Sunday, April 18, 2021
முகப்பு கலை இசை காஷ்மீர் பெண்கள் பாடத்தடை : ரஹ்மான், நாகூர் ஹனிபாவை என்ன செய்வது ?

காஷ்மீர் பெண்கள் பாடத்தடை : ரஹ்மான், நாகூர் ஹனிபாவை என்ன செய்வது ?

-

Kashmir-3பெண்கள் மேடையில் பாடுவது இசுலாத்துக்கு விரோதமானது என்று கூறி காஷ்மீரில் மூன்று பள்ளிப் பெண்கள் நடத்தி வந்த “பெண்கள் இசைக்குழு” வுக்கு எதிராகப் பத்வா பிறப்பித்திருக்கிறார் காஷ்மீரின் தலைமை மதகுரு பஷீருத்தீன் அகமது.

ஸ்ரீநகரில் நடந்த ஒரு இசை விழாவில், “ப்ரகாஷ்” (காலை ஒளி) என்ற தங்களது இசைக்குழுவின் சார்பில் நிகழ்ச்சி நடத்தினார்கள் இந்தப் பெண்கள். உடனே இணையத்தில் இவர்களைப் பற்றிய கேவலமான விமரிசனங்கள் தொடங்கின.

“இசை இசுலாத்துக்கு விரோதமானது, பெண்கள் பாடுவது இசுலாத்துக்கு விரோதமானது, பெண்கள் வீட்டில் வேண்டுமானால் பாடலாம், மேடையில் பாடுவது இசுலாத்துக்கு விரோதமானது” என்று இதற்கு விதவிதமான வியாக்கியானங்கள் தரப்பட்டன.

“இந்த தேவடி…களை டில்லியில் செய்தமாதிரி செய்யணும்” என்பன போன்ற அநாகரிகமான ஏச்சுகள் வரையில் விதவிதமான நச்சு அம்புகள் இணையத்தில் இந்த சிறுமிகளுக்கு எதிராக எய்யப்பட்டன. வளர்ப்பு சரியில்லை என்று இவர்களது பெற்றோரை சிலர் வசை பாடினார்கள்.

“ஆண்களுக்கு எதிரில் இளம்பெண்கள் பர்தா அணியாமல் தோன்றினால், மனித ஆசைகளை கட்டுக்குள் வைக்க முடியுமா? நீங்கள் இதை சுதந்திரம் என்று சொல்கிறீர்களா?” என்று தொலைக்காட்சியில் கேள்வி எழுப்பினார் காஷ்மீரின் தலைமை மதகுரு.

ஆயிஷா ஆந்த்ரபியின் தலைமையிலான “துக்காதர்ன் ஏ மிலாத்” என்ற இசுலாமிய தீவிரவாத பெண்கள் அமைப்பு, இந்த மாணவிகளை சமூகப்புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தது. இத்தாக்குதல்களைக் கண்டு பீதியடைந்த அந்த மாணவிகள் உடனே தலைமறைவானார்கள்.

ஏனென்றால், இங்கே காதலை மறுத்தால் மூஞ்சியில் ஆசிட் ஊற்றும் காதலர்கள் போல, பர்தாவை மறுக்கும் பெண்கள் மீது ஆசிட் ஊற்றி புகழ்பெற்ற அமைப்புதான் ஆந்த்ரபியின் அமைப்பு.

இனிமேல் அந்தப் பெண்கள் அங்கே வாழ்வது கடினம். நோமா நசீர், ஃபரா தீபா, அனீகா கலீத் என்ற இந்த மூன்று பத்தாம் வகுப்பு மாணவிகளும் இசைக்குழுவைக் கலைத்துவிட்டதாக நேற்று இணையத்தில் அறிவித்துவிட்டார்களாம்.

முதல்வர் பரூக் அப்துல்லாவும், பிடிபி தலைவரை மகபூபா மப்தியும் இப்பெண்களின் உரிமை பறிக்கப் படுவதை ஒப்புக்கு கண்டித்திருக்கின்றனர். வீட்டில் கேபிள் டிவியில் எல்லா கேவலமான சானல்களையும் பார்த்துக் கொண்டு, இந்த பள்ளிப் பெண்களின் உரிமையைப் பறிப்பதா என்று ஒரே ஒரு பேராசிரியை மட்டும் மதவெறியர்களின் முரண்பாட்டை சுட்டிக் காட்டியிருக்கிறார். ஆனால் இப்படி ஒரு கட்டப்பஞ்சாயத்து பத்வா பிறப்பிக்கப் பட்டிருப்பதற்கு எதிராக அங்கே ஒரு கிரிமினல் வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. அறிவுத்துறையினரோ வாய்திறக்கவே அஞ்சுகிறார்கள்.

