இந்த வாரம் 3.07.2017 முதல் 7.07.2017 வரை வினவு தளத்தில் வெளியான 38 குறுஞ்செய்திகளின் இணைப்புக்கள் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன. இந்தக் குறுஞ்செய்திகளில் ஜி.எஸ்.டி, கதிராமங்கலம், அமெரிக்கா, ஐரோப்பா, அறிவியல், ஆவணப்படங்கள, புகைப்படக் கட்டுரைகள், செய்தி வீடியோக்கள், பாஜக – மோடி அரசின் மீதான விமரிசனச் செய்திகள், தமிழக அரசியல் – செய்திகள் என பல வகைகள் இருக்கின்றன. இந்தக் குறுஞ்செய்திகள் குறித்து உங்கள் ஆலோசனைகள், கருத்துக்கள்,விமரிசனங்களையும் அறியத் தாருங்கள்! நன்றி
– வினவு
இந்தியாவில் உள்ள எவரும் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவதற்கு எந்த தடையும் அரசியல் சட்டம் சார்ந்து இல்லை. |
சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பூர்வக்குடி குழந்தைகள், கதறக் கதற பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுத்து கொண்டு செல்லப்பட்டனர். |
நிரந்தரமாக கடையை மூடுவதுடன் சாராய பாட்டில்களையும் எடுத்து சென்றால்தான் நாங்கள் இந்த இடத்தை விட்டு செல்வோம் என்று உறுதியுடன் போராடி வருகின்றனர். |
நாடெங்கும் ஆட்சியதிகாரத்தைப் பிடித்துவிட்டோம் என்கிற மமதையில் வெறியாட்டம் போட்டு வரும் பா.ஜ.கவின் கொட்டம் எல்லை மீறிப் போவதால் மட்டுமே இந்தக் கைது நடக்கவில்லை. |
புதிய வரிவிதிப்பு முறையில் நான் 5 சதவீதம் கட்ட வேண்டுமா 12 சதம் கட்ட வேண்டுமா என்பது எங்களது ஆடிட்டருக்கே புரியவில்லை” என்கிறார் ஹீரா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஏக்நாத் மானே. |
காலை 6 மணி முதல் விடிய விடிய விற்பனை என மாதத்திற்கு 1 லட்சம் வரை மாமூல் பெற்று வந்ததாக கூறப்படும் காவல்துறை ஆய்வாளர் பெரியசாமி, கடை மூடப்பட்டதை அப்பாவி போல பறிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தார். |
”மாணவர்கள் களத்தில் இறங்கினால் தான் விவசாயத்தையும், நாட்டையும் காப்பாற்ற முடியும்” என குடந்தை அரசு கலை கல்லூரி வழியில் தமிழகமெங்கும் போராட்டம் நடத்த அனைத்து கல்லூரிகளுக்கும் அறைகூவல் விடுக்கிறது புரட்சிகர மாணவ-இளைஞர் முன்னணி! |
தோழர் பத்மா அவர்களின் கைது விசயத்தில்ஆந்திர போலீசார் அத்துமீறி நடந்து கொண்டிருப்பது பற்றி பத்திரிகைகளில் செய்தி வந்த பிறகும் கூட தமிழக போலீசு வாய் திறக்கவில்லை. |
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையினால் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் ஒழிந்து போவார்கள் என்பதே போராடும் பிரிவினரின் கருத்து. |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாருக்கு ஆதாயம்? கமலஹாசன், விஜய் டி.வி, பா.ஜ.க, ரசிகர்கள், ஊடகங்கள்……. வாக்களியுங்கள்! |
இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க, ஜி.எஸ்.டியால், விலை குறையும், ஜிஎஸ்.டியால் வேலை வாய்ப்பு பெருகும் என, ஒரே ரெக்கார்டையே திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருக்கிறது மோடி கும்பல். |
நெருக்கடி மிகுந்த காலங்களிலும் நக்சல்பாரி இயக்கத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு நின்றவரும், நக்சல்பாரி அமைப்புகள் ஒன்றுபட வேண்டும் என்று பெரிதும் விழைந்தவருமான தோழர் கோவை ஈசுவரனுக்கு எமது சிவப்பஞ்சலி. |
98% நீர் பாசனம் உள்ள பஞ்சாப்பில் 1000 கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். |
பெத்யூனின் குருதி மாற்றுச் சிகிச்சை காரணமாக, ஏராளமான சீனர்கள் உயிர்ப் பிழைத்தனர். 12 நவம்பர் 1939ல், பெதியூன் சீனாவில் காலமானார். |
போலீசு துரத்துகையில் ஓடிய குணசுந்தரியை இழுத்து தள்ளிவிட்டு அவரது கால்களிலேயே குண்டாந்தடியைக் கொண்டு அடித்து அவரது கால்களை முறித்திருக்கிறது போலீசு. |
தொலைக்காட்சி விவாதங்களில் பாண்டே, ஆர்னாப் போன்ற பாஜக கூவர்கள், ஜூனைத்கான் கொலைக்கு சட்டபூர்வ சாட்சிகள் இல்லை என்பதால் ஆர்.எஸ்.எஸ்-ஐ எப்படி குற்றம் சாட்ட முடியும் என்று வக்கணையாக பேசுவார்கள்! |
சென்ற மாதம் (ஜூன் 2017) வினவு தளத்தில் வெளியான மோடி, பிரியங்கா சோப்ரா சந்திப்பு, அய்யாகண்ணு, ரஜினி, தீபா, ஊடகங்கள்… ஆறு கருத்துக் கணிப்பின் முடிவுகள் |
இரயில்வே துறை, நரேந்திர மோடி தேனீர் இரயில்வே நிலையத்தில் விற்றதற்கு தன்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை என பதிலளித்திருந்தது. |
