privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதமிழ், தமிழர் மீதான பார்ப்பன ஜெயாவின் தாக்குதல் !

தமிழ், தமிழர் மீதான பார்ப்பன ஜெயாவின் தாக்குதல் !

-

அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் : தமிழ், தமிழர் மீதான பார்ப்பன ஜெயாவின் தாக்குதலை முறியடிப்போம்!

ஜெயலலிதா கையில் கல்விழிப்பறைகளும் “டாஸ்மாக்” கடைகளும் திறந்து வைப்பது தவிர தமிழக முதல்வர் “புரட்சித் தலைவி அம்மா” உத்திரவில்லாத அரசு நடவடிக்கை என்பதாக ஊடகங்களில் அறிவிக்கை எதுவுமே வருவதில்லை. பேச்சிப்பாறை – மணிமுத்தாறு கால்வாயின் மதகு திறப்புக் கூட தமிழக முதல்வர் “புரட்சித் தலைவி அம்மா” உத்திரவின் பேரில் நடப்பதாகத்தான் அறிவிக்கைகள் வருவதுண்டு. ஆனால், “கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் இனித் தமது உள்தேர்வுகளை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்ற உத்திரவை எனது கவனத்திற்குக் கொண்டு வராமலேயே தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் வெளியிட்டுவிட்டது. இந்த உத்திரவைத் திரும்பப்பெற நான் ஆணையிட்டுள்ளேன். ஆங்கிலம் அல்லது தமிழ் என எந்த மொழி வழியில் பயின்றாலும், மாணவர்கள் தமிழில் உள்தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அவ்வாறு உள் தேர்வுகளைத் தமிழில் எழுத அனுமதிக்குமாறு நான் அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்திரவிட்டுள்ளேன். எனவே, அனைத்து மாணவர்களும் உள்தேர்வுகளை அவரவர் விருப்பப்படி தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார், ஜெயலலிதா.

அனைத்து மாணவர்களும் உள்தேர்வுகளை மட்டுமல்ல, பொதுத்தேர்வுகளையே அவரவர் விருப்பப்படி தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம் என்பதுதான் ஏற்கெனவே இருந்த நிலை. இதை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுவராமலேயே அதிகாரிகள் மாற்றிவிட்டார்களாம்; கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் நம்புவதற்கு தமிழக மக்கள் ஒன்றும் அ.தி.மு.க.காரர்களைப் போன்றவர்கள் அல்ல! எலிப்பொந்தில் வாலை விட்டுப் பார்க்கும் நரியைப் போல சில வாரங்களுக்கு முன்புதான், அனைத்து அரசுப் பள்ளிகளிலும், எல்லா மட்டங்களிலும் ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தது, ஜெயலலிதா அரசு. தமிழினவாதக் குழுக்கள் ஜெயலலிதாவின் நம்பகமான விசுவாசிகளாகிவிட்ட நிலையில், கருணாநிதியின் ஈனக் குரலிலான எதிர்ப்பு மட்டுமே கிளம்பியது. இதனால், துணிச்சலுற்ற ஜெயலலிதா அரசு தமிழர்க்கும், தமிழுக்கும் எதிரான தாக்குதலுக்கு மீண்டும் துணிந்து, ஆங்கிலவழிக் கல்வித் திணிப்புக்கான வேலைகளில் குதித்தது. ஆனால், ஜெயலலிதாவின் எத்தனிப்புகளுக்கு எதிராக கருணாநிதியின் தொடர் கண்டன அறிக்கைகளும் உளவுத்துறைத் தகவல்களும் வந்ததால், இப்போதைக்குப் பின்வாங்கியுள்ளது.

சமச்சீர்க் கல்வி ஒழிப்பு, மதமாற்றத் தடைச் சட்டம், கிடா வெட்டத் தடைச் சட்டம், சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்ட முடக்கம், ஈழ எதிர்ப்பு, பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்பு, நரேந்திர மோடியுடன் கூட்டு என்று தனது கோரமுகத்தை அவ்வப்போது காட்டும் ஜெயலலிதா பார்ப்பன பாசிசக் கொள்கை, கோட்பாடுகளை ஒரு போதும் கைவிடமாட்டார்; ஒருபுறம், தமிழாய்வு நிறுவன முடக்கம், ஆங்கிலவழிக் கல்வித் திணிப்பு; மறுபுறம் நூறு கோடி ரூபாயில் தமிழ்த் தாய்க்குச் சிலை, தமிழ்ப் பூங்கா என்று தமிழ் மக்களை ஏய்க்கிறார். வெளிநாட்டு, வெளிமாநில வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாகவும் ஆங்கிலக் கல்வியால் அவற்றை அப்படியே கவ்விக் கொள்ளலாம் என்ற நடுத்தர வர்க்க மோகத்துக்குத் தொடர்ந்து பார்ப்பன ஊடகங்கள் தீனிபோடுகின்றன. ஓரளவு மக்கள் நலன் சார்ந்த சமச்சீர்க் கல்வி முறையை ஒழிப்பதில் தோற்றுப் போன ஜெயலலிதா அரசு, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வியைத் திணித்துப் படிப்படியாக அதை விரிவுபடுத்தும் சதியில் இறங்கியுள்ளது. ஆரம்ப நிலையிலேயே, இச்சதியை உறுதியாக எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும்.