ஒரு புறம் அரச பயங்கரவாதம், மறுபுறம் மதவெறி பயங்கரவாதம் இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டிருப்பதும் இத்தகைய நிலைமைதான்.

“மலாலா படித்தாள் என்பதற்காக அவளைச் சுடவில்லை. அவள் மதச்சார்பின்மையைப் பிரச்சாரம் செய்தாள். அதனால்தான் சுட்டோம். அதுவும் கூட எங்கள் விருப்பம் அல்ல. இஸ்லாம் எங்களுக்கு விதித்திருக்கும் கடமை” என்று மலாலாவைச் சுட்ட தலிபான் அமைப்பினர் குர் ஆனிலிருந்து மேற்கோள் காட்டி விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

பாடலாமா கூடாதா, படிக்கலாமா கூடாதா, எப்படி உட்கார வேண்டும், எப்படி எழுந்திருக்கவேண்டும் என்று மனிதர்களுக்கு உத்தரவிடும் சாட்டைக்குச்சியாகவே மதத்தை சித்தரிக்கிறார்கள் இந்து, இசுலாமிய மதவாதிகள். மனுதருமம் என்பது திரிசூலம் என்றால், ஷரியத் என்பது வாள். நாம் மதிப்பளிக்க வேண்டியது மக்களின் இறைநம்பிக்கைக்குத் தானேயொழிய மதச்சட்டங்களுக்கு அல்ல.

பார்ப்பன மதத்துக்கு எதிரான சித்தர் மரபைப் போல, கடுங்கோட்பாட்டு இசுலாமுக்கு இணையான சுஃபி மரபொன்று இசுலாத்தில் இருக்கிறது. சுஃபி இசுலாம் மரபு, இசையுடன் இணைந்தது. அதுதான் உலகமுழுதும் உள்ள இசுலாமிய மக்களின் இறை நம்பிக்கையுடன் கலந்திருப்பது. முக்கியமாக காஷ்மீரில் செல்வாக்கு செலுத்தியது சுஃபி மரபு என்பதனால்தான், இத்தனை ஆண்டுகளாக இசுலாமிய தீவிரவாத இயக்கங்களின் கடுமையான முயற்சிக்குப் பின்னரும் அங்கே பர்தாவைத் திணிக்க முடியவில்லை.

இந்த மரபை ஒழிப்பதுதான் வகாபி இசுலாமிய தீவிரவாதிகளின் நோக்கம்; மலாலாவை சுட்ட தலிபான்களின் நோக்கம். தமிழகத்தின் டி.என்.டி.ஜே உள்ளிட்ட இசுலாமிய அமைப்புகளின் நோக்கம்.

காஷ்மீர் பெண்கள் ஸ்ரீநகரில் பாடிய பல பாடல்கள், சுஃபி ஞானி புல்லே ஷாவின் பாடல்கள் என்கிறார் அந்த இசைக்குழுவின் இயக்குநர் அத்நான் மாட்டூ.

“மசூதியை இடி, கோவிலை இடி, எதை வேண்டுமானாலும் இடி,

ஆனால் மனித இதயத்தை இடித்துவிடாதே,

அங்கேதான் இறைவன் குடியிருக்கிறான்”

என்று பாடியவர் பாபா புல்லே ஷா.

சுஃபி ஞானிகளின் பாடல்களுக்கும் தமிழகத்தின் சித்தர் பாடல்களுக்கும் இடையிலான ஒற்றுமை அதிசயிக்கத்தக்கது.

“நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே

சுற்றி வந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா

நட்டகல்லும் பேசுமோ, நாதன் உள் இருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”

என்று பாடிய சித்தர் மரபையும் பாபா புல்லே ஷாவின் இந்தப் பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். மத உணர்வுக்கும் மதவெறிக்கும் இடையிலான வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். இதோ, பாகிஸ்தானின் புகழ்பெற்ற இந்துஸ்தானி பாடகி அபிதா பர்வீன், பாபா புல்லே ஷாவின் பாடலைப் பாடுகிறார்.

