Monday, April 12, 2021
முகப்பு கலை கவிதை ...ஆதலினால் காதல் செய்!

…ஆதலினால் காதல் செய்!

-

காதல் கவிதைதோழி!
*திவ்யாவைப் போல்
தெளிவாக காதலி.
காதல்தான் விருப்பமெனில்
தாழ்த்தப்பட்டோரை
தயங்காமல் காதலி!
வர்க்கம் பார்த்துதான்
வருகிறது காதலெனினும்,
வர்ணம் பொடிபட
எப்போதாவது துடிக்கும் இதயத்தை
நழுவாமல் ஆதரி!

சேரிக்கு
வாழ்க்கைப்பட்டால்தான் தெரியும்
உன் சொந்த சாதி அசிங்கம்.
சாதிக்கு
எதிராய் போனால்தான் புரியும்
தாய், தகப்பன் பாசம்
கருப்பையை அடக்கி நாறும்
சாதியை விட்டொழி!
சைவப்பிள்ளையும், புதிர வண்ணாரும்
இணையேற்றால்
ஒன்றும், கீரிப்பிள்ளை பிறப்பதில்லை,
ஒழுங்கான மனிதமுகம் மலருமங்கே!

வன்னியப்பெண்ணும், பறையரும்
வாழ்க்கைத் துணையானால்
காடுவெட்டி குருவுக்கு வேண்டுமானால்
மூலம் தள்ளிப் போகலாம்,
ராமதாசு வேண்டுமானால்
நாக்கு வெந்து காயலாம்.
நாடு ஒன்றும் மூழ்கிடாது,
சாதி ஒழியும்படி சமத்துவமாய் காதலி!

கக்கத்தில் பையை வைத்து
பக்கத்து ஊரையெல்லாம்
கந்துக்கு தரிசாக்கி…
அந்நிய செலாவணிக்காக
நொய்யலையும், பவானியையும்
சாயப்பட்டைறையில் கருக்கி…
காசுக்காரன் அழித்திட்ட
‘கவுண்டர் வாழ்க்கை’
நீ… அருந்ததியரைக் காதலித்தால்
அழியுமென்றால்!
அழியட்டும் சாதிவெறி!
பெண்ணே! சமூகம் அழகாக
சக்கிலியரைக் காதலி!

அந்நிய மூலதனத்தோடு
அனைத்து சாதியும் கலப்பு,
அதில் சில்லரை பொறுக்கிக் கொண்டே
சிலருக்கு சாதியோட கொழுப்பு.

பன்னாட்டுக் கம்பெனி
பனிரெண்டு மணிநேரம்
கையை பிடித்து இழுக்கையில்…
அமெரிக்க ‘டேட்டிங்’
ஆளைச் சுற்றி வளைக்கையில்..
அரிவாள் தூக்காத சாதி,
நீ சாதி மாறி காதலித்தால்
ஆர்ப்பரிக்குமென்றால்,
தூக்கிய அரிவாள் துருபிடிக்க
துணை கொள் தோழி!
தாழ்த்தப்பட்டோரையே!

– துரை.சண்முகம்.

* (திவ்யா ; தர்மபுரி நத்தம் காலனியில் தாழ்த்தப்பட்ட இளைஞரை காதலித்து மணமுடித்த வன்னியப் பெண்)

______________________________________________________________________________________________________________

புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013
______________________________________________________________________________________________________________

 1. When a love between an adult male and female starts only from their mind and not by tutorials from your website clearly proves that what Mr.Ramadass of PMK and his party is very correct about about “love drama” now started by anti-social elements roaming with jeans and T shirts eyeing on innocent girls.

 2. சேரிக்கு
  வாழ்க்கைப்பட்டால்தான் தெரியும்
  உன் சொந்த சாதி அசிங்கம்.

  How come a girl from rich family (I dont know about dalit caste) will have life in hut? R u mad or what?

  சமூகம் அழகாக
  சக்கிலியரைக் காதலி!

  What about your sakiliar girls? Which caste guy they should choose?

  சைவப்பிள்ளையும், புதிர வண்ணாரும்
  இணையேற்றால்
  ஒன்றும், கீரிப்பிள்ளை பிறப்பதில்லை,
  ஒழுங்கான மனிதமுகம் மலருமங்கே!

  Even a dog has red color blood. That does not meant that they are equal to human.

  Vinvau,

  How many cases you find that a brahmin girl married dalit girl? vanniyar girl married sakiliar guy? devar girl married arundhadiyar guy?. One in lakh will happen like this.Even if happened, bride or groom will be killed by upper caste community people.Why cant you ask your people to study well and get good position and marry a dalit girl.Is it that dalit girls dont have any reproductive organs? or dalit girls dont look good? or dalit girls smell bad?. Each caste is having 1000 year old legacy.You guys come yesterday and protesting against castes. You cant defeat anything. World is changing. But people mind and their pride about their caste wont change.

