privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாசினிமா ஒரு வரிச் செய்திகள் – 11/03/2014

சினிமா ஒரு வரிச் செய்திகள் – 11/03/2014

-

மசாலா: சென்னையில் பெண்கள் சர்வதேச திரைப்பட விழா மே 20 முதல் 25-ம் தேதி வரை நடக்கிறது. பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களும், பெண்களை நல்வழியில் சித்தரித்து உருவான படங்களும் இதில் பங்கேற்கவுள்ளன.

மருந்து: பொம்பளைங்கள உரிச்சு உப்புக் கண்டம் போட்ட சினிமாதாம்டே பெண்களுக்கு முதல் எதிரி! சினிமாக்காரனை கிழிச்சு நொங்கெடுக்காம ஏம்லே “நல்வழிப்படுத்திய படங்கள்னு” நரகல்ல அரிசியை தேடூதீக?

=======

cinema-smallமசாலா:  ”தமிழ் சினிமாவுல யங் ஸ்டார்ஸ் நிறைய பேர் நடிக்க வந்துட்டாங்க. இனி நான் தொடர்ந்து நடிச்சு என்ன ஆகப்போகுது? அதனால, ‘கோச்சடையான்’ படத்தோட நடிப்பை நிறுத்திக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க…” என்று ரஜினி பாக்யராஜிடம் சொல்லியிருக்கிறார்.

மருந்து: இல்லை நடிச்சுத்தான் பாருங்களேன், சிவப்பு – கருப்பு எம்ஜிஆருங்க எல்லாம் பேரன் பேத்தி காலத்துல ஜோடிக்கு ஆள் கிடைக்காம காமடியாவும், டிராஜிடியாவும் மேக்கப்பை பேக்கப் செஞ்சது உங்களுக்கும் நடக்காமயா போகப் போகுது!

=======

மசாலா: ”எல்லாப் பத்திரிகைகளையும் தவறாமல் படிக்கிறார். குறிப்பாக  எல்லா அரசியல் செய்திகளையும் வரிவிடாமல் வாசிக்கிறார் ரஜினி. அரசியலைப் பற்றி யாரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளும் நிலையில் அவர் இல்லை. அதைப் பற்றி என்னிடம் பேச வேண்டிய அவசியமும் இல்லை. அரசியலில் அவர் தெளிந்த நிலையில் இருக்கிறார் என்பது மட்டும் நிஜம்!” – கே.பாக்யராஜ்.

மருந்து: பல்லில்லாதவன் நல்லி எலும்ப பேசமுடியுமாப்பா? நிறைகுடம் மட்டுமில்லை, எம்டி குடமும் கூட எப்பயும் தளும்பாது மிஸ்டர் பாக்யராஜ்!

======

மசாலா: “சார் விளையாட்டு இல்லை… உண்மையிலேயே தமிழ்ல இந்தப் படம் புதுசா இருக்கும். ஒரு நாய்தான் ஹீரோ. அது படம் முழுக்க பல சாகசங்கள், அதிரடிகள் பண்ணும். அந்த நாய்க்குப் பிறகு படத்தில் முக்கியமான கேரக்டர் எனக்கு!” – சொந்தத் தயாரிப்பில் உருவாகும் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்துக்கு சுவாரஸ்ய அறிமுகம் கொடுக்கிறார் சிபிராஜ்.

மருந்து: நாயை வச்சு சிபிய ஒரு ஆளா ஆக்கணும்னு சத்யராஜூக்கு புத்திரபாசம் வெனை வைக்குது.

======

மசாலா:  ”ஓவராப் பேசிக்கிட்டே இருக்கிற உங்களை நம்ம முதல்வர்கிட்ட கொண்டுபோய் நிப்பாட்டினா, என்ன பேசுவீங்க?” என்று ‘நண்டு’ ஜெகனிடம் கேட்ட போது, ”நிகழ்ச்சிகள்லதாங்க நான் இவ்ளோ பேசுறேன். வீட்ல நான் ரொம்ப சைலன்ட். அதனால, நம்ம முதல்வரைப் பார்த்தா, பவ்யமா ஒரு வணக்கம் வெச்சுட்டு, வழக்கம்போல எல்லோரும் சொல்ற மாதிரி ‘நான் உங்களுடைய தீவிர ரசிகன்’னு சொல்லிட்டு, அப்படியே எங்க ஏரியாவில் ‘அம்மா உணவகம் திறந்ததுக்கு ஒரு தாங்க்ஸும் சொல்லிட்டு வந்துடுவேன். ஏன்னா அம்மா உணவகத்தோட ரெகுலர் கஸ்டமர் நான்.”