O beloved one:

If God were to be found by bathing and washing,

then God would be found by fish and frogs.

If God were to be found by roaming in jungle,

then God would be found by cows and buffaloes.

O Mian Bulleh

God is found by hearts righteous and pure.

You have read a thousand books

but have you read your ‘self’?

You rush to mosques and temples

in indecent haste,

have you tried to enter your ‘self’?

You are engaged in

needless battle with Shaitan

have you ever fought with your ‘nafs’?

You have reached the sky

But have failed to reach

what’s in your heart!

Come to my abode, My friend

morning, noon and night!

Destroy the mosque,

destroy the temple

do as you please;

do not break the human heart

for God dwells therein!

I search for You in jungle and wilderness

I have searched far and wide.

Do not torment me thus My Love

morning, noon and night!

Come to my abode, My Love

morning, noon and night!

தங்கள் இறை நம்பிக்கைக்கு எந்த மரபை வரித்துக் கொள்வது என்பதை இசுலாமிய மக்கள் முடிவு செய்யவேண்டும். “மத உணர்வு” என்று எதை அங்கீகரிப்பது என்பதனை மதச்சார்பற்றவர்களும் விளங்கிக் கொள்ளவேண்டும்.

 1. We must condemn this ridiculous act of Mulla’s. Even though, they issued Fatwa to kill cartoon characters “Tom and Jerry” and see more funny Fatwas below,

  listverse.com/2010/02/25/top-10-bizarre-or-ridiculous-fatwas/

 2. வங்கதேசப் பாடகியான ரூனா லைலாவின் இந்த சுஃபி பாடல் உலகமுழுதும், பாக்கிஸ்தான் உட்பட, உருக்கமாகப் பாடப்படும் பாடல்.. :

  http://www.youtube.com/watch?v=j8a-sJLXMg8

  அன்றைய ஒன்றுபட்ட இந்தியாவின் சிந்து, பஞ்சாப் பகுதிகளில் இந்து-முஸ்லீம்களால் பெரிதும் மதிக்கப் பட்ட சூபி ஞானிகளான ஜுலே லால் (பாபா தாகிர்), பாபா சாபாஷ் கலந்தர் மற்றும் ஹசரத் அலி (இமாம்-கலிபா) போன்றோரின் சூபி வழி போற்றும் பாடல்.. இந்தப் பாடலை பாக்கிஸ்தானிலேயே கூட தடை செய்ய முடியாது..

 3. இசுலாமியர்கள் எப்படி பதில் சொல்வார்கள் என்று கீழே எழுதியுள்ளேன்

  1. பெண்களை பாதுகாப்பாக வைத்திருப்பதில் அக்கறை காட்டுகிறோம் . அதில் உங்களுக்கு ஏன் பொறாமை . நாளை அந்த பெண்கள் கற்பளிக்கபட்டால் மக்கள் இஸ்லாமிய சட்டம் வேண்டும் என்று வருவார்கள். அப்பொழுது புரிந்து கொள்வார்கள்

  2. உனது தங்கையை இப்படி பாடஅனுப்புவாயா ?

  இவர்கலூக் எல்லாம் எந்த காலத்திலும் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை . ஒருவளை தலிபான் ஆட்சியில் இவர்கள் அம்மா கைம்பெண்ணாக இருந்து , வேலைக்கு செல்ல முடியாமல் பசியில் தவித்தாள் மட்டுமே இவர்களின் உண்மையான உலகம் புரியும்
  இல்லை அஹமாதியாக பிறந்து தொழுகைக்கு கூட பயந்து செல்லும்போது தான் மதங்களின் உண்மை தெரியும்

  மதங்கள் மனிதனை அடிமைபடுதவே . மதத்தின் பெயரால் மக்களை எளிதில் ஆட்டிபடைக்கலாம் . நிதியானதா ,காஞ்சி மடம்,வாடிகன் போன்றவை இவற்றை நன்குனர்த்து வளம் கொழிக்கின்றன.

 4. Saudi cleric rapes, kills 5-yr-old daughter
  The preacher confessed to raping and killing his daughter but was let off with only a fine.

  Yahoo! India News – Mon 4 Feb, 2013
  Share
  LATEST NEWS »

  RIYADH: In a shocking incident in Saudi Arabia, a preacher who confessed to raping and beating his 5-year-old daughter to death was let off without any jail term and was only fined 200,000 riyals for his heinous crime.

