ஜினி + ஷங்கர் + சுபாஷ்கரன் கூட்டணியில் வெளிவந்திருக்கும் 2.0 கதை என்ன? தத்துவம், உணர்ச்சி, டெக்னாலாஜியின் பார்வையில் செதுக்க முயற்சிப்போம்.

தத்துவம் 1: இயற்கையோடு செயற்கை போட்டி போட்டால் பூமி அழியும். கொஞ்சம் பாத்துச் செய்யுங்க!
தத்துவம் 2: ஆன்மீக அமைதியில்லாமல் அறிவியலின் தொழில்நுட்பத்தை வைத்து மட்டும் நிம்மதியை என்ஜாய் பண்ண முடியாது.

உணர்ச்சி 1: பீட்சா சாப்பிட்டுக் கொண்டே, தூதுவளை தோசையின் மகிமையை சொல்லிக் கொண்டே, இருக்கையை மீறி வரும் கீழ் வாயுவை கொஞ்சம் பாடிலாங்வேஜில் சரி செய்து கொண்டே, எதிரில் இருக்கும் அழகான பெண்ணை ஜொள்ளிக் கொண்டே, இடது கையிலிருக்கும் செல்பேசியை துழாவிக் கொண்டே இருக்குதடா இந்த உலகம்!

உணர்ச்சி 2: “சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து….” பாடலை டிக்டாக்கில் ஒரு அல்ட்ரா மாடர்ன் யுவதி பாடும் போது அதை லயிக்கிறீர்கள். அந்நேரம் ஓரக்கண் திசையில் ஒரு குயில் பறக்கிறது. அப்போது நீங்கள் கேட்பது பாடலா, பார்ப்பது பெண்ணா, கவனிப்பது குயிலா என்றால் அதுதான் இதுதான் எதுதான் எனும் உணர்ச்சி வருமே அதே!

டெக்னாலஜி 1: அவரவருக்கு அருளப்பட்ட பீட்டர் ஞான ஆங்கிலத்தில் விக்கிப்பீடியாவில் கொஞ்சம் ஹோமிபாபா, நிறைய சலீம் அலி, தம்மாத் துண்டு ஈர்ப்புவிசை – மின்காந்த விசை – வலிமையான அணுவிசை – பலவீனமான அணு விசை, இமயமலை பாபா – துறவிகளின் ஆரா அனைத்தையும் ஒரு காக்டெயில் குலுக்கலில் பிரசவித்தால் நீயும் ஒரு சயிண்டிஸ்ட்.

டெக்னாலஜி 2: படையெடுக்கும் ஈக்கள் – வௌவால்கள் – தேனிக்கள் – டயனோசர்களை செல்பேசிகளாக மாற்றி, ஸ்டார் வார்ஸ், டிரான்ஸ்ஃபார்மர், ஓநாய் மனிதர்கள், மார்வெல் ஸ்டூடியோவின் அயர்ன் மேன் இன்னபிற காமிஸ் படங்கள், உக்ரேன் ஆடை விளக்கு நடனங்களை ஆங்காங்கே கிராபிக்சில் ஏதோ நம்மளால முடிஞ்ச மட்டும் கோத்து ஒரு கதை சொல்ல முயன்றால் எத்தனை கோடி ரூபாய் செலவாகும்?

இனி மரபுவழியில் கதை கேட்டு கதை கேட்டு சதை போட்ட நாட்டிற்கு கதையெனும் வதையை சொல்வோம்.

பனித்துளியில் இருக்குதடா உலகமென இயற்கையோடு இயைந்து வாழும் பேறு பெற்றவர் பக்‌ஷி ராஜன். அவர் செத்துப் பிறந்தபோது இதயத்தைக் குத்திக் காப்பாற்றியது ஒரு சிட்டுக் குருவி. இது தற்செயலாக நடந்தது என்றாலும் பறவைகளோடு தனது வாழ்வை பிணைத்துக் கொள்கிறார் பக்‌ஷி. அது பொறுக்கவில்லை தொழில்நுட்பத்திற்கு. இந்தியாவில் 96-ம் ஆண்டில் வந்த செல்பேசிகளின் டவர்களும், கதிர்வீச்சுக்களும் பறவைகளின் மூளையில் இருக்கும் திறனை அழிக்கிறது. ஆத்திரமடைந்த பக்‌ஷி அமைச்சர், முதலாளிகள், அதிகாரிகள் என துரத்தி துரத்திப் பார்த்து வகுப்பெடுக்கிறார். தெருவில் ஆர்ப்பாட்டம் செய்கிறார். அனைவரும் சிட்டுக் குருவிகளுக்காக செல்பேசிகளை விட முடியாது என்கின்றனர்.

மனமுடைந்து தூக்கில் தொங்கியவர் தனது “ஆரா” சக்தியை வைத்து செல்பேசி வைத்திருக்கும் மக்களை பழிவாங்குகிறார்.

வசீகரனான ரஜினி விஞ்ஞானியாக நடித்து முந்தைய படத்தில் கழட்டி விடப்பட்ட சிட்டி எனும் எந்திரத்தை மீண்டும் ஒக்குப் போட்டு பக்‌ஷியை அழிக்கிறார். நிலாவாக நடித்த எமிஜாக்சன் எடுபிடி வேலை செய்யும் எந்திரமாக உதவுகிறார். செல்பேசி விற்பவர், தொலைத் தொடர்பு அதிபர், தொலைத் தொடர்பு அமைச்சர் ஆகியோரைக் கொல்லும் பக்‌ஷியை இறுதியில் சிட்டியின் 2.0 வெர்ஷனும், மைக்ரோ 3.0 வெர்ஷனும் இணைந்து அழிக்கிறார்கள். அனைவரும் நலம்.