மருந்து: ஆனானப்பட்ட ஆதிக்கசாதி முறுக்கு மீசைங்கள்ளாம் அம்மா காலுல விழுந்து கும்பிடும் போது, விஜய் டிவியில காம்பியரிங், வெள்ளித்திரையில காமடின்னு வாயால மொக்கை போட்டு பொழைக்கும் இந்த தம்பியா புள்ள மட்டும் அம்மாகிட்ட எகிறுமா என்ன?

======

செய்தி:  ”இனம்’ எந்த அரசியலையும் முன்வைக்காது. போரினால் பெற்றோர்களை, உறவினர்களை இழந்து அநாதையான குழந்தைகள் பற்றி மட்டுமே பேசும் படம் இது. இந்தப் படம் முடியும்போது சில கேள்விகள் உங்கள் மனதில் அலையடிக்கும். அப்படி உங்களுக்குப் பதில் கிடைச்சா, அதுதான் படத்துக்கான வெற்றி. இது இலங்கையில் நடக்கும் கதை. ஆனால், உலகம் முழுக்கப் போரால் பாதிக்கப்படும் எல்லாக் குழந்தைகளின் கதைகளையும் பேசும் படம் இது!” – ஈழப்பிரச்சினை பின்னணியில் உருவாகி வரும் “இனம்” படம் குறித்து இயக்குநர் சந்தோஷ் சிவன்.

மருந்து: படத்துல அரசியலே இல்லேன்னு சத்தியம் செய்யுற சிவனு, அனாதை குயந்தை வெச்சு ஒரு சென்டிமெண்ட பண்றேன்னு சொல்லாம ஈழம்னு உசுப்பேத்தி உதார் விடுறது என்ன அரசியலுடே?

=======

மசாலா: ”பொதுவா தன் பட ஹீரோக்கள் மூலமா சமூகத்துக்கு மெசேஜ் சொல்வார் ஜனநாதன். அவர் இயக்கும் ‘புறம்போக்கு’ படத்துக்கு எப்படி உங்களை டியூன் பண்ணிக்கிட்டீங்க?”

”ஏன் பாஸ் நாங்களும் சமூகத்துக்கு மெசேஜ் சொல்லக் கூடாதா? ஜனநாதன் படங்களில் ஒவ்வொரு வசனமும் பவர்ஃபுல்லா இருக்கும். ‘புறம்போக்கு’ சீரியஸ் மெசேஜ் சொல்ற படம்தான். ஆனா, அதை செம ஜாலியா சொல்லியிருப்பார். ஒரு படம், ரசிகர்களை சந்தோஷப்படுத்தணும்; இல்லைன்னா ஓர் அனுபவம் கொடுக்கணும்; அதுவும் இல்லைன்னா ஒரு மெசேஜ் சொல்லணும். ‘பொறம்போக்கு’ ரசிகர்களுக்கு நல்ல மெசேஜ் சொல்ற சந்தோஷமான அனுபவம்!” – ஆர்யா.

மருந்து: மசாஜும், மெசேஜும், மசால் வடையும் ஒண்ணுதான்னு நம்புற ஆர்யாவ வெச்சுதான் ஜனநாதன் மெசேஜ் சொல்லணும்னா, அந்த மெசேஜுக்கு ஆறுதல் சொல்றது யாருடே?

=======

மசாலா:  படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டர் பேர்… அரவிந்தன் சிவசாமி. ப்ளஸ் டூ வரை குரு குலத்துல படிச்சு, ஸ்டேட் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தவன். பிரார்த்தனை, பைபிள், சித்தாந்தம், வேதாந்தம்னு ஒழுக்கமா வளர்ந்தவன். அதனாலயே அவனால் இந்தச் சமூகத்தோட சேர்ந்து வாழ முடியாது. எல்லாரும் எதையோ துரத்திட்டு ஓடுறதைப் பார்த்துட்டு, ‘ஏன் யாருமே சாந்தமா, சந்தோஷமா இல்லை?’னு ஏங்குவான். அப்படிப் பட்டவன், கோபத்துல வெடிச்சா எப்படி இருக்கும்? அதுதான் படம்! –  “நிமிர்ந்து நில்” படம் குறித்து இயக்குநர் சமுத்திரக் கனி.

மருந்து: சாது மிரண்டால் காடு கொள்ளாதுன்னு கெங்கைக் கரையில கிழங்கு முழுங்குன காலத்துல இருந்து ஊசிப்போன ஒரு அரதப் பழசான பழமொழியை வெச்சு கோபம், வேகம், குண்டு, மிரண்டுன்னு கொல்லுதானுக யுவர் ஆனர்!

