உற்பத்தியில் தானியங்கி முறை என்பது புதிய போக்கல்ல. மனிதக் கரங்களை இயந்திரக் கரங்களால் மாற்றீடு செய்வது முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொடர்ந்து நிகழும் போக்காகும்.
இந்தியாவின் அதி உயர் மருத்துவமனைகள் அதிகரிக்கும் காலத்தில் இந்தியாவின் ஏழைக மக்கள் அதி உயர் எண்ணிக்கையில் மரணமடைந்து வருவதையும் காண்கிறோம்.
எங்கிருந்தோ வரும் தேவர்கள் எனது கதிராமங்கலத்தை துளையிடுவதை எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன். மூலதன கூர்ம அவதாரங்கள் எனது நெடுவாசலை பாயாய் சுருட்டிக் கொண்டு ஓட வருகையில் வீதிக்கு வந்து விரட்டினால் நான் நரகாசுரன்.
உணவு உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு ஐந்து குழந்தைகளிலும் உயரத்திற்கு குறைவான எடையில் ஒரு குழந்தை இருக்கிறது.
சுதை, கோயில், கோபுரம் ஏன் சாமி சிலையில் கூட நம் சக்தி இருக்கும் போது நாம் தொட்டு பூசை செய்தால் மட்டும் சாமி தீட்டாகிவிடுமாம் இந்த அயோக்கியத்தனத்திற்கு பெயர் ஆகமமாம்.
கரையான் புற்றெடுக்க கருநாகம் நுழைந்தது போல, தமிழக மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளையும் மருத்துவக்கல்லூரிகளையும் அபகரிப்பதுதான் இந்த நீட் தேர்வின் நோக்கம்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்தது போன்று ஒரு பெரும் போராட்டம் வந்தால் ஒழிய இங்கிருக்கும் அரசு அனைத்து சாதியனரையும் அர்ச்சகராக்காது என்றார் தோழர் ராஜு.
‘ஆகாயத் தாமரைகளும் ஆகாத ஊருக்கு வழி கூறும் திசைகாட்டிகளும்’ எனும் இந்த நூல், ஒருவகையில், தவறுக்குத் துணை போகாத மு.ராமசாமி அவர்களின் விளக்கமாயும், இன்னொருவகையில், கூட்டுநர் முனைவர் முருகதாஸின் அறக்கேடான பொய்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவதுமாக அமைந்திருக்கிறது.
மனித மூளையின் ஆற்றல் கொண்ட இயந்திரம் அல்லது செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகள் கணினிகளின் துணையோடு வளர்ச்சியுறத் துவங்கின. ஆய்வுகள் பரிசோதனைக் கூடங்களில் குறிப்பிடத்தக்க மைல்கற்களையும் தாண்டின.
குஜராத்தில் 90% கோயில்களில் வளாகத்திற்குள் செல்ல தலித்துகள் அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறுகிறார் மேக்வான். “நாங்கள் பார்வையிட்டதில் 92.3% கோயில்களில் தலித்துகள் பிரசாதம் வாங்கக்கூட அனுமதிக்கப்படுவதில்லை”
நடைமுறைக்கும் தூய்மை இந்தியாவின் குறிக்கோளுக்கும் இட்டு நிரப்பவே முடியாத ஒரு பாரிய இடைவெளி இருப்பதை ’கபார் இலஹரியா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் எடுத்த இந்த காணொளி ஆய்வு அம்பலப்படுத்துகிறது.
தருமபுரி அரசு கல்லூரியில் நீட் தேர்வு எதிர்ப்புப் பிரச்சாரமும், பு.மா.இ.மு. உறுப்பினர் சேர்க்கையும் செய்து கொண்டிருந்தனர் புமாஇமு தோழர்கள். அங்கு வந்த தருமபுரி க்யூ பிரிவு போலீசு சத்தியநாதன், அன்பு, மலர்கொடி ஆகிய தோழர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது.
ஒருவர் இணையத்தில் செலவழிக்கும் நேரம் – அந்த நேரத்தில் அவர் பார்க்கும், கேட்கும், படிக்கும் விசயங்கள் – அந்த விசயங்களின் அரசியல், சமூக மற்றும் வணிக மதிப்பு உள்ளிட்டவைகளை செயற்கை நுண்ணறி இயந்திரங்கள் மிகத் துல்லியமாக கணிக்கின்றன.
“நான்காம் தொழிற்புரட்சியின் எரிபொருளாக மின் தரவுகளே இருக்கப் போகின்றது” எனக் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் உரையாற்றிய அம்பானி, “மின் தரவுகள் எண்ணெய் என்றால், நுண்ணுணர் மின் தரவுகள் பெட்ரோலாகும்” என்றார்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை தீவிரமாக அதிகரித்துள்ளது. கஞ்சா போதையில் சாலையில் சுற்றும் மாணவர்கள், இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

























