மக்களுக்கு ஆப்பு வைத்துவிட்டு ‘ஆப்பில்’ எதற்கு சர்வே ?

0
12

கருப்பு பண ஒழிப்பு பற்றி கருத்தறிய ‘ஆப்’ வெளியீடு

black-money-cartoon-post

ஊரே கழுவி கழுவி ஊத்துறது தான் ரிசல்ட். அத ஆப்ல வேற பார்க்கணுமா மோடிஜி ?

ஓவியம் : முகிலன்

_______________

செல்லாத நோட்டு நாடகத்தை அறிவித்து நாட்டு மக்கள் மீது போர் தொடுத்திருக்கிறார் நரேந்திர மோடி. பணக்காரர்களும், முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பாதுகாப்பாக கருப்புப் பணத்தை வெள்ளையாக பயன்படுத்த, உண்மையிலேயே உழைத்து சேர்த்த வெள்ளை பணத்தை மக்களை பயன்படுத்த முடியவில்லை. நூற்றுக் கணக்கான மக்கள் இறந்த போயிருக்கின்றனர். பத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மரித்திருக்கின்றனர். இருப்பினும் நரேந்திர மோடியின் தீவிரவாதம் குறையவில்லை.

பாராளுமன்றத்திற்கு பதில் சொல்ல வர மறுக்கின்றார். பத்திரிகைகளையும் பார்க்க மறுக்கிறார். மாறாக எழுதி வைத்த உதார்களை அவ்வப்போது பேசி ஊடகங்களில் வெளியிட வைக்கிறார். ஏற்கனவே அவர் தேர்தலில் தனது செல்வாக்கை நிழலான ஐ.டி நிறுவன வேலைகள் மூலம் உயர்த்தினார். தற்போது செல்லாத நோட்டிலும் அதையே அமல்படுத்தியிருக்கிறார்.

அதாவது இந்த செல்லாத நோட்டு விவகாரம் தொடர்பாக நீங்கள் கருத்து தெரிவிக்க வேண்டுமென்றால் நரேந்திர மோடி செயலியை செல்பேசியில் இற்க வேண்டுமாம். அதில் இந்த பிரச்சினை குறித்து ஒரு சர்வே நடத்துகிறார்களாம். சர்வேயில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டுமாம்.

மக்களது கருத்தை நேரடியாக தெரிந்து கொள்ள மோடி விரும்பியதால் இந்த ஏற்பாடாம். ஏன் தெருவில் இறங்கி இட்லிக்காரம்மாவிடமோ, சப்பாத்தி போடும் பையனிடமோ கேட்டுப் பார்க்கலாமே. பயம். அதற்காக பாதுகாப்பாக இந்த சர்வே மூலம் மக்களை சந்திக்கிறாராம்.

வழக்கமாக சர்வே எனப்படுவது மக்களிடம் குறிப்பிட்ட பதிலை வாங்கியே ஆகவேண்டும் என்று தயாரிக்கப்படும் ஒரு சதித் திட்டம். இதைத்தான் நமது ஊடகங்கள் அனைத்தும் பின்பற்றுகின்றன. சான்றாக தமிழ் இந்துவில் ஜெயலலிதா குறித்து ஒரு சர்வே நடத்தினால் என்ன கேட்பார்கள்? அவர் 1. துணிச்சல் நிறைந்த பெண்மணி, ஆளுமை நிறைந்த தலைவர், துணிச்சலான தலைவர் என்பதில் ஏதோ ஒன்றை டிக் செய்வார்கள். உண்மையில் இதைக் கேட்பதாக இருந்தால், அவர் ஒரு சர்வாதிகாரி, அவர் ஒரு சுயநலவாதி, அவர் ஊழல் செய்யாதவரா என்று கேட்க வேண்டும். மாறாக முதலில் சொன்ன கேள்விகளில் மூலம் பாசிச ஜெயாவின் கீர்த்திக்கு ஒரு போதும் பங்கம் வரவே வராது. அதே லேடி டெக்னிக்கையே இங்கே மோடி பயன்படுத்தியிருக்கிறார்.

இந்த மோடி செயலி சர்வேயின் கேள்விகளில் “கருப்புப் பணம் இந்தியாவில் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?, கருப்புப் பணம் மற்றும் ஊழலை எதிர்த்து போராடி ஒழிக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா? என்று இருக்கிறது. ஆக இதை டிக் செய்வர்கள் எதை தெரிவு செய்வார்கள். இந்தியாவில் கருப்புப் பணம் இருக்கிறது, ஆமாம் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்றுதானே சொல்ல முடியும்? இதுதான் சதித்திட்டம்.

கேள்விகள் எப்படி இருக்க வேண்டும்?

மோடியின் அறிவிப்பு யாருக்கு இடையூறு செய்கிறது? பணக்கார்களுக்கா, பாமரர்களுக்கா?

மோடியின் நண்பர்களான அதானி, அம்பானிகளிடம் கருப்பு பணம் இருக்கிறதா? ஆம் இல்லை

வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை மோடி கொண்டு வருவாரா? ஆம் இல்லை.

இதை விடுத்து இதை ஏதோ மாபெரும் ஜனநாயக நடவடிக்கைகள் போல தொலைக்காடசிகளில் காவி சமூக ஆர்வலர்கள் ஊளையிட்டு வருகின்றனர்.

இணையுங்கள்:

சந்தா