்தனை பேருக்கு சமஸ்கிருதம் தெரியும்????!!!

       வழிபாட்டின் போது பாப்பான் சமஸ்கிருதத்தில் சொல்றானே அது இங்குள்ள மக்களுக்கு எப்படி புரியும் ….. Funny Fellow 🙂 🙂

 11. //“காடு திருத்தி கழனியாக்கிய உழவனுக்கு நிலத்தை சொந்தமாக்க முடியாது” என்று சொல்லும் அரசியல் சட்டமும் நீதிமன்றமும்தான், “மணியாட்டும் அர்ச்சகனுக்கு கோயில் சொந்தம்” என்று தீர்ப்பளித்திருக்கிறது.//

 12. ஸ்ரீரங்கநாதனையும்,
  தில்லைநடராசனையும்,
  பீரங்கிகொண்டு தகர்க்கும்நாள் எந்நாளோ???
  பாவேந்தர் பாரதிதாசன்…

  • //ஸ்ரீரங்கநாதனையும்,தில்லைநடராசனையும்,
   பீரங்கிகொண்டு தகர்க்கும்நாள் எந்நாளோ???
   பாவேந்தர் பாரதிதாசன்…///

   இறைவனை எப்பொழுதும் போற்றத் தேவையில்லை, திட்டவும் முடியும் என்பது தமிழர்களின் பக்தி வரலாற்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்று. ஆபிரகாமிய மதங்களைப் போன்று, கடவுளுக்குப் பயந்து நடுங்கும் பக்தி வரலாறு தமிழர்களிடம் இல்லை. அது ஒருபுறமிருக்க, சிவகங்கைச் சீமையின் வரலாற்றில் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் அடிப்படையில், அக்காலத்தில் பேச்சு வழக்கிலிருந்த “பீரங்கி வைத்துப் பிளப்பது” என்னும் அச்சுறுத்துக் கருத்தீட்டைத் தனது கவிதையில் வேடிக்கையாக, காளையர் கோயிலில் கோபுரத்தைப்பிளக்க ஆங்கிலேயர்கள் திட்டம் போட்டத்தைத் தான் அவ்வாறு வேடிக்கையாக குறிப்பிட்டார் பாவேந்தர் பாரதிதாசன் என்கிறார் திரு. இராமகி அவர்கள்.

   பாவேந்தர் பாரதிதாசன் உண்மையாகவே ஸ்ரீரங்கநாதனையும்,தில்லைநடராசனையும்,
   பீரங்கிகொண்டு தர்க்க விரும்பியிருந்தாலும் கூட, அதற்காக தீட்சிதர்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய கோயிலைத் தாரை வார்க்க வேண்டுமோ?

   “காளையார் கோவிலைக் கைப்பற்றினால் தான், சிவகங்கை கவிழும்; முன்னணி உடையும்; மற்ற போரளிகள் தொய்ந்து போவார்கள்; சென்னைக் கோட்டை உறுதிபெறும், ஆங்கில அரசு நாவலந்தீவில் நிலைக்கும்” என்ற கருத்தில், கர்னல் அக்னியூ காட்டைச் சுற்றி வளைத்தான். 40 மைல் சுற்றளவும், குறுக்கே 11-12 மைல் நீளமும் கொண்ட காட்டின் இடையே அப்பொழுது வயல்களோ, ஊர்களோ இல்லை. காட்டை ஒரு பக்கம் வெட்டத் தொடங்கினால், நிழல் குறைந்து ஆங்கிலேயர் அணி (அதனுள் இந்தியர் மட்டுமில்லை, மலாய்க்காரரும் இருந்தனர்.) வெய்யிலில் நகர முடியாமல் தடைப் பட்டது. காட்டிற்குள் செல்லும் முயற்சி எதுவும் பலிக்கவில்லை. முடிவில், காட்டிக் கொடுத்தவர்களின் உதவியோடு, மருது படை பயன்படுத்திய கமுக்க (secret) வழியை அறிந்து, அதன் வழியே படைநடத்தி, 30/9/1801 இரவு கழிந்து மறுநாள் புலரும் நேரத்தில், காளையார்கோவில் ஊர்வாயிலுக்கு அக்னியூ வந்து சேர்ந்தான்.

   அதற்கு இடையில் ஒற்றர் மூலம் “கோயில் கோபுரத்தைப் பீரங்கி கொண்டு தகர்க்க” அக்னியூ திட்டமிட்டிருப்பதை அறிந்த மருது பாண்டியர் யாரும் நினைக்க முடியாத ஒரு செயலைச் செய்தார்கள். (பீரங்கி வைத்து பிளப்பது என்னும் அச்சுறுத்துக் கருத்தீட்டைக் குமுகத்தில் பலரும் ஆங்கிலேயர் காலத்தில் அறிந்த காரணத்தால், பின்னொரு காலத்தில் பாரதிதாசன் வேடிக்கையாகச் சொல்லுவார்: “சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளப்பதுவும் எக்காலம்?” ஒரு சிலர் கோவப் படாதீர்கள்!! இங்கே கோபுரம் பிளக்கும் கதை தான் குறியிடப் படுகிறது ;-))”

   http://odathur.blogspot.ca/2008/09/blog-post_21.html

   • சைவ சித்தந்திகள் எதற்காக கடவுள் மறுப்பு கொள்கையாளர்களிடம் சேர்ந்து போராட்டம் செய்ய வேண்டும்?

    தனித்து போராடி இருந்தால் சுமூக்மாக பிரச்னை mudinthu இருக்கும்?

 13. மசூதிகள் மற்றும் சர்சுகள் எல்லாம் அவரவர் மதத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் இந்து கோவில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அது ஏன்? மத சம்பந்தமான அணைத்தையும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏன் இதுவரை போராடவில்லை. வெளிநாட்டிலிருந்து கோடிகோடியாக பணம் வருகிறது. அரசுக்கே தெரியவில்லை. அனைத்தும் பாதிரிகளும் முல்லாக்களும் சுருட்டிக் கொள்ளுகிறார்கள். கடைநிலை மக்களுக்கு செல்வதில்லை. இதெல்லாம் உங்களுக்கு தெரியவில்லை போலும். தீட்சிதர்கள் தமிழர்கள் இல்லை என்றால், தெலுங்கு கன்னடம் மலையாளம் சௌராஷ்டிர மற்றும் பிற மொழி பேசும் மக்கள் தமிழ் நாட்டில் அதிகம் இருக்கிறார்கள். அவர்களை ஏன் விமர்ச்சிப்பது இல்லை. மதசார்பற்ற நாட்டில் இந்து மதம் சம்பந்தமான கோவில்களை மட்டும் அரசு எடுத்து நடத்துவது ஏன்? மற்றமத வழிபாட்டு தலங்களையும் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மதசார்பற்ற நாட்டில் மதம் சம்பந்தமான எதையும் அரசு எடுத்துக்கொள்ள கூடாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் இதில் நுழைகிறார்கள். “பீரங்கி வைத்து தகர்த்தவேண்டிய” தில்லை நடராசர் கோவிலுக்காக ஏன் இந்த போராட்டம்?

  நீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினால் நல்ல தீர்ப்பு என்று கொண்டாடுவதும் பொதுவாக தீர்ப்பு வழங்கினால் அதனை விமர்ச்சிப்பதும் நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.

  கோவில்கள் மற்றும் அதன் வழிபாடு விஷயங்களில் அரசும் “நாத்திக தற்குறி” கூட்டமும் தலையிடாமல் இருக்க வேண்டும். மற்ற மத வழிபாட்டு விசயங்களில் இவர்கள் சென்றால் அவர்கள் நல்ல ஆப்பு வைப்பார்கள் ! இது நன்றாக தெரிந்துதான் அங்கு செலவதில்லை!!

  தமிழ் நாட்டில் தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் தமிழர்களே! வேறுபடுத்திப்பார்ப்பது அறியாமையாகும்.

  • திரு. மு.நாட்ராயன்,

   //மசூதிகள் மற்றும் சர்சுகள் எல்லாம் அவரவர் மதத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் இந்து கோவில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அது ஏன்? ///

   இந்து மதத்தைப் போன்ற ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் தான் குருமார்கள் ஆகலாம், கருவறைக்குள் நுழையலாம், கடவுளைத் தொடலாம் என்று எந்தப் பம்மாத்தும், பாகுபாடுகளும் மசூதிகளும், சர்ச்சுகளிலும் கிடையாது. அதனால் அங்கு சாதியடிப்படையிலான பாகுபாடோ, அல்லது எந்தவிதமான தீண்டாமையோ நடைமுறையில் இல்லை. அதனால், அவை அந்தந்த மதத்தினனரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்னும் போது. சாதாரண கீழ்மட்டத்திலுள்ள முஸ்லீமோ அல்லது கிறித்தவரோ கூட அவர்களின் குருமார்களாக வந்து தேவாலய நிர்வாகச் சபையின் அல்லது வக்பு வாரியங்களில் தமது ஆளுமையைக் கொண்டிருக்க முடியும். ஆனால் இந்துக்களின் பெரிய கோயில்களில் இன்றும் எல்லாத் தமிழர்களும், குருமாராக முடியாது, கருவறைக்குள் நுழையவும் முடியாது. அதனால், இந்துக்கோவில்கள் எல்லாம் இந்துக்களின் கட்டுப்பாட்டில் இருக்க அனுமதித்தால், இந்துக்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் அதாவது பார்ப்பனர் மட்டும், அதிகளவு ஆதிக்கம் கொள்ளக் கூடிய நிலை ஏற்படுகிறது. அதை விட, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் எண்ணிக்கையையும், அவற்றின் பாரம்பரியம், அவற்றின் விலைமதிப்பற்ற தொன்மையையும் கருத்தில் கொள்ளும் போது அவை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் சரியானது என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர்.

   நீங்கள் கூறுவதின் படி பார்த்தால், சிதம்பரம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல், இந்துக்களின் கைகளில் அதாவது, இந்துக்களும், தீட்சிதர்களும் இணைந்த ஒரு கோயில் நிர்வாகசபையின் கீழ் தானிருக்க வேண்டுமல்லவா? அதுவா உங்களின் கருத்தும்?

   • u ll be killed if ur a muslim and u leave islam,u ll be killed if a sunni muslim adopts shia/ahmediya any other sect.

    Here u have liberties to manage ur own temples and ur own form of worship,they dont have that.

    • you will be killed if you are a dalit and married a dominant caste girls in Hinduism. you cannot convert from one caste to another in Hinduism. other than brahmins cannot be temple priest in Hinduism. where is the liberty?

     • my brother in law is a nadar and we are menons,if u know the history of travancore,u ll understand the animosity between the 2 communities.

      temple priest is the poorest/weakest profession in the country,i dont accept any of your arguments one bit.

      The temples do not need government support,financial or otherwise.

      Islam has an apostasy law which demands a muslim to be killed if he leaves the religion.

      Many Dalits are married to caste hindu girls,not a big deal.

  • நட்டுராயன்….

   மானே, தேனே, பொன்மானே இதெல்லாம் இடையில் போடீங்க சரி… உங்க வழக்கமான “பெட்ரோ டொலர்” பஞ்ச்ச மறந்துடீங்க…:-) 🙂

   அடிக்கடி வந்துபோகவும் “மொக்கைக்கு” ஆட்கள் தேவை…

  • //தமிழ் நாட்டில் தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் தமிழர்களே! வேறுபடுத்திப்பார்ப்பது அறியாமையாகும்.// அப்படியாயின், சம்ஸ்கிருத மந்திரங்கள் கற்ற அனைத்து சாதினரும் பிராமணர்களே என்று ஒப்புக்கொள்வீர்களா? அனைத்து கோவில்களிலும் பூசை செய்ய அனுமதிப்பீர்களா? அரசு பதவிகளில் இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு, கோயில் பூசை உரிமை ஆக்கிரமிப்பு, அரசு உயர் பதவிகள் ‘திறமை’ காட்டி ஆக்கிரமிப்பு, பார்ப்பன நீதியே தனிதான்! நாடு பார்ப்பன சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது!

