Sunday, July 21, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமூவர் தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டம் வென்றது!

மூவர் தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டம் வென்றது!

-

மூவர் தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டம் வென்றது! -

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அநீதியாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

டெல்லியிலிருந்து பிரபல வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, மோஹித் செளத்ரி, காலின் கோன்சாலின் ஆகியோர் வழக்கில் ஆஜராக வந்திருந்தனர். மூவரின் வக்கீல்களான துரைசாமி, சந்திரசேகர் ஆகியோரும் அவர்களுடன் வந்திருந்தனர். மற்றும் வைகோ, பேரறிவாளன் பெற்றோர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அரசியல் ஆர்வலர்களும், தோழர்களும் உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இடைக்காலத் தடை உத்திரவு வந்ததும் நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரும் உற்சாகத்தை முழக்கங்களால் வெளிப்படுத்தினர்.

இதுவே இறுதி வெற்றியல்ல என்றாலும் முக்கியமான வெற்றிதான். ஏனெனில் நீதிமன்றங்களும், நீதிபதிகளும் எப்போதும் சட்டப்படி மட்டும் தீர்ப்புகள் வழங்குவதில்லை. சட்டங்களுக்கான விளக்கங்களே ஆளும் வர்க்கங்களுக்கேற்ப மாற்றி மாற்றி அளிக்கப்படும். இந்த வழக்கில் கூட இது ஒரு முக்கியமான அரசியல் ரீதியான வழக்கு, இந்திய இறையாண்மைக்கு சவால் விட்டிருக்கும் வழக்கு என்று கூட சொல்லி இந்த விசாரணை மனுக்களை நிராகரித்திருக்கலம். அப்படி செய்திருந்தால் அதுவும் சட்டப்படி சரிதான் என்று நீதிபதிகள் பொழிப்புரை அளித்து நியாயப்படுத்தலாம்.

எனில் இப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏன் இத்தகைய தீர்ப்பை வழங்க வேண்டும்? இதற்கு ஒரே நியாயமான பதில் தமிழக மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்கள்தான். அந்தப் போராட்டங்கள் உருவாக்கிய அரசியல் மேலாண்மைதான் இத்தகைய இடைக்கால உத்திரவு வந்ததற்கு காரணம் என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ளலாம். ஆகவே இறுதி வெற்றி நமக்கு கிடைக்க வேண்டுமென்றாலும் நாம் இந்த போராட்டங்களை தொடர்வது அவசியம். பெரிய அரசியல் கட்சிகளெல்லாம் கை விரித்து விட்ட நிலையில் மாணவர்கள், இளைஞர்கள், வழக்குறைஞர்கள், பெண்கள் என தமிழக மக்கள் அனைவரும் அவர்களில் கட்சி சார்பு உள்ளவர், இல்லாதவர் அனைவரும் போராடியிருக்கின்றனர்.

ஆயினும் இந்த அரசியல் ரீதியாக திரட்டப்படாத தன்னெழுச்சியான போராட்டங்கள் திசை திரும்புவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த வகையில் சிலர் அரசியலே வேண்டாம் என்று இந்தப் போராட்டங்களை பார்க்கிறார்கள். அநேகமான தமிழின ஆர்வலர்கள் கூட இந்தப் போராட்டங்கள் எதுவும் தீவிரமாக நடக்கக் கூடாது என்பதில் கவனமாயிருந்தனர். ஆனால் அந்த சமரசத்தை அவர்களது அணிகளே ஏற்கவில்லை. கோவையில் நடந்த ரயில் மறியல், மத்திய அரசு அலுவலங்கள் முற்றுகை என்று போர்க்குணமிக்க முறையில் நடந்த போராட்டத்தை அதற்கு சான்றாக கூறலாம்.