________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________

 1. //எனது கவனத்திற்குக் கொண்டு வராமலேயே///
  வினவு அய்யா… இதில் உண்மை இருப்பதாகவே நம்புகிறேன்.. காரணம் ஜெ,யின் working style அப்படித்தான்… அதனால் அவர் பொய் சொல்கிறார் என்று நான் நம்பவே மாட்டேன்.. பல முறை இது போல நடந்திருக்கிறது…
  ///சமச்சீர்க் கல்வி ஒழிப்பு, மதமாற்றத் தடைச் சட்டம், கிடா வெட்டத் தடைச் சட்டம், சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்ட முடக்கம், ஈழ எதிர்ப்பு, பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்பு, நரேந்திர மோடியுடன் கூட்டு ///
  அய்யா.. உங்கள் பார்வை இந்த விசயத்தில் மட்டுமல் பல விசயங்களில் ஒற்றை கண்ணோட்டப் பார்வையாக உள்ளது.. அனைத்தும் தழுவிய உண்மை என்று என்னைவிட உங்கள் ஆட்கள்தான் பருண்மையாக பார்க்க வல்லவர்கர்ள… ஆனால் நீங்களே உங்களுக்கு விதித்துக் கொண்ட so called முற்போக்கு விதி எண் 18.2 பிரிவு ஆ படி நீங்கள் மேற்படி சிந்திக்கிறீர்கள்.. சற்று விலகி மாற்றி யோசித்து கட்டுரை எழுதுங்களேன்.. நான் சொல்ல வந்த கருத்து உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

 2. //…காரணம் ஜெ,யின் ஒர்கிங் ச்டைலெ அப்படித்தான்…// சரியாக சொன்னார் சந்திரசெகரன்! அது தெரியாமல் நீங்கள் பாட்டுக்கு அவரிடம் வேறு விதமாக எதிர்பார்த்தால், அது உங்களின் தவறுதானே! ஓட்டு வாஙகுவதும் , துட்டு வாங்குவதும் தான் அவர்கள் வேலை! மற்ற்படி ஆள்வது உள்குத்தகை போலும்!

 3. சர்வதேசவியாதிகலான வினவு தமிழ் தமிழன் என குறுகிய கிட்டபார்வையுடன் செயல்படுவது ஏனோ?

 4. இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றதாக சொல்லப்படுகிறது. 1950க்கு பின்னர் வட இந்தியாவில் “Angrezi Hatao” (ஆங்கில மொழியை அகற்றுக) என்னும் இயக்கம் ஹிந்தி வெறியர்களால் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்த இயக்கத்தவரின் நோக்கம் பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள், வரலாறுகள் ஆகியன காலங்காலமாக புழங்கும் இந்த பரந்து விரிந்த இந்தியாவில் அடி முதல் முடி வரை அனைத்து செயல்பாடுகளிலும் ஹிந்தியை புகுத்த வேண்டும் என்பது தான். அதாவது சமஸ்கிருத மயமான தேவநாகரி லிபியில் எழுதப்படும் ஹிந்தியை!. பன்முக தன்மை வாய்ந்த இந்தியாவை ஒற்றை தன்மை வாய்ந்த நாடாக மாற்ற முயலும் முயற்சிகள் ஒன்றின் பின்னணியில் உள்ள அடிப்படை அரசியல் நோக்கம் என்ன என்பதை சொல்ல தேவையில்லை.

  ஆங்கில வழிக் கல்வி – விருப்பமா? – கீற்று

 5. The problem with the opposition parties in TN is that they do not want DMK to be prominent.For this reason only,they keep mum on issues affecting the people.All problems faced by TN people are not the problems of DMK alone.

 6. // துணிச்சலுற்ற ஜெயலலிதா அரசு தமிழர்க்கும், தமிழுக்கும் எதிரான தாக்குதலுக்கு மீண்டும் துணிந்து, ஆங்கிலவழிக் கல்வித் திணிப்புக்கான வேலைகளில் குதித்தது. //

  Middle class people already abandoned Tamil. My +2 studying neighbor has taken french instead of Tamil. the person cannot read Tamil except movie names. And it is the ground reality in the village. And his parents are not rich,cant speak english, infact poor 15 years back.

