Saturday, May 15, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா உலகிற்கு அச்சுறுத்தல் வட கொரியாவா இல்லை அமெரிக்காவா ?

உலகிற்கு அச்சுறுத்தல் வட கொரியாவா இல்லை அமெரிக்காவா ?

-

லகின் பாதுகாப்புக்கு வட கொரியா ஒரு பெரிய அச்சுறுத்தல் என்று அதன் மீது அமெரிக்காவும் ஐ,நா பாதுகாப்பு அமைப்பும் புதிய பொருளாதார தடைகளை விதிக்க போவதாக மிரட்டுகின்றன. தேவைப்பட்டால் வட கொரியாவின் மீது இராணுவத் தாக்குதலையும் நடத்துவோம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

உலகில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு நாடுகளில் அமெரிக்காவின் ஆக்டோபஸ் கரங்கள் சூழ்ந்துள்ளன

“மர்ம தேசம்” என்றும் “அணு ஆயுத பேராபத்து” என்றும் மேற்கத்திய ஊடகங்களால் அழைக்கப்படும் வட கொரியா இதுவரை எந்த நாட்டின் மீதும் ஆக்கிரமிப்பு போரை நடத்தியதில்லை. 1950 – ம் ஆண்டின் கொரியப் போரும் பலவந்தமாக வட கொரியாவின் மீது திணிக்கப்பட்ட ஒன்றுதான். அன்று கொரியத் தீபகற்பத்திற்கு சென்ற அமெரிக்க படைகள் இன்றுவரை வீடு திரும்பவில்லை.

ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இராணுவத் தாக்குதல், வட கொரியாவுடனான பொருளாதார உறவை முறித்து கொள்ள சீனாவிற்கு அழுத்தம் கொடுத்தல், வட கொரியா அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்துதல், இணையத் தாக்குதல்கள் என்று வட கொரியாவிற்கு எதிராக பல்வேறு யுத்திகள் தங்கள் முன்னால் இருப்பதாக டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.

ஆனால் வட கொரியாவின் மீதான சீனாவின் நிலைப்பாடு அமெரிக்காவிற்கு கடும் எரிச்சலைக் கொடுத்து வருகிறது. இதனால் வட கொரியாவுடன் பொருளாதார உறவுகள் வைத்துள்ள சீனாவின் சிறிய வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அமெரிக்கா மிரட்டியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய ((37 இலட்சம் கோடி ருபாய்)) பொருளாதாரப் பங்காளி குறிப்பாக இறக்குமதியில்(28 இலட்சம் கோடி ரூபாய்) சீனாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடனான சீனாவின் மொத்த வர்த்தக மதிப்பு மட்டும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்(70 இலட்சம் ரூபாய்) ஆகும். ஆனால் மேற்படி நாடுகளை ஒப்பிடும் போது அவற்றின் எதிரி நாடான வட கொரியாவுடனான சீனாவின் வர்த்தகம் ஏறக்குறைய 32 ஆயிரம் கோடி ரூபாய் (5 பில்லியன் டாலர்) மட்டுமே. எனவே முதலாளித்துவ சீனா எப்படி பார்த்தாலும் வட கொரியாவிற்காக அமெரிக்காவை பகைத்துக் கொள்ளாது. அதே நேரத்தில் வட கொரிய – சீனா பரஸ்பர உதவி மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் வரும் 2021 ஆண்டில் தான் காலாவதியாகிறது. பொருளாதாரத்தில் முன்னேறி வரும் சீனாவிற்கு வட கொரியா இராணுவ ரீதியில் ஒரு இன்றியமையாத பகுதியாகும்.

உலகிற்கு அச்சுறுத்தல் வட கொரியாவா இல்லை அமெரிக்காவா? இன்று உலகம் முழுவதும் 138 நாடுகளில் கிட்டத்தட்ட 800 இடங்களில் அமெரிக்காவிற்கு இராணுவ தளங்கள் இருக்கின்றன. அதாவது உலகில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு நாடுகளில் அமெரிக்காவின் ஆக்டோபஸ் கரங்கள் சூழ்ந்துள்ளன. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் நேரடியாக இராணுவத்தளம் இல்லையென்றாலும் இராணுவக் கூட்டுப்பயிற்சி மற்றும் பொருளாதார புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் அந்நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் அமெரிக்கா வைத்துள்ளது.