இந்தப் போராட்டத்தின் வீச்சால்தான் இன்று சட்டசபையில் ஜெயலலிதா சிறப்புத் தீர்மானம் ஒன்றை ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறார். நேற்று வரை எனக்கு அதிகாரமில்லை என்று துண்டித்துக் கொண்டு பட்டும்படாமலும் பேசியவர் இன்று மாற்றி பேசுவது ஏன்? அதிலும் கூட ஜெயலலிதா உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதன்படி தமிழக மக்களின் உணர்வை கருத்தில் கொண்டு தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைப்பதாக கூறியிருக்கிறார். இதன்படி இந்த முடிவு அவரது விருப்பத்தின்பாற்பட்டதல்ல. தமிழக மக்கள் ஏற்படுத்தியிருக்கும் நிர்ப்பந்தம். அதுவும் மக்கள் போராட்டங்களை தடுத்து நிறுத்த முடியாத போலீசு அதிகாரிகளின் கருத்தாகக் கூட இருக்கலாம். பாசிச ஜெயாவின் ஆட்சி என்பது அதிகார வர்க்கம், போலீசின் ஆட்சிதானே?

ஏற்கனவே ஈழத்தாய், கருணைத் தாய், சமூக நீதிகாத்த வீராங்கனை என்ற பட்டங்களோடு இனி மூவரைக் காத்த தாய் என்ற அருவருப்பான பட்டமும் கூட கிடைக்கலாம். ஆனால் ஜெயலிலிதா அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதால் எந்தப் பலனும் இல்லை என்று சோ, சு.சுவாமி, பா.ஜ.க , காங்கிரசு கும்பல்கள் கூறியிருக்கின்றது. அதாவது குடியரசுத் தலைவரின் முடிவை மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை என்று இவர்கள் கூறுகிறார்கள். தற்போது உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் இடைக்காலத் தடையைக் கூட இவர்கள் கசப்பாக விழுங்க முடியாமல் திணறுகிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்றம் இப்படி ஒரு தடை கொடுக்கும் என்பதை நான் நம்பவில்லை, ஆச்சிரியமாக இருக்கிறது என்கிறார் சோ. அவரும் கூட சட்டங்களை கரைத்துக் குடித்தவர்தானே. அவருக்கே ஆச்சரியமளிக்கும் வகையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றால் அது சட்டம், வழக்கறிஞர்களின் திறமை மட்டுமல்ல. ஏற்கனவே கூறியது போல இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. நீதிமன்றத்திற்கே கூட ஒரு அரசியல் அழுத்தத்தை கொடுத்ததற்காக கிடைத்த வெற்றி.

எனினும் பார்ப்பனக் கும்பல், காங்கிரசு கும்பல், பா.ஜ.க கும்பல் மூன்றுமே இத்தீர்ப்பை ஏற்கவில்லை என்பதோடு இறுதியில் மூவரும் தூக்கில்போடப்படுவார்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள். இன்று தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு கொண்ட இரு கட்சி தலைவர்களும் இப்படித்தான் கூறியிருக்கிறார்கள்.

மறுபுறம் பாசிச ஜெயாவின் மீதான பிரமைகளை வளர்த்துக் கொண்டு தமிழினி ஆர்வலர்கள் சட்ட வாதத்தையும், சமரசத்தையுமே முன்வைத்து பேசுவார்கள். ஆனால் இவை நமது இறுதி வெற்றிக்கு பயன்தராது.

ஆகவே இறுதி வெற்றி பெறவேண்டுமானால் மக்கள் அரங்கிலும், அரசியல் அரங்கிலும் போராட்டங்கள் தீவிரமாக தொடர்ந்து நடைபெற வேண்டும். அதை எள்ளி நகையாடும் அரசியல் அற்ற கோமான்களின் கையில் இந்தப் போராட்டம் சிக்கிவிடக்கூடாது. தற்போதைய நிலைமை அத்தகைய அபாயத்தைக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுகிறோம். தற்போது தமிழக அளவில் நிர்ப்பந்தம் ஏற்படுத்தியிருக்கும் இந்தப் போராட்டங்கள் இனி மத்திய அரசை நிர்ப்ந்திக்கும் வண்ணம் வளர வேண்டும்.

எனவே இந்த இடைக்கால வெற்றிகளின்பால் நாம் அதிகம் மகிழாமல் இறுதி வெற்றி கிடைக்கும் வரை போர்க்குணமிக்க போராட்டங்களை தொடருவோம். மூவர் மீதான தூக்கை ரத்து செய்வோம்.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

  • தமிழ் அன்னைக்கு நன்றி

   தமிழனை காத்துவிட்டாய் தமிழை காத்துவிட்டாய்
   தமிழும் வாழும் தரணியும் (உன்னை )வாழ்த்தும்
   வாக்கு பழித்தது வாய்மையே வென்றது.

