privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபுத்தம் புதிய குடியரசெனும் புதிய ஜனநாயக ஆட்சி வேண்டும்!

புத்தம் புதிய குடியரசெனும் புதிய ஜனநாயக ஆட்சி வேண்டும்!

-

நவம்பர் 7, 2014 நவம்பர் புரட்சி விழா

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

notice-1சோசலிசம் பூத்த புதிய நாள்,
நவம்பர் 7, 1917 ரசிய புரட்சி நாள்
புரட்சியின் மாபெரும் ஆசான் லெனின் வழிநடத்த
பாட்டாளி வர்க்கம் ஆட்சி பெற்ற நாள்.

இதோ இன்று நவம்பர் 7, 2014.
நமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி.
நமக்கும் வேண்டும் விடுதலை.
மக்களின் வாழ்க்கை ஆள்பவர் சுரண்டலால்
நாடே மறுகாலனியாக்கப்படுவதாலும்
மரணக்குழியை நோக்கி மக்கள்
வேகமாய்த் தள்ளப்படுவதாலும்
நமக்கும் வேண்டும் விடுதலை.

குற்றக் கும்பல் ‘ஜெ’ –வை
நீதிபதி குன்ஹா தண்டித்ததற்காக –
மதச் சடங்குகளையே
அரசியல் ‘போராட்ட’ வடிவங்களாக மாற்றிக் கலந்து
தமிழகத்தையே மிதித்துத் துவைக்கும்
அரசியல் கழிசடை ‘ஜெ’ அடிமைகள் ஆட்டம் போட
காக்கிச் சட்டை ரவுடிகள் அடியாட்படையாக காவல் நிற்க
மூச்சுத் திணறும் தமிழக மக்களுக்கு
விடுதலை வேண்டும், நிச்சயம் வேண்டும்.

இந்து மதவெறி நச்சுக் காற்றை
அரசியலிலும் சமூகத்திலும் வேகமாகப் பரப்புகிறது
மோடி தலைமையிலான பார்ப்பன பயங்கரவாதம்.
சேவையும் ஆனந்தமும் யாருக்கு –
பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு
நமக்கோ பட்டை நாமம்!

notice-2

நாட்டில் குறுக்கு நெடுக்காய்ப் பல ஆயிரம்
வர்ண – சாதிக் கோடுகள், சாதி தீண்டாமை வெறி
பார்ப்பன மந்திர உச்சாடனத்தோடு
ஆதிக்கச் சாதிகளின் ஆவர்த்தனத்தோடு
தந்திரத்தில் இறங்கிவிட்டது
ஆர்.எஸ்.எஸ் – மோடிக் கும்பல்.
நாட்டை மறுகாலனியாக்கிச் சுரண்டிக் கொழுக்கும்
நிதிமூலதன ஆதிக்கக் கும்பலிடமிருந்து
இதற்குக் கைக்கூலியாக இருக்கும்
பார்ப்பன மதவெறிப் பாசிசக் கும்பலின் பிடியிலிருந்து
நமக்கு வேண்டும் விடுதலை.

மக்களுக்கு ‘தேவபாசை’ சமஸ்கிருத – இந்தியாம்
கூடவே மோடி தயவில் அந்நியச் சீரழிவுச் சரக்குகளுமாம்
– இவை எல்லாம் தடையற்ற சுரண்டல் நடத்த
நிதி மூலதனக் கும்பலுக்கு அளிக்கப்படும் காணிக்கை!
நாட்டின் நிலை – நாம் அறிவோம்.
வேளாண்மை இல்லை, வேலை இல்லை.
வதைபட்டு வாழ்கிறோம்,
கல்லை மண்ணை காய்ச்சிக் குடிக்கிறோம்.

notice-3

அந்நிய தயவில் ‘அற்புதமாய்’ இருக்கு –
அது மறுகாலனியச் சுருக்கு –
கழுத்து புண் பூமியாச்சு;
நன்செய், புன்செய் எல்லாமே போச்சு!
நுகர்வு வெறி – சுயலாப வெறி –
மோகவெறி கொண்டாட்டமென்று
காசு – பணம் – துட்டு தேடி…
ஓயாத மாரத்தான் ஓட்டம்!