அமெரிக்காவிற்கு எதிரான போரில் வட கொரியாவினால் ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்காது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதனால் தான் தன்னுடைய இறையாண்மையை பாதுகாத்துக் கொள்ள அணு ஆயுதத்தைத் தவிர வட கொரியாவிற்கு வேறு வழியில்லை. வரலாற்றில் இதுகாறும் அணுகுண்டுப் பேரழிவை ஏற்படுத்தி இலட்சக்கணக்கான ஜப்பானிய மக்களை படுகொலைச் செய்தது அமெரிக்கா மட்டுமே. இன்று உலகை இரட்சிக்கும் கடவுளாகத் அமெரிக்காத் தன்னைக் காட்டிக்கொள்வது வரலாற்றின் முரண்நகை. ஒரு வேளை வடகொரியாவை சீண்டி விட்டு அணு ஆயுதத்தை வெடிக்க வைத்து தன்னுடைய ஆக்கிரமிப்புக் கொள்கையை வலுவாக்கிக் கொள்வதும் அமெரிக்காவின் தந்திரமாக இருக்கலாம்.

ஆனால் அணு ஆயுதம் என்பது வெல்பவர், தோற்பவர் எனும் பிரிவினையைத் தாண்டி இருவரையும் பாதிக்கும் நாசகார ஆயுதம் அல்லவா? தொலை தூரத்தில் இருக்கும் அமெரிக்காவிற்கு வட கொரியாவின் அணு ஆயுதத்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அமெரிக்காவிடம் அணு ஆயுதம் மட்டுமல்ல, அதற்கு நிகரான இதர ஆயுதங்களும் உள்ளன.  ஆகவே ஆசிய நாடுகளும், மக்களும் இந்த ஆயுதப் பேரழிவில் இருந்து தம்மை காத்துக் கொள்ள வேண்டுமென்றால் அமெரிக்காவைத்தான் துரத்த வேண்டும்!

செய்தி ஆதாரம்:

_____________

இந்தப் பதிவு உங்களுக்கு பயனளித்ததா?

 • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

 1. சீனாவின் பங்காளிக்கு வினவின் ஆதரவு 🙂

  வட கொரியாவில் உலக அமைதிக்கு நேரடியாக தீமையில்லை ஆனால் வட கொரியாவின் பல செயல்கள் உலக அமைதிக்கு பெரும் தீமையை கொண்டு வருபவை. சீனாவின் இன்னொரு பங்காளி பாகிஸ்தானுக்கு வட கொரியா ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பங்களை வழங்குகிறது, அதேபோல் பாக்கிஸ்தான் வட கொரியாவுக்கு அணு ஆயுத தொழில்நுட்பங்களை கொடுத்து உதவுகிறது. இவை இரண்டிற்கும் இணைப்பு சங்கிலி சீனா.

  வட கொரியா மற்றும் சீனா இருவரும் சேர்ந்து பாகிஸ்தானுக்கு வழங்கிய ஆயுதங்களால் பாதிக்கபட்ட (பாதிக்கப்படும்) நாடு இந்தியா.
  அவர்கள் பாகிஸ்தானுக்கு கொடுக்கும் ஆயுதங்கள் எப்போது வேண்டுமானாலும் தீவிரவாதிகள் கைகளில் சிக்கலாம் என்பது உலகத்திற்கே பெரும் ஆபத்து.
  வட கொரியா பல முறை ஜப்பானையும் தென் கொரியாவையும் மிரட்டி கொண்டு இருக்கும் நாடு.
  அணு ஆயுதங்கள் தவறானவர்கள் கைகளில் இருப்பது எப்போதுமே ஆபத்தானது.

  • இந்தியாவிற்கு எதிரி பாகிஸ்தான் தான் சீனா கிடையாது என்று சு.சாமி சொல்லியிருக்காரு. நீங்க என்னடானா….