சினிமா விமர்சன மரபில் கிளைமேக்சை தவிர்த்து விட்டு இறுதியில் ஹீரோ என்ன செய்தார் மீதிக் கதை என்ன? என்று சொல்வதை மரபாக வைத்திருக்கிறார்கள். முழுசா சொல்லி விட்டால் திரையரங்கிற்கு ரசிகர்கள் வரமாட்டார்கள் எனும் அறமாம் இது. வணிக சினிமாவின் ஆதாயங்களை ஏற்றுக் கொண்ட ஊடகங்களில் ஆஸ்தான வித்வான்களாக விமர்சனக் கடை விரித்திருப்போர் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் போதையால் வாயால் வடை போடுவோரும் கூட மேற்கண்ட மரபை கடைபிடிக்க முடியாத ஒரு சோகம் இப்படத்தில் இருக்கிறது.

சாம்பார் ஜெமினி கணேசன் காலத்தில் ஒரு பாத்திரம் அறிமுகமாகும் போது அவரது பின்னணி, நடப்பு, குண விசேசம் அனைத்தும் முதலிலேயே சொல்வார்கள். இடையில் இயக்குநர் வீ சேகர் படங்களிலும் இது தொடர்ந்தது. ’முன்னுரை’ காட்சியில் பாயாசம் பண்றோம் என்று சொல்லிவிட்டு, அடுத்த காட்சியில் பாயாசத்தை செய்முறைக் குறிப்போடு செய்து காட்டி, அதற்கடுத்த காட்சியில் அதே பாயாசத்தால் சண்டை வருவதைக் காட்டுவார்கள். இந்த சண்டை அறிவிப்பு அந்த ’பண்றோம்’ காட்சியிலேயே சொல்லப்பட்டு விடும்.

இன்று ஆன்ட்ராய்டு காலத்தில் வந்திருக்கும் ஷங்கரின் படத்தில் கூட அதே பாயாசம்தான். கதை என்ன, அடுத்து வரும் காட்சிகள் என்ன, உரையாடல்கள் என்ன, என்பதை, “இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?” எனக் கேள்வி கேட்டுவிட்டு, முதல் எழுத்து ஹா,  கடைசி எழுத்து கி, இரண்டு க்ளூக்களையும் வைத்து சொல்லுங்கள் என சன் + விஜய் தொகுப்பாளர்கள் சிணுங்கிக் கொண்டு உதவுவது போல படத்தின் காட்சிகள் எடுத்துக் கொடுக்கின்றன.

திரையரங்கின் ஹை-டெசிபல் ஒலிகளையும், கண் பறிக்கும் கிராபிக்ஸ் ஒளியையும் இது உதவியா உபத்திரவமா எனக் கேட்டால், “சிட்டுக்குருவி லேகியம்னு வந்தா கண் காதுகளை தானம் பண்ணாம மருந்து கிடைக்குமா?”-வென அவை கேலி செய்யும்.

முதல் காட்சியில் விஞ்ஞானி வசீகரனைக் காண ரோபோட்டிக்ஸ் மாணவர்கள் வருகிறார்கள். ஜெமினி கணேசன் காலத்தில் கல்லூரி படிப்பும், 80-களில் ஐ.ஏ.எஸ்-சும், சேரனின் ஆட்டோகிராஃப் காலத்தில் விளம்பரக் கம்பெனி வேலையாகவும், 96 படத்தில் புகைப்படக் கலைஞனாவும் தமிழ் நாயகர்கள் மாடர்னாக காட்டிக் கொண்டார்கள். தற்போது இந்த வேலைகள் கிடைக்குமளவு பொருளாதாரம் இங்கும் எங்கும் இல்லை என்பதால் ரோபோட்டிக்ஸ் படிப்பை பந்தாவாக காட்டுகிறார்கள் போலும்.

இனி அடுத்து என்ன? நாசா காஃபி ஷாப்பில் விஜய் செட்டி நாட்டு முட்டை தோசையை சாப்பிட்டுக் கொண்டு அடுத்த நாள் ராக்கெட்டில் பறப்பாரோ? இத்தகைய செயற்கைத்தனமே நமக்கு கிராபிக்சை விஞ்சிய ஒரு எரிச்சலை ஊட்டுகிறது.

இரண்டாவது காட்சியில் பக்‌ஷி ராஜனின் சக்திப்படி செல்பேசிகள் திடீரென்று கைகளை விட்டு வானத்தில் பறந்து போகின்றன. இதை ஓரிரண்டு காட்டி விட்டு போவார்கள் என்று பார்த்தால் இந்த செல் பறப்பு சேட்டு வீட்டில், செட்டு வீட்டில், ஓடும் காரில், நிற்கும் ரயிலில், வயல் பரப்பில், வரவேற்பறையில், தெருவோரத்தில், ட்ரெயினில், மூத்திரச் சந்து…. ஸ்… ஸப்பா… எப்படா முடியுமென அலுப்பூட்டுகிறது.

இரண்டு மணி நேரத்தில் பக்‌ஷி ராஜன் கிராபிக்சாக வரும்போதெல்லாம் எப்படியும் பத்து பதினைந்து நிமிடம் கொத்தப்படும் விருதுநகர் புரோட்டாக்களாக துண்டு துண்டாகிறோம். நாம் சாப்பிட இருக்கும் கொத்து புரோட்டாவை ரசிக்கலாம். நாமே கொத்தப்படும் புரோட்டாவாக மாறும்போது இங்கு ரசிக்க மட்டுமல்ல, அழவும் முடியவில்லை.