  The fine is the ‘blood money’ that is to be paid to compensate the victim’s relatives. Islamic law specifies that the ‘blood money’ can be paid in lieu of the death penalty.

  Since the victim was a girl, the fine for the preacher, one Fayhan al-Ghamdi, was reduced to half the usual amount.

  There is no clarity on this yet, but reports suggest that the money may have been offered to the girl’s mother or some other relatives.

  Ghamdi confessed to the crime and said he used a cane and cables to beat his daughter up. The justification the man gave for this was that he doubted that his 5-year-old daughter, Lama Ghamdi, was a virgin. He also forced her into undergoing a medical inspection.

  The judgment has sparked off a major public outrage in Saudi Arabia, especially on the Internet where online campaigns demanding harsher punishment for the monstrous crime.

  Reports said that as far back as in December 2011, the little child was hospitalised with a crushed skull, broken ribs and limbs, heavy bruising and burn marks. The hospital, reports stated, also said that the child had been raped.

  According to an agency report, the hospital said that the child’s ‘rectum had been torn open and the abuser had attempted to burn it closed’.

  The child died in October 2012 because of her grave injuries and in November the father was arrested.
  The judge ruled that the fine and the time that the man had spent in prison after his arrest were enough punishment.

  Fayhan al-Ghamdi is a regular guest on television programmes in Saudi Arabia.- what a cruel
  EXPLORE RELATED CONTENT

  • No comments from advocates of Sharia Law yet. Wonder what they would say about this case. Possibly they would say all the sins have been wiped out with that ‘blood money’ paid. For them females are just another commodity to keep in their ‘lockers’ (or covers) and/or to trade and/or to use/abuse as they wish.

   After all, these are the people who said ‘beheading of murderer Rizana is justifiable’ as if they were witenesses of that death or people who ensured all the lagal facilities to Rizana.

 5. 9:32 يُرِيدُونَ أَن يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
  9:32. தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
  9:33 هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَىٰ وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ
  9:33. அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)

   • Dear Anil
    how he came through magic or through coastal. If coastal means then what our coastal army done. you just answer for this. Islam always teach right path only if you don’t know about Islam then you are not capable to comment about Islam

   • If you want to know about the Islam,pls..follow straight way of the Islam.don’t see like a kashab,nithyanandha,ect…(straight way-quran+hadees.)

    if you see without any Religion effect,you will get straight way..ENSHA ALLAH.

    • I have read both. And I have found your religion is a bag of myths and hatred.

     Hadees says:
     1. Muhammad went to heaven in flying horse
     2. Drinking camel urine for illness
     3. One wing of house-fly has disease and other has cure
     4. Child will resemble the parent who climaxed during intercourse
     5. Adam was 60 cubit tall

     Koran says:
     1. World is created in 6 days
     2. Shooting stars are thrown by allah on devils
     3. Sun sets in a pond
     4. 72 virgins for muslims

     Shariah says:
     1. Women are half witness
     2. Non-muslims are half witness
     3. SMS for divorce
     4. Women forced to wear purdha

     first you follow a straight path.

      • Really I have read koran. Why don’t you believe me? Only if I say islam is good, I have understod islam? Don’t be silly. Even though I am a Christian, I don’t believe things like Noah’s flood, six day creation, exodus of Moses etc. And I don’t believe that anti-christ mumbo jumbo too. All these things are just said in order to control people of past. Now we have to use our wisdom and thinking to live. Not the teachings of an arab slave owner who lived 1400 years ago!

 6. …சுவர்க்கம் செல்லும் ஆணுக்கு எழுபத்திரண்டு நித்திய(அதாவது என்றுமே அவர்கள் கன்னி கழியாமல் இருப்பார்கள்) கன்னிகள் வழங்குவோம்னு அல்லா சொன்னாரே..அப்போ உள்ளே நுழையும் போதே ஆண்களுக்கு “அதை” கட் பண்ணிதான் அனுப்புவாரோ?

 7. Dear Vinavu
  What is your aim?
  To increase the fight between the religion by introducing your communist activities or peace India. Better avoid the article related to religion that will be good for this democratic India.

 8. “மனித ஆசைகளை கட்டுக்குள் வைக்க முடியுமா” அப்படியென்றால் பெண்கள் மனித இனம் இல்லையா? அல்லது முழு மனித இனமாக இன்னும் பரிணாம வளர்ச்சி அடையவில்லையா?