 14. எந்த கோவிலில் எதை பாட வேண்டும் என்று சில வழிமுறைகள் உள்ளன. அதன்படிதான் பாடவேண்டும். முருகன் கோவிலில் “கந்தசஷ்டி” கவசம் பாடவேண்டும். திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் “சுப்பிரபாதம்” பாடவேண்டும். அதை விடுத்து திருப்பதியில் “கந்தசஷ்டி” கவசம் பாட முடியுமா? யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்களைப்போன்ற நாத்திக கூட்டம் தான் இதனை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள். சருச்சுகளில் முஸ்லீம் மத குர்ரானை ஓதமுடியுமா? மசூதியில் கிருத்துவமத பைப்பிளை ஜெபிக்க முடியுமா? நீங்கள் இதற்கு முயற்சி செய்யுங்கள். நடக்குமா என்று பார்க்கலாம். இவர்களும் தமிழர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள்!!! கோவில்கள், சருச்சுகள் மற்றும் மசூதிகள் அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சியுங்கள். அல்லது அனைத்தையும் அவரவர் மதத்திடம் ஒப்படைத்துவிடட்டும். இந்திய மத சார்பற்ற நாடு. அரசு மத விசயங்களில் தலையிடுவதும் ஆணை பிறப்பிப்பதும் தவறானது.

 15. “தில்லை கோவில் தமிழ் மக்களின் சொத்து”

  நன்றாகத்தான் சொல்லி உள்ளீர்கள். மசூதிகள் மற்றும் சர்சுகள் தமிழ் மக்களின் சொத்து அல்ல என்று மறைமுகமாக சொல்லி உள்ளீர்கள். இதற்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!!!
  அவர்கள் தமிழர்கள் அல்ல என்று கூறி உள்ளீர்கள்!!! நன்றி!!!!!

 16. //தீட்சிதர்கள் தமிழர்கள் இல்லை என்றால், தெலுங்கு கன்னடம் மலையாளம் சௌராஷ்டிர மற்றும் பிற மொழி பேசும் மக்கள் தமிழ் நாட்டில் அதிகம் இருக்கிறார்கள். அவர்களை ஏன் விமர்ச்சிப்பது இல்லை. ///

  தெலுங்கு, கன்னடம், மலையாளிகளும் தமிழ்நாட்டு மன்னர்கள், தமிழ்நாட்டு மக்களின் உழைப்பில் கட்டிய கோயில்களை ஆக்கிரமித்துக் கொண்டு, அவை தம்முடையவையென்று வாதாடினால், தமிழ்நாட்டிலுள்ள அந்தக் கோயில்களில் தமிழுக்கு இடமில்லை, என்று தீட்சிதர்கள் போல, திமிரைக் காட்டினால், அவர்களும் எதிர்க்கப்பட வேண்டியவர்களே. அவர்கள் தமது சொந்தப்பணத்தில் கோயில்களைக் கட்டி, அவர்கள் மட்டும் வணங்கினால், அதில் யாரும் தலையிடத் தேவையில்லை. தீட்சிதர்கள் சொந்தமாக ஒரு கோயிலைக் கட்டிக் கொண்டு போய் என்ன கூத்துமடிக்கலாம்.

  வெளிநாடுகளில் உள்ள இந்துக் கோயில்களின் நிர்வாகம் எப்படி நடைபெறவேண்டுமென வெள்ளையர்கள் எவரும் அலட்டிக் கொள்வதில்லை. அதே வேளை தமிழ்கிறித்தவ பாதிரிமார்கள் பலர் கூட பல பாரம்பரிய, வரலாற்றுச் சிறப்புள்ள ஐரோப்பிய தேவாலயங்களில் இன்று குருமார்களாக உள்ளனர். தமிழிலும் பூசைகள் நடைபெறுகின்றன. ஆனால் தீட்சிதர்கள் செய்வது போன்று, ஒண்ட வந்த பிடரி, ஊர்ப்பிடாரியை விரட்டிச்சுதாம் என்ற மாதிரி, ஆங்கிலத்தில் தேவாலயத்தில் பாட முடியாதென்று தமிழ்ப்பாதிரிமார்கள் கூறினால் , வெள்ளைக்கார்கள் நாயைச் சுடுவது போல் சுட்டுத் தள்ளி விடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் என்னடாவென்றால் கோயிலையே தீட்சிதர்களிடம் கையளித்து விட்டு, எருமை மாதிரி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது தானையா வேறுபாடு

  • //மதசார்பற்ற நாட்டில் இந்து மதம் சம்பந்தமான கோவில்களை மட்டும் அரசு எடுத்து நடத்துவது ஏன்? மற்றமத வழிபாட்டு தலங்களையும் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ///

   அந்த மதத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருமாறு கேட்டால், நிச்சயமாக அரசு அவற்றை எடுத்துக் கொள்ளும். இந்து வழிபாட்டுத் தலங்கள் அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டமைக்கு முதற்காரணமே பார்ப்பனீயமும் அது உருவாக்கிய தீண்டாமையும் தான். தமிழர்கள் அவர்களின் முன்னோர்களின் கோயில்களிலேயே இழிவாக நடத்தப்பட்டமையாலும், பழம்பெரும் கோயில்களின் சொத்துக்கள் சுவாகா பண்ணப் பட்டதாலும் தான் கோயில்கள் திராவிட ஆட்சியாளர்களினால் அரசுடைமயாக்கப்பட்டன.

   /மதசார்பற்ற நாட்டில் மதம் சம்பந்தமான எதையும் அரசு எடுத்துக்கொள்ள கூடாது. ///

   ஒரு மதச்சார்பற்ற நாட்டில், அதுவும் 21வது நூற்றாண்டில் எந்த பொதுச் சொத்தும் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் கட்டுப்பாடில் மட்டும் இருக்க அரசு அனுமதிக்க கூடாது.

   //கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் இதில் நுழைகிறார்கள். ///

   இது தமிழர்களின் மானப்பிரச்சனை. தில்லைக் கோயில் தமிழர்களின் வரலாற்றுச் சின்னம், தாங்கள் தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்து தான் வந்தோம் என தாமே ஒப்புக் கொள்ளும் ஒரு தமிழெதிதிர்ப்புக் குழுவினரிடம் அந்த தமிழர்களின் வரலாற்றுச் சின்னம் ஒப்படைக்கப்படுவதை, மதநம்பிக்கை இல்லாது விட்டாலும் கூட, தனது உடலில் உண்மையான தமிழ் இரத்தம் ஓடுகின்ற எந்த தமிழனும் அனுமதிக்க மாட்டான்.

   வெளிநாடுகளில் வெறும் ஐம்பது, நூறு வருடம் கொண்ட தேவாலயங்களை, அல்லது அவர்களின் அரசர்களில் யாரவது ஒருமுறை Toilet க்குப் போன வீடுகளைக் கூட அரசுடைமையாக்கிப் பாதுகாக்கிறார்கள் ஆனால். பெரும்பான்மையான தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழ்ச் சைவர்களுக்கும் முக்கியமான, தமிழர்களின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த ஆயிரமாண்டுக்கும் கூடிய வரலாற்றுக் சிறப்பு நிறைந்த கோயிலை, ஒரு பார்ப்பனக்குழுவிடம், அதுவும் அந்தப் பார்ப்பனக் குழு அதே கோயிலில் கொள்ளையடித்ததாக அவர்களே ஆளுக்காள் குற்றஞ்சாட்டிய பின்னரும், அந்தக் கோயில் அவர்களின் ஒப்படைக்கப்படுகிறதென்றால், அது தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது சொந்த மண்ணிலேயே, அதிகாரமேதுமற்ற, கையாலாகாதவர்களாக வாழ்கின்றனர் என்பதை தான் காட்டுகிறது. 🙁

 17. ///எந்த கோவிலில் எதை பாட வேண்டும் என்று சில வழிமுறைகள் உள்ளன. அதன்படிதான் பாடவேண்டும். முருகன் கோவிலில் “கந்தசஷ்டி” கவசம் பாடவேண்டும். திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் “சுப்பிரபாதம்” பாடவேண்டும்.///

  அதே போல் சிதம்பரத்தில் தேவாரம் பாடாமல் உங்கப்பன் வீட்டிலா பாடுவது.. 🙂

 18. மு.நட் ராயன் கேட்ட கேள்விக்கு அதாவது மசூதியில் சர்ச்சில் மத குருமார்களாக தாழ்த்தப்பட்டவர்களும் வரலாம் என்று சொல்லி ஆகி விட்டது. ஆனால் குரங்கு மாதிரி அடுத்த விடயத்திற்கு தாவுகின்றார் – கந்தர்சஷ்டி கவசம், சுப்புரபாதம் என்று !!!!!!!!. சரி நீங்கள் சொன்ன மந்திரங்களை அரசு சொல்லிக் கொடுத்த பள்ளிகளிலே படித்து மாணவர்கள் தயார் – அவர்களுக்கு வேலை கொடேன். உங்களை மாதிரி ஆத்திக அடிமைக் கூட்டம் கேட்கவில்லை ஆதலால்தான் நாத்திகர்கள் நாங்கள் கேட்கின்றோம். இதற்கு நீங்கள் (ஆத்திகர்கள்) நாக்கைப் பிடிங்கி கொண்டு சாகலாம்

 19. மனித உரிமை பாதுகாப்பு மய்யத்திற்கும் அதன் முன்னணி இயக்கங்களுக்கும் தீட்சிதர்கள் கற்றுக்கொடுத்திருக்கும் ஒரு அதி சிறப்பு வாய்ந்த அனுபவப் பாடமே இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. 1951-யிலேயே இந்தியா எது என்பது நிரூபிக்கப்பட்டாயிற்று, இதே வழக்கில். இந்தியா என்பது இந்து, பார்ப்பனக் கட்டமைப்பு. இங்கே வர்ணாசிரம தர்மத்தின் ஆட்சிதான் நடக்கிறது என்பதை மீண்டும் உணர்த்தி இருக்கிறார்கள். அ.சட்டம் என்பது இதனைப் பாதுகாப்பதற்கான பாதுகாவலன். வேதங்களையும் சாத்திரங்களையும் பிற மத பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் கொண்டுதான் இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. உச்ச நீதி மன்றம் உச்சிக்குடுமி மன்றம். இவர்களை வெறும் கேஸ்கட்டுகள் கொண்டு போராட முடியாது. ஆர்ப்பாட்டங்கள் வெறும் வீண். அதோ தெரிகிறது பெரியாரியல் பாதை. உச்சிக்குடுமிகளும் பூணூல்களும் அறுபடட்டும். சட்டங்கள் எரியட்டும். அல்லது எது உங்களுடைய நக்சல்பாரி போராட்டங்கள் என்று காட்டுங்கள். இந்திய சமூக இயங்கியலில் உங்கள் அமைப்பு அதி முக்கியமான காலத்திலும் இடத்திலும் தன்னை அமர்த்திக் கொண்டு என்ன செய்யப்போகிறது? பிற அமைப்புகளைக் குறை சொல்லிப் பயன் இல்லை.

  • தமிழகத்தில் பார்ப்பனியத்தை நேருக்கு நேர் கருத்திலும், களத்திலும் எதிர்கொள்வது பெரியாருக்குப் பின் நக்சல்பாரி புரட்சியாளர்கள் மட்டும்தான். இடையில் தங்களைப் போன்றவர்கள் பெரியாரின் பக்தர்கள் என்று வேண்டுமால் சொல்லிக்கொள்ளலாம். பக்தர்களால் புரட்சிகர அமைப்புகளின் பால் அவநம்பிக்கை கொள்ளலாம், ஆனால் விமர்சிப்பது கடினம்.

   • என்ன செய்யப்போறீங்க என்பது தான் கேள்வி? இந்திய இந்துப் பார்ப்பன சமூகம் உருவாக்கியிருக்கும் முட்டுச்சந்தில் நக்சல்பாரிகள் சிக்கிக் கொண்டார்கள். பெரியாரின் சமூக இயங்கியலைத் தெரிந்து கொண்டவர்களுக்கு இந்தப் போராட்டத்தின் முடிவு முன்கூட்டியே தெரிந்த ஒன்று. இதற்கு இவர் தான் முதல்வராக இருக்க வேண்டும் அவர் தான் இருக்க வேண்டும் என்று இல்லை. இங்கே நீதிமன்றங்கள் என்பன பார்ப்பனர்களின் கோட்டை. அங்கே சென்று முறையிட்ட உங்கள் அப்பாவித்தனத்தைக் கண்டு தான் பரிதாபமாக இருக்கின்றது. “விமர்சனம் போதுமா”. பெரியாருக்கு பக்தர்கள் இருக்க முடியாது.

