Saturday, May 3, 2025
அடுத்த உலகத்திலுள்ளவர்கள், இந்த உலகத்தில் உள்ளவர்களைப்போல் அவ்வளவு நல்லவர்களாயிருக்க முடியாது. அது மட்டும் நிச்சயம்.
என்னை மாதிரி மண்ணுப் பிறவியாக இருந்தால்…! நான் சிறிது நேரத்தில் எவனாவது ஒரு நீதிபதி முன்னால்தான் இழுத்துப் செல்லப்படுவேன் என்று நினைத்தேன்...
அந்த கோயில்களின் வாசல்களிலே பிச்சைக்காரர்கள் நடுநடுங்கிக்கொண்டே, தங்களுடைய கைகளிலே வந்து விழும் பிச்சைக்காசுக்காகப் பயனின்றிக் காத்துக்கிடந்தார்கள்.
சாஷா முகத்தைச் சுழித்தாள். எதுவும் பேசவில்லை. எனினும் அவளது கை விரல்கள் மட்டும் முறுக்கிப் பிசைந்து கொண்டன... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் பாகம் 36.
காற்று குளிர்ந்து வீசியது. இருந்தாலும், அவன் கோட்டுக்கூடப் போடாமல், சட்டையைக்கூடப் பொத்தானிட்டு மூடாமல், திறந்த மார்போடு நின்றான்...
அந்தச் சித்திரவதையில் ஆனந்தம் காண்பது அவர்களது சொந்த சுகானந்தத்துக்காக! அதன் மூலம் அவர்கள் இந்த உலகத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவதற்கு...
கருணையுள்ள கடவுளே எங்களுக்குக் கல்லைத் தின்று வாழவும், கனவான்களுக்காக விறகு பிளக்கவும் செங்கல் சுமக்கவும் கற்றுக் கொடு! என்றுதான் பிரார்த்திக்கிறேன்...
நீங்கள் உங்களது இரும்பாலான கோர நகங்களால் மக்களது மார்பகங்களை உழுது பிளந்தீர்கள், எனவே எங்களிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதீர்கள்! - மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் - பகுதி 34
''நீங்கள் விரும்பினால், என்னைப் போலீசாரிடம் பிடித்துக் கொடுக்கலாம். ஆனால் நீங்கள் அந்த மாதிரி செய்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை" - மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 33-ம் பாகம்.
முதலில் தாய் அந்தச் சங்கீதத்தால் கொஞ்சங்கூட நெகிழவில்லை. அந்தச் சங்கீதப் பிரவாகம் அவளுக்கு வெறும் குழம்பிப்போன சப்த பேதங்களாகவே தோன்றியது. - மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 32-ம் பாகம்.
''நான் என்ன செய்துவிட்டேன்? அவனுக்கு இதையெல்லாம் கற்றுக் கொடுத்தது நானில்லையே” என்று பெருமூச்செறிந்தாள் தாய்.
எங்கு புதிய இன்பங்களும் துன்பங்களும் நிறைந்த வாழ்வுக்கு ஆளாகி, நாட்களை அவள் மின்னல் வேகத்தில் கழித்தாளோ அங்கிருந்து, அந்த இடத்தைவிட்டு நிரந்தரமாக, ஒரேயடியாகப் பிரிந்து விலகிச் செல்வது போன்று அவள் திடீரென்று உணர்ந்தாள்.
நமது இதயத்தின் அன்புருவங்களான நம் குழந்தைகள், தங்களது வாழ்வையும் ஆசைகளையும் துறந்து, சுயநலத்தைப் பற்றிய எண்ணம் சிறிதுகூட இல்லாமல் பாடுபட்டுச் சாகும்போது நான் ஒரு தாய், சும்மா இருக்க முடியுமா?
எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள். அவர்கள் அந்தக் கரடுமுரடான மார்க்கத்தில் செல்லும்போது நாங்கள் அவர்களைப் புறக்கணித்ததற்காக, எங்களைச் சரியானபடி அவர்கள் தண்டிப்பார்கள்.
அந்தச் சனியன்கள் அவர்களை நேருக்கு நேராக விரட்டியது. எனினும் மலையைப்போல் நின்றார்கள். தம்பிகள்! கொஞ்சம் கூட அசையாமல் அஞ்சாமல் நின்றார்கள்...

அண்மை பதிவுகள்