 1. Vஇனவு இப்படி சரியாக போராடினால் விடிவு கிட்டும்..அதை விட்டு எல்லாத்தையும் குறை சொல்லியும், அழிவு வேலைகல் செய்தும் ஒருவரும் ஒன்றையும் புடுங்கபோவதில்லை…
  இதை தான் காந்தி செய்து காட்டினார்..ஆனால் உங்களை போன்ற தற்குறிகள் இந்தியாவையும், காந்தியையும் திட்டி ஒன்றும் புடுங்கபோவதில்லை..
  இந்தியா என்பது 300 – 400நாடுகள் சேர்ந்தநிலபரப்பு..வெள்ளைகாரன் வருவதற்கு முன்னேயே மக்கள் ஒன்றுக்குள் ஒன்றாக தான் இருந்தார்கள்…
  இப்போதுள்ள துளுக்கனுகளும்,நீங்களும் தான் இந்தியாவை அடகு வைக்க பார்க்கிறீர்கள்,,துலுக்கனுகளுக்கு 300 வருடங்களாக இந்தியனிலப்பரப்பை ஆண்ட துலுக்கமன்னர்களால் முடியாததை இப்போ செய்ய துடிக்கிறார்கள்.. இந்தியாவோடு ஒன்றினால் உங்களை கேட் கநாதியில்லை என்று அதன் மீது துப்புகிறீர்கள்
  (இங்கு உங்களை என்பது வினவு கும்பளை)

  • இஸ்லாமியர்கள் 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டார்கள்னு சொல்லும் போதே உன் வரலாற்று அறிவு என்னான்னு தெரியுது . உன்னைப் படிக்க வைச்சதுக்கு சும்மாவே இருந்து இருக்கலாம் . நீ மறுபடி ஒன்னாங்கிளாஸ்லே இருந்து படிச்சுட்டு வா . சரி இலங்கைத் தமிழனும் , தமிழக மீனவனும் கொல்லப்படும் போதும் , கொல்லப்பட்டுக் கொண்டு இருக்கும் போதும் , நீ சொல்லுற இந்தியா என்ன மயிற புடுங்குச்சு ? நீ என்ன மயித்தப் புட்ங்கின? . பார்ப்பனக் கும்பல் இந்தியாவை அடகு வைக்குதுன்னு சொன்ன உடனே பாபர்னு பேருலே வந்து நீ வீரம் பேசும் போதே தெரியுது உன் பொட்டைத் தனம் என்னானு . நீ கிராஸ் பெல்டா இல்லை கிராஸ் பெல்டுங்க காலை நக்கிப் பிழைப்பு வாதம் செய்றவனா? அவனா நீ ??

  • தமிழக சட்ட கல்லூரி மாணவர்களிடம் சட்டம் பயில செல்ல வேண்டியது.

 2. சவுக்கு அவர்களே , தாங்கள் வைகோ பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லையே ? ஏதேனும் காரணம் உண்டா ?
  ராம் ஜெத்மலானி கூட, வைகோ அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று சொன்னாரே ?

  • ஆமா அந்த பொய்க்கோ தான் இன்னிக்கு இந்த போராட்த்திற்கு வரும் மக்களை தவறான முறையில் வழி நடத்தும் சூத்திரதாரி. பிரபாகரன் உயிருடன் இருக்கான்னு சொல்லி வெளியில் சொல்லும் இந்த பொய்க்கோ கோர்ட்டில் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோர் இறந்து விட்டதாக வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். மேலும் இது ஒரு கருணை மனுவுடன் இணைந்த மனு. வெளியில் இந்த மூவரும் நிரபராதிகள் என்று கூறி உள்ளார். அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஆஜரான வக்கீல் நடராஜன் இந்த வழக்கை தடா வழக்கு இல்லை என்று மறுத்து ஆனால் சதி வழக்கு என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். இவர் அதையும் மறுத்து இவர்களை நிரபராதிகள் என்று வெளியில் பரப்புரை செய்கிறார். இவர் வைக்கோ என்ற பொய்க்கோ.