  பெண்கள் என்ன உணர்ச்சியற்ற பாவப்பட்ட ஜந்துக்களா, ஏன் அவர்களுக்கும் ஆண்களை பார்த்தால் உணர்ச்சிகள் வரும் என்று இந்த புனிதர்களுக்கு தெரியாதா?

  தெரியும் மிக நன்றாகவே தெரியும்! இருந்தும் இவர்கள் எல்லாம் உளுத்துப் போன மதத்தை துணைக்கு அழைத்து பெண்களை அவமானப்படுத்துகிறார்கள்.

  இதற்கு எல்லாம் காரணம் அறியாமை ஒரு பக்கம், பயம் மறுபக்கம், பயம் என்றால் சாதரண பயம் அல்ல, ஆண்களுக்கு நினைவு தெரிந்த காலம் தொடக்கம் இன்று வரை தொடரும் பயம் அது “பாலியல்ரீதியிலான பயம்”.

  இதைபற்றி மேலோட்டமாக பார்ப்போம்.

  ஆண் என்ற இனமே பரிணாம வளர்ச்சியால், இனத்தின் பாதுகாப்புக்காக உருமாறிய பெண் இனம். இதை தான் “பெண் ஆதி, ஆண் அதில் பாதி” என்கிறார்கள். மதங்கள் இந்த உண்மையை மறைத்து களி மண்,விலா எலும்பு என கதை அளக்கின்றது.( உலகில் இது வரை கண்டுப்பிடிக்கப்பட்டதில் மிக பழமையான பாதச் சுவடு கென்ய கடற்கைரயில் கண்டெடுக்கப்பட்டது, அது ஒரு பெண்னுக்குரியது.)

  மனித வாழ்க்கையே பாலியலை மையமாக வைத்தே இயங்குகிறது. டெஸ்டோஸ்டிரோன் உபயத்தில் உருவத்தில் பெரியவனான ஆணால், ஈஸ்டிரோஜனால் உருவத்தில் சிறிய பெண்னை கலவியில் முழுமையாக திருப்தி படுத்த முடிவதில்லை, திருப்திபடுத்தவும் முடியாது. இதற்கு ஆண் இனத்தின் உடலமைப்பு, ஒற்றை முறை உச்சகட்டமும், பெண் இனத்தின் உடலமைப்பு கலவியில் பல முறை உச்சகட்டமும் அடையும் வகையில் உள்ளதே காரணம்.

  இந்த தோல்வியை ஆண்களால் என்றுமே ஏற்றுக் கொள்ள முடிவதில்லை, இது தான் ஆரம்பபுள்ளி, அவள் என்னைவிட உயர்ந்த இயற்கையின் படைப்பா?, ஆண்களை மதிக்க மாட்டாளோ? தன்னை விட்டு போய்விடுவாளோ ? என இன்னும் பல கேள்விகளை அவன் மனதில் எழுப்புகிறது.

  இந்த விடை தெரியாத கேள்விகள் அவனை அல்லும் பகலும் வாட்டி எடுக்கிறது. உருவத்தில் பெரியவனான, பலசாலியான நான் தோற்று போவதா ? இல்லை! பயம் கோபமாக மாறுகிறது, கோபமாக வக்கிரமாக மாறுகிறது. பெண் இனத்தையே தனது மூர்க்கதனத்தால் வக்கிரமாக அடக்க முயல்கிறான், தற்காலிக வெற்றியும் பெற்றுள்ளான், வாய்ப்புகளுக்காக ஓநாய் போல் காத்து நிற்கின்றான். நிற்க

  உலகில் தோன்றிய மதங்கள் அனைத்தும் ஆண்களால் இயற்றப்பட்டவையே, மதங்களின் முக்கிய நோக்கம் மக்கள் எழுச்சியை நசுக்குவதும், மூடநம்பிக்கைகளுக்கு புத்துயிர் கொடுப்பதும்,ஒரு சிலரின் அல்லது ஒருவரின் சமூக, பொருளாதர தேவைகளுக்காக முழு மனித சமூகத்தையும் வழிநடத்துவதுமே ஆகும்.

