இது தரகுமுதலாளிகளின் நலனுக்காக நடத்தப்பட்ட போர் என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்த அரசு நாங்கள் முதலாளிகளுக்காகத்தான் உங்களுக்காக இல்லை என்று அறிவித்து விட்டது. நாம் அடுத்து என்ன செய்யப்போகிறொம்?
சடையன்குளம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரை எதிர்த்து நடத்தும் உரிமைக்கான போராட்டத்தையும், உயர்வுக்கான விழைவையும், அது குரூரமாக சாதிவெறியர்களால் நசுக்கப்படுவதையும் ஆவணப்படுத்தியிருக்கும் ஒரு நாவல்.
மிசா, தடா, பொடா, தேசிய பாதுகாப்புச் சட்டம், சிறப்பு ஆயுதப்படைச் சட்டம், குண்டர் சட்டம் போன்றவை மக்கள் விரோத சட்டங்கள். ஒருவரிடம் காவல்துறை பெறும் ஒப்புதல் வாக்கு மூலம் செல்லாது என்பது சட்டம். ஆனால் நடைமுறையில் அதை வைத்தே தண்டனை வழங்கப்படுகிறது (உதாரணம் : அப்சல்குரு தூக்கு).
மூன்று பாலியல் குற்றவாளிகளும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மேலாளர்களும் எந்த விதமான தண்டனையும் இல்லாமல் உயர்ந்த பதவிகளில், லட்சங்களில் சம்பாதித்துக் கொண்டு சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர்.
உலகெங்கும் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்வதற்காக பெரும் செலவில் இராணுவத்தை உருவாக்கி பராமரிக்கும் அமெரிக்கா, தனது இராணுவ வீரர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட பாதுகாக்காமல் ஆளும் வர்க்க ஏவல் படையாகவே வைத்திருக்கிறது.
கோவையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – தமிழ்நாடு சார்பில் அண்ணாமலை ஹோட்டலில் “நாடு மீண்டும் அடிமையாகுது ... பகத்சிங் பாதை உன்னை தேடுது...” என்ற தலைப்பில் பகத்சிங் நினைவு நாள் அரங்கக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
‘குப்பை அள்ளுரவனுங்கதானே?' என இளப்பமாக எடைபோட்ட போலீஸ் பொறுக்கிக்கு தங்கள் வர்க்கத்தின் போராட்டக் குணத்தைக் காட்டினார்கள் தொழிலாளர்கள். ஆனால் பத்திரிகையாளர்களோ ‘எதிர்த்து பேசினால் வேலைபோய்விடும்' என்று அஞ்சுகிறார்கள்.
குறைவான பேருந்துகளை வைத்துக் கொண்டு இரண்டு மடங்கு மாணவ-மாணவியரை ஏற்றி அதிகமான வேகத்தில் வண்டியை ஓட்ட நிர்பந்தித்ததே கல்லூரி நிர்வாகம்தான். அதனால்தான் இந்த படுகொலை நடந்துள்ளது.
இட ஒதுக்கீட்டு குழாய்த் தண்ணீரில் மூழ்கடித்த சுஜாதா அவர்களே, உழைப்பால் உயர்ந்த உத்தமர் கிருஷ்ணமூர்த்தி அய்யரைப் பற்றி 'கணையாழி'யின் கடைசிப் பக்கத்திலாவது நாலு 'நறுக்'கெழுத்து எழுதக் கூடாதா?
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதைக் கண்டித்தும், சென்னை போரூர் டிரங்க் ரோடு , போரூர் சிக்னல் எதிரில் மாணவர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெண்கள் பாலியல் வன்கொடுமையை வெளியே கூறினால் அவமானம் என்று கருதாமல் இது ஒரு சமூகப்பிரச்சினை என்பதை புரிந்து கொண்டு குற்றம் புரிந்த நபர் மீது புகார் கொடுக்கவேண்டும். ஒரு சோசலிச சமூகத்தை நோக்கிய நமது பாதை தான் இதற்கு நிரந்தர தீர்வு.
"அம்மாதான் சத்யம், தமிழகம் மாயை ; தமிழகம்தான் அம்மாவைப் பிரதிபலிக்க வேண்டுமேயன்றி, தமிழகத்தை அம்மா பிரதிபலிக்க முடியாது. இந்த பிரம்மஞானம் கைவரப் பெற்றவர்கள் தமிழகத்தில் ஓ.ப, தா.பா போன்ற வெகுசிலர்தான்.
பாலியல் குற்றங்கள் ஆளும் வர்க்க பொறுக்கிகளாலோ அவர்களின் வாரிசுகளாலோ செய்யப்பட்டால் அதற்கு தண்டனையில்லை என்ற மசோதாவை நாடாளுமன்றம் அடுத்து முன்மொழியுமா?
மார்ச்-8 என்பது போராட வேண்டிய ஒரு தினம், ஆனால் இன்று கோல போட்டி, சமையல் போட்டி என போராட்ட நாளை சிதைக்க கூடிய வகையில் தான் நடத்துகின்றனர்.
தொடர்ச்சியான இந்த போராட்டம் ஜாதி, மதம், இனம் கடந்து மாணவர்களை ஒரு வர்க்கமாய் ஒன்றிணைத்துள்ளது. அமைப்பாக இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியது. சமூக பிரச்சினையின்பால் கவனத்தையும், அக்கரையும் கொள்ள செய்தது.
