 3. கேவலமான, வெறி பிடித்த, ஊழல் மலிந்த சாக்கடை அரசியல்வாதிகள் வாழும் நாடான இந்தியாவை விட்டு (இப்படி தான் வினவு கருதுகிறது. எழுதுகிறது) தயவுசெய்து நம்முடைய யாழ்ப்பாணத்துக்கு வந்து உங்கள் போராட்டத்தை தொடருமாறு வினவு குழுவினர் மற்றும் அவர்களின் தொண்டர்கள் எல்லாருக்கும் அழைப்பு விடுக்கிறோம். தமிழ்நாட்டில் இருந்து பத்தி பத்தியாய் உங்கள் இணையத்தில் வருஷக்கணக்காய் எழுதிக்கிழிப்பதைவிட ஒரே ஒரு நாளாவது இங்கிருக்கும் சிங்கள ராணுவத்துக்கு எதிராய் போராட்டம் நடத்தி தியாகியாய் வந்தால் உங்களுக்கு சிலை வைப்போம். வேறு விருப்பம் இருந்தாலும் சொல்லுங்கள். செய்து தருவோம்.
  2009 ல் நடந்த வன்னி யுத்தத்தின் போது தமிழகத்தின் ஒரு தொப்புள் கொடி உறவும் வரவில்லை. (ஒரு பயலுக்கும் தோணியும் கெடைக்கல . கத்தி கடப்பார கூட கெடைக்கல. வந்து சிங்கள ராணுவத்தோடு மோதி தமிழ் மக்கள காப்பாத்துவோம்னு தோணல. வெக்கம் மானம் ரோசம் ஒன்னும் வரலியே! சிங்களவன் அடிக்கிரான். அடிக்கிறான்னு கத்தினதோட சரி.) மேற்குநாடுகளில் வாழும் ஒரிஜினல் யாழ்ப்பாணத்து மனிதர்களும் வரவில்லை. (அந்தந்த ஊர்களில் ரோடு ரோடாய் காக்கா கணக்கா கரைஞ்சதோட சரி.) இந்த ரெண்டு கோஷ்டியும் பத்திரமாய் இருந்தபடி ஸ்ட்ரைக் பண்ணி, கொடி பிடித்து கோஷம் போட்டு அத்தோடு ஈழப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்கள் என்ற அவப்பெயர் இன்னும் அழியவில்லை. தொப்புள் கொடிகளே இன்னமும் கப்புனு இருக்கணுமா? இதோ அந்த வாய்ப்பு மீண்டும் வந்திருக்கிறது. வருவிகளா?

  • அதெப்பிடி அங்கே வந்தா துவக்கு வைச்சு பொட்டுன்னு போடிருவீக இல்லை. எங்களுக்கு இது தான் வசதி. நாங்க நடத்தற போராட்டத்தை பார்த்து நீங்களும் நப்பாசை வைச்சு உங்க குஞ்சு குளுவான்களை அனுப்பி சாக அடிச்சுகங்க!!

 4. எதுக்குதான் போராடுவது என்று மக்களுக்கு யார் சொல்லி தர போறாங்க ? முட்டாள் ஜனங்கள் …..வைகோ விற்கும் அறிவு கிடையாது அவரை துதி பாடுகிரவர்களுக்கும் கிடையாது .

 5. ஆமா அந்த செங்கொடி எழுதிய வேறு எதாவது ஒரு எழுத்துரு உண்டா? இல்லை அவரின் கைபையில் இருந்ததாக உங்கள் மக்கள் மன்றம் கொடுத்திருக்கும் பிட் பேப்பர் தான் அந்த அம்மா வாழ்க்கையில் எழுதிய ஒரே எழுத்துருவா? விளக்க முடியுமா?