 3. சாதியம், சாதியம் என்று கூவிக்கொண்டு இங்கே சொல்லவருகின்ற சேதி தெளிவாகத் தெரிகின்றது. பெண்கள் என்றால் தங்களிலும் பார்க்க கீழ்ப்பட்ட சாதியில் உள்ள பெண்ணைக் காதலிக்க வேண்டுமாம். அப்படியே ஆண்களென்றால் தங்களிலும் பார்க்க மேற்பட்ட சாதியில் உள்ள பெண்ணைக் காதலிக்க வேண்டுமாம். ஆக மொத்தத்தில் கீழ் சாதி ஆணும் மேல் சாதி பெண்ணுக்கும் வரும் காதலைத்தான் இங்கே தூண்டுகிறார்கள். மேல் சாதி ஆணும் கீழ் சாதி பெண்ணுக்கும் வரும் காதலிக்க வேண்டுமென்று மறந்தும்கூடக் கூறவில்லை. ஆனாலும் இவர்கள் சமத்துவத்திற்காகப் போராடுபவர்களாம். இதையெல்லாம் பார்க்கும் போது இராமதாஸ் சொல்வது நியாயமோ என்று தோன்றுகின்றது.

 4. இனியவன் அவர்களே!

  தங்களின் மகா கண்டுபிடிப்பு புல்லரிக்கவைக்கவைக்கிறது சொரிய சொரிய சுகம் கூடுகிறது.

  ஆணுக்கும் நாய்க்கும் ,பெண்ணுக்கும் பூனைக்குமா காதல் வேண்டும் என்று கவிதை சொல்கிறது?

  ஆணும் பெண்ணும் தானே காதலிக்கமுடியும்?

  நேரடியாக சொல்லுங்க நான் குச்சி கொலுத்தி ஆள்ன்னு.

  • உங்களுக்குத் தமிழ் புரிவதில்லையா? அல்லது?
   இங்கே பொதுவாக ஆணையும் பெண்ணையும் காதலிக்கச் சொல்லவில்லை கவிதை. மாறாக, கீழ்ச் சாதி ஆணும் மேல் சாதி பெண்ணுமே காதலிக்க வேண்டும் என்றே திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளது.
   ஆனால் மேல் சாதி ஆணும் கீழ் சாதி பெண்ணும் காதலிக்க வேண்டுமென்று இங்கே மறந்தும்கூடக் கூறப்படவில்லை. ஏன் கவிஞர் கூறும் கீழ் சாதிப் பெண்ணிட்கெல்லாம் காதல் வராதா? அல்லது மேல் சாதி ஆண்களிற்கு கீழ் சாதி பெண்களிடம் காதலே வராது/வரக்கூடாது என்று கவிஞர் சொல்கிறாரா (ஏதாவது காரணம்?)?
   ஆக கலப்புத்திருமணங்கள் சாதி ஒழிப்பிற்கு உதவும் என்பதல்ல இக்கவிதையின் நோக்கம்.
   பி.கு.: மனிதனை மேல் சாதி கீழ் சாதி என்று பிரித்து எழுத நேர்ந்ததற்கு கவலைப்படுகிறேன்.

 5. only confused girls fall for idiots,and end up suffering for a lifetime.

  |Most girls who make such choices have family problems,depression issues etc,otherwise if the father of the girl is a great man,she would never go for a random idiot.

 6. முதல்ல படிச்சு நல்லா சம்பாரிச்சு கஸ்டப்பட்டு படிக்க வச்ச அப்பாம்மாவ காப்பாத்த சொல்லு..

 7. தமிழகத்தில் பதிவு திருமண எண்ணிக்கையில் அதிக அளவு பிராமின் முதலியார் மற்றும் நாயுடு சாதிப்பெண்கள் தான் தலித்களுடன் காதல் திருமணம் செய்துள்ளனர்,கௌண்டர் தேவர் மற்றும் வன்னியரில் மிக மிக குறைவான சதமே நிகழ்ந்துள்ளது.இந்த காதலில் தான் அதிக அளவு வன்முறைகள் வெடிக்கின்றன.

 8. சாதி வெறிக்கு சவுக்கடி

  நன்றி வினவு!

