மீபத்தில் எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி பங்களிப்புகளை முன்வைத்து காலச்சுவடு ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் எண்ணற்ற அறிஞர்கள் கலந்துகொண்டு கருத்துகள் பகிர்ந்துகொண்டார்கள். அதில் டி.எம்.கிருஷ்ணா முத்தான ஒரு விஷயத்தை பேசினார். அதாகப்பட்டது பெரியவாள் என்ன சொல்றார்னா… அவர் வாய்ஸிலேயே…

எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி பங்களிப்புகளை முன்வைத்து காலச்சுவடு நடத்திய கருத்தரங்கு.

”1960-ஸ் எடுத்துண்டீங்கன்னா… திராவிடியன் மூவ்மென்டுக்கு ஒரு பீக்னு சொல்லலாம். அண்ணாதுரை… அரசியல் வந்துடுத்து… கவர்னன்ஸ் வந்துடுத்து… பெரியாரும் இருந்தார்… பட் அதுக்கப்பறம் பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்கோ… திராவிட இயக்கத்தின் ஆன்மா… அது மொத்தமாக போய்விட்டது. ஹைஜாக் செஞ்சுட்டாங்க… யாருமே அந்த இயக்கத்தின் உள்ளுணர்வு என்னனு பார்க்கவே இல்லை. ஆனால் நாம ரொம்ப அதிர்ஷ்டக்காரர்கள்… நல்ல வேளையாக திராவிட இயக்கத்தின் உள்ளுணர்வாக இருந்தது சலபதி… அவரைப் போன்றவர்கள்தான் திராவிட இயக்கத்தை மீட்டு கொண்டு வரணும். திராவிட இயக்கத்துக்கு கிடைத்த கிப்ட் சலபதி!”

படிக்க:
கிழங்கு கிண்டியபோது கிடைத்த ரத்தினக் கல் | அ.முத்துலிங்கம்
♦ மதிய உணவுத் திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா ?

பாட்டுக்காரர் கிருஷ்ணாவின் அரிய கருத்துகளை கேட்டதும் புல்லரித்துவிட்டது. “நல்லவேளை சலபதி இருந்தார் இல்லையென்றால் திராவிட இயக்கம் என்னாகியிருக்கும்…” என்று இரவெல்லாம் உறக்கமே கொள்ளவில்லை. ஏன்னா திராவிட இயக்கத்தில் இருந்துகொண்டே திராவிட இயக்கத்தை கேள்விகேட்ட ஒரே ஆள் அவர்தானாம் (கிருஷ்ணா சொன்னார்). ராப்போதில் சில கேள்விகள் ஓடிக்கொண்டேயிருந்தன.

1 – 1960க்கு பிறகு திராவிட இயக்கத்தை ஹைஜாக் பண்ணி அதை நாசம் பண்ணின கொள்ளைக்கூட்ட கும்பல் யாரு… என்பதையும் கிருஷ்ணா சொல்லியிருக்கலாம்.

2 – அதை ரீடிஸ்கவர் செய்ய எந்த முயற்சியும் எடுக்காமல் திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் என்ன செய்துகொண்டிருந்தது என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்

3 – ‘இயக்க கான்ஸியெஸ்னெஸ்’ சலபதி அந்த திராவிட இயக்கத்திற்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்.

பாருங்க கிருஷ்ணா சார் நாட்ல என்னைப்போல முட்டாப்பயலுக அதிகமாகிட்டாங்க… கும்ஸா சொன்னா புரியுமா…

(பின்குறிப்பு – சர்வம் தாள மயம் படம் பற்றிய கட்டுரையில் டி.எம்.கிருஷ்ணாவை எதற்காக அடித்தீர்கள் என சிலர் கேட்டிருந்தார்கள். அதற்கு ‘நான்’ பதில் எழுதவேயில்லை.)

நன்றி : அதிஷா
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க