 6. நாங்க இலங்கை மலைநாட்டை சேந்தவுக. அது இலங்கையின் நடுப்பகுதில இருக்குது. 200 வருசத்துக்கு மிந்தி தேயில மரத்தடில மாசி கருவாடும் தங்கமும் வெளஞ்சி கெடக்குன்னு சொன்னத நம்பி முட்டாப் பசங்களான எங்க பாட்டன் பூட்டன்மாருக இங்க வந்தாக. ஈழம் வேணும்னு கத்திரவுக இலங்கை வடக்கு பக்கத்தில இருக்காக. அவுகளுக்கு இருக்கிற பிரச்னைகள் வேற. நம்ம பிரச்னைகள் வேற. நம்ம இன்னக்கி 4 மில்லியன் ஆகிட்டோம். அவுக அதாங்க யாழ்ப்பாணத்தாருகள எப்பிடி தான் கூட்டுனாலும் 2 மில்லியனுக்கு மேல போவாது. நாம வாழ்றதே சிங்கள ஊர்கள் பக்கந்தான். அந்த ஜனங்களோட ஒரு மாதிரி காலந் தள்ளிகிட்டிருக்கோம். இந்த வெளிநாட்ல இருக்கிற மூதேவிகளுக்கு (அதாங்க யாழ்ப்பாணத்து ஆளுகளுக்கு ) மனுஷ பலி பாக்கிறதுன்னா தேன்குழல் திங்கிற மாதிரி. அவனுக எதையாவது செஞ்சி எப்பிடியாவது தப்பிருவானுக. நாங்க இல்லியா நெருப்ப வயித்தில கட்டிக்கிட்டு வாழவேண்டியிருக்கு. அய்யா தமிழகத்து தோப்புள் உறவுகளே நாங்க ஒன்னும் ஈழம் கேக்கல. தின்னு குடிச்சி திமிர் ஏறிப்போன வெளிநாட்டு யாழ்ப்பாணத்து ஆளுகளுக்கு தான் ஈழம் வேணும். எங்கள எப்டியோ வாழவிட்டா போதும். அந்த மூதேவிகள் கிட்ட துட்டு இருக்குது. அதுக்குனாச்சி உங்க சினிமா கூட்டம் அங்க அடிக்கடி போய் அவுக மார்க்கட்ட நல்ல வச்சிக்கிராக.அதுக்கு உங்க ஊரு அதாங்க தமிழ் நாட்டு பத்திரிகைகளும் ஒத்து ஊதுராக. உங்க அரசியல்வாதிகளும் அவுக பக்கம் நின்னு ஆடுராக. நீங்க அத நம்பி அங்க ரோட்ல போராடுவிக. அதுக்கு நாங்க பலியாகிறதா? அய்யா மாருகளே, புலிக்கூட்டத்த உசுப்பி உசுப்பி காசனுப்பி இத்தனை அநியாயத்துக்கும் பின்னால இருந்தது இந்த மூதேவிக தான். போன 30 வருஷங்களா கிட்டத்தட்ட ஒண்ணரை லட்சம் பேர பலி வாங்கினது மட்டுமில்ல, கடேசியா அந்தப் பொண்ணு செங்கொடி வரைக்கும் பலியெடுத்தது இந்த பிசாசுக தான். அநியாயமா ஏழை பாழைகள உசுப்பி உசுப்பி…கடவுளே ! இவனுக நல்லா இருப்பானுகளா?…நாங்க ஒண்ணும் அழிஞ்சி போயிர மாட்டோம். எத்தின நூறு ஆயிரம் வருஷம் போனாலும் மாரியம்மன் கோயில் கட்டி பொங்கல் வச்சி கூத்து ஆடி தமிழ்ப்பாட்டு பாடி தமிழ் பேசி சந்தோஷப்பட்டு அக்கம் பக்கத்து சிங்கள ஆளுகளையும் கூப்பிட்டு முடிஞ்சளவு சமாதானமா இருந்திருவோம். தமிழ்நாட்டின் தொப்புள் கோடி உறவுகளே. எதையுமே ஒண்ணுக்கு நாலா யோசிச்சி எங்களுக்கு ஒத்தாசையா இருங்க. காலம் மாறிட்டுது. கண்ட கண்ட போக்கிரிங்க கதை பேசுவானுக. நாடகம் போடுவானுக. அதை நம்பி எங்களுக்கு கொள்ளி வச்சிராதீக!