    • சிங்காரம், பெரியார் கொள்கைவாதி என்று தங்களைக் கூறிக்கொண்டு பெரியானின் பெயரை சும்மா களங்கப்படுத்தாதீர்கள். இங்கே நீதி மன்றங்கள் என்பன பார்ப்பனக் கோட்டை என்பதற்காக அதை எதிர்க்காமல் இருக்கச் சொல்கிறீர்களா? அல்லது மக்களிடம் இந்த அநீதியைப் பற்றி அம்பலப்படுத்தாமல் இருக்க முடியுமா?

     • மக்கள் இறங்கி நடுத்தெரு வந்து தீட்சிதர்களை ஊரை விட்டே அடித்துத் துரத்த மாட்டார்கள். நீங்க தான் ஏதாவது செய்ய வேண்டும். நீதி மன்றங்கள் என்பன பார்ப்பன இந்து இந்தியாவின் வெளிக்கட்டுமானம். பார்ப்பானர்களின் இருப்பு தான் உள்கட்டுமானம். எனவே அவர்களை எதிர்ப்பது தான் – கோவிலை ஆக்கிரமிப்பு செய்து, வாழ வழியில்லாமல் ஊரை விட்டே ஓட்டுவது தான் ஒரே வழி. நக்சல்பாரிகளுக்கு இதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

      • //நீதி மன்றங்கள் என்பன பார்ப்பன இந்து இந்தியாவின் வெளிக்கட்டுமானம். பார்ப்பனர்களின் இருப்புதான் தான் உள்கட்டுமானம்.//
       இந்திய சமூகத்தில் நிலவி வரும் சாதியக் கட்டுமானம்?

       • பார்ப்பானால் தான் சாதி உருவானது. எனவே பார்ப்பானும் சாதியப் பாகுபாடும் உள்கட்டுமானங்கள் தாம். பார்ப்பான் இல்லாமல் போகும் தருணத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சாதியும் அழியத் தொடங்கிவிடும். ஏனென்றால், பார்ப்பான் இல்லாமல் போகும் தருணம் என்பது மிகவும் முற்போக்கான சமூகநிலை; அந்நிலையில் சாத்திரம் அழியும், வேதம் அழியும், வருணம் அழியும், சாதிக்குக் கொடுக்கப்பட்ட மதத்திற்குக் கொடுக்கப்பட்ட சட்ட பாதுகாவல்கள் அழியும். எனவே, தைரியமாக பார்ப்பானை விரட்டுவதில் முயற்சியெடுங்கள். முதலில் பார்ப்பானை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம். பின்பு தமிழ்நாட்டை இந்தியாவை விட்டு ஓட்டுவோம். எல்லாமே விவாதத்திற்கு உட்பட்டவையே.

 20. …நட் ராயன் மறை கழண்டவனா…..?நேர் பதில் பேசாது அங்கு இப்படி…இங்கு இப்படி…என்று சுற்றுவது ஏன்?….தமிழில் பாட மறுப்பது ஏன் என்றால்…முஸ்லிம்…கிறிஸ்தவன்..என்று உளறுவது ஏன் என்று புரியவில்லை?….ஒரு வேளை அவன் சாமிக்கு ஒரு மொழி மட்டும் தான் தெரியும் போல…! பிறகு எப்படி உன் பிரச்சனையை அவன் கேட்பான்…ஒண்ணு பண்ணலாம்…தமிழ் தெரியாத…சமஸ்கிருதம் மட்டும் தெரிந்த உன் சாமி அனைவருக்கும் அதாவது 30,3,00,00,00,000 கோடி …சாமிக்கும் இன்னும் புதுசு புதுசா கிளம்புற அதாவது கார்கில் பிள்ளையார்,விசா வழங்கும் அம்மன்,லேப்டாப் நாயகி,3G பெரிய நாயகி…..இவங்க அனைவருக்கும் பெரியார் திடலில் டியுஷன் வைக்கலாம்….!

 21. //azaan is in tamizh?//

  ஒவ்வொரு நாளும் அரபு மொழியில் ‘அல்லாஹீ அக்பர்'(இறைவனே பெரியவன்) என்று அரபியில் ‘அதான்’ அழைப்பு விடப் படுவதை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். இதை ஏன் தமிழில் மொழி பெயர்த்து சொல்லக் கூடாது? என்று கேட்பதும் நியாயமாகத்தான் படுகிறது. முதலில் இஸ்லாம் என்பது உலகம் தழுவிய மார்க்கம் எனபதை நாம் அறிவோம்.ஆப்ரிக்காவிலிருந்து ஒரு முஸ்லிம் தமிழகத்தை சுற்றிப் பார்க்க வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். தொழுகை நேரம் வந்தவுடன் பள்ளிவாசலில் இருந்து வரும் அழைப்போசையைக் கேட்டவுடன் ‘இங்கு ஒரு பள்ளிவாசல் இருக்கிறது’ என்று தொழுக சென்று விடுவார்.உலக நாடுகளில் அது கம்யூனிஷ நாடாகட்டும், அல்லது சோஷலிஷ நாடாகட்டும் எங்கு சென்றாலும் நீங்கள் கேட்கும் ஒரே ஒலி இந்த பாங்கோசைதான். இதுவும் நமது தேசிய கீதம் போல் உலக ஒருமைப் பாட்டிற்க்குத் தானே யொழிய அரபி மொழி சிறந்த மொழி என்பதற்காக அல்ல.

  • //அல்லாஹீ அக்பர்(இறைவனே பெரியவன்)என்று//—-இப்படியாரும் அர்த்தம் சொல்வதில்லை நண்பரே.அல்லாவே பெரியவன் என்றுதான் பொருள் சொல்கிறார்கள்.இஸ்லாமியர்களுக்கு இந்துக்கள் காபீர்கள்.கிறிஸ்தவர்களுக்கு இந்துக்கள் சாத்தானை வணங்குபவர்கள்.தமிழ்நாட்டில் இந்துத்துவா வளர்வதற்கு இவர்களின் பங்களிப்பு ஈடுஇனை அற்றது.

  • சிலை வழிபாத்ஐ ஒழிப்பதும், வழிப்டுபவரை கொல்வதும் வஹப்பி இஸ்லமீன் நோக்கமா இல்லய?

   விடை கூற வேண்டுகிறேன்.

 22. //நன்றாகத்தான் சொல்லி உள்ளீர்கள். மசூதிகள் மற்றும் சர்சுகள் தமிழ் மக்களின் சொத்து அல்ல என்று மறைமுகமாக சொல்லி உள்ளீர்கள். இதற்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!!!
  அவர்கள் தமிழர்கள் அல்ல என்று கூறி உள்ளீர்கள்!!! நன்றி!!!!!//

  மசூதியிலும் சர்ச்சிலும் தமிழகத்தில் வழிபாடு செய்பவர்கள் அனைவரும் பூர்வகுடிகளான தமிழர்களே! உங்களைப் போன்ற பார்பனர்களின் சாதி வெறியை கண்டு சகிக்காமல் மதம் மாறியவர்கள். வினவு போன்றவர்கள் இந்து மதத்திலேயே இருந்து கொண்டு சீர் திருத்தப் பார்க்கிறார்கள். எனக்கு என்னமோ வினவு தரப்பு வெற்றி பெறும் என்று எண்ணத் தேன்றவில்லை. பார்ப்பனத்தின் பிடி இந்து மதத்தில் அவ்வளவு இறுக்கமானது. வினவு தரப்பு வெற்றி பெற்றால் சந்தோஷமே!

 23. //இங்கு இருக்கிர முஸ்லீம் எத்தனை பெருக்கு அரபி தெரியும். அரபி தெரிந்து இருந்தால் தமிழில் பேசுவார்கலா ?//

  10 சதவீதமான உருது முஸ்லிம்கள் தமிழகத்தில் உள்ளனர். மற்ற அனைவரும் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களே! அரபு மொழி உலக ஒருமைப்பாட்டுக்காக தொழும் போதும் அதான் கொடுக்கும் போதும் பயன்படுத்துவர். வீட்டில் பேசும் மொழி அழகிய தமிழ் மொழிதான். தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களில் அரபியை சரளமாக பேசத் தெரிந்தவரகள் 2 சதவீதம் கூட தேற மாட்டார். இது தான் நிலை.

  • yeah but everyone tries broken urdu,i lived in UAE for 4 years and i have seen this happen,quite a lot.

   If i talk in tamizh,they ll reply in broken urdu.

   Azaan can be avoided,churches and temples have bells and songs on loudpseakers can be vernacular bhajanai songs or slokam in sanskrit,tamizh vazhipattu padalgalum ullathu.

   aana azaan pondra oru kaatu koochal,thaanga mudiyathathu.

 24. சர்வதேச மாமா,அரசியல் புரோக்கர்,ஈழ தமிழச்சிகளின் தாலி அறுத்த சண்டாளன் ராஜபக்சேவுக்கு குண்டிகழுவும் கோமாளி,பார்ப்பன கொடுங்கோலன்,சு.சாமியின் கோவணத்திற்குள் வேதம் ஓதும் பண்டாரஙகள் மட்டுமல்ல நாட்டாமைகளும் அடக்கம்.மைலாப்பூருக்கும் மை லார்டுக்கும் பூணூல்கொடி உறவு.இந்தியாவில் நீதிதேவதை போதையில் மிதப்பதும் நீதிமன்ற்ங்களில் போஸ்ட் மார்ட்டம் நடப்பதும் அதிசயம் அல்ல.

 25. // கிருத்துவத்திலும் இசுலாத்திலும் யார் வேண்டுமானாலும் குருவாகலாம் //
  ஹிந்துத்துவத்தின் rules கிருத்துவ இசுலாமிய rulesகளோடு ஒப்பிடுவது ஏனோ? ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு குறை மற்றும் நிறை.
  மேலும் பிராமணர்கள் தவிர மற்றவர்கள் பூசாரி ஆகமுடியாது என்பதல்ல. பல கிராமங்களில் பிராமணர் அல்லாத பூசாரிகளும் இருக்கிறார்கள். உடனே சிறு தெய்வ பெரு தெய்வ வேறுபாட்டிற்குள் குதிக்க வேண்டாம். பிராமணர் அல்லாத பூசாரி பூசை செய்யும் கோவிலில் ஒரு பிராமணர் பூஜை செய்ய இயலாது. அவ்வளவு ஏன் – எல்லா பிராமணர்களும் பார்ப்பான கோவில்களில் கருவறையில் நுழைய முடியாது. அங்கு வழிவழியாக பூசை செய்பவரே நுழைய முடியும்.
  வாடா மாநில கோவில்களில் அனைவரும் இறைவனை தொட்டு வழிபடுகிறார்கள்.
  ஆக இது உரிமை சார்ந்த விஷயமே அன்றி வேறல்ல. ஒருவர் பிழைபிற்கு ஆபத்து வரும்போது ஏழும் குமுறல். தொழிட்போட்டி அவ்வளவே.
  இது பல முறை நிறுவப்பட்ட ஒன்று இருந்தும் இதை பிடித்து தொங்குவதேனோ?

  // தமிழ் பேசுவது தடுக்கப்படுமானால் நிச்சயமாக தமிழ்பேசும் அனைவரும் எதிர்ப்பார்கள். //
  சிதம்பரம் கோவிலில் தமிழ் தேவாரம் பாடுவது பிரச்னை அல்ல என்றும் வினவிலேயே நிறுவப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் தமிழ் மட்டுமல்ல சமஸ்க்ரிதம், தெலுங்கு, கன்னடம் ஏன் எம்மொழியாயினும் தடை செய்கிறார்கள் என்பது தெளிவு. ஆனால் அரசியல் செய்வதற்காக தமிழில் (மட்டும்) பாட தடை என்று உணர்ச்சிகளை தூண்டிவிடுவதேனோ?
  பிற சமயங்களில் அதே கோவிலில் அதே அறிஞர் தேவாரம் பாடிக்கொண்டு இருக்கிறாரே. அதற்கு தடயேதுமில்லையே. இருந்தும் இதே கருத்தை திரும்பத்திரும்ப சொல்லுவதேனோ?