   சரி அதன் கட்டுரைல சொல்ற மாதிரி….சீனாவோட பெரிய பங்காளி அமெரிக்கா தான்.
   உங்களுடைய வாதத்தின் படி பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு. இந்தியாவிற்கு அதனால் பெரிய தலைவலி. ஆனால் இந்தியாவோட பெரிய பங்காளியும் சீனாவோட பெரிய பங்காளியும் பாகிஸ்தானுக்கு உதவுறாங்க….அவுங்க உதவியோட தான் பாகிஸ்தான் அணு ஆயுதத்தையே தயாரித்து என்றால் இந்தியாவின் உண்மையான எதிரிகள் யார்?
   தப்பு செய்யறவன விட அதா தூண்டுபவன் தானே பெரிய குற்றவாளி.
   அப்போ அமெரிக்காவும் சீனாவும் தானே இந்தியாவோட உண்மையான எதிரிகள்? அப்புறம் என்ன ஹேருக்கு நீங்க அந்த ரெண்டு நாடோட பொருளாதார தொடர்பு வெச்சு இருக்கீங்க…

   பேசாம இந்தியா சீனா மற்றும் அமெரிக்கா மேல பொருளாதார தடை விதிச்சு டைவர்ஸ் வாங்கிட்டா என்ன?

   • பாக்கிஸ்தான் யுரேனியம் செறிவூட்டல் தொழில்நுட்பத்தை முதலில் நெதர்லாந்தில் இருந்து திருடி கொண்டு வந்து அணு ஆயுதத்தை தயாரித்தார்கள், அதன் பிறகு சீனா அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்தார்கள்.. அணு ஆயுதம் மட்டும் இல்லாமல் நீர் மூழ்கி கப்பல் போர் விமானங்கள் அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் பாக்கிஸ்தான் தீவிரவாத தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் சீனா ஐநா சபையில் பாதுகாக்கிறார்கள்

 2. மணிகண்டன்…நீங்கள் சொன்னதை திருப்பி படித்து பாருங்கள். உங்களுக்கே சிரிப்பாக இல்லை.

  பாகிஸ்தானுக்கு சீனா அணு குண்டு தயாரிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தது உண்மை. வட கொரியாவுக்கும் கற்றுக் கொடுத்தது உண்மை. அதே போல இந்தியாவுக்கு அணுகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுத்தது ரசியா. இந்தியா தன்னுடைய இறையாண்மையை தற்காத்துக் கொள்ள அணுகுண்டு தயரிக்குமானால் பாகிஸ்தானுக்கும், வட கொரியாவிற்கும் ஈரானுக்கும் அது பொருந்தும். அணுகுண்டு யார் தயாரிக்கலாம் யார் தயாரிக்க கூடாது என்ற அதிகாரத்தை கொடுப்பது இராணுவம் மற்றும் பொருளாதார பலம் மட்டுமே. அமெரிக்காவின் இன்றைய உலக நாட்டாமை நாற்காலி காலியாக போகும் சூழலில் அதை கைப்பற்ற சில நாடுகள் போட்டியில் இருக்கின்றன. அதில் கண்டிப்பாக இந்தியா இல்லை.

  சீனா,இந்தியா,அமெரிக்கா, பாகிஸ்தான்…..இந்த நாடுகள் அவற்றின் முதலாளிகள் அனைவரும் நீர் சீன போடுவது போலல்லாமல் பல இலட்சகணக்கான கோடிகளை
  சந்தையில் அள்ளிக் கொண்டு இருக்கிறார்கள்.

  இவர்களுக்கு அதவது இந்த இலட்சகனகான கோடிகளை சந்தையில் சூதாடிக் கொண்டு இருக்கும் அந்தந்த நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதரத்தை கட்டுபடுத்திக் கொண்டு இருக்கும் முதலாளிகளுக்கு தேசங்கடந்த கார்பொரேட் நிறுவனங்களுக்கு கேட்கும் அளவிற்கு உமது தேசபக்தி அழுகுரலின் டெசிபல் அளவு இல்லை என்பது மிகவும் சோகம்.