  Nobody wants to read Silapathikaram and kundalakesi and memorize the tough pros in it.

  Now bringing English to poor people, is called war against Tamil?

  Wake up people and accept the reality..

 7. அதி மேதாவி ராமரே! ஆஙகிலமோ, கிந்தியொ எந்த எழவொ, மூன்றாவது மொழியாக படித்துவிட்டு போகட்டும்! ஆனால், பயிற்று மொழியாக ஆக்கினால், தமிழில் அறிவியல் வளராது! நீங்கள் சொன்னது போல சிலப்பதிகாரமும் ,சிந்தாமனியும்தான் மிஞ்சும்! தாய்மொழியில் , அது எந்த மொழியில் ஆனாலும் ,ஆரம்பக்கல்வி கல்வி பெறுவதே அறிவுத்திறனை வளர்க்கும்! நாஙகளெல்லாம் தமிழ் வழியில் படித்து,பின்னர் கல்லூரியில் ஆங்கில வழியில் படித்ததால் எந்தகுறையும் இல்லை! சந்தேகமிருந்தால், ராக்கெட் விஞ்ஞானி மயிசாமி அன்னாதுரை மற்றும் பெருந்தகை அப்துல்கலாமை கேளுங்கள்! தமிழை அழித்து , தமிழ்த்தாய்க்கு சிலை வைக்கும் அம்மாவுக்கு புரிய வையுங்கள்! தேவையானால் தனியாக ஆங்கில பாடம் நடத்தலாமே!

 8. முன்னேறிய நாடுகளில் எல்லாம் அவரவர் தாய்மொழியில்தான் கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. மூத்திரம் பெவதில் கூட ஜப்பானை பார், அய்ரோப்பா, அமெரிக்காவை பார் என்பார்கள் சிந்திக்கனும்.

  • What is the GDP of Japan or German and Tamil Nadu?

   One can travel throughout his country if he knew only Japanese or German.
   What about you? Can you travel more than 2 hours ?

 9. ஏனுங்க..

  “ஜெயலலிதா அரசு. தமிழினவாதக் குழுக்கள் ஜெயலலிதாவின் நம்பகமான விசுவாசிகளாகிவிட்ட நிலையில், கருணாநிதியின் ஈனக் குரலிலான எதிர்ப்பு மட்டுமே கிளம்பியது” என்று எழுதியிருக்கீங்க..

  நீங்கள் தமிழினவாதி என விமர்சிக்கும், நெடுமாறன், வைகோ, பெ.மணியரசன் என அனைவருமே இதைக் கண்டித்துள்ளனர். கீழ்க்கண்ட இணைப்புகளில் இது குறித்து விபரம் அறியலாம். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன், பல அமைப்புகளை ஒன்றுதிரட்டி சென்னை பள்ளிக் கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டுப் போராடியதில் 300 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

  இதையெல்லாம் மறைத்து விட்டு, தமிழினவாதிகள் செயலலிதாவை கண்டிக்கவில்லை என்றும் கருணாநிதி மட்டும் தான் கண்டித்தார் என்றும் கூசாமல் எழுதுவது ஏன்? இவர்கள் நடத்தும் போராட்டங்களை விட, உங்களது ஒரே ஒரு பக்கத் தலையங்கம் தான் வீரியமான எதிர்ப்பு என கருதுகிறீர்களா? இது தான் உண்மைகளைச் சொல்லும் உங்கள் யோக்கியதையா?

  நெடுமாறன் எழுதிய கட்டுரை:
  http://dinamani.com/editorial_articles/2013/05/24/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article1603338.ece

  வைகோ கண்டன அறிக்கை
  http://dinamani.com/latest_news/2013/05/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF/article1590942.ece

  பெ.மணியரசன் தலைமையில் போராட்டம்
  http://www.tamizhdesiyam.com/2013/05/250.html

 10. முதலில் அரசு பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரட்டும்! போதிய வகுப்பறையும், கழிப்பறையும், குடிக்க பாதுஆக்கப்பட்ட நல்லநீரும் இன்றி நூற்றுக்கணக்கான் பள்ளிகள் உள்ளனவே! பல பள்ளீகளில் போதிய ஆசிரியர்களும் இல்லை! இப்பொது ஆங்கில வழி கல்விக்கு என்ன அவசரம்? எல்லவற்றிலும் மோடியை பின்பற்றும் கனவான்_கள் தமிழிலிருந்து ஆஙகிலத்துக்கும் பின்னர் ஆங்கிலத்திலிருந்து தெசிய மொழிக்கும் மாற செய்யும் சதியல்லவா இது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க