மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்! ஆர்ப்பாட்டம்!!
ஈழத்தின் மீதான போர் புரிந்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற போர்க்குற்றவாளி ராஜீவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் மீதான தூக்குத்தண்டனையை ரத்து செய்யக் கோரியும், விடுதலை செய்யக்கோரியும் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பெ.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் 27.8.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்ட விவரத்தை இங்கே தருகிறோம். அனைவரும் வருமாறு கோருகிறோம்.
இடம்: பனகல் மாளிகை, சைதாப்பேட்டை
நாள்: 27.8.2011
நேரம்: மாலை 4.30 மணி
தலைமை: வே. வெங்கடேசன், சென்னை ம.க.இ.க செயலாளர்
சிறப்புரை: மா.சி.சுதேஷ்குமார், மாநில இணைச்செயலாளர், பு.ஜ.தொ.மு
* இராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்! இது அநீதி!! தன்மானமுள்ள, மனிதாபிமானமுள்ள எவரும் இதனை எதிர்த்து போராடவேண்டும்.
* தடா என்ற கொடிய கருப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து, பல்வேறு சித்திரவதைகள் செய்யப்பட்டுத்தான் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டது. முதலில் இந்த கருப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தியதையும் அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதும் பச்சை பாசிசம்!
* இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை பரிசீலிக்காமலே ஏற்கனவே, முடிவு செய்துவைத்த கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பைதான் உச்ச நீதிமன்றம் அன்று வழங்கியது. கருணை மனுப்போட்ட பின்னர், அவர்களது மரணத்துடன் விளையாடத் தொடங்கிய காங்கிரசு அரசு, தற்போது அவர்களை தூக்கிலிட அனுமதித்துள்ளது.
* இந்தத் தீர்ப்பன் அடிப்படையில் 21- ஆண்டுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகியோர் சிறைதண்டனையும் சொல்லமுடியாத கொடுமைகளையும் அனுபவித்துள்ளனர். இவ்வளவு பெரிய தண்டனையை வழங்கிய பின்னரும் மரண தண்டனை என்பது என்னவகை நீதி?
* ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தான் இராஜபக்சே, இராஜபக்சே இனப்படுகொலை செய்தவன், போர்க்குற்றவாளி என அறிவித்து தண்டனை வழங்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் போராடிக் கொண்டு வருகின்றனர். இராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்குத் துணைபுரிந்த இந்திய அரசு, இராஜபக்சேவை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளைதான் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேரறிவாளன், சாந்தன், முருகனின் கருணை மனுக்களை நிராகரித்து தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டதன்மூலம் தனது நோக்கத்தை மீண்டும் தெளிவுப்படுத்தி உள்ளது.
* ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்க இராஜபக்சேவுக்கு உதவுவதன் மூலம் தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள இந்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியே பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான தூக்குத்தண்டனை!
* ஈழத் தமிழர்களின் சுயநிரணய உரிமைக்காகவும், இந்திய அரசின் தெற்காசிய மேலாதிக்கத்தை வீழ்த்தவும், இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்கவும், பேரறிவாளன்- சாந்தன்- முருகன் ஆகியோரின் விடுதலைக்காகவும் போராடுவோம்!
அனைவரும் வருக!
______________________________________________________
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
அலைபேசி – (91) 97100 82506 (வினவு)
_____________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்:
- ஈழம் – இந்தியா முதுகில் குத்துவது ஏன்?
- ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !
- ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?
- இலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ நம்மிடம் கோரும் கடமை என்ன?
- புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்
- “இனியொரு” தோழர் சபா.நாவலனுடன் ஒரு நேர்காணல்!
- ஈழம்: இலண்டன் வானொலியில் தோழர் மருதையன் உரையாடல் – ஆடியோ
why not protest for releasing kasab and afsal guru also while you are at it?
you dont deserve to have such a profile name.so back off. did indian PM plan to kill kasabs countrymen? but ours did. stop capital punishment. be humane
மரணதண்டனை அறவே ஒழிக்கப்படவேண்டும்,லட்சக் கணக்கில் கொன்றபிறகும் பழிவாங்கும் நடவடிக்கை ஓயவில்லையோ? மூன்று தமிழர்கள் விடுதலை வரை போராட எனது ஆதரவு தொடரும், ஆர்ப்பாட்டம் வெற்றி பெறுக!
* இராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்! இது அநீதி!! தன்மானமுள்ள, மனிதாபிமானமுள்ள எவரும் இதனை எதிர்த்து போராடவேண்டும்.
* தடா என்ற கொடிய கருப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து, பல்வேறு சித்திரவதைகள் செய்யப்பட்டுத்தான் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டது. முதலில் இந்த கருப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தியதையும் அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதும் பச்சை பாசிசம்!
* இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை பரிசீலிக்காமலே ஏற்கனவே, முடிவு செய்துவைத்த கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பைதான் உச்ச நீதிமன்றம் அன்று வழங்கியது. கருணை மனுப்போட்ட பின்னர், அவர்களது மரணத்துடன் விளையாடத் தொடங்கிய காங்கிரசு அரசு, தற்போது அவர்களை தூக்கிலிட அனுமதித்துள்ளது.
* இந்தத் தீர்ப்பன் அடிப்படையில் 21- ஆண்டுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகியோர் சிறைதண்டனையும் சொல்லமுடியாத கொடுமைகளையும் அனுபவித்துள்ளனர். இவ்வளவு பெரிய தண்டனையை வழங்கிய பின்னரும் மரண தண்டனை என்பது என்னவகை நீதி?
* ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தான் இராஜபக்சே, இராஜபக்சே இனப்படுகொலை செய்தவன், போர்க்குற்றவாளி என அறிவித்து தண்டனை வழங்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் போராடிக் கொண்டு வருகின்றனர். இராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்குத் துணைபுரிந்த இந்திய அரசு, இராஜபக்சேவை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளைதான் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேரறிவாளன், சாந்தன், முருகனின் கருணை மனுக்களை நிராகரித்து தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டதன்மூலம் தனது நோக்கத்தை மீண்டும் தெளிவுப்படுத்தி உள்ளது.
* ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்க இராஜபக்சேவுக்கு உதவுவதன் மூலம் தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள இந்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியே பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான தூக்குத்தண்டனை!
* ஈழத் தமிழர்களின் சுயநிரணய உரிமைக்காகவும், இந்திய அரசின் தெற்காசிய மேலாதிக்கத்தை வீழ்த்தவும், இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்கவும், பேரறிவாளன்- சாந்தன்- முருகன் ஆகியோரின் விடுதலைக்காகவும் போராடுவோம்!
.
27.08.2011 மாலை 5.00 –
பேருந்து நிலையம் அருகில்- கிருஷ்ணகிரி.
தலைமை: தோழர். சங்கர், மாவட்ட செயலாளர், பு.ஜ.தொ. மு.,
சிறப்புரை: தோழர். சரவணன், வி.வி.மு.,
தோழர். பரசுராமன், மாவட்ட தலைவர், பு.ஜ.தொ.மு.,
நன்றியுரை: தோழர். முருகேசன், வி.வி.மு.,
அனைவரும் வாரீர்!
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில். விஜயகாந்த் கல்யாண மண்டபம் எதிரில், ஆக்சிஸ் பேங்க் அடம் அருகில் உள்ள கட்டத்தில் மூன்று பெண் வழக்கரிஜர்கள் உண்ணா நிலைப்போராட்டத்தில் இருக்கிறார்கள்.
தோழர் கிருஷ்ணசாமி MLA அவர்கள் அங்கு வந்து பார்த்து, பேசி விட்டு சென்றார்கள். பேரறிவாளனின் தாயார், அற்புதம் அம்மா அவர்களும் அங்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். நூற்றுக்கும் மேலான நமது உணர்வாளர்கள் அங்கு உள்ளார்கள். நாளை காலை பரப்புரை ஆரம்பம் ஆகும். ஆயிரகணக்கான தமிழர்கள் அங்கு வரவேண்டும்.
