பாலிவுட் முதல் கோலிவுட் வரை கொட்டப்படும் சினிமா மசாலா செய்திகளுக்கு காளமேகம் அண்ணாச்சியின் அதிரடி வைத்தியம்!
சாவுக்கு நாங்கள் காரணமல்ல என்று கூறி பள்ளி நிர்வாகம் இந்த கொலைக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறது. ஆனால் சந்தேகத்திற்கிடமின்றி இது கொலை தான்.
யாருக்குத் தெரியும்....இது மாதிரியே பல தமிழ் ஆசிரியர்கள் இருந்தால், "we speak only English", என பெருமையாய் மார்தட்டிக்கொள்ளும் தமிழர்கள், சிறிது யோசிக்க வாய்ப்புகளுண்டு.
தலித் குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளும் குடும்பங்களுக்கு 501 ரூபாய் அபராதமும், அவர்களுடன் தண்ணீரை பகிர்ந்து கொள்பவர்களுக்கு 1001 ரூபாய் கட்டணமும் விதிக்கப்பட்டது.
"அம்மா ஆட்சியில எல்லாமே நல்லா இருக்கு , பக்கிங்ஹாம் கேனல் வெரி வொர்ஸ்ட், டஸ்ட், அதை கிளீன் செஞ்சு, அகெய்ன்னா போட் விடணும்”.
அம்மாவுக்கு வரவேற்பு என்ற பெயரில் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் பள்ளி மாணவர்களை ரோட்டில் நிற்க வைத்தும், அம்மா வாழ்க என்று கூவ இவர்களின் கூட்டங்களுக்கு இழுத்துச் செல்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்?
இஸ்லாத்தையும் அதன் பெண்ணடிமைத் தனத்தையும் காக்க வந்த ஆண்களின் 'வீரம்', ஜனநாயக உணர்வும் கம்யூனிச சிந்தனையும் கொண்ட பெண்ணின் போராட்டத்தின் முன் மண்டியிட்டது.
தேனும், பாலும் தெருவில் ஓட விட்டதை உணர முடியாத மர மண்டைகளான மக்களுக்கு அரசு அதை எடுத்துச் சொல்லி புரிய வைக்கப் போகிறதாம்.
தகடு கிழித்த வலியை உணர மறுத்தது அவரது உடல். வியர்வையை துடைத்தெறிவது போல, விரலால் விசிறியெறிந்தார், நெற்றிப் பொட்டில் வழிந்த இரத்தத்தை.
"எங்க கொழந்தய, பிரச்சனைன்னு ஐ.சி.யூ.-ல வச்சுருக்காங்க. பாலுக்கு அழுவுது. எங்க பொண்ணுக்கு பாலு வரமாட்டேங்குது அதா..."ன்னு மெதுவா இழுத்தேன்.
முதலாளியின் மனம் கோணாமல் நடப்பது என்று மெய்கண்டன் விரதம் பூண்டிருந்தான். அவன் விசுவாசத்தின் பாரத்தை நாங்கள் சுமந்தோம்.
ஊரறிந்த பொறுக்கி என்பதை நிரூபித்து விட்ட நித்தியானந்தாவிற்கு நீதிபதி இடம் அளித்து அழகையும், செல்வத்தையும் பார்க்கும் தந்தி டிவியின் அயோக்கியத்தனம்தான் இங்கு காறித் துப்பப்பட வேண்டியது.
ஒவ்வொரு பிடி உணவுக்கும், ஒவ்வொரு கடி காய்கறிக்கும் பின்னே முகம் தெரியாத நூற்றுக் கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது.
ஒரு ரப்பர் பேண்டில் முடியை முடிந்து கொண்டு, "முடி வெட்டக் காசில்லை" என்று சொல்லாமல் "முடியை நீளமாக வளர்க்கப் போகிறேன்" என்று நண்பர்களிடம் சொல்கிறேன்.
தினசரி சுமார் ஒருலட்சம் பேர்களுக்கும் மேல் வந்து செல்லும் இந்த சந்தை தன்னை நாடி வருபவர்களின் உழைப்பை மதித்து போஷிக்கிறது.