  ஒரு சமூகத்தை கட்டுப்படுத்த முதலில் பெண்களை கட்டுப்படுத்த வேண்டும், அவர்களே மனித சமூதாயத்தை இயக்குகிறார்கள், எனவே அவர்களை அடக்குவதற்கு இல்லாத கடவுளின் பெயரால் பெண்களுக்கு எதிராக வக்கிரமான பல விசேட சரத்துகளை மதத்தில் சேர்த்தார்கள். பெண்கள் ஆண்களின் வரலாற்று எதிரி என்பதால் வாய்ப்புக்காக காத்திருந்த சாதாரண ஆண்களும் இவற்றை எதிர்க்கவில்லை, மாறாக ஆதரித்து, மதங்களை பின்பற்றி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை காலங் காலமாகத் தொடர்ந்தார்கள்.

  பல நூற்றாண்டுகளாக பெண்கள் தங்கள் தனி திறமைகளை மறந்து, ஆண்களின் வன்முறைக்கு பயந்து அடிமைகளாக வீடுகளிளே தஞ்சம் அடைந்துவிட்டார்கள்.ஆண்கள், பெண்கள் அடங்ககிவிட்டதாக கருதி அகமகிழ்ந்து, மதங்களின் பொற்காலம் என போற்றினார்கள்.

  காலங்கள் மாறுகிறது அறிவியல்,சமூக புரிதலின் காரணமாக பல மதங்கள் குப்பையில் எறியப்பட்டது, பல ஒப்புக்கு ஒட்டிக் கொண்டிருக்கிறது, பெரும்பாலன ஆண்களின் பார்வையும் மாறி பொண்களின் சமூக, பொருளாதார பங்களிப்பை ஏற்று கொள்கிறார்கள்,சமூகத்தில் பெண்களின் நடமாட்டமும் அதிகரிக்கிறது. இது சில ஆண்களை மறுபடியும் அவனின் வரலாற்று பயத்தில் ஆழ்த்துகிறது. மிச்ச மீதியிருக்கும் மதங்களின் துணை கொண்டு பெண்களை அடக்க எத்தனிக்கிறான். இதன் வெளிப்பாடுகளே சமீப காலமாக மதத்தின் பெயராலும், தனிமனிதனாலும், சமூகத்தாலும் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள்.

  • ஆண் என்ற இனமே பரிணாம வளர்ச்சியால், இனத்தின் பாதுகாப்புக்காக உருமாறிய பெண் இனம். இதை தான் “பெண் ஆதி, ஆண் அதில் பாதி” என்கிறார்கள் – The logic is correct. But is not this a evolution. Is not this survival of the fittest? Organisms which adapted themselves are alive and thrive. Rest have become extinct. Survival is primordial instinct and requirement of every living thing.
   உலகில் தோன்றிய மதங்கள் அனைத்தும் ஆண்களால் இயற்றப்பட்டவையே – True. Oldest religions had women as gods. Traces of this can be found in Hinduism where female goddesses are worshiped. The reason being fear.
   மதங்களின் முக்கிய நோக்கம் மக்கள் எழுச்சியை நசுக்குவதும், மூடநம்பிக்கைகளுக்கு புத்துயிர் கொடுப்பதும்,ஒரு சிலரின் அல்லது ஒருவரின் சமூக, பொருளாதர தேவைகளுக்காக முழு மனித சமூகத்தையும் வழிநடத்துவதுமே ஆகும் – I have to disagree. Because religion is only a set of customs continually followed over some generations (like hunting done by men and gathering done by women during ice age) which resulted in a social pattern acknowledged by all in a community, mainly in order to survive, which later on upon added with rituals becomes a religion. For religion to begin survival is the base point. Religion also evolves over time from goddess worshiping to monotheism there are religions of various hues and colours. Certainly the religions were used in later days for above said goals. But certainly these were not the cause.
   What we have to understand is whoever adapts to changes will survive. Slow evolution of mankind is happening in social levels and we have to adapt to these pressures. If we want to live in olden days, we will be extinct.

   • (இதில் ஆண், பெண் என்பது பரிணாம வளர்ச்சி அடைந்த மனித ஆண்,பெண்னை குறிக்கவில்லை.) உலகில் தோன்றிய அனைத்து உயிர்களும் ஒரே ஒரு மூதாதையரிடம் இருந்து தோன்றியவையே. ஆரம்பகால உயிரினங்கள் தன்னை தானே பாலினமற்ற இனபெருக்கத்தின் மூலம் இரண்டாக வகுத்து கொண்டவையே. இவ்வாறு உருவாகும் உயிர் புவியல் நிலைக்கேற்ப மாற்றமடைந்து புது வகை உயிரினங்களாக மாறி ஒரு உயிரினம் மற்றைய உயிரினத்தை தாக்குகிறது. ஒரு உயிரினத்தின் முழு வாரிசுகளும் ஒரே தாயின் பிரதி எனபதால், இலகுவாக மற்றைய உயிரினத்தால் ஊடுறுவிஅழிக்க முடிந்தது. இதை தடுக்க ஜீனோமை இரண்டாக பிரித்து தனி தனி உடல்களில் வைக்கப்பட்டது. இவ்வாறு உருவானதே பாலியல் இனப்பெருக்கமும் ஆண், பெண் உடல் அமைப்புகளும்.