மெட்டுக்காக ஒரு பாட்டு எழுதலாம். கிராபிக்சுக்காக ஒரு கதை எழுதினால்?

சிட்டுக்குருவியை சென்டிமெண்டுக்காகவும், செல்பேசியை கிராபிக்சுக்காகவும் இழுத்து வந்து விட்டு இடையில் 2ஜி வழக்கின் விவரங்களை ஆடிட்டர் குருமூர்த்தியின் பார்வையில் இறக்கிவிடுகிறார்கள்.

செல்பேசி காணாமல் போனதால் தொழில் படுத்துவிட்டது என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரின் வாயிலில் பல முதலாளிகள் காத்திருக்கின்றனர். ஒருவர் மட்டும் அதிகாரத் தோரணையில் நேரடியாக உள்ளே நுழைகிறார். வெளியே அமர்ந்திருப்பவர் இது 2ஜி என பொறுமிவிட்டு ஊழல் கதையை நினைவுபடுத்துகிறார். உள்ளே ஆ.ராசாவைப் போல வேட்டி கட்டிய தமிழர் ஒருவர் மந்திரியாய் செல்பேசி சேவையை மக்கள்மயமாக்கியதைக் கூறுகிறார். வந்த முதலாளியோ அவர் இந்தப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் அடுத்த விக்கிலீக்சில் நீதான் அம்பலம் என எச்சரிக்கை விடுத்துப் போகிறார்.

விக்கிலீக்ஸ் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அசாஞ்சேயும், ஸ்னோடனும் துணிவாக தம் உயிரை பணயம் வைத்து நடத்தும் ஒரு போராட்டம். அதனால்தான் அவர்களை கைது செய்து தண்டிப்பதற்கு அமெரிக்க அரசு துடிக்கிறது. அதை ஏதோ ஒரு ஏர்டெல் முதலாளியின் கைங்கரியம் என்று காட்டுவதற்கு பணமதிப்பழிப்பை நியாயப்படுத்தி எழுதிய ஒரு ஆன்மாவும், ரோட்டில் எச்சில் துப்பும் அப்பாவிகளை எண்ணெய்க் கொப்பறையில் போட்டு வறுக்கலாம் என படமெடுத்த மற்றொரு ஆன்மாவும் தேவைப்படுகிறது. அவ்வகையில் படத்தின் இயக்குநர் மற்றும் வசனகர்த்தா இருவரம் “மேட் ஃபார் ஈச் அதர்”தான்.

2ஜி வழக்கில் ஒன்னே முக்கால் இலட்சம் கோடி ஊழல் என எடுத்துவிட்ட ஸ்லீப்பர் செல்கள் அனைத்தும் பாஜகவுடையவை என வரலாறு நிரூபித்திருக்கிறது. அலைக்கற்றை ஊழல் என்பதை விட அது அரசின் கொள்கை முடிவு என்பதே சரி. அந்த வகையில் அதை தனியார்மயத்தின் தவறாக ஏற்கமறுத்து ஒரு பலிகடாவை காங்கிரசு கட்சியினர் மற்றும் ப.சிதம்பரம் தேடினர். ஆனாலும் ஆ.ராசா 2ஜி வழக்கிலிருந்து விடுதலையாகி புத்தகம் போட்ட பிறகும் குருமூர்த்தி வாயால் இதைப் பேசுவதற்கு ஒரு ஆழமான பாஜக மனம் வேண்டும். அது ஷங்கருக்கும், ஜெயமோகனுக்கும் இயல்பாகவே இருக்கிறது. ஜென்டில்மேனோ, விஷ்ணுபுரமோ இரு வேறு படைப்பு மனங்களின் உற்பத்தியல்ல.

ஒரு காட்சியில் பக்‌ஷிராஜன் அமைச்சரை பழிவாங்குவதற்கு இரண்டு கோடி மதிப்புள்ள அவரது வைரம் பதித்த செல்போனை, கண்ணாடியை உடைத்து அனுப்புகிறார். அதில் வரும் ’UnKnown’ அழைப்பை, உன்னி கிருஷ்ணன் அழைப்பு என்கிறாராம் அமைச்சர். இதை உதவியாளரான மயில்சாமி திருத்துகிறாராம். இப்படி அமைச்சர்கள் என்றால் அவர்களுக்கு அ, ஆ கூட எழுதத் தெரியாது என காட்டுவதிலேயே இவர்களின் மேட்டிமைத் திமிர் தெரிகிறது. சரி இவர்களின் யோக்கியதை என்ன?

வேற்றுகிரகங்களிலிருந்து எதுனாச்சும் வருதான்னு கண்காணிக்க ஒரு ஆய்வு மையத்தை 1964-ல் ஹோமி பாபா திறந்து வெச்சாராம். அதுல பாசிட்டிவ் சிக்னல் அனுப்பி திரும்ப பாசிட்டிவ் சிக்னல் வருதான்னு இரகசியமாக கண்காணிக்கிறார்களாம். இதை லேண்ட்லைனில் “நான் சொல்றது கான்பிடன்சியலான விசயமுன்னு” டாக்டர் சாம் சொல்றார். ரஜினி இன்னொரு லேண்ட் லைனில் அந்த ரகசியத்தை கேக்குறார். இதுக்கு அமைச்சரின் ‘உன்னிகிருஷ்ணன்’ அழைப்பே பரவாயில்லை!

சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற தொலைத்தொடர்பு அமைச்சரை சந்திக்கிறார் பக்‌ஷி ராஜன். அப்போது ஜெயமோகனும், ஷங்கரும் விக்கிபீடியாவில் ஆள் போட்டு படித்த அரைகுறை விவரங்களைக் கொட்டுகிறார். அதாவது செல்பேசி டவர் அதிகமானதால் வேடந்தாங்கலில் பறவைகள் வரத்து குறைகிறது, முட்டை வலுவாக இல்லாமல் உடையுது, 50 கிராம் எடை உள்ள ஆர்டிக் தேசத்து பறவை 12,000 கி.மீட்டர் பறந்து வேடந்தாங்கல் வருகிறது அதுவும் ஜிபிஎஸ் ட்ராக்கிங், மேப் இல்லாமல். டவர்களின் கதிர்வீச்சால் பறவைகளுக்கு மட்டுல்ல, மனிதர்களுக்கும் மன அழுத்தம், மனச்சிதைவு, சிக்கல் அனைத்தும் வருகிறது என ஸ்ஸ்…..அப்பா………..

ஆகவே வெட்டிப் பேச்சுக்கு பயன்படும் செல்பேசி டவர்களில் 40% குறைப்போம் என்கிறார் பக்‌ஷிராஜன். அதற்கு ஆதாரமாய் அமெரிக்காவில் நான்கு நிறுவனங்கள், சீனாவில் மூன்று நிறுவனங்கள் மட்டும் செல்பேசி சேவை வழங்கும்போது இங்கு மட்டும் பத்து நிறுவனங்கள் தேவையா அதைக் குறை என ஆ.ராசாவிற்கு வகுப்பு எடுக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

அய்யா, செல்பேசி டவர்களும், அவற்றின் கதிர்வீச்சு அலைக்கற்றை அலைவரிசைகளும் பயன்படுத்தப்படும் செல்பேசிகளின் எண்ணிக்கையை வைத்தே அதிகரிக்கிறதே அன்றி அதிக எண்ணிக்கை நிறுவனங்களால் அல்ல. பத்து பெட்டிக்கடைகள் ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு ஈடாகாது.

அதை நியாப்படுத்த அமைச்சர் சிட்டுக்குருவிகளை வறுத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் என்கிறாராம். இப்படி மனோரமாவின் விதவை நெற்றியை நோக்கி வீசப்படும் சிவப்புச்சாயத்தை தடுக்கும் விஜயகாந்துகள் இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் ஜெயமோகன்களால் வில்லனாக்கப்படுவது அயோக்கியத்தனமில்லையா?

படிக்க:
திரை விமர்சனம் : வசூலுக்காக அரசியல் நியாயம் பேசும் சர்கார் !
காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்

செல்பேசிகளை பறிகொடுத்துவிட்டு புகார்கொடுக்கும் போது ஒரு பெரியவர் ரேடியேசனால் ஓசோன் படலம் ஓட்டையாவதாகச் சொல்கிறார். அருகாமையில் உள்ளவரோ ஏதோ ட்ரைனேஜ் ஓட்டை மாறி சொல்ற என்கிறார். ஓசோன் ஓட்டையை அடைக்கும் வேலைகளுக்கு ஷங்கர், ஜெயமோகன், ரஜினி பிள்ளைகள், பேரன் பேத்திகள் பேஷாக அமெரிக்காவின் நாசாவிற்குப் போவார்கள். ஆனால் பாதாளச் சாக்காடை அடைப்பிற்கு இவர்களுக்குத் தெரிந்த ஒரு குடும்பம் கூட தனது பிள்ளையை அனுப்புவதாக ஒரு கவிதை கூட எழுதாது. இதெல்லாம் இயல்பாக இவாளிடம் எழுவதை கனம் பொதுஜனம் அழுத்தமாய் குறித்துக் கொள்ள வேண்டும்.

உள்துறை அமைச்சரோடு கூட்டம் நடக்கிறது. படத்தில் இரண்டாவது வில்லனாக வரும் இளைய விஞ்ஞானி பார்ப்பதற்கு 6 பேக் ரிச் பாயாக இருப்பவர் செல்பேசி காணாமல் போவதற்கு தீவிரவாதிகள் காரணம் என்கிறார். இன்னொருவர் கடவுளின் கோபம் என்கிறார். உடனே ரஜினி “என்ன பிரச்சினைன்னு நமக்குத் தெரியலேன்னா உடனே கடவுள் மேலயும், தீவிரவாதிங்க மேலயும் பழிபோடுறது நம்ம வழக்கம்” என்கிறார். அப்ப தூத்துக்குடி சமூக விரோதி யார்? இல்லே நீங்கதான் யார், எங்கிருந்து வாறீங்க?

படத்தின் வசனங்களில் த்..தூ (ள்) கிளப்புகிறார் ஜெயமோகன்.

நிலாவிடம் சும்மா புகை விட்டேன், பார்பி குட்டி, என் செல்லம், நைட்டுக்கு ரசத்தை வைச்சு உருளைக்கிழங்கு வறுத்துடு போதும், புராஜக்ட் மானேஜருக்கும் அந்த பலாக்காய் ஆஷாவுக்கும் செம டீலிங், நாளைக்கு மகாவீர் ஜெயந்தின்றதால இன்னைக்கு நைட்டே சரக்க வாங்கி வெச்சுரு, வட போச்சே, நாலு பேருக்கு உதவினா எதுவுமே தப்பில்லை, மனுசனுக்கு சினிமா, டிவி, சாப்பாடு, காசு நாலும்தான் முக்கியம், இது கல்லில்லை செல்லு, சிட்டி-(ரோபோ)யை தயார் செய்றதை ஏதோ இரண்டு இட்லி வடை பார்சல் மாறி சொல்றீங்க, டெலிகாம் மினிஸ்டர் வாயில பூந்திருச்சு, எனக்கு எங்க பூரும்னு தெரியலை, செல் இல்லாத வாழ்க்கை நடுவில கொஞ்ச பக்கத்தை காணோம் மாறி…. போதுமா மக்களே?