  • ///ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு குறை மற்றும் நிறை.///

   இப்படிச் சொல்லி பார்ப்பனர்கள் தமது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதை நியாயப்படுத்துவதிலிருந்தே நீங்கள் யார் என்று தெரிகிறது. 🙂

   //அங்கு வழிவழியாக பூசை செய்பவரே நுழைய முடியும்.///

   ஆலயப்பிரவேசம் தொடக்கம் பார்ப்பனர்கள் கடலைக் கடப்பது முதல் ஆங்கிலேயப்புத்தாண்டுக்கு நடுச்சாமத்திற்குப் பின்னும் நடை திறப்பது வரை வழி, வழியாக வந்த எத்தனையோ வழக்கங்களை இந்துக்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்களும் மீறி விட்டனர். ஏனைய தொழில்களையும் பார்ப்பனர்கள் பார்த்து அவற்றிலும் பங்கு போட்டுக் கொண்டனர், ஆனால் வழி வழியாக பூசை செய்பதில் மட்டும் தீர்க்கமாக இருப்பதற்குக் காரணம் தீண்டாமையும். பேராசையும் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். சின்ன\க் கோயில்களில் உள்ள சிவனுக்கு யாரும் பூசை பண்ணலாம், பெரிய கோயில்களில், அதாவது வருமானம் அதிகமுள்ள கோயில்களில் உள்ள சிவனுக்கு வழி வழியாக பூசை செய்யும் பிராமணர் தான் பூசை செய்ய வேண்டுமென்றால், பெரிய கோயில்களிலும், சிறிய கோயில்களிலும் வெவ்வேறு சிவபெருமானா இருக்கிறார்? இதனால் தான் மற்றவர்கள் இந்துக்களைப் பார்த்து ஏளனம் செய்கிறார்கள்

   //வட மாநில கோவில்களில் அனைவரும் இறைவனை தொட்டு வழிபடுகிறார்கள்.///

   வட மாநிலங்களில் மட்டுமல்ல, ஈழத்தில் திருக்கேதீச்சரத்திலும் சிவலிங்கத்துக்கு யாரும் தொட்டு, அபிடேகம் பண்ணலாம். அதுவும் நாயன்மார்களின் பாடல் பெற்ற, பழம்பெரும் சிவன் கோயில் தான். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான், சாதி வெறி பிடித்த பார்ப்பனர்கள் அவர்களின் “உரிமையைக்” காட்டி, தமிழ்நாட்டில், தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களாகிய தமிழர்களுக்கு தமது முன்னோர்களின் கோயில்களில் உள்ள உரிமையை மறுப்பதை, நீங்களும் நியாயப்படுத்துவதற்கு, உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவர்களின் தொழிற்போட்டிக்காக தமிழர்கள் தமது உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டுமென்பது என்ன நியாயம்?

   • //குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் தமிழ் மட்டுமல்ல சமஸ்க்ரிதம், தெலுங்கு, கன்னடம் ஏன் எம்மொழியாயினும் தடை செய்கிறார்கள் என்பது தெளிவு. ///

    தமிழ்நாட்டில் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் என்பவற்றை எங்கே எப்படி தடை செய்கிறார்கள் என்பது பற்றி தமிழர்களுக்கு கவலை கிடையாது. தமிழ்நாட்டில், தமிழர்களின் முன்னோர்களால், தமிழ்நாட்டு மன்னர்களால், தமிழர்களின் உழைப்பில், கட்டப்பட்ட கோயிலில், அதுவும் பெரும்பான்மை தமிழர்களான தமிழ்ச்சைவர்களுக்கு மட்டுமல்ல, உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழ்ச் சைவர்கள் அனைவரும் கோயில்,என்று போற்றும் தில்லையில், மாணிக்கவாசகர் திருவாசகத்தைப் பாட, அந்த ஆடவல்லானே தனது கைப்பட எழுதியதாக, தமிழர்கள் நம்பும் தில்லையில், ராஜ ராஜ சோழன் தேவார திருமுறைகளை மீட்டு, ஆடவல்லானின் [பாதங்களின் சமர்பித்த அதே தில்லைச் சிற்றம்பலத்தில், அதே தமிழ்த் தேவாரங்களை அங்கு பாட முடியாது, கீழே நின்று தான் பாடலாம், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் பாடலாம், என்று தமிழுக்குக் கட்டுப்பாடு விதிக்க, இந்த தீட்சிதன்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள் என்பது தான் கேள்வி, இது தமிழர்களின் உரிமைப் பிரச்சனை மட்டுமல்ல, மானப்பிரச்சனை என்பதால் தான் மதநம்பிக்கையில்லாத தமிழர்களே, எனக்கென்ன போச்சு என்றிருக்காமல், இந்தப் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள், மதநம்பிக்கையுள்ள என்னைப் போன்ற உலகத்தமிழர்களும் அவர்களுக்கு ஆதரவளிகின்றார்கள். எப்படியாவது தமிழ்நாட்டுத் தமிழர்கள் தில்லைக் கோயிலை தீட்சிதர்களிடமிருந்து மீட்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு.

 26. சட்டவாதமா ? புரச்சிகர நடவடிக்கைகளா ? என்று முடிவு செய்ய வேண்டிய தருணம் இது !

 27. முஸ்லீம்களும் கிருத்துவர்களும் உலகளாவிய தங்களது ஆதிக்கத்தை இந்தியாவில் நிருவுவதற்க்கத்தான் அந்தந்த நாடுகளுக்கேர்ப்ப அந்தந்த மொழிகளில் தங்களது பிரச்சாரங்களை வழிபாட்டு தளங்களில் செய்கிறார்கள். முஸ்லீம்கள் அழகான தமிழில் வீட்டில் பேசுவதாக சொல்லுவது ஏமாற்றும் செயல். அவர்களின் பெயர்கள் எல்லாம் என்ன அழகான தமிழ் மொழியிலா இருக்கிறது!! ஏன் பெயர்களை எல்லாம் தமிழ் மொழியில் வைத்துக்கொண்டு தங்களது அடையாளங்களை தமிழர் என்று நிருப்பிக்கலாமே!

  அரபு மொழிக்கென்று தனி பள்ளிகள் வைத்து நடத்துகிறார்களே அது ஏன்? அந்த பள்ளிகளில் அரபும் உருது மட்டுமே சொல்லி கொடுக்கப்படுகிறது. அதற்கும் நமது “மதசார்பற்ற அரசுகள்” இனாம் வழங்குறது இவர்களுக்கு தெரியாது போலும்! வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்காக “அல்லாஹ் அக்பர்” என்று கூவப்படுகிரதாம். என்னே விந்தை. அதற்காக அல்ல!! இந்த இடத்தில் பயங்கரவாதம் கற்றுத்தரப்படுகிறது நீங்களும் வந்து உங்கள் நாட்டில் உள்ள பயங்கரவாதத்தை இங்கு உள்ளவர்களுக்கும் சொல்லித்தாருங்கள் என்று அழைக்கிறார்கள். ஒரியாண்டல் பள்ளிகளில் தமிழில் பாடமா சொல்லிகொடுக்கிறார்கள். இல்லையே. சிறிது சிறிதாக தங்கள் மத வெறியர்களை அழைப்பதற்கும், பயங்கர வாதத்தை பரப்புவதற்கும் இந்த பள்ளிகள் பயன்படுகின்றன. அதுதான் உண்மை.

  கிருத்துவர்கள் தங்கள் வழிபாடு தளங்களில் அனைத்து சாதியினரையும் பாதிரிகளாக நியமிக்கிறார்கலாம்!! இது ஒரு அப்பட்டமான பொய்! கிருத்துவ வன்னியர், நாடார் வெள்ளாளர்கள் மற்றும் பிற உயர் ஜாதியினர் அதிகம் உள்ள பகுதிகளில் ஒரு தலித்தை பாதிரிகளாக நியமிக்க முடியாது. சருச்சுக்குள்ளேயே வெட்டு குத்து விழும். பல இடங்களில் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்காக தலித்துகள் பலமுறை போராடியும் உள்ளரார்கள். செயலுக்கு வரவில்லை.

  கடவுளை மாற்றிக்கொண்ட அவர்கள் ஏன் ஜாதியை தன்னுடனே கொண்டு செல்கிறார்கள்? இதனையும் இங்கேயே விட்டு ஜாதி இல்லாத மதமாக ஆக்கலாமே! இப்போது கிருத்துவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் தமிழைப் பற்றி பேசுகிறார்கள். அதே சமயம் கிருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமானால் அனைத்து சர்ச்சுகளிலும் தமிழை எடுத்துவிடுவார்கள். அதற்க்கு உதாரணமாக நாகாலாந்து மற்றும் மேகலாய மாநிலங்களை சொல்லலாம். அந்த மாநிலங்களில் முன்பு தாய் மொழி வேறு . கிருத்துவர்கள் பெரும்பான்மையானது அதனை ஒழித்துவிட்டு ஆங்கிலத்தை அங்கு திணித்து உள்ளார்கள். அந்த மாநில மக்களை இப்போது போய் கேட்டால் எங்களது தாய் மொழி ஆங்கிலம் என்றுதான் கூறுவார்கள். இதுதான் நடந்து வருகிறது. ஒரு காலத்தில் தமிழ் நாட்டிலும் இந்த நிலைதான் ஏற்ப்படும். பாதிரியார்கள் சொல்வதை அப்படியே எற்பார்கள். இதுதான் எதார்த்த நிலை.

  தில்லையில் கந்தசஷ்ட்டி பாட நீங்கள் ஏன் சொல்லவில்லை. தமிழர்கள் கோவிலை கட்டினார்கள்!!!! அந்த கோவிலுக்கு யாரை தீட்சிதர்களாக நியமித்தார்கள்? தமிழர்கள் தான் அதனையும் நியமித்து உள்ளார்கள். அது வழி தோன்றலாக உள்ளது. அணைத்து பிராமினர்களுக்கும் இந்த உரிமை கிடையாது.
  சில தனியார் கோவில்களில் பிராமணர்கள் பூஜை செய்கிறார்கள். அதை நியமித்தது அந்த கோவிலின் நிர்வாகஸ்தர்கள் தான். பிராமிணர்கள் தங்களைத்தானே நியமித்துக்கொள்ள வில்லை.

  • திரு. மு.நாட்ராயன்,

   //முஸ்லீம்களும் கிருத்துவர்களும் உலகளாவிய தங்களது ஆதிக்கத்தை இந்தியாவில் நிருவுவதற்க்கத்தான் அந்தந்த நாடுகளுக்கேர்ப்ப அந்தந்த மொழிகளில் தங்களது பிரச்சாரங்களை வழிபாட்டு தளங்களில் செய்கிறார்கள். ///

   எந்த மதக்குழுவினரும் தமது மதக்கொள்கைகளை மற்றவர்களுக்கு விளங்கும் மொழியில் எடுத்துக் கூறலாம். அது எல்லா சனநாயக நாட்டிலும் அரசியலமைபில் உறுதிப்படுத்தப்பட்ட கருத்துச் சுதந்திரமாகும். ஆனால் குறிப்பிட்ட ஒரு சாதியினர் மட்டும், தமிழர்களுக்குப் புரியாத மொழியில் தான், தமிழர்கள் தமது கோயில்களில் வழிபாடு செய்ய வேண்டுமென்பது எந்த விதத்தில் நியாயம்? தமிழர்களின் தாய்மொழியில், தமது முன்னோர்களின் கோயில்களில், அதுவும் தமிழ்நாட்டில் வழிபாடு செய்ய சிலர் மறுப்பதாலும், தமிழர்களின் கோயிலில், தமிழ் வேதமாகிய தேவாரங்களைப் தமிழில் பாடுவதற்கு, எங்கிருந்தோ வந்த ஒரு சாதிக்குழுவினர், கட்டுப்பாடுகள் விதித்ததாலும் தான், நான் உங்களுக்கு இங்கே பதிலெழுத வேண்டிய தேவை ஏற்பட்டதே தவிர, முஸ்லீம்களாலும், கிறித்தவர்களாலும் இந்தப் பிரச்சனை ஏற்படவில்லை. அப்படியிருக்க எதற்காக முஸ்லீம்களையும், கிறித்தவர்களையும் பற்றிப் பேசுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.