  பாகிஸ்தானை ஒப்பிடுகையில் அமெரிக்காவிற்கு வட கொரியாவினால் எந்த இலாபமும் இல்லை. ஆனால் பாகிஸ்தானால் உண்டு. ஆயினும் அமெரிக்காவின் ஒற்றை வல்லாதிக்க கனவு இன்று களைந்து வருகிறது. அதன் இடத்தை அதாவது பொருளாதார இராணுவ ரீதியில் சீனா,ரசியா,ஜெர்மனி கைப்பற்றிக் கொள்ளும் தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. எனவே வட கொரியா என்பது சீனாவிற்கு இராணுவ ரீதியில் மிக முக்கியமான் கேந்திரமாகும். எனவே அதை விட்டு கொடுப்பது என்பது சீனாவிற்கு சாத்தியமில்லை.

  வட கொரியாவின் மீதான இராணுவ தாக்குதல் அமெரிக்காவிற்கு பாரதூரமான விளைவுகளை பொருளாதார ரீதியில் ஏற்படுத்தும் என்பது உங்களது பூனைக் கண்ணைத் திறந்து பார்த்தல் தெரியும். வட கொரியா அமெரிக்காவை தாக்கும் அளவிற்கு வல்லமை இல்லை என்றாலும் ஜப்பானையோ, தென்கொரியாவையோ தக்கக் கூடும். ஒரு வேலை அதன் விளைவுகள் சீனாவிற்கும் கூட பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த கூடும். அது அமெரிகிற்கு கடுமையான விளைவுகளை பொருளாதார ரீதியில் ஏற்படுத்தும் என்பதை உங்களை விட அமெரிக்காவிற்கு நன்கு தெரியும்.

  • உங்களை போன்ற ஆட்கள் பாக்கிஸ்தான் தரப்பு நியாயங்களை பேசுகிறீர்கள், சீனா தரப்பு நியாயங்களை பேசுகிறீர்கள் ஆனால் இந்தியாவிற்காக மட்டும் பேச மாட்டிர்கள். கம்யூனிஸ்ட் டிசைன் அப்படி

   விவரம் தெரியாமல் பேச வேண்டாம்,

   இந்தியாவிற்கு அணு ஆயுத தொழில்நுட்பத்தை ரஷ்யா கொடுக்கவில்லை… இந்தியாவின் முதல் அணு உலையை நிறுவியவர்கள் கனடா. அந்த அணு உலையில் இருந்து கிடைத்த யுரேனியம் மூலம் இந்தியா முதல் அணு குண்டை வெடித்தது. அதன் பிறகு தான் மேற்கத்திய நாடுகள் இணைந்து NSG அமைப்பை கொண்டு வந்தார்கள். கனடா கூட அணு உலையை தான் நிறுவினார்கள் ஒழிய அவர்கள் அணு குண்டை எப்படி தயாரிப்பது என்று சொல்லி கொடுக்கவில்லை, இது இந்தியா ஆராய்ச்சியாளர்களின் உழைப்பு.

   சீனா பாகிஸ்தானுக்கு அணு ஆயுத தொழில்நுட்பங்களை கொடுக்க காரணம் இந்தியாவிற்கு பாக்கிஸ்தான் மூலம் தலைவலி கொடுக்க வேண்டும் என்ற தீய எண்ணம். இதை சீனாவின் globaltimes பத்திரிகையும் ஒப்புக்கொண்டுள்ளது. பாக்கிஸ்தான் அரசியல்வாதிகளும் ராணுவ தலைவர்களும் இந்தியாவை இந்த அணு ஆயுதத்தை வைத்து தான் பிளாக்மெயில் செய்கிறார்கள். தீவிரவாதத்திற்கு எதிராக எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் இந்தியாவின் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று இன்று வரையில் மிரட்டி கொண்டு இருக்கிறார்கள்.

   பாகிஸ்தானின் இந்த மிரட்டல் உங்களை போன்ற கம்யூனிஸ்ட்களுக்கு நியாயமான செயலாக படுவது தான் வேடிக்கையாக வேதனையாகவும் இருக்கிறது.