இதில் ஜெயமோகனது மேட்டுக்குடி கண்ணோட்டம் தன்னையறியாமல் ஆங்காங்கே வெண்முரசு போல கொட்டுகிறது. செல்பேசியை சங்கிலியில் கட்டி வைத்திருக்கும் இளைஞரைப் பார்த்து மற்றவர் “என்ன ரயில்வே ஸ்டேசன் டம்ளர் மாறி கட்டி வெச்சிருக்கிற” என்கிறார். இதெல்லாம் மக்கள் இயல்பாக பேசுவதற்காக என்று நியாயப்படுத்தலாம். மெரினா பீச்சுல வாக்கிங் போற மயிலாப்பூர் மாமா, பாக்சர் நாய கட்டி வெச்சிருக்கிற மாறி என்று சொல்லாமல் டம்ளர், டிரைனேஜ் என்று எழுதுவதற்கு ஒரு கனமான மனம் வேண்டும்.

மேலும் செல்பேசிகளை பயன்படுத்தும் மக்களை எவ்வளவு இழிவுபடுத்த வேண்டுமோ அவ்வளவு படுத்த வேண்டியிருப்பதால் அவை முர்டோச் டி.வி கம்பெனிகளின் பிரச்சாரமாய்க் கொட்டுகின்றன. சூழலியல் பிரச்சினையில் ஏகாதிபத்தியங்களது பங்கை மறுத்து விட்டு ஏழை நாடுகளை குற்றம் சாட்டும் கனவான்களது பார்வைக்கு ஈடானது இப்படத்தின் படைப்பாளிகளது பார்வை.

அன்றாடம் வேலைக்கு போகும் மக்களைப் பொறுத்தவரை செல்பேசி என்பது தனது வேலை, வருமானம், கடன் அனைத்திற்கான கருவியாக பயன்படுகிறது. இன்னொருபுறம் நடுத்தர வர்க்கம் அதை வெட்டியாக பயன்படுத்துவதோட கூடவே மக்கள் அரசியல்மயமாவதும் நடக்கிறது. மோடி எதிர்ப்போ, கஜா புயல் பாதிப்போ, தன்னார்வலர்களின் நிவாரணப் பணிகளோ, கோவனின் பாடலோ அனைத்தும் உடனுக்குடன் பரவுவது ஆளும் வர்க்கத்திற்கே எரிச்சலை ஊட்டுகிறது. அத்தகைய எரிச்சலைத்தான் இங்கே வசனங்களாக, காட்சிகளாக காட்டி கதை சொல்கிறார்கள். வாட்சப் வதந்தியைக் காட்டி மோடி எதிர்ப்பை குறை சொல்வதும், பன்னாட்டு நிறுவனங்களின் குற்றங்களை மறைக்க மக்களை குற்றம் சொல்வதும் வேறு வேறு அல்ல.

படத்தில் யாருக்கும் நடிப்பிற்கு வேலையில்லை. ரஜினியின் கால்களும் உடலும் ஒருசேர நடிக்கும் காட்சியை நாம் உண்மையிலேயே இங்கு காண இயலாது. ஆகவே ரசிகர்களும் படையப்பா, பாட்சா மாறி வராது என அதே  பல்லவியைப் பாடிவிட்டு புலம்பலை கெத்தாக காட்டுகின்றனர். எமி ஜாக்சன் ஒரு ரோபோவிற்குரிய உடலமைப்பை பெற்றிருப்பதால் பிரச்சினை இல்லை. ரஜினி – அக்‌ஷய் குமாரின் அமைப்பை கணினி வரைகலை பார்த்துக் கொள்கிறது. மேலும் அடுத்து என்ன நடக்கும் என்ற ட்விஸ்ட்டை முன் காட்சியின் உணர்ச்சியிலேயே அனைவரும் செயற்கையாக காட்டுவதால் நாம் பார்ப்பது படமா, பாட்டியிடம் சுட்ட வடைக் கதையா என்று குழப்பம் வருகிறது.

இந்தபடத்திற்கான படைப்பு அவஸ்தையில் விக்கிபீடியாவிற்கு பெரும் பங்கிருக்கிறது. அந்த அளவுக்கு என்னவெல்லாம் சுட வேண்டுமோ அத்தனையையும் ஓசியில் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். கிராவிட்டி, புளூட்டான், புரோட்டான், பறவையியல் அறிஞர் சலீம் அலி, அணுசக்தி அறிஞர் ஹோமி பாபா இவை போக கூடுதலாக ஜெயமோகன் கைங்கரியத்தால் ’ஐந்தாவது எனர்ஜி’யான ‘ஆரா’ எனும் பார்ப்பனர் புரட்டு ஒன்றையும் எடுத்து விடுகிறார்கள். மொத்தத்தில் சிட்டுக்குருவி லேகியத்தை விற்கும் சேலம் சிவராஜரைக் கொண்டு இயக்கச் சொல்லியிருந்தால் கூட படம் ஒருமாறி தேறியிருக்கலாம்.

