ஓசூர்: ஹெச் ஆரை (HR) வீழ்த்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள்!
ஒசூர் கமாஸ் வெக்ட்ரா மோட்டார்ஸ் லிட் எனும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் வேலைநீக்கத்திற்கு எதிராக உறுதியுடன் போராடி வெற்றிப்பெற்ற அனுபவத்தை இங்கே தருகிறோம்.
4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! ஒரு நெடிய போராட்டம்!!
4 வயது சிறுமிக்கு அவளது பெண் ஆசிரியர்கள் இழைத்த பாலியல் வன்கொடுமை! குற்றவாளிகளை பாதுகாக்கும் பள்ளி முதலாளி, போலிசு! இவர்களை எதிர்த்து மனித உரிமைப்பாதுகாப்பு மையம் நடத்திய நெடிய போராட்டம்!
சங்கரசுப்பு மகன் படுகொலை: கொலைகாரர்களை பாதுகாக்கும் போலீசு, சி.பி.ஐ!
வழக்குரைஞர் சங்கரசுப்புவிற்கு தேவை நம் அனுதாபம் அல்ல. அவரது நீதிக்கான போராட்டத்திற்கு நாம் உறுதுணையாக இருப்பதும், போராடுவதுமே தேவை. இல்லையேல் மக்கள் நலனுக்காக உறுதியுடனும், இழப்புக்களுடனும் போராடும் இத்தகைய வழக்கறிஞர்கள் இல்லாமல் போய்விடுவார்கள். அவர்களை பாதுகாப்பது நம் கடமை. ஆதரவு தாருங்கள்!
அமைச்சரா, ரவுடியா? ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலை மாணவர் போராட்டம்!
ரவுடிகளும், பொறுக்கிகளும் கல்வி நிறுவனங்களை நடத்தினால் என்னவாகும் என்பதற்கு இப்பொழுது பாரத் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் நிகழ்வுகளே ஒரு சிறந்த உதாரணம்.
The Battleship Potyomkin (1925) போர்கப்பல் பொதம்கின்! (ரசியத் திரைப்படம்- வீடியோ)
1905 முதல் ரசியப்புரட்சியின் எழுச்சியை ஒரு போர்க்கப்பல் மாலுமிகள் கலகம் செய்வதின் வழியாக காட்டும் இயக்குநர் ஐசன்ஸ்டீனின் மவுனப்படம். வடிவ நேர்த்திக்காக திரைப்பட அறிவாளிகளும், உள்ளடக்க எழுச்சிக்காக தொழிலாளி வர்க்கமும் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்பு மிக்க படம். வீடியோ இணைப்பு! பாருங்கள், எழுச்சியின் அவசியத்தை உணருங்கள்!!
மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!
1200 தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள் என்பதல்ல விஷயம். இவர்களுக்காக மானேசர் தொழிற்பேட்டையிலுள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து களத்தில் நிற்கிறார்கள் என்பதுதான் நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட வேண்டிய விஷயம்.
தூக்கு மேடையில் நிற்பது அரசியல் நியாயம் – தோழர் மருதையன்
ஒரு சாதாரண கொலைவழக்கை பயங்கரவாதமாக சித்தரிக்கும் இந்த அரசியல் மோசடியின் அடிப்படையில்தான் மூவருக்கும் எதிரான மரண தண்டனை மட்டுமின்றி, புலிகள் இயக்கத்தின் மீதான தடையும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றது.
அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் லிபிய மக்கள் போர் வெல்லட்டும்!
அமெரிக்க எதிர்ப்பையும் அவ்வாறான ஒரு வரலாற்று மரபையும் கொண்டுள்ள லிபியா அமெரிக்காவுக்குக் கற்றுக் கொடுக்கப் போகும் பாடங்களை இனிமேல் தான் உலகம் காணப் போகிறது.
மூவர் தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டம் வென்றது!
இறுதி வெற்றி பெறவேண்டுமானால் மக்கள் அரங்கிலும், அரசியல் அரங்கிலும் போராட்டங்கள் தீவிரமாக தொடர்ந்து நடைபெற வேண்டும். அதை எள்ளி நகையாடும் அரசியலற்ற கோமான்களின் கையில் இந்தப் போராட்டம் சிக்கிவிடக்கூடாது. தற்போதைய நிலைமை அத்தகைய அபாயத்தைக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.
மூவர் தூக்கை ரத்து செய்! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்!!
மூவர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புகளும் தமிழகமெங்கும் நடத்திய போராட்டக் காட்சிகளின் புகைப்படப்பதிவு
தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
செங்கொடி தீக்குளிப்பினால் நடந்தது தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது சுயவிமரிசனம் செய்து கொள்ளட்டும்.
மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்! ஆகஸ்டு 27 ஆர்ப்பாட்டம்!!
போர்க்குற்றவாளி ராஜீவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் மீதான தூக்குத்தண்டனையை ரத்து செய்யக் கோரியும், விடுதலை செய்யக்கோரியும் புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் 27.8.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
போலீசு பாசறைகளாக பள்ளிக்கூடங்கள்! போராளிகளாக மாணவர்கள்!!
எங்களது பெற்றோரை நோக்கித் துப்பாக்கியைத் திருப்பும் அதேசமயம், நாங்கள் வகுப்பறைகளில் உட்கார்ந்திருக்க விரும்புகிறார்கள் என ஒரிசா அரசின் குரூர புத்தியை நையாண்டி செய்கிறான், ஒரு மாணவன்.
அம்மா – ஆணவம் – ஆப்பு!
சமச்சீர் கல்வி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, அம்மாவின் ஆணவத்தின் மீது இறங்கியிருக்கும் ஒரு ஆப்பு !
சமச்சீர் கல்வி போராட்டம்: தடியடி, 600 பேர் கைது!!
சென்னையில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராடிய பெற்றோர்கள், மாணவர்கள், தோழர்கள் என 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.