   //முஸ்லீம்கள் அழகான தமிழில் வீட்டில் பேசுவதாக சொல்லுவது ஏமாற்றும் செயல்///

   நீங்கள் எங்கிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது, இலங்கை முஸ்லீம்கள் அவர்களது மொழிவழிச் சகோதர்களாகிய தமிழர்களின் முதுகில் குத்தி விட்டார்கள் என்ற மனத்தாபம் எனக்கிருந்தாலும் கூட, தமிழ்நாட்டிலுள்ள தமிழ் முஸ்லீம்களும், இலங்கை முஸ்லீம்களும் தமிழில் தான் வீட்டில் பேசுகிறார்கள் என்ற உண்மை எனக்குத் தெரியும். எனக்கும் நிறைய முஸ்லீம் நண்பர்கள் உண்டு.

   //அவர்களின் பெயர்கள் எல்லாம் என்ன அழகான தமிழ் மொழியிலா இருக்கிறது!! ஏன் பெயர்களை எல்லாம் தமிழ் மொழியில் வைத்துக்கொண்டு தங்களது அடையாளங்களை தமிழர் என்று நிருப்பிக்கலாமே!///

   பெரும்பாலான இந்துக்களின் பெயர்கள் கூட தமிழில் இல்லையே சமக்கிகிருத்தில் அல்லவா இருக்கிறது அப்படியானால் அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா?

   ///அரபு மொழிக்கென்று தனி பள்ளிகள் வைத்து நடத்துகிறார்களே அது ஏன்?///

   பிராமணக் குழந்தைகளுக்கென்று தனியான சமக்கிருதப்பள்ளிகள்- வேதபாடசாலைகளை நடத்துகிறார்களே அது ஏன்? அரபு பாடசாலைகளிலாவது தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதில்லை.

   //அந்த பள்ளிகளில் அரபும் உருது மட்டுமே சொல்லி கொடுக்கப்படுகிறது. அதற்கும் நமது “மதசார்பற்ற அரசுகள்” இனாம் வழங்குறது இவர்களுக்கு தெரியாது போலும்! //

   வேதபாடசாலைகள் அமைத்து பிராமணக் குழந்தைகளுக்கு சமக்கிருதம் கற்பிக்கவும், தீண்டாமையை வளர்க்கவும் கூடத் தான் தமிழர்களின் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது.

   //இந்த இடத்தில் பயங்கரவாதம் கற்றுத்தரப்படுகிறது நீங்களும் வந்து உங்கள் நாட்டில் உள்ள பயங்கரவாதத்தை இங்கு உள்ளவர்களுக்கும் சொல்லித்தாருங்கள் என்று அழைக்கிறார்கள்.///

   நீங்கள் இப்படிச் சொன்னால், பிராமணர்களின் வேதபாடசாலைகளில் சமக்கிரதத்தை மட்டும் தான் கற்பிக்கிறார்கள். அங்கு தான் பார்ப்பனக் குழந்தைகளுக்கு தீண்டாமையும், மற்ற இன, மத மக்களை வெறுக்கவும் போதிக்கப்படுகிறது என, முஸ்லீம்கள் உங்களுக்குப் பதிலளிக்க எவ்வளவு நேரமாகும் என்பதை சிந்தித்துப் பார்த்தீர்களா? 🙂

   //கிருத்துவர்கள் தங்கள் வழிபாடு தளங்களில் அனைத்து சாதியினரையும் பாதிரிகளாக நியமிக்கிறார்கலாம்!! ///

   இந்து மதத்துடன் ஒப்பிடும் போது கிறித்தவத்திலும், இஸ்லாத்திலும் எல்லோரும் தங்கு தடையின்றி குருமாராகலாம்,

   //இது ஒரு அப்பட்டமான பொய்! கிருத்துவ வன்னியர், நாடார் வெள்ளாளர்கள் மற்றும் பிற உயர் ஜாதியினர் அதிகம் உள்ள பகுதிகளில் ஒரு தலித்தை பாதிரிகளாக நியமிக்க முடியாது. ///

   ஆனால் ஒரு தலித் பாதிரியாராக முடியும் பாப்பாண்டவரின் பார்வையில் அவர் ஒரு தலித் பாதிரியார் அல்ல வெறும் கத்தோலிக்க பாதிரியார் தான். உள்ளூர் மட்டத்திலுள்ள சாதிப்பாகுபாட்டுக்குக் காரணம், பார்ப்பனீயம் அவர்களின் பூர்வீக இந்து மதத்தின் வழியாக அவர்களுக்கு அறிமுகப்படுத்திய சாதி. அதற்கு கிறித்தவத்தை குற்றம் கூற முடியாது. அதற்கு அவர்கள் தமது இந்து முன்னோர்களைத் தான் திட்ட வேண்டும்.

   //இதனையும் இங்கேயே விட்டு ஜாதி இல்லாத மதமாக ஆக்கலாமே! ///

   கிறித்தவத்தில் பிறப்பின் அடிப்படையிலான ஜாதி இல்லை. தமிழர்கள் தமது ஜாதியை விட முடியாமல் இருப்பதற்கு எப்படி கிறித்தவம் பொறுப்பேற்க முடியும். அவர்கள் அதை அறிமுகப்படுத்தவில்லையே.

   //. ஒரு காலத்தில் தமிழ் நாட்டிலும் இந்த நிலைதான் ஏற்ப்படும். பாதிரியார்கள் சொல்வதை அப்படியே எற்பார்கள். இதுதான் எதார்த்த நிலை.///

   ஈழத்தில் தமிழுக்காக, தமிழீழ விடுதலைக்காக பாதிரிமார்கள் செய்த தியாகம், உயிர்த்தியாகம் உட்பட, அளப்பரியது. அப்படி தமிழ்ப் பாதிரிமார்கள் தமிழுக்காக உயிரைத் தியாகம் செய்த போது, இந்துக் கோயில்கள் சிங்கள இராணுவத்தால், கொள்ளையடிக்கப்பட்டு, அழிக்கப்பட்ட போது, ஈழத்து இந்துக்கள் கொல்லப்பட்ட போது, இந்துக் குருமார்கள், இலங்கையிலும, தமிழ்நாட்டிலும் சிங்களத் தலைவர்களுக்கு பாதபூசை செய்து, அவர்களை வரவேற்று பசப்பு வார்த்தை பேசிக் கொண்டிருந்தனர் என்பதையும் மறந்து விடக் கூடாது.

   //தில்லையில் கந்தசஷ்ட்டி பாட நீங்கள் ஏன் சொல்லவில்லை.!!!///

   தில்லையில் எதற்காக கந்தசஸ்டி பாடவேண்டும், அதற்கு தான் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குன்றிலும் முருகன் ஆடிக் கொண்டிருக்கிறானோ. தில்லையில் ஆடவல்லானுக்கு முன்னால் பாட வேண்டியதது அவனுக்குப் பிடித்த தேவார திருமுறைகள் தான் என்பது உங்களுக்குத் தெரியாதா?. அதைத் தான் ஆறுமுகசுவாமி தனது தள்ளாத வயதிலும், தீட்சிதர்களின் எதிர்ப்பின் மத்தியிலும் செய்து அவர்களிடம் அடி வாங்கினார்.

   //தமிழர்கள் கோவிலை கட்டினார்கள்! அந்த கோவிலுக்கு யாரை தீட்சிதர்களாக நியமித்தார்கள்? தமிழர்கள் தான் அதனையும் நியமித்து உள்ளார்கள்.///

   தமிழர்கள் தான் கோயிலைக் கட்டினார்கள் தீட்சிதர்களல்ல, என்ற உண்மையை ஒப்புக் கொண்டமைக்கு நன்றி. நீங்கள் உங்களின் வீட்டைக் கட்டி, அதைப் பாரமரிக்க நியமிக்கும் வேலைக்காரர்கல் அல்லது அந்த வேலைக்காரர்களின் வாரிசுகள் உங்களின் வாரிசுகளிடம் வீட்டில் உரிமை கோரி வாதாடுவதை நீங்கள் விரும்புவீர்களா? அப்படி நடக்குமென்று தெரிந்தால். நீங்கள் அந்த வேலைக்காரர்களை வேலைக்கு அம்ர்த்துவீர்களா?

   //அது வழி தோன்றலாக உள்ளது. அணைத்து பிராமினர்களுக்கும் இந்த உரிமை கிடையாது.///

   தீட்சிதர்களின் பூசை செய்யும் உரிமையைப் பறிக்க வேண்டுமென்று எந்த தமிழனும் கூறவில்லை. தமிழர்களின் பாரம்பரிய, பழமை வாய்ந்த கோயில் தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழிருக்க வேண்டுமே தவிர, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்குச் சொந்தமாக, அவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க கூடாதென்பது தான் தமிழர்களின் வாதம்.

  • //… அந்த கோவிலுக்கு யாரை தீட்சிதர்களாக நியமித்தார்கள்? தமிழர்கள் தான் அதனையும் நியமித்து உள்ளார்கள். அது வழி தோன்றலாக உள்ளது. அணைத்து பிராமினர்களுக்கும் இந்த உரிமை கிடையாது.
   சில தனியார் கோவில்களில் பிராமணர்கள் பூஜை செய்கிறார்கள். அதை நியமித்தது அந்த கோவிலின் நிர்வாகஸ்தர்கள் தான். பிராமிணர்கள் தங்களைத்தானே நியமித்துக்கொள்ள வில்லை.//

   தீட்ஷிதர்களை நியமித்த தமிழர்களுக்கு அவர்களை நீக்க உரிமை கிடையாதா? அவர்களை பூசை செய்யும் ஊழியர்களாக நியமித்தார்களா அல்லது நிரந்தர உரிமை சாசனம் எழிதிக் கொடுத்திருக்கிரார்களா? டாடா காருக்காகநில ஏழைகளின் நிலத்தை அரசு ஆகிரமிப்பு செய்யலாம், ஆனால் பொது கோவிலை அரசு ஏற்று நடத்த கூடாதா? பார்ப்பன நியாயம் ஏழைக்கு ஒருநீதி, பார்ப்பானுக்கு ஒருநீதி சொல்கிறதா?

 28. ///பெரும்பாலான இந்துக்களின் பெயர்கள் கூட தமிழில் இல்லையே சமக்கிகிருத்தில் அல்லவா இருக்கிறது அப்படியானால் அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா?///

  இவர்கள் எல்லாம் தமிழர்களா அல்லது தமிழர்கள் அல்லவா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். இந்துக்கள் சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கிறார்கள் என்பதால்தான் முஸ்லீம்களும் கிருத்துவர்களும் அரபு மற்றும் லத்தீன் மொழிகளில் பெயர் வைக்கிறார்களா? இதற்குத்தான் நீங்கள் வக்காலத்து வாங்கிகிரீர்கள் போலும். அனைத்து இந்துக்களும் சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பதில்லை. ஆனால் அனைத்து முஸ்லீம்களும் கிருத்துவர்களும் தமிழில் பெயர் வைப்பதில்லை என்று உங்களுக்குத் தெரியவில்லை போலும். அதிக அளவில் தமிழ் பெயர் வைப்பது இந்துக்கள்தான். மற்ற மதத்தினர் அல்ல.இது கூட பல ஆண்டுகளாக இருந்து வந்த பழக்கம். இதுகூட தெரியவில்லை போலும். அவர்கள் வைக்கும் பெயர்கள் தமிழர்களின் வாயில் நுழைவதே இல்லை.இதற்கு ஏதேனும் வழி காணுங்கள். “தில்லை நடராசன்” அருளால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.