படத்தில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக் இல்லையில்லை, வார்த்தை ‘டாட்’. ’மகிழ்ச்சி’. அநேகமாக இப்படத்துடன் ரஜினியின் இமேஜுக்கும் ‘டாட்’தான்.

தமிழ் சினிமாவில் பறந்து விழும் கார்களை பரிதாபத்துடன் பார்த்திருக்கிறோம். அந்த பரிதாப கார்களின் தலைநகரம் சென்னை சிந்தாரிப்பேட்டை. பழைய இருசக்கர, நான்கு சக்கர வாகன உதிரிபாகங்களின் சொர்க்கம்.

படிக்க:
எந்திரன்: படமா? படையெடுப்பா??
லைக்காவின் மோசடி பணத்தில் கொழிக்கும் கமல் – ரஜினி – காலாக்கள் !

சிந்தாரிப்பேட்டையில் குவிந்து கிடக்கும் உதிரி பாகங்களை கொஞ்சம் வகைப்படுத்தி கொலுவாக வைத்தீர்கள் என்றால் அங்கிருந்து 2.0 படத்தின் டைட்டில் ஆரம்பிக்கிறது. லைக்கா புரொடக்சனில் ஆரம்பித்து, தயாரிப்பாளர் சுபாஷ்கரண் வரைக்கும் இந்த போல்ட் நட் படையெடுப்பே படத்தின் கதை  டைட்டா லூசா, என்னவென்பதைத் தெரிவித்து விடுகிறது.

சுபாஷ்கரண் பெயர் போன பிறகு பக்‌ஷிராஜா மாலை இருட்டில் நம்மாழ்வரின் திருவாய் மொழியைப் பாடிக்கொண்டே செல்பேசி டவர் ஒன்றில் தொங்குகிறார். இந்த கொடூரக் காட்சியோடு இயக்குநர் ஷங்கர் பெயரைப் போடுகிறார்கள். பொருத்தமான குறியீடுதான். என்ன இருந்தாலும் ரசிகர்களுக்கு இப்படி ஒரு எச்சரிக்கையை கொடுக்கும் ஒரு நல்ல உள்ளம் இயக்குநர் ஷங்கரைத் தவிர யாருக்கு வரும்?

23 மறுமொழிகள்

 1. // டவர் ஒன்றில் தொங்குகிறார். இந்த கொடூரக் காட்சியோடு இயக்குநர் ஷங்கர் பெயரைப் போடுகிறார்கள். பொருத்தமான குறியீடுதான். என்ன இருந்தாலும் ரசிகர்களுக்கு இப்படி ஒரு எச்சரிக்கையை கொடுக்கும் ஒரு நல்ல உள்ளம் இயக்குநர் ஷங்கரைத் தவிர யாருக்கு வரும்?//ஒரே வரியில் முடித்து விட்டீர்கள்

 2. படத்தை ரசிப்பவர்கள் கூட இவ்வளவு ஒன்றி பார்த்திருப்பார்களா என்று தெரியாது..குறை கூற வேண்டும் என்றே ஒரு குயர் நோட்டு வாங்கி படம் பார்த்தால். இப்படித்தான்..ஏ வினவு உனக்காக படம் எடுக்க பாலவும்,இளையராஜா வும் போதும்..உனக்கு உண்மையில் தைரியமிருந்தால…அந்த இளையராஜா வை இப்படி விமர்சித்து விடு பார்போம்

  • இது ஹிட்லர் வழிமுறைகளில் ஒன்று… நாட்டில் பிரபலமாக இருப்பவரை பற்றி கண்டபடி அவதூறாக பேசினால் மக்கள் நம்மை கவனிப்பார்கள் என்று ஹிட்லர் சொன்ன வழிமுறைகளில் ஒன்று. இதை சீமான் போன்ற இனவெறி பிரிவினைவாதம் தூண்டி விடுபவர்களிடமும் பார்க்கலாம். அவர்களும் வினவை போலவே தேசவிரோதம், ஹிந்து மதவிரோதம், ரஜினி மீது அவதூறு, மோடி வெறுப்பு என்று இருப்பார்கள்.

   படம் மிகவும் நன்றாகவே இருக்கிறது.

  • இளையராஜாவையேதான் விமர்சிக்கனுமா ? இந்த எம்.எஸ்.விஸ்வநாதன், வாலி இவங்கள்லாம் வேணாமா ? .. கொஞ்சம் சங்கரோட 2.0-வா மாறி சிந்திங்க ஜி. அம்பியா மாறி சிந்திச்சா என்ன பண்றது ?

 3. ***********pasangalaa… Kurai mattum thaan solla theriyumaa… Idhula iruka nalla message ungalukku theriyala la… Virundhaaliku porandha potta pasangalaa… Ipdiyae pulambi saavunga…

  Indha koodhila sandhaa vaera kattanumaam ivanungalukku… *****************…

 4. டேய் ராஜன் . . . !

  இந்த படத்தில நல்ல “மசாஜ்” என்ன இருக்குன்னு சொல்லுடா பாப்போம் மானங்கெட்ட பயலே . . !

  • இந்த உலகம் மனிதர்களுக்கும் மட்டும் அல்ல அனைத்து உயிர்களுக்கும் இந்த உலகம் சொந்தம். இந்த சின்ன மெசேஜ் கூட புரிந்து கொள்ள முடியாத முட்டாளாக இருக்கியே

   • என்ன கண்டா ஷார், காலைலேயே தேஷத்திற்கு சர்வீஸ் பண்றேளா? கமிஷனை விடுங்கோ, இந்த லோகம் நம்மவாளுக்குத்தான், கோமாதா கறி துன்ற பாய்ங்களுக்கும், பஞ்சம பாவிகளுக்கும் இல்லேன்னு ஸ்ட்ரைட்டா சொல்றத விட்டுட்டு இப்பிடி கில்லி ஆடுறது நன்னவா இருக்கு? பைதிபை நேத்து சாங்கிக் போனேளா?

