privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாபாகிஸ்தானில் ஒடும் சிந்து நதியை இந்தியா தடுக்க முடியுமா ?

பாகிஸ்தானில் ஒடும் சிந்து நதியை இந்தியா தடுக்க முடியுமா ?

-

லக வங்கியின் முன்முயற்சியில் 1960-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கையெழுத்தான சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம், மிகச் சிறந்த அரச தந்திரத்திற்கு உதாரணமாக காட்டப்படுகிறது. மேற்படி ஒப்பந்தம் 1965, 1971 மற்றும் 1999-ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர்களையும் அவை உண்டாக்கிய ரத்த வெள்ளத்தையும் கடந்து இன்றும் நடைமுறையில் உள்ளது.
ஆனால் கடந்த 2016 செப்டெம்பரில் நடந்த ஊரி தாக்குதலைத் தொடர்ந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முறுகல் நிலையை அடைந்துள்ளது. இந்தியத் தரப்பில் வாதாடும் சிலர் சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோருகின்றனர். அதன் மூலம் இராணுவ வழித் தீர்வுக்கு வெளியே பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமெனக் கருதுகின்றனர்.

Inuds River
பரந்து விரிந்துள்ள சிந்து நதி

காஷ்மீரின் கோடைகாலத் தலைநகரான ஸ்ரீநகரிலிருந்து 75 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது ஊரி நகரம். இந்திய பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள இந்நகரத்தில் பல இராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. கடந்த செப்டெம்பர் 18-ம் தேதி அங்குள்ள இராணுவ முகாம் ஒன்றின் மேல் தீவிரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளில் நால்வரும், இந்திய வீரர்களில் 18 பேரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என இந்தியா குற்றம் சாட்டியது.

காஷ்மீர் பிரச்சினையை ஒட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மூன்று போர்களையும், அதையொட்டிய முரண்பாடுகளையும் கடந்து சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தமும் அது வழங்கும் நீர் பங்கீட்டுக்கான முறைமைகளும் எந்தச் சிக்கலும் இன்றி பின்பற்றப்படுகிறது.

மேற்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில், மேற்கு நோக்கிப் பாயும் ஜீலம், செனாப் ஆகிய கிளை நதிகளின் நீரைப் பெரும்பான்மையாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருகின்றது. அதே நேரம், ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் நதிகளின் நீர் இந்திய பயன்பாட்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்துவது

ஊரி தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு சிந்து நீர் பங்கீடு தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான கட்டுரை ஒன்றில் “சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை கைவிடுவோம் என்கிற அச்சுறுத்தலை இந்தியா கையில் எடுக்க வேண்டும். பாகிஸ்தானின் தடையற்ற குடிநீர் தேவை மற்றும் அந்த நதி உற்பத்தியாகும் நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பாகிஸ்தானுக்கு உள்ள பொறுப்பை இணைக்க வேண்டும்” என்று எழுதினார் பிரம்மா செலானே.

வெளியுறவு மற்றும் நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட மற்றவர்களும் இந்திய-பாகிஸ்தான் நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் காலாவதியாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தனர். இந்திய அரசாங்கம் இது குறித்து மிகக் குறைவாக அதிகாரப்பூர்வமாக எதிர்வினையாற்றி உள்ளது. “அதைப் போன்ற ஒப்பந்தங்கள் செயல்பட வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பும் நல்லெண்ணமும் இருக்க வேண்டியது அவசியம்” என்று இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், மேலும் விவரங்களுக்குள் செல்லவில்லை.

நடுவர்

நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்ததோடு அது தொடர்பாக எழும் முரண்பாடுகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் ஆணையம் ஒன்றை நியமிக்கும் பொறுப்பில் உள்ள உலக வங்கியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தைப் பொருத்தவரை, உலகவங்கியின் பாத்திரம் விதிகளுக்கு உட்பட்டதாகவும் குறைவாகவுமே உள்ளதாக உலக வங்கியின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்வீடனின் உப்சலா பல்கலைக்கழகத்தில் அமைதி மற்றும் போர் ஆராய்ச்சித் துறையில் ஆசிரியராக பணியாற்றும் அஷோ ஸ்வய்ன், உலக வங்கியின் நிலைப்பாடு குறித்து ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறார். சிந்து நதி நீர்பங்கீட்டு ஒப்பந்தத்தின் சில அம்சங்களில் கையெழுத்திட்டுள்ள உலக வங்கி, அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் முடிவில் தலையிட முடியாதென்றும், மாறாக அமல்படுத்தும் போது எழும் முரண்பாடுகளை மட்டுமே கையாளும் என்றும் தெரிவிக்கிறார். முரண்பாடுகள் எழும் போது அதிகபட்சமாக ஒரு “நடுநிலையான வல்லுநரையோ” அல்லது தீர்ப்பாயம் ஒன்றையோ நியமிக்க முடியும். தண்ணீரைத் தடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியாவால் பாதிப்பு உண்டாக்க முடியுமா என்று கேட்ட போது, பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீரை உடனடியாக தடுத்து நிறுத்தும் அளவுக்கு இந்தியாவிடம் தண்ணீரைத் தேக்கி வைக்க போதுமான கட்டமைப்புகள் இல்லை என்கிறார் ஸ்வய்ன்.
“இந்தியா தனது அணைகளின் மட்டத்தை உயர்த்த வேண்டும். அதற்கு நீண்ட காலமாகும். இதில் இன்னொரு கோணமும் உள்ளது. ஒருவேளை இந்தியா அவ்வாறு முடிவு செய்தாலுமே கூட, காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து நீரை வெளியே கொண்டு வர முடியாது. புவியியல் காரணங்கள் குறுக்கே நிற்பதால் இம்மூன்று நதிகளின் (சிந்து, ஜீலம், செனாப்) நீர் அவற்றின் படுகைகளிலேயே தேங்கி விடும். இந்தியாவால் சில காலத்திற்கு அந்த ஆறுகளின் சப்ளையை தடுக்க முடியும், ஆனால் அவற்றை மடைமாற்ற முடியாது” என்கிறார் ஸ்வய்ன்.