போதாக் குறைக்கு –
குஜராத் மாடலில் இனவெறி,
ரத்தப் பலி படைத்து
மோடிக்குத் தட்சணை என்றால்
மக்களுக்கு விடுதலை நிச்சயம் வேண்டும்.

ஒரே ஒரு கணம் சிந்திப்போம்
நமக்கு மோடியின் தந்திரம் வேண்டாம்.
வேதமந்திர மொழியும் வேண்டாம்.
நிலம் – நீர் – உழைப்பு – உற்பத்தி
நாடு – நாட்டின் மொழிகளும் மக்களும்
நாமே ஆண்டுகொள்ளும்
அதிகாரம் வேண்டும், ஆட்சி வேண்டும்.
புத்தம் புதிய குடியரசெனும்
புதிய ஜனநாயக ஆட்சி வேண்டும்.

புறப்படுவோம் நாம்,
தோழமை ஆயுதங்களோடு
உழைக்கும் தொழிலாளி – விவசாயி அச்சில்
புரட்சி ஏந்திப் புறப்படுவோம்.
நாளைய பொதுவுடைமை இலக்குக்காக
இன்றைய நம் புரட்சி நிச்சயம் நடக்கும்.

உலகக் காற்றின் திசை அறியாமல்
கம்யூனிஸ்டுகள் படை நடத்தியதில்லை.
கீழைக்காற்று வெல்லுமென்று
மாவோ அறிந்தது இப்படித்தான்;
புதிய கம்யூனிஸ்டு கட்சிகட்ட
பகத்சிங் முயன்றதும் இப்படித்தான்.

நாமும் சர்வதேசியவாதியாய்
புதிய ஜனநாயகக் குடியரசுக்காக
பகத்சிங் மொழியில் முழங்குவோம் –
“புரட்சி ஓங்குக!”

_____________________________

மக்கள் கலை இலக்கியக் கழகம்
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை
95518 69588 – 98416 58457

  1. பிறப்பதும் ஒரு முறை! இறப்பதும் ஒரு முறை!
    பிறப்பும் நாமறியோம்!இறப்பும் நாமறியோம்!
    இடையில்தான் ஆர்ப்பரிப்பு எத்தனையோ?
    இன்பம் பிறக்கும்போது, துன்பமும் பிறக்கிறது
    நன்மை பிறந்தோது, துன்பமும் பிறந்தது
    நாகரிகம் பிறந்தபோது,அநாகரிகமும் பிறந்தது
    தர்மம் பிறந்தபோது,அதர்மமும் பிறந்தது
    இது தவறென்றால்,ஆம்!என்போம்
    மாற்ற, இணைந்தால் என்ன? வினவினால்
    தன்னிறைவு பெற்றுவிட்டோம் நாம் என்போம்
    மீறி அதை மாற்ற முயன்றால்!சிரிக்கின்றாய்!
    சிரித்தவன் சிந்தித்தால் உண்மை தோன்றும்
    உண்மையை உணர்த்தவேயான் உரைக்கின்றேன்
    பிறப்பும் ஒருமுறையே ,இறப்பும் ஒருமுறையே
    நன்மையென்ற ஒன்று நிலைபெற…..
    எல்லோரும் சமம் என்ற நிலை மலரவேண்டும்.
    அதுதான் முடிவென்றபின் நான் ….
    விடமாட்டேன் சிந்திக்காமல் சிரிப்பவனை.

    தோல்வியடைய பிறந்தவனல்ல மனிதன்
    மரணம் நம்மை முத்தமிடலாம்,
    தோல்வியாகாது அது.
    எண்ணங்களால் வாழும் மனிதனுக்கென்றும்
    மரணம் என்பதேது ?
    வீழ்ந்தவன் எழலாம், வீழ்ச்சியே இல்லாதபோது
    வீழ்வதென்பதெவ்வாறு

    வாழ்த்துகள் உண்மையானவர்களுக்கு…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க