   நிச்சயம் பாக்கிஸ்தான் போன்ற ஒரு நாட்டின் கையில் அணு ஆயுதம் இருப்பது உலக அமைதிக்கு பெரும் தீங்கானது.

   வட கொரியாவிற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை இந்தியாவிற்கு நன்மை செய்வதே.

 3. எங்கயும் நான் பாகிஸ்தானுக்கோ சீனாவிற்கோ ஆதரவாக பேசவில்லை. உங்களுக்கு எதிராக நான் பேசியது இந்தியாவுக்கே எதிராக பேசுவதாக நீங்க உடான்ஸ் விடறீங்களே பாஸ்.

  சரி அணுகுண்டு சொந்தமாக கண்டுபிடிச்சங்களோ இல்ல காபி அடிச்சாங்களோ அது இந்த விவாதத்திற்கு தேவையில்லாதது.

  அப்படிபட்ட நாடுகளோட பொருளாதார தொடர்புகள் ஏன் இந்திய வைத்திருக்கிறது என்பது தான் என்னுடைய கேள்வி. பாகிஸ்தானுடன் சீனாவுடன் ஏன் இந்தியா பொருளாதர தொடர்பு வைத்திருக்கிறது….வெட்டி விட வேண்டியது தானே…அதனால் வரும் எந்த எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியது தானே.

  இல்லை இது சர்வதேச ஒப்பந்தகள் காரணமாக தான் இந்த திடர்பு இருக்கிறது என்றால் அந்த ஒப்பந்தங்களில் ஏன் கையெழுத்து இந்தியா போட்டது?

  என்னைப்பொறுத்த வரை, ஒரு நாடு என்ற அளவில் தன்னுடைய இறையாண்மையை பாதுகாத்துக் கொள்ள நம்முடைய நாட்டிற்கு முழு உரிமையுள்ளது. அதே போல வட கொரியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் கூட உரிமையிருக்கிறது. நமக்கான நியாமான உரிமைகளை நாம் கொண்டாட வேண்டும் என்றால் அடுத்தவர்களின் நியாமான உரிமைகளையும் நாம் மதிக்க வேண்டும்.

  சும்மா பாகிஸ்தானிடம் இருந்தால் பிரச்சினை வட கொரியாவிடம் இருந்தால் பிரச்சினை என்றெல்லாம் சும்மா பொலம்பி ஒரு பயனும் இல்லை.

  • பாகிஸ்தானுக்கு என்ன நியாயமான உரிமை இருக்கிறது சார், தினம் தினம் எல்லையில் குண்டு போட்டு தீவிரவாதிகளை எல்லை தாண்டி வர பாக்கிஸ்தான் உதவி செய்கிறார்களே அது தான் அவர்களின் உரிமையோ ? தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து ஆயுதங்களை கொடுத்து எல்லை தாண்டி அனுப்பாதீர்கள் என்று இந்தியா ஆப்கான் அமெரிக்கா என்று பலர் சொல்லியும் கேட்காத பாக்கிஸ்தான் உங்களுக்கு வேண்டுமானால் பங்காளிகளாக இருக்கலாம் ஆனால் என்னை போன்ற சாதாரண இந்தியனுக்கு அல்ல. பாகிஸ்தானின் இந்த செயல்களால் இந்தியா நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்காக அணு ஆயுத பிளாக்மெயில் செய்கிறார்களே அது தான் அவர்களின் இறையான்மையோ ?

   பாக்கிஸ்தான் தீவிரவாத இயக்கங்களை ஐநா தடை விதித்தாலும் அவர்களின் தலைவர்கள் மீது தடை வராமல் காப்பாற்றும் சீனா உங்களுக்கு தோழர்களாக இருக்கலாம் அனால் எங்களுக்கு அல்ல.

   • //அப்படிபட்ட நாடுகளோட பொருளாதார தொடர்புகள் ஏன் இந்திய வைத்திருக்கிறது என்பது தான் என்னுடைய கேள்வி. பாகிஸ்தானுடன் சீனாவுடன் ஏன் இந்தியா பொருளாதர தொடர்பு வைத்திருக்கிறது….வெட்டி விட வேண்டியது தானே…அதனால் வரும் எந்த எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியது தானே.//

    இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க சார்…..

