ஹரியானா தேர்தல் முடிவு: எடுத்துரைக்கும் பாடம் என்ன?
களத்தில் பா.ஜ.க-விற்கு கடுமையான நெருக்கடிகளும் எதிர்ப்புணர்வும் இருந்தபோதிலும் தேர்தலில் பா.ஜ.க. வெற்றியடைவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்பும் இதேபோன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.
மோடியின் 100 நாள் ஆட்சி: பாசிசக் கும்பலின் “யூ-டர்ன்”
பா.ஜ.க-விற்கு எதிரான மக்களின் எதிர்ப்புணர்வும் மக்கள் போராட்டங்களும்தான் பாசிசக் கும்பலின் பின்வாங்கல்களுக்கு காரணமாக உள்ளது.
மீனவர்கள் மீதான தாக்குதல்: இந்திய – இலங்கை அரசுகளின் கார்ப்பரேட் சேவையே மூலக் காரணம்!
அமெரிக்க-சீன பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் கடல்வளங்களை கொள்ளையடிப்பதற்காகவே இலங்கை-தமிழ்நாட்டு மீனவர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக்கப்படுகின்றனர்.
பேராசிரியர் சாய்பாபா படுகொலையும் கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகள் விடுதலையும் நம்மிடம் உணர்த்துவது என்ன?
பாசிசக் கும்பலுக்கு எதிராக குரலெழுப்பும் செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் மத்தியில் அச்ச உணர்வையும், சிறுபான்மையினர் மீதான பாசிசத் தாக்குதல்களையும் இயல்புநிலையாக மாற்ற முயற்சிக்கிறது.
புதிய நான்கு தொழிலாளர் சட்டங்கள்: கார்ப்பரேட் பாசிசத் தாக்குதல்கள்
புதிய நான்கு தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களை ஆலைகளிலேயே நவீன கொத்தடிமைகளாக அடைத்து வைப்பதற்கான வழிவகைகளைச் செய்து கொடுக்கிறது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்களின் சேமிப்பை களவாடும் மோசடி
சில்லறையான சில அம்சங்களை மிகைப்படுத்திக் காட்டி இந்த ஓய்வூதியத் திட்டம் அனைத்து வகைகளும் சிறப்பாக இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது பாசிச மோடி கும்பல்.
டாடா குழுமத்தின் கோர முகம் – பகுதி 2 | மீள்பதிவு
1850-களில் இருந்து அந்நூற்றாண்டின் இறுதிவரை சீனாவிற்கு "ஓபியம்" என்ற கஞ்சா போதை மருந்து ஏற்றுமதி செய்வதில் டாடா குடும்பம் ஈடுபட்டிருந்தது; இதை ஜாம்சேத்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவின் புகழ்பாடும் ஆவணங்கள் பதிவு செய்யாமல் போய்விட்டன.
டாடா குழுமத்தின் கோர முகம் – பகுதி 1 | மீள்பதிவு
ஜார்கண்டிலும் ஒரிசாவிலும் பெரும் அளவிலான பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டதன் மூலமும், ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமும் கிழக்கிந்தியக் கம்பெனியுடனும் சந்தர்ப்பவாத - சமரசத் தொழில் கூட்டுக்கள் போட்டுக் கொண்டதன் மூலமும் டாடா குழுமத்தின் தலைமைக் கம்பெனியான டாடா எஃகு நிறுவனம் செல்வங்களைக் குவித்தது.
ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா? | மீள்பதிவு
மாட்டிக் கொள்ளாதவரை எல்லா முதலாளிகளும் யோக்கிய சிகாமணிகள்தானே!
காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிட அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகள்!
அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகளும் கடந்த காலங்களில் பொதுத்துறை சொத்துகள் கார்ப்பரேட் கும்பலுக்கு தாரைவார்க்கப்பட்டது போலவே அம்பானி-அதானி கும்பல்களுக்கே விற்கப்படும்.
அதானிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் தமிழ்நாடு, கேரள அரசுகள்
மோடி-ஷாவின் பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் இக்கட்சிகளே அதானிக்கு சேவையாற்றுவதன் மூலம், தங்கள் மாநிலங்களில் பாசிசக் கும்பலின் வளர்ச்சிக்கும், ஆட்சிக்கும் அடித்தளமிடுகிறார்கள்.
அதானி: உலகப் பணக்காரன் அல்ல; உலகப் பாட்டாளி வர்க்க எதிரி! | மீள்பதிவு
இப்படி அதானி குழுமமானது 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் தன்னுடைய கொள்ளையை விரிவுபடுத்தியது மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் தன்னுடைய கொள்ளையை விரிவுபடுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளில் அதானியின் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.
ஜம்முவில் தீவிரமடையும் பயங்கரவாதம்: காவிக் கும்பலே ஊற்றுக்கண்!
ஜம்மு-காஷ்மீரில் இராணுவத்தை குவிப்பதும்; ஒடுக்குமுறைகளை தீவிரப்படுத்துவதும்; கண்துடைப்பிற்காக தேர்தல் நடத்துவதும் பயங்கரவாதம் மேலும் வலுப்பெறுவதற்கான வாய்ப்பையே வழங்கும்.
ஹத்ராஸ் படுகொலை: போலே பாபாவும்! இந்துத்துவத்திற்கான அணித்திரட்டலும்!
எந்த பார்ப்பனியத்தால் மக்கள் துரத்தியடிக்கப்படுகின்றனரோ அதே பார்ப்பனியத்தை வேறு வடிவில் வைத்து தலித் மக்களை அணித்திரட்டி, அவர்களை இந்துத்துவத்திற்கு பலியிடும் வேலையைத்தான் சூரஜ் பால் சிங் செய்து வருகிறான்.
கஞ்சன் ஜங்கா ரயில் விபத்து: தடம்புரள்வது ரயில்கள் அல்ல, ரயில்வேதுறை!
உழைக்கும் மக்களின் உயிர் பறிப்போவது குறித்து துளியும் கவலைகொள்ளாத பாசிச மோடி அரசு கார்ப்பரேட் கும்பல்களின் கொள்ளைக்காக ரயில்வேதுறையை சீரழித்து வருவதே இத்தொடர் விபத்துகளுக்கு காரணமாக உள்ளது.






















