உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி உயிருக்கு நிகரான செங்கொடி ஏந்தி திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பை இடியாய் பிளந்ததே நக்சல் பரி - மக்கள் இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பரி.
சடையன்குளம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரை எதிர்த்து நடத்தும் உரிமைக்கான போராட்டத்தையும், உயர்வுக்கான விழைவையும், அது குரூரமாக சாதிவெறியர்களால் நசுக்கப்படுவதையும் ஆவணப்படுத்தியிருக்கும் ஒரு நாவல்.
இட ஒதுக்கீட்டு குழாய்த் தண்ணீரில் மூழ்கடித்த சுஜாதா அவர்களே, உழைப்பால் உயர்ந்த உத்தமர் கிருஷ்ணமூர்த்தி அய்யரைப் பற்றி 'கணையாழி'யின் கடைசிப் பக்கத்திலாவது நாலு 'நறுக்'கெழுத்து எழுதக் கூடாதா?
போராளிகள் ரத்தத்தால் கஞ்சிபோட்டு சலவை செய்த காங்கிரஸ் பொய்கள் … இன்னும் ‘ அரசை ’ நம்ப வைத்து கழுத்தறுக்கும் பல வண்ண காந்திகள் … இத்தனைக்கும் மத்தியில் , ஈழத்திற்காக உறுதியுடன் போராடும் மாணவர்களிடம் பகத்சிங்கின் பிடிவாதம் இலக்கு தேடி நீள்கிறது ….
போலிசை வைத்து பொம்பளயைக் காப்பாற்ற போகிறார்களாம்! லேடிஸ் ஆஸ்டலுக்கு வாட்ச்மேன் சங்கராச்சாரியா? மகளிர் மட்டும் பேருந்துக்கு ஓட்டுநர் நித்யானந்தாவா?
அடையாளம் காணமுடியாத படி உடல் சிதறிய ஓராயிரம் ஈழப்பிள்ளைகளின் படுகொலைத் தடயத்தை பாருங்கள் பாலச்சந்திரன் உடலில்...
“பாவிகளா! அடப் பாவிகளா! வயலப் போட்டு இப்படி புல்டோசர வுட்டு அடிச்சா என்னத்துக்கு ஆகும். கதுரு மேலயா நடக்குறீங்க.. நவுருங்கடா எருமைங்களா...!”
“மை நேம் ஈஸ் சவுத்ரி. கப்தான் கங்காதர் சவுத்ரி” அந்த இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் வீரர்களைப் போல் விரைப்பாக ‘அட்டேன்ஷனில்’ அணிவகுத்து வந்தன. அவர் முகத்தில் ஒரு கடுமையும், குற்றம்சாட்டும் தோரணையும் இருந்தது.
ஒரு புறம் அரச பயங்கரவாதம், மறுபுறம் மதவெறி பயங்கரவாதம் இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டிருப்பதும் இத்தகைய நிலைமைதான்.
வாழ விரும்பாத அவர்களது ‘கோழைத்தனம்’ அவர்களது வாழ்விலிருந்து அல்ல, வாளாவிருக்கும் உங்களது வாழ்விலிருந்தே உருவானது அவர்களிடம் என்ற உண்மை புரியுமா உங்களுக்கு?
காடுவெட்டிகுரு முதல் குச்சு கொளுத்தி ராமதாஸ் வரை அனைத்து ஆதிக்க சாதி வெறியர்களையும் பதற வைக்கும் ஒரு நெருப்புக் கவிதை!
ராமதாசிடம் திருமா சரணடைவது ஏன்? சாதிய பிழைப்புவாதத்தைப் புனிதப்படுத்திய அடையாள அரசியல்! சாதி சமத்துவம் என்பது சாத்தியமா? சாதியைப் பாதுகாக்கும் அரசு, தீண்டாமையை ஒழிக்குமா?
கருத்த பனையின் உரித்த தோலென, அறுத்த முலையுடன் கிடந்த ஈழப்பெண்களைப் பார்த்து துடிக்காத சோனியாவும், இருளர் பெண்களை துகிலுரிந்த போலீசுக்கு ஆசி வழங்கும் ஜெயலலிதாவும் கூட பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறார்களாம்
கேட்பவர்கள் பாதிரியார்களாகவும் கேட்கப்படுவது பரிசுத்த ஆவியாகவுமிருந்தால் கேள்வி நியாயம்தான் ---- கேட்பவர்கள் அறிவாளிகள். கேட்கப்படுவதோ - பாவம் நாட்காட்டி!
இந்தக் கதையை நாலு வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னவன் கணேசனின் உடன் பிறந்த தம்பி ஆனந்தன் - என் நண்பன். கதையை எழுதி முடித்த பின்னரும், முடியாதது போலவும் ஏதோ குறைவதைப் போலவும் இருந்தது.