  இலங்கையில் போர் நடந்து கொண்டு இருந்த போது அங்கு இருந்த முஸ்லீம்கள் அனைவரும் தமிழர்களுக்கு (விடுதலைப் புலிகளுக்கு) எதிராக இருந்தார்கள். புலிகளின் இருப்பிடங்களை காட்டிக்கொடுத்தார்கள். அப்போது கூட இந்தியாவில் (தமிழகத்தில்) இருந்த முஸ்லீம்தலைவர்கள் இலங்கை தமிழர்களுக்கு எதிராகத்தான் செயல் பட்டார்கள். முஸ்லீம்களின் காட்டிக்கொடுக்கும் செயல்களை கண்டித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடந்தது. அதில் 1௦௦ க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டதாக கூறி அதற்கு நினைவு மண்டபம் எழுப்பி உள்ளார்கள். நாம் தமிழர்களுக்கு ஆதரவாக இங்கு முள்ளி வாய்க்கால் நினைவு தூண் கட்டியுள்ளோம். ஆனால் முஸ்லீம்கள் இலங்கை தமிழர்களுக்கு எதிராக உள்ளார்கள். இங்கு உள்ள முஸ்லீம்களும் அதற்கு ஆதரவாக உள்ளார்கள்.

  //////ஈழத்தில் தமிழுக்காக, தமிழீழ விடுதலைக்காக பாதிரிமார்கள் செய்த தியாகம், உயிர்த்தியாகம் உட்பட, அளப்பரியது. அப்படி தமிழ்ப் பாதிரிமார்கள் தமிழுக்காக உயிரைத் தியாகம் செய்த போது, இந்துக் கோயில்கள் சிங்கள இராணுவத்தால், கொள்ளையடிக்கப்பட்டு, அழிக்கப்பட்ட போது, ஈழத்து இந்துக்கள் கொல்லப்பட்ட போது, இந்துக் குருமார்கள், இலங்கையிலும, தமிழ்நாட்டிலும் சிங்களத் தலைவர்களுக்கு பாதபூசை செய்து, அவர்களை வரவேற்று பசப்பு வார்த்தை பேசிக் கொண்டிருந்தனர் என்பதையும் மறந்து விடக் கூடாது//////

  உங்களுடைய இந்த கருத்து பரிதாபமாக உள்ளது. கிருத்துவர்கள் இங்கு பிரச்சாரம் செய்யும் போது கிறிஸ்துதான் உங்களை காப்பார் என்றுதான் பிரச்சாரம் செய்கிறார்கள். ஏன் அந்த கிறிஸ்து அங்குள்ள மக்களை காப்பாற்ற வில்லை.ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் இந்துக்களுக்கு என்று ஒரு பொது அமைப்பு கிடையாது. சுதந்திரமாக தனித் தனியாகத்தான் செயல் படுகிறார்கள். ஒருக்கினைப்பு கிடையாது. ஒரு ஊரில் கோவில் கட்டவேண்டுமால் கூட அந்த ஊரை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பணம் வசூல் செய்து பல சிரமங்ககளுகிடையே கோவிலை கட்டுகிறார்கள். மேல் மட்டத்திலிருந்தோ வெளி நாடுகளில் இருந்தோ பணம் வருவதில்லை. ஆனால் கிருத்துத்தில் அப்படி இல்லை. ஒரு ஊரில் ஒரு கிருத்துவர் இருந்தால் போதும் “எங்கிருந்தோ” பணம் வருகிறது!!!! அதில் சிறிய அளவில் பிரமாண்டமாக “சருச்சை” கட்டிவிடுகிறார்கள்.

  தமிழர்களுக்கு அவர்களால் உருவாக்கப்பட்ட தெய்வம்தான் உண்மையான “தமிழ் கடவுள்”. முருகப்பெருமானும் காளி மாரி போன்ற தெய்வங்களே தமிழர்களின் தெய்வம். நீங்கள் கூறும் தேவாரம் திருவாசகம் திருக்குறள் போன்றவைகள் தான் தமிழர்களின் “வேதங்கள்”. வெளி நாட்டு மதங்களுக்காக வக்காலத்து வாங்குவதை விடுத்து உண்மையான தமிழர்களுக்காக வாதட முயற்சி செய்யுங்கள்!!!! நல்ல தமிழனாக வாழ முயற்சி செய்யோம்!!

  • வி.பு.களால் யாழ்ப்பாணத்திலிருந்து 100,000 இற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் தமது பணம்,உடமைகள் பிடுங்கப்பட்டு தமது சொந்த வாழிடங்களை விட்டு விரட்டப்பட்டார்கள்.இதனை எவ்விதத்திலும் நியாயப்படுத முடியாது.

   நாத்திகம்,ஆத்திகம் கடந்து தமிழர்களாய் ஒன்ட்ரு பட்டு நிர்பது தீட்சிதர்கலின் வயிற்றை கலக்குகிரது.

 29. // அவர்களின் தொழிற்போட்டிக்காக தமிழர்கள் தமது உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டுமென்பது என்ன நியாயம்? //

  தமிழில் பாடுவது உரிமையே. மிகச்சரி. ஆனால் கோவிலை நிர்வாகிப்பவர்கள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதற்கு உடன்பட்டு நமது உரிமையை நிலைநாட்டலாமே.
  ஏன் அக்கட்டுப்பாடுகளை விதித்தனர் என ஆராய்ந்து இரு தரப்பும் பேசி சரி செய்வதைவிட்டு விதிகளை அப்படிதான் மீறுவோம் என்பது போகா ஊரின் வழியன்றோ?
  இக்கூறினால் தான் singapore அரசு பல தமிழர்களை நாடு கடத்த வேண்டியதாயிற்று.

  // ஒரு குறிப்பிட்ட சாதியினருக்குச் சொந்தமாக, அவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க கூடாதென்பது தான் தமிழர்களின் வாதம். //

  இதில் தாரை வார்ப்பது எங்கே? நீங்கள் கூறுவது கோவிலுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் தீட்சிதர்களுக்கு பிரித்து கொடுப்பது போலும் இதில் அவர்கள் நினைத்தால் யாரை உள்ளே அனுமதிக்க அல்லது மறுக்க முடியும் என்பது போல் உள்ளது. அவ்வாறல்லவே. கோவில் பொது தான் ஆனால் அதை நிர்வகிப்பது யார் என்பது தான் கேள்வி. அதற்கு பதில் கிடைத்துள்ளது. இது சிறந்த பதிலா என்பது கேள்வி குறி. அதற்காக தர்ம தரிசனம் செய்ய வருபவன் தொலைவிலிருந்தும் காசு கொடுப்பவனுக்கும் VIPகளுக்கும் மிக நெருக்கத்தில் தரிசனம் செய்ய விடும் அரசாங்கத்திடம் மட்டும் எப்படி நிர்வாகத்தை ஒப்படைப்பது?
  மேலும் ஒரு திருடனிடமிருந்து மற்றோர் திருடனுக்கு எதற்கு கொடுக்க? அதற்கு இருக்கற திருடன் கிட்டயே வச்சுக்க சொல்லிட்டு மற்றோர் திருடனை கண்காணிக்க சொல்லலாம். அது உத்தமம்.

  • //தமிழில் பாடுவது உரிமையே. மிகச்சரி. ஆனால் கோவிலை நிர்வாகிப்பவர்கள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதற்கு உடன்பட்டு நமது உரிமையை நிலைநாட்டலாமே.///

   கோவிலைப் பாரமரிக்க நியமிக்கப்பட்டவர்கள் இன்று பெரும்பான்மையினரான கோயில் சொந்தக்காரர்களுக்கு, அதாவது அவர்களின் தாய்மொழிக்கு, அவர்களின் முன்னோர்களின் கோயிலில் தடை விதிக்கிறார்கள். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய தேவை தமிழர்களுக்குக் கிடையாது, மாறாக இந்த தீட்சிதர்கள், அவர்களுக்கு சோறு போடும் தமிழைப் போற்ற வேண்டும். தமிழ்த்தேவாரங்களுக்கு தில்லையினல் முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில், தமிழுக்கு, அதிலும் தேவாரத்துக்கு சிதம்பரத்தில் முன்னுரிமை கிடைக்காது விட்டால், வேறெங்கு கிடைக்கும்?

   //நீங்கள் கூறுவது கோவிலுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் தீட்சிதர்களுக்கு பிரித்து கொடுப்பது போலும் இதில் அவர்கள் நினைத்தால் யாரை உள்ளே அனுமதிக்க அல்லது மறுக்க முடியும் என்பது போல் உள்ளது///

   இந்த தீர்ப்பின்படி, மற்றவர்கள், அதாவது தமிழக அரசே கேள்வி கேட்க முடியாதளவுக்கு, கோயில் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது, இவ்வளவு காலமும், திமுக அரசின் கீழ் நியமித்த அறநிலையத்துறை அதிகாரியுடன் கூட அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?. அவர் கடிதம் எழுதிப்போடுவதோடு சரி. தீட்சிதர்கள் அவரைக் கணக்கேடுக்கவேயில்லை. சில வருடங்களுக்கு முன்னால் நான் அங்கு சென்றிருந்த போது, சாமி கும்பிட முதல், அங்கு ஒரு தீட்சிதர் நீட்டிய நீண்ட புத்தகத்தில் ஒரு தொகையை எழுதாததால், அந்த தீட்சிதன் விடமாட்டேன் என்று அடம்பிடித்ததால், நான் இன்றுவரை சிதம்பரத்தில் சிவகாமி அம்மனைத் தரிசிக்கவில்லை. அதற்குப் பின்னர் எத்தனையோ முறை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலுள்ள கோயில்களுக்குக் கூட போன நான், சிதம்பரத்துக்குப போகவில்லை. .

   //கோவில் பொது தான் ஆனால் அதை நிர்வகிப்பது யார் என்பது தான் கேள்வி. அதற்கு பதில் கிடைத்துள்ளது. இது சிறந்த பதிலா என்பது கேள்வி குறி. ///

   சிறந்த பதில் அல்ல என்பதை அறிந்ததாலும், குளறுபடிகள் நடந்ததாலும் தீட்சிதர்களே, ஒருவர் மீது ஒருவர் கொள்ளையில் குற்றம்சாட்டி போலீசுக்குப் போனதாலும் தானே, திமுக அரசு அறநிலையத்துறையின் கீழ் சிதம்பரம் கோயிலைக் கொண்டு வந்தது என்பது உங்களுக்குத் தெரியாதா?

   //அதற்காக தர்ம தரிசனம் செய்ய வருபவன் தொலைவிலிருந்தும் காசு கொடுப்பவனுக்கும் VIPகளுக்கும் மிக நெருக்கத்தில் தரிசனம் செய்ய விடும் அரசாங்கத்திடம் மட்டும் எப்படி நிர்வாகத்தை ஒப்படைப்பது?///

   இப்பொழுது நிலைமை இன்னும் மோசமாகலாம். அறநிலையத்துறையின் கீழ் உள்ள, மதுரை, திருச்செந்தூர் போன்ற பெரிய கோயில்களிலேயே பட்டப்பகலில் காசு பிடுங்குகிறார்கள். அப்படியிருக்க, அவர்களின் முழு நிர்வாகத்தில் எப்படியெல்லாம் கூத்தடிப்பார்கள் என்பதை நினைக்கவே பயமாக இருக்கிறது.

   //மேலும் ஒரு திருடனிடமிருந்து மற்றோர் திருடனுக்கு எதற்கு கொடுக்க? அதற்கு இருக்கற திருடன் கிட்டயே வச்சுக்க சொல்லிட்டு மற்றோர் திருடனை கண்காணிக்க சொல்லலாம். அது உத்தமம்///

   விடிய விடிய ராமர் கதை விடிஞ்ச பிறகு ராமனுக்கு சீதை என்ன முறை என்றானாம். அப்படிக் கண்காணிக்க நியமித்த “திருடனை”, உச்சநீதிமன்றம் போய் அகற்றி விட்டார்கள். என்பதைத் தானே எல்லோரும் இங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

  • //தமிழில் பாடுவது உரிமையே. மிகச்சரி. ஆனால் கோவிலை நிர்வாகிப்பவர்கள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதற்கு உடன்பட்டு நமது உரிமையை நிலைநாட்டலாமே.//

   உண்மைதான்! ஆங்கிலேயர்கள் சில கட்டுப்பாடுகள்நம்மீது வைத்திருந்தார்கள், அதை ஏற்றுக்கொண்டு அடிமை சேவகம் செய்துகொண்டிருக்கலாமே! தன்மானம் அற்றவருக்கு சுதந்திரம் எதற்கு?

