privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

அந்தப் பாட்டு நின்றுவிட்டது. ஜனங்கள் நின்று விட்டார்கள், பாவெலைச் சுற்றி ஒரு மதில் போல நின்றார்கள். ஆனால் அவனோ இன்னும் முன்னேறினான். ஏதோ ஒரு மேகம் வானத்திலிருந்து தொப்பென்று விழுந்து அவர்களைக் கவிந்து சூழந்தது போல் திடீரென ஒரு சவ அமைதி நிலவியது.
இயக்குநர் முறுக்குதாஸும், எழுத்தாளர் சுயமோகனும், உதவி இயக்குநர்களும் கதை டிஸ்கசனில் அமர்கிறார்கள். ஹீரோ ஓபனிங் சீன். கள்ள வோட்டு அறம்….காரைக்குடி கோலா உருண்டையும் கோடம்பாக்கம் கதை இலாகாவும் ! நாடகம் - பாகம் 2
ஏதோ ஒரு கரிய பறவை தனது அகன்ற சிறகுகளை விரித்து உயர்த்திப் பறப்பதற்குத் தயாராக நிற்பது போலிருந்தது அந்தக் கூட்டம். அந்தப் பறவையின் அலகைப்போல் நின்றிருந்தான் பாவெல்….
பாவெல் தன் கையை உயர்த்திக் கொடியை ஆட்டினான். பல பேருடைய கைகள் அந்த வெண்மையான கொடிக்கம்பைப் பற்றிப் பிடித்தன. அவற்றில் தாயின் கரமும் பங்கெடுத்துக் கொண்டிருந்தது. மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் பகுதி 27
காலையில் போலீஸ்காரர்கள் தொழிலாளர் குடியிருப்பு வட்டாரத்துக்கு வந்து, அந்த அறிக்கைகளைக் கிழித்தெறிவார்கள். சுரண்டியெடுப்பார்கள். ஆனால் மத்தியானச் சாப்பாட்டு வேளையில் புதுப்பிரசுரங்கள் காற்று வாக்கில் பறந்து போகிறவர் காலடியில் விழுந்து புரளும்.
ஆட்சியாளர்கள் மக்களின் மனத்தில் விஷத்தை ஏற்றிவிட்டார்கள். மக்கள் மட்டும் ஒன்றுதிரண்டு கிளர்ந்தெழுந்தால், எல்லாவற்றையும் நொறுக்கித் தள்ளிவிடுவார்கள். அவர்களுக்கு வெறும் நிலம்தான் வேண்டும்.
கிராமப்புறம் எப்படி இருக்கும் என்பதே எனக்கு மறந்து போயிற்று. கிராமத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்த்தபோது, அந்தச் சூழ்நிலையில் உயிரோடுகூட வாழ முடியாது என்று உணர்ந்தேன்...
தனக்குச் சுகவாழ்வும் பெயரும் கிட்ட வேண்டும் என்பதற்காக. எவனொருவன் பணத்தை வாங்கிக்கொண்டு மக்களை விலைக்குக் காட்டிக் கொடுக்கிறானோ, அவனை நாம் அழித்துத்தான் தீரவேண்டும். - மாக்சிம் கார்க்கியின் தாய் தொடர் பாகம் 24
இவர்களை பூர்ஷ்வா என்று சொல்வது ரொம்ப சரி; ரொம்பப் பொருத்தம். பூர்ஷ்வா என்றால் ஒன்றும் அறியாத பாமர மக்களை அடித்துச் சுரண்டி, அவர்களது இரத்தத்தையே உறிஞ்சிக் குடிப்பவர்கள் என்று பொருள்.
அம்மா, உங்கள் பாவெலைக் கொஞ்சம் பாருங்களேன். புரட்சிக்காரர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களை ஊட்டி வளர்த்துக் கொழுக்க வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.
ஈக்களை விழுங்கினால் குமட்டத்தான் செய்யும்... முதலாளியின் ஒவ்வொரு துளி இரத்தமும், மக்களின் கண்ணீர்ச் சமுத்திரத்தால் கழுவப்பட்டிருக்கிறது.
நீ மட்டும் தன்னந்தனியே ஒலி செய்ய விரும்பினால், கோபுரத்தின் கண்டாமணியின் ஒலி உன் மணியோசையை மூழ்கடித்து விழுங்கிவிடும். எண்ணெய்ச் சட்டியில் விழுந்த ஈயைப்போல் உனது குரல் கிறுகிறுத்து வெளிக்குத் தெரியாமல் தனக்குத்தானே ஒலித்துக்கொண்டிருக்கும்.
“எதற்காக அவர்கள் உன்னைப் பூட்டிப் போட்டிருக்கிறார்கள்? அந்தப் பிரசுரங்கள்தான் மீண்டும் தொழிற்சாலையில் தலை காட்டித் திரிகின்றனவே!'' என்றாள். பாவெலின் கண்கள் பிரகாசமடைந்தன. ''உண்மையாகவா?" என்று உடனே கேட்டான்.
சமயங்களில் இதயத்தில் ஏதோ ஒரு புதுமை உணர்ச்சி நிரம்புகிறது, தெரியுமா உங்களுக்கு? எங்கெங்கு சென்றாலும் அங்குள்ள மனிதர்களெல்லாம் தோழர்கள் என்று தோன்றும்.
அவர்களுக்கு இது சிரிப்பாயிருக்கிறது, இவான் இவானவிச். இதைக் கண்டு கேலி செய்கிறார்கள்! ஆனால் நம்முடைய மானேஜர் சொன்ன மாதிரி இது சர்க்காரையே அழிக்க முயலும் காரியம்தான்.

அண்மை பதிவுகள்