privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதோழர் கோவை ஈசுவரனுக்கு சிவப்பஞ்சலி !

தோழர் கோவை ஈசுவரனுக்கு சிவப்பஞ்சலி !

-

ந்தியப் பொதுவுடமைக் கட்சி [ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (வர்க்கப்போராட்டம்) ] அமைப்பின் தமிழக செயலரும், தமிழக நக்சல்பாரி இயக்கத்தின் மூத்த தோழருமான கோவை ஈசுவரன் 1.7.2017 இரவு 8:00 மணி அளவில் இயற்கை எய்தினார். கடுமையான அடக்குமுறை தலைவிரித்தாடிய நக்சல்பாரி இயக்கத்தின் ஆரம்ப நாட்களில், நக்சல்பரி அரசியலை முழங்கிய “மனிதன்” இதழின் ஆசிரியராக முன் நின்று செயல்பட்டவர் தோழர் கோவை ஈசுவரன். பேச்சாளராக நக்சல்பாரி அரசியலை தமிழகம் முழுவதும் எடுத்துச் சென்றவர்.

1947 -இல் இந்தியா பெற்றது போலி சுதந்திரம், இந்திய முதலாளி வர்க்கமென்பது தரகு முதலாளி வர்க்கம் என்ற உண்மைகளை அழுத்தந்திருத்தமாக எடுத்துரைத்த தோழர் நாகி ரெட்டியின் “அடகு வைக்கப்பட்ட இந்தியா” (India mortgaged) என்ற புகழ்பெற்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாத தொழிலாளர் உரிமைக்காகப் போராடியவர். பின்னாளில் மக்கள் யுத்தக்குழுவில் இணைந்து பணியாற்றினார். புரட்சிப் பண்பாட்டு இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றினார்.

தான் மட்டுமின்றி, தனது குடும்பத்தையும் அரசியலில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்த வேண்டும் என்பதை மிகவும் இயல்பாக அமல்படுத்தியவர் கோவை ஈசுவரன். தோழர்கள் என்று யார் வந்தாலும், அது நள்ளிரவே ஆனாலும், அவரும் அவரது மனைவியும் உடல்நலம் குன்றிய நிலையிலும் வரவேற்று உபசரிப்பதை அவருக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த பல தோழர்களும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர்.

சென்னை தியாகராய நகரில் 2.7.2017 மதியம் அவருடைய வீட்டில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்துக்குப் பின், அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கண்ணம்மாபேட்டை மயானத்தில் எரியூட்டப்பட்டது.

நெருக்கடி மிகுந்த காலங்களிலும் நக்சல்பாரி இயக்கத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு நின்றவரும், நக்சல்பாரி அமைப்புகள் ஒன்றுபட வேண்டும் என்று பெரிதும் விழைந்தவருமான தோழர் கோவை ஈசுவரனுக்கு எமது சிவப்பஞ்சலி.

இவண் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க