    இத உட்டுட்டு உங்க தேஷ பக்தி சரக்க இங்க காமிக்காதீங்க…

    • இன்று உலகம் அணைத்து வகையிலும் ஒன்று இணைத்து இருக்கிறது. எதிரியாகவே இருந்தாலும் வேண்டாம் என்று ஒதுக்க முடியாது. ஜப்பான் சீனா பிரச்சனையின் போது சீனா அரசு ஜப்பானிய பொருட்களை வாங்க வேண்டாம் என்று சொன்னார்களே ஒழிய ஜப்பான் உறவே வேண்டாம் என்று ஒதுங்கவில்லை. இந்தியா சீனா உறவிலும் அதே தான்.

     மேலும் சீனா ரியல் எஸ்டேட் மாபியாக்களை போல் நடந்துகொள்கிறார்கள். அதனால் தான் பூட்டான் போன்ற சிறிய நாட்டை கூட விட்டு வைக்காமல் ஆக்கிரமிக்க பார்க்கிறார்கள். கம்யூனிஸ்ட்கள் உலக அமைதிக்கு எந்தளவுக்கு ஆபத்தானவர்கள் என்பதற்கு சீனாவின் அடாவடித்தனம் ஒரு எடுத்துக்காட்டு

     • // ஜப்பான் சீனா பிரச்சனையின் போது சீனா அரசு ஜப்பானிய பொருட்களை வாங்க வேண்டாம் என்று சொன்னார்களே ஒழிய ஜப்பான் உறவே வேண்டாம் என்று ஒதுங்கவில்லை. இந்தியா சீனா உறவிலும் அதே தான்//

      இரு நாட்டு உறவுமுறையில் மிக முக்கியமான அங்கம் தான் இந்த பொருள் ஏற்றுமதி இறக்குமதி. பொருள் கொடுக்கல் வாங்கல் இல்லாமல் ஏதோ பூங்காவுல உக்காந்து வாங்க பழகுவோம்ங்குற மாதிரி நினைத்து கொண்டு இருக்கீங்க.

      சரி இந்தியா சீனாவுடனோ இல்லை பாகிஸ்தானுடனோ பொருளாதார ஏற்றுமதி இறக்குமதிய நிறுத்தல. ஆனால் வட கொரியாவோட நிறுத்தி விட்டது.
      http://money.cnn.com/2017/05/01/news/north-korea-india-trade-ban/index.html

      இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான வர்த்தக உறவு என்பது தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது என்பதை பின்வரும் இணைப்பில் பார்க்கலாம்,
      https://tradingeconomics.com/india/imports-from-pakistan/forecast

      சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக மதிப்பு 100 பில்லியனை எட்டுவதற்கு இருதரப்பும் முயன்று வருகிறார்கள். இதுவும் இணையத்தில் காணக் கிடைக்கிறது. தேடித் படிக்கவும்.

      எப்படிப் பார்த்தாலும் உங்களுடைய வாதத்தின் படி சீனாவும் பாகிஸ்தானும் தான் இந்தியாவின் அருகில் இருக்கும் எதிரிகள். அருகில் இருக்கும் எதிரியுடன் காசு பணத்தால் அளவளாவி விட்டு நமக்கு பிரச்சினையே இல்லாத வட கொரியா உடனான வர்த்தக உறவுகளை அமெரிக்க எசமானன் சொன்ன உடனே நிறுத்துகின்ரீர் என்றால் உமக்கு ஏதேனும் வெட்கம் மானம் ரோசம் தேச பக்தி கிஞ்சித்து இருக்கிறதா என்ன?

      இந்தியா யாருக்கிட்ட பேசணும் பேசக்கூடாதுன்னு தாலிக் கட்டுன பொண்டாட்டிய மிரட்டுற மாதிரி அமெரிக்க மிரட்டுறான். கேட்டா வழிச்சுட்டு கேனத்தனமாக சிரிக்கிறீங்க. தன்னுடைய இறையாண்மையை விட்டுக் கொடுக்காமல் உலக போலீசையே மிரள வைக்கும் வட கொரியா எந்த வகையிலும் இந்தியா அரசை விட தன்மானமுள்ள தேச பக்தியுள்ள நாடு தான்.

