ஓபன் த டாஸ்மாக் பாடினால் வரிவிலக்கு X மூடு டாஸ்மாக் பாடினால் சிறை
டாஸ்மாக்கை எதிர்த்துப் பாடுவது தேச துரோகம் என்றால் இந்த தேசத் துரோகச் செயலைச் செய்ய அனைவரும் தயாராவோம்! வீதிகள் தோறும் உரக்கப் பாடுவோம்! டாஸ்மாக்கை மூடும் வரை பரப்புவோம்!
ஆர்.எஸ்.எஸ் மயமாகிறது நீதித்துறை ! மதுரை ஆர்ப்பாட்டம் !
நீதித்துறை ஊழலை அம்பலப்படுத்திய வழக்கறிஞர்கள் அச்சுறுத்தப்படும் நிலையில் நீதித்துறையை சந்திக்கு இழுத்த மக்கள் அதிகாரம் தோழர்கள் 85 பேர், 28-10-2015 புதன்கிழமை அன்று மதுரையில் கைது.
மூடு டாஸ்மாக்கை ! கோவனை விடுதலை செய் ! – குலுங்கிய தி.நகர்
புரட்சிகரப் பாடகர் கோவன் மீது போடப்பட்ட தேச துரோக குற்றச்சாட்டு வழக்கை திரும்ப பெற்று விடுதலை செய்! என்ற முழக்கத்துடன் தி.நகர் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தோழர் கோவன் கைது – திருச்சி, தஞ்சை, கடலூர் போராட்டங்கள்
இப்படிப்பட்டவரை குடிக்கு எதிராக பாடல்கள் பாடிய குற்றத்திற்காக இரவு நேரத்தில் முன் அறிவிப்பின்றி வீடு புகுந்து கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த தமிழக முதல்வரை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தோழர் கோவன் கைதுக்கு தொடரும் கண்டனங்கள்
காவல்துறையினர் இப்படி விளக்கம் சொல்கிறார்கள். "சும்மா பாடுனா பரவா இல்லீங்க. ஜெயா மாதிரி ட்ரெஸ் பண்ணிகிட்டு ஒருத்தர் வாயில சாராயத்தை ஊத்ரமாதிரி பண்றதெல்லாம் நாங்க அனுமதிக்க முடியாது"
தோழர் கோவன் கைது : மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு
கோவன் கைது செய்யப்பட்டதோ, எங்கள் தோழர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோ பெரிய விசியமல்ல, அதனை விட ஐயா சசிபெருமாள் இறப்பும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்டமும், தமிழ்நாட்டு பெண்களின் கண்ணீருமே மிகப்பெரிது.
அம்மாவின் மரண தேசம் – ஆவணப்படம் வெளியீடு !
தோழர் கோவன் கைதை ஒட்டி வினவு தளத்தின் இரண்டாவது ஆவணப்படம் "அம்மாவின் மரண தேசம்", அதிரடியாக வெளியிடப்படுகிறது. படத்தை பாருங்கள், பகிருங்கள், ஆதரியுங்கள்!
பாசிச ஜெயாவை முறியடிப்போம் ! புதுவையில் ஆர்ப்பாட்டம் !
புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் இன்று மாலை 05.30 மணிக்கு முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகில் கருத்துரிமை பறிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
பாடு அஞ்சாதே பாடு – தாலியறுக்கும் டாஸ்மாக்கை மூடும் வரை பாடு !
போதை தெளிய தமிழனுக்கு பாட்டு ஒண்ணு பாடினதுக்கு தேசத்துரோக வழக்கெதற்கு, தேடித்தேடி கைது எதற்கு, எங்க பாட்டை நிறுத்த முடியாது, வாய் பூட்டு போட முடியாது
தோழர் கோவன் கைது – இந்தியா முழுவதும் கண்டனங்கள்
"சும்மா பேசியதற்காக நரேந்திரா தபோல்கர், பன்சாரே கொல்லப்பட்டார்கள், சும்மா எழுதியதற்காக கல்பர்கி கொல்லப்பட்டார், இதோ பாடலைப் பாடியதற்காக கோவன் சட்டவிரோத கைது"
மூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது !
டாஸ்மாக் கடைகளை மூடுமாறு பாடியதற்காக ம.க.இ.க தோழர் கோவன் திருச்சியில் கைது. 124 ஏ தேசத் துரோக நடவடிக்கை பிரிவின் கீழ் வழக்கு!
மக்கள் அதிகாரம் – புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
சி.ஐ.டி ராஜாராம் தோழர்களின் பெற்றோர்களை சந்தித்து "மக்கள் அதிகாரம் அமைப்பில் இருந்தால், அரசு வேலை கிடைக்காது" என்று கூறியுள்ளார். பெற்றோர்கள், "அமைப்பில் சேராமல் இருந்தால் அரசு வேலை கிடைத்துவிடுமா?" என்று எதிர்க்கேள்வி கேட்டுள்ளனார்.
விஷ்ணுபிரியா மரணம் – கடலூரில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
இந்த அரசுக் கட்டமைப்பு தோல்வியடைந்து விட்டது என்று எமது மக்கள் அதிகாரம் பிரச்சாரம் செய்கிறது. ஆனால் அரசுக்கு உள்ளேயே இருந்து உயர்பொறுப்பில் உள்ளவர்களே வாழ்வா? சாவா? என்று போராடி கொண்டிருக்கின்றனர்.
பாலாறு மணல் கொள்ளை – தட்டிக் கேட்டால் சிறை
"இனி போராட மாட்டேன்" என்று சொன்னவர்களை வெளியே விட்டுவிட்டு "போராடியது சரிதான்" என்று கூறிய 20 பேரை மட்டும் தனியாக பிரித்து வைத்து கொடூரமாக அடித்துள்ளனர்.
மூடு டாஸ்மாக்கை – அதிரையில் மக்கள் அதிகாரம் போராட்டம்
"அதிகாரிகளை நம்பி நமது வாழ்க்கையை காப்பாற்றவும், டாஸ்மாக்கையையும் மூட முடியாது. மக்கள் அதிகாரத்தால்தான் டாஸ்மாக்கை மூட முடியும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்"