நீதிக்கு குரல் கொடுத்தால் வழக்கறிஞர்களுக்கு ஆயுள் தடையா ?
மில்டனும் பார்த்தசாரதியும் சத்தியத்தின் துணையோடும், மக்களின் துணையோடும், சக வழக்கறிஞர்களின் துணை கொண்டும் சதிகள் உடைத்து மீண்டும் எழுவார்கள்.
13 வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய் !
வழக்கறிஞர்களின் உரிமைகளை பறிக்கும் அநீதியான தீர்ப்பை கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் (MHAA) தலைமையில் வழக்கறிஞர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நீட் (NEET) தேர்வு : நரியின் சாயம் வெளுத்தது !
தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) தேர்வு தகுதியும் திறமையும் கொண்ட மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று உச்சநீதி மன்றம் உருவாக்கிய தோற்றம், வெறும் வார்த்தை ஜாலமென்றும் மோசடியென்றும் அம்பலமாகிவிட்டது.
மாடுகளைக் கொல்லும் ஆர்.எஸ்.எஸ் – சிறப்புக் கட்டுரை
இந்தக் கூற்று உங்களுக்கு ஒருபுறம் அதிர்ச்சியாகவும் இன்னொருபுறம் பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றலாம். ஆனால், உச்சநீதி மன்றம் 2005-ல் அளித்த மிர்சாபூர் தீர்ப்பு இவ்வாறான முட்டாள்தனமான, மோசடியான வாதங்களை முன்வைத்துதான் பசு வதையையும், மாட்டுக்கறி உணவையும் தடை செய்வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
காவிரி : தேசிய ஒருமைப் ‘பாட்டை’ நிறுத்து !
மத்திய அரசும் உச்சநீதி மன்றமும் தமிழகத்தின் மீது செலுத்திவரும் ஒருதலைப்பட்சமான அதிகாரத்துக்குத் தமிழகம் கட்டுப்பட மறுக்க வேண்டிய தேவையும் அவசியமும் எழுந்து விட்டதை காவிரி விவகாரம் உணர்த்துகிறது.
ஒகேனக்கல் : காவிரிக் கரையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
கர்நாடகாவில் தமிழர்களை அடிக்கும் கன்னட வெறியர்கள், பன்னாட்டு நிறுவனம் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்களே அவர்களை அடிப்பார்களா? பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீரை விற்று காசக்குவதற்காக காங்கிரசு, பி.ஜே.பி அணை பாதுகாப்பு மசோதா என்று கொண்டு வந்து இருக்கிறார்கள்.
திருச்சி : தடையை மீறி நீதித்துறை சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டம்
இது ஜனநாயக நாடு மக்களுக்கான எல்லா உரிமைகளும் உள்ளது என வாய்க்கிழிய பேசுகின்றனர். ஆனால் சாதாரண பேச்சுரிமை, கருத்துரிமை கூட கிடையாது. நம் உரிமைக்காக நாம் போராடுவதே மிகப்பெரிய குற்றம் என்கின்றனர். இதில் நேரடியாக நீதிமன்றமே தலையிடுகிறது.
உடுமலை : போராட்டத்தை ஆதரித்தால் கைதா ?
"கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்களிடம் உங்கள் கடமையைச் செய்ய வேண்டியதுதானே, மாறாக மக்களுக்காக போராடுபவர்களிடம் இப்படி நடந்து கொள்கிறீர்கள்"
நீதிபதிகள் ஆண்டைகளா ? திருச்சி பொதுக்கூட்டத்திற்கு வாருங்கள் !
நீதிபதிகள் ஆண்டைகளா ? அவர்களின் அடிமைகளா நாம் ? - திருச்சியில் பொதுக்கூட்டம் 12-08-2016 வெள்ளிகிழமை மாலை 5 மணியளவில் உறையூர் கடைவீதியில் நடைபெறவுள்ளது. மக்கள் அதிகாரத்தின் இக்கூட்டத்திற்கு அனைவரும் அலை கடலென வாரீர்.
நீதிபதிகள் ஆண்டைகளா ? – ஆகஸ்டு 12 திருச்சியில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்
நீதிபதிகள் யாரும் ஆண்டைகளும் அல்ல! மக்கள் யாரும் அவர்களின் அடிமைகளும் அல்ல! பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சி திருச்சிக்கு வாரீர்!
நாள்: 12.08.2016 வெள்ளி மாலை 5 மணி இடம்: பஞ்சவர்ணசாமி கோவில் தெரு, உறையூர், திருச்சி
வழக்கறிஞர் போராட்டத்துக்கு ஆதரவாக மதுரை PRPC !
காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மேற்கண்ட பேரபாயங்களைக் கட்டுப்படுத்தாமல், காவல் துறையைத் “தாயினும் சாலப் பரிந்து” ஊட்டி வளர்ப்பதோடு, தமிழ் நாடு அமைதிப் பூங்காவகத் திகழ்வதாக சட்டசபையில் அறிவிப்பது கண்டனத்துக்குரியது.
பு.ஜ.தொ.மு அறிக்கை – கோவை ம.க.இ.க : களச் செய்திகள்
தலைமை நீதிபதி கவுலின் சர்வாதிகாரத்துக்கும், பார் கவுன்சில் செல்வம் – பிரபாகரனின் துரோகத்துக்கும் முதல் உயிர் பலியாக்கப்பட்டுள்ளார், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 126 வழக்கறிஞர்களில் ஒருவரான நெல்லை வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு. P. முத்துராமலிங்கம்.
ஊழல் மதிப்பானது எதிர்ப்பது அவமதிப்பா ?
வழக்கறிஞர்கள் மீது ஒழுக்கத்தை நிலைநாட்ட பார் கவுன்சிலின் அதிகாரத்தை பறிக்கும் லார்டுகளே! உங்களின் ஒழுக்கம் பற்றி எந்தக் கோயிலில் முறையிடுவது?
சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம் – படங்கள்
வழக்குரைஞர்கள் சட்டத் திருத்த விதிகளை திரும்பப் பெறக் கோரி……சென்னை உயர்நீமன்ற முற்றுகைப் போராட்டம்
126 வழக்கறிஞர் நீக்கம் : தொடங்கியது உயர்நீதிமன்ற முற்றுகை !
அந்த குழுவில் உள்ள ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஏற்கனவே இந்த சட்டதிருத்ததிற்கு ஒப்புதல் வழங்கியவர்கள். அவர்களிடம் போய் பேசினால், எப்படி வழக்கறிஞர்களுக்கு நீதி கிடைக்கும்?