கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது மேலாதிக்கப் போர் தொடுத்த அமெரிக்க – இஸ்ரேல் போர்வெறி ஓநாய்கள், ஈரானின் அப்போதைய உச்சத்தலைவர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்து ஆட்சி மாற்றத்திற்கு அறைகூவல் விடுத்தன; இனி ஈரான், அமெரிக்கா வசம் எனக் கொக்கரித்தன.
ஆனால், ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட ஈரான் மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடினர். ஈரான் மக்களின் துணையுடன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட ஈரான், அமெரிக்கா – இஸ்ரேலை போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பணிய வைத்துள்ளது.
இவ்வெற்றியைத் தொடர்ந்து, 126 நாட்களுக்குப் பிறகு அயத்துல்லா கமேனியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. ஜூலை 4 முதல் ஆறு நாட்களுக்கு ஈரானில் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கான ஈரான் மக்கள் வீதிகளில் திரண்டு அஞ்சலி செலுத்தி, அமெரிக்காவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பித் தங்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மறுபுறம், மோடி அரசோ கமேனியின் இறுதிச் சடங்கிற்கு குடியரசுத் தலைவர், வெளியுறவுத்துறை அமைச்சர் போன்றோரை அனுப்பாமல், பீகார் ஆளுநர் மற்றும் வெளியுறவுத்துறை இணையமைச்சரை அனுப்பி தனது அமெரிக்க அடிமைத்தனத்தை வெளிப்படுத்துகிறது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,Telegram,Instagram,Threads











