தோழர். பா.விஜயகுமார்.

“கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்டது வங்கித்துறை” என்ற தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கக் கூட்டம் 22/10/18 திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் ஆவடியில் உள்ள ஓ.சி.எஃப். ஒர்க்கர்ஸ் யூனியன் பொன் விழா அரங்கத்தில்  நடைபெற்றது. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு – மேற்கு மாவட்டங்கள் சார்பாக நடத்தப்பட்ட இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் தலைமையேற்று  உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொருளாளர் தோழர். பா.விஜயகுமார் அவர்கள் இன்றைய சூழ்நிலையில் வங்கிகளில் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக கடனாக பெற்ற பல லட்சம் கோடிகளை கட்டாமலும் ஏமாற்றியும் வருகின்றனர். மேலும் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகவே ஆட்சிக்கு வந்த மோடி அரசு அவர்களின் கடன்களை மோடி அரசு அவர்களின் வந்த மோடி அரசு சட்டப்பூர்வமாக தள்ளுபடி செய்தும் வாராக்கடன்களாக அறிவித்தும் உத்தரவிடுகிறது.

மேலும் சாதாரண உழைக்கும் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வங்கிகளில் கல்வி கடன், விவசாய கடன் பெற்று அதை அவர்கள் ஒரு தவணை  கட்டவில்லை என்றாலும், மறந்து போனாலும் வங்கித்துறை காவல்துறையையும் ரவுடிகளையும் வைத்து அடித்து துன்புறுத்தி அந்தக் கடன்களை வசூலிக்கிறது. மேலும் அவர்களை அவமானப்படுத்துகின்ற வகையில் சுவரொட்டி விளம்பரம் செய்வதும், விளம்பர தட்டிகள் மூலமும்  பெயரை போட்டு பேனர் வைத்தும் அவமானப்படுத்துகிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் இந்த வங்கிக் கொள்ளையை தடுத்து நிறுத்த மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று உரையாற்றினார்.

இறுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் விகேந்தர் நன்றி உரையாற்றினார். கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட கிளை இணைப்பு சங்க தோழர்களும், தோழமை அமைப்பை சார்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.

படிக்க:
மீண்டும் தலையெடுக்கும் டெங்கு ! அனந்த சயனத்தில் அடிமை அரசு !
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

திருவள்ளூர் கிழக்கு – மேற்கு மாவட்டங்கள்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க