  • அதாகப்பட்டது என்ன வென்றால், மேலே வினவை கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்திருக்கும் ராஜன் என்பவரும், அப்படி பேசிய அவரை கண்டித்த S.Sகார்த்திகேயன் என்பவரும் வேறு வேறு நபர்கள் தான் என்பதை புரிந்துக் கொள்ளவும், தப்பி தவறி கூட இவர்கள் இருவரும் ஒரே நபர்கள் தான் என்று யாரவது நினைத்தால் அப்புறம் நடக்க போவதற்கு கம்பெனி பொறுப்பாகாது …

   • கண்டுபுடிச்சிட்டாருயா .. கொலம்பஸ் அக்கா புருஷன் …

 5. தீவிரவாதிகளின் பெயர்களை இஸ்லாமிய பெயர்களாக வைக்கத் தெரிந்த
  பார்ப்பன படைப்பாளர்களுக்கு. சலீம் அலி என்கிற உண்மை பெயரைக் கூட
  வைக்க இயலாத துயரத்தையும் சொல்லி இருக்கலாம்.

  • பின் லாடன், ஹாபிஸ் சையத், ISIS அதிகமாக இருக்கும் இடத்தில் சலீம் அலி போன்றவர்கள் exception

   • ஏம்பா எக்ஷப்சன்னுட்டு, சலீம் பாயை வில்லனாக்கினீங்கன்னு யாராவுது கேட்டுடப் போறா. மோடி, அத்வானி, அமித்ஷா, தாக்கரே லிஸ்ட்டுல வாஜ்பாயி ஒரு exceptionனு சொல்லிடப் போறா? கூகிள் டெரரிஸ்ட் சர்ச்சுல நம்ம மோடிஜி பெயர் முத பத்து இடத்துல இருக்குன்றது நோக்கு தெரியுமோ இல்லையோ?

   • ன் லாடன், ஹாபிஸ் சையத், ISIS விதிவிலக்குகள் உங்கள் ஆங்கிலத்தில் சொன்னால் exception. ஒடுக்கப்பட்ட உழைக்கும் அடித் தட்டு மக்களே அதிகம்.
    அதிலிருந்து வரும் சலீம் அலியை சரியான பெயரோடு சொல்ல முடியவில்லை என்பதே இங்கு ஜெயமோகனின் பின்நவீனத்துவ அரசியலின் பின் நிற்கிறது.

    • தவறு சார்… இந்தியாவில் எடுத்து கொண்டால் பல ஆயிரம் ஹிந்து கோவில்களை இடித்தது இஸ்லாமியர்கள், அதற்கு ஆதாரம் அந்த காலத்தில் கட்டப்பட்ட பல இஸ்லாமிய மசூதிகளில் ஹிந்து கோவில் தூண்கள் இன்றும் இருக்கிறது, இஸ்லாமிய மன்னர்களோடு இருந்த மத ஆசிரியர்கள் ஹிந்து கோவில்களை எப்படி இடித்தோம் என்பதை ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

     பின் லாடன், ஹாபிஸ் சையத் போன்றவர்கள் எல்லாம் அன்றும் இன்றும் என்றும் இஸ்லாமிய மதத்தில் உருவாக்கப்படுகிறார்கள். அப்படி உருவாகவில்லை என்றால் தான் அது ஆச்சரியம்.

     மாற்று மதத்தை சேர்ந்த மனித உயிர்களை துளிகூட மதிக்காமல் ஆயிரக்கணக்கில் கொன்ற ஒரு இடத்தில் இருந்து கொண்டு பிற ஜீவராசிகளை நேசித்த சலீம் அலி உண்மையிலேயே ஒரு exception தான்.

     • ஆயிரகணக்கான சமணர்களை கழுவேற்றிய வாய் இப்படிதான் அடுத்தவன் மீது பழிசுமத்தி பேசும். உங்க புளூகு மூட்டைகளை ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் கூட்டத்தில் சொல்லுங்கள் இங்கு தங்களின் அறுவெருப்பு பருப்பு வேகாது.

      அப்புறம் சமண கோயில்களை இடித்த வைண வரலாற்றை சொல்லிறாதீங்க உங்களை டவுசரை கழட்டியே அடிச்சுறுவாய்ங்க

      • சமணர்களை கழுவேற்றிய வரலாறு என்ன என்று கூட தெரியாமல் பேசுகிறீர்கள். இந்தியாவில் மதங்களை வளர்க்க போர் நடந்தது இல்லை… ஒருவரின் மதத்தை பற்றி மற்றவர்கள் பொதுவான இடத்தில் விவாதம் செய்வார்கள், அந்த விவாதத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த மதத்தை தோல்வி அடைந்தவர் ஏற்பர்.

       சமணர்கள் தான் விவாதத்தில் தோல்வி அடைந்தால் உயிரை விடுகிறோம் என்று உயிரை பணயம் வைத்தவர்கள்… அதன் அடிப்படையில் தான் கழுவேற்றம் நடந்தது அப்படியும் ஞானசம்பந்தர் கழுவேற்றம் வேண்டாம் என்று சொல்லியும் இந்த நிகழ்வு நடந்தது.

