கழிப்பறை நாடாளுமன்றத்தை வரைந்த கார்ட்டூனிஸ்ட் திரிவேதி கைது!
இந்திய பாராளுமன்றத்தை வெஸ்டர்ன் டாய்லட்டின் உட்காரும் பகுதியாகவும் தேசிய சின்னமான சாரநாத் சிங்கங்களை, தந்திரம் மிக்க எச்சில் வடிக்கும் ஓநாய்களாக மாற்றியும் வரைந்த கார்டூனிஸ்ட் திரிவேதி கைது செய்யப்பட்டுள்ளார்
காவிரி: உச்சநீதிமன்றத்தின் ரத்தக் கொதிப்பு!
காங்கிரசு, பாரதிய ஜனதா கர்நாடக மாநிலத்தை மாறி மாறி ஆளுவதால் மத்திய அரசு காவிரி விசயத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாகவே செயல்படுகின்றது. இதை உரிய முறையில் எதிர்கொள்ள தமிழக அரசு, அரசியல் கட்சிகளுக்கு துப்பில்லை.
நரோதா பாட்டியா தீர்ப்பின் பின்னே…..
2002 குஜராத் இனப்படுகொலையிலேயே ஆகக் கொடியதான நரோதா பாட்டியா படுகொலையின் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை. பாபு பஜ்ரங்கிக்கு சாகும் நாள் வரை சிறை.
வாய்தா ராணிக்காக மணலில் கயிறு திரிக்கும் சோ!
ஜெயாவின் அழுகுணியாட்டத்தை நியாயப்படுத்த வேண்டியிருக்குமென்பதால் லீகலாக உப்புப்பெறாத விசயங்களை இட்டுக்கட்டி மணலில் கயிறு திரிக்கிறார் சோ
கசாப்புக்கு தூக்கு! மோடி, தாக்கரேக்கு எப்போது?
இட்லரும், ராஜபக்சேவும் நடத்தியதைப் போன்றதொரு இனப்படுகொலையை நடத்திய மோடி தேசத்தின் மதச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்கவில்லையா? என்பதை நடுநிலை இந்துக்கள்தான் சொல்ல வேண்டும்.
வாய்தா ராணிக்கு சட்டம் ஒரு செருப்பு!
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ கும்பல் வாங்கும் வாய்தாக்கள், நீதிபதி மேலே போடும் மனுக்கள், தன்மீது தொடுக்கப்படும் அவதூறுகளையெல்லாம் பார்த்து மனம் வெதும்பி தனது அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா.
சிறுமி சுருதியைக் காவு கொண்டது எது?
ஓட்டையில் தொடங்கி பேருந்திலேயே முடிக்கும் வகையில்தான் இது அணுகப்படுகிறது. பேருந்து, ஆர்.டி.ஓ. ஆபீசு, பிரேக் இன்ஸ்பெக்டர் என்று இந்தியனை ரீமிக்ஸ் செய்வதை விடுத்து உண்மையான பிரச்சினை என்ன என்பதைப் பார்ப்பது நல்லது.
நரேந்திர மோடி ஒரு மத நல்லிணக்கவாதி: சொல்கிறது சிறப்புப் புலனாய்வுக் குழு!!
முஸ்லிம்கள் குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுவதற்காக நாம் அகதி முகாம்களை நடத்து முடியாது என்று மேடைதோறும் பேசிய மோடியைத்தான் மத நல்லிணக்கவாதியாக சித்தரித்துள்ளது சிறப்புப் புலனாய்வுக் குழு
அவதார் சிங்: இந்திய அரசு ஒளித்து வைத்திருந்த பயங்கரவாதி தற்கொலை!
காஷ்மீர் மனித உரிமை வழக்குரைஞரான ஜலீல் அந்த்ராபியைக் கடத்திச் சென்று, வதைத்துக் கொன்ற மிகக் கொடிய அரசு பயங்கரவாதியாவான். அவதார் சிங் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
அரசு பயங்கரவாதத்தின் அரணாக உச்ச நீதிமன்றம்!
உளவுத்துறையின் ஏற்பாட்டின்படி இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட காஷ்மீர்-சட்டிங்புரா படுகொலையை விசாரிக்கும் பொறுப்பை இராணுவத்திடமே தள்ளிவிட்டுள்ளது, உச்ச நீதிமன்றம்.
சந்தை நிலவரம்: நீதிபதி ரேட் 10 கோடி!
எது நடந்தாலும் அது சட்டப்படி நடக்கனும்; நீதிமன்றங்கள் என்ன சொல்கிறதோ அதை எல்லோரும ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நீதித்துறையின் புனித வட்டத்திற்கு சீரியல் செட் மாட்டுவோர் கவனத்திற்கு
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம்: இன்னுமொரு அரசு பயங்கரவாத அமைப்பு!
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தின் மூலம் மாநில அரசுக்கு போட்டியாக மைய அரசு களத்தில் குதிக்கிறது, தனது ஏரியாவில் ஒரு புதிய தாதா நுழைவதை விரும்பாத பழைய தாதாக்கள் கூச்சலிடுகிறார்கள்
ஷாருக்கானுக்காக கொதித்தெழுந்த இந்தியா சையதை கைது செய்தது ஏன்?
பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் பாசிச அடக்குமுறைகளை எதிர்கொண்டபடிதான் வாழ்கின்றனர். அவர்கள் மீது கரிசனம் கொள்ளக்கூடாது என்போர்தான் ஷாருக் கானுக்கு நேர்ந்த அவமானத்தை அகற்ற துடிக்கின்றனர்.
பதனி டோலா படுகொலை தீர்ப்பு: நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம்!
தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை நிலைநாட்டுவது குறித்து மாநாடைக் கூட்டப் போவதாக அறிவித்த மைய அரசின் முகத்தில் சாணியை அடித்தாற்போன்றதொரு தீர்ப்பை பீகார் மாநில உயர் நீதிமன்றம் அளித்திருக்கிறது.
அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமா?
கைது, சிறை போன்ற அரசின் அடக்கு முறைகள் காரணமாக, அரசு போலீசு நீதிமன்றம் குறித்து மக்கள் கொண்டிருந்த மாயைகள் அகலத் தொடங்கியிருக்கின்றன. அணு உலை அகற்றப்படும் முன் இந்த மாயைகள் முற்றிலுமாக அகன்றுவிடும்