      • ஆக மொத்தம் உங்களுக்கு சீனா பாகிஸ்தானின் இந்தியாவிற்கு எதிரான அடாவடிதங்கள் எல்லாம் பிரச்சனையில்லை, உங்கள் வருத்தம் எல்லாம் சீனாவின் பங்காளி வட கொரியாவோடு ஏன் வர்த்தக உறவை நிறுத்தினார்கள் என்பதே…

       ஐநா சபை வட கொரியாவிற்கு எதிராக தான் தடை விதித்து இருக்கிறார்கள் சீனா பாகிஸ்தானுக்கு எதிராக அல்ல, அப்படி சீனா பாகிஸ்தானுக்கு எதிராக ஐநா சபை தடை விதித்தால் இந்தியாவும் அவர்களோடு வர்த்தக உறவுகளை வைத்துக்கொள்ளாது.

       வட கொரியாவின் ஆயுதங்கள் எல்லாம் இந்தியாவிற்கு ஆபத்தை (பாக்கிஸ்தான் மூலம்) உருவாக்குபவை.

       உங்களை போன்ற கம்யூனிஸ்ட்களுக்கு இந்தியாவை விட இந்தியாவின் எதிரிகள் (பாக்கிஸ்தான் சீனா வட கொரியா) மீது தான் அக்கறை பாசம் அதிகம் என்பதை மேலும் ஒரு முறை நீங்கள் நிரூபித்து இருக்கிறீர்கள்.

       • சரி வட கொரியா ஆபத்தான நாடு அதனால் பொருளாதாரத் தடை போட்டார்கள். அப்படினா பாகிஸ்தான் நமக்கு நட்பு நாடு என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? அதனால் தான் பொருளாதார தடை போடவில்லையா?

        பாஸ் என்ன மாதிரியான அறிவார்ந்த வடிவமைப்பு நீங்க. உங்க ஆளுங்க எல்லாருமே இப்படி தான் இருக்கீங்க.

        • உங்களை போன்ற கம்யூனிஸ்ட்களின் ஆதங்கம் புரிகிறதுக்கு உங்களுக்கு வேண்டுமானால் பாக்கிஸ்தான் சீனா நட்பு சக்தியாக இருக்கலாம் ஆனால் எங்களை போன்ற சாதாரண இந்தியா மக்களுக்கு அவர்கள் எதிரிகளே

 4. Nations see (or) separated ‘import/export’ from their ‘political stand’ against countries.

  ‘Political stand’ may affect countries ‘relationship’. But countries are conscious enough not to disturb the ‘daily life’ or their citizens. No matter whichever country it is

  India used to export ‘Sugar’ to Pakistan despite rivalry. That’s the only reason I am aware of

  • உண்மை விளம்பியே,

   நீங்க சொல்வது சரியே. இரு அரசுகளுடைய பிரச்சினையில் இரு நாட்டு மக்களை பலி வாங்க கூடாது.

   ஆனால் வட கொரியாவுடனான வர்த்தகத்தை இந்தியா நிறுத்தியதற்கு என்ன கரணம்? இந்தியாவுக்கும் வட கொரியாவுக்கும் அரசியல் ரீதியில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? இராணுவ ரீதியில்? எல்லைத் தகராறு? வட கோரிய இந்தியாவை மிரட்டி இருக்கிறதா?

   சீன்வுடன் எல்லைப் பிரச்சினை இருக்கிறது. இராணுவ ரீதியிலும் பிரச்சினை இருக்கிறது.
   பாகிஸ்தானுடன் எல்லைப் பிரச்சினை இருக்கிறது. இராணுவ ரீதிய்ளும் பிரச்சினை இருக்கிறது. ஆனால் இந்த இரு நாட்டுடன் இந்திய வர்த்தகத்தின் மதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த இரு நாடுகளும் அமெரிக்க வுடனான வர்த்த உறவை பேணிப் பாதுகாத்து வருகின்றன என்ற ஒரேக் காரணம் அல்லாமல் வேறு என்ன?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க