  • சேகரன் கட்டாயம் ஆரம்ப பாடசாலைக்கு போக வேண்டும். இலங்கையின் சனத்தொகை பற்றி எதுவும் தெரியாது சும்மா புலம்பி தள்ளியிருக்கிறார். இலங்கை சனத்தொகையில் இந்திய தமிழர்கள் 855 ,025 (2001 – 5 .5 % ) இப்போது 11 லட்சமாக அதிகரித்திருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. நம்ம (தற்குறி ) சேகரன் கூறிய இந்திய தமிழர்கள் சனத்தொகை தொகை 40 லட்சம். (http://en.wikipedia.org/wiki/Indian_Tamils_of_Sri_Lanka) .
   வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் ஈழ தமிழர்களின் சனத்தொகை 26 லட்சம் (12.6 %).

 7. இது ஒன்னும் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி இல்ல… எல்லாமே அரசியல் விளையாட்டு. ஜானாதிபதியின் ஒப்புதலையே நிறுத்தும் அளவுக்கா நீதிமன்றம் இருக்கிறது? அதுக்காக இப்போ இருக்குற ஜனாதிபதி பெரிய அறிவுஜீவி என்று சொல்லவில்லை… இருந்தாலும், அவரது ஒப்புதலை நிறுத்திவைப்பது என்பது, மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மாதிரிதானே? இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா? நான் இந்த ஒரு (ஈழத்தமிழர்) விஷயத்தை சொல்லவில்லை. போதுவாக எல்லா விஷயத்திலும் இனி இதுதான் நடக்கும். நீதிமன்றங்கள், மக்கள் மன்றங்கள் எல்லாவற்றையும் தாண்டித்தான் ஜனாதிபதியின் முடிவுக்கு ஒரு விஷயம் எடுத்துச்செல்லப்படுகிறது. இப்போ மறுபடியும் நீதிமன்றம் என்றால் என்ன அர்த்தம்? இந்த விஷயத்தை இழுத்துகொண்டே செல்வார்கள். அரசியல் விளயாட்டில் அவர்களுக்கு தேவைப்படும்போது, தேவையான விதத்தில் உபயோகப்படுத்திக்கொள்வார்கள்… மொத்தத்தில், மக்கள்தான் முட்டாள்கள். சென்கொடி போன்று “Emotional Stupidiy”யுடன் செத்துமடியவேண்டியதுதான்.

 8. நான் பொது புத்தி உள்ள அல்லது பொதுவாகவே புத்தி இல்லாத சாதாரண பிரஜை. இதுவரை நான் அறிந்த வரையில் தமிழ்நாட்டில்

  நல்லவர் * கெட்டவர் என்ற வரிசையில் பிராமணரல்லாதவர்கள் * பிராமணர்கள் (திராவிட* ஆரிய) – இப்படி 2 பிரிவுகளை மட்டுமே அதிகம் பார்த்து வந்திருக்கிறேன். இப்ப சில நாட் களாக திரு. ரோஸாவசந்த் என்பவரது பதிவுகள் சிலவற்றை பார்த்தேன். இந்த பிராமணரல்லாதவர்கள் இப்போது – தமிழ் உணர்வாளர்கள் அல்லது தமிழ் தேசியவாதிகள் * அப்படி இல்லாத முற்போக்காளர்கள் என்று 2-ஆக பிரிந்து அடையாளப் படுத்திக் கொள்வதைப் பார்த்தேன். (ஒருவேளை எப்பவும் அப்படி இருந்து நான் கவனிக்காமல் இருந்திருக்கலாம்).

  முதலில் மரண தண்டனை பற்றி என் கருத்து – அவசியமான, தேவைப்படுகிற இடங்களில் அது தேவை.

  அடுத்து பேரறிவாளன் நிரபராதியா என்பது பற்றி முடிவுக்கு வர வேண்டுமானால் பொது மக்களுக்கு, சில கேள்விகளுக்கு உண்மையான பதில் கிடைக்க வேண்டும்.

  1. பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்தாரா, இல்லையா?
  2. அவருக்கு தான் யாருக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தோமோ அவர்கள் புலிகள் இயக்கத்தில் இருப்பவர்கள் என்பது தெரியுமா, தெரியாதா?
  3. பேட்டரி வாங்கிக் கொடுக்கும் போது புலிகள் என்ன திட்டத்தோடு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து வாங்கிக் கொடுத்தாரா அல்லது தெரியாமல் வாங்கிக் கொடுத்தாரா?

