privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதோழர் கோவன் விடுதலை !

தோழர் கோவன் விடுதலை !

-

mukilan cartoon - kovan arrest (5)சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் தோழர் கோவனுக்கு பிணை கிடைத்திருக்கிறது. “மூடு டாஸ்மாக்கை மூடு”, “ஊத்திக் கொடுத்த உத்தமி” பாடலுக்காக கடந்த 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் கைது செய்யப்பட்டார், கோவன். இதன் பிறகு ஊடகங்களிலும், இந்திய, சர்வதேச அளவில் கோவன் விடுதலைக்காக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தனர்.

இடையில் தோழர் கோவனை போலிஸ் விசாரணைக்காக காவலில் எடுத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த உத்தரவிலேயே இந்தக் கைது செல்லாது என்பதற்குரிய விளக்கங்கள் இருந்தன. அதன் நீட்சியாக இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிணை அளித்திருக்கிறது. அரசுத் தரப்பில் இருந்து அதிகபட்சம் இந்த பாடல் இரட்டை அர்த்தத்தோடு இருக்கிறது என்பதை மட்டுமே வாதிட முடிந்தது. இதில் தேசத்துரோகம் என்ன என்பதற்கு அவர்களிடத்தில் பதில் இல்லை.

தோழர் கோவனுக்காக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதிட்டார். நீதிமன்ற வேலைகளை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ஒருங்கிணைத்தனர். தோழர் கோவனை கைது செய்திருப்பதில் சட்ட அடிப்படை ஏதுமில்லை என்பதோடு, பொதுக்கருத்தில் அவரைக் கைது செய்தது தவறு என்பது உருவாகியபடியால் நீதிமன்றம் இத்தகைய பிணையை அளித்திருக்கிறது.

மக்கள் நலனுக்காக போராடுவோரை சர்வாதிகார அரசால் வீழ்த்த முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது. பாசிச ஜெயாவின் டாஸ்மாக் கடைகளை மூடும் வரை தோழர் கோவனின் பாடலும் ஓயாது.

  1. உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் கொடுத்த நெருக்கடியின் விளைவாக கிடைத்த தீர்ப்பு.

    கோவன் கைதிற்கு எதிரான போராட்டங்கள் இல்லாமலிருந்திருந்தால், நீதிமன்றமும் .. பாடல் கடைசி வரியில் ”அடிச்சி தூக்கு” என்று வருகிறது, அதனால் இது தேச துரோகம் தான் என்று தீர்ப்பு எழுதியிருந்திருக்கும்.

    • ”அடிச்சி தூக்கு” என்று பாடியது எப்படி தேசதுரோகம் ஆகும் ? டாஸ்மார்க் கடைகளை அடிச்சி தூக்குன்னுதான் அர்த்தம். தமிழ் புரியலன்னா பேசாம இருக்கனும். சும்மா கைதுன்னு நாடகம் எதுக்குங்க ? கோவன் விடுதலைக்கு மகிழ்சி.

    • வாழ்த்துக்கள், தோழரின் விடுதலைக்கும் பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெல்லட்டும் மக்கள் அதிகாரம். இந்த பாடலை எல்லா கிராமங்கலுக்கும் எடுத்து செல்லுங்கள் தோழர்கலே!

  2. வைரசாக பூவுலகின் பொதுவெளியில் பரவிய கோவனின் பாடல்கள் ஜெயாவின் பாசிச சர்வாதிகார நடவடிக்கையை வீழ்த்தியது.கோவன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது டாஸ்மாக்கின் கொடுமைகளை நெடுநாளாய் உணர்ந்த மக்களின் விருப்பம்.அது நிறைவேறியது.அச்சம் துறந்து அரசின் அடக்குமுறையை துச்சம் எனப் போராடிய தோழர் கோவனை செவ்வணக்கம் செலுத்தி வரவேற்போம்.புதிய உற்சாகத்துடன் புதிய பாடல்களைச் சேர்ந்திசைப்போம்!ஆதரவுக் குரல் கொடுத்த அனைவருக்கும் தோழமைக் கரம் நீட்டுவோம்! வழக்கறிஞர்களுக்கு வாழ்த்துக்கள்!

  3. தோழர் கோவன் ஊத்திக்குடுத்த உத்தமியின் ஆணைக்கு இணங்க கைது செய்யப்பட்டார் எதிர்ப்பு காரணமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்படும்போது இல்லாத நீதி விடுதலை செய்தவுடன் கிடைத்து விட்டது என்பது தவறானது, எப்படியோ தோழர் கோவனின் விடுதலையில் மகிழ்ச்சியே…

  4. தோழரின் விடுதலைக்கும் தோள்கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெல்லட்டும் மக்கள் அதிகாரம்.

  5. தமிழ்நாடு, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் தோழர் கோவன் கைதை கண்டித்து விடுதலை செய் என்ற முழக்கத்தை முன்வைத்து போராடியவர்களுக்கு கிடைத்த வெற்றி மற்றும் நீதிபதிகளுக்கும் வழக்குரைஞர்களுக்கும் தோழர் கோவனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் . AMMA title : அதர்மம் அழியும் மீண்டும் தர்மமே வெல்லும்!

  6. கோவன் கைதும்..விடுதலையும்…
    கைது சட்டப்படி நடக்கவில்லை, விடுதலை சட்டப்படி..
    போலிசு காவல் கோரிக்கை சட்டப்படி இல்லை,நிராகரிப்பு சட்டப்படி..
    அரசின் நடவடிக்கை சட்டப்படி இல்லை, மக்கள் அதிகாரம் சட்டப்படி..
    சட்டத்தை மீறுபவர் யார்..அரசா..மக்களா..

  7. வாழ்த்துகள் . கோவன் கைதே திரை மறைவு ஜாஸ் சினிமா வியாபாரத்தை மறைக்க நடத்தப்பட்ட நாடகமாமே ?.. வினவு சற்று விசாரித்து முழுதாக எழுதினால் நலம்.

  8. மிக்க மகிழ்ச்சி.இதே போன்று வழக்கிலிருந்தும் தோழர் விடுதலை பெற வாழ்த்துக்கள்

  9. நவீன சினிமா பாடல் கேட்கும் சின்னப்பிள்ளைகள் யூ டியூபில் அந்தப்பாடலை தேடித் தேடிக்கேட்டதும், அந்த வரிகளை “வெளங்குமா இந்தப் பொம்பள” உள்பட ரசித்ததும்தான் நான் கண்ட புதுமை.

  10. கோவன் அவர்களின் புதிய பாடல் …!!!!!

    சிறையில் இருந்து வெளி வந்த சில நிமிடத்திலே தமிழக அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி பாடலை பாடி அசத்தி இருக்கிறார் மரியாதைக்குரிய மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சகோதரர் கோவன் அவர்கள்..!

    உண்மையில் தில்லும் திராணியும் தெம்பும் ஆண்மையும் உள்ள ஒரு மனிதரால் மட்டுமே சிறையில் இருந்து வெளி வந்த அடுத்த நிமிடம் இப்படி பாடல் பாட முடியும்…!

    சிறப்பு சல்யூட் சகோதரர் கோவன் அவர்களுக்கு….!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க