பல தோழர்கள் இன்னமும் அங்கு இருக்கிறார்கள். நாளை லட்சம் தமிழர்கள் கோயம்பேடு நோக்கி வாருங்கள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவாளர்களுக்கு தகவலை பரப்புங்கள்.
நாளை லட்சம் தமிழர்கள் கோயம்பேடு நோக்கி வாருங்கள்.
அநியாயமாக் மூவர் தூக்கு எதிர் நோக்கி இருக்கிறார்.அத்தண்டனை எதிர்த்த இபோராட்டங்களினால் எப்பலனும் இருக்காது என்றே எண்ணுகிறேன். காங்கிரஸ் அரசு திட்டமிடே இச்செயல்களை செய்கிறது.
நம் எதிர்ப்பை மட்டும் பதிவு செய்ய முடியும்!
வேறு வேறு இடங்களில் போராட்டம் நடத்துவது ஆற்றல் வீணாவதற்கு காரணமாகும். கோயம்பேட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு, இப்போது பரவாலாக அறியப்பட்டுள்ளதால் தோழர்கள் அங்கு கலந்து கொள்வது நல்லது. ஆற்றலையும், குரலையும் ஒருமித்து காட்டவேன்டிய நேரமிது. தோழர்கள் மற்ற அமைப்பினருடன் உள்ள கொள்கை பிரச்சனைகளை பெரிது படுத்தாமல் இணைய வேன்டும். நாளையில்லாவிட்டாலும் பிறகாவது.
இந்த மூன்றுபேரும் குற்றமற்றவர்கள் ஆதலால் இவர்களை விடுதலை செய்ய வேண்டும். அதையும் மிறி தூக்கில்போடுவதென்றால் ராசிவ்காந்தி என்ற கொடுங்கோல் கொலைகாரனை கொன்ற வழக்கில் தண்டனையை நிறைவேற்றட்டும். மானங்கெட்ட இந்திய அரசு தமிழ் மீனவர்களை பாதுகாக்க வக்கில்லை, முதல்ல இந்த இந்திய நடுவன அரசு தலைவர்களை தூக்கில் இடவேண்டும்.
தமிழா நீ இந்திய நாட்டில் அடிமையாய் இருக்கிறாய்
என்பதற்கு பல சான்று உண்டு அதில் இது ஒன்று.
துரோகி இந்தியாவை ஈழம் நம்பி சீரழிந்தது
தமிழர்களும் இந்தியாவை நம்பியிருந்தால் நாம் அழிவது நிச்சயம்,
இந்தியாவின் சுயருபத்தை உணர்ந்துகொள் தமிழா,
இந்தியா என்றுமே தமிழனுக்கு நண்பனாக இருந்ததில்லை
காலம் தரும் பாடத்தை கற்றுகொள்.
இதில் உள்ள உள் அர்த்தம் நிச்சயம் ப. சிதம்பரம் அவர்களுக்கு கோத்தபாய 15 நாட்களுக்கு முன்பு சொன்ன விஷயம். போராட்டங்கள் ப.சி வீட்டுக்கு முன்பு நடத்தப்பட வேண்டும். ப.சி, தமிழ்நாட்டில் எங்கு வந்தாலும் எதிர்ப்பை காட்டவேண்டும்.
http://www.facebook.com/notes/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-27-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81/252282651469481
மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்! தமிழமெங்கும் ஆகஸ்டு 27 ஆர்ப்பாட்டம்!! இதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் நடக்கிறது அனைவரும் வருக!
மாலை 4.00மணி. மாவட்ட ஆட்ஷியர் அலுவலகம் எதிரில்,விழுப்புரம்.
சரியான முரையில் விசாரனை செய்யாமல் ஒருபக்கச் சார்பன தீர்ப்பு எதனைஎதிர்க்க வேன்டும்
மேற்கண்டவர்கள் குற்றவாளிகள் என்று இந்திய உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் குற்றமற்றவர்கள் என்று முழங்குவது இந்திய நீதிமன்றங்களை அவமானப்படுத்துவதாகும். எல்லாருக்கும் புலிகள் தான் செய்தார்கள் என்று மனதார தெரியும். இருந்தாலும் இந்தியா மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் மரண தண்டனை நிறைவேற்றுவது ஒழிக்கப்படவேண்டும். அதன் அடிப்படையில் இவர்களுக்கு ஜீவாந்தர தண்டனையாய் மாற்றிவிட்டால் நல்லது. சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்று ஆகிவிடக்கூடாது.
*பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தோழர் டாக்டர்.கிருஷ்ணசாமி முதல் ஆளாக வெளிநடப்பு செய்துள்ளார்.
*கோயம்பேட்டில் 3 வழக்கறிஙர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்களை பேரறிவாளனின் தாயார், தோழர் டாக்டர்.கிருஷ்ணசாமி ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
*இவ்வாறு தமிழகத்தில் வாழக்கூடிய நாம் அனைவரும் கலகங்கள் செய்தாவது பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய 3 தமிழர்களை மீட்டெடுப்போம்.
உப்பை தின்னவன் தண்ணி குடிக்கணும் தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்கனும்.
இது ராஜுவுக்கும் இவர்களுக்கும் பொருந்தும்
தண்ணிய குடித்தவன் உப்ப திண்ணுவானா?தணடனை அனுபவத்திவன் தப்பு செய்வனா?
என்னங்கப்பா இது ஞாயமா?
ஒண்ணுமே புரியலையே ??? உங்க கொள்கை என்ன கொள்கையே இல்லாம இருபதா ??
ராஜீவ் அனுப்பிய இந்திய ராணுவம் பண்ண பாவத்துக்கு ..இதற்கு பழிவாங்க …ராஜீவையும் சேர்த்து பலரை துண்டு துண்டாக கொண்ட்ராச்சி …
அப்போ தான் புரசனை கொன்ன …தன் அப்பாவை கொன்ன குட்டதை துகில் போட்டால் அது பெரிய பாவமா ?
இத போல மனசாட்சியே இல்லாம இருப்பதால் தான் பல வருஷா நீங்க என்ன கத்தினாலும் ஒருதன்னும் மதிகமாட்டேன்கரன் ?? உங்கள்கே இது அசிங்க மாக இல்லையா ???
அது என்னையா எல்லாமே இத்தியாவுக்கு எதிராவே இருக்கு உங்க வெங்காய போராட்டம் ?? கசாப் தியாகி சொல்ற அண்ணா ஹசாரே கெடினு சொல்லற … பாகிஸ்தான் அப்பாவி இந்தியா துரோகி ……. இப்படி சொல்லிகிட்டே போகலாம் … பேசாமே இந்திய விட்டு வேறு ஏன் பாகிஸ்தான் லே பொய் செட்டில் ஆகவேண்டியது தானே ??? அதுக்கெல்லாம் உங்களுக்கு தைரியம் இருக்காது …
வந்துட்டாருய்யா இன்னொரு அண்ணா அசாரே……..சுரேசு அண்ணே உங்க கணக்குபடி பார்த்தால் புராணகாலத்தில் தீயவர்களை கொடூரமாகவும் விதவிதமாகவும் கொலை செய்த ராமனுக்கோ நரசிம்மனுக்கோ இன்னும் பல அவதாரங்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுப்பது கடவுளுக்கு ஒரு நீதி மனிதனுக்கு ஒரு நீதியா?
\\ராஜீவ் அனுப்பிய இந்திய ராணுவம் பண்ண பாவத்துக்கு ..இதற்கு பழிவாங்க …ராஜீவையும் சேர்த்து பலரை துண்டு துண்டாக கொண்ட்ராச்சி …\\
சுரேஷ் நீங்களே ஒத்துக்கொண்டீர்கள் ராஜீவ் அனுப்பிய இந்திய ராணுவம் என்று , பிறகு யார் பொறுப்பேற்பது அவர்கள் செய்த பாவங்களுக்கு?
அநீதியை சட்டமாக உருவாக்கி அந்த சட்டத்தின்படி செயல்களை செய்தால் அது நீதியா?
thozlargalea naam inum poradikondu iruthal poradikithu tan irukanum , naamaku veanum oru athigaraam, so naam alum kachiya iruthal matum tan vertripada mudium , so try come…………………………….