ஒப்பந்தத்திற்கு உட்பட்டு செயலாற்றுவது

புதுதில்லியைச் சேர்ந்த “பாதுகாப்புக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தைச்” சேர்ந்த உத்தம் சின்ஹாவும் ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும் என்கிற கருத்துடையவர்களோடு முரண்படுகிறார்.

”பாகிஸ்தானுக்கு புரிதல் உண்டாக்க வேண்டும் என்பதற்காக சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை கைவிடும் அளவுக்குச் செல்ல வேண்டியதில்லை. ஒப்பந்த சரத்துகளில் உள்ளபடியே சிந்து நதியின் மேற்கத்திய படுகையின் நீரை விவசாயத்திற்கும், மின் உற்பத்திற்கும் பயன்படுத்துவது மற்றும் 36 லட்சம் சதுர ஏக்கர் பரப்பிற்கு நீரைத் தேக்குவது போன்ற நடவடிக்கைகளின் மூலமாகவே பாகிஸ்தானுக்கு உணர்த்த முடியும்” என்கிறார் உத்தம் சின்ஹா.

”ஒப்பந்தத்தை முற்றாக கைவிடுவது என்பது நமது சொந்த நலன்களுக்கும் சர்வதேச நிலைபாடுகளுக்குமே கூட எதிராக முடியும். அவ்வாறு செய்வது நம்முடன் நதிநீர் பகிர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற அண்டை நாடுகளிடையே அச்சத்தை உண்டாக்குவதுடன் சர்வதேச அளவில் நமக்கு அவப்பெயரையும் பெற்றுத் தந்து விடும்” என்கிறார் உத்தம் சின்ஹா.

”ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்திலிருந்து விலகுவது உலகவங்கியை இந்த தாவாவிற்குள் இழுத்து விட்டு விடும். மேலும் பாகிஸ்தானியர்களிடம் வெறுப்புணர்வைத் தூண்டி மேலும் வன்முறைக்கு அடிகோலி விடும்” என்கிறார் சர்வதேச நீர் மேலாண்மை மையத்தின் ஆராய்ச்சியாளரும், லாகூரைச் சேர்ந்தவருமான அசீம் அலி ஷா.

ஊடகங்களில் பரபரப்பாக விவாதம் நடந்து வரும் நிலையில், ஒப்பந்தத்தில் முக்கிய தரப்புகளான இந்திய அரசு மற்றும் உலகவங்கி ஆகியோர் தரப்பில் கடைபிடிக்கப்படும் மௌனமானது, ஒப்பந்தம் தற்போதைக்கு பாதுக்காப்பாகவே உள்ளது என்பதை உணர்த்துகிறது. ”சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை காப்பாற்ற எனது தலையைக் கூட அடமானம் வைப்பேன். அந்த ஒப்பந்தம் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒருமனதான தீர்மானத்தையும் நான்கு போர்களையும் சமாளித்து இன்னும் உயிருடன் தான் இருக்கிறது” என்று ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா.

இம்மூன்று நதிகளின் பிறப்பிடமான தங்கள் மாநிலத்தின் தேவையைக் கணக்கில் கொள்ளாத சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என 2003-ல் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் ஒருமனதான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

”ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும் என்பது போன்ற அறிக்கைகளை வெறுமனே பிரச்சாரமாகத் தான் பார்க்க முடியுமே தவிர அதில் ராஜதந்திர தெரிவு ஏதுமில்லை” என்கிறார் தெற்காசிய பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையின் பேராசிரியர் மேதா பிஷ்ட். இந்தியா மேற்படி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆறு நதிகளில் இரண்டின் நதிக்கரை தேசமாக இருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். சிந்து நதியும் சட்லெஜும் திபெத்தில் உற்பத்தியாகி இந்தியா வழியாகப் பாய்கிறது. இந்த நதிகளின் நீரைப் பங்கிடுவது தொடர்பாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை.

இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை திசைதிருப்புமானால், இந்தியாவுக்குச் செல்லும் நீரைத் திசைதிருப்புவோம் என சீனா மறைமுகமாக உணர்த்தியுள்ளது என்கிறார் ஒரு மூத்த விமர்சகர். அவ்வாறான ஒரு சூழல் இம்மூன்று நாடுகளிலும் வெள்ளத்தையும் கடும் சேதத்தையும் விளைவிக்கக் கூடும். இது போன்ற ஒப்பந்தங்கள் நல்லெண்ணங்களின் அல்லது பரஸ்பர நம்பிக்கைகளின் அடிப்படையில் அன்றி அந்தந்த தேசங்களின் நலன்களின் அடிப்படையிலேயே உயிர்ப்புடன் உள்ளதை இது உணர்த்துகிறது.

நன்றி: Athar Parvaiz
மூலக்கட்டுரை: ndus Waters Treaty rides out latest crisis
தமிழாக்கம்: முகில்

  1. சிந்து நதியை இந்தியா தடுப்போம் என்று சொன்னவுடன் வினாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டது போல… இந்தியா நாசமா போனாலும் பாக்கிஸ்தான் நலனுக்காக பேசும் வினவின் பாக்கிஸ்தான் விசுவாசம் புல்லரிக்கிறது.

      • இந்த நாட்டு இளைஞர்களின் தேசப்பற்றை குறைத்து எடை போட்டு இருக்கிறீர்கள் என்பது நன்றாகவே புரிகிறது. உங்களை போன்றவர்கள் எல்லாம் எவ்வுளவு முயற்சி செய்தாலும் இந்த நாட்டிற்கு தீங்கு செய்ய முடியாது.

        நீங்கள் செய்யும் பொய் பிரச்சாரங்கள் மூலம் இந்த நாட்டிற்கு எதிராக வெறுப்பை தூண்டலாம் என்று நினைத்தால் அது நடக்காது.

  2. வெட்கம் மனசாட்சி துளியும் இல்லாத அயோக்கியர்கள் வினவு போன்றவர்கள். நீங்கள் எல்லாம் பேசாமல் பாக்கிஸ்தான் போய் அங்கே இருந்து கொண்டு இந்தியாவிற்கு எதிரான செயல்களை செய்யலாமே ஏன் போக மாட்டேன் என்கிறீர்கள்

    • /வெட்கம் மனசாட்சி துளியும் இல்லாத அயோக்கியர்கள் வினவு போன்றவர்கள்/
      முதலில் நீ தமிழ்நாட்டை விட்டு எப்போ வெளியபோகப்போற. காவிரியில தண்ணிவிடாத இந்திய தேசத்தை சேர்ந்தவனுக்கு தமிழ்நாட்டி என்ன …. வேல. வெளியே போ.

      வெக்கம் கெட்ட தமிழ் துரோகி. தமிழ்நாட்டுல உக்காந்துகினே தண்ணி உடாத இந்திய தேசியத்தை ஆதரிக்கிறாயா. தமிழ் துரோகி

  3. _____க்காக வினவு “விளக்கு” பிடிப்பது அப்பட்டமாக தெரிகிறது…… வெளியே தெரியாமல் தொழில் செய்யும் _______ போல இங்கே இருந்து கொண்டு கண்ட ——–குடுக்கும் பணத்துக்காக குலைக்கும் வினவு போன்ற ஆட்கள் இங்கே நிறைய உண்டு… முதலில் இந்த ____ சுட்டு பொசுக்க வேண்டும்….

  4. மணிகண்டன்,

    சிந்து நதியை ஏன் இந்தியா தடுக்க முடியாது என்பதற்கு காரணங்கள் இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளன. அதைப் படித்துப்பார்த்து தெளிவு பெற முடியாத வகையில் தேசபக்தி சரக்கு உங்கள் புத்தியை மழுங்கடித்து விட்டது எனில் அது தெளியும் வரை ஒன்னும் செய்ய முடியாது.

    எடுத்துக்காட்டாக, 56 இஞ்சு இதைப்பற்றி வாய்கிழிய பேசுகிறாரே ஒழிய செயலில் ஒன்றும் இல்லையே. சிந்து நதியைத் தடுப்பதை விட எளிதான் செயல் பாகிஸ்தானின் தூதரகத்தை இங்கே மூடுவதுதான். அதே போல இந்திய தூதரகத்தையும் பாகிஸ்தானில் மூடலாம். இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே நடக்கும் பல பில்லியன் டாலர்கள் வர்த்தகத்தை தடை செய்யலாம். இதையெல்லாம் மோடி செய்யமாட்டார்.

    • இந்த கட்டுரை பாகிஸ்தானின் பிரச்சாரங்களில் ஒன்று இதே கட்டுரையை பாகிஸ்தானின் Dawn பத்திரிகையில் படிக்கலாம்.

      • Your discussion is not about the topic written here. You are simply against the article because you believe Vinavu is not supporting our country. Come to the topic and we will have a healthy discussion here.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க