========

மசாலா: ”அரசியல்ல என்னை சம்பந்தப்படுத்தாதீங்க. ஒரு நடிகனா மட்டுமே பாருங்க’னு சொல்லியிருந்தீங்களே?”

”இப்பவும் அதைத்தான் சொல்றேன். என்னுடைய முதல் படத்தில் இருந்து, இன்னைக்கு வரைக்கும் நான் இந்தக் கேள்வியை எதிர்கொண்டுதான் இருக்கேன். ஏன்னா, எனக்கு அரசியல் பேசுற வயசு கிடையாது. தவிர, அரசியல் பேசுறதுக்கும், பண்றதுக்கும் எங்க குடும்பத்தில் நிறையப் பேர் இருக்காங்க.” – கருணாநிதி குடும்பத்து வாரிசும் நடிகருமான அருள் நிதி

மருந்து: ஏற்கனவே வூட்டுல அரசியலுக்கு வாரிசு, பட்டமுனு ஏகப்பட்ட குத்து வெட்டு இருக்கையில ஒன்ன மாரி சின்னப்பய புள்ளையெல்லாம் எங்கேர்ந்து சவுண்டு வுடுறதுன்னு நேர்மையா ஒத்துக்க வேண்டியதுதானே ராசா!. சரி அத வுடு, உங்க அண்ணக்கமாரு உதயநிதி, தயா அழகிரியெல்லாம் படத்தை தயாரிச்சு வினியோக்கிறானுகளே இதுக்கு மட்டும் வயசு வேணாமாடே?

=======

மசாலா: ”நான் கல்யாணத்துக்கான ஆள் கிடையாது ஜி. நண்பர்கள், உறவுக்காரங்க கல்யாணத்துக்குக்கூட ரிசப்ஷன்ல மட்டும் தலையைக் காமிச்சுட்டு ஓடி வந்துடுவேன். கல்யாண அட்மாஸ்பியரே எனக்குப் பிடிக்காது. என்னமோ தெரியலை, கல்யாணம்னாலே ஜெயிலுக்குப் போற ஃபீலிங் வந்துடும். காதலும் கிட்டத்தட்ட ஜெயில்தான். ஆனா, அட்லீஸ்ட் அந்த ஜெயில் கதவோட சாவி நம்மகிட்ட இருக்கும். நினைச்சா, நாமளே கதவைத் திறந்துட்டு வெளியே வந்துரலாம். ஆனா, கல்யாணத்துல அது முடியாதே! வேற யாரோ நம்மளை உள்ளே வெச்சுப் பூட்டிட்டு, சாவியைத் தொலைச்சுடுவாங்க அங்கே!”  – சிபி.

மருந்து: சிம்பு தம்பி இவ்ளோ போல்டா, விவரமா பேசுதேன்னு வாய் பிளக்கியாடே? அந்தக் காலத்துல மல்லு வேட்டி மைனருமாரும் இப்படித்தாம்டே அலைஞ்சாங்க! ஆனா அவனுகளுக்கு இந்த வம் புபய சிம்பு மாதிரி பேசவோ, இல்லை பேசுறதோ போடுறதுக்கு ஒரு ஊடகமெல்லாம் கிடையாது பாத்துக்க!

=======

மசாலா: ”இப்போதைக்கு அரசியல் ஆர்வம் சுத்தமா கிடையாது. அப்பா என்னை சுதந்திரமா வளர்த்திருக்கிறார். என்னோட முடிவும் யோசனையும் அவருக்குத் தெரியும். என்கிட்ட பேசும்போதும் அவர் அரசியல் தொடர்பா டிஸ்கஸ் பண்ணதே இல்லை. ஒருவேளை ஃபியூச்சர்ல அப்பா கூப்பிட்டா, அந்தச் சமயத்துல என்னோட மைண்ட்ல என்ன ஓடுதோ, அதைப் பொறுத்து என் முடிவு இருக்கும். அப்போ எனக்கு அரசியல் ஆசை வரலாம்… வராமலும் போகலாம்!” – சரத்குமார் மகளும் நடிகையுமான வரலெட்சுமி

மருந்து: சினிமாவுல ஒரு ஆளானா சினிமாவுலேயே இருப்பாக, அது ஊத்திக்கிச்சுன்னா அரசியல்ல குதிப்பாக. நம்மளுக்கு என்ன அம்புடுதோ அதுதாம்டே வாழ்க்கை. இவுகளுக்கு எதுல கிளிக்காகுதோ அதை கையில எடுப்பாகளாம். தரும்புரி ராசப்பா புரோட்டா கடையில தென.மும் 50 குடம் எடுக்க வெச்சா ஆத்தாவை திருத்தலாம்டே!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க