மூடு டாஸ்மாக்கை ! திருப்பெரும்புதூர் ஆர்ப்பாட்டம் – செய்தி, படங்கள்
எந்தக் கடையையாவது அடித்து நொறுக்கி விடுவார்களோ என பீதியடைந்த அரசு, இன்றும் போலிசுக்கு டாஸ்மாக் வாட்ச்மேன் வேலை அளித்திருந்தது. சென்னை முழுக்க அனைத்து டாஸ்மாக் சாராயக்கடை வாசலிலும் போலிசு படையை குவித்து வைத்திருந்தது.
டாஸ்மாக்கை மூடு – பிரசுரம் கொடுத்த உசிலை தோழர்களுக்கு சிறை !
நாட்டை காப்பாத்தணும்னு கிளம்புனா சட்ட்த்துல இருக்கிற எல்லா நம்பரையும் எழுதி உள்ள தள்ளு! நாட்டை களவாண்டா சொத்துக்கணக்கு நம்பரை எல்லாம் அழிச்சுப்புட்டு வெளில விடு! இனிமே இப்புடித்தானாம்.
டாஸ்மாக் போராட்டம் – திவாலாகிப் போன போலீஸ், நீதித்துறை
மூடு டாஸ்மாக்கை என்று போராடியவர்களை கைவிலங்கு போட அச்சுறுத்தி பார்த்தது அதிகார வர்க்கம். கைவிலங்கு போட வேண்டிய குற்றவாளிகள் ”சாராயம் விற்கும் ஜெயா அரசும்-போலீசும்தான்”.
அடக்குமுறைக்கு போலீசை ஏவும் அரசு ! உதவும் நீதிமன்றம் !
ஜெயா அரசு இரண்டை நம்பிதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒன்று போலீஸ், இரண்டாவது டாஸ்மாக். டாஸ்மாக்கில் அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தை விட அம்மாவுக்குக் கிடைக்கும் கமிஷன்தான் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
பென்னாகரம் டாஸ்மாக்கை முற்றுகையிட்ட பெண்கள் !
"ஏறுடி வேனில்" என்று திமிராக ஒருமையில் பேசினான் எஸ்.ஐ முருகன். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்த பெண் தோழரும் "கையை எடுய்யா? பெண்மீது கைவைக்க யார் உனக்கு கொடுத்தது" என்று ஆவேசமாக பேசினார்.
அடக்குமுறையால் தடுக்க முடியாது… மூடு டாஸ்மாக்கை!!
அ.தி.மு.க அரசின் காட்டாட்சிக்கு எதிராகவும், டாஸ்மாக்கை ஒழிக்கவும் ஓரணியில் திரண்டு போராட அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்.
60 பேர் சிறை : மூடு டாஸ்மாக்கை – வழக்கு நிதி தாரீர் !
அரசின் அடக்குமுறைகளை முறியடிக்கும் நோக்கில் எங்களோடு தோள் கொடுத்து வழக்கு நிதி தரும்படியும், தொடர்ந்து போராட்டத் தீயை அணையாது காக்கும்படியும் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம். - மக்கள் அதிகாரம்
ஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்
போலீசின் கொட்டடிக் கொலைக்கு எதிராக நடந்த முசுலீம்களின் போராட்டத்தை, இந்துக்களுக்கு எதிரானதாக, லவ்-ஜிகாத்தாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் திசை திருப்புவதற்கு பத்திரிகைகளும் சென்னை உயர்நீதி மன்றமும் துணை போயின.
பொற்காலமா இருண்ட காலமா ? நேர்காணல் வீடியோ
பொற்காலமென்று ஜெயா அடிமைகளால் போற்றப்படும் அ.தி.மு.க அரசின் யோக்கியதை என்ன? திவாலாகிப் போன அரசுக் கட்டமைப்பிலிருந்து மக்கள் அதிகாரம் எப்படி எழுந்து வரும்? தோழர் ராஜுவின் நேர்காணல் - இறுதி பாகம்!
டாஸ்மாக்கை இழுத்து மூடு – தொடரும் போராட்டங்கள்
இது முடிவல்ல, தொடக்கம் தான்! டாஸ்மாக்கை மூடும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. போராட்டங்கள் தொடரும்..
அரசு – கட்சிகள் – மக்கள் அதிகாரம் : நேர்காணல் – வீடியோ
"மக்கள் அதிகாரம்" மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவிடம் தோழர் மருதையன் நேர்காணல்
அவசியம் பாருங்கள், அதிகம் பகிருங்கள்!
மாணவர்களை விடுவிக்க மறுக்கும் அரசு !
உமாசங்கர் என்ற உளவுப்போலீசு 4-ம் தேதிமுதல் 7-ம் தேதிவரை சிறைக்கு வரவே இல்லை என்று பொய் சொன்னது அரசு.
டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் – மதுரை கருத்தரங்கம் !
இந்திய அரசியல் சட்டம் சரத்து 21-ன் படி மக்களின் வாழ்வுரிமையை அரசு காக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு பல லட்சம் குடும்பங்களைக் கொல்கிறது. இவ்வாறு, தான் உருவாக்கிய சட்டங்களைத் தானே மதிக்கவில்லை!
“மூடு டாஸ்மாக்கை” பிரச்சார இயக்க அனுபவம் – உரையாடல் வீடியோ
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் பங்குபெறும் கலந்துரையாடல்.
பாட்டிலுக்கும் சுதந்திரம் – பாருக்கும் சுதந்திரம் !
சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்.. ஃபுல்லுக்கும் சுதந்திரம் குவார்ட்டருக்கும் சுதந்திரம், போலீசுக்கும் சுதந்திரம் பூட்ஸ் காலுக்கும் சுதந்திரம், எதிர்த்து யாரும் கேட்டாக்கா பொய் வழக்கு நிரந்தரம்!