இலாபத்தை குறைத்துக் கொள்கிறோம், தொழிலாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று பன்னாட்டு நிறுவனங்கள் கூறிப் பார்க்கட்டுமே! இப்படி பச்சையாக நடிக்கும் கயவர்கள்தான் வங்க தேச தொழிலாளிகளின் கொலைக்கு தண்டிக்கப்பட வேண்டியவர்கள்! |
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது |
ரத்த வாசனையுள்ள ஒரு கேக்கை சாப்பிட்டு விட்டு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க டீ கடையில் |
மோடியின் மாடு விற்கத்தடை குறித்து இந்த எளிய பெண்மணி பேசுவதைக் கேளுங்கள். இடையிடையே மற்றொரு பெண்மணியான தமிழைசையும் பேசுகிறார். |
தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளை பறிக்கும் சட்ட திருத்தங்களை பிரேசில் அரசு கொண்டு வருவதை எதிர்த்து அங்கே பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. |
முதலில் உக்ரைனில் கண்டறியப்பட்ட இந்த பெட்யா (Petya) வைரஸ், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க என உலகெங்கிலும் பரவி வருகிறது. |
கடந்த ஜூன் 30 அன்று தமிழக அரசு வெளியிட்ட ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பணி நீட்டிப்புப் பட்டியலின் படி, இவ்வழக்கைக் கையாண்டு வந்த சிலைத் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இரயில்வே துறைக்கு மாற்றியிருக்கிறது தமிழக அரசு. |
ஜூலை 4 அன்று மராட்டியத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் இரவீந்திர பவந்தாடெ என்பவரைப் பாலியல் பலாத்காரக் குற்றத்திற்காகக் கைது செய்தது போலீசு. |
மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள் அல்ல. நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளை போவதை எதிர்த்து நிற்கும் பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள். |
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் இந்நாட்டில் மோடியை விமர்சித்து பத்திரிகை விற்பதற்கு கூட ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. |
ஐரோப்பியர்கள் வட அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே செவ்விந்தியர்கள், இனுவிட், மேட்டிசு உள்ளிட்ட பழங்குடி இன மக்கள் அங்கே வாழ்ந்து வந்தனர். |
தொலைக்காட்சியில் இதுவரை வந்த சமையல் நிகழ்ச்சிகளில் கரண்டி சுழற்றிய கிச்சன் கில்லாடிகளால் ஒரு அத்தியாயத்திலாவது மாட்டிறைச்சி சமைக்கப்பட்டிருக்கிறதா? |
வெறும் 43 விழுக்காடு விவசாயிகளுக்கு பலனளிக்கப் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ள ஆதித்யநாத் – அதையும் கோரிப் பெற முடியாத விதிகளுக்குள் ஒளித்து வைத்துள்ளார். |
“விளக்கிற்கு சொந்தமாக வீடு எதுவும் கிடையாது, அது எங்கு வைக்கப்பட்டாலும், ஒளியைப் பரப்பும்” என்கிறார் ஸ்ரேஷ்தா தாக்கூர். |
பொறியியல் கட்டண உயர்வு தொடர்பான பல்வேறு இணையத் தளங்களில் அரசு நிர்ணயத்திருக்கின்ற கட்டணத்தை விட மிக அதிகம் பல கல்லூரிகளில் கேட்பதாக மாணவர்கள் பின்னூட்டம் போட்டிருக்கிறார்கள். |
“நரகத்திற்கு வரவேற்கிறோம்” என்ற முழக்கத்தின் கீழ் இடதுசாரிகளின் அணிதிரட்டலின் கீழ் நடைபெறும் இப்போராட்டங்களைக் கண்டு தான் அச்சத்தின் உச்சியில் இருக்கிறது ஜெர்மானியப் போலீசு. |
இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள், கொலைகள், கடத்தல்கள் பல முறை நடந்தும் மோடி அரசு வாய் மூடி நிற்கிறது. இதில் சார்லி படகுகள் மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரித்து சேர்த்து என்ன பயன்? |
எல்லையில் ஒரு சிறிய யுத்தம் வந்தால் எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் உள் நாட்டில் அமைதி திரும்ப வேண்டுமெனில் எல்லையில் கொஞ்சம் பதட்டம் வேண்டும்… |
#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?… குண்டிக்கழுவ தண்ணீரும் குடிக்கக் கஞ்சியும் அற்ற வக்கற்ற மக்களை நிற்க வைத்துவிட்டு இராமருக்கு கோவிலும் படேலுக்கு சிலையும் வைக்க நிதி ஒதுக்கி வல்லரசு கனவு காணும் நிலை தாம்மா |
நகரத்தில் வீடு கிடைக்காமல் திண்டாடும் ஒரு பெண்ணுக்கு வாடகைக்கு வீடு தர மறுப்பதற்கும், ஒரு மனிதனைக் கொலை செய்வதற்கும் தயங்காத அளவுக்கு நம்முள் ஊறியிருக்கின்றன. |