இந்த அரசு இனியும் நீடிக்கலாமா ? திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
லால்குடி வட்டத்தை சேர்ந்த விவசாயி மணியரசன், ”கிட்டத்தட்ட 5000 ஏக்கர் விவசாயம் நடக்குன்னா அதுக்கு காரணம் மக்கள் அதிகாரம் தான். அன்னைக்கு அவங்க தூர் வார்னது தான் காரணம். யார் வேணா வாங்க காட்டுறோம். இதையும், மக்கள் அதிகாரத்தால தான் மாத்த முடியும்” என்றார்.
புதிய கட்டணத்தை செலுத்த மறுப்போம் ! தொடரும் போராட்டங்கள்
“புதிய கட்டணத்தை கொடுக்க மாட்டோம் ! பழைய கட்டணத்தில் பயணம் செய்வோம் !” போக்குவரத்து துறை நட்டத்திற்கு காரணமான அதிகாரிகள், அமைச்சர்களை கைது செய்து, செத்துக்களை பறிமுதல் செய்து சிறையிலடை!
புதிய கட்டணத்தை மறுப்போம் ! திருச்சி – திருப்பூரில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் !
பயணிகள் படித்து விட்டு ஆர்வத்துடன் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்த அரசு சாமானிய மக்களை ஒழித்து கட்டும் சதியில் தான் கட்டண உயர்வும் நடவடிக்கைகளும் உள்ளதாக கூறி ஆதரித்தனர்.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தொடரும் போராட்டங்கள் !
“கூலி வேலை செய்து நாம பொழைக்கிறோம் இவனுங்களுக்கு என்ன, எந்த அமைச்சரவது வந்தால் ஊர் பக்கம் வரமல் விரட்டியடிக்கனும். எவனுக்குமே ஓட்டே போடக் கூடாது”
பேருந்து கட்டணம் : மக்களின் இரத்தத்தை அட்டையாக உறிஞ்சும் அரசு !
கல்வி, மருத்துவம், மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய வற்றை அனைவருக்கும் வழங்க முடியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள் உன்னை யார் ஆளச்சொன்னது?
கட்டணம் இல்லா பேருந்து பயணம் – சென்னையில் துவங்கியது மக்கள் அதிகாரத்தின் போராட்டம் !
“இந்த பிள்ளைங்க சொல்றதுதான் சரி. டிக்கெட் விலையை குறைக்கிற வரை நான் டிக்கெட் எடுக்க மாட்டேன்.” என ஓங்கிய குரலில் அறிவித்தார்.
பேருந்து கட்டணத்தை செலுத்தாதே ! கலகம் செய் !
மலிவான பரவலான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை. எனவே கட்டண உயர்வு என்ற இந்தத் தாக்குதலை முறியடிக்க அனைவரும் ஒன்று திரள அழைக்கிறோம்.
உச்சநீதிமன்ற நெருக்கடி | மக்கள் அதிகாரம் கூட்டம் | அனைவரும் வருக !
உச்சநீதிமன்ற நெருக்கடி, மக்கள் அதிகாரத்தின் அரங்கக்கூட்டம். நாள் : 21.01.2018, ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 5:00 மணி. இடம் : மெட்ராஸ் கேரள சமாஜம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை (நேருபூங்கா சிக்னல் அருகில்) சென்னை. வினவு தளத்திலும் இக்கூட்டம் நேரலையாக ஒளிபரப்பப்படும். இணைந்திருங்கள் !
ஒக்கி பேரிடர் : ஜனவரி 21 ஞாயிறு நாகர்கோவிலில் கருத்தரங்கம் – அனைவரும் வருக !
நம்மைக் காக்க வக்கற்ற அரசின் பல்வேறு துறைகளையும் நம்பிக் கெட்டது போதும்! அதிகாரத்தைக் கையிலெடுப்போம்! படுகொலைகளுக்கு முடிவு கட்டுவோம்! வாழ்வுரிமையைத் தக்க வைப்போம்!
சென்னையில் அரங்கக் கூட்டம் : ஜனநாயகத்துக்கு பேராபத்து – எச்சரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் !
“நீதிபதிகள் தங்கள் ஆன்மாவை விலை பேசிவிட்டார்கள், நீதித்துறையையும் இந்த நாட்டையும் பாதுகாக்கத் தவறிவிட்டார் கள் என்ற குற்றச்சாட்டுக்கு நாங்கள் ஆளாகக் கூடாது என்று கருதுகின்றோம். நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம், இனி நாடு முடிவு செய்யட்டும்.”
பேருந்து தொழிலாளிகளை ஆதரித்தால் போலீசு சுட்டுத் தள்ளுமாம் !
இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் “இன்னொரு நாளக்கி பர்மிஷன் கொடுக்காம ஆர்ப்பாட்டம் செஞ்சிங்கன்னா அள்ளிக்கிட்டு வந்து உள்ளத்தள்ளிருவன், சுட்டுத் தள்ளிருவேன்.” என்று வழக்கறிஞரையும், தோழர்களையும் மிரட்டியுள்ளார்.
பேருந்து தொழிலாளிகளுக்காக தமி்ழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
போக்குவரத்து கழகம் நட்டமடைந்ததற்கு இரவு பகலாக உயிரை பணயம் வைத்து பணி செய்த தொழிலாளிகள் எந்தவிதத்திலும் காரணமல்ல. ஊழல் - முறைகேடு நிர்வாகம் செய்த அதிகாரிகள் மற்றும் அரசுதான் காரணம்.
தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்தால் வழக்கு போடும் போலீசு !
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை ஆதரித்து சுவரொட்டி ஒட்டிய சீர்காழி பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது மயிலாடுதுறை போலீசு.
கரூர் : அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்டத்தில் தீவிரமாகும் போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் !
உண்மையில் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே தற்சமயம் கரூரில் இயங்குவதாக கள ஆய்வு தெரிவிக்கிறது. அதிலும் பெரும்பான்மையாக நகரப் பேருந்துகள் மட்டுமே இயங்குகிறது.
ஆளை மாற்றாதே! அதிகாரத்தை மாற்று !! விருதை பொதுக்கூட்டம்
விருத்தாசலத்தில் 31 வார்டிலும் மக்கள் அதிகார கிளை இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வார்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அதை தீர்மானிக்கும். மக்கள் அதிகாரம் என்பது நாம் உருவாக்கவில்லை. உருவாக்கியது இந்த அரசு கட்டமைப்புதான்