  என் கருத்து:
  முதல் கேள்விக்கான பதில் “இல்லை” என்றால் அவர் விடுவிக்கப் பட வேண்டியவர்
  2-ஆம் கேள்விக்கான பதில் “தெரியும்” என்றால் அவர் சில காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியவர்.
  3-ஆம் கேள்விக்கான பதில் “தெரியும்” என்றால் அவர் தூக்கிலிடப்பட வேண்டியவர்.
  2,3=ஆம் கேள்விக்கான பதில்கள் “தெரியாது” என்றால் அவர் விடுவிக்கப் பட வேண்டியவர்.

  திரு. ரோஸாவசந்தின் நிலையில் ஒரு சிறு குழப்பம் இருக்கிறது.

  சோ ராமசாமியை விமர்சிக்கும் போதும் வைகோவை விமர்சிக்கும் போதும் நடுநிலையான முற்போக்காளராக இருக்கிறார். நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது என்பதற்காகவும் மரண தண்டனையை எதிர்க்கும் கொள்கையுடைய மனித நேயன் என்ற வகையிலும் தன்னை பற்றி சொல்கிறார்.

  பேரறிவாளன் நிரபராதி இல்லை என்றாலும் மரண தண்டனையை நீக்க வேண்டும் என்ற தன் கொள்கையின் படி பேரறிவாளனுக்காக குரல் கொடுப்பதாக சொன்னவர் திரு. பத்ரி.

  ஆனால் வினவு மரண தண்டனை கூடாது என்று சொல்லப் படுவதை “முதலாளித்துவ மனிதாபிமானம் என் கிறார். ஒடுக்கப்படுகிறவர்கள் எதிர் வன்முறை செய்வதற்கான உரிமையை கோருகிறார். அவ்வாறு நிகழ்கிற வன்முறைகளை (கொலை உட்பட) ஆதரிக்கிறார். செங்கொடி பற்றிய பதிவிலும் மாற்று போராட்ட வழிமுறை இல்லையா என்று கேட்ட செங்கொடிக்கு யாரோ ஒரு பெரியவர் கூறுவது போல துப்பாக்கி ஏந்தி போராட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். துப்பாக்கியுடன் போராடும் போது நிகழப்
  போவதும் மரணம் தான்.

  திரு. ரோஸாவசந்திற்கு, மரண தண்டனைக்கு எதிராக பல்வேறு தரப்பு மக்களை திரட்ட வேண்டும் என்பதை விட இந்த மூவரின் தண்டனையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் தூக்கலாக இருக்கிறதா? சார்பில்லாத முற்போக்கு என்பதை விட தமிழின உணர்வு என்று இதை எடுத்துக் கொள்ளலாமா? இந்தக் கேள்வி ஏன் வருகிறதென்றால் – திரு. பத்ரியின் ஆதரவை நிபந்தனையின்றி ஏற்காமல், பேரறிவாளன் நிரபராதி இல்லை என்பதற்கான ஆதாரத்தை எடுத்து வைக்க சொன்னார். அதே சமயம் வினவின் போராட்டத்தை, துப்பாக்கி ஏந்தி போராட சொல்லும் வினவின் கொள்கையைப் பற்றிய எந்த விமர்சனமுமில்லாமல் ஆதரித்தார்.

  குறிப்பு:

  வினவு
  இந்த பதிவு உங்கள் கட்டுரை பற்றியது இல்லை. அதனால் உங்களுக்கு சம்மதம் இல்லையென்றால் என் இந்த பதிவை வெளியிட வேண்டாம். அது உங்கள் விருப்பம்.

 9. வினவு,

  செங்கொடியின் வீர மரணம் ,மூவரின் மரணத்தை தள்ளி வைத்தது.செங்கொடி போன்ற எண்ணட்ற செங்கொடிகள் வுருவாவதை யார் தடுப்பது ?இந்தநாட்டின் வொவ்வொருநடவெடிக்கைகள் மக்களை ஏமாளீகளாகவும்,கோமாளிகளாகவும் ஆட்சியாளர்களால் சிதைக்கப்படுகிறார்கள்.உண்மை போராளிகள் என்றாவது வொருனாள் உணரவேண்டும்.ஒன்றாக களம் காணவேண்டும்.