   //கோவில் பொது தான் ஆனால் அதை நிர்வகிப்பது யார் என்பது தான் கேள்வி. //
   நல்ல கேள்விதான்! கோவில் பொது என்றால் அதை நிர்வகிக்கும் பொறுப்பாளர்களை நியமிக்கவும்,நீக்கவும் பொது மக்கள் பிரதிநிதியான அரசுக்குத்தானே உரிமை?

   //மேலும் ஒரு திருடனிடமிருந்து மற்றோர் திருடனுக்கு எதற்கு கொடுக்க? அதற்கு இருக்கற திருடன் கிட்டயே வச்சுக்க சொல்லிட்டு மற்றோர் திருடனை கண்காணிக்க சொல்லலாம். அது உத்தமம்.
   //

   காஙகிரசு ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது! பி ஜே பி ஆட்சிக்கு வந்தால் மேலும் உழல் செய்யத்தான் போகிரது! அதனால், காஙகிரசையே தொடர்ந்து ஆட்சி செய்ய விட்டு விடலாம், இந்த தெர்தல் கீர்தல் எல்லாம் வேண்டாமே, இல்லையா காப்பி அவர்களே!

 30. திரு நட்ராயன்!

  //அவர்களின் பெயர்கள் எல்லாம் என்ன அழகான தமிழ் மொழியிலா இருக்கிறது!!

  தமிழில் பெயர் வைக்க இஸ்லாத்தில் தடை இல்லை. நான் தமிழில் எனது பெயரை வைத்தால் என்ன ஜாதி என்று அடுத்த கேள்வி வரும். சாதியைத் துறக்கத்தான் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தை தழுவும்போது திரும்பவும் அதே அடையாளம் வருவதை தவிர்க்கத்தான் அரபு பெயர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். சாதிகளற்ற சமூகமாக தமிழ் சமூகம் மாறி விட்டால் எனது பெயரையும் தமிழிலேயே வைத்துக் கொள்வேன். குர்ஆனில் அதற்கு எந்த தடையும் இல்லை.

  நபி ஆப்ரஹாம்(இப்றாகிம்) ஒரு அரபியரல்ல. முகமது நபியின் தோழர் ஈரான் தேசத்தை சேர்ந்த சல்மான் ஃபார்ஸி தனது பூர்வீக பெயருடனேயே இருந்தார். முகமது நபி அவர் பெயரை மாற்றவில்லை. ராமன், கிருஷ்ணன் போன்ற கடவுள் பெயர்களை தவிர்த்து அன்பழகன், அறிவழகன், ஆரோக்கியம், சாந்தி, மலர்க்கொடி என்ற அழகிய தமிழ் பெயர்களை வைக்க இஸ்லாத்தில் தடை இல்லை.

  மற்றபடி மிக அழகிய விளக்கங்களைக் கொடுத்த வியாசனுக்கு நன்றி!

 31. // பிராமணர் அல்லாத பூசாரி பூசை செய்யும் கோவிலில் ஒரு பிராமணர் பூஜை செய்ய இயலாது.//

  செய்ய இயலாது அல்ல அங்கு பூஜை செய்ய பாப்பான் வரமாட்டான்.

 32. ஹலோ பாப்பான்ஸ் என்னதான் நீங்க தேனில் நெய்யொழுக பேசினாலும் நீங்கள் ஒரு தனி வகையறா என்பதை உங்களால் மறைக்க முடியவில்லை. மற்ற சாதிக்காரர்கள் எல்லாம் தமிழில் பூஜை செய்வதை எதிர்ப்பதில்லை. அப்படி எதிர்ப்பது நீங்கள் ஒரு வகையறா மட்டுமே.

 33. குரானும் பைபிளும் தமிழிலும் இருக்கிறது பாப்பான் ஓதும் வேதத்தையும் தமிழில் வெளியிடுவீர்களா?

  • ///குரானும் பைபிளும் தமிழிலும் இருக்கிறது பாப்பான் ஓதும் வேதத்தையும் தமிழில் வெளியிடுவீர்களா?///

   குரானும் பைப்பிலும் தமிழில் இல்லை. தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது!! ஆனால் தமிழில் தேவாரம் திருவாசகம் திருப்பாவை திருவெண்பாவை இன்னும் எத்தையோ நூல்கள் இருக்கின்றன. இதனை கொண்டு தமிழில் ஆண்டவனை வணங்கலாம். தனியார் கோவில்கள் மற்றும் ஜாதி கோவில்கள் பல உள்ளன. அதிலெல்லாம் தமிழில் ஓதப்படுகிறது. இந்தியவில் பல்வேறு அரசர்கள் பல்வேறு காலக்கட்டத்தில் ஆண்டு வந்துள்ளார்கள். ஏராளமான மொழிகள் அனைத்து பகுதிகளிலும் பேசப்பட்டு வந்தது. ஒரே ஊரில் பல மொழிகளை மக்கள் பேசி வந்தார்கள். ஆண்டவனை வழிபட பொது மொழியாக சமஷ்கிருதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. சமஷ்கிருதத்தில் ஏராளமான தத்துவங்களும் நீதிகளும் இயற்றப்பட்டு இருந்தது. இப்போதும் சமஷ்கிருதத்தில் இல்லாதது அறிவியலில் இல்லை என்று கூறலாம். வான சாஸ்த்திரங்கள் முழுமையாக சமஷ்கிருததில் உள்ளது. நம்மால் இதனை படிப்பதற்கு நேரம் இல்லை அல்லது முதிர்ச்சி இல்லை. அதனால் வெறுப்பை கக்கி வெறுக்கிறோம்.

   • //ஆண்டவனை வழிபட பொது மொழியாக சமஷ்கிருதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது//

    இத எதாவது டவுசர் போட்ட RSS காரன் இருப்பான் அவன் கிட்ட போய் சொல்லூ.

    //சமஷ்கிருதத்தில் ஏராளமான தத்துவங்களும் நீதிகளும் இயற்றப்பட்டு இருந்தது//

    மனுநீதியை அரசியல் அமைப்புச் சட்டமாக்கிட சொல்றேல்!!!

    சரியான காமடி பீஸ்யா நீர் ha ha ha!!!

    //இப்போதும் சமஷ்கிருதத்தில் இல்லாதது அறிவியலில் இல்லை என்று கூறலாம். வான சாஸ்த்திரங்கள் முழுமையாக சமஷ்கிருததில் உள்ளது//

    ஏயா இவ்வளவு நாளா எங்க இருந்த உன்னைய தான் ISRO ல rocket விடுரதுக்கும், HAL (Hindustan aeronautics limited) aeroplane செய்யுறதுக்கும், தேடிக்கிட்டு இருந்தாங்க!!!. இது தெரியாம நம்ம இந்தியா போயி ரஷ்யாகிட்டயும், அமெரிக்காகிட்டயும் technology பிச்சை எடுத்துகிட்டிருக்குதே.

    பேசாம ஜோசியர்கலையும், மணி அடிக்கிற பார்பனர்களையும் direct ஆ scientist ஆக்கிட்டா இந்தியா அறிவியல்ல வளர்ந்துரும்.

    • The GSLV rocket launched recently was the result of 20 years of tireless research and hard work of many scientists of ISRO.But ISRO chief offered worship to Thiruppathi Balaji not only after that launch but also before every launch.The Mangalyan was built with indigenous materials by over 500 scientists within a short period.The ISRO chief never believed in the capacity or talent of his fellow scientists.Even after the start of the 48 hour count down for Mangalyan launch,instead of remaining with his team,went to Thiruppathi and Kalahasthi.Our Constitution advocates scientific temper among laymen.But ISRO chief do no believe in scientific temper.

   • // இப்போதும் சமஷ்கிருதத்தில் இல்லாதது அறிவியலில் இல்லை என்று கூறலாம். வான சாஸ்த்திரங்கள் முழுமையாக சமஷ்கிருததில் உள்ளது //

    சும்மா அடிச்சி விடப்படாது! நவீன அறிவியல் கூறும் விஷயங்களில் ஒரு தம்பிடி கூட சம்ஸ்கிருத நூல்களில் இருக்குமா என்பது சந்தேகம்தான்! உதாரணமாக, கிராவிடெஷனல் லென்சிங் பற்றி எங்கே ஒரு சம்ஸ்கிருத ஆதாரம் சொல்லுங்கள் பார்ப்போம்! அததற்கு அதனதன் இடம்.

   • தமிழிலிருந்துதான் எல்லா மொழிகளும், தெய்வங்களும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் தோன்றின என்று தமிழ் ஆர்வலர்கள் சொல்லக்கூடும்! இந்திரன் எழிதிய அய்ந்திரத்தில் நுண்மையான அளவு கணிதம் கூட உள்ளது என்று, ஒரு தமிஉழன்பர் கூறிவருகிறார்! இவையெல்லாம் தற்பெருமைக்கு மட்டுமே உதவும்! இந்தியர்கள் அனைவருமே, இத்தகைய மனப்போக்கால், விஞ்ஞான சிந்தையின்றி இருக்கிரோம்! இதில் பக்தி என்ற பெயரில், விஞ்ஞான ஆராய்ச்சியின்றி , முன்னோர் அருளிய வேதவாக்கு மாற்ற ஒண்ணாதது என்ற அளப்புகள் வேறு! அந்தக்காலத்திலேயே (50 வருடங்களுக்கு முன்பே) வெள்ளைக்காரன் சர்ஸ்வதி மகாளில் உள்ள நூல்களை திருடிவிட்டான், அதனால்தான் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த புஷ்பக விமானம் போன்று ஏரோப்ளேன் செய்திருக்கிரான் என்று அப்போதைய தாத்தாக்கள் முனுமுனுப்பர்!நீங்கள் அந்த வகையராவா? நல்ல வேளை,நீங்களாவது சமஸ்கிருதம் படித்து என்னை போன்ற சூத்திர பயல்களுக்கு சொல்லும்,நாயனாரே!

    • //தமிழிலிருந்துதான் எல்லா மொழிகளும், தெய்வங்களும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் தோன்றின என்று தமிழ் ஆர்வலர்கள் சொல்லக்கூடும்! இந்திரன் எழிதிய அய்ந்திரத்தில் நுண்மையான அளவு கணிதம் கூட உள்ளது என்று, ஒரு தமிஉழன்பர் கூறிவருகிறார்! இவையெல்லாம் தற்பெருமைக்கு மட்டுமே உதவும்! இந்தியர்கள் அனைவருமே, இத்தகைய மனப்போக்கால், விஞ்ஞான சிந்தையின்றி இருக்கிரோம்! இதில் பக்தி என்ற பெயரில், விஞ்ஞான ஆராய்ச்சியின்றி , முன்னோர் அருளிய வேதவாக்கு மாற்ற ஒண்ணாதது என்ற அளப்புகள் வேறு!//

     சரியாகச்சொன்னீர்கள் ஐயா….
     faactu…faactu…faactu…

  • அனைத்து சம்ஸ்கிருத சொற்களாயும் தமிழில் எழுதலாம்.

   அரபி மற்றும் லத்தீன் சொற்களை எழுத முடியாது.

   குரானும் பைபிளும் மொழிபெயர்க்க பட்டுள்ளன.

   ஹிந்துக்கழுக்கு வாழ்க்கையே புத்தகமாக உள்ளது.

  • வேதங்களின் தமிழ்/ஆங்கில மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. எனக்கு தெரிந்த சிலவற்றை பற்றி குறிப்புகள் கீழே.

   நூறாண்டுகளுக்கு முன்பாக ரால்ப் கிரிப்பித் போன்றோர் நான்கு வேதங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். இவை கீழே உள்ள தளத்தில் கிடைக்கின்றன. சற்று கடினமான செய்யுள் அமைப்பிலான ஆங்கில நடை.

   http://www.sacred-texts.com/hin/index.htm

   நான்கு வேத தமிழ் மொழிபெயர்ப்பு நூல் தொகுப்பு மயிலை கிரி டிரேடிங் என்ற கடையில் கண்டிருக்கிறேன்.

   முக்கிய உபநிடதங்கள் தமிழ் தெளிவுரை ராமகிருஷ்ண மடத்தில் கிடைக்கும். குறிப்பாக சுவாமி ஆசுதோஷானந்தர் எழுதிய சிறப்பான எளிய உரை.

