இசுரேலின் ஆதிக்கத்துக்கு எதிராக போராடி தமது இன்னுயிரை ஈந்திருக்கும் போராளிகளின் உறவினர்கள் தொடர்ச்சியாக இறந்த உடல்களை ஒப்படைக்க கோரி போராடி வருகின்றன.
“இந்திய இராணுவமே எங்களை வன்புணர்வு செய்” என்று ஆடைகளைக் களைந்து போராடிய மணிப்பூர் பெண்களின் போராட்டத்தை நினைவுகூறும் கனிமொழி இந்த பாலியல் வக்கிரங்களுக்கு அஞ்சமாட்டோம் என்கிறார்.
இந்த போராட்டம் காசு வாங்கிக் கொண்டு நடத்தப்படுவதாக கூறுப்படுவதைக் கேட்கும் போது அத்தகைய அவதூறுகளை எழுப்புபவர்கள் தைரியமிருந்தால் மதுரவாயில் பள்ளி பக்கம் வந்து கூறுமாறு கேட்கிறார்.
தலசீமியா என்பது கொடிய மரபணுநோய் ஆகும். ஹிமோகுளோபின் புரதக் கட்டமைப்பில் ஏற்படும் குறைபாடுகள் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை அழிக்கின்றன. இதனால் இந்நோய் கண்ட குழந்தைகள் 2 வயதிலேயே இரத்த சோகையால் மரணமடைகின்றன.
இந்த சம்பவத்திற்கு முன்னர் அவரை எத்தனையோ தருணங்களில் பார்த்த போது, எப்படி ஒரு தொழிலாளிகளிடையே உருவான தலைவனுக்குரிய உறுதியோடும், பொறுமையோடும் பேசுவாரோ அது இப்போதும் குறையவில்லை.
எங்கள் பெண்களை விதவையாக்கி விட்டது இந்த டாஸ்மாக், எங்கள் பிள்ளைகளை சாகடித்து விட்டது
இந்த டாஸ்மாக் எங்கள் ஊரையே சீரழித்து விட்டது இந்த டாஸ்மாக்.
2016 ல் மே தினத்தில் பெண் தொழிலாளிகள் மற்றும் சமூக அமைப்புகள் நடத்திய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களின் படங்கள்!
உண்மையில் காவிகளுக்கும் கூட பெருந்தன்மையோடு சமவாய்ப்பளிக்கும் லிபரல் ஜனநாயகத்தின் விவாதச் சூழலை ஆர்.எஸ்.எஸ் கும்பலால் கையாள முடியவில்லை. பாசிசத்தின் அகராதியில் ’விவாதம்’ ’கருத்துப் பரிமாற்றம்’ ‘ஜனநாயகம்’ போன்ற சொற்களுக்கு இடமேது?
மனித உரிமை, மதச்சார்பின்மை செயற்பாட்டாளரும், மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான ராம் புன்யானி "அம்பேத்கரின் சித்தாந்தம் மதவாத தேசியமும் இந்திய அரசியலமைப்பும் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.
இட ஒதுக்கீட்டின் மூலம் அதிகாரமிக்க பதவிகளைப் பெற்றவர்களும் ஓட்டுக் கட்சித் தலைவர்களும் ரியல் எஸ்டேட் முதலாளிகள், கல்வி வள்ளல்கள் போன்றவர்களும்தான் சாதியை நிலைநாட்ட வெறித்தனமாக முயற்சிக்கின்றனர்.
"தேர்தல் நடத்தைவிதி வழிகாட்டுதலில் எங்களை கேட்காமல் எந்த சுவரொட்டியும் ஒட்டக் கூடாது. உடனே ஸ்டேசனுக்கு வா"
போலி ஜனநாயகத்திற்கு புனிதம் கூட்டும் தேர்தல் ஆணையம், தாலி ஜனநாயகத்திற்கு புனிதம் கூட்டும் சடங்கு சாஸ்திரம்...
“மூடு டாஸ்மாக்கை” என்ற மக்களின் கோரிக்கைக்கு, “ஓபன் தி டாஸ்மாக்” என்று திமிராகப் பதிலளித்த அம்மாவின் போங்காட்டத்தை அம்பலப்படுத்துகிறார் கோவன். புதிய பாடல் வெளியீடு.
அம்பேத்கரின் 125-வது பிறந்த தினத்தில் கூட ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் அவரைப் பேசுவதற்கு தடை என்பது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இது இப்போது மட்டுமல்ல. அ.பெ.வா.வட்டம் ஆரம்பித்த நாள் முதல் ஐ.ஐ.டி நிர்வாகம் இப்படித்தான் பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவருகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கடைகளை அடைக்க அதிகாரம் இல்லை என்று கூறிய அதே அதிகாரிகளை இரண்டு நாட்களுக்கு கடையை மூட வைத்தது மக்கள் போராட்டம்.
