  இவன் :-
  வன்னிய பெண்ணை காதலிக்கும் தேவன்..
  பறையனை காதலிக்கும் ராஜேஸ்வரி

 9. காதலிப்பது அவரவர் உரிமை சுதந்திரம்..இதில் யாரும் யாரையும் இப்படி செய், அப்படி செய் என்று சொல்லவதற்கு இடமில்லை…மேலும் காதல் திருமணங்களால் சாதி ஒளியும் என்று கண்மூடி தானமாக நம்புவது சற்றே இடிகிறது..இயல்பாக நடக்கவேண்டிய காதலை இப்படித்தான் நடக்க வேண்டும் என்று வலியுறித்து சொல்வது,வேடிக்கையாக இருக்கிறது…

  நீங்கள் இப்படி சொல்வது, தலித் இளைஞர்களை இப்படி காதலி..அதுதான் நீ இத்தனை நாட்களாக பட்ட ஆதிக்க வெறி கஷ்டங்களுக்கு பரிகாரம், என்று சொல்வது போல இருக்கிறது..இதற்கும் குச்சி கொளிதிக்கும் என்ன வேறுபாடு…

 10. அப்பனே ! …….. முருகா!………ஞானபண்டிதா! நான் சொல்வதை கேள் !
  நாடு ரொம்ப அமைதியாக இருக்கிறது. நீ பழனிக்கு போகவேண்டாம். அது வேறு மாவட்டம். அங்கே உனக்கு தடை போட்டிருக்கிறார்களாம்….ஒரு பழத்தை பறிபதற்காக நீ மாவட்டம் மாவட்டமாக அலைய vendumaa? தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் அரசாண்ட இம்மண்ணில் நீ ஒரு பழத்துக்காக நாட்டை எரிக்கலாமா? மணிகண்டனை (ஐயப்பனை) கூட வைத்து கொண்டு பழத்துக்காக பறையர்களின் குடிசைகளை erikkalaama? nil..odaathe! மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும் செல்ல mudiyaathu. அங்கும் உனக்கு தடையாம்.!

 11. பழங்கால தமிழ் சமுகத்தில் காதல் என்பது இரு மனம் இணையும் ஒரு அற்புதமான உறவு மனித சமுகம் பண்பாடு என்ற கட்டு பாட்டுக்குள் எப்போது வந்ததோ அப்போதே காதல் காமம் என்ற அற்ப உணர்வாக மாறி விட்டது இதில் பணம் சாதி மதம் எல்லாம் மனிதன் உருவாக்கிய அமைப்பு
  தமிழையும் பழங்கால தமிழ் சமுகத்தின் வாழ்வையும் அறியாத சில அறிவற்ற மூடர்களின் பேச்சால் நம்மை நாம் இழந்து வருகிறோம்

 12. முன்பெல்லாம் திருமணஙகள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்வார்கள்! தற்போது ரொக்கத்தில் தான்நிச்சயிக்கப்படுகிறது என்பது வெளிச்சமாகி விட்டது! முன்னேறிய? சாதிகள் வரதசசனையிலும் முன்னேறி வருகின்றன! காதல் திருமணஙகளால் மட்டுமே இந்தநிலை மாறும்! சமூக கட்டுப்பாடுகள் மிகுந்த கிராமச்சூழ்னிலை மறைந்து, சமத்துவ புரஙகள் ஏற்படவேண்டும்!

 13. RSS, Tell the answers to the following questions……………. dalit girls have reproductive organs but tell me do non-dalit girls have two or more reproductive organs? can you find any one difference between dalit and non-dalit girls in both physical and mental sense?all are equal in nature

 14. சாதிக்கு
  எதிராய் போனால்தான் புரியும்
  தாய், தகப்பன் பாசம்
  கருப்பையை அடக்கி நாறும்
  சாதியை விட்டொழி!

  அருமையான சொற்கள்!!!! சொற்களில் உண்மையுள்ளதால் கவிதை உயர்வாக உள்ளது. உண்மையாகவே! பொருள் பொதிந்த தரமான கவிதை…..கவிக்கும், கவிஞ்கருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ……

 15. saathi kalappu thirumanam endra peyaril kurippitaa samugathin kalaacharam panbattai alikkum thirumanam thavaru….. kalappu thirumanathaal saathi olindhu vidum enbadhu muttal thanamaana ennam… thandhaiyin saathiyae pirandha kulandhaikkum idappadum enbadhu thaeriyaamal pesadheergal pagutharivu purseeeeeees galae

 16. வினவு மாமா வேலை பாக்கலாம் ,துரை க்கு அதில் சதம் என்னவோ
  இன்று நேற்று வந்ததல்ல எங்கள் பராம்பரியம் ,அதை குழைக்க
  யார_____ நீ,,,ஒன்னிரண்டு காலிகள் இல்லாத சாதி எது??
  கந்தையும் ,சாயாபட்டறையும் காரணம் காட்டி கவுண்டனை
  இழிவி படுத்தினால் தெரு _______ விட கேவலம் நீ!!
  எண்கள் சமுதாயம் ,எங்களுக்கு இல்லாத அக்கறை உனக்கேன்??
  ஆடு நனையுது என்று வினவுடன் சேர்ந்து துரை சண்முகம் அழுகின்றா______!!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க