   மூலம் முழுதும் சம்ஸ்கிருத, கிரந்த லிபியில் கிடைக்கிறது. தமிழ் லிபியில் உள்ளதா என தெரியவில்லை. ஆனால், ருத்ரம், சமகம், புருஷ சூக்தம் போன்ற முக்கிய பகுதிகள் மூலத்தை தமிழ் லிபியில் கண்டிருக்கிறேன். தமிழ் லிபியில் மொத்தமாக வெளியிட தடை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. அதிக வரவேற்பு இருக்காது என்பதால் யாரும் பதிக்கவில்லை என கருதுகிறேன்.

   மேலும் விவரம் தெரிந்தோர் பகிர்ந்து கொள்ளு

 34. /////நான் தமிழில் எனது பெயரை வைத்தால் என்ன ஜாதி என்று அடுத்த கேள்வி வரும்////

  ஐயோ பாவம் இவர்!!! தமிழில் பெயர் வைத்தால் என்ன ஜாதி என்று கேட்பார்களாம். யார் அவ்வாறு கேட்கிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள மக்கள் கோடிக்கணக்கில் உள்ளார்கள். தினசரி ஒவ்வொருவரும் பேசிக்கொள்ளும் போதும் என்ன ஜாதி என்றுதான் பேசிக்கொள்கிறார்களா? முஸ்லீம்களை பார்த்து நீ என்ன பிரிவு என்று கேட்க மாட்டார்களா? ஷியாவா சன்னி பிரிவா என்று?
  மற்ற மாநிலங்களில் வசிப்பவர்கள் எல்லாம் என்ன அந்த மாநில பெயரா வைத்துள்ளார்கள். வெளி நாடுகளில் வசிப்பவர்கள் எல்லாம் முஸ்லீம் பெயரைத்தானே வைத்துள்ளார்கள். நல்ல முஸ்லீம்கள் பலர் உலகில் அன்றாடம் நடக்கும் குண்டு வெடிப்பை கண்டு வெட்கப்படுகிறார்கள்!!!

  ஒருமுறை உங்கள் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயரை வைத்துப் பாருங்கள். உங்கள் ஜாதி என்ன என்று யாராவது கேட்டால் எனக்கு ஜாதி இல்லை என்று சொல்லுங்கள். அரசாங்கத்தை தவிர வேறு யாரும் ஜாதியை கேட்பதில்லை. வினவு போன்றவைகள் தான் ஜாதியை வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

  தமிழில் பெயர்வைக்க யாரோ தடுப்பது போல் பேசுகிறார்கள். இஸ்லாத்திலும் கிருத்துவத்திலும் அந்த மத குருமார்கள்தான் பெரும்பாலும் பெயர் வைக்கிறார்கள். ஆனால் இந்து மதத்தில் அப்படி அல்ல. பெற்றோர்கள்தான் பெயர் சூட்டுகிறார்கள்!!

  “வியாசன்” போன்றவர்கள் தங்களது பெயரை சுத்த தமிழில் மாற்றிக்கொள்ளலாம்! தடையேதும் இல்லை. பிராமணர்கள் யாரும் தடுப்பது இல்லை. ஆனால் முஸ்லீம்களும் கிருத்துவர்களும் பழைய பெயரை மாற்றி சுத்த தமிழ் பெயர் வைத்தால் சம்பத்தப்பட்ட மத குருமார்களால்
  கண்டிக்கப்படுவீர்கள்.

 35. ////இந்து மதத்தைப் போன்ற ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் தான் குருமார்கள் ஆகலாம், கருவறைக்குள் நுழையலாம், கடவுளைத் தொடலாம் என்று எந்தப் பம்மாத்தும், பாகுபாடுகளும் மசூதிகளும், சர்ச்சுகளிலும் கிடையாது. அதனால் அங்கு சாதியடிப்படையிலான பாகுபாடோ, அல்லது எந்தவிதமான தீண்டாமையோ நடைமுறையில் இல்லை///

  இந்து கோவில்களில் கடவுள் சிலை வடிவில் உள்ளதாக நம்பித்தான் அங்கு சென்று வழிபடுகிறார்கள். குருமார்களோ அல்லது பூசாரிகளோ யாரும் பிரச்சாரம் செய்வதில்லை. திருப்பதி போன்ற தளங்களில் ஒரு வினாடிதான் வேங்கடாலசலபதியை வழிபட முடிகிறது. தொழுகை மற்றும் ஜெபம் என்ற பெயரில் பிரச்சாரம் செய்யப்படுவதில்லை. பிரபல கோவில்களிலும் சரி சாதாரண கோவில்களிலும் சரி எங்கும் தீண்டாமை கடைப்பிடிப்பது இல்லை. ஆனால் கிருத்துவத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்து தலித்துக்கு உள்ள அனைத்து சலுகைகளும் கிருத்துவ தலித்துக்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டு சமீபத்தில் தில்லியில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இந்து தலித்துக்கு உள்ள அதே சூழ்நிலைதான் இங்கும் (கிறுத்துவத்திலும்) நிலவுகிறது என்று கூறுகிறார்கள். தீண்டாமை அங்கு இல்லை என்றால் தலித் இந்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஏன் கேட்கிறார்கள். அங்குதான் ஜாதிகள் இல்லையே ஏன் இட ஒதிக்கீடு கேட்கவேண்டும்?

  இந்துக்கள் வழிபடுவது ஆண்டவனின் அருள் விக்கிரகம்! மற்றவர்கள் இந்துக்களை போல் ஆண்டவனை வழிபட செல்வதில்லை. ஒரு தனி நபர் (கிருஸ்த்து மற்றும் நபிகள்) ஸ்தாபித்ததை கடவுளாக கருத முடியாது. தனி நபர் கூறியதை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. உலகம் மாறும்போது அவ்வாப்போது மாற்றங்கள் வரும். அதுதான் இயற்கை! இந்துமதம் இயற்கையின் பால் ஒன்றி கலந்தது. இதனை யாரும் உருவாக்க வில்லை. உலகில் மனிதன் உருவான போதே இந்துமதம் என்று நாம் சொல்லக்கூடிய இந்த தத்துவங்கள் உருவாக்கி விட்டன. ஆகையால் இந்துமதம் என்று நாம் சொல்லுவது ஒரு பண்பாடு மற்றும் காலச்சாரத்துடன் இணைந்தது. அது ஒரு மதம் அல்ல. இயற்க்கை கொடுத்த ஒரு வரப்பிரசாரம். இந்து பண்பாட்டோடு கலந்தால் உலகில் பயங்கரவாதம் இருக்காது. ராமாயணம் மகாபாரதம் தேவாரம் திருவாசகம் திருக்குறள் மற்றும் பலபல நூல்களை ஈரான் ஈராக் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளில் கொண்டு சென்று போதித்து வந்தால் இந்த பயங்கரவாதம் ஒழியும்.

 36. திரு.மு.நாட்ராயன் அவர்களே! நீங்கள் பெரியபுராணத்தில் உள்ள கண்ணப்ப நாயனார் கதை கேள்வி பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.பன்றியை வேட்டையாடி அதை சுட்டு, வாயில் வைத்து சுவைத்து சுவையான மாமிசத்தை இலையில் எடுத்து கொண்டு,இறைவனுக்கு அர்சிக்க காட்டு பூக்களை தலையில் வைத்துகொண்டும்,அபிடேக நீரை வாயில் முகண்டுகொண்டும் சென்று ஏற்கனவே சிவன் மேல் உள்ள மலர்களை தனது செருப்பனிந்த காலால் கீழே தள்ளி வாயில் உள்ள நீரை சிவன் மேல் உமிழ்ந்து பன்றிகறியை படைத்து பூசை செய்தாராம்.அந்த கொவிலில் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லி சிவ ஆகமபடி பூசை செய்த சிவக்கோசரியாருக்கு அருள் செய்யாத இறைவன் கண்ணப்பருக்கு காட்சி தந்தாராம்.கடவுளை பூசை செய்ய சாதி ஒரு தடையாகுமா? மொழிதான் தடையாகுமா? வெளிப்படையான சாதி,மொழி வெறியர்களாகிய தில்லை தீட்சதர்கள் கையில் சிதம்பரம் கொவில் செல்வது தமிழர்களுக்கு நல்லது இல்லை.

  • /////வெளிப்படையான சாதி,மொழி வெறியர்களாகிய தில்லை தீட்சதர்கள் கையில் சிதம்பரம் கொவில் செல்வது தமிழர்களுக்கு நல்லது இல்லை/////

   தில்லை தீட்சிதர்கள் என்ன சம்ஸ்கிருத மொழியிலா பேசுகிறார்கள்!!! அவர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள் எழுதுகிறார்கள். அவர்களும் பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் நாட்டில் பலவிதமான நூல்களை எழுதி தமிழுக்கு அணி சேர்த்துள்ளார்கள். சமஸ்கிருதம் என்பது தற்போது பேச்சுவழக்கில் இல்லாத மொழி. யாரும் அதை பேசி வருவதில்லை. ஆனால் அதில் உள்ள மந்திரங்களை தமிழில் எழுதி பாடுகிறார்கள். அவ்வளவே! இதற்கு ஏன் இந்த விமர்ச்சனம் செய்கிறீர்கள் என்றுதான் தெரியவில்லை.அவர்கள் அனைவரும் தமிழர்களே.
   எதற்கு எடுத்தாலும் ஜாதி ஜாதி என்று சொல்லி, அதை வைத்துக்கொண்டு உங்களது வாழ்க்கையும் ஓடுகிறது. உங்களைப்போன்றவர்களால் தான் ஜாதியை ஒழிக்க முடியவில்லை. உங்களைப் போலவே அய்யா இராமதாஸ் அவர்களும் ஜாதியைப் பிடித்துக்கொண்டு ஆடுகிறார். உங்கள் இருவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

   • //உங்களை போன்றவர்களால் தான் ஜாதியை ஒழிக்க முடியவில்லை//–அய்யா என்ன சொல்ல வற்ரீங்கன்னு புரியலையே.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகணும்னு சொல்றவங்க சாதியை வளர்ப்பவர்கள்,நான் பிரம்மாவோட தலைலேயிருந்து பொறந்தவன் அதனால நான் மட்டும்தான் பூசை செய்யலாம் என்று சொல்லும் பார்ப்பனர் சாதி ஒழிப்பாளர்களா? நல்லா இருக்குங்க உங்கநியாயம் ரொம்ப நல்லா இருக்கு.

    • நாயனார்,

     இதுக்கெல்லாம் அவரு பதில் சொல்லமாட்டாரு. பள்ளிவாசல பற்றி கேட்டீங்கன்னா பக்கபக்கமா எழுதுவாரு.

   • //சமஸ்கிருதம் என்பது தற்போது பேச்சுவழக்கில் இல்லாத மொழி. யாரும் அதை பேசி வருவதில்லை.ஆனால் அதில் உள்ள மந்திரங்களை தமிழில் எழுதி பாடுகிறார்கள்.அவ்வளவே!//–அத தாங்க நானும் சொல்றேன்.சமஸ்கிருதத்தை தமிழ்ல எழுதி மனப்பாடம் பன்ற கொடுமைக்கு தமிழ்லயே உள்ள மந்திரத்த சொல்லி தொலைக்கலாம்ல சாமிக்கு தமிழ் தெரியாதா?

 37. திரு. மு.நாட்ராயன்,

  //“வியாசன்” போன்றவர்கள் தங்களது பெயரை சுத்த தமிழில் மாற்றிக்கொள்ளலாம்! தடையேதும் இல்லை.///

  வி + ஆசான் = வியாசான் – வியாசன்

  தமிழில் வி என்பது – முதல், மூலம், உயர்ந்த, என்பதைக் குறிக்கும்.

  உதாரணமாக: வி+தை + விதை (seed or root)
  Vithai> vthu> vitha> Vetha> Veda

  வியாசன் என்பது தமிழ்பெயர் மட்டுமல்ல, வியாசர் ஒரு திராவிடன் (தமிழன்) என்பதை வில்லிபுத்தூரர் பாரதம் என்ற நூல் கூறுகிறது. அவர் ஆரிய வேதங்களை தமிழர்களின் மூலமறைகளாகிய நான்மறைகளின் அடிப்படையில் தொகுத்தார் எ