    (Note: உயிரினம், உடல் என்பது எல்லாம் Cell நிலை உயிர்களையே குறிக்கும்.)

 9. என்ன ஓய்! போற போக்க பாத்தா “கண்ணை மறைக்கும் குல்லா புழுதி” அப்பிடின்னு தொடர் எழுதுவீர் போலிருக்கு.

 10. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
  36:1 يس
  36:1. யாஸீன்.
  36:2 وَالْقُرْآنِ الْحَكِيمِ
  36:2. ஞானம் நிரம்பிய இக் குரான் மீது சத்தியமாக!
  36:3 إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ
  36:3. நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.
  36:4 عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ
  36:4. நேரான பாதை மீது (இருக்கின்றீர்).
  36:5 تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ
  36:5. (இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
  36:6 لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ
  36:6. எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.
  36:7 لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَىٰ أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ
  36:7. இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நிச்சயமாக உண்மையாகிவிட்டது; ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
  36:8 إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ
  36:8. நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர்.
  36:9 وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ
  36:9. இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் – ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.
  36:10 وَسَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ
  36:10. இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
  36:11 إِنَّمَا تُنذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِيَ الرَّحْمَٰنَ بِالْغَيْبِ ۖ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَأَجْرٍ كَرِيمٍ
  36:11. நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.
  36:12 إِنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَىٰ وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ ۚ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُّبِينٍ
  36:12. நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.

  • இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் – ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.

   so allah is responsible for our closed heart. then the same lord labakku will punish us for this! 😀

 11. Fathwa for dancing and singing without hijab .please try to write truth

  அறிவாளி ட்ரூத்,
  புர்கா போட்டுக்கொண்டு ஆடிப்பாடினால் பத்துவா கொடுக்கமாட்டானா அந்த முல்லா?

 12. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
  6:60 وَهُوَ الَّذِي يَتَوَفَّاكُم بِاللَّيْلِ وَيَعْلَمُ مَا جَرَحْتُم بِالنَّهَارِ ثُمَّ يَبْعَثُكُمْ فِيهِ لِيُقْضَىٰ أَجَلٌ مُّسَمًّى ۖ ثُمَّ إِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
  6:60. அவன் தான் இரவில் உங்களை மரிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

  • Udeen, ungalukku kuran unmainu nambikkai irukuna atha ungaloda vechukinga. Vinavu-la vanthu unga dhaawa-va open pannathinga! orey veecham…

   Why you don’t talk about permission to marry daughter-in-law by adopted son, “right hand possesed” sex slaves etc?

 13. ithayum padinga,
  adimai viyabari. olukka seelargal.

  6603. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
  நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக்கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது) புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்துகொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்களின் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்’ என்று பதிலளித்தார்கள். 13

  kurangu vibacharam seithathu…
  3849. அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்.
  அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.

  kiraganatthai paarthu ulagam aligirathu endru bayanthu, alari pudaitthu kondu pallikku sendravar. nabigalarin kudumba pirachanai ellavatrayum theerthu vaitha allah, “kiraganam oru satharana visayam, varudatthirkku 2 – 5 thadavai nadakkum endru en sollavillai ?

  1059. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
  சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவுச் செய்வது, ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அதுவரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) ‘இந்த அத்தாட்சிகள் எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தன்னுடைய அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும் பிரார்த்திக்கவும் பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்’ என்று கூறினார்கள்.

 14. First accept the false statement given by islam or mohammed 1400 years before ….. if u want to know about kuran .. u must read darwins theory – its show how life emerged in this world / then according to ladies rights islam is a relegion does not give a basic rights / kindly say how many female scientist islath had given to the world … muthal . madaiya . . sunami vanthapa varuda makala kapathuna …. sivan / alla / jesus

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க