       முதலில் வரலாற்றை தெரிந்து கொண்டு பிறகு வந்து பேசுங்கள். சும்மா அரை உண்மைகளை பேசுவதால் பலன் இல்லை.

       • இஸ்லாத்தில் நாங்கள் அரை உண்மைகள் கற்பனை கதைகள் டுபாக்கூர் சாகசங்கள்(வியாழனை உடைத்து ஒட்டியது)போன்றைவைகளை தான் நம்புவோம்.எதிரி கூட்டத்தில் ஆண்களை கொன்றுவிட்டு அந்த ஆண்களின் மனைவிகளை அன்னைக்கே சுட சுட கல்லாணம் பண்ணி முதலிரவு என்ற பேர்ல ரேப் பண்ணுவோம்!இசுலாம் அமைதி மார்க்கம்

 6. 2.0 – கார்ப்பரேட் அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

  சங்கர் இந்த படத்தில் கார்ப்பரேட் கனவான்களுக்கு யார் வில்லன் என்பதை தெளிவாக அடையாளப்படுத்தி உள்ளார். பக்ஷிராஜன் போன்றவர்கள்தான் இந்த கார்ப்பரேட் பகற் கொள்ளைக்கு தடையாக இருப்பவர்கள்.பக்ஷிராஜன் போன்றவர்களை மிரட்டியோ,தேவைப்பட்டால் கொன்றோ தடையை அகற்றும் இராணுவம், போலீஷ், அவர்ககளுக்கு புதுபுது ஆயதங்களை கண்டுபிடித்து கொடுக்கும் வசீகரன் போன்ற விஞ்ஞானிகள் ஆகிய இவர்கள் தான் கார்ப்பரேட் கனவான்களுக்கு கதாநாயகர்கள்.ஆனால் இந்த கார்ப்பரேட் பகற் கொள்ளைகளை எப்படி நியாயப்படுத்துவது? சங்கர் அதையும் இந்த படத்தில் பக்காவாக செய்து உள்ளார்.செல்போன்கள் கானாமல் போகும் சீனும், ோ காவல் நிலையத்தில் மக்கள் புகார் கொடுக்கும் சீனும் நீளமாக எடுக்கப்பட்டது இதற்காதான். பக்ஷிராஜன் போன்ற இயற்கை ஆர்வலர்கள், சமூக மாற்றத்தை விரும்பும் போராளிகள் ஆகியோர் சொலவது நடைமுறைக்கு வந்தால் அதனால் ் அதிகம் பாதிப்கப்பட போவது பொதுமக்களாகிய நீங்கள்தான். கார்ப்பரேட் முதலாளிகள் செய்வதுதான் பகற் கொள்ளை ஆனாலும் அது மக்களின் தேவைகளுக்காக தான் செய்யப்படுகிறது.இதற்கு மாற்று கிடையாது.இதை மாற்ற வேன்டுமானால் மக்கள் தாங்கள் தேவைகளை சுருக்கி கொள்ள வேன்டும்.இதுதான் 2.0 படம் 450கோடி செலவு செய்து மக்களுக்கு சொன்ன மெசேஜ்.இந்த விஷயம் புதியது கிடையாது. இந்தியர்களும்,சீனர்களும் அதிகமாக சாப்பிடுவதால்தான் அமெரிக்காவில் விலைவாசி ஏறுகிறது என ஜார்ஜ் புஷ் சொன்னதை சங்கர் செல்லூலாய்டில் சொல்லி இருக்கார்.நியாயமாக இந்த படத்தில் பக்ஷிராஜன் செல்போன் கம்பெனி முதலாளிகளைதான் தொடர்ச்சியாக கொல்ல வேன்டும்.செல்போன் கம்பெனி முதலாளிகள்தான் பக்ஷிராஜன் போட்ட பொதுநலவழக்கை தில்லுமுல்லு செய்து ஒன்றுமில்லாமல் ஆக்குகின்றனர். அதனால் மனமுடைந்து பக்ஷிராஜன் செல்போன் டவரில் தூக்கில் ் தொங்குகிறார். இந்த கேள்வி யாருக்கும் வந்து விட கூடாது என்றுதான் ஒரு செல்போன் கம்பெனி முதலாளியை மட்டும் கொல்வதாக காட்டி உள்ளனர்.
  இதற்கு மேல் பக்ஷிராஜனின் ஆவியை(ஆராவை) அழிக்க பிறகு நடக்கும் வெற்றிவிழாவில் அமைச்சர் பேசும் வசனம் “புராணங்களில் வருவது போன்று இராட்சசர்களை அழிக்க பெருமாள் அவதரித்து போன்று சாட்சாத் பரமேஷ்வரனே சிட்டியாக வந்துள்ளார்” . இந்த பாராட்டை எந்த உறுத்தலும் இல்லாமல் வசீகரன் அமைதியாக ஏற்று கொன்டு விட்டு எல்லாம் முடிந்த பிறகு அமைச்சரிடம் மருத்துவமனையில் தனியாக பக்ஷிராஜன் செய்தது தப்பா இருந்தாலும் அவர் சொன்னது சரி என்று நியாயம் பேசுகிறார்.

  இறுதியாக இந்த படம் சொல்ல வருவது கார்ப்பரேட் கொள்ளையை எதிர்த்தால் அதில் முதல்ல பலியாவது மக்கள்தான்.

 7. அடேங்கப்ப்பா போற போக்க பாத்தா நீலகிரி தொகுதில ராசாவுக்கு ஓட்டு கேட்டு வினவே பிரச்சாரத்தில் இறங்கினாலும் ஆச்சரியமில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க