  மெய்தேடி—

 10. முத்தமிழ் வித்தகரின் ஆஸ்தான புலவர் வாலி இந்த வார விகடனில் “நினைவு நாடக்கள் பகுதியில் “நாலுகாச பெறாத தமிழை வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவதாக எழுதிஉள்ளார்.

  இது தமிழ் ஆர்வலர்களின் நெஞ்சை புண்படுத்தி உள்ளது.
  தமிழ் ஆர்வலர்கள் “இதற்கு வாலியும், ஆனந்தவிகடனும் மன்னிப்பு கேட்க வேண்டுகிறார்கள்”

  இது முத்தமிழ் வித்தகரின் பார்வைக்கு சென்றால் அவர் என்ன பதில் சொல்வார்?

  “தமிழ் பித்தன்”

 11. இங்கு தூக்கு தண்டனையை எதிர் நோக்கி இருக்கும் மூவரும் ராஜீவ் கொலையில் நேரடியாக தொடர்பு படாதவர்கள். இதில் பேரறிவாளன் பற்றி வாங்கி கொடுத்த குற்றத்திற்காக தூக்கு தண்டனையை எதிர் நோக்கி இருக்கிறார். இந்த மாதிரி ஒரு நிலவரத்தை உலகில் எங்கும் காண முடியாது. செய்யாத குற்றத்திற்காக மூன்று அப்பாவிகள் தண்டனையை அனுபவிக்கப் போகிறார்கள்.இவர்கள் கொலைக்கு உடந்தை என்று பொய்யாக குற்றம் சாட்டப்பட்டவர்கள்…!! விசாரணை செய்த சி.பி.ஐ அதிகாரிகளே ஒத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் அதை மறுத்து சில மனித நேயமற்ற நான்கு கால் உயிரினங்கள் கூக்குரலிடுகின்றன.
  ராஜீவ் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு செல்லாத காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் விசாரிக்கப்பட்டார்களா? அவர்களுக்கு சம்பவம் நடக்கப்போவது தெரிந்திருக்க வேண்டும்.

  சேகரன் கட்டாயம் ஆரம்ப பாடசாலைக்கு போக வேண்டும். இலங்கையின் சனத்தொகை பற்றி எதுவும் தெரியாது சும்மா புலம்பி தள்ளியிருக்கிறார். இலங்கை சனத்தொகையில் இந்திய தமிழர்கள் 855 ,025 (2001 – 5 .5 % ) இப்போது 11 லட்சமாக அதிகரித்திருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. நம்ம (தற்குறி ) சேகரன் கூறிய இந்திய தமிழர்கள் சனத்தொகை தொகை 40 லட்சம். (http://en.wikipedia.org/wiki/Indian_Tamils_of_Sri_Lanka) .
  வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் ஈழ தமிழர்களின் சனத்தொகை 26 லட்சம் (12.6 %).

 12. மூன்று நபர்களின் தூக்கை நியாயப்படுத்தும் மனிதர்கள் ஏன் நம் நாட்டில் நடக்கும் ‘ விவசாயிகளின் உயிர்பலியை ‘ கண்டுகொள்ளவில்லை . ஒரு வருடம் நடந்தால் ‘உயிர்பலிக்கு’ சம்பந்தப் பட்டவர்களை மன்னிக்கலாம் ஆனால் வருடா வருடம் நமது நாட்டின் விவசாயிகள் வேறு வழி இல்லாமல் எலிக்கறியை சாப்பிட்டு , தற்கொலை செய்துகொள்கிறார்கள் . இதற்கு சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் கொள்ளை லாபம் அள்ளித்தரும் ‘விளையாட்டில் ‘ அதிக கவனம் செலுத்துகிறார் ….வருடா வருடம் நடக்கும் விவசாயிகளின் தற்கொலையில் சம்பந்தப்பட்ட வேடிக்கை பார்த்த அனைவரும் கொலையாளிகள் தானே !!

  இந்த மூன்று பெயர் என்றால் ஒரு நியாயம் , பண வல்லமை படைத்தவர்கள் என்றால் இன்னொரு நியாயமா !!!

 13. […] மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு 8 வாரங்கள் இடைக்காலத்தடை விதித்திருக… சென்னை உயர் நீதிமன